வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
பலவித புராண கால வெளியிடூகளை புரட்டி படித்த பொழுது, அகத்தியர் என்கிற பெயரில் ஆங்காங்கே பலவித அகத்தியர் தென்பட்டனர். அவர்களை பற்றி கூறப்பட்டுள்ளதை சுருக்கமாக இத்தொகுப்பில் தருகிறேன். ஒருசில அரிய தகவல்களும் கிடைத்துள்ளது. அவையும் இதனுடன் வரும்.
அகத்தியப்பெருமானின் வம்சத்தில் வந்தவர் தான் ஸ்ரீராமர் என்ற தகவல் ஒரு இடத்தில் கிடைக்கவே, அதை பற்றி ஆராய்ச்சி செய்த பொழுது, அகத்தியப்பெருமான் சூரிய வம்சத்திலும் உள்ளார். அதனால் தானோ என்னவோ அவருக்கு ராமருக்கு குருவாக இருந்து ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கும் பாக்கியம் கிடைத்ததோ என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அனைத்தையும் கற்றிருந்தும், அகத்தியர் வந்து இதை உபதேசித்தபின் தான் ஞானம் என்பது ராமனுக்கு நிறைவு பெற்றது, அதனுடன் இராமாயண யுத்தம் நிறைவு பெற்றது.
37 அகத்தியர்களை பற்றிய சில தகவல்கள் புராணங்களில் கிடைத்துள்ளது.
அகத்தியர் என்ற பெயர் கொண்ட புலவர்களும், முனிவர்களும், சித்தர்களும், மருத்துவர்களும் அறிஞ்சர்களும், சாதாரண மனிதர்களும், அரசியல் தூதுவர்களும் பலராவர்.
அவர்கள் எல்லாம் ஒரு ஊரார் அல்லர், ஒரே குலத்தார் அல்லர், ஒரே காலத்தவர் அல்ல, ஒரே தொழிலை உடையவரும் அல்லர்!
அகத்தியர் என்கிற பெயரை, தமிழ் நாட்டார் மட்டுமின்றி, ஆரிய நாட்டார், சாவக நாட்டார், கடார நாட்டார், ஈழ நாட்டார், ஐரோப்பிய நாட்டாரும் தங்கள் குழந்தைகளுக்கு இட்டு வந்துள்ளனர் என்பதிலிருந்து, அப்பெயரின் பெருமை புலனாகின்றது.
அப்பெயரை பற்றி கூறுகையில், "தம் மனதை அடக்கி, நான் எனது என்னும் செருக்கை நீக்கி, பாவங்களை களைந்து தாமரை இலைமேல் நீர்போல் இம்மாநிலத்தில் தம் மனைவியுடன் இருந்து, எல்லாராலும் போற்றப் படக்கூடியவராய் வாழ்ந்தவர் ஆதலால், அவருக்கு "அகத்தியர்" என்ற பெயரை ஈந்துள்ளனர், என்கிறார்கள்.
1. பொதியமலை அகத்தியர் (காலம் - கி.மு. 16000 ஆண்டுகள்)
2. மூதூர் அகத்தியர்
3. வாதாபி அகத்தியர்
4. உலோபாமுத்திரை அகத்தியர் - 1
5. மைத்திரா வருண அகத்தியர்
6. மானிய அகத்தியர்
7. கும்ப அகத்தியர்
8. ஆவீர்பூ புத்திரர் அகத்தியர்
9. கந்தருவன் புத்திரர் அகத்தியர்
10. ஏழு இருடிகளில் ஒருவராகிய அகத்தியர்
11. புரோகித அகத்தியர் - 1
12. தொடித்தோள் செம்பியன் காலத்து அகத்தியர்
13. குடகுமலை அகத்தியர்
14. உலோபா முத்திரை அகத்தியர் - 2
15. கோசலநாட்டு அகத்தியர்
16. பஞ்சவடி அகத்தியர்
17. மலயமலை அகத்தியர் - 1
18. குஞ்சரகிரி அகத்தியர் - 1
19. புரோகித அகத்தியர் - 2
20. குஞ்சரகிரி அகத்தியர் - 2
21. துவாரபாதி அகத்தியர்
22. யசோமதி அகத்தியர்
23. புரோகித அகத்தியர் - 3
24. காரைதீவு அகத்தியர்
25. போதலகிரி அகத்தியர்
26. திலோத்தமை அகத்தியர்
27. பாவநாச (மலயமலை) அகத்தியர் - 1
28. பாவநாச (மலயமலை) அகத்தியர் - 2
29. புரோகித அகத்தியர் - 4
30. குஞ்சரகிரி அகத்தியர் - 3
31. புரோகித அகத்தியர் - 5
32. சித்த அகத்தியர்
33. தேவார அகத்தியர்
34. நூல் எழுதிய அகத்தியர்
35. திருமாலை சிவனாராக்கிய அகத்தியர்
36. அகத்திய பட்டர்
37. பள்ள அகத்தியர்
இதில், யார் யாரை பற்றிய தகவல்கள் உள்ளதோ அவற்றை இனி வரும் வியாழக்கிழமைகளில் தொகுப்பாக தருகிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நம 🙏
ReplyDelete