சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: அருள்தரும் நறுங்குழல் நாயகி தாயார் சமேத திரு எறும்பீஸ்வரர் திருக்கோயில்.திருவெறும்பூர் திருச்சி.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
நலமாக, நலமாக, எண்ணற்ற, எண்ணற்ற இன்னும் ஏராளமான ஞானிகளும் வருவார்களப்பா.
வருவார்கள், எதையென்று இன்னும் உணர்த்த, உணர்த்த இவ்வுலகத்தில், நல்லோர்களை காக்கவே.
ஆனாலும், எதிலிருந்து, எதில் வந்தவை என்று கூட தெரியாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கிணங்க, இன்னும் ஏராளமான ஞானிகள், இன்னும் நிச்சயம் பின் இவ்வுலகத்தை எப்படி? எல்லாம் காக்க வேண்டுமோ என்று எண்ணி, எண்ணி, நிச்சயமாய் காத்துக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், நிச்சயமே பின் நன்மைகள்.
நன்மைகள் ஆனாலும், சில சில தீய மனிதர்களுக்காகவும் எவை, என்று உணர்ந்து, அவர்களையும் பின் நீக்குவோம் யாங்கள்.
ஈசன் யார்?? என்பதையும் கூட வருங்காலங்களில் நிச்சயமாய் ஈசனே தெரிவித்துக் கொள்வான் என்று உணர.
ஆனாலும், இதையன்றி கூற இன்னும் பல மக்கள் எதை என்று கூறாமலே மனதில் பல அழுக்குகளை வைத்துக் கொண்டு, எதனை, எதனையோ நினைத்துக்கொண்டு, ஈசனை வணங்கினால், நிச்சயம் ஈசன் என்ன??? பின் நல்லவையை செய்வானா???? என்ன?.
ஆனாலும், உண்மையில்லை, அப்பனே, பொய். இறைவன் என்கின்றான்.
இறைவன் மீது நான் பக்திகள் அதிகம் செலுத்துகின்றேன்.
ஆனால், எதை என்று கூற, இவ்வாறெல்லாம் மனிதன் பொய் சொல்லி, பொய் சொல்லி, எதை என்று கூற.
ஆனாலும், இப்படியே பின் இறைவன், இறைவன் என்று சொல்லி, ஆனால் மனதில் இறைவன் இல்லை.
எதை என்று ஆனாலும், இப்படியெல்லாம் இன்னும் கலியுகத்தில் பல மனிதர்கள் வருவார்கள்.
இதனால்தான், நிச்சயம் மனிதர்களை யான் எதை என்று கூறாமலே யாரையும் பின் நம்பப் போவதில்லை சித்தர்கள்.
இதனால், நிச்சயம் ஒரு வழியும் வகுப்போம். பல திருத்தலங்களும் சென்று, சென்று, நல்வழிகளுக்காகவே பல, பல, பல சக்திகள் மிகுந்த திருத்தலத்திலேயும் மீண்டும், மீண்டும் யாங்கள் வந்து, நிச்சயமாய் ஏற்படுத்தி, யாங்களே பின் உருவாக்குவோம்.
நிச்சயமாய் இன்னும் எதனை என்று கூற. ஆனால், ஈசனோ கருணை உள்ளவன் இத் தேசத்தின் மீது.
ஆனால், மக்களோ!? எதை என்று உணராமலும் பொய் என்பதை கூட அனைத்தும் பின் உணர்ந்து, உணர்ந்து, எதை என்றும் நிரூபிக்கும் அளவிற்கும் கூட மனிதனின் லீலைகள் பின் உயர்ந்ததாகிக் கொண்டே போகின்றது.
மனிதன் வரும் வரும் காலங்களில் பின் இறைவனை கூட நம்பப் போவதில்லை.
ஆனாலும், எதை என்று கூற, இப்படியே ஆகிவிட்டால், நிச்சயம் என்ன ஆகுவது?? இவ்வுலகம் என்பதை கூட யாங்கள் நிச்சயம் யோசித்தோம்.
அதனால்தான், நிச்சயம் விடமாட்டோம். நல்லோர்களை பின் ஏற்படுத்தி, எதை, எதை என்று கூற, நிச்சயம் மேம்படுத்துவோம்.
ஆனாலும், பொய்யான பக்திகளை காட்டிக் காட்டி, ஈசனை வணங்கினால், நிச்சயம் ஈசன் உதவி பெற, நிச்சயம் எப்பொழுதும் கூட உதவி செய்ய மாட்டான்.
அதனால், நீங்கள் யான் இறைவனை வணங்கினேனே, வணங்கினேனே என்று கூட, நீங்கள் தான் மனதில் சொல்ல வேண்டுமே தவிர,
இறைவன்....... !?!!!
ஆனாலும், யான் பல மனிதர்களை பார்த்துவிட்டேன். ஆனாலும், இதை, இதை என்று கூற, யான் பல வாக்குகளையும் யான் சொல்லிக்கொண்டே வருகின்றேன்.
உலகத்தில் திரிந்து கொண்டே இருக்கின்றேன் எதை என்று கூட.
ஆனாலும், அகத்தியா!!!, இவை என்று கூற, அப்பா, இவை என்று கூற, இன்னும் தாயே என்று கூட, பொய் சொல்லி ஏமாற்றுகின்றார்கள்.
அதனால்தான், இன்னும் மனம்...............
ஆனாலும், இதை, இதை என்று கூற, இன்னும் ஏராளம்.
ஆனாலும், அவர்களுக்கும் நிச்சயம் யான் தண்டனையை தருவேன்.
ஏனென்றால், யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொருவரையும்.
ஆனால் எவை என்று கூற, ஈசனே, உலகத்தின் மிகக் கருணை மிகுந்தவன். ஆனால், கருணையோடு வணங்கினாலே, எவை என்று கூற, அனைத்தும் தருவான்.
அவை விட்டுவிட்டு, அனைத்தும் செய்துவிட்டு, பின் இறைவனை பின் நாடி, நாடி வந்தால்...!?!?!!.
ஆனாலும் சொல்கின்றேன், ஈசனை பிடித்தால், எதை என்று கூறாமலே சில சில வினைகள் அகன்று போகும்.
ஆனாலும், கஷ்டங்கள் வந்தாலும், எதை என்றும் நினைத்து பார்க்கும் அளவிற்கும் கூட, நிச்சயம் கஷ்டங்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் சக்தி, ஈசனே கொடுத்து விடுவான். இதுதான் உண்மை.
ஆனாலும், இன்னும் ஏராளமான மனிதர்கள் எப்படி ?திருந்துவார்கள் என்பதை கூட.
ஆனால் நிச்சயம் பின் யாங்களே பதிலடியை கொடுப்போம் என்போம்.
எவை என்று கூறாமலே,
இத்தலத்தைப் பற்றி எப்படி யான் உரைப்பது?
எதை என்று கூற, யானும் பல பல வருடங்களும் இங்கு தங்கி, வழி எதை என்று கூற தெரியாமலே, இன்னும் ஏராளமான சித்தர்களும், ஞானிகளும் இங்கு வந்து, ஈசனை அழகாக வழிபட்டு சென்றுவிட்டனர்.
ஏனென்றால், ஈசனுக்கு ஒரு, எவை என்று கூற, ஈசன் அனைத்தும் தருபவன்.
இவ்வாலயத்திற்கு எதை என்று கூற, மனதில் நினைத்து, பின் அனுதினமும் வந்து, வந்து வணங்கிச் சென்று, எதை என்று கூற, சில சில இயலாத மனிதர்களுக்கும் உதவி, எவை என்று கூற, அன்னத்தை உதவி செய்து வந்தால், இன்னும் மேன்மைகள் பெறும் என்பேன்.
ஆனால், வந்தோமா!!!!, சென்றோமா!!!!! என்று இருந்தால், நிச்சயம் விடிவெள்ளி எப்படி ஏற்படும் என்பேன்?.
( ஆலயங்கள் சென்றால் மட்டும் போதாது. அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். இயலாதவர்களுக்கு உதவ வேண்டும்.)
ஒரு வேலையை துவங்குவதற்கும் பல முயற்சிகள் வேண்டும். பல பல முயற்சிகள் செய்தால்தான், நிச்சயம் அவ் வேலையும் கிடைக்கும்.
அதனால், இறைவனின் ஆசிகள் கிடைப்பதற்கு அரிதாக, எவை என்று கூற, பின் முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான், இறைவன் பலத்த, பலத்த அருள்களோடு, இன்னும் வாரி வழங்குவான். வாரி வழங்குவான் என்பேன்.
எதை என்று குறிப்பிடாமல், இன்னும் விளக்கங்கள்.
ஆனாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவான, பின் எதை என்று கூற, இன்னும் நாவுக்கரசனோ, எதை என்றும் பணிந்து, பணிந்து, இன்னும் எதை என்று கூற, ஈசனை,
======================================
# உழவாரத் தொண்டர் , நாவுக்கரசர் , திருநாவுக்கரசர் பாடல்
======================================
ஈசனே, உன்னை நினைத்தே,
உன்னை நினைத்தே, வருந்தினேனே.
வருந்தி, வருந்தி, வாழ்ந்து கொண்டிருந்து,
வாழ்ந்து கொண்ட பின், அனைத்தையும் இழந்து,
உன்னையும் யான் இழக்கவில்லையே ,
இழக்கவில்லையே, உன் அன்பையும் இழக்கவில்லையே.
என்னுள் நீ, இறைவா,
என்னுள்ளே காண்கின்றேனே,
என்னுள்ளே காண்கின்றேனே.
இவை தன் போதாதற்கு,
உன் உள்ளத்திலே யான் இருக்கின்றேனே.
இவற்றின் பலன் உணராமல்,
உணராமல், இதைத்தன் உணர, உணர,
இன்னும் மேற்சொன்ன படிகள் நலமாகுமா,
நலமாகுமா,
பொய்யாகுமா??
பொய்யாகுமா??
இப்பிறப்பு !!!
மனிதப் பிறப்பு, லீலைகள் அதிகமாகும் பொழுது ,
நீ வந்து, பின் நல்முறைகளாகவே இன்னும் வரவேண்டும்.
என் ஈசனே,
என் ஈசனே,
சிவகாமி, நேசனே,
மனதில் குடிக்கொள்ள வேண்டும்.
கலியுகத்தில் பல மனிதர்கள் பல இச்சைகளை பின்பற்றியே ஓடுவார்கள்.
இதைத்தன் உணர, உணர,
பின் மாயையை நீக்கத்தான் வரவேண்டும், ஈசனே,
ஈசனே. இன்னும் யான் பாடிச் சென்று கொண்டிருப்பேன்.
இவ்வுலகத்தில் நீதியை நிலை நாட்ட, யாங்கள் இவை என்றும் கூறவே,
இன்னும் நாயன்மார்களும் பின் வாழ்ந்து கொண்டே இருப்போமே.
ஈசனே!!, உன்னை யாரும் அண்ட முடியாத அளவிற்கு,
ஈசனே!!!, பொய் என்பதே மனிதன் யாரும். இன்னும் கலியுகத்தில் பொய், பொய் என்றெல்லாம் கூறும் பொழுது,
யாங்கள் நாயன்மார்களும் வந்து, வந்து, அவர்களை திருத்தி, திருத்தி அழிப்போம்.
இவை என்றும் கூற,
ஈசா, ஈசா, என் நேசா,
அன்பான, அன்பான, நேசா, சிவகாமியே, சிவகாமியே, வருவாய், நலம் தருவாய்.
அனுதினமும் உன்னை மறவா எண்ணம் வேண்டும்,
எண்ணம் வேண்டும்,
எண்ணம் வேண்டும்.
எதிலும் கூட மாறாத எண்ணம் வேண்டும்.
எப் பிறப்பு எடுத்தாலும், நிச்சயமாய் உன்னை நோக்கி வரவேண்டும்.
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
========================================
இப்படி கூட, பின் எவை என்று கூற, நாவுக்கரசனோ பாடிட்டு!!!, பாடிட்டு!!!.
அதனால், இப்பொழுதும் கூட, நிச்சயமாய், பின் வந்து கொண்டே இருக்கின்றான்.
(திரு)நாவுக்கரசன் பாடிக்கொண்டே தான் இருக்கின்றான்.
அதை கூட , தேவர்களும், ரிஷிகளும், இவர்களுக்கு எதை என்று கூற, இந்திரர்களும், எதை, எதை என்று கூற, இப்பாடலை கேட்கவே, இன்னும் வந்து கொண்டே இருக்கின்றனர்.
இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கின்றனர்.
ஈசனை வணங்கிவிட்டால், இவ்வுலகத்தில் பின் யாரால் என்ன செய்ய முடியும்?
நிச்சயம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனாலும், நிச்சயம் எவை, எவை என்று கூற. அதனால்தான், இவ்வுலகத்தின் மிகப்பெரியவன், ஈசன், எதை என்று கூற.
எத்தனை அவதாரங்கள்?
எத்தனை???, எத்தனை??, எத்தனை???
இன்னும் விடப்போவதில்லை தீய மனிதர்களை.
ஆனாலும், எதை என்று கூற, ஈசனே!!!, சித்தர்களே, இவையெல்லாம் உணரும் பொழுது!!.....
மக்கள் பொய்யானவைகள் எல்லாம் பின்பற்றி, பின்பற்றி, தெரிந்து கொண்டு, வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர்.
இதனை எவ்வாறு மேற்படுத்தி, மேற்படுத்தி சொல்வதற்கு ஒன்றுமில்லையே என்று எண்ணி,
ஆனாலும் உண்டு என்பதற்கிணங்க, பின் சித்தர்களே, நீங்கள் எவை என்று கூற, வலம் வரும் பொழுது, நிச்சயம் தண்டனை கொடுங்கள்.
மனிதனின் நிலைமைகள், போராட்டம், மனத்தூய்மை இல்லை.
பொறாமை குணங்கள்.
பொய் சொல்லுதல்.
அவை மட்டுமில்லாமல், பின் பக்தர்களுக்கே, பக்தர்களுக்கே, போட்டி, பொறாமைகள்,
இவைகள் எல்லாம், நிச்சயம், பின் அதி விரைவிலே, ஈசனே, அழிப்பான்.
அழித்தும் விட்டு செல்வான்,
சொல்லிவிட்டேன்.
அதனால், ஈசனை, எவை என்று கூற, மனதால் கூற, பின் கருணை வடிவில் வேண்டி, வேண்டுங்கள்.
இதனால், பொய்யான பக்திகளை காண்பிக்க வேண்டாம்.
காண்பிக்க வேண்டாம் என்பதற்கிணங்க, ஆனாலும், எதை, எதையோ, தவறு செய்துவிட்டு, மனிதா,!!!! யான் பல வழிகளிலும், பின் பல பல சித்தர்கள் உரைத்துக் கொண்டே தான் வருகின்றார்கள்.
உன் மனம் எப்படி இருக்கின்றது??? என்பதை பார்.
மனம் எதை என்று கூற, பொய் சொல்லி, எவை என்று கூற, யாரையும் ஏமாற்ற முடியாது வரும் காலங்களில்.
அதனால்தான், மனிதனை, நிச்சயம், வரும் காலங்களில், யாங்கள் நம்பபோவதும் இல்லை.
இப்பொழுதே சொல்லிவிட்டேன்.
அதனால், யான் ஈசனை வணங்கினேனே, அகத்தியனை வணங்கினேனே.
இன்னும் ஏனைய சித்தர்களை வணங்கினேனே!!!! என்றெல்லாம், நிச்சயம், பின் சொன்னால், இன்னும் யாங்கள் பன்மடங்கு தண்டனை கொடுப்போம், சொல்லிவிட்டோம்.
எதை என்று கூற, யாரை ஏமாற்றுகின்றீர்கள்?
சித்தர்களையா ஏமாற்றுகின்றீர்கள்?
எவை என்று கூற, யாங்கள் நிஜமாகவே வந்துவிட்டோம்,
எவை என்று கூற,
ஆனாலும், வந்து கொண்டு, எதை என்று கூற, இனிமேலும். அதனால், நிச்சயம், எங்கள் பெயரை, எவை என்று கூற, எதிலும் பயன்படுத்தாதீர்கள்.
எவை என்று கூற, ஆனால், உங்களுக்கு அருகதி என்ன?, அருகதி இருக்கின்றது??? என்பதை கூட, நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள்.
எவை என்று கூற, யாங்கள், நிச்சயம், இப்பொழுது கூட சொல்கின்றோம்.
இவை என்று உணர, உணர, இன்னும் மேற்சொன்ன வழிகள், அப்பனே, இவை என்று கூற, இன்னும் வேண்டாம், அப்பனே, வேண்டாம், அப்பனே, பொய் சொல்லாதீர்கள்,
இவை, இவை என்று உணரும் பொழுது, அப்பனே, பொய் சொன்னால், நீங்கள் தான், அப்பனே, பின்னோக்கி சென்று கொண்டே இருப்பீர்கள் அப்பனே.
வேண்டாம் அப்பனே.
எவை என்று கூற, இன்னும் பல பல வருடங்கள், அப்பனே, நீங்களும் வாழ வேண்டும்.
அப்பனே, வேண்டாம், அப்பா,
வேண்டாம், அப்பா,
கருணை உள்ளத்தோடு, யான் சொல்லி வருகின்றேன்,
அப்பனே, எதை, எதை என்று நிரூபிக்கும், ஆனாலும், உண்மை இல்லையே!!!
, எவை என்று கூற, அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே.
அழகாகவே, அப்பனே, வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
அப்பனே, கருணையோடு, வணங்குங்கள் ஈசனை.
இன்னும், அப்பனே, அதி மாதங்களாகவே, எவை என்று கூற, இவை என்று கூற, இத்திருத்தலத்திற்கு, ஈசனே, வருவான். சொல்லிவிட்டோம்.
யாங்கள் சித்தர்கள் அனைவரும் வருவோம்.
தேவர்களும், இந்திரர்களும் வந்து, இங்கே கும்பாபிஷேகத்தை அழகாக, யாங்களே நடத்தப் போகின்றோம்,
(சமீபத்தில் இந்த திருத்தலத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது)
இத்திருத்தலத்தை பின் பாருங்கள்.
இன்னும் அதிசயங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்,
இன்னும் ஏராளமான செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன!!
அப்பனே.
அதனால்தான், கருணையோடு, யான் சொல்கின்றேன்,
அப்பனே, வேண்டாம், அப்பா.
எவை என்று கூற, யான் எதை என்று கூற, அப்பனே, நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்,
ஏனப்பா??????, எவை என்று பொய் சொல்ல, யான்தான் கிடைத்தேனா!!! என்ன???
அப்பனே
வேண்டாமப்பா,
யான் எவை என்று கூற, காசுகளை விரும்புவதில்லை.
அப்பனே, எவை, எவை என்று கூற, பல பல வடிவங்களில், எந்தனுக்கு எதை செய்தாலும், யான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
============================
# அன்புதான் பிரதானம்
=============================
அன்புதான் பிரதானம், அதனால், சொல்லிவிட்டேன், அப்பனே, வேண்டாமப்பா,
==============================================
# அகத்தியன் யானே, இங்கு பெரும் பணம், அப்பா
==============================================
என்னை வைத்துவிட்டு, என்னை வைத்துக் கொண்டே, அப்பனே, எதை என்று கூற, பணம் தேவையா??????????,
அப்பனே, யானே, இங்கு பெரும் பணமப்பா,
என்னை பிடித்துக் கொண்டாலே கர்மம் விலகும்,
==============================================
# அப்பனே, கர்மம் எங்கு சென்றாலும், விலகாது, அப்பனே.
==============================================
அப்பனே, கர்மம் எங்கு சென்றாலும், விலகாது, அப்பனே.
எங்கள் போன்ற சித்தர்களையும் பிடித்துக் கொண்டால் மட்டுமே, அப்பனே, கர்மம், பின் சுலபமாகவே, அப்பனே, ஓடோடி விழும் ஆற்றின் நீரைப் போலே.
அதனால்தான், அப்பனே, பணம் வேண்டாம்,
எதை வேண்டாம், அப்பனே, எவை, எவை என்று கூற, எதையுமே வேண்டாம் என்று யான் சொல்கின்றேன், அப்பனே.
அன்பு மட்டுமே போதுமானது அப்பனே.
எவை என்று கூற, அவ் அன்பை காட்டினால், அப்பனே, ஓடோடி வருவேன் அப்பனே.
எதை என்று கூற, ஈசனும், எவை, எவை என்று கூற, ஒருநாள், எதை என்று கூறாமலே, ஆனால் ஒரு சூட்சமத்தை சொல்கின்றேன், அப்பனே,
எதை என்று, அப்பனே, ஒருவன் சிறுவயதிலிருந்தே, ஈசனை நினைத்துக் கொண்டிருந்தான்.
ஈசனை நினைத்துக் கொண்டு, ஈசனை நினைத்துக் கொண்டு, ஈசனே, நீதான், எங்களுக்கு அனைத்தும் நீயே !! என்று கூட.
பல தவங்களை மேற்கொண்டான். பல ஆலயங்களுக்கு சுற்றி வந்தான்.
இதனால், ஈசன், எதை என்று கூற, உணர்ந்தான். இதனால், ஈசனுக்காக, உயிரை விட்டுவிட துணிந்தான்.
இம்மலையின் மீது ஏறி, எதை என்று கூறும் அளவிற்கும் கூட. ஆனாலும், உணர்த்துவது!!!!!,
பின் சிவகாமியோ!?!?,
பின் ஈசனே!!!!
இதை என்று உணர்வதற்குள், உன் பக்தன், சிறுவயதிலிருந்தே, உன்னை நினைத்துக் கொண்டே இருக்கின்றான்.
ஆனாலும், பிறக்கும் பொழுதும், சிவ சிவா என்று பிறந்துவிட்டான்.
ஆனாலும், எப்படி எல்லாம், இவன் தாய்மார்கள், தந்தை, எதை என்று உணராத அவர்களுக்கும் கூட, இன்னும் ஏனைய பல பல பெரியோர்களின் ஆசீர்வாதங்களும் பெற்று கூட, இவந்தனக்கு இன்னும் கர்மவினை போனதாக தெரியவில்லை.
அதனால், பின் இவந்தனக்கு ஏது? செய்யப் போகின்றாய்? என்று கூற,
ஆனாலும், நிச்சயமாய், இதை என்று கூற.
இன்னும் ஏராளம், அப்பனே,
இதனால், இன்னும் யான் மனித வடிவில் செல்கின்றேன், தேவியே !!! என்று கூறி, ஈசனும், இவனிடத்தில் வந்தான்.
அப்பனே, எவை என்று கூறும் அளவிற்கும் கூட, ஆனால், அவந்தன் உணர்ந்திருக்கவில்லை.
எவை என்று நிற்கின்ற பொழுது, இதனால், ஈசனும், அவனிடத்தில் வந்து.......,
பின் நில்!!!, மனிதா!!!, எவை, எதை என்று கூற, ஏன் இங்கிருந்து, பின் குதிக்கின்றாய்??? இறப்பதற்கு? என்று கூற.
அவந்தனும், பின் ஏன் பல கஷ்டங்கள் பட்டுவிட்டேன், ஈசனை நம்பி!, நம்பி!, ஏமாந்தேன்!,
ஆனால் வந்தது, எதை என்று உணர்த்த, ஈசன் தான் என்று, அவன் உணர முடியவில்லை.
ஆனாலும், பின் திரும்பவும், மனிதா!!!, எப்படி எல்லாம் வணங்கினாய்??? என்று கூறு,
ஆனாலும், இவற்றை நின்று, நிச்சயமாய், பின் ஈசனை வணங்க, வணங்க, எந்தனுக்கு ஏதும் தேவை, அன்னை தந்தையரை இழந்தேன்.
ஆனாலும், பல பல சொந்த பந்தங்களை இழந்தேன்,
ஆனாலும், இவற்றின்று, எதை என்று உணர,
ஆனால், அனைத்தும் இழந்துவிட்டேன், கடைசியில், உடுக்க ஆடையுமில்லை, ஒன்றுமில்லை.
ஈசனை நம்பியது போதும் என்று கூற.
ஆனாலும், பின் ஈசன் ஓடி, எதை என்று கூற, அவன் முன்னே தோன்றினான்.
மனிதா!!!, எவை என்று போதாதற்கு,!!!!
பார்த்துக்கொள், யான் யார் என்று தெரிகின்றதா?
என்று கூற.
ஓடோடி வந்தான்.
ஈசா!!!
நமச்சிவாய!!!
அம்மையப்பரே!!!
உன்னைத்தான் வணங்கினேனே, இவ்வளவு நாட்கள், ஏதும் எந்தனுக்கு செய்யவில்லையே, எதை என்று யான் எவ்வாறு என்று வந்துவிட்டாயே, வந்துவிட்டாயே.
இனிமேல் உன் காலிலே யான் விழுந்து விடுகின்றேன் என்று எண்ண, எண்ண,
ஆனாலும், இதை என்று உணராமலே, ஆனாலும், சரி, இவனே இப்படி பக்திகள் காட்டுகின்றான் என்று கூற, ஒரு வரத்தை நல்விதமாகவே, இவை என்று கூற, பின் நீ கேள்.
வரத்தை யான் தருகின்றேன்,
உந்தனுக்கு என்னதான் தேவை ??? என்று கூற.
அதனால், இவந்தனக்கு, இறைவா, எந்தனுக்கு ஏதும் தேவையில்லை. ஆனால் இவ்வுலகத்தில் நல்லோர்களை வாழ வைக்க வேண்டும், அதனால், அனைத்தும் கொடு என்று சொல்லிவிட்டான்.
அனைத்து வரங்களையும், ஆனாலும், இவை என்று கூற, ஈசனோ, அனைத்து வரங்களையும் கொடுத்துவிட்டான்.
ஆனாலும், ஈசனுக்கு தெரியும், இவன் என்ன செய்யப் போகின்றான்? என்று கூட.
ஏனென்றால், பின் இதனால் கூட, நிச்சயம் ஒரு விமோசனம் கிடைக்கும் என்பது, ஈசனுக்கு தெரியும்.
இதனால், பல மனிதர்களும், இன்னும், இன்னும், இன்னும், பின் சாதிப்பார்கள் என்பதற்கிணங்க, அவ்வரத்தை, பின் கொடுத்துவிட்டான், ஈசன்.
இதனால், பின் இவந்தனக்கு அனைத்தும் வந்தது, எவை என்று கூற, ஆனால், கடைசியில் பார்த்தால்......,
யான் தான் ஈசன் என்று, யான் தான் ஈசன், யான் தான் ஈசன் என்று கூட, அவனே, பின் ஏற்படுத்திக் கொண்டு, பல மக்களுக்கு துரோகம் செய்தான்.
அவை மட்டுமில்லாமல்!!!......
, ஆனாலும், ஈசன், நிதானித்தான் எதை என்று.
ஆனாலும், இதன் மூலம் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று எண்ணி!!!!!, இன்னும் ஏராளமான.......
ஆனாலும், இது எதனால் வருகின்றது, பின் மனிதர்களே, பின் உணர்ந்தீர்களா?????? எவை என்று கூட!!!!
அப்பனே, இதன் மூலம் கூட, இறைவன் இருக்கின்றான் என்பதை கூட உணரவே.
ஆனாலும், மக்கள், பின் எதனை என்று கூட, அப்பனே, தவறான வழியில் செல்ல ஆரம்பித்தார்கள்.
அதனால்தான், அப்பனே, பின் ஈசனே, வரத்தை தந்துவிட்டான், அப்பனே.
இப்பொழுது புரிகின்றதா இதன் சூட்சமத்தை, அப்பனே.
இதனால்தான், அப்பனே, பின் எவை என்று கூற, இவ்வுலகத்தில் மனிதர்கள் மாறுகின்ற பொழுது, நிச்சயம் அழிவுகள் அடிக்கடி தரும்.
இறைவனே, இவை என்று கூற, தடுத்து, நிச்சயம் கொடுப்பான். இதுதான் உண்மை.
இவை என்று கூற, இதனால்தான், நிச்சயம் அழியட்டும் என்று கூட, இவந்தனக்கு வரங்கள் கொடுத்து, ஆனால், இவந்தனும், யான் ஈசன், ஈசன் என்று நினைத்துக் கொண்டு, நினைத்துக் கொண்டு,
நினைத்துக் கொண்டு, பல வழிகளிலும் துன்புறுத்தினான்.
பின் இவை என்று கூறாமலே, இன்னும் ஏற்ற தாழ்வுகள் வரும் என்று, வரும் என்று கூற,
அதனால், அனைவரும் ஈசனை நோக்கி, ஈசனை நோக்கி புறப்பட்டனர்.
அப்பொழுதுதான், இறைவன் பக்தி உண்மையுள்ளது என்பது யோசித்து விட்டனர்.
இறைவன் இருக்கின்றான் என்பதை கூட, இப்பொழுது புரிகின்றதா,?????
ஈசன் எதற்காக??? கஷ்டங்கள் படுத்தினான்??, எவை என்று கூற, இன்னும் ஏராளமான மனிதர்கள், இவை தன் போலவே தான் இருக்கின்றார்கள்.
அதனால்தான் ஒரு அரக்கனை படைத்தான், இவை என்று கூற,
ஆனால் அவந்தன் நல்லவன் தான், ஆனால் வரங்களும் பெற்று கேட்டுக்கொண்டிருந்திற்கிணங்க, நிச்சயம் ஈசன் கொடுத்துவிட்டான்.
இவை என்று உணர, உணர, இன்னும் மாற்றங்கள் ஏற்படுவதற்கு, இதனால்தான் மக்களும் மாயவலையில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது, இவந்தன் லீலைகள் ஆரம்பித்து விட்டன.
ஆனாலும், ஈசனே நோக்கினான்.
ஆனாலும் மனிதர்கள், பல மனிதர்கள், எவை, எவை என்று கூற, அதனால், ஈசனை நோக்கி,
ஈசா !!!
ஈசா !!!
என்றெல்லாம், இப்பொழுது தெரிந்து கொண்டு கொண்டிருப்பீர்களே…
இப்படித்தான் இந்த கலியுகத்தில் நடக்கப்போகின்றது.
நிச்சயம் நம்புவார்கள், பொய் சொல்லுவோர்கள் எல்லாம், நிச்சயம் திருந்துவார்கள், எவை என்று கூற.
இதனால், பின் எதை என்று கூற, பின் தேவலோகத்திற்கும், இவன் சென்றுவிட்டான்,
யான் தான் ஈசன் என்று கூற, அங்கு பல பல வழிகளிலும் தொல்லைகள் படுத்தினான்.
ஏனென்றால், இவை என்று கூற, அவர்களும் கூட, எதை என்று நிற்காமல், அதனால், ஈசனை நோக்கி, தவம் புரிந்தனர்.
ஏன்,??? இவந்தனக்கு இவ்வளவு வரங்கள் என்று கூட..,
ஈசனே, எதை என்று கூற, பல பல,
ஆனாலும், இவந்தனோ!?!?!?, பின் ஈசனை வணங்கக்கூடாது, எதை என்று நிற்கும் பொழுது, எவை என்று கூறாமலே, பல பல வழிகளிலும், பின் கட்டளைகள் இட்டு, ஈசன் திருத்தலத்திற்கே செல்லக்கூடாது என்று கூட, பின் எதை என்று உணராமலே, பின் கட்டளைகள்.
இதனால், பல பல மனிதர்களும், பின் திருத்தலங்களுக்கு, பின் இவை என்று கூற, அடியாட்கள் நிறுத்தி, நிற்க, நிற்க, நிற்க, நிற்கும் போது எல்லாம், ஆனாலும், இவை என்று கூற,
அதனால், தேவர்களும், பின் இவை என்று கூற, இந்திரனும், பின் ஈசனை வழிபட்டு சென்றால், நிச்சயம் இவ்வுலகம் மாறிவிடும் என்று கூறி.
மாறக்கூடாது என்று, அவ் மனிதன்.
ஆனாலும், இதை என்று இன்னும் ஏராளமான வாக்குகளையும் உண்டு என்பதை கூட ,
அதனால், பின் எப்படியாவது, பின் நிச்சயம் ஈசனை காண வேண்டும் என்பதை கூட.
அதனால், நிச்சயம் இவை என்று கூற, அவ் அடியாட்கள் இருக்கின்ற பொழுதும், பின் ஒரு உயிரின் மூலம் அதாவது
எறும்பின் மூலம், நிச்சயம் தேவர்கள் வந்து, பின் எவை என்று, !!!....
ஆனாலும், அப்பொழுது கூட, பின் எவை என்று கூற,
ஆனாலும், இதை என்று அனுபவத்திற்கு, பின் எறும்புகள் மூலம் வந்து, அர்ச்சனை செய்தார்கள், எவை என்று கூற, ஈசனை நோக்கி, இன்னும் கூட, அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நிச்சயம் அதிகாலையிலே, பின் வந்தால்!!!!!....
ஆனாலும், இவை என்று கூற, இத்திருத்தலம், அப்பொழுது கூட, திறந்திருக்கின்றதா??? என்பதை கூட.
(அனுதினமும் இரவில் தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து எறும்பீசனை வந்து வணங்கி செல்கின்றார்கள் இது தினமும் நடந்து கொண்டிருக்கின்றது ஆனால் ஆலயம் திறக்கும் நேரம் மாறுபட்டு இருப்பதால் இதை காண இயலாது தேவாதி தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து ஈசனை வணங்கும் நேரம் ஆலயம் திறந்து இருப்பதில்லை)
எவை என்று கூற, அதனால், சரியாகவே, பின் இரண்டு, இவை என்று கூற, இன்னும் அதற்கு மேலே, பின் (மணி)துளிகள், எவை என்று கூற, மூன்று, நான்கு, இவை என்று கூற, இதன் உள்ளேவே, பின் சொல்கின்றேன்.
==================================
# இரவு 12 முதல் இரண்டு மணி வரை - தேவர்களும், முனிவர்களும் வழிபாடு.
==================================
சரியான இரவு நிசியில், இவை என்று கூற, 12 முதல் இரண்டு மணி வரையே, இவை என்று கூற, உணராமலே, நிச்சயம் இன்றளவும் தேவர்களும், முனிவர்களும், இவை என்று கூற, இந்திரனும், இங்கு வழிபட்டு சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இதனால், இவை என்று கூற, இன்னும் மேன்மை பெற வேண்டும் என்பதை கூற, இதனால், இதை, இதை என்று தரிசிக்க, தரிசிக்க, இன்னும் ஏற்பாடுகள், இதனால், பின் யாங்களே முடிவெடுத்தோம்.
இவ்வாலயத்திற்கு, நிச்சயமாய், எவை என்று கூற, அதிவிரைவிலே, இன்னும் மேற்கோள் காட்டி, இன்னும் வளர்ச்சி பெற செய்ய வேண்டும் என்பதை கூட.
அதனால்தான், இங்கு வந்து, வாக்குகளாக, யான் செப்பிக் கொண்டே வருகின்றேன்,
இதனால், நிச்சயம், இத்திருத்தலம், அதி விரைவிலே, இன்னும் சக்திகளாக கூட போகின்றது.
பின் அதி விரைவிலே, கும்பாபிஷேகம் தொடங்க, தொடங்க, நிச்சயம், இன்னும் ஏராளமான சித்தர்களும், பின் ரிஷிகளும், இவை, இவை என்று கூற, ஞானிகளும், இங்கு தேடி வருவார்களப்பா.
(இந்த ஆண்டு 2025 ஏப்ரல் மாதத்தில் மகா கும்பாபிஷேகம் ஈசன் திருவருளால் சித்தர் பெருமக்களின் அனுக்கிரகத்தால் நடைபெற்றது)
எவை என்று கூற, இதனை உணர்ந்து, உணர்ந்து, ஆனாலும், நீங்களும், நிச்சயம் வந்து, சக்திகள் பெற்றுக் கொள்ளுங்கள்.
நலமாக வாழ்ந்திருங்கள் என்று, இப்பொழுது உரைத்துவிட்டேன், எவை என்று கூற.
அதனால், ஈசன், எதை என்று கூற, அவ் மனிதன், யான்தான் ஈசன், ஈசன் என்று கூற, ஆனாலும், கடைசியில் பார்த்தால், பின் அவந்தனக்கு தண்டனை.
ஆனாலும், பின் ஈசன் வந்தான், நின்றான், மனிதா, எவை என்று, ஆனாலும், அனைத்து வரங்களும் கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டேன்,
ஏன் இந்த நிலைமை?
ஆனாலும், நிச்சயமாய், பின் மனம் வருந்தினான்.
பின், ஆனாலும், ஏன் எந்தனுக்கு , படைப்பும் (பிறவியை) கொடுத்து, யான் சாகுகின்ற நேரத்தில்,!!!!
(உலகத்தை வெறுத்து இந்த ஆலயத்தின் உச்சியில் இருந்து தற்கொலை செய்ய நினைக்கும் பொழுது)
ஆனாலும், எவை என்று கூற, !!
பின் ஈசனே, பின் நீயும் வந்துவிட்டு!!!
, தடுத்து, இப்படி எல்லாம் வரங்களை கொடுத்துவிட்டு, திரும்பவும் எதை என்று கூற.
யான் என்னதான் செய்வது????
, சாதாரண மனிதனே யான் என்று கூற,
ஈசன், ஆனால் ஈசனே சொன்னான், இல்லையப்பா.
இவ்வுலகத்தில், எவை என்று கூற, எப்பொழுதெல்லாம் அநியாயங்கள் ஓங்கி நிற்கின்றதோ,????
அப்போதெல்லாம் யானே ஒரு மனிதனை ஏற்படுத்துவேன்,
அதனால்தான், அப்பொழுது, அப்பொழுதுதான், திருந்துவார்கள் மனிதர்களும் கூட எவை என்று கூட!!!,
அப்பொழுதுதான், பின் பேசும், பின் வரலாறு என்பதை கூட.
அதனால், நீ வரலாறு படைக்க வந்தவனே என்பதை கூட, பின் இவை என்று கூற, பின் அசுரனே, கவலை இல்லை,
இவை என்று உணர, இதனால், நிச்சயம் உன் கர்மாவும் அழிந்துவிட்டது, எதனை என்று கூற, ஏனென்றால், நீ மக்களை தாக்கும் பொழுதும், அவர்கள் எவை என்று கூறாமலே, இறைவனை நினைத்து, நினைத்து, ஓடோடி வந்தனர்.
அவை மட்டுமில்லாமல், பின் எதை என்று கூற, பல மனிதர்களை, இறைவன் பக்திக்கு அழைத்து வந்துவிட்டாய்,
இதுதான் உன்னுடைய புண்ணியங்கள்,
மேற்சொன்னவாறு நடந்து விட்டது.
இதனால், இவை என்று கூட,
ஆனாலும், நால்வர்களும் அதனுள்ளே வந்து விட்டார்கள், பின் அனைவருக்கும் ஆசிகள்.
எவை என்று கூற, அதனால், பின் நாவுக்கரசனும், இன்னும் பல பல வழிகளிலும், இன்னும் பாடி, பாடி, பாடி, பாடி, புகழ்ந்து, புகழ்ந்து, மாணிக்கவாசக பெருமானும், இன்னும் எவை என்று கூற, இன்னும், இன்னும், மேற்சொன்ன வார்த்தைகள், இன்னும் நலமாகும்.
இதனால், அப்பனே, இன்னும் இதனை யாங்களே உருவாக்கப் போகின்றோம்.
அதிவிரைவிலே, பின் இதனையும் கூட, இன்னும் உயர்த்த போகின்றோம்,
இங்குள்ள சக்திகள். இதனால், நிச்சயம் சில சில கர்மாக்களை, பின் தெரியாத அளவிற்கு கூட, அதனால், இறைவனே இல்லை என்ற நிலைமைக்கும் வந்து விட்டவர்களும், நிச்சயம் அனு தினமும் எதை என்று கூறாமலே, பக்திகள் செலுத்தி, இங்கே வணங்கி வந்தாலே போதுமானது.
நிச்சயம் ஈசன் அருளுவான்.
அருள்வான் என்பேன்.
இன்னும் எதை என்று கூற, அதனால், பல தகுதிகளை பெற்றுக்கொள்ள, ஆனாலும், நீங்கள் அதற்கு தகுதியானவர்களாக இருந்தாலே, ஈசனே அழைத்து வந்து விடுவான், இங்கு.
எவை என்று, இன்னும் விளக்கங்கள், விளக்கங்கள், இன்னும் ஏராளம்,
அதனால், யாங்களே வந்து, நிச்சயம் இத்திருத்தலத்திற்கு, கும்பாபிஷேகத்தை , நிச்சயம் நடத்தித் தருவோம்.
நடத்தித் தருவோம்.
இதை நீங்களே, நிச்சயம், நீங்களே என்றால், என் பக்தர்களே, நல்ல உள்ளங்களை, அதிலும் குறையுமப்பா.
குறைந்து கொண்டே போகின்றது, வரும் வரும் காலங்களில், அதனால், நிச்சயம் வருவார்கள், இங்கு.
பின் அவர்களும் நலமடைவார்கள் என்பேன்,
இதனால், அதி விரைவிலே, யாங்கள், நிச்சயம் இத்திருத்தலத்திற்கு, பின் யாங்களே வந்து, அனைத்தும் செய்துவிடுவோம் என்பதற்கிணங்க, நல் ஆசிகள் , நல் ஆசிகள்.
இன்னும், அப்பனே, ஏராளமான திருத்தலங்களும் இப்படி அழிந்து கொண்டே போகின்றது, அப்பனே, இன்னும் உயர்த்துவோம், எவை என்று கூற,
பின் ஏனென்றால், மக்கள் நலனுக்காகவே உயர்த்துகின்றோம்,
மக்கள் அழிந்து வந்தே, அழிந்து கொண்டே வருகின்றனர், எது உண்மை,? எது பொய்? என்பதை எல்லாம் மனிதருக்கு தெரியாமலே,
அதனால், யாங்கள் சொல்லிக் கொண்டே வருகின்றோம், ஏனென்றால், பல திருத்தலங்கள், இன்னும், இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளது அப்பனே,
ஒவ்வொன்றும், அப்பனே, பின் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வருகின்றேன். அப்பனே.
நலமாக, நலமாக, என்னுடைய ஆசிகள் , அனைவருக்கும்.
அப்பனே, மீண்டும் ஒரு திருத்தலத்தில் உரைக்கின்றேன், வாக்குகளை பலமாக.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே... திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்.... ஆலயத்தில் குருநாதர் வாக்குகள் உரைத்து விட்டு அருகில் இருந்த மகான் கட்டான்கழி.. சுவாமிகள் ஜீவசமாதிகளும் வாக்குகள் உரைத்தார்..
திருவெறும்பூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் அங்கு சென்று அவரை வணங்கி இந்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்று வாக்கில் கூறியிருக்கின்றார். ஜீவசமாதி வாக்கும் இதனுடன் பின் வருமாறு!!!
மகான் கட்டாங்கழி சுவாமிகள் ஜீவசமாதிகள் குருநாதர் உரைத்த வாக்கு
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
நலமாக, நலமாக, எண்ணற்ற கோடிகள் பின் மனித பிறவி எடுத்தாலும், நிச்சயம் பின் எதை என்று உணராமலே திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
மனிதன் எதை, எதை என்று கூற ஆனாலும், நிச்சயமாய் இன்னும் எவை என்று எதிர்நோக்கிச் செல்ல, இன்னும் ஞானிகள் இவ்வுலகத்தில் வாழ்ந்து தான் வருகின்றனர்.
அதற்கேற்பவே, ஏற்பவே, இன்னும், இன்னும் ஆனாலும், அழிவுகள், அழிவுகள், மனிதன் வளர... வளர....
ஆனாலும், நிச்சயம் ஞானிகள், நிச்சயம் பின் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
நிச்சயம் நல்லோர்களை காக்கவே.
இதனால், நிச்சயம் வரும் வரும் காலங்களில் நல்லோர்கள் நிச்சயம் வாழ்வார்கள் என்பது கூட உண்மையான வார்த்தைகள்.
இன்னும் இல்லை, இதனையும் என்று அறிய.
ஆனாலும், இவ் ஞானி பின் ஈசனுடன் பற்று அதிகம், பற்று, பற்று வைத்துக் கொண்டே, இவை என்று கூற, அனுதினமும் பின் அனைவரையும் அழைத்து, அழைத்து, பல, பல ஈசனுடைய பின் பல கதைகளையும் உரைத்து வந்தான் மனிதர்களுக்கு.
இவைதன் உணர, உணர !!!....
ஆனாலும், சிறுவயதிலிருந்தே ஈசன் தான் தந்தை என்று கூட....., இவ் ஆலயத்திற்கு, அதாவது திரு எறும்பூர் எனும் ஆலயத்திலே, சுற்றி, சுற்றி, நீதான் என் தாய்!!, தந்தை!! என்றெல்லாம் வலம் வந்து கொண்டிருந்தான்.
இவந்தனக்கு கூட யாருமில்லை.
இதனால், ஈசனே!!, பார்வதியே!! என்றெல்லாம் பின் இவன் திரிந்து கொண்டு, திரிந்து கொண்டு, பின் ஈசன் மீதே பற்றுணர்ந்தான்.
இதனால், இங்கே அமர்ந்து கொண்டு பல மனிதர்களுக்கு இவன் நன்மை செய்தான்.
நன்மை செய்து கொண்டே இருந்தான்.
இதனால், பல மக்கள் நல்வழிகளாக இறைவனை பிடிக்க நல்விதமாகவே ஆனார்கள்.
ஆனார்கள், இவற்றின் மூலமும், நிச்சயம் பல மனிதர்கள் பல பக்திகளை பின் நாடிச் சென்றனர்.
பல, பல உண்மையான பக்திகளிலும் இறைவன் தான் மெய்!! என்பதை கூட நிரூபித்து காட்டினான் இவந்தன்.
இதனால், சில, சில மனிதர்கள் எவை என்று கூறாமலே இன்னும் சொல்கின்றேன்.
பல, பல வழிகளில் வாழ்ந்து வந்தவர்கள், நிச்சயம் இவன் மீது, இப்படி இறைபக்தியை செலுத்திக் கொண்டே வந்தாலே, நிச்சயம் எவை என்று கூற, இவ்வுலகம் எளிதில் அழிந்துவிடும் என்று எண்ணி!!....,
இவந்தனை அத் திருத்தலத்திலிருந்து பின் அலைக்கழியும் எதை என்று கூற, இத்திருத்தலத்திற்கு நீ இனிமேலும் வரக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
இதனால், மனம் நொந்து எதை என்று கூற,.....
இதனால் திரும்பவும் ஈசனை நோக்கி அழைத்தான், ஈசனே!!!, பார்வதி தேவியே,!!! உன்னையே பின் தாய், தந்தையராக நீங்களே.
இதனால், எதுவென்று உணர்வதற்குள் ஆனாலும், யான் என்ன செய்வது ??? என்று கூட.
ஆனால் இவற்றினின்று பின் மேலிருந்து கீழ் வரை பின் அடித்து நொறுத்தி, பின் அங்கிருந்து கீழே தள்ளினார்கள். பின் கடைசியில் கீழே வந்து விழுந்தான் இவன்.
இதனால், ஈசன் கையோடு பிடித்துக் கொண்டான்.
மகனே, எழு !! என்று கூட!!
ஆனால் இவன் ஞானி வந்தது யார்? என்று கூற, புரிந்து விட்டான் மனித வடிவிலே ஈசன்.
ஆனால் இவன் ஞானிக்கு புரிந்துவிட்டது, ஈசன் தான் என்று கூட!!,
ஈசா என்று கூற, கட்டி அணைத்துக் கொண்டான்.
எவை என்று எதனை என்று நிமித்தம்.
பின் ஏனப்பா?, ஏனப்பா?, உந்தனை கூட இப்படி???
ஆனாலும், யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன், அனைத்தும் கூட.
இதனால், இவ் ஞானியோ, எவற்றின் மூலம் எதை அறிந்து கூட, ஆனால் இன்னும் சில, சில வழிகளில் இன்னும் ஞானங்கள் பிறக்க, ஈசனை உணர்ந்து கொண்டு,
ஈசனே !!!
அப்பா !!!
இவை என்று கூற, யான் உன்னுடனே வந்து விடுகின்றேன்.
இவ் மாயப்பிறப்பு எந்தனக்கு தேவையில்லை, நிச்சயமாய், இவை என்று கூற, வாழ்ந்து, வாழ்ந்து, இன்னும் எதற்காக??? என்று கூட.
ஈசனும்
இல்லையப்பா!!!!, இன்னும் உன்னால் சாதிக்க முடியும். உந்தனக்கு பல வரங்களை யான் கொடுத்து,!!!!
நீ நிச்சயம் சாதி. (சாதிக்க வேண்டும்)
யான் இருக்கின்றேன் என்று கூற.
மேலே போ!!! என்று உணர்ந்தான். இதனால், மேலே போனான்.
(திருவெறும்பூர் ஆலயத்திற்கு மேலே)
இப்பொழுதுதான், இவந்தனை இப்படி தூக்கி எறிந்துவிட்டோம், அழகாக வந்திருக்கின்றான் என்று கூட, அனைவரும் ஆச்சரியம் பட்டனர்.
ஆனால் மீண்டும், இவந்தனை தூக்கி வீசிவிட்டனர்,
ஆனாலும் கீழே. இதனால், இவந்தனும் யோசனை, ஆனாலும் சுற்றி முற்றி பார்த்தான்.
ஈசன் இல்லை.
இதனால், நிச்சயம் நம்மால் முடியும் என்று பல மக்களை (திரட்டினார்) தீட்டினான். தீட்டி,(திரட்டி) அவ் மக்களை எவை என்று கூறாமலே, பின் மக்களை கூட்டி, இவை என்று கூற, பின் கற்று உணர்ந்து, உணர்ந்து, அவ் மக்களை பின் வாருங்கள், பார்ப்போம் என்று கூட, பல, பல வழிகளிலும் கூட, எதனை என்றும் கூற,
சித்த நிலை எவை என்று கூற, பல தவங்களை உண்டு, உண்டு என்பதற்கு இணங்க. இதனால், மக்களும் நல் முறையாகவே வந்து, வந்து, இவந்தனுக்கு இன்னும் ஏராளமாய்!!!
(ஆதரவு)
(கீழே தள்ளியவர்கள்)
அவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர் மீண்டும்.
ஆனால் மக்களை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று எண்ணி!!!!....
இதனால், பல, பல, பல வழிகளில் பெரும் குற்ற மனிதர்கள் திரும்பவும் பணத்திற்காக!!!.... எவை என்று கூற, ஆசைகளை காட்டி, பின் பக்தி உள்ளவர்கள் பணத்திற்காகவே, பின் மதிப்பு கொண்டு, இதை என்று கூற, அனைவரும் தீய மனிதரிடம் சேர்ந்து விட்டனர்.
இதனால், கடைசியில், இவந்தன் ஒருவனே நின்றான்!!!!!!
இதை என்று கூற, இவ் ஞானி.
இதனால், நிச்சயம் இப்படித்தான் மக்கள் பக்தி, பக்தி என்று வருகின்றார்கள்,!!... காசுகளை பார்த்தால் சென்று விடுகின்றார்களே என்று எண்ணி, மனம் வருந்தினான்.
இதனால், இவந்தனக்கு யாரும் துணை வரவில்லை.
மீண்டும், எவை என்று கூற, பின் இன்னும், பின் ஞானங்களை பயன்படுத்த, ஈசன் பாதையை இன்னும் செப்பிக் கொண்டே இருந்தான்.
ஆனாலும், யாரும் நம்பவில்லை.
இதை என்று என்றும் உணராமலே, இன்னும் எதை, எதை என்று கூற, மீண்டும் அவர்கள் வந்தார்கள்.
ஆனால், அதன் முன்னே, (தீய) மக்களே எவை என்று கூற......(ஞானி பார்த்து இதுவரை), நீ பிழைத்துக் கொண்டாய்,
இனிமேல் எப்படி பிழைப்பாய்??? என்று கூற, பின் மீண்டும் அங்கே இருந்தவனை கீழே தள்ள!!!.....,
(அப்போது)
ஈசனே வந்தான், மனித வடிவில் .
ஆனால், வந்தது ஈசன் தான் என்று இவந்தனுக்கு புரிந்துவிட்டது,
இதை என்று உணராமலே, அவர்களும் எவ்வாறு நலன்கள் வேண்டும் என்பதையும் கூட தடுத்து நிறுத்தி,!!!
இதனால், ஈசன் லீலைகளை காண்பித்தான்.
அதனால், நிச்சயம் இதையன்றி உணர, நிச்சயம்...
பின் என் பக்தன், நீ !!!!
இதற்காக உன்னையே இவைதன் உணர, உணர என்று கூற, நீ அங்கேயே இரு என்று நிரூபிக்க.
(ஈசன் ஞானி பார்த்து மீண்டும் மேலே செல் என்று.... அதாவது மேலே செல் என்று..
இக் கோயில் சிறிய குன்று மலை மீது உள்ளது 150 அடி உயரம் தரை மட்டத்திலிருந்து இருக்கிறது மேலே ஏறி செல்ல 125 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.)
(
அவ் ஞானி)
மீண்டும் இல்லை, இல்லை.
எந்தனுக்கு கீழே ஒரு தன்னந்தனியாக எவை என்று கூற,
(ஞானி ஈசனிடம் நான் தனியாக கீழே இருந்து கொள்கின்றேன் என்று வேண்டுதல்)
இன்னும் மேற்சொன்ன வார்த்தைகள் , இன்னும் நல்லோர்கள் வாழவே யான் செய்து ஆகவேண்டும் என்று எண்ணி, நிச்சயம் இவ்விடத்திலே பல மனிதர்களுக்கு நன்மை செய்து கொண்டிருந்தான்
(தற்பொழுது ஞானி அவர்கள் ஜீவசமாதி இருக்கும் இடம்)
.
இன்னும் மீண்டும், மீண்டும் எவை என்று கூற, பணத்தின் மீது ஆசைகளை வீண் என்பதை இன்னும் மக்களுக்கு எடுத்துரைத்தான்.
எடுத்துரைத்து, எடுத்துரைத்து, அனைத்து மக்களையும் நன்றாகவே, நன்றாகவே, பின் எவை என்று கூறாமலே, இன்னும் நல்லோர்கள் பல, பல வழிகளிலும், இவந்தனை எதை என்று கூறாமலே, பல செழிப்படைய, பல செழிப்படைய, இன்னும் ஏராளமான மனிதர்களை உருவாக்கினான். நல்லோர்களை.
இதனால் இதை என்று கூற, அதனால் ஈசனே, இவை என்று கூற, பின் கடைசி நேரத்தில் இங்கு வந்து, பின் உந்தனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று கூட !!!
இதனால் நன்மைகளாகவே இங்கே யான் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எண்ணி, மனிதர்களுக்கு பல நன்மைகளை செய்ய வேண்டும் என்று கூற.
இதனால் இங்கே அமர்ந்து விட்டான். இதையன்றி இன்னும் ஏராளம்.
=========================================
# எறும்பீஸ்வர் ஆலயம் செல்லும் முன்பு ….
=========================================
அதனால் இவை என்று கூற, பின் நேர்முகமாக இவை என்று அறியாமலே, பல மனிதர்கள் நேரடியாக எறும்பீஸ்வரரை பின் வணங்கிச் சென்று விடுகின்றனர்.
ஆனாலும், இவந்தனை நிச்சயமாய் இங்கு வந்து வழிபட்டு, நல்விதமாக இவந்தன் ஆசிகளை பெற்றுக்கொண்டு, அங்கே சென்றால், நிச்சயம் எறும்பீஸ்வரனே அனைத்தும் அளிப்பான். இதுதான் உண்மை,
இவை என்று கூற, இவ் ஞானி எவை என்று கூற, இன்னும் மேன்மைகள் கலியுகத்திலும் பல மனிதர்களுக்கு இனிமேலும் நன்மைகள் செய்வான்.
எவை, எவை என்று கூறாமலே, இன்னும் உணர்த்துவான், உணர்த்துவான், இன்னும் பல வாக்குகளும், பல சூட்சமங்களும், இவை சுற்றியே உள்ளது.
அவையெல்லாம் வரும் காலங்களில் உரைக்கின்றேன், உரைக்கின்றேன், நன்றாகவே.
ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவெறும்பூர். இந்த ஊரில் உள்ளது, எறும்பீஸ்வரர் ஆலயம்.
திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) திருக்கோயில் தலவரலாறுஇறைவர் திருப்பெயர்: பிப்பிலிகேஸ்வரர் (பிப்பிலி - எறும்பு), எறும்பீஸ்வரர், எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்கவண்ணர், மலைக்கொழுந்தீஸ்வரர், திருபுவனசுந்தரர், மாணிக்கநாகர், ஆதித்த பட்டாரகர் இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி , சுகந்த குழலேஸ்வரி, இரத்தினாம்பாள். தல மரம்: வில்வமரம்
மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.
தேவாரம் பாடல் பெற்ற இத்தலம்
திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்
பன்னிய செந்தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய தன்னையும் தன்திறத்து அறியாப் பொறியிலேனைத் தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக் கொண்ட தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக்கத்தைச் செழும்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 7வது தலம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70 வது தேவாரத்தலம் ஆகும்.
*திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்- 620 013. திருச்சி மாவட்டம்.
தல வரலாறு:
தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.
அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.
சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.
பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். "எறும்பீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.
ஆலய மேப்.
https://share.google/G9NCxx5NbGZIkicdy
மகான் கட்டாங்கழி சுவாமிகள் ஜீவசமாதி மேப்
https://share.google/X0iZvFt2OLRAyOd0U
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)


.jpeg)

No comments:
Post a Comment