அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3
தேதி : 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
(21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3)
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, அம்மையே, பல வகையான சூழ்நிலைகள் காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே, மாறிக்கொண்டே.
இதனால் முதலில் உங்களை, பின் எப்படி, பின் சக்தி ஊட்டுதல் என்பதை எல்லாம் இப்பொழுது நான் செப்புகின்றேன்.
====================================
# உங்களுக்கு சக்தி ஊட்ட ஓர் உயர் செயல்முறை. பலன்கள் :- சிறப்பான மனத்தெளிவு , மன அமைதி, சில சில நோய்கள் மாறும், உடம்பில் நல் மாற்றங்கள், அதி சிறப்பு, ஆரோக்கிய வளர்ச்சி உண்டாகும்.
====================================
குருநாதர் :- இதைத்தன் நன்கு பின் அறிந்தும், எதை என்று புரிய, சரியான பின் பசுஞ்சாணியில் ஆன விபூதியும், நன்முறையாகவே, பின் சரியாகவும், பின் ருத்ராட்சையும் எடுத்திட நன்று.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், பின் பசும் எதை என்று அறிய, இவைதன் சரியாகவே, பின் நல்விதமாகவே அறிந்தும் கூட, முதலில் பின் சரியாக, பின் சூரியன் எதை என்று அறிய, பின் ஆறு எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் சரியாக மறைகின்ற நேரத்தில், அவை மட்டுமில்லாமல், சரியாக, பின் வெயில் தன்னில் கூட, சரியாக, இவை தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், பின் பசும்பாலில் நல்விதமாகவே, இவைதன் இட்டு, பின் அதாவது எதை என்று புரிந்து, சரியாகவே, வில்வத்தையும், பின் நல் கசக்கி, கடுகளவு எதை என்று புரிய, பின் நல்முறையாகவே, பசுஞ்சாணியில் ஆன பின் விபூதியும் அறிந்தும், இதைத்தன் பின் கசக்கி, நல்விதமாகவே, இதைத்தன் பின் அறிந்தும், பின் அதில் கூட, மிளகு, பின் ஏலக்காய், மற்றும் எதை என்று புரிய, பின் அனைவரும் அறிந்ததே, சிறிதளவு மஞ்சள், தூய மஞ்சள் இட்டு, நன்விதமாகவே, அதில் கூட, பின் ருத்ராட்சத்தை இட்டு, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, சரியாகவே, பின் நிச்சயம் தன்னில் கூட பதிகம், பின் நோய் தீர்க்கும் பதிகம் இருக்கின்றது அல்லவா? அதை பாடிட்டு, நிச்சயம் தன்னில் கூட, அதை அப்படியே உட்கொள்ளுதல், பின் அதி சிறப்பு தரும்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (நோய் தீர்க்கும் பதிகம், தீராத நோய்களையும் தீர்க்கும் - திருநீற்றுப்பதிகம் உடனே பாட ஆரம்பித்தார்கள்.)
================================================
( திருநீற்றுப் பதிகம்: திருஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்டது. "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் இந்தப் பதிகத்தில், திருநீற்றின் மகிமைகளைப் பாடி, நோய்களைப் போக்க வேண்டப்படுகிறது.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே (1)
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே (2)
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே (3)
காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே (4)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே (5)
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே (6)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே (7)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே (8)
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே (9)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே (10)
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே (11)
================================================
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( திருநீற்றுப் பதிகம் பாடி முடித்த பின்னர்.)
குருநாதர் :- எதை எவை என்று அறிந்து கூட, நல் பாடலை பாடிட்டு, அப்படியே அதை நிச்சயம் தன்னில் கூட, பின் அனுதினமும் நிச்சயம் தன்னில் கூட அறிந்து வர, சிறப்பான மனத்தெளிவும் ஏற்படும். இதனால் மன தெளிவுகள், பின் ஏற்பட்ட சில மாற்றங்கள், நிச்சயம் உடம்பில் நிகழும். அப்பொழுது ஆரோக்கியமும் வழிவகை செய்யும், எதை என்று புரிய அறிந்தும் கூட.
குருநாதர் :- அதேபோல் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, பின் யான் சொல்லியதை சரியாகவே நடத்தி வர, நன்று. சில சில நோய்கள் மாறும்.
==========================================================
செயல்முறை சுருக்கமான பத்தி (Summary Paragraph)
(இவ் முறையை செய்யும் முன்னர் குருநாதர் வாக்கினை நன்கு எழுதி வைத்து மீண்டும் மீண்டும் படிக்கவும்.)
பசுஞ்சாணியில் ஆன தூய விபூதி, நன்முறையில் தேர்ந்தெடுத்த ருத்ராட்சம், பசும்பால், வில்வம், மிளகு, ஏலக்காய், தூய மஞ்சள் போன்ற பொருட்களை சூரியன் மறையும் நேரத்தில் சேகரித்து, நன்றாக கசக்கி, இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையில் ருத்ராட்சத்தையும் இட்டு, நோய் தீர்க்கும் பதிகம் (திருநீற்றுப் பதிகம்: திருஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்டது. "மந்திரமாவது நீறு" ) பக்தியுடன் பாடி, பின்னர் அதை உட்கொள்வது மனத் தெளிவு, உடல் நலம், ஆன்மிக உயர்வு ஆகியவற்றை வளர்க்கும். இதை அனுதினமும் தொடர்ந்தால் மன அமைதி, உடல் மாற்றங்கள், ஆரோக்கிய வளர்ச்சி ஆகியவை நிச்சயமாக ஏற்படும்.
நடைமுறை படியான செயல்முறை (Procedure)
(இவ் முறையை செய்யும் முன்னர் குருநாதர் வாக்கினை நன்கு எழுதி வைத்து மீண்டும் மீண்டும் படிக்கவும்.)
1. தேவையான பொருட்கள்
பசுஞ்சாணியில் ஆன தூய விபூதி
ருத்ராட்சம்
பசும்பால்
வில்வ இலைகள்
மிளகு
ஏலக்காய்
தூய மஞ்சள் (சிறிதளவு)
2. சேகரிக்கும் நேரம்
சூரியன் மறையும் நேரம் (சாயங்காலம்) மிகச் சிறந்தது.
வெயில் குறையும் நேரத்தில் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது புனித சக்தியை அதிகரிக்கும்.
3. தயாரிக்கும் முறை
முதலில் பசுஞ்சாணி விபூதியை எடுத்துக்கொள்ளவும்.
அதில் பசும்பாலைச் சேர்க்கவும்.
வில்வத்தை நன்றாக கசக்கி கலவையில் சேர்க்கவும்.
மிளகு, ஏலக்காய், சிறிதளவு தூய மஞ்சள் சேர்க்கவும்.
அனைத்தையும் நன்கு கலந்து ஒரே மாதிரியான புனித கலவையாக மாற்றவும்.
இறுதியில் ருத்ராட்சத்தை இதில் இட்டு புனிதத்தைக் கூட்டவும். ( அதே ருத்திராட்சம் அதனை உங்கள் விருப்பம் போல் மீண்டும் தண்ணீரை புனிதப்படுத்த அனுதினமும் பயன்படுத்தலாம்)
4. ஆன்மிக செயல்பாடு
“நோய் தீர்க்கும் பதிகம்” திருநீற்றுப் பதிகம்: திருஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்டது. "மந்திரமாவது நீறு" பக்தியுடன் பாடவும்.
பாடலின் பின், அந்த கலவையை பக்தியுடனும் , மரியாதையுடன் உட்கொள்ளவும்.
5. பெறப்படும் பலன்
அனுதினம் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சிறப்பான மனத்தெளிவு , மன அமைதி, சில சில நோய்கள் மாறும், உடம்பில் நல் மாற்றங்கள், அதி சிறப்பு உண்டாகும், உங்களுக்கு ஆரோக்கிய வளர்ச்சி ஏற்படும்
( வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம் )
===============================================================
========================================
# மந்திர அவுசதம் செய்து உங்கள் சக்தியை கூட்டுவது எப்படி ? உங்களுக்கு உள்ளார்ந்த சில மாற்றங்கள், ஆற்றல்கள் கிடைக்கும். அவுசதம் நீங்களே தயாரிக்கும் செயல்முறை.
========================================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், பின் நிச்சயம் தன்னில் கூட, இரவு தன்னில் கூட சரியாகவே, பின் பசுஞ்சாணியால் ஆன, நிச்சயம் விபூதியையும் கூட சரியாகவே, அதன் அறிந்தும் கூட சரியாக ருத்ராட்சம் எடுத்துக்கொண்டு, பின் ருத்ராட்சத்தை நிச்சயம் தன்னில் கூட, இவைதன் அப்படியே, பின் அதாவது, பின் உள்ளங்கையில் வைத்து, நல்விதமாக, அதாவது பசுஞ் விபூதியை, பின் உள்ளங்கையில் வைத்து, நல்விதமாக, பின் அதாவது, பின் விபூதியுடனே, பின் இன்னும் சில மூலிகைகள், பின் அதாவது ஏலக்காய், பின் பச்சைக் கற்பூரம், சிறிதளவு, இன்னும் சில சில எவை என்று, மிளகு, திப்பிலி, அதிமதுரம், இன்னும், பின் நெல்லிக்கனி, சிறிது, அதாவது எதை என்று கூற, இவையெல்லாம் எடுத்திட்டு, நல்விதமாகவே, பின் கசக்கி, நல்விதமாக, எதை என்று அறிந்தும் கூட, உள்ளங்கையில் வைத்து, நல்விதமாகவே, சில மந்திரங்கள், எதை என்று கூற ,
““““ஓம் க்லீம் சௌம் மம் வசி மம வசி”””””””
என்றெல்லாம் செப்பி, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அப்படியே, அதைத்தன் நிச்சயம், இன்னும் மந்திரங்கள், பின்
““““ஓம் நமசிவாய வயநமசி”””””””
என்று மாற்றி மாற்றி, சுழன்று, பின் ஒரு மணி, பின் நேரங்கள் சொல்லிச் சொல்லி, பின் அதனை அப்படியே, பின் உள்ளங்கையிலே வைத்திருக்க வேண்டும்.
இவ் மந்திரங்கள் சொல்லி சொல்லி, பின் கடைசியில் ஒரு மணி நேரம் கழித்து, நிச்சயம் அதை அப்படியே, பின் அதாவது, நல்விதமாக, பின் பின்பு அறிந்தும் கூட, இதை சொல்வதற்கு முன்பே, நிச்சயம் ஒரு எதை என்று கூற , மண் தன்னில் கூட ஆன, சரியான தன்னில் கூட சரியாகவே, பின் எதை என்று, பின் நீரில் முன்பே வைத்துவிட வேண்டும்.
இவ்வாறு வைத்திட்டு, நல்விதமாகவே, பின் அதைத்தன், அதாவது யான் சொன்னேனே, ஒரு மணி நேரம் நிச்சயம் பிரார்த்தனைகள் செய்து, இதைத்தன் உள்ளங்கையில் இருக்கின்ற, பின் அவுசதங்களை, நல்விதமாக, அதாவது மந்திரத்தை, பின் சொல்கின்ற பொழுதே, அதை அவை அவுசதங்கள் ஆகும். இதைத்தன் நீரில் இட, நிச்சயம் தன்னில் கூட, அவைதன் அப்படியே, பின் அருந்தி வர, சில மாற்றங்கள், ஆற்றல்கள் கிடைக்கும். அப்பா.
செயல்முறை சுருக்கமான பத்தி (Summary Paragraph)
(இவ் முறையை செய்யும் முன்னர் குருநாதர் வாக்கினை நன்கு எழுதி வைத்து மீண்டும் மீண்டும் படிக்கவும்.)
இரவு நேரத்தில் பசுஞ்சாணி விபூதி, ருத்ராட்சம், ஏலக்காய், பச்சை கற்பூரம், மிளகு, திப்பிலி, அதிமதுரம், நெல்லிக்கனி போன்ற மூலிகைகளை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி, அதே நேரத்தில் “ஓம் கிளீம் சௌம் மம் வசி மம வசி” மற்றும் “ஓம் நமசிவாய வயநமசி” என்ற மந்திரங்களை மாற்றி மாற்றி ஒரு மணி நேரம் ஜபிப்பது. இந்த மந்திர ஜபத்தால் அந்த மூலிகைகள் புனித ஆற்றலுடன் நிறைந்து, அவை ஒரு அவுசதமாக மாறும். ஜபம் தொடங்குவதற்கு முன் ஒரு மண் பானையில் நீர் வைத்து, ஜபம் முடிந்த பின் அந்த மூலிகை கலவையை நீரில் இட்டு அருந்தினால் உடல்–மனம் இரண்டிலும் நன்மையான மாற்றங்கள், ஆற்றல், தெளிவு ஆகியவை கிடைக்கும் .
🔱 நடைமுறைப்படியான செயல்முறை (Procedure)
(இவ் முறையை செய்யும் முன்னர் குருநாதர் வாக்கினை நன்கு எழுதி வைத்து மீண்டும் மீண்டும் படிக்கவும்.)
1. தேவையான பொருட்கள்
பசுஞ்சாணியில் ஆன விபூதி
ருத்ராட்சம்
ஏலக்காய்
பச்சை கற்பூரம் (சிறிதளவு)
மிளகு
திப்பிலி
அதிமதுரம்
நெல்லிக்கனி (சிறிது)
மண் பானை மற்றும் நீர்
2. ஆரம்பத் தயாரிப்பு
இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் அமரவும்.
மண் பானையில் நீரை முன்பே நிரப்பி வைக்கவும்.
3. கலவை தயாரித்தல்
உள்ளங்கையில் விபூதி, ருத்ராட்சம் மற்றும் அனைத்து மூலிகைகளையும் சேர்க்கவும்.
அவற்றை மெதுவாக கசக்கி ஒன்றிணைக்கவும்.
4. மந்திர ஜபம்
உள்ளங்கையில் கலவையை வைத்தபடி மந்திரங்களைச் சொல்லத் தொடங்கவும்:
“ஓம் க்லீம் சௌம் மம் வசி மம வசி”
“ஓம் நமசிவாய வயநமசி”
இந்த இரண்டு மந்திரங்களையும் மாற்றி மாற்றி ஜபிக்கவும்.
இதை ஒரு மணி நேரம் தொடரவும்.
5. அவுசதமாக மாற்றுதல்
ஜபம் முடிந்த பின், உள்ளங்கையில் இருந்த கலவையை மண் பானையில் உள்ள நீரில் விடவும்.
அந்த நீரை பக்தியுடன் , மிகுந்த இறை மரியாதையுடன் அருந்தவும்.
6. பெறப்படும் பலன்
உடல்–மனம் இரண்டிலும் ஆற்றல் அதிகரிக்கும்.
மனத் தெளிவு, அமைதி, உள்ளார்ந்த சில மாற்றங்கள், ஆற்றல்கள் கிடைக்கும்.
==================================================
சுவடி ஓதும் மைந்தன் :- (சித்தர்கள் கூறிய மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் நமக்குள் உள்ள ஆற்றலை அதிகரித்து, உடல்–மனம் ஆரோக்கியமாக இருக்க உதவும். இந்த வழி முறைகள் மக்கள் நன்மைக்காகவே வழங்கப்படுகின்றன; ஏனெனில் ஒருவர் நலமாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும். அதனால் முதலில் நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், அதை சரியாகப் பயன்படுத்தவும் சித்தர்கள் இடையிடையே இது போல அறிவுறுத்துவார்கள். இந்த மந்திரங்களையும் வழிமுறைகளையும் பதிவு செய்து, டைப் செய்து, நன்கு உள் வாங்கி , தொடர்ந்து பயிற்சி செய்தால் நம்முள் மாற்றம் ஏற்பட்டு, பிறருக்கும் வழிகாட்டியாக நிற்கும் திறன் உங்கள் அனைவருக்கும் உருவாகும். )
குருநாதர் :- அப்பனே, நல்விதமாக, அப்பனே, இறைவன் அழகாக, அப்பனே, பின் மனிதனை, பின் படைத்திட்டான் அப்பனே கூடவே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய இவ்வாறாக, அப்பனே, மனிதன் சரியில்லை என்றால், நோய்களும் கஷ்டங்களும் நிச்சயம் தன்னில் கூட வர வேண்டும் என்பது விதி அப்பா. ஆனாலும், அப்பனே, நிச்சயம் அதைத்தன், அப்பனே, போக்க மருந்தும் உண்டு என்பேன் அப்பனே.
=================================
# உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் - மந்திரமும் பலிக்கும். மூலிகைகள் கூட பலிக்கும்.
=================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய அப்பனே, அதனால் உடம்பு நிச்சயம் தன்னில் கூட, இறைவன் படைத்துவிட்டான் அப்பனே. பின் படைத்தவனுக்கு அவன் உடம்பையும் சரி செய்ய முடியும் என்பேன் அப்பனே. ஆனால், அப்பனே, அனைவரும் நல் எண்ணங்களாக, உயர்ந்த குறிக்கோள்களாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட மந்திரமும் பலிக்கும் அப்பா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மூலிகைகள் கூட பலிக்கும் அப்பா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு மூலிகைக்கும் மந்திரங்கள் உண்டு என்பேன். அப்பனே, அனைவரும் அப்பனே உட்கொண்டே இருப்பார்கள் அப்பனே. நோய் தீராதப்பா, ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அவ் மூலிகைகளை இயக்க மந்திரங்கள் உண்டு. அது தான் எங்களிடத்திலே உண்டு என்பேன் அப்பனே. நீங்கள் நன்றாக நல் மனதோடு மற்றவருக்காக சேவை செய்து கொண்டே இருந்தால், யாங்களே அவ் மந்திரத்தையும் தருவோம அப்பனே. நீங்களே உங்கள் உடம்பை சரி செய்து கொள்ளலாம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, பின் பல வழிகளில் கூட, அப்பனே, பல வாக்குகள் செப்பிவிட்டேன் அப்பனே. பல உயிரினங்கள், அப்பனே, நிச்சயம் இவ்வுலகத்தில் இறைவன் படைத்திருக்கின்றான். ஆனாலும், அதற்கெல்லாம் நோய்கள் வந்தால், அதுவே சரி செய்து கொள்ளும் அளவிற்கு, அப்பனே, அதற்கு பக்குவம், அதற்கு பக்குவங்கள் இருக்கின்றது அப்பா. ஆனால் மனிதருக்கோ இல்லையப்பா, மனிதருக்கும் கொடுத்திருக்கின்றான் அப்பனே. தீய குணங்கள் இருந்தால், அது வெளிக்கொண்டு வராதப்பா அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் உடலுக்கும் அதனுடன் இணைந்த மருந்துகளுக்கும் சக்தியை அளித்திருக்கிறார்; ஆனால் அந்த சக்தி மனிதனுக்கு வெளிப்படுவது உயர்ந்த எண்ணங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் உள்ள போது மட்டுமே. இல்லையெனில் மருந்து எடுத்தாலும் அது பயன் அளிக்காது. மருந்துகளின் உண்மையான திறனும் அவற்றைச் செயல்படுத்தும் மந்திரங்களும் தகுதியுள்ளவர்களுக்கே வெளிப்படும். அனைத்து உயிர்களுக்கும் தன்னைத்தானே குணப்படுத்தும் இயற்கை சக்தி உள்ளது. மனிதனுக்கும் அது இருக்கிறது, ஆனால் மனிதன் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கிறான். அந்த உள் சக்தியை உணரவும் பயன்படுத்தவும் உயர்ந்த நோக்கங்களும் , உயர்ந்த எண்ணங்களும் , உயர்ந்த குணங்களும் மிக மிக அவசியம்)
குருநாதர் :- அப்பனே, இதனால் பல ஞானிகள், அப்பனே, இதை சொல்ல வந்தார்கள் என்பேன் அப்பனே. ஆனால் அவர்களை மூடர்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகைகள் ஞானிகள் அப்பனே, எவ்வளவு? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மனிதனால், அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் மீண்டும் மீண்டும், அப்பனே, ஞானிகள் வந்து கொண்டே தான் இருந்தார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (எத்தனை ஞானிகள் மனிதகுலத்திற்கு நன்மையைப் போதிக்க வந்தாலும், அவர்களை மனிதர்கள் புரிந்துகொள்ளாமல் விமர்சித்ததே வரலாறு. உலகில் பல மகான்கள், ஞானிகள் உலகிற்கு நல்லதை சொல்ல வந்த போதும், மனிதர்களின் இயல்பான அறியாமை மற்றும் குற்றம் காணும் மனோபாவம் அவர்களைத் துன்புறுத்தியது. நல்லதைச் சொல்ல வந்தவர்களுக்கே இவ்வாறு நடந்தது என்பதால், மனிதனின் இயல்பு மாற்றமில்லாமல் தொடர்கிறது. அதனால், மனிதகுலத்தை வழிநடத்த இறைவன் காலம் காலமாக புதிய ஞானிகளை அனுப்பிக் கொண்டே இருப்பார்.)
குருநாதர் :- அப்பனே, ஒரு எல்லைக்குத்தான் அப்பனே. அந்த எல்லை மீறி, அப்பனே போனால், அப்பனே, முடிந்துவிட்டது கதை.
குருநாதர் :- அப்பனே, ஒன்றை நீங்கள் யோசியுங்கள் அப்பனே. அனைத்தும் உங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடுத்துவிட்டால், நீங்கள் இறைவனை நினைப்பீர்களா? என்னப்பா?. இதனால்தான் அப்பனே, இறைவன் மறைமுக பொருள். இறைவன், அப்பனே சாதாரணமானவன் இல்லை.
=================================
# ஈர்ப்பு விதி - இறைவன் அன்பு
=================================
குருநாதர் :- அப்பனே, படைத்தவனுக்கு தெரியுமப்பா. அப்பனே, எப்படி இழுத்தால் மீண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், இறைவன் அன்பு மிகுந்தவன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ் அன்பு, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கும் புகுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. நீங்கள் தெரியாமல், பின் ஆடுகின்றீர்கள். ஆட்டம், அப்பனே, முடிவில், பின் இறைவன், ஐயோ, பாவம் என்று சொன்னவுடன், உங்களுக்கு கஷ்டம் வந்துவிடுகின்றது. மீண்டும், அப்பனே, பின் அவ் அன்பினால், இறைவனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வந்து, அப்பனே, சேருகின்றீர்கள். இதுதான், அப்பனே, பின் ஈர்ப்பு விதி என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஈர்ப்பு விதி என்பது, இறைவன் அளிக்கும் அன்பின் செயல்பாடாக விளக்கப்படுகிறது. இறைவன் மனிதனை குழந்தைபோல் கருதி நன்மைகளை செய்ய உலகிற்கு அனுப்பினாலும், மனிதன் அறியாமையால் தவறான செயல்களில், பாவ செயல்களில் ஈடுபடுகிறான். அதன் விளைவாக, “நாம் அனுப்பிய அருளை இவ்வாறு பயன்படுத்துகிறார்களே” என்று இறைவன் மனம் வருந்துவதால்,, அவ் வருத்தத்துடன், மனிதன் செய்யும் பிழைகள் அவனுக்கே துன்பமாக திரும்புகின்றன. அந்த துன்பத்தின் வழியே மனிதன் மீண்டும் இறைவனின் கருணைக்குள் திரும்பி வருகிறான் மனிதன். இந்த பரிமாற்றமே ‘ஈர்ப்பு விதி’ எனப்படும்)
================================
# அன்பு = இறைவன். இறைவனிடம் அன்பு இல்லை என்றால் சோதனை வரும்.
================================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, நிச்சயம் தன்னை கூட, இறைவனை மீண்டும் நெருங்குகின்றீர்கள் அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் சோதனைகள் வந்தால்தான், அன்பு என்ற வார்த்தை, அப்பனே, மிகுந்து காணப்படும். இதனால்தான், அப்பனே, அன்பு என்ற சொல்லுக்கு, இறைவன் என்று, அப்பனே, எதை என்று புரிய. இதனால், அன்பின் எதை என்று அறிய, அப்பனே, தத்துவம் பல பல வடிவங்களையும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் மனிதனிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கிறார்; ஆனால் மனிதன் அந்த அன்பை இயல்பாக இறைவனிடம் செலுத்தாமல் இருப்பதால், இறைவன் அவனை துன்பங்களின் வழியாக தன் பக்கம் திருப்புகிறார். மனிதன் கஷ்டங்களை எதிர் கொள்ளும் போது மட்டுமே இறைவனை நாடி அன்பு செலுத்துகிறான். ஆரம்பத்திலேயே அந்த அன்பு செலுத்தி இருந்திருந்தால் துன்பம் தோன்றியிருக்காது. ஆகவே, மனிதன் இறைவனிடத்தில் அன்பு செலுத்தாததன் விளைவாகவே கஷ்டம் மனிதனுக்கு வருகிறது. அந்த கஷ்டம் மீண்டும் மனிதனை இறைவனின் கருணைக்குள் இட்டுச் செல்கிறது)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து, அப்பனே, அப்பொழுது பின் அனைத்தும் பொய் என்று மனிதன் உணருகின்றான் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பிறவின் பலனை அடைகின்றான்.
குருநாதர் :- அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கின்றதப்பா. அப்பனே, அவ் வேலையை சரியாக முடித்தால் தான், அப்பனே, அவ் வேலையை சரியாக முடிப்பதற்கும், அப்பன் நிச்சயம் பின் இறை ஆசிகள் வேண்டும் அப்பனே.
ஒவ்வொருவரின் அப்பனே, பின் வேலைகளும் என்னென்ன அப்பனே?
தெரியவில்லையே !!
அது தெரியாததால் தான், அப்பனே, இவ்வான்மா பிறந்து கொண்டே வருகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தனித்தனி கடமைகள் உள்ளன; அந்தக் கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதற்கு இறைவனின் அருளும் ஆதரவும் அவசியம். ஆனால் மனிதன் தன் வாழ்க்கையின் உண்மையான பணியும் நோக்கமும் என்ன என்பதை அறியாமல் இருப்பதால், அந்த அறியாமை அவனைப் பிறவிப் பயணத்தில் தொடர்ந்து தள்ளுகிறது. தன் கடமையின் சாரத்தை உணராததே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பதற்கான காரணமாகிறது)
============================================
# திருவாசகம், எட்டாம் திருமுறை = தர்ம தேவன், முப்பெரும் தேவன் - சனீஸ்வரர்.
============================================
குருநாதர் :- அப்பனே, அவை தெரிந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் வேண்டும் அப்பா. அப்பனே, அவை தெரிந்து கொள்வதற்கும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எட்டாம் திருமுறை மிக மிக மிக முக்கியம்.
குருநாதர் :- அப்பப்பா, இதைத்தன் சனீஸ்வரன் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எட்டாம் திருமுறை, சனீஸ்வர பகவான்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவன் அருள் இருந்தால் மட்டுமே, அப்பனே, ஞானத்தின் வழி பிறக்கும் அப்பா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இராவணன் கூட சனீஸ்வரனை வென்ற சனீஸ்வரனை வெல்ல முடியவில்லையே. அனைத்தும் வென்று விட்டான். கடைசியில், சனீஸ்வரனை வெல்ல முடியவில்லையே.
குருநாதர் :- அப்பனே, இன்னும் இதன் ரகசியங்கள் தெரிவிப்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. முதலிலிருந்து சிறு சிறிதாக எடுப்பதற்காகத்தான் அப்பனே, அனைத்தும் தெரியும் அப்பனே. கடைசியில் வருவதை முதலில் சொன்னால், நீங்கள் குழப்பிக் கொள்வீர்கள் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- முதலிலிருந்து சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு புரியும். கடைசியிலே இருக்கிறதை முதல்ல சொன்னா என்ன ஆகுமாம்? ஒன்றும் புரியாது.
============================
# இறைவனின் துகள் , உங்கள் இருதயத்தில் இருக்கின்றது.
============================
===============================================
(அடியவர்கள் உங்கள் இதயத்தில் உள்ள இறைவன் அணுவை எப்படி இயக்கலாம் என்று குருநாதர் முன்பு உரைத்த “சிதம்பர ரகசியம்” வாக்கினையும் படித்து குரு அருள் பெறுக.)
சித்தன் அருள் - 1319 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!
https://siththanarul.blogspot.com/2023/04/1319.html
===============================================
குருநாதர் :- அப்பனே, தத்துவங்கள் எதை புரிய, அப்பனே, வினை எதை என்று அறிய, அப்பனே, பின் இருதயம் எதை என்று புரிந்தும், எவை என்று அறிந்தும் கூட, தெளிவுகள் மனிதனுக்கு இல்லையே அப்பனே. இதயத்தில் என்னென்ன உள்ளது என்பவையெல்லாம், அப்பனே, வரும் வரும் வாக்கில் யான் சொல்வேன்?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அறிந்து கூட. அப்பனே, இறைவனின் துகள் அப்பனே, பின் இருதயத்தில் இருக்கும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனின் துகளான ஒரு அணு மனிதனுக்கு எளிதில் அறியப்படாத ஒன்று. ஆனால் அந்த தெய்வத் துகள் அணு அனைத்து உயிர்களிடத்தும் இருதயத்தில் நிறைந்திருக்கிறது. எண்ணற்ற மனிதர்கள் இருந்தாலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் அந்தச் சிறு தெய்வீக இறைவனின் அணு இருப்பதால், மனிதனுக்கும் இறைவனுக்கும் ஆழமான மற்றும் பிரிக்க முடியாத தொடர்பு நிலைத்திருக்கிறது.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அதை தன் அப்பனே, நிச்சயம் இறைவனின் கூட அப்பனே, இதயத்தில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், இறைவனிடத்திலிருந்து பிரிந்து வந்துவிட்டால், அப்பனே, அவை தன் அப்பனே இறந்துவிடும் என்பேன் அப்பனே. .
குருநாதர் :- அப்பப்பா, பின் பிறவி வந்து விடுகின்றதே அப்பா.
===================================
# அருணகிரிநாதர் - தன் இதயத்தில் உள்ள இறை துகள் அதனை உயிர்ப்பித்த வரலாறு
===================================
குருநாதர் :- எதை என்று புரிய அப்பா, ஏன் இவ்வளவு அப்பனே, மீண்டும் பாடல்களுடன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, அருணகிரிநாதன் அப்பனே, இதை அப்பனே, நிச்சயம் கடைசியில் தான் இதை உணர்ந்தான் என்பேன் அப்பனே. இதை எப்படி இவ் துகளை, பின் செத்து போயிற்றே… இதை எப்படி எழுப்புவது (மீண்டும் உயிர்ப்பிப்பது எப்படி) என்று அப்பனே, பாடலை பாடினான் என்பேன் அப்பனே நிச்சயம்.
குருநாதர் :- அவ்வாறாக அப்பனே, பின் பாடலை பாடிட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அறிந்து கூட சில உயிர்களுக்கு ஆபத்தான நேரத்தில் நீங்கள் சரியான பின், அதாவது தீனியை கொடுத்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உயிரும் பிழைத்து விடும் அல்லவா? அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறந்து போன அப்பனே, துகளை நீங்கள் உயிர்ப்பிக்க செய்ய வேண்டும்.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, பல பல பாடல்கள், பல பல புத்தகங்கள், அப்பனே, எழுதியுள்ளார்கள் என்பேன் அப்பனே, அதையெல்லாம் படித்தால் மட்டுமே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் உயிர் பெறும் அத்துகள். அப்பனே, அத்துகள் உயிர் பெற்றுவிட்டால், உங்களுக்கு அனைத்தும் தெரிய வரும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதை அறிவித்து அருணகிரியும் எப்படி? ஏன்? என்று தெரிந்து கொண்டான். ஆனால், நிச்சயம் இதைத்தன் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் இறைவனை அழைத்தால் வருவானா என்ன? நிச்சயம் தன்னில் கூட. பின், அதாவது அறிந்தும் புரிந்தும் எது என்றறிய. பின், நிச்சயம் பின் இறந்து விடுவோம் என்று எண்ணி, அறிந்து கூட. அப்பொழுதுதான், நிச்சயம் தன்னில் கூட (முருகப்பெருமான் தனது வேலால்) அருள் கொடுத்து பாடு என்று (முருகப்பெருமான் சொல்ல), அறிந்து கூட பாடினான்.
குருநாதர் :- நிச்சயம் அத்துகளும் பின் உயிர் பெற்றது. நிச்சயம் தன்னில் கூட உயிர் பெற்றுவிட்டால், நிச்சயம் தன்னில் கூட உலகம் பின் எதை என்று அறிய. பின், அழிகின்ற பொழுதும் கூட, நிச்சயம் தன் தன் பெயர் பின் ஓங்கி நிற்கும். இதனால், இறைவனைப் பற்றி புகழ்ந்து எதை என்று கூட இன்னும் ஞானங்கள் தித்திக்கும். பின், இன்னும் ஞானங்கள் பிறந்து, தன்னைத்தானே எப்படி வெல்லலாம் என்றெல்லாம் நோய்களும் பல மருந்துகளும் பின் தான் தானே உணர்ந்து, தானே தானே செயலாற்றி. நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் நல்லதே செய்யலாம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (குருநாதர் கூறியது என்னவெனில்: அருணகிரிநாதர் இறுதியில் உணர்ந்தது, மனிதனுள் மறைந்து கிடக்கும் துகள்கள்—அறிவு, உணர்வு, ஆன்மிகத் திறன்—அவை செயலிழந்து போனபோது, அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது அவசியம். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் சரியான மருந்து கொடுத்தால் உயிர் காக்கப்படுவது போல, உள்ளார்ந்த இந்தத் துகள் சரியான பாடல்கள், நூல்கள், ஞானம் ஆகியவற்றின் மூலம் மீண்டும் உயிர் பெறுகின்றன. அதனால் பல பாடல்களும் நூல்களும் எழுதப்பட்டன; அவற்றை உண்மையுடன் படிக்கும் போது அந்தத் துகள்கள் விழித்தெழுகின்றன, விழித்தெழுந்தவுடன் உலகின் உண்மைகள் தெளிவாகப் புரிகின்றன. இதை அருணகிரிநாதர் உணர்ந்து, இறைவனின் அருளை வேண்டி பாடத் தொடங்கினார். இறைவன் அருளால் அவரது இதயத்தில் உள்ள இத்துகள் உயிர் பெற்று, உலகின் இயல்பை அறியச் செய்தன. உடல் அழிந்தாலும் பெயர் நிலைத்திருப்பதற்கான காரணமும் இதுவே. இறைவனைப் புகழ்ந்து பாடும் போது மேலும் மேலும் ஞானம் பிறக்கிறது; அந்த ஞானம் மனிதனை, தன்னையே வெல்லும் நிலைக்கு அழைத்து செல்கிறது. பல புரிதல்கள் உண்டாகும்.)
குருநாதர் :- அப்பனே, ஆனாலும் பின் எதை என்று புரிய? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, உடம்பு தான் இருக்காது என்பேன் அப்பனே. அத்துகள் தான் உயிர் என்பேன் அப்பனே. நிச்சயம் அது இருக்கின்ற பொழுது, உடம்பும் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், உடம்பு தெரியாதப்பா. இதுபோலத்தான் பல ஞானிகள், பின்னால் இருக்கின்றானே அவனும் அப்படித்தான்.
===============================
(இவ் ஆலயத்தில் சாய்பாபா சன்னதியின் முன்னால் அமர்ந்து இவ்வாக்கு படிக்கப்பட்டது )
===============================
================================
# சாய்பாபா - தனது இதய துகள் மூலம் அங்கு நிகழ்த்திய அதிசயம்
================================
சுவடி ஓதும் மைந்தன் :- ( இங்கு சாய்பாபாவை பற்றி குருநாதர் சொல்கின்றார். அந்த துகளை உயிர் பிழைக்க வைத்துவிட்டோம் என்றால் , நாம் இருப்போம். ஆனால் உடம்பு தெரியாது. இதனால்தான் பல ஞானிகள் அந்த துகளை ஆக்டிவேஷன் பண்ணிட்டாங்க. அவர் பற்றி சொல்றாரு. யாரு பின்னாடி இருக்கிறது யாரு? சாயிராம். )
( அப்போது சாய்பாபாவிடம் இருந்து பூ கிழே விழுந்தது )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( மிகுந்த மகிழ்ச்சியில் ) அந்த பூ விழுது, (சுவடி ஓதும் மைந்தனிடம்) ஐயா, சாயிராம் இடம் இருந்து பூ விழுது. சாயிராம். மேல இருந்து ( பலர் பக்தி பரவசம் அங்கு ) அம்மா !!!! சாயிராம் !!!!!
===============================
(பல பரவச உரையாடல்கள் அங்கு. குருநாதர் வாக்கின் படி உடல் இல்லாமல் இருந்தாலும் , சாய் பாபாவின் இதயத்தில் உள்ள அந்த துகள் உயிருடன் இருந்தது அங்கு. இவ் வாக்கினை உறுதிப்படுத்துவது போல சாய்பாபா , சாயிராம் அங்கு உள்ள அடியவர்களுக்கு பூக்கள் கீழே விழவைத்து உணர்த்தினார்கள். மிகவும் பக்தி பரவசமான , நெகிழ்ச்சியான தருணம் அங்கு அப்போது நடந்தேறியது)
===============================
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த துகள் உயிர் பெற்றால், நமது உடம்பு இருக்காது. ஆனால் நாம் உயிரோடு இருப்போம். இங்கு சாய்பாபா அவரும் உயிருடன் இருந்து, சாய்பாபாவும் பூ தந்து அருளினார். அதாவது நாம பேசுறது எல்லாம் அவர் பார்த்துட்டு தான் இருக்கார். ஆனால் அவர் உடம்பு நமக்கு தெரியவில்லை. அதனால் நாம் ஒவ்வொருவரிடமும் இதயத்தில் அந்த இறை துகள் இருக்கிறது. புரியுதுங்களா? ஆனா இன்னொன்னு, அப்ப, பூ விழுந்ததை நான் பார்க்கவில்லை. நீங்கள் எல்லோரும் பார்த்துவிட்டீர்கள். பூ பொட்டு பொட்டுன்னு விழுந்ததை. அங்க நீங்க சொல்றீங்க, சாய்பாபா மேல இருந்து அப்படி பூ விழுந்துச்சு என்று. அது தான். அப்ப அவர் சாய்பாபா கூட, ஐயா, இங்கு இருக்கிறார். அந்த துகள் வடிவமாக இங்கு இருக்கிறார். ஆனா அதனால்தான் பூ போட்டார். இப்ப பூ போட்டார். எல்லாரும் நீங்க பார்த்தீங்க. அப்ப ஆனால் அந்த உடம்பு மறைக்கப்பட்டிருக்கும். அந்த துகள் உயிர்பெற்று வந்துவிட்டால் உங்க உடம்பு மறைஞ்சிருக்கும். ஆனால் உங்கள் ஆத்மா உயிரோட இருக்கும். அப்படித்தான் அருணகிரிநாதரும் இன்னும் உயிரோடு இருக்கிறார். (சாய்பாபா) இவரும் பின்னாடி இருப்பவரும் உயிரோடு இருக்கிறார். உயிரோடு தான் இருக்கிறார். )
===============================
# ருத்ராட்ச மாலை - உங்கள் இதயத்தில் உள்ள துகளை உயிர்ப்பிப்பதற்கே
===============================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதை தன் உயிர்ப்பிக்க வேண்டும். அப்பனே, இதனால்தான் அப்பனே, அப்பனே, கழுத்தில் அப்பனே, ருத்ராட்ச மாலை. இன்னும் இன்னும் என்னென்ன மாலை என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட அதற்கு மருந்து ருத்ராட்சம் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (சிலருக்கு ருத்ராட்சம் போன்ற புனித மாலைகள் கொடுக்கப்படும் போது அவர்கள் அதனை கழித்தால் அணிய தயங்குகிறார்கள் , அவற்றின் பலன்கள் எவ்வளவு ஆழமானது என்பதை அறியாமையால். இந்த மாலைகள் அணிவதன் நோக்கம், மனிதனுள் மறைந்து கிடக்கும் துகளை உயிர்ப்பித்து, தன்னைத் தானே வெல்லும் நிலைக்கு அழைத்துச் செல்லுவதே. ஆனால் பலருக்கும் இந்த மாலைகள் ஏன் அணியப்படுகிறது என்பது கூடத் தெரியாது. உண்மையில், அவை இருதயத்தில் உறங்கிக் கிடக்கும் இறை துகளைச் செயல்படுத்தும் ஒரு வழி என்பதை இப்போது தான் இந்த வாக்கின் மூலம் நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது )
============================
# இலங்கை தான் உலகின் மூலாதாரம். உலகின் இதயம்.
============================
குருநாதர் :- அப்பனே, நல்ல விதமாக இதனால்தான் அப்பனே இங்கிருந்து அப்பனே, பின் அதாவது பின் (கதிர்காமம் வாக்கு - சித்தன் அருள் - 2047 ) முருகனிடத்தில் இருந்தே சொன்னேனே அப்பனே, இருதய வடிவில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்கு அப்பனே, பின் இங்குதான் மூலாதாரமே இருக்கின்றது. இங்கு, அப்பனே, அடித்துவிட்டால், பின் உலகங்கள் அப்பனே, நிச்சயம் அமைதியாகி விடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இலங்கை, இங்கதான் உலகின் மெயின் சுவிட்ச் இருக்கு. இங்க அடித்துவிட்டால் எல்லாமே சரியாகும் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே, உலகத்தில் அப்பனே, அனைவரும், அப்பனே, மனிதர்கள் சொல்லும் சொல்வதை போலே யாரும் சொல்கின்றேன். பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று அப்பனே, மனிதன் சொல்கின்றான், அல்லவா?
குருநாதர் :- அப்பனே, (பணத்தில்) மூலாதாரம். அப்பனே, குபேரன் என்பேன் அப்பனே. அவனுடைய அப்பனே, நிச்சயம் பின் இல்லமும் இங்குதான் உள்ளது அப்பா. எப்படி?
சுவடி ஓதும் மைந்தன் :- குபேரன் அவருடைய இல்லம் இங்கதான் இருக்குதாம். அப்ப எப்படிப்பா? என்று கேட்கிறார்.
குருநாதர் :- அப்பனே, இங்குதான் மூலாதாரம் என்பேன் அப்பனே. (இலங்கை) இங்கு அடித்தால், அப்பனே, அனைத்தும் அப்பனே, எவை என்றும் புரிய அப்பனே.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- “மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே” விநாயகர் அகவல் பாடலில் உள்ள அந்த மூச்சு பயிற்சி சொல்றாரு. மூலாதாரம்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் நீ சொன்னாயே , மூச்சு பயிற்சியாலும், அப்பனே, பின் அத்துகளை வெல்ல முடியும் அப்பா.
=================================
# புத்தர் , இயேசுநாதர் , நபிகள் நாயகம், சாய்பாபா இன்னும் பல ஞானியர்கள் - இறை துகளை உயிர்ப்பித்து வைத்து, உடம்பை விட்டுவிட்டார்கள்.
==================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே. இவ்வாறுதான் பல ஞானிகள் என்பேன் அப்பனே. புத்தனாயினும், அப்பனே, எது என்று இயேசுவாயினும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நபிகள் நாயகனும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவராயினும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறுதான் அத்துகளை உயிர்ப்பித்து வைத்து, அப்பனே, உடம்பை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட விட்டுவிட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பல மகான்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். புத்தர், இயேசு, நபிகள் நாயகம், சாய்பாபா—எவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் உள்ளே மறைந்து கிடக்கும் அந்த இறை துகள் அதனை உயிர்ப்பித்து, உடலின் வரம்புகளைத் தாண்டியவர்கள். அவர்கள் உடல் அழிந்தபின் கூட, அந்த உயிர்பெற்ற இறை துகள் மூலம் உயிருடன் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பவரை போல மக்களை வழி நடத்தி, உலகை அமைதியாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் மறைந்தாலும், அவர்களின் உயிர் தொடர்ந்து வாழ்கின்றது.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ் துகளை பின் நிச்சயம் பின் உயிர் பெற்று, அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தை காக்கலாம் என்பேன் அப்பனே. இதனால் இத்தனை ஞானிகள் அப்பா.
குருநாதர் :- அப்பனே, ஆனால் மனிதன் எல்லை மீறுகின்ற பொழுது, அவர்களுக்கே கோபம்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, இன்னும் அப்பனே, பல உரைகளில் அப்பனே எடுத்துரைக்கின்றேன் அப்பனே நிச்சயம். அப்பனே, இன்னும் அப்பனே, பின் அதாவது நன்மைக்காக, அப்பனே, மற்றவர்கள் நினைத்து, அப்பனே, அப்பனே, பின் திருவாசகத்தை பாடுங்கள் அப்பா.
( அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள்……… )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், 21.12.2025 அன்று ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, இலங்கையில் நடந்த சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …. )
====================================================
வணக்கம் அடியவர்களே ,
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால், இந்த வாக்கினை நீங்கள் பயன்படுத்தி, உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்களை நீங்களே உருமாற்றிக் கொள்ள, உங்கள் வலிமையை அதிகரித்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிமுறைகள் மற்றும் நீங்கள் அடைய உள்ள நன்மைகள் இதோ:
1. சுய சக்தியை அதிகரித்தல் (Boost Your Inner Energy)
நடைமுறைப் படி: மற்றவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கும் முன், உங்களை நீங்கள் சக்தியூட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் உடல் மற்றும் மன ஆற்றலை வளர்ப்பதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.
பலன்: நீங்கள் சக்தியோடு இருக்கும்போதுதான், மற்றவர்களுக்குச் சரியான முறையில் உதவி செய்யவும், ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழவும் முடியும்.
2. உயர்ந்த குறிக்கோள்களை வளர்த்தல் (Set Noble Intentions)
நடைமுறைப்படி: எப்போதும் நல் எண்ணங்களையும், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த குறிக்கோளையும் கொண்டிருங்கள். தீய குணங்களை உங்கள் மனதிலிருந்து முற்றிலும் அகற்றுங்கள்.
பலன்: ஒருவரிடம் உயர்ந்த குணங்கள் இருந்தால் மட்டுமே, அவர் பயன்படுத்தும் மூலிகைகளும் மந்திரங்களும் முழுமையான பலனை தரும்.
3. நோய் தீர்க்கும் பதிகம் பாராயண முறை
நடைமுறைப்படி: இங்கு உரைத்தபடி பசுஞ்சாணியில் ஆன தூய விபூதி , ருத்ராட்சம் , பசும்பால், வில்வ இலைகள், மிளகு, ஏலக்காய், தூய மஞ்சள் (சிறிதளவு) போன்ற மூலிகைகளை சேர்த்து, "நோய் தீர்க்கும் பதிகம்" "மந்திரமாவது நீறு" பாடலை பாடிக்கொண்டே உட்கொள்ள வேண்டும். இதன் முழு விவரம் இந்த வாக்கின் உள் உள்ளது. படித்து அதன்படி செய்து கொள்ளவும்.
பலன்: இது உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவதோடு, உங்களுக்கு சிறப்பான மன தெளிவையும், புத்துணர்ச்சியையும் வழங்கும். அனுதினம் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிறப்பான மனத்தெளிவு , மன அமைதி, சில சில நோய்கள் மாறும், உடம்பில் நல் மாற்றங்கள், அதி சிறப்பு உண்டாகும், உங்களுக்கு ஆரோக்கிய வளர்ச்சி ஏற்படும்
4. அன்றாட மூலிகை பயன்பாடு (Daily Healing Rituals)
நடைமுறைப்படி: இங்கு உரைத்தபடி பசுஞ்சாணியில் ஆன விபூதி, ருத்ராட்சம், ஏலக்காய், பச்சை கற்பூரம் (சிறிதளவு), மிளகு, திப்பிலி, அதிமதுரம், நெல்லிக்கனி போன்ற மூலிகைகளை சேர்த்து,“ஓம் க்லீம் சௌம் மம் வசி மம வசி” மற்றும் “ஓம் நமசிவாய வயநமசி” இந்த இரண்டு மந்திரங்களையும் மாற்றி மாற்றி ஜபிக்கவும்.இதன் முழு விவரம் இந்த வாக்கின் உள் உள்ளது. படித்து அதன்படி செய்து கொள்ளவும்.
பலன்: உடல்–மனம் இரண்டிலும் ஆற்றல் அதிகரிக்கும். மனத் தெளிவு, அமைதி, உள்ளார்ந்த சில மாற்றங்கள், ஆற்றல்கள் கிடைக்கும்.
5. இதயத்துகளை உயிர்ப்பித்தல் (Awakening the Divine Spark)
நடை முறைப்படி: ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் உள்ள "இறைத்துகளை" (Divine Spark) மூச்சுப்பயிற்சி (Pranayama), மந்திர உச்சாடனம் மற்றும் ஞானிகளின் நூல்களைப் படிப்பதன் மூலம் உயிர்ப்பிக்க வேண்டும்.
பலன்: இந்தத் துகள் உயிர் பெற்று விட்டால், உங்களால் உங்களையே வெல்ல முடியும்; எக்காலத்திலும் அழியாத ஆன்மீக பலம் கிடைக்கும்.
6. திருவாசகம் மற்றும் மந்திரங்களை ஓதுதல் (Chanting for Wisdom)
நடைமுறைப்படி: தினமும் எட்டாம் திருமுறையான திருவாசகத்தை ஓதுவதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். குறிப்பாகச் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்றுத் தரக்கூடிய இந்தப் பாடல்களைப் பிறர் நன்மைக்காகவும் பாடுங்கள்.
பலன்: இது உங்கள் கர்ம வினைகளைக் குறைத்து, ஞானம் தெளிவடைய வழிவகுக்கும்.
7. தன்னலமற்ற சேவை (Selfless Service)
நடைமுறைப்படி: நல்மனதோடு மற்றவர்களுக்காகச் சேவை செய்யுங்கள். மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பலன்: நீங்கள் தன்னலமின்றிச் சேவை செய்யும்போது, உங்கள் உடலை நீங்களே சரி செய்துகொள்ளும் ரகசிய மந்திரங்களையும் சக்திகளையும் சித்தர்கள் உங்களுக்கு அருள்வார்கள்.
8. ருத்ராட்சத்தின் துணை (The Power of Rudraksha)
நடைமுறைப்படி: உங்கள் இதயத்தில் உள்ள இறைத்துகளை உயிர்ப்பிக்க ஒரு மருந்தாகச் சித்தர்கள் பரிந்துரைப்பது ருத்ராட்சம். இதனை முறைப்படி அணிந்து கொள்ளுங்கள்.
பலன்: இது உங்கள் ஆன்மீகப் பயணத்தில் ஒரு கவசமாகவும், அந்த உள் ஒளியை எழுப்ப உதவும் சிறந்த மருந்தாகவும் செயல்படும்.
9. சுருக்கமான விளக்கம்: நமது இதயத்தில் உள்ள அந்த இறை துகள் என்பது அணைந்து கிடக்கும் ஒரு விளக்கு போன்றது. நீங்கள் மேற்கண்ட பயிற்சிகளை செய்யும் போது, அந்த விளக்கை ஏற்றுகின்றீர்கள். அந்த ஒளி உங்கள் வாழ்வை மட்டும் பிரகாசமாக்காமல், உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் இருளையும் போக்கி எல்லோரையும் நல்வழிப்படுத்தும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடருக்குக்!
.jpeg)

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment