​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 28 December 2025

சித்தன் அருள் - 2052 - அன்புடன் அகத்தியர் - இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 4





அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

தேதி : 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


(21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4)

சுவடி ஓதும் மைந்தன் :-  (அங்குள்ள அனைவரையும் பார்த்து) ஐயா, மீண்டும் படிப்போம், ஐயா. 

குருநாதர் :- அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே, மீண்டும். அப்பனே, பின் ஓதி என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- (மீண்டும் அங்குள்ள அடியவர்களை, திருப்புகழில் உள்ள  முத்தைத்தரு பத்தித் திருநகை என்ற பாடலை பாட சொன்னார்கள். )

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (“முத்தைத்தரு பத்தித் திருநகை” பாடலை பாட ஆரம்பித்தார்கள். பாடி முடித்த பின்னர் …..)


===============================
# திருப்புகழ் பாடல் “முத்தைத்தரு பத்தித் திருநகை” - பல பல ரகசியங்கள் உள் அடக்கியது 
==============================

குருநாதர் :- அப்பா, அறிந்தும் ஏன், எதை என்று புரிய, அப்பனே, நல்ல விதமாக, இப்பாடலில், அப்பனே, பல அர்த்தங்கள் அப்பனே. ஏன் என்பது எல்லாம் தெரியாமல், அப்பனே. 

குருநாதர் :-  ஆனாலும், அப்பனே, இருதயத்தில், அப்பனே, அதாவது, அருணகிரியும், அப்பனே, முருகனும் பேசிக்கொண்டனர். அப்பனே, ஏன், எதற்காக என்று, பின், நிச்சயம், அப்பா, அறிந்தும், எதை என்று கூற, வாழ்க்கையே, ஒரு நரகமாகிவிட்டது. பின், ஒரு சந்தோஷம் கூட அடையவில்லையே, நிச்சயம், இப்பிறப்பு, ஏன் என்பது எல்லாம், பின், எதை என்று அறிய, அருணகிரி.

குருநாதர் :- ஆனாலும், நிச்சயம், எவை என்று கூற, முருகனும், அதாவது, அப்பனே, பின், அப்படித்தான், எதை என்று அறிய. 

குருநாதர் :-  அப்பனே, பின், அதாவது, இருதயத்திலே பேசிக்கொண்டார்கள், என்பேன் அப்பனே. இவை தன் இப்பொழுது, அப்பனே, பின், யோசியுங்கள், என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அதனால், பின், முருகனும், நிச்சயம், தன்னில் கூட, இவ்வுலகத்திற்காக, அறிந்தும் கூட, பாவ வினையை, பின், சேராமல், நிச்சயம், பின், உதவுவதற்காக, பாடல், அறிந்தும், புரிந்தும் கூட. உலகத்திற்கு உதவோம் என்பதைப் போல், பின், அப்படியே, இவ்வாறாகவே, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, இருதயத்திலே பேசிக்கொண்டனர், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.  

குருநாதர் :-  அதேபோலத்தான், அப்பனே, அத்துகள், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், உயிரோடு ஆக்குவதற்கு, நீங்களும், இறைவனிடத்தில், பேசலாம், என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( புரியுதுங்களா, ஐயா? உங்கள் இதயத்தில் உள்ள அந்த துகளை நீங்க ஆக்டிவேஷன் செய்து விட்டீர்கள் என்றால் , நீங்களும் இறைவனுடன்  பேசலாம். இந்த பாடல் உருவான போது , அருணகிரிநாதருக்கு இதயத்தில் உள்ள அந்த துகளை முருகப்பெருமான் உயிர்ப்பித்து விட்டார். அப்போது அருணகிரிநாதர் முருகப்பெருமானிடம் - ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்று கேட்கின்றார். முருகப்பெருமானும் , அருணகிரிநாதரும் இந்த இத்துகளில் வழியே பேசிக்கொண்டனர். அதாவது நாம் எப்படி மொபைல் போன் மூலம் இப்போது பேசிக்கொள்கின்றோமோ அதுபோல இந்த இதய துகள் மூலமாக இருவரும் பேசிக் கொண்டனர். ஆதி காலம் முதல் இந்த  உயர் விஞ்ஞானம் உள்ளது. )

==============================
# ஏன் அவசியம் சிவபுராணம் உயிர் நீத்தார் முன்பு அவசியம் பாட வேண்டும் 
==============================

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-  சுவாமி, இப்ப சில நேரங்கள்ல, நம்மள திருவாசகம் இருக்குதானே, அப்ப அந்த பாடல்களை ஒரு இடத்துல நாங்க ( உயிர் நீத்தவர் சடலம் முன்பு ) பாடுவோம், அப்ப சில சில நேரம் அது பாடக்கூடாதென்று சொல்லுவாங்க. திருவாசகத்தை நாங்க கோயில்ல தானே கூடுதலா பாடுவோம், ஆமா, இப்ப ஒருத்தர் இறந்துவிட்டாலும், அவங்களுக்கு நாங்க சிவபுராணம் (திருவாசகம்)   பாடுவோம், கோயில்ல பாடுற பாடலை நீங்க ஏன் இங்க பாடுறீங்க என்று கேட்கின்றார்கள் சுவாமி.

குருநாதர் :- அப்பப்பா, அறிந்து கூட ஏன் பாடுகின்றோம் என்று எல்லாம் , அப்பனே, திருவாசகத்தை தெரியாதப்பா, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 

குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே, பல திசுக்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஈபோல், அப்பனே, உடம்பில், அப்பனே, பின், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அப்படி, அப்படியே இருக்கும், என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அவையெல்லாம் பிம்பத்தின் வழியாகத்தான் பார்க்க முடியும், என்பேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 

குருநாதர் :-அப்பனே, பின், இத்திருவாசகத்தை ஓதும் போது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அது திசுக்கள் எல்லாம் அழிந்துவிடும், என்பேன்  அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (இறந்தவர்களுக்கு திருவாசகம் பாடுவதற்கான காரணம், உடல் செயலிழந்த பின்னரும் சில திசுக்கள் இயங்கும் நிலையில் இருக்கும் என்பதே. அவை நமக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் செயல்பாடுகளைத் தொடரக்கூடும்; அவை அறிவியல் கருவிகள் உதவியுடன் மட்டுமே  மட்டுமே பார்க்க  முடியும் . இத்தகைய நிலையில் திருவாசகப் பாடல்கள் ஓதப்படும் போது, அந்த புனித ஒலி அலைகள் உடலில் மீதமுள்ள திசுக்களின் இயக்கத்தை  நிறுத்தி, உடல் முழுமையாக அமைதியடைய உதவுகின்றன. இதனால், இறந்தவர் உடல் புனிதத்துடன், இயற்கையான அமைதியுடன் நிலைபெறுகிறது.)

குருநாதர் :- அப்பனே, அப்படியே, நிச்சயம், அப்பனே, பின், எவை என்று கூற, அப்பனே, உயிரோடு சென்றால் மோட்சம் கிட்டாது, என்பேன், அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த திசுக்களோட உடம்பு சென்றால் மோட்சம் இல்லை, 

குருநாதர் :-  ( சிவபெருமான்)  அப்பனே, இதனால்தான் திருவாசகம், அப்பனே, ஒன்றை எடுத்து வந்தான் அப்பனே. 

=============================
# இறைவனின் திருவிளையாடல் 
=============================

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-   ( தனது நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோஷத்தில், பக்தி மரியாதையுடன் பின்வருமாறு உரைத்தார்கள்) ஐயா (சுவடி ஓதும் மைந்தனை பார்த்து ) , சுவாமி, இப்ப நீங்க (ஜீவ நாடி) இதை வாசிக்கிறீங்க, இதை வாசிக்கும் போதே அந்த ஐயா(அகத்திய மாமுனிவர் )  வந்து எங்களுக்கு பதில் சொல்றாரு, அப்ப பாருங்க, எவ்வளவு ஒரு பெரிய ஞானி அவர் இல்ல, இப்ப நீங்க சொல்லும்போதே அவர் வந்து சொல்றாரு, எனக்கு சொல்ல சொல்லி. ( எனவே அடியேனின் )  இந்த செய்தியை சொல்லுங்கள். அப்ப அவர்…. ( அகத்திய மாமனிவரிடம்).... 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இப்படி எவை என்று அறிய, அப்பனே, தன்னைத் தானே அறியாமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, சிலர் பேசிவிடுவார்கள், என்பேன் அப்பனே. அதுவும் கூட ஏனென்றால், அப்பனே, புரியுமா என்ன? 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட. பல வகையில் கூட ஞானத்தை பெற்றவர்களே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, திடீரென்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவன், அப்பனே, மறைமுகமாக, அப்பனே, உள்நுழைந்து சென்று விடுவான் அப்பனே, சொல் என்று இறைவன் எவை என்று புரிய.


சுவடி ஓதும் மைந்தன் :-  பல வகையான ஞானங்கள் பெற்றவர்கள் அவர்களுக்கு மட்டும் , இறைவன் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் உடம்பில் புகுந்து வெளியே வந்துவிடுவார். இறைவன் உடம்புல இப்படி பாய்ஞ்சு, இப்படி வெளிய வரும் பொழுது ஏதோ சொல்ல வச்சிருவாரு, 


=================================
# அனைவருக்கும் மின்சாரம் கொடுப்பதே இறைவன் 
=================================

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும், அப்பனே, மனிதன், அப்பனே, உடம்பைத்தான் பெற்றிருக்கின்றான் அப்பனே. ஆனாலும், அப்பனே, மின்சாரம், அப்பனே, இறைவன் தான் கொடுக்கின்றான் என்பேன் அப்பனே வாழ்வதற்கு. 

குருநாதர் :-  அப்பனே, சிலருக்கு எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் அனைவரையும் பார்க்க வேண்டும், என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (எல்லோருக்கும் மின்சாரம் கொடுக்கவேண்டும், யாராவது ஒருவரை ஒருத்தர் இறைவன் விட்டுவிட்டால் , அவர்  வாழ்க்கை க்ளோஸ்.) 

குருநாதர் :-  அப்பனே, ஏன் எதற்கு, அப்பனே, இதில் கூட உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த குறிக்கோள், குறிக்கோள்கள், மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்தால், அப்பனே, மின்சாரத்தை அதிகமாக செலுத்திடுவான் என்பேன் அப்பனே. இதனால் பின் உயர்ந்து நின்று, மற்றவர்களையும் கூட நீங்கள், அப்பனே, காப்பாற்றலாம், என்பேன் அப்பனே. தாழ்ந்த எண்ணங்கள் உடையவர்கள், அப்பனே, மின்சாரத்தை அப்படியே தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த குறிக்கோள்கள், மற்றும் பிறருக்கு உதவ விரும்பும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு, இறைவன் அதிகமாக மின்சார சக்தியை அதிகரித்து, அவர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களையும் காப்பாற்றும் சக்தி பெறுகின்றனர். ஆனால் தாழ்ந்த எண்ணங்களுடன் வாழ்பவர்கள் குறைந்த மின்சார சக்தியுடன் வெறும் வாழ்வைத் தொடர்வதற்கே கஷ்டப்படுகிறார்கள். உயர்ந்த நோக்கங்களும் நல் மனப்பான்மையும் கொண்டவர்கள் அதிகமான ஆற்றலை பெறுவதால், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக இருந்து, ஞானத்தையும் நல்லொழுக்கத்தையும் பகிர்ந்து உலகிற்கு பயன் செய்ய முடியும்.)

==============================
# உங்கள் எண்ணம் போலே, உங்கள்  வாழ்க்கை அமையும். 
==============================

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான் பின் உயர்வதும், தாழ்வதும், உங்கள் எண்ணங்களோடேயே, 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் உயர்ந்ததும், தாழ்வதும் எண்ணங்களாலே. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-  எண்ணம் போல் வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்கள் எண்ணம் எப்படி இருக்குதோ, அது மாதிரிதான் வாழ்க்கை அமையும், உங்கள் எண்ணங்கள் உயர்ந்தால், உங்கள் வாழ்க்கை  உயரும். 

குருநாதர் :-  அப்பனே, அப்பொழுது கூட, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட உயர்ந்த எண்ணங்கள் கூட இருந்தால், அப்பனே, பார்ப்போம் என்று மின்சாரத்தை பாய்ச்சி, பாய்ச்சி எடுப்பானாப்பா ஈசன், அப்பனே. நிச்சயம், இவன் தன் தாங்கிக் கொள்கின்றானா என்று, அப்பனே, இதுதான் துன்பம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உயர்ந்த எண்ணங்களோடு, நல்ல எண்ணங்களோடு இருந்தாலும் என்ன பண்ணுவாராம்? பார்க்கலாம், ஒரு ஆட்டு ஆட்டலாம், மின்சாரம் அதிகமா கொடுத்து,   இறைவன் மின்சாரம் விட்டு விட்டு பார்ப்பாராம்.நாம்  தாங்குகின்றோமா இல்லையா என்று.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-  டெஸ்டர், டெஸ்டர், 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, ஆமா, டெஸ்ட் செய்து பார்ப்பார், அதுலயும் நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னா என்ன ஆகும்? உங்கள் வாழ்க்கை சக்சஸ் ஆகும், 

குருநாதர் :-  அப்பனே, இதனால் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, மின்சாரத்தை தொடத்தொட எவ்வளவு கஷ்டம், அதேபோலத்தான், அப்பனே, இறைவனை, அப்பனே, நெருங்க, நெருங்க, கஷ்டம், அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட தொட்டுவிட்டால், அப்பனே, ஒன்றும் தெரியாது  அப்பா. 

==================================
# உடம்பை இயக்குவதற்கு இறைவன் வைத்துள்ள வரைபடம் 
==================================

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், உடம்பில் உள்ள, அப்பனே, இயக்கங்களும் இயக்குவதற்கு, மின்சாரம் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.  உடம்பில் உள்ள, அப்பனே, பின், நிச்சயம், அனைத்தும் இயக்க வரைபடம் ஒன்று உள்ளது அப்பா. அதுவும் வருங்காலத்தில் யான் சொல்வேன் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உடம்பை இயக்குவதற்கும், வரைபடம், கரண்ட், அந்த என்னங்க சொல்லுவாங்க, இங்கிலீஷ்ல, அது சர்க்யூட். சர்க்யூட்ன்னு சொல்லுவாங்க, இல்ல, இப்ப வந்து ஒரு ரேடியோ, அதற்கு என்னென்ன வச்சிருப்பாங்க, ஐயா, புரியுதுங்களா? அதே மாதிரிதான், உங்களை வந்து இயக்குவதற்கு ஒரு வரைபடம்  போட்டு வச்சிருக்காரு, எங்க கரண்ட் பாஸ் செய்தால்….

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தக்க சமயத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், எவை என்று அறிய, அறிய, தான், தான், பாவத்திற்கு ஏற்ப, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒவ்வொன்றாக, அப்பனே, நிச்சயம், பிடுங்கி விடுவான் அப்பனே, நிச்சயம், அப்பனே, கயிறு போல. 

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும் எங்கு சென்றாலும் முடியாது, அப்பா, எவ்வளவு பிரார்த்தனைகள், எதை என்று புரிய, புரிய, இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.

குருநாதர் :-  அப்பனே, பிடுங்கி விட்டவனுக்கே, அப்பனே, மீண்டும், அப்பனே, பின், இணைக்க தெரியும் அப்பா. 

குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அப்பனே, புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்பது, அப்பனே, பின், அனைத்து ஞானியர்களையும் கூட வாக்கு  என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, அதை பிடுங்கினால் மட்டுமே, அப்ப, நிச்சயம், தன்னில் கூட, பின், பிடுங்கியவனை கூட உணரலாம் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை பிடுங்கிட்டா மட்டுமே அதை பிடுங்கியவன் யாருன்னு உணரலாம். கஷ்டம் வரும்போது யாருடா பிடுங்கி விட்டது என்று உணரலாம்.

குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, இறைவன் விளையாட்டுக்காரன் என்பேன், அப்பனே, இதில் கூட.

குருநாதர் :- அப்பனே, துன்பத்தை கொடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, பின், மீண்டும், அப்பனே, பின், இறைவன் துன்பம் கொடுப்பது, அப்பனே, நல்வற்றைக்காக தெரிந்து கொள்ள. 

குருநாதர் :- ஆனால் மனிதனோ, துன்பத்தை போக்க, எதை எதையோ சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே, ஈசன், அதாவது, அப்பனே, இறைவன், அப்பனே, சிரிப்பான்  அப்பா,  அடடா என்று.

சுவடி ஓதும் மைந்தன் :-  (துன்பத்தை அளிப்பது இறைவனே. ஆனால் அது தண்டனைக்காக அல்ல, மனிதனை விழிப்புணர்வுக்கு அழைப்பதற்காக. துன்பம் வரும்போது, ஏதாவது பரிகாரங்கள் செய்து ,  மனிதன் அதிலிருந்து விடுபட முயல்கிறான், ஆனால் துன்பத்தின் நோக்கம் மனிதன் தெரியாமல் இருப்பதால், அதை அனுப்பிய கடவுள் அமைதியாகப் புன்னகைக்கிறார். ஏனெனில் மனிதன் அந்த துன்ப அனுபவத்தின் மூலம் உண்மையை உணர்ந்து, தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள, துன்பம் என்பது மனிதனை உயர்த்தும் ஓர் ஆன்மீகப் பாடம்)

===============================
# கலியுகத்தில் - பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மின்சாரம் அதிகரிக்கும் , குறையும் 
===============================

குருநாதர் :- அப்பனே, இதனால் நிச்சயம், தன்னில் எதை என்று அறிய, அப்பனே, பின், மீண்டும் எவை என்று புரிய, இதனால்தான், அப்பனே, ஆனாலும், அப்பனே, சரியான வழியில், அப்பனே, நிச்சயம், தன்னில், கலியுகத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், எவை என்று புரிய, அப்பனே, சரியான வழியிலே, அப்பனே, இயங்கவில்லை என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பாவத்திற்கு ஏற்ப, புண்ணியத்துக்கு ஏற்ப, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அம்மின்சாரம் தானாகவே எழுந்து கொள்ளும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் மனிதனுக்கு ஓர் உள்ளார்ந்த ஆற்றலை அளித்திருக்கிறார். அது மின்சாரத்தைப் போன்றது. மனிதன் பாவம் செய்தால் அந்த ஆற்றல் குறைந்து, வாழ்க்கையில் சிரமங்கள் தோன்றும். புண்ணியம் செய்தால் அதே ஆற்றல் மீண்டும் உயர்ந்து இயல்பான நிலைக்கு திரும்பும். உங்கள் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் ஒரு ஆன்மீகச் சட்டம் போல தானாகவே செயல்படுகிறது. சிரமங்கள் வரும்போது, அதன் காரணம் நம்முடைய தவறுகளிலோ அல்லது பிறருக்கு செய்த துன்பத்திலோ இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். தகுந்த நற்செயல்கள் மூலம் அந்த ஆற்றலை உயர்த்தினால், வாழ்க்கை மீண்டும் சமநிலைக்கு வந்து அமைதியாகும். எனவே புண்ணியங்கள் செய்க.)

குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் தெரியாமல், அப்பனே, உங்களுக்கு வாக்குகள் செப்பிக்கொண்டிருந்தால், அப்பனே, ஒன்றும், அப்பனே, பின் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே. அதனால்தான், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள். யான் சொல்கின்றேன் அப்பனே.

====================================
# உங்கள் உடம்பில் மின்சாரம் அதிகரிக்க நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் 
====================================

குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, இதை, அப்பனே, பின், அதாவது மின்சாரம் அதிகரிக்க வேண்டும் அல்லவா? அப்பனே, இதற்கு தேவை இயற்கையான உணவு என்பேன், அப்பனே, 

குருநாதர் :- அப்பனே, இதில் முதலில் வருவது முருங்கைக் கீரை என்பேன், அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  மின்சாரம் ஏற்ற முதலில் வருவது என்ன? முருங்கைக் கீரை, 

குருநாதர் :- அப்பனே, அடுத்து பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, அப்பனே, கரிசலாங்கண்ணி, 

குருநாதர் :- அப்பனே, அடுத்தடுத்து, அப்பனே, வில்வ இலைகளும் கூட, அப்பனே, அடுத்தடுத்து வருவது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், எதை என்று அறிய, விநாயகப் பெருமானுக்கு பிடித்ததோ, அதையும் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  அருகம்புல். 

குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் உண்டு கொண்டே இருந்தால், அப்பனே, மின்சாரம் அதிகமாகும் என்பேன், அப்பனே, இதனால் நோய்கள் தீரும், அப்பா, 

குருநாதர் :- அப்பனே, இவை உட்கொண்டாலே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இன்னும், அப்பனே, மாற்றங்கள், அப்பனே.  

குருநாதர் :- இதனால், அப்பனே, நல் விதமாகவே இன்னும் விவரிக்கின்றேன், அப்பனே, நிச்சயம், பின், அனைவருக்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எம்முடைய ஆசிகள்.

குருநாதர் :- இன்னும், அப்பனே, கவலைப்படாதீர்கள், அப்பனே, எம்முடைய வாக்குகள் அனைவருக்கும் காத்துக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால், அப்பனே, தெரியாமல் சொன்னால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அதனால்தான், அனைத்தும் அனைவருக்கும் தெரிய வைத்துவிட்டு, வாக்குகளும் யான் செப்புவேன் அப்பனே. 

================================
# திருவாசகத்தில் 38வது பதிகம்
================================

குருநாதர் :- இதனால், அப்பனே, பின், மற்றவர்களுக்காக, அப்பனே, பின், உலக நன்மைக்காக, அப்பனே, வேண்டி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, திருவாசகத்தில் இருக்கும், அப்பனே, பின், அப்பனே, பின், அப்பனே, நல் விதமாக, பின், மூப்பான்  எட்டு (38) , அப்பனே, பாடலை பாடுக.


சுவடி ஓதும் மைந்தன் :-  (திருவாசகத்தில் 38வது பதிகம்) இதனுடைய அர்த்தம் என்ன? 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் : - இரும்பை பொன்னாக்குவது. நரியை , நல்ல குதிரையாக மாற்றியது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படியென்றால் விதியையும் மாற்ற முடியும். இது ஏன் பாட சொன்னார்? ரகசியம். எல்லாத்துலால முடியும், எல்லாம் சக்சஸ் பண்ண முடியும், எல்லா பாவத்தையும் நீக்க முடியும், எங்களால எல்லாமே செய்ய முடியும், பாடுங்க , ஐயா, 


(திருவாசகத்தில் 38வது பதிகம் - “இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள்” என தொடங்கும் பாடலை பாட ஆரம்பித்தனர்.) 

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 21.12.2025 அன்று ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment