​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 30 December 2025

சித்தன் அருள் - 2056 - அன்புடன் அகத்தியர் - இலங்கை யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 3






அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

தேதி : 23/12/2025, செவ்வாய்க்கிழமை. 
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.  

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3)

குருநாதர் : -  அப்பனே, போக போக, அப்பனே, எதை எதனால் அழிவு, அப்பனே, என்பதை எல்லாம் நான் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே. கவலையில் கொள்ள வேண்டாம். 

அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, இத்தனை, அப்பனே, நிச்சயம் குருமார்கள் எதற்கு, அப்பனே, ஏன் தேடி வந்தார்கள் என்பவை எல்லாம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவருக்கும், அப்பனே, பின் ஒவ்வொரு சிறப்பு உண்டப்பா. சொல்லியும் இருப்பேன். இனிமேலும் சொல்வேன் அப்பனே.

இதைத்தான் தெரிந்து கொண்டால் தான், அப்பனே, இறைவனை காண முடியும் என்பேன் அப்பனே. இறைவன் யார் என்பதை கூட தெரியும் என்பேன்  அப்பனே. இதைத்தான் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, இறைவனை, அப்பனே, நிச்சயம், அப்பனே, வணங்க வேண்டியதுதான் அப்பனே.  ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வணங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்பனே, 

நிச்சயம், அப்பனே, பின் எவை என்று அறிய, அப்பனே, பின் துன்பம் ஏன் வருகின்றது?  அப்பனே, கஷ்டங்கள் எதை என்று அறிய, அப்பனே, பின் துன்பத்திற்கும், பின் கஷ்டத்திற்கும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பல அர்த்தங்கள் என்பேன்  அப்பனே. பின் ஒருவரியில் , அப்பனே, நிச்சயம் அவையாகவும், அப்பனே, பின் நிச்சயம் சொல்வேன் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இறைவன் சாதாரண பட்டவனும் இல்லை அப்பனே, நிச்சயம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சாதாரண பட்டவனே இல்லை அப்பனே.  

எப்படி நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், அப்பனே, எதை என்று புரிய அப்பனே.  இதனால், பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால் தான், அப்பனே, அவ் ஆன்மா முடிவு பெற இல்லாமல்  அப்பனே, அதாவது, முடிவும், அப்பனே, பின் எதை என்று, அப்பனே, பின்  பிறப்பும், அப்பனே, முடிவும், அப்பனே, பின் தெரியாமல், அப்பனே, இருக்கின்றது என்பேன்  அப்பனே. 

பிறப்பு பற்றியும் கூட, அப்பனே, பின் முடிவு பற்றியும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, இதனால், அப்பனே, சொல்லுகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

அப்பனே, அதாவது, அழியும் ஆன்மாக்களின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கதிரியக்கம் தான் இங்கு அதிகமாக இருக்கின்றது அப்பா.


எப்படி, அப்பா, நிச்சயம், அதாவது, அப்பனே, பின், அதாவது, பின், அப்பனே, மனிதன், பின், இறக்கின்ற பொழுது, அப்பனே, மற்றொருவனும்  கூட, அப்பனே, பின், அதாவது, பின், அழுவான் அல்லவா? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே, பின், எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, இதே போலத்தான், அப்பனே, பின், அவ் கதிரியக்கத்துக்கும் , அதாவது, அவ் நுண்ணுயிருக்கும்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உயிர் உண்டு என்பேன்  அப்பனே. 


அழுது புலம்பிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. இவ்வாறாக, பின் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, மனிதனால் எப்படி அப்பா, துன்பம் இல்லாமல் வாழ முடியும்? என்பேன் அப்பனே. 


நிச்சயம், அவ்வாறு, உங்கள் சொந்தங்கள், பந்தங்கள், அப்பனே, அப்படி, அப்படியே, நுண்ணுயிர், அப்பனே, அடுத்த நுண்ணுயிர், அப்பனே, இவ்வாறாக இருக்கின்ற பொழுது, பின், உன் உடம்பிலும், அதனுடைய தொடர்பு இருக்கும் அப்பா. இதனால், அப்பனே, அவை அழுகின்ற பொழுது, அப்பனே, உங்களுக்கும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் முடிவு வராது அப்பா. அப்பனே, பின் ஏதோ ஒரு மூலம், அப்பனே, கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும், தாக்கிக் கொண்டே இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் இறக்கும் நேரத்தில், உடல் மட்டும் அழிந்து விடுகின்றது; ஆனால் அதனுள் இருந்த நுண்ணுயிர்—அதாவது ஆன்மா—தொடர்ந்து இருக்கிறது. நம்முடைய உடம்புக்கும் அந்த நுண்ணுயிருக்கும் பல நுண் இணைப்புகள் உள்ளன. அந்த இணைப்புகள் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், உயிர் இன்னும் இருக்கிறது. உடல் இல்லாமல் உயிர் மட்டும் இருக்கும் அந்த நிலையில்தான், மனிதன் அழுவது போல ஒரு நுண் சத்தம் கேட்கப்படுமாம். 


குருநாதர் : -  அப்பனே, இவை தான் கேட்கலாம் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சரியாக, அப்பனே, பின் அதாவது இருக்க பாடல் ஒன்று இருக்கின்றது என்பேன்  அப்பனே.  வருங்காலத்தில் யான்  சொல்வேன் அண்ணாமலையிலே  வைத்து என்பேன்  அப்பனே.  இவ்வாறு பாடல்களைப் பாடுகின்ற பொழுது, அப்பனே, அவ் சத்தம் கேட்கும் அப்பா,அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் சொல்வது என்னவென்றால்: அந்த நுண்ணுயிரின் அதிர்வை உணர ஒரு குறிப்பிட்ட பாடல் இருப்பதாகவும், அதை அவர் திருவண்ணாமலையில் சொல்லிக் கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார். அந்த பாடலை ஒருவர் சரியாகப் பாடினால், அந்த நுண்ணுயிரின் சத்தம் — காதில் நுண்மையாக கேட்கும் எனறு  அவர் விளக்குகிறார் அய்யா.


குருநாதர் : - அப்பனே, இன்னும் கூட மலையில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் எதிர்க்கும், அப்பனே, எதிர் ஒலிக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.  


அப்பனே, பின் ஒரு இடத்தில், அப்பனே, அண்ணாமலையில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் உட்கார்ந்தால், அப்பனே, நிச்சயம் பாதி இரவில், அப்பனே, அச் சத்தம் கேட்கும். 


அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சதுரகிரியில், அப்பனே, பின் ஒரு இடத்தில் கேட்கும். ஒரு பெரிய பாறை இருக்கின்றது, அப்பா. 


அப்பனே, அது மட்டுமில்லாமல், இன்னும், அப்பனே, நிச்சயம், அப்பனே, (திருப்பதி)  ஏழு மலையானிடத்திலும் இதன் ஒலி கேட்கும் அப்பா.  அது மட்டுமில்லாமல், அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல மலைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தோரணமலை, அப்பனே, நிச்சயம் தன்னில், இன்னும், இன்னும், அப்பனே, பின் பல மலைகள் உள்ளதப்பா. அங்கு ஒரு இடத்தில் அமர்ந்தாலே, நிச்சயம், அப்பனே, நீங்கள் பின், அதாவது, ஓடி வந்து விடுவீர்கள் என்பேன்  அப்பனே. அவ்வளவு சத்தம், அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 


குருநாதர் : -  அப்பனே, இவ் தேசத்திலும் உள்ளதப்பா. அப்பனே, யான் ரகசியத்தை இப்பொழுது சொல்ல மாட்டேன், செப்பிவிட்டேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த நுண்ணுயிர்—அவர் “வைரஸ்” என்று குறிப்பிடும் அந்த முன்னோர்கள் துகள் அழுவது போன்ற ஒரு சத்தம் எழுப்பும். அந்த சத்தம் திருவண்ணாமலையில் சில குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்தால் நுண்மையாக கேட்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நுண்ணுயிர் அழுதுகொண்டே  இருக்கும். ஆனால் உண்மையில், அது அழுது கொண்டே இருக்கும் போது, அதாவது இறந்து போன ஆன்மா தன் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், மனிதர்களுக்கு எப்படி கஷ்டம் இல்லாமல் போகும்? ஒவ்வொருவருக்கும் அவரவர் விதத்தில் கஷ்டங்கள் வரும். 
குருநாதர் : -  எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பனே, நுண்ணுயிர், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, காந்தகத்தில், பின் நுழைய விட வேண்டும் என்பேன்  அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. அதாவது, காந்தகம் தான் இறைவன் அப்பனே. அதை இணைத்து வைத்துவிட்டால், அப்பனே, சந்தோஷமாக வாழலாம் என்பேன்  அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :-  மேக்னெட் என்பது இறைவன் நம்மை இழுக்கும் சக்தி. அந்த துகளான நம்முடைய முன்னோர்களை என்ன செய்ய வேண்டும்? அதை எடுத்து அழகாக சுத்தமாக வைத்துப், இறைவனிடம் ஒட்ட வைக்க வேண்டும். ஒருமுறை அந்த துகளைக் கடவுளின் கையில் ஒட்ட வைத்துவிட்டோம் என்றால், கவலை எதுவும் இல்லை. நமக்கு உள்ளே அமைதியும் சந்தோஷமும் தானாக வரும்.


குருநாதர் : -  அப்பனே, இவ்வாறாக அழிந்து, அப்பனே, பல கோடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நுண்ணுயிர்கள் என்பேன்  அப்பனே. அவையெல்லாம், அப்பனே, இன்னும் அதிகமானால், அப்பனே, மனிதன், அப்பனே, பைத்தியம் போல் திரிவான் அப்பா. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்:- ஒட்ட வைக்க எங்களுக்கு என்ன வழி? 


குருநாதர் : -  அப்பனே, சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ஒவ்வொன்றாக, அப்பனே, என்றால், அனைத்தும், அப்பனே, பின் சொல்லிக் கொண்டாலும், ஒரே நேரத்தில், அப்பனே, யாராலும் செய்ய முடியாது அப்பா. 


குருநாதர் : -  அதனால்தான், அப்பனே, உலக  அழிவு, அழிவு. அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, காப்பாற்ற அப்பனே, ஒவ்வொன்றாக, மனிதனுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே. அதை செய்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மாற்றங்கள்  ஏராளம் என்பேன்  அப்பனே, இன்னும் எதை என்று புரிய அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று சொல்லி கொண்டே வருகிறார் நம் குருநாதர். அதை நீங்கள் தொடர்ந்து செஞ்சாலே போதுமானது.) 


குருநாதர் : - அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவை தான்  அப்பனே, பின், நிச்சயம், அப்பனே, நிச்சயம் எதை என்று , அப்பனே, வைப்பதற்கும் அப்பனே, எதை என்று புரிய அப்பனே, பின், காந்தகத்தின் ஒட்ட வைப்பதற்கும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, பசும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பாலே தேவைப்படுகின்றது என்பேன்  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. 


===============================
# ஏன் சமீப காலத்தில் ( 2025ஆம் ஆண்டு) இலங்கையில் நீரால் பலத்த அழிவுகள்  வந்தது ? 
==============================


குருநாதர் : -  இவ்வாறாக, அப்பனே, பின், எவை என்று கூற, இவை தான் அப்பனே, அவ்  ஆன்மாக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிந்து கூட, பின் கடல் தன்னில் கூட, அதிகமாக இருக்கும் என்பேன்  அப்பனே.  இதனால்தான், முதலில், அப்பனே, நீரால் தான், அப்பனே, அழிவு என்பது (இலங்கை) இங்கு காட்டுகின்றது.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதலில்  எதனால் அழிவு வரும்? நீரால் தான் அழிவு வரும். அந்த அழிவு வந்து, அது எப்படி உருவாகும்? கடலிலிருந்தே வரும். அந்த அழிவு—ஆன்மாக்கள்—அவை எல்லாம் கடலில்தான் நிறைய இருக்கின்றனாம். 


==================================
# எச்சரிக்கை - அடுத்த கட்ட அழிவு - நுண்ணுயிர்கள் நிலத்திற்கு வந்துவிட்டால் , மனிதனை, மனிதனே  அடித்து கொள்வான்.இது அடுத்த கட்ட அழிவு.
================================== 


குருநாதர் : -  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, பின் கதிர்வீச்சுகள் மாறுகின்ற பொழுது, அப்பனே, நீருக்கும் எவை என்று , அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு மாறுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் நிச்சயம், அப்பனே, பின், நிச்சயம் நுண்ணுயிர்கள் அப்பனே, அப்படியே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நிலத்திற்கு வந்துவிடும் அப்பா. 


குருநாதர் : -  நிலத்திற்கு வந்துவிட்டால், அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம், மனிதன், மனிதன் அடித்துக் கொள்வான் அப்பா. இது அடுத்த கட்டம் என்பேன்  அப்பனே.  


அப்பனே, இதனால், அப்பனே, கடல் நீரின், அப்பனே, நிச்சயம் தன்னில், கதிர்வீச்சுகள் குறைவாக, அப்பனே, பின் இருக்க அப்பனே, நீங்கள் தான், அப்பனே, உங்களால் முடியும் என்பேன்  அப்பனே.  சொல்லிவிட்டேன் அப்பனே. 


அதையும் வரும் காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவ்வாறு கதிர்வீச்சுகள் , அப்பனே, பின் குறைவு, எவை என்று கூட, பின் குறைத்து, அப்பனே, யானும் சொல்கின்றேன் அப்பனே. 


இன்னும் அதிகமானால், அப்பனே, இவை தான் அப்பனே, பின், எவை என்று ஒரு மேகத்தோடு ஒட்டி, அப்பனே, இன்னும் பல வழிகள் கூட, அப்பனே, மழை அடுத்த கட்டம், இது, அப்பனே, அழிந்து போகும். அப்பா. அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே, நிச்சயம் தன்னில்.


அவை அழிவை நிறுத்த. அப்பனே, உங்களாலே, அப்பனே, சில, அப்பனே, பின் ஆன்மாக்களை, அப்பனே, யார் யார், எதை, எவை என்று கூட, அப்பனே, அதிக, அப்பனே, பின் கதிரியக்கம் கொண்ட மனிதனையே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவையெல்லாம் தடுக்க முடியும். 


ஏனென்றால், அப்பனே, குறைவாக உள்ளவன், எதை சொன்னாலும் கேட்க மாட்டான் அப்பா. அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அக் குறைவானவனும் (கூட்டுப் பிரார்த்தனைக்கு) வரவழைத்து, அப்பனே, நிச்சயம் அதிகப்படுத்தி, அப்பனே, அனைத்தும் பின் காக்கலாம் என்பேன்  அப்பனே. சொல்லிவிட்டேன். 


இதனால்தான், அப்பனே, பின் ஒருவனுக்கு, அப்பனே, கதிரியக்கம் அதிகமாக இருந்தால், அப்பனே, அனைத்தும் வெல்லலாம். 


அப்பனே, கதிரியக்கம் குறைவாக இருந்தால், அப்பனே, வெல்ல முடியாது என்பேன்  அப்பனே. 


இதனால்தான், அப்பனே, கதிரியக்கம் ஏற்ற, யாங்கள் உதவி செய்கின்றோம் அப்பனே, வருகிற காலங்களில், அப்பனே, ஆசிகள். அப்பனே, நிச்சயம் இன்னும் சொல்லப் போகின்றேன் அப்பனே. 


இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூற , பின் மக்களுக்காக சிவபுராணத்தை ஓதுங்கள். 


அப்பனே, நல்வடிவமாக, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் பின் பசும், அப்பனே, தன்னில் இருக்கும் பால். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அத்தனை கதிர்வீச்சுக்கள் , அப்பனே, கொண்டுள்ளது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இவை தன் அப்பனே, பின், அதாவது, அப்பனே, அதாவது, அப்பனே, ஒரு, அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் ஒரு மணி அப்பனே, நிச்சயம் விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அது எத்தனை, அப்பனே, மைல் தொலைவில் கலக்கும் என்பதெல்லாம், அப்பனே, அதற்கும் ஒரு பிம்பம் இருக்கின்றதப்பா. அது இப்பொழுது மனிதனால், அப்பனே, உணர முடியாது என்பேன்  அப்பனே. 


அனைத்தும், அப்பனே, நிச்சயம், அதற்கு கடல் நீர் ஒரு விஷம் போன்றது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவையும் வைத்துக்கொள்ளலாம் என்பேன்  அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எங்கெங்கும், அப்பனே, அதனால்தான், அப்பனே, புண்ணிய நதியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அங்கங்கு, அப்பனே, பின், நிச்சயம் ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்பேன்  அப்பனே.  இன்னும் நுண்ணுயிர்கள் என்பேன்  அப்பனே.  அப்பனே, ஒரு பிம்பத்தில் பார்த்தால், நீங்களே பயந்து விடுகிறீர்கள் என்பேன்  அப்பனே. 


அவை ( நுண்ணுயிர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ) இன்னும் மனிதனால் தயாரிக்கவில்லை அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே. இதற்கும், அப்பனே, யான் வழிவகை செய்கின்றேன் அப்பனே.  நீங்களும் பார்க்கலாம். சொல்லிவிட்டேன், அப்பனே. 


அப்பனே, நல்ல விதமாகவே, அப்பனே, நிச்சயம் எதை எது என்று அறிய அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பக்தி என்பது. அப்பனே, இன்னும் எவை என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பொய்யா போகும் என்பேன்  அப்பனே, கலியுகத்தில் என்பேன்  அப்பனே. 


ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பக்தி என்பது என்ன என்பது இல்லாமல், அப்பனே, தெரியாமல் போகும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே, யான் பின் பெரியவன், பின் எதை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே, அப்பனே, நிச்சயம் மனிதன், மனிதன், அப்பனே, பின், அதாவது, அப்பனே, மூளை, அப்பனே, பின், சலவை ஆக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை எதையோ, அப்பனே, செய்ய வைப்பான். 


பின், அப்பனே, ஆனாலும், இன்னும், அப்பனே, கதிர்வீச்சு, அப்பனே, ஏற்ற முடியாதப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே, அப்பனே, கதிர்வீச்சுகள் , எங்களால் மட்டுமே, அப்பனே, ஏற்ற முடியும் என்பேன்  அப்பனே. 


அவ்வாறாக, அப்பனே, நிச்சயம் கதிர்வீச்சுகள் ஏற்றிவிட்டால், அப்பனே, நோய்களும் வராது, அப்பனே, நிச்சயம் தொல்லைகளும் வராது. அப்பனே, துன்பமும் வராது. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏற்றிவிட்டால், அப்பனே, இறைவனின் கதிர்வீச்சுகள் இன்னும் அதிகமாகும், அப்பனே , நிச்சயம் சிறிதாவது இருக்க வேண்டும் என்பேன்  அப்பனே. இவ்வாறாக இருந்தால், அப்பனே, நிச்சயம் இறைவனும் தெரிவானப்பா. கண்ணுக்கு சொல்லிவிட்டேன், அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் : - அப்பனே, நலங்களாகவே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதற்காகத்தான், அப்பனே, பின் ராமனைப் பற்றி அப்பனே, பின் எவை என்று , அப்பனே, நிச்சயம், நிச்சயம், இன்னும், அப்பனே, பின் அனுமானும் பற்றி சொல்ல வந்தேன் அப்பனே. நிச்சயம் தெரிந்து கொண்டீர்களா? அனுமான் யார் என்று. 


இன்னும், அப்பனே, (அனுமான்) அவன் கதிர்வீச்சுக்கள், அப்பனே, புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பேன்  அப்பனே. இதனால், அக் கதிர்வீச்சுக்கள் அதிகமாக, அப்பனே, பின் பலம் இருக்கின்ற பொழுது, அவனுடைய நாமம் இன்னும், அப்பனே, பின் உச்சரித்துக்  கொண்டே இருப்பார்கள் என்பேன்  அப்பனே.  இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் உங்களையும் கூட, அப்பனே, கதிர்வீச்சுக்கள், அப்பனே, அதிகரித்து விட்டால், அப்பனே, உங்கள் பெயர், அப்பனே, பின் உலகத்தில் கெடாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் தெரியுமா? சில பேர் ஏன் அப்படியே புகழோட இன்னுமும் இருக்காங்க? கதிர்வீச்சு… கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கிறது. நம்ம கதிர்வீச்சு குறைவாக இருந்திருந்தா, நமது பேரும் அழிந்திடும்; சீக்கிரம் பேரும் அழிந்திடும், மனுஷனும் அழிந்திடும், கஷ்டம் வந்திரும். அப்பனே, கதிர்வீச்சு அதிகமாகும் போது நன்மை உண்டாகும்.


குருநாதர் : - அப்பனே, இவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, யாங்கள் பாடல், அப்பனே, பாடினாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கதிர்வீச்சுக்கள் அதிகமாகும் அப்பா. அடுத்தடுத்து, அப்பனே, யாங்கள் கதிர்வீச்சுக்கள், அப்பனே, பின் அதிகமாக்குகின்றோம் அப்பனே, பின் பாடல்களை பாடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உங்களால் அது ஆக்க முடியாது அப்பா. 


===============================
( அடியவர்கள் கவனத்திற்கு  - பல  கூட்டுப்பிரார்தனைகளில் சித்தர்கள் வந்து பல பாடல்கள் பாடுகின்றனர். அவ் மகத்தான பாடல்கள் எல்லாம் கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்கு கதிர்வீச்சுகளை அதிகமாகும் என்று உணர்ந்து கொள்க )
===============================


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கதிர்வீச்சுகள் ,  அது உங்களால ஏற்ற முடியாது. அதை நாங்க பாடல்களாக பாடி ஏற்றி தருவோம்.


குருநாதர் : - அப்பனே, அடுத்தடுத்து, இதுதான், அப்பனே, யாங்கள் செய்யப் போகின்றோம் என்போம். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான், அடுத்தடுத்து, கதிர்வீச்சுகள் உங்களுக்கு  நான் ஏற்றி கொடுக்கிறோம் என்று சொல்கின்றார்.. 


குருநாதர் : - அப்பனே, இதனால், அப்பனே, மனிதன், அப்பனே, அதாவது, இறைவன் யார் என்றே தெரியவில்லை. அப்பனே, இறைவனை வணங்குகின்றான் அப்பனே. இதுதான், அப்பனே, மனிதனுடைய, அப்பனே, முட்டாள்தனம். 


குருநாதர் : -  அப்பனே, வணங்கி, இறைவன் எதுவுமே செய்யவில்லை என்று, அப்பனே, ஏக்கங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் யார் என்றே தெரியாது. இறைவனை வணங்கி, இறைவனே, எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பல்கள். இதுதானப்பா, மனிதனோட முட்டாள்தனம் என்று சொல்கின்றார் அய்யா.)


குருநாதர் : -  அப்பனே, நிச்சயம், இதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அப்பனே, இவன் நுண்ணுயிர்கள் அழுகின்றதே. அதே போலத்தான், அப்பனே, நீங்கள் அழுது கொண்டே, மற்றவர்களை கெடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். அப்பனே. ஏனென்றால், அப்பனே, புண்ணியங்கள், அப்பனே, நிச்சயம் எது என்றால், எப்ப, நிச்சயம், அப்பனே, இன்னும், இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, முதலில் பாடுங்கள், திருவாசகத்தை.


( தேன் அமுதமான திருவாசகம் - அடியவர்கள்  பாட ஆரம்பித்தனர்….. )


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment