சித்தன் அருள் - 2022ன் தொடர்ச்சியாக!
இங்கேயும் சித்தர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். காலங்கிநாதனே அங்கு சென்றால் கூட கண்டுகொள்ள முடியும். சற்றுமுன் அகத்தியன் சொன்னேனே அவன் உருவத்தை பற்றி, அந்த உருவம் அங்கு அமர்ந்து கொண்டிருக்கும்.அமாவாசை, பௌர்ணமி நாள் மட்டுமல்ல, அஷ்டமி, நவமி களில் கூட, அவன் தரிசனம் கிடைக்கும். அமாவாசை அன்றைக்கு கிடப்பது சற்று கடினம், அஷ்டமி, நவமி களில் அவன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.ஆகவே அங்கு போவது தவறில்லை, போகும்போது ஏதோ ஒரு வழியில் அவனே குறுக்கிடுவான். அவன் உங்களை அலைய வைக்கவும் மாட்டான், நடுவழியிலே குறுக்கிட்டு கூட உங்களுக்கு ஆசீர்வாதம் தருவார்.
அங்கொரு அற்புதமான சுனை தீர்த்தம் இருக்கிறது, அந்த சுனை தீர்த்தத்தில் இருந்து அற்புதமான மூலிகை இருக்கிறது, ஏறத்தாழ 400 மூலிகையை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட நோய் போகுமோ, அதுபோல அமிர்தத்தையும் கலந்து, அந்த நீருற்று இருக்கிறது. அந்த நீரூற்றில் தான் விஷயமே இருக்கின்றதாம். அந்த நீரூற்றிலே, அஷ்டமி அன்றோ, நவமி அன்றோ, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும், வெண்குஷ்டம் இருந்தாலும், எந்த பட்ட விழுநோயா இருந்தாலும், அங்கு மூன்று நாட்கள் உட்கார்ந்து குளித்து, நீராடி, அதை உட்கொண்டு வந்து, காலாங்கி நாதனையும், போகனையும், முருகப்பெருமானையும் வணங்கி வந்தால் போதும் நோய் குணமாகும்.காலாங்கிநாதர் இங்கு இப்பொழுது விட்டுவிட்டார், நேராக அங்கு தான் சென்றிருப்பார்.ஆகவே அங்கு அருமையான இடம் இருக்கிறது,
அதற்கு இடது பக்கத்தில், 427 அடியிலே, அவர் காயகல்ப மூலிகையும் இருக்கிறது.அந்த காயகல்ப மூலிகைக்கு பக்கத்திலே, அன்றொரு நாள் அதியமானும் ஔவையாருக்கு கொடுத்த கனியும் விளைந்திருக்கிறது. ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கு பிறகு,இப்பொழுது அந்த கனி விளைந்திருக்கிறது. அந்த கனியும் அங்கு 7 கனிகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது, அந்த கனிகளை முடிந்தால் பறித்துக்கொள் என்று சொல்லிவிடுவேன், போவது கடினம், விலங்குகள் நிறைய இருக்கிறது, தேவையில்லாத இடையூறுகள் அங்கு ஏற்படலாம், யக்ஷினி போன்ற நல்ல தெய்வங்கள் கூட அங்கு சுற்றி சுற்றி, இந்த மலைப் பிரதேசத்தில் வன தேவதை போல் காத்து கொண்டிருக்கிறார்கள்.அதியமான் அன்று ஔவையாருக்கு, கொடுத்த கனி அங்கே இருக்கிறது, அதையும் பறித்து உண்டால், காயகல்பம் போல, அதையும் தாண்டி வடகிழக்கு திசை நோக்கி 127 அடி நடந்தால் ஒரு சிறு பள்ளம் தோன்றும்,அந்த பள்ளத்தில் இருந்து பார்த்தால் ஒரு குகை ஒன்று தோன்றும், அந்த குகை வழியாக கீழே இறங்கினால், சுமார் 3200 படி கீழே போனால்,காயகல்பம் மூலிகை இருக்கிறது.அந்த காயகல்பம் மூலிகை சாறு பிழிந்து, மூன்று நாட்கள் தேனில் கலந்து,அதை உருண்டையாக ஆக்கி, சிறிது பாதரசத்தையும் கலந்து,அதை உட்கொண்டால்,அதை உட்கொண்ட மனிதன் 400 ஆண்டுகள் உயிரோடு வாழ்வான்,காயகல்பம் இப்பொழுது அங்கே இருக்கிறது.அந்த அருமையான இடம் தான் இந்த இடம்.நோய் அணுகாது, நரை தளும்பாது, வழுக்கை விழாது, அது மட்டும் அல்ல எதையும் வந்து பலவீன படுத்தாது, நோய்கள் வந்து அண்டாது, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்,7000 நரம்புகளும் நன்றாக செயல்படும், புத்துணர்ச்சியோடு செயல்படுவார், ஒரு பிறந்த குழந்தைக்கு இருப்பதே 300 எலும்பு தான், அதுபோல பிறந்த குழந்தை போல் ஆரோக்கியமாக, சித்தர் போல சாப்பிட்டால், சீத நரம்புகள் எல்லாம் வெளியேறி,புதிய நரம்புகளும்,எலும்புகளும் உருவாகி,காயகல்பமாகி இருக்கும்,கண்களில் ஒளி தோன்றும், பகலிலே ஆந்தை போல பார்க்க முடியும்,ஆகவே தலைகீழாக தொங்கலாம்,முடிந்தால் மூச்சை இழுத்தால் ஒரே நேரத்தில் உயர்ந்த நிலைக்கு அஷ்டமா சித்தி பெறுவது போல பெற முடியும்.அத்தனை சக்தியும் அடக்கி வாய்த்த காயகல்ப மூலிகை,அதுக்கு இப்பொழுது பக்கத்திலே சுரங்கப்பாதைக்கு கீழே 3000 அடி பள்ளத்திலே,மூலிகையாக இருக்கிறது.அதன் சாற்றி பிழிந்து,பாதரசத்தை சற்று கலந்து,அதை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று,விடியல்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு 1 1 /2 நாழிகையில், அது கிழக்கு பார்த்து அமர்ந்து,மேற்கே தலைநீட்டி,நாக்கு படாமல் உள்ளுக்குள்ளே சாப்பிட வேண்டும்.நாக்கு பட்டாலும் போயிற்று,ஆக எதற்குமே அது கிடையாது.
அந்த பயன்,அந்த அருமையான மூலிகை அங்கு இருக்கிறது,காயகல்பம் மூலிகை வேறு எங்கும் இல்லை,இங்குதான் இருக்கிறது.அது யாருடைய கட்டுப்பாட்டில் என்று சொன்னால்? இப்போது சற்று முன் சொன்னேனே,என் அருமை நண்பன் காலாங்கிநாதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறார்.
இதோடு மூலிகைகள் வேறு இருக்கிறது,அது சதுரகிரியில் இருக்கிறது,அதைவிட காயகல்ப மூலிகைகள் பொதிகை மலையில் இருக்கிறது.அப்போ ஜமதக்கினி முனிவர் அடிக்கடி வந்து,அந்த காயகல்ப மூலிகையை சித்தர்கள் கொடுப்பது வழக்கம்.ஆக காயகல்பம் மூலிகை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்ல,இங்கேயும் இருக்கிறது,இதை காந்த மலை என்று,காந்தம் எப்படி ஈர்க்கிறதோ, மனிதனை ஈர்க்கும் சக்தி அங்கு இருக்கிறது.காந்தக்கல் இருக்கிறது,antha காந்த கல்லில் ஏறி காலை வைத்து நின்றால்,உங்கள் உடலில் உள்ள கெட்ட ரத்தம் எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு,புது ரத்தம் உள்ளே பாய்வது போன்று தோன்றும்.எண்ணங்கள் மலர்ச்சியாக்கும், தெய்வ தரிசனம் கிடைக்கும். வார்த்தை, பேச்சுக்கள் எங்கேயோ போகும், கண்களில் ஒளி பெருகும். நாசிகளில் நிதானமாக மூச்சு வரும்,உடலிலே அழுக்கு இருக்காது, அதுமட்டுமில்லை இன்னொரு அதிசயமும் நடக்கும்,ஒருவர் சித்தராக இருந்தால் எப்படி என்று ஏற்கனவே தெரியுமோ தெரியாதோ? சித்தன் குளிப்பது இல்லை ஆனால் வாசனை இருக்கும்,சித்தன் தூங்குவது இல்லை,ஆனால் கண்களுக்கு இடையூறு வராது,சித்தன் மூச்சு விடுவான்,ஆனால் வெளியிலே தெரியாது,சித்தனுக்கு நரைமுடி கிடையாது,வாழ்க்கை கிடையாது,எதுவுமே கிடையாது,உயர்ந்த நிலையில் இருப்பவர்.அந்த காந்தக்கல் உள்ளே இருக்கிறது. அந்த காந்தக்கல் மொத்தமே மூன்றடி நீளம் மூன்றடி அகலம் தான்.அந்த காந்தக்களில் எவனொருவன் ஏறி நின்று,அரை மணி நேரம் அஷ்டம சித்தி மந்திரங்களை 1 லட்சம் தடவை சொன்னானோ? அவனுக்கு அங்கேயே சித்தனாகி விடுவான்.அவன் உடம்பு,உயிர் போகாது.உடம்பில் வலு ஏற்படும்,நிறம் மாறும்,குணம் மாறும்,பார்வைகளில் ஒளி வீசும்,வார்த்தைகளில் செம்பழம் போல் மணம் வீசும்,மாதுளம்பழம் வாசம் வீசும்,மகிழம் பூ வசம் சுற்றிலும் வீசும்,முல்லை பூவும் மல்லிகையும் ஒன்று சேர்ந்து கட்டி தொங்கவிட்டால் என்ன வாசனையோ ? அவன் பேசும் போதெல்லாம் வை வழியாக வரும்,அவனுக்கு அழிவு என்பது இல்லை.அற்புதமான வாழ்க்கை அந்த காந்த கல் இருக்கிறது,அந்த காந்த கல் இருப்பதனால் தான்,இந்த மலைக்கு காந்தமலை என்று பெயர்.காந்தமலை பிறகு கஞ்சமலையாக மாறிவிட்டது.அது 2007 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு பெயர் காந்தமலை என்று பெயர்.காந்தமலைக்கும்,சபரிமலையில் உள்ள காந்த மலைக்கும் வித்தியாசம் உண்டு,அது வேறு.அது கோகர்ணம் உட்பட,பரசுராமரின் கையால் ஏற்பட்டது.ஒரு காலத்தில் சேர்ந்த அதை மலை எல்லாம், கோகர்ணம் உள்பட,கேரளா உள்பட,அத்தனையும் கடலிலே மூழ்கியது.மூழ்கிய அந்த புண்ணிய இடத்தை மீட்டுக் கொடுத்தவர் பரசுராமன்.ஆகவே தான் திருவோணம் நட்சத்திரம் அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ஜாதி மொழி வித்தியாசமில்லாமல், இன மொழி வித்தியாசமில்லாமல் கொண்டாடப்படும் விழா திருவோண விழா.கடலிலே மூழ்கியது உயரத்திற்கு தூக்கி வந்தவன் பரசுராமன்.இங்கு இருக்கிறவரை சாகவிடாமல், ஆண்டாண்டு காலம் உயிரோடு வைக்கக்கூடிய அருமையான இடம் இந்த காந்தமலையிலுள்ள காந்தக்கல் இருக்கிறது.இந்த காந்த கல்லில் உட்கார்ந்து ஜெபம் பண்ணினாலே போதும்,காயகல்பம் சாப்பிட புண்ணியம் வரும்.காயகல்பம் உண்டு,காந்தக் கல்லும் இருக்கிறது,ஆக அந்த இடத்தில் ஏறத்தாழ 357 அடிகள் மிகப்பெரிய காந்தக்கல் இருக்கிறது,அந்த காந்த கல்லில் சாய்ந்து ஒரு பக்கம் எழுந்து வந்தேன் போதும்,அவன் தோஷம் எல்லாம் விலகுவதோடு,ஆரோக்கியம் சீராக இருக்கும்.ஆண்டு பல ஆண்டுகள் நீடூடி ஆரோக்கியமாக வாழ்வான்,சித்தர் போல் வாழ்வான்,அவன் பசி இருக்காது,கண் துஞ்ச மாட்டான்,கால் நோகாது,நடக்கவும் மாட்டான்,ஆனால் வார்த்தைகளிலே செம்மதுரம் வீசும்,வார்த்தைகள் மங்களமாக வரும்,வார்த்தைகளிலே வாசனை வீசும்,குளிக்க மாட்டான்,உடலிலே நாற்றம் இருக்காது,வியர்வை வராது,ஆனால் மனித உடம்பாக இருப்பான்,அந்த அருமையான இடம் இந்த இடம்.
அக்கால மருத்துவத்தை அகத்தியன் யான் சொன்னேன்,இது தனி கேள்வி போட்டால் பின் உரைப்பேன். (இது ஒரு அடியவரின் கேள்விக்கான பதில்,உரையாடலின் போது)
மருத்துவருக்கு அறிவுரை : (ஒரு அடியவரின் வினா)
அறிவுரை என்று அகத்தியன் என்றைக்காவது சொல்லியிருக்கிறேனோ ? சொன்னால் கேட்கவா போகிறார் ? தன் எண்ணப்படி தானே செய்யப்போகிறார் ? ஆனால் ஒன்று எப்பொழுதுக்கு எப்போது, மருத்துவனாகி மாறிவிட்டாயோ? உனக்கு அறிவுரையை தேவை இல்லை,உன்னக்கு அறிவு வரப்போகிற அளவுக்கு, சில அற்புதமான சம்பவங்களும்,சில நிகழ்ச்சிகள் நடக்கும்.சித்தர்கள் நம்பு, இனி எதிர்காலத்தில் சித்தர்கள் தான் ஆட்சி செய்ய போகிறார்கள், சற்று முன் சொன்னேன்.நீ இப்போதைக்கு எப்போது சித்தர்களை நம்ப ஆரம்பித்து விட்டாயா,அவர்களே ஏதோ ஒரு வகையில்,பிரம்ம முகூர்த்தத்திலோ, அல்லது நடமாடும் மனிதர் உருவத்திலோ, ஏதேனும் ஒரு வகையிலோ உனது தேவைக்கேற்ப குழப்பத்துக்கு ஒரு விடியல் கிடைக்கும்.
எதற்காக மருந்து கிடைக்கவில்லை என்று எண்ணுகிறாயோ ? அதற்குள்ள மருந்து உன்னை தானாக தேடி வரும். நீ அமைதியாக இருந்தால் போதும், நீ எதை எதிர்பார்க்கிறாயோ? சற்று முன் சொன்னேன்,காலாங்கிநாதர்,அவனே விஸ்வரூபம் எடுத்து உதவி செய்ய முன் வருகிறான் என்று சொன்னேனே,அந்த காலாங்கிநாதர் உருவத்தை கூட லேசாக கோடிட்டு காட்டினேன்,அவனை மனதில் நினைத்து கொண்டு பிரார்த்தனை செய்,உனக்கு வேண்டிய மருத்துவம் உன்னை வந்து சேரும்,யாரும் செய்ய முடியாத சாதனைகளை நீ செய்வாய்.எந்த நோயை குணப்படுத்த முடியாது என்று உலகம் கைவிட்டதோ ?அதை சர்வ சாதாரணமாக நீ செய்ய கூடியவன்.சாதாரண மூலிகையால் அதன் குணம் கிடைக்கும்,அந்த மூலிகை பலனை பின்பு உனக்கு தருகிறேன்,,ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்,ஆக அதற்கொரு வழி,இன்றைக்கு இன்னும் அதிகமாக கிடைத்திருக்கிறது. உனக்கு அறிவுரை என்பது தேவை இல்லை, ஆற்றல் உரை என்று சொன்னேன், நீ ஆற்ற போகிறாய். சில காரியங்கள் அதற்கான உரை வரும், சித்தர்களே உனக்கு பக்க பலமாக இருந்து நல்லதொரு வழியை காட்டி, உன்னை மேல்மேயும் வாழ்க்கையில் உயர்த்துவார் என்று அருளாசி! நீ ஆற்றல் மிக்கவன், நிறைய செய்ய போகிறாய், ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ஆக அதற்கொரு வழி,இன்றைக்கு இன்னும் அதிகமாக கிடைத்திருக்கிறது.
தீர்த்தமலை பற்றி:(ஒரு அடியவரின் வினா)
என்னப்பன் முருகன் சன்னதியில் அமர்ந்து கொண்டு,ஆங்கோர் தீர்த்தமலை பற்றி ஒரு அன்னவன் வாய் திறந்து கேட்டான்,நெஞ்சமெல்லாம் புண்ணாக,உடைந்த கண்ணாடி போல்,ஆங்கோர் கோயிலுக்கு எதுவும் நடக்கவில்லை என்று ஏகுகிறான்.மனிதர்கள் ஏங்க வேண்டும்,தெய்வம் நிதானமாக செய்ய வேண்டும்,சோதனைகள் வந்தால் தானடா தெய்வத்துக்கே மரியாதை அதிகம்.ராமனுக்கு சோதனை வந்ததனால் தானடா அவன் கடைசி வரையில் நிலைத்து நிற்கிறான்.கிருஷ்ணனுக்கும் சோதனை வந்தது,பிறகு தான் வென்றான் அவன்.ஆகவே தெய்வங்கள் இருந்தாலே சோதனைகள் என்று வரத்தான் செய்யும்.ஆகவே மனிதர்கள் சோதனை பண்ணுகிறார்கள் என்று நாடகமாடுகிறார்களே தவிர,தெய்வம் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது.மிக விரைவிலே இவன் எண்ணப்படி,தீர்த்தமலை அமோக மலையக மாறும்.அகத்தியன் வாக்கு ஒரு போது பொய்க்காது. ஏற்கனவே வாக்குரைத்திருக்கிறேன், அண்ணாமலைக்கு பிறகு அடுத்த மலை தீர்த்தமலை போல வளரும் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே ஒரு போதும் அகத்தியன் பின் வாங்க மாட்டேன்.இது சோதனைகள் என்பதல்ல,கட்டாய ஒய்வு என்று எண்ணிக்கொள்.மிக விரைவிலே அதற்கு ஒரு குடமுழக்கு நடக்கும்,அதை இவன் கண்ணாலே பார்ப்பான்.தற்கால சோதனைகள் வந்தால் தான்,அதை மீண்டும் எதிர்த்து போராடுகின்ற வன்மையும்,தைரியமும் வரும்,மக்களும் என் பின்னல் நிற்பார்.தெய்வம் அங்கு இருக்கிறது,தெய்வம் எங்கும் சென்றுவிடவில்லை.அந்த தீர்த்தகிரி ஈஸ்வரனே,தன் வேலையை பார்த்து கொள்வான்,நீ உறுதுணையாக இருப்பை. அந்த கண்கொள்ளாக் காட்சியை, கண்ணாலே நீ விரைவிலேயே பார்க்க போகிறாய். அகத்தியனும், காலாங்கிநாதனும் உன் வேண்டுகோளை மறுபடியும் இறைவனிடம் பரிந்துரை செய்கிறேன்.
சீக்கிரமே நல்ல செய்தி வரும்!
கர்மாவில் இருந்து ஞான மார்க்கத்திற்கு செல்ல வழி?(ஒரு அடியவரின் வினா)
பிரார்த்தனை ஒன்றே.பிரார்த்தனையை எவ்வளவு தூரம் வலுக்கட்டாயமாக செய்கிறார்களோ,அங்கு இருந்து ஞானம் பிறக்கிறது.
கர்மா என்பது என்ன? உன்னை சுற்றி சூழ்ந்திருந்த நிலை,விடுபட வேண்டும்,மனதை அடக்க வேண்டும்,த்யானம் செய்ய வேண்டும்,பிரார்த்தனை செய்ய வேண்டும்,யோகா செய்ய வேண்டும்,சித்த தன்மை அடைவதற்கு,சித்தர்கள் முறைப்படி,நல்லதொரு குருவை ஏற்று,,அவன் பின்னாலே அவன் முறைப்படி நடந்துகொண்டால்,கர்மவினை தானாக விலகி விடும்.ஆகவே இதை இருள் வந்துவிட்டால் பயம்,வெளிச்சம் வந்துவிட்டால் பயம் விலகும்.ஆக பயத்தை நோக்கி செல்லாதே,வெளிச்சம் வருகிறது என்பதை,வந்து கொண்டிருக்கிறது என்று எண்ணி கொண்டு இறை நோக்கி கூடுதல் த்யானம் செய்யவும்,உனக்கு கர்மவினை தானாக,படிப்படியாக விலகி விடும். ஒரே நாளில் கர்மவினை அகலாது. படிப்படியாக தான் அகலும் படியேறுவது போல,ஒரே நாளில் ஏறினால் விழுந்து விடுவாய், எழுந்திருக்க முடியாது. ஆக படிப்படியா ஏறினால் உனது கர்மவினை அகலும், பிரார்த்தனை ஒன்றே அதற்கு தக்க மருந்து
அகத்தியப்பெருமானின் வாக்கு, திரு ஹனுமந்ததாசன் அவர்கள் நாடியில் வந்தது, நிறைவு பெற்றது!!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment