​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 28 December 2025

சித்தன் அருள் - 2050 - அன்புடன் அகத்தியர் - இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2






அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

தேதி : 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================


ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.


(21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2)


==============================================
வாக்கு சுருக்கம் முன்னுரை :- 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த இந்த இரண்டாம் பகுதி வாக்கு , உலகில் ஏற்படும் தொடர்ச்சியான அழிவுகளுக்கான மூல காரணங்கள், ஆன்ம ஆற்றல்களின் தன்மை, மற்றும் அதற்கான ஆன்மீகத் தீர்வுகள் குறித்த ஆழமான பார்வையை அடங்கிய மிக முக்கிய வாக்கு . 


இந்த வாக்கின் முக்கியக் கருத்து, இறந்தவர்களின் ஆன்மாக்கள் முழுமையாக சாந்தியடையாமல் (பூஜ்ஜியம் ஆகாமல்) தேங்கி நிற்கும் ஆற்றல்களாக (கதிரியக்கங்களாக) உருவெடுப்பதே ஆகும். இந்த எதிர்மறை ஆற்றல்களின் திரட்சி, வாழும் மனிதர்களின் ஆற்றலை விட அதிகமாகும்போது, அது வாழும் மனிதர்களிடம் மனக்குழப்பம், மோதல்கள், மற்றும் பேரழிவுகளைத் தூண்டுகிறது. 


இதற்கு,  அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த இந்த வாக்கின்  தீர்வாக, தனிநபர்கள் தங்கள் ஆன்மீக ஆற்றலை கூட்டுப் பிரார்த்தனை மற்றும் திருவாசகம் போன்ற புனித நூல்களை ஓதுவதன் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும். 


அதே சமயம், தேங்கியிருக்கும் முக்தி அடையாத ஆன்மாக்களை சாந்திப்படுத்தி அவற்றின் ஆற்றலைப் பூஜ்யமாக வேண்டும். 


இந்தச் செயல்பாட்டில், இராவணேஸ்வரன் மனித குலத்தைக் காக்க ஆற்றிய ரகசியப் பங்களிப்புகள்—குறிப்பாக, சக்தி வாய்ந்த கற்களை சிவலிங்கங்களாக நிறுவியது, நீண்ட ஆயுளுக்கான ஞானத்தை ஓலைச்சுவடிகளில் புதைத்து வைத்தது—முக்கியத்துவம் பெறுகின்றன. 


வாருங்கள் அன்பு குருநாதர்  வாக்கின் உள் செல்வோம்.  பின் வரும் குருநாதர் உரைத்த வாக்கினை படித்தாலே பல புண்ணியங்கள் உண்டாகும் உங்களுக்கு. 
===================================================


குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் புரிந்தும், அப்பனே, ஏன் இந்த அழிவுகள்? அப்பனே, அங்கங்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வருடத்திற்கோ, ஈர் வருடத்திற்கோ, இன்னும் இன்னும், அப்பனே, அழிவுகள், அப்பனே, ஏன் வந்து கொண்டே இருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் ஒவ்வொன்றாக விவரிப்பேன் என்பேன் அப்பனே.  அடுத்தடுத்து பகுதி பகுதிகளாக பிரிப்பேன். 


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் புரிந்தும், எதை என்று அறிய? அப்பனே, அறிந்தும் இவையாவும், எதை என்று புரியாமலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏகப்பட்ட, அப்பனே, உடம்புகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


=========================================
மனிதன் இறந்த பிறகு, அவரது உடல் மட்டுமே அழிந்து புழுக்களுக்கு இரையாகிறது. ஆனால் அவரது ஆன்மா ஒரு வகை எதிர்மறை ஆற்றலாக (Energy) அல்லது கதிரியக்கமாக (Radiation) தொடர்ந்து நீடிக்கிறது.
========================================


குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இறந்தும், அப்பனே, எதை என்று அறிய, புழு, அப்பனே. 


குருநாதர் :- ஆனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஆன்மா, அப்பனே, அப்படித்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே. 


=================================
# மோட்ச கதி மற்றும் பூஜ்ஜிய நிலை: ஒரு ஆன்மா மோட்ச கதியை அடைய வேண்டுமெனில், அதன் ஆற்றல் நிலை முற்றிலும் 'பூஜ்ஜியம்' ஆக வேண்டும். ஆனால் பெரும்பாலான ஆன்மாக்கள் இந்த நிலையை அடைவதில்லை.
================================= 


குருநாதர் :-  எதை, எவை என்று புரிய, இதே நிச்சயம் தன்னில் கூட, இவ் கதிர்  இயக்கம் . எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, சற்று அறிந்தும் புரிந்தும், எவை என்று அறிய, நிச்சயம் பூஜ்ஜியமானால் மட்டுமே, நிச்சயம் அவ்  ஆன்மா மோட்ச கதி அடையும். 


குருநாதர் :-  ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும், எவை என்று அறிய? பூஜ்ஜியம் ஆகவில்லையே? 


=================================
# புனித நூல்களை ஓதுதல்: தேவாரம், கந்தபுராணம், மற்றும் குறிப்பாக திருவாசகம் போன்ற ஞானிகளால் அருளப்பட்ட நூல்களைத் தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம், தேங்கியிருக்கும் ஆன்மாக்களின் ஆற்றலைப் படிப்படியாகக் குறைத்து பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வர முடியும். 
=================================


குருநாதர் :-  எதை என்று புரிய, ஆனாலும், நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பல பாடல்களை, எவை என்று புரிய, பின் பல, பல, பல, பின் தேவாரம் அறிந்தும் கூட, இன்னும் பல, பல வழிகளிலும் கூட, ஞானிகள் எடுத்துரைத்த பாடல் எல்லாம், நிச்சயம் பாடிக்கொண்டே வந்தால், நிச்சயம் பின் அவ் (கதிர் இயக்க) எவை என்று புரிய அவ் ஆற்றலும், பின் பூஜ்ஜியம் ஆகும். 
சுவடி ஓதும் மைந்தன் :- (திருவாசகம், கந்தபுராணம் போன்ற பல ஞானப் பாடல்களை பக்தியுடன்  பாடும் போது, உடலில் உள்ள கதிரியக்க ஆற்றல்கள் மெதுவாக குறைந்து, இறுதியில் பூஜ்யம் (Zero) என்ற நிலையை அடைகிறது.)
===============================
# ஏன் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கின்றார்கள் ?
===============================


=======================================================
(அழிவுகளுக்கு மூல காரணம்: பூஜ்ஜியமாகாத இறந்தவர்களின்  ஆன்ம ஆற்றல்கள் - உலகில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேரழிவுகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம், இறந்தவர்களின் ஆன்மாக்களுடன் தொடர்புடையது.) 
==========================================================


குருநாதர் :-  இதை என்று எவை என்று புரிய அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட, இக் கதிர் இயக்கங்கள் ஒன்றாக சேருகின்ற பொழுது, நிச்சயம் எதை என்று மீண்டும், பின் இவ்வான்மா அதனுடன் சேர்ந்து விடும். இதனால்தான் மக்கள் கொத்துக் கொத்தாக இறப்பார்கள். 


குருநாதர் :-  அப்பா, அப்பொழுது உங்கள் ஆற்றலையும் பெருக்க வேண்டும். (இறந்த ஆன்மாக்களின் எஞ்சியுள்ள ) அவ் ஆற்றலையும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பூஜ்ஜியமாக்க வேண்டும். 


குருநாதர் :-  அப்பப்பா, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உங்கள் ஆற்றல், அப்பனே, பின் அதனோடு, அப்பனே, ஒப்பிட்டு போனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, இதனால்தான், அப்பா, பல, பல அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே  நிச்சயம், அப்பனே.


குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு வருடமோ, இரு வருடமோ, மூவருடமோ, அப்பனே, நான்கு வருடமோ, ஐந்து வருடமோ, திடீரென்று, அப்பனே, பின் நிச்சயம் அனைத்தும் சக்திகள் ஒன்று கூடுகின்ற பொழுது, அது சக்திகள் மக்களை தாக்குகின்ற பொழுது, பின் நிச்சயம் மனிதனும், நிச்சயம், பின் பைத்தியமாகி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் கூட பலியிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( உள் ஆற்றலை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்; நாம் நம்முடைய உள்ளார்ந்த ஆற்றலை உயர்த்தினால் மட்டுமே வெளிப்புற ஆற்றலின் தாக்கம் குறையும். ஆனால் நாம் எதையும் உயர்த்தாமல் சமநிலையிலேயே நின்றுவிட்டால், வெளிப்புற ஆற்றல் அதிகரித்து நம்மைத் தாக்கும் போது அதன் விளைவாக அழிவு தொடர்ச்சியாக உருவாகும். எனவே, அந்த வெளிப்புற  ஆற்றல் குறைய வேண்டும், நம்முடைய உள் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். நம்முடைய ஆற்றல் உயர்ந்திருக்கும் போது மட்டுமே, வெளிப்புற ஆற்றலின் அழுத்தத்தைத் தாங்கி வாழ முடியும். இல்லையெனில், அந்த வெளிப்புற   ஆற்றல் மீண்டும் நம்மைத் தாக்கும் போது மனிதர்களிடம்  குழப்பம் உருவாகும்; அந்த குழப்பம் மேலும் அழிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து செயல்படுவது போன்ற நிலைகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கும். இங்கு வெளிப்புற   ஆற்றல் என்பது இறந்த ஆன்மாக்களின் ஆற்றல்கள். )


குருநாதர் :-  அப்பப்பா, நிச்சயம் தன்னில் கூட தங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.  அதன் தன்மையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சாந்தி படுத்தல் வேண்டும் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (தேங்கியிருக்கும் இறந்த ஆன்மாக்களின் எதிர்மறை ஆற்றல்களைச் சாந்திப்படுத்தி, அவற்றின் சக்தியைப் பூஜ்ஜியமாக்க வேண்டும்.)


குருநாதர் :-  அப்பப்பா, நிச்சயம் தன்னில் கூட, உங்கள் ஆற்றல்களை, நிச்சயம் தன்னில் கூட, மேம்படுத்தினாலே போதும் அப்பா. அது தானாகவே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சாந்தி அடைந்துவிடும் என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே, கூட்டுப் பிரார்த்தனை ஒன்று, பின் யாங்கள், நிச்சயம் தன்னில் கூட, எடுத்து வந்தோம். இன்னும், அப்பனே, பின் பல, பல வித்தியாச முறைகள் எல்லாம், யாங்கள், பின் செப்புவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதற்காகத்தான், நாங்க கூட்டுப் பிரார்த்தனை எடுத்துட்டு வந்தோம். 


குருநாதர் :-  அப்பனே, உங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். அப்பனே, மற்றவரை காப்பாற்றும் புண்ணியம் கூட, அவ் ஆன்மாவையும், பின் சாந்திப்படுத்தும் புண்ணியம் கூட, உங்களை வந்தடைகின்ற பொழுது, நீங்களும் நன்றாக இருக்கலாம். உங்களைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்கலாம். அப்பா, நிச்சயம் இறைவனையும் காணலாம் என்பேன்  அப்பனே. புரிகின்றதா? 


==================================
# இராவணேஸ்வரர் எழுதிய மர்மமான சுவடிகள் 
==================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம், பின் சுவடிகள் அழகாக ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பாதி அளவு மறைந்து, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பொழுது, நிச்சயம் தன்னில் கூட, அதுவும் மறந்து போனது. ஆனாலும், பின் அவை உள்ளவைகளை எல்லாம், யாங்கள் எடுத்து வருவோம். அது மட்டுமில்லாமல், இன்னும் மிதந்து கொண்டுதான் இருக்கின்றது. சுவடிகள் பல, பல கோடி 


குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், தேசம் எப்படி அழியும், எப்படி எல்லாம் மனிதன் வாழப்போகின்றான் என்று, பின் அமைதியாக பல நூறு ஆண்டுகள், எவை என்று அறிய, பின் வாழ்ந்தவன், எதை என்று அறிய, ராவணேஸ்வரன்.  அவன், பின் எழுதி வைத்திருக்கின்றான். ஆனாலும், அவன் எழுதியவைகள் எல்லாம், எழுதியவை எல்லாம், இன்னும் புதைந்து கிடைக்கின்றது. அங்கங்கு 


குருநாதர் :- அப்பப்பா, இவை நல்லோருக்கே போக வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, மந்திரத்தை விட்டு, 


குருநாதர் :- நிச்சயம் அதில் மந்திரங்களும் கூட, இன்னும் தந்திரங்களும் கூட இருக்கின்றது. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, 


குருநாதர் :- மனிதன் இன்னும், பின் நிச்சயம், அதாவது 100 ஆண்டுகள், 200 ஆண்டுகள், 300 ஆண்டுகள் வாழலாம் என்பவை எல்லாம் இருக்கின்றது. 


குருநாதர் :- எதை என்று புரிய (சுவடிகள்) அதற்கும், பின் கதிர் இயக்கங்கள் எதை என்று அறிய நிச்சயம், (இன்றும்) பின் உயிரோடு (இருக்கும் சுவடிகள் - கடலின் அடியில்) .


குருநாதர் :- எவை என்று புரிய? நல்லோருக்கே, பின் செல்ல வேண்டும் என்று. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், இப்பொழுது அவை தன் மனிதன் எடுத்துவிட்டால், கலியுகத்தில் அவை தன் பணத்திற்காக செலவிடுவான். அனைத்தும் கூட வீணாக போய்விடும். 


(மனிதன் 100, 200, 300 ஆண்டுகள் நோயில்லாமல் வாழ்வதற்கான மந்திரங்கள், தந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை இராவணன் எழுதிப் புதைத்து வைத்துள்ளார். இந்தச் சுவடிகள் நல்லவர்களின் கைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவற்றுக்கு உயிர் சக்தியைக் கொடுத்து ஒரு மந்திரத்தால் காத்துள்ளார். கலியுகத்தில் மனிதன் பணத்திற்காக இதைத் தவறாகப் பயன்படுத்துவான் என்பதால் இது இன்னும் மறைந்தே உள்ளது.)


==================================
# இராவணேஸ்வரர் சுரா கல்லிலிருந்து  எடுத்து உலகம் முழுவதும் நிறுவிய சிவாலயங்கள் - இன்றும் அழிவு வராமல் காத்துக் கொண்டிருக்கின்றது.
==================================


குருநாதர் :- அப்பப்பா, இராவணன் எதை என்று கூட அக்கல்லை சொன்னேனே. பின், நிச்சயம் தன்னில் கூட அக் கல்லிலிருந்து, அப்பனே, நிச்சயம் உலகம் அழிவு பின்னே செல்கின்றது என்பது அவனுக்கு தெரியும். ஆனாலும், அக்கல்லை நிச்சயம் எடுத்து வந்து, எடுத்து வந்து, அங்கங்கு நட்டான் என்பேன் அப்பனே. அதுதான் இப்பொழுது சிவ ஆலயங்களாக செயல்படுகின்றது என்பேன் அப்பனே. அழிவு வராமல் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-  எந்தெந்த ஆலயங்கள் அய்யா ?


குருநாதர் :-  அப்பப்பா, அறிந்தும் பின் பொறுத்திரு. அப்பனே, இன்னும் சொல்கின்றேன். அப்பனே, பின் அனைத்தும் கூட கடைசியிலே வருவோம் அவையெல்லாம். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அப்பனே, பறக்கும் திறமை பெற்று, அப்பனே, பல தேசங்களில் நட்டிவுள்ளானப்பா அவன். 


குருநாதர் :-  அப்பப்பா, நிச்சயம் தன்னில் சுயம்பு சுயம்பு என்கின்றார்களே அப்பனே, எதை? 


சுவடி ஓதும் மைந்தன் :- (உலகம் அழியப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்த இராவணேஸ்வரர், சக்திவாய்ந்த கதிர்வீச்சு கொண்ட அந்த  சுரா கல்லை உடைத்து, அதன் துண்டுகளைத் தனது பறக்கும் திறமையைப் பயன்படுத்தி உலகின் பல பாகங்களில் நட்டுவிட்டார். இந்த கற்களே இன்று ‘சுயம்பு’ லிங்கங்களாக பல சிவ ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. )


குருநாதர் :-  அப்பப்பா, வருங்காலத்தில் திருத்தலங்களில் போய் கூட எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே, என்னென்ன சிறப்பு என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி. எங்கெங்கு  நட்டு வச்சாரோ, அதனோட சிறப்பெல்லாம் இனி அங்கங்கு போய் எடுத்துரைப்பேன் என்று சொல்கின்றார். 


குருநாதர் :-  அப்பப்பா, நிச்சயம் உலகத்தில் உள்ள அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், இவை தன் உயிர்ப்பிக்க வேண்டுமே என்று எண்ணி, நிச்சயம் கடுந்தவம்  அப்பனே, பல அப்பனே, லட்ச பிறவிகள் எவை என்று கூற ஈசனை நினைத்து, நினைத்து, பின் ஈசன் வந்தான் அப்பா.  என்ன வேண்டும் என்று கேட்டு  நிச்சயம் அங்கங்கு, நிச்சயம் தன்னில் கூட நட்டுவிட்டேன். நிச்சயம் அது நீயாக இருந்து செயல்பட வேண்டும். அவ்வளவுதான் என் ஆசை. 


குருநாதர் :-  (ஆதி ஈசனாரும்) நிச்சயம் தன்னில் கூட யானாகவே இருந்து, அங்கங்கு என்று. அப்பனே, இதன் ரகசியம் வருங்காலத்தில் செப்புவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இந்தக் கற்களின் சக்தியைக் குறையாமல் காக்க, இராவணேஸ்வரர் பல லட்சம் பிறவிகள் கடும் தவம் செய்து சிவபெருமானை வரவழைத்து, அக்கற்களில் நிரந்தரமாக இருந்து செயல்படுமாறு வரம் கேட்டார்.  சிவபெருமானும் அதன்படி வரம் கொடுத்து விட்டார்.  அதன்படி, சிவபெருமானும் அச் சிவலிங்கங்களில் உறைந்து அருள் தந்து கொண்டே உள்ளார்.)


=============================
# திருவாசகம் பாடுவது - அவ் சுரா கல்லிற்குச் சக்தியளிக்க 
=============================


குருநாதர் :- அப்பனே, மீண்டும் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஏன் திருவாசகம் அப்பனே, இன்னும் பாடுகின்றோம் என்றால், அப்பனே, அக் கல்லானது இன்னும் அப்பனே, எதை என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இன்னும். அப்பனே, செயல்பட வேண்டும். சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்று அப்பனே. இவ்வாறு சக்திகள் அதிகரித்தாலே போதுமானதப்பா. 


குருநாதர் :-  அப்பனே, இதனால் அப்பனே உடம்பில் எது என்று அப்பனே, ஈசனின் அப்பனே, ஒவ்வொரு துகளின் பின், அப்பனே அவை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஈசனுடைய உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகம் அந்த சிவலிங்கங்கள்.)


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், இவையாவும் அப்பனே, பின் தெரியாதனால்தான். அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் இறைவனை. அப்பனே, நிச்சயம் மற்றவர்கள் அப்பனே இல்லை என்றே சொல்கின்றார்கள். 


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகத்தோருக்கு தெரிய வைக்க அப்பனே, இன்னும் அப்பனே, பல மர்மங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பூலோகத்தில் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும் பல ரகசியங்கள், மர்மங்கள் உலகில் உள்ளன. அதெல்லாம் நாங்க சொல்லப் போகின்றோம்.) 


குருநாதர் :-  அப்பப்பா, எவை என்று அறிய அப்பனே, இன்னும் எதை என்று அறிய அறிய அறிந்தும் கூட. அப்பனே, பின் எதை என்று கூற பின் சபைக்கு எவை என்று அறிய பின் இரத்தினத்தை தயார் செய்தான் என்பேன் அப்பனே இராவணன் நிச்சயம் தன்னில் கூட.


குருநாதர் :-  எப்பொழுதும் இங்கு பணம், அதாவது (இலங்கை) இத்தேசத்தில் எவை என்று புரிய ஒருவருக்கெல்லாம் அதிர்ஷ்டங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். பின் ஈசனை வேண்டி பெருந்தவம் இருந்து, நிச்சயம் அதையும் புதைத்திருக்கின்றான் அப்பா.


குருநாதர் :- நிச்சயம் தேசத்தில் உள்ளவர்கள் அப்பனே எப்பொழுதும் அப்பனே எங்கு சென்றாலும், அப்பனே நல்படியாக பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே. பின் அத்தகுதி உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இராவணேஸ்வரர்  என்ன எண்ணினார்? இந்த தேசம் இராவணேஸ்வரர்  அவருக்கு மிகுந்த பற்று கொண்டதாக இருந்தது. ஆனால் இன்று இராவணேஸ்வரர்  பற்றிய உண்மையான வரலாறு அனைவருக்கும் அறியப்படவில்லை. பலருக்கும் அவர் செய்த செயல்களின் பெருமை இங்கு எடுத்துரைக்கப்பட வேண்டியதாக உள்ளது. மக்களுக்காக இராவணேஸ்வரர்  அவர் செய்த அர்ப்பணிப்புகளையும், அவர்களுக்காக மேற்கொண்ட முயற்சிகளையும் கவனியுங்கள்.
இராவணேஸ்வரர் , ஓர் அரிய ரத்தினத்தை அவர் பெரும் பாதுகாப்புடன் காத்து வந்தார். அந்த ரத்தினத்தின் பயன் என்னவெனில் — இந்த தேசத்து மக்களிடையே செல்வச் செழிப்பு எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும்; எந்த நிலையிலும் குறைவு ஏற்படக்கூடாது. ஒருவர் உலகின் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் வளமும் நலனும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இதற்காக அவர் பல தவங்களை மேற்கொண்டு, அந்த ரத்தினத்தின் சக்தியை உயர்த்தினார். அதன் விளைவாக, செல்வம் எப்போதும் நிலைத்து நிற்கும் இங்கு. )
குருநாதர் :-  ஆனாலும், அப்பனே அழிவுகளும் இருந்து கொண்டே இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் அழிவுகளும் இருந்து கொண்டே இருக்கும். 


குருநாதர் :-  ஆனாலும், அவையும் தக்க வைக்க எதை என்று புரிய? நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட சொல்கின்றேன் யான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அழிவு வராமலும் காக்க, நான் சொல்லத்தான் போகின்றேன் என்று சொல்கின்றார்.


குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய ஆனாலும், நிச்சயம் அப்பனே தவத்தின் வழியாக, பின் அதாவது, பின் இறைவனிடம் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இராவணனும் கூட நிச்சயம் தன்னில் கூட மக்கள் எப்பொழுதெல்லாம் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று தெரியாமல் பைத்தியனாகி, பின் மற்றவர்களைக்  கெடுக்கின்றானோ, அப்பொழுது அனைவரையும் அழி என்று. 


குருநாதர் :-  எது என்று புரிய இதனால்தான் சொல்கின்றேன். நல் மனதோடு இருந்தாலே போதுமானதப்பா, போதுமானதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இராவணேஸ்வரர்  ஒருபுறம் மக்களைக் காத்தாலும், மனிதன் எப்போது தீய எண்ணங்களுடன் மற்றவர்களைக் கெடுக்க நினைக்கிறானோ, அப்போது அவர்களை அழித்துவிடுமாறு இறைவனிடம் ஒரு வரத்தையும் பெற்றுள்ளார். எனவே, நல்ல மனதுடன் இருப்பது பேரழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.)


குருநாதர் :-  எவை என்று புரிய இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும். அப்பனே, அறிந்து கூட அக்கதிர் இயக்கங்கள் அப்பனே செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது அப்பனே. 


குருநாதர் :- அக்கதிர்  இயக்கங்கள் அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, இன்னும் அப்பனே அதிர்வலைகள்  தாக்குகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அப்பனே, மனிதன் அப்பனே, பின் நிச்சயம். பின் அதாவது, மனிதன் மனிதனுக்குள்ளே அப்பனே, நிச்சயம். அப்பனே, தீ. அப்பனே, எவை என்று அறிய அப்பனே, இவ்வாறாக அவ்வாறாகச் சொல்லி, அப்பனே, நிச்சயம் மனிதன் மனிதனை அடித்துக் கொண்டு, அப்பனே, இறப்பான் அப்பா. 


குருநாதர் :-  இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய. பின் அதனால், நிச்சயம் இவை என்று ஞானிகள் அறிந்தறிந்து இன்னும் அதாவது பல பல வழியில் கூட பல புத்தகங்களை எழுதி வைத்துச் சென்றுவிட்டார்கள். 


குருநாதர் :-  இதை ஓதினாலே அனைத்தும் கிட்டும். பின் சாந்தியும் அடையும். நிச்சயம். பின் உங்களுடைய எவை என்று கூற. பின் அதாவது உடம்பிற்கும் சக்திகள், சக்திகள் இன்னும் பெருக்கி அனைத்தும் பின் நடந்துவிடும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- (இறந்த ஆன்மாக்களின் ஆற்றல் 'பூஜ்ஜியம்' நிலையை அல்லது மோட்சத்தை அடையாத போது, அவை பூமியில் ஒருவிதமான கதிர்வீச்சு பாதிப்புகளை (Radiation) ஏற்படுத்துகின்றன. இந்த எஞ்சிய ஆற்றல் சாந்தி படுத்தப்படாத நிலையில், அது மனிதர்களின் புத்தியைச் சிதைத்து, அவர்களுக்குள் தேவையற்ற கோபம், குழப்பம் மற்றும் வன்முறை எண்ணங்களைத் தூண்டுகிறது. இதனால் மனிதர்கள் தங்களுக்குள் பகைமையைப் பாராட்டி, போரிட்டுக் கொள்வதன் மூலம் உலக அழிவிற்கு வழி வகுக்கிறார்கள். இறைவனால் உலகம் அழிவதில்லை; மாறாக, இத்தகைய எதிர்மறை கதிர்வீச்சினால் மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது.)
சுவடி ஓதும் மைந்தன் :-  (இந்த நெருக்கடிக்குத் தீர்வாக, இறந்தவர்களின் ஆன்ம ஆற்றலைச் 'சாந்திப்படுத்துதல்' எனும் ஆன்மீக முறை அவசியமாகிறது. திருவாசகம் மற்றும் தேவாரம் போன்ற புனிதமான திருமுறைகளை ஓதுவதன் மூலம், இந்த எதிர்மறை ஆற்றலைச் சமநிலைப்படுத்தி பூஜ்ஜியம் நிலைக்குக் கொண்டு வர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்மாக்கள் இறை நிலையை அடைவதுடன், உலகில் நிலவும் எதிர்மறை அதிர்வுகள் நேர்மறையாக மாறுகின்றன. மனிதகுலம் அழிவிலிருந்து காக்கப்படவும், மனத்தெளிவுடன் அமைதியாக வாழவும் இத்தகைய கூட்டுப் பிரார்த்தனைகள் இன்றியமையாதவை ஆகும். )
சுவடி ஓதும் மைந்தன் :-  (உலகிற்கு நன்மையை போதிக்க வந்த நல்லெண்ணம் கொண்ட சான்றோர்கள் அனைவரும் ஞானிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மனிதகுல மேன்மைக்காகப் புனித நூல்களில் பல வாழ்வியல் ரகசியங்களைப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய ஞானப் பதிவுகளை முறையாகப் பயின்று பின்பற்றுவதன் மூலம், ஒரு மனிதனின் உடலில் நேர்மறை ஆற்றல் (Energy) பன்மடங்கு பெருகுகிறது. இவ்வாறு உருவாகும் மனித ஆற்றலானது, இயற்கையில் ஆற்றல்மிக்க சுரா கற்களோடு (Stone Energy) இணைந்து ஒரு சக்திவாய்ந்த பிணைப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இத்தகைய நற்போதனைகள் மற்றும் வழிபாடுகள் மூலம் மறைந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்திப்படுத்துவதால், உலகில் நிலவும் எதிர்மறை அதிர்வுகள் குறைந்து அமைதி நிலவுகிறது.)
========================================
# இறந்து முக்தி அடையாத ஆன்மாக்களால் வருகின்ற காலத்தில் யுத்தங்கள் வரும்.
========================================


குருநாதர் :-   அப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் இறந்தது எவை என்று கூற பல பல எவை என்று ஆன்மாக்கள். இவ் ஆன்மாக்கள் இன்னும் முற்றுப் பெறவே இல்லை. இதனால் மனிதன் எது என்று புரிய. இதனால்தான் யுத்தங்கள் வரும் வருகின்ற காலத்தில். 
சுவடி ஓதும் மைந்தன் :- (உலகில் நிகழும் பேரழிவுகளுக்கு இறைவன் காரணமல்ல; மாறாக, சாந்தி அடையாத ஆன்மாக்களிடம் இருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க கதிர்வீச்சுகளே (Radiation) அடிப்படை காரணியாக அமைகின்றன. ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போதும், மறைந்த பிறகும் அவனது எண்ணங்கள் ஆற்றலாகத் தொடர்கின்றன. இத்தகைய எஞ்சிய ஆற்றல் முறையாக அமைதிப் படுத்தப் படாத போது, அது நாளுக்கு நாள் வலிமையடைந்து மனிதர்களின் எண்ண ஓட்டங்களை எதிர்மறையாக மாற்றுகிறது. இதன் விளைவாகவே மனிதர்களுக்குள் போர், மோதல்கள் மற்றும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் எண்ணங்கள் உருவாகின்றன.)
சுவடி ஓதும் மைந்தன் :-  (இந்த ஆபத்தான கதிர்வீச்சுகளைக் குறைத்து, ஆன்மாக்களை அமைதிப் படுத்துவதற்காகவே ஞானிகள் பல்வேறு புனித நூல்களையும் வழிபாட்டு முறைகளையும் தந்துள்ளனர். இத்தகைய உண்மைகளை உணர்ந்து, ஞானிகள் காட்டிய வழியில் அந்த ஆன்ம ஆற்றலைச் சாந்தி படுத்தும் போது, மனிதர்களின் எண்ணங்கள் தூய்மையடைகின்றன. அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும், பூமியில் அமைதியை நிலைநாட்டவும் எதிர்மறை ஆற்றல்களைச் சமநிலைப்படுத்துவதே தற்போதைய அவசியமான தேவையாகும்.)
====================================
# உயிரோடு இருக்கும் மக்கள் தொகையைவிட , முக்தி பெறாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் அதிகமாகிவிட்டது. 
===================================


குருநாதர் :-   எவை எது என்று புரிய. ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்கின்றேன். இருக்கும் எவை என்று அறிய பின் மனிதனை விட, பின் அவைதன் அதிகமாகிவிட்டது இறப்பவர். 


குருநாதர் :-   அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட நிற்க. மனிதனுக்கு எங்கு நிம்மதியாக வாழ்க்கை கூடும் ???????? 


குருநாதர் :-   அப்பப்பா, அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் பூஜ்ஜியத்தை ஆக்கிவிட்டால், முதலில் மனிதனுக்கு மனக்குழப்பம் என்ற நோய் நீங்கும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (மனக்குழப்பம் ஒரு நோயைப் போல மனிதனைப் பாதிக்கிறது. அது எல்லோருக்கும் ஏன், எப்படிப் பிறக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதன் உண்மையான காரணத்தை யார் புரிந்துகொள்கிறார்கள்? எந்த மருத்துவரிடம் சென்றால் இது சரியாகும்? பரிகாரம் என்ற பெயரில் இழப்புதான் உண்டாகும்)


குருநாதர் :-  அப்பப்பா, இவையெல்லாம் நிச்சயம் பின் ஏற்படும் என்பது ஞானிகளின் அப்பனே. ஞானிகளுக்கு தெரியும் அப்பா. அப்பனே, அதனால்தான் அப்பனே, நிச்சயம். அப்பனே, பல வகையிலும் கூட, அப்பனே, 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக எது என்று புரிய. அப்பனே, நல்விதமாக, அப்பனே, சாந்தப்படுத்துதல் வேண்டும் என்பேன். 


============================
# திருவாசகம்  - மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. 
============================


குருநாதர் :-  அப்பனே, எதனால்? இதனால்தான், அப்பனே, பல பல வகையான, பல வகையான, அப்பனே, ஞானிகள் இவ்வுலகத்துக்கு பிறந்து பிறந்து, பின் நன்மைகளை செய்ய பல பாடல்களில் , அப்பனே, நிச்சயம் தன்னில் கந்தபுராணம் . அப்பனே, இன்னும், அப்பனே, தேவாரம் இன்னும் என்னென்ன எது என்று புரிய. அப்பனே, இவையெல்லாம், அப்பனே, அவ் ஆன்மாவை எது என்று அறிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பூஜ்ஜியம் ஆக்குவதே. இதனால்தான், அப்பனே, இதில் திருவாசகம் என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று அறிய மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( திருவாசகத்தின் மகிமை உணர்ந்து , மகிழ்ச்சியில் கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  (மனித வாழ்வில் நிலவும் மனக்குழப்பங்கள், அகங்காரம் மற்றும் "நான் பெரியவன், நீ பெரியவன்" என்ற போட்டி மனப்பான்மையால் ஏற்படும் சண்டைகளைத் தவிர்க்க திருவாசகம் போன்ற பாடல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆன்மாக்கள் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை (Energy) உணர்ந்து, இறைநிலையை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடும்போதுதான் மன நோய்களும், குழப்பங்களும் நீங்கும். அவ்வாறு தெளிவு பெறாமல் ஈகோ மற்றும் போட்டிகள் அதிகரித்துக் கொண்டே சென்றால், அது மனித இனத்திற்குள்ளேயே அழிவையும் மோதலையும் உண்டாக்கும். இத்தகைய எதிர்மறை அதிர்வுகளை (Negative rays/vibrations) தடுத்து நிறுத்தி, வாழ்வை நல்வழிப்படுத்த திருவாசகம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.  )


குருநாதர் :-  அப்பனே, இதை யார் சொல்வார்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது உங்களுக்கு மனக்குழப்பம் இருக்கின்றதா அவை செய்கின்றேன், இவை செய்கின்றேன் என்று சொல்லி, அப்பனே, ஒன்றும் அப்பனே, பின் நடக்கப்போவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- (இவ் ரகசியங்களை எல்லாம் சித்தர்களை தவிர யாரும் சொல்லமாட்டார்கள். மனிதன் மனக்குழப்பத்தில் சிக்கும்போது, அதை நீக்க யாரையாவது நாட முயல்கிறான். எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், எவ்வளவு இறைவனை வணங்கினாலும் எந்த பலன் இல்லை.)


குருநாதர் :-  அப்பப்பா, உண்மை நிலையை தெரிந்து கொள்ள வாழ வேண்டும் அப்பனே, நிச்சயம் இன்னும், அப்பனே, பின் எது என்று புரிய. அப்பனே, புரிந்து கொள்ள வாழ வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் ஞானங்கள். அப்பனே, ஞானத்தின் மூலம், அப்பனே, நிச்சயம் அனைத்தும் பெறலாம் அப்பனே. அவை மட்டுமில்லாமல், மனிதனிடத்தில் சக்திகள், அப்பனே, மனிதனிடத்தில் இருக்கும் சக்திகள், பின் வேறு எதற்கும் இல்லையப்பா. 


குருநாதர் :-  அப்பனே, அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இவ் இராவணன் எது என்று புரிய அப்பனே, பின் அங்கங்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உடம்பையும் புதைத்துள்ளான்  அப்பா, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அப்பனே, அவனுக்கு, அப்பனே, பின் உடனடியாக, உடனடியாக, அப்பனே, ஒரு நாள், பின் மீண்டும், பின் அறிந்து கூட, பின் உடம்பு பெறுவான். பின் மற்றொரு நாளே இறப்பான். நிச்சயம் சக்திகள் புகுத்து, புகுத்தி, அப்பனே, பின் இவ்வாறாக, பின் அங்கே, நிச்சயம் தன்னில் கூட, உடம்பை, அப்பனே, அங்கங்கே வைத்துள்ளான். அப்பா, அங்கு சென்றாலே பலம் ஏற்படும். அப்பனே, மக்கள் நலன் கருதியே. 




குருநாதர் :-  அப்பனே, அவையெல்லாம் வருங்காலத்தில் யான் சொல்வேன் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் நீங்களும், அப்பனே, நிச்சயம், அப்பனே, செல்லலாம். அப்பனே, அங்கு அமர்ந்தாலே போதுமானது. அப்பா, மாற்றங்கள், பின் நிச்சயம் நிகழ்வது உண்டு. அப்பனே, ஓரிடத்திற்கு சென்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே, கவலைகள் ஏற்பட்டுவிடும். அப்பனே, ஓரிடத்திற்கு சென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் மாறிவிடும் என்பதெல்லாம் நீங்கள் உணர்ந்து விடுவீர்களாக . 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இராவணன் தனது உடலின் பாகங்களை வெவ்வேறு இடங்களில் புதைத்து வைத்துள்ளார். அந்த இடங்களுக்குச் சென்றால், மனிதர்களுக்கு அபரிமிதமான சக்தி கிடைக்கும். சில இடங்கள் நேர்மறை ஆற்றலையும், சில இடங்கள் எதிர்மறை ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடும்.)


குருநாதர் :-  அப்பனே, இன்னும் ஞானங்கள், அப்பனே, அழகாகவே, அப்பனே, இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே.  பின் அப்பனே, ஆசிகளோடு கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-   பிள்ளையோனும், அப்பனே, பின் அருள் எவை என்று  அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, உங்களை ஆசீர்வதித்து விட்டான். அப்பனே, நலங்களாக இன்னும் சொல்கின்றேன். 


(சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அனைவரையும் பிள்ளையார் ஆசீர்வதித்து விட்டார்கள் என்று கூறி,  மீண்டும் சிவபுராணம் பாடச் சொன்னார்கள். அடியவர்கள் மீண்டும் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள்……..)


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 21.12.2025 அன்று ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …. )

====================================================
வணக்கம் அடியவர்களே , 
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால், இந்த வாக்கினை நீங்கள் பயன்படுத்தி, உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்களை நீங்களே உருமாற்றிக் கொள்ள, உங்கள் வலிமையை அதிகரித்துக் கொள்ள  பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிமுறைகள் மற்றும் நீங்கள் அடைய உள்ள நன்மைகள்  இதோ:
புனிதப் பாடல்களைத் தினசரி ஓதுதல்:


செய்ய வேண்டியவை: ஒவ்வொரு நாளும் திருவாசகம், தேவாரம் அல்லது கந்தபுராணம் போன்ற ஞானிகளின் பாடல்களைப் பாடுங்கள். இதில் திருவாசகம் மிகவும் முக்கியமானது,.
கிடைக்கும் பலன்: இந்த பாடல்கள் உங்களைச் சுற்றியுள்ள மோட்சம் அடையாத ஆன்மாக்களின் எஞ்சிய ஆற்றலைச் சாந்திப்படுத்தி "பூஜ்ஜியம்" (Zero) ஆக்குகின்றன,. இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் மனக்குழப்பம் என்ற நோய் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.


உங்கள் உள்மன ஆற்றலை (Energy Level) அதிகரித்தல்:


செய்ய வேண்டியவை: மனிதனிடம் இருக்கும் சக்தி மிக உயர்ந்தது என்பதை உணர்ந்து, ஞானத்தின் மூலம் உங்கள் சொந்த ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்,,.
கிடைக்கும் பலன்: உங்கள் ஆற்றல் அதிகரிக்கும் போது, வெளியில் இருந்து வரும் எதிர்மறை கதிர்வீச்சுகள் (Radiation) உங்களைத் தாக்காது,. இது ஒரு தற்காப்புக் கவசமாகச் செயல்பட்டு உங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும்


கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுதல்:


செய்ய வேண்டியவை: உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்.
கிடைக்கும் பலன்: மற்றவர்களைக் காப்பாற்றும் இந்த முயற்சியால் உங்களுக்கு அதிக புண்ணியம் சேரும். இந்தப் புண்ணியத்தால் உங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் அனைத்துத் தேவைகளும் தானாகவே நிறைவேறும்.

இந்த எளிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் லௌகீக முன்னேற்றத்தைக் கொண்டுவரும். உங்கள் ஒவ்வொரு செயலிலும் நல் மனதைக் கடைப்பிடித்தால், இறைவனின் அருளும் இயற்கையின் பாதுகாப்பும் உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment