​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 17 December 2025

சித்தன் அருள் - 2040 - அன்புடன் அகத்தியர் - சிவபுராண கூட்டு பிரார்த்தனை, திருவண்ணாமலை - 28/12/2025!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வரும் மார்கழி மாதம் 13ம்  தேதி, 28/12/2025 அன்று ... நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர் பெருமக்களின் அருள் ஆணைப்படி ஆறாவது முறையாக உலக நன்மைக்காக கூட்டுப்பிரார்த்தனை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது....

நிகழ்ச்சி நிரல் 

உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உலக நன்மைக்காக அதிகாலையில் வேள்வி மற்றும் நவகிரக தீபவழிபாடு, கோளறு பதிகம் மற்றும் சிவபுராணம் என தொடர்ச்சியாக காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை  பாராயணம் செய்து கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

தேதி :

28.12.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்:

காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை

இடம்

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், போளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.

கலந்து கொள்ளும் அடியவர்கள்.. கவனத்திற்கு... நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வருவதற்கான 
பேருந்து விவரங்கள்.

பேருந்து வழித்தடம் : திருவண்ணாமலை பேருந்து நிலையம் to மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டவுன் பஸ் அல்லது கலசபாக்கம் டவுன் பஸ் ஏறி EB ஸ்டாப்பில் இறங்கவும். திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் மண்டபத்தை அடையலாம்.

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் லொகேஷன்

https://share.google/U92CNYSb3Wm4pSNDw

உலக நன்மைக்காக நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அனைத்து அடியார் பெருமக்களையும் பக்த கோடிகளையும் பொதுமக்களையும்  வருக! வருக!! என இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment