​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 31 December 2025

சித்தன் அருள் - 2059 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். கவலைகள் இல்லை. 

இன்னும் சித்தர்கள் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, நல் மனதோடு, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் இருந்தாலே, பல பல உபயங்களை உங்களுக்கு சொல்லி, ஆறுதல் படுத்தி, வெற்றிகளை பெறச் செய்வார்கள். என் சீடர்களோ, இன்னும் பல வகையில் கூட, பின் கண்டுபிடித்தது உள்ளதை, உங்கள் எதிரில் சொல்லி, பின் எதிரில் நின்று சொல்லி, பின் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். 

அதனால்தான், இன்னும் கூட, இதனால், நிச்சயம் இவ் மார்கழி  தன்னில் கூட, அனைத்து சமயங்களும் பின் ஒன்றே என்று கூறுகின்றது. இதனைத்தான், பின் அனைத்து சமயங்களிலிருந்தும் ஒரு பாடலை பாட, நன்று. அறிந்தோம், பின் பைத்தியக்காரன் வந்திருக்கின்றான், அவனை பின் இங்கு வரச் சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, வாருங்கள்)

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- ( மேடை ஏறினார் ) 

குருநாதர் :- அப்பா, ஞான உபதேசங்களை ஆனாலும், இதில் கூட பாடலில் எந்த ஒரு பின், அதாவது மதத்தையும் நீ எடுத்து எடுத்து வரக்கூடாது. என் மீது மரியாதை இருக்க வேண்டும். மரியாதையுடன் எதை என்று கூற, இருப்பேயானால், நிச்சயம் பாடலை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவர் சொல்ல வருவது என்னவென்றால், ஐயா இங்கே எந்த ஒரு மதத்தையும் தனியாகப் புகழ்ந்து பாடக் கூடாது என்பதுதான்.

ஒரு பாடல் என்றால், அது எல்லா மதத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் என்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தால், ஒரு மதத்தை மட்டும் பற்றி பாடக்கூடாது, ஐயா. புரிகிறதா? எல்லா மதத்தையும் சமமாகக் கருதி ஒரு பாடலைப் பாட வேண்டும். என்மேல் மரியாதை வைத்திருந்தால், அதைத்தான் பாட வேண்டும் என்று சொன்னார்கள், ஐயா.

சிவனைப் பற்றியும் தனியாகப் பாடக்கூடாது; அதே போல இந்து மதத்தையும், கிறிஸ்தவத்தையும், முஸ்லிம் மதத்தையும் தனித்தனியாகப் பாடக்கூடாது.  பொதுவாக, புத்தம் உட்பட எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன; அனைவரையும் ஒன்றாகக் கருதி ஒரு பொதுப் பாடலைப் பாட வேண்டும் என்பதே அவர்களின் கருத்து, ஐயா.

அப்படியானால்—எந்த பாடல்?

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- (பின் வரும் பாடலை பாட அழகாக ஆரம்பித்தார்கள்  …. இவ் பாடலை பின் வரும் நேரலை பதிவில் கேட்டு மகிழுங்கள். )


https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h29m20s

(பாடல் வரிகள் )

குருநாதர் அருளே, அருளாகும் 
உலகிலே, இதைவிட பெரிதேது 
மானிடா இதை நீ அறிவாயா?
 
குருநாதர் அருளே, அருளாகும் 
உலகிலே, இதைவிட பெரிதேது 
மானிடா எனை நீ அறிவாயா?

வருவோம், உன் வாசல் தேடி,  
தருவாயா பாத சேவை, 

வருவோம், உன் வாசல் தேடி 
தருவாயோ பாத சேவை, 

ஏழை என் குரலைக் கேட்டு எழுவாயோ,  என் குருநாதா, 
ஏழை என் குரலைக் கேட்டு எழுவாயோ, என் குருநாதா, 

எனக்கொரு வரம் ஒன்று தருவாயா !!

எப்போதும் ஆசிகள் , உன் ஆசிகள் , உன் ஆசிகள். 

குருவே, சரணம்! திருவே, சரணம்! 
குருவே, சரணம்! குருவே, சரணம்! 

குருவே, உன் திருவடி அருள் தானே! 
குருவே, உன் திருவடி அருள் தானே! 
குருவே, உன் திருவடி அருள் தானே! 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: