அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1
தேதி: 19/12/2025, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
இடம்:- கதிர்காமம் கந்தன் திருக்கோவில், முருகன் தெய்வானை சன்னதி மண்டபம், இலங்கை.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி மூலனை, ஆதி விநாயகப் பெருமானை, ஆதி கந்தப் பெருமானை மனதில் எண்ணுகின்றேனே, செப்புகின்றேனே அகத்தியன்.
அனைவருக்கும் நலங்கள், ஆசிகள், பெரும் உதவிகளாக இருக்குமப்பா வரும் காலங்களில்.
அப்பனே, அறிந்தும், புரிந்தும், என்னவென்று தெரியாமல், அப்பனே, இவ்வுலகத்தில் மனிதன் வாழ்ந்து வருகின்றான் அப்பனே.
தெளிய வைக்கவே, அப்பனே, புரிய வைக்கவே, அப்பனே, சித்தர்கள் யாங்கள்.
அதே போல், அப்பனே, எப்பொழுதெல்லாம், அப்பனே, தர்மம் தலை கீழாக பின் போய்க் கொண்டிருப்பதை அப்பனே, பின் காணுகின்றீர்கள் நீங்களே.
அதனால்தான் அப்பனே, நிச்சயம் அதை தன், அப்பனே நிமிர்த்த வேண்டும் அப்பனே.
இதனால் அப்பனே, மனிதனுக்குள் அனைத்து அப்பனே, திறமைகளையும் கூட, அப்பனே கொடுத்து, அப்பனே இதனால் மனிதர்கள் நீங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியான வழியிலே, அப்பனே சென்றாலே, அப்பனே தர்மத்தை நிலை நாட்டி விடலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
அப்பனே, இதனால், யாங்கள் பல வகையிலும் கூட உங்களுக்கு உரைக்க வந்தோம் அப்பனே.
ஏன், எதற்காக அப்பனே பல வழியில் கூட, பல பல தெய்வங்கள் அப்பனே.
இத்தனை தெய்வங்களை ஏன், அப்பனே, வணங்குகின்றீர்கள்???????...... என்பதை எல்லாம் அப்பனே, பின் தெரிந்து வணங்கினால், அப்பனே, நிச்சயம், அப்பனே, அனைத்தும் உண்மையாகும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே, கவலைகள் வேண்டாம் அப்பனே.
======================================
# இலங்கை - இராவணனின் தேசமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது
======================================
இப்பொழுது, இராவணனை பற்றித்தான் யான் எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே, இவைத்தன் அப்பனே, பின் இராவணனின் தேசமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே,
======================================
# இராவணன் தவ வலிமை - ரகசியங்கள்
======================================
இங்கு அப்பனே, பின் இராவணனின் எண்ணங்கள் எப்படி இருந்தது?
அப்பனே, எப்படி வாழ்ந்திட்டு வந்தான்?
எப்படி எல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இப்படி இருந்தால்தான் உயர்வுகள் கிட்டும் என்பவை எல்லாம் எங்கெல்லாம் அப்பனே, தியானங்கள் எத்தனை, எத்தனை, அப்பனே, பின் எதை என்று புரிந்தும் கூட, அப்பனே, எப்படி பின் பன்மடங்கு, அப்பனே, பின் உயர்வுகள் பெற்றான் அப்பனே.
இன்னும் பேர் (இராவணன் பெயர்) அழியவில்லையே !!!!! அப்பனே, என்பதை எல்லாம், அப்பனே, தெள்ளத் தெளிவாகவே அப்பனே.
=============================
# மூழ்கிக் கிடக்கிறது குமரிக்கண்டம்
=============================
அதை மட்டுமில்லாமல் அப்பனே, நிச்சயம், அப்பனே, இதன் கீழே அப்பனே, பன்மடங்கு, அப்பனே, பல வழியில் கூட நாடுகள் அப்பனே, பல வகையில் கூட. அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கடல் தன்னில் அப்பனே, பின் வந்தபோதெல்லாம் அப்பனே, மூழ்கி, மூழ்கி, அப்பனே, பின் அழிந்து கொண்டே வந்தவை என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே, மூழ்கிக் கிடக்கின்றன இன்னும் அப்பனே, பல ஊர்கள்.
அப்பனே, ஏனென்றால் அப்பனே, இதன் கீழே, அப்பனே, இன்னும், அப்பனே, கிழக்கு தன்னில் கூட, அப்பனே, எப்படி எதை என்று அறிய, அப்பனே, குமரிக் கண்டமும் கூட, அப்பனே, உங்களுக்கு பின் தெரிந்ததே என்பேன் அப்பனே.
==============================================
# குமரிக்கண்டம் - பாதி அளவு அழிந்து கிடந்தது
==============================================
இதனால், அப்பனே, எப்படி எதை என்று அறிய, அப்பனே, எத்தனை எவை என்று அறிய, அப்பனே, பாதி அளவு, அப்பனே, உலகம், அப்பனே, முழுவதாக இருந்தாலும், அப்பனே, அதில் தன் பாதி அளவு, அப்பனே அழிந்து கிடந்தது என்பேன் அப்பனே.
இப்பொழுது பாதி அளவு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.
(இலங்கை மட்டுமே எஞ்சி உள்ளது)
==============================================
# மீதி இருக்கும் குமரிக் கண்டத்தை காக்க வேண்டும்.
==============================================
அவைதன் கூட, பின் நீங்கள் காக்கப்பட வேண்டும் என்பேன் அப்பனே. (இலங்கையில் இருக்கும் மக்கள்)
பின் பாதி அளவு அழிந்தது.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இப்பொழுது எப்படி என்பதை எல்லாம், இதைத்தன், அப்பனே, மக்களுக்கு பொதுவாகவே எடுத்துரைத்தால்தான், அப்பனே புரியுமப்பா.
அப்பனே, ஒவ்வொன்றாக தெளிவு பெற வைக்கின்றேன் நலமாகவே.
==============================================
# குமரிக்கண்டம் இதன் கீழே - பல ஊர்கள்,பல திருத்தலங்கள் நிறைந்துள்ளது
==============================================
இதனால் இதன் கீழே, அப்பனே, இன்னும் பல ஊர்கள் அப்பனே, நிறைந்துள்ளது.
பல திருத்தலங்கள் அப்பனே, உள்ளது அப்பனே அவைதன் கூட.
அப்பனே, அது மட்டுமில்லாமல், இன்னும் ஞான உபதேசங்களையும் பெற்றோர் பலர் உள்ளார் என்பேன் அப்பனே.
அவர்களும் எதை என்று புரிய, அப்பனே, எப்படி ஏது என்று அறிந்தும் கூட அப்பனே, பலமுறையும் கூட, அப்பனே வந்து வந்து, இவையெல்லாம் யான் எடுத்து எடுத்துரைக்கப் போகின்றேன் உங்களுக்கு.
குருநாதர்:- இதனால், அப்பனே, முதலிலே எப்படி தொடங்கியது???? என்பவை எல்லாம் எடுத்துரைத்து, அப்பனே, பின்பு, அனைத்தும் பின் கொண்டு வருகின்றேன் அப்பனே, நலங்களாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, புரியுதுங்களா? அய்யா சிம்பிளா சொல்றேன். உலகம் முழுசு, அதுல பாதி அழிஞ்சு போச்சாம். பாதி எங்க அழிஞ்சு போச்சுன்னா, இதுக்கு கீழதான்.. )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-
(ஐயா, அதாவது இந்த உலகத்துல அரைவாசி வந்து தண்ணியால அழிஞ்சு போச்சுன்னு அகத்தியர் பெருமான் சொல்றாரு. இது எங்க அழிஞ்சிருக்குன்னு சொன்னா, இதுக்கு கீழ, இதுக்கு கீழன்னு சொன்னா, (இலங்கை) நம்முடைய தென்திசை, நம்மளுடைய மாத்திரைக்கு பணிய (தென் இலங்கை எல்லைக்கு கீழே) , மாத்திரைக்கு பணிய, கடல் வந்து மூழ்கி, அதுக்கு (கீழ்தான்) பணியதான் நம்முடைய பழைய தேசம் இருக்கிறதா சொல்றாரு.)
==============================
# இலங்கை - நாடு மிகப்பெரியது ( குமரி கண்டத்தின் எஞ்சிய பகுதி)
==============================
குருநாதர்:- அப்பா, அறிந்தும், இவைத்தன், இவ் நாடு மிகப்பெரியது அப்பனே.
ஆனாலும் அனைத்தும் ஒன்றே. பின், அதாவது உலகம் உருண்டை, அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனாலும், இத்தேசம் மிகப்பெரியது. ஆனாலும், இப்பொழுது, பின் சிறிது தான் தங்கி நிற்கின்றது அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
(இலங்கை மட்டும் ஒரு துண்டாக சிறிதளவு... மட்டும் உள்ளது)
இதை எப்படி உணர்ந்து, பின் அவையெல்லாம் செப்புகின்றேன் முதலில்.
அதைப்பற்றி நீங்கள், பின் தெரிந்து கொண்டால்தான் அப்பனே, முதலிலிருந்தே, பின் வந்தால்தான், அனைத்தும் புரியுமப்பா.
சுவடி ஓதும் மைந்தன், கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-
( அப்ப, கொஞ்சம் அதாவது இந்த தேசம் வந்து ஒரு பெரிய தேசமா, எப்படி இவ்வளவு பெரிய தேசமா இருந்தது, இன்னைக்கு இவ்வளவு சுருங்கி சின்னதா இருக்குங்கிறதை வரலாறை தெரிஞ்சுகிட்டாதான், இனி வரப்போற அழிவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும், அப்படிங்கறது உங்களுக்கு புரியும். )
குருநாதர்:- இதை அறிவித்து, இவைத்தன் பல வகையில் கூட மக்களுக்கு தெரிவிக்கப் போகின்றேன்.
அப்பனே, இவைதன், அப்பனே, தெரியாமல் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தாலே, அப்பனே, நிச்சயம் அப்பனே, மனிதன் அப்பனே, பின் சண்டைகள் இடுவான்.
அவை பொய், இவை பொய் என்பதெல்லாம் அப்பனே.
இதனால்தான், அப்பனே, சமமாகவே, அனைவருக்கும் தெரிந்து, தெரிந்து, தெளிவு பெற வைக்கின்றேன் அப்பனே.
இதனால்தான், அப்பனே, இத்தேசங்கள், அப்பனே, அழியக் கூடாது என்பதற்காகத்தான் பல ஞானியர்கள் வந்தார்கள் அப்பனே, மக்களுக்கு தெளிவடைய.
ஆனாலும், தெளிவு பெற செய்து, அப்பனே,!!!......
ஆனாலும், மக்கள் யாருமே நம்பவில்லை என்பேன் அப்பனே.
(நால்வர்கள் புத்தர் ஈபோன்ற இன்னும் பல ஞானியர்கள் இலங்கை தேசத்திற்கு உபதேசம் செய்தார்கள்)
இதனால், அப்பனே, இன்னும் கலியுகத்தில், அப்பனே, இப்படியே விட்டுக் கொண்டு இருந்தால், அப்பனே, நிச்சயம், மனிதன் தான், அப்பனே, உயர்ந்தவன்.
பின், இறைவன் பொய் என்ற நிலைமைக்கு, கலியுகத்தில், அப்பனே, வந்து விடுவான்.
இதனால், அப்பனே, அநியாயங்கள், அப்பனே, பின் அக்கிரமங்கள் நடந்து வரும்.
அப்பனே, இதனால்தான், அப்பனே, உண்மைகள் தெரிந்து கொள்ள, அப்பனே, பல வகையில் கூட, சித்தர்கள் யாங்கள் உரைத்துக் கொண்டே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் கூட, அப்பனே, பாதி அளவு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், இவைத்தன், அப்பனே, அறிந்தும் (மறைந்து) கிடக்கின்றது என்பேன் அப்பனே.
===================================
# ஒரு எல்லை வரை தான் விஞ்ஞானம் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.
===================================
இன்னும் கூட, அப்பனே, இவைதன், அப்பனே, விஞ்ஞானிகள், விஞ்ஞானிகள் மூலமாகவும் கண்டுபிடிக்க முடியாதப்பா.
ஏனென்றால், அப்பனே, ஒரு எல்லைக்கு தான், அப்பனே, பின் கண்டுபிடிப்பான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
====================================
# இராவணன் - “சுரா கல்” ரகசியங்கள்
====================================
ஒரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே.
நிச்சயம், இராவணன் யார்? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட?
அப்பனே, இப்பொழுதும் இராவணன், பின் தங்கி நிற்கின்றான்.
அப்பனே நிச்சயம், அதைத்தான், அப்பனே, பின் எவை என்று கூற, ஒரு அப்பனே, அதன் நாமம், பின் சுரா கல் என்று.
அப்பனே, அவ் சுரா கல்லானது அப்பனே, அனைத்தும் யார் யார்? அப்பனே, பின் என்ன செய்கின்றார்களோ? அப்பனே, எதனை பேசுகின்றார்களோ? அப்பனே, அவ் சுரா கல்லானது, அப்பனே, ஈர்க்கும் தன்மை உடையதப்பா.
அப்பனே, இதனால்தான், அப்பனே, எண்ணங்கள், அப்பனே, பின் அறிந்தும், புரிந்தும் கூட, உயர்வாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம், அப்பனே.
இக்கல்லை வைத்துத்தான், அப்பனே, இராவணன் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளானப்பா.
=======================================
# “சுரா கல்” - உலகின் மிகப்பெரிய பதிவுகளை சேமிக்கும் கருவி
========================================
அப்பனே, அக்கல்லை வைத்துக்கொண்டு, அக்கல் இடத்தில் கேட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இப்பொழுது யான் சாதிக்க வேண்டும் என்றால், அக்கல்லானது கேட்டு, அப்பனே, அக்கல்லானது என்ன சாதிக்கும் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இப்பொழுது, அப்பனே, அனைத்தும், அப்பனே, பதிவு என்று சொல்கின்றார்களே.
நீங்கள் என்ன பேசுகின்றீர்களோ, அவை பதிவு இறக்கப்படுகின்றது என்பதையெல்லாம், அப்பனே, இவைதன், அப்பனே, பல கோடி காலங்கள் முன்பே இருந்தது என்பேன் அப்பனே.
இப்பொழுதுதான் புதுமையாக கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. இவையெல்லாம், அப்பனே, இதை பின் “சுரா கல்” என்கிறார்கள் என்பேன் அப்பனே.
இதைத்தான், அப்பனே, பின் இராவணன் மட்டும், இராவணனுக்கு மட்டுமே, இவை தெரியும் என்பேன் அப்பனே.
பல ஞானிகளுக்கும் இது தெரியும் என்பேன் அப்பனே.
இதை வைத்து தான், அப்பனே, பல ஞானியர்கள், அப்பனே, பின் அதாவது மனிதனை உயர்நிலை ஆக்கலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், அனைத்திலும் தோல்வியில் சந்தித்தே, சந்தித்தே, அப்பனே.
ஆனாலும், அப்பனே, பின் மீண்டும் மீண்டும், அவ் ஞானிகள் பிறப்பெடுத்து, பிறப்பெடுத்து, அப்பனே, பின் நல்விதமாக, அது சுரா கல்லை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் தெரிய வைப்பார்கள் என்பேன். அப்பனே, மனிதனுக்கு, அப்பனே.
இதனால், அப்பனே, மனிதன் இயல்பு நிலை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அச் சுரா, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, என்னென்ன?? யோசிக்கின்றீர்களோ, அவையெல்லாம், அப்பனே, பதிவாகிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, இவ்வாறு, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதை மனிதனுக்கு இன்னும் சொல்கின்றேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:-
(அய்யா , இராவணன் ஏன் வெற்றி பெற்றார்? என்றால், கடலில் மூழ்கியிருந்த ஒரு “சுரா கல்” காரணமாம். அந்த கல்லுக்கு ஒரு விசேஷ சக்தி — யார் பேசினாலும், யாருடைய இயல்பும், எண்ணங்களும் எல்லாம் ரெக்கார்டாகிப் பதிந்து விடும். அந்த கல்லின் சக்தியைப் பயன்படுத்தி தான் இராவணன் பல சாதனைகள் செய்தார். அந்த கல் இன்னும் கடலில் மூழ்கி இருக்கிறது. பல கோடி ஆண்டுகளாக மனிதர்களின் இயல்புகளையும் நினைவுகளையும் தாங்கி வைத்திருக்கும் ஒரு பதிவுக் கல்லாக அகத்தியர் விளக்குகிறார்)
==========================================
# சுரா கல் அதனை இறைவனாக வைத்துக் கொள்ளலாம்
==========================================
குருநாதர்:- இவைத்தன், அப்பா, நிச்சயம் தன்னில் கூட கல்லையும் எதை என்று கூற இறைவனாக வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. எச் சமயத்தாரும் என்பேன் அப்பனே.
(எந்த ஒரு மதத்தை சமயத்தை பின்பற்றுபவர்கள் அவர்கள் அனைவருக்கும் ஒரு கடவுளாக சுரா கல்லை வைத்துக் கொள்ளலாம்.
இறைவன் ஒன்றே என்பது சித்தர்களின் வாக்கு மனிதர்கள் பல்வேறு மதங்களாக அமையுமாக பிரிந்து இருக்கின்றார்கள் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு கல்லாக பொதுவான இறைவனாக இதை வைத்துக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறுகின்றார்)
சுவடி ஓதும் மைந்தன் :-
(அய்யா ,அந்த பெரிய கல் யாருக்கு எந்த தெய்வம் பிடிக்கிறதோ,? அவர்கள் நினைப்பதற்கேற்ற மாதிரி அந்த கல்லை அந்த தெய்வமாகக் கருதி கொள்ளலாம். ஒருவருக்கு முருகன், இன்னொருவருக்கு சிவன், பிள்ளையார், இயேசு, நபி, புத்தர்—யாரை வேண்டுமானாலும் அந்த கல்லில் நினைத்துக் கொள்ளலாம். அந்த கல் காலத்தால் பலரின் நினைவுகளையும் நம்பிக்கைகளையும் தாங்கி நிற்கும் ஒரு “மெமரி” மாதிரி இருக்கிறது)
==========================================
# எப்படி “சுரா கல்” ரகசியங்கள் ராவணனுக்கு தெரிந்தது?
==========================================
குருநாதர்:- இவைத்தன், அப்பா, நல் சிந்தித்தான். அப்பா, அறிந்தும், இதைத்தன், அப்பனே, பின் இராவணன் அறிந்தும், புரிந்தும், அப்பனே, இவன் தான், அப்பனே, பரப்பதற்கு எதை என்று அறிய. ஆனாலும், இக்கல், அப்பனே, எப்படி தெரிந்தது? முதலில், அப்பனே, பின் அறிந்தும், இவைத்தன், அப்பனே, இராவணனுக்கு கூட,அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :-
(இது எப்படி தெரிஞ்சது? இராவணனுக்கு இந்த கல் இராவணனுக்கு எப்படி தெரிஞ்சது? இந்த கல் ஆனால் பல ஞானிகளுக்கும் தெரியுது. ஆனால், இராவணனுக்கு எப்படி தெரிஞ்சது?)
======================================
# ஏன் பிறக்கின்றோம்? ஏன் இறக்கின்றோம்? ஏன் இவ்வளவு மிருகங்கள் இறக்கின்றன?
=======================================
குருநாதர்:- இதைத்தன், அப்பா, அறிந்தும், இதைத்தன், அப்பனே, இவைத்தன், எது உண்மை, எவை பொய் என்றெல்லாம், அப்பனே, சிந்தித்து சரியாகவே, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, அறிந்தும், ஏன் பிறக்கின்றோம்? ஏன் இறக்கின்றோம்? எப்படி, எதை என்று அறிய? ஏன் இவ்வளவு? பின் அறிந்தும், மிருகங்கள் ஏன் இறக்கின்றன? எதற்காக? என்றெல்லாம் யோசித்து, யோசித்து.
சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணன் யோசிக்கிறார்.... ஏன் பிறப்பு? ஏன் இறக்குறோம்? பிறக்குறோம்? ஏன் இத்தனை மிருகங்கள் இருக்குது? வந்து உலகத்துல வந்து, ஏன் இத்தனை உயிரினங்கள் இருக்குது? எதுக்காக இதெல்லாம் வந்தது?)
இவைத்தன், ஏன் பிறந்தோம் நாம்?
எதற்காக உலகம்? எதை என்று அறிய? ஏன்? ஏன்? என்றெல்லாம் பின் கேள்விகள்.
இதனால் எவை போன்று? இதனால் பின் மனிதன், பின் இத்தனை, பின் கஷ்டங்கள் அனுபவித்து, கடைசியில் இறந்து போகின்றான் என்ற கேள்வியும் கூட.
இவைத்தன் அறிந்தும், இதனால் எப்படி? ஏது என்றெல்லாம் பின் அதாவது முடிவெடுத்தான் நிச்சயம் எதை என்று அறிய.
ஆனாலும், பின் இவையெல்லாம் அறிந்தும், புரிந்தும் இயக்குகின்றான்.
அதாவது அறிந்தும், புரிந்தும் கஷ்டங்கள் இன்னும் எதனையோ அனைத்தும் படைக்கின்றான். ஆனாலும், இதனை இயக்கும் சக்தி ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் உலகில் இருக்கும் எண்ணற்ற பறவைகள், மனிதர்கள், உயிர்கள்—இவை எல்லாம் தானாக இயங்குவதில்லை; இதை இயக்கும் ஒரு உயர்ந்த சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார். ஒரு பேன் சுழல்வதற்கும் அதை யாரோ ஒருவர் இயக்க வேண்டும் போல, இந்த உலகையும் ஒரு மறைமையான ஆள் அல்லது சக்தி இயக்குகிறது என்ற அறிவு அவருக்குள் தோன்றுகிறது.)
======================================
# எது இறை ஞானத்தின் ஆரம்பம்?
======================================
குருநாதர்:- அப்பா , இதுதான் ஞானத்தின் ஆரம்பம் என்பேன் அப்பனே.
இதை அப்பனே, பின் இவை வருவதற்காகத்தான் அப்பனே, இறைவன் அடியோடு அப்பனே, கஷ்டங்களை வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.
(இவ் கூட்டுப் பிரார்த்தனைக்கு) இப்பொழுது ஓடோடி வந்தானே ஒரு பக்தன்.
அப்பனே, அவனுக்கும் பலமாக அடி விழுந்தது. அப்பொழுதுதான் அப்பனே, அவன் ஞானம் பெற்றான்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அங்கு வந்த ஓர் அடியவர், இவர் பத்தி சொல்றாரு. இப்ப, இவர் வந்து சும்மா வரலப்பா. ஓடி வந்தார் பாருங்க. இப்ப, இவருக்கும் ஒரு பெரிய கஷ்டம் எல்லாம் வந்து, பெரிய ஒரு துன்பம் எல்லாம் வந்துதான், இவர் வந்து உட்கார்ந்து இருக்காருப்பா. அப்படின்றாரு. அப்ப, இவர் இப்ப வந்தார் பாருங்க. அவர் பத்தி சொல்றாரு. அவர் ஞானம் பெற்றார்ப்பா. சும்மா எல்லாம் ஞானம் பெற முடியாதுப்பா. அப்ப, இந்த கேள்வி இராவணனுக்கு வந்தது. இதுதான் ஞானம். புரியுதுங்களா? )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :-
(அப்பா, ஜீவ நாடியில என்ன சொல்றாருன்னா, ஒரு ஞானி வந்து, எளிதா வர முடியாது. அடிபட்டு நிறைய துன்பங்களோடு தான் வரலாம். இப்ப, ஓடோடி வந்த இவரும் கூட சாதாரணமா வரல. துன்பங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்திருக்காருன்னு சொல்றாரு.)
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இவர் சாதாரணமாக இந்த நிலைக்கு வரவில்லை; மிகுந்த துன்பங்களையும் சோதனைகளையும் அனுபவித்துப் பிறகுதான் இந்த ஞான நிலையை அடைந்தார் என்று அகத்தியர் கூறுகிறார்.
துன்பம் வந்தால்தான் உண்மையான ஞானம் பிறக்கும் — அதேபோல இராவணேஸ்வரனுக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது.
இந்த உலகில் இத்தனை மனிதர்கள், உயிரினங்கள், நிகழ்வுகள்—இவை எல்லாம் தானாக இயங்க முடியாது.
இதை இயக்கும் ஒரு உயர்ந்த சக்தி இருக்க வேண்டும்.
அந்த “யார்?” என்ற சந்தேகம் தான் அவருக்குள் ஞானத்தைத் தூண்டியது.
ஞானம் கிடைக்க பெரும் கஷ்டம் தேவை; அதுபோல நீங்களும் உங்களுக்குள் “இதைக் இயக்குவது யார்?” என்று தேட வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.)
====================================
# இறைவன் போல் வாழ்வது எப்படி? - இராவணேஸ்வரன் சிந்தனை
====================================
குருநாதர்:- இவைத்தன், அப்பொழுது எதை என்று புரிய? அனைத்தும் எதை என்று அறிய. ஆனாலும், அனைத்தும் பின் எவை என்று புரிய. பின், அதாவது, நிச்சயம் பின் நம் ஒருவனை படைத்திருக்கின்றான் என்றால், நிச்சயம் அனைத்தும் பின் கிடைக்க.
நம் அதனால் அறிந்தும், அவன் படைத்திருக்கின்றான். அறிந்தும், ஆனால் பின், நிச்சயம் பின் அவனைப் போல் வாழ்வது நமக்கும் தகும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இராவணேஸ்வரன் யோசிக்கிறார்: நம்மை படைத்தவன் ஒரு மிகப் பெரிய சக்தி; அவர் நம்மைக் காக்கிறார், கண்காணிக்கிறார். அந்த படைத்தவன் போல வாழ முடியாவிட்டாலும், அவரின் அருளால் நம்மால் பலவற்றைச் செய்ய முடியும் என்ற எண்ணம் அவருக்குள் எழுகிறது. அகத்தியரும் இதையே விளக்குகிறார் — படைத்தவன் இருக்கிறான், அவர் நம்மை கவனித்து வருகிறார்; அந்த உண்மையை உணரும்போது மனிதனுக்குள் ஒரு புதிய புரிதல் பிறக்கிறது)
குருநாதர்:- இதை அறிந்து, இவ் மாயைகள் ஆனாலும், அனைத்தும் பின் நிச்சயம் அவனை பின் பார்ப்போம். அவனை அறிந்தும், புரிந்தும், ஆனால் மாயையில் சிக்கிக்கொண்டு, சிக்கிக்கொண்டு, அனைத்தும் பின் அறிந்து தான் இந் நிலைமை வந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா, இது எப்படி இந்த கேள்வி அவருக்கு வந்ததுன்னா, மாயையில் சிக்கிக்கொண்டார். வந்து, எல்லாத்தையுமே வந்து உண்மை, எல்லாமே பொய், பொய் என்று சொன்ன பிறகுதான். ஆனால் கடைசில தான் இது தெரிஞ்சதுப்பா. அவருக்கு வந்து,
குருநாதர்:- அப்பா சாகும் நிலையில், வயதான காலத்தில் தான் இதை உணர்ந்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இது எப்ப உணர்ந்தார்? இராவணேஸ்வரன் சாகும் நேரத்தில் உணர்ந்தார்)
குருநாதர்:- இதை தன் அறிவித்து, எப்படி ஏது என்றெல்லாம். அப்பப்பா, இதைத்தன் அப்பனே, பின் சொல்லிக் கொண்டிருந்தாலும், குழப்பங்கள் தான் அப்பனே. ஆனால் எடுத்து வந்து விடுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஆனா, இராவணேஸ்வரன் இவரோட ரகசியங்கள் பல இருக்குது. ஆனா, நான் சொல்லிக்கொண்டே வந்தா, உங்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனா, எல்லாத்தையும் சொன்னாதான் மட்டும்தான் தெளிவு ஏற்படும். அதையும் நான் சொல்றேன். இது இடையிடையே வந்து அவர் சொல்றார்.)
==================================
# இறைவனை காண இராவணேஸ்வரன் புறப்பட்டார்
==================================
குருநாதர்:- இதைதன், இவை தன். இதனால், நிச்சயம் பின் அனைத்தும் அறிந்தும், இவைதன் அறிய, நிச்சயம் தன்னில் எதை எது என்று தெரிவிக்க. இதனால், பின் போதும், நிச்சயம் அதைத்தான் காண பின் புறப்பட்டான், அனைத்தும் பின் இழந்து.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-
(அவர் எல்லாவற்றையும் இழந்த பிறகு, இந்த உலகத்தை இயக்கும் ஒரு மறைமுகமான சக்தி இருக்கிறது என்பதை உணர்கிறார். அந்த சக்தியைப் புரிந்து, அதனைப் பற்றிக் கொண்டால் மனிதன் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற எண்ணம் இராவணேஸ்வரன் அவருக்குள் உருவாகிறது.)
குருநாதர்:- அப்பப்பா, இவைத்தான் அப்பா ஆன்மாவாகவே அப்பனே. முதலில் தெரிந்து கொள்ளாமல், அப்பனே, பின் இவன் ஆன்மா சென்றுவிடும் என்றால், அப்பனே, மீண்டும் மீண்டும் பிறப்புகளாக வந்து கொண்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஆன்மா உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்; அதற்காகத்தான் அது பயணம் செய்கிறது. ஆன்மா தனது உண்மை நிலையை உணர வில்லை என்றால், அது மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார்.)
==================================
# இராவணேஸ்வரன் - சுரா கல் மீது சாய்ந்து அமர்ந்தார்
==================================
குருநாதர்:- இவை தன், அப்பா, இப்படி தேடும் பொழுதுதான், அக்கல்லானது அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அமர்ந்தான்.
ஏன் இப்பிறப்பு எதை என்று அறிய என்றெல்லாம்?
அப்பா, அறிந்தும் பல பல வித்தைகள் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட இழந்து.
ஆனாலும், அக்கல்லிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சாய்ந்தான். என்பேன், அப்பனே. பின் சாய்ந்து உட்கார்ந்தான்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இராவணேஸ்வரன் இலங்கையிலிருந்த மர்மமான “சூரா கல்” அருகே சென்றபோது, வாழ்க்கை, பிறப்பு, காரணம், நிகழ்வுகள் — இவை அனைத்தையும் பற்றி ஆழமாக யோசித்தபடி சென்றார். அந்த கல் இன்னும் அங்கேயே மறைந்து கிடக்கிறது. அந்த கல்லின் முன் நின்றபோது, இராவணேஸ்வரனும் அதேபோல் சாய்ந்து உட்கார்ந்து, “இது என்ன? இதன் பின்னால் என்ன ரகசியம்?” என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.)
குருநாதர்:- இவைத்தன் அறிந்தும், புரிந்தும், இதை என்று அறிய. இதனால், பின் அற்புதமாக அறிந்தும், இதைத்தன், அப்பா, அறிந்தும், இதைத்தன், அப்படி, அப்படியே யோசித்து, யோசித்துக் கொண்டிருக்க.
குருநாதர்:- அறிந்தும், இதைத்தன் புரிய, எதை என்று அறிய, பின் எவை என்று புரியாத நிலையிலும், ஆனாலும், அக்கல்லானது அறிந்தும், இவன் தனக்கு பின் போதனைகளை கூட அறிந்தும், பின் மீண்டும் எவை என்று புரிய, பின் அதற்கு தகுந்த, அதற்கு தகுந்த வினா அறிந்தும் கூட வந்தது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இராவணேஸ்வரன் அந்த சுரா கல்லின் முன் அமர்ந்தபோது, உள்ளார்ந்த போதனைகள் தானாகவே வெளிப்பட்டு, புதிய வினாக்களும் அவற்றுக்கான பதில்களும் அவனுள் எழுகின்றன. இராவணேஸ்வரன் ஆழமாக யோசிக்கத் தொடங்கியபோது, “ஏன் இப்படி யோசிக்கிறேன்?” என்ற கேள்வியும், அதற்கான பதிலும் அவருக்குள் தானாகவே தோன்றின; அதாவது, கேள்வியும் பதிலும் அந்த சுரா கல்லிருந்து தானாகவே வந்தன.)
குருநாதர்:- இவை தன், ஆனாலும், இப்படியா என்றெல்லாம் தானாவே வந்து கொண்டிருந்தது. ஆனாலும், எப்படி இது சாத்தியம் என்றெல்லாம்?
சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணேஸ்வரன் ஆச்சரியப்பட்டார். இது எப்படி யோசிக்கிறாரு. எப்படி இதெல்லாம் வந்து? எப்படி இதெல்லாம் வந்து வருது? நமக்கு விடையும் எதற்காக வருது? என்று)
குருநாதர்:- இதைத்தன் எவ்வளவு யோசித்து அறிந்தும், இவை என்று அறிய, பின்னும் அக்கல்லானது அறிந்தும், எதை என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் தட்டி, எதை என்று கூட பலமாக, நமசிவாயா!!! என்று கத்தினான். மீண்டும் அதை, பின் மீண்டும், இவனுக்கு (எதிரொலியாக) ஒலித்தது. பின் மீண்டும் அதே.
சுவடி ஓதும் மைந்தன் :-
(அப்பொழுது, நமசிவாயா என்று சொன்னார். வந்து, அந்த சுரா கல்லுல மீண்டும் ரிப்பீட் வந்ததாம்.)
குருநாதர்:- ஆனாலும், அறிந்தும், இவை தன், பின் இக்கல்லில், பின் ஏதோ மர்மம் இருக்கின்றது என்று உணர்ந்தானப்பா,
இதனால், அப்பா, அறிந்தும், புரிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால், அப்பதான் தெரிஞ்சதாம். இந்த கல்லு மிகப்பெரிய கல்லு. இதுலதான் வந்து சாதாரணம் இல்லை. இதுல வந்து எது கேட்டாலும், மீண்டும் ரிப்பீட் ஆகுது.
குருநாதர்:- எதை என்று புரிவித்த, அறிந்தும் கூட, இதுதான், பின் எதை என்று அறிய. ஆனாலும், அறிந்தும் கூட, ஆனாலும், உண்மை நிலை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா, இங்க வந்து சந்தேகப்பட்டு, என்னடா இந்த கல்லு? ஏது? எப்படி இது வந்து? என்று சொல்லிட்டு, சந்தேகப்படுகின்றார்.
குருநாதர்:- இதைத்தன், அப்பா, இன்னும் ஞானிகள் இதை தேடி வந்தனர் என்பேன், அப்பா. மீண்டும், அப்பா, அறிந்து கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, ஐயா, புரியுதுங்களா? இராவணேசன், அதை உணர்ந்து விட்டார். இப்ப, இந்த கல்லானது வந்து எல்லாருக்கும் தெரியுது. இந்த கல்லை பத்தி எல்லாருக்கும் தெரியுது. அப்ப, எல்லா ஞானிகளும் எங்க வந்திருக்காங்க?
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- கதிர்காமம் இங்கே…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஐயா, இங்க வந்திருக்காங்க. ஐயா, அந்த கல்லை தேடுறதுக்காக படிக்கிறான்.
குருநாதர்:- இவை என்று அறிய, அனைத்து சமயம் அறிந்தும், புரிந்தும் கூட, பிறவிகளும் இங்கு வந்து, அதை யார் என்று, பின் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அந்த சூரா கல்லை தேடியது இராவணேஸ்வரன் மட்டும் அல்ல. அவரைத் தொடர்ந்து பல சமயங்களின் ஞானிகளும்—இந்துமத சித்தர்கள், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் போன்ற பலரும்—அதே மர்மக் கல்லின் ரகசியத்தை அறிய வந்ததாக கூறப்படுகிறது. அந்த கல் எங்கு மறைந்திருக்கிறது என்றால், இலங்கை மற்றும் கதிர்காமம் அருகிலுள்ள கடலடியில் மூழ்கி கிடக்கிறது.
பழைய உலகில் இலங்கை 100% நிலப்பரப்பாக இருந்தது; ஆனால் காலப்போக்கில் அதன் 50% கடலில் மூழ்கி விட்டது. மீதமுள்ள 50% மட்டுமே இப்போது மேலே தெரிகிறது. அந்த மூழ்கிய 50% பகுதியில்தான் சுரா கல் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை இன்று நாம் காண்பது சிறிய பகுதி மட்டுமே; உண்மையான நிலப்பரப்பு கடலடியில் நீண்டு கிடக்கிறது.
அந்த கடலடிப் பகுதியில் மறைந்திருக்கும் அந்த கல்லைத் தேடி பல யுகங்களாக ஞானிகள் வந்துள்ளனர். “எது அந்த கல்? அதன் சக்தி என்ன?” என்பதை அறிய அனைவரும் முயன்றுள்ளனர். இராவணேஸ்வரன் முதலில் அதன் ரகசியத்தை அறிந்தார்; பின்னர் புத்தர், இயேசு, நபிகள் நாயகம் உள்ளிட்ட பலரும் அதே தேடலைத் தொடர்ந்தனர்.
இந்த கல்லில் என்ன சக்தி உள்ளது என்பதைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது; ஆனால் அகத்தியர் அதை உள்ளார்ந்த முறையில் விளக்குவார். இதுபோன்ற விஷயங்கள் ஜீவநாடியில் அரிதாகவே வரும், அதனால் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் கூட்டு பிரார்த்தனை முக்கியம்—மக்கள் நலனுக்காகவும், அனைவரும் நல்லபடியாக வாழவும். நீங்கள் இந்த உண்மையை அறிந்தால், அதை மற்றவர்களுக்கும் பகிரலாம்; அதனால் அவர்களுக்கும் நன்மை கிடைக்கும். கூட்டு பிரார்த்தனை அனைவருக்கும் நன்மை தரும், உங்களுக்கும் நன்மை தரும். அதற்காகத்தான் இந்த கூட்டு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. )
===========================================
# விஷ்ணு சக்கரத்தை இயக்குபவனுக்கே “சுரா கல்” தெரியும்
============================================
குருநாதர்:- அப்பனே இதனால் பல வகையில் கூட அறிந்தும், புரிந்தும் இதைத்தன் அப்பனே. ஆனாலும், அப்பனே, இவைத்தன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சிலருக்கே தெரியும் என்பேன் அப்பனே. ஏன் எதற்கு என்றால், அப்பனே, அவ் விஷ்ணு சக்கரத்தை இயக்குபவனுக்கே தெரியும் என்பேன். அப்பனே,
================================================
# அவ் விஷ்ணு சக்கரத்தை இயக்குவதுஎப்படி ?
(சித்தன் அருள் - 1875 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 5!)
https://siththanarul.blogspot.com/2025/06/1875-5.html
================================================
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இந்த மர்ம சுரா கல்லின் உண்மையை யார் அறிய முடியும் என்றால், தன்னுள் உள்ள “விஷ்ணு சக்கரம்”—அதாவது உள்ளார்ந்த சக்தி—இயங்கத் தொடங்கும் போது மட்டுமே அது வெளிப்படும். அந்த “விஷ்ணு சக்கரம்” சக்தி விழித்தெழுந்தால், “நாம் ஏன் பிறந்தோம்? நமது பணி என்ன?” என்ற அடிப்படை கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அந்த உள்ளார்ந்த விழிப்புணர்வே, சுரா கல்லின் ரகசியத்தையும் அதன் தேடலையும் உணரச் செய்கிறது)
குருநாதர்:- அப்பப்பா, இவர்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இருந்து தான் அமைதியாக அறிந்தும். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட ஞானம் பிறந்து நாமே பிறந்தோம் என்பதை எல்லாம் அப்பன் நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுதே, பின் நிச்சயம் தன்னில் கூட அக்கல் தெரிந்ததப்பா.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அமைதியாக உள்ளார்ந்த தேடலில் மூழ்கியவர்களுக்குள் இயற்கையாகவே ஞானம் பிறக்கிறது; “நாம் ஏன் பிறந்தோம்?” என்ற அடிப்படை ஆன்மீகக் கேள்வி மனத்தில் எழும் அந்த நொடிதான், அவர்களின் உள்ளார்ந்த விழிப்புணர்வு திறக்கப்படுகிறது. அகத்தியர் கூறுவது, இந்த கேள்வி உண்மையாக ஒருவரின் உள்ளத்தில் எழுந்தால், இராவணேஸ்வரன் தேடிய அந்த மர்மமான கல்லின் ரகசியமும் தானாகவே வெளிப்படும். பிறப்பின் நோக்கத்தை அறிய முயலும் அந்த உள்ளார்ந்த தேடலே, அந்த கல்லின் உண்மையை உணரச் செய்யும் திறவுகோல்)
========================
# சுரா கல்லின் மகத்தான சக்திகள்.
========================
குருநாதர்:- அப்பொழுது அனைத்தும் முடிந்திருக்கும். இதனால், நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும், இவைதன் எப்படி எப்படி என்பதெல்லாம் ஆனாலும் தேடி தேடி ஆனாலும், இதைத்தன் அப்பா, பின் அக்கல்லை நோக்கினாலே ஒரு சக்தி கிடைக்கும்.
அப்பா, நிச்சயம் தன்னில் கூட அது சக்தியை வைத்துக் கொண்டு தான் பல அப்பனே பின் ஞானிகள், அப்பனே நிச்சயம் இவ்வுலகத்துக்கு வந்து, அப்பனே மனிதனை திருத்தி, திருத்தி வாழ, அப்பனே திருத்த பார்த்தனர் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- (மனிதன் உள்ளார்ந்த தேடலில் முழுமையாக மூழ்கி, “நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?” என்ற அடிப்படை ஆன்மீகக் கேள்விகளை உண்மையாக எழுப்பும் போது, அந்த தேடல் அவனை சுரா கல்லின் சக்தியை உணரக்கூடிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அந்த கல்லை நோக்கினாலே ஒரு விசேஷமான ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது; அந்த ஆற்றலையே பல யுகங்களாக ஞானிகள் பெற்றுக்கொண்டு, மனிதனைச் சரியான பாதைக்கு திருப்பி, நல்ல வாழ்வை கற்றுக்கொடுக்க உலகிற்கு வந்தனர். அவர்கள் அந்த கல்லின் இடத்துக்கு சென்று பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து அந்த சக்தியை அடைந்தனர்; பின்னர் அந்த அனுபவத்தின் மூலம் மக்களுக்கு “இப்படி வாழ்ந்தால் நன்மை, இப்படி நடந்தால் உயர்வு” என்று பல வழிகாட்டுதல்களை வழங்கினர்.)
=========================================
# சுரா கல் - உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவம் அடக்கியது
=========================================
குருநாதர்:- அப்பப்பா, அறிந்தும் எதை என்று அறிய, அவ் கல்லானது உலகத்தின் உலகத்தின் தத்துவம். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது நீங்கள் அனைவரும் வைத்திருக்கின்றீர்களே எப்படி, அப்பா, தெரிகின்றது?
(மனிதர் கையில் தற்பொழுது இருக்கும் மொபைல் போன்)
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- (அந்த சுரா கல்லின் முக்கியத்துவத்தை விளக்கும்போது, உலகின் அனைத்து ரகசியங்களும் அந்த கல்லில் மறைந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது. அதை ஒரு உதாரணத்துடன் ஒப்பிடுகிறார். நாம் ஒரு செல்போனில் கூகுள் வைத்திருக்கிறோம் என்றால், எதை வேண்டுமானாலும் தேடி பதிலைப் பெறலாம்; அதுபோலவே, அந்த சுரா கல்லும் ஒரு பிரபஞ்ச அறிவுக் களஞ்சியம் போல செயல்படுகிறது. அதனை அணுகும் திறன் கிடைத்தால், வாழ்க்கை, பிறப்பு, உலகம், சக்தி—எதை வேண்டுமானாலும் அதிலிருந்து அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்)
குருநாதர்:- இவைத்தன் அப்பா, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக மனிதனின் எப்படி ஆட்டி படைப்பது, எவ்வாறெல்லாம் பின் ஆட்டி படைக்கின்றது? கலியுகத்தில் என்பதை எல்லாம் பல ஞானிகள் அங்கு சென்று அப்பனே, பின் விடை, அப்பனே தவமிருந்து தேடினார்கள் என்பேன். அப்பனே, விடையும் கிடைத்தது. அப்பனே, அதைத்தான் அப்பனே, பின் மனிதனுக்கு அப்பனே உபசரித்தார்கள் என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- (மனிதன் எவ்வாறு உருவாக்கப்பட்டான், எவ்வாறு நடத்தப்படுகிறான், வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்ற ஆழமான ரகசியங்களை அறிய பல யுகங்களாக ஞானிகள் அந்த மர்ம சுரா கல்லின் இடத்துக்கு சென்று தவம் செய்து விடையைத் தேடினர். அவர்கள் தியானத்தில் பெற்ற ஞானத்தின் மூலம் மனிதனை எப்படி வாழ வைக்கலாம், எப்படி சரியான பாதைக்கு திருப்பலாம் என்பதற்கான வழிகளை கண்டறிந்தனர். அந்த கல்லின் சக்தியைப் பெற்ற பிறகே அவர்கள் மக்களுக்கு பல உண்மைகளையும் வாழ்க்கை நெறிகளையும் போதித்தனர். எல்லா சமயங்களின் பெரிய ஞானிகளும் அந்த சுரா கல் உள்ள இடத்துக்கு சென்று தியானம் செய்து, அந்த கல்லின் மூலம் கிடைத்த ஞானத்தை உலகிற்கு பகிர்ந்தவர்கள்.)
================================
# நல்லதை சொல்ல வந்த ஞானிகளை அடித்து நொறுக்கினார்கள் மனிதர்கள்.
================================
குருநாதர்:- ஆனால் மனிதனோ!?!?!, பின் நல்லதை சொல்ல வந்தவனை, அப்பனே அடித்து நொறுக்கினார் என்பேன் அப்பனே,
இதுதான். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு தெரியாதவை.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- (மனிதன் உண்மையைப் புரிந்து கொள்ளாததால், நல்லதைச் சொல்ல வந்தவர்களையே எதிர்த்து, துன்பப்படுத்தும் பழக்கம் கொண்டவன் என்று உரை கூறுகிறது. வரலாற்றில் ஜீசஸ், நபிகள் நாயகம், பல ஞானிகள்—அனைவரும் மனிதனுக்காக நன்மையைப் போதிக்க வந்த போதும், மக்கள் அவர்களை அடக்க முயன்றனர். காரணம், உண்மை சொல்லப்படும் போது மனிதன் அதை ஏற்க முடியாமல் கோபம், சண்டை, எதிர்ப்பு ஆகியவற்றில் இறங்கிவிடுகிறான். உண்மையை அறியாத மனதின் அறியாமையே இந்த வன்முறைக்கும் எதிர்ப்புக்கும் காரணம்)
குருநாதர்:- அப்பப்பா, இதை நீக்கவே, அப்பனே, இதை நீக்கிவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அனைத்து போதனைகளும் மனிதனுக்கு புரிந்து, அப்பனே, நிச்சயம் தன்னைத்தானே வென்று, அப்பனே, உலகத்தையும் காப்பான் என்பேன் அப்பனே.
ஏனென்றால் உலகத்தை எது என்று அறிய, மனிதனிடத்தில் இறைவன் கொடுத்துவிட்டானப்பா. நிச்சயம் தன்னில் கூட
செல்ல குழந்தைகளாக நீங்கள் வாழுங்கள் என்றெல்லாம்.
ஆனாலும், அப்பனே, பின் காலம் போன போன போக போக, அப்பனே, மனிதன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் மனிதனையே கெடுத்து, உலகத்தையே, பின் நிச்சயம் கெடுத்துக் கொண்டு வருகின்றானப்பா,
இதனால், அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- ( மனிதன் தனது உள்ளார்ந்த குற்றங்களையும் அறியாமையையும் நீக்கிவிட்டால், அனைத்து போதனைகளும் தெளிவாகப் புரிந்து, தன்னையே வென்று, உலகத்தையும் காப்பாற்றும் ஆற்றல் பெறுவான். இறைவன் மனிதனை “செல்லக் குழந்தைகள்” போல தூய்மையுடன் வாழச் செய்தார்; உலகை ஆட்சி செய்யும் உரிமையை மனிதர்களிடம் கொடுத்தார். உலகத்தை உயர்த்தி மகிழ்ச்சியாக வாழும் திறனையும் மனிதனுக்குள் வைத்தார். ஆனால் காலப்போக்கில் மனிதன் தன்னையே கெடுத்து, உலகத்தையும் அழிக்கும் பாதையில் சென்றுவிட்டான். இதனால் இறைவன், “இப்போது திருத்துவது உங்களுடைய பொறுப்பு” என்று அறிவுறுத்துகிறார். அகத்தியர் இதையே வலியுறுத்தி, மனிதன் தன் தவறுகளை உணர்ந்து திருந்தினால் மட்டுமே உலகம் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் எனக் கூறுகிறார்.)
குருநாதர்:- அப்பப்பா, அறிந்தும் ஏன் இங்கு முருகன் அமைந்திருக்க? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கைலாயமும் கூட, அப்பனே, இதிலே அடங்கியுள்ளது என்பேன் அப்பனே.
=====================================
# இலங்கையில் உள்ள உலகம் அறியாத ஆதி கைலாய ரகசியங்கள்
சித்தன் அருள் - 1787 - அன்புடன் அகத்தியர் - வாக்குரைத்த ஸ்தலம்: கதிர்காமம் சிங்காரவேலன் திருக்கோயில். மாணிக்க கங்கை நதிக்கரை. ஊவா மாகாணம் மொனராகலை. ஸ்ரீலங்கா
https://siththanarul.blogspot.com/2025/01/1787.html
======================================
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- ( இப்ப கைலாயம் என்று சொல்கிறார்கள் இல்லையா? ஆனால் ஆதி அந்த கைலாயம் இந்த 50% அழிந்த இலங்கையில் அங்கு தான் அப்பா, கைலாயமே இருக்குதுன்றாங்க. தென் இலங்கை கடலில் கீழே அங்கேயே பெரிய பெரிய கைலாயம் இருக்குது. )
=================================
# சுரா கல் அசைந்தால் உலகமே அசையுமடா.
=================================
குருநாதர்:- அப்பப்பா, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிந்தும் புரிந்தும், அப்பனே, அக்கல்லானது, அப்பனே, அசைந்தால் உலகமே அசையுமடா.
குருநாதர்:- அப்பப்பா, அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாக, அப்பனே, பின் நிச்சயம் வருடத்திற்கு ஒருமுறை, பின் அப்பனே, பின் அதாவது ஒரு கடுகளவும் அசையுமப்பா. இதனாலே அழிவுகளப்பா, அப்பனே,
இதை பின் நிச்சயம் அறிவியல் வழியிலே முதலில் எடுத்து வருவேன்.
குருநாதர்:- அப்பப்பா, அது மட்டுமில்லாமல், அப்பப்பா, அறிந்தும் அக்கல்லானது வளரக்கூடியது என்பேன்.
குருநாதர்:- அப்பனே, இவ்வாறு வளர, வளர, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கடல் நீரும், அப்பனே, அப்படியே, அப்பனே, வந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- அப்பப்பா, அறிந்தும் மீண்டும் தொடர்கின்றேன்.
அப்பனே, அனைவருக்குமே எம் ஆசிகள் அப்பனே.
சூழ்நிலையும் புரிகின்றது அப்பா.
அப்பனே, உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
உண்மை தெரிந்து கொண்டு வாழ, உண்மை தெரிந்து கொண்டு, அப்பனே, வாழுங்கள்.
உண்மை தெரிந்து கொண்டால்தான் வாழ்க்கை அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
உண்மை தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்தால், அப்பனே, கஷ்டத்தோடே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இதனால், அப்பனே, இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன்.
அப்பனே, பின்
ஆசிகள் !!
ஆசிகள் !!
இன்னும், அப்பனே, பின், அப்பனே, பின், ஈசனை நினைத்து, அப்பனே பாடுங்கள்.
அப்பனே, நிச்சயம் ஈசன் யார் என்பதையும் கூட, அப்பனே, இன்னும் விளக்கத்தோடு தெரிவிக்கின்றேன். அப்பனே, பின் ஆசிகள், ஆசிகள் இப்பொழுது.
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், 19.12.2025 அன்று நடந்த இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்…. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete