​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 20 December 2025

சித்தன் அருள் - 2045 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் காசி வாக்கு!


சமீபத்தில் காகபுஜண்டர் மகரிஷி உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.

உலகெல்லாம் ஆட்சி செய்கின்ற பரிசுத்தமான நமச்சிவாயனை மனதில் எண்ணி வாக்குகளாக ஈகின்றேன் புசண்டன்.

மனிதன், மனிதன் நிலைமைகள் இன்னும் வருகின்ற காலங்களில் நிச்சயமாய், நிச்சயமாய் எதை என்று எதிர்நோக்க,!!!....

எதிர் நோக்குவது  எல்லாம் நடப்பது (மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும்) என்பதைக் கூட மனிதனின் மனதில் ஆழமாக தோன்றிவிட்டது. 

ஆனால் நிச்சயம் நடைபெறாமலே போகும் என்பதுதான் நிச்சயம். வாக்கு, 

வாக்கு !!

எண்ணற்ற கோடிகள், கோடிகள் பிறந்து, பிறந்து, பிறந்து, பிறந்து ஆனாலும் பின் எதனை அனுபவித்தார்கள்? 

எதனையும் என்றும் கூட தெரியாமல், தெரியாமல் போய்விட்டானே.

மனிதன் பாவம், மனிதன் என்பதுதான் கணக்கு 

பாவக் கணக்கு, புண்ணிய கணக்கு. எதிலிருந்து??? எடுபடுகின்றது??? என்பதை எல்லாம் நிச்சயமாய் வழி நின்று சித்தர்கள் இன்னும் ஏராளமான வாக்குகளையும் செப்புவார்கள். 

இதை கனிவுடன் பயன்படுத்திக் கொண்டால் நன்று. 

நிச்சயம் பயன்படுத்தாதவோர் நிச்சயம் எங்கோ பின் படுகுழியில் பின் மிதந்து தான் இருக்க வேண்டும். 

மிதந்து கொண்டே பின் அதை வேண்டும், இதை வேண்டும் என்றெல்லாம். 

அதாவது தண்ணீரில் மிதந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் மனிதா!!!, ஒன்றை நினைத்துக்கொள்.

நீங்கள் அனைவருமே தண்ணீரில் தான் நனைந்து கொண்டிருக்கின்றீர்கள் இப்பொழுது . 

ஆனாலும் எதை என்று எதிர்நோக்க,!!!

ஆனால் அத் தண்ணீரிலே நிச்சயமாய் உண்மையான பக்தியை இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்று நிச்சயமாய் எதை என்றும் தெரியாமலும், தெரிந்தும் ஆனாலும் பாவம் செய்துவிட்டாலும்!!..... ஆனாலும் இறைவனே நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அத் தண்ணீரிலிருந்து, அதாவது யாங்கள் காப்போம். 

நிச்சயம் எதை பின்பற்ற தெரியாத மனிதர்களே, மூடர்களே, அதாவது திருந்துங்கள், திருந்துங்கள். 

உண்மையானவை இவ்வுலகத்தில் இல்லையப்பா. 

இல்லை, இல்லை என்பதுதான் இன்னும் ஆணித்தரமாக சொல்வோம். 


ஆனாலும் இன்னும் எதனை, எவற்றை என்று கூற  பல பல யோகங்களில் கூட தவழ்கின்றனர் மனிதர்கள். 

ஆனாலும் அவையெல்லாம் வீணே. எப்பொழுது எதை செய்ய வேண்டும்?? என்பதை கூட கனிவாக உணர்ந்து, உணர்ந்து கொண்டாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு. 

உண்டு, உண்டு. எதற்கெடுத்தாலும் எதற்கு பயன்? 

எதனை என்று இன்னும் ஆசனங்கள் செய்வோமா? இன்னும் பல பல யோகங்கள் செய்வோமா? 

இன்னும் எதனை அனுபவிப்பதற்கு சித்தர்கள் சொன்னார்களே, அவையெல்லாம் பயன்படுத்தி சித்தர்கள் ஆகிவிடலாமா??? என்று மனிதனை நினைப்புத்தான் அனைத்தும் கெட்டதாம். 

ஆனாலும் நிச்சயம் ஆக முடியாது சொல்லிவிட்டேன்.

 ஆனாலும் எதற்கு எவந்தன்? எதை பயன்படுத்த வேண்டுமோ, அதை தன் பயன்படுத்தினால் தான் வெற்றி உண்டே!!...
 தவிர மற்றவை எல்லாம் ஈடு ஆகாது,

 ஆகாது. 
மனிதனே, பொய் சொல்லி, பொய் சொல்லி பின் உலகத்தையும் ஏமாற்றி விட்டார்கள். கடைசியில் சித்தர்கள் இல்லை என்று கூட  வரும் நிலைக்கு வந்துவிட்டார்கள் மனிதர்கள். 

ஆனாலும் கடைசியில் யாங்கள் விட்டு விட மாட்டோம். 

ஏமாற்றும் தொழில் மனிதனுக்கு பிடித்தமான ஒன்று.


 ஆனாலும் எப்படி ஏமாற்றுவது??? என்பதை கூட தெரியாமல், ஆனாலும் ஏமாற்றுகின்றான், தன்னையே ஏமாற்றுகின்றான் என்பதை கூட தெரியாமல் போய்விட்டது. 

இதுதான் அங்கே ஒரு சூட்சமம். 

ஆனாலும் இன்னும், இன்னும் பக்தியை நாடிக்கொண்டு, நாடிக்கொண்டு என்னென்ன?? தான் செய்யப்  செய்யப் போகின்றீர் மனிதா.??


 யாங்கள் மெதுவாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

 ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. மனிதா.

கர்மத்தை தான் பலமாக சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றீர்கள் நீங்கள்!

 சொல்லிவிட்டேன். 

ஆனாலும் அறிந்து, அறிந்து இன்னும் ஏராளமான வசதிகளும் எதற்காக வருகின்றது?? என்பது புரியாமல், மனிதா, மனிதா, திருந்திக்கொள், திரருந்திக்கொள். 

உண்மையான பக்தியை பகிர்ந்து கொள், பகிர்ந்து கொள். 

உண்மையான ஞானங்களை நிச்சயமாய் பல பல ஞானியர்கள், அதாவது எதை என்று தெரியாத அளவிலே யாங்கள் எழுதி வைத்துள்ளோம். 

ஆனாலும் யார்? யாருக்கு ?எதை எங்கு சென்று அடைய வேண்டுமோ, அதை சரியாகவே சென்றடைய செய்வோம். 

ஆனால் மனிதா, ஒன்றை சொல்கின்றேன். சித்தர், அதாவது சித்தர் நாமங்களை, அதாவது தான், தான், தான் எழுதிய பல பல பாடல், பின் புத்தகங்களையும் நிச்சயம் படிக்க இயலாது என்பேன்.

 ஏனென்றால் கர்மா, 

கர்மா பிடித்த மனிதா, நிச்சயம் எதற்காக?? படிக்க முடியவில்லை???, எதை என்று கூட. 

ஆனாலும் யாங்களோ அதை நிறுத்தி வைத்திருக்கின்றோம். 

எப்பொழுது? உண்மையான எதை என்று எதிர்நோக்கும் அளவிற்கும் கூட புண்ணியங்கள், புண்ணியங்கள் சேர்ந்து கொண்டே செல்லுமானால்,......

(உங்களை) நிச்சயம் பின் நாடி வரும் எங்கள் புத்தகங்கள்.
நிச்சயம் மறைமுகமாக இன்னும் பின் கிடக்கின்றது. 

ஓர் இல்லவன் இடத்தில் கூட!!!!
(ஒரு பக்தன் வீட்டில்)


 அதை நிச்சயமாய் அவந்தனும் வெளிக்காட்டவில்லை.

நிச்சயமாய் பின் இன்னும் ஏனென்றால் அவந்தனக்கும் அவன் முன்னோர்கள், அவந்தன் முன்னோர்கள், அவந்தன் முன்னோர்கள் செப்பிவிட்டு சென்றார்கள். 

இதனை பத்திரப்படுத்திக்கொள். 


கலியுகத்தில் மனிதன் ஏமாற்றக் கூடியவன். இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு மனிதன் பல பல வழிகளில் கூட வசியப்படுத்தி எதை எதையோ செய்து விடுவான். 

அதனால் யாருக்கும் காண்பித்து விடாதே என்று கூட !!

இப்பொழுது கூட அவந்தனக்கும் வயதாகிவிட்டது.

 அவந்தனும் பத்திரப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். 

ஏராளம் ஏமாற்றுபவர்கள், ஏமாற்றுபவர்கள், ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை உண்டு. 

இன்னும் எதற்கு,? எதற்கெடுத்தாலும் இறைவா!, இறைவா! என்று பொய் சொல்லி

 ஆனாலும்
 எதனையும் நம்பி இட்டு, இட்டு. 

ஆனாலும் இன்றளவும் பல வழியில் கூட பல ஞானியர்கள் எங்கெங்கோ? சென்று எங்கெங்கோ ஞானத்தை பெற்றனர்.

 நிச்சயமாய், நிச்சயம் ஞானம் பெறுவதற்கு ஒரே வழி அனைத்தும் இழக்க வேண்டும். இதுதான். 

ஆனாலும் பின் அனைத்தும் இருந்து கொண்டு ஞானம் வேண்டும், வேண்டும் என்றால் மனிதா??? எப்படித்தான் உந்தனக்கு ஞானம் கொடுப்பது?

 பொய்யான ஞானம் தான் வரும். 

அனைத்தும் இழந்து விட்டு என்னிடத்தில் வா!!!!! யான் தருகின்றேன் உந்தனக்கு.

 இப் புவியுலகத்தை ஆளலாம் நீ. 

ஆனாலும் எதை என்று எதிர்பார்க்கும் அளவிற்கும் கூட முன் அரசர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள்?

 எப்படி வாழ்ந்தால் இவ்வுலகத்தை ஆளலாம்?? என்பதை எல்லாம் நினைத்து, நினைத்துப் பார்த்து வாழ்ந்தார்கள். 

அதனால்தான் வாழ்ந்திட்டும், நிச்சயமாய் இறைவனை பெயரைச் சொல்லியும் வாழ்ந்திட்டு சென்றார்கள். 

நிச்சயமாய் பல பல மனிதர்களுக்கு கூட இறைவன் காட்சி அளிப்பதாகவே உண்மை. 

ஆனால் கலியுகத்தில் ஏதும் தேவையில்லை. நீ  உண்மையாகவே இருந்தால், நிச்சயம் இறைவனே உன்னை தேடி வருவான், தேடி வருவான். 

மற்றவைகள்   எல்லாம் செல்லாது, செல்லாது. 

நிச்சயம் பின் ஈசன், ஈசன் எதை என்று மனதார உணர்ந்து, உணர்ந்து சொல்லியதை திருவாசகத்தில் தான் பல வழிகளில் உள்ளது.

 அதைப் படித்தாலே போதும் மனிதா. 

நீ திருந்திக் கொள்ளலாம்.

 படி, படி. 


ஆனாலும் எதற்காக படிக்கின்றீர்கள்?? என்பதை கூட தெரியாமல் படித்து விடாதீர்கள். 

பின் அவை படித்தால் இவை நடக்கும், அவை நடக்கும் என்பதை எல்லாம் முட்டாள்!!


 அறிவுள்ளவனே, அறிவுள்ளவனாக இன்னும் செயல்பட வேண்டுமே தவிர, நிச்சயம் , கீழ் நோக்கி வரக்கூடாது என்பேன். 

இப்பொழுதெல்லாம் கீழ் நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். 

அவை, இவை, இவ்வாறெல்லாம், இவையெல்லாம் செய்தால் இப்படி வரும், அப்படி வரும். 

அப்பனே, அனைத்தும் பொய்களப்பா.  சொல்லிவிட்டேன்.

 அவ்வாறு செய்து கொண்டே வந்தால்!?!?!?!?!

(ஒன்று)
இறைவன் மீது ஒன்று நாட்டம் வை. 

அப்படி இல்லை என்றால், அதன் மீது நாட்டம் வை. 

ஆனால் அதன் மீது நாட்டம் வைத்து விட்டால், பின் கர்மாக்கள் சேர்ந்துவிடும்.

 தற்பொழுது நன்றாகவே நடக்கக்கூடும் என்பதை கூட சிறிதளவே சந்தோஷம். 

ஆனால் வருகின்ற பின் காலங்கள் எத்தனை, எத்தனை கஷ்டங்களடா உந்தனக்கு? 

ஆனாலும் உணரவில்லையே. 

நீ மட்டும் கஷ்டப்படவில்லை. உன் மனைவி, அதாவது உன் பிள்ளைகள், அனைவரையும் கஷ்டத்தில் மூழ்கடித்து சென்று விட்டாயே. 

அதுவே ஒரு பாவமடா. 

முட்டாள் மனிதா, முட்டாள் மனிதா, திருந்திக்கொள். 

ஆனாலும் இறைவன் சொல்வதை கேள். 

அதாவது பல பல வழிகளில் கூட திருவாசகத்தை எடுத்துக்கொள். 

பல வழிகளில் கூட சுந்தரகாண்டத்தை பாராயணம் செய். 

எதை என்று இன்னும், இன்னும் பல பல வழிகளில் கூட பின் எங்களுடைய புத்தகங்களையும். 

ஆனாலும் இதன் அறியாமல் யார்? ஒருவன் இறைவனை கெட்டியாக பிடிக்கின்றானோ, அவந்தனுக்குத்தான் யாங்கள் தருவோம்!

 சொல்லிவிட்டேன். மீண்டும், மீண்டும். 

ஆனாலும் எதற்கெடுத்தாலும் என்னென்ன தேவை?? என்பதை கூட உணராத !!! கஷ்டங்கள் எதற்காக வருகின்றது பார்த்தாயா? 

மனிதா, அனைத்தும் நீயே ஏற்படுத்திக் கொண்டது. 

நீயே ஏற்படுத்திக் கொண்டுவிட்டு மீண்டும் கஷ்டங்கள் வருகிறது என்பது பார்த்தால், இதுதான் அறிவின் அறிவா ,


 அறிவிலிருந்து வந்ததா? மனிதா, மனிதா, மனிதா, தெரிந்துகொள். மனிதா. 

எதற்கெடுத்தாலும் எதற்காக,? எதற்காக? என்பதை கூட ஏன் எதற்காக பிறந்தோம்? 

எதற்காக இவ்வுலகத்தை பின் பின் சென்றடைந்து மீண்டும், மீண்டும் பிறப்புகள் என்பது ஒரு நாளாவது யோசித்து விட்டாயா? 

இல்லை, யோசித்திருந்தால் நீ மனிதன். 

இன்னும் யோசித்திருந்தால் நீ மாமனிதன். 

இன்னும் யோசித்திருந்தால் நீ ஞானி. 

ஆனால் மனிதன் என்ற நிலைமைக்கே நீ வரவில்லையே. 

ஏன்? 

அனைத்தும் பொய், அனைத்தும் பொய். 

பொய் வேடதாரிகள் தான் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவை, இவை வேண்டுமென்று. 

பிறப்பைப் பற்றி நீ கேட்டாயா? 

மனிதா? 

முட்டாள் மனிதா, யான் காரியும் துப்புவேன். 

பிறப்பைப் பற்றி நீ கேட்டாயா?

 சொல், உடனடியாக சொல்.

பிறப்பை எந்தனுக்கு தா!!!...தா.... இறைவா என்று நீ கேட்டாயா?

 பின் இறைவன் தான், பின் படைத்தான் உந்தனை.

ஆனால் மனிதா, இப்பொழுது யோசித்துக் கொள்.

 அனைத்தும் இறைவனால் தான் மட்டுமே கொடுக்க முடியுமே தவிர, மற்றவை எல்லாம் நிச்சயம் ஆகாது. 

இதுதான் மனிதன் நிலைமை. 

ஆனாலும் மனிதனோ தான் எண்ணியபடி எல்லாம் நடந்து விடலாம் என்று கூட பின், பின், பின் பொய். 

இதனிடையே பல வழிகளில் கூட கொள்ளைகள் இன்னும் எத்தனை,? எத்தனை? மனிதா, மனிதா,

 உன்னையே உன்னை காப்பாற்றக்கூடிய முடியவில்லையே தவிர, மற்றவர்களை எல்லாம் நீ காப்பாற்றவா போகின்றாய?. 

மனிதா, எத்தனை?, எத்தனையோ பொய்கள் சொல்லி ஏமாற்றி வழி நடத்தலாம். 

ஆனால் இறைவனை பெயரைச் சொல்லி ஏமாற்றுகின்றாயே , அதுதான் பெரிய, பெரிய. 

ஆனாலும் எதனை என்பதை கூட உணர்த்தி, உணர்த்தி, திருந்திக்கொள், திருந்திக்கொள்.

 யாங்கள் நிச்சயமாய் எதை என்று அறியாமலே, மனிதா, நீயே அனைத்தும் செய்துவிடுவது!!! யான் இறைவன் என்பது யான் அனைத்தும் எந்தனுக்கே தெரியும் என்பது இவையெல்லாம் வீணான வேடதாரிகள். 

இவையெல்லாம் பொய் பித்தலாட்டங்கள். அவனைத்தான் முதலில் நம்ப கூடாது. 

அவன்தான் முதல் வகையான திருடனில் வந்து சேர்கின்றான். 

எந்தனுக்கு அனைத்துமே தெரியும். 

அனைத்தும் உணர்ந்தவன் யான். 

இதைச் செய்தால் அது நடக்கும் என்பவை எல்லாம் பொய்யப்பா, 

நிச்சயம் யான் ஒன்றை சொல்கின்றேன். 

அதை செய்து காண்பிக்க முடியுமா? உன்னால், 

அதாவது என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்கின்றானே முட்டாள் மனிதன். 

ஆனால் இக் கங்கை நதியில் இங்கிருந்து அவ் பக்கத்திலே நடக்கச் சொல். பார்ப்போம். 

யாராவது ஒருவனை.!?!?

 யான் ஞானி என்று சொல்கின்றானே அவந்தனையும் பார்க்கின்றேன். 

இங்குதான் யான் அமர்ந்திருக்கின்றேன். 

பின் யான் சித்தன் என்று சொல்கின்றானே. அவந்தனையும் பார்க்கின்றேன். 

எதனால், மனிதா, பின் யான் நமச்சிவாயன் பக்தன் என்று சொல்கின்றானே.
 வரட்டும். 

யான் அகத்தியன் பிள்ளை என்கின்றானே. அவந்தனும் வரட்டும்.

 பார்க்கின்றேன் யார் உண்மையானவன் என்று. 

மனிதா, மனிதா, சொல்லிச் சொல்லி ஏமாற்றுவது போதும். பின் நீ மட்டும் ஏமாறவில்லை. உன்னிடத்தில் உள்ள அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய். 

பின் ஏமாறுவது கடைசியில், நீதான் மனிதா. 

பின் ஏமாறினாலும் பரவாயில்லை. கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றாயே, மனிதா. 

கர்மத்தை சேர்த்துக் கொள்வதில் , மனிதா, நீ மா மனிதன் என்பேன். 

ஆனாலும் இதை உணரப்பா, உணரப்பா. 

புத்திகள் வளராது. 

உண்மை சொன்னாலும் பொய்யாக்குவான். இவ்வுலகத்தில் கேலியும் கிண்டலுமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

எதனால் என்பதையும் கூட பொய் சொல்லி, பொய் சொல்லி, பின் எதனை என்றும் நிரூபிக்காமலே வருடங்கள் கடந்தாயிற்று. சித்தர்களையும் ஏமாற்றி. 

அதாவது இவ் சித்தன் பேசுகின்றான், அவ் சித்தன் பேசுகின்றான் என்பதையெல்லாம் பின் பித்தலாட்டமப்பா.

அப்பப்பா, இதனால்தான் பின் கலியுகத்தில் சித்தர்கள் எங்கே இருக்கின்றார்கள்??? என்பதை கூட மனிதனுக்கு சந்தேகமாகிவிட்டது.

 ஆனால் யாங்கள் விட்டுவிடுவோமா? என்ன? 

பார்ப்போம். நிச்சயம் இவை என்று எதை என்று யாங்களே கஷ்டத்தை கொடுப்போம் சொல்லிவிட்டோம். 

எதனை என்று உணர்ந்து, உணர்ந்து, மனிதா, மனிதா, உன் பாதையை நீ வகுத்துச் சென்று கொண்டிருந்தாலே, நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.
 இறைவன் உன்னோடு வந்து சேருவான். 

அதை விட்டுவிட்டு, இறைவனை பிடிக்கின்றேன், இறைவனை பிடிக்கின்றேன் என்றுதான் நீ சொல்கின்றாய்.

 ஆனால் இறைவன் ஒரு நாளாவது யான் உன்னை பிடித்துக் கொண்டேன் என்று சொன்னானா????

நீதான் சொல்லிக் கொண்டிருக்கின்றாய். 

யான் பக்தன், பக்தன் என்று கூட. 

ஆனால் இறைவன் செப்பவில்லையே. 

இறைவன் செப்ப வேண்டும். 

அப்படி  நீ நடக்க வேண்டும். 

அப்படி நடந்து கொண்டு விட்டால், 

நிச்சயம் இறைவன் உன் முன்னே தோன்றுவான் இவ் கலியுகத்தில்.

கலியுகத்தில்,


 ஆனாலும் பலப்பல யுகங்களில் கூட இறைவனை பின் துதிக்க, துதிக்க, துதிக்க பல பாடு பட்டுத்தான் இறைவனை பார்க்க வேண்டும். 

ஆனால் மனிதா, இன்றைய நிலைமையில் நீ!!.. நீதி நேர்மை தவறாமல், போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தாலே, இறைவன் உன்னை கைகூப்பி வணங்குவான். 

அதுதானப்பா. 

ஆனால் ஏன் மனிதா, அழிந்து கொண்டிருக்கின்றாய்??, அழிந்து கொண்டிருக்கின்றாய்??. 

இன்னும் ஏராளம் இதைச் செப்பிச் செப்பி வந்தார்கள் சித்தர்கள். 

ஆனாலும் அகத்தியனே ஒரு முடிவெடுத்தான்.

நிச்சயம் இனிமேல் வாக்குகள் எதை எவற்றின் என்று சொன்னால் சரியாக புரியும் என்பதை கூட அகத்தியன் சரியாகவே நிச்சயம் பல வழிகளில் கூட கோள்களைப் பற்றியும் சொல்லப் போகின்றான். 

நிச்சயம் பல பல வகைகளில் கூட பின் உடம்பில் உள்ள பின் தாதுக்களைப் பற்றி சொல்லப் போகின்றான்.

 இவையெல்லாம் உணர்ந்து விட்டால், மனிதா, நிச்சயம் நீ தவறே செய்ய மாட்டாய் சொல்லிவிட்டேன். 

ஆனாலும் இன்னும் காலங்கள், ஆண்டுகள் போகட்டும், போகட்டும். அனைத்து சித்தர்களும் வருவார்கள்.

எதற்காக??, எங்கெல்லாம் ஈசன் தலத்தை அமைத்துக் கொண்டான் என்பதை கூட தெரியாத மனிதர்கள்.
ஆனாலும் இவ்வுலகத்தில், ஆனாலும் எதனை எதனையோ நிமித்தம் காட்டி, நிமித்தம் காட்டி, பொய் சொல்லி, பொய் சொல்லி, அப்பப்பா !!!

 எதை எவற்றின் என்றும் தெரியாமலே, தெரியாமலே வாழ்ந்து வருகின்றார்கள். 

பொய்களப்பா, பொய்களப்பா, நம்பி விடாதீர்கள். 

மீண்டும், மீண்டும் சொல்கின்றேன். 

கோபத்தை மீண்டும், மீண்டும் வரவழைக்காதீர்கள் . 

சித்தன் பேசுகின்றான், 

பித்தன் பேசுகின்றான், 

ஞானி பேசுகின்றான். 

இன்னும் எதனை எதையோ நிமித்தம் காட்டி, பொய் சொல்லி, பொய் சொல்லி, மனிதா, உன் மனசாட்சிக்கு தகுந்துவாறு நடந்துகொள். 


முதலில் யோசி,

 தனி அறையில், நிச்சயம் நீ செல்!!!

 ஒரு தீபத்தை ஏற்று.

 அப்பொழுது புரியும், உண்மையான நீ பக்தனா? 

நீ என்னென்ன தவறு?? செய்திருக்கின்றாய் என்பதை கூட.


 ஆனாலும் அப்பொழுது நீ.
ஆனாலும் இனிமேலும் எதற்கு, எதற்கு என்பதை எல்லாம் இன்னும். 

ஆனாலும் இங்கே ஒரு மாபெரும் ஞானி இருந்தான். 

ஆனாலும் அவந்தனக்கோ ஈசனை பார்க்க வேண்டும்.

 ஈசனை பார்த்திட்டு தான், நிச்சயம், நிச்சயம் எதை எவற்றினின்று கூற.

 இப்பிறப்பிற்கு சரியாகவே பிறப்பெடுப்பதற்கு ஈசனை பார்க்க வேண்டுமென்றே அவனுடைய நித்தம், நித்தம். 


ஆனாலும் அனுதினமும் நமச்சிவாயா, நமச்சிவாயா. 

இக் கங்கையில் நீராடுவது.  

மீண்டும் நமச்சிவாயா!, நமச்சிவாயா!. 

யாராவது உணவு கொடுத்தால், எந்தனுக்கு உணவே வேண்டாம். 

இறைவன் தான் வேண்டும் என்று வாதாடுவது. 

மீண்டும் நமச்சிவாய, நமச்சிவாய. 

இதனால் பல ஆண்டுகள் கடந்துவிட்டது. 

ஆனாலும் கங்கை தாயும் பின், பின் பாசத்தோடு இவந்தன் நமச்சிவாயனே வணங்குகின்றானே. ஏதாவது செய்வோம் என்று ஏதாவது வழியில் அவந்தனுக்கு உணவும் பின் ஏதாவது ஒரு முறையில் பசி ஆற்றுவாள். 

ஆனால் உண்பதில்லை. 

எப்படியோ அவந்தன் பசி தீர்ந்துவிடும். 

இப்படியே!!!


 ஆனாலும் நமச்சிவாயனும் இவந்தன் எதற்காக? நாம் தம் படைத்தோம். ஆனாலும் நமச்சிவாய, நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டிருக்கின்றானே. ...

போய் பின் இவந்தனையே கேட்போம் என்று கூட. பின் இவ்விடத்திற்கு,

 அதாவது மறு ரூபத்தில் வந்தான் ஈசன். 

வந்து, அப்பனே,நீ யாரப்பா,??? 
 பல வருடங்களாக உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

 உன் தவத்தை, அதாவது நமச்சிவாயனை பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும். 

நீ எதற்காக? நமச்சிவாயனை பார்க்க வேண்டும்?? என்று சொல்?. 

ஆனாலும் அவ் ஞானி திகைத்தான்.

 ஆம், ஏன் நம் எதை என்று எந்தனுக்கு, அதாவது நம் தனக்கு பின் எவ்வகையான சந்தர்ப்பங்கள்? 

ஏன் நமச்சிவாயனை காக்க, காத்தருளும் இவ்வுலகத்தை!!!

 பின் அவந்தனை நிச்சயம் ஏன் பார்க்க வேண்டும் என்று சிந்தித்தான். 

ஆனாலும் மீண்டும், பின் நமச்சிவாயனே!!!!

, பின் ஞானியே, ஏன் நமச்சிவாயனை நீ பார்க்க வேண்டும்???? என்று நீ சொல்ல வேண்டும்!!! 

ஆனாலும் பின் அவ் ஞானி ஒரே வார்த்தையில் தான் சொன்னான். 

மீண்டும் நமச்சிவாயனை பார்க்க வேண்டும். 

ஆனாலும் மீண்டும் சொன்னான், ஏன் பார்க்க வேண்டும்???? என்று கூட நமச்சிவாயனே. 

ஆனாலும் இதனைத்தான், இதனையும் உணர்ந்து, உணர்ந்து, ஆனாலும் சொல்!!, சொல்!!! என்றெல்லாம். 

ஆனாலும் அவ் ஞானி யவனுக்கு கோபம் வந்துவிட்டது. 

பின் என் ஈசன், அதாவது என் மனதில் குடி கொண்டிருக்கிற ஈசனை யான் பார்க்க வேண்டும்.

 நீ யார்? 


ஆனாலும் ஈசன் பொறுத்திருந்தான். 

ஆனாலும் இதை என்று அறியாத எவற்றின் என்றும் தெரியாத. ஆனாலும் இவற்றினின்றும் இவந்னக்கு இனிமேலும் புரிய வைக்க முடியாது என்பதற்கு இணங்க, நமச்சிவாயனே. பின் உருவமெடுத்து, யான் தான் நமச்சிவாயன் என்று சொல்லிவிட்டான். 

ஆனால் அவ் ஞானியோ, 

பின் ஏன் பொய் சொல்கின்றீர்கள்? நீங்கள்தான் நமச்சிவாயனா? 

பின் யான் எதை என்று கூற?

 யான் கோபப்பட்டேனே. அதற்காகத்தான் நீங்கள் நமச்சிவாயன் என்று கூறிவிட்டீர்களா? என்று 

ஆனாலும் நம்ப முடியவில்லையே. 

ஆனாலும் இதனை என்று கூற.

 அதனால்தான் இக் கலியுகத்திலும் உண்மையான தெய்வம் வந்து நின்றாலும் நம்பப் போவதில்லை மனிதன். 

இதைத்தான்  ஆனாலும் அவ் ஞானியோ, பின் யான் நமச்சிவாயன் எதை என்று அறிய, அறிய, 

ஆனாலும் இதனைத் தன் உணர்ந்து, உணர்ந்து, 

ஆனாலும் பின் ஓர் விஸ்வரூபத்தை காட்டினான் ஈசனே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  

அப்பொழுதுதான் அவந்தனுக்கு பின் எதை என்று அறிந்து, 

ஈசனே !!!!!!!!!!!!!!!!!!


உன்னை காண வேண்டும் என்று கண் கூடாகவே எதை என்று நீ நடத்தும் லீலைகள் பல பல. 

ஆனால் கண்டுவிட்டேன், என் உயிரை இப்பொழுதே விட்டு விடுகின்றேன் என்று. 

ஆனாலும் பின் ஞானியே, இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நிச்சயம் மீது எதை என்று அறியாது. ஏன் இப்பொழுது உந்தனுக்கு கூட இங்கு காட்சிகள் கொடுத்தேன் என்றால், நிச்சயம் நீ எதைப் பற்றியும் நினைக்கவில்லை. 

எவ் ஆசைகளும் உன் மனதில் இல்லை. 

பின் திருமணம் வேண்டும் என்றும், 

பின் வேலைகள் வேண்டும் என்றும், 

இல்லம் வேண்டும் என்றும்,

பிள்ளைகள் வேண்டும் என்றும் நீ நினைக்கவில்லை.

ஆனால் பின் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாயே. அதற்காகத்தான் இங்கு வந்தேன் என்று !!!

புரிகின்றதா? மனிதா ??? 

இறைவனை அடைய எவ் வகையெல்லாம் பாடுபட வேண்டும்??? என்பதை கூட.

 ஆனாலும் எதற்கு, எதற்கு என்பதை எல்லாம் நிமித்தம் காட்டி. ஆனாலும் உண்டா?  

உண்டு என்பது அனைத்தும் உண்டு விட்டால் எதற்காக என்பதை கூட மீண்டும் எதனை என்று அறியாமலே மீண்டும். 

பின் அதாவது பின் ஈசனும் அவ் ஞானியிடம்   கேட்டான், எதை என்று கூற  என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் மனிதா, அதாவது பின் எவை என்று கூற. பின் எதை என்று தெரியாமலே வந்துவிட்டாய் நீ. 

பின் மனிதனாக இருந்து ஞானியாகவும் ஆகிவிட்டாய். அதாவது உனக்கு அச் சந்தர்ப்பமும் யான் தந்துவிட்டேன். 

பின் என்னதான் வேண்டும்???, ஞானியே, கேள் என்று பின் பலத்த சத்தத்துடன் 

யான் இங்கேயே தங்க வேண்டும். இங்கேயே தங்கி எதை எவற்றின் என்று கூற. பல பிறப்புகள் எடுக்க வேண்டும். மனிதனை காக்க வேண்டும். 

மனிதனுக்கு இறையன்பை ஊட்ட வேண்டும். 

ஏனென்றால் கலியுகத்தில் என்னென்ன நடக்கப்போவது? என்பதை எல்லாம்!!!


 ஈசா, உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். 

ஆனாலும் பின் உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் இவைதன் வந்துவிட்டது. 

பின் யோசனைக்கு இதனால் கலியுகத்தில் என்னென்ன நடக்கப்போகின்றது??? எல்லாம் யான் அறிந்துவிட்டேன். 



யான் காக்க வேண்டும் என்பதை கூட மக்களை நிச்சயமாய்,

 அதாவது மனிதன் செயல்களை  எல்லாம் யான் அடியோடு அழிக்க வேண்டும். 

அங்கேயே அவந்தனை பின் அடிக்க வேண்டும் என்பதை எல்லாம் எனது நிமித்தம் காட்டி, நிச்சயம் என்னை பிறக்க வைக்க வேண்டும். 

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்,!!!!


 ஏனென்றால் வரும் வரும் கலியுகத்தில் பக்தி என்பது தெரியாமலே போய்விடும். 

பக்தியை நிலைநாட்ட வேண்டும் என்று!!


 உடனே ஈசன்!!!!! நிச்சயம் மறு பிறப்பு எடு!!!! என்று கூறிவிட்டான். 

அவ்  மறு பிறப்பானவன் இங்கே எடுத்து, நிச்சயம் பல மனிதர்களை அடித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

 சொல்லிவிட்டேன்.
மறைமுகமாகவே!!!
 அது போகப்போக உங்களுக்கே தெரியும். 

இன்னும் பல பல ஞானியர்கள் இவ்வுலகத்தில் பிறப்பு எடுத்துள்ளார்கள்.

 அவர்களால் நிச்சயம் நடக்கப் போவது என்பது உண்மை. 

மனிதா, அப்படித்தான் வாழ வேண்டுமே தவிர,!!...

 உந்தனுக்கு மட்டும் நீ இறைவனிடம் கேட்டால், ஒன்றும் செய்ய மாட்டான் செப்பி விட்டேன்  மனிதா, 

ஒவ்வொரு வாக்கிலும்  செப்பிக் கொண்டே இருக்கின்றேன். திருந்துங்கள், திருந்துங்கள் என்று கூட. 

திருந்தாமல் போய்விட்டீர்கள், மனிதா, 

திருந்தாமல்.!?!? 

பின் ஒன்றை சொல்கின்றேன், 

தன் மகள், தன் மகன் இன்னும் உயர்வாக பெற வேண்டும், 

திருமணம் ஆகவேண்டும், 

சொத்துக்கள் குவிய வேண்டும் என்று ஆசைகள் இருந்தால், 

மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, பிறப்பெடுத்து, கஷீடங்களில் தான் ஆழ்ந்து கொண்டிருக்க வேண்டும். 

============================
# இறைவா நீயே அனைத்தும் - 
============================

============================
# கர்மம் அடியோடு அங்கே நின்றுவிடும்
============================


ஆனால் ஒன்றையே சொல்லுங்கள், அனைத்தும் ஈசனே. 

அனைத்தும் இறைவனே என்று சொல்லிவிட்டால்.  

நிச்சயம் அங்கு பிறப்புக்கள், அதாவது கர்மம் அடியோடு அங்கே நின்றுவிடும்.


 மனிதா, 

மனிதா, ஏன்?, ஏன் பல கிரகங்களுக்கும் கூட பல ஆட்சிகள் உண்டு. வரும் வாக்கியங்களில் கூட அகத்தியன் நிச்சயமாக எடுத்துரைப்பான். 

கவலைகள் எதை என்று எதிர்பாராமலே இன்னும் பின் உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது. 

அழியப்போகும் காலம் இன்னும் தாராளமாக வந்து கொண்டிருக்கின்றது. 

பின் இன்னும் தண்ணீரால் இவ்வுலகம் மூழ்கும். 

ஆனால் சித்தர்கள், பின் மனிதன், நிச்சயம் ஏதோ வழியில் திருந்தட்டும், திருந்தட்டும் என்று எண்ணி, எண்ணி அவையெல்லாம் தடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

இவ்வுலகத்தைப் பற்றி எங்களுக்கு மட்டுமே தெரியும். 

யான் பெருமையாக சொல்வேன். 

மனிதன் நிச்சயம் சித்தனும் ஆக முடியாது, பித்தனும் ஆக முடியாது, ஞானியும் ஆக முடியாது. 

எதை என்று கூற, ஒரு பக்தனாகவும் கூட ஆக முடியாது. 

மனிதன் இனிமேல் அதை சொன்னால், அங்கேயே யான் காரி துப்பி, அங்கேயே அடிப்பேன். 

எதை என்று அறியாத அளவிற்கும் கூட, திருந்துங்கள், திருந்துங்கள், திருந்துங்கள். 

எதை என்று அறியாத அளவிற்கும் கூட, இன்னும் எதை, எதை, எப்படி விளக்கம் வேண்டும் என்பதை கூட சித்தர்கள்  வந்து செப்புவார்கள். 

நலம், நலம், எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு, உண்டு. எதை என்று தெரியாமல் இருக்கும். 
பின் அனைவருக்கும் உண்டு, உண்டு, ஆசிகள்  !!!

ஆசிகள்  !!!

ஆசிகள் !!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: