​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 16 December 2025

சித்தன் அருள் - 2039- அன்புடன் அகத்தியர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7



மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
====================================

ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே. 

(மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7) 

தேரையர் சித்தர் :- இவைத்தன் உணர்ந்து, மீனாட்சி தாயே, தெரியாமல் நின்ற மனிதர்களுக்கு சொல்கின்றேனே ரகசியத்தை. அறிந்தேனே உன்னிடத்திலே அகத்தியன் வைத்து யான் சொன்னேனே. அதை இப்பொழுது யான் கற்பிக்கின்றேனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (ஐயா, புரியுதுங்களா?  ஏன்னா, நான் எல்லாம் இது எங்க கற்றுக்கொண்டேன் என்றால், தேரையர் சொல்றாரு, மீனாட்சி அம்மா இடத்துல தான் நான் கற்றுக்கொண்டேன். அந்த அம்மா அருளாலும், என்னுடைய குருநாதர் அகத்தியர் அருளாலும், பல விஷயங்களை நான் இங்க மதுரை மீனாட்சி, இங்க தான் ஆசிரமம் இருந்தது. அங்கு தான் நான் கற்றுக்கொண்டேன். அந்த அம்மாவோட ஆசிர்வாதத்தாலும், என்னுடைய குருநாதரோட ஆசிர்வாதத்தாலும், உங்களுக்கு சில விஷயங்கள் நான் சொல்ல போறேன். அது தெரிஞ்சுக்கோங்க ன்னு, தேரையர் சொல்றாரு  ஐயா) 

தேரையர் சித்தர் :- இதைத்தன் உணர, எண்களைப் பற்றி சொல்லப் போகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- (  எங்களைப் பற்றி அதாவது சித்தர்கள் எங்களைப் பற்றி இல்ல, எண்கள் நம்பர் பற்றி சொல்லப் போகின்றேன்) 

தேரையர் சித்தர் :-  அப்பப்பா, தெரியாது. நேரம் கடந்து கொண்டே, நேரம் கடந்து கொண்டே, ஆனால் எதனால் என்பதே தெரியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( டைம், ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு போதும் இல்ல? எதுக்காக போகுது? யாராவது தெரியுமா? தெரியல. இது தெரியாம இருக்கீங்களேப்பா. அது எப்படிப்பா? எதுக்குப்பா? நேரம் இப்ப நான் அதை சொல்றேன்றார். ) 

=================================
# உங்களுக்கு அனைத்தும் கிட்டும் பொன்னான நேரம் - அதிகாலை 3 மணி 
=================================

==============================================
முந்தைய வாக்குகளில் அதிகாலை 3:00 மணி பற்றிய சில ரகசியங்களை இப்போது காண்போம். 

(சித்தன் அருள்  1713 அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு சுருக்கம் :- பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3:00 மணி. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் சந்திரனிலிருந்து சூரியனை நோக்கி கிளம்பிச் செல்லும் ஒளி ஆனது செல்லும் பொழுது, மீதி உள்ள கிரகங்களின் தாக்கத்தை வலுவிழக்க செய்து விடும். அந்த நேரத்தில் கிரகங்களின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை அதனால் தான் அந்த நேரத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வேண்டிக் கொள்வது, தியானம் செய்வது, யோகாசனம் உடற்பயிற்சிகள் செய்வது, பிராணாயாமம் செய்வது, பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது, அதாவது மாணவர்கள் கல்வி படிக்கும் பொழுது மனப்பாடம் எளிதில் ஆகிவிடும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இப்படியே செய்து கொண்டு வரும் பொழுது எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட முடியும்.)

(சித்தன் அருள் - 1618 - அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு :- 

“யார் ஒருவன் அப்பனே, அதாவது பின் மூன்று மணி அளவில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஓதுகின்றானோ, அவன் வெற்றியாளாக சத்தியமாக வருவானப்பா!!! இதை அனைவருக்கும் தெரிவித்து விடு அப்பனே” ) 

(வாருங்கள் அடியவர்களே , மீண்டும் கூட்டுப் பிரார்த்தனை வாக்கின் உள் செல்வோம்)
==============================================

தேரையர் சித்தர் :-  இவைத்தன் எதற்காக? மூன்றிலிருந்து ஆறு, இவைத்தன் பின், இதில் தன் பின், நிச்சயம் பின், அறிந்து, தெரிந்து, புரிந்து செய்தால், நன்மையே  கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( காலையில மூணு டு ஆறு, எதற்காக? எல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கின்றார். ) 

தேரையர் சித்தர் :-  இவைத்தன் பாதையை பின், மூன்று இதைத்தன் அறிந்தும், இவைத்தன் உணர்ந்து, இதன் தத்துவம் எவை புரிந்து, பின் பிள்ளையோனின் பின், இது சுழி. 

சுவடி ஓதும் மைந்தன்  :- மூன்று என்ன சொல்றாரு? பிள்ளையோனின் சுழி, பிள்ளையார் சுழி. அது மூன்று. யாருக்காவது தெரியுமா?

அடியவர் :- தெரியாது.

சுவடி ஓதும் மைந்தன்  :- ( மூன்று என்றால் என்ன? அது பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழி, இப்படி போட்டா, இப்படி பார்த்தா, பிள்ளையார் சுழி. )

தேரையர் சித்தர் :-  இதைத்தன் பிள்ளையோனே, ஞானக்காரகன், (3 மணி) அங்கு எழுந்து நின்று ஓதினாலே, அனைத்தும் கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (பிள்ளையார் என்பது யாரு? ஞானக்காரன். ஞானக்காரகன், அந்த மூன்று மணிக்கு கரெக்டா எழுந்து, அது வந்து பிள்ளையாரோட நேரம். )

தேரையர் சித்தர் :-  வெற்றியின் நேரம், அறிந்தும், ஞானத்தின் நேரம், சித்தியின் நேரம், அனைத்தும் பிள்ளையோனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஐயா, மூணு புரிஞ்சுக்கோங்க. மூணு மணி காலைல, மூணு மணி, அது பிள்ளையார் சுழி. மூணுன்றது வந்து நம்பர் கிடையாது. அது வந்து எல்லாரும் இப்படி மூணு போடுவாங்க இல்ல? அது மூணு என்பது என்ன? பிள்ளையார் சுழி) 

===================================
# அதிகாலை 3 மணிக்கு எழுந்தால் -  தர்மதேவன், சனி தேவன் உங்களை விட்டு நீங்கி விடுவார்.
==================================

தேரையர் சித்தர் :-  இதைத்தன் பின், இவை என்று அறிய, இதில் எழுந்தால், சனியை கடத்தி விடலாம்.  இதன் நோக்கு போட்டால், அறிந்தும், இதைத்தன் இட்டால், இட்டிட்டு எடுத்தால், இவைத்தன் பின், சனியவனை நீங்கி விடுவான். இதைத்தன் கோடு போட்டாலே, பின் எட்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (அந்த மூணு இணைச்சோம்னா, இப்படி ஒரு கோடு போட்டா என்ன ஆகுது? எட்டாயிடுது. அப்ப, நீங்க மூணு மணிக்கு எழுந்து, எந்தெந்த மந்திரங்கள் எது சொல்றீங்களோ, அந்த எட்டு என்பது நீங்கள்  வெல்லலாம். எட்டாம் நம்பரை வெல்லலாம். எட்டு என்பது யாரு? சனீஸ்வரன்.  சனீஸ்வரரை நீங்கள்  வெல்லலாம்.) 

தேரையர் சித்தர் :- இல்லையேல் , வருத்தமே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( நீங்க அந்த மூணு மணிக்கு எழுந்து, சரியா?  இறை பாடல்கள் , மந்திரங்கள் ஜெபிக்கலைன்னா, கஷ்டங்கள் தான்.  வாழ்க்கையில ஒன்னும் பண்ண முடியாதுப்பா. ஓகேங்களா? புரியுதா? அதனால இந்த மூணு மணிக்கு வந்து எழுந்தீங்கன்னா என்ன ஆகுமா? வெற்றி, நிச்சயம், வெற்றி, நிச்சயம். அப்ப, பிள்ளையார், அது தான் பிள்ளையான் இருக்கும் இடத்தில் யாரும் அட்டாச் பண்ண மாட்டாரு. சனி பகவான் ஒன்னும் செய்ய முடியாது. ) 

=======================
# அதிகாலை 4 மணி ரகசியங்கள் 
=======================

தேரையர் சித்தர் :- இவைத்தன் நான்கிலே அடக்கமடா. அறிந்தும் ராகு அவனை, இவைத்தன் இங்கு வெற்றி இட்டிட, இவைத்தன் எழுந்திட, ராகுவால் தொல்லை இல்லையடா. அறிந்தும், இவைத்தன் புத்தி கூர்மை இல்லாமல், தெரிந்து தெளிவு பெறாவிடில், ராகுவின் தாக்கம் அதிகமடா. அறிந்தும், செத்தவன் தானடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (யாருக்காவது புரியுதுங்களா? நாலு மணிக்கு முழிச்சு இருக்கணும். நீ நாலு மணிக்கு நீ முழிச்சு இருந்தியன்னா, ராகு பகவானினால ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கும். நீங்கும், ராகு பகவானோட இருக்கின்ற தோஷங்கள் நீங்கும். அப்படி நீங்க நாலு மணிக்கு எழுந்தா, ஏதாவது பண்ணலைன்னா, ராகு உங்களை பிடிக்கும் பொழுது என்ன ஆகுமாம்? )

தேரையர் சித்தர் :- இவைத்தன் பிடிக்கின்ற பொழுது, நீ எழுந்தே ஆகும் சூழ்நிலை உருவாகுமடா. முதலிலேயே தெரிந்து கொள்ளடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- ஆனா நாலு மணிக்கு சொன்னா, எழுந்துக்க மாட்டீங்க. அவர் புடிச்சாருன்னா தெரியும் உங்களுக்கு. வந்து எப்பா, அப்ப ராகு  புடிச்சு, அவர் என்ன பண்ணுவாராம்? நீ நாலு மணிக்கு எழுந்து தான் ஆகணும் னு சொல்லிட்டு, கஷ்டங்கள் கொடுக்கும் போது தான் தெரியும். அப்ப என்ன பண்ணுவாரு? கஷ்டத்தை அடிச்சு, நொறுக்கி , குறுக்கு பண்ணி, பின்ன என்ன பண்ணுவாராம்? நாலு மணிக்கு எழுந்தே ஆகணும். வேற வழியே இல்ல. எந்திரிக்கிற மாதிரி சூழ்நிலை, சூழ்நிலை உருவாக்குவார். ராகு. )

=======================
# அதிகாலை 4 மணி - நித்திரை தவிர்க்க  அதிர்ஷ்டம் உண்டாகும் 
=======================

தேரையர் சித்தர் :- இவைத்தன் இதிலே நிச்சயம், நித்திரை போக்க, அறிந்தும், பின் அதிர்ஷ்டம் தானடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (நாலு மணிக்கு சரியா, ஷார்ப்பாக எழுந்து, தன்னுடைய வேலையை கண்ணு முழிச்சு பார்த்தீங்கன்னா என்ன ஆகுமா? அதிர்ஷ்டம். அதிர்ஷ்டம் உண்டாகும் உங்களுக்கு.)

=======================
# அதிகாலை 3 மணி  நித்திரை தவிர்க்க - குரு அருள் கிட்டும். அனைத்தும்  கிட்டும்.
=======================

தேரையர் சித்தர் :- இவைதன் பின்னே வந்து, முன்னே செல்கின்றேனே. அறிந்தும், பின் மூன்று என்பது குருவானவனே. அதில் எழுந்தால், குருவின் அருள் பரிபூரணம், அனைத்தும் கிட்டுமடா. 

=======================
# அதிகாலை 3 மணி  நித்திரை தவிர்க்க - இறைவன் உங்களை தேடி வருவார்.
=======================

தேரையர் சித்தர் :-  (அதிகாலை மூன்று மணி) அதில் எழுந்துவிட்டால், இறைவன் தேடி வருவானடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (திருப்பியும் பின்னாடி வந்துட்டாரு. எத்தனை மணிக்கு? மூணு மணி, மூணு மணிக்கு எழுந்தா, குரு அருள் கிடைக்கும். இன்னொன்னு பிள்ளையார் அருள் கிடைச்சிருச்சும். அடுத்து யார் அருள் கிடைக்கும்? குரு.  குரு அருள் கிடைச்சுச்சுன்னா, மூணு மணிக்கு எழுந்து நின்னீங்கன்னா, நீங்க  இறைவனை தேடி போக அவசியம் இல்ல. இறைவன் உங்களை தேடி வருவார். இறைவன் உங்களை தேடி வந்துருவாங்க.) 

தேரையர் சித்தர் :- இதைத்தன் புத்திகெட்ட மனிதன், பின் இவைத்தன், பின் எண்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றான். ஆனால் இதில் தான் அடக்கம், அனைத்தும் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (புத்திகெட்ட மனிதன்டா. ஒன்னு, ரெண்டு, எதனாலும் எண்ணிக் கொண்டிருக்கிறான். டைம் எல்லாம் வேஸ்ட் பண்ணிக்கிறான். ஆனா இதுலதான்டா வாழ்க்கையே இருக்குதுன்றார்.) 

======================
# 43 வயது ரகசியங்கள் 
======================

தேரையர் சித்தர் :- இவைத்தன் சரியாக அறிந்தும், புரிந்தும், கடத்திட நாற்பான் மூன்றை (43)  வென்றிடுவானடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( 43 வயச சொல்லிட்டாரு. இதுல யாரு மூணு மணிக்கும், நாலு மணிக்கும், நாலு மணிக்கு எழுந்திருக்கிறாங்களோ, அவங்க என்ன பண்ணுவாங்களாம்? 43 வயசுல இருக்கிற நோயை வென்றுருவாங்க, அப்ப 40 வயசுல என்ன ஆகும்? எல்லாரும் என்ன சொல்லுவாங்க? ஐயா, ஐயோ, வழியிடப்பா, எங்க வயித்து வலி , முட்டு வலி , இது வலி சொல்லுவாங்க இல்ல? அதை நீங்க  வென்றிடலாம். ஐயா, புரியுதுங்களா? ஐயா)

தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும், இவைத்தன் இப்படி செய்யாவிடில், அவை வெல்ல முடியாதடா முட்டாளே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (நீங்க  இங்க எழுந்திருக்கலைன்னா, வயசு எங்க 43ல அவுட். எந்திரிக்க முடியாதுன்றார். )

=======================
# அதிகாலை 5 மணி ரகசியங்கள் 
=======================

தேரையர் சித்தர் :- இவைத்தன் ஐந்து, இதைத்தன் பின்னோக்கி அறிந்து, இதைத்தன் வந்தாலே, நின்று எழுந்திருடா. அறிந்தும், எழுந்தாவிடில், நிச்சயம் ஐம்பதிலே சாவடா, பின் கொல்லுமடா, பின் ஊசியின் போலே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  என்ன சொல்றாரு? அடுத்த ஐந்து மணிக்கு நீங்க எழுந்தால் என்ன பண்ணுவாராம்? 50 வயசுக்கு மேல நோய் வந்து சாவு கிடையாது, அனால் செத்த மாதிரிதான். ஒரு கணக்கிற்கு  சாக மதங்க , ஊசியில எப்படி கொத்துனா, வலி எடுக்கும்? 

அடியவர் :- மாத்திரை மருந்து தான், 

சுவடி ஓதும் மைந்தன்  :-   மாத்திரை மருந்து தான். ஐயா, புரியுதுங்களா எல்லோருக்கும்? 

=======================
# அதிகாலை 5 மணி ரகசியங்கள் - புதன் பல யோகங்களை உங்களுக்கு  அதிகரிப்பார். ஆரோக்கியத்தை தந்திடுவார்.
=======================

தேரையர் சித்தர் :- இவைத்தன் உணர்ந்து, அங்கே மந்திரம் ஜெபித்தாலே, அறிந்தும், புதனவன் பின் ஏற்றிடுவானடா. ஏற்றிடுவானடா, யோகங்கள் அறிந்தும், ஆரோக்கியத்தை தந்துடுவானடா புதனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (அஞ்சு மணிக்கு எழுந்து,புதன்  அவர் என்ன பண்ணாருன்னா, அறிவாற்றல் வளரும். புதன் வந்து, சிந்தனை நல்லா வளரும். அவனே ஆரோக்கியக்காரகன். அப்ப, நீங்க  ஐந்து மணிக்கு எந்திரிக்கலனா நோய்தான்.) 

தேரையர் சித்தர் :- இவைதன் சுற்றி வர, சுற்றி வர, இவைதன் எப்பொழுது அறிந்திருக்கின்றானோ, மனிதன் மூடனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-   ( மனுஷன் பிறக்கின்றான்  , இறக்கிறான், வாழ எல்லாம் செய்கின்றான். ஆனால் இதெல்லாம் எப்ப நீங்க தெரிஞ்சுப்பீங்கன்றார்? …தெரியாது ) 


தேரையர் சித்தர் :- இவ் அனுபவம் அறிந்தும், இறைவனை நாடினாலே உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இந்த அனுபவம், இறைவனை தேடி தேடி வந்தாதான், நீங்க தெரிஞ்சு இருப்பீங்க. எல்லாரும் இறைவனை தேடாவிட்டால் என்ன ஆகும்? என்ன ஆகும்? இதை , இவ் ரகசியங்களை  தெரிஞ்சுக்க முடியாது. அதனால, நீங்க இறைவனுக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக தேடி இருக்கிறதுனால, இதை நான் உன் கையில சொல்றேன்றார். )

=======================================
# காலை 7 மணிக்குள் அனைத்து வேலைகளும் செய்ய - சுக்கிரனின் அருள் கிட்டும் 
=======================================

தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், அப்படியே ஆறிந்தன், அறிந்தும் உண்மைதன். ஏழிலே அனைத்து வேலைகளும் செய்ய, நன்று. பின் சுங்கனின் அருள் கிட்டி, சுகபோகமடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (அப்ப, ஏழு மணிக்குள்ள எழுந்து, எல்லா வேலை, காலை கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு, இறைவனை வணங்குவது , எல்லாமே முடிச்சிடனும். அப்படி முடிச்சிட்டீங்கன்னா என்ன ஆகும்? சுக்கிரன் அருள் கிடைக்கும். சுக்கிரனோட ஆசி ஏற்பட்டு என்ன ஆகும்? சுகபோக வாழ்க்கை, கல்வி நல்லா கிடைக்கும், உடம்பு நல்லா ஆகும். அப்புறம் வேலை நல்லா கிடைக்கும், உடல் ஆரோக்கியம் இருக்கும்.) 

=======================================
# காலை 7 மணிக்கு மேல்  அனைத்து வேலைகளும் செய்ய - கேது பிடித்துக் கொள்வார் - எச்சரிக்கை. 
=======================================

தேரையர் சித்தர் :- இவைதன் ஏழின் மேலே சென்றாளா, புடித்தானடா கேது. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (ஏழு மணிக்குள்ள எல்லாம் முடிக்கணும். காலை கடன்கள், இறைவனை வணங்குறது, எல்லாம் படிக்கிறது, எல்லாம் முடிக்கணும். ஏழு மணிக்கு மேலே இழந்து நீங்கள்  வேலை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், வாழ்க்கை போச்சடா. யாரு பிடிப்பாரு? கேது பிடிப்பார்.) 

தேரையர் சித்தர் :-  இவைதன் இன்றே எட்டே அறிந்தும் கூட முடிந்தது. வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (காலை எட்டு மணிக்கு மேல எல்லாம் வேலை முடிக்கவில்லை என்றால் , அதாவது எட்டு மணிக்கு மேல எழுவது , இறைவனை துதிப்பது , அனைத்து காலை கடன்கள், குளிப்பது எல்லாம் முடிப்பது, என்று  எல்லாம் எட்டு மணிக்கு மேல செய்ய ஆரம்பித்தால் , அடுத்து யார் வருவார்? தர்ம தேவன் , முப்பெரும் தேவன் , சனீஸ்வர தேவன். அவர் வந்துவிட்டால் முடிஞ்சுச்சுடா வாழ்க்கைன்றார். ஐயா, கேட்டுக்கோங்க. இதெல்லாம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. எனக்கு கூட கிடைக்காத வாய்ப்புதான். ஏன்னா, இங்க வந்ததுனாலதான் இது வந்து தெரியுது. எனக்கு கூட புதுசான விஷயங்கள் எல்லாம், இதெல்லாம். அதனால, இறைவன்  ஏதோ ஒரு விதத்துல நீங்க தேடி இருக்கீங்க. எங்கோ முன்னோர்கள் வந்து புண்ணியம் பெற்றிருக்கீங்க. எங்கோ தேடி அலைஞ்சிருக்கீங்க. கோயில் கோயிலா, அதனாலதான் இங்க வரார். நீங்களும் வந்து கேட்க முடியுது. எனக்கும் தெரிஞ்சுக்க முடியுது. வேற ஒன்னும் இல்ல. இங்க உள்ள எல்லார் மாதிரி நானும்  உட்கார்ந்து இருக்கேன். அவ்வளவுதான். உங்க மாதிரிதான், ஏதோ ஒன்னு பேப்பர் மாதிரி படிச்சிக்கிறேன். அவ்வளவுதான், வேற ஒன்னும் இல்ல. அப்ப, எட்டின் மேல என்ன பண்ணனும்? எல்லா வேலையும் எத்தனை மணிக்கு முடிக்கணும்? )

தேரையர் சித்தர் :-  இவைதன் முடித்திட, அழகான பேரருள் அறிஞ்சும், இளமையாக வருவானடா. பின் முருகனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (இதெல்லாம் கரெக்டா நீங்க  செய்தீர்கள் என்றால், உங்கள்  வீட்டுக்கு இளமையா வருவார்? யாரு? முருகப்பெருமான். முருகப்பெருமான், அழகா உங்க வீட்டுக்கு வருவாங்க. நீங்க தேடவே வேண்டாம். அவர் வந்து இதெல்லாம், ஓ பரவாயில்லைடா. மூணு மணிக்கு எழுந்தா, எல்லாம் செய்கின்றான். நாலு மணிக்கு எழுந்தா, எல்லாம் செய்கின்றான். அஞ்சு மணிக்கு பண்ணா, எல்லாம் செய்கின்றான். எல்லாம் ஏழு மணியோட முடிச்சிட்டான்டா. நல்லதுடா, அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாராம்? ) 

தேரையர் சித்தர் :-  இவைதன் வந்தாலும், விட்டு விடுவானா என்ன கேது சனி? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (அப்ப இப்ப நீங்க  எட்டு மணி, ஏழு மணிக்கு மேல வந்து எழுந்து, ஏதாவது பண்ணான்னா, முருகன் வந்தா கூட , சனி தேவனும் கேது தேவனும் என்ன செய்வாங்களாம் ? முருகப்பெருமானே , இவ் சோம்பேறி  இவனை பார்க்க வந்தாயா ? இவன் தரித்திரன்.  வேலை, கடமை செய்யல.  இவனுக்கு போய் ஆசீர்வாதம் கொடுக்கின்றீர்களா? வேண்டாம்.  நீங்கள் சென்றுவிடுங்கள் என்று  சனி தேவனும் கேது தேவனும்  சொல்லிடுவாராம். அய்யா புரியுதுங்களா? எல்லாருக்கும் அதனால பார்த்துக்கோங்க. )

=================================
# காலை 9 மணிக்கு மேல் எழ ……..
=================================

தேரையர் சித்தர் :-  இவைத்தன் உணர, பைத்தியமடா, அறிந்தும், இதைத்தன் ஞானம் அறிந்தும், இவைதன் சொல்லி விட்டேனடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப நான் ஒன்பது வரையும் சொல்லிட்டேன்

=====================================
# சூரிய தேவன் - காலை 10 மணிக்கு மேல் அவரவர் எழும் நேரத்தை பொறுத்து அருள் புரிய  வருவார் 
=====================================

தேரையர் சித்தர் :-   இதைத்தன் அறிய, பின் வருவானடா. பின் அறிந்தும், சூரியனே, 

சுவடி ஓதும் மைந்தன்  :- அடுத்த என்ன பண்ணுவாரு? பத்து சூரியன். அடுத்து வருவானடா சூரியன், 

தேரையர் சித்தர் :-   இவை தன் எடுக்க, பின் நன்று தெரிந்து கொடுப்பானடா அறிவு. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப சூரியன் வந்து என்ன பண்ணுவாரு? அறிவு கொடுப்பார். வாழ்க்கையில எப்படி வெற்றி பெறலாம்? வாழ்க்கையில எங்க போலாம்? ஒரு தெளிவான அறிவு கிடைக்கும். 

தேரையர் சித்தர் :-  இப்படி இல்லை என்றால், அறிந்தும் கீழானவனே, அறிவு யோசிப்பானடா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( சீக்கிரம் காலையில எழாமல் , அப்படி இல்லைன்னா, அறிவு என்ன ஆகும்? கீழ போயிட்டு, கீழானவற்றை யோசிப்பான். மேலான விஷயங்கள் என்னத்துக்கு? விஷயங்கள் தெரியாம போயிடும். கீழானதுகள் மட்டுமே தெரியும் அவனுக்கு. )

===================================
# தினமும் சூரியன் உச்சம் அடையும் காலை  நேர ரகசியங்கள் - பைத்தியங்கள் திருந்தும்  (நீங்களும்)
===================================

தேரையர் சித்தர் :-   இவைத்தன் இங்கே குறிக்கின்றேனடா. சூரியனின் உச்சம் அறிந்தும், இதைத்தன் பயன்படுத்தினாலே, நன்று. அறிந்தும், பைத்தியங்கள் திருந்துமடா. இவைத்தன் உணர, சில யோகங்கள் கிட்டுமடா. 

=================================
# காலை 10 - 12 மதியம்  நேரத்தில் வரும் மணி நிமிடங்களை கூடும் ரகசியம் 
=================================

தேரையர் சித்தர் :-  அறிந்தும், பின் பத்தின் மேலே அறிந்தும், இவை என்றும் பண்ணிரண்டும் பின் கீழே இதையே, பின் நடுவிலே எதை என்று எண்களை கூட்ட, நன்றென்று இதை என்று பெற்றுக்கொள்ள, எவை என்று தீருமடா. 

===================================
# தினமும் சூரியன் உச்சம் அடையும் நேர ரகசியங்கள் ( காலை 11:11 )
===================================

தேரையர் சித்தர் :-  அறிந்தும், பின் இதை என்று அறிய, பின் வேப்பிலை தன்னில் கூட சிறு மஞ்சள் இட்டு, அறிந்தும், சில விசேஷ மூலிகை இட்டு, அறிந்தும், பின் அனைத்தும் பூசி வர உடம்பிற்கு இதைத்தன் உருவாக்குமடா. பல வினைகளை, பின் அழிக்குமடா. நோய்களையும் அழித்து, இதை என் பின் உச்சத்தில், பின் இருக்கும். பின் அறிந்தும், இதை என்று சரியாகவே 11:11 ( 11:11 AM ) எதை என்று அறிய. சூரியன், பின் முன்பே, பின் நிற்க, பின் தகுமடா. பின் போற்ற, நோய்கள் தீருமடா. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்   :-  ( காலை 10 - 12, அந்த ரெண்டு மணி நேரத்துக்கு நடுவுல இருக்கு. பாருங்க, சூரியனுக்கு முன்னாடி 11 மணி. அந்த 11 மணி நேரத்துக்கு வேப்பிலை மஞ்சள், அது காலை 11:11 AM  டைம். அங்கிருந்து உச்ச பகுதி, சூரியன். அப்ப 11:11ல வந்து கரெக்டா, அந்த நேரத்தில் அதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணனும்? ரொம்ப உடல் முடியாமல் இருக்கிறவங்க என்ன பண்ணனும்? வேப்பிலை, மஞ்சள், சில விசேஷ மூலிகைகள் எல்லாம் இட்டு, நல்லா உடல் முழுவதும்  தடவி, சூரியன் முன்னே உட்கார சொல்றாரு. நோய்களையும் அழிக்கும், வினைகளையும் அழிக்கும்) 

===================================
# காலை 11:11 ஆசனங்கள் செய்தலே அனைத்தும் போகுமடா
===================================

தேரையர் சித்தர் :-   இவைத்தன் உட்கார்ந்து எதை என்று புரிய, சூரியனை நோக்கி அறிந்தும், சில ஆசனங்களை செய்தாலே, அனைத்தும் போகுமடா. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்   :-  (அப்ப சிலருக்கு உடம்பு சரியில்லாதது, ரொம்ப கஷ்டமா இருக்குது. அங்க எல்லாம் உட்கார வச்சு, சூரியன் வெளிச்சத்துல உட்கார வைக்கணும். இதெல்லாம் பூசி, உடம்பு ஃபுல்லா பூசிக்கணும். உட்கார்ந்து சில சூரிய நமஸ்காரம் எல்லாம் செய்றீங்களா? அந்த நேரத்துல வந்து செஞ்சீங்கன்னா என்ன ஆகும்? சில வேதைகள் போகும். )

தேரையர் சித்தர் :-  இதை அறிவித்து, நன்னாளிலே எதை என்று புரிய வைக்க, அறிந்தும் சில புத்திகள் தோன்றுமடா. பின் அவனவனே சிந்தித்து செயலாற்றும் திறமை ஏற்படுமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சில புத்திகள் வந்து யாரும் சொல்ல தேவையில்லை. அவனவனுக்கு அந்த புத்தி ஏற்பட்டு தானாகவே சுய சிந்தனைகள், நம்ம சுய சிந்தனைகள் கேட்கிறதை விடலாம். உங்க அறிவு நல்லா வேலை செய்யும்ன்றாங்க.

===============================
# அவசியம் தினமும்  மாலை 7 - 8 மணிக்கு  ஈசனாரை போற்றி பிரார்த்தனை செய்ய  வேண்டும். 
===============================

தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், மாலையில் வந்துவிட்டேனடா அறிந்தும். இதே போலே அறிந்தும், அனைத்தும் இவை என்று அறிந்து, பின் ஏழின் அறிந்தும், இவைத்தன் எட்டின் குள்ளே, பின் அறிந்தும், பின் ஈசனை அறிந்தும், பின் அறிந்தும், இவை என்று புரிய நினைக்க வேண்டுமடா. பின் பிரார்த்தனை செய்ய வேண்டுமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( திருப்பியும் ஈவினிங் வந்துவிட்டார்.  ஏழு டூ எட்டு என்ன பண்ணனும்? பிரார்த்தனை, ஈசனை பிரார்த்தனை செய்யணும். ஏழு எட்டு, ஈசனை நோக்கி படையெடுக்கனும். ) 

================================================
# கனவில் அடிப்பது - கேது தேவனும் , தர்ம தேவனும் 
================================================

தேரையர் சித்தர் :- ஏன் இதை என்று அறிய, இதில் தன் பின் நீ என்னென்ன செய்கின்றாயோ, அவை தன் குறி வைத்து அறிந்தும், பின் பின் கனவு கனவு தன்னிலே அடிப்பானடா. கேதுவும் சனியவனும், 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஏழு டு எட்டு என்ன பண்ணனுமா? இறைவனை பிரார்த்தனை செய்யணும். அப்படி செய்யாட்டி, தூங்கிட்டிங்கன்னா, கனவுல வந்து அடிப்பாராம். அப்ப நிம்மதியா தூக்கம் கூட போச்சு. ஐயா, புரியுதுங்களா? ஏழு எட்டு என்ன பண்ணுவாராம்? அன்றைய தினத்துல என்னென்ன வந்து செய்தீர்களோ , என்ன பண்ணுவாராம்? அந்த வினைகள் எல்லாம் அகல, அந்த வினையால என்ன பண்ணுவாரு? நைட்ல அடி அடின்னு அடிப்பாரு.)

தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிய, தேவதையை செலுத்தி, அறிந்தும், புரிந்தும், உடம்பை பழுதாக்குவான்.

சுவடி ஓதும் மைந்தன் :- (தேவதை அனுப்பி என்ன பண்ணுவாங்களாம்? சனியும் கேதும் உடம்பை பாழாக செய்துவிடுவார்கள்.) 

தேரையர் சித்தர் :- இவை தன் உளறல் சத்தம், பைத்தியம் போல், 

சுவடி ஓதும் மைந்தன் :-  நைட்டு உளறல் சத்தம், பைத்தியம் போல். 

தேரையர் சித்தர் :- இவை அறிய, தூக்கமின்மை அறிந்தும், இன்னும் அறிந்தும், எவை என்று கூற, உருண்டைகள் செயற்கையாக (மாத்திரைகள்). 

சுவடி ஓதும் மைந்தன் :-  (தூக்கம் வராது, டென்ஷன் எல்லாமே ஆகுமா? வந்து இது அனுபவிக்கணும். அதனால மாத்திரை போடணும்.)

தேரையர் சித்தர் :- இவை தன் இப்படித்தான் காலங்கள், காலங்களாக கடந்து வந்திருக்கின்றானடா கலியுகத்தில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்படித்தான் மனுஷன் தெரியாம, காலங்கள், காலங்களா கடந்து வந்துட்டு இருக்கான் மனிதன்.) 

தேரையர் சித்தர் :- இவை தன் உங்களுக்கே, நீங்கள் செய்யும் பயிற்சியாக எடுத்துக்கொண்டு செய்தால், நலங்களாகும். வெற்றி, நீங்கள் நினைப்பதை அடைந்திடலாம்  எளிதில். 

தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும், இதைத்தன் புரியாமல், எவை என்று அறிய, இதனைத் தன் புரிந்து கொண்டோர் எவர்? 

தேரையர் சித்தர் :-  இவை தன் இப்படி செய்ய அறிந்தும், இவை தன் நன்கு உணர்ந்து, பின் மீண்டும் முருகன் தாலாட்ட வருவானடா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப நீங்க எல்லாம் கரெக்டா செஞ்சுட்டீங்கன்னா, நீங்க படுத்து உறங்கும் பொழுது, முருகன் என்ன பண்ணுவாரு? உங்களை தாலாட்டி நல்லா தூங்கடா, கண்ணான்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாராம்? முருகரையா தூங்க வைப்பார். 

தேரையர் சித்தர் :- இவைதன் எத்தனை, எத்தனை எழுத்துக்களில். மனிதா உணரவில்லையே, இதனாலே யாங்கள் மனிதனை மூடன் என்கின்றோம். செத்த பாம்பு என்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இதனால மனிதனை நான் என்ன சொல்லுவேன் தெரியுமா? செத்த பாம்புடா, ஏன்னா எண்கள் பற்றி தெரியலையேடான்றாரு. அப்ப எண்கள் பற்றி  தெரியாம, இறைவனை எப்படி நீங்க வந்து கண்டுகொள்வீங்க? )

தேரையர் சித்தர் :- இவை தன் இதனைப் பற்றி தெரியாதோர் எவை என்று அறிய, பின் கஷ்டத்திலே, பின் நீந்தி, நீந்தி, சுற்றி, சுற்றி. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதையே தெரியல. அப்ப என்ன பண்ணுவீங்களாம்? கஷ்டம் என்பது நீர்.  நீர் என்று சொல்றாங்க. எப்பவும் சுத்திக்கிட்டே இருக்கும். உங்களை சுத்தினே தான் இருக்கணும். பாம்பை மாதிரி சுத்தி, நீச்சல் அடிச்சினே தான் இருக்கணும். 

தேரையர் சித்தர் :- உணர்ந்து உணராதவர் எவர்? உயிரோடு இருந்து, பின் உயிரற்றவர் போல் எப்படி? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை உணரலைன்னா? நீங்க உயிரோடு இருந்தாலும், செத்த பிணம் மாதிரின்றாரு. 

தேரையர் சித்தர் :- இவை என்று அறிய, பின் செத்த பிணத்திற்கு என்ன அறிந்தும்? எவை என்று புரிய, என்ன புரியப் போகின்றது? 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த செத்த பிணத்துக்கு என்னத்த புரிய போகுது? என்ன புரிய போகுது? என்று செத்த பிணம் மாதிரி. 

தேரையர் சித்தர் :- இவை என்று இவையெல்லாம் தெரியாவிடில், நீங்களும் செத்த பிணமே. இறைவன் செத்த பிணத்திற்கு என்ன செய்யப் போகின்றான்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அப்ப இறைவனை பற்றி கரெக்டா தெரிஞ்சுக்கணும். அப்ப தெரியாட்டியே, இறைவன் என்ன பண்ணுவாராம்? ஒன்னும் செய்ய மாட்டார். அவர் செத்த பிணத்துக்கு உதவி செய்து என்ன பிரயோஜனம்? பிரயோஜனம் இல்லையே. விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு புரியணும். இது புரியல அப்படின்னா, செத்த பிணம் . செத்த பிணத்துக்கு இறைவன் என்ன செய்வாரு? ஒன்னும் தேவையில்லை. ஏன் என்றால் இவன் செத்துட்டு இருக்கிறான். போயிட்டே இருக்கலாம்டான்னுவாரு. )

தேரையர் சித்தர் :- இவையெல்லாம் செய்தால், பின் மூச்சு வாங்கும்டா. அறிந்தும், இவன் உயிரோடு இருக்கின்றான் என்று இறைவனுக்கு தெரியுமடா. அதிர்ஷ்ட வாய்ப்பை அளிப்பானடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க இதெல்லாம் செஞ்சா மட்டும் தான், இறைவன் என்ன செய்வாராம்? பரவாயில்லைடா. உயிரோடு தான் இருக்கிறான். ஆளு மூச்சு விடுறான். எழுப்பி நின்னு ஓட வைக்கலாம்னு சொல்லிட்டு முயற்சி செய்வார். 

தேரையர் சித்தர் :- இதைத்தன் இப்படி செய்தால், நோயும் பின் வராதடா. 

===========================
# அதிகாலை 3,4,5 மணி அளவில் பல கெட்ட கதிர் வீச்சுகள் உடலில் விழும் - தூங்கிக்கொண்டு இருந்தால்.
===========================

தேரையர் சித்தர் :-  இவைத்தன் பின் செத்தவன் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றானே. அறிந்தும், பின் மூன்று, நான்கு,  ஐந்து, அவ்வளவில் அறிந்தும், பல கதிர் இயக்கங்கள் வந்து உடம்பில் படுமடா. அப்பொழுது அறிந்தும், பின் அனைத்துப் பின் உள் உறுப்புகளும் செயலிந்து போகுமடா. அந் நேரத்தில் எழுந்து, பின் இறைவனை தியானித்தால், பின் செயலிந்த உறுப்புகள் எல்லாம் பலமாகுமடா. உன்னை நீ வெல்லலாமடா. அனைத்தும் வெல்லலாமடா. இறைவனையும் காணலாமடா மனிதா. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :- (என்ன சொல்றாரு தெரியுங்களா? மூணு, நாலு, அஞ்சு எழுந்திருக்கணும். அப்ப வந்துகதிர் இயக்கம் அதிகம் படும். அப்ப  எழுந்து என்னென்ன வேலை செய்யணுமோ, அதை செய்யணும். உள்ளுறுப்புகள் நல்லா இயங்கும். நீங்க வந்து தூங்கி நின்னீங்கன்னா என்ன ஆகும்? ரேடியேஷன் அதிகமா வந்து உங்க உள்ளுறுப்புல எதுவும் வேலை செய்யலன்னா  போயிடும். அப்ப என்ன பண்ணும்? போக போக என்ன ஆகும்? வயசாகும்.)

தேரையர் சித்தர் :- இவைத்தன் எனக்கே பின் 40, 50, 60 வயதுகள் எண்ணிக் கொண்டிருக்கின்றானே மனித மூடன். இதில் எழுந்து நின்றால், வயது என்னடா வயது?

சுவடி ஓதும் மைந்தன் :-  (நீங்க எல்லாம் எனக்கு 40 வயசு ஆச்சு, நோய் வந்துருச்சு. எனக்கு 50 வயசு, நோய் அடிச்சு, 60 வயசு, நோய் அடிச்சு. மனிதா , நீ  மூணு மணிக்கு எழுந்து பார். அதன் பின்  பார்க்கலாம், எப்படி உனக்கு வந்து வயசாகும் என்று ?)

தேரையர் சித்தர் :- ஆரோக்கியமடா, இன்னும் கண்டுணர்ந்து இருக்கின்றேனடா. மனிதனை மறைந்திருக்கின்றானடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (நான் இன்னும் பார்த்துட்டு இருக்கிற மனிதர்கள்  எப்பவுமே மூணு மணிக்கு எழுந்தவன், நாலு மணிக்கு எழுந்தவன் எல்லாம் நோய் நொடி இல்லாம, வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் வெளி உலகிற்கு தன்னை வெளிக்காட்டாமல் மறைந்து வாழ்கின்றனர். இன்னும் நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன் என்றார். )

===========================
# இறைவன் கொடுத்த உடம்பு - சரியாக பராமரிக்காமல் வீணாக்குவது பாவம்.
===========================

தேரையர் சித்தர் :- இவை தன் அப்பொழுது இறைவன் கொடுத்தானடா. நோய் அறிந்தும், எவை என்று அறிய மனிதனுக்கு உடம்பு பாவம் என்று கொடுத்தானடா. அதைத்தன் எதை என்று அறிய கெடுத்தாயடா. நீ பின் அதை அனுபவித்தே தீர வேண்டுமடா  முட்டாளே. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்  :- (உடல் என்பது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு புனிதமான சொத்து; அதை சரியான நேரத்தில் எழுந்து, ஒழுங்காகப் பயன்படுத்தி, நன்றாகப் பராமரிக்க வேண்டும். அந்த உடலை கவனிக்காமல், சோம்பேறித்தனமாக வாழ்ந்தால், அது நோயாக மாறும்; இறைவன் கொடுத்த உடம்பை நீங்களே கெடுக்கிறீர்கள் என்பதால் அது ஒரு பாவமாகும். உடலை சரியாகப் பார்த்துக் கொள்ளாதால், நோயும் துன்பமும் தவிர்க்க முடியாமல் வரும்.) 

தேரையர் சித்தர் :-  இவைத்தன் பின் இறைவன் சரியான ஆள் மேய்ப்பதற்கு மனிதர்களை.  அறிந்து, எதை? உயிர் எங்கே? உடம்பு எங்கே? சொல். 

தேரையர் சித்தர் :-  இவை தன் பின் செய்யாவிடில், அறிந்தும் இதைச் செப்பினேனே. உயிர் எங்கே? உடம்பு எங்கே? என்று 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் நீங்க வந்து செய்யலைன்னா, உடம்பு கொடுத்தும், வீண். உயிர் கொடுத்தும் வீண். 

======================================
# சாமியே கும்பிடாத அவங்க எல்லாம் எப்படி நல்லா இருக்கின்றாங்க ????. 
======================================

தேரையர் சித்தர் :-  இதைத்தன் முன்னேற்றம் இல்லையே. அதாவது யான் இறைவனை பின் தொழுதேனே, அனைத்தும் பின் செய்தேனே. யான் நன்றாக பின் வாழவில்லையே. அவன் இறைவனையே வணங்கவில்லையே. அவன் நன்றாக இருக்கின்றான் என்று பிதற்றல், பிதற்றல். போகுமடா உயிர் கடைசியில்.

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப என்ன ஆகுமா? நான் இறைவனை இவ்வளவு கும்பிட்டேன், எனக்கு ஒண்ணுமே பண்ணல இறைவன். அவன் எல்லாம் இறைவனை கும்பிடலையே. அவனுக்கு எப்படி கொடுத்தார்? இறைவன் சந்தேகம் வந்துருமா? அப்ப இதை நினைச்சு நினைச்சே என்ன ஆகுமா? அவன் நல்லாதானே இருப்பான். உன் உயிரும் போகும்டான்ட்டார். புரியுதுங்களா எல்லாருக்கும்? ) 

=====================
# எண்கள் = தங்கம்
=====================

தேரையர் சித்தர் :-  இதைத்தன் அறிந்து, இப்பொழுது இவையன்றி இதை புரிந்து கொண்டு, (மணி நேரங்கள்) எண்கள் அறிந்தும் சாதாரணமில்லை. எவை அறிந்தும், அது ஒரு தங்கமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எண்கள் என்ன? அது தங்கம். 

=====================
# உங்களிடம் எப்போது அதிக தங்கம் வந்து சேரும் ?
=====================

தேரையர் சித்தர் :- இவ் தங்கத்தை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அத்தங்கம், தன்னை தேடி வருமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எண்கள் என்ன? என்னது? தங்கம், தங்கம், தங்கம். தங்கம்னா தெரியுங்களா? கோல்டு, கோல்டு. அப்ப இது யார் ஒருத்தர் சரியா இந்த அது வந்து தங்கத்தை எண்கள், அது எண்கள் கிடையாது. தங்கம், இந்த தங்கத்தை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அந்த தங்கம் உன்னை தேடி வரும்டான்றார். 

தேரையர் சித்தர் :- இவை தன் பயன்படுத்தவில்லையோ? தங்கம் எங்கே? தன்னை விட்டு போகுமடா. இருப்பது கூட  எங்கு? எதை என்று அறிய, பின் ஈர்க்குமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இது சரியா? பயன்படுத்தல, இருக்கிற தங்கம் போயிடும். யார் வந்து கால்ல எழுறாங்களோ, அந்த அதிர்ஷ்டம் அங்க போயிடும்டா. ட்ரான்ஸ்பர் ஆயிடும். 

===============================================
# உங்கள் மின்கலம் உங்கள் முதுகு தண்டில் ….
===============================================

தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிய, இவை புரிய, இதை என்றும் இயக்குகின்ற பின், அறிந்தும் களம், மின்கலம் அறிந்தும், எதை என்று இறைவன் சாதாரணமாக பார்க்காத இடத்தில் வைத்துள்ளானடா முதுகுத்தண்டில். 

சுவடி ஓதும் மைந்தன் :- (பேட்டரி, இறைவன் மிகப்பெரிய ஆள் சொல்றாரு. உங்களால பார்க்க முடியாது. எங்க வச்சுக்கிறாராம்? முதுகுத்தண்டு பேக்ல வச்சுக்கிறாராம். முதுகுத்தண்டுல மின்கலம், பேட்டரி. )

===============================================
# உங்கள் மின்கலம்  சார்ஜ் 40% கிழே இறங்கினால் , முடிந்தது வாழ்க்கை
===============================================

தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும், இவை என்று அறிய, பின் 40 (%) கீழே வந்துவிட்டால், முடிந்தது வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பேட்டரி பின்னாடி இருக்குது. எல்லாருக்கும். எங்க? முதுகுத்தண்டு, பின்னாடி முதுகுத்தண்டு, பின்னாடி பேட்டரி இருக்கு. எல்லாருக்கும் முதுகுத்தண்டுல 40 கீழ வந்துருச்சுன்னா என்ன ஆகுமா? முடிஞ்சது வாழ்க்கை, ஒன்னும் பண்ண முடியாதுன்றார். 

தேரையர் சித்தர் :- இவை தன் பின் தங்கத்தை கூட்ட வேண்டுமே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதுக்கு என்ன பண்ணனும்? தங்கம் வேணா? இங்க என்னது? அவர் சொல்றாரு, எண்களை கூட்ட வேண்டும். அப்ப நாலு மணிக்கு எழனும், தன் கடமை செய்யணும், ஒழுங்கா இருக்கணும். அதை மாதிரி செஞ்சா மட்டும்தான் என்ன ஆகும்? பேட்டரி சார்ஜ் ஆயிட்டே இருக்கும், சார்ஜ் ஆயிட்டே போகும். இல்லையென்றால் என்ன ஆகும்? 40 கீழ போச்சுன்னா, டவுன். 

===============================================
# உங்கள் மின்கலம்  சார்ஜ்  செய்யாமல் பரிகாரம் தேடி அலைவது வீண்    
===============================================

தேரையர் சித்தர் :- இவை தன் இப்படி யார் உணர்வார்? இதையெல்லாம் விட்டுவிட்டு, பரிகாரங்கள் என்று தேடித் தேடி அலைகின்றானே. மனித மூடன், 

சுவடி ஓதும் மைந்தன் :-  (வாழ்க்கையைப் பற்றி தெரியாம, பிறர் சொல்வதைக் கேட்டு பரிகாரம், கணக்கு என்று அலைந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்; உண்மையான சக்தி நம்முள்ளே இருக்கிறது. நேரத்தை மதித்து, அதிகாலையில் சீக்கிரம் எழுந்தால் உடலும் மனமும் தினமும் ரீசார்ஜ் ஆகும். நாம் நாள் முழுக்க செலவழிக்கும் எனர்ஜியை மீண்டும் நிரப்பிக் கொள்ளும் நேரம் பிரம்ம முகூர்த்தம் (மூன்று முதல் ஐந்து மணி). அந்த ரீசார்ஜ் நேரத்தை தவறவிட்டால், நம்முடைய சக்தி குறைந்து வாழ்க்கை பாதிக்கப்படும்.)

தேரையர் சித்தர் :- இவை என் என்று உணர, அறிந்தும் பத்திற்கு கீழே வந்து விட்டால், வாழ்க்கை போய்விட்டது. இதனால்தான், பின் இன்னும் ஞானிகள், திருவாசகத்தையும் அறிந்தும், இன்னும் தேவாரையும், இன்னும் திருத்தலங்களை தேடி தேடி அலையடா என்று. அலைந்து கொண்டே இருந்தால், மீண்டும் அறிந்தும், அப்பத்தை பின் 50 ஆக ஏற்றினால் மட்டுமே வாழ்க்கை உண்டு. அலைய வேண்டியதுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (இதெல்லாம் கண்டுபிடிச்சுக்கிறார் யாரு? தேரையர் சித்தர்.  முதுகுத்தண்டில் உள்ள சார்ஜ் பத்து வந்துச்சுன்னா, முடிஞ்சு போச்சு லைஃப். ஒன்னும் பண்ண முடியாது. அப்ப என்ன பண்ணனும்? அதனாலதான் திருவாசகம், தேவாரம், இதெல்லாம் பாடணும். பாடிட்டு, இதோட சேர்த்து, அந்த மூணு மணிக்கு எந்திரிச்சு, இதோட சேர்த்து, தேவாரம், திருவாசகங்கள் பாடி, திருத்தலங்களுக்கு போய் பாடுனாதான். ஏன்னா முதுகுத்தண்டில் உள்ள சார்ஜ் 40க்கு கீழ 10 % தொட்டுருச்சுன்னா, மூணு மணிக்கு எந்திரிச்சு, பிரயோஜனம் இல்லைன்ட்டாங்க. அதோட சேர்த்து, மூணு மணிக்கு எந்திரிச்சு, தேவாரம், திருவாசகம், திருத்தலங்கள் போய் படிக்கணும்ன்றாங்க.)

தேரையர் சித்தர் :- இப்பத்தை அறிந்தும், பின் மீண்டும் ஏற்ற 50 ஆக அறிந்தும், ஒரு வருடமோ, இரு வருடமோ, மூன்று வருடமோ, 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப முதுகுத்தண்டில் உள்ள சார்ஜ் 40 கீழ விடக்கூடாது. சார்ஜர் விட்டீங்கன்னா, ரொம்ப கஷ்டம் ஆயிடும் லைஃப் ரொம்ப கஷ்டம். திருப்பி இன்கிரீஸ் பண்றது  ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ ஆகும். அப்புறம் நீங்க வந்து எந்த கோவிலுக்கு போனாலும், எந்த பரிகாரம் பண்ணுங்க. ஒன்னும் ஏன்னா, இங்க ரீசார்ஜ் ஆயிட்டு இருக்குது.) 

தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், 50 ஏற, பின் ஆசிகள் கிட்டுமடா. பின் மெதுமெதுவாகத்தான்.


சுவடி ஓதும் மைந்தன் :- 50 வர்றதுக்கு, ரெண்டு வருஷம் எப்படி? இந்த ரெண்டு வருஷமும் விடாம, நீங்க மூணு மணிக்கு எந்திரிச்சு, தேவாரம், திருவாசகம் ஓதி, கோயில் கோயிலா சுத்தி திரிஞ்சாதான் 50க்கு வரும்ன்றாங்க. 

தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், சாதாரணமாக கையில் வைத்துள்ளானே. அதனையே பின் திடீரென்று ஏற்ற முடியுமா? என்ன இதுதான் மனிதனின் பின் மூடன் முட்டாள் என்பது 

சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்க மொபைல் செல் வச்சிருக்கீங்க. உடனே சார்ஜ் ஆகுமா? ஒரு நிமிஷத்துல ஆகாது. அப்ப மனுஷன் என்ன நினைக்கிறானாம்? போயிட்டு வந்தாவே, எல்லாம் நடக்கும் நினைக்கிறானாம். கோவிலுக்கு போயிட்டு வந்த உடனே, போயிட்டு வந்தாலே, எல்லாமே நடக்கும்ன்றான். என்னடா இது? மனுஷன் ஒரு முட்டாள்டான்றார். அதெல்லாம் முடியாது. பரிகாரத்தை போய் ஒரு தடவை கோவிலுக்கு போயிட்டு வந்தா, சரியாயிடுமா? அப்படின்னு கேக்குறாங்க.)

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஞான குருநாதர் அகத்தியர் சித்தர் அப்பனுக்கு நன்றிகள் நன்றிகள்
    தேரையர் சித்தர் அப்பனுக்கு நன்றிகள் நன்றிகள்
    ஜீவ நாடி அருளாளர் திரு ஜானகி ராமன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள்
    அக்னிலிங்கம் அருணாசலம் ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள்

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. OM SRI THEYRAYAR SIDHA SWAMYE NOMO NAMAHA

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete