அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 5
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 5)
=============================
# ஈசனை தேடிய இராவணன்
=============================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இராவணன் அழுதான் எதை என்று கூற.
“ஈசனே !!!!!” எவை என்று புரிய பின் “எங்கு இருக்கின்றாய்?” என்று.
அடியவர் :- ( சிரிப்பு )
அடியவர் :- ( அப்பதான் இராவணனுக்கே விஷயம் புரியுது. அவங்க அம்மா சொல்ராங்க, "குருகுலத்தில் நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனே... நான் எல்லாருக்கும் தாயே! ஆனா நீ மட்டும் என்னைத் தாய் தாய்னு சொல்லிக்கிட்டு, என் பிள்ளைன்னு நிக்கிறியே" அப்படின்னு சொல்லி இராவணனை வெளியே போகச் சொல்றாங்க. அவங்க வெளியே போகச் சொன்ன உடனே, இராவணன் ஆவேசமாகி, "ஈசனே! எங்க இருக்க நீ? எங்க அம்மாவை என்னைப் பிரிய விட்டுட்டு நீ எங்க இருக்க? உன்னைப் பாத்துக்கிறேன், வெளிய வா!" அப்படின்னு சவால் விடுறான். )
குருநாதர் :- (இராவணனின் தாய்) நிச்சயம் இவ்வாறெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன். இப்பொழுதும் இவ்வாறு இருக்கின்றாய் என்று நிச்சயம். பின் என் பிள்ளை இல்லை வெளியே செல்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப என் பிள்ளையே நீ இல்லடா. அவங்க அம்மாவே சொன்னாங்க .நீ வெளியே போடா என்று அவங்க அம்மாவே சொல்லிட்டாங்க )
=============================
# ஈசன் கண்களில் கண்ணீர்
=============================
குருநாதர் :- ஆனாலும் இதை மாற்றும் பின் ஈசனுக்கு கண்களில் பின் கண்ணீர்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த அம்மா சொன்னதும், ஈசனுக்கு என்ன ஆச்சு? பெத்த பிள்ளையை வெளில போ என்று அம்மா சொன்ன உடனே, ஈசனே அழுதுவிட்டார் )
குருநாதர் :- அறிந்தும் அவன் சென்று விட்டான். ஆனாலும் தாயே எதை என்று அறிய. இது ஒரு சோதனையே என்று. பார்க்கட்டும் அவன் எப்படித்தான் (ஈசன்) என்னை பார்க்கின்றான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்பதான் ஈசன் என்ன பண்றாருன்னா, "இது ஒரு சோதனைதான். அவன் என்னை எப்படிப் பார்க்கிறான்னு பார்க்கலாம்... நீதான் எல்லாத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தல்ல? இப்ப அவன் வந்து என்னை எப்படி எதிர்கொள்றான்னு பாக்குறேன்" அப்படின்னு ஈசன் சொல்லிட்டு, வேடிக்கை பார்க்கிறாரு. )
======================================
# “அனாதை ஆகிவிட்டேன் அகத்தியனே” - இராவணேஸ்வரரின் புலம்பல்.
======================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும். ஆனாலும் பின் அதாவது கட்டிக்கொண்டான் நிச்சயம். என்னிடத்தில் வந்தான். “அனாதை ஆகிவிட்டேன் அகத்தியனே” என்று.
அடியவர் :- ( புலம்பல் கதை கேட்டு சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்போ இராவணன் என்ன பண்ணாருன்னா, அப்படியே அகத்தியரிடம் திரும்பி "அம்மாவே என்ன வெளிய போடா ன்னு சொல்லிட்டாங்களே... நான் அனாதை ஆயிட்டேனே!" அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டு, மனசு உடைஞ்சு போய் சொல்றார். )
குருநாதர் :- (அகத்திய மாமுனிவர்) நிச்சயம் தன்னில் கூட யாரும் அப்பா அனாதை இல்லை, யாரும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அகத்தியனே எவ்வாறு என்பதெல்லாம்
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப யாரும் அனாதை இல்லப்பா. அகத்தியர் அவர் சொல்றாரு)
======================================
# தாய் தான் தெய்வம் என்று இருந்தேன்
======================================
குருநாதர் :- (இராவணேஸ்வரர்) இல்லை இல்லை நிச்சயம் தன்னில் கூட. பல வழியிலும் என் தாய் எது எதுவோ சொல்லிக் கொடுத்தாள் அனைவருக்கும். ஆனாலும் இப்படி விரட்டி அடித்துவிட்டாளே. யான் எங்கு சொல்வது? தாய் தான் தெய்வம் என்று இருந்தேன் என்று.
அடியவர் :- ( சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- ( அம்மா எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு தாய் தான் தெய்வம் என்று நான் இருந்தேன். ஆனா என்ன அவங்க வந்து என்ன வந்து விரட்டி அடிச்சாங்க நான் அனாதை ஆயிட்டேன். அனாதை ஆயிட்டேன்ப்பா. நிர்க்கதி ஆயிட்டேன் நான். எங்க போறது?…. )
==================================
# ஆளை விடுங்க சாமி …போதும்
==================================
குருநாதர் :- நிச்சயம் (அகத்தியன்) என்னிடத்தில் இருக்கின்றாயா? இவையெல்லாம் கண்டுபிடி பின் தெரியும் ஈசன் என்று நிச்சயம். ஆனாலும் (இராவணனும்) அகத்தியனே பின் நீயாவது, உன் எவை என்று கூற பின் கண்டுபிடிப்பாவது. எனக்கு ஒன்றும் தேவையில்லை. என்னை விட்டுவிடு ஆளை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தியர் என்ன சொல்றாருன்னா, "இதெல்லாம் என்ன பிரச்சனைன்னு நீயே கண்டுபிடி... ஆமா, நீ என் கூடவே இரு, இதையெல்லாம் நானும் கண்டுபிடிக்கிறேன், நீயும் வாப்பா" அப்படின்னு கூப்பிடுறாரு. ஆனா அதுக்கு இராவணன், "அப்பா, உன் தவம் வேணாம், கஷ்டம் வேணாம், எனக்கு உன் இது எதுவுமே வேணாம், நான் கிளம்புறேன்" அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாரு. அப்போ அகத்தியர் வெளிய போகும்போது, "நீயே கண்டுபிடிச்சுக்கோப்பா... என்கிட்ட வந்து தொந்தரவு பண்ணாத, என்னை ஆள விடுப்பா" அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறாரு. )
=============================================
# அன்பு குருநாதர் , இராவணனை ஓரிடத்தில் தவம் செய்ய சொன்னார்கள்.
=============================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு எல்லாம். இதனால் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் இராவணன் ஆனாலும் யோசித்தான் நிச்சயம். அதாவது மீண்டும் பின் மனம் எவை என்று அறிய நிச்சயம் அறிந்தும் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இப்பொழுது அறிந்தும் கூட.
அதாவது யானும் சொன்னேன். நிச்சயம் பின் ஈசனை நினைத்து நீயே எதை என்று அறிய பின் எவை என்று புரிய, பின் ஓரிடத்தில் தவம் செய் நிச்சயம் தன்னில்.
அடியவர் :- ( அய்யா இப்ப புரிஞ்சுதா? அகத்தியர் கிட்ட போய் இராவணன் கேக்குறார். இந்த மாதிரி வந்து எனக்கு பிரச்சனையா இருக்கு. என் அம்மா விரட்டிட்டாங்களே என்று புலம்புகிறார். அதுக்கு அகத்தியர் , நீ கண்டுபிடிப்பா என்று சொல்கிறார். அதுக்கு இராவணன் வேண்டாம். நான் கிளம்பி போறேன் அப்படிங்கிறாரு. அதுக்கு அப்புறம் தன அப்பதான் யோசிக்கலாம் தவம் பண்ணனும் சிந்திக்கிறர். அப்ப டைரக்டா ஈசன் அவரே பிடிப்போம்)
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஈசன் அவரே பிடிச்சிடுவோம். அப்ப ஈசனையே புடிச்சுக்க என்ன ஆகும்?)
அடியவர் :- எல்லா பிரச்சனைக்கும் காரணம் தெரியும்
சுவடி ஓதும் மைந்தன் :- (எல்லா காரணத்துக்கும் அர்த்தம் தெரியும்)
====================================================
# அகத்திய மாமுனிவர் அருளால், இராவணேஸ்வரர் தவம் செய்து கண்டுபிடித்தது. திருகோணமலையில் இருந்தது நேர்கோட்டில் இருக்கும் திருக்கைலாயம்.
=====================================================
குருநாதர் :- ஆனாலும் பல ஆண்டுகள் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும். ஆனாலும் இங்கிருந்து பார்த்தால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், தாய் சொல்வதெல்லாம் கேட்டறிந்து நிச்சயம் தன்னில் கூட. பல வழியில் கூட இதற்கு , பல இதற்கு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இங்கிருந்து பின் நேராக பார்த்தால், நிச்சயம் கீழாக நிச்சயம் தன்னில் கூட. யான் சொன்னேன் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் பின் எதனை இருந்தது என்று. ஆனாலும் ஆனாலும் நேராக பின் பார்த்தான் நிச்சயம் தன்னில் கூட. எவை என்று கூற கைலாயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்போ இராவணன் அங்கிருந்து ஒரு பார்வை பார்க்கிறாரு. இலங்கை மேப்ல இருந்து கைலாயத்துக்கு ஒரு நேர்க்கோடு போட்டா, அப்படியே டைரக்டா மேல கைலாயம் தெரியுது. பல ஆண்டுகள் தவம் பண்ணி, இங்கிருந்து பார்த்த உடனே அவருக்கு கைலாயம் தெரிஞ்சு போச்சு. "அய்யா பாருங்கையா, இந்தியாவிலிருந்து நேரா கோடு போட்டா கைலாயம் கண்டிப்பா தெரியும்" அப்படின்னு கண்டுபிடிச்சிட்டாரு. அந்த இடத்துல உட்கார்ந்து தவம் பண்ணிதான், இங்கிருந்தே கைலாயம் எங்க இருக்குன்னு அவர் துல்லியமா கண்டுபிடிச்சுட்டாரு. )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட எவை என்று கூற இராவணனே நிச்சயம் கைலாயத்தில் தான் பின் நிச்சயம் ஈசனுடைய குடும்பம் இருக்கின்றது என்று கண்டுபிடித்தான்.
அடியவர் :- (அந்த இடத்துல தியானம் செஞ்சு , என்ன பிரச்சனைன்னா ஈசனை கண்டுபிடிக்க சொல்றாருல. ஈசன் எங்க இருக்கான்னு தெரியாததுனால, இங்க வந்து தவம் பண்ணி, இங்க இருந்து கரெக்டா கைலாயத்தை நோக்கி பார்த்து, கைலாயத்தை ஈசன் குடும்பம் அங்கதான் இருக்குன்னு கண்டுபிடிக்கிறார்)
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டுபிடிக்கிறார்
அடியவர் :- ( அப்பதான் பாயிண்ட் அவுட் ஆகுது. அவர் ஈசன், அது வரை எங்க இருக்கார்ன்னு தெரியல. )
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியல….
அடியவர் :- ஹி டஸ் நாட் நோ (Ravana does not know )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசனோட குடும்பம் எங்க இருக்குது? கைலாயத்துல. கைலாயத்துல தான் இருக்கிறது.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஓடோடி வந்து, நிச்சயம் தன்னில் கூட, அகத்தியரே அறிந்தும் கூட, பின் கண்டுபிடித்து விட்டேன் பின் ஈசனுடைய குடும்பம் எங்கு இருக்கின்றது என்று.
அடியவர் :- (அது எத்தனை ஆண்டு? பல ஆண்டுகள். பல ஆண்டுகள் தவம் செய்துதான் கைலாயத்தை கண்டுபிடிச்சு அப்புறம் அகத்தியர் கிட்ட வந்து சொல்றாரு )
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா பார்த்தீங்களா? ஐயா கைலாயம் இங்கிருந்து டைரக்டாதான் மேலே இருக்கும். டைரக்டாதான் இருக்கும். இருக்குங்களா? )
அடியவர் :- (கைலாயம் இங்கிருந்து டைரக்டாதான் ) இருக்கு. (மேப்) பாருங்க….
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப திரும்ப என்ன சொன்னாரு அவர்? அதாவது கண்டுபிடிச்சாரு. கண்டுபிடிச்சு அகத்தியர் கிட்ட ஓடி வந்து , அகத்தியர் அப்பா நான் கண்டுபிடிச்சிட்டேன்பா. கைலாயத்தில் தான் சிவன் குடும்பம் இருக்கு என்று புரிஞ்சிடுச்சி)
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் எவ்வழி என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஆனா நான் கைலாயம் போவது எப்படி? அப்படின்னு அகத்தியர் கிட்ட வந்து கேக்குறாரு)
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் எவை என்று புரியாது அதனால் அறிந்தும் கூட மீண்டும் தவங்கள் செய். தெரிந்துவிடும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (மீண்டும் தவங்கள் செய். தெரிந்துவிடும். இவ்வளவு ஆண்டு தவம் பண்ண, இன்னும் கொஞ்ச நாள் தவம் பண்ணினா, எப்படி போறதுன்னு நீயே கண்டுபிடிப்ப.)
அடியவர் :- (ஹலோ.. என்ன சூட்சுமம் இங்க என்றால், அந்த இடத்தை கண்டுபிடிச்சு , ஈசன் கிட்ட போய் சண்டை போட ரெடியா இருக்கான். அதனால சண்டைய தாமத படுத்த , நீயே கண்டுபிடி. எல்லாத்தையும் நீ கண்டுபிடிச்சு நீ பார்த்து நீ போய்க்கோடா அப்பிடின்னு அகத்தியர் சொல்றார், இல்லையா ?)
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கைலாயம் இங்க வந்து இது கண்டுபிடிச்சாச்சு இந்த
அடியவர் :- இடத்தை கண்டுபிடிச்சாச்சு. தவம் பண்ணா மட்டும்தான் அங்க போக முடியும்
=================================================
# திருகோணமலையில் இருந்து கைலாயத்திற்கு சுரங்கப்பாதை வழியாக செல்ல ஆயத்தமான இராவணேஸ்வரர்…….
=================================================
குருநாதர் :- எதை எவை என்று கூட மீண்டும் எதை என்று அறிய அப்பனே அறிந்தும் இவைத்தன் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மீண்டும் பல ஆண்டுகள் தவம் புரிந்து நிச்சயம் தன்னில் கூட. இதனால் நிச்சயம் கீழாகவே எதை என்று அறிய அறிய மீண்டும் நிச்சயம் தன்னில் கூட பின் என்னிடத்தில் வந்தான். அகத்தியனே யான் கண்டுபிடித்துவிட்டேன் நிச்சயம் தன்னில் கூட யாருக்கும் தெரியாமல் கீழ் பாதையிலே யான் செல்வேன் அங்கு. அவனிடத்தில் சண்டையிட.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் உரையாடலின் சுருக்கம் :- ( இங்க ஒரு பெரிய சூட்சுமம் இருக்கு ஐயா. இராவணன் பல ஆண்டுகள் தவம் பண்ணி, ஒரு சுரங்கம் இருக்கிறதைக் கண்டுபிடிச்சு அது வழியாவே போறாரு. "மக்கள் எல்லாம் கடவுளைப் பாக்கணும்னு கேக்குறாங்களே, அதுக்கு இதுதான் பதில்". இராவணன் இங்கிருந்து டைரக்டா கீழேயே போறாரு; பல வருஷம் தவம் பண்ணி, அந்த இடத்தைப் பார்த்து ஈசன்கிட்ட பேச முற்படுறாரு. "இராவணனுக்கே இவ்வளவு நேரம் ஆகுதுன்னா, சாதாரண மக்கள் எப்படிப் பார்க்க முடியும் பாருங்க" அப்படின்னு ஒரு கேள்வி வருது. ஈசன் யாருன்னு கண்டுபிடிக்கவே இத்தனை வருஷம் ஆச்சு, அப்புறம் தவம் பண்ணி அவரைத் திரும்பிப் பார்க்க இன்னும் பல ஆண்டுகள் ஆகுது. "கடவுள் யாரு?" அப்படின்னு கேக்குறவங்களுக்கு இதுல ஒரு மறைமுகமான பதில் இருக்கு. அதனால அவர் விடாம அப்படியே கீழேயே தவம் பண்ணிப் போறாரு.)
=====================================================
# இராவணேஸ்வரர் பல ஆண்டுகள் தவம் செய்து, திருகோணமலை முதல் கைலாயம் வரை உள்ள சுரங்கப் பாதையைக் கண்டுபிடித்து, ஈசனை நோக்கிச் சென்றார். அவர் தனது தவ வலிமையை விட்டுச் சென்ற இந்தப் புனிதப் பாதையில் உள்ள ஆலயங்களில் சென்று நாம் வழிபட்டால், நமக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்.
=====================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் கீழே செல்லும் இடமெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தம் பெற்றது. அவன் சக்திகளை, தவம் செய்த சக்திகளை அங்கங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான். அங்கு இருக்கும் ஆலயங்கள் எல்லாம் சென்று வழிபட்டால் நிச்சயம் தன்னில் கூட வெற்றி உண்டு. வெற்றி உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்தியாவில் இருந்து கைலாயம் வரை தரைவழியாகவும் சுரங்கம் வழியாகவும் சென்ற இராவணன், தான் தவம் செய்த சக்திகளை அங்கிருக்கும் கோயில்களில் விட்டுச் சென்றுள்ளார். அந்த சிவ தலங்களுக்கு சென்று நீங்கள் பிரார்த்தனை செய்தால், இராவணன் விட்டுச் சென்ற அந்த அபாரமான தவ சக்திகள் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். )
====================================
# முக்கோணம் எப்படி இருக்கும்?
====================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் கூட அதாவது கோணம் எதை என்று கூற . கோணம் எப்படி இருக்கும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( கோணம் எப்படி இருக்கும்? முக்கோணம் எப்படி இருக்கும்? )
======================================
# சுரங்கப்பாதை ஆலய ரகசியங்கள் ……..
# (1) திரு அண்ணாமலை , (2) மதுரை மீனாட்சி அம்மன் (3) சங்கரன் கோயில்.
# இங்கெல்லாம் சென்று வழிபட்டாலே வெற்றிகள் உண்டு.
=====================================
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம் போகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட திருத்தலங்கள் அதாவது அண்ணாமலை நிச்சயம் தன்னில் கூட, முதலில் எதை என்று கூட மீண்டும் அங்கிருந்து பின் நிச்சயம் தன்னில் கூட மதுரை மீனாட்சி நிச்சயம் தன்னில் கூட அங்கிருந்து, சங்கரன் கோயில் நிச்சயம் தன்னில் கூட, அங்கிருந்து நிச்சயம் தன்னில் கூட, அதாவது எதை எதை என்று அறிய அறிய இன்னும் கூட பல ஆலயங்களை நிச்சயம் இணைத்துள்ளான். அங்கிருந்தெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இன்னும் கூட சுரங்க பாதை இருக்கின்றது. அங்கெல்லாம் சென்று வழிபட்டாலே வெற்றிகள் உண்டு.
அடியவர் :- (வியப்பில்) அப்பா !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த கோயில்லையும் அவர் சொல்லிட்டாரு. திருகோணமலை அங்கிருந்து திருவண்ணாமலை, அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயில் , அங்கிருந்து சங்கரன் கோயில் அப்படியே வந்து என்ன பண்றாரு? திருப்பியும் இணைக்கிறார் )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தன் தவ வலிமை எல்லாம் அங்கு கீழே இட்டு நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ( தன்னோட தவ வலிமையை அந்த கோவில்கள் எல்லாம் விட்டு போயிட்டாங்க )
குருநாதர் :- ஆனாலும் எதை என்று கூற, இவையும் தாயிடமே நிச்சயம் தன்னில் கூட. அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, பின் அதாவது பின் தாயே செல்கின்றேன் என்றெல்லாம் கூறும்போது, நிச்சயம் அதாவது தாய் சொன்னாள் நிச்சயம் தன்னில் கூட.
==============================================
# தாய்மையின் சிகரம் :- உலகோர் நன்மைக்காக - இராவணனின் தவ வலிமையை ஆலயங்களில் இறக்கி வைக்க சொன்ன மகத்தான இராவணேஸ்வரர் தாய், அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !
==============================================
குருநாதர் :- அதாவது பின் இராவணனே இவ்வாறு செல்கின்றாய் நிச்சயம் தன்னில் கூட. தெரியாமலே (ஈசன்) அவனை நிச்சயம் மிகப்பெரியாள் ஈசன். அதனால் எதை எதையோ நிச்சயம் கோபத்தாலே. இதனால் அங்கிருந்து திருத்தலங்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட உன் தவ வலிமையை விட்டிட்டு செல். நிச்சயம் எப்பொழுதும் அது மனிதனை காக்கட்டும் என்றெல்லாம். அங்கெல்லாம் மன்னிப்பு கேட்டுச் செல் என்றெல்லாம்.
அடியவர் :- (வியப்பில்) அப்பா !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப என்ன நடக்குதுன்னா, "நீ போற வழியில இருக்குற ஒவ்வொரு திருத்தலங்கள்லயும் உன் தவ வலிமையை விட்டுட்டுப் போ, அது அங்க வர்ற மனுஷங்களை காக்கட்டும்" அப்படின்னு அவங்க அம்மா சொல்றாங்க. அப்ப கூட மத்தவங்களுக்கு உதவி பண்ணத்தான் சொல்றாங்க. அவங்க அம்மா என்ன சொன்னாங்கன்னா, "அப்ப கூட பரவாயில்லை, சிவபெருமான் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டுப் போப்பா... நீ அந்தச் சுரங்கப் பாதையையில் போகும் போது , அமைக்கும்போது இன்னும் உன்னோட சக்திகள் எல்லாம் கூடிடும்" அப்படின்னு சொல்லி அனுப்புறாங்க. )
======================================
# கயிலை செல்லும் வழியில் இராவணேஸ்வரர் சுரங்கப்பாதை வழி சென்று , தன் தவ லிமையை வெட்டுச்சென்ற ஆலயங்கள். இங்கெல்லாம் சென்று வழிபட்டாலே வெற்றிகள் உண்டு.
(1) திரு அண்ணாமலை
(2) மதுரை மீனாட்சி அம்மன்
(3) சங்கரன் கோயில்
(4) ராமேஸ்வரம்
(5) கன்னியாகுமரி
(6) விரிஞ்சிபுரம்
(7) 12 ஜோதிர்லிங்கம்
======================================
குருநாதர் :- அறிந்தும் பின் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இது ஒரு முக்கிய தலங்களாக பின் ராமேஸ்வரம் சென்று…
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப இதெல்லாம் கனெக்சன் இருக்கு. ராமேஸ்வரம் இதெல்லாம் வந்து சுரங்க பாதை ஒரு கனெக்சன் இருக்கு )
குருநாதர் :- அப்பனே பின் கன்னியம் குமாரியின் தன்னில் கூட. அப்பனே நிச்சயம் பின் அம்மை அப்பன் அறிந்து கூட, அதேபோல் நிச்சயம் தன்னில் கூட விரிந்திருக்கும் புறம், விரிஞ்சிபுரம் எனும் தலங்களில் கூட.
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் அவ்வாறாகவே, நிச்சயம் 12 ஜோதிர் லிங்கங்களுக்கும் நிச்சயம் தன்னில், சக்தி ஊட்டிச் சென்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அடுத்து என்ன பண்றாருன்னா, கைலாயம் நோக்கிப் போகும்போது வழியில இருக்கிற 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சக்தி ஊட்டிட்டுப் போறாரு. அந்த இடத்தைக் கோடு போட்டுப் பார்த்தா ஒரு முக்கோணம் மாதிரி வருது.)
அடியவர் :- "என்னங்க ஐயா இது, நெட்லயே இப்படித்தான் போட்டுருக்கு...
சுவடி ஓதும் மைந்தன் :- (இது ஒரு கோணமா வந்து திரிகோண மலையா நிக்குது" அப்படின்னு ராவணன் ஆச்சரியப்படுறாரு. அவர் டைரக்டா கைலாயத்துக்கு நேர்வழியைக் கண்டுபிடிச்சிட்டாரு, ஆனா அவங்க அம்மா என்ன சொல்றாங்கன்னா, "இல்லப்பா, நீ பாட்டுக்கு நேரா போயிடாத... ஒவ்வொரு இடமாப் போய் தவம் பண்ணி, அங்க உன்னோட தவ வலிமையை விட்டுட்டுப் போ. வர்ற காலத்துல அங்க வர்ற மக்களை அந்தச் சக்தி காக்கட்டும்" அப்படின்னு சொல்றாங்க. )
========================================
# ஒவ்வொரு கோண முனையிலும் அதிகமாக சக்தியை வை.
========================================
குருநாதர் :- ஒவ்வொரு கோண முனையிலும் அதிகமாக சக்தியை வை நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அவ் சக்தி மனிதன் நிச்சயம் காக்கும் என்றெல்லாம். அதனால்தான் நிச்சயம் நட்சத்திரமாக எவை என்று கூற.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப ஒவ்வொரு கோணத்தின் முனையில் வலிமையை வைத்து போ என்று அவர் தாய் சொன்னார்கள். அப்ப என்ன ஆகுது? இந்த ஆலயங்களை மேப்பில் பார்த்தால் ஸ்டார் போல வருமா? அதெல்லாம் வந்து ஸ்டார் நட்சத்திரம் மாதிரி இப்படி போயிட்டு, இப்படி போயிட்டு, இப்படி போயிட்டு அந்த வழியில போயிட்டாரு. ஆனா நேர் வந்து நேரா வழி இருக்கு பட் அப்படி …)
============================================
# வேல் , நட்சத்திர வடிவம் - திருகோணமலையில் இருந்து திருக்கைலாயம் செல்லும் இரண்டு வழிகள். - (1) நேர் வழி - வேல் போல. (2) மற்றொரு வழி - நட்சத்திர வடிவில் சுரங்கப்பாதையின் வழியாக……
============================================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் இவை எவை போய்க்கிறது என்றால் இங்கிருந்து வேலையும் கூட, நிச்சயம் நட்சத்திரம் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப ஆலயங்களை இணைத்தால் நட்சத்திரம் போல வரும் ஐயா. வேல் இங்கிருந்து நேர போறது என்ன ஆகுது ஐயா? வேல். ஸ்ட்ரைட்டா போகுது ஸ்ட்ரைட் முழுசா வேல். முருகனோட வேல் )
=============================================
# முருகப்பெருமானை கடத்திக்கொண்டு வந்துவிட்டால் , ஈசன் கட்டாயம் இலங்கை வரவேண்டுமே என்று …
==============================================
குருநாதர் :- அறிந்தும் ஏன் இங்கு வேல் என்று சொன்னேன் என்றால் நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட அதாவது அவனை பின் பிள்ளையை கடத்திக் கொண்டு வந்துவிட்டால், நிச்சயம் பின் ஈசன் வரவேண்டுமே என்று.
==============================================
# முருகப்பெருமான் கையில் இருக்கும் வேலை கண்டுபிடித்தது - இராவணேஸ்வரரே
==============================================
குருநாதர் :- பின் வேலை கண்டுபிடித்தது இராவணனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப ராவணன் என்ன நினைக்கிறார்னா, " என் அம்மாவை என்ன செஞ்ச ? என் அம்மாவுக்கு நோயை கொடுத்தாய் அல்லவா ? உன் பிள்ளையை நான் கடத்துனா நீ என்ன பண்ணுவ?" அப்படின்னு கேக்குறார். அப்போ அங்க என்ன ஆகுதுன்னா, ஒரு வேலும் அறுகோண, சடாச்சர சக்கரமும் வருது அந்த வழியில போறப்போ. அதுதான் அந்த சராசரம்! குழந்தையை கடத்திக்கொண்டு வந்து விட்டால் , ஈசன் இங்கு வந்தே ஆகவேண்டும் இல்லையா ?)
=================================================
# கயிலையில் இருந்து முருகப்பெருமானை கடத்தி எடுத்து வந்து , இலங்கையில் உள்ள கபிலவனத்தில் வைத்துவிட்டார் இராவணேஸ்வரர்.
=================================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்து வந்து நிச்சயம் தன்னில் கூட பின் மரத்தை எடுத்தான். நீங்கள் எல்லாம் செல்கின்றீரே கபிலவனம்.
அடியவர் :- ( ஆச்சரியத்தில் ) ஓ !!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா புரியுதுங்களா? கயிலாயம் அங்கிருந்து முருகப்பெருமானை கடத்திட்டு வந்து எங்க வச்சிருக்காரு? கபில வனம். இலங்கையில் உள்ள கபில வனத்துல வச்சிருக்காரு. இங்கதான்….)
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஈசன் வருவான் அல்லவா? என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஈசன், வந்து தானே ஆகணும். வரட்டும்.
===========================================
# இலங்கை தேசம் ஏன் முருகப்பெருமானின் புகழ் எப்போதும் பாடிக்கொண்டே இருக்கின்றது? என்ன காரணம் ?
===========================================
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட ஆனால் கடத்தி எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இதனால்தான் இத்தேசத்தில் முருகன் புகழ் பாடிக்கொண்டே இருக்கின்றது.
அடியவர் :- ( ஆச்சரியத்தில் ) ஓ !!!! அப்ப இந்த தேசத்துல.. முருகன் புகழ் ஜாஸ்தி புகழ்
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் புகழ் பாடிக்கொண்டே இருக்கின்றது.
=============================================
# முருகப்பெருமானை இலங்கைக்கு கடத்திய போது , அது குழந்தை முருகன் வடிவில் இருக்கும் ஈசன் தான் என்று இராவணேஸ்வரர் உணரவில்லை
=============================================
குருநாதர் :- ஆனாலும் கடத்தியது அறிந்தும் புரிந்தும் கூட பின் ஈசனே என்று உணரவில்லையே அப்பொழுது கூட எதை என்று புரிய.
===============================================
# அகத்திய மாமுனிவரிடம் - முருகப்பெருமானை இலங்கைக்கு கடத்தி வந்ததற்கு இராவணேஸ்வரர் பெருமிதம்
===============================================
குருநாதர் :- ஆனாலும் பின் (அகத்தியன்) யான் சென்றேன் நிச்சயம் தன்னில் கூட. கண்டு உணர்ந்தேன். பின் எவை என்று புரிய பின் ஆனாலும் பார்த்தாயா நிச்சயம் அதாவது பிள்ளையை கடத்தி வந்துவிட்டேன் என்று நிச்சயம் இராவணனும் கூட. (அகத்தியன்) யான் சிரித்தேன் நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- ( சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அகத்தியர் போய் பார்த்தார். யார் பிள்ளையை கடத்தி வந்திருக்கிறான் என்று. ஆனா அவன் யாரு ஈசன் தான். ஈசன் என்றது வந்து தெரியவில்லை.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment