அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 8
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 8)
==================================================
# இராவணனால் உலகில் சிறந்து விளங்கிய இலங்கை
==================================================
குருநாதர் :- அப்பனே பக்தியிலும் சரி, அப்பனே நிச்சயம் தன்னில் ஒழுக்கத்திலும் சரி, அப்பனே நேர்மையிலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,பின் எது என்று கூற, சிறந்து விளங்கியது என்பேன் அப்பனே.
==================================================
# முதலாக இருந்த தேசம் …இப்போது……..
==================================================
குருநாதர் :- ஆனாலும் அப்பனே பின் காலப்போக்கில் அனைத்தும் மாறிவிட்டது. தலைக்கீழாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதல் நாடாக இருந்து, அப்பனே கடைசி நாடக ஆயிற்று. பின்பு அழியும் நிலையில் இருக்கின்றது இப்பொழுது.
==================================================
# இறை அருளால் , இறைவனேஸ்வரர் சக்தி ரகசியங்கள்.
==================================================
குருநாதர் :- அப்பனே ஆனாலும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் யார் சொன்னேனே அப்பனே. பின் அதாவது உலகம் இருக்கும் வரை இராவணனின் சக்தி நிச்சயம் இருந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
==================================================
# இறைவனேஸ்வரர் எப்போது தன்னை வெளிகாட்டுவார்?
==================================================
குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, தன்னை வெளிகாட்டுவான் என்பேன் அப்பனே இராவணனே.
அடியவர் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- தன்னை வெளிக்காட்டுவார். இராவணனே வெளியே வருவார்.
குருநாதர் :- பின் எவ் எவ் மனிதனிடம் நிச்சயம் தன்னில் கூட வீரம் நிச்சயம் தன்னில் நன்மை எதை என்று அறிய நிச்சயம் நற்பண்பு இருக்கின்றதோ, அவன் மூலம் நிச்சயம் பின் பாயத் தொடங்குவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் யாரெல்லாம் நல்ல எண்ணங்கள் உயர்வான எண்ணங்கள் இருக்கிறாங்களோ, அவங்க மூலமா இராவணனன் பாயத் தொடங்குவார்கள்.
குருநாதர் :- நிச்சயம் எது என்று கூற பின் காலத்துக்கு ஏற்ப நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உடம்பு இல்லாமல் நிச்சயம் எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எந்தெந்த காலத்தில் வரவேண்டுமோ, அந்த நிலையில் வந்து மக்களுக்கு உதவி செய்வார் )
=======================================
# இராவணேஸ்வரரின் உடல் எங்கு உள்ளது ?
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எது என்று புரிய இன்னும் இராவணனின் உடம்பு நிச்சயம் தன்னில் கூட இன்னும் பக்கத்திலே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அழியாமல் தன் கோட்டையிலேயே இருக்கின்றது.
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய அக்கோட்டையின் கீழே தான் நிச்சயம் தன்னில் இராவணனுடன் இன்னும் இருக்கின்றது அழியாத நிச்சயம் இதுதான் பக்தி. இதுபோல் நிச்சயம் தன்னில் கூட இறைவனின் பின் ஆற்றல் பெற்று உங்கள் உடம்பு இரும்பு போல் ஆக்க வேண்டும் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் உடம்பை பின் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் சுற்றிக்கொண்டு நிச்சயம் அவ் உடம்பை எப்படி வேண்டுமானாலும் அவன் எழுப்பலாம் மீண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த உடம்பை எப்ப வேணாலும் எழுப்பலாம்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் எவை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பின் எழுகின்ற பொழுது நில நடுக்கம் பலமாக ஏற்படும் இதனாலதான் நிச்சயம் பின் அமைதியாக காத்துக் கொண்டிருக்கின்றான்.
குருநாதர் :- நிச்சயம் நல் மனிதர் மூலம் நிச்சயம் தன்னில் கூட நன்மை செய்யப் போகின்றான்.
===============================================
# இராவணேஸ்வரரின் மகத்தான பொருளாதார பலம்
===============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஈசனின் முறையிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் இத்தேசத்து எதை என்று அறிய நிச்சயம் இத்தேசத்தின் மூலம் பல தேசங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் பலமாக நிச்சயம் தன்னில் கூட பின் பொருள் இன்னும் கூட பின் எவை என்ற ரத்தினங்கள் இன்னும் பல நன்மைகள் நடந்தாயிற்று நிச்சயம்.
குருநாதர் :- இப்பொழுது அழிவில் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பலமாக்குவான் பின் நிச்சயம் எவ்வளவு மனிதர்கள் பின் தடுத்தாலும் நிச்சயம் தன்னில் கூட
அடியவர் :- ( கைதட்டல்கள் )
============================================
# வருங்காலத்தில் பிரச்சினை எதனால் வரும் ?
============================================
குருநாதர் :- ஆனாலும் பின் மனிதனின் நிலைமைகள் தான் நிச்சயம் தன் மதம் தன் மதம் என்று பரப்புவான் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால்தான் பிரச்சனையிலே வரப்போகின்றது. ஆனாலும் எதையும் மாற்றி அமைப்பான்.
குருநாதர் :- அனைத்தும் ஒன்றே என்று
சுவடி ஓதும் மைந்தன் :- (ஆனால் மனுஷன் என்ன பண்ணுவான்? எப்படியாவது மனுஷனுக்குள்ள சண்டை ஏற்படுத்தணும். என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று மனுஷனுக்குள்ள சண்டை ஏற்படுத்தணும். ஆனால் இதுலதான் சண்டைகள் அடுத்து வரப்போகுது என்றார் வந்து அகத்தியர் வந்து. ஆனாலும் இராவணன் வந்து தடுத்து நிறுத்துவார் என்றார் )
========================================
# நல் மனிதர்களுக்கு கிடைக்க உள்ள சுராக்கல் சக்திகள் ரகசியங்கள்.
========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் சுராக்கல், சுராக்கல் என்று சொன்னேனே நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது நிச்சயம் பின் அதாவது நல் மனதிற்கு உள்ளவருக்கெல்லாம் நிச்சயம், அவனே நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம் அவ் சக்திகளை கொடுத்து நிச்சயம் தன்னை கூட பின் நிலை நாட்டுவான்.
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்த 'சுராக்கல்' (Suraakal) பத்தி சொல்றாங்க இல்ல, அது எப்படின்னா... ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருந்து, நாலு பேருக்கு நல்லது செஞ்சு, தான தர்மம்னு புண்ணியத்தை சேர்த்துக்கிட்டே இருக்காருன்னு வைங்க, அவரோட மனநிலையை இராவணன் கவனிப்பாரு. 'இவரு சரியான ஆளு, இவரு மூலமா நல்லது நடக்கும்'னு முடிவு பண்ணி, அந்தச் சக்தியை இராவணனனே நேர்ல வந்து அவருக்குக் கொடுப்பாராம். அவரோட நல்ல எண்ணத்துக்காகவும் செயலுக்காகவும் அந்தச் சக்தியை இன்னும் அதிகப்படுத்தி (Boost), அவர் மூலமா மத்தவங்களுக்குப் பயன் கிடைக்கிற மாதிரி அந்தத் தெய்வீக ஆற்றலை இவரே புடுங்கித் தந்து உயர்த்துவாரு.")
=======================================
# கூடுவிட்டு கூடு பாயும் வித்தை ஆரம்பம் …
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னை கூட அனைத்தும் புரிந்திடும் நிச்சயம் எதை என்று அறிய பின் அதாவது பின் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும் கூட நிச்சயம் தன்னில் கூட அவனுக்கு தெரியும். நிச்சயம் யார் கூட, பின் எதனை பேச வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் பேசிட்டு, அனைத்தும் செய்வான் இன்னும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (தான் யாரு மேல ஏறி இருக்கோமோ, அவங்க மூலமா அந்த வீரமான காரியத்தை அப்படியே செஞ்சு முடிச்சிருவாரு.)
அடியவர் :- உங்க உடம்பிலேயே வந்து செய்வார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அவர் திடீர்னு யாரைப் பிடிக்கணும்னு நினைக்கிறாரோ, அவர் மேல 'பொசுக்குன்னு' ஏறிடுவாரு. அப்படி ஏறுன உடனே, அந்த ஆளுக்குள்ள பயங்கரமான சக்தி வந்துரும். 'இந்தத் தேசத்தை விட்றக்கூடாது, இப்படிச் செய்யணும் அப்படிச் செய்யணும்'னு ஒரு வெறி, உத்வேகம் வந்துரும். அந்த நேரத்துல ராவணனோட சக்தியே அந்த 'சுராக்கல்' வழியா உங்களுக்குள்ள வந்து இறங்கிடும்; அந்த அளவுக்கு ஒரு அதீத ஆற்றல் வந்துடும்னு அவர் சொல்றாரு." )
====================================================
திருகோணமலை கோணேஸ்வரம் மலையின் ஒரு பகுதியில் இராவணன் வாள் வெட்டு தழும்பு இன்றும் காணப்படுகிறது.
===================================================
குருநாதர் :- அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதனின் அப்பனே அதாவது மனிதனின் அழுக்குகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் அதாவது இவ் வெட்டில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே அனைத்தும்.
============================================
# இன்னும் பல ரகசியங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றது
============================================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் அப்பனே ஏன் எதற்காக இன்னும் ரகசியங்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால் அப்பனே பின் மெதுமெதுவாக அப்பனே சொன்னால்தான் அனைத்தும் புரியும் அப்பா. இல்லையென்றால் அப்பனே, பின் புரியாமல் போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எல்லாத்தையும் மொத்தமாக சொன்னாலும் , ஒன்னும் புரியாது.
அடியவர் :- இல்லையென்றால் புரியாது.
=============================================
# உயிர் பிரிய இன்னும் ஒரே நாள் மட்டுமே உள்ளது …..
=============================================
குருநாதர் :- அப்பனே இப்படியும் வைத்துக் கொள்ளலாம் என்பேன் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே பின் அதாவது நிச்சயம் இராவணனின் தாய் நிச்சயம் தன்னில் கூட பின் மரணப்படுக்கையில் நிச்சயம் தன்னில் கூட. பின் இராவணனுக்கு தெரிந்துவிட்டது. நிச்சயம் நாளை இறந்து விடுவாள் என்று. எப்படி காப்பாற்றுவது என்பதையெல்லாம் பின் இராவணன் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அறிந்தும் பின் ஒரு நாள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது எப்படி எப்படி என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ராவணனுக்கும் அவங்க அம்மா மரணப்படுக்கையில இருக்கும்போது, அவங்க இறந்துருவோம்னு ராவணனுக்கு நல்லாவே தெரியுது. உடம்பு என்னவோ தேறிடுச்சு. ஆனா இன்னும் ஒரே ஒரு நாள் தான் உயிரு இருக்கும், அதுக்கப்புறம் வாழ்றது கஷ்டம்ங்கிற உண்மையும் அவருக்குத் தெரியுது. அந்த ஒரு நாள் கெடுவுக்குள்ள, 'எப்படி உயிர் பிழைக்க வைக்கிறது? எப்படி இவங்களைக் காப்பாத்துறது?'ன்னு தெரியாம ஒரு தவிப்போடவும் கேள்வியோடவும் அவர் கேக்குறாரு." )
==============================
# கை மீறி சென்ற நிலைமை
=============================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் எப்படி எப்படி என்றெல்லாம் நிச்சயம் எவ்வளவு எதை என்று கூட பின் விட்டு வைக்கக்கூடாது என்பதற்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் சாட்சியாக
குருநாதர் :- அறிந்தும் இவை தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் நிச்சயம் பின் ஆனாலும் இன்னும் பின் எதை என்று அறிய. ஆனாலும் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று புரியாமலும் கூட. இவ்வாறாகவே அறிந்தும் ஆனாலும் நிச்சயம் முடிவெடுத்து விட்டான். நிச்சயம் காப்பாற்ற முடியாது என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் நிச்சயமா அவ்வளவுதான். எப்படி ஏதுன்னு காப்பாற்ற முடியாது என்றெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாரு.
குருநாதர் :- நிச்சயம் எவை என்று புரிய நிச்சயம் ஓங்கி அடித்தான், பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய பின் தன் கைகளாலே அறிந்து கூட பின் இக் கல்லில்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கல்லுல ஓங்கி அடிச்சிருக்காரு.
===================================================
(இராவணன் வெட்டு கூகிள் மேப் லிங்க்:- )
https://maps.app.goo.gl/rdpBDH6yzkX2Y6VXA
===================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் கடல் எவை என்று அறிய எதை என்று புரிய அனைத்தும் ஆடியது.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகமே என்ன ஆச்சு? ஆட்டம் கண்டுச்சு.
===========================
# கல்லும் தெய்வமும் ஆகலாமா?
===========================
குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சத்தம், இக்கல்லில் இருந்தே வந்தது. நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, ஓரிடத்திற்கு செல்.
குருநாதர் :- இங்கேயே நிச்சயம் தன்னில் அவ்விடத்தில் மூலிகைகள் கிடைக்கும் எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- உடனடியாக கிடைத்து அறிந்தும் புரிந்தும் எவை என்று கூற, இன்னும் ஆயுள் நீட்டித்து (இராவணனின் தாய்க்கு).
=================================================
# சாகப் போவரையும் மீண்டும் காப்பாற்றும் வல்லமையை கண்டுபிடித்தவர்.
=================================================
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் சாகப் போவரையும் நிச்சயம் பின் மீண்டும் காப்பாற்றும் எது என்று கூட வல்லமையை கண்டுபிடித்தவன் இராவணன்.
அடியவர் :- அடேங்கப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா?
அடியவர் :- சுராக்கல் மூலம் உயிர் போற நிலையிலிருந்து அவங்களை மீண்டும் எழுப்புவது…
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் எடுத்து இளமை ஆக்குவதை கண்டுபிடிச்சவர் யாரு?
அடியவர் :- அந்த சூட்சுமத்தை கண்டுபிடித்தவர்
சுவடி ஓதும் மைந்தன் :- சூட்சுமத்தை கண்டுபிடிச்சவர் ஃபர்ஸ்ட் இராவணன் தான். அது எங்க? இந்த கல்லு பேசியது. கல்லே பேசியது.
குருநாதர் :- இவைதான் இதனால் நிச்சயம் கல்லும் தெய்வமும் ஆகலாமா? என்றெல்லாம். நிச்சயம் பின் இப்பொழுது புரிகின்றதா?
அடியவர் :- ஓ….
சுவடி ஓதும் மைந்தன் :- ("பொதுவா எல்லாரும் 'இது வெறும் கல்லுடா, கல்லுதான் கடவுளா?' அப்படின்னு கேப்பாங்க இல்ல, அதுக்குத்தான் ஒரு விளக்கத்தைச் சொல்றாரு. கல்லும் கண்டிப்பா கடவுளாகும்" )
========================================
# நான்கு சுவரும், என்னென்ன நீங்கள் செய்கின்றீர்கள் என்பதெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
========================================
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில், பின் அதாவது நிச்சயம் அனைத்தும், பின் எதை என்று கூற, பின் நான்கு சுவரும், என்னென்ன நீங்கள் செய்கின்றீர்கள் என்பதெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
குருநாதர் :- பின் எவை என்று கூற, பின் அதனால்தான் நிச்சயம் மனிதன் கல் என்பான். ஆனாலும் அதற்கும் உயிர் இருக்கின்றது. ஒரு நாள் நிச்சயம் நீங்கள் என்னென்ன செய்கின்றீர்களோ நிச்சயம் சரியான இடத்தில் சிக்க வைத்து விடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("எல்லாரும் 'இது வெறும் கல்லு, கல்லுதான் தெய்வம்'னு சாதாரணமா சொல்லிட்டுப் போயிடுறாங்க, ஆனா விஷயம் அப்படி கிடையாது. அந்த கல்லுக்கும் உயிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு. இப்ப நீங்க இந்த நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து தப்பாப் பேசினாலும் சரி, கத்திப் பேசினாலும் சரி, அந்த கல்லு எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கும். நீங்க என்ன பண்றன்னு, என்ன பேசுறேன்னு அந்தச் சுவத்துக்கே தெரியும். அதனால நீங்க ரகசியமா எதைச் செஞ்சாலும், அது சரியான நேரத்துல, சரியான இடத்துல உனக்குத் தண்டனையா வந்து நிக்கும். அந்த கல்லு உன்னைச் சிக்க வைக்கும், ஏன்னா அது வெறும் கல்லு இல்ல, அதுக்குள்ளயும் ஒரு சக்தி இருக்கு.")
=======================================
# இதுவரை யாரும் சொல்லாத ஆலய ரகசியங்கள்.
# ஏன் ஆலயத்திற்கு சென்றால் சிலருக்கு தீங்கு நடக்கின்றது ?
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் எண்ணங்கள் நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று கூற உடம்பில் ஒளிந்திருக்கும். நிச்சயம் ஆற்றல்கள் அப்படியே பதிந்திருக்கும்.
குருநாதர் :- பின் அதாவது இப்படியே பின் அவ் அழுக்கான மனது, திருத்தலத்திற்கு நிச்சயம் பின் சென்றால், அதுதான் பின் ஒருவருக்கு நிச்சயம், பின் திருத்தலத்திற்கு சென்று வந்தால் தீங்காக முடிகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப அந்த எண்ணம் கெட்ட எண்ணங்களை வச்சு நம்ம திருத்தலம் போறோம் இல்ல. அப்படின்னா அது வந்து அடிச்சு விட்டுருது. சில நேரத்துல வந்து கோயில் போனாலும் என்ன ஆகுது? ஒன்னும் நடக்குறது இல்ல“)
அடியவர் :- கல்லு நினைச்சுட்டு போனா ஒன்னும் நடக்காது
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- ("நிறைய பேர் கோயிலுக்குப் போய் அங்க இருக்குறது வெறும் கல்லுன்னு நினைச்சுட்டு இருக்காங்க, ஆனா அதுக்குள்ள இறைவனோட அந்தப் பெரிய ஆற்றல் இருக்குங்கிறது அவங்களுக்குத் தெரியல.
அந்தச் சக்தி உங்க எண்ணத்துக்குத் தகுந்த மாதிரிதான் வேலை செய்யும். நீங்க மனசுல கெட்ட எண்ணத்தோடவோ அல்லது தப்பு செஞ்சுட்டோ கோயிலுக்குப் போனீங்கன்னா, அந்தச் சக்தி உங்களை இன்னும் அதிகமா முட்டித் தள்ளும்.
அதனாலதான் வெளிய வந்த உடனே உங்களுக்கு எல்லாம் நெகட்டிவ்வாவே நடக்குது. பெரிய பெரிய கோயிலுக்குப் போனா கூட சிலருக்கு எதுவுமே நடக்கலையேன்னு தோணும்.
அதுக்குக் காரணம் அவங்க செஞ்ச தவறுகளை அந்தச் சக்தி அப்படியே திருப்பி (Repeat) அடிக்குது. அதே ஒருத்தர் மத்தவங்களுக்கு நல்லது செஞ்சுட்டு, அந்தப் புண்ணியத்தோட கோயிலுக்குப் போனாருன்னா, அவருக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.")
=====================================
# மாமிசம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றால் நடக்கும் விபரீதங்கள்…
=====================================
குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்ப நிச்சயம் தன்னில் கூட அனைத்து எவை என்று கூற பின் எவை என்று புரிய, அப்பனே பின் ஞானிகளும் நிச்சயம் மாமிசத்தை உண்ணக்கூடாது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால் அப்பனே மாமிசத்திற்கு அதிகம் அப்பா ஆற்றல் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக பின் உண்டுவிட்டு திருத்தலத்திற்கு சென்றால் உடனடியாக நிச்சயம் அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் அதாவது தீய பலன்கள் கொடுத்து விடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால்தான் கோயில் போனா என்ன ஆகுது ? மாமிசம் மாமிசம் சாப்பிட்டு போனோம்னா இன்னும் என்ன ஆகுது வந்து? நெகட்டிவ் எனர்ஜி தான் வரும் நெகட்டிவ் எனர்ஜி )
=======================================
# ஏன் திருப்பதி செல்பவர்கள் பயப்படுகின்றார்கள் ?
=======================================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உலகத்தில் சிறந்தது அப்பனே பின் நிச்சயம் ஏழுமலையான் அதாவது பின் நிச்சயம் தன் திருமலையே.
குருநாதர் :- அப்பனே இவ்வாறு கொடுப்பதற்கு அப்பனே பின் எவன், என்ன எதை என்று கூட மனது நினைக்கின்றானோ உடனடியாக கிடைத்துவிடும் தண்டனைகள் அங்கே.
குருநாதர் :- அதனால்தான் பின் அங்கு செல்பவர்களும் பயப்படுகின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப திருப்பதி சிறந்த இடமா இருக்குது. அங்க வந்து நீங்க என்ன வந்து நினைச்சு போறீங்களோ, அது என்ன ஆகும்? உடனே காட்டிடும். கெட்டது நினைச்சு போட்டீங்கன்னா என்ன ஆகும் வந்து அங்கே அங்கே க்ளோஸ் ஆயிடும்.)
அடியவர் :- என்கவுண்டர் தான். (இறைவன் சுட்டு விடுவார்)
============================================
# கேது பகவானையே கட்டுப்படுத்தியவர் யார் ?
============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால் எவை என்று புரிய, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக இன்னும் கூட வரப்போகின்ற பின் மனிதர்கள் நிச்சயம் தன்னில் கூட பின் ஞானவான்கள் ஆகவேண்டும் என்பதற்கு இணங்க நிச்சயம் தன்னில் கூட பின் கேது பகவானையே கட்டுப்படுத்தியவன் இராவணன்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேது பகவானை கட்டுப்படுத்தியவனே இராவணன்.
குருநாதர் :- (கேது பகவான்) இவனை கட்டுப்படுத்தி விட்டால், நிச்சயம் யாம் நிச்சயம் இறைவன் ஆகிவிடலாம் என்ற நினைப்பும் கூட இராவணனுக்கு.
அடியவர் :- ஓ…
சுவடி ஓதும் மைந்தன் :- ( கேதுவை கண்ட்ரோல் பண்ணா? இறைவன் நம்ம கூட இறைவன் ஆகிவிடலாம் என்று, இராவணனுக்கு கேது பகவானை கண்ட்ரோல் பண்ற சக்தியும் அவருக்கு வந்து இருந்தது )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் கிரகங்களின் நிச்சயம் தன்னில் கூட தன்மைகளும் அறிந்து நிச்சயம் தன்னில் கூட எக் கிரகத்திற்கு பின் நேரத்தில் எவை வருகின்றதோ நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட, பின் அதற்கு ஏற்றார் போல், நிச்சயம் மந்திரங்களும் உச்சரித்து, கிரகங்களை கட்டுப்படுத்தி, கிரகங்களால் நிச்சயம் ஒன்றும் ஆகக்கூடாது என்பதை எல்லாம் யோசித்து நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அனைத்து விஷயங்களும் தெரிந்து கொண்டு வைத்திருந்தான் இராவணன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( கிரகங்கள் எந்த இடத்தின் ஜாதகத்தில் வந்தால் , உதாரணமாக ஒரு இதுல ராகு வந்த பிறகு, அது கரெக்டா வரும் பொழுது, என்ன பண்ணனும், அந்தந்த மந்திரங்களால் உச்சரித்து அதை கண்ட்ரோல் பண்ணனும். அதை கண்ட்ரோல் பண்றதுக்கு வந்து இராவணன் சரியா மந்திரங்களை தெரிஞ்சு வைச்சிருந்தார்.)
===========================================
# இராவணேஸ்வரர் ஓலைச்சுவடி ரகசியங்கள்
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட மக்களுக்கு தெரியட்டும். தெரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதையும் கூட சுவடியில் எழுதி வைத்தான் நிச்சயம். அச் சுவடிகள் எதை என்று கூற, இப்பொழுது பின் உடம்பு இருக்கின்றதே, அதன் கீழே உள்ளது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அந்தக் காலத்துல ஓலைச்சுவடிகள்ல எல்லா ரகசியத்தையும் எழுதி வச்சிருந்தார். அந்த மாதிரி ஏகப்பட்ட சுவடிகள் இன்னமும் ராவணனோட உடம்புக்கு அடியிலேயே பத்திரமா இருக்குதாம். குறிப்பா, ஒரு கிரகத்தையே நம்மளோட கட்டுப்பாட்டுக்குள்ள (Control) எப்படி கொண்டு வர்றது, அதுக்கு என்னென்ன மந்திரங்களைச் சொல்லணும்ங்கிற ரகசியமெல்லாம் அந்தச் சுவடிகள்லதான் இருக்கு. மந்திர வித்தைகள், தந்திரங்கள்னு அத்தனையையும் ஓலைச்சுவடியா எழுதி அவரோட உடம்புக்குக் கீழேயே வச்சுட்டாங்க. அந்தச் சுவடிகள் எல்லாம் இன்னைக்கும் அங்கேயே தான் இருக்குது.")
குருநாதர் :- இன்னும் கூட பல வழிகளில் நிச்சயம் கூட இராவணனின் சுவடிகள் ஏராளம் பதிந்து கிடைக்கின்றது இத் தேசத்தில்.
அடியவர் :- (வியப்பில்) அப்பா…..
சுவடி ஓதும் மைந்தன் :- ( நிறைய சுவடிகள் இன்னும் வந்து என்ன ஆகுது வந்து? அது பூமிக்கு எல்லாம் பதிந்து போயிருக்கிறது )
===========================================
# இராவணேஸ்வரர் மருத்துவ ரகசியங்கள்
===========================================
குருநாதர் :- நிச்சயம் ஏன் எதற்காக? தன் அன்னையை காப்பாற்ற பல பல வித்தைகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் எழுதி எழுதி எதை என்று கூட எவ் மருந்து என்று கடைசியில் புரியாமல் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால் எவை என்று புரிய அத்தனையும் நிச்சயம் பல ஆண்டுகள் போராட்டமாகவே நிச்சயம் அனைத்தும் எவை என்று கூற.
குருநாதர் :- பின் ஆனாலும் அவ் மருந்துகள் சரியாகிவிடும். ஆனால் ஈசன் சோதனையே.
சுவடி ஓதும் மைந்தன் :- (புரியுதுங்களா, பல வருஷமா ராவணன் ஒவ்வொரு மருந்தையும் ஆராய்ச்சி பண்ணி வச்சிருந்தாரு. தன்னோட அம்மாவைக் எப்படியாவது காப்பாத்தணும்ங்கிறதுக்காக எந்த நோய்க்கு எந்த மருந்து கொடுக்கணும்னு அத்தனை வித்தையையும் ராவணன் தெரிஞ்சு வச்சிருந்தாரு. எல்லா மருந்தும் சரிதான், ஆனா அது எதுவும் அந்த நேரத்துல கை கொடுக்கல. எல்லாத்தையும் ஓலைச்சுவடியா எழுதி வச்சிருந்தாரு, ஆனா ஈசன் என்ன பண்ணிட்டாருன்னா அவருக்கு ஒரு பெரிய சோதனையை வச்சுட்டாரு. இவரு அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச மருந்துகள் எல்லாம் அந்தச் சோதனையில அந்த மருந்துகள் ஏன் வேலை செய்யாம போச்சு)
குருநாதர் :- நிச்சயம் தன் அன்னைக்காக இவ்வளவு மருந்துகள் எதை என்று புரிய இவை தன் மக்களுக்காக நிச்சயம் தன்னில் கூட பின் அடுத்தடுத்த எவை என்று புரிய நிச்சயம் என்ன தெரிவிக்கின்றான் என்பதை எல்லாம் யான் நிச்சயம் சொல்வேன். அவன் அனுமதி பெற்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (ராவணன் ஏகப்பட்ட மருந்து குறிப்புகளை ரொம்பத் தெளிவா எழுதி வச்சிருக்காரு. அந்த மருத்துவ ரகசியங்கள் எல்லாம் அவர்கிட்ட அப்படியே இருக்கு. வர்ற காலத்துல, அவர்கிட்டயே ஒரு அனுமதியைக் கேட்டுட்டு, அந்த ரகசிய மருந்துகளைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லப்போறேன்.)
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment