​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 February 2026

சித்தன் அருள் - 2117 - அன்புடன் அகத்தியர் - இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 3


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 3

நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 3) 

===================================
# ஒரே குலம் ஒருவனே தேவன் - உலக மதங்களின் மூலாதாரம் இலங்கை 
===================================

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றே என்று நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரே தேவன் பின் எவை என்று கூற. பின் அதாவது ஒரே குலம் ஒருவனே தேவன் என்றெல்லாம் இவ் தேசத்தில் எடுத்துக் கொண்டு வந்தால் மட்டுமே இவ் தேசம் பிழைக்கும் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே கடவுள். 

அடியவர் :- ஒரே குலம், ஒருவனே தேவன். 

==========================================
# மத நல்லிணக்கத்தின் மூலாதாரம் இலங்கை - இங்கு ஆரம்பித்தால் உலகம் அனைத்தும் எதிரொளிக்கும். 
==========================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எது என்று கூற அப்பனே ஏன் எதற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன் என்றால், இங்குதான் மூலாதாரம் நிச்சயம் இங்கு ஆரம்பித்தால் அனைத்தும் எதிரொளிக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("ஓ அப்ப இங்கதான் மூலாதாரம் — இங்க மதக்கலவரம் ஏற்பட்டுச்சுன்னா என்ன ஆகும், உலகம் ஃபுல்லாவே வரும்ல, ஃபுல்லாவே போயிடும். இங்கதான் மெயின் பாயிண்ட் இருக்குது. கதை மெயின் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க, ஆனா இங்கதான் மெயின்.)

அடியவர் :-  எல்லாம் ஒருவனே தேவன் ஒரே 

சுவடி ஓதும் மைந்தன் :- ("ஒரே குலம் ஒரே இதுன்னு போயிடணும்; அப்படி இல்லையென்றால் இங்க மதக்கலவரம் நிறைய வரப்போகுது. அடுத்த காலகட்டத்துல அது வந்துருச்சுன்னா, அடுத்து இங்கிருந்து ஸ்டார்ட் பண்ணோம்னா வேற எங்க போகும் — உலகம் ஃபுல்லாவே போயிடும். )

=======================================
# இலங்கை வாழ் அடியவர்களுக்கு - எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
=======================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதற்காக இங்கு நிச்சயம் பின் எவ்வாறெல்லாம் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்ப மனிதன் என்ன பண்றாரு — மனிதன் வந்து எவ்வாறெல்லாம் இந்த மதக்கலவரத்தை, இந்த மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலேயே இங்க கவனம் போயிருக்கு.)

அடியவர் :-  பிளான் பண்றாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிளான் பண்றாங்க இப்ப இருந்து இங்க மதக்கலவரம் ஏற்பட்டா உலகம் என்ன ஆகும் அழிஞ்சிரும் க்ளோஸ் ஆயிடும்.

========================
# ஒரு தேசத்தின் பேராசை - கற்பனைக்கும் எட்டாத அழிவு சதி.
======================== 

குருநாதர் :- நிச்சயம் இவ்வுலகம் எதை என்று கூறிய பின் தானே பின் எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் மனிதன் எவை என்று கூற ஒரு தேசம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஒரு தேசம் — இங்க இது மாதிரி மதக்கலவரம் கூடிவிட்டு சண்டை ஆச்சுன்னா, எல்லா கண்ட்ரோலும், உலகத்துடைய கண்ட்ரோலும் நம்ம கையில வந்துரும்னு ஒரு நாடு இயங்கி இருக்குது.)

குருநாதர் :- அப்பனே திருந்த வேண்டியது மனிதனே அப்பனே அறிந்தும் கூட. மனிதனுக்கு பின் புத்தி பின் பெரும் பெரும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  (திருந்த வேண்டியது யாரு? மனிதன் தான். அந்த மனிதன் திருந்திட்டான்னா இந்த மதக்கலவரம் நடக்காது, மதக்கலவரம் நடக்காது.)

குருநாதர் :- அப்பனே அறிந்தும் எவை பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அழித்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அடுத்து நிச்சயம் தன்னில் கூட தேசம் நீ எங்கிருந்து வந்தாய் அங்கு அழிவு ஏற்பட்டிருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (இங்க லைனா அழிவு ஏற்பட்டுச்சுன்னா நீங்க எங்கிருந்து வந்தீங்க? — சென்னையிலிருந்து. அங்கிருந்து, அங்கு அடிக்கும், இங்கிருந்து இங்க அடிச்சோம்னா அதுவும் அழியும், தமிழ்நாடும் அழியும், அழியும்.)

குருநாதர் :- நிச்சயம் அவ்வளவு பின் பெரிய பெரிய சக்தி உள்ள (வெடி) மருந்துகள் எல்லாம் மனிதன் இறக்கிடுவான் வருங்காலத்தில் இங்கு நிச்சயம் தன்னில் கூட.  இங்கு அடித்தால் நிச்சயம் கீழிருந்து அழித்தால், மேல்நோக்கிய அனைத்தும் அழிந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா புரியுதுங்களா? ஏன் இங்க அகத்தியர் இங்க இருந்து சொல்றாருன்னு — இங்கிருந்து எல்லாத்தையும் பெரிய பெரிய பீரங்கிகள் வாங்கி வாங்கி இங்க வச்சு, இங்கிருந்து அடிச்சு அழுத்து இலங்கை புடிச்சிட்டா என்ன ஆகும்; தமிழ்நாடு அடுத்து இங்கிருந்து அந்த தேசத்தையும் குறிக்கோள் பண்றாங்க ஐயா, அந்த உண்டு, ஐயா புரியுதுங்களா — டார்கெட் பண்றாங்க. இங்கிருந்து டார்கெட், இங்கிருந்து இங்க அடிச்சோம், இங்கதான் மூலாதாரமே இருக்குது; இங்க டச் ஆகுது, இங்க மதக்கலவை தூண்டிவிட்டு இங்க அடிச்சோம்னா அடுத்து எங்க போகும் — அந்த பீரங்கியோட இது தமிழ்நாடு தான், தமிழ்நாடு தான் முதல்ல எபெக்ட்.)

================================================
# இராவணேஸ்வரரிடம் உள்ள கல் - “எதை நினைத்தாலும் அப்படியே கொடுக்கும்.”
================================================

குருநாதர் :- அப்பனே அறிந்தும் மனிதனுக்கு இவை யெல்லாம் தெரியாமல் போய்விட்டது அப்பனே. இவை தன் ஏன் பின் இப்பொழுது சொல்ல எதை என்று அறிய. அப்பனே பின் இராவணனிடத்தில் அப்பனே பின் எதை என்று கூற, இக்கல் இருக்கின்றதே, இதைத்தன் எப்படி நினைத்தாலும் அப்படியாகவே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இராவணனிடத்திலும் நிச்சயம் தன்னில் கூட இனியும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். அவன் காப்பாற்றுவான். 
சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அப்ப இந்த கல்லும் வந்து நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை கொடுக்கன்றார்; அப்ப இராவணன் வந்து இங்கேயும் இருக்கிறார், வாழ்ந்து கொண்டிருக்கிறார், இன்னும் கூட வந்து இந்த தேசத்தை காப்பாத்துவார், காப்பாத்தணும்." )
அடியவர் :- இராவணன் காப்பாத்திக் காப்பாத்திக் கொண்டிருக்கிறார் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இனிமேலும் காப்பாத்துவார். காப்பாத்துவாரு. 

======================================
# “இராவணனே தேசம் அழியாதபடி காப்பாற்று”
# கலியுக ரகசியங்கள்: புதைக்கப்பட்ட வரங்கள், பாதுகாக்கப்பட்ட வருங்காலம்”
======================================

குருநாதர் :- இதனால்தான் எதை என்று கூற பின் இராவணனின் தாய்  நிச்சயம் தன்னில் கூட, பின் இவ் ஞானியர்களுக்கு நிச்சயம் அமர்ந்து, நிச்சயம் பல வகைகளிலும்   கூட பின் இவ்வுலகம் அழிவுக்கு  சென்று விடும். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட இராவணனே!!!!! நிச்சயம் தன்னில் கூட என் பக்தி அதாவது ஈசன் மீது அவ்வளவு பக்தி. அனைத்தும் உனக்கு சொல்லித் தந்து, ஞானிகளுக்கும் பின்  சொல்லித் தந்து, நிச்சயம் என்னுடைய ஆற்றலை உனக்கு தருகின்றேன். 

இத்தேசத்தில் எது என்று கூட பின் காப்பாற்று. எப்பொழுதும் எது என்று அறிய பின் நிச்சயம் உடம்பு பெறாவிடிலும் காப்பாற்று நிச்சயம் தன்னில் கூட. 

பல வகைகளில் கூட, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் பின் தங்கம், பின் வைரம்,  வைடூரியம், இன்னும் எது என்று அறிய தானாக நிச்சயம் வரவழைப்பது என்று சொல்லி நிச்சயம் புதைத்து வைத்துவிடு. 

வருங்காலத்தில் கலியுகத்தில் எதை என்று புரிய, எதை  என்று அறிய, பல போராட்டங்கள் மனிதன் படுகின்ற பொழுது இவை மனிதனுக்கு நிச்சயம் முக்கியமானதாக அமைந்து, விற்று பிழைத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் பின் நிச்சயம் என் தாயவளே .

================================
வாக்கு சுருக்கம் :- இராவணனின் தாய், ஞானிகளுடன் அமர்ந்து, உலகம் அழிவை நோக்கிச் செல்லும் காலத்தைப் பற்றி எச்சரிக்கிறார். அவள் தனது பக்தி, ஈசனின் அருள், தன்னுடைய ஆற்றல் அனைத்தையும் இராவணனுக்கு அளித்து, இந்த தேசத்தை எது வந்தாலும் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்—even உடம்பு இல்லாவிட்டாலும் காப்பாற்ற வேண்டும் என்கிறார். தங்கம், வைரம், வைடூரியம் போன்ற அரிய பொருட்களை வருங்கால கலியுகத்தில் மனிதன் போராட்டங்களில் சிக்கும்போது அவை அவனுக்கு உதவியாக இருக்கட்டும் என்பதற்காக புதைத்து வைக்கச் சொல்கிறார். மனிதன் எதிர்கொள்ளும் துன்பங்களின் நேரத்தில் இவை அவனுக்கு முக்கியமான ஆதாரமாகி, அவன் பிழைத்துக் கொள்ள உதவட்டும் என்று தாயின் அருள் நிறைந்த ஆசீர்வாதம் வெளிப்படுகிறது.
=================================

அடியவர் :- (வியப்புடன்) அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  ("அப்ப சொல்றார்—இந்த உலகம் இப்படி எல்லாம்…கலியுகம் தொடங்கிருச்சு, இப்படித்தான் எல்லாரும் வாழ்ந்துக்கிறாங்க. அப்ப இது மாதிரி நிறைய அழியும், கஷ்டம் வரும். அதனால நீ வந்து, நான் என்னுடைய பக்தி எல்லாம், எப்படி வாழணும்னு சொல்லிட்டு, உனக்கு கொடுத்துட்டு போயிடுறேன்; நான் உனக்கு கொடுத்துறேன். அப்ப நீ என்ன பண்ணு—தங்கம், வைரம் அது எப்படின்னு சொல்லிக்கொடுக்கிறேன், அதெல்லாம் புதைச்சிட்டு போயிடு. பின்னர் காலத்துல அதை எடுத்துக்கிட்டு மனுஷனை விற்று  வாழ்ந்துட்டு  போகட்டும்)

குருநாதர் :- ஆனாலும் இப்பொழுதும் இத்தேசம் எப்பொழுதோ அழிந்திருக்கும். அதை விற்று நிச்சயம் பிழைத்துக் கொண்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இந்த தேசம் எப்போ என்ன ஆயிருக்கும்—அழிஞ்சு போயிருக்கும்; ஆனா அதை எடுத்துக்கிட்டு மனுஷன் சில சில இடங்கள்ல என்ன பண்ணான், வித்து பொழைச்சுக்கிட்டான், வித்து பொழைச்சுக்கிட்டான்.)

குருநாதர் :- ஆனாலும் எதை என்று புரிய மீன் ஒருத்தனே அனைத்தும் அனுபவிக்க நேரிட்டான். ஆனாலும் இராவணன் விடவே விடவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஆனாலும் ஒருத்தன் என்ன பண்ணாராம்—அவரே அனுபவிக்கணும், அவரே அனுபவிக்கணும்; நம்பே அனுபவிக்கணும், ஆனா இராவணன் விடல….)

===========================================
# ஒரு ரகசியம் :- இராவணேஸ்வரரிடம் , இலங்கையில் இருக்கும் இரத்தினங்கள் - உலகத்தையே காக்கும் வல்லமை கொண்டது.
============================================

குருநாதர் :- அப்பனே ஒரு ரகசியத்தை சொல்கின்றேன். இங்கு இருக்கும் இரத்தினங்கள் இவ்வுலகத்திற்கே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பின் எவை என்று அறிய போய் , எவை என்று அறிய எதை என்று புரிந்தும் கூட நிச்சயம் பின் உலகத்தையே காக்கும் 

அடியவர் :- (வியப்புடன்)  ஓ… அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  (இங்க இருக்கிற இரத்தினங்கள் உலகத்தை காக்கக்கூடியது; அதை எடுத்தாவே என்ன ஆகும்—உலகத்தையே சாப்பாடு போடலாம். விலை மதிப்பில்லாதது, விலை மதிப்பு.)

அடியவர் :-  விலை மதிப்பில்லாதது 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இங்க இருக்கிற இரத்தினங்களும் அவ்வளவு இருக்குதுப்பா. அது விலை மதிப்புக்கு இல்லாதது …) 

=============================================
# நீங்கள் என்ன கேட்டாலும் தரும் கல் - இராவணேஸ்வரரிடம் உள்ளது 
=============================================

குருநாதர் :- நிச்சயம் இன்னும் இராவணன் பின் கல். எதை என்று கூற இருக்கின்றது அக்கல் பின் நீங்கள் என்ன கேட்டாலும் தரும். ஆனாலும் அது எங்கு உள்ளது என்பதெல்லாம் யார் அறிவேன் அதை தன் மனிதனுக்கு சொன்னாலும் நிச்சயம் அதை தன் பெற்றுக்கொண்டு, எதை என்று அறிய என்னென்னவோ செய்துவிடுவான். அதனால்தான் இன்னும் இன்னும் சொல்லிச் சொல்லி அதையும் காட்டுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஒரு சின்ன கல், அந்த கல்லு நம்ம என்ன கேட்டாலும் தருமாம்; அதுவும் எந்த தேசத்துல இருக்குது? இங்கதான் இருக்குது. அப்ப பிழைப்பதற்கு அவங்க அம்மா கொடுத்துட்டு போயிட்டாங்க; இராவணனுடைய அம்மா. வந்து ‘இது மாதிரி எல்லாம் இருப்பா, இது மாதிரி இருக்குது, இருப்பான்’ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.)

அடியவர் :-  (அதனால அந்த கல்லை இப்ப நான் சொல்லிடுவேன்; சொன்னா மனுஷன் அதை வச்சு என்ன கேட்டாலும் , அதைத் தரும். அதனால இப்ப நான் சொல்லல ) 

======================================
# அன்பு குருநாதர் ரகசியங்கள் இன்னும் நமக்கு தெரிவிக்க - இராவணேஸ்வரரின் தாயிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும் 
=====================================

குருநாதர் :- எதை என்று புரிய ஆனாலும் இவையும் கூட சிவபக்தியான இராவணன் பின் தாயிடமே முறை கேட்டுத்தான் யான் செப்ப வேண்டும். அதனால்தான் இங்கிருந்து யான் செப்பிக் கொண்டிருக்கின்றேன். 

அடியவர் :- ஓ…. 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய அப்பனே யாரும் அடிக்கடி சந்திப்பேன், இங்கு வந்து. 

அடியவர் :- ஓ…. 

அடியவர்கள் :- ( சிலாகிப்புகள் , கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அகத்தியர் கூட 

அடியவர் :-  இராவணன் அம்மாவை பார்க்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடிக்கடி வந்து பார்ப்பாராம், அப்பொழுதே …( முன்பு )

=============================================
# அன்பு குருநாதர்,  திருகோணமலையில்  அமைத்த பல ஆராய்ச்சி கூடங்கள்
=============================================

குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே பல வடிவங்களில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல கண்டுபிடிப்புகள்  அப்பனே பின் இதன் கீழே நிச்சயம் தன்னில் கூட. ஆராய்ச்சி நிலைகள் (ஆராய்ச்சி கூடங்கள்) எல்லாம் யான் நிச்சயம் தன்னில் கூட நிறுவி இருந்தேன்  பின் உலகம் எப்படி எது என்று எல்லாம் அப்பனே அறிவின் (அறிவியல்) வழியாக. அதெல்லாம் அப்பொழுது அப்பொழுது அங்கு சென்று விடுவேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ("அப்ப என்ன பண்ணுவாரு—அறிவின் வழியா இங்க எல்லாம் கீழே நிறுவி இருந்தாராம்; யாரு? அகத்தியர். ஆராய்ச்சி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அமைச்சிருந்தாராம், கீழே எல்லாம் அமைச்சிருந்தாராம். இப்படி எல்லாம் மனிதன் வந்து உலகம் எப்படி இருக்குது, உலகம் எப்படி அழியப்போகுது, எப்படி இது பண்ணப் போகுது என்று அடிக்கடிக்கும் இங்க வந்து ஆராய்ச்சி பண்ணுவேன்  என்றார்.)

===============================================
# திருகோணமலை, இலங்கை  - “பல ஞானிகள் வாழ்ந்த பூமி இது”
===============================================

குருநாதர் :- எதை என்று புரிய எவை என்று அறிய அறிய இன்னும் பல ஞானிகள் பற்றி சொல்கின்றேன் இங்கே. நிச்சயம் இதனால் தாயவள் , இன்னும் கூட பல ஞானிகள் பற்றி தெரியாமலே இருக்கின்றது. 

பல ஞானிகள் வாழ்ந்த பூமி இது நிச்சயம் தன்னில் கூட. 

===============================================
# அனைவருக்கும் அவ் சக்திகள் கிடைக்கட்டும். உங்கள் மனம் போலே ஆகட்டும்.
===============================================

குருநாதர் :- அனைத்தும் யான் சொல்லிவிடுவேன் நிச்சயம் தன்னில் கூட.  

அனைவருக்கும் அவ் சக்திகள் கிடைக்கட்டும் நிச்சயம் தன்னில் கூட மனம் போலே ஆகட்டும். 

அதனால்தான் ஏன் எதற்கு நிச்சயம் உங்களிடத்தில் யார் அதாவது சொல்வேன் என்றால் பைத்தியக்காரனா என்ன இவ் அகத்தியன்? 

அடியவர் :-   (சிவ சிவா) இல்ல இல்ல ….

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அகத்தியர் என்ன சொல்றாரு—இதெல்லாம் யாருக்கு உங்க கையில சொல்லணும்? நான் என்ன  பைத்தியக்காரனா? ; அகத்தியர் வந்து  சொல்றார். ஏன்னா இது வந்து தொடர்ந்து பல ஞானிகள் வாழ்ந்த பூமி )

==================================
# அவ்  ஞானிகளை பற்றி தெரிந்து கொண்டாலே நிச்சயம் உங்களுக்கு சக்தி கிட்டும்.
==================================

குருநாதர் :- அனைத்து ஞானிகளும் இங்கு தேடி எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. எதற்காக வந்தார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அவ் ஞானிகளை பற்றி தெரிந்து கொண்டாலே நிச்சயம் உங்களுக்கு சக்தி. அதாவது தெரிவிக்கின்றேன். 

===================================
# நால்வர் (சமயக்குரவர்) - சைவ சமயத்தின் தூண்கள் சக்தி  -  - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்), மற்றும் மாணிக்கவாசகர் 
===================================

குருநாதர் :-  நால்வர்கள் பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டு அவர் பாடல்களை பாடிக்கொண்டே இருக்கின்றீர்கள் அல்லவா? அவர் சக்தியும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றது. 

குருநாதர் :-  இதனால் பல ஞானிகள் நிச்சயம் இருக்கின்றார்கள் அவர்களை தொழுகின்றார்கள் நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் தன்னுடைய சக்தியை கொடுக்க கிடைக்கின்றது அல்லவா? 

=========================================
# அன்பு குருநாதரின் கருணையால் - உங்கள் சக்திகள் கூடும் ரகசியங்கள் 
=========================================

குருநாதர் :-  அதேபோலத்தான் இன்னும் நிச்சயம் பின் மறைந்த பின் ஞானியர்கள் இருக்கின்றார்கள் அவர்களைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட பின் தெளிவு பெற்றால் நீங்களும் நிச்சயம் தன்னில் கூட, பின் தெளிவு பெற்று, நிச்சயம் சக்தி உள்ளவராக மாறுவீர்களாக. இன்னும் எதை என்று புரிய, அனைத்தும் புரிந்து கொண்டால்.

======================================
# நிச்சயம் மூலிகைகள்  பற்றி சொல்வேன் 
======================================

குருநாதர் :-  நிச்சயம் மூலிகைகள்  பற்றி சொல்வேன் எதை என்று கூற அறிந்தும் கூட இதனால் கவலையே வேண்டாம். 

============================
# சிவபுராணத்தை ஓதுங்கள்.
============================

குருநாதர் :-  நிச்சயம் மீண்டும் பின் பரப்புகின்றேன். நிச்சயம் பின் சிவபுராணத்தை ஓதுங்கள்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment