​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 February 2026

சித்தன் அருள் - 2099 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வர சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5

நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99

அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.

========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5)

================================================
# பல உண்மைகள் தெரிந்தால் , மனிதனுக்கு தான் என்ற எண்ணம் வராது 
================================================ 

குருநாதர் :- அப்பனே, நல்முறையாகவே. இவ்வாறாகவே, அப்பனே, பல உண்மைகள் இவ்வுலகத்தில் புதைந்து கிடைக்கின்றதப்பா. 

குருநாதர் :- ஆனாலும், அப்பனே, அவையாவும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு, அப்பனே, பின் சொல்லிவிட்டால், அப்பனே, மனிதன், அப்பனே, பின் எவ் எதை என்றே, அப்பனே, பின் அதாவது தான் என்ற எண்ணம் நிச்சயம் தன்னில் கூட வளராதப்பா. 

குருநாதர் :- இதைத்தான், அப்பனே, சித்தர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் ஞானிகளும், அப்பனே, பின் விரும்பினார்கள் என்பேன், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்போ, மனிதனுக்கு நல்லது சொல்லணும். அப்படி நல்லது சொல்லிட்டே இருந்தோம்னா, அந்த "தான்" என்ற—
அடியவர்:-  "தான்" என்ற அகங்காரம் போய்விடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால மக்கள் என்ன பண்ணுவாங்கன்னா, "அவரும் நம்மைப் போலத்தான், நாமளும் அவரோட சொந்தம் பந்தம் தான்" அப்படின்னு நினைப்பாங்க. அப்போ எல்லாரையும் ஒண்ணா—
Speaker 2:- சேர்க்கிறாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- அதான். எல்லாரையும் ஒரே மாதிரியா பார்க்கணும். சில உண்மைகளை எடுத்துச் சொல்லிட்டா மனுஷனுக்குப் புரிஞ்சிடும். "இதுதான்டா உலகம்" அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு, எல்லாரும் நல்ல முறையா வாழ்வாங்க.
குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல வழியில் கூட ஞானிகள் வந்து, வந்து, அப்பனே, பின் மக்களுக்கு தெரியப்படுத்தி, தெரியப்படுத்தி, அப்பனே, பல புத்தகங்களையும் கூட எழுதி வைத்தனர் என்பேன் அப்பனே, நிச்சயம் தர்மத்தை கடைபிடிக்க என்று அப்பனே. ஆனாலும் கலியுகத்தில், அப்பனே, அவையெல்லாம், அப்பனே, யாரும், அப்பனே, பின் கடைபிடிப்பதே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:- (அப்போ அதனாலதான் பல ஞானிகள் எல்லாம் என்ன பண்ணாங்கன்னா, பல புத்தகங்கள் மற்றும் சுவடிகளை எழுதி வச்சு, "இதை நீங்க ஃபாலோ பண்ணுங்க" அப்படின்னு சொல்லி இருக்காங்க. "இப்படி எல்லாம் ஃபாலோ பண்ணீங்கன்னா இந்த உலகத்துல நல்லா வாழலாம்; தர்மத்தைக் கடைபிடிங்க, தர்மத்தைக் கடைபிடிங்க" அப்படின்னு ஞானிகள் சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஆனா, யாருமே அதைச் சரியா கடைபிடிக்கிறது இல்லை.) 

குருநாதர் :- நிச்சயம் அவர்கள் எல்லாரும் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் எது என்று கூற, பின் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இறைவனைச் சொல்லியே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எழுதினார்கள் என்பேன் நிச்சயம் தன்னில் கூட .

சுவடி ஓதும் மைந்தன்:-  (அவங்க எல்லாம் இதச் சும்மா சாதாரணமா எழுதல. எதுக்காக எழுதினாங்கன்னா, இறைவனே அவங்ககிட்ட சொல்லி, "நீ போய் இதையெல்லாம் எழுதிட்டு வா" அப்படின்னு அனுப்பி வச்சாரு. "நீ போய் இதையெல்லாம் எழுதிட்டு வந்தாதான், மக்கள் அதைப் பார்த்து நல்ல வழியில வாழ முடியும்" அப்படின்னு இறைவன் கட்டளையிட்டதால தான், அவங்க இவ்வளவு விஷயங்களையும் நமக்காக எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்க.)

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக நிச்சயம் கடைபிடி கடைபிடிக்கவில்லையே அவையே என்றால் நிச்சயம் பின் மனிதன் எப்படி வாழ்வான் நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன்:-  (அவ்வாறு (ஞானிகள்) எழுதியதையே மனுஷன் சரியா கடைபிடிக்காமலும், சரியான நெறிமுறை இல்லாமலும் வாழ்ந்தா, அப்புறம் அவன் எப்படித்தான் வாழ்வான்? அவனோட வாழ்க்கை எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட மனுஷன் உருப்படியா வாழ்றதுக்கு வேற என்னதான் வழி இருக்கு?)

குருநாதர் :-  தீய குணத்தோடே  நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய இன்னும் கூட எதை என்று அறிய பின் பொய் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஆன்மீகத்திலிருந்தே பொய் சொல்வான் மனிதன் 

சுவடி ஓதும் மைந்தன்:-  (எங்க பொய் தொடங்குது தெரியுமா? ஆன்மீகத்தில்தான். ஆன்மீகத்திலிருந்தே ஒரு மனுஷன் பொய்யைத் தொடங்குகின்றான். அதாவது, இறைவழியில் நடப்பதாகச் சொல்லிக்கொண்டே அங்கிருந்தே தனது பொய்களையும் ஆரம்பிக்கிறான்.)

குருநாதர் :-  ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட இறைவன் பார்க்க பார்க்கவா போகின்றான் நிச்சயம் தன்னில் கூட எங்கே? பின் அதாவது இறைவன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின். 

சுவடி ஓதும் மைந்தன்:-  (அதாவது, நாம ஏதோ ஒன்னு பேசுவோம், யாரையாவது ஏமாத்துவோம். "இறைவன் இதையெல்லாம் பார்த்துக்கிட்டா இருக்காரு? அவர் பார்க்காம விட்டுடுவாரு" அப்படின்னு நம்ம நினைச்சுக்கிறோம். ஆனா, நாம செய்யுற எல்லாத்தையும் அவர் கவனிச்சுட்டுதான் இருக்காரு.)

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட அதாவது அனைத்தும் பின் அதாவது பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இயங்குது என்று என்றால் அதற்கு மூலாதாரம் இருக்க வேண்டும் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  (இந்த உலகத்துல எல்லாமே இயங்குதுன்னா, அதுக்கு ஒரு சக்தி இருக்கணும். இப்ப ஒரு கோயில் இயங்குதுன்னா, அதை நிர்வகிக்க யாராவது ஒருத்தர் இருக்கணும். அதே மாதிரி நாம இயங்குறோம்னா, நம்மையும் ஏதோ ஒரு சக்திதான் இயக்குது. ஆனா, "நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கு" அப்படிங்கிறதை மனுஷன் யோசிக்கவே மாட்டேங்குறான்.)

==============================================
# 11 வருட நல் வாழ்க்கை ரகசியங்கள் - இன்றே ஆரம்பியுங்கள் 
==============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் அதனால் ஏன் சிலருக்கு கஷ்டங்கள்? ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட எவை என்று சிலருக்கு இன்பம் என்று யோசித்தீர்களா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன்:-  (நம்மளைப் பத்தி நாமளே யோசிச்சுப் பார்க்கணும். இந்த உலகத்துல சில பேர் ஏன் எப்பவுமே கஷ்டப்படுறாங்க, சில பேர் ஏன் ரொம்ப இன்பமா இருக்குறாங்கன்னு நாம என்னைக்காவது சிந்திச்சிருக்கோமா? அந்த வேறுபாடு ஏன் வருதுன்னு யோசிக்கணும்.)

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இன்பத்திலிருந்து பின் துன்பத்திற்கும் வரலாம் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன்:-  (இன்பமா இருக்கும்போது எல்லாரும் ரொம்ப ஜாலியா இருக்குறாங்க. ஆனா, அந்த இன்பத்தை அனுபவிச்சுட்டே இருக்கும்போது ஏன் திடீர்னு துன்பம் வருது? நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருக்கும்போது திடீர்னு என்ன ஆகுது? அது ஏன் வருதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்காங்களா?)

==============================================
#  உங்கள் 11 வருட நல் சேவை வாழ்க்கை. இன்றே ஆரம்பியுங்கள். 11 வருடங்கள் கழித்து உங்கள் தலைமுறை ஓங்கி வளர்வதை  நீங்களே காணலாம். 
==============================================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் இறைவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றான். அவ் சந்தர்ப்பத்தை நிச்சயம் தன்னில் கூட பின் 11 ஆண்டுகள் பார்ப்பான். 

குருநாதர் :-  பின் நிச்சயம் 11 ஆண்டுகளில் பின் நல்லதே செய்தால் நிச்சயம் தன்னில் கூட பின் அப்படியே உங்கள் வாரிசுகள் பின் வளர்ந்து கொண்டே போகும். நிச்சயம் அவ் 11 ஆண்டுகளில் நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் பின் தீவை செய்தால், நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் பின் அதோடு நிச்சயம் தன்னில் ஒரு நிச்சயம் தன்னில் கூட பின் அவன் பின் எதை என்று கூற பின் எதையுமே வளராது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  (இறைவன் எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பார். அந்தச் சந்தர்ப்பம் ஒரு பதினோரு ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தப் பதினோரு வருஷத்துல இறைவன் கொடுக்கிற சான்ஸை சரியா பயன்படுத்திக்கிட்டு, மனுஷன் தொடர்ந்து நல்லது மட்டுமே செஞ்சுகிட்டு இருக்கணும். அந்த அற்புதமான சந்தர்ப்பம் ஒரு பதினோரு ஆண்டுகள் வரை நமக்குக் கிடைக்கும். 

அந்தப் பதினோரு வருஷத்துல இறைவன் கொடுத்த வாய்ப்பை உணர்ந்து, நாம தொடர்ந்து தர்மத்தையும் நற்பண்புகளையும் வளர்த்துக்கணும். அப்படி நல்ல பாதையிலயே பயணிச்சா, நம்ம வாழ்க்கையும் நம் சந்ததியினரும் சீரோடும் சிறப்போடும் நிலைத்து வாழ்வாங்க. அந்த காலக்கட்டத்துல வர்ற சோதனைகளைத் தாண்டி நன்மைகளை மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தா, இறைவன் நம்முடைய செல்வாக்கையும் வளத்தையும் இன்னும் பன்மடங்கு உயர்த்தி, தொடர்ந்து அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை நமக்குக் கொடுப்பார்.

அப்படி அவன் செய்யலன்னா, அவன் இந்த உலகத்துல ஒரு சின்ன இடத்துல கூட நிலைச்சு நிக்க முடியாதுங்க ஐயா. அவன் வம்சமே அழிஞ்சு போயிடும். அந்தப் பதினோரு வருஷ வாய்ப்பைப் பயன்படுத்தாம, தலைக்கனத்துல ஆடுனான்னா அவ்வளவுதான்; போகப் போக அவன்கிட்ட இருக்குற செல்வாக்கு, சொத்துன்னு எல்லாத்தையும் இறைவன் எடுத்துடுவாரு. அப்புறம் ஒண்ணுமே இல்லாம போயிடும்.)

குருநாதர் :-  இதனால்தான் இறைவனை நிச்சயம் அப்பொழுது வருவார்கள் இறைவனை தேடி தேடி நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது 
சுவடி ஓதும் மைந்தன்:- மனுஷன் கஷ்டம் வரும்போது மட்டும் கோயில் கோயிலா போவான். ஆனா இறைவன் அப்போ பார்க்க மாட்டார். ஏன்னா, முன்னாடி கொடுத்த அந்த 11 வருஷ அவகாசத்துல நீ உருப்படியா நல்லது செஞ்சியான்னு தான் அவர் பார்ப்பார்.
அடியவர்:- ஆனா இதெல்லாம் மக்களுக்காகச் செய்றாங்கன்னு தான எடுத்துக்கணும்?
==============================================
# வாக்குகள் ஏன் அங்கங்கு வாசிக்கப்பட்டு , மக்களுக்கு வழங்கப்படுகிறது ?
==============================================
சுவடி ஓதும் மைந்தன்:- அதான் சொல்றேன். மக்களுக்குத் தெளிவுபடுத்தத்தான் இந்த விஷயங்களை எல்லாம் படிச்சு, பதிவு செஞ்சு எல்லா இடத்துக்கும் கொண்டு சேர்க்கிறோம். ஏன் அகத்தியர் இதையெல்லாம் பொதுவான இடத்துல சொல்லாம, இந்த குறிப்பிட்ட இடத்துல வந்து சொல்றாரு? ஏன்னா, சில இடங்கள்ல ஒரு தனித்துவமான ஆற்றல் (Vibration) இருக்கு. அங்க சொல்லப்படுற வாக்குகள் என்னைக்குமே அழியாது; காலத்துக்கும் அப்படியே பதிஞ்சு நிக்கும். சித்தர்கள் அவங்க ரொம்ப யோசிச்சு தான் அந்தந்த இடத்தைத் தேர்வு செய்றாங்க. இந்த இடத்துல இருக்குற சக்தியால, இந்த வாக்குகள் ஆயிரம் வருஷம் ஆனாலும் மறையாம மக்கள்கிட்ட போயிட்டே இருக்கும்.
அடியவர்:- ஆமா, இது கேதுவுடைய ரொம்ப முக்கியமான ஸ்தலம்னு அகத்தியர் முதல்லயே சொல்லிட்டாரே!
சுவடி ஓதும் மைந்தன்:- அதான் விஷயம்! வீட்ல உட்கார்ந்து கூட இதைப் படிக்கலாம், ஆனா அந்த சக்தி கிடைக்காது. எங்கெங்க சக்தி இருக்கோ, அங்க போய் சொன்னாதான் அந்த வாக்குகள் நிலைச்சு நிக்கும். இங்க கேதுவோட ஆதிக்கம் அதிகமா இருக்குறதுனால, இங்க சொல்லப்படுற விஷயங்களுக்கு வீரியம் அதிகம். அதனால தான் மக்கள் இதைத் தேடிப் படிச்சு நல்வழியைப் பின்பற்றுவாங்க.
====================================================
# ஏன் படி படியாக , உண்மைகளை சித்தர்கள் சொல்கின்றார்கள் ?
====================================================

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே எதை என்று புரிய, இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூ,ட அப்பனே அறியாமலும் பின் புரியாமலும், எதை என்று அறிய, அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எதை என்று புரிய இன்னும் இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மைகளை சொன்னால், அப்பனே பின் நிச்சயம் நம்புவானா என்ன அப்பனே நிச்சயம் தன்னில் கூட? இதனால் அப்பனே பின் உண்மைகளை பின் சில உண்மைகளை தெரிய வைத்து நிச்சயம் சொன்னால்தான் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- (சில பெரிய பெரிய ரகசியங்களையும், தத்துவங்களையும் எடுத்தவுடனேயே சொல்லிட்டா மனுஷன் அதை நம்பவே மாட்டான். அவனுக்கு அது புரியவும் புரியாது. அதனாலதான் முதல்ல சின்ன சின்ன விஷயங்களை, அவனுக்குத் தெரிஞ்ச உண்மைகளைச் சொல்லணும். அப்படிச் சொல்லும்போது தான் அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும். அந்தச் சின்ன விஷயங்கள் மூலமா நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் தான், நாம சொல்ல வர்ற அந்தப் பெரிய விஷயங்களை அவன் நம்ப ஆரம்பிப்பான். அதனால தான் முதல்ல நாம சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்து ஆரம்பிக்கிறோம்.)

குருநாதர் :-  எவை எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் மூளையில் நிச்சயம் தன்னில் கூட உள்ள செல்களும் எதை என்று கூற எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இவை தன் அறியா நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட இவை தன்  பின் புரிய நிச்சயம் தன்னில் கூட கேதுவிலும் கூட உள்ளது. 


===========================================
# சுவடியில் அபிஷேக நீர் …தானாக விழுந்தது 
===========================================
சுவடி ஓதும் மைந்தன்: (நம்ம உடம்புல இருக்கிற அந்தச் செல்கள் இருக்குல்ல, அது ஒரு விசேஷமானது. இந்த ஜீவநாடிங்கிறது நீங்க எதையும் கேட்கவே தேவையில்லை, அவரே எல்லாத்தையும் சொல்லுவாரு.) 
அடியவர்: ஐயா, கொஞ்சம் பாருங்க... அப்பாவோட (ஈசனின்) அபிஷேகத்தைப் பார்த்தீங்களா?
சுவடி ஓதும் மைந்தன்:- (எப்போ வரணுமோ அது தானா வருது. பாருங்க, ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் இப்போ இந்த ஓலைச் சுவடியிலேயே விழுந்துடுச்சு! அவ்வளவுதான். அவர் என்ன நினைக்கிறாரோ அதை அவரே நடத்திப்பார். நாம எங்க போகணும், என்ன பண்ணணும்ங்கிறதை அவரே பாத்துப்பார். நாம செய்ய வேண்டியது அந்தச் சுவடியைப் படிக்கிறது மட்டும்தான்.)
=====================================================
# ஒருவரை வெற்றி பெறச் செய்வதும் அல்லது தோல்வியைத் தழுவச் செய்வதும் அவரவர் எண்ண ஓட்டங்களே. 
======================================================
#இதனை ஆளுமை செய்யும் கிரகமான கேது, ஒருவரது கர்மாவையும் எண்ணத்தையும் பொறுத்து எதனை எப்போது கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்.
======================================================

குருநாதர் :-  இதைத்தன் உருவாக்க பல வழியில் கூட, நிச்சயம் தன்னில் கூட. இதனால் நிச்சயம் தன்னில் கூட. ஏற்றங்கள் பல வழியில் கூட. இதனால் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனை நிச்சயம் தன்னில் கூட மூளையில் உள்ள சில சில பின் இன்னும் உயிர்களுக்கு கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதேபோல் நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட பின் கேதுக்களில் கூட, நிச்சயம் நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, நன்மையாக நினைத்துக் கொண்டே இருந்தால், நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் பன்மடங்கு பின் மெதுவாக நல்லதே நடக்கும். 

பின் அதாவது நிச்சயம் தீவையாக பின் நிச்சயம் நினைத்துக் கொண்டு வந்தாலே, நிச்சயம் தன்னில் கூட தீவையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூட, பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் பன்மடங்கு பின் கொடுத்து, உனை பின் அதையே பின் அதாவது வெற்றி பெற செய்வதும், நிச்சயம் தன்னில் கூட பின் தோல்வி பெற செய்தலும், நிச்சயம் பின் கேதுவுடைய கிரகமே அறிந்தும் எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன்:- ("ஐயா, கேது கிரகத்தோட வேலையே ஒருத்தரை உச்சத்துல கொண்டு போய் வைக்கிறது, இல்லைன்னா அப்படியே தலைகீழா இறக்குறது தான். இது எப்படி வேலை செய்யுதுன்னா, நம்ம மூளையில பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கு, நிறைய செல்கள் இருக்குதுங்க. இந்த நுண்ணிய செல்களுக்கும் கேதுவுக்கும் ஒரு நேரடி கனெக்ஷன் இருக்கு.
நீங்க எதை நினைக்கிறீங்களோ, அது அந்த செல்கள் மூலமா அப்படியே 'பிரேக் அவுட்' ஆகிட்டே இருக்கும். நீங்க நல்லதையே நினைச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா, அது ஒரு நாள் உங்களை வேற லெவலுக்குக் கொண்டு போய் நிறுத்திடும். அதே மாதிரி தப்பான விஷயங்களையோ இல்ல தீயவையோ நினைச்சீங்கன்னா, அதுவே ஒரு நாள் உங்களை மொத்தமா அடிச்சு விட்டுடும் (கீழ தள்ளிரும்).
அதனால, நம்ம நல்லா வாழ்றதும் சரி, வீழ்றதும் சரி... எல்லாமே நம்ம கையில தான் இருக்குதுங்க ஐயா!")
==============================================
# ஏன் இவ்வளவு ஞான உபதேசங்கள், ஞான நூல்கள் ?
==============================================

குருநாதர் :-   இதனால்தான் இத்தனை எதை என்று அறிய ஞான உபதேசங்கள் கூட எத்தனை நூல்கள் எத்தனை நூல்கள் 
சுவடி ஓதும் மைந்தன்:- ("ஐயா, இதனாலதான் உலகத்துல இத்தனை ஞான உபதேசங்களும், எக்கச்சக்கமான ஆன்மீக நூல்களும் புத்தகங்களும் இருக்குதுங்க. இதெல்லாம் ஏன் இருக்குன்னு யோசிச்சீங்களா?
நீங்க நல்ல விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே வந்தீங்கன்னா, அது உங்க மனசுல ஆழமாப் போய் 'சேவ்' ஆகிடும். இப்ப உதாரணத்துக்கு, திருவாசகத்தைத் தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா என்ன ஆகும்? அந்த பக்தி உங்க மனசுல பதிஞ்சு, தானாவே இறைவனோட அருள் உங்களுக்குக் கிடைச்சிரும் ஐயா.
ஆனா, அதே நேரத்துல நீங்க வேற மாதிரி தப்பா யோசிச்சீங்கன்னா, அந்த எண்ணமே உங்களுக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்கி அழிவையும் தந்துரும். நீங்க எதை அதிகமா யோசிச்சு எதைச் செய்யறீங்களோ, அதுதான் ஒரு நாள் உங்களுக்குப் பெரிய வெற்றியைத் தரும். எது பண்ணாலும் அது உங்க எண்ணத்தைச் சார்ந்துதான் இருக்குதுங்க ஐயா!")
=============================================
# புத்தகங்கள் மூலம் , அதனை தொடர்ந்து படித்து, இறை பலம் பெற்றுவிட்டால் அனைத்தும் பின் சிறப்பாக நடக்கும். அனைத்து வெற்றிகளும் உண்டு.
==============================================

குருநாதர் :-  நிச்சயமே இவ் புத்தகங்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் இறை பலம் பெற்றுவிட்டால் அனைத்தும் பின் சிறப்பாக அனைத்து வெற்றிகளும் உண்டு.

சுவடி ஓதும் மைந்தன்:- ஏன் இவ்வளவு புத்தகங்கள் ஏன் இதுன்னா இறைபலத்தை நீங்க முதல்ல பெற்றுட்டீங்கன்னா அடுத்து என்ன ஆகுது அனைத்து வெற்றியும் அனைத்து வெற்றியும் கிடைக்கும். 

குருநாதர் :-  நிச்சயம் பின் இறை எதை அருளை பெற நிச்சயம் தன் இவ்வாறு புத்தகங்கள் ஓத ஓத நிச்சயம் சில துன்பங்கள் நேரிடலாம். ஆனால் மனிதன் அத்துன்பத்திற்கு பயந்து மீண்டும் பின் அமைதி ஆகின்றான். ஆனால் மீண்டும் முன்னேறிச் செல்லச் செல்ல, நிச்சயம் ஒரு நாள் வெற்றி உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  (இறைவனை வணங்கி, ஆன்மீகப் புத்தகங்களைப் படிக்கும்போது கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அந்தத் துன்பத்தைப் பார்த்துப் பயந்து, "சாமி கும்பிட்டும் இவ்வளவு கஷ்டம் வருதே"ன்னு பாதிலேயே விட்டுட்டுப் போறவங்க தான் அதிகம். ஆனா, அந்த சோதனையைத் தாண்டித் தொடர்ந்து முன்னேறிப் போறவனுக்குத்தான் ஒரு நாள் வெற்றியும் கிடைக்கும், இறைவனோட தரிசனமும் கிடைக்கும்.)

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட ஒரு இடத்தில் பின் காந்தங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட வைத்தால் விலகி ஓடும்.

சுவடி ஓதும் மைந்தன்:-  காந்தம் தெரியுங்களா? மேக்னெட். ஒரு இடத்துல  ஒட்டிக்கும். ஒரு இடத்துல விலக்கும்.  

குருநாதர் :-   ஆனாலும் நிச்சயம் தன்னில் உள்ள கஷ்டங்கள் பட்டு பட்டு நிச்சயம் தன்னில் கூட பல பாடல்கள் நிச்சயம் பாடி பாடி துதித்தால் இறைவனிடத்தில் ஒட்டிக்கொள்ளலாம் இவ் உடம்பு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  (எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி, அந்த காந்தம் மாதிரி போயி இறைவன்கிட்ட டக்குன்னு ஒட்டிக்கணும். ஒரு தடவை அந்தத் தெய்வத்துகிட்ட கல்லு மாதிரி உறுதியா ஒட்டிட்டீங்கன்னா, அப்புறம் அவர் உங்களை விடமாட்டாரு. உங்களுக்குத் தேவையான எல்லா சக்தியையும் அந்த மேக்னெட் பவர் மாதிரி இறைவன் உங்களுக்கே கொடுத்துருவாரு.)

====================================
# எப்போது பெரிய பெரிய பதவி கிட்டும்? 
====================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக நிச்சயம் அருகிலே சென்றாலே நிச்சயம் தன்னில் கூட, சிறிது நிச்சயம் தன்னில் கூட, பின் அவருடைய பேரருள் உங்களுக்கு கிட்டுமேயானால், நீங்கள் நிச்சயம் பின் எவை என்று ஒரு பெரிய பெரிய பின் பதவியில் வைக்கலாம். உலகத்தையும் ஆளலாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  (காந்தம் கிட்டப் போகப் போக ஒரு கட்டத்துல எப்படித் தானாவே டக்குன்னு இழுத்து ஒட்டிக்குமோ, அதே மாதிரிதான் மனுஷனும் இறைவனும். நீங்க பக்தி செலுத்தி அவர் பக்கத்துல போயிட்டீங்கன்னா, இறைவனோட ஒட்டிக்குவீங்க. அப்படி ஒட்டிட்டா, அவர்கிட்ட இருக்குற அத்தனை சக்தியும் உங்களுக்கும் வந்துரும். அப்புறம் என்ன... இந்த உலகத்தையே ஆளலாம், பல வித்தைகளை கத்துக்கலாம்!)

குருநாதர் :-   ஆனாலும் அதை மனிதன் சிந்திப்பதே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனால் அதெல்லாம் வந்து மனுஷன்  சிந்திப்பதே இல்லை 

===========================================
# மனிதன்  ஆறாவது அறிவை வைத்து வாயில்லா ஜீவராசிகளை காக்கவில்லை என்றால், வருங்காலத்தில் இறைவன் நிச்சயம் அவனை அடித்து விடுவார்.
=========================================== 


குருநாதர் :-   நிச்சயம் அறிவு பலமாக மனிதனுக்கு கொடுத்திருக்கின்றான். ஏன் எதற்காக? மற்ற பின் ஜீவராசிகளை காப்பதற்காகவே. ஆனால் இப்பொழுது மனிதன் அப்படி இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:- (மத்த எல்லா ஜீவராசிகளுக்கும் அஞ்சு அறிவு தான், ஆனா மனுஷனுக்கு மட்டும் எதுக்கு ஆறாவது அறிவு இருக்குன்னா, அது மத்த உயிர்களைக் காப்பாத்தத்தான். எல்லாரையும் ஒண்ணாவே பார்க்கணும், எல்லாத்துக்கும் நல்லது பண்ணனும்னு தான் இறைவன் இந்த அறிவைக் கொடுத்திருக்காரு. ஆனா, மனுஷன் அதைத் தெரிஞ்சுக்காம, ஒழுங்கா பயன்படுத்தாம விட்டுட்டான்.)

குருநாதர் :-   நிச்சயம் அதை யாரை நிச்சயம் தன்னுடைய பயன்படுத்தவில்லையோ, நிச்சயம் வருங்காலத்தில் பின் நிச்சயம் தன் இறைவன் நிச்சயம் அவனை அடித்து விடுவான். 

சுவடி ஓதும் மைந்தன்:- அந்த யார் ஒரு ஆறாவது சரியாக பயன்படுத்தவில்லையோ என்ன பண்ணுவாரு நிச்சயம் அடிச்சிருவார்.

=============================================
# துன்பம்தான், ஆறாவது அறிவை பயன்படுத்த உதவும் மூலம். 
=============================================

குருநாதர் :-  நிச்சயம் அவ் ஆறாவது பின் ஆறாவது அறிவை பயன்படுத்துவதற்கான நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று ஒரு மூலம் துன்பம்தான். 

சுவடி ஓதும் மைந்தன்:- (மனுஷன் கிட்ட ஆறறிவு இருந்தாலும், அந்த அறிவை அவன் எப்ப பயன்படுத்துவான்னா, அவனுக்கு ஒரு துன்பம் வரும்போதுதான். இறைவன் எதுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறாருன்னா, அப்பவாச்சும் இவன் அந்த ஆறாவது அறிவைச் செயல்படுத்தித் திருந்துவானான்னு பாக்குறதுக்குத்தான்.)

குருநாதர் :-   அதற்காகத்தான் துன்பம் கொடுத்துக் கொடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஆறாவது அறிவு செயல்பட்டு விடுகின்றது. இதனால் பிழைத்துக் கொள் என்று இன்பத்தைப் பின் நீ தேடிக்கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ("ஐயா, இப்ப ஆறாவது அறிவு ஒருத்தருக்குச் செயல்படணும்னா என்ன பண்ணனும்? அதுக்குத் துன்பம்னு ஒண்ணு கொடுத்தே ஆகணும். அப்படித் துன்பத்தை இறைவன் மேல மேல கொடுத்துக்கிட்டே இருக்கும்போதுதான், ஒரு கட்டத்துல அந்த ஆறாவது அறிவு தானா வேலை செய்ய ஆரம்பிக்கும்.
அப்படி ஒருத்தன் உண்மையை உணர்ந்துட்டான்னு வைங்க... அப்ப இறைவன் என்ன பண்ணுவாருன்னா, 'சரி இவனுக்கு விஷயம் புரிஞ்சு போச்சு, இனிமே இவன் எப்படி வாழ்றான்னு பார்ப்போம்'னு கவனிப்பாரு. அந்தச் சமயத்துல நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். நீங்க நல்லதையே நினைச்சு, நல்லதையே செஞ்சுக்கிட்டு இருந்தீங்கன்னா, அப்புறம் உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.
முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆறாவது அறிவை நீங்கச் சரியா பயன்படுத்தப் பழகிட்டீங்கன்னா, அப்புறம் வெளியில இருந்து யாரும் வந்து உங்களுக்குப் புத்தி சொல்லத் தேவையில்லைங்க ஐயா. நீங்க ஏதாவது தப்பு பண்ணப் போனா, உங்க அறிவே உங்களைத் 'டக்குன்னு' தட்டிச் சரி பண்ணிடும்!" )
=========================================
# வாழ்வதும் வீழ்வதும் மனிதர்கள் கையில்.
=========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவ்வாறத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் வாழ்வதும் வீழ்வதும் நிச்சயம் தன்னில் இறைவன் சரியாகத்தான் கொடுக்கின்றான் சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன்:- (நாம நல்லா வாழ்றதும் இல்ல வீழ்ந்து போறதும் மத்தவங்க கையில இல்லைங்க, அது நம்ம கையிலதான் இருக்கு. இறைவன் நமக்கு எல்லா கஷ்டத்தையும் பக்குவத்தையும் கொடுத்து, "டேய் உன்னை நீயே பாதுகாத்துக்கோடா"ன்னு ஒரு வாய்ப்பு தர்றாரு. ஆனா மனுஷன் அதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு நடக்குறது இல்லை. அவன் சரியா இருந்தா எல்லாமே சரியா நடக்கும்.)

=======================================
# திருத்தலங்களில் உள்ள அதீத சக்திகள் 
=======================================

குருநாதர் :-  நிச்சயம் எவை என்று புரிய ஏன் எதற்காக நிச்சயம் தன்னில் உள்ள இத்தனை திருத்தலங்கள் எவை என்று புரிய நிச்சயம் கூட பின் எங்கெங்கு எதை என்று அதிக சக்திகள் இவையெல்லாம் யான் செப்பிவிட்டேன் நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பதை எல்லாம் சக்திகள் எதை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன்:- ("ஐயா, உலகத்துல ஏன் இத்தனை கோயில் இருக்கு? அங்கெல்லாம் சித்தர்கள் அந்தந்த சக்திகள் இருக்குற இடத்தைப் பார்த்துப் பிரதிஷ்டை பண்ணிருக்காங்க. இங்க ஒரு ரகசியம் என்னன்னா, நீங்க செய்ற பாவமும் புண்ணியமும் உங்க கையில சேராதுங்க. அது நேரா அந்தப் படைச்சவன் கிட்டதான் போய் சேர்ந்துடும்.
உங்க எண்ணம் சரியா இருந்து, நீங்க நல்ல மனசோட இருந்தீங்கன்னா, இறைவன் என்ன பண்ணுவாரு தெரியுமா? 'சரி, இவன் நல்லவனா இருக்கான், இவனுக்குக் கொஞ்சம் புண்ணியத்தை எடுத்துக் கொடுப்போம்'னு நல்லது பண்ணுவாரு. ஆனா, நீங்க சரியில்லாத ஆளா இருந்தா, உங்க பாவக் கணக்கை எடுத்து உங்ககிட்டத் தள்ளி விட்டுருவாரு.
உங்க எண்ணங்கள் கோணலா இருந்தா, உங்களுக்குப் பாவத்தை அனுப்பிச்சுக்கிட்டே இருப்பாரு. அப்பறம் நாம உட்கார்ந்து இறைவன் மேல குறை சொல்றதுல என்ன நியாயம் இருக்கு? நீங்க பக்குவப்பட்டு வந்தா, அவரே உங்க புண்ணியத்தைத் தந்து 'இந்தாப்பா, இதை வச்சுப் பிழைச்சுக்கோ'ன்னு வாழ வைப்பாரு. அந்தப் பக்குவம் வரலைன்னா, 'அனுபவி... அனுபவிச்சுத் தீரு'ன்னு பாவத்தைக் கொடுத்துட்டே இருப்பாரு. அதனால நம்ம எண்ணத்தை மாத்துறதுதான் இதுல இருந்து விடுபட ஒரே வழி!")

குருநாதர் :-  இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகள் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய நிச்சயம் பின் சொன்னார்கள் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட 

குருநாதர் :-  நிச்சயம் தன் எதை என்று புரிய பின் இறைவன் மீது பற்று வைத்தால் எவ்வளவு கஷ்டங்கள் என்றெல்லாம் நிச்சயம் பின் பின் நாயன்மார்களும் சொன்னார்களே 

குருநாதர் :-  எதை என்று புரிய, ஏன் பின் இத்தனை பின் நிச்சயம் தன்னில் கூட, பின் சித்திரை, இன்னும் எவை என்று கூட சில சில நிச்சயம் தன்னில் கூட, பின் ஏன் சதுர்த்தி எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வளவு இவ்வளவு ஏன் எதற்காக கொண்டாடுகின்றீர்கள்? இது பல சமயங்களில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன்:- பல பண்டிகைகள் வருது இல்ல ஏன் கொண்டாடுறோம் எதுக்காக கொண்டாடுறோம் சக்திகளை பெருக்கிக் கொள்ள…. 

==================================================
# ஏன் பண்டிகைகள் கொண்டாடுறோம்? - விஞ்ஞான ரகசியங்கள் 
==================================================

==================================================
# பூமி அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்கும்போது, பல கோடி மைல் தொலைவில் உள்ள விண்வெளியில் உள்ள இறைவன் என்ற அந்த நெருப்பு பிழம்பின் கதிர்கள் ,  அதாவது கிரகங்களின் எந்த இடையூறும் இல்லாமல்.  , நேரடியாகப் பூமியின் மீது விழுகின்றன.  குறிப்பாகப் பிரதோஷம் போன்ற காலங்களில், அந்தப் பிரபஞ்ச நெருப்புப் பிழம்பின் வேகம் அதிகரித்து, அதன் ஆற்றல் பூமியைச் சுற்றிப் பலமாக வீசுகிறது. அந்த அபூர்வமான சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ளவும், அதை நன்மையாக மாற்றிக்கொள்ளவும் தான், ஞானிகள் அந்தச் சமயத்தில் இறைவனைச் சேவிக்கும்படி பண்டிகைகளையும் வழிபாடுகளையும் ஏற்படுத்தினார்கள். வாருங்கள் இப்போது இது குறித்த வாக்கினை காண்போம்.
===================================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பல கிரகங்களை, நிச்சயம் தன்னில் கூட விட்டொழித்து , எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எதை என்று கூட, நேரடியாகவே நிச்சயம் தன்னில் புரிந்தும் எவை என்று அறிய, அறிந்தும் கூட, நிச்சயம் அப்படியே நிச்சயம் தன்னில் கூட, பின் கதிர்கள் விழுவதுதான் பூமி தன்னிலே நிச்சயம் தன்னில் கூட. 

பின் சில ஞானிகள், இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் பின் அதாவது ஆடுகின்ற பொழுது. அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் நெருப்பு பின் பிளம்பானது நிச்சயம் தன்னில் கூட, பின் சுற்றி, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அடிக்கடி, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக நிச்சயம் பின் அதிவேகத்தில் நிச்சயம் புவியானது பின் சுற்றிக் கொண்டே, சிறிது சிறிதாக நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறாக சுற்றிக் கொண்டே, பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இருக்கின்ற பொழுது, நிச்சயம் பின் அவ்வாறாக பின் அதுவும் எதை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் சில சில நேரங்களில் கூட, பின் அதாவது பின் பலமாக நிச்சயம் பின் இன்னும் கூட, பின் வேகம் எடுத்து எடுத்து, நிச்சயம் பின் அவ் அதாவது நெருப்பு பிழம்பானது சுற்றும். 

அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பின் சுற்றி இருக்கின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு என்பதெல்லாம் இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. பின் அன்றைய தினத்தில் நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனை அதாவது சேவிக்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட, பல நன்மைகள் ஏற்படும். இதற்காகத்தான் பல பண்டிகைகள் 

சுவடி ஓதும் மைந்தன்:- ("ஐயா, நாம ஏன் சதுர்த்தி, சித்திரை, ஆடி மாசம்னு வரிசையா பண்டிகைகளைக் கொண்டாடுறோம்? அதுக்கு ஒரு பெரிய அறிவியல் காரணம் இருக்குங்க. அந்த ஒரு பெரிய ஒளிப்பிழம்பு, அந்த நெருப்புப் பிழம்பு பிரபஞ்சத்தைச் சுத்திக்கிட்டே இருக்கு. அதே மாதிரி பூமியும் தன்னைத்தானே சுத்திக்கிட்டு இருக்கு.
அந்த நெருப்புப் பிழம்பு சில நேரத்துல மெதுவா சுத்தும், ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துல மட்டும் பயங்கர வேகமா (Fast) சுத்தும். அப்படி அது வேகமா சுத்துறப்போதான் இந்தச் சிவராத்திரி, சஷ்டி, ஏகாதசி, பங்குனி உத்திரம்னு எல்லா விசேஷங்களும் வருது. அங்க ஈசன் தான் 'அணு'வா இருந்து ஆடிக்கிட்டு இருக்காரு!
அவர் அப்படி பலமா ஆடும்போது, அந்தச் சக்தியும் ஒளியும் பூமிக்கு அதிகமா வந்து சேரும். அந்த நேரத்துல நாம இறைவனை நினைச்சு, விரதமிருந்து வேண்டிக்கிட்டா, அந்த மகா சக்தி நம்மளுக்கும் கிடைக்கும். அவர் சாந்தமாகி நமக்கு வேண்டிய எல்லா வரங்களையும், வெற்றிகளையும் வாரி வழங்குவாரு. அந்த சக்தியை நாம சரியா பிடிச்சுக்கணும்ன்றதுக்காகத்தான் இத்தனை பண்டிகைகளையும் நம்ம முன்னோர்கள் வச்சிருக்காங்க ஐயா!")

=================================================
# பிரதோஷம் ரகசியங்கள் - இறைவனின் நெருப்பு பிழம்பில் இருந்தது , அதிக சக்திகள் பூமிக்கு வருகின்றது. அடியவர்கள் இந்த உண்மையை உணர்ந்து உங்கள் சக்திகளை பெருக்கிக் கொள்ளுங்கள். 
=================================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் பிரதோஷம் பின் மாதத்திற்கு இருமுறை ஏன் பின் வருகின்றது என்றால் இப்படித்தான் நிச்சயம் தன்னில் கூட. பிரதோஷ காலத்தில் எதை என்று கூறி நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய 

சுவடி ஓதும் மைந்தன்:-  (மாசத்துக்கு ரெண்டு தடவை வர்ற அந்தப் பிரதோஷ காலத்துல ஒரு விசேஷமான ஆற்றல் இருக்குங்க. அந்த நேரத்துல இறைவனோட அந்த 'ஒளிப்பிழம்பு' அல்லது 'நெருப்புப் பிழம்பு' வழக்கத்தை விட அதிக சக்தியோட இருக்குமாம். அந்தச் சக்தி நம்ம மேல படணும், அது நமக்குக் கிடைக்கணும்ங்கிறதுக்காகத்தான் அந்த நேரத்துல வழிபாட்டை இவ்வளவு முக்கியமா சொல்றாங்க.)

குருநாதர் :- அறிந்து இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் ராகுகாலம் எமகண்டம் என்பதை எல்லாம் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் வருங்காலத்தில் இவற்றையும் யான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஏன் ராகு காலம்? ஏன் எமகண்டம்? இதெல்லாம் வந்து வருங்காலத்துல நான் சொல்றேன் 

குருநாதர் :-  இவையெல்லாம் மனிதன் தெரிந்து கொண்டால் மட்டுமே இறைவனையும் உணர்ந்து கொள்வான். அப்படி தெரிந்து கொள்ளவில்லை என்றால் இறைவன் எங்கே எங்கே என்று ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:- (இறைவன் பத்தி  உண்மையை ஒருத்தன் சரியா புரிஞ்சுக்கிட்டா, அவன் எங்கும் அலைய மாட்டான்; மனசு அமைதி ஆயிடும். ஆனா, அந்த உண்மை தெரியாத வரைக்கும் மனுஷன் "கடவுள் எங்க இருக்காரு, எங்க இருக்காரு"ன்னு தேடி அலைஞ்சுக்கிட்டே தான் இருக்கணும். கஷ்டம் வரும்போதெல்லாம் எங்கடா இருக்காருன்னு ஓடிக்கிட்டே இருந்தா, கடைசி வரைக்கும் தேடல் தான் மிஞ்சும், தரிசனம் கிடைக்காது.)

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம் நிச்சயம் தன்னில் கூட நல்முறைகள் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் பின் அனைத்தும் மனிதன் மனிதனுக்கு கொடுத்துத்தான் அனுப்பி வைக்கின்றான். ஆனாலும் மனிதனோ நிச்சயம் சரியாக பயன்படுத்துவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் அழகா மனுஷனுக்கு எல்லாமே கொடுத்து தான் அனுப்புறார் எல்லாருக்கும் ஒரே மாதிரி கொடுத்து அனுப்புறார் ஆனால் மனுஷன் என்ன பண்றான் பயன்படுத்துறான் பயன்படுத்துவது இல்லை 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பன்மடங்கு பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது நிச்சயம் திருவாசகத்தில் பின் அதாவது பின் எதை என்று புரிய பின் 23 ஆம் பதிகத்தை பாடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:- திருவாசகத்துல 23 ஆம் பதிகம் பாருங்க…..

(  23 ஆம் பதிகம் கூட்டு பிரார்த்தனை பாராயணம் ஆரம்பம் …..) 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment