அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 2
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 2)
=======================================
# மகா புண்ணியசாலி இராவணேஸ்வரரின் அன்னை அவர்கள் நடத்திய குருகுலம்: ஒரு மகத்தான ஞானப்பீடம்
========================================
குருநாதர் :- அப்பனே, அம்மையே, அறிந்தும் எதை என்று. இதனால் நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது இராவணனுடைய தாயவள், அறிந்தும். இன்னும் தந்தை என்று நிச்சயம், பின் எவ்வாறு என்பவையெல்லாம் நிச்சயம் பின்பு உரைக்கின்றேன். இப்பொழுது தாயைப் பற்றி உரைக்கின்றேன்.
குருநாதர் :- நிச்சயம் அறிந்தும் எவ்வளவு ஆனாலும், பின் தாயவளோ நிச்சயம் தன்னில் கூட மிகுந்த சிவபக்தி. ஆனாலும் நிச்சயம் குருகுலத்தை ஒன்று நடத்தினாள் , நிச்சயம் அனைத்தும் அனைவரும் ஒன்றே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "இப்ப இராவணேஸ்வரர் அவங்க தாயைப் பத்திதான் சொல்ல வராரு. அந்த அம்மா எப்பேர்ப்பட்ட சிவபக்தை தெரியுமா? அவங்களோட அந்தப் பெருமையைத் தான் இங்க உரைக்கப் போறாங்க. சொல்லப்போனா, ராவணனோட அம்மா இங்க ஒரு குருகுலத்தையே நடத்தினாங்க. அந்த குருகுலத்துல அவங்க சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம் என்ன தெரியுமா? 'இந்த உலகத்துல இருக்கிற எல்லாரும் ஒண்ணுதான், அனைவரும் ஒன்றே' அப்படின்ற அந்த உயர்ந்த தத்துவத்தைத்தான் அவங்க அங்க சொல்லிக் கொடுத்தாங்க." )
============================================
# "அனைவரும் ஒன்றே: ஈசனின் அருளைப் பெற அன்னை கற்பித்த அறநெறி"
============================================
குருநாதர் :- நிச்சயம் அறிந்தும் சிறுவயதிலிருந்தே இராவணனுக்கு நிச்சயம் தன்னில் கூட, அனைவரிடத்திலும் அன்பாக பழக வேண்டும். நிச்சயம் அதனால் நிச்சயம் அனைவரும் ஒன்றே. யாருக்காவது ஒரு தீங்கு ஏற்பட்டால் ஓடோடி நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் பல வழியில் கூட நன்மைகள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஈசன் அனைத்தும் வழங்குவான் என்று, சிறுவயதிலிருந்தே அனைத்து பிள்ளைகளுக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இராவணனுக்கு அவங்க அம்மா என்ன சொல்லிக் கொடுத்தாங்க தெரியுமா? 'யாருடைய வாழ்க்கையிலயும் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது, எல்லாரும் ஒண்ணுதான்' அப்படின்னு ராவணனுக்கு ஆழமா சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, யாருக்காவது ஒரு கஷ்டம்னா, ஒரு பிரச்சனைன்னா, நீ உடனே அங்க போய் நிக்கணும். எந்த மதம், எதுவுமே பார்க்கக்கூடாது; யாருக்காவது ஒரு அழிவு வருதுன்னா, நீ பதறிப்போய் முன்னாடி நின்னு அவங்களுக்கு உதவி செஞ்சு அந்தப் பிரச்சனையைச் சரி பண்ணனும். இதுதான் அந்தத் தாய் தன் மகனுக்குக் கொடுத்த உன்னதமான போதனை. அந்தத் தர்மத்தைத்தான் ராவணேஸ்வரர் பின்பற்றி வாழ்ந்தாரு." )
குருநாதர் :- நிச்சயம் ஆனாலும் அறிந்தும் புரிந்தும் அனைத்து எவை என்று அறிய, பின் பல, பின் குருமார்களை நிச்சயம் தன்னில் கூட உருவாக்கிய பெருமை இராவணனின் பின் தாய்க்கே சேரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("உலகத்துல எவ்வளவோ குருமார்கள் இருக்கலாம், ஆனா அந்தப் பல குருமார்களையே உருவாக்குற அந்தப் பெரிய பொறுப்பும் பெருமையும் யாரைச் சேரும் தெரியுமா? அது நேரா ராவணனோட அம்மாவைத்தான் போய்ச் சேரும். ஏன்னா, அவங்க நடத்துன அந்த குருகுலம்தான் பல ஞானிகளையும் குருக்களையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துச்சு. குருக்களுக்கெல்லாம் குருவா இருந்து, அவங்களை உருவாக்குன அந்த மூலசக்தி அந்தத் தாய்தான்." )
=======================================
"ஞானத்தின் பிறப்பிடம்: அகிலமெங்கும் அறத்தைப் பரப்பிய இராவணேஸ்வரரின் அன்னை நடத்திய குருகுலம்"
======================================
குருநாதர் :- நிச்சயம் எதை புரிய, எதை என்று அறிய, இதில் கூட எவை என்று கூற இன்னும் சிறப்புக்கள். இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் இங்கு குருகுலம் பெருத்த பெருத்த எதை என்று கூற, பின் பல மக்கள் நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று கூற பல வழியில் கூட ஞான உபதேசங்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட எடுத்து பரப்பினால், பின் நிச்சயம் பின் இராவணனின் அறிந்தும் எதை என்று கூற தாயே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப அந்தத் தாய் நடத்திய குருகுலத்துல எவ்வளவோ உன்னதமான விஷயங்கள் நடந்திருக்குங்க. ராவணேஸ்வரரின் அன்னை, ஊர்ல இருக்கிற ஏழை எளிய மக்கள்னு எல்லாரையும் அன்போடு ஒண்ணா திரட்டி அந்தக் குருகுலத்துக்குக் கூட்டிட்டு வருவாங்களாம். அப்படி வர்ற அந்த மக்களுக்கு, மனசுல இருக்கிற குழப்பமெல்லாம் தீரணும்னு பல உயர்வான உபதேசங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான நல்ல அறிவுரைகளையும் அள்ளி அள்ளி வழங்குவாங்களாம். ஒரு தாய்க்கே உரிய அந்தப் பேரன்போட, வர்றவங்க எல்லாருக்கும் ஞானத்தைப் போதிச்சு அவங்களை நல்வழிப்படுத்துறதுல அந்தத் தாய் ஒரு மாபெரும் வழிகாட்டியாவே திகழ்ந்திருக்காங்க.")
========================================
"மரணமிலாப் பெருவாழ்வு: அன்னை போதித்த உடலின் ரகசியமும் மினுமினுக்கும் ஆன்ம சக்தியும்"
========================================
குருநாதர் :- ஏன், எதற்கு, நிச்சயம் எவையெல்லாம் நிச்சயம் ஆனாலும் பின் தாயவள் அறிந்தும் கூட எவையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம் வருங்காலத்தில் நிச்சயம் பின் தன்னைத்தானே வென்று, எப்பொழுதும் உடம்பு போனாலும், உயிர் போனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இவ் உடம்பை பல வழியில் கூட சக்திகள் பெற்றுவிட்டால் நிச்சயம் எப்பொழுதும் நிச்சயம் பின் அழியாது.
குருநாதர் :- ஆங்காங்கே தங்கி தங்கி நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் உடம்பு, அதாவது உயிர் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவ்வாற்றல் பின் சிறு நிச்சயம் மின் மினு பூச்சி போல் இருந்து நிச்சயம் அனைவரும் காக்கும் என்பதை எல்லாம் திடமாக நிச்சயம் எண்ணி கூறினாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப அந்தத் தாய் எப்பேர்ப்பட்ட ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்திருக்காங்க பாருங்க! பல ஞானிகள் பெரிய பெரிய ஞானத்தையும், உபதேசங்களையும் இந்தக் குருகுலத்துல கத்துக்கிட்டு இருக்காங்க. அப்ப அந்த அம்மா என்ன சொல்றாங்கன்னா, 'இந்த ஞானத்தை எல்லாம் நீங்க சரியா கத்துக்கிட்டு மனசுல ஏத்திக்கிட்டீங்கன்னா, ஒரு மனுஷன் இறந்து போனாலும், அவன் உடம்பும் உயிரும் மறைஞ்சு போனாலும், அவங்க செஞ்ச அந்தப் புண்ணியமும் ஆற்றலும் மட்டும் அழியவே அழியாது' அப்படின்னு சொல்றாங்க. அது எப்படி இருக்குமாம்? ஒரு சின்ன மின்மினிப் பூச்சி மாதிரி அந்த ஆற்றல் ஒளி வீசிக்கிட்டே ஆங்காங்கே தங்கி இருக்குமாம். அந்த ஒளி மங்காம அப்படியே இருந்து, உலகத்துல இருக்கிற மத்த எல்லாரையும் எப்பவும் ஒரு கவசம் மாதிரி பாதுகாத்துக்கிட்டே இருக்கும்னு அந்தத் தாய் ரொம்ப திடமாச் சொல்லியிருக்காங்க." )
=======================================
"மின்மினிப் பூச்சியாய் ஞானிகள்: திருத்தலங்களைக் காக்கும் அழியாத பேரொளி"
=======================================
குருநாதர் :- இதேதான் இன்னும் கூட இங்கும் கூட பல வழியில் கூட ஞானிகள், பின் அப்படித்தான் இருக்கின்றார்கள். மின் மினு பூச்சி போலே.
குருநாதர் :- பின் இதனால்தான் அழிவுகள் எதை என்று புரிய பின் வரவில்லை. பின் அப்படி பின் இல்லாமல் இருந்தால் எப்பொழுதும் இத் திருத்தலத்திற்கு அழிவு ஏற்பட்டிருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அதனால்தாங்க இந்தத் திருத்தலங்களுக்கு இன்னும் அழிவே வராம இருக்கு. அந்த ஞானிகள் மட்டும் அங்க இல்லாம போயிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்? எப்பவோ இந்தத் திருத்தலமெல்லாம் அழிஞ்சு போயிருக்கும். அவங்க அங்கேயே தங்கி அந்த சக்தியைக் கொடுத்துக் காக்குறதுனாலதான், இன்னைக்கும் இது நிலைச்சு நிக்குது.")
===========================================
"ஆன்ம ஆற்றலின் கணக்கீடு: நூறு சதவீத சக்தியும் ஞானிகளின் பெருங்கருணையும்"
===========================================
குருநாதர் :- அறிந்தும் மனிதன் பொறாமை எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனாலும் அவ் மின்மினி எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பல ஞானியர்கள் நிச்சயம் ஏதாவது நிச்சயம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
குருநாதர் :- ஆனாலும் அறிந்தும் பின் எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் இங்குள்ள சக்திகள் பன்மடங்கு நிச்சயம் அதிகம் அப்பா. ஆனாலும் அவன் அதிகமாக பின் சக்தியை பெற்றால்தான் இங்கு வந்தாலும் நல்லவை ஆகும். அல்லது பின் குறைவாக அதாவது பின் நூற்றுக்கு குறைவாக நிச்சயம் தன்னில் கூட சக்திகள் பெற்றால், அவனே நிச்சயம் தாழ்ந்து விடுவான் என்பேன். இப்பொழுது பின் அதுதான் நடந்தும் கொண்டிருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப அந்தப் பல ஞானியர்களும் திருத்தலங்களுக்கு வந்து மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும், உண்மையான நன்மைகள் போய் சேரணும்னு அந்த மின்மினிப் பூச்சி மாதிரி ஆங்காங்கே தங்கி நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அங்க ஒரு பெரிய 'வைப்ரேஷன்' (அதிர்வு) இருக்குங்க. அந்தப் பெரிய சக்தி நிலையைத் தாங்குற அளவுக்கு நம்மகிட்ட ஆற்றல் இருந்தா மட்டும்தான், அங்க போய் நாம வேண்டிக்கிறது பலிக்கும், நல்லது நடக்கும். ஒருவேளை நம்மகிட்ட அந்த எனர்ஜி இல்லைன்னா என்ன ஆகும்? அந்தச் சக்தியைத் தாங்க முடியாம மனுஷங்க தாழ்ந்து போயிடுவாங்க, அதாவது வீழ்ந்துடுவாங்கன்னு குருநாதர் சொல்றாரு." )
குருநாதர் :- ஆனாலும் பொய் பேசுபவர்கள் பொறாமைக்காரர்கள் இப்படித்தான் திரிந்து கொண்டிருக்கின்றான் இங்கு. இதனால் அவர்களுக்கு என்னதான் நடக்கப்போகின்றது என்று நிச்சயம் இப்பொழுதே அறிந்திருக்கின்றேன். ஆனாலும் சொல்லப்போவதில்லை.
(இவ் வாக்கு உரைத்த போது ஆலய மணி அங்கு ஒலித்தது……)
அடியவர் :- மணி அடிக்குது அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “ஆனா இப்போ நிறைய பேரு பொய் சொல்லிக்கிட்டும், பொறாமை எண்ணத்தோடும், ஒரு நல்லெண்ணம் இல்லாமலும் தான் வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு என்ன ஆகும்ங்கிறத பத்தி நான் சொல்ல விரும்பல. ஏன்னா, சித்தர்கள் ஒரு வார்த்தையை நெகட்டிவ்வா சொல்லிட்டா, அது அப்படியே பலிச்சுடும்; அதனாலதான் நான் அதைச் சொல்லாம விடுறேன். அவங்களுக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியும், ஆனா அதைச் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவங்க அவங்க செஞ்ச கர்மா அவங்களை அப்படி ஆட்டி வைக்குது, அதுதான் இப்போ நடந்துட்டு இருக்கு." )
=====================================================
# "அன்னை இராவணேஸ்வரருக்குப் போதித்த ரகசியங்கள்"
=====================================================
குருநாதர் :- அப்பனே இதனால் எதை என்று கூற அம்மையே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் சிறு வயதிலிருந்து நிச்சயம் தன்னில் கூட இராவணனுக்கு பல வகையிலும் கூட பின் ஈசனை எவ்வாறு அடைதல் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாகவே இளமையாக இருத்தல் எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருந்தால், நிச்சயம் சில வழியில் கூட, பின் உடம்பு நிச்சயம் தான் தானே நிச்சயம் தன்னில் கூட, அழித்தாலும் மீண்டும் மீண்டும் பிறக்கலாம் என்றெல்லாம் அனைவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இராவணனோட அம்மா அந்தக் குருகுலத்துல என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க பாருங்க! எப்பவுமே இளமையா இருக்கிறது எப்படின்னும், ஒருவேளை உயிர் போயிட்டாக்கூட அந்த உயிரைத் திரும்பத் திரும்ப எப்படிக் கொண்டு வர்றதுன்னும் அந்த ஞான குருகுலத்துல எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. மரணத்தை வெல்றது எப்படின்னும், உடம்பையும் உயிரையும் எப்படித் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிறதுன்னும் அந்தத் தாய் அங்க இருந்த எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப நுணுக்கமாப் போதிச்சிருக்காங்க." )
குருநாதர் :- ஆனாலும் இதைத்தான் பயன்படுத்திக்கொண்டு பலபேர் ஞானிகள் ஆனார்கள்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவர்களாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் கலியுகத்தில் உயிர் நிச்சயம் தன்னில் கூட உடம்பை பெற்று ஆனாலும் நிச்சயம் எவை என்று கூட வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் உயிரோடு நிச்சயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பின் உடம்பு இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் கலியுகத்துல உடம்பு இல்லாம, அந்த ஞானிகள் எல்லாம் , உயிர் மட்டும் உலா வந்திருக்கிறது.
=========================
# கல்லும் நிலநடுக்கமும்
=========================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய அதாவது சரி சமமாக அக்கல்லானது நிச்சயம் தன்னில் கூட ஒரு எல்லைக்குத்தான். அவ் எல்லை விட்டு மேல் எழும்பிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் தேசம் பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு எழுந்துவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட பின் நிலநடுக்கங்கள் ஏற்படும் நிச்சயம் தன்னில் கூட, இவ் தேசம் பின்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அந்தக் கல் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிக்கிட்டே வருதுங்க. அப்படி ஏறி அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வந்துருச்சு. அந்த எல்லையை மட்டும் அது தாண்டுச்சுன்னா என்ன ஆகுமாம்? இந்தத் தேசத்துல பெரிய நிலநடுக்கம் வந்துடும், நிலநடுக்கமே வரும்னு குருநாதர் ரொம்பத் தெளிவா எச்சரிக்கிறாரு." )
===========================================
# போட்டி, பொறாமை :- தவிர்க்க முடியாத அழிவு.
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட பின் மக்கள் பின் சாய்வார்கள் எதை என்று புரிய யாராலும் தடுக்க முடியாது. எதற்காக இறைவன் இருக்கின்றானா என்ற சந்தேகம் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- ஏனென்றால் மனிதனின் ஆட்டங்கள் அதிகமாகின்ற பொழுது தீய பழக்கங்கள் அதிகமாகின்ற பொழுது, பொய் பொறாமை பின் இவைகள் அதிகமாகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் அறிந்தும், அதாவது பின் அழுத்தம் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது அடியிலிருந்து இன்னும் மேல மேலே எழும்ப எழும்ப, நிச்சயம் பாதிப்பு தான் அதிகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "மக்களுக்குள்ள எப்போ இந்தப் போட்டி, பொறாமை, மனசுல அழுக்குன்னு இதெல்லாம் அதிகமாகுதோ, அப்போ அது ஒரு 'பிரஷரா' (அழுத்தமா) மாறி அந்தக் கல்லை ஈர்க்க ஆரம்பிச்சுடும். மக்கள் அப்படி இருக்குறதுனால, அந்த அழுத்தம் தாங்காம அந்தக் கல் இன்னும் மேல மேல போய்க்கிட்டு இருக்குமாம். அப்படி அந்தப் பிரஷர் அதிகமாகி கல் எல்லையைத் தாண்டிடுச்சுன்னா என்ன ஆகும்? மக்கள் எல்லாரும் அப்படியே சாய்ஞ்சு மடிஞ்சு போவாங்க, பெரிய அழிவே வரும்னு சொல்றாரு. அந்த மாதிரி ஒரு நிலை வந்துட்டா, அதை யாராலயும் தடுத்து நிறுத்தவே முடியாது." )
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் பின் எதுவும் செய்யத் தேவையில்லை. நல் எண்ணங்களோடு, பொறாமை இல்லாத ஒரு பின் அதாவது நிச்சயம் அனைவரும் சகோதரராகவே நிச்சயம் என்ற எண்ணம் எப்பொழுது வருகின்றதோ மீண்டும் எதை என்று கூற பின் அப்பொழுதுதான் பின் இவ் தேசம் காக்கப்படும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்தத் தேசம் எப்போ காக்கப்படும் தெரியுமா? எல்லாரும் மனசாரச் சந்தோஷமா, ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பி மாதிரி ஒற்றுமையோட இருந்தா மட்டும்தான் தேசம் காக்கப்படும். அந்தத் தேசம் அழியாம இருக்கணும்னா, மக்கள் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சு, அந்த ஒற்றுமையோட இருக்கணும்னு குருநாதர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு." )
குருநாதர் :- இதுதான் நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் இராவணன் எதை என்று கூற தாயவள் நிச்சயம் அனைத்து பின் சமயர்களுக்கும் எதை என்று கூற பின் அனைவரும் தன் பிள்ளையாக என்று எண்ணியே நிச்சயம் பின் அனைத்தும் சொல்லிக் கொடுத்தாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப இராவணனோட அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா? வர்றவங்க எந்தச் சமயத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், அவங்க எல்லாரையும் தன்னோட சொந்தப் பிள்ளையாத்தான் நினைச்சாங்க. அப்படித் தன் பிள்ளையா நினைச்சுதான், அந்தப் பெரிய ரகசியங்களை எல்லாம் அவங்களுக்கு மனசாரச் சொல்லிக் கொடுத்திருக்காங்கப்பா.")
=========================================
# "தாய் உள்ளம் :- இராவணேஸ்வரருக்கு அன்னை இட்ட அந்த அன்புக் கட்டளை"
========================================
குருநாதர் :- ஆனாலும் இதில் மிகுந்த சிறப்பு என்னவென்றால் இராவணனுக்கு சொல்லிக் கொடுத்தது நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. அதாவது “இராவணனே எப்பொழுதும் நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் என் குழந்தை என்று நீ பின் காட்டிக்க கூடாது. என் தாய் என்று நிச்சயம் அதை” எதை என்று அறிய “இங்கு வருபவர்கள் எல்லாம் என் குழந்தைகளே” என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால் பின் நீ அதாவது அறிந்தும் கூட எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட என்னை, தன் தாய் என்பதிலும் கூட பின் அழைக்கக்கூடாது நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- ஏனென்றால் இவர்களும் நிச்சயம் தன்னில் கூட பின் யாரும் இல்லாதவர்கள். நிச்சயம் அவ்வாறு நீ அழைத்தால் நிச்சயம் தன்னில் கூட, இவர்களுக்கும் நிச்சயம் பின் மனம் வருந்தும் இதனால் நீ எப்பொழுதும் என்னை தாய் என்றே அழைக்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "புரியுதுங்களா, அப்ப இராவணனோட அம்மா என்ன சொல்லிட்டாங்கன்னா, 'என்னைத் தாய்னு நீ கூப்பிடக்கூடாது' அப்படின்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, அங்க வந்திருக்கிற மத்தவங்க எல்லாம் யாருமே இல்லாதவங்க; நீ மட்டும் என்னை அம்மான்னு கூப்பிட்டா அவங்க எல்லாம் வருத்தப்படுவாங்கன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க. 'நீ என் அம்மான்னு சொல்லக்கூடாது, நானும் நீ என் பிள்ளைன்னு சொல்ல மாட்டேன்; இங்க இருக்கிற எல்லாரும் என் பிள்ளைகள்தான்'னு அந்தத் தாய் சொல்றாங்க பாருங்க, அதுதான் அங்க இருக்குற பெரிய வித்தியாசம்." )
==================
# குருநாதர் கருத்து
==================
============================================
"ஞானிகளின் தாய்: புத்தரையும் இயேசுவையும், (நபிகள்) நாயகரையும் இராவணனையும் அரவணைக்கும் அன்னையின் பேரன்பு"
============================================
குருநாதர் :- அப்பா ஒரு நிச்சயம் எனது கருத்து அறிந்தும் புரிந்து கூட, அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. அதாவது எவை என்று புரிய இப்படி சொன்னாலும் புரியாது புத்தனும் அறிந்தும் கூட, இயேசுவும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் அறிந்தும் புரிந்தும் கூட இராவணனும் அறிந்தும் எதை என்று அறிய (நபிகள்) நாயகனும் நிச்சயம் பின் தாயவளுக்கு மிக்க மிக்க நெருக்கங்களே பிள்ளைகளே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப என்ன சொன்னாங்க தெரியுங்களா? ஒரு கருத்தைச் சொன்னாங்க பாருங்க—எப்பவுமே ஒரு தாய்க்கு அவளோட பிள்ளைகள்னா ரொம்ப நெருக்கம் தானே, அதை அப்படியே இங்கேயும் வச்சுக்கலாம்னு சொல்றாரு. அப்ப அந்தத் தாய் இயேசு, புத்தர், நபிகள் நாயகம்னு இவங்க எல்லாரையும் எப்படிப் பார்த்தாங்க? 'இவங்க எல்லாம் என் பிள்ளைகள்தான், என் பிள்ளைகள்தான், என் பிள்ளைகள்தான்'னு அந்த அம்மா ரொம்ப உரிமையோடு சொல்றாங்க. அந்த அளவுக்கு அவங்க எல்லாரும் அந்தத் தாய்க்கு ரொம்ப நெருக்கமான பிள்ளைகளா இருந்திருக்காங்க." )
குருநாதர் :- ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட பின் இராவணன் எதை என்று கூற ஆனாலும் இவன் யாரும் அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஆனா இதைப் புரிஞ்சுக்கணும்னா ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, இந்த அம்மா வந்து எல்லாருக்குமே தாயாத்தான் இருந்திருக்காங்க. இது வந்து அவரோட கருத்து—அதாவது அவரோட 'ஒப்பினியன்' (Opinion). எல்லாருமே இவங்களை ஏத்துக்கிட்டு இருக்காங்க. 'எல்லாருக்கும் இவங்க தாயாத்தான் இருந்திருக்காங்க'ங்கிறதுதான் அவரோட ஆணித்தரமான கருத்து. அந்தத் தாய் எல்லாருக்குமே பொதுவானவங்களா இருந்து வழிநடத்தி இருக்காங்க." )
=======================================
# "மறைக்கப்படும் ஞானமும் ‘தான்’ என்ற அகந்தையும்: அழிவின் தொடக்கப்புள்ளி"
=======================================
குருநாதர் :- ஆனாலும் தற்பொழுது எதை என்று அறிய இவ்வாறெல்லாம் ஞானிகள் உண்மை நிலை நிச்சயம் தன்னில் கூட. இப்பொழுது மனிதனால் மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டு, தான் என்ற எண்ணம் அதிகமாகிவிட்டது. எப்பொழுது தான் என்ற எண்ணம் அதிகமாக பின் மக்களுக்கு எவை என்று அறிய மக்களிடையே இருக்கின்றதோ, அப்பொழுதே அழிவு என்றும் நினைத்துக் கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஆனா மனுஷனுக்கு அந்தத் 'தான்' என்ற எண்ணம் இருக்கவே கூடாதுங்க. அந்தத் 'தான்' என்ற எண்ணம் எப்ப மனுஷனை விட்டுப் போகாம இருக்கோ, எப்ப மனுஷனுக்கு அந்த எண்ணம் ரொம்ப அதிகமா வருதோ, அப்பவே அவனுக்கு அழிவு தொடங்கிடுச்சுன்னு அர்த்தம். அந்தத் 'தான்' என்ற அகந்தை அதிகமாகத் தொடங்குறப்பவே அழிவும் கூடவே தொடங்கிடுச்சுன்னு குருநாதர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு." )
========================================
# "ஒன்றே குலம்: அகந்தை அழியும் போதே, இயற்கை இறைவன் வசப்படும்!"
========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட முன்னோர்கள் எவை எவை என்று அறிய நல்லோருக்கு நிச்சயம் அதாவது பின் எவை என்று புரிய பின் நல்லோர்கள் பலபல நிச்சயம் இவ்வாறு குருகுலம் அமைத்து அனைத்தும் ஒன்றே என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.
குருநாதர் :- ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் ஒழுக்கமாக நல் மனதோடு பொறாமை இல்லாத நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஒன்றே என்று நினைத்தால், இறைவன் அனைத்தும் செய்வான்.
==========================================
# "ஆணவத்தின் வீழ்ச்சி: அகந்தையை அடக்கும் இயற்கையின் ருத்ரதாண்டவம்!"
==========================================
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் மனிதன் என்னவோ நிச்சயம் தன்னை கூட தான் என்ற அகங்காரம் வந்துவிட்டது. இதனால் பின் அவ் அகங்காரத்திலே அழிகின்றது. அவ் அகங்காரத்திலே நிச்சயம் தன்னில் கூட பின் இயற்கையும் நிச்சயம் பின் எதை என்று கூற பின் எவை என்று மனிதனுக்கு என்னவென்று காட்டிவிடும். இயற்கை இறைவனே எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "மனுஷன்கிட்ட எப்போ அந்த மாதிரி கெட்ட எண்ணங்கள் எல்லாம் அதிக அதிகமாகிப் போகுதோ, அப்போ அவன் எதையுமே சரியா நினைக்க மாட்டான். எல்லாரும் சமம்னு நினைக்காம, 'நம்மதான் பெரிய ஆளு'ன்னு நினைச்சுப்பான். ஆமா, அப்படி அவன் நினைக்கிறப்போ இயற்கையே கோவப்பட்டு எல்லாத்தையும் அழிச்சிரும்; எல்லாத்தையுமே அழிச்சிடும். ஏன்னா, அந்த இயற்கைதான் எல்லாம்; அந்த நேச்சர்தான் கடவுள். கடவுள்ங்கிறவர் அந்த இயற்கையா இருந்து எல்லாத்தையும் முடிச்சு வச்சிருவாரு." )
======================================
# வரும் காலத்தில் - சமயங்களுக்குள் பல வருத்தங்களை ஏற்பாடு செய்யப் போகின்றான்.
======================================
குருநாதர் :- எதை என்று அறிய அப்பனே அறிந்தும் ஏன் எதற்கு என்றால் நிச்சயம் அப்பனே எவ்வாறு என்பதை இவ் தேசத்தில் நிச்சயம் மனிதனே நிச்சயம் தன்னில் கூட பல சமயங்களுக்குள் பின் சண்டைகள் இட்டு நிச்சயம் பல வருத்தங்களை ஏற்பாடு செய்யப் போகின்றான் வருங்காலத்தில் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "வருங்காலத்துல இங்க மதச்சண்டைகள் வரும்பா, சமயங்களுக்குள்ள பெரிய சண்டை சச்சரவு எல்லாம் வரும்னு குருநாதர் சொல்றாரு. அந்த மதச்சண்டைகளால என்ன ஆகும்னா, நிறையப் பேர் ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுப்பாங்கப்பா. அப்படி அந்தச் சண்டையினாலேயே ஜனங்க நிறையப் பேர் அழிஞ்சு போவாங்கன்னு அவர் ரொம்ப வருத்தமா எச்சரிக்கிறாரு." )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment