​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 10 February 2026

சித்தன் அருள் - 2108 - அன்புடன் அகத்தியர் - கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 2



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 2

நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 2


குருநாதர் :- அம்மையே , அப்பனே, எதை என்று அறிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட . சிவராத்திரி எவை என்று புரிய வந்து கொண்டே. 

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட (சிவராத்திரி) இதை உருவாக்கியவனை நிச்சயம் பின், அதாவது பின் சொல்ல வேண்டும் அல்லவா, அதைச் சொல்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட. 

=================================
# “ரவண பவச” - மந்திர ரகசியங்கள். 
=================================

குருநாதர் :- பின் தன் மகனாக, நிச்சயம் தன்னில் கூட இளவரசனாக பின் முருகனையே நினைத்து நினைத்து வாழ்ந்தான். பின் கடைக்காலத்தில் பின் ராவணனே, இதை யாருக்காவது தெரியுமா என்றால் நிச்சயம் பின் தெரியாது. அதனால்தான் பின் “ரவண பவச” என்றெல்லாம் பின் தெரிகின்றதா இப்பொழுது?


அடியவர் :- ரவண பவச.

சுவடி ஓதும் மைந்தன் :- ராவண பவச. என்ன அர்த்தம் அதுக்கு?

அடியவர் :-  ராவண.

அடியவர் 3 :- ராவண.

அடியவர் :- அவனே முருகன்…ராவண பவச.
ரவண பவச. ரவண பவச.

அடியவர் 3 :- ராவண.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி வந்துருது. 

================================================
# சிங்கள நாட்டின் இளவரசன் - “முருகப்பெருமான்” 
================================================

குருநாதர் :-  அதனால்தான் இவன் நாட்டின் இளவரசனாக இன்னும் முருகன் திகழ்கின்றான், நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அதனாலதான் சொல்றேன், இன்னைக்கும் இந்த நாட்டோட இளவரசரா யார் தெரியுமா இருக்காரு? அது நம்ம முருகர்தான். நீங்க எங்க பார்த்தாலும் சரி, எந்தப் பக்கம் திரும்பினாலும் சரி, முருகர் கண்டிப்பா அங்க….)

குருநாதர் :-  எதை என்று, இதனைப் பற்றி விவரமாக இப்பொழுது சொல்கின்றேன். அதாவது பின் ராவணன் நிச்சயம் தன்னில் கூட கோணமலை ( திரிகோணமலை ) அறிந்தும் இதைத்தன் பின் அதாவது தன் தாயை காக்க போராடினான், நிச்சயம் தன்னில் கூட. அதாவது நிச்சயம் பின் இறப்பதற்கு சில நாட்கள் ஆனாலும் எப்படி காப்பது? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

===================================
# தன் தாயை காப்பாற்ற சுரக்கல்லை உடைத்த ராவணேஸ்வரர் 
===================================

குருநாதர் :- அப்பனே, நான் முன்பே சொன்னேனே நீ கவனித்தாயா, அதைச் சொல் மீண்டும். 

( குருநாதர் முன்பு திரிகோணமலையை பற்றி உரைத்த வாக்கு. இவ் சிவராத்திரி வாக்கு முடிந்தவுடன் அவ் வாக்குகள் வெளிவரும்.)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ராவணன் வந்து அவங்க தாய் வந்து என்ன பண்ணாரு 

அடியவர் :-  (தாயை ) காப்பாத்த.

சுவடி ஓதும் மைந்தன் :-  காப்பாத்த, நான் லாஸ்ட் ல என்ன முடிச்சேன் அடுத்து? அதை நீ சொல்லு என்று சொல்லறாரு..

சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணேஸ்வரர்  தயார்) உடல்நிலை ரொம்ப மோசமாகும்போது. மூலிகை எல்லாம் கண்டுபிடிச்சு, மந்திரங்கள் கண்டுபிடிச்சு, திரிகோணமலையை  அங்க என்ன சொன்னார் தெரியுமா? இராவணேஸ்வரர் அம்மா சாகுறதுக்கு இன்னும் ஒரே நாள்தான் இருக்குது.]அப்ப என்ன பண்ணாரு?

அடியவர் :- சுரக்கல்லை  போட்டு உடைக்கிறார் கீழ. சுரக்கல்லை போட்டு உடைக்கிறார் கீழ.

சுவடி ஓதும் மைந்தன் :- அதை உடைக்கிறார் கல்லை. ஏன்னா எப்படி அவங்க அம்மாவை  காப்பாத்துறதுன்னு தெரியல. அப்ப என்ன பண்ணாரு? அதுதான் அவர் சொல்றாரு. அப்ப (சுரக்கல்லை )  ஒரு அடி , ஓங்கி அடிச்சாரு.


குருநாதர் :-  எதை என்று புரிய அன்றும் கூட பின் சிவலிங்கம் எதை என்று கூட அழகாக 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அங்க சிவலிங்கம் அங்கேயே இருக்குது. ஐயா புரியுதுங்களா. இது திரிகோணமல்ல இருந்து எடுத்துட்டு வராரு திருப்பி. அங்க வந்து ஓங்கி அடிக்கிறாரு …அப்ப என்ன பண்றாரு… வந்து சிவலிங்கம் அங்க இருக்குது 

====================================
# அசரீரி வாக்கு :- சிவலிங்கத்தை ஒரு இடத்தில் வைத்தால் , நிச்சயம் சாகா வரத்தை பெற்று விடுவாள் உன் தாய்.
====================================

குருநாதர் :-  அறிந்தும் இதை என்று அறிய ஆனாலும் ஒரு சத்தம் இதனை அழகாக பின் நிச்சயம் தூக்கி நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு இடத்தில் வைத்தால் நிச்சயம் பின் பலம் பெற்று விடுவாள் உன் தாய். பின் சாகா பின் வரத்தை நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- (திடீர்னு மேலிருந்து ஒரு சத்தம் கேட்குது, ஆனா அது என்னன்னு சரியா புரியல. "நீ இந்த சிவலிங்கத்தை எடுத்துட்டுப் போய் ஒரு இடத்துல வச்சேன்னா, உங்க அம்மாவுக்கு ஆயுள் கூடும்; அவங்க சாகவே மாட்டாங்க, சாகாத வரம் கிடைச்சிரும்" அப்படின்னு அந்தச் சத்தம் சொல்லுது. இதைக் கேட்டதும், எப்படியாவது அம்மாவைக் காப்பாத்திடலாம், அவங்களுக்கு மரணமே இல்லாத நிலையை உருவாக்கிடலாம்னு ஒரு நம்பிக்கை பிறக்குது.)

குருநாதர் :- எதை எவை என்று புரிய ஆனாலும் பின் அலிங்கத்தை பின் பின் எவை என்று கூறி தூக்குகின்றான். ஆனாலும் முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த லிங்கத்தை என்ன பண்றாரு? தூக்குறாரு. தூக்க முடியல. 

குருநாதர் :-  அங்கும் இங்கும் எதை என்று புரிய எத்தனை எது என்று அறிய , ஆனாலும் பின் ஊரார் எவை என்று கூற பின் அனைவரும் அழைத்து நிச்சயம் தன்னில் கூட. பின் முடியவில்லை. முடியவில்லை எத்தனை எதை என்று கூற. எத்தனை பின் தூதர்கள் எத்தனை அவனிடத்தில் பின் ஆட்கள் அனைவரும் பின் அழைத்து பின் கம்பிகளாலும் எதை என்று அறிய நிச்சயம் கட்டி நிச்சயம் முடியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அங்க அரசாங்கத்துல எத்தனை பேர் இருக்காங்களோ அவங்க எல்லாரையும் வரச் சொல்லி, அந்தச் சிவலிங்கத்தைத் தூக்கச் சொல்றாரு. ஆனா யாராலயும் அதைத் தூக்க முடியல, ஏன்... ஒரு துளிகூட அசைக்கக்கூட முடியல. அந்தச் சிவலிங்கம் அப்படியே அந்தப் பரந்த இடத்துல ஸ்ட்ராங்கா நின்னுடுச்சு. அவரால எவ்வளவோ முயற்சி பண்ணியும் அதை அங்கிருந்து எடுக்கவே முடியாமப் போயிருச்சு.)

=========================================
# தாயின் உயிர் பிரிய இன்னும்  சில மணி துளிகள் தான் உள்ளது….
=========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நாட்கள் கூட நாட்கள் கூட சென்று கொண்டே அதாவது எதை என்று புரிய பின் நாட்களும் இல்லை நிச்சயம் பின் மணி துளிகள் தான் உள்ளது இன்னும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இனிமேல் நாட்கள் கணக்கெல்லாம் இல்லை, இன்னும் சில மணி நேரங்கள் மட்டும்தான் பாக்கி இருக்குது. எப்படியாவது அம்மாவைக் காப்பாத்தியே ஆகணும்ங்கிற கட்டாயம், ஆனா அந்தச் சிவலிங்கத்தை மட்டும் தூக்கவே முடியல. நேரம் ஓடிக்கிட்டே இருக்கு, ஆனா சிவலிங்கம் அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகரமாட்டேங்குது. இவ்வளவு போராடியும் அதைத் தூக்க முடியாமப் போனதுதான் பெரிய சிக்கலாகிடுச்சு.)

குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இராவணன் எதை என்று புரிய எவை என்று கூற பலம் அனைவரும் பின் அறிந்ததே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் இராவணனுடைய பலம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த சிவலிங்கத்தை தூக்க முடியல 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய எப்படி என்று நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட இதுவும் எதை என்று கூறு பின் ஈசனை ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் இருப்பவனும் நிச்சயம் ஈசனே நிச்சயம் தன்னில் கட பின் அதை தூக்கி வருவோம் என்றெல்லாம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "சரி, இந்த லிங்கத்தை நம்மளால தூக்க முடியலையே... இதும் அந்த கைலாய ஈசன் தானே!" அப்படின்னு யோசிச்சவரு, ஒரு பிளான் போடுறாரு. "நேரா கைலாயத்துக்கே போயி, அந்த கைலாய மலையையே தூக்கிட்டு வந்து இங்க வச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ல, ரெண்டும் ஒண்ணு தானே" அப்படின்னு முடிவு பண்ணிட்டு, ரொம்ப வேகமா கைலாயத்தை நோக்கிப் போறாரு.) 

===========================================
# தன் தாயின் உயிரை காக்க, கைலாய மலையை தூக்கிய இராவணேஸ்வரர்… 
===========================================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நிச்சயம் தன்னில் கூட அங்கும் கூட எதை என்று கூற அவ்மலையை பின் நிச்சயம் தன்னில் கூட பின் தூக்கினான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( பாருங்கயா அந்த அதிசயத்தை! அங்க இருந்த அந்தச் சிவலிங்கத்தை அவரால ஒரு இன்ச் கூட அசைக்க முடியல, ஆனா மொத்த கைலாய மலையையும் அப்படியே லாவகமா தூக்கிட்டாரு. ஒரு சின்ன லிங்கத்தைத் தூக்க முடியாமப் போன அதே கைகளால, ஈசன் குடியிருக்கிற அந்த மாபெரும் மலையையே மொத்தமா பெயர்த்துத் தூக்கி நிறுத்திட்டாரு. )

குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட, பின் அழகாக கைகளால் தூக்கினான் நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற ஈசனே!!! ஈசன் குடும்பமே இதுதான் உள்ளது நிச்சயம் பின் என் என் தாய் நிச்சயம் தன்னில் கூட காக்கப்படுவாள் என்று 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஈசன் குடும்பமே இந்த கைலாயத்துலதான் இருக்குது, ஆனா அந்த ஒரு சின்ன லிங்கத்தை மட்டும் என்னால தூக்க முடியலையேன்னு அவருக்குள்ள ஒரு எண்ணம் ஓடுது. "அந்த லிங்கம் முடியலன்னா என்ன, மொத்த கைலாயத்தையே தூக்கிடுவோம்"னு முடிவு பண்றாரு. அந்த ஒரு வேகத்துல, ஈசனும் அவரோட குடும்பமும் இருக்குற அந்த முழு மலையையுமே அப்படியே பெயர்த்துத் தூக்குறாரு.)

====================================
# இராவணேஸ்வரரின் சந்தோசம் ……கயிலையை தூக்கி வந்தமைக்காக அல்ல …தன் தாய் உயிர் பிழைப்பாள் என்ற பாசத்தில் சந்தோசம் 
====================================

குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அங்கிருந்து எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட பின் எதை என்று கூற சரியாகவே பின் நிச்சயம் தூக்கிட்டு இங்கு பின் அமர்ந்து அறிந்து கூட பின் ஒரு இடத்தில் வைத்துவிட்டான். நிச்சயம் சந்தோஷங்கள் பின் யான் வைத்துவிட்டேனே யான் வைத்துவிட்டேன் என்று, பலமாக என் தாய் காக்கப்படுவாள் நிச்சயம் தன்னில் கூட. சாகா வரம் பெற்று விடுவாள் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (கடைசியில அந்த மொத்த கைலாயத்தையும் அப்படியே தூக்கிட்டு வந்துட்டாருயா! கொண்டு வந்து பக்கத்துல வச்சதும் அவருக்குள்ள ஒரு நிம்மதி. "இனிமே என் தாயை கண்டிப்பா காப்பாத்திடலாம், அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது, அவங்க ஆயுள் காக்கப்படும்"னு ஒரு பெரிய சந்தோஷம். தன் அம்மாவை எப்படியாவது காப்பாத்திடுவோம்ங்கிற அந்த நம்பிக்கையில மனுஷன் ரொம்ப குஷியாகிட்டாரு.)

===============================
# மீண்டும் அசரீரி வாக்கு ….
===============================

குருநாதர் :- ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் முடியவில்லை. மீண்டும் ஒரு சத்தம் நிச்சயம். எதை எடுக்கின்றாயோ அதைத்தான் நிச்சயம் தன்னில் கூட. என்றெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மீண்டும் ஒரு சத்தம் கேட்டது. நான் எதை வைக்க சொன்னேன்? நீ எதை எடுத்துட்டு வந்த ன்னு சொல்லிட்டு …

அடியவர் :- அசரீரி 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிவலிங்கத்தை எடுத்துட்டு வரச் சொன்னா, இவர் மலையையே தூக்கிட்டு வந்ததுதான் இங்க விஷயமே. )

அடியவர் :-  (அவங்க என்ன சொன்னாங்க? அந்த உடைஞ்ச சிவலிங்கத்தை மட்டும் எடுத்துட்டு வரச் சொன்னாங்க. ஆனா நீ என்னடான்னா, அதை அங்கேயே விட்டுட்டு, நேரா கைலாயத்துக்கே போயி மொத்த மலையையும் தூக்கிட்டு வந்திருக்க. சொல்லப்பட்ட அந்தச் சிவலிங்கத்தை விட்டுட்டு, இப்படியா மலையையே பெயர்த்து எடுத்துட்டு வருவாங்கன்னு கேக்குற மாதிரி இருக்கு அவர் செஞ்ச காரியம்.)

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு சத்தம் கேட்டது 

குருநாதர் :- இதை எதை என்று புரிய அவ்  சத்தம் பின் எப்பொழுது எதை என்று அறிய யான் நிச்சயம் தன்னில் கூட கூறுகின்றேன் இப்பொழுது வேண்டாம் 

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்மலையில் சிறிது நேரம் இங்கு இருந்தாலே நிச்சயம் முடிந்துவிட்டது உன் தாயின் கதை என்று சத்தத்துடனே 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஆனாலும் ஒரு விஷயம், இந்த மலை இங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலே போதும், உன் தாயோட கதை கண்டிப்பா முடிஞ்சுடும்" அப்படின்னு ஒரு சத்தம் பலமா கேட்குது. அந்தச் சத்தம் என்ன சொல்லுதுன்னா, நீ மலையைத் தூக்கிட்டு வந்ததுனால எந்தப் பிரயோஜனமும் இல்லை, நேரம் கடந்துட்டே இருக்கு, இதோ இப்பவே உன் அம்மாவோட ஆயுள் முடியப்போகுதுன்னு ஒரு எச்சரிக்கை கொடுக்குது.)

========================================
# மீண்டும் கயிலை மலையை , எடுத்த அதே கயிலையில் வைத்த இராவணேஸ்வரர்.
========================================

குருநாதர் :- நிச்சயம் மீண்டும் பின் ஓடி ஓடி எதை என்று கூற பின் பின் என்னடா வேலை என்றெல்லாம் பின் நினைத்து மீண்டும் அழகாக பின் அதாவது தூக்கி அறிந்து கூட பின்னும் பின் சென்றான் பின் வைத்துவிட்டான். போதுமடா என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப தூக்கிட்டு போய் எங்க வச்சாரு? எங்க எடுத்தாரோ அங்கேயே வச்சுட்டாரு.

===================================================
# இராவணேஸ்வரரின் இந்த கதையை படித்தாலே, கேட்டாலே, அறிந்துகொண்டால் - உங்கள் பலமும் கூடும். நிச்சயம் உங்கள் துன்பத்தை வெல்லலாம் 
===================================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஏன் இராவணனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவன் பின் அவ்வளவு பலம் படைத்தவன். அவ்வளவு பலம் படைத்தவனை அறிந்து கொண்டால், நீங்களும் பின் பலம் உள்ளவராக ஆகி நிச்சயம் துன்பத்தை வெல்லலாம்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்)

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இராவணனைப் பத்தி நாம ஏன் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க? ஏதோ ஒரு கதைன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்படியே போயிட்டே இருக்கலாம் தான், ஆனா விஷயம் அது இல்லை. அவர் அவ்வளவு பெரிய சக்தியையும் பலத்தையும் சம்பாதிச்சு வச்சிருந்தவர். அவரோட அந்த அசாத்தியமான பலத்தைப் பத்தி நீங்க சரியா புரிஞ்சுக்கிட்டீங்கனாலே போதும், உங்களுக்குன்னு ஒரு தன்னம்பிக்கை வந்துரும். வாழ்க்கையில எந்தத் துன்பம் வந்தாலும் சரி, அந்தத் துன்பத்தை எல்லாம் அடிச்சு நொறுக்கிட்டு ஜெயிக்கக்கூடிய ஒரு பெரிய மனபலமும் தெம்பும் தானாவே உங்களுக்குள்ள வந்துரும்.)

======================================
# தன் தாயின் மீது மிகுந்த பாசத்தை கொண்டவர்  இராவணேஸ்வரர் .
======================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட தாயின் மீது மிகுந்த பாசத்தை கொண்டவன் நிச்சயம் பின் இராவணேஸ்வரன். 

=========================================
# பெற்றோர்கள் அவசியம் இந்த மகிமை புகழ் இராவணேஸ்வரரின் கதையை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் தானாக நீங்கள் சொல்வதை கேட்பார்கள்.
=========================================

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட தான், தான் நிச்சயம் குழந்தைகள் நீங்கள் ஏங்கிக் கொண்டிருப்பீர்கள். தன் மீது பாசம் வைக்கவில்லையே என்று!!!! ஆனால் நிச்சயம் தன்னில் கூட இராவணனை பற்றி சரித்திரத்தை எடுத்து கூறினால், தானாக பிள்ளைகள் நிச்சயம் தன்னில் கூட பின் சொல்வதை பின் கேட்பார்கள். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்)

சுவடி ஓதும் மைந்தன் :-  (இங்க இருக்குற எல்லாருக்குமே குழந்தைகள் இருக்காங்க, ஆனா இராவணேசர் தன் தாய் மேல வச்சிருந்த பற்று இருக்கே... அது ரொம்ப பெருசு. அவர் அவ்வளவு பெரிய பாசக்காரரா இருந்திருக்காரு. இப்ப நான் எதற்காவே இராவணனோட வாழ்க்கை வரலாற்றை உங்களுக்குச் சொல்றேன்னா, அவரோட அந்தத் தாய் பாசத்தைப் பத்தி நீங்க முழுசா தெரிஞ்சுக்கிட்டாலே போதும்—உங்க பிள்ளைங்களும் உங்களை எப்படி நேசிக்கணும், எப்படிப் பாசமா இருக்கணும்ங்கிற அந்தத் தெளிவு அவங்களுக்குள்ள தானாவே வந்துரும். அந்தப் பாசம் தானாவே ஊற்றெடுக்கும்.) 

===================================
# பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தானாக வசியமாகும் ரகசியம்.  
# இறைவனின் வசியம்.
===================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட அவ் வசியம் என்பது தானாக வந்துவிடும். இதுதான் வசியம். இறைவனின் வசியம்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்)

சுவடி ஓதும் மைந்தன் :- (மத்தவங்க சொல்ற மாதிரி வசியம் பண்றது, மந்திரிக்குறதுன்னு எதாலயும் பாசத்தை வரவழைக்க முடியாது, அதெல்லாம் தேவையே இல்லாத விஷயம். இந்த உண்மையான பாசத்தைப் பத்தி, குறிப்பா இராவணேசர் அவங்க அம்மா மேல வச்சிருந்த அந்த பக்தியைப் பத்திக் கேட்டாலே போதும்—அதைச் சரியா புரிஞ்சுக்கிட்டாலே ஒரு பெரிய மாற்றம் நடக்கும். வேற எந்த வித்தையுமே இல்லாம, உங்க பிள்ளைங்க உங்க மேல தானாவே உயிருக்குயிரான பாசத்தை வச்சிருவாங்க. அந்த அன்பு உள்ளத்துல இருந்து தானாவே சுரக்கும்.)

குருநாதர் :-   அறிந்தும் எதை என்று புரிய இதனால் இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் என்ன செய்வது என்று, பின் கைலாயத்திலிருந்து எதை என்று அறிய. பின் அப்படியே இங்கும் அங்குமாக 

சுவடி ஓதும் மைந்தன் :- (அவருக்குள்ள அவ்வளவு வேகம், இங்க ஒரு கால் வச்சா அங்க போயிடறாரு, அங்க ஒரு கால் வச்சா அடுத்த நிமிஷமே இங்க வந்துடறாரு. அந்த அளவுக்கு மின்னல் வேகத்துல பறந்துட்டு இருக்காரு. ஆனா இவ்வளவு வேகம் இருந்தும், தன் அம்மாவை எப்படித்தான் காப்பாத்தப் போறோம், அதுக்கு என்ன வழிங்கிறது மட்டும் அவருக்குப் புரியல. அந்த ஒரு குழப்பமும் தவிப்பும் அவரை அப்படியே போட்டு வாட்டுது.)

======================================
# அகத்திய மாமுனிவரிடம் , மகா பலம் மிக்க  இராவணேஸ்வரர் புலம்பல் ….
======================================

குருநாதர் :-   எதை என்று புரிய ஆனாலும் பின் அதாவது யான்  ஆசிரமத்தை  அங்கே  அமைத்திருந்தேன் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அகத்தியனே!!!!! எதை என்று அறிய எவ்வளவு ஈசனுக்கு பின் எவ்வளவு எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியில் பின் என் தாயை என்னால் காப்பாற்ற முடியவில்லையே. பின் நிச்சயம் பின் ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட இவ்வாழ்க்கை. அதாவது எதற்கு பின் வாழ இனிமேலும் கூட. அவ்வளவுதான் கடந்து கதையும் முடிந்துவிட்டது 

சுவடி ஓதும் மைந்தன் :- (கடைசியில மனசு உடைஞ்சு போன இராவணேசர் அகத்தியர் கிட்ட போய் புலம்புறாரு. "ஈசன் மேல இவ்வளவு தூரம் நான் பக்தியாவும் பாசமாவும் இருந்தேனே, எனக்கிருந்த சக்தியை எல்லாம் வச்சு என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். ஆனா, இவ்வளவு செஞ்சும் என்னோட சொந்தத் தாயை என்னால காப்பாத்த முடியலையே! ஒரு பெத்த தாயைக் கூடக் காப்பாத்த முடியாத இந்த ஒரு வாழ்க்கை எனக்கு எதுக்கு? இந்த உயிரும் வாழ்க்கையும் எனக்குத் தேவையே இல்லை" அப்படின்னு ரொம்ப விரக்தியில பேசுறாரு.)

===================================
# அகத்திய மாமுனிவரின் யோசனை 
===================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் யானும் கூட நிச்சயம் சரியாக யோசித்து, எவை என்று புரிய, மீண்டும் சத்தம் கேட்டது அல்லவா நிச்சயம். அங்கே செல்லலாம். ஏதாவது பின் சத்தம் கேட்கின்றதா என்று பார்ப்போம் என்று. ஆனாலும் அறிந்தும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் உடனே, "சரி ராவணா. வா, நாம அந்த இடத்துக்கே போவோம்" அப்படின்னு கூப்பிடுறாரு. எந்த லிங்கத்தைத் தூக்க முடியாம அந்தச் சத்தம் கேட்டுச்சோ, அதே இடத்துக்கே மறுபடியும் போனா அங்க ஏதாவது ஒரு வழி பிறக்கும், ஒரு யோசனை கிடைக்கும்னு சொல்றாரு. "ஈசன் ஒன்னும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டாரு, ஆனா நீ இவ்வளவு உருகி வேலை செஞ்சிருக்கல... அதனால அவர் மனசு இறங்கி வருவாரு. உன்னோட பக்தியைப் பார்த்துட்டு கண்டிப்பா கருணை காட்டுவாரு, உன் மேல ஒரு பெரிய கருணைப் பார்வையை வீசுவாரு" அப்படின்னு அகத்தியர் அவருக்கு தைரியம் சொல்றாரு.)

குருநாதர் :-   எதை எவை என்று புரிய, ஆனாலும் எத்தனை எத்தனை ஏன் எதற்காக எவை என்று புரிய, ஆனாலும் இதைத்தன் தன்மையும் கூட, அப்படியே பின். அதாவது சரி அகத்திய மாமுனிவரே செல்லலாம் என்று. 

குருநாதர் :-  வரும் வழியில் நிச்சயம் தன்னில் கூட, அதாவது எதை என்று புரிய, பின் வில்வ இலை, அதாவது வில்வ மரங்கள்  அப்பொழுது அதிகம். அதைத்தன் பின் அதாவது ஒவ்வொன்றாக நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்து, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எதை என்று கூற, மரத்தில் பின் இருந்து, பின் அதாவது பின் எதை வில்வத்தை பின் நிச்சயம் எதை என்று கூற கையால், பின் எதை என்று பிடுங்கி பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே வந்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் சொன்ன அந்த ஆசிரமத்தைச் சுத்தி அப்போ ஏகப்பட்ட வில்வ மரங்களாம். திருகோணமலையிலிருந்து வந்த இராவணேசருக்கு அங்க போனதும் ஒரு யோசனை பிறக்குது. "அவ்வளவுதானே, பாத்துக்கலாம்"னு முடிவு பண்ணிட்டு, அந்தப் பகுதியில அடர்த்தியா வளர்ந்திருந்த வில்வ மரங்கள்ல இருந்து, இலைகளை ஒவ்வொன்னா பிச்சு பிச்சு வெளியில போட்டுக்கிட்டே வராரு. அங்க இருக்குற வில்வ மரத்து இலைகளை எல்லாம் வேகவேகமா உருவித் தள்ளிக்கிட்டே தன் வேலையைத் தொடர்றாரு.)

=========================================
# இராவணேஸ்வரர் யோசனை எங்கேயோ போய்விட்டது. வில்வ இலைகளை பறித்து கைகளில் அப்படியே வைத்துக் கொண்டார்.
==========================================

குருநாதர் :-   இதை எதை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் அனைத்தும் ஒரு முறை நிச்சயம் தன்னில் கூட யோசனை எங்கேயோ போய்விட்டது.  நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட அறிய எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பறித்து பறித்து கைகளில் அப்படியே வைத்துக்கொண்டான் பின் பின் இராவணன். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்போ இராவணனுக்குள்ள ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனை ஓடிட்டு இருக்கு. அவர் என்ன பண்றாருன்னா, அங்க இருந்த வில்வ இலைகளை எல்லாம் மொத்தமா கையில அள்ளி எடுத்துக்கிறாரு. அந்த இலைகளை எல்லாம் கைக்குள்ள வச்சு நல்லா நசுக்கிப் பிடிச்சுக்கிட்டு, "அவ்வளவுதான்டா விஷயம்!" அப்படின்னு தனக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வர்றாரு. ஏதோ ஒரு பெரிய ரகசியத்தையோ இல்ல வழியையோ கண்டுபிடிச்ச அந்த வேகத்துல, அந்த வில்வ இலைகளை கையோட வச்சுக்கிட்டு அடுத்த கட்டத்துக்குத் தயாராறாரு.) 

அடியவர் :- அம்மாவுக்கு ரொம்ப பிரச்சனை இருக்காங்கன்னு சொல்லி இது யோசனை எல்லாம் வில்வத்தை புடிச்சு கையில வச்சுக்கிட்டாரு 

சுவடி ஓதும் மைந்தன் :- ம் 

குருநாதர் :-   எதை எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அருகே வந்தான் அறிந்தும் கூற பின் சிவலிங்கத்திற்கு அருகே நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  (கடைசியில அந்தச் சிவலிங்கம் இருந்த இடத்துக்கே வந்து சேர்ந்துட்டாங்க. இராவணேசர் கையில பார்த்தா அப்படியே அள்ளி எடுத்த வில்வ இலைகள் நெறைய இருக்கு. அந்த லிங்கத்துக்கு முன்னாடி நிக்கும்போது அவரோட கைகள் முழுக்க அந்த வில்வம்தான். )

==========================================
#    சிவராத்திரி ரகசியங்கள் - லிங்கம் ஆடிய அதிசயம்.அசையாத லிங்கம் அசைந்தது
# இராவணேஸ்வரர் வில்வ இலைகளை தூக்கி லிங்கத்தின் மீது வீசிய உடன் லிங்கம் ஆடியது. 
==========================================


குருநாதர் :-   நிச்சயம் எதை என்று புரிய, ஆனாலும் ஈசனே!!!!! எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அழகாக அறிந்தும் புரிந்தும் கூட. பின் அதாவது உன்னால் பின் தாய் எதை என்று கூற, பின் உன் அதாவது உன்மேலே பின் அன்பு செலுத்தினேன் இவ்வளவு நிச்சயம் தன்னில் கூட. என் தாயை கூட காக்க முடியவில்லையே. பின் அப்பொழுது ஏன் இந்த உயிர் நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய என்று, நிச்சயம் கைகளில் உள்ள நிச்சயம் தன்னில் கூட கோபமாக பின், ஈசன் அதாவது லிங்கம் இருக்கின்றது அல்லவா, நிச்சயம் வீசினான். எதை என்று கூற பின் லிங்கத்தின் மீது பட்டது நிச்சயம் தன்னில் கூட. லிங்கம் ஆடியது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இராவணனுக்கு உச்சக்கட்ட கோவம் வந்துடுச்சு. "ஈசா! உன் மேல இவ்வளவு பாசம் வச்சிருந்தேனே, ஆனா என் தாயைக் காக்க உன்னால முடியலையே"ன்னு ஆவேசப்பட்டு, அந்த வில்வத்தை எடுத்து அப்படியே அந்த இடத்துல தூக்கி லிங்கத்தின் மீது வீசுறாரு. அந்த வேகத்துல அவர் செஞ்ச காரியத்தால, அசைக்கவே முடியாதுன்னு இருந்த அந்தச் சிவலிங்கம் அப்படியே லேசா ஆட ஆரம்பிச்சிருச்சு. மனுஷனோட அந்த ஆக்ரோஷமான பக்தியும் தவிப்பும் சேர்ந்து லிங்கத்தையே ஒரு ஆட்டு ஆட்டிடுச்சு!)

அடியவர் :- இதுவரைக்கும் அசையாத லிங்கம் அசைந்தது…… 

===========================================
# லிங்கம் ஆடிய ஆச்சரியத்தில் , அகத்திய மாமுனிவரை கெட்டியாக பிடித்துக் கொண்ட இராவணேஸ்வரர்.
===========================================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம் ஆனாலும் பின் அறிந்தும் புரிந்தும் அகத்தியனே !!!!!  அகத்தியனே !!!!!  நிச்சயம் தன்னில் கூட… சரியாக பின் அனைத்தும் நீர் உணர்ந்தவர். 

குருநாதர் :- நிச்சயம் சொல்வீராக…. நிச்சயம் பின் சொன்னால்தான் என்று நிச்சயம் தன்னில் கூட யான் உன்னை விட்டு விடுவேன். என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டான் எனை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (லிங்கம் ஆடுறதைப் பார்த்ததும் இராவணனுக்கு ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சிடுச்சு. "உனக்கு எல்லா உண்மையுமே தெரியும், இப்போ லிங்கம் ஆடுதுன்னா அதுக்கு ஏதோ அர்த்தம் இருக்கு"ன்னு சொல்லிட்டு, நேரா அகத்தியரை நோக்கிப் போறாரு. "நான் உன்னை விடமாட்டேன், எனக்கு இப்பவே பதில் சொல்லு... உண்மையைச் சொல்லு, என்ன நடக்குதுன்னு சொல்லு" அப்படின்னு சொல்லி அகத்தியரை ரொம்ப கெட்டியா புடிச்சுக்கிறாரு. "நீ சொல்லாம நான் உன்னை விடமாட்டேன்"னு ஒரு பிடிவாதத்தோட அகத்தியர் கிட்ட அந்த ரகசியத்தைக் கேட்குறாரு இராவணேசர்.)

================================
# ஈசன்:- “அகத்தியனே ரகசியத்தை சொல்லிவிடாதே” என்று… 
================================

குருநாதர் :-   பின் நிச்சயம் தன்னில் கூட ஈசனும் எதை என்று கூற பின் ஆனாலும் பின் சொல்லிவிடாதே சொல்லிவிடாதே என்று நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அங்க ஒரு பெரிய மர்மமே நடக்குது!, ஆனா அகத்தியருக்கு மட்டும் ஈசன் ரகசியமா ஒரு கட்டளை போடுறாரு. ஈசன் அகத்தியர் கிட்ட, "அகத்தியனே, அவன்கிட்ட எதையும் சொல்லிடாதே... அந்த ரகசியத்தை மட்டும் வெளியில சொல்லிடாதே" அப்படின்னு எச்சரிக்கிறாரு. ஒரு பக்கம் இராவணன் உண்மையைச் சொல்லிடுன்னு அகத்தியரை நச்சரிக்க, இன்னொரு பக்கம் ஈசனோ ரகசியத்தை மூடியே வைன்னு சொல்றாரு. )

குருநாதர் :-   அறிந்தும் எதை என்று கூற கால்களியாக கெட்டியாக பிடித்துக் கொண்டான் பின் 

அகத்தியனே!!!!! 
அகத்தியனே!!!!! 
அகத்தியனே!!!!! 
அகத்தியனே!!!!! என்றெல்லாம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அகத்தியர் எங்கே ரகசியத்தைச் சொல்லாமல் நழுவிப் போயிடப் போறாரோன்னு பயந்து, இராவணன் அவரை ரொம்ப கெட்டியா புடிச்சுக்கிறாரு. அவர் காலைக் கூட விடாம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு, " வா... வந்து சொல்லு! என்ன ரகசியம்னு இப்பவே என்கிட்ட சொல்லு" அப்படின்னு சொல்லி விடாப்பிடியா நிக்கிறாரு. ஒரு பக்கம் ஈசன் சொல்லாதேன்னு தடுத்தாலும், இன்னொரு பக்கம் இராவணன் அகத்தியர் கிட்ட இருந்து  அந்த உண்மையை வாங்கிடணும்னு துடிக்கிறாரு.)

==========================================
# அகத்திய மாமுனிவரின் ஆனந்த கண்ணீர் ……
==========================================

குருநாதர் :-   இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று கூற , ஆனந்த கண்ணீர் தாயுக்காகவே…. இவ்வளவு பின் பாசங்களா என்று இராவணனை நினைத்து… 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இராவணனோட நிலையைப் பார்த்து அகத்தியருக்குக் கண்ணுல தண்ணியே வந்துடுச்சு. "அடடா, ஒரு மனுஷன் தன் அம்மா மேல இவ்வளவு பாசம் வச்சிருக்காரே! பெத்த தாய்க்காகக் கைலாயத்தையே தூக்கிட்டு வந்தும், கடைசியில ஒன்னும் பண்ண முடியாம இப்படித் தவிக்கிறாரே"ன்னு நினைச்சு அகத்தியர் ரொம்பவே உருகிப் போயிட்டாரு. இவ்வளவு பெரிய பலசாலியான இராவணேஸ்வரன், தன் தாய்க்காக ஒரு குழந்தையா மாறி நிக்கிறதைப் பார்த்து அகத்தியருக்குக் கண்ணீர் முட்டுது. இன்னொரு பக்கம், இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டே ஈசனும் அங்க ஒரு திருவிளையாடல் பண்ணிக்கிட்டு இருக்காரு. இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த அகத்தியர், அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்பவே நெகிழ்ந்து போய் நிக்கிறாரு.)

=========================================
# சிவராத்திரி ரகசியம் - இதை எப்பொழுதோ கண்டுபிடித்துவிட்டோம்
=========================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எதை என்று கூற பின் அதாவது யானும் நினைத்தேன் நிச்சயம் தன்னில் கூட. பின் நிச்சயம் இனிமேலும் நிச்சயம் தன்னில் கூட, பின் ஆனாலும் ஈசனுக்கும் அது கேட்டது. இப்பொழுது எதை என்று, அப்பா இதை எப்பொழுதோ கண்டுபிடித்துவிட்டோம். 

==========================================
# அகத்திய மாமுனிவர் மனதில் எண்ணியதை ஈசன் கேட்பார்.  ஈசன் எண்ணியதை கத்திய மாமுனிவர் கேட்பார்.
==========================================

குருநாதர் :-  மனதில் எண்ணியதை ஈசன் கேட்பான்.  பின் ஈசன் பின் எண்ணியதை யான் கேட்பேன்.

 
சுவடி ஓதும் மைந்தன் :-  (அகத்தியர் மனசுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துட்டாரு. "அப்பா, என் மனசும் தாங்கலப்பா... நான் ரகசியத்தைச் சொல்லிட்டுப் போறேன்" அப்படின்னு அவர் இங்கேயே நினைச்சதுதான் தாமதம், அதை அந்த ஈசன் அங்கேயே கண்டுபிடிச்சிட்டாரு. நாம மனசுல என்ன நினைக்கிறோம்கிறது ஈசனுக்குத் தெரியாதா என்ன? அகத்தியர் எப்போ உண்மையைச் சொல்லணும்னு நினைச்சாரோ, அந்த நிமிஷமே ஈசனுக்கு அது புரிஞ்சுடுச்சு. "இவன் எதையும் மறைக்க மாட்டான், எல்லாத்தையும் சொல்லிடப்போறான்"னு ஈசன் நினைக்கிற அதே நேரத்துல, அகத்தியரும் பிடிவாதமா, "இனிமே நான் மறைக்க மாட்டேன், எல்லாத்தையும் இராவணன் கிட்ட சொல்லியே தீருவேன்"னு உறுதியா நிக்கிறாரு.)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment