​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 7 February 2026

சித்தன் அருள் - 2102 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வர சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8

நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருக்கேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99

அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.

========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8)

==============================================
# செத்து செத்து வாழ்ந்து கொண்டே இன்னும் மனிதன்.
==============================================

குருநாதர் :-  அப்பனே பின் நோய்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. ஆனால் அப்பனே பின் புண்ணியம் செய்தவை, அப்பனே பின் விலங்குகள், பின் ஒரே அடியில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறந்து விடுகின்றது. 

குருநாதர் :-  ஆனால் மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இருக்கும் பொழுதே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் செத்து செத்து வாழ்ந்து கொண்டே இருப்பான். அதுபோல் இறைவன் அப்பனே அவனுக்கு தண்டனை கொடுப்பான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ("மிருகங்கள் எல்லாம் ஒரு அடியில 'டக்குனு' செத்துடும். ஆனா மனுஷனை கடவுள் அப்படி சீக்கிரம் சாகடிக்க மாட்டார். உயிரோடு இருக்கும்போதே அவனை கொஞ்சம் கொஞ்சமா சாகடிப்பார். அது எப்படின்னா, அவனுக்கு அடுக்கடுக்கா துன்பங்களை கொடுத்து, 'போதும்டா சாமி இந்த வாழ்க்கை'னு அவனே வெறுத்துப்போய் கேக்குற அளவுக்கு சோதிப்பார். எதை எதைக் கொடுத்து ஒருத்தனை வதைக்கணுமோ, அதைச் சரியா செஞ்சு மனுஷனை வாட்டி எடுத்துடுவார்.")

குருநாதர் :- அப்பனே பின் எதை என்று கூற இறைவன் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ பின் நிச்சயம் பின் எப்பொழுது மனிதர்கள் எண்ணுகின்றார்களோ, அப்பொழுதுதான் அப்பனே இவ்வுலகம் பிழைத்துக் கொள்ளும். இல்லையென்றால் அப்பனே பிழைத்துக் கொள்ளாது என்பேன் அப்பனே. அதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு சரிங்களா? எல்லாமே இறைவனுக்கு எல்லாமே இறைவனுக்கு சொந்தமானது என்று எப்ப ஒருவர் வந்து தெரிஞ்சுக்கினாங்களோ, அப்ப என்ன பண்ணுவாங்க? வந்து உலகம் நல்லா இருக்கும். இந்த உலகத்தில் உள்ள மக்கள் நல்லா இருப்பாங்க. அப்படி தெரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்க தெரிஞ்சுக்கோங்க. மக்களைப் பத்தி எப்படி வாழ்வாங்கன்னு….

===================================================
# அனைத்து சமயங்களும் உரைப்பது :-  “தூய உள்ளத்தைப் பெற்றிரு “
================================================== 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பன் நிச்சயம் தன்னில் கூட அனைத்து சமயங்களும் கூட பின் அதாவது தூய உள்ளத்தைப் பெற்றிரு என்றுதான் கூறுகின்றது.

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா சமயங்களும் என்ன சொல்லுது தூய உள்ளத்தைப் பெற்றிரு தூய உள்ளத்தைப் பெற்றிரு 

குருநாதர் :-  அப்பனே தூய உள்ளம் என்றால் என்ன உங்களை யான் கேட்கின்றேன்? 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு தூய உள்ளம் என்றால் என்ன நான் உங்களை கேட்கிறேன்பா? 

அடியவர் :- அன்பு. 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பனே பின் இத்தூய உள்ளத்தை நிச்சயம் பெற்றிருந்தால், இறைவன் வந்து அழகாக அங்கு அமர்ந்து கொள்வான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவகாருண்யம். அந்த தூய உள்ளம் பெற்றிருந்தால் இறைவன் என்ன பண்ணுவாரு? அங்கே அமைந்துருவார்.

================================================
# வள்ளலார் - தூய உள்ளம் பெற்ற பிறகு - “இறைவனை அருட்பெரும் ரூபமாக  தரிசனம் கண்டார்”
================================================

குருநாதர் :-  அப்பனே பின் இறைவனைத் தேடி பின் மனிதன் போகத் தேவையே இல்லை. மனிதனைத் தேடி இறைவன் வருவான் அப்பா 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணுவாரு? அந்த தூய உள்ளம் பெற்றிருந்தால் என்ன பண்ணுவாரு? வந்து சரி…..

அடியவர் :- வள்ளலார் தேடி வந்தார் 

குருநாதர் :-  அப்பனே வள்ளல் பெருமானை இப்படியும் நினைத்துக் கொள்ளலாம். தேடி தேடி இறைவன் கிட்டவில்லை. சரி பார்ப்போம் பின் எப்படி எது என்று அறிய அறிய. பின் எவை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் பின் தூய உள்ளம் பெற்றிருப்போம் என்று. இதனால் கண்டான் நிச்சயம் ஜோதி ரூபமாக வள்ளல். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("வள்ளல் பெருமான் இறைவனைத் தேடி எங்கெங்கேயோ அலைஞ்சு பார்த்தாரு, ஆனா கடவுள் அவருக்குக் காட்சி கொடுக்கவே இல்லை. தேடித் தேடிப் பார்த்தவர் அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தாரு. முதல்ல தன்னையேத் தான் தூய்மைப்படுத்திக்கிட்டாரு. 'மத்தவங்களுக்காக வாழ்வோம், மத்தவங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லிக் கொடுப்போம்'னு எப்போ மத்தவங்களுக்காக இறங்கி வந்தாரோ, அப்போதான் இறைவன் அந்த 'ஒளி' வடிவிலே வந்து காட்சி கொடுத்தாரு. 'இதுதான்டா வழி'ன்னு அவருக்கு அப்பதான் புரிஞ்சுது.")

=======================================
# தூய உள்ளம் இறைவனை வரவழைக்கும் 
=======================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் இவை என்று புரிய இதனால் அப்பன் நிச்சயம் பின் தூய உள்ளத்தை கொண்டிருங்கள் என்பேன் அப்பனே.

குருநாதர் :-  அப்பனே அனைத்து சமயங்களிலும் இதுதான் அப்பனே குறிக்கின்றது என்பேன் அப்பனே. ஏனென்றால் இங்கு சமயங்கள் பற்றி யான் நிச்சயம் தன்னில் கூட, என் மதம் பெரியது, என் மதம் பெரியது என்றெல்லாம், யான் பேசவில்லை என்பேன் அப்பனே. சண்டைகள் தான் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப நான் வந்து அகத்தியர் வந்து இந்த மனுஷன் தான் பெருசுன்னு சொன்னோம்னா என்ன நடக்குமாம்? சண்டை தான் நடக்கும். சண்டை தான் நடக்குமாம். ஆனால் நான் அதை பத்தி பேசவில்லை. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட மனிதன் தான் இதை பிரித்துக் கொண்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை என்ன சமயத்தை யார் பிரித்துக் கொண்டார்? மனிதன் தான் பிரித்துக் கொண்டான்.

குருநாதர் :- பிரித்து வைத்து பார்ப்பதில் மனிதன் சாதாரணமானவன் இல்லையவன். சாதாரணமான இல்லையவன். 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரித்து வைத்து பார்ப்பதில் மனிதன் சாதாரணமான இல்லவன்.

======================================================
# எந்த ஞானியும் தன் மதம் பெரிது என்று சொன்னதில்லை.
====================================================== 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய புத்தனே வந்து பின் என் மதம் பெரிது என்று சொன்னானா? பின் இயேசு என் மதம் பெரியது என்று சொன்னானா? பின் நபிகள் நாயகம் என் மதம் பெரியது என்று சொன்னானா? நிச்சயம் நால்வர்கள் இன்னும் சித்தர்கள் என் மதம் தான் பெரியது என்று சொன்னார்களா? சொல்லுங்கள் பார்ப்போம்? 

குருநாதர் :-   ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதன் இங்கு வாழ வேண்டும் அல்லவா ?????. காசுகளுக்காக, இவை தான் இப்படி சொல்லிவிட்டான் என்பேன் அப்பனே. மாற்றி எழுதிவிட்டான் அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் என்ன பண்ணாரு? மாத்தி எழுதிட்டாங்க. மாத்தி எழுதிட்டாங்க. எல்லாமே எல்லாமே காசுகளுக்காக. 

குருநாதர் :-  நிச்சயம் அனைத்து ஞானிகளும், மனிதனை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார் நிச்சயம் தன்னில் கூட. பின் யாங்கள் பின் சொல்லி நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு பின் எவை என்று அறிய, பின் பின் நடக்கவில்லையே என்று. அப்பொழுது பக்தி எப்படி உண்மையாகும் இங்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஞானிகள் எல்லாம் எவ்வளவோ விஷயங்களை அழகா எழுதி வச்சாங்க. ஆனா இன்னைக்கு மனுஷங்க நடக்குறதப் பார்த்து, 'அடப்பாவிகளா... நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க எதையும் கடைபிடிக்கலையே'ன்னு அவங்க வருத்தப்படுறாங்க. ஞானிகள் சொன்ன வழிப்படி நடக்காதப்போ, நாம செய்யுற பக்தி வெறும் வேஷம் தான். அதனாலதான் இதெல்லாம் 'பொய் பக்தி'ன்னு அவங்க சொல்றாங்க. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாத இந்த பக்தி எதற்கும் உதவாதுன்றதுதான் உண்மை.")

==============================
# மனிதன் - மிகப் பெரிய நடிகன்.
==============================

குருநாதர் :-   அப்பனே இதனாலதான் அப்பனே, மிகப் பெரிய நடிகன் அப்பா மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்போ இருக்குற பக்தி எல்லாம் வெறும் நடிப்புன்னு ஞானிகள் சொல்றாங்க. ஒவ்வொரு மகானும் 'தர்மத்தை கடைபிடிங்க'ன்னு அவ்வளவு சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு அதை யாராவது மனதார செய்றாங்களா? இல்லை. எல்லாத்தையும் செஞ்சுட்டு மனுஷன் சும்மா வேஷம் போடுறான். தர்மம் இல்லாத பக்தியை வச்சுக்கிட்டு அவன் வாழ்றது ஒரு நாடகம் தான். அதனாலதான் மனுஷனைப் பார்த்து 'நீ பக்தன் இல்ல, வெறும் நடிகன்'னு ஞானிகள் சாடுறாங்க.")

குருநாதர் :-   அப்பனே இவ் நடிகனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று. அப்பனே மனிதன் மனிதனிடத்தில் நடிக்கலாம் என்பேன் அப்பனே. இறைவனிடத்தில் நடிக்க முடியுமா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் நான் உங்க கையில நடிக்கலாம். உங்க கையில நடிக்கலாம் நல்லவன் என்று. ஆனால் இறைவனிடம் நடிக்கலாமா? நடிக்க முடியாது 

குருநாதர் :-  இதனாலதான் அப்பனே நடி நடி என்று பார்த்துக்கொண்டே, ஒருநாள் அப்பனே அள்ளிக் கொடுப்பான் அப்பா கஷ்டத்தை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ நடிச்சுக்கோ. எல்லாம் நடிச்சுனே இரு. ஒரு நாள் என்ன பண்ணுவாரு? சேர்த்து கொடுத்துருவார். கஷ்டம் எல்லாத்தையும் சேர்த்து கொடுப்பார். அது தாங்க, நம்மளால முடியாது. சக்தியும் இல்லை. 

குருநாதர் :-  இதனாலதான் அப்பனே உண்மைகள் தெரியவில்லை என்பேன் அப்பனே நிச்சயம், இவ்வாறாக மனிதர்கள் அப்பனே பின் பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் இவையும் மனிதனே காரணம். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் என்ன யார் காரணம்? மனுஷன். மனுஷன் தான் காரணம்ன்றாரு வந்து. தான் பிழைப்பிற்காக அதை சொல்லி, இதை சொல்லி, எப்படியோ சொல்லி, இது சொல்லி,  வந்து என்ன பண்றாரு ?

==============================================
# நீ நல்லவனாக இருந்தால் - ஏன் தர்ம தேவனை, முப்பெரும் தேவரை அதாவது  சனி தேவரை  பார்த்து பயப்பட வேண்டும்?
===============================================

குருநாதர் :-  அப்பனே ஆனாலும் இன்னும் சொல்வார்கள் அப்பா. நிச்சயம் அப்பனே கோள்கள், அதாவது சனி பகவான் அங்கு மாறுகின்றான் என்று. அப்பனே பின் மாறினால் என்ன? அங்கே இருந்தால் என்ன? அப்பனே பின் நல்லவனாக நீ இருந்தால்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஜோசியம் பாக்குறவங்க எல்லாம் 'அங்க சனி மாறுது, இங்க கோள் மாறுது'ன்னு பயமுறுத்துவாங்க. ஆனா உண்மை என்னன்னா, கிரகங்கள் எங்க மாறுனா நமக்கென்ன? நீ மனுஷனா ஒழுங்கா இருந்து, உன் மனசு சுத்தமா இருந்தா அந்த சனி பகவான் உன்னை ஒண்ணுமே செய்ய மாட்டார். நீ நல்லவனா இருந்தா எந்தக் கோளும் உன்னைத் தீண்டாது; சனி பகவான் ஒருபோதும் உனக்குத் தீங்கு செய்ய மாட்டார்.")

குருநாதர் :-  அப்பனே அவைத்தன் கெட்டவனுக்கு சொல்வது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது யாருக்கு சொல்வது? கெட்டவனுக்கு தான். 

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அங்கு சொல்லி, எவை என்று நிச்சயம் தன்னில் கூட, நல்லது செய்தால் நிச்சயம் தன்னில் கூட, சனி பகவான் யாரையும் கெடுக்க மாட்டான் என்று, யாராவது பின் சொல்கின்றானா என்று பார்ப்போம்? யாரும் சொல்வதற்கு இல்லை அப்பா. ஏனென்றால் அவன் வயிற்றுப் பிழைப்பு அது. 

குருநாதர் :-   அப்பனே இங்கு கெட்டவன், நல்லவன் என்று யான் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதற்காக சொன்னேன் என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய, அப்பனே பின் கெட்டவனும், பின் நல்லவனும், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட இறைவனின் பின் தன்மை பொறுத்ததே.  

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இங்க, நான் யாரையும் கெட்டவன், நல்லவன்னு பிரிச்சு சொல்ல வரல. இங்க நடக்குற எல்லாத்துக்கும் அந்த இறைவன்தான் காரணம். அப்படி இருக்கும்போது, 'சனி பகவான் அங்க மாறுறாரு, இங்க வர்றாரு'ன்னு சொல்லி ஏன் எல்லாரையும் பயமுறுத்துறாங்க? அதுக்கு பதிலா, 'நீ நல்லவனா இரு, தர்மப்படி நட... அப்போ உன்னை எந்தக் கிரகமும் ஒண்ணும் செய்யாது'ன்னு ஒருத்தர் கூட ஏன் தைரியமா, தெளிவா சொல்றது இல்ல? குழப்பாம இந்த உண்மையைச் சொல்ல யாருமே இல்லையேங்கிறதுதான் என் கேள்வி.")

=========================================
# மனிதர்கள் , ஜோதிடர்கள் செய்யும் மாபெரும் தவறு 
=========================================

குருநாதர் :-   எது என்று புரிய பின் அதாவது பிறர் அதாவது பிற உயிர்களை துன்பப்படுத்தாதே என்று யாராவது சொல்கிறார்களா? நிச்சயம் தர்மத்தோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று யாராவது சொல்கிறார்களா? இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எதை என்று புரிய பின் அதாவது சொன்னால் நிச்சயம் இவையெல்லாம் செய்தால் சனி பகவான் நிச்சயம் நல்லதே செய்வான். தீய இடங்கள் சென்றாலும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- ("ஏழரைச் சனி, அஷ்டமச் சனின்னு சொல்லி எல்லாரையும் பயமுறுத்துறாங்களே ஒழிய, ஒரு உண்மையை யாரும் சொல்றது இல்லை. நாம மனசுல நல்ல எண்ணங்களோட, இறை சிந்தனையோட நேர்மையா வாழ்ந்தா, அந்தச் சனி பகவான் நம்மள என்ன பண்ணிட முடியும்? அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செஞ்சுட்டுப் போயிட்டே இருப்பாரு, நம்மள எதுவும் பாதிக்காது. ஆனா, இந்த மாதிரி ஒரு தெளிவான விஷயத்தை எடுத்துச் சொல்லி ஜனங்களுக்கு தைரியம் கொடுக்கத்தான் இங்க ஆளே இல்லைப்பா.")

===============================================
# தர்மத்தை கடைபிடிப்பவரை , முப்பெரும் தேவர் , தர்ம தேவர் , சனி தேவர் அவர்கள் இன்னும் உயரத்திலே வைப்பார்.
===============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை யார் ஒருவன் கடைபிடிக்கின்றானோ அவனுக்குப் பின் சனி பகவான் இன்னும் உயரத்திலே வைப்பான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  தர்மத்தை யார் ஒருத்தர் கடைபிடிக்கிறார்களோ, அவர் யாரு என்ன பண்ணுவாரு சனி பகவான்? உயரத்துல வைப்பார். 

குருநாதர் :- நிச்சயம் இப்பேர்ப்பட்ட ஆள் ஒருவன் உள்ளானே என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது மாதிரி தர்மத்தை கடைபிடிச்ச ஆளு வந்து ஒருத்தன் இருக்கிறான்.. ஒருத்தர் இருக்கிறாரே… அதனால என்ன பண்ணுவாரு 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் விட்டுவிடுவான் என்பேன் அப்பனே. எவ் கிரகங்களும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால என்ன பண்ணுவாரு? வந்து நல்லவன் இருக்கிறான் விட்டுடுவார் சனி பகவான். நல்லவன் இருக்கிறான் சனி பகவான் விட்டுடுவார். விட்டுடுவான்னு சொல்லிடுவார். 

===================================
# தர்ம தேவன் , சனி தேவன் நெருங்காமல் இருக்க….. 
===================================

குருநாதர் :- அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்ல விதமாக இறைபக்தி இறை சிந்தனையுடன் இருப்பவர்கள் கூட, அப்பனே திருவாசகத்தை ஓதுபவர்கள் கூட, அப்பனே சனி அப்பனே நிச்சயம் நெருங்க மாட்டான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல எண்ணங்கள் உயர்வான எண்ணங்கள் இருக்கிறவர்கள் கூட, அப்ப வந்து, திருவாசகத்தை வந்து படிக்கிறவங்க கூ,ட என்ன பண்ணுவாரு சனி பகவான்…. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய பின் அதாவது படைத்தவன் எவனோ அவனே இவனை பார்த்துக் கொள்வான் என்று நகர்ந்து விடுவான் 

சுவடி ஓதும் மைந்தன் :-   ("சனி பகவான் வந்து நம்மள என்ன பண்ணுவாரு? அவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செஞ்சுட்டுப் போயிட்டே இருப்பாரு. ஒருத்தன் நல்ல எண்ணத்தோட, இறைச் சிந்தனையோட தெளிவா இருக்கான்னு பார்த்தா, 'இவனைப் படைச்ச இறைவனே இவன் கூட இருக்கான், இவன் சரியான பாதையில தான் போறான்'னு புரிஞ்சுக்கிட்டு, சனி பகவான் அவனுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காம அப்படியே நகர்ந்து போயிடுவாராம்.")

==============================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் கருத்து.
# அனைவருக்குமே ஏழரை நாட்டு சனி நல்லதே செய்யும்.
==============================================

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் அனைவருக்குமே அப்பனே நிச்சயம் ஏழரை நாட்டு அப்பனே சனி எவை என்று அப்பனே பின் நல்லதே செய்யும் என்பதுதான் எனது கருத்து 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்துல ஏழரை நாட்டு சனி வந்து எல்லாருக்கும் நல்லது எல்லாருக்கும். நல்லதுதான் செய்யும். 

=============================================
# மகான் சித்தார்த்த கௌதம புத்தர் கண்டுபிடிப்பு :- ஏழரை சனி தேவன் காலத்தில், போதி மரத்தின் அடியில் ( அதாவது அரச மரத்தின் அடியில் ) அமர்ந்து தியானம் செய்தால், நிச்சயம் நல்ல நல்ல எண்ணங்கள் ஓங்கும்.  நிச்சயம் உயர்த்தி வைக்கும். 
============================================= 

குருநாதர் :-  அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இதற்கும் புத்தன் எவை என்று புரிய அப்பனே பின் ஒரு யோசனை செப்பி வைத்துள்ளான் அப்பா நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-   ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட இவை கூட, நிச்சயம் அதாவது, போதி மரத்தின் அடியில் (அரச மரத்தின் அடியில் ) பின் அமர்ந்து தியானம் செய்தாலே, நிச்சயம் நல்ல நல்ல எண்ணங்கள் ஓங்கும் நிச்சயம். பின் அதாவது எவை என்று அறிய அறிய, அதாவது நல்விதமாக பின் ஏழரை  தன்னில் கூட  ( ஏழரை ஆண்டு தர்ம தேவன், சனி தேவன்  காலம் ) நிச்சயம் பின் உயர்த்தி வைக்கும் இது எவை என்று கூட புத்தன் கண்டுபிடித்தது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("நல்ல எண்ணங்கள் இருந்தா ஏழரைச் சனி யாரைத் தாக்கும்? தியானம் செய்யுறவனுக்கு அது ஒண்ணுமே செய்யாதுன்னு அன்னைக்கே புத்தர் போதி மரத்தடியில உட்கார்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்காரு. அந்த அரச மரத்தடியில தியானம் செஞ்சு, மனசைத் தூய்மையாக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கிட்டா எந்தச் சனியோட தாக்கமும் இருக்காது. நம்ம மனசுல நல்ல எண்ணம்ங்கிற ஒளி வந்துட்டா, ஏழரைச் சனி நம்மளைத் தாக்காம தானா விலகிப் போயிடும்.")

==============================================
# ஏழரை சனி  காலத்தில் - அரச மரத்தில் தியானம் செய்பவரை, தர்ம தேவன் , சனி தேவர் தாக்குவாரா என்று பாருங்கள் பார்ப்போம்? 
# அப்படி செய்பவர்கள் நிச்சயம் வளர்ந்து கொண்டே தான் செல்வார்கள். 
============================================== 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் நிச்சயம் யானே  சொல்கின்றேன் அப்பனே. பின் அதாவது பின் அங்கு இருப்பவனை அப்பனே தாக்குமா என்று பாருங்கள் பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க கண்டுபிடிப்பா போயிட்டு. அங்க தியானங்கள் செய்றவங்களும், அங்க இது இருக்கிறது தான் தாக்குதான்னு பார்ப்போம்னா… தாக்காது 

குருநாதர் :- நிச்சயம் வளர்ந்து கொண்டே தான் செல்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயம் வளர்ந்து கொண்டே தான் செல்வான் 

==============================================
# அடியவர்கள் கெட்டியாக பயன் படுத்திக்கொள்க.
==============================================
# ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி காலங்களில் - அரச மரத்தை சுற்றிக்கொண்டே இருந்தால் , நிச்சயம் உயர்வுகள் தான் ஏற்படுவது உறுதி. நோய்களும் அண்டாது.
===============================================

குருநாதர் :-  பின் ஏழரை தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் பின் கண்ட சனி, இன்னும் இன்னும் கூட, பின் அஷ்டமா சனி நிச்சயம் தன்னில் கூட, பின் (அரச மரத்தை ) வலங்கள் வந்து வலங்கள் வந்து கொண்டிருந்தாலே நிச்சயம் உயர்வுகள் தான் ஏற்படுவது உறுதி. நோய்களும் அண்டாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்போ இந்த அஷ்டமச் சனி, கண்டச் சனின்னு சொல்றாங்களே... அதெல்லாம் என்ன ஆகும்னா, அரச மரத்தை சுத்தி வர்றப்போ அந்தச் சனியோட எந்த வேலையும் பலிக்காது. அது நம்மகிட்ட சுத்தமா வேலை செய்யாது, தோஷங்கள் எல்லாம் அடிபட்டுப் போயிடும்.")

========================================
# அங்குள்ள ஒரு அடியவரை ஜோசியக்காரர்கள் பயமுறுத்தி விட்டனர். 
======================================== 

குருநாதர் :-  அப்பா அமர்ந்து கொண்டிருக்கின்றானே, இவன்தனையும் பின் பயம் காண்பித்துவிட்டார்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது இவ் ராசிக்கு பின் நிச்சயம் சனி பகவான் வருகின்றான் துன்பம்தான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கு இவர் கூட பயம் இவருக்கு கூட பயம் வந்துருமா இவர் கூட வந்து ஏழன நடக்கும் பொழுது ஏதோ ஒன்னு இது நடக்கப்போகுது கொஞ்சம் அது பயம் தானா வந்துரும் தானா வந்துரும் 

===============================================
# வில்வ மரத்திலும், வேப்ப மரத்திலும், அமர்ந்து தியானங்கள் செய்தாலே ஏழரையவன் நிச்சயம் உயர்வுகள் தான் கொடுப்பானப்பா. 
===============================================

குருநாதர் :-  ஆனால் அப்பனே கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே எதை என்று புரிய,அப்பனே பின் இதை செய்தாலே போதுமானது அப்பா நிச்சயம். பின் வில்வ இலைகளாலும் நிச்சயம் தன்னில் கூட, இன்னும் அப்பனே பின் எதை என்று புரிய வேப்பம் அப்பனே மரத்தின் அடியில் கூட, தியானங்கள் செய்தாலே, அப்பனே பின் ஏழரையவன் நிச்சயம் தன்னில் கூட உயர்வுகள் தான் கொடுப்பானப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அரச மரம் ,அப்புறம் வந்து வேப்ப மரம், வேப்ப மரம், அப்புறம் வந்து வில்வம், வில்வம் வில்வம் வில்வத்தில் இருக்கிறது வந்து அவ் சக்திகள் 

=================================================
# அரச மரம் , வில்வ மரம் , வேப்ப மரம் , குருந்த மரம் - இவையெல்லாம் சுராக்கல் சக்தியை பலமாக ஈர்க்கும் தன்மை உடையது.
=================================================

குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் அப்பனே சுராக்கல்  அப்பனே பின் ஈர்க்கும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதையெல்லாம் வந்து அந்த சுராக்கல்லோட சக்தி வந்து இழுத்து தரும். நிறைய இழுத்து தரும். இழுத்து தரும். 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் ஒரு இடத்திற்கும் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இன்னும் அப்பனே எதை என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூ,ட அப்பனே சரியாக அப்பனே, இன்னும் இன்னும், அப்பனே ஏற்றங்கள் மனிதனுக்கு உண்டு. ஆனாலும் அப்பனே மனிதன் அப்பனே பின் வாழத் தெரியாமல் வாழ்ந்து, மீண்டும் மீண்டும் அப்பனே பின் பிறக்கின்றான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("மனுஷனுக்கு வாழறதுக்கு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கு, வாழ்க்கையில முன்னேறுறதுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கு. ஆனா, மனுஷன் அந்த நல்ல வாழ்க்கையை வாழத் தெரியாம, ஆசை வலையில் சிக்கித் தவிக்கிறான். அதனாலதான், ஒரு பிறவியோட முடியாம, மறுபடியும் மறுபடியும் இந்த உலகத்துல வந்து பிறந்து உழன்றுகிட்டே இருக்கான். சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாம, இந்த ஜனன மரணச் சுழற்சியிலேயே மாட்டிக்கிட்டு இருக்கான்.")

=====================================
# மனிதன் என்ற துகள் , நிச்சயம் இறைவன் என்ற காந்தத்துடன் ஓட்ட வேண்டும்.
=====================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட துகள், அப்பனே நிச்சயம் தன்னில் காந்தகத்தை அடைய வேண்டும் அப்பனே நிச்சயம். அப்பனே பின் காந்தகத்தின் அருகே செல்கின்ற பொழுது விழுந்து விடுகின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இறைவன் ஒரு பெரிய காந்தம் (Magnet) மாதிரி, நாம எல்லாம் அதுல போய் ஒட்டிக்க வேண்டிய ஒரு சின்ன துகள். அந்த இறைசக்தியோட நாம போய்க் கலக்கணும், அதுதான் முறை. ஆனா, நாம போற வேகத்துல அந்த காந்தத்துல போயிட்டு ஒட்ட முடியாம, சக்தி இல்லாம மறுபடியும் கீழ விழுந்துடுறோம். அதாவது, இறைவன்கிட்ட சேர வேண்டிய நாம, நம்மகிட்ட பலம் இல்லாததால திரும்பத் திரும்பப் பிறவிக்கே வந்துடுறோம். இதுதான் வாழ்க்கை வேஸ்ட் ஆகுறதுன்னு சொல்றாரு.")

================================
# உடம்பை இரும்பாகிய ஞானிகள் 
================================

குருநாதர் :-  அப்பனே இதனால்தான் ஞானிகள் அப்பனே உடம்பை இரும்பாக்கினார்கள் என்பேன் அப்பனே. உடனே ஒட்டி விடுவோம் அல்லவா காந்தகத்துடன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("மனுஷன் அந்த காந்தத்துல (இறைவன்) ஒட்ட முடியாம திரும்ப வர்றதுக்குக் காரணம், அவன்கிட்ட பலம் இல்லாததுதான். அதனாலதான் ஞானிகள் என்ன பண்ணாங்க தெரியுமா? தவம் செஞ்சு, தியானம் செஞ்சு அவங்க உடம்பையும் மனசையும் 'இரும்பு' மாதிரி உறுதியாக்கினாங்க. இரும்பு கிடைச்சா காந்தம் சும்மா இருக்குமா? டக்குனு இழுத்து ஒட்டிக்கும்! அப்படி அவங்க இறைவனோட ஒன்னாகி, அந்த இறைப்பண்பு அவங்களுக்குள்ள வந்ததாலதான், அவங்களால நிறைய பாடல்களைப் பாட முடிஞ்சது; இந்த உலகத்துக்கு எவ்வளவோ நன்மைகளையும் சேவைகளையும் செய்ய முடிஞ்சது.")

குருநாதர் :-  அப்பனே பின்பு அப்பனே, அதிக அப்பனே, பின் நிச்சயம் ஆண்டுகள் வாழலாம் என்பேன் அப்பனே.  

=================================================
# ஞானிகள் எழுதிய பாடல்களை படித்து படித்து, உங்கள் உடம்பை இரும்பாக்கலாம்.
=================================================

குருநாதர் :-  அப்பனே இவ்விரும்பு ஆக்குவதற்கு அப்பனே பல பாடல்கள் தேவாரம் இன்னும் அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் திருவாசகம் இன்னும் இன்னும் அப்பனே பின் படித்தாலே போதுமானதுப்பா. படித்து படித்து, அப்பனே உடம்பை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இரும்பாக்கலாம் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எவ்வளவு எவ்வளவு படிக்கிறீங்களோ,  அப்ப என்ன ஆகும்? உடம்பு இரும்பாகிடும். 

===========================================
# திருவாசகம், தேவாரம், கந்தபுராணம், திருமந்திரம், இன்னும் இது போன்ற பல பதிகங்களை , பாடல்களை தொடர்ந்து இடைவிடாமல் படித்து வர வர , உங்கள் உடம்பு இரும்பாகிவிடும். இறைவன் என்ற காந்தத்தின் சக்தி முழுவதும் உங்களுக்கு வந்துவிடும். இடைவிடாமல் ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.
===========================================

குருநாதர் :-  அப்பனே கந்தபுராணம் இன்னும் அப்பனே எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூ, வெல்வதற்கு இல்லை என்பேன் அப்பனே. முதலில் அப்பனே பின் உடம்பை பின் இரும்பை ஆக்கி, அப்பனே பின் இவ்விரும்பை அப்பனே நிச்சயம் இந்த காந்தகத்துடன் ஒட்டவிட்டால், அனைத்தும் இறைவனுடைய அப்பனே, பின் எதை என்று இருக்கும், அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் உன்னிடம் வந்துவிடும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இத்தனை புத்தகங்கள், ஆயிரக்கணக்கான பாடல்கள் எல்லாம் எதுக்குத் தெரியுமா? நம்ம உடம்பையும் மனசையும் 'இரும்பு' மாதிரி உறுதியாக்குறதுக்குத்தான். அப்படி நீங்க இரும்பு மாதிரி மாறிட்டீங்கன்னா, அந்த காந்தத்தோட (இறைவன்) போய் டக்குனு ஒட்டிப்பீங்க. அப்படி ஒட்டிட்டா, அப்புறம் இறைவனோட அத்தனை சக்தியும் பலன்களும் உங்களுக்குள்ள இறங்கிடும். அந்த நிலைக்குப் போயிட்டா நீங்க எதைச் சொன்னாலும் நடக்கும். ஏன்னா, அங்கே வேலை செய்றது உங்களோட சாதாரண சக்தி கிடையாது, அந்த மேக்னெட் கொடுத்த 'இறையருள்'! அந்த அருளும் ஆசியும் கிடைச்சுட்டா, நாம நினைக்கிறதெல்லாம் தானாவே நடக்கும்.")

===================================
# இனிமேல் வெளி வர உள்ள மூலிகை ரகசியங்கள் 
===================================

குருநாதர் :-  அப்பனே இன்னும் அப்பனே பின் பல பக்குவங்கள் ஏற்படுத்தி, அப்பனே என்னென்ன அப்பனே, பின் அவசியங்கள் என்பதை எல்லாம் அப்பனே, சில மூலிகைகள் பற்றி யான் எடுத்துரைப்பேன் அப்பனே வருங்காலத்தில் அப்பனே நிச்சயம். 

குருநாதர் :- அதை ஏன் எதற்கு மூலிகைகள் பற்றி எடுத்துரைக்கவில்லை என்றால் அப்பனே, நிச்சயம் அதை பயன்படுத்திக் கொண்டு மனிதன், அப்பனே என்னென்னவோ செய்து விடுவான் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("மூலிகைகளைப் பத்தியும், அதோட அபூர்வ சக்திகளைப் பத்தியும் இன்னும் எவ்வளவோ உண்மைகள் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஏன் சித்தர்கள் வெளிப்படையா சொல்றது இல்ல தெரியுமா? இந்த கலியுகத்துல மனுஷங்க அந்த ரகசியங்களைத் தெரிஞ்சுக்கிட்டா, அதை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தாம தப்பு தப்பா பயன்படுத்துவாங்க. சித்த வித்தையை வச்சு மத்தவங்களுக்குத் தீங்கு செய்ய ஆரம்பிச்சிருவாங்க. அதனாலதான், தகுதியற்றவங்க கைக்கு இந்த சக்தி போயிடக் கூடாதுன்னு சித்தர்கள் அந்த ரகசியங்களைச் சொல்லாமலேயே மறைச்சு வச்சுட்டாங்க.")

===========================================
# மூலிகைகளுக்கு சித்தர்கள் உயிர் கொடுத்தால்தான் , இயங்கும்.
===========================================

குருநாதர் :-  அப்ப நிச்சயம் தன்னில் கூட பல மூலிகைகளுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்கள் உயிர் அப்பனே கொடுப்பதில்லை என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால பல உயிர் மூலிகைகளுக்கும் இருக்குது ஐயா. உயிர் கொடுக்காம வச்சிருக்காங்க.

குருநாதர் :-  அப்பனே அதாவது உங்களிடத்திலே ஒருவன் சொல்வான். இவ் மூலிகை எடுத்துக் கொண்டால் நன்று என்று. ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் உயிர் கொடுப்பது யாங்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஒரு மூலிகையைச் சாப்பிட்டா நல்லதுன்னு எல்லாரும் நினைப்பாங்க, ஆனா வெறும் மூலிகையை மட்டும் சாப்பிட்டா பலன் இருக்காது. அந்த மூலிகைக்குள்ள இருக்க வேண்டிய அந்த 'உயிர்' சக்தி (வீரியம்) அதுல இருக்காது. அந்த உயிரைத் தன் தவ வலிமையால அந்த மூலிகைக்குக் கொடுத்துப் பலன் கிடைக்கச் செய்றவங்கதான் சித்தர்கள்.")

===========================================
# மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறைகள் , எந்த மனிதனுக்கும் தெரியாது.
===========================================

குருநாதர் :-  அப்பனே அதற்கும், அப்பன் நிச்சயம் தன்னில் கூட, நோய் குணமாகவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, சாப நிவர்த்தி செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. அவையெல்லாம் எப்படி என்று மனிதனுக்கு தெரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஒரு மூலிகையை சும்மா போய்ப் பறிக்கக் கூடாது; அதுக்குன்னு இருக்கிற சாப நிவர்த்தி முறைகளைச் செஞ்சுட்டுத்தான் எடுக்கணும். அப்படி முறைப்படி செஞ்சா மட்டும்தான் அந்த மூலிகையோட முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும்.")

===========================================
# யந்திரங்கள் எழுதினாலும் , அதற்கு சாப விமோசனம் கொடுக்க வேண்டும்.
===========================================

குருநாதர் :- அப்பனே தகடை தகடுகளை எழுதினாலும் அப்பனே அதற்கு சாப விமோசனம் கொடுக்க வேண்டும். அப்பனே வருங்காலத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட உனக்கு சொல்லித் தருகின்றேன் அப்பனே எதை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல மக்களுக்கு சேவை செய்வாய் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ("யாரோ இங்க ஒருத்தருக்குத் தகடு எழுதுற சாப நிவர்த்தி ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன்'னு சொல்றாரு. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டா மட்டும்தான், எழுதுற தகடு முழு பலன் தந்து காரியம் வெற்றியாகும்னு அவர் தெளிவுபடுத்துறாரு.")

==============================================================
# தகடு யந்திரங்கள் மற்றும் மந்திரங்கள் கிரக தோஷங்களை எப்படி நீக்குகின்றன?
==============================================================

குருநாதர் :-  அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அவை எழுதி, அப்பனே மந்திரங்களை அப்பனே பின் செப்பினால், நிச்சயம் தன்னில் கூட, அவைதன் அப்பனே பின் மேலிருந்து எளிதாக கிரகங்கள், அப்பனே பின் இவை பட்டு, பின் இதனுடன் பின் நிச்சயம் தன்னில் கூட, உடம்பில் படும் பொழுது பல வினைகள் தீரும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("தாமிரத் தகட்டுல எழுதி,  மந்திரத்தை அதை நாம உச்சரிக்கும்போது ஒரு பெரிய அதிர்வு (Vibration) உண்டாகும். அப்படியே உடம்புல ஒட்டிக்கும். அந்த அதிர்வுகள் எப்படி வேலை செய்யுதுங்கிற ரகசியத்தை நான் வருங்காலத்துல உங்களுக்குத் தெளிவாச் சொல்றேன்ப்பா.")

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment