அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 4
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 4)
============================================
# அழகாக இறைவன் பின் மனிதனை படைத்தான். ஆனாலும்…..
============================================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இவை என்று எதனைப் கூற இவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாக இறைவன் பின் மனிதனை படைத்தான். ஆனாலும், அப்பனே, இங்கு இறைவனால் அழிவில்லையப்பா. அப்பனே, முதலில் மனிதனாலே அழிவுகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அழகா இறைவன் வந்து மனுஷன் படைச்சார் . ஆனா….
அடியவர் :- மனுஷனால்தான் அழிவுகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷனால்தான் நிறைய வந்து அழிவுகள் வரும்.
============================================
# மகான்களைப் பெற்றெடுத்த தாய்மார்களின் உன்னதமும், மனித அறிவுக்கு எட்டாத இறை ரகசியங்களும்….
============================================
குருநாதர் :- ஏன், எதற்கு? இவை தன் இங்கிருந்து பின் பல வாக்குகளையும் கூட. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அம்மை எதை என்று அறிய யார்? எதை என்று கூட பெரும் பின் எவை என்று கூற பின் இளவரசி. இதனால், நிச்சயம் தன்னில் கூட யாருக்காவது நிச்சயம் பின் புத்தனுடைய தாய் நிச்சயம் தன்னில் கூட, பின் இயேசுவுடைய தாய், இன்னும் நபிகள் நாயகம் இன்னும் கூட பின் யாருக்காவது தெரியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணனின் அம்மா ஒரு பெரிய இளவரசி. ஆனா புத்தருடைய அம்மா பத்தி நிஜமாவே யாருக்காவது தெரியுங்களா? அதே மாதிரிதான் நபிகள் நாயகத்தோட அம்மாவை பத்தியும், இயேசுநாதரோட அம்மாவை பத்தியும் கூட—இவங்கள பத்தி முழுசா யாருக்காவது தெரியுமா?)
=============================================
# ரகசியங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் (மதச்) சண்டைகள் வராது.
=============================================
குருநாதர் :- அப்பனே, இன்னும் கூட அப்பனே, எடுத்துரைக்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவையெல்லாம் அப்பனே தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சண்டைகளே வராதப்பா நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் நான் சொல்றேன். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா என்ன ஆகும்?
அடியவர் :- மதங்களுக்குள்ள சண்டை வராது.
சுவடி ஓதும் மைந்தன் :- மதங்களுக்குள்ள சண்டை வராது. எல்லாரும் ஒன்னா போயிடுவாங்க.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று அறிய அப்பனே. இதனால், முதலில் அப்பனே, பின் பாரதத்தை அறிந்தும் கூட பின் குறிவைக்கின்றான் அப்பனே இங்கிருந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- (“முதல்ல வெளிநாட்டான் நம்ம இந்தியா தேசத்தை இங்கிருந்து டார்கெட் பண்றான். ஐயா. ஏன்னா, இங்க மதச்சண்டை எல்லாம் உருவாக்கி, எல்லாரையும் சண்டை போட வச்சு, இங்கிருந்து வந்து அடிச்சா இந்தியா தேசத்தை ஈஸியா அழிச்சிடலாம்னு அவங்க இங்கிருந்துதான் டார்கெட் பண்றாங்க.)
=============================================
# மூலாதாரம் - பல திருத்தலங்கள் தமிழ் தேசத்திலே.
=============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட மூலாதாரம் நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் கூட திருத்தலங்கள் நிச்சயம் தமிழ் தேசத்திலே.
சுவடி ஓதும் மைந்தன் :- மூலாதாரம் எங்க இருக்குதாம் அடுத்து? நிறைய கோயில் எங்க இருக்குது?
அடியவர் :- தமிழ்நாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- தமிழ்நாட்டுல இருக்குது.
==============================================
# இங்கு அனைத்தும் அழிக்கப்பட்டு, அங்கு அழித்தால் நிச்சயம் அனைத்தும் பறி போய்விடும் என்ற தீய எண்ணங்கள்…..
==============================================
குருநாதர் :- நிச்சயம் இதை இங்கு அழிக்கப்பட்டு, அங்கு அழித்தால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் எவை என்று கூட சரி போய்விடும் என்றெல்லாம்.
==============================================
# கற்பனைக்கும் எட்டாத மனித குல சிந்தனையையே அழிக்கும் சதி
==============================================
# இதனால் நிச்சயம் சக்திகள் பறிபோய்விடும். இவ்வாறு சக்திகள் பறிபோனால், நிச்சயம் மனிதனுக்கு சிந்திக்கும் எண்ணம் இருக்காது.”
==============================================
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சக்திகள் பறிபோய்விடும். நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு சக்திகள் பின் பறிபோனால், நிச்சயம் மனிதனுக்கு சிந்திக்கும் எண்ணம் இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஏதோ ஒரு ஏன் சிந்திக்கிறோம் நம்ம வந்து? ஏன் ஐயா நம்ம ஏன் சிந்திக்கிறோம்? நம்ம ஏன் இப்படி பண்றோம்நம்ம? ஏன் ஞானிகள் வந்து இது ஏன் இறைவனை தேடி வரணும்?...
அடியவர் :- இதெல்லாம் தோணாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா இதெல்லாம் கண்டுபிடிச்சிக்கிறாங்க.
அடியவர் :- கோயில்களை டார்கெட் பண்ணி அழிச்சிட்டீங்கன்னா
அடியவர் 1 :- இதெல்லாம் சிந்திக்க வராது.
சுவடி ஓதும் மைந்தன் :- (“அப்ப இதெல்லாம் இருந்தாதான் மனுஷனுக்கு சிந்திக்கும் திறன், இந்த சக்திகள் இருக்குதுன்னு கண்டுபிடிச்சிட்டாங்க ஐயா. ஏன் மனுஷன் சிந்திக்கிறான், ஏன் இப்படி இருக்குறான், ஏன் இவ்வளவு பேசுறான்னு செயற்கை முறையிலேயே (AI/Technology) கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ ஏதோ ஒரு சக்தி இங்க இருக்குற திருத்தலத்துல தான் இருந்தது. அந்த சக்திகளை அழிச்சிட்டோம்னா என்ன ஆகும்னு பாக்குறாங்க.")
அடியவர் :- மனுஷன் சிந்திக்க மாட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் என்ன பண்ணுவான்?
அடியவர் :- சண்டை போடுவான்.
===============================================
# உலகின் பல ஞானியர்கள் இலங்கை வந்தது , இலங்கை தேசத்தை காக்கவே.
===============================================
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பல ஞானியர்கள் எதற்காக நிச்சயம் தன்னில் கூட தேசத்தை காக்க வந்தார்கள் என்பது எல்லாம் மனிதனுக்கு தெரியவே இல்லையப்பா. ஏன் எதற்காக?
சுவடி ஓதும் மைந்தன் :- (“இப்ப இத்தனை ஞானிகள் எதுக்காக வந்தாங்கன்னு மனுஷனுக்குத் தெரியல. அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா என்ன ஆகும்? அவங்களுடைய சக்தி நமக்குக் கிடைக்கும். அந்தச் சக்திகள் நமக்குக் கிடைக்கிறதுக்கு நாம என்ன பண்ணலாம்?")
அடியவர் :- ஆன்மீகம் வளர்ந்தா, இந்த மத சண்டை வராது
சுவடி ஓதும் மைந்தன் :- சிந்திப்பாங்க. மத சண்டை வராது. சிந்திக்கிற பவர் நமக்கு கூடும்.
அடியவர் :- கூடும்.
அடியவர் 2 :- வேற சிந்தனைகள் போகாது.
அடியவர் :- போகாது.
================================================
# மூலாதாரத்தை சித்தர்கள் விட்டுவிடுவார்களா என்ன ?
================================================
குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கு மூலாதாரம் எதை என்று அறிய அப்பனே அனைத்தும் அப்பனே நடந்து கொண்டே இருக்கின்றது. பின் அப்பனே நிச்சயம் யாங்கள் விட்டு விடுவோமா என்ன?
குருநாதர் :- அப்பனே அனைத்து ஞானிகளும் இத்தேசத்தை காக்கத்தான் வந்தார்கள்.
===================================================
# இராவணனின் விளையாடிய கோட்டை - அது திருகோணமலை இங்கிருந்து சிறு தொலைவில் கடலில் இன்னும் மூழ்கி இருக்கிறது.
===================================================
குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் கூட கூட அப்பனே பின் அதாவது எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட, அதாவது இராவணனின் கோட்டை அப்பனே விளையாடுவது, இன்னும் கூட அப்பனே, பின் அதாவது சிறு தொலைவில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றதப்பா. கடலில் மூழ்கி உள்ளதப்பா
குருநாதர் :- எதை எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இராவணன் இன்னும் என்னென்ன செய்தான் என்பவை எல்லாம் நிச்சயம் எடுத்துரைக்க போகின்றேன். நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனுக்கு ஒரு சக்தியை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் எதை என்று புரிய.
=============================================
# தன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் இராவணனின் தாயை, ஒரு சோதனைக்கு உள்ளாக்க ஈசன் முடிவு செய்தார். இந்தச் சோதனையானது அவளைத் துன்புறுத்துவதற்காக அல்லாமல், அதன் மூலம் ஒரு தெளிவான உண்மையை உலகிற்கு உணர்த்தவே ஈசன் இவ்வாறு நினைத்தார்."
==============================================
குருநாதர் :- ஆனாலும் இராவணனுடைய தாய் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட. ஆனாலும் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாவது பின் நம் மீதே பாசம் வைத்துக் கொண்டிருக்கின்றாளே இவள். பின் ஏதாவது சோதனை செய்வோம் என்றலாம். இவ்வாறு சோதனை எதற்காக என்றால் நிச்சயம் இச்சோதனை சோதனை மூலம் இன்னும் பின் தெளிவு பெறவே ஈசன் நிச்சயம் தன்னில் கூட நினைத்தான்.
================================================
# இராவணேசரின் தாயாருக்கு பெரும் நோயை ஈசன் உருவாக்கினார்.
================================================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று அறிய ஒரு பெரும் நோயை ஈசன் உருவாக்கினான்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஆனாலும் இவைதன் போக போக, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட இவை தன் காப்பாற்ற பின் முடியாது நிச்சயம் என்றெல்லாம் பின் எதையாவது.
சுவடி ஓதும் மைந்தன் :- (“ஆனாலும் நிறைய போக போக நிலைமை ரொம்ப முற்றிப்போச்சு. அப்ப எல்லா மருத்துவர்களும் வந்து என்ன சொன்னாங்கன்னா, 'இதெல்லாம் இனிமேல் காப்பாத்த முடியாது, இனிமேல் இதைக் காப்பாத்தவே முடியாது' என்று சொல்லிவிட்டார்கள்.")
=======================================
# உலகை காக்கும் ஆதி ஈசன் மீது கோபம் கொண்ட இராவணேஸ்வரர்.
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஈசன் மீது கோபம் கொண்டான் இராவணனே.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட தாயிடம் கேட்டான். நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் அதாவது எவ்வளவு பாசங்களை வைத்துக் கொண்டுள்ளாயே ஈசன் மீது, நிச்சயம் பின் அவன் பொய்யே. பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட பின் அதனால் எவை என்று புரிய என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஆனா அவங்க தாய்கிட்ட வந்து கேக்குறாங்க, 'இவ்வளவு பாசம் வச்சிருக்கீங்களே ஈசன் அவர்கிட்ட, அதனால என்ன பிரயோஜனம்? இப்ப ஈசன் அவரு நோய் கொடுத்துட்டாரே, அப்ப இதெல்லாம் பொய்' அப்படின்னு கேக்குறாங்க.")
========================================
# இராவணேசர் , அவர் தாய் உரையாடல்கள்
========================================
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் அவ்வாறெல்லாம் பேசக்கூடாது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. ஈசன் இருக்கின்றான் ஏதோ ஒரு காரணத்துக்காகவே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அவ்வாறாக நிச்சயம் அதாவது தாயே நீயும் இவ்வளவு பக்திகள் என்ன பின் நல்லதுதான் சொன்னாய். பல மக்களை உருவாக்கினாய். அதேபோல் நிச்சயம் தன்னில் கூட அதாவது எதை என்று புரிய யானே அவனை வணங்க வேண்டும். தாய்க்கே இவ்வளவு சோதனை இருந்தால் நிச்சயம் அவன் போல் எனக்கு சக்திகள் நீ தா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப என்ன பண்ணாங்க? எத்தனையோ பேர் இராவணன் அம்மா உருவாக்கினாங்க, ஆனா கடைசில அம்மா உன் நிலைமை என்ன ஆச்சு? நோய் வந்துருச்சு. அப்ப இறைவன் இருக்கிறாரா? நீ இதெல்லாம் செய்தாய் அல்லவா ?, அதனால அந்த ஈசனுடைய சக்தியை எனக்குக் கொடு, அந்தச் சக்தியை நீ எனக்கு வாங்கித் கொடுன்னு கேட்டாரு." )
==========================================
# அகத்திய மாமுனிவர் அமைத்த குருகுலத்திற்கு , ஓடி சென்று உதவி கேட்ட இராவணேஸ்வரர்.
==========================================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய அப்பா ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று கூட ஓடி ஓடி, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இன்னும் குருகுலத்தில் அதாவது யான் அமைத்தேனே அங்கு.
==================================================
# ஈசன் கட்டளையோடு தான் என்னால் சொல்ல முடியும்.
==================================================
குருநாதர் :- எதை பின் அறிவித்த நிச்சயம் ஆனாலும் இவை தன் பின் ஈசன் கட்டளையோடு தான் என்னால் சொல்ல முடியும் என்றெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட யானும்.
குருநாதர் :- அறிந்தும் என் மீது கோபம் கொண்டான்.
===================================================
# அகத்திய மாமுனிவரிடம் சண்டையிட்டு மீண்டும் தாயிடம் சென்ற இராவணேஸ்வரர்.
===================================================
குருநாதர் :- நிச்சயம் இவ்வாறெல்லாம் நிச்சயம் தாயவளுக்கும் இவ்வளவு எதை என்று கூற பின் உன்மேல் மரியாதை. ஆனாலும் பின் நீ எவ்வாறெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றாய். இவையும் பொய்யே என்றெல்லாம் நிச்சயம் கோபத்தோடு சென்றுவிட்டான் தாயிடமே.
குருநாதர் :- இதை எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் பின் அகத்தியரே பின் பார்க்கலாம் எதை என்று அறிய பின் யானும் சக்திகள் பின் நீ பெரியவனா நான் பெரியவனா என்றெல்லாம்.
=================================================
# தாயை குணப்படுத்த முடியவில்லையே என்ற கோபத்தில் - ஈசனார் லிங்கங்களை அடித்த இராவணேஸ்வரர்.
=================================================
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட ஈசன் இல்லையே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூட எங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட ஈசன் பின் அதாவது பின் இருக்கின்றானோ அங்கெல்லாம் சென்று அடித்தான், அடித்தான்.
====================================
# பரிசுத்தமாக இவ் அடிகளை ஏற்று , ஈசன் ஆனந்த கண்ணீர், மற்றும் சந்தோஷம்.
====================================
குருநாதர் :- ஆனாலும் பரிசுத்தமாக ஈசன் ஏற்கின்றான் நிச்சயம் தன்னில் கூட. பின் சந்தோஷம் அடைகின்றான். ஆனந்த கண்ணீர்.
==========================================
# இராவணன் போல் பின் உண்மையுள்ளவன் யார் என்று ஈசன் ஆனந்த கண்ணீர்.
==========================================
குருநாதர் :- ஏன் எதற்காக நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பின் அதாவது பின் தாயின் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கின்றானே இவன் நிச்சயம் தன்னில் கூட. இவன் போல் பின் உண்மையுள்ளவன் யார் என்று ஆனந்த கண்ணீர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தாயின் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்காரு. அப்போ ஒரு தாய் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்காரே, உண்மையான பாசம் வச்சிருக்காரு. )
அடியவர் :- அதனால் அவர் பண்ண தப்பை கூட மன்னிச்சு, அவர் மேல ஆனந்தம் கொள்றாரு.
========================================
# ஆதி ஈசனார் திருவிளையாடல் ஆரம்பம்
========================================
குருநாதர் :- எதை என்று புரிய அதற்குள்ளே பின் அங்கும் இங்கும் நிச்சயம் ஈசன் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பின் அவள் தாய், அதாவது படுக்கை அறையில் நிச்சயம் தன்னில் கூட பின் வந்து, (ஈசனார் கேள்வி:-) பின் தாயே பின் வந்திருக்கின்றேன். யார் என்று தெரிகின்றதா என்று?
குருநாதர் :- (இராவணேஸ்வரர் தாய் பதில்:-) நன்றாக தெரிகின்றது நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- (ஈசன் வாக்கு:-) உன்னை சோதிக்கவே. அதாவது நிச்சயம் உன் அதாவது அறிந்து கூட தன் அதாவது உன் மகனை நிச்சயம் இவ் உலகத்திற்கு வெளிகாட்டவே இவ் நாடகங்கள். நீ கவலை கொள்ள வேண்டாம் நிச்சயம். பின் அதாவது நிச்சயம் எது என்று புரிய பின் பக்திகள் பற்றி நல்லெண்ணங்கள் பற்றி அவனுக்கு தெரிவி. நிச்சயம் அவன் பின் அதாவது பின் இவ் பிரபஞ்சம் பின் இருக்கும் வரை அவன் பெயர் யான் மறைக்கப்போவதில்லை. அதாவது ஒரு தாய் நிச்சயம் தன்னில் கூட, தாயிடம் எவன் ஒருவன் பாசம் கொண்டிருக்கின்றானோ அவன் நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வளவு தீய சக்தி இருந்தாலும் ஒழிக்க முடியாது, பின் நிச்சயம் இதிலிருந்து தெரிகின்றது.
அடியவர் :- ("அப்ப தாய் மேல வச்சிருக்கிற பாசத்தினால, நீ இவ்வளவு பெரிய கெட்டது பண்ணாலும் அவனுக்கு நான் நல்லது பண்றேன். அதனால வந்து நான் உன்னை சோதிக்கத்தான் வந்தேன்னு சொல்லி, தாயின் மேல இவ்வளவு பாசம் வச்சிருந்ததுனால, 'கூட மன்னிச்சுறேன் நானு' அப்படின்னு ஈசன் சொல்லிட்டாரு.")
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு மகன் தன் தாய் மேல உண்மையான பாசம் வச்சிருந்தா, எந்த தீய சக்தியாலும் அவனை ஒண்ணுமே பண்ண முடியாது, யாராலயும் அவனை ஒழிக்க முடியாதுங்கறது தான் நிதர்சனம்.
ஆனா, இவனோ உன் மேல இருக்கிற பாசத்துக்காக என்னையே அடிக்கிறான், எல்லாரையும் பொய்ன்னு சொல்றான், ரொம்ப அதிகமாவே அடிக்கிறான். இப்படி அவன் பண்றதுல இருந்து இந்த பாசம் எவ்வளவு மிகப்பெரியதுன்னு தெரியுது என அந்த சூழலை அப்படியே எதார்த்தமா விளக்குகிறார். )
அடியவர் :- காரணம் தாயின் பாசத்துக்காக தான்..
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்தத் தாயோட பாசத்தை நான் இந்த உலகத்துல எந்த அளவுக்குக் காண்பிக்கிறேனோ, அதை இந்தப் பிரபஞ்சம் முழுசா அறியும் வரை அவனுக்கு அழிவே கிடையாது, கண்டிப்பா அழிவே கிடையாது. "உன்னை நான் இந்த உலகத்துக்கே அடையாளம் காட்டுவேன்" அப்படின்னு அந்தப் பாசத்தோட வீரியத்தை ஈசன் உறுதிபடச் சொல்றாரு.)
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட வருவான் கோபத்தோடு நான் இங்கே ஒளிந்திருக்கின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இப்ப கோபத்தோடு இராவணன் இங்க வருவான்; ஈசன் நான் இங்கேதான் ஒளிந்திருக்கிறேன், என்ன பண்ணுவான்னு பார்ப்போம்" அப்படின்னு அந்தச் சூழல்ல அவர் சொல்றாரு.)
குருநாதர் :- நீயும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் வருகின்ற பொழுது நமச்சிவாய என்று கூறு என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப இராவணன் கோபத்தோட வருவான்; அப்படி வரும்போது நீ என்ன பண்ணனும்னா, 'நமச்சிவாய நமச்சிவாய'ன்னு சொல்லு" அப்படின்னு ஈசன் அவர் சொல்லிட்டாரு.)
==================================
# இராவணேஸ்வரர் தாயின் அறைக்கு வந்தவுடன் …..”நமச்சிவாய “ என்று தாய் உரைக்க…
==================================
குருநாதர் :- அறிந்தும் எது என்று கூற “நமச்சிவாயா” என்று (இராவணேஸ்வரர் தாய் உரைக்க) நிச்சயம் தன்னில் கூட பின் வந்ததும் பின் கோபம் வந்துவிட்டது (இராவணனுக்கு). நமச்சிவாயனா யார் அது? நிச்சயம் தன்னில் கூட பின் அவனா வரட்டும் என் கையில் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப சிவபெருமானை நோக்கி 'நமச்சிவாய'ன்னு சொன்னா, முதல்ல ஈசன் வரட்டும். யாரை பத்தி சொல்றேன்? நான் ஈசனை நேரா எதிர்கொள்றேன், ஒரு தாய்க்கு எப்படி இப்படி ஒரு கஷ்டத்தை கொடுக்கலாம்னு கேட்டுட்டு விடுகின்றேன் எங்க எது எப்படினு இராவணன் அவர் எதிர்கொள்றாரு." )
அடியவர் :- (ஈசன் வரட்டும். நான் ஒரு கை பார்க்கிறேன்றாரு…)
=================================================
# இராவணேஸ்வரர் பாசத்தை நினைத்து , ஈசன் கண்களில் குபுகுபுவென்று கண்களில் நீர் வழிந்தது ……
=================================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் பின் சந்தோஷங்களே ஆனந்த கண்ணீர் குபுகுபுவென்று நிச்சயம் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஈசன் என்ன பண்றாருன்னா, அப்படியே கீழ இறங்கி வர்றாரு. ஏன்னா, "இப்படி ஒரு தாய்க்காகப் போராடுறஇப்படி பையன் இருப்பானா? இப்படி ஒரு பையனும் இந்த உலகத்துல இருக்கிறானா?" அப்படின்னு சொல்லி வியந்து நிக்கிறாரு. அந்தப் பாசத்தைப் பார்த்து அவருக்குள்ள ஒரு பெரிய ஆனந்தம், அப்படியே 'குபுகுபு'ன்னு அழுதுடுறாரு நம்ம ஈசனே! )
========================================================
# ஈசனின் பார்வையில் 'நல்லவன்', 'தீயவன்' என்ற பாகுபாடு கிடையாது; யார் அன்பு, பாசத்தை காட்டுகிறார்களோ அவர்களுக்கே ஈசன் அவர் வசப்படுவார். இதனால்தான் ஈசனை புகழ்கின்றது வேதங்கள்.
=========================================================
குருநாதர் :- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்ப ஈசன் நிச்சயம் பாசத்தை காட்டி விட்டால் அனைத்தும் கொடுத்து விடுவான். பின் நல்லோன் தீயோன் இல்லை ஈசனுக்கு. இதனால்தான் ஈசனை புகழ்கின்றது வேதங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஈசன் எதுக்காக வேதங்களால புகழப்படுறாருன்னா, அவருக்கு நல்லவர் தீயவர்ன்னு எந்த பாகுபாடும் கிடையாது. நீங்க பாசத்தை மட்டும் கட்டினால் போதும்; அதுவும் அவர் மேல அந்தப் பாசத்தைக் காட்டணும்னு அவசியமே இல்லை, அவரை நீங்க திட்டுனா கூட அவருக்குப் பரவாயில்லை. ஆனா, ஒரு அன்னையிடத்துல நீங்க உண்மையான பாசத்தைப் காட்டிட்டீங்கன்னா , அவர் என்ன பண்ணுவாராம், 'டேய், இவனுக்கு எல்லா வரத்தையும் கொடுத்துடுடா'ன்னு சொல்லி அள்ளிக் கொடுத்துடுவாராம். அதனாலதான் எல்லா வேதங்களும் ஈசனைப் புகழுது, இந்த உலகத்துல அவர்தான் எல்லாமேன்னு கொண்டாடுது." )
================================================
# இராவணேஸ்வரர் தாய் :- “இராவணா, நீயும் ஒரு பிள்ளையா” ?
=================================== =============
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவள் எவை என்று கூற, பின் ஒரு பிள்ளையா இராவணன் என்று.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தாயும் நிச்சயம் தன்னில் கூட பின் நீ பிள்ளையே இல்லை என்று நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக பின் எப்பொழுது எதை என்று சொன்னேன்.
==================================
(குருகுலத்தில் இருக்கிற எல்லாரும் என் பிள்ளைகள் என்று முன்னர் உரைத்தார் இராவணேஸ்வரர் தாய். அதாவது எந்த சூழ்நிலையிலும் நீ எனது மகன் என்று கட்டக்கூடாது. அனால் இப்போது நீ உனது பாசத்தினால் நான் தான் உன் பிள்ளை என்று அனைவரும் அறியின்படி செய்துவிட்டாயே . நீயும் ஒரு பிள்ளையா என்று கோபப்பட்டார். )
===================================
குருநாதர் :- எதனால் இப்பொழுது?
சுவடி ஓதும் மைந்தன் :- ( நான் அப்பவே சொல்லிக் கொடுத்தேன்ல உனக்கு, 'குருகுலத்துல எல்லாரும் ஒண்ணுதான்'னு சொல்லிட்டு. அதனால நீ வந்து 'என் அம்மா'ன்னு மட்டும் பிரிச்சுச் சொல்லாத." )
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனால் நிச்சயம் என் பிள்ளை இல்லை நீ போ.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment