​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 February 2026

சித்தன் அருள் - 2111 - அன்புடன் அகத்தியர் - கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 5

நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 5

=======================================
# “உலகத்தில் உள்ள ஒவ்வொரு தாயும் நிச்சயம் நன்றாக பின் இருக்க வேண்டும்” 
#   இராவணேஸ்வரரின் உயர் சிந்தனை இவ்வாறே …
========================================


குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். இதனால் நிச்சயம் உலகத்தில் உள்ள பின் , பின் நிச்சயம் தன்னில் கூட பின் , அதாவது பின் ஒவ்வொரு தாயும் நிச்சயம் தன்னில் கூட பின் நன்றாக பின் இருக்க வேண்டும் என்று எண்ணி , நிச்சயம் தன்னில் கூட பின் இத் திருகோணமலையிலிருந்து தான் நிச்சயம் தன்னில் கூட எடுத்துச் சென்றான் நிச்சயம் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.

========================================
# உலகில் எங்கெங்கு சுயம்பு லிங்கங்களாக இன்னும் இருக்கின்றதோ அவையெல்லாம் இராவணேஸ்வரர் நட்டவையே - அவ் சுராக்கல்லை உடைத்து பல இடங்களிலும் நிறுவி உள்ளார்.
========================================

========================================
# சிவ புண்ணியத்தின் சிகரம்: இன்று நாம் வணங்கும் சுயம்பு லிங்கங்கள் அனைத்தும் இராவணேஸ்வரரின் மாபெரும் கருணையே
========================================

குருநாதர் :-  அதுமட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கு எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பல்வேறு வடிவங்களில் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் அங்கங்கும் பின் அவ் சுராக்கல்லை கூட, நிச்சயம் தன்னில் கூட ஒன்றாக்கி, நிச்சயம் பின் உலகத்தை எதை என்று அறிய, பின் சுற்றி வந்து, பின் அங்கங்கு பின் நட்டினான் இராவணேஸ்வரனை. இதனால் எங்கெங்கு பின் சுயலிங்கங்களாக இன்னும் பின் இருக்கின்றதோ, அவையெல்லாம் இராவணன் நட்டவையே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கெல்லாம் சுயம்பு லிங்கம் சொல்றோமோ, சுயம்பு லிங்கம் எல்லாம் எங்கெல்லாம் சொல்றோமோ, அதெல்லாம் இராவணன் நட்டது. அதெல்லாம் யார் நட்டது? இராவணன் நட்டது. எல்லாரும் நல்லா இருக்கணும் என்று சொல்லிட்டு இராவணன் நட்டது. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். இதனால் இவையெல்லாம் யார் செய்வது? எதை என்று நிச்சயம் தன்னில் கூட. 

==============================================
# பெண்மையை, தாய்மையைப் போற்றும் இராவணேஸ்வரர் காவியம்
==============================================

==============================================
# உலகப் பெண்கள் நலனுக்காக ஒவ்வொரு சிவராத்திரியும் இராவணேஸ்வரர் நடத்தும் சூட்சும வழிபாடுகள்!"
==============================================

==============================================
# இராவணேஸ்வரர்  பிரபஞ்சத்தின் முதல் சிவராத்திரி பக்தன்
==============================================

==============================================
# ஒரே இரவில் புவிப்பரப்பின் அனைத்து லிங்கங்களையும் அர்ச்சனை செய்யும் இராவணேஸ்வரர் அமானுஷ்ய தகுதி!"
================================================ 

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் யார் செய்தாலும், பின் செய்யாவிடிலும் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனே நிச்சயம், சிவராத்திரி அன்று அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. 

குருநாதர் :-  பின் அதாவது அவனால் முடியும். நிச்சயம் ஒரே ராத்திரியில் இவ்வுலகத்தை சுற்றி வந்து, அனைத்து சிவாலயங்களையும் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் அபிஷேகம் செய்து, அனைத்து பெண்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("ஒரே நைட்ல உலகத்துல இருக்குற அத்தனை சிவாலயங்களுக்கும் போயிட்டு வர்ற தகுதி நம்ம இராவணேஸ்வரருக்கு மட்டும்தான் உண்டு. சிவராத்திரி அன்னைக்கு அவரு எல்லா கோவிலுக்கும் போயி அர்ச்சனை பண்ணி, இந்த உலகத்துல இருக்குற பெண்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிட்டு வர்றாரு. அப்படி ஊர் ஊரா இருக்குற எல்லா சிவஸ்தலத்துக்கும் போயி வழிபடுறது யாருன்னு பார்த்தா, அது நம்ம ராவணேஸ்வரர் தான்!")



குருநாதர் :-  எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனுக்கும் ஒரு வரம் உண்டு. நிச்சயம் தன்னில் கூட. அவை தன் வரும் காலத்தில் யான் செப்புகின்றேன். 

============================================
# சிவராத்திரி அன்று இராவணேஸ்வரர் அருள் பார்வை பெரும் ரகசியங்கள்
============================================
# உங்களுக்கு உலகில் உள்ள அனைத்து சிவாலயங்கள்  சக்திகளும் கிடைக்கும் ரகசியங்கள். விழிப்புடன் வழிபாடு செய்யுங்கள்.
============================================

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட (சிவராத்திரி) வருகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட கண் விழித்து இருந்தால், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று  (இராவணேஸ்வரர்) அவன் வருகின்ற பொழுதே சக்திகள் அங்கங்கு நிச்சயம் தன்னில், சிவாலயங்களுக்கு, எத்தனை சிவாலயங்களுக்கு பின் செல்கின்றான். அங்கங்கு இருக்கும் சக்திகள் நிச்சயம் அப்படியே வரும். இதனால் நிச்சயம் அங்கு இருக்கும் மனிதர்களுக்கும் நிச்சயம் தாக்கி, அவர்களும் நிச்சயம் புண்ணிய பாதைக்கு செல்வார்கள் என்பதே நிச்சயம் தீர்ப்பு. இதுவே உண்மை.


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஐயா, புரியுதுங்களா? அப்பலாம் நாம எதுக்குக் கண்ணு முழிச்சு இருக்கோம்னு ஒரு காரணம் இருக்கு. அந்த மகாசிவராத்திரி அன்னைக்கு, இராவணன் ஒரே நைட்ல உலகத்துல இருக்குற எல்லா கோவிலுக்கும் போயிட்டு வருவாராம். அப்படி அவரு வர்றப்போ எல்லா கோவிலுக்கும் ஒரு தனி சக்தி வரும். அந்த நேரத்துல நாம முழிச்சுக்கிட்டு இருந்தோம்னா, அவரு கண்ணுல நாம படுவோம். அப்படி அவரு  கண்ணுல நாம பட்டோம்னா... அவரு  கண்ணுல அதாவது அந்த சிவ சக்தி நம்ம மேல அப்படியே பாயும்!" )

==========================================
# *** மாற்றப்பட்ட ராமாயண காவிய உண்மைகள் ***
==========================================

==========================================
# அன்னை சீதா தேவியின் மீது , இராவணேஸ்வரர் காட்டிய மாபெரும் கருணை.
==========================================

குருநாதர் :-  நிச்சயம் பின் ஒரு சிறு, எவை என்று புரிய, சீதையும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் காட்டில் இருக்கின்றதே . பெண்கள் காட்டில் இருக்கக்கூடாது என்பதற்கு இணங்க, நிச்சயம் தன்னில் கூட மாளிகையில் பின் வா என்று நிச்சயம் தன்னில் அழைத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட அழகாக பின் நிச்சயம் தன்னில் கூட வாழ்  என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட வாழ  வைத்தவன், நிச்சயம் தன்னில் கூட இராவணன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஓ, அப்ப சீதை கிட்ட கூட அவரு என்ன பண்றாரு? 'நீ காட்டுல இருக்கக் கூடாதுமா, நீ ஒரு பெரிய இளவரசி... இப்படி கஷ்டப்படக்கூடாது'னு சொல்லி, 'நீ வா, அங்க பெரிய நந்தவனம் இருக்கு, அங்க சந்தோஷமா வாழு'னு தான் கூப்பிடுறாரு. அப்படி சீதையை கூட்டிட்டு வந்து, இங்கே மகாலட்சுமியாவே அவங்களுக்கு இடம் கொடுத்தவர் தான் நம்ம இராவணேஸ்வரர்!" ) 

===========================================
# இலங்கையில் , அன்னை சீதா தேவி தங்கி இருந்த இடம், இப்பொழுதும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே….இன்னும் ரிஷிமார்கள், குருமார்கள் அங்கு தங்கித்தான் இருக்கின்றார்கள். 
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் இப்பொழுதும், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் அவ்விடம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே, நிச்சயம் தன்னில் கூட. இன்னும் ரிஷிமார்கள், குருமார்கள் அங்கு தங்கித்தான் இருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இன்னும் கூட அந்த இடம் அப்படியே தான் இருக்குதாம். ரிஷிமார்களும், குருமார்களும் தங்கி இருக்குற அந்த இடம் எது தெரியுமா? நம்ம சீதை இருந்த அதே இடம்தான். அப்போ அங்க இன்னும் கூட என்ன இருக்குதுன்னா, அந்த பழைய காலத்து குருமார்களும் ரிஷிமார்களும் இப்போ வரைக்கும் அங்க தான் இருக்காங்க... அந்த இடத்துலயே தான் இப்போவும் வாழுறாங்க!" )

============================================
# இராவணேஸ்வரர் -  முதலில்  பெண்களுக்கு சம உரிமை அளித்தவர்.
============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் பெண்களுக்கு முதலில் பின் சம உரிமை பின் அளித்தவன், பின் இராவணேஸ்வரனே .

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

அடியவர் :- ஓம் நமச்சிவாய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அப்ப, 'பெண்கள் தான்டா முதல்ல இந்த உலகத்துக்கே கண்கள்'னு சொல்லிக் கொடுத்தவரே யாரு? நம்ம இராவணன் தான். அவர்தான் பெண்களை அவ்வளவு தூரம் போற்றி, 'பெண்களும் இந்த உலகத்துல பெரிய இடத்துக்கு வரணும், அவங்களும் உயரணும்'னு சொல்லி, அவங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டதும் நம்ம இராவணன் தான்!" )

=======================================
# “பெண்ணுக்கும் சமமான அதிகாரம்—இன்றைய பெண் வெற்றியாளர்களின் பின்னால் இருக்கும் இராவணேஸ்வரர் சக்தி!"
======================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் நடுவில் எவ்வாறு என்பதற்கு உள்ள இன்றளவும் பெண்கள் பின் நிச்சயம் பின் முன்னேறி, பின் அனைத்து கலைகளும் சாதனை புரிய வேண்டும் என்பது எல்லாம் அவன் நோக்கமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "இப்ப, பெண்கள் எல்லாரும் முன்னோக்கி வந்து, எல்லா வேலையிலயும் ஆண்களுக்கு சமமா நின்னு உழைக்கணும்னு நினைக்கிறாங்க இல்ல? அப்படி எல்லாப் பெண்களுக்கும் சமமா போய் உழைக்கணும்கிற அந்த சக்தியை இன்னி வரைக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கிறது யாருன்னு பார்த்தா... அது நம்ம இராவணன் தான்!" )

=======================================
# இராவணேஸ்வரர் புண்ணியம் மிகுந்தவர்.
=======================================

========================================
# "புண்ணியத்தின் சிகரம் ராவணேஸ்வரன்: குருநாதர் வெளிப்படுத்தும் ரகசிய உண்மைகள்!"
=========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு பின் இங்கு சொல்ல வந்தேன் என்றால், நிச்சயம் தன்னில் கூட அவனைக் கேட்டுட்டு தான். நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் அவன் தன் புண்ணியம் மிகுந்தவன். நிச்சயம் தன்னில் கூட அதனால் அவனைக் கேட்டுட்டே உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அனைத்து உண்மைகளையும் கூட. 

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "அப்ப அவங்ககிட்ட இதைச் சொல்றாங்க. ஏன் அவங்ககிட்ட சொல்றாருன்னா, இங்கே சில உண்மைகளை அவங்க கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். ஏன்னா, ராவணன் 'வேணாம்ப்பா'னு சொல்லிட்டாருன்னா அப்புறம் என்ன பண்றது? அவரு அவ்வளவு பெரிய புண்ணியசாலி, அத்தனை புண்ணியம் செஞ்சவரு! அவரு செஞ்ச புண்ணியத்தை எல்லாம் வெளிய காட்டணும்னு நினைச்சா எதைக் காட்ட மாட்டாரு? அதனாலதான் குருநாதர் நேரா அவரு  கிட்டயே போய்க் கேட்டுட்டு வந்து சொல்றாங்க!" ) 

========================================
# இராவணேஸ்வரரின் பரந்த உள்ளம் - பெருங்கருணை 
========================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட இராவணன் அடிக்கடி சொல்வான், மனிதனுக்கு அறிவில்லை.  கலியுகத்தில் புத்தி இருக்க போவதில்லை. சரி, வணங்குவதும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட முட்டாளாகவே திரிவான். 

குருநாதர் :-   இருப்பினும், நிச்சயம் அகத்திய மாமுனிவரே, நாம் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு அனைத்து திறமைகளும் கொடுப்போம். கொடுத்துக்கொண்டே இருப்போம். பின் அதாவது, 

பின் நம் தன்னை வணங்கினாலும் என்ன? 
வணங்காவிடில் என்ன? 
கெட்டவனை நினைத்தால் என்ன? 
பின் நினைக்காவிடில் என்ன? 
நல்லவனாக நினைத்தால் என்ன? 
நினைக்காவிடில் என்ன? 


அடியவர் :- எவ்வளவு பெரிய கருணை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "அப்ப இராவணேஸ்வரன் என்ன சொல்றாருன்னா? 'எப்பா, நாம எல்லாரும் நல்லதே செய்வோம். நாம நல்லவன் தான், ஆனா மத்தவங்க நம்மள கெட்டவன்னு சொன்னாலும் அதைப் பத்தி நமக்குக் கவலை இல்லை. ஏன்னா, இந்த கலியுகத்துல மக்கள் அப்படித்தான் இருப்பாங்க... கெட்டவன்னே நினைப்பாங்க, உண்மையை தெரிஞ்சுக்கணும்னு அவங்களுக்கு ஆசை இல்லை, அது அவங்களுக்குத் தேவையும் இல்லை. அதையெல்லாம் நாம ஏன் பார்க்கணும்? நாம எதுக்கு அதை நினைச்சுக்கிட்டு இருக்கணும்? பாரபட்சமே இல்லாம, எல்லாருக்கும் எல்லாத்தையும் செய்வோம்'னு சொல்றாரு!" )

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அன்னையவள் பின் உயிர் பிழைத்துவிட்டாள், அதுபோதும் எனக்கு நிச்சயம் தன்னில் கூட என்று ஒரே ஒரு குறிக்கோள்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "அப்ப ராவணன் என்ன நினைக்கிறாருன்னா, 'எனக்கு எங்க அம்மா உயிர் பிழைச்சது தான் முக்கியம். மத்தவன் என்னைக் கெட்டவன்னு சொன்னா என்ன? நல்லவன்னு சொன்னா என்ன? என்னைத் திட்டுனா என்ன, திட்டாட்டி என்ன? அதைப் பத்தி எனக்குக் கவலையே இல்லை. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, எங்க அம்மா பொழைச்சுட்டாங்களா... அது போதும்! இந்த உலகம் இருக்குற வரைக்கும் நானும் இருப்பேன், எங்க அம்மாவும் இருப்பாங்க.' ஏன்னா அது சிவராத்திரி... அந்தச் சிவராத்திரி மகிமை இருக்குற வரைக்கும், நம்ம இராவணேஸ்வரரும் இருப்பாரு!" )


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய. இதனால் இங்கு ஈசன் யார் என்பதெல்லாம் நிச்சயம் பின் பார்வதி எதை என்று கூற என்றெல்லாம் நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன். இறைவனைப் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் 

================================
# ஞானியர்களைப் பற்றி சொல்லியே தீருவேன்.
================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட வாக்குகள். நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் நிச்சயம் சொல்லி, எதை என்று புரிய பின் சொன்னால்தான், அங்கங்கு எங்கெங்கு சென்று, நிச்சயம் வாக்குகள் செப்பினால், மனிதனுக்கும் புரியும் என்பவை எல்லாம் யாங்கள் தெரிந்து வைத்திருக்கின்றோம். அதனால் நிச்சயம் தன்னில் கூட யான் விடப்போவதில்லை. ஞானியர்களைப் பற்றி சொல்லியே தீருவேன் . அவ் ஞானிகள் வந்து நிச்சயம் பின் இவ்வுலகம் எப்படி எல்லாம் இருக்க ஆசைப்பட்டார்களோ, அப்படியெல்லாம் பின் வைத்துக்கொள்ளட்டும். அவர்களே வந்து 


சுவடி ஓதும் மைந்தன் :-  (  "ஓ, அப்ப என்ன பண்ணாங்க? இந்த உலகத்தைக் காப்பாத்தணும்னு ஞானிகள் எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு நிறைய விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஆனா இப்போ உலகம் அவங்க நினைச்ச மாதிரி இல்லை. 

குருநாதர்  என்ன சொல்றாருன்னா, 'நான் விடமாட்டேன், ஞானிகள் இந்த உலகம் எப்படி இருக்கணும்னு நினைச்சாங்களோ, அதே மாதிரி இந்த உலகத்தைத் திருப்பிச் சரி பண்ணுவேன்'னு ஒரு வைராக்கியத்தோட இருக்காரு. 'அவங்க நினைச்ச மாதிரி வாழ்ற மனுஷன் இப்போ எவனுமே கிடையாது, 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஆனா அவங்க ஆசைப்பட்ட அந்த மாற்றத்தை நான் கொண்டு வருவேன்'னு சொல்றாரு. அந்த ஞானிகள் எல்லாரையும் எழுப்பி, 'வா.. வா.. நீ இதத்தானே நினைச்ச? இப்போ இங்க எவனும் சரியில்லை, நீ வந்து மாத்து'னு கூப்பிடுறாரு. நம்ம பாபா இருக்காருல்ல? அவரையும் கூப்பிட்டு, 'உன்னை வணங்கிட்டு இவங்க என்னென்ன பண்றாங்கன்னு பாரு, வா.. வந்து இவங்களுக்குச் சரியான அடியைக் கொடுத்து உண்மையைச் சொல்லு'னு ராவணேஸ்வரர் சொல்லத்தான் போறாரு!" )


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய சொல்வேன். 

நிச்சயம் தன்னில் கூட இயேசு நாதன் பற்றியும் கூட சொல்வேன். 

நிச்சயம் தன்னில் கூட புத்தனை பற்றியும் சொல்வேன். 

இன்னும் எதை என்று கூட சமயத் துறவர்கள் 

இன்னும் எதை என்று அறிய. 

நிச்சயம் தன்னில் கூட நபிகள் நாயகத்தை பற்றியும் யான் சொல்வேன். 

நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் பரவும் என்பேன் நிச்சயம் தன்னில் கூட. 

பின் அவரவர் என்ன சொன்னார்கள் என்று கூட மனிதனுக்கு தெரியாமல் பித்துபோல் பின் நிச்சயம் பைத்தியக்காரன் போல் ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (  "அகத்தியர் என்ன சொல்றாருன்னா, 'எல்லா நியாயத்தைப் பத்தியும் நான் சொல்லுவேன், பபுத்தன் பத்தியும் சொல்லுவேன், இயேசுநாதர், நபிகள் நாயகம்னு எல்லாரைப் பத்தியும் நான் சொல்லுவேன்.' ஆனா, அவங்க எல்லாம் வந்து சொன்னதை இவங்க யாராவது கேட்டாங்களா? யாரும் கேக்கல! எல்லாரும் ஒரு பைத்தியக்காரன் கணக்கா, ஏதேதோ பண்ணிக்கிட்டு, ஏதோ ஒரு போக்குல போயிட்டு இருக்கும்போது, அப்புறம் எப்படி நல்லது நடக்கும்? நல்லது எப்படி நடக்கும்னு கேக்குறாரு!" )

============================================
# தாய் தந்தை நன்றாக புரிந்து இருந்தால் , பிள்ளைகளும் அவ்வாறே 
============================================

============================================
# உங்கள் தாய் தந்தையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். 
============================================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் மனிதன் தன்னைத்தானே பின் அழித்துக் கொள்ளாமல், தன்னை சார்ந்தோரும் தன் பிள்ளைகளையும் கூட அழித்து கொண்டிருக்கின்றான். 

குருநாதர் :-  இதனால் பின் என்ன வேதனை என்றால் நிச்சயம் பின் அதாவது தாய் தந்தையரே மீண்டும் தன் பிள்ளைகள் இப்படி இருக்கின்றார்கள் என்று. 

குருநாதர் :-  நீ முதலில் நன்றாக இருந்தால் அவர்கள் பின் நன்றாகத்தான் இருப்பார்கள். 

குருநாதர் :-  பின் நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றால், அவர்களும் உணர்ந்து கொள்ளாமல் நிச்சயம் தவறுகள் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் தவறுகள் செய்து, பின் அழிந்துவிடும் பரம்பரை சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "அப்ப முதல்ல நீங்களே ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்களேன். 'நம்ம பிள்ளைங்க எப்படி நல்லா இருக்கப் போறாங்க?'னு கேக்குறீங்க இல்ல? ஆனா ஒன்னு புரியுதுங்களா? நாம நம்ம தாய், தந்தையரைச் சரியான முறையில கவனிக்கலைன்னா, நாளைக்கு நம்ம பிள்ளைங்களும் நம்மளைக் கவனிக்காது. இது அப்படியே ஒரு தொடர்கதை போலத் தொடர்ச்சியா போயிட்டே இருக்கும்பா! அதனால இப்போவே நீங்க உண்மையைச் தெரிஞ்சுக்கிட்டு, உங்க அப்பா அம்மாவை நல்லபடி பார்த்துக்கோங்க. அப்பதான் உங்க பிள்ளைங்க உங்களை நல்லா பார்த்துப்பாங்கன்னு சொல்றாங்க!" )

========================================
# சுயநல வேண்டுதல்கள் செல்லுபடியாகாது  இறைவனிடத்தில். 
========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் தான் நன்றாக இருக்க வேண்டும். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய நிச்சயம் வணங்குகின்றார்கள். நிச்சயம் அவை இவை என்று நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இவையெல்லாம் செல்லுபடியாகாது  இறைவனிடத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "இப்போ இருக்குறவங்க எல்லாரும் ரொம்ப சுயநலமா வாழ்றாங்க. ஆனா, இந்தச் சுயநலம் எல்லாம் ஒரு காலத்துலயும் செல்லுபடி ஆகாது. நீங்க என்னதான் கணக்குக் காட்டி எழுதிக் கொடுத்தாலும், மேல இருக்கிறவரு அதைப் பார்த்துட்டு என்ன பண்ணுவாரு தெரியுமா? 'கேன்சல்'... 'ரிஜெக்டட்'... உங்க மனு தள்ளுபடி செய்யப்பட்டுடுச்சுன்னு ரிஜெக்ட் பண்ணிருவாரு!" )

============================================
# இவ்வுலகத்தில் கருணை மிக மிக உயர்ந்தது. 
# அக்கருணை இராவணேஸ்வரரிடத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம். 
============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்துரைக்கின்றேன். இதனால் இவ்வுலகத்தில் கருணை மிக மிக உயர்ந்தது. அக்கருணை இராவணனிடத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். 

குருநாதர் :- இந்த உலகத்துல கருணை மிகப்பெரியது. கருணை மிகப்பெரியது. இராவணனுக்கு இன்னும் அனுமானம் பற்றியும் சொல்வேன். 

குருநாதர் :-  இன்னும் ராமனைப் பற்றியும் சொல்வேன். நிச்சயம் தன்னில் கூட முதலிருந்து தொடங்குவோம் இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "இன்னும் நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? அனுமாரைப் பத்தியும் சொல்லுவேன், அந்த ராமரைப் பத்தியும் சொல்லுவேன். ஆனா, அதுக்கு முன்னாடி முதல்ல ஒரு காரியம் ஆகட்டும். நாம ஆரம்பிப்போம்... எல்லாத்தையும் முதல்ல இருந்து தொடங்குவோம். 'இங்கிருந்தே' ஆரம்பிப்போம். ஆனா, சரியா எந்த இடத்துல இருந்து தொடங்குவோம்னு நீங்களே சொல்லுங்க, அங்க இருந்தே ஆரம்பிப்போம்!" )

========================================
# பல ரகசியங்கள் ஆரம்பித்த இடம் திருகோணமலையே 
# அனைத்திற்கும் காரணமாக விளங்குவது திருகோணமலையே 
=========================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் காரணமாக விளங்குவது திருகோணமலையே நிச்சயம் தன்னில் கூட.


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்திற்கும் காரணமாக விளங்குவது என்னது? திருகோணமலை. திருகோண மலை. 

குருநாதர் :-  நிச்சயம் பின் அது திருகோண மலையில் பின் காலை வைத்தவன் எப்பொழுதும் தோல்வி அடைந்தது சரித்திரம் இல்லை. 

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த திருகோண மலையில் வந்து காலை வச்சிருக்கிறவன் எப்பவுமே தோல்வியை சரித்திரம் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். சந்திக்க மாட்டார்கள். 

===================================
# திருகோணமலை - மிகப்பெரிய பெரிய புண்ணிய பூமி. 
===================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அங்கு பின் அதாவது நிச்சயம் அக்கல்லில் கூட அறிந்தும் புரிந்தும் பல தவம் நிச்சயம் தன் ஞானி இருக்கிற தவம் இயற்றினர் என்பேன். அதனால்தான் சொன்னேன். நிச்சயம் தன்னில் கூட அனைத்து சமயம் பின் குறவர்களும் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  "சமயக் குறவர்கள் இருக்காங்க இல்ல, அவங்க எல்லாருமே ஞானிகள்தான். அந்த ஞானிகள் எல்லாருமே அங்க வந்து தவம் செஞ்சிருக்காங்க. எல்லாமே தவம் தான்! அந்தத் திருகோணமலையில தான் அவங்க எல்லாரும் தவம் பண்ணிருக்காங்க. இயேசுவா இருக்கட்டும், புத்தரா இருக்கட்டும்... திருகோணமலைங்கிறது அவ்வளவு பெரிய புண்ணிய பூமி. எல்லா மகான்களும் வந்து போன அந்த இடம் ஒரு மகா புண்ணிய பூமி!" ) 

========================================
# இலங்கையில் வருங்காலத்தில் வர உள்ள பிரச்சினைகள் 
========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அவ்வளவு புண்ணியங்களை வைத்துக்கொண்டு நிச்சயம் வருங்காலத்தில் பின் இங்கு சமயத்தைப் பற்றி பின் நிச்சயம் சொல்லி ஏமாற்றப் போகின்றான் மனிதன். இதனால் பிரச்சனைகள் வரப்போகின்றது. இதனால் இப்பிரச்சனைகள் வந்து, மற்றொருவன் உள்ளே நுழைந்து, இவ்வுலகத்தை அழிக்கப் போகின்றான். பின் நிச்சயம் இதனால் பின் இதற்கு யார் காரணம் என்றால் சரியான முறையில் நிச்சயம் தன்னில் கூட, வணங்காததே காரணம். சரியான நிச்சயம் தன்னில் உண்மை நிலை புரியாததே காரணம். இதனால் புரிந்து வாழுங்கள். புரிந்து வாழுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "இப்போ எதுக்கு இந்தச் சாமி பெருமை, 'உன் சாமி பெருசு என் சாமி பெருசு'ன்னு அடிச்சுக்கிறீங்க? இப்படி நீங்க சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, நாளைக்கு வேற நாட்டுக்காரன் உள்ள வந்து 'இதுதான்டா சமயம்'னு சொல்லி எல்லாரையும் தூக்கிட்டுப் போயிருவான். ஒழுங்கான முறையில உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டு இறைவனை வணங்குனா இதெல்லாம் நடக்காது. இல்லைன்னா வேற ஒருத்தன் உள்ள வந்துருவான்னு அகத்தியருக்குத் தெரியும். ஆனா அவர் டக்குனு ஒரு வார்த்தையைச் சொல்லிட மாட்டார், அப்படிச் சொன்னா பெரிய பிரச்சனை வரும்னு அவருக்குத் தெரியும். மனுஷனோட புத்தி எப்படிப்பட்டதுன்னு அவருக்குத் தெரியும், அதனால அவ்வளவு சீக்கிரம் வாய் விடமாட்டார். மனுஷன்தான் இது அதுன்னு எகிறிக்கிட்டு வாய் விடுவான், ஆனா சித்தன் அப்படிச் செய்ய மாட்டார். ரொம்ப டேலன்ட்டா யோசிச்சு, கரெக்டான நேரத்துல மனுஷனுக்குப் புரிய வச்சுட்டுதான் அப்புறம் சொல்லுவாரு!" )

==========================================
# உங்களுக்கும் இராவணன் கதையை கேட்பதே மிக மிக புண்ணியம்.
===========================================

குருநாதர் :-  அப்பனே நல்லங்களாகவே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பல பின் புண்ணியவான்கள் எழுதிய புத்தகத்தை படித்தாலும் கூட புண்ணியமே என்று. இதனால் கூட ஏன் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்றால் உங்களுக்கும் இராவணன் கதையை கேட்பதே மிக மிக புண்ணியம்.

அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

===========================================
#  தானாக உங்களுக்கு புண்ணியம் ஏறிவிடும் புண்ணியர்கள் கதைகள் 
===========================================

குருநாதர் :-  நிச்சயம் இன்னும் தெரியாத புண்ணியர்கள் இருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் சொல்வேன். தானாக உங்களுக்கு புண்ணியம் ஏறிவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் தெரியாத நிறைய பேர் இருக்காங்க. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட முதலில் இறைவனை, பின் அதாவது இறைவனிடத்திற்கு சென்றுதான் புண்ணியம் வரும். அப்புண்ணியம் விரைவில் வரவேண்டும். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "புண்ணியம், பாவம் இதெல்லாம் யார்கிட்ட போய் சேருது? உங்க கையில கிடையாது, அது நேரா இறைவன் கையில தான் போய் சேருது. ஆனா, புண்ணியம் உங்களுக்கு வந்து சேர்றதுக்கு மட்டும் ஏனோ ரொம்ப லேட் ஆகுது. அப்படி அந்தப் புண்ணியம் உங்களுக்கு 'பாஸ்ட்டா' (Fast-ah) வந்து சேரணும்னா, அதுக்கு என்ன பண்ணனும்? அதை எப்படி வேகமா வரவழைக்கிறதுனு தான் நாம இப்போ பாக்கணும்!" ) 

=======================================
# சித்தர்களுக்கு புண்ணியங்கள் எப்படி பின் விரைவாக ஈர்ப்பது என்று தெரியும் . 
=======================================

குருநாதர் :- நிச்சயம் தன்னை கூட அதாவது புது புதுமையான செயற்கை எல்லாம் கண்டுபிடித்திருக்கின்றான் மனிதன். அதேபோல் எங்களுக்கும் தெரியும் புண்ணியங்கள் எப்படி பின் விரைவாக ஈர்ப்பது என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("மனுஷன் என்ன பண்றான்? புதுசு புதுசா எத்தனையோ கண்டுபிடிக்கிறான். ஆனா, அந்தப் புண்ணியத்தை எப்படித் தன் பக்கம் இழுக்கிறதுன்னு மட்டும் அவனுக்குத் தெரியலையே! அதே சமயம், இங்க எல்லாரும் ரொம்பக் கஷ்டத்துல வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, புண்ணியம் எல்லாம் அங்க 'சேவிங்ஸ்'ல (Savings) அப்படியே தேங்கிக் கிடக்குது. அதனால அகத்தியர் என்ன பண்றாருன்னா, 'நானும் புதுசு புதுசா கண்டுபிடிக்கிறேன், அந்தச் சேவிங்ஸ்ல இருக்குற புண்ணியத்தை எல்லாம் அப்படியே பிடுங்கி, மக்களுக்கு உடனடியாத் தரப்போறேன்'னு சொல்லி வேலையைத் தொடங்குறாரு! எல்லாத்தையும் ஒன்னோடு ஒன்னு லிங்க் (Link) பண்றாரு ஐயா. )

குருநாதர் :-  எது என்று புரிய இதனால்தான் நிச்சயம் தன்மை கூட உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று நிச்சயம் தன்மை கூட தர்மம் தலைகீழாகும் பொழுது மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். ஞானிகள் வந்தே தீர வேண்டும். 

குருநாதர் :-  அழைப்பேன் இயேசுவையும். 

குருநாதர் :-  அழைப்பேன் பின் புத்தனையும். 

குருநாதர் :-  அழைப்பேன் நபிகள் நாயகத்தையும். 


==================================
# இராவணேஸ்வரரின் வருத்தங்கள் 
==================================

குருநாதர் :-   எத்தனை எத்தனை,  நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற  பின் . இராவணனும் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட இன்னைக்கு மக்கள் இதுபோல் ஆகிவிட்டார்களே. அகத்தியனே என்று புலம்பி புலம்பிக் கொண்டே இருந்தான். அதனால்தான் இராவணனை பற்றி தெரிவித்து விட்டேன் முதலில் இங்கு. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் மீண்டும் சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் முருகனை பற்றி பின் பாடுங்கள். 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment