அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - அதி முக்கிய, சிறப்பு பதிவு
நாள் : 7/02/2026 (சனிக்கிழமை)
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் திருவருளால் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தில் இருந்து நாட்டை காப்பாற்றவும், உலக நன்மைக்காகவும் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்து அருளினார்.
இவ் வாக்கில் சிவராத்திரி குறித்த பல ரகசியங்கள் குருநாதர் உரைத்துள்ளார்கள். விரிவான வாக்குகள் பின்னர் வெளியிடப்படும். வரும் சிவராத்திரியை முன்னிட்டு அதில் குருநாதர் உரைத்த முக்கிய வாக்குகளை இங்கு அளித்துள்ளோம். அடியவர்களை பயன்படுத்தி , சிவராத்திரி வழிபாட்டினை பய பக்தியுடன் மேற்கொண்டு உடனே பலன் அடையுங்கள்.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
அப்பனே, அம்மையே, ஏன், எதற்காக இவ்வளவு உண்மைகள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட உண்மைகளை தெரிந்து கொண்டு இறைவனை வணங்கினால் மட்டுமே வெற்றி உண்டு எல்லாம் நிச்சயம். பல வாக்கு வாக்குகளில் நான் சொல்லிவிட்டேன்.
நிச்சயம் தன்னில் கூட இராவணனைப் பற்றி இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன்.
அதுமட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரியை ஏன் கடைபிடிக்கின்றோம் என்று யாருக்காவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது.
ஆனாலும் ஈசன் கொடுப்பான் என்பதை எல்லாம் நம்பிக்கையுடனே செய்கின்றீர்கள், அவ்வளவுதான். ஆனாலும் நிச்சயம் எதை என்று கூற.
===================================
# சிவராத்திரி - இதை உருவாக்கியவர் இராவணேஸ்வரர் தான்.
===================================
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரி ஏன், எதற்காக, எது என்று அறிய இதை உருவாக்கியவனே இராவணன் தான்.
==========================================
# சிவராத்திரி - விதியை கூட வெல்லலாம்.சாவை கூட வெல்லலாம்
==========================================
குருநாதர் :- இதனால் பல நோய்களையும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் ஒரே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ராத்திரியில் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் விதியை கூட வெல்லலாம். நிச்சயம் பின் சாவை கூட வெல்லலாம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
======================================
# இராவணேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டு நிச்சயம் சிவராத்திரியை பின் கொண்டாடினால் நிச்சயம் அவருடைய சக்திகளும் உங்களுக்கு கிட்டும். அனைத்தும் சாதிக்கும் வல்லமை பிறக்கும் சிவராத்திரி.
======================================
குருநாதர் :- இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட சண்டைகள் சச்சரவுகள் மனக்குழப்பங்கள் என்னென்ன பின் எதை என்று அறிய இதனாலதான் சஞ்சலங்கள் சச்சரவுகள் என்னென்னவோ குழப்பங்கள் மனிதனுக்கு, என்னென்னவோ எது என்று. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்து கூட ஏன் நிச்சயம் பின் இராவணனை பற்றியும் கூட சொல்ல வேண்டும்.
குருநாதர் :- என்றால் பின் மீண்டும் சொல்கின்றேன் அவனுடைய சக்தியே வேறு நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு அவனைப் பற்றி தெரிந்து கொண்டு நிச்சயம் சிவராத்திரியை பின் கொண்டாடினால் நிச்சயம் அவனுடைய சக்திகளும் உங்களுக்கு கிட்டும். அனைத்தும் சாதிக்கும் வல்லமை பிறக்கும் சிவராத்திரி.
========================================================
# சிவராத்திரி அன்றைய தினத்தில் மனதுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்.
========================================================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட அன்றைய தினத்தில் தான், நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, நிச்சயம் அலைகள் அதிகமாக இருக்கும். நிச்சயம் தன்னில் கூட பின் ஏன், எதற்கு, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட
இதனால், நிச்சயம் ஏன் பின் இராவணன், நிச்சயம் தன்னில் தூக்கி பின் வீசினான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் வில்வ இலைகளை? ஏன் ஆடியது? நிச்சயம் தன்னில் எதற்கும் கூட பன்மடங்கு.
இதனால், நிச்சயம் தன்னில் கூட அன்றைய தினத்திலே, நிச்சயம் தன்னில் கூட சக்திகள் அதிகமாகும். எவ்வாறு என்பதெல்லாம் எங்கு, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இன்னும் கூட எதை என்று அறிய சற்று, அதாவது ஒவ்வொரு எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் வருவதற்கு, பின் நிச்சயம் பின் ஐந்து அல்லது ஆறு முறை, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது பூமி ஆனது சுழலும் வேகம் குறைவு. நிச்சயம் தன்னில் கூட.
பின், அதாவது ஆறு ஆறு அறிந்தும் புரிந்தும் கூட, பின் எதை என்று கூற, ஐந்து ஐந்து முதல் ஆறு, நிச்சயம் தன்னில் கூட ஐந்து முதல் ஆறு, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, எதை என்று அறிந்து கூட.
இதனால் பின் ஒரு நாள், நிச்சயம் தன்னில் கூட இவ்வேகம் அதிகரிக்கும் பொழுது, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு அன்று வேண்டிக்கொள்வது, நிச்சயம் நடக்கும். அதுமட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட அன்று, நிச்சயம் தன்னில் கூட வெறும் பின், அதாவது பின் வயிற்று தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் பின் உட்கொண்டால், நிச்சயம் தன்னில் கூட பூமியின் பின் வேகம் அன்று பின் அதிகமாக இருக்கும். நிச்சயம் தன்னில் கூட இதனால் உடனடியாக கிடைத்த பின், அதாவது பின் எவை என்று வேண்டியவனை, நிச்சயம் கிடைக்கும்.
====================================================
வாக்கு சுருக்கம் :- சிவராத்திரி அன்று பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் அலைகளின் சீற்றம் காரணமாகப் பிரபஞ்ச சக்திகள் வழக்கத்தை விடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். இந்தச் சக்தி வாய்ந்த நேரத்தில், ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும் அந்தச் சூழலில், வெறும் வயிற்றில் விரதமிருந்து நாம் வைக்கும் வேண்டுதல்கள் மற்றும் கோரிக்கைகள் பிரபஞ்ச ஆற்றலால் விரைவாக நிறைவேறும்.
எனவே, சிவராத்திரி அன்றைய தினத்தில் மனதுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்.
====================================================
குருநாதர் :- எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனுக்கும் ஒரு வரம் உண்டு. நிச்சயம் தன்னில் கூட அவை தன் வரும் காலத்தில் யான் செப்புகின்றேன்.
===========================================
# இராவணேஸ்வரரின் அருள் பார்வை கிட்டும் மஹா சிவராத்திரி
===========================================
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட (சிவராத்திரி) வருகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட கண் விழித்து இருந்தால், நிச்சயம் தன்னில் கூட பின் எவை அவன் வருகின்ற பொழுதே சக்திகள் அங்கங்கு. நிச்சயம் தன்னில் சிவாலயங்களுக்கு எத்தனை சிவாலயங்களுக்கு பின் செல்கின்றான், அங்கங்கு இருக்கும் சக்திகள் நிச்சயம் அப்படியே வரும். இதனால் நிச்சயம் அங்கு இருக்கும் மனிதர்களுக்கும் நிச்சயம் தாக்கி, அவர்களும் நிச்சயம் புண்ணிய பாதைக்கு செல்வார்கள் என்பதே நிச்சயம் தீர்ப்பு. இதுவே உண்மை.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஐயா, இதுல விஷயம் என்னன்னா... மகாசிவராத்திரி அன்னைக்கு எதுக்காக நம்ம கண்ணு முழிச்சு இருக்கணும்னு ஒரு காரணம் இருக்கு. அன்னைக்கு ஒரே ராத்திரியில இராவணன் எல்லா சிவபெருமான் கோயிலுக்கும் போயிட்டு வருவாராம். அப்படி அவர் போகும்போது எல்லா கோயில்களையும் சக்தி அப்படியே பொங்கி வழியும். அந்த நேரத்துல நம்ம தூங்காம முழிச்சிருந்தோம்னா, இராவணன் நம்மள கடந்து போகும்போது அவரோட பார்வையில நம்ம படுவோம். அவர் கண்ணுல பட்டை போட்டு (திருநீறு அணிந்து) பயங்கர சக்தியோட வர்றதுனால, அந்தப் பார்வை நம்ம மேல பட்டுச்சுன்னா நமக்கும் அந்தத் தெய்வீக சக்தி கிடைக்கும்ங்கிறது தான் இதோட ரகசியம்." )
==================================
# சுயநலமாக வேண்டுதல் கூடாது
==================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம், தான் நன்றாக இருக்க வேண்டும். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய நிச்சயம் வணங்குகின்றார்கள். நிச்சயம் அவை இவை என்று நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இவையெல்லாம் செல்லுபடியாகாது இறைவனிடத்தில்.
========================================
# திருகோண மலையில் பின் காலை வைத்தவன் எப்பொழுதும் தோல்வி அடைந்தது சரித்திரம் இல்லை.
========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் காரணமாக விளங்குவது திருகோணமலையே. நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் காரணமாக விளங்குவது என்னது? திருகோணமலை. திருகோண மலை. நிச்சயம் பின் அது திருகோண மலையில் பின் காலை வைத்தவன் எப்பொழுதும் தோல்வி அடைந்தது சரித்திரம் இல்லை.
==========================================
# 12 ஜோதிர் லிங்களையும் கூட வடிவமைத்தவர் இராவணனே.
==========================================
குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லாமல் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் அப்பனே, கிரகத்தால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாதிக்க நிச்சயம் படுவார்கள் என்பவையெல்லாம் நிச்சயம் இராவணனுக்கு தெரிந்தது என்பேன் அப்பனே. இதனால் ஈசனை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு பின் வைத்தான் அப்பா. 12 ஜோதிர் லிங்களையும் கூட வடிவமைத்தவன் அப்பனே, பின் இராவணனே என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட எதற்கு என்றால் நிச்சயம் அவ்வழியாக செல்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட கிரகங்களின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெற்றி அடைந்து விடலாம் கடைசியில். ஆனால் இவை கூட மனிதனுக்கு தெரிவதே இல்லை. எப்படி கிரகங்களால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாது.
நிச்சயம் தன்னில் கூட நட்சத்திரங்களை கூட நிச்சயம் அதிலேயே அடக்கி உள்ளான். நிச்சயம் 12 ஜோதிர்லிங்கம், நிச்சயம் ஒவ்வொரு பின் அதாவது நிச்சயம் தன்னில் லிங்கத்திற்கும் பல நிச்சயம் தன்னில் நட்சத்திரங்களை வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் சரியாகவே ஆக்கியவன் இராவணனை.
============================================
# சிவராத்திரி அன்று வழிபாட்டை முதலில் இராவணேஸ்வரரை நினைத்து ஆரம்பிக்கவேண்டும். ஏனென்றால் சிவராத்திரியை கண்டுபிடித்ததே , சிவராத்திரி - இதை உருவாக்கியவர் இராவணேஸ்வரர் தான்.
============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் யான் சொன்னேன் நல்விதமாக சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட பின் ராவணன் நினைத்து நிச்சயம் தன்னில் கூட முதலில்.
=================================
# ஈசன் அடியார்களை வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம்.
=================================
குருநாதர் :- ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நேரடியாக பின் வணங்குவதை விட, தன் அடியார்களை நிச்சயம் வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம்.
நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரனை வென்றவன் ராவணனை. இதனால் அனைவருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள். ஆனால் சனி தேவனை வெல்ல வேண்டும் என்றால் ராவணேஸ்வரனே உதவி செய்வான்.
=======================================
# இராவணேஸ்வரர் பற்றி தெரிந்து கொண்டு, சிவராத்திரி அன்று இராவணேஸ்வரரை வணங்கி போற்றி பாடல்கள் பாடி , பின்னர் வழிபாட்டை ஆரம்பியுங்கள். இன்பம் காணுங்கள்.
======================================
குருநாதர் :- இதனால் நல் பண்புகள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ராவணனைப் பற்றி பின் எது என்று கூட சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட பின் பரிபூரணமாக பின் என்னென்ன எது எது எது பின் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வாருங்கள். இன்பம் காணுங்கள் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் எது என்று புரிய அதனால் தெரிந்து கொண்டு தெரிந்து கொண்டு ஆனால் மக்களே இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் தன்னில் கூட பணத்திற்காகவே நிச்சயம் தன்னில் கூட.
எது என்று அறிய மனம் செம்மையாகவே நிச்சயம் தன்னில் இருக்க இதை நிச்சயம் தன்னில் கூட ஆனால் உண்மை நிலை யாரும் அறிவதே இல்லை.
உண்மை நிலையை அறிந்துவிட்டால் வெற்றி உங்களுக்கும் வரும்.
======================================
# சிவராத்திரி - கைகளில் (வில்வ) இலைகள் இருந்தாலே, பிரபஞ்ச சக்திகள் ஈர்த்து கொடுக்கும்
=====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரி என்று பின் கைகளில் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று புரிய சொல்லிவிட்டேன். பின் (வில்வ) இலைகள் இருந்தாலே போதுமானது. நிச்சயம் தன்னில் கூட சக்திகள் ஈட்டிக்கொடுக்கும் பிரபந்த சக்தி.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் உள்ள கைகள் நிச்சயம் தன்னில் கூட அவ் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு, நிச்சயம் தன்னில் கூட பின் திருவாசகத்தை அனைத்து பதிகங்களிலும் படித்தாலே, நிச்சயம் தன்னில் ஞானம் பிறந்துவிடும்.
=======================================
பின் வரும் வாக்கின் சுருக்கம் : தினமும் இரவு திருவாசகப் பதிகங்களையும் , அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்து, உள்ளங்கையில் விபூதி மற்றும் வில்வ இலைகளை வைத்துச் சிவபெருமானையும் ராவணேஸ்வரனையும், நால்வர்களையும், நயன்மார்களையும் போற்றி வழிபட்டு, அந்த வில்வத்தை உட்கொண்டு வர சகல நோய்களும் நீங்கும். சிவராத்திரி வேளையில் ராவணனின் ஆசிபெற்ற இத்தகைய வழிபாட்டு முறைகள், இல்லத்தில் மங்கலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் அபரிமிதமான ஆற்றல் கொண்டவை.
=======================================
குருநாதர் :- அப்படியே நிச்சயம் தன்னில் கூட, பின் சில பின் எது என்று அறிய அப்படியே பின் விபூதியும் நிச்சயம் தன்னில் கூட, எடுத்து வந்து இல்லத்தில் நிச்சயம், அனுதினமும் பின் அதாவது பின் இரவுதோறும் நிச்சயம் பின் உள்ளங்கையில் நிச்சயம் தன்னில் கூட, சில பின் விபூதிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட, சில சில பின் அதாவது இலைகளையும் கூட அதாவது வில்வ இலைகளையும் கூட வைத்து, பின் முழுவதுமாக பின் சிவனைப் போற்றி போற்றி, பின் ராவணனை நினைத்து நிச்சயம் தன்னில் கூட, பல பின் நிச்சயம் நால்வர்களை கூட, இன்னும் பின் நயன்மார்களையும் இன்னும் கூட, பின் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும். மீண்டும் சொல்கின்றேன் படித்து, பின் அத் (வில்வ)இலைகளை கையிலே வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் சிறிது சிறிதாக இல்லத்தில் நிச்சயம் வைத்து சிறிது சிறிதாக இரவினில் உட்கொண்டு வந்தாலே பல நோய்கள் தீரும் அப்பா தீரும் அம்மையே.
==============================================
வாக்கு சுருக்கம் :- ருத்ராட்சத்தை எப்போதும் கையில் வைத்திருப்பதும், குறிப்பாக அதனை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து அதிகாலையில் அந்த நீரை அருந்துவதும் அல்லது பயன்படுத்துவதும் நம் உடலுக்கும் மனதிற்கும் அபரிமிதமான ஆற்றலைத் தரும். இத்தகைய ஆன்மீக வழிமுறைகளை முறையாகப் பின்பற்றும்போது, நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்
==============================================
குருநாதர் :- அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் ருத்ராட்சையும் கையிலே வைத்துக் கொண்டு பின் ருத்ராட்சையை நிச்சயம் பின் பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் நீரில் கூட பின் இரவு ஊற வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதிகாலையில் நிச்சயம் தன்னில் கூட அவ்வளவு சக்திகள் நிச்சயம் உங்களுக்கும் வரும்.
குருநாதர் :- இன்னும் ஞானங்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஏதோ சிவராத்திரியா முழித்துக் கொள்வோம் என்றெல்லாம் இருக்கின்றான் முட்டாள் மனிதன்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவர்களை நிச்சயம் இவ்வாறெல்லாம் ஞானிகளின் பின் வாழ்க்கை அதாவது கேட்பது பன்மடங்கு புண்ணியம் தரும். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தேவையானது மெதுமெதுவாக கிடைக்கப்பெறும். இராவணேஸ்வரனே கொடுப்பான்.
நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். சித்தர்கள் ஆசிகள்.
நிச்சயம் பின் இராவணனை பற்றியும் இத்தேசத்தில் அழகாக எடுத்துரைத்து நிச்சயம் தன்னில் கூட. இன்னும் ஞானங்களைக் காண மீண்டும் பின் வாக்குகள் செப்புவேன்.
நலமாக இதனால் அனைவருமே சிவராத்திரி என்று வாக்குகள் செல்லட்டும். நிச்சயம் தன்னில் கூட யானே எடுத்துச் சென்று விடுவேன். நிச்சயம் தன்னில் அழகாக இதனால் அனைவருக்குமே நிச்சயம் எவை என்று கூற பின் இராவணனுடனே யானும் வருவேன். நிச்சயம் விமானத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஐயா, இப்ப நம்ம ராவணனைப் பத்தி பேச ஆரம்பிச்ச உடனே அவரே ரொம்ப குஷி ஆயிட்டாரு! ராவணன் இப்பவும் தன்னோட விமானத்துல வந்துட்டுதான் இருக்காரு. ஒருமுறை அகத்தியர் என்ன சொன்னாருன்னா, 'இனிமே திருகோணமலையில மகாசிவராத்திரி ரொம்ப விசேஷமா நடக்கும்'னு சொன்னாரு. அங்க ராவணனே முன்னாடி நின்னு எல்லாத்தையும் ஆரம்பிச்சு வைப்பாராம். அங்க ஆரம்பிச்சு ஒரே நைட்டுல இந்த உலகம் முழுக்க இருக்கிற கோயில்களுக்குத் தன்னோட விமானத்துல ராவணேஸ்வரன் சுத்தி வந்துடுவாரு. நம்ம என்னடான்னா ரைட் சகோதரர்கள் தான் விமானத்தைக் கண்டுபிடிச்சாங்கன்னு படிச்சிட்டு இருக்கோம், ஆனா அதுக்கெல்லாம் மூலாதாரமே நம்ம ராவணன் தான்!")
அப்பனே, நலங்களாக ஆசிகள். அப்பனே, நிச்சயம் மற்றொரு மற்றொரு வாக்குகள் கூட சிறப்பாக செப்புகின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எவ என்று கூற எம்முடைய ஆசிகள் லோகாமத்திரையோடு அனைவருக்குமே ஆசிகள். ஆசிகள், அப்பனே, ஆசிகள். ஆசிகள்,
======================================
# சிறப்பு பதிவு வாக்கு வாக்கு நிறைவு #
=====================================
===========================================
# சிவராத்திரியின் ரகசியங்கள்: வாக்கு சுருக்கம்
===========================================
சிவராத்திரியின் தோற்றம்: சிவராத்திரி பண்டிகையை முதன்முதலில் உருவாக்கியவர் இராவணன். இது அவரது தாயின் உயிரைக் காக்க அவர் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக உருவானது.சிவராத்திரி என்பது ஒரு மாபெரும் அறிவியல் நிகழ்வு. வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை பூமியின் சுழற்சி வேகம் (Rotation Speed) அதிகரிக்கிறது. அதில் ஒரு முக்கியமான நாள் சிவராத்திரி. பூமி வேகமாகச் சுழலும் அந்த நேரத்தில், மனிதனின் வயிற்றில் உணவு இல்லாமல் (Empty Stomach) இருந்தால், அங்கு ஏற்படும் ஒருவிதமான வெற்றிடம் (Vacuum) பிரபஞ்ச சக்தியை எளிதாக ஈர்க்கும். அந்த நிலையில் வைக்கப்படும் நியாயமான வேண்டுதல்கள் பூமியின் வேகத்தோடு இணைந்து உடனடியாகப் பலிதமாகும்.
இராவணனின் பக்தி: இராவணன் ஒரு சிறந்த சிவபக்தர் மட்டுமல்ல, தனது தாயின் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவர் முருகப் பெருமானைத் தனது சொந்தப் பிள்ளையாகவே கருதி வழிபட்டார்.
ஆன்மீகக் கட்டமைப்பு: உலகில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களை வடிவமைத்தவர் இராவணன். கிரகங்களின் பாதிப்பிலிருந்து மனிதர்களைக் காக்க இந்த அமைப்புகளை அவர் உருவாக்கினார். கிரகங்களின் கதிர்வீச்சுத் தாக்கத்தைக் குறைப்பதற்காக 12 ஜோதிர் லிங்கங்களை இராவணன் வடிவமைத்தார். ஒவ்வொரு லிங்கத்திலும் நட்சத்திரங்களின் சக்தியை அடக்கி வைத்துள்ளார்.
அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள்: விமானத்தைக் கண்டுபிடித்தவர் இராவணனே. அதன் தொடக்கப் புள்ளி இலங்கையின் திரிகோணமலை ஆகும்.
சித்தர்களின் பங்கு: தர்மம் அழியும் காலத்தில் உலகைக் காக்க சித்தர்களும் ஞானிகளும் மீண்டும் தட்டி எழுப்பப்படுவார்கள். குறிப்பாக, வரவிருக்கும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து (நிலநடுக்கம்) உலகைக் காக்க நாயன்மார்களின் வழிபாடு அவசியம்.
பெண்களுக்கு சம உரிமை:- பெண்களுக்குச் சம உரிமை அளித்த முதல் தலைவன் ராவணன். சீதையை வனத்தில் விடக்கூடாது என்ற நற்பண்பினால் சீதாதேவி அவர்களை அசோகவன மாளிகையில் தங்க வைத்தவன். பெண்கள் இன்றும் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பதற்கு அவனது ஆசியே காரணமாக இருக்கிறது. தர்மம் தலைகீழாக மாறியுள்ள இந்தக் கலியுகத்தில், அமைதியாக இருக்கும் சித்தர்களை யாம் தட்டி எழுப்புவோம். ராவணனின் வழிகாட்டுதலும், சித்தர்களின் அருளும் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டும்.
இராவணேஸ்வரர் : ஒரு புதிய பார்வை.
வரலாறு சித்தரிப்பது போலன்றி, இராவணேஸ்வரர் ஒரு மாபெரும் புண்ணியவான் மற்றும் அறிவாளி என்று குருநாதர் உரைத்துள்ளார்கள்.
தாய்ப்பாசமும் சிவலிங்கமும்
இராவணன் தனது தாயின் நோயைக் குணப்படுத்தவும், அவருக்குச் சாகாவரம் பெறவும் கடுமையாகப் போராடினார்.
திரிகோணமலை சிவலிங்கம்: திரிகோணமலையில் இருந்த சிவலிங்கத்தைத் தூக்க முயன்று தோல்வியுற்ற போது, கைலாய மலையையே பெயர்த்து எடுத்து வந்தார்.
வில்வ இலையின் ரகசியம்: கோபத்திலும் ஆவேசத்திலும் அவர் வில்வ இலைகளைப் பறித்து லிங்கத்தின் மீது வீசிய போது, அசையாத லிங்கம் அசைந்து அவர் மடியில் வந்து அமர்ந்தது. இதுவே சிவராத்திரி வழிபாட்டின் தொடக்கமாகும்.
===================================================
# சிவராத்திரியின் முக்கியத்துவம் மற்றும் வழிமுறைகள்:-
===================================================
சிவராத்திரி என்பது வெறும் விழிப்பு நிலை மட்டுமல்ல, அது விதியை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த இரவாகும். சிவராத்திரியில் முறையாக பின்பற்றினால் நோய்களைக் குணப்படுத்துத இயலும் மற்றும் ஆயுளை நீட்டித்தல் மற்றும் விதியை வெல்லுதல் இயலும்.
தேவையான வழிபாட்டுப் பொருட்கள்:- வில்வ இலை, திருவாசகம், விபூதி, ருத்ராட்சம்.
வழி முறை:- இரவு முழுவதும் விழித்திருந்து, கையில் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு திருவாசகப் பதிகங்களைப் படிக்க வேண்டும்.
அறிவியல் பின்னணி:- சிவராத்திரி அன்று பூமியின் சுழற்சி வேகம் (Earth's Rotation Speed) வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கிறது. அந்தச் சமயத்தில் விழிப்புடன் இருந்து செய்யும் வேண்டுதல்கள் பிரபஞ்சத்தில் மிக வேகமாகப் பதிவாகி பலன் தருகின்றன.
பலன்கள்:- தினமும் இரவு திருவாசகப் பதிகங்களையும் , அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்து, உள்ளங்கையில் விபூதி மற்றும் வில்வ இலைகளை வைத்துச் சிவபெருமானையும் ராவணேஸ்வரனையும், நால்வர்களையும், நயன்மார்களையும் போற்றி வழிபட்டு, அந்த வில்வத்தை உட்கொண்டு வர சகல நோய்களும் நீங்கும். சிவராத்திரி வேளையில் ராவணனின் ஆசிபெற்ற இத்தகைய வழிபாட்டு முறைகள், இல்லத்தில் மங்கலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் அபரிமிதமான ஆற்றல் கொண்டவை.
===========================================
# சிவராத்திரி விரத முறைகள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள்
===========================================
சிவராத்திரி அன்று மேற்கொள்ளும் சடங்குகள் உடலையும் மனதையும் இரும்பாக மாற்றும் வல்லமை கொண்டவை. சித்தர்கள் வழிகாட்டிய முறைகள் பின்வருமாறு:
1. வில்வ இலை அர்ச்சனை: வில்வ இலைகளைக் கையில் ஏந்தி, நியாயமான கோரிக்கைகளுடன் இரவு முழுதும் அர்ச்சிப்பது பிரபஞ்ச சக்தியை உடலுக்குள் ஈர்க்கும்.
2. திருவாசகப் பாராயணம்: சிவராத்திரி அன்று திருவாசகத்தின் அனைத்துப் பதிகங்களையும் பாடுவதன் மூலம் மட்டுமே முழுமையான ஞானம் (Wisdom) சித்திக்கும்.
3. விபூதிப் பூசை: விபூதியை இரவு முழுவதும் உள்ளங்கையிலேயே வைத்துப் பூஜித்து, விடியற்காலையில் அதைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
4. ருத்ராட்சத் தீர்த்தம்: ருத்ராட்சத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை அதிகாலையில் பருகுவது உடலுக்கு அசாத்தியமான ஆற்றலைத் தரும்.
5. உணவு மற்றும் விழிப்பு நிலை: சிவராத்திரி அன்று மூலிகை பானங்கள் மற்றும் மூலிகை உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது ஆயுளை நீட்டிக்கும். வெறும் உறக்கத்தைத் தவிர்ப்பது மட்டும் சிவராத்திரி அல்ல, விழிப்புணர்வுடன் கூடிய தியானமே முக்கியம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment