​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 13 February 2026

சித்தன் அருள் - 2114 - அன்புடன் அகத்தியர் - நந்தியம்பெருமான் வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் பிப்ரவரி 1 தைப்பூசம் பௌர்ணமி தினத்தன்று நந்தியம்பெருமான் உரைத்த வாக்கு 

நாள் : 01/02/2026 (ஞாயிற்றுக்கிழமை) , தைப்பூசம் பௌர்ணமி 
இடம் : கபிலித்தை கபில வனம். மொனராகலை மாவட்டம். ஸ்ரீலங்கா. 

இலங்கையில் உலக நன்மைக்காக அகத்திய பெருமான் மற்றும் சித்தர் பெருமக்கள் தலைமையில் 5 ஆவது கூட்டுப்பிரார்த்தனை.

முருகன் நித்ய தவம் - இயற்றி கொண்டிருக்கும் சக்திவாய்ந்த கபில வனத்தில் கும்பகர்ண ஆற்றங்கரையில் இரவு கூட்டுப்பிரார்த்தனையும் யாகமும் நடந்தது. 

தைப்பூசம் பௌர்ணமி அன்று 01/02/2025 நடந்த இந்த கூட்டுப் பிரார்த்தனையில் நந்தியம்பெருமான் ஜீவநாடியில் வந்து வாக்குகள் உரைத்தார்.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு 
====================================


அகிலத்தை அழகாக ஆளக்கூடிய அன்னையே, தந்தையே, பணிகின்றேன். 

குழந்தை, வேலவனே, வேலவனே, அன்பாக அழைத்து, அனைத்து உள்ளங்களிலும் அன்பு நிறைய வா, குகனே. 

குழந்தாய், அறிந்தாய், அனைத்தும் தெளிந்தாய்.

தெளிந்து அனைவர்களுக்கு அறிவுகளை பலப்படுத்தி, பின் மேம்படுத்தி நல் அருள்களை ஈந்து இந்நாளில் பொன்னாளாக அனைவருக்கும் பின் சிறந்த, சிறந்த தத்துவ ஞானங்களை பெற்றுத் தருமாறே அழைக்கின்றேனே முருகா, பின் நந்தியனை. 

====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் பாடல் வாக்கு 
====================================

அகிலம் காக்கும் என்றென்றும் தான் உம்மையே நம்பி, நம்பியே!! 

ஆனந்தித்து வருவோர்க்கெல்லாம் அருள் தருவாயே குழந்தாய். 

என்றென்றும் பின் உலகத்தில் நீதியை நிலைநாட்ட ஓடோடி வா. 

குமரனே நின் தாள்  பணிந்து, அனைவரும் பணிந்து பணிந்து, 

என்றென்றும் உமக்கே உயிரை தஞ்சம் என்றும் வருவோர்க்கெல்லாம் அருள் ஈந்து தானே கொடுப்பாய். 

கூப்பிட்ட குரலுக்கு வருவாய் , அருள் தருவாய் 

நலன்களே ஈவாய் குகனே. 

என்றென்றும் தான், எப்பொழுதும் தான், மனிதனுக்கே பெரும் துன்பங்கள் குகனே. 

அனைத்தும் நீக்குவாய், 

அனைத்தையும் காப்பாய், 

அனைத்து ஜீவராசிகளும் இருப்பாய். 

புத்தி இல்லாத மனிதனின் நிலைமை அழிவுக்கு செல்கின்றது முருகா, 

அதனையும் நீயே மாற்றித் தருவாய் 

அனைவருமே உன்னைத் தேடி. 

எப்பொழுதும் உனை எங்கெங்கே என இத்திருநாளில் தேடி தேடி 

வருவோர்க்கெல்லாம் ஆசிகள் தருவாய் குகனே. 

என்றென்றும் தான் எல்லோருக்கும் அருள்வாயே குகனே, 

அன்புக் குழந்தையே, செல்லக் குழந்தையே, பாசக் குழந்தையே 

அனைவரும் நெஞ்சில் நிறைந்தோனே. 

அன்பின் பாதையை காட்டுபவனே 

அன்பென்று அனைத்து மனிதர்களுக்கும் மனதில் நின்று 

தன்னைத் தான் என்றும், தன்னைத் தான் என்றும் 

அனைத்து ஜீவராசிகளும் தம்மை தான் என்றே நினைக்க 

அருளிட வேண்டும் குகனே முருகா 

குழந்தை செல்லக் குழந்தை. 

ஓடோடி வருகின்றார் உன்னையே காண பாசத்துடனே 

கரும வினைகளை நீக்குவாயே 

ஆனந்தத்தில் இத் தை பூசன்று அனைவருமே உன்னை ஜெபிக்க, ஜெபிக்க 

ஆயிரம் ஆயிரம் முறையே முருகா முருகா என்றழைத்து 

அவர்களுக்கும் என்னென்ன தேவை என்று உணர்ந்தோனே 

ஆனால் நீயும் துன்பத்தை அளித்து பக்குவங்களைப் பெற்ற பின் அனைத்தும் அளிப்பவனே. 

அன்பிற்கு அன்பென்றும் 

பாசத்திற்கு பாசம் என்றும் 

கருணையால் விளங்குபவனே. 

என்றென்றும் உமை எங்கே என் குழந்தை, 

என் குழந்தை எப்போ தேடுவேனே. 

அன்பின் பண்பின்று நின்று நின்று தானே இங்கே தான் பின் விளையாடினாயே 

கண்ணாம்பூச்சி போல் சித்தர்களைப் பின்னே அழைத்து அழைத்து ஒளிந்து ஒளிந்து விளையாடினாயே 

அதுபோலே பின் மனிதர்கள் செய்யும் தவற்றினை பொறுத்து அருள்வாயே 

எங்கும் நிறைந்தவனே 

எதிலும் நிறைந்தவனே 

காக்கும் காவலனே. 

அன்பொன்று இருந்தால் போதும் என்றென்று 

அன்னையும் தந்தைக்கும் போதும் என்று 

எப்பொழுதும் உங்களைப் பின் யானே  எங்கென்று நினைத்தாலும் நீங்கள் என்றென்றும் ஓடி வருவீர்கள் என்று 

தாயிடம் தந்தையிடம் சொன்னவனே என்று ஞாபகமே இருக்கின்றதா. 

அதுபோலே மனிதனின் எண்ணங்கள் சுத்தமில்லாமல் போனாலும் 

முருகா என்று பாசத்துடனே அழைத்தாலே வருக முருகா. 


எப்பொழுதும் மனிதனுக்கு வருங்காலத்தில் எல்லாம் துன்பங்களோடு பிணைந்திருக்கின்றானே 

எப்படி வாழ வேண்டும் 

எப்படி பிழைக்க வேண்டும் என்று தெரியாமலே வாழ்கின்றானே 

இதனையும் நீக்க ஓடோடி வா குகனே 

குழந்தாய் செல்லக் குழந்தாய் 

அன்பு நிறைந்த சித்தர்கள் யாவரும் உன்னையே 

கலியுகத்தில் அழைக்கின்றோமே. 

மனிதனின் உண்மைகள் எங்கெங்கு மறைக்கப்பட்டவை 

அவர்கள் இன்னும் ஓங்கிப் புகழ் பெற வேண்டும் 

பொய்யவன் எல்லாம் நீதான் பின் பின் கட்டுப்படுத்தி அழிக்க வேண்டும் 

மனிதனின் நிலைமையை புரிந்து புரிந்து 

மனிதனையே பின் ஏமாற்றுகிறான் 

அதனையும் நீக்கி பின் நல்லோர்களையும் உயர்த்தி வைப்பாய்  குகனே 

குழந்தாய் குகனே செல்லக் குழந்தாய் 

கண்ணாம்பூச்சியை எங்களுடனே விளையாடினாயே இங்கே 

அதுபோலே இங்கு அனைவரும் தானே 

பாவத்தை சுமந்து தெரியாமல் வருகின்றார் 

அப்பாவ மூட்டையும் அவிழ்த்து தானே பின் நீரினுள்ளே  பின்இடுவாய் 

எங்கெங்கும் நிறைந்தவனே 

எதிலும் நிறைந்தவனே. 

அன்பென்ற சொல்லுக்கு அன்பென்ற சொல்லுக்கு 

முருகனே துணையே என்றென்று தானே 

கருணை மிகுந்த மனிதனைக்கெல்லாம் இன்னும் தானே 

அருள் கூர்ந்து அருள் கூர்ந்து  ஈவாய் குகனே 

எப்பொழுதும் அழிவுகள் இத்தேசத்தில் காத்து நிற்கின்றது 

முருகா நீயே அறிவாய் 

அதனையும் தானே ஓடோடி வந்து நீக்குவாய் குகனே அருள்வாய் 

என்றென்றும் நீக்கும் அதிலும் என்றென்றும் போக்கும் 

பாவத்தை ஏத்தி நினைத்து நினைத்து வருந்துகின்றானே குகனே 

மனிதனே பாவத்தை எண்ணி எண்ணி தான் வருந்துகின்றானே குகனே 

அவனுக்கு ஒன்றும் தெரியாது குகனே 

பாசப் பிணைப்போடு அனைவரும் பற்றிக்கொள் 

இன்றைய தினத்தில் இன்றைய தினத்தில் பின் அருள் கூர்ந்து உன்னையே நினைத்து 

எங்கெங்கும் மனிதன் ஓடி வருகின்றான் 

அவனையும் காத்து 

அவனோடு இருக்கும் கருமத்தை எல்லாம் தொலைத்து 

எங்கெங்கும் நிறைந்தவனே 

அற்புதத்தை நிறைந்தவனே 

அற்புதத்தை காட்டும் குகனே 

இவ்வுலகத்தில் மனிதனின் ஏற்றங்கள் என்னவென்றால் என்றும் மதத்தில் சண்டைகளே 

அவற்றுடனே பின்னி பிணைந்து வாழ்ந்து பின் பின் கண்டு உணராமல் இறந்திடுவானே 

அதனுள்ளே தான் நீயும் தான் புத்தியை தான் மனிதனுக்கு கொடுப்பாயே 

அதனில்  இருந்து மீட்டு எடுத்து அனைவருக்கும் பின் உதவுவாயே 

அனைத்து உயிர்களும் உனக்கே சொந்தமே 

அனைத்து உயிர்களும் உனக்கே சொந்தம் என்று 

மனிதன் நினைப்புக்கு வா 

மனிதன் நினைப்புக்கு அதுவும் ஊட்டி அனைத்தும் அருள்வாய் குகனே 

அழியும் நிலைக்கு உலகம் செல்கின்றது 

அதையும் காக்க ஓடி ஓடி வா அன்புக் குழந்தையே 

செல்லக் குழந்தையே 

பாசக் குழந்தையே முருகா 

உன்னை வளர்த்தேனே அன்புடனே 

எதை பின் எதை எதை கேட்டாலும் சித்தர்கள் யாங்கள் பின்வாங்கி தந்தோமே 

இப்பொழுது கலியுக வரதனாய் ஆகிவிட்டாயே 

அனைத்தும் மனிதனுக்கு தெளிவுபடுத்தி 

கர்மாத்தை அளிக்க வா வா 

குமரனே முத்துக்குமரனே அனைத்தும் முத்து 

அனைத்தும் சித்து 

அனைத்தும் எதனையும் உன்னுள்ளே அடக்குமே 

அதனையும் பயன்படுத்தி இவ் உலகத்தைக் காக்க ஓடோடி வா குகனே 

அடுத்து என்னவென்று 

அடுத்து என்னவென்று மனிதனுக்கே பின் வாழ்க்கை தெரியவில்லை 

பின் புண்ணியத்தை சிறிது தானமாக மனிதனுக்கு கொடுத்து 

அடித்த என்ன நிலைமை என்று உணர்ந்து கொள்ள 

புண்ணியத்தை தருவாய் செல்லக் குழந்தையே 

ஈசனின் குழந்தையே பின் என்றிருந்தாலும் தான் 

யாங்கள் தானே உன்னை வளர்த்தோமே 

ஈசனின் குழந்தையே என்றிருந்தாலும் 

யானே தான் உன்னை வளர்த்தேனே 

யாங்கள் எல்லாம் தானே உன்னையும் வளர்த்தேனே 

நிச்சயம் தன்னில் கண்ணாம்பூச்சியில் ஆடுகின்ற 

கண்ணாம்பூச்சி ஆடுகின்ற பொழுது 

யாங்கள் அனைவரும் தானே நிச்சயம் தன்னில் கூட 

ஒளிந்து நின்று தான் நீயே தான் பின் சந்தோஷமடைய யாங்கள் மறைந்து மறைந்து நின்றோமே 

அதுபோலே தானே 

அதுபோலே தானே 

மறைந்து மறைந்து அனைத்து பாவங்களை மனிதன் செய்த போதிலும் 

மறந்து மறந்து அருள் தருவாயே 

அருள் தருவாயே குகனே ஈஸ்வரன் பரமேஸ்வரியை அறிந்து 

தாயும் உடனுடன் தாயும் உடனுடன் பாசங்கள் நிறைந்தாலும் எங்களை ஏன் நாடி நாடி பின் வந்து வந்து தானே விளையாடினாயே  குமரோனே 

அன்பும் நிறைந்தது 

பாசம் நிறைந்தது கருணை நிறைந்தது குழந்தாய் 

வா வா குழந்தாய் 

வெற்றியைத் தருவாய் குழந்தாய் 

மனிதனின் பொறாமை 

மனிதனின் பொறாமை குணத்தை போக்கு முதலில் 

மனிதனின் காம, மனிதனின் காம எண்ணங்கள் போக்கு 

தானே என்றும் எண்ணும் அகந்தை ஒளித்து அருளிடுவாய் குகனே 

ஒருவர் ஒருவர் சண்டைகள் ஈட்டு பக்திக்குள்ளே இன்னும் பிளவுகள் ஏற்படுத்துபவனே மனிதனே 

அதையும் அறிந்து அமைதியாக இருக்கின்றாய் 

அதையும் ஒழித்திடவா முருகா 

அன்பென்ற சொல்லுக்கு முருகா 

அறிவென்ற சொல்லுக்கு முருகா 

அழகென்ற சொல்லுக்கு முருகா 

கருணை என்ற சொல்லுக்கு முருகா 

பாசம் என்ற சொல்லுக்கு முருகா 

தமிழ் என்ற சொல்லுக்கு முருகா 

ஈசன் என்ற சொல்லுக்கு முருகா 

பின் பரமேஸ்வரி என்ற சொல்லுக்கு முருகா 

சித்தர் என்ற சொல்லுக்கு முருகா 

கணபதி என்ற சொல்லுக்கு முருகா 

மணிகண்டன் என்ற சொல்லுக்கு முருகா 

அனைத்தும் நீயே அனைத்தும் நீயே 

அனைத்திலும் இருப்பவன் நீயே 

மனிதனைக் குறைகளை களைவாயே 

மனிதனைக் குறைகளை களைவாயே 

எத்தனை எத்தனை மனிதனுக்கு குறைகள் இருந்தாலும் 

அதனையும் போல் விளையாட்டாக நினைத்து 

அனைத்திலும் தன்னை வெளிப்படுத்தி 

அதையும் நீக்கி ஓடோடி வருவாய் வருவாய் 

அருள்வாய் குகனே 

இன்றைய நாளிலே 

இன்றைய நாளிலே நல் நாளில் அன்று முருகன் தன் ஆசிகள் 

முருகன் தன் ஆசிகள் கொடுக்க என்று ஓடோடி வருகின்றானே மனிதன் 

அவனுடைய பாவத்தைத் தொலைத்து 

குறைகளை அகற்றி அனைத்தும் அருள்வாயே குகனே 

எப்பொழுதும் மனிதன் உனை உணரும் அளவிற்கு புத்திகளே கொடுப்பாய் குகனே 

எப்பொழுதுமே உன்னை நினைக்க வேண்டி அன்பினின் நிச்சயம் அனைத்தும் இதயத்திலும் கொடுப்பாய் குகனே 

என்றென்றும் நிலைத்து நிற்பவனே நீயே 

மனிதனைக் குறைகளை நீக்குவாயே 

இன்றைய தினத்தில் எங்கெங்கோ இருக்கும் மனிதர்கள் தன்னை உன்னை பார்க்கவே பின் ஓடோடி வருவாரே 

உன்னை பார்க்கவே நிச்சயம் ஓடோடி பின் வருவார்களே 

எத்தனை எத்தனை துன்பங்கள் வைத்துக் கொண்டு உன்னையே தான் நாடிடுவார்களே 

அத்தனை குறைகளும் நீக்கிடு குகனே அருள் கூர்ந்து 

பின் அனைத்து குறைகளும் நீக்கிடுபவனே 

உன்னைத்தானே எப்பொழுதும் 

அன்னையும் தந்தையும் நினைக்கின்றேனே குகனே 

உன்னைத்தானே எப்பொழுதும் அன்னை தந்தை என்றுதான் நினைக்கின்றேனே குகனே 

அனைவரும் பாவத்தையும் ஒளிப்பாய் குகனே 

அருள் தந்து பின் அனைத்தையும் கொடுப்பாய் குகனே 

எப்பொழுதும் மனிதன் 

எப்பொழுதும் மனிதன் நிச்சயம் தன்னை தெரியாமல் தவறு செய்து விடுகின்றானே 

புத்தி இல்லாமல் செய்து விடுகின்றானே 

புத்தியை கொடுத்து, தடுத்து நிறுத்துவாய் குகனே 

அனைத்தும் உன்னிடத்தில் இருக்க 

அதைத்தானே மனிதனுக்கு சிறிது புண்ணியத்தை கொடுக்க ஓடோடி வா குகனே 

எங்கும் நிறைந்தவனே 

அற்புதத்தை நிகழ்த்துபவனே 

உன்னால் முடிந்தது என்னவென்று அனைத்தும் முடியும் குகனே 

வேலோடு பின் சூலாயுதத்தோடு ஓடோடி வா 

சில மனிதர்களின் 

சில மனிதர்களின் நீ பின் எதனை என்றும் தெரியாமல் வாழ்கின்றார் 

அப்பக்குவத்தை அவனுக்கும் கொடுத்து கொடுத்து 

தீயவை நீக்கி நீக்கி நல்லதை அளித்திடு குகனே 

வருவாய் மனிதர்களுக்கு அனைவருக்கும் அருள் தருவாய் 

எங்கெங்கும் இருக்கும் 

எங்கெங்கும் இருக்கும் திருத்தலங்களுக்கு உன்னையே நினைத்து நினைத்து 

இன்று நாளிலே வருகின்றார் 

பாரோ பாரோ 

பாரோ பாரோ 

அத்தனை மனிதர்களையும் உள்ளத்தில் உள்ள முதலில் தீங்குதனை கெட்ட விதயங்களை நீக்கி தானே 

நல்லருளே அருள்வாய் குகனே 

குழந்தாய் பாசக் குழந்தாய் 

இத்தேசத்தின் தான் பின் கடமைகள் உணர்ந்து மனிதன் எவனும் செய்யவில்லை 

அக்கடமை தனைத்தான் உள்ளே புகுத்து அனைத்தும் அருள்வாய் குகனே 

பணத்தின் இல்லாமல் பணத்தில் இல்லாமல் இத்தேசம் தானே அழிவு நிலைக்கு 

பணத்தின் மதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு அனைத்தும் கொடுப்பாய் 

இவ்வுலகத்தை உச்சத்தைத் தொட வைப்பாய் 

இத்தேசத்திலே தான் வருங்காலத்தில் மனிதன் பணத்திற்காக அலைவானே 

அப்பணத்தின் எதனை என்று எங்கெங்கே ஒளித்திருக்கின்றாய் உன் மூலப் பொருள்களை கொடுத்து இத்தேசத்தை வளமாக்குவாய் 

இன்னும் தானே 

====================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு 
====================================

அறிந்தும் அறிந்தும் அழகாய் குழந்தாய் அறிந்தாய் அனைத்தும் இவ் தேசத்தை காக்க ஓடோடி வா குகனே 

அருள்வாய் நலமாய் ஆசிகள் அனைவருக்குமே.

===============================================
# அன்புடன் நந்தியம்பெருமான் வாக்கு நிறைவு 
===============================================

கபில வனத்தில் தைப்பூச நன்னாளன்று நந்தியம்பெருமான் வழங்கிய தெய்வீக வாக்கு சுருக்கம்
1. சுருக்கம் (Summary)
தைப்பூசத் திருநாளன்று (பிப்ரவரி 1) இலங்கையின் கபில வனத்தில் நடைபெற்ற 5-வது கூட்டுப்பிரார்த்தனையில், நந்தியம்பெருமான், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்தி உலக மாந்தர்களுக்காக ஆலோசனைகளை வழங்கினார். மனிதகுலம் அறியாமை, கர்ம வினை மற்றும் அகந்தையினால் அழிவை நோக்கிச் செல்வதைச் சுட்டிக்காட்டிய நந்திதேவர், முருகப்பெருமானை 'கலியுக வரதனாக' வந்து மக்களைக் காக்குமாறு வேண்டுகிறார். குறிப்பாக, இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரச் சரிவு மற்றும் உலகளாவிய பேரழிவுகள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மக்களின் பாவ மூட்டைகளை அவிழ்த்து, அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியதன் அவசியத்தை இந்த வாக்கு வலியுறுத்துகின்றது.
2. நிகழ்வின் பின்னணி மற்றும் சூழல்
இந்தத் தெய்வீக வாக்குகள் கீழ்க்கண்ட சூழலில் பதிவு செய்யப்பட்டுள்ளன:
தேதி: 01/02/2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தைப்பூச நிகழ்வு
இடம்: கும்பகர்ண ஆற்றங்கரை, கபில வனம், மொனராகலை மாவட்டம், ஸ்ரீலங்கா.
தலைமை: அகத்திய மாமுனிவர் மற்றும் சித்தர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்ற 5-வது கூட்டுப்பிரார்த்தனை.
முருகப்பெருமான் நித்ய தவம் இயற்றும் சக்திவாய்ந்த இடமாக கபில வனம் அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு யாகமும் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்ற வேளையில் நந்தியம்பெருமான் ஜீவநாடி வழியாகத் தோன்றினார்.

அ. முருகப்பெருமானின் திருவுருவம் மற்றும் சித்தர்களின் தொடர்பு
நந்தியம்பெருமான் முருகப்பெருமானை 'குகன்', 'வேலவன்', 'குமரன்' மற்றும் 'செல்லக் குழந்தை' என்று அன்புடன் அழைக்கிறார். சித்தர்களுக்கும் முருகனுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது:
சித்தர்கள் முருகப்பெருமானைத் தங்களின் குழந்தையாகப் பாவித்து வளர்த்துள்ளனர்.
சித்தர்களுடன் முருகப்பெருமான் கண்ணாமூச்சி விளையாடி மகிழ்ந்ததாக நந்திதேவர் குறிப்பிடுகிறார்.
தற்போது கலியுகத்தின் தேவை கருதி, முருகனை 'கலியுக வரதனாக' எழுந்து வருமாறு சித்தர்கள் அழைக்கின்றனர்.
ஆ. மனிதகுலத்தின் தற்போதைய நிலை மற்றும் குறைபாடுகள்
மனிதர்களின் தற்போதைய மனநிலை மற்றும் செயல்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன:
அறியாமை: மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி பிழைக்க வேண்டும் என்று தெரியாமல் வாழ்கிறான்.
தீய குணங்கள்: பொறாமை, காம எண்ணங்கள், மற்றும் அகந்தை ஆகியவை மனிதர்களிடம் மலிந்துள்ளன.
மத மோதல்கள்: மதத்தின் பெயரால் சண்டையிட்டுக்கொண்டு, உண்மையை உணராமல் மனிதர்கள் மடிகின்றனர்.
கர்ம வினை: மனிதர்கள் தாங்கள் செய்யும் தவறுகளால் (பாவ மூட்டைகளை) துன்புறுகின்றனர், ஆனால் அவற்றை உணரும் புத்தி இல்லாமல் இருக்கின்றனர்.
இ. தேச மற்றும் உலகளாவிய எச்சரிக்கைகள்
இந்த வாக்குகள் ஆன்மீகத் தளத்தைத் தாண்டி, சமூக மற்றும் பொருளாதார எச்சரிக்கைகளையும் வழங்குகின்றன:
உலக அழிவு: உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அழிவுகள் தேசத்தைக் காத்து நிற்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி: இலங்கை (இத்தேசம்) பணமதிப்பு மற்றும் பணப்பற்றாக்குறையினால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். வருங்காலத்தில் மனிதன் பணத்திற்காக அலைவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்வு: முருகப்பெருமான் தனது மூலப் பொருட்களைக் கொடுத்து தேசத்தை வளமாக்க வேண்டும் என்றும், பணத்தின் மதிப்பை உச்சத்தைத் தொடச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
முக்கிய வாக்குகள் 
ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட சில ஆழமான வாக்குகள் :
"புத்தி இல்லாத மனிதனின் நிலைமை அழிவுக்கு செல்கின்றது முருகா, அதனையும் நீயே மாற்றித் தருவாய்."
"பாவத்தை சுமந்து தெரியாமல் வருகின்றார், அப்பாவ மூட்டையும் அவிழ்த்து தானே பின் நீரினுள்ளே பின்இடுவாய்."
"இத்தேசம் தானே அழிவு நிலைக்கு, பணத்தின் மதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு அனைத்தும் கொடுப்பாய்."
"அன்பென்ற சொல்லுக்கு முருகா, அறிவென்ற சொல்லுக்கு முருகா... அனைத்தும் நீயே."

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment