அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 3
நாள் : 7/02/2026 (சனிக்கிழமை)
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 3)
========================================
# சிவ லிங்கத்தை நகர்த்திய வில்வ இலை….
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவை பெரும் மூலிகை நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் உயிர் பெற்று விட்டது அவ் லிங்கம் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் மிக்க மிக்க, எதை என்று அறிய பறித்து, பின் அதன் மேலே பின் இட்டால், மெது மெதுவாக நிச்சயம் எவை என்று அறிய பின் மேலே வந்துவிடும் தானாகவே.
நாம் ஏன் அதனை நிச்சயம் சுமக்க வேண்டும் என்று யானும் கூட.
அடியவர்கள் :- ( சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தியர் ஒரு வழியைக் கண்டுபிடிச்சுச் சொல்றாரு, "எப்பா, நீ கோவத்துல ஏதோ ஒரு வேகத்துல செஞ்சப்பவே அந்த லிங்கம் ஆடுச்சு இல்ல? அப்போ இதுதான் நமக்கான வழி. நாம என்ன பண்ணலாம்னா, அங்க இருக்குற வில்வ இலைகளை எல்லாம் நிறையப் பறிச்சுக்கிட்டு வந்து, அந்த லிங்கத்துக்கு மேலேயே போடுவோம். அந்தப் புனிதமான வில்வத்தை விடாம மேல போட்டுக்கிட்டே இருந்தோம்னா, அந்த லிங்கமே தானா மேல எழும்பி வரும்" அப்படின்னு ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கிறாரு.)
=======================================
# ஆனந்த கண்ணீரில் இராவணேஸ்வரர்
=======================================
குருநாதர் :- அறிந்தும் இவைத்தன் எதற்குறிய இதனால் சந்தோஷம் அடைந்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனே. பின் அகத்தியனே !!!!! அகத்தியனே !!!!! தந்தையே !!!!! என்றெல்லாம் ஆனந்த கண்ணீரில் பின் ஆனந்த கண்ணீரில் பின் மிதந்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தியர் அந்த வழியைச் சொன்ன உடனே இராவணேசர் அப்படியே உருகிப் போயிட்டாரு. "தந்தையே! தந்தையே!"ன்னு உணர்ச்சிப் பெருக்குல அகத்தியரைத் தன் தகப்பன் போலவே நினைச்சுக் கொண்டாடுறாரு. "எப்பா, இப்போ நீங்கதானே எனக்கு இந்த ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்தீங்க!"ன்னு சொல்லி, அகத்தியரைத் தூக்கிக் கொண்டாடாத குறையா ரொம்பவே நெகிழ்ந்து போறாரு. தன் தாயைக் காப்பாத்த ஒரு வழி கிடைச்ச சந்தோஷத்துல, அகத்தியரை ஒரு குருவாவோ இல்ல தெய்வமாவோ நினைச்சு அந்த இடத்துல ஒரு பெரிய கொண்டாட்டத்தையே நடத்திடுறாரு.)
====================================
# வில்வ இலைகளால் …தானாகவே மேல் எழும்பிய சிவலிங்கம்.
====================================
குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் பறிப்போம் வா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பறித்து நிச்சயம் தன்னில் கூட, பின் சிறிது சிறிதாக அதன் மேலே இட்டி இட்டு தானாகவே மேல் எழும்பியது பின் சிவலிங்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் சொன்னபடியே இராவணேசர் வில்வ இலைகளைப் பறிச்சு அந்த லிங்கத்து மேல பக்திப் பரவசத்தோட போட்டுக்கிட்டே வராரு. என்ன அதிசயம்னா, அசைக்கவே முடியாதுன்னு இருந்த அந்தச் சிவலிங்கம், இலைகளைப் போடப் போட கொஞ்சம் கொஞ்சமா, அப்படியே மெதுமெதுவா மேல எழும்ப ஆரம்பிச்சிருச்சு! வில்வ இலைகள் அந்த லிங்கத்துக்கு ஒரு பெரிய சக்தியைக் கொடுத்த மாதிரி, பூமிக்குள்ள இருந்து அது அப்படியே மேல வந்துடுச்சு. இதைப் பார்த்த இராவணனுக்கு வந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை!)
=======================================
# அன்றைய தினம் சிவராத்திரி என்று இராவணனுக்கே தெரியாது.
=======================================
குருநாதர் :- ஆனாலும் அன்றைய தினம் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய பின் பின் எவை என்று அறிய கூட பின் சிவராத்திரி என்று கூட பின் இவர்களுக்கு எவை என்று புரிய பின் அவனுக்கு தெரியாதானால்.
சுவடி ஓதும் மைந்தன் :- அன்றைய தினம் சிவராத்திரி என்று இராவணனுக்கே தெரியாது.
=============================================
# அனைத்து பழமையான சிவலிங்கங்கள் எல்லாம் நாம் என்ன நினைக்கின்றோமோ அதை அப்படியே கொடுக்கும் வல்லமையுடையது.
=============================================
=============================================
# சிவராத்திரி அன்று வில்வத்தால் எப்படி வணங்க வேண்டும்?
=============================================
குருநாதர் :- எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட சிறிது சிறிதாக மேல் எழும்பியது நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் ஒரே ஒரு எண்ணத்தை தான் நிச்சயம் தன்னில் கூட. அறிந்திருந்தான். பின் தன் தாய் அதாவது சாகாவரம் பின் பெற வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
குருநாதர் :- பின் தன் தாய்க்கு நோய்கள் குணம் குணமாக வேண்டும் என்றெல்லாம். பின் இதனையே நினைத்து, நினைத்து, இதனால் நிச்சயம் அவை இட்டு இட்டு நிச்சயம் தன்னில் கூட, அவ் சிவலிங்கம் நிச்சயம் தன்னில் கூட இவன் மனதில் பின் என்ன நினைக்கின்றதோ அதை பின் அப்படியே செய்யும் வல்லமையுடையது.
குருநாதர் :- அனைத்து சிவலிங்கங்களும் இப்படித்தான். பழமையான சிவலிங்கங்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. தான் என்ன நினைக்கின்றோமோ எதை என்று கூற அப்படியே கொடுக்கும்.
அடியவர் :- எண்ணங்கள்…
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்போ இராவணனோட மனசுல ரெண்டே ரெண்டு எண்ணம்தான் ஓடிட்டு இருக்கு. வில்வத்தைப் போடப் போட லிங்கம் மேல வருது, ஆனா அவரோட முழு கவனமும் அவங்க அம்மா மேலதான் இருக்கு. "எப்படியாவது என் அம்மாவுக்கு ஒரு சாகாவரம் கிடைக்கணும், அவங்களை நான் மறுபடியும் படைக்கணும்" அப்படிங்கிற அந்த ஒரு வெறியோடதான் வில்வத்தைப் போட்டுக்கிட்டே இருக்காரு. வேற எந்த நினைப்பும் அவருக்கு இல்லை, "தன் தாயை எப்படியாவது இந்தச் சிவலிங்கத்தோட சக்தியால மீட்டெடுக்கணும்" அப்படிங்கிற அந்தத் தாய் பாசம் மட்டும்தான் அவரோட ஒவ்வொரு செயலையும் வழிநடத்துது.)
========================================
# சிவராத்திரி ரகசியங்கள் - இடை விடாத வில்வ அர்ச்சனையால், சிவலிங்கம் தானாகவே இராவணேஸ்வரரின் மீது வந்து அமர்ந்து விட்டது.
========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு பின் எதை என்று கூட சரியாக பின் நியாயமாக வேண்டுதல் நிச்சயம் தன்னில் கூட மேலே எழும்பியது நிச்சயம் தன்னில் கூட பின் மடியில் தானாக வந்து அமந்துவிட்டது
சுவடி ஓதும் மைந்தன் :- ( இராவணேசர் விடாம வில்வ இலைகளை அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காரு. போடப் போட அந்த லிங்கம் அப்படியே மெதுவா மேல எழும்பி வந்து, கடைசியில ஒரு பெரிய அதிசயம் நடக்குது! அந்தச் சிவலிங்கம் தானாவே நகர்ந்து வந்து, நேரா இராவணனோட மடி மேலேயே வந்து உட்கார்ந்துடுச்சு. அசைக்கவே முடியாதுன்னு நினைச்ச அந்த சிவலிங்கம் , இராவணனோட தாய் பாசத்துக்கும் பக்திக்கும் கட்டுப்பட்டு, ஒரு குழந்தை மாதிரி அவர் மடியிலேயே வந்து அமந்துவிட்டது.)
===========================================
# அகத்திய மாமுனிவர் வாக்கு - இராவணனே!!!!! பார்த்தாயா ?
===========================================
குருநாதர் :- யானும் பின் இராவணனே!!!!! எவ்வளவு பின் உன் மீது பாசம் வைத்திருந்தால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எதை என்று கூற, அனைவரும் கல்லாக என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் எப்படி நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூற உன் மேல் அமர்ந்திருக்கிறது பார்த்தாயா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ("உலகத்துல இருக்கிற மத்தவங்க எல்லாம் பார்த்தா, இதை வெறும் கல்லுன்னுதான் நினைப்பாங்க. ஆனா, நீ அப்படி நினைக்காம உன் உள்ளத்தோட ஆழத்துல இருந்து உண்மையான அன்போட பூஜை பண்ணியே, அதுதான் இப்போ இந்த அதிசயத்தை நடத்திக் காட்டிருக்கு. உன்னோட அந்தத் தூய்மையான உள்ளன்புதான், அசைக்க முடியாத அந்த ஈசனையே ஒரு குழந்தை மாதிரி உன் மடியில வந்து தானா உட்கார வச்சிருக்கு பார்த்தியா!" )
============================================
சிவவாக்கியர் பாடல் :-
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" -
===============================================
================================================
# “நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்”
================================================
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய அறிய “நட்ட கல்லும் பேசுமா” நிச்சயம் தன்னில் கூட பின் “நாதன்” பின் “உள்ளிருக்கையில்” என்று ஒரு சித்தன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (" "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" அப்படின்னு சிவவாக்கியர் சொன்ன அந்த ரகசியம்தான் இங்க அப்படியே நடக்குது. மத்தவங்களுக்கு அது வெறும் கல்லா தெரியலாம், ஆனா பக்தியோடு பார்க்குற இராவணனுக்கு அதுல அந்த ஈசனே தெரியுறாரு. உள்ளுக்குள்ள இறைவனை (நாதனை) வச்சுட்டுப் பூஜை பண்ணும்போது, அந்தச் சிவலிங்கம் வெறும் கல்லா இருக்காது, அது பேசும், அசையும், ஏன்... தானா வந்து மடியில கூட உட்காரும்! சிவவாக்கியர் சொன்ன அந்த ஆழமான அர்த்தத்தை, இராவணன் தன் தாய் மேல வச்சிருந்த அந்தப் பாசத்தாலயும், ஈசன் மேல வச்சிருந்த உள்ளன்பாலயும் நிஜமாக்கிக் காட்டிட்டாரு.)
====================================
# எக் கல்லும் வில்வத்தை அதன் மேலே இட்டால் அக்கல்லும் பேசுமடா.
====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அமைதியாக இருந்தால் பின் எக் கல்லும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது வில்வத்தை அதன் மேலே பின் இட்டால் நிச்சயம் தன்னில் கூட அக்கல்லும் பேசுமடா நிச்சயம் தன்னில் கூட.
=========================================
# அன்புடன் வில்வ அர்ச்சனையால், நாதன் உள்ளிருக்கையில், நிச்சயம், நியாயமான கோரிக்கைகளை ஏற்று இறைவன் உன்னிடத்திற்கு வருவானப்பா.
=========================================
குருநாதர் :- நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் தன்னில் கூட பின் ஏற்று பின் எதை என்று அறிய பின் அதாவது உன்னிடத்திற்கு இறைவன் வருவானப்பா. இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நாதன் உள்ளிருக்கையில் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ("நாதன் நமக்குள்ளேயே இருக்கும்போது, நாம வெளியில எதைத் தேடி அலையணும்? மனசுல நல்ல எண்ணங்களோடவும், தூய்மையான பக்தியோடவும் இறைவனை வழிபட்டா, அந்த உயிரில்லாத கல்லும் நமக்காகப் பேசும். நாம உண்மையான அன்போட அந்த ஈசனை நினைக்கும்போது, அந்தப் பரம்பொருள் அந்தப் பாறைக்குள்ளேயும் வந்து உட்கார்ந்துப்பாரு. அப்போ அந்தத் தெய்வமும் கல்லும் வேற வேற கிடையாது; நம்மளோட நல்ல எண்ணங்களே அந்த இறைவனை நமக்குள்ளயும், நம்ம முன்னாடி இருக்கிற சிலைக்குள்ளயும் கொண்டு வந்து நிறுத்திடும்")
அடியவர் :- எல்லாம் நடக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் நடக்கும். பேசுவார்.
============================================
# சிவராத்திரி இரவு முழுவதும்…சிவ லிங்கத்தின் மீது வில்வ இலைகளை இட்டு இட்டு வேண்டிக்கொண்டால், நியாயமான கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற, கல்லும் நிச்சயம் இறைவனாகி மனதில் உட்காருவார் ஈசன். அவ்வளவு பெருங்கருணை உள்ளவர்.
=============================================
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட, இரவு முழுதும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் அவ் சிவ லிங்கத்தின் மீது நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய பின் அறிந்து நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இட்டு இட்டு பின் வில்வ இலைகளை கூட பின் வேண்டிக்கொண்டால், நிச்சயம் தன்னில் கூட, நியாயமான கோரிக்கைகள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, கல்லும் நிச்சயம் இறைவனாகி, உன் மனதில் பின் உட்காருவான் ஈசன். அவ்வளவு பின் கருணை உள்ளவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்தச் சிவராத்திரி அன்னைக்கு மனசுல ஒரு நியாயமான கோரிக்கையை வச்சுக்கிட்டு, அந்தப் பரம்பொருளை வில்வத்தால அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கிட்டா, கண்டிப்பா அது நடக்கும். நம்ம எண்ணம் சரியா இருந்தா, அந்த வில்வ அர்ச்சனைக்குக் கிடைக்கிற பலனே தனி!")
==========================================
# முதலில் சிவராத்திரியை கொண்டாடுபவன் இராவணனே
==========================================
குருநாதர் :- இது இராவணனுக்கே தெரியாது
குருநாதர் :- எதை என்று கூற முதல் முதலில் சிவராத்திரியை கொண்டாடுபவன் இராவணனே என்பேன்
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( "நிஜத்தைச் சொல்லப்போனா, சிவராத்திரிங்கிற ஒரு விஷயத்தை முதல் முதல்ல கொண்டாடுனது நம்ம இராவணேஸ்வரன் தான்! ஆனா ஒரு வேடிக்கை என்னன்னா, அது சிவராத்திரின்னே தெரியாமலேயே அவர் கொண்டாடிட்டாரு. அந்த ராத்திரி முழுக்கத் தூங்காம, வில்வத்தைப் போட்டுப் போட்டு ஈசனை வேண்டிக்கிட்டே இருந்தாரே, அதுதான் அவரோட முதல் சிவராத்திரி பூஜை. )
============================================
# இந்த சிவராத்திரியை , இராவணேஸ்வரர் இவ்வுலகத்தில் , அனைத்து தாய்மார்களும் , தன் அன்னை போல நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி உலகமெங்கும் பரப்பினார்
============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட, இவ்வுலகத்தில் பின் நன்றாக இருக்க வேண்டும். தாய் தந்தையை நினைத்து நிச்சயம் தன்னில் கூட, பல நோய்களை பின் இருப்பவர் நிச்சயம் தன்னில் கூட, பின் நன்றாக இருக்க வேண்டும், என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
============================================
# இந்த சிவராத்திரியை உலகமெங்கும் பரப்பினார் இராவணேஸ்வரன்.
============================================
குருநாதர் :- இந்த சிவராத்திரி உலகமெங்கும் பரப்பினான் நிச்சயம் தன்னில் கூட இராவணேஸ்வரன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("சிவராத்திரியில் அந்த வில்வ அர்ச்சனை சக்தியால இராவணனோட தாய்க்கு உடல்நிலை மெல்ல மெல்லக் குணமாக ஆரம்பிச்சிருச்சு. இதைப் பார்த்த இராவணனுக்கு ஒரு பெரிய எண்ணம் வருது. 'நம்ம அம்மா மட்டும் நல்லா இருந்தா போதுமா? உலகத்துல எத்தனையோ வயசானவங்க இருக்காங்க, எத்தனையோ நோயாளிகள் இருக்காங்க, அவங்க எல்லாரோட தாயும் இதே மாதிரி நல்லா இருக்கணும்ல!' அப்படின்னு யோசிக்கிறாரு. அந்த ஒரு நல்ல எண்ணத்துலதான், 'எல்லாரும் இந்தச் சிவராத்திரியைக் கொண்டாடுங்க, வில்வத்தால ஈசனைப் பூஜிங்க'ன்னு சொல்லி, இந்த அற்புதத்தை உலகமெங்கும் பரப்ப ஆரம்பிச்சாரு. தன்னலம் இல்லாம, மத்தவங்க அம்மாவும் நல்லா இருக்கணும்னு அவர் நினைச்சதுதான் இந்தச் சிவராத்திரி உலகம் முழுக்கப் பரவக் காரணமா அமைஞ்சுது.")
குருநாதர் :- இதை தன் விளையாட்டாக எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் பறந்து பறந்து, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில், எப்படி ஏது என்றெல்லாம், நிச்சயம் ஆங்காங்கு வடிவுகளை, பின் அமைத்து அமைத்து நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்த விஷயத்தை எப்படி ஊர் ஊரா கொண்டு போறதுன்னு இராவணன் ஒரு சூப்பர் பிளான் போட்டாரு. எப்படின்னா, ஒரே இடத்துல மட்டும் நிக்காம, ஆங்காங்கே தன்னை வச்சு, ஈசனை வணங்குற மாதிரி. இங்க ஒரு இராவணேஸ்வரன் லிங்கத்தைப் பூஜிச்சிட்டு இருப்பாரு, அதே மாதிரி இன்னொரு இடத்துல, அப்புறம் வேறொரு திசையிலன்னு எல்லா இடத்துலயும் இராவணேஸ்வரன் தன் வடிவத்தையே நிறுத்தி, அந்தப் பக்தியைப் பரப்பிக்கிட்டே போனாரு." )
==========================================
# சிவராத்திரியின் உண்மை பொருள் - நாதனை நம் மனதுள் நிறுத்துவது
==========================================
==========================================
# சிவராத்திரியின் உண்மை உணராமல் செய்வதால் , தரித்திரங்கள் உண்டாகி , கஷ்டத்தோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து வந்து கொண்டே இருக்கின்றான் மனிதன்.
=========================================
குருநாதர் :- எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட சிறிது சிறிதாக நீரை எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட. இதனால் நிச்சயம் தன்னில் கூட இவை எவ்வாறு காட்டுகிறது என்றால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது மனதில் வந்துவிட்டது அவ் லிங்கம் எது என்று கூற, பின் அதாவது உன் மனதிலே நிச்சயம் நீரை ஊற்ற முடியாது அல்லவா?
குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட நீரை ஊற்றி ஊற்றி நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தத்தை படுத்தி, பின் நிச்சயம் அவ் லிங்கத்தில், உன் மனதில் நிச்சயம் தன் வைத்துக்கொண்டால், இறைவன் அங்கேயே அமர்ந்து விடுவான் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால் அவனை அர்ச்சித்து அர்ச்சித்து நிச்சயம் தன்னில் கூட பின் தானாகவே அவ் லிங்கம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் உன் மனதில் பின் இருந்தால் நிச்சயம் தன்னில் கூட, அப்பொழுது என்ன ஆயிற்று? பின் அதாவது நாதனும் உள்ளிருக்கின்றான் என்பதுதான் ஆயிற்று.
குருநாதர் :- பின் நிச்சயம் மனித முட்டாள்கள் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட தெரிந்திருக்கவே இல்லை. யாரோ சொன்னார்கள் என்று நிச்சயம் தன்னில் கூட அவை கடைபிடித்தால் நிச்சயம் அத்தரித்திரம் மனிதனுக்கே போய் சேருகின்றது. இதனால் கஷ்டங்களை பின் கஷ்டத்தோடு பின் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வந்து கொண்டே இருக்கின்றான் மனிதன்.
=============================================
இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கம். புறத்தே உள்ள லிங்கத்தின் மீது நீரை ஊற்றி அர்ச்சிப்பது என்பது, உண்மையில் நம் மனதைப் பரிசுத்தப்படுத்துவதற்கே ஆகும். நம் மனதிற்குள் நீரை ஊற்றித் தூய்மைப்படுத்த முடியாது என்பதால், வெளியில் உள்ள லிங்கத்தை ஒரு கருவியாகக் கொண்டு, நம் எண்ணங்களை இறைவனிடம் நிலைநிறுத்த வேண்டும். அப்படிப் பக்தியுடன் அர்ச்சித்து அர்ச்சித்து, நம் மனதையே லிங்கமாக மாற்றி இறைவனை உள்ளே இருத்திவிட்டால், "நாதனும் உள்ளிருக்கின்றான்" என்ற உண்மையை உணர முடியும். ஆனால், இந்த ஞானம் தெரியாமல் வெறும் சடங்காகச் செய்பவர்கள், வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தின் உட்பொருள் தெரியாமல் எதையோ பின்பற்றுவதால், மனிதர்கள் துயரத்திலிருந்தும் தரித்திரத்திலிருந்தும் விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் என்பதே குருநாதர் உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.
=============================================
சுவடி ஓதும் மைந்தன் :- "எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதோட உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டுப் பண்ணனும்ப்பா, உண்மை தெரியாம எதைச் செஞ்சும் பிரயோஜனம் இல்லை. அதனாலதான், அந்த லிங்கத்துக்கு நீர் ஊத்தி அபிஷேகம் பண்ணும்போது, வெறும் சடங்கா பண்ணாம மனசை முழுசா அதுல வச்சுப் பூஜிச்சுக்கிட்டே இருக்கணும். அப்படி நாம ஆழமா, அன்போட பூஜிச்சுக்கிட்டே வந்தோம்னா, வெளியில இருக்கிற அந்த இறைசக்தி மெல்ல மெல்ல நம்ம மனசுக்குள்ளயே வந்துடும். அந்த உயிரில்லாத கல்லும் கூட நம்ம மனசுக்குள்ள ஒரு ஒளியா மாறி உள்ள வந்து உட்கார்ந்துக்கும்.பேசும் பேசும் ")
அடியவர் :- இது தெரியாம பண்ணா ஒன்னும் நடக்காது
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட கல்லை முதல் முதலில் பின் மனதில் வைத்தவன் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனே
சுவடி ஓதும் மைந்தன் :- முதல் முதல்ல கல்லை மனசுல வச்சவர் மனசுல வச்சவர் யாரு? இராவணன்.
குருநாதர் :- இதனால்தான் இவ்வளவு சக்திகளை எதை என்று புரிய பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஒரு நாள் கிடைத்துவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- ("பாருங்களேன், இராவணன் எத்தனையோ வருஷமா போராடுறாரு, எவ்வளவோ முயற்சி செஞ்சு பாக்குறாரு, ஆனா அவரால அவங்க அம்மாவைக் காப்பாத்தவே முடியல. ஆனா, விடாம முயற்சி பண்ணிக்கிட்டே இருந்த அவருக்கு, கடைசியா அந்த ஒரு நாள் கிடைச்சது பாருங்க... அதுதான் சிவராத்திரி! அந்த ஒரு குறிப்பிட்ட சிவராத்திரி அன்னைக்கு மனசார வேண்டினதுல, அவருக்கு இருந்த எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து போச்சு. பல வருஷ போராட்டத்துக்கு அந்த ஒரே நாள்ல விடை கிடைச்சு, அவருக்கு எல்லாமே சரியா போயிருச்சு. அதான் சிவராத்திரியோட மகிமை; சிவராத்திரி அன்னைக்கு நாம வைக்கிற அந்த ஒரு நியாயமான வேண்டுதல், வருஷ கணக்குல இருக்கிற கஷ்டத்தைக் கூட தவிடுபொடியாக்கிடும்!")
======================================
# அகத்திய மாமுனிவரிடம் , இராவணேஸ்வரர் வைத்த கோரிக்கை.
======================================
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் தான் இருக்கும் வரை, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று, இவை அழியக்கூடாது என்பதை எல்லாம் நிச்சயம் கூட. எதை என்று கூட மீண்டும் எதை என்று அறிய பின் என்னிடமே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இராவணேஸ்வரர் சொல்றாரு. நான் இருக்கும் வரை இந்த சிவராத்திரி என்பது வந்து அழியக்கூடாது.
குருநாதர் :- நிச்சயம் பின் யானும், நீயே அழியப் போகின்றாய் சிவராத்திரியும் பின் உன்னுடன் சேர்ந்து அழியப் போகின்றது. இது நிச்சயம் என்று. பின் அதாவது சிரிப்புடனே எவை என்று கூற பின் எவை என்று கூற.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் அப்படியே சிரிச்சுக்கிட்டே இராவணனை வம்பு பண்ணிப் பேசுறாரு; "ஏம்பா, நீ இருக்குற வரைக்கும் தான் இந்த சிவராத்திரி எல்லாம் நடக்கும் போலயே, நீ போனதுக்கு அப்புறம் இதுவும் அப்படியே அழிஞ்சு போயிடப் போகுது"ன்னு விளையாட்டா வம்புக்கு இழுக்குறாரு. ஆனா, உண்மையிலேயே அகத்தியருக்கு எல்லாம் தெரியும், )
========================================
# யான் இருக்கும் வரை மக்கள் சிவராத்திரியும் கொண்டாட வேண்டும்.
========================================
குருநாதர் :- பின் அகத்தியனே அப்படியெல்லாம் இல்லை நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று அறிய பின் அதாவது நல்விதமாக நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகம் எப்பொழுது எது என்று அறிய இருக்கின்றதோ, அப்பொழுது வரை நிச்சயம் தன்னில் கூட, பின் யான் இருக்க வேண்டும் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட. அதேபோல் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய சிவராத்திரியும் பின் மக்களுக்கு போய் சேரட்டும் என்பதற்கிணங்க சிவராத்திரியும் கொண்டாட வேண்டும் யான் இருக்கும் வரை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்தியர் அப்படிச் சொன்ன உடனே இராவணன் "அப்படியா சங்கதி? உலகம் இருக்குற வரைக்கும் நானும் இருக்கணும், இந்தச் சிவராத்திரியும் இருக்கணும், அதுக்கு நான் என்ன பண்ணனுமோ அதைச் செய்வேன்"ன்னு ஒரு வைராக்கியமான முடிவு எடுக்குறாரு. "இந்தச் சிவராத்திரியை நான் விடமாட்டேன், இதுக்காகத் தேவையென்றால் அந்த ஈசன் கிட்டயே மறுபடியும் சண்டை போடுவேன்"னு சொல்லிட்டு, தான் நினைச்சதைச் சாதிக்கிறதுக்காகப் பயங்கரமான தவத்துல இறங்கிட்டாரு. தான் அழியாம இருந்தாதானே சிவராத்திரியும் அழியாதுன்னு நினைச்சு, அந்த ஒரு பிடிவாதத்தோட ஈசனை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பிச்சுட்டாரு.)
குருநாதர் :- மீண்டும் எதை என்று கூற தாயை பார்த்து நிச்சயம் தன்னில் சந்தோஷத்தில் நிச்சயம் தன்னில் கூட உயிர் பெற்று எதை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா தாய் பார்த்துட்டாரு. என்ன ஆயிடுச்சு? உயிர் பெற்று விட்டாங்க.
=================================================
# சிவராத்திரியில் - பல நோய்களையும் வெல்லலாம். அனைத்தும் விதியை கூட வெல்லலாம். நிச்சயம் சாவை கூட வெல்லலாம்.
=================================================
குருநாதர் :- இதனால் பல நோய்களையும் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூற, பின் ஒரே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ராத்திரியில் நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் விதியை கூட வெல்லலாம். நிச்சயம் பின் சாவை கூட வெல்லலாம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ராத்திரியில சாவையும் வெல்லலாம். அதாவது விதி வெல்லலாம்
அடியவர் :- விதியே வெல்லலாம். எல்லாத்தையும் வெல்லலாம். ஒரு ராத்திரினா, அது சிவராத்திரி தான்.
===========================================
# ஈசனை மறந்து விடுவார்கள். ஆனாலும் நிச்சயம் சிவராத்திரி மறைக்கக்கூடாது.
===========================================
குருநாதர் :- எதை என்று புரிய ஆனாலும் பின் அதாவது ஈசன் அதாவது நிச்சயம் தன்னில் கூட ஈசனை மறந்து விடுவார்கள். ஆனாலும் நிச்சயம் சிவராத்திரி மறைக்கக்கூடாது. பின் அகத்தியனே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் வைராக்கியத்தோடு.
சுவடி ஓதும் மைந்தன் :- வைராக்கியத்தோடு, ஆனால் ஈசனை கூட மறந்துடலாம் இந்த உலகத்துல. ஆனால் சிவராத்திரி ஒன்னு இருந்தா அது ஈசன் அது ஈசன் தானே அப்படியே வந்து ஆனா இதை நான் வந்து கட்டாயமா செய்யணும்.
================================================
# அனைத்து தாய்மார்கள் மீதும் நிச்சயம் பற்றுக் கொண்டவனே இராவணேஸ்வரன்.
================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தன் தாய் பின் எவை என்று புரிய நிச்சயம் உயிர் பெற்றாள் அல்லவா நிச்சயம் தன்னில் கூட? இவ்வுலகத்தோர் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் கஷ்டப்படுவார்கள் தன் தாயின் மீது எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட இதை தெரியப்படுத்த நிச்சயம் தன்னில் இவ்வாறு செய்ய, நிச்சயம் தாயவள் நிச்சயம் தன்னில் கூட பிழைத்து நிச்சயம் தன்னில் கூட சந்தோஷமாக வாழ்வாள். பின் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு தாயே பின் அவசியமாகின்றாள் . இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வளவு பின் தாயின் மீது அனைத்து பின் தாய்மார்கள் மீதும் கூட நிச்சயம் பற்றுக் கொண்டவனே இராவணேஸ்வரன்.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? அப்ப எல்லா தாயும் நல்லா இருக்கும் என்று எண்ணியவர் யாரு? இராவணேஸ்வரன்.
குருநாதர் :- ஆனாலும் அவனைப் பற்றி தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இராவணேசன் பற்றி தெரியவில்லை மனுஷனுக்கு தெரியல
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அழியக்கூடியதை காண்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூறிய பின் அழியாததை காண்பிக்கவில்லையே மனிதன் நிச்சயம் தன்னில் கூட. இதுதான் மனிதனின் கூட பின் தாழ்வான எண்ணம். இதனால்தான் மனிதன் அழிந்து கொண்டிருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("மனுஷன் எப்பவுமே அழியக்கூடிய இந்த உடம்பையும், உலகத்துச் சொத்துப்பத்துகளையும் தான் பெருசா நினைச்சுத் தேடிட்டு இருக்கான். ஆனா, என்னைக்குமே அழியாத அந்த ஆத்மாவையும், உண்மையான இறைசக்தியையும் அவன் கண்டுக்கிறதே இல்லை. அழியாத அந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்காததாலதான், மனுஷன் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுத் தன்னைத்தானே அழிச்சுக்கிட்டு இருக்கான். எது நிலைக்கும், எது நிலைக்காதுன்னு தெரியாமலே வாழ்றதுதான் மனிதனோட அழிவுக்குக் காரணமா இருக்குன்னு அகத்தியர் இங்கே சுட்டிக்காட்டுறாரு.")
குருநாதர் :- இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட சண்டைகள் சச்சரவுகள் மனக்குழப்பங்கள் என்னென்ன பின் எதை என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- இதனாலதான் என்ன ஆச்சு சஞ்சலங்கள் சச்சரவுகள் என்னென்னவோ வந்து குழப்பங்கள் மனிதனுக்கு என்னென்னவோ வந்து நடக்குது.
===========================================
# இராவணேஸ்வரர் சக்தியே வேறு. அவரை பற்றி தெரிந்து கொண்டு, நிச்சயம் சிவராத்திரியை கொண்டாடினால், நிச்சயம் அவருடைய சக்திகளும் உங்களுக்கு கிட்டும். அனைத்தும் சாதிக்கும் வல்லமை பிறக்கும்.
==========================================
குருநாதர் :- எது என்று ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்து கூட ஏன் நிச்சயம் பின் இராவணனை பற்றியும் கூட சொல்ல வேண்டும் என்றால் பின் மீண்டும் சொல்கின்றேன். அவனுடைய சக்தியே வேறு நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு அவனைப் பற்றி தெரிந்து கொண்டு, நிச்சயம் சிவராத்திரியை பின் கொண்டாடினால், நிச்சயம் அவனுடைய சக்திகளும் உங்களுக்கு கிட்டும். அனைத்தும் சாதிக்கும் வல்லமையும் பிறக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஏன் சிவராத்திரி அன்னைக்கு இராவணனைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்னா, அவரோட சக்தியே வேற! அந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டு நீங்க சிவராத்திரியைக் கொண்டாடுனீங்கன்னா, ஈசனோட அருளோட சேர்த்து இராவணனோட ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். அவரோட அந்த மகா சக்தி உங்களுக்குள்ள வரும்போது, இதுவரைக்கும் தெரியாத பல உண்மைகள் உங்களுக்குத் தானாவே தெரிய ஆரம்பிக்கும். இராவணன் இதையெல்லாம் சுயநலத்துக்காகச் செய்யல; 'இந்த உலகம் இருக்குற வரைக்கும் தன்னோட பேரும், தான் கொண்டு வந்த இந்தச் சிவராத்திரி வழிபாடும் நிலைச்சு நிக்கணும், அது மத்தவங்களுக்கும் பலன் தரணும்' அப்படிங்கிற ஒரு உயர்ந்த எண்ணத்துலதான் செஞ்சாரு.")
அடியவர் :- சுயநலமா நினைக்கல அவர். சிவராத்திரி இருக்கணும்னா தான் உயிரோட இருக்கணும்ன்றதுக்காக, இந்த உலகம் புகழ் இருக்கிற வரைக்கும், நான் இருக்கணும்ன்றதுக்காக, சிவராத்திரியை வந்து அவர் கொண்டாட வச்சிருக்கிறார்.
=============================================
# ஈசனிடம் சண்டையிட்டு, என் பிள்ளை முருகப்பெருமானை என்று, முதுகு மேல் அமர்த்தி,முருகனுக்கு அதாவது சந்தோஷத்தை ஊட்டியவர் இராவணன்.
=============================================
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய ஆனாலும் முருகன் அனைவருக்கும் தெரிகின்றது. ஆனால் பின் எது என்று கூற அவனுடைய தந்தை எது என்று புரிய பின் எவை என்று கூற அறிய. அனைவருக்கும் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் தன் பின் பிள்ளை போலே என்று நிச்சயம் தன்னில் ஈசனிடம் சண்டையிட்டு என் பிள்ளை என்று இவ்வுலகத்தை நிச்சயம் முதுகு மேல் அமர்த்தி, பின் நிச்சயம் தன்னில் கூட முருகனுக்கு பின் அதாவது சந்தோஷத்தை ஊட்டியவன் இராவணன். பின் இதைப்பற்றி யாருக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("முருகப்பெருமானையே ஒரு செல்லக் குழந்தையா பாவிச்சவர் நம்ம இராவணன் தான், ஆனா இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது! இராவணன் அந்த முருகனைத் தன் மடியிலயும் முதுகுலயும் வச்சு கொஞ்சினது மட்டும் இல்லாம, அந்தச் செல்லக் குழந்தையைத் தன் முதுகு மேல உட்கார வச்சுக்கிட்டே இந்த உலகம் முழுக்கச் சுத்தி வந்திருக்காரு.")
============================================
# “ஓம் ரவண பவச வசி வசி” - இராவணேஸ்வரர் மூல மந்திரம் , நிச்சயம் அனைத்தும் நடக்கும்.
============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவனுடைய மூல மந்திரம் கூட “ ஓம் ரவண பவச வசி வசி” என்பது நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓம் ரவண பவச வசி வசி , ஓம் ரவண பவச வசி வசி ….இது வந்து சொன்னாலே என்ன ஆகும்? முருகன் அருளும் கிட்டும் இராவணன் அருளும் இராவணன் அருளும் கிட்டும்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பின் மந்திரங்கள் பின் அதாவது அதன் பொருளும் கூட பின் நன்கு பின் உணர்ந்து உச்சரித்தால்தான் மதிப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- ம்… அப்ப அதை மந்திரங்கள்னு நம்ம சொல்றதெல்லாம் ஒன்னும் பெருசு இல்ல. அதன் பொருள் உணர்ந்து அதன் பொருள் உணர்ந்து சொல்லணும்.
========================================
# இராவணேஸ்வரர் சந்தோசம் அடையும் மந்திரம் - “ஓம் ரவண பவச வசி வசி”
========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட பின் இராவணன் அதாவது ஈசனின் பின் மைந்தன் என்று நிச்சயம் பின் அனைவருக்கும் தெரியும் முருகன். ஆனாலும் பின் “ரவண” எவை என்று கூற “பவச” பின் “வசி வசி” என்று சொன்னால் யாரோ ஒருவன் சொல்கின்றான் பின் நிச்சயம் தன்னுடைய தன் மகன் என்று சந்தோஷம் அடைவான் நிச்சயம் தன்னில் கூட இராவணனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இராவணன் எப்படி மகிழ்ச்சி அடைவார்? யாரோ ஒருத்தன் என் பையன் முருகன் குறித்து யாரோ சொல்றாருன்னு சொல்லிட்டு சந்தோஷம் அடைவாராம் இராவணர்.
=======================================
# இன்னும் சிவராத்திரி மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் இராவணன் வாழ்ந்து கொண்டுதானே இருக்க வேண்டும்?
=======================================
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கின்றான் இராவணேஸ்வரன் சிவராத்திரி மக்கள் கொண்டாடுகின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுது இராவணன் வாழ்ந்து கொண்டுதானே இருக்க வேண்டும்?
அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் கைதட்டல்கள் )
அடியவர் :- நிச்சயமா அதான் கரெக்ட். கரெக்ட் சிவராத்திரி இருந்தா, இராவணன் இருக்காரு. அப்ப சிவராத்திரி இருந்தால் இராவணன் இருக்கிறார். இராவணனும் இன்னும் இருக்கிறார் அர்த்தம். இன்னும் இருக்கிறார்
குருநாதர் :- மறையலாம் ஆனாலும் அவன் புகழ் நிச்சயம் பின் மறையாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் மறையலாம் ஆனால் அவர் புகழ் மறையாது.
குருநாதர் :- பின் உயிரும் மறையாது உடம்பும் மறையாது
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உயிரும் மறையாது. மறையல இன்னும் இருக்காது உடம்பும் மறையாது. உடம்பும் மறையாது. அதை என்ன புதைச்சு வச்சிருக்கிறார் எங்கேயோ வந்து இதுக்காகத்தான் புதைச்சு வச்சிருக்கிறார் போல.
===========================================
# உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கின்றது.
# அத்திறமையை நீங்கள் வெளிகாட்டிக் கொள்ளவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் கஷ்டமே . ( அதாவது உங்கள் திறமையை வைத்து புண்ணியம் செய்யவேண்டும் என்று பொருள் கொள்க )
===========================================
குருநாதர் :- எது என்று புரிய ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் நிச்சயம் உங்களிடத்திலும் கூட ஒவ்வொரு பின் திறமை இருக்கின்றது. அத்திறமையை நீங்கள் வெளிகாட்டிக் கொள்ளவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் கஷ்டமே .
சுவடி ஓதும் மைந்தன் :- ("ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஏதோ ஒரு தனித்துவமான திறமை ஒளிஞ்சுக்கிட்டுதான் இருக்கு. அந்தத் திறமையை நீங்க சரியா அடையாளம் கண்டு, அதை வெளியே கொண்டு வந்தா மட்டும்தான் வாழ்க்கையில சக்சஸ் ஆக முடியும். அப்படி இல்லாம, நமக்கான அந்தத் திறமையை அப்படியே உள்ளேயே போட்டு மூடி வச்சிருந்தா, வாழ்க்கை முழுக்கப் போராட்டமும் கஷ்டமும்தான் மிஞ்சும். உங்ககிட்ட இருக்குற அந்த ஒரு ஸ்பெஷல் விஷயத்தை வெளிகாட்டுறதுதான் உங்க வெற்றிக்கு உண்டான வழி!")
===================================
# ஏன் கூட்டுப் பிரார்த்தனையை எடுத்து வந்தார்கள் ?
===================================
குருநாதர் :- அதனால்தான் இவ் கூட்டு பிரார்த்தனை பின் உருவாக்கி நிச்சயம் தன்னை கூட அனைத்து பின் ஞானிகளைப் பற்றி தெரிந்து கொண்டு அவ் ஞானிகளுக்கு கூட வந்தால் இவ்வுலகத்தை காக்கலாம் என்றெல்லாம். பின் காத்து நீங்களும் தெரிந்து கொண்டு, நிச்சயம் பின் எவை என்று அறிய மற்றவர்களுக்கு கூட பின் சொல்லி, நிச்சயம் துன்பத்தையும் நீக்கி விடலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அதனாலதான் இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை ரொம்ப முக்கியம்னு சொல்றது. ஒரு இடத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, மகா ஞானிகளைப் பத்திப் பேசி அவங்களை நினைச்சாலே, நம்ம மனசுல இருக்குற கஷ்டங்கள் எல்லாம் மெல்ல மெல்லக் கரைய ஆரம்பிச்சிரும். ஞானிகளோட வாழ்க்கையை நாம பேசப் பேச, நம்ம மனசுல ஒரு பெரிய தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்துட்டாலே போதும், உங்களுக்குள்ளயே ஒளிஞ்சுக்கிட்டு இருக்குற அந்த மகா ஆற்றலை நீங்களே உணர ஆரம்பிச்சிருவீங்க. அந்த ஆற்றலை வெளியே கொண்டு வர்றதுக்குத் தேவையான பலமும் நம்பிக்கையும் இந்த மாதிரி கூட்டுப் பிரார்த்தனை மூலமா உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!")
===========================================
# நிச்சயம் உங்கள் ஆற்றல் என்ன என்று சிந்தியுங்கள்? வெற்றி நிச்சயம்.
===========================================
குருநாதர் :- நிச்சயம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒரு ஆற்றல் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட. இதனால் அவ் ஆற்றலைப் பற்றி எப்பொழுது தெரிந்து கொள்வீர்களோ அப்பொழுதுதான் வெற்றி. அப்பொழுதுதான் கஷ்டங்கள் நீங்கும். இல்லையென்றால் பின் நிச்சயம் பின் எவ்வாறு எல்லாம் , ஒரு பழமொழி உண்டு தெருத்தெருவாக அலை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு பழமொழி உண்டு தெருத்தெருவா அலையனும். உண்மை நிலை தெரியாம நீங்க வந்து எவ்வளவு இறைவனை வணங்கினாலும் முடியாது
===============================
# சீரடி சாயி பாபா குறித்த வாக்கு
===============================
குருநாதர் :- இதோ பின்னால் இருக்கின்றானே (சீரடி சாயி பாபா) இவனும் உணர்ந்தவன் தான் அனைத்தும் கூட
=========================================
# ஞானிகள் தான் வருங்காலத்தில் காப்பாற்ற வேண்டும் இவ்வுலகத்தை.
=========================================
குருநாதர் :- நிச்சயம் இவ் ஞானியை பற்றியும் மக்களுக்கு ஒன்னும் ஒன்றும் புரியவில்லை. இவனைப் பற்றியும் யான் சொல்வேன் வருங்காலத்தில். ஏனென்றால் ஞானிகள் தான் வருங்காலத்தில் காப்பாற்ற வேண்டும் நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தை.
=============================================
# ஞானிகள் எவ்வாறெல்லாம் மந்திரம் சொல்லி உடம்பை இரும்பாக ஆக்கினார்களோ, எவ்வாறெல்லாம் சக்திகள் படைத்துள்ளார்களோ, அந்த சக்தியும் உங்களுக்கு அளித்து,உங்களையும் காத்து, இவ்வுலகத்தையும் காத்து அருள்வார்கள்.
=============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட உலகத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஞானிகள் நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறெல்லாம் மந்திரம் சொல்லி இரும்பை அதாவது உடம்பை இரும்பை ஆக்கினார்களோ, அவர்கள் பின் அவர்கள் நிச்சயம் தன்னில் கூட ஞானிகளை பற்றி சொல்லி, நிச்சயம் அவர்கள் எவ்வாறெல்லாம் நிச்சயம் சக்திகள் படைத்துள்ளார்களோ, அந்த சக்தியும் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு அளித்து, நிச்சயம் தன்னில் கூட பின் உங்களையும் காத்து, இவ்வுலகத்தையும் காத்து அருளுவார். அதனால் தூங்கிக் கொண்டிருக்கும் நிச்சயம் உயிர்களை யான் தட்டி எழுப்புவேன் வருங்காலத்தில்.
=========================================
# அன்பு குருநகர் அகத்திய மாமுனிவர், தர்மத்தை நிலைநாட்ட ஜீவசமாதியில் உள்ள ஞானிகள் தட்டி எழுப்பி நம்மை காப்பாற்றுவார்கள்.
=========================================
குருநாதர் :- ஏனென்றால் தர்மத்தை நிலைநாட்டிவிட்டு போதும் மனிதன் கடைபிடித்துக் கொள்வான் என்று அமைதியாக போய்விட்டார்கள் ஆனாலும் இன்று தர்மம் தலைக்களாக போய்க்கொண்டிருக்கின்றது ஒவ்வொரு இடத்திலும் கூட பின் யான் சொல்லி அவர்களை தட்டி எழுப்பி காப்பாற்றுவேன் நிச்சயம் தன்னில் கூட
அடியவர் :- நம்ம கூப்பிட்டா ஞானிகள் வருவாங்க. ஆனா நம்ம கூப்பிடக்கூடிய நிலைமையில நம்ம இல்ல. அதனால குருநாதர் நமக்காக இறங்கி, கூப்பிட வைக்கிறார் ரொம்ப. புரியுதுங்களா?
========================================
# இறைவன் உயிரோடு இருந்தால் மட்டும்தானே படையலை நீங்கள் சமர்ப்பிப்பீர்கள்?
=======================================
========================================
# ஏன் பக்தி உள்ளவர்களுக்கே கஷ்டம்?
========================================
குருநாதர் :- இதனால் எதை என்று கூட ஏன் பின் எவை என்று அறிய அறிய படையலை நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு பின் சமர்ப்பிப்போம் என்று நிச்சயம் தன்னில் கூட, உயிரோடு இருந்தால் மட்டும்தானே நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் சொல்லுங்கள் நீங்களே?
சுவடி ஓதும் மைந்தன் :- ("சாப்பாட்டை எடுத்துட்டு வந்து ஏன் சாமிக்கு முன்னாடி படைக்கிறோம்? அந்தப் பரம்பொருள் இங்க உயிரோட நிஜமாவே இருக்கிறார்னு நம்புறதாலதானே அப்படிச் செய்றோம்! அவர் இருக்கிறார்ங்கிற அந்த உண்மையான உணர்வு நமக்குள்ள இருந்தா மட்டும்தான், 'இதை அவருக்குச் சமர்ப்பிக்கணும்'ங்கிற எண்ணமே வரும். அவர் இல்லைன்னா நாம ஏன் படைக்கப்போறோம்? யாரோ சொன்னாங்கன்னு செய்யாம, 'ஈசன் இங்கேயே இருக்கிறார், அவர் முன்னாடிதான் நாம இருக்கோம்'ங்கிற அந்த உயிர்ப்பான எண்ணம் வரும்போதுதான் அந்தப் படைப்புக்கே ஒரு அர்த்தம் கிடைக்குது. நாம படைக்கிற அந்த உணவை விட, அவர் மேல நாம வச்சிருக்க அந்த 'உயிருள்ள' நம்பிக்கைதான் அங்க ரொம்ப முக்கியம்.")
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் பக்தி உள்ளவர்களுக்கே கஷ்டம் ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏதோ படைத்துவிட்டு இவன் என்ன பார்க்க போகின்றானா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (""பக்தியில இருக்குற பெரிய கஷ்டமே இதுதான். இறைவன் உயிரோட இருக்காருன்னு நம்புறோம், அவருக்குச் சாப்பாடெல்லாம் படைக்கிறோம்; ஆனா, அப்படிப் படைச்சு முடிச்ச அடுத்த நிமிஷமே ஏதோ ஒரு தப்பான எண்ணத்துலயோ இல்ல ஒரு தப்பான வேலையிலயோ இறங்கிடுறோம். அப்போ அந்த இறைவன் என்ன நினைப்பாரு? 'என்னடா இது, ஒரு பக்கம் எனக்குச் சோறு போடுற, நான் இருக்கேன்னு காட்டுற... ஆனா இன்னொரு பக்கம் நான் இல்லாத மாதிரி தப்பு பண்றயே!'ன்னு அவர் கேக்குற மாதிரி ஆகிடும். ஒரு பக்கம் 'உண்டு'ன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் 'இல்லை'ங்கிற மாதிரி நடந்துக்கிறதுதான் மனுஷனோட எல்லா கஷ்டத்துக்கும் காரணம். மனசும் செயலும் ஒண்ணா இல்லாம இருக்குற அந்த முரண்பாடுதான் நம்மளத் துயரத்துல தள்ளிடுது.")
=====================================
# அனைத்தும் தெரிந்து கொண்டு உங்களை வெல்வீர்களாக.
=====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகத்தில் அனைத்தும் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் உங்களை வெல்வீர்களாக. இன்னும் இராவணனை பற்றி சொல்லப் போகின்றேன்.
==========================================
# இவ் சிவராத்திரி ரகசியங்கள் அனைத்தும் குருநாதர்தான் சொல்ல வேண்டும் என்பதே நிச்சயம் தன்னில் இறைவனின் தீர்ப்பு.
==========================================
குருநாதர் :- ஏனென்றால் சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட தெரிந்து நிச்சயம் பின் அனைத்தும் பின் அனைவருக்கும் செல்லட்டும் என்பது இராவணனின் இதை பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். இதனால் நிச்சயம் தன்னில் கூட, யான் சொல்ல வேண்டும் என்பதே நிச்சயம் தன்னில் தீர்ப்பு. ஏனென்றால் என்னை வந்து வந்து தொல்லைகள் கொடுத்துக்கொண்டே இருப்பான் எப்போதும் இருந்தே பின் இராவணேஸ்வரன்.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
===========================================
# இராவணேஸ்வரர் ஒளித்து வைத்துள்ள ரத்தினங்கள்
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவன் இவன் நாட்டிற்காக என்ன ஏது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூற, பின் அதாவது மந்திரம் சொன்னால் ரத்தினங்கள் பல பல உதிர்ந்து எதை என்று கூற பின் பல வழியில் கூட புதைத்து வைத்துள்ளான் நிச்சயம் தன்னில் கூட. எங்கெங்கு ஏது என்று நிச்சயம் பின் அதாவது கஷ்ட காலங்கள் வந்தால் மனிதன் எடுத்துக்கொள்ளட்டும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இராவணன் எத்தனையோ ரத்தினங்களையும், அபூர்வமான செல்வங்களையும் ஆங்காங்கே பூமியில புதைச்சு வச்சிருக்காரு. இதை ஏன் இப்ப நான் உங்ககிட்ட சொல்லணும்னா, அவர் இதையெல்லாம் தன்னோட சுயநலத்துக்காகப் பண்ணல; முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காகத்தான் செஞ்சிருக்காரு. மனுஷன் கஷ்டப்படுற காலத்துல, அவனுக்கு ஏதாவது ஒரு உதவி கிடைக்கணும், அவன் மறுபடியும் எந்திரிச்சு சந்தோஷமா வாழணும்னு ஒரு தீர்க்கதரிசனத்தோட இதையெல்லாம் சேர்த்து வச்சிருக்காரு!")
======================================
# இராவணேஸ்வரன் குழந்தையை, முருகப்பெருமானை பற்றி ஒரு பாடல் பாடுங்கள்
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவையாவும் நிச்சயம் சொல்வேன். இப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவன் பாசமிகுந்த பின் குழந்தையை பற்றி நிச்சயம் ஒருமுறை பாடலை பாடுங்கள்.
இலங்கை கூட்டுப் பிரார்த்தனை சென்ற மதுரை அடியவர் :- ("நிஜத்தைச் சொல்லப்போனா, ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே என் மனசுக்குள்ள ஒரு வருத்தம் ஓடிக்கிட்டே இருந்தது. 'மதுரையிலயும் திருவண்ணாமலையிலயும் இவ்வளவு விஷயம் சொன்ன குருநாதர், இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில சிவராத்திரியைப் பத்திச் சொல்லாம விட்டுடுவாரோ, அது தெரியாமலேயே போயிடுமோ'ன்னு கவலைப்பட்டேன். ஆனா, சிவராத்திரி வர்றதுக்கு முன்னாடியே குருநாதர் அதைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாரே! அதுமட்டும் இல்லாம, இராவணனோட அந்தப் பாசமிகு குழந்தையான முருகனைப் பத்திச் சொல்லும்போது எனக்கு அப்படியே புல்லரிச்சுப் போச்சு. 'இராவணனுக்கு அவ்வளவு செல்லமான குழந்தை அந்த முருகன்... அதனால முதல்ல முருகனைப் பத்தி ஒரு பாட்டுப் பாடுங்க, அப்புறமா நான் மறுபடியும் இராவணனைப் பத்தித் தொடர்றேன்'னு குருநாதர் சொன்னது, அவர் நம்ம மேல வச்சிருக்க பெரிய கருணையைத்தான் காட்டுது!")
சுவடி ஓதும் மைந்தன் :- ( "நிஜத்தைச் சொல்லப்போனா, இராவணனைப் பத்தியும் இந்த சிவராத்திரி உருவான கதையைப் பத்தியும் இங்க மட்டும்தான் இவ்வளவு தெளிவா வெளிய வருது. இந்தியாவுல நடக்குற மத்த கூட்டுப் பிரார்த்தனைகள்ல அகத்தியர் வேற மாதிரி விஷயங்களைச் சொல்லுவார், ஆனா இங்க சொல்லப்படுற விதம் அப்படியே வேற! சிவராத்திரிங்கிற ஒரு விஷயமே இங்கிருந்துதான் ஆரம்பிச்சிருக்கணும்னு எனக்குத் தோணுது. அதனாலதான், இந்த இடத்தோட முக்கியத்துவத்தை நாம முதல்ல தெரிஞ்சுக்கணும்னு அந்த விதிப்படியே குருநாதர் இங்க வந்து இதை நமக்குச் சொல்லிக் குடுக்குறாரு. சிவராத்திரி உருவான அந்த ஆதி இடத்துல இருந்தே அதோட கதையைத் தெரிஞ்சுக்கிறதுதான் முறைன்னு அவர் நமக்கு உணர்த்துறாரு.")
அடியவர் :- இதை அவசர பதிவா போட்டு எல்லோருக்கும் அனுப்பிச்சிருவோம்
பாடகர் :- ( பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்கள் )
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை, சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment