அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3
நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99
அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம், இலங்கை இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3)
குருநாதர் :- எதை என்று அறிய ஒரு மனிதனால் இவ்வளவு நிச்சயம் பின் சதவீதம் தான் நிச்சயம் பின் பின் யோசிக்க வேண்டும் என்று இருக்கின்றது. அதற்கு மீறி நிச்சயம் யோசித்தால் நிச்சயம் தன்னில் கூட அவை நெருப்பிடம் சென்று பின் மனிதன் பின் அழிந்து விடுவான் உடனடியாக .
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு குறிப்பிட்ட அளவுதான் மனுஷன் யோசிக்கணும். கெட்டது வந்து அதிகமா யோசிச்சீங்கன்னா என்ன ஆகும்? நெருப்புல அழிஞ்சிருவான். அது என்ன ஆகும்? வந்து இதனோட வந்து, ஈர்க்கு கிரகம் வந்து, இது என்ன பண்ணும்? அங்க நெருப்புல ஈடுபட்டு இது க்ளோஸ் ஆயிடுவோம்.
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மனிதன் அதாவது பின் இவை தன் பின் யோசிக்கவே நிச்சயம் ஒரு 11 வருடம் தான் நிச்சயம் மனிதனுடைய வாழ்க்கையே பின் உயர்வாக இருப்பது. பின் அல்லது பின் தாழ்வாக இருப்பது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( 11 வருட கால சுழற்சி:- வாழ்க்கையின் உயர்வு மற்றும் தாழ்வு நிலைகளுக்கு 11 வருடங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஒருவர் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்திலேயே இருக்க முடியாது, அதே சமயம் 11 ஆண்டுகளுக்கு மேல் தாழ்விலேயே இருக்கவும் முடியாது. இந்த 11 வருட கால கட்டமே ஒரு மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கும் மிக முக்கியமான சுழற்சியாகும்.
செயல்களும் அதன் விளைவுகளும்:- இந்த 11 வருட காலத்தில் ஒருவர் எவ்வளவு சரியாக நடக்கிறாரோ, அதைப் பொறுத்தே அடுத்தகட்ட வாழ்க்கை அமையும். இந்த காலக்கட்டத்தில் நேர்மையாகவும் சரியாகவும் இருப்பவர்களுக்குப் பெரிய அளவில் நன்மைகள் நடக்கும். மாறாக, இந்த 11 ஆண்டுகளில் தீய செயல்களில் ஈடுபட்டால், 12 அல்லது 13-வது ஆண்டில் அவர்களின் வாழ்வு முற்றிலும் சரிந்துவிடும். 11 ஆண்டுகள் மட்டுமே ஒருவருக்கான 'கேரண்டி' காலம், அதன்பின் எல்லாமே மாறிவிடும் என்பது விதியாகும்.)
=========================================
# சித்தர்கள், இராவணனுக்குப் பல ரகசியங்களை கற்றுக்கொடுத்தார்கள்
# இராவணேஸ்வரர் உலகிற்கு சொல்லாமல் விட்டு சென்ற பல ரகசியங்கள்
=========================================
குருநாதர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இன்னும் இன்னும் நிச்சயம் பின் பல ரகசியங்கள். அதனால்தான் மனிதனுக்கு சொன்னாலும் பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் இப்பொழுது எதை என்று அறிய இதனால் மனிதனிடத்தில் அனைத்து திறமைகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவை தன் அதாவது பின் இராவணன். நிச்சயம் தன்னில் கூட யாங்கள் இராவணனுக்கு பல வித்தைகள் கற்றுக் கொடுத்தோம்.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் அதை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு பின் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மை செய்து கொண்டிருந்தான். ஆனாலும் பின் இராவணனுக்கு தெரிந்துவிட்டது. நிச்சயம் பின் அதாவது நம் வரும் பின் காலத்தில் யாரும் மக்கள் நல்லது பின் நிச்சயம் நினைக்கப் போவதில்லை. ஒருவன் ஒருவன் அழிப்பான். அதுமட்டுமில்லாமல் சுயநலத்திற்காக நிச்சயம் பின் அனைத்தும் பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்வான் என்று பல ரகசியங்கள் சொல்லாமல் விட்டு விட்டான்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய? இதனால் நிச்சயம் மீண்டும் பின் இவ் தேசத்திற்கு பின் அழிவு என்பது அவனுக்கு நன்றாக தெரிந்துவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பியும் இந்த தேசத்துக்கு அழிவு நன்றாக புரிந்துவிட்டது.
====================================
# அடுத்த அழிவு மூலம் - மதச்சண்டை
====================================
குருநாதர் :- நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய பின் மதத்தினாலே அழிவுகள். நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் பின் அதாவது சொல்ல வந்தோம். அனைவரும் ஒன்றே என்று. பின் ஈசனாயினும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் ஒன்று. அடுத்து என்ன சண்டைகள் வரும் ? மதச்சண்டை.
குருநாதர் :- இறைவனே சொல்லவில்லை யான் பெரியவன் என்று. ஆனால் மனிதன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். எவ்வளவு கேடானவன் என்று பார்த்துக் கொள்ளுங்கள் மனிதன்
குருநாதர் :- ஆனால் ஞானிகள் வந்து வந்து அனைவரும் ஒன்றே, ஒன்றே என்றெல்லாம். அனைவரும் ஒன்றாக ஒரே குலம். பின் எதை என்று புரிய? பின் எவை என்று புரிய? நிச்சயம் ஒரே தெய்வம் என்று தான் சொன்னார்கள். ஆனால் அதை கூட ஏற்கவில்லை. மனிதன்
குருநாதர் :- அப்பொழுது எதை என்று அறிய? நிச்சயம் இறைவனும் கூட ஓர் பின் நிச்சயம் எல்லைக்குத்தான். பின் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அவ் எல்லை தாண்டி சென்றுவிட்டால் பின் அழிவில்தான். நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் தான் ஒரு எல்லைக்கு வரைக்கும் தான் பார்ப்பார். அப்படின்னா என்ன பண்ணுவாரு? அடிச்சு விட்டுருவாரு. அடிச்சு போட்டு, அடிச்சு போட்டு போயிட்டு வரும்.
=========================
# பாதி பூமி அழிந்துவிட்டது
=========================
குருநாதர் :- அப்பனே பாதி அழிந்துவிட்டது. நிச்சயம் பாதிதான் இருக்கின்றது. இப்பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட புவி தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த புவி தண்ணீர் 100 பங்கு இல்ல. 50% அழிஞ்சு போச்சு. மக்கள் அழிஞ்சு, கடல்ல போயிடுச்சு. இன்னும் 50% தான் இருக்குது.
குருநாதர் :- நிச்சயம் இதை கூட மனிதா நீ வைத்துக்கொள். எப்படி நடத்துகிறாய் என்று மனிதனிடத்தில் இறைவன்
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில். பின் அதாவது இறைவன் பாவம் என்று நிச்சயம் தன்னில் கூட மனிதனிடத்தில் கொடுத்துவிட்டான். நிச்சயம் தன்னில் கூட பின் வாழ்ந்து பாருங்கள் என்று. ஆனால் மனிதனோ என்னென்ன செய்கின்றான் பாருங்கள். இறைவன் பேச்சை கேட்கின்றானா என்ன?
குருநாதர் :- நிச்சயம். பின் அதாவது வரம் கொடுத்தவனே ஒரு பழமொழி உண்டு. பின் நிச்சயம் தன்னில் கூட ஒரு பழமொழி உண்டு.
அடியவர் :- வரம் கொடுத்தவன் தலையில கை.
சுவடி ஓதும் மைந்தன் :- (அது மாதிரி நிலைமை கலியுகத்தில் ஆயிடுச்சு. இறைவன் மனுஷன் பாவம், வாழ்ந்துக்கோங்க. எப்படியாவத என்று. ஆனால் மனுஷன் கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தி. நான்தான் கடவுள்னு சொல்லிட்டு. ….)
குருநாதர் :- அப்ப நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய. இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழிவுகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால். அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அவ் அழிவுகள் தாக்காமல் இருக்க. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஏதோ பின் விதவிதமாக எவை என்பதை அப்பனே நிச்சயம் இறைவன் செய்வானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால்தான் எல்லையில் மீறிக்கொண்டு போயிருக்குது. மனுஷன் கையில. அதனால ஏதோ ஒரு ரூபத்துல இறைவன் வந்து மக்களை கண்டிப்பா காப்பாத்துவாரு.
============================================
# அப்பனே, மிக மிகப்பெரிய பின் கருணை படைத்தவன்.
============================================
குருநாதர் :- அப்பனே, இறைவன். அப்பனே, மிக மிகப்பெரிய பின் கருணையை படைத்தவன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதாவது இதைத்தான் சொல்லிக் கொண்டிருப்பேன் அப்பனே. ஒரு தாயவள் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே நிச்சயம் தன் பிள்ளை பின் அதாவது தவறு செய்தாலும், அப்பனே, பின் நிச்சயம் அதாவது பின் பிள்ளை. பின் நீ எங்கேயாவது நிச்சயம் தன்னில் சென்றுவிடு என்று சொல்வதில்லை. பின் அணைத்துக் கொள்வாள்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தாய், எவ்வளவு தன் பிள்ளையை தவறு செய்தாலும், அணைத்துக் கொள்வாள். அதே மாதிரிதான் இறைவன். இறைவன் கூட அதே மாதிரிதான். அது மாதிரி மிகப்பெரிய கருணை படைத்தவர்.
==============================================
# இறைவனின் சக்தி கலியுகத்தில் அதிகம் காணப்படுகின்றது.
# இறைவனின் சக்தியை மனிதன் புரிந்து கொள்ளவே மாட்டான்.
=============================================
குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பல வழியில் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு புரிந்து புரிந்து இதனால் பின் இறைவனின் அதாவது கலியுகத்தில் இறைவனின் சக்தி எதை என்று புரிய மீறி காணப்படுகின்றது. ஆனால் நிச்சயம் அசக்தியை மனிதன் புரிந்து கொள்ளவே மாட்டான்.
குருநாதர் :- நிச்சயம். தன்னில் கூட அழுக்குகள்தான் எது என்று கூறக்கூடும். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவை என்று அறிய, அறிய அப்பனே, எவை என்று புரிய. நிச்சயம் பின் பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் மாந்திரீகங்களாக
சுவடி ஓதும் மைந்தன் :- அழுக்கில்தான் மாந்திரீகம். அழுக்குன்னா என்னது? வந்து நம்ம யோசிக்கிறோம் பாருங்க. கெட்ட கெட்டதெல்லாம் வந்து அதுதான் மாந்திரீகம்.
=======================================
# எச்சரிக்கை - தீய செயல்கள் செய்பவர்களுக்கு தண்டனைகள்
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தீய செயல்களை நினைத்துக் கொண்டான் அல்லவா? பின் இறைவன் நிச்சயம் தன்னில் கூட அத்தீய செயல்கள் நிச்சயம் உடனடியாக பின் பலன் கொடுப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் மாந்திரீகம். தீய செயல்கள் தான் மாந்திரீகம். தீய நினைச்சீங்கன்னா என்ன பண்ணுவாங்க? உடனே இறைவன் கொடுத்துருவாரு. சீக்கிரம் நடக்கும்.
அடியவர் :- கெட்டது நினைச்சால், சீக்கிரம் நடக்கும்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவனை இவ்வுலகத்திலிருந்து பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று பின் அழித்துவிட்டு நல்லவர்களை காக்க வேண்டும் அல்லவா? இனிமேல் அதுதான் செய்யப் போகின்றான் இறைவன். சொல்லிவிட்டேன்,
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டவனுக்கு உடனே கொடுத்து, உடனே அழித்துவிடுவார்.
====================================
# இறைவனின் எண்ணம்
# நல்லவர்கள், அவர்களை சார்ந்தோரும் நன்றாக இருக்க வேண்டும்.
====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நல்லவர்கள். நிச்சயம் தன்னில் கூட பின் கஷ்டப்பட்டாலும், நிச்சயம் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவிகளாக இருக்க வேண்டும் அல்லவா? நிச்சயம் தன்னில் கூட பின் ஏன்? எதற்கு? நிச்சயம் தன்னில் கூட பின் அவர்களும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களை எதை என்று புரிய அவர்களை சார்ந்தோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் பின் இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நல்லவர்கள் கஷ்டப்பட்டாலும், இறைவன் வாழ வைப்பார். வாழ வச்சு , மத்தவங்களையும் உங்களுக்கும் கொடுத்து மெதுவாக கொடுத்து கொடுத்து…
குருநாதர் :- ஆனாலும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எவை என்று புரிய இன்னும் இன்னும் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் சொல்லி சொல்லி பக்குவங்களை பின் ஏற்படுத்தி சொன்னால் நீங்கள் விரும்பியதை அடைந்து விடலாம்.
=================================================
# கேதுவானவன் நன்றாக இருந்தாலே , கேட்டதெல்லாம் கிடைக்கும்.
=================================================
குருநாதர் :- நிச்சயம் ஏன் சிலருக்கு பின் நிச்சயம் தன்னில் கூட பின் விரைவில் நிச்சயம் நினைப்பதனால் நடக்கின்றது என்பதற்கு நிச்சயம் தன்னில் கூட ஒரு எடுத்துக்காட்டு. கேதுவானவன் நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக. நிச்சயம் தன்னில் கேது எவை என்று கூறும் பின் நன்றாக இருந்தாலே கிரகங்கள் எதை என்று புரிய? அக்கிரகம் நன்றாக இருந்தாலே பின் கேட்டதெல்லாம் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்போ கேது ஒரு மனுஷனுக்குநல்லா இருக்கிறதோ, அப்ப என்ன ஆகும்? நல்லது நடக்கும், நினைச்சதெல்லாம் நடக்கும்.
==============================================
# ஏன் நல்லவர்களுக்கும் நினைப்பது நடக்கவே இல்லை?
==============================================
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் கேதுவானது. நிச்சயம் தன்னில் எதை என்று கூற, மனிதன் கெட்டது நினைத்து நினைத்து, நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற, எவை என்று கூற, நிரம்பிவிட்டது. அதனால்தான் மனிதனுக்கு கலியுகத்தில் பின் அதாவது நல்லவர்களுக்கும் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட பின் நினைப்பது, பின் நன்றாக நினைப்பது நடக்கவே இல்லை. பாருங்கள், பார்த்துக் கொள்ளுங்கள் நீங்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் மனுஷன் நினைச்சு கெட்டதை நினைச்சு, நினைச்சு, நினைச்சு, கேதுவானது என்ன ஆயிடுச்சு? அழுக்காயிடுச்சு. அப்ப நல்லவர்கள் நினைக்குது என்ன ஆகுது? நல்லவர்கள் நினைப்பது நடக்கவே இல்லை.
=================================
# வாழ்வில் நினைப்பதை நடக்கவைக்கும் - திருகேதீஸ்வரம் ஆலயத்தின் பாலாவி தீர்த்த குளம் - https://maps.app.goo.gl/xiYsJnArwkoa1Bm3A
==================================
குருநாதர் :- ஆனால் எத்தனை திருத்தலங்கள் அங்கும் இங்கும் சென்றாலும், பின் இப்பொழுது புரிகின்றதா? ஏன் நடப்பதில்லை என்று? ஆனாலும் நடக்கும். நிச்சயம் தன்னில் கூட எவை என்று கேதுவின் பின் கதிர்வீச்சுக்கள் இங்குதான் பின் அதிகமாக இருக்கின்றது. இங்கு நீராடி நீராடி வழிபட்டுக் கொண்டே இருந்தால், நிச்சயம் நன்றாகும். ஆனாலும் அதற்கும் பாக்கியங்கள் இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா நிச்சயமா, கண்டிப்பா நடக்கும். எப்படி நடக்கும்? இங்க குளிச்சு, தொடர்ந்து குளிச்சு, குளிச்சு இறைவனை சேவித்துக் கொண்டே வந்தால் என்ன ஆகும்? நினைச்சது நடக்கும்.
குருநாதர் :- நிச்சயம் எது என்று புரிய இங்கே சில மூலிகைகள் உண்டு. அதையும் நான் வருங்காலத்தில் காண்பிக்கப் போகின்றேன்.
=======================================
# புத்தர் அமர்ந்த போதி மரத்தின் ரகசியங்கள் - அரசமரம் ரகசியங்கள்.
======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட புத்தனைப் பற்றியும் இங்கு பேச வேண்டும்.
குருநாதர் :- எதற்காக? நிச்சயம் தன்னில் கூட பின் அவன் எதை என்று அறிய? அவ்வமரத்தை பின் நன்றாக பின் நேசித்தான் என்று சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய மரம் என்ன?
அடியவர் :- போதி மரம், போதி மரம், அரச மரம், போதி மரம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் அந்த போதி மரத்தை விரும்பினார்?
அடியவர் :- ஞானங்கள் இருக்கு அதுல
============================================
# அரசமர ரகசியங்கள் - நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அவை நிச்சயம் அப்படியே திருப்பிக் கொடுக்கும் அம்மரம்.
============================================
குருநாதர் :- எதை என்று அறிய அறிய மனிதன் முட்டாளாகவே இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட அங்கு அமர்ந்து தியானம் செய்தால், நிச்சயம் பின் நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு பத்து நாள் இல்லை, 20 நாள் இல்லை, நிச்சயம் வருடக்கணக்கில் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம் பின் அதாவது நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அவை நிச்சயம் அப்படியே திருப்பிக் கொடுக்கும் அம்மரம்.
சுவடி ஓதும் மைந்தன் :- புத்தர் பத்தி நான் இங்க சொல்றேன்றாரு. ஏன் அவர் வந்து அவர் அங்க தவம் செஞ்சாருன்னா என்ன இருக்கும்? திருப்பி கொடுக்கும். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ, திருப்பி கொடுக்கும். உங்களுக்கே அது வந்து திருப்பி தரும், திருப்பி தரும். ஆனா ஒரு நாள் வச்சது வருஷக்கணக்குல இருக்கும், வருஷக்கணக்குல இருக்கும். தியானம் செய்யணும், கஷ்டம் கிடையாது.
குருநாதர் :- அறிந்தும் பின் அங்கு அமர்ந்தால், நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கும் என்பவை எல்லாம் நிச்சயம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த போதி மரத்துல உட்கார்ந்து இருந்தோம்னா, தியானம் செஞ்சோம்னா, அடுத்து என்ன ஆகும்? என்ன நடக்கப்போகிறது தெரியவரும்.
=============================================
# அரசமரத்தின் நல்காற்று உள்புகுந்து, உடம்பில் உள்ள அழுக்குகளை எடுத்து, முதலில் உடம்பு சீராகும் போது தான் நிச்சயம் நல்லெண்ணங்கள் தோன்றும்.
=============================================
குருநாதர் :- நிச்சயம் உண்மை நிலைகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பவை எல்லாம் ஞானங்கள் பெருக்கும். நிச்சயம் தன்னில் கூட நல்காற்று பின் உள்புகுந்து, நிச்சயம் தன்னில் உடம்பில் உள்ள பின் அழுக்குகளை பின் எடுத்து, நிச்சயம் தன்னில் கூட அறிந்து முடிவில் பின் முதலில் பின் உடம்பு சீராகும். பின் அப்பின் அதாவது உடம்பு சீராகும் போதுதான் நிச்சயம் நல்லெண்ணங்கள் தோன்றும்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல என்ன ஆகும்? உடம்பு சீராகும். உடம்பு நல்லாகும். நல்லெண்ணம் கிளீன் ஆகும். அங்க உட்கார்ந்தா என்ன ஆகும்? உடம்பு சீராகும், நல்ல எண்ணம் வரும். அந்த நல்ல எண்ணத்தோட என்ன வரும்? நம்ம நினைச்சது வந்து ஓ, இப்படி எல்லாம் நடக்க போகுது. இப்படி இருந்தாலும் வந்து நடக்கும்னு சொல்றது வந்து என்ன ஆகும்? வந்து எல்லாம் தெரியவரும்.
=======================================
# அரசமரத்துக்கும் , சுரக்கல்லுக்கும் உள்ள தொடர்பு
=======================================
குருநாதர் :- எதை என்று கூற அவ்வமரத்தும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும், நிச்சயம் சுராக்கல், நிச்சயம் தன்னில் உள்ள இருப்பு, அவை தன்னை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மரமானது சுராக்கல்லோட சக்தி இழுக்குது, இழுக்குது. அவர் அங்கேயே போய் உட்கார்ந்துட்டார். யாரு?
அடியவர் :- புத்தர்! ஆஹா!
=========================================
# இராவணேஸ்வரர் சுராக்கல் அருகில் சென்று அமர்ந்து விட்டார்.
# புத்தர் - அரச மரம் அருகில் சென்று அமர்ந்து விட்டார்.
=========================================
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் சுராக்கல் அங்கேயே போய் உட்கார்ந்துட்டார். சுராக்கல் பக்கத்துலயே போன தடவை சொன்னார். சரியா? அப்பொழுது புத்தர் என்ன செய்தார்? சுராக்கல் அதனோட சக்தியை, எது ஈர்க்குதுன்னு கண்டுபிடிச்சிட்டார். அப்ப புத்தர் என்ன பண்ணாரு? அப்ப சுராக்கல் அதனோட சக்தி ஈர்க்குது எது? அரச மரம், அரச மரம்! அவ்வளவுதான். அங்க உட்கார்ந்துட்டா என்ன ஆகும்? எல்லாம் சரியாயிடும், எல்லாம் சரியாயிடும்.
==================================================
# அரச மரத்தை சுற்றச் சொல்ல ரகசிய காரணம்.
# சுரா கல்லிலன் சக்தியை ஈர்க்கும் ஒரே மரம் - அரச மரம்.
# அடியவர்கள் - உடும்பு பிடியாக பயன்படுத்தி கொள்க.
=================================================
குருநாதர் :- இதற்காகத்தான் என்ன குறைகள் இருந்தாலும், நிச்சயம் அதை சுற்றச் சொல்வது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் உங்களுக்கு என்ன குறை இருக்குதோ, அரச மரத்தைச் சுற்றச் சொல்வது.
===========================================
# அரச மர விதைகளையும் உட்கொண்டால் எவ் நோய் வராது
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் அரச விதைகளையும் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் உட்கொண்டால், எவ் நோயும் தீர்ந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த விதைகள் இருக்குல்ல, அதை வந்து உட்கொண்டாலும் நோய் வராது, நோய் வராது, நோய் வராது.
===========================================
# அரச மரம் - அதன் , இலைகளை , விதைகளை , விறகுகளை ஹோமத்துக்கு பயன்படுத்துகின்றார்கள். அதன் புகையை சுவாசித்தாலும், நிச்சயம் நோய்கள் வளராது.
===========================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் அவைதன், அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட, அதாவது நிச்சயம் அதையும் கூட பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் ஹோமத்துக்கு பயன்படுத்துகின்றார்கள். அதன் புகையை பின் சுவாசித்தாலும், நிச்சயம் தன்னில் நோய்கள் வளராது.
சுவடி ஓதும் மைந்தன் :- யாகத்துல ஏன் போடுறாங்க? அதை அது சுவாசிச்சாலும் நோய்கள் வராது.
================================================
# அரச மர இலையை கீழே வைத்து, அதன் மேல் தீபத்தை ஏற்றினாலும், நிச்சயம் நினைப்பது தந்துவிடும் தானாகவே .
================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் அவ் இலையை பின், அதாவது கீழே வைத்து, நிச்சயம் தன்னில் தீபத்தை ஏற்றினாலும், நிச்சயம் தன்னில் கூட பின் நினைப்பது தந்துவிடும். தானாகவே
சுவடி ஓதும் மைந்தன் :- (அந்த அரச இலை வச்சிட்டு, அதுக்கு மேல தீபம் ஏற்றினால் நினைத்தது தானாக தந்துவிடும்.)
====================================================
# அரச மரத்தின் கீழே அமர்ந்தால் நிச்சயம் ஒரு கிரகமும் தாக்காது.
====================================================
குருநாதர் :- நிச்சயம் முதலில் கிரகமும் , அதாவது இப்பொழுது கேட்டானே, நிச்சயம் தன்னில் கூட அவ்ராசிக்கு சரியில்லை, இவ்ராசிக்கு சரியில்லை என்று. அங்கு அமர்ந்து பார். நிச்சயம் தன்னில் கூட ஒரு கிரகமும் தாக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க கேட்டீங்க. இந்த ராசிக்கு சரியில்லை, அந்த ராசிக்கு சரியில்லை என்று. நீங்க அந்த போதி மரத்துல போய், அரச மரத்துல இருந்து உட்கார்ந்து பாருங்க. எந்த கிரகம் உங்களை ஒன்னும் செய்யாது, ஒண்ணுமே செய்யாது.
====================================================
# புத்தர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தது - இந்த பரம ரகசியங்களால் தான். அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் மூலம் இவ் ரகசியங்கள் உலகோருக்கு முதன்முறையாக கலியுகத்தில் வெளியானது.
====================================================
குருநாதர் :- அப்பா, இவையெல்லாம் உணர்ந்து, நிச்சயம் தன்னில் கூட எது என்றதனால்தான் அமர்ந்துவிட்டான் புத்தனே.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவன் பின் சொன்னதில்லை, என்னை வணங்கு என்று சொன்னதில்லை. நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (புத்தர் தன்னை ஒருபோதும் வணங்கச் சொல்லவில்லை; மாறாக, எதனை வணங்க வேண்டும் என்ற ரகசியத்தைப் போதித்தார். "என்னை வணங்காதே, அந்த போதி மரத்தை (அரச மரத்தை) வணங்கு" என்பதே புத்தரின் அறிவுரையாக இருந்தது. ஏனெனில், அந்த மரம் ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு மிகப்பெரிய ரகசியம். ஒருவருக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் அந்த மரமே வழங்கும்.)
=======================================
# அரசமரம் அனைத்து தீய சக்திகளையும் அகற்றிவிடும்
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தீய சக்திகளையும் கூட பின் அகற்றிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தீய சக்தியும் மனுஷனுக்கு என்னதுங்கயா? போயிடும்.
===================================================
# அரச மரத்தின் கீழ் தவம் செய்தால் , அங்கு அமர்ந்து இருந்து வேண்டினால் உங்களுக்கு தேவையானதை நிச்சயம் கிடைக்கும். உலகத்தை வெல்லலாம்.
===================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எத்தனை எத்தனை ஆசைகள் இருந்தாலும், அங்கு சென்றால், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பின் தவங்கள் மேற்கொண்டாலே, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு தேவையானதை நிச்சயம் கிடைக்கும். எது என்று அறிய, நிச்சயம் உலகத்தை வெல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (போதி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்வதன் சிறப்பை விவரிக்கிறார். அந்த மரத்தடியில் தியானம் செய்யும்போது, உலகியல் சிக்கல்கள் அனைத்தும் மறைந்து, "இதுதான் வாழ்க்கை" என்கிற தெளிவு பிறக்கும். எதன் மீதும் பற்றற்ற நிலை உருவாகும். அங்கேயே தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது, காலப்போக்கில் நமக்குள் சக்திகள் பெருகிக்கொண்டே செல்லும். அந்த ஆற்றல் கூடும்போது, வாழ்வில் எதனையும் வெல்ல முடியும் / ஜெயிக்கலாம். )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment