அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 9 ( நிறைவு பகுதி)
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h59m36s
==================================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் விஞ்ஞான வாக்கு
==================================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 9 (நிறைவு பகுதி)
கூட்டுப் பிரார்த்தனை ஓதுவார் அடியவர் :- (பின்வரும் திருஅருட்பா பாடல் அகவல் பாட ஆரம்பித்தார்கள்)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h02m14s
"பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே."
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (பூமி மற்றும் கிரகங்களின் இயக்கம் குறித்த பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறியப் பல யுகங்கள் தேவைப்படும் நிலையில், நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் போன்ற சித்தர்கள் அந்த உண்மைகளை இன்று நமக்கு எளிமையாக வழங்குகின்றனர். இத்தகைய மெய்ஞானத்தை உணர்வது மட்டுமே எதிர்கால வாழ்விற்கு நலம் சேர்க்கும். மனிதனின் 60 முதல் 80 ஆண்டுகால வாழ்நாளை நீட்டிக்கவும், அந்த வாழ்க்கையை முழுமையாக்கவும் சித்தர்களாலும் இறைவனாலும் மட்டுமே முடியும். சித்தர்களின் பெரும் முயற்சியால் நமக்குக் கிடைக்கும் இந்த அருட்செல்வங்களை அனைவரும் மனத்திருப்தியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். திருவருட்பா, திருவாசகம் போன்ற புனிதப் பாடல்களைப் பாடுவது நம்மை நேரடியாக இறைநிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை. சித்தர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இப்பாடல்களைப் பாடினால், நாம் மிக எளிதாக உன்னத நிலையை எட்டிவிடலாம்.)
பாடகர் :- ( திருஅருட்பாவில் பின் வரும் அகவலை பாடினார்கள் )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h05m33s
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்;
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்;
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்;
பொய்மை பேசா திருக்க வேண்டும்;
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்;
மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்;
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்;
உனை மறவா திருக்க வேண்டும்;
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்;
நோயற்ற வாழ்வுநான் வாழ வேண்டும்;
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே!
தன்முகத் துய்யமணி, உன்முகச் சைவமணி, சன்முக தெய்வமணியே.
பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் )
குருநாதர் :- எதை எவை என்று புரிய, இவையெல்லாம் நிச்சயம் தீபத்தை ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட பாடினான். இன்னும் பாடு.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- இதெல்லாம் எப்படி பாடினார் அவர்? வந்து வள்ளலாருக்கு தெரிஞ்சு போச்சு. ஒளி அந்த வந்து, அது வந்து நெருப்புதான். அதுதான் இறைவன்னு சொல்லிட்டு, அப்ப அதை வந்து தீபத்தை ஏத்தி, அந்த தீபத்தின் தீபத்தை பார்த்து, இவர் படிக்கிறார். எப்பா, நான் என்ன தவறு செஞ்சேன்னு எனக்கு தெரியலப்பா. என்ன பண்ணேன் எனக்கு தெரியல. உன்னை நான் கண்டுபிடிச்சிட்டேன். மன்னித்துருப்பா, மன்னித்துருன்னு பாடுறாரு. பாடுங்க, ஐயா. புரியுதா?
பாடகர் :- ( திருஅருட்பாவில் பின் வரும் அருட்பெருஞ்ஜோதி அகவலை பாடினார்கள் - முதல் 164 வரிகள் வரை )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h07m13s
1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
3. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
13. ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
17. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
23. தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
24. தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
27. காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
34. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
43. வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
45. கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
57. பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
64. ஓதியோ தாம லுறவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
69. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
=====================================
( அடியவர்கள் முழு அகவலையும் பின்வரும் தளத்தில் படித்து , இயன்ற பொழுது தீபம் ஏற்றி பாடுங்கள்)
https://www.thiruarutpa.org/thirumurai/v/T316/tm/arutperunjjoothi_akaval
=====================================
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஒரு ஆசிரியர் மாணவனுக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதைப் போல, சித்தர்கள் நமக்கு நல்வழிகளைக் காட்டுகின்றனர்; ஆனால், அந்தப் பாடத்தைப் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவதும் (வாழ்வில் முன்னேறுவதும்), தோல்வி அடைவதும் நம் கைகளிலேயே உள்ளது. நம் வினையால் ஏற்படும் கஷ்டங்களை யாராலும் முழுமையாக துடைத்து விட முடியாது, ஆனால் சித்தர்கள் காட்டும் வழியைப் பின்பற்றி நாம் முயற்சி எடுத்தால், அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். அந்த முயற்சியின் மூலம் நம் குறைகளை நீக்கி, வாழ்வின் உன்னத நிலையை (உச்சத்தை) அடைய முடியும்.)
=============================================
# உங்களுக்கு குறைகளை தானாக நீங்கிவிடும் தைப்பூசம் ரகசியங்கள்
=============================================
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h17m58s
குருநாதர் :- எதை என்று புரிய அப்பா, பின் இன்னொரு ரகசியத்தையும் சொல்கின்றேன். தைப்பூசத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
குருநாதர் :- அறிந்தும், அப்பா, நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் சனி, ராகு, கேது. ஆனால் தைப்பூசம் அன்று மட்டுமே, பின் நிச்சயம் செவ்வாய் என்ற கிரகம் இதனை விட மேல் நோக்கி இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (தைப்பூசம் அன்னைக்கு ஒரு நாள், செய்வாய் கிரகம் , இந்த சனி, ராகு, கேது கிரகங்களை விட செவ்வாய் மேல போயிடும். உயர இருக்கும். அதாவது செவ்வாய் கிரகத்திற்கு பலம் அதிகம். தைப்பூசம் அன்னைக்கு ஒரு நாள்தான் சல்லுன்னு மேல போயிட்டு, சல்லுன்னு கீழே இறங்கும். அன்னைக்கு நீங்க முருகப்பெருமானை வழிபட்டால் அவ்வளவு சிறப்பு. அதுக்குதான் தைப்பூசம் அவ்வளவு விசேஷம்.)
==========================================
# வரும் தைப்பூசம் அன்று தீபங்கள் பன்மடங்கு ஏற்றுங்கள். முருகப்பெருமானுக்கு நிச்சயம் என்ன தர வேண்டுமோ, அவை பின் தாருங்கள்.
===========================================
குருநாதர் :- இதனால் அன்று எதை என்று புரிய, பின் இதனால்தான் முருகப்பெருமானுக்கு எதை என்று அறிய செவ்வாய் ரூபமாக இருப்பதுதான் காரணம். எதை என்று புரிய இதனால் அன்றைய தினத்தில் நிச்சயம் தன்னில் கூட தீபங்கள் பன்மடங்கு ஏற்றி, முருகப்பெருமானுக்கு நிச்சயம் என்ன தர வேண்டுமோ, அவை பின் தாருங்கள்.
குருநாதர் :- அவை மட்டும் ஏன், நிச்சயம் பசும்பாலில் அவனை நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் குளிப்பாட்டுகிறார்கள். நிச்சயம் பசுமாட்டிற்கு அவ்வளவு சக்திகள் இருக்கின்றது.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் பசுமாட்டிற்கு, நிச்சயம் தன்னில் கூட அதில் இருக்கும். நிச்சயம் தன்னில் சில சில நுண்ணுயிர்களும் கூட அப்பிரபஞ்ச, அதாவது ( அண்டத்தில் உள்ள இறை ) அவ் நெருப்பு சக்தியை ஈர்க்கும் தன்மை உடையது. அதனால்தான் வேண்டினவை, நிச்சயம் தன்னில் கூட பசும்பாலை, நிச்சயம் அவன் மேல் ஊற்றி, நிச்சயம் தன்னில் கூட பின் முருகனை வேண்டிக் கொண்டாள், முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால், நிச்சயம் அவை உடனடியாக அங்கும் இங்கும் எதிரொளிக்கும். நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (தைப்பூசத்துக்கு எதுக்கு சிறப்பு? அபிஷேகம் பசும்பால்ல, அபிஷேகம் பண்றதுக்கு காரணம் . நுண்ணுயிர்கள். அந்த பால்ல கலந்திருக்க கூடிய நுண்ணுயிர்கள் வைப்ரேட் ஆகக்கூடிய தன்மை இருக்கு. வைப்ரேட் ஆகும் போது, ஊத்தும் பொழுது இங்கேயும் அங்க வைப்ரேட் ஆகும். அந்த வைப்ரேட் ஆகும் பொழுது என்ன ஆகும்? நீங்க நினைக்கிறது கொஞ்சம் நடக்கும்.)
=================================
# இவ் தைப்பூச வழிபாடு செய்தால், உங்கள் குறைகள் தானாக நீங்கிவிடும்.
=================================
குருநாதர் :- இவையெல்லாம் செய்து வந்தால், உங்களுக்கு குறைகளை நிச்சயம் யான் நீக்குவது என்ன? தானாக நீங்கிவிடும். இறைவன் நீக்குவது என்ன? தானாக நீங்கிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப யாருமே தேவையில்லை. இதெல்லாம் செஞ்சா, இறைவன் எதை நீக்குவது? நாங்க எதுக்கு உங்கள் குறைகளை நீக்குவது? உங்களுக்கு சொல்லிக் கொடுத்தோம்னா போதும். நீங்க அது தானாகவே நீங்கி விடும். நான் யார் நீக்குவதற்கு? இறைவன் யார் நீக்குவதற்கு? உன் குறைகள் தானாகவே நீங்கி விடும்.)
குருநாதர் :- இதனால்தான் பெரிய அறிஞர்கள் தன் வாழ்க்கை தன் கையில் என்று, உன் வாழ்க்கை உன் கையில் என்றும் நினைத்துக் கொள்ளலாமே.
குருநாதர் :- எதை என்று புரிய? நிச்சயம் இவை தெரியாதவர்கள் அலைந்து திரிந்து, கடைசியில் எதை என்று புரிய? இறைவன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குருநாதர் :- இதனால், அப்பா, உண்மை நிலைகளை உங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதன்படி நீங்கள் நடந்து கொண்டால், உங்களை நீங்கள் வென்றுவிடலாம். இதனால், யான் கொடுப்பது உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்? இறைவன் தான் என்ன கொடுக்க வேண்டும்? நீங்களே நிச்சயம் சொல்லுங்கள்?
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h21m32s
குருநாதர் :- இறைவன் யார் என்றே தெரியவில்லை. பின்பு இறைவனை வணங்குவது இறைவன் கொடுக்கவில்லை என்றால் இறைவன் என்று சொல்லிவிடுவது. அடடா இதுதான் மனிதனுடைய நிச்சயம். பின் கீழ்த்தரமான எண்ணங்கள். இவ்வெண்ணங்கள் உடையவன் எப்பொழுதும் முன்னேற போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு பார்த்தீங்களா? இறைவனை வணங்குறது இறைவன் கொடுத்துட்டா இருக்கிறான் என்று சொல்வது. கொடுக்கவில்லை என்றால் இறைவன் இல்லைன்னு சொல்லுவாங்க.
=============================================
# இப்புவியானது நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை பன்மடங்காக உங்களுக்கே திருப்பித் தரும். இதுதான் பூமியின் தன்மை. புவி என்பது பெரிய காந்தம்.
==============================================
குருநாதர் :- பின் நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய நிச்சயம் இன்னொரு விடயத்தை கூறுகின்றேன். இப்புவியானது நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை பன்மடங்காக உங்களுக்கே திருப்பித் தரும். இதுதான் புவியின் தன்மை. புவி என்பது பெரிய காந்தகம்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
அடியவர் :- ஈர்ப்பு விசை அதிகமா?
சுவடி ஓதும் மைந்தன் :- புவி என்பது என்ன? பெரிய...
அடியவர் :- பல மடங்கு திருப்பித் தரும். என்ன செய்கிறோமோ...
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க என்ன செய்றீங்களோ...பல மடங்கு திருப்பித் தரும். அது பல மடங்கு. இந்தாப்பா நீயே வச்சுக்கோப்பா. பாவத்தை பண்றியா? இந்தாப்பா வச்சுக்கோப்பா. இந்தா அனுபவிப்பா. புண்ணியத்தை... அதான் நல்லது பண்றியா? இந்தா...வச்சுக்கோ. வச்சுக்கோ. நல்லது அனுப்பி. அப்புறம் கெட்டது செய்றியா? இந்தா வச்சுக்கோப்பா. நல்லா அனுபவிப்பா. அது யாருக்கு இருக்குதாம்?
அடியவர் :- பூமி.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமியுடைய தன்மை,நீங்க என்ன பண்றீங்களோ...
அடியவர் :- பல மடங்கு உங்களுக்கு அது திருப்பித் தரும்.
குருநாதர் :- அப்பனே அப்போது இங்கு இறைவன் எதை கொடுப்பான்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இறைவன் வந்து இங்கு எதை கொடுப்பான்?
அடியவர் 6 :- புண்ணியம் பண்ணா புண்ணியம் கொடுப்பார். பாவம் பண்ணா பாவம் கொடுப்பார்.
குருநாதர் :- அப்பனே இது விளையாட்டு போலேயே உள்ளது. பின் அதாவது ஒரு உருண்டையில் விளையாடுங்கள் என்று நீங்கள் எதை செய்கின்றீர்களோ அதை வெற்றிக் கொள்ளுங்கள் என்று இறைவன் நிச்சயம் பார்த்துக் கொண்டே இருப்பான். அதாவது நிச்சயம் தன்னில்
அடியவர் :- பொம்மை .
====================================
# நம் விளையாடும் கிரிக்கெட்டில் , இறைவன் ஒரு கிரிக்கெட் அம்பயர் போல.
# அனைத்து முயற்சியையும் நாம் தான் செய்ய வேண்டும்.
====================================
குருநாதர் :- அப்பா அவை கூட இல்லை அப்பா. அப்பனே நிச்சயம் எப்படி மட்டைப்பந்து விளையாடுகிறார்களே அப்பொழுது ஒருவன் நிற்கின்றான் பார் அப்பனே நிச்சயம் மேலே தூக்குவான் அவன்தான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்பயர் அவர். இறைவன் என்ன பண்ணுவாரு அம்பயர்? . அந்த உலகத்துல எல்லாரும் நீங்க விளையாண்டுகிறீங்க வந்து. அப்ப அவர் என்ன பண்ணுவாரு? பார்த்துட்டே இருப்பாரு. நீங்க நல்லது பண்ணேன்னா டேய் சிக்ஸ்டா நீ. டேய் சிக்ஸ்டா. இல்லைன்னு நல்லது பண்ணலையா? அவுட்டா. வெளிய போடா.
அடியவர் :- கொஞ்சம் மீடியமா புண்ணியம் பண்ணா ஃபோர்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன கொடுக்கிறாரு இறைவன் வந்து இதுதாங்க பண்றாராம். ஆம்பியர் வேலை ஐயா.
அடியவர் :- கிரிக்கெட் அம்பயர் வேலை.
சுவடி ஓதும் மைந்தன் :- கிரிக்கெட் அம்பயர் வேலை. அழகான உதாரணம்.
அடியவர் :- உதாரணம் சூப்பரா. கிரிக்கெட் அம்பயர் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கிரிக்கெட் அம்பயர் தான் இறைவன்.
அடியவர் :- இறைவன். அவர் தான் கிரிக்கெட் அம்பயர் . நீங்க என்ன பண்றீங்களோ.
குருநாதர் :- அப்பனே மீண்டும் ஒரு பின் குசிபடுத்த முருகன் பாடலை பாடப்பா. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பா.
பாடகர் :- ( மீண்டும் முருகப்பெருமான் பாடல் “மருதமலை மாமணியே முருகையா” பாடினார்கள் … )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h25m50s
குருநாதர் :- அப்பனே, அம்மையே, இறைத்தன் நிச்சயம் தன்னில் கூட இவை தன் உங்களுக்கு உரைத்துக் கொண்டே வருகின்றேன். அதன்பின் நிச்சயம் யாங்கள் சொல்வதையும் நீங்கள் பின் கேட்டால் நன்மையாக முடியும். அடுத்து நிச்சயம் போகன் சொல்வதைப் போல் நிச்சயம் தன்னில் கூட, அடுத்து நிச்சயம் அனைவருக்கும் நிச்சயம் பின் சமர்ப்பிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன பண்றாருன்னா அகத்தியரே கட்டளையிட்டாரு. போகர் என்ன சொல்றாரோ அதை என்ன பண்ணனும் நீங்க வந்து, ம், எடுத்துட்டு வந்து—
எல்லாருக்கும், கொடுக்கணும்.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் நிச்சயம் சோம்பேறிகள் செய்வார்களா என்ன, அதையும் அரைத்து நீங்களே கொடுத்து விடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சில இவங்க எல்லாம் பண்ண மாட்டாங்கப்பா, அதனால
விளக்குல போறதுக்கு எல்லாம் நீங்களே அரைச்சு, எல்லாம் ஒரு இது பண்ணிட்டு பவுடர் கொடுப்பா.
குருநாதர் :- நிச்சயம் அவரவர் எப்படி செய்ய வேண்டும் என்பது அன்று உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- மூலிகை எல்லாம் எல்லாமே கொடுங்க வந்து, நான் வந்து அன்னைக்கு நான் சொல்றேன் எல்லாத்தையும் உங்களுக்கு வந்து.
குருநாதர் :- அப்பனே, அம்மையே, பின் அதாவது பின் தைப்பூசத்தை பின் அழகாக முருகனை வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் தன்னில் கூட சில நிச்சயம் தன்னில் கூட மாறுதல் ஏற்படுவது உறுதி.
சுவடி ஓதும் மைந்தன் :- தைப்பூசம் அன்னைக்கு நல்லா வந்து முருகனை வழிபட சொல்றாரு.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அதனால் யாங்களே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அதனால் அனைவரும் அமைதி காத்திருத்தல் நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நாங்கள் உங்களுக்கு தேவையானதெல்லாம் நாங்களே எடுத்துட்டு வந்து இவங்களே கொடுப்பாங்க வந்து நீங்க அதையாவது பண்ணுங்கம்மா.
குருநாதர் :- இதைத்தன் ஆனாலும் சிலர் எதை என்று புரிய நிச்சயம் அதாவது பின் அதாவது எவை என்று புரிய பின் புவியானது நிச்சயம் தன்னில் 100 மடங்கு அதிகமாக வேகத்தில் சுழல்கிறது என்றால், நீங்கள் வெறும் 5% ஆவது நிச்சயம் இறைவனைத் தேட வேண்டும். அப்பொழுதுதான் 10 மடங்கு தேடினால் இன்னும் ஞானங்கள் பிறக்கும். 20 மடங்கு தேடினால், இன்னும் 30 மடங்கு தேடினால் பின் வேகமாக ஓட வேண்டும் நீங்கள் கூட. வேகம் குறைந்துவிட்டால், ஒன்று என்று இருக்கையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். எப்படி நீங்கள் உங்களை வெல்லப் போகிறீர்கள் என்பது தெரியவில்லையே குழந்தைகளே. ????? !!!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதா? 100% பாஸ்ட்டா ஓடிக்கொண்டு இருக்கிறது உலகம். அதுல நீங்க என்ன பண்றீங்களாம்?
அடியவர் :- 5%, 10%, 15%, 20%.
சுவடி ஓதும் மைந்தன் :- 1%ல தான் ஓடிக்கொண்டு இருக்கின்றீர்கள். 1%ல இருக்கும் பொழுது ஒண்ணுமே தெரியாதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி அது 100%ல ஓடும் பொழுது, நம்ம 10%ல ஓடணும் வந்து. குறைஞ்சது ஒரு பஸ் ஒரு 100 km வேகத்துல போறதுன்னா, 100 வேணாம் 20 km வேகத்துல போறதுன்னா, நீ ஓடிப்போய் ஏறுறல. அது மாதிரி 100 km வேகத்துல போனா எப்படி நீ வந்து ஓடுவ? ஓடிப்போய் புடிச்சாதான் உன் லைஃப் சக்சஸ். இல்லைன்னா அவ்வளவுதான் முடிஞ்சதுப்பான்றாரு. அதனால வந்து என்ன பண்றாரு குழந்தைகளே நீங்க எல்லாம் 1%ல தான் இருக்கிறீங்கப்பான்றாரு.
====================================
# உங்கள் வேகத்தை யான் கூட்டுகின்றேன். கவலைகள் வேண்டாம்.
====================================
குருநாதர் :- வேகத்தை யான் கூட்டுகின்றேன் கவலைகள் வேண்டாம். அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட ஏதாவது ஒன்றை சொன்னாலும் நிச்சயம் சொன்னாலும் நிச்சயம் தன்னில் கூட பின் யான் செய்தேனே செய்தேன் என்று, என்ன செய்தீர்கள்?
அடியவர் :- ம், ஏதோ ஒன்னு சொல்லிட்டேன் நான் செஞ்சுட்டேன் எனக்கு ஒன்னும் நடக்கல ஒன்னும் நடக்கலன்னு சொல்றீங்கன்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன செஞ்சீங்கன்னு கேக்குறாங்க.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அதாவது சுயநலத்திற்காக செய்யக்கூடாது என்று யான் சொல்லியிருக்கின்றேன். மீண்டும் யான் செய்திருக்கின்றேன் என்றால் யாருக்காவது நீங்கள் செய்திருக்க யாருக்கு எதை என்று அறிய செய்திருக்கின்றீர்கள்?
அடியவர் :- யாரெல்லாம் நீங்க கேக்குறீங்களோ நீங்க உங்களை திருப்பி கேட்டுக்கோங்க. அதான் குருநாதர் சொல்றாங்க சில பேருக்குள்ள அந்த எண்ணம் இருக்குது. நான் சொல்றதெல்லாம் செய்யறேன் எனக்கு ஒன்னும் நடக்கல ஒன்னும் நடக்கலன்னா உங்களுக்காக செய்ய சொல்லல பிறருக்காக செய்ய சொன்னது.
=======================================
# அனுதினமும் ஒரு உயிருக்காவது அனைவருமே நன்மை செய்திருக்கின்றீர்கள். இதனால் உங்கள் வேகம் இங்கு கூடிற்று. அவ்வளவுதான்.
========================================
குருநாதர் :- எதை என்று அறிய அனுதினமும் ஒரு உயிருக்காவது நிச்சயம் பின் எவை என்று அறிய நன்மை செய்ய வேண்டும், என்று நீங்கள் அனைவருமே நன்மை செய்திருக்கின்றீர்கள். இதனால் உங்கள் வேகம் இங்கு கூடிற்று என்பேன். அவ்வளவுதான்.
குருநாதர் :- புண்ணியமோ பாவமோ அதைப்பற்றி யான் எடுத்திருக்கவில்லை. போகன் என்னை கேட்பான் குருநாதரே நான் அதைச் சொன்னேனே… நீ இதைச் செப்பிவிட்டாயே என்று. அதனால் அதை நான் பற்றியே பேசவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நான் புண்ணியத்தை பத்தி பாவத்தை பத்தி இங்க பேசல. இங்க நான் பேசிட்டேன்னா என்ன பண்ணுவாரு போகர். ஏன்பா என் குருநாதரே நான் அப்படி பேசுனேன் நீ இப்படி பேசுனியே. அதனால வேகத்தை கூட்டுவதற்கு.
அடியவர் :- இன்னைக்கு நம்ம வேகத்தை கூட்டி இருக்கிறோம்ன்றாங்க. ஏன்னா எல்லாரும் வந்தவங்களுக்கு தானம் கொடுத்திருக்கோம்ல உங்களுக்கு உதவி செஞ்சிருக்கோம்ல. அதனால அங்க மாதிரி 1%ல இருந்து கொஞ்சம் ஸ்பீடு கொஞ்சம் இன்கிரீஸ் பண்ணிருக்காங்கன்னுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்கிரீஸ் பண்ணிருக்காரு.
====================================================
# இப்படியே சிறிது சிறிதாகத்தான் நிச்சயம் வேகத்தை கூட்ட முடியும்.
====================================================
குருநாதர் :- எதை என்று அறிய இப்படியே சிறிது சிறிதாகத்தான் நிச்சயம் வேகத்தை கூட்ட முடியும். உடனடியாக பின் நூறை பின் கடக்க வேண்டும் என்றால் நிச்சயம் பின் முடியுமா என்ன அனைவரும் அப்படித்தான் நினைக்கின்றார்கள். இப்படி கடக்க முடியாதப்பா தாயே தந்தையே.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதை நிச்சயம் இவ்வாறாக நிச்சயம் நகர்த்தினால் மட்டுமே விடிவெள்ளி.
குருநாதர் :- இதனால் பொறுத்தே ஆகவேண்டும். நிச்சயம் தன்னில் கூட பின் ஆத்திரப்பட்டால், நிச்சயம் வீழ்வது ஆற்றில் நீங்களே.
குருநாதர் :- எதை அறிய அறிய உங்களுக்காக எப்படி எல்லாம் செய்கின்றீர்கள். எப்படி எல்லாம் செய்கின்றார்கள் எது என்று அறிய இவ்வாட்கள். அதாவது நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு நான் சொல்றது அகத்தியர் சொல்றது, இந்த கூட்டு பிரார்த்தனை அடியார்கள் எல்லாம் கேக்குறாங்களே அதெல்லாம் உங்களுக்காக தான்.
======================================
# நிச்சயம் பின் பயன்படுத்தினால் நிச்சயம் சொர்க்கம்.
======================================
குருநாதர் :- நிச்சயம் பின் பயன்படுத்தினால் நிச்சயம் சொர்க்கம். பயன்படுத்தாவிடில் பின் நிச்சயம் நரகம் தான்.
குருநாதர் :- நிச்சயம் நரகத்திற்கு யாங்கள் பின் அண்ட விடமாட்டோம். நிச்சயம் அதாவது வேகத்தை கூட்டிக்கொண்டே வந்தால் சொர்க்கம் தான்.
குருநாதர் :- இன்னும் சொர்க்கம் நரகம் இவையெல்லாம் இருக்கின்றதா என்று, இதற்கு ஒரு சித்தன் வருவான் சொல்வான்.
==============================================
# காகபுசண்ட மாமுனிவரின் ஆராய்ச்சி ரகசியங்கள்
==============================================
குருநாதர் :- ஆனாலும் புசண்ட முனியோ பின் அதாவது நெருப்பு பிழம்பு இருக்கின்றதோ அதன் பின் மேலே என்னவாக இருக்கிறது என்று தேடி தேடி பார்த்து அவன் கண்டுபிடித்துள்ளான். அதனையும் சொல்வான் வருங்காலத்தில்.
அடியவர் :- அம்மா அதுக்கு மேல போயிட்டாரா புசுண்டர் !!!!!
==============================================
இந்த ரகசியத்தை அறிய பின்வரும் வாக்கை படிக்க நன்று.
சித்தன் அருள் - 1994 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு - 1
https://siththanarul.blogspot.com/2025/11/1994-1.html
==============================================
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதுதான் பிழம்பா இல்ல…. மேல எங்காவது ஏதாவது ஒன்னு.
அடியவர் :- ஐயா அந்த இறைவன், கடவுள் லாஸ்ட் டைம் பேசுனது நிக்குது இல்லைங்க? என்ன அப்படியே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை பத்தி அவர் மேல போயிட்டு மேல போயிட்டு
குருநாதர் :- (புசண்ட முனி) இதற்கு இன்னும் ஆண்டுகள் ஆண்டுகளாக பின் தேடிக்கொண்டே இருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கண்டுபிடிக்க முடியல.
அடியவர் :- பதில் கண்டுபிடிக்க முடியல.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் இன்னும் பதில் வந்து இன்னும் உலகத்துல வந்து தலை கீழ சுத்துறது ஈசன் சொல்றதெல்லாம் செய்றது இன்னும் அவரால கண்டுபிடிக்க முடியல.
அடியவர் :- கண்டுபிடிக்கவே முடியலையேப்பா.
==============================================
# உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள். தானாகவே யோக பலன்கள் கிட்டும்.
==============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள். தானாகவே யோக பலன்கள் கிட்டும். உண்மை நிலையை பின் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அதிர்ஷ்டம் கூட கைவிட்டுப் போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மை நிலை தெரிந்து கொண்டால் என்ன ஆகும்? அதிர்ஷ்டம் தானா வரும்? உண்மை நிலை தெரிஞ்சுக்கலைன்னா என்ன ஆகும்? உன் கையில இருக்கிற அதிர்ஷ்டம் கூட உன்னை விட்டு போகும்டா?
================================
# மகாலட்சுமி தான் அதிர்ஷ்டம்.
================================
குருநாதர் :- இவனுக்கு புத்தியும் இல்லை நிச்சயம் அறிவும் இல்லை. இவனிடத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது? பின் நிச்சயம் சென்று விடுவோம் என்று பின் நிச்சயம் தன்னில் கூட மகாலட்சுமி தான் அதிர்ஷ்டம்.
அடியவர் :- பாருங்க ஏன்னா குருநாதர் வந்து நமக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க. நமக்கு தெரியாத உண்மை என்னென்ன இன்னைக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க. நம்ம யாருன்னு சொல்லிக் கொடுத்துட்டாங்க. இதை நீங்க புரிஞ்சுக்கல இதை நீங்க புரிஞ்சு செயல்படல அப்படின்னா அவ்வளவுதான் மகாலட்சுமி போயிடுவாங்கன்றாங்க.
====================================
# கிரகங்கள் பற்றியும் இடைக்காடர் சொல்லுவார்கள்
====================================
குருநாதர் :- நிச்சயம் கிரகங்கள் பற்றியும் நிச்சயம் எடுத்துரைக்க இடைக்காடன் பின் வந்து கொண்டே, குருநாதரே எனக்கும் ஒரு வாய்ப்பு அளியும் என்று நிச்சயம் அதனைப் பற்றியும் இடைக்காடன் வந்து சொல்வான். எங்கெங்கு எதை என்று அறிய வைத்தால் நன்மை என்று உங்களுக்கு அனைத்தும் கொடுக்க யாங்கள் தயார். ஆனால் நீங்கள் பொறுத்தே ஆகவேண்டும். உண்மை நிலை தெரிய வேண்டும். ஏனென்றால் பத்தாம் வகுப்பில் எடுக்கும் பின் பாடங்களை இப்பொழுது பின் எடுத்தால் உங்களுக்கு புரியாது. அதனால்தான் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு என்று வரிசையில் வந்தால்தான் புரியும். ஆனால் நீங்கள் உடனடியாக பின் பத்தாம் வகுப்பில் பின் எவை என்று அதனை எடுங்கள் என்றால் எப்படி பின் உங்களுக்கு புரிய வைப்பது? புரிய வைத்தாலும் நீங்கள் தன் அதாவது பின் அதாவது பின் சதவீதம் அதாவது பின் பூஜ்ஜியத்திலேயே இருப்பீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாஸ் ஆக மாட்டீங்க.
அடியவர் :- ஆமா ஆமா ஆமா. இந்த ஆறு கூட்டு பிரார்த்தனை வந்து பால்வாடி தான். அதான் சொல்றாங்க. இப்பதான்
சுவடி ஓதும் மைந்தன் :- ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் செகண்ட் ஸ்டாண்டர்ட்ல பாஸ் பண்ணனும். தேர்ட் ஸ்டாண்டர்ட்ல பாஸ் பண்ணனும். மூணாவது நாலாவது வரணும். இது என்ன என்ன கேக்குறீங்க ஐயா? பத்தாம் வகுப்புல முதல்ல பாஸ் பண்ணி கொடுத்தீங்கன்னா நியாயமா இது? ஆமா. பாஸ் பண்ணுவாங்க ஐயா. ஜீரோ மார்க் போட்டு பாஸ் பண்ணிடுவாங்க. ஒன்னும் நடக்க போறதில்லை. ஆமா.
அடியவர் :- ஐயா அதுல பெருங்கருணை. சித்தர்கள் எல்லாம் வரிசையில் நிக்கிறாங்க. நமக்கு வழிநாட்டுறதுக்கு. இடைக்காடர், தேரையர் நிக்கிறாங்க. இடைக்காடர் நிக்கிறாங்க. நிறைய சித்தர்கள் வரிசையில் நிக்கிறாங்க வழிநடத்துறதுக்காக.
====================
# சுவடி ரகசியங்கள்
====================
குருநாதர் :- இவை தன்னப்பா உலகம் அப்பனே பின் அழிந்தாலும் எதை என்று புரிய அப்பனே பின் உண்மைகள் எதை என்று கூற பின் அழியாமல் நிற்கும் சுவடிகளில் அனைத்து சித்தர்களும் இதை எழுதி வைத்தார்கள் அப்பா. ஆனாலும் இதை பயன்படுத்திக் கொண்டு அப்பனே என்னென்னவோ கண்டுபிடித்து விட்டார்கள் அப்பா. ஆனாலும் பின் பெயரை மட்டும் மாற்றி.
அடியவர் :- எல்லாம் இவங்களுடைய விஞ்ஞானம் தான். இப்படி இருக்கக்கூடிய அறிவியல் பொருட்கள் எல்லாம் சித்தர்களுடைய விஞ்ஞானம் எல்லாம் கண்டுபிடிச்சு அவங்க பேரை போட்டாங்கன்றாங்க.
=====================================
# ஈசனாரின் வரம் - சுவடி ரகசியங்கள்.
=====================================
குருநாதர் :- நிச்சயம் பின் ஈசன் அதாவது வரத்தை கொடுத்துவிட்டான். நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் நிச்சயம் பின் நீங்கள் எழுதியதெல்லாம் நிச்சயம் மக்களுக்கு புரியும் என்று. இதனால் நிச்சயம் தன்னில் கூட ஈசன் பின் இட்ட கட்டளை நிச்சயம் கட்டளையே. நிச்சயம் தன்னில் கூட மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். தெரியவும் படுத்துவோம். இதை புரிந்து கொண்டு நிச்சயம் இன்னும் வருங்காலங்களில் இவ்வுலகத்தை வெல்வார்கள் மக்கள்.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
அடியவர் :- அப்பா பெருங் கருணை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன் கட்டளையிட்டாராம். நீங்க எல்லாம் சித்தர்கள் எல்லாம் வந்து என்றுமே எழுதி வச்சது வீணா போகாது. மறையாது. வீண் போகாது. அது எடுத்துட்டு போய் எங்காவது படிச்சாலும் திருப்பி என்ன பண்ணுவாங்க? உண்மை நிலை புரியும். ஒரு நாள் உண்மை நிலையே புரியும்.
===============================================
# சுவடி உண்மை என்றால் உண்மையனே ஆவான்.
# சுவடி பொய்யன் என்பான், பொய்யனே ஆவான்.
===============================================
குருநாதர் :- அப்பனே பொய்யன் என்பான். நிச்சயம் தன்னில் கூட பொய்யனே ஆவான். உண்மை என்றால் உண்மையனே ஆவான்.
குருநாதர் :- அப்பா நிச்சயம் தன்னில் கூட எண்ணத்திற்கு நிச்சயம் தன்னில் கூட புவியின் பின் வேகத்திற்கு எண்ணங்கள் எப்படி ஓட வேண்டும் என்பவை எல்லாம் கண்டுபிடித்திருக்கின்றேன் அப்பா. இப்பொழுது வேண்டாம் அப்பா. இப்படி சொன்னாலும் நேரங்கள் போதாது அப்பா.
================================================
# பௌர்ணமி அன்று தீபத்தை ஏற்றி திருவருட்பாவை நிச்சயம் படித்து வாருங்கள்.
================================================
குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன். பௌர்ணமி அன்று நிச்சயம் தன்னில் கூட தீபத்தை ஏற்றி திருவருட்பாவை நிச்சயம் படித்து வாருங்கள். சுலபமாக இன்னும் ரகசியத்தை சொல்வேன்.
அடியவர் :- ஏதோ ஒரு சூட்சமம் இருக்கு. பௌர்ணமி எப்போ விளக்கேற்றி திருவருட்பா படிக்க சொல்லி இருக்காங்க. குருநாதர் கட்டளை அனைத்து அடியார்களும் தயவு செஞ்சு முயற்சி செய்யுங்க. கட்டாயம் முயற்சி செய்யுங்க. இதோட சூட்சமம் என்னன்றத பின்னாடி சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.
குருநாதர் :- நிச்சயம் அறிந்தும் கூட என்ன செய்தேனே, என்ன செய்தேனே என்றெல்லாம் நிச்சயம் பின் வள்ளல் பெருமான் பாடினானே. அத்தீபத்தின் எதை என்று கூட நீங்களும் அதுபோல் பாடுங்கள். நிச்சயம் தன்னில் கூட பின் சிலவற்றை நிச்சயம் தன்னில் கூட மாற்றி அமைத்து பின் ஈசன் அருள் புரிவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏத்திட்டு வள்ளல் பெருமான் வந்து எப்பா, நான் என்ன மனிதனுக்கு துரோகம் செய்தேனோ ?அந்த பாட்டு….
அடியவர் :- (ஒரு பாட்டு இருக்கு. அந்த பாட்டை விளக்கேற்றி பௌர்ணமி அன்று படிக்க சொல்லி இருக்காங்க.)
===========================================================
# திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய மனுமுறை கண்ட வாசகம்:-
# பௌர்ணமி அன்று , தீபம் ஏற்றி படிக்க வேண்டிய பாடல்.
===========================================================
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
======================================
# போகர் பொருட்கள் கிடைத்தவுடன் , சில வினைகளை அறுப்பேன்.
======================================
குருநாதர் :- அதேபோல் நிச்சயம் தன்னில் கூட பின் அடுத்த முறை நிச்சயம் தன்னில் கூட போகன் பொருள் கிடைக்கட்டும். அப்பொழுது சில ரகசியங்கள் சொல்வேன். அடுத்து சில வினைகளை அரைப்பேன் (அறுப்பேன்).
அடியவர் :- அதான் அடுத்து வந்து இந்த போகர் ஐயா சொன்ன சில அந்த பூஜா பொருட்கள் எல்லாம் வந்து விபூதி இதெல்லாம் வந்து கொடுக்கிறப்போ சில ரகசியங்கள் சொல்றேன்.
==========================================
# மனம் நிச்சயம் மகிழ்ச்சி அடைய - ஒரு எளிய வழி.
==========================================
குருநாதர் :- இதை ஏற்று அறிய மனது எப்பொழுதெல்லாம் தாழ்ந்து நிற்கின்றதோ அப்பொழுது இரு கையை நிச்சயம் உயர்த்தி மேலாக தட்டினாலே நிச்சயம் மனம் நிச்சயம் மகிழ்ச்சி அடையும்.
குருநாதர் :- நிச்சயம் இதோ இருக்கின்றானே பக்கத்தில் பைத்தியக்காரன் இவன் பாடுவான் நீங்கள் இதுபோல் பின் கை அசையுங்கள் போதுமானது.
பாடகர் :- ( மீண்டும் பாட வேண்டுமா? என்று கேட்டபோது )
குருநாதர் :- அப்பா என்னப்பா என்று கேட்கின்றாய். அப்பா முதலில் பின் யான் உன்னற்கு சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை. எப்படி நிச்சயம் தன்னில் கூட முறைத்துக் கொண்டாய் என்னை.
அடியவர் :- உங்களுக்கு பாட சந்தர்ப்பம் கொடுக்கல நீங்க முறைச்சுக்கிட்டீங்களே அதை சொல்றாரு. அதனாலதான் கொடுக்கிறேன் பாடுன்னு.
============================================
# இரு கைகளை மேலே தூக்கி நன்றாக தட்டி பாட மனங்கள் சுத்தமாகும்.
============================================
குருநாதர் :- எது என்று புரிய அப்பா அனைவரும் எழுந்து நில்லுங்கள். எழுந்து நின்று நிச்சயம் இவ்வாறு பின் தட்டிக் கொடுக்க பின் மனங்கள் சுத்தமாகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பெல்லாம் மனது யாருக்கு வந்து ரொம்ப கஷ்டமா இருக்குதோ மனசு வந்து கவலையா இருக்குதோ அப்ப எழுந்து நின்னு அப்பா எப்பா இப்படியே தட்டி நிருங்க.
அடியவர் :- மேல கை தட்டுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பெல்லாம் உங்களுக்கு கஷ்டம் வரும் மனசு வந்து நொந்துறீங்களோ அப்ப ரெண்டு கை இப்படி அப்படியே இறைவா இறைவா தட்டி இருக்கு அந்த மனசு என்பது அடங்கான்றார் வந்து.
பாடகர் :- ( மீண்டும் முருகப்பெருமான் பாடல் “மருதமலை மாமணியே முருகையா” பாடினார்கள் …அப்போது அடியவர்கள் இரு கைகளை மேலே தூக்கி நன்றாக தட்டி பாடினார்கள் )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h45m21s
(பாடி முடித்த பின்னர்………)
============================================
# இறைவன் முன்னின்று இரு கைகளை மேலே தூக்கி நன்றாக தட்டி பாட மனதில் உள்ள வலிகள் எல்லாம் கையில் போய்விடும்
============================================
குருநாதர் :- அப்பனே, அம்மையே, இவ்வாறாக மனதில் எவ்வளவு வலிகள் இருந்தாலும், இப்படி நீங்கள் நிச்சயம் தன்னில் கூட இறைவன் முன்னின்று, இப்படி நிச்சயம் பின், அதாவது கை அசைந்தால், நிச்சயம் இவ் மனதில் உள்ள வலிகள் எல்லாம் இக் கையில் போய்விடும், நிச்சயம் எது என்று புரிய.
குருநாதர் :- நிச்சயம் சில நேரமே வந்து வந்து தாக்கும். இதற்கும் யான் சொல்கின்றேன், அடுத்தடுத்த வாக்கில்.
சுவடி ஓதும் மைந்தன் :- சில நேரம் தான், ஒரு ஒரே ஒரு செகண்ட்ல, ரெண்டு செகண்ட்ல கஷ்டம் வரும், டக்குனு அது போயிடும். ஆனா அந்த நேரத்துல நம்ம வந்து அதுக்கு கொடுக்கக்கூடாது, எண்ணத்தை வந்து கொடுக்கக்கூடாது. அதற்காக வந்து இது மாதிரி நீங்க தட்டுனே இருந்தீங்கன்னா, போயிடும். இந்த வழி நீங்க உணர்வீங்க. அப்ப வந்து எல்லாமே இந்த வழியை உணர்றதுனால எல்லாமே இதாகும்.
============================================
# எலுமிச்சை சாறு , கல் உப்பு, தூய நீர் அருந்தி வர உடனடியாக சில கவலைகள் பறந்து போகும்.
============================================
குருநாதர் :- நிச்சயம் உடனடியாக ஒரு, அதாவது தேவ கனியான எலுமிச்சை, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது சரியாக பின் கல் உப்பையும், நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று கூட சிறு சாறு பிழிந்து தூய நீரில், நிச்சயம் அருந்தி வர, உடனடியாக சில கவலைகள் பறந்து போகும்.
குருநாதர் :- ஏன் இவை தன் இவ்வாறு வருகிறது என்றால், நிச்சயம் தன்னில் கூட பின் சனிகோளும், நிச்சயம் தன்னில் கூட ஓரிடம் பின் வந்து நிற்கும். அவ்வாறு நிச்சயம் வந்து நிற்கின்ற, நிச்சயம் விசை பின் மனிதனிடத்தில் உடனடியாக ஒளி படுகின்ற பொழுது, பின் ஒரு ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ, நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அங்கு தவறு நடைபெறுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- சனி பகவான் போல ஒரு இடத்துல வந்து என்ன ஆகும்? லைட்டா ஸ்லோ ஆகி திருப்பி திரும்பும். அந்த பத்து நிமிஷத்துல வந்து என்ன ஆகும் உங்களுக்கு வந்துரும்னா மனக்கவலை வந்துரும். அந்த நேரத்துல நீங்க என்ன பண்றீங்க, எது பண்றீங்க தெரியாதாம். அந்த நேரத்துல என்ன பண்ணனும்? டக்குனு நீங்க வந்து கை தட்டி ஜூஸ் குடிக்கணும். அது கடந்து போயிடும்.
குருநாதர் :- இவ்வாறு அடுத்த நிச்சயம் தன்னில் அடுத்தடுத்த முறை நீங்கள் முன்னேறிக்கொண்டே செல்லலாம். ஏன் எதற்கு முன்னேற்றம் இல்லை? சிலர் என்றால் உண்மை நிலை தெரியவில்லையே. அதற்காகத்தான்.
=========================================
# திருமண ரகசியங்கள் - மணமகன் துகளும் , மணமகள் துகளும் வெவ்வேறு இடங்களில் விழுந்திருப்பதால் , திருமணம் ஆக போராட்டங்களாக உள்ளது
========================================
குருநாதர் :- எது என்று புரிய இன்னும் ஏன் சொந்தங்கள் எங்கு? ஏன் எதற்காக? நிச்சயம் திருமணம் எவை என்று அறிய பின் எதற்காக தேடுகின்றீர்கள்? நிச்சயம் அதாவது நிச்சயம் மணமகன் ஓரிடத்தில் பிறந்திருப்பான். நிச்சயம் தன்னில் கூட மணமகள் எங்கேயோ. நிச்சயம் தன்னில் கூட பெண். அதாவது துகள் பறந்து போயிருக்கும். இதனால்தான் தேடு தேடு என்று தேடுகின்றார்கள்.
அடியவர் :- அப்பா துகள் எங்கேயோ போய் பறந்து போயிருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- துகள் எங்க பறந்து போயிட்டு இருக்கும். இங்க வந்து இங்க மணமகன் இருப்பான்.
அடியவர் :- அங்க அவர் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க ஒரு துகள் இருக்கும். அங்க அங்க வேற இடத்துல தூரமா எங்கேயோ இருக்கும். அப்ப என்ன பண்ணுவாங்க? வந்து அந்த பிறவி கல்யாணம் ஆகலையே, ஒன்னு ஆகலையே தேடி இருப்பான். அந்த துகளை வந்து தேடிட்டு இருப்பார்.
அடியவர் :- இந்த 60 வருஷம் இந்த பிறவி துகள் மேல போயிட்டு திருப்பி கீழ வர்றப்போ ஒரு இடத்துல போய் விழுந்துரும். அப்ப தேடி கண்டுபிடிக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தேடி கண்டுபிடிக்கணும். அதனால்தான் தேடி கண்டுபிடிக்காம இல்ல. ஆனா உனக்காக துகள் அங்க இருக்குது.
அடியவர் :- இருக்குது. அது இல்லாம வாழ முடியாது. தேடி கண்டுபிடிக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தேடி கண்டுபிடிக்கணும். எங்கேயோ விழுந்துட்டு இருக்கும்.
அடியவர் :- அது தாமதம்.
குருநாதர் :- இதனால்தான் மனம் பக்குவங்கள் சக்தி ஊட்ட வேண்டும். அத்துகளுக்கு அப்படி ஊட்டினால் தானாக வந்து இணைந்து கொள்ளும்.
அடியவர் :- அடடா. எவ்வளவு பெரிய சூட்சுமம். திருமணம் ஏன் டிலே (delay) ஆகுது சொல்றாங்க ஐயா. திருமண தாமதம். அந்த துகள் எங்கேயோ தூரமா போய் விழுந்திருக்கு. உங்க துகளுக்கு வலு இல்லை. அந்த துகளுக்கு வலு இல்லை. இந்த துகளுக்கு வலு ஏத்துறப்போ தானா வரும்ன்றாங்க. அந்த துகள் ஈர்த்துரும்ன்றாங்க. இந்த துகள்.
குருநாதர் :- இதே போலத்தான் குழந்தை பாக்கியம் கூட இருவருக்கும் வலுவில்லை. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதே போல தான் குழந்தை பாக்கியம் என்ன ஆகுதுயா?
அடியவர் :- துகளுக்கு வலு இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- துகளுக்கு வலு ஏத்துங்க.
குருநாதர் :- அப்பா அனைத்து விஷயமும் இதுபோலத்தான்.
அடியவர் :- அடடா. நமக்கு என்னென்ன குறைகள் இருக்கோ எல்லாமே இந்த துகள் வலுவை பொறுத்து தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த வலுவை ஏத்த ஏத்த எண்ணங்கள் வந்து நடக்கும்.
=================================================
# யாங்கள் பாடத்தை எடுக்கின்றோம். நீங்கள் கவனித்தால் மட்டும் போதுமானது. மற்றவையெல்லாம் பின் யாங்களே ஏற்றி விடுவோம்.
=================================================
குருநாதர் :- யாங்கள் பாடத்தை எடுக்கின்றோம். நீங்கள் கவனித்தால் மட்டும் போதுமானது. மற்றவையெல்லாம் பின் யாங்களே ஏற்றி விடுவோம். உங்களால் ஏற்ற முடியாது என்பேன். அவ்வளவுதான். ஏனென்றால் மனிதன் பின் சுலபமான வழிகள் எல்லாம் காண்பித்து இவை செய்தால் முன்னேறிவிடலாம், முன்னேறிவிடலாம் என்றெல்லாம் சோம்பேரி ஆக்கிவிட்டான். இதனால்தான் கஷ்டமான காரியங்களை சொன்னால் நீங்கள் செய்வீர்களா என்றால் நிச்சயமாக இல்லை.
குருநாதர் :- நிச்சயம் அதில் கூட உங்கள் சக்தி பின் 100 மடங்காக இருந்தால், நிச்சயம் மற்றவனுக்கு பூஜ்ஜியமாக இருந்தால் தடுப்பான். இது என்னடா? இது பொய் கணக்கா? இது என்னடா? இது புதுசா புதுசாக இருக்கின்றதே. இவையெல்லாம் பொய் என்று இதுதான். அப்பா அனைவரையும் நூற்றுக்குள் பின் அடக்க வேண்டும். இதுதான் எங்களுடைய வேலை. அடுத்த வேலை
குருநாதர் :- நிச்சயம் அப்பா பின் ஒருவன் நல்வழியில் சென்றால் அதை கெடுப்பதற்கு ஒருவன் பின். அதாவது நிச்சயம் வழியில் வருவான்அப்பா.
குருநாதர் :- அப்பனே, ஞானிகளே இதில் திண்டாடி விட்டார்கள் என்பேன். அப்பனே,
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்பனே, விஸ்வாமித்திரன் பின் யோகங்கள் பல தவங்கள் இறைவனை பின் காண எவை என்று கூட துடித்து துடித்துக் கொண்டிருந்தான். இறைவன் மீது நாட்டம் சென்று. ஆனால் நிச்சயம் பின் தீய சக்திகள், தீய உள்ளவர்கள் இவனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவனே அப்பா, நிச்சயம் தன்னில் கூட எப்படி எல்லாம்? அப்பனே, மீண்டும் மீண்டும் தவத்தை கலைத்து கலைத்து கலைத்து. அப்பா, பின் மனிதர்கள் நீங்கள் எல்லாம் எப்படித்தான் வாழப்போகின்றீர்கள்?
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் ஒருவன் நல்லது செய்வான். நிச்சயம் தன்னில் கூட பின் தீவை செய்வனும். அப்பனே, அருகிலே இருப்பான். அப்பா, பின் நிச்சயம் உயர்வதற்கு பின் உயர்ந்து கொண்டே இருப்பான். அதை கெடுப்பதற்கும், அப்பனே, அனைத்தும். அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, சரியாக ஆள் இருப்பான். அப்பா, இவையெல்லாம் ஏன் என்று யான் சொல்கின்றேன்.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, மனிதன் நிச்சயம் எப்பொழுதும் கெட்டுப்போவதில்லை. மனிதன் மனிதனாலே கெட்டுப்போகின்றான்.
குருநாதர் :- இதான், அப்பா, நிச்சயம் தன்னில் கூட பின் நல்சக்தி, தீய சக்தி, நல்சக்தி, இறைவன், தீய சக்தி, நிச்சயம் எவை என்று அறிய. நிச்சயம் பின் மாந்திரீகத்தால் ஆனதே. இதனால் இதைப்பற்றியும் இன்னும் சொல்ல சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் தெரிந்தால் நீங்கள் எது என்று எதையும் கேட்க மாட்டார்கள். எதையும் கேட்க மாட்டீர்கள். அமைதியாக வாயை மூடிக்கொண்டு நிச்சயம் சென்று விடுவீர்கள்.
குருநாதர் :- ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் உண்மைகள். நிச்சயம் தெரிவித்த பிறகே, நிச்சயம் சில வாக்குகள் வந்து யான் செப்புவேன். அப்பொழுதுதான் உங்களுக்கு புரியும். யான் சொல்வது நடக்கும்.
================================================
# கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் மேடையிலேயே குருநாதர் அமர்ந்திருந்தார்கள்
================================================
குருநாதர் :- அப்பா, யானே இங்கே இருக்கின்றேன். உங்களுக்கு என்ன எது என்று அறிய, அப்பனே, பின் வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :-( பலத்த கை தட்டல்கள் )
குருநாதர் :- ஏனென்றால் உங்கள் கண்கள் அதுபோல். நிச்சயம் தன்னில் கூட பின் அவ்வாறு நல் கண்களாக. நிச்சயம் அதற்கும் ஒரு அவுஷதம் உண்டு பார்ப்பதற்கு. நிச்சயம் அவ் அவுஷதம் எண்ணங்கள் உயர்வு. நீங்களும் கண்களால பார்க்கணும்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனாகவே இன்றும் வந்து பின் உணவு உட்கொண்டேன். லோபா முத்திரையோடு.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
குருநாதர் :- இதனால்தான் உயர்ந்த உள்ளம் வேண்டும். அவ் உயர்ந்த உள்ளத்தை நிச்சயம் கொண்டோர்கள் என்னை கண்டுபிடித்து விடுவார்கள்.
குருநாதர் :- எது என்று அறிய அறிய இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று நிச்சயம் யாங்கள் கொடுப்பது நீங்கள் பெற்றுக் கொண்டால்தான் கடைசி வரை நிற்கும். நீங்கள் கேட்டது யான் கொடுத்துவிட்டால், நிச்சயம் தன்னில் அதி வேகமாகவே பின் அழிந்துவிடும். அதனால் யாங்கள் கொடுப்பது நிச்சயம் நீங்கள் பின் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நிச்சயம் பின் பொருத்தாக வேண்டும். நீங்கள் கேட்டதை யான் கொடுத்து விடுகின்றேன் இப்பொழுது. ஆனால் பின் அதிவிரைவாக எப்படி கொடுத்தேனே, அப்படியே போய்விடும். ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட இப்புவியானது காந்தகம் சொல்லிவிட்டேன். அதனால்தான் உண்மை தெரிந்து கொள்ளுங்கள். பின் எது என்று அறிய.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய போராட்டமாகவே, நிச்சயம் தன்னில் கூட பூஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அதனால், நிச்சயம் தன்னில் கூட விளையாட்டாகவே இது வாழ்க்கை. பின் அழகாக
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு விளையாட்டுதான் வாழ்க்கை. அவுட்னா போயிட்டே இருக்க வேண்டியதுதான். அதான் கிரிக்கெட் ஒரு கிரவுண்ட்ல விளையாடுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ("மனித வாழ்க்கை என்பது கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் ஒரு பந்து போன்றது; அது சிக்ஸராக மாறுவதும் அல்லது அவுட் ஆகி வெளியேறுவதும் நாம் பயன்படுத்தும் வாய்ப்பில்தான் உள்ளது. இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பு (Chance) மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே. மரணத்திற்குப் பிறகு நம்முடைய உயிர் எனும் துகள் எங்கே சென்று விழும், எந்தப் பிறவி எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, கையில் இருக்கும் இந்த வாழ்க்கையைச் சரியாகப் பயன்படுத்தி, நான்கு பேருக்கு நன்மைகளைச் செய்து வாழ வேண்டும். அப்படிச் செய்தால் நம் வாழ்வை இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு, கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் நல்வழியில் பயணிக்க வேண்டும்.")
குருநாதர் :- எவை என்று புரியாது. இன்னும் பின் சொன்னேனே, அவன் ஞானியும். நிச்சயம் தன்னில் கூட வந்து உட்கொண்டான். அனைவரும் நிச்சயம் பார்த்துவிட்டு,
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் பார்த்திருக்கிறார். யாரு?
அடியவர் :- குப்தன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரையும் இன்னைக்கு உட்கொண்டு, அவரையும் பார்த்திருக்கார்.
குருநாதர் :- நிச்சயம் இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்? மீண்டும் நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால், உங்களை விட முட்டாள் யாருமில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- வந்திருக்கார். அவரும் வந்திருக்கார். வந்து குருநாதர் வந்திருக்காங்க. லோபாமுத்திரம் வந்திருக்காங்க. இந்த குப்தன்ற ஞானி வந்திருக்காங்க. மேடையில ஒரு ஞானி வந்து உட்கார்ந்து இருக்காங்க. இவ்வளவு பேர் இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்காங்க. இவங்களுடைய பார்வையே நமக்கு கோடி துன்பத்தை போக்கும். ஆனா, அதை பக்குவங்கள் இல்லை. பொறுங்கப்பா. கொஞ்சம் கொஞ்சமா பிரச்சனை எல்லாம் போகும்னு இருக்காங்க.
குருநாதர் :- பின் பார்ப்பது சுலபம். அதனை நிச்சயம் தன்னில் கூட உங்களிடையே பேச வைக்கின்றேன். ஆனால், பக்குவங்கள் வேண்டும்.
குருநாதர் :- அப்பா, அறிந்து கூட இதனால, அப்பனே, நிச்சயம் அனைவருமே சோர்ந்துள்ளார்கள். அப்பா, போதுமானது. அப்பா, நிச்சயம் தன்னில் கூட இன்னும் நீட்டித்தே கொண்டு சென்றால், அப்பனே, பின் குறைவாக எது என்று அறிய. அப்பனே, எது என்று அறிய. நிறைவாக இருக்கட்டும். அப்பனே, நிச்சயம் அனைத்தும் ஒரே முறை சொன்னாலும், அப்பனே, நிச்சயம் புரியாது. அப்பா, இதனால் சில பின் விதிகளை யானே மாற்றித் தருகின்றேன். இப்பொழுது போதும். அப்பா, அடுத்து, அப்பனே, பார்ப்போம். அப்பனே, இன்னும் பின் சித்தர்கள் ரகசியங்கள் உடைப்பார்கள். அப்பனே, தெரிந்து கொண்டு, அப்பனே, உங்களை நீங்கள் வென்று, அப்பனே, அனைவரையும், அப்பனே, நல் பாதையில் எடுத்துச் செல்லுங்கள். அதுதான், அப்பனே, மூலாதாரணம். அதுதான் இறைபலம். அதுதான் உங்களை காக்கும். வேறொன்றும் காக்காது. அப்பா,
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இடைக்காடன். அடுத்தடுத்த வாக்கில், நிச்சயம் அதுமட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட உடம்பு பின் எவ்வாறெல்லாம் பின் செய்தால், நிச்சயம் இளமையாக பின் இருக்கலாம் என்று பாம்பாட்டி வருவான். நிச்சயம் சொல்வான்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :-
குருநாதர் :- அதனாலே, அவனை பின் பாம்பாட்டி என்று நிச்சயம் தன்னில் பெயரும் வந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த உடம்பை வளைச்சு எடுத்ததுனால, அவர் பேர் என்ன ஆயிடுச்சாம்? பாம்பாட்டின்னு பேரு. அவர் வந்து உடம்புகளை எவ்வளவு வலி இங்க வலி அங்க வலி இருக்குதுன்னு எல்லாம் அவர் வந்து சொல்லுவாருப்பா.
குருநாதர் :- அப்பனே, இதனால் அம்மையே, இதனால் கவலை கொள்ளாமல் இருங்கள். நிச்சயம் பின் ஈசனை நினைத்து அழகாக பாடலை பாடுங்கள். மனம் மகிழ்வான். அனைவரும் மனம் மகிழ்வுடனே, அடுத்த முறை நிச்சயம் உங்களுக்கு மூலிகைகளோடு, நிச்சயம் தன்னில் கூட பின் வரும் மந்திரமும் வரும். நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் உங்களுக்கே சொல்லித் தருகின்றோம். பின் நீங்களும் தெரிந்து கொண்டு, மற்றவருக்கும் சொல்லிக் கொடுத்து, பின் நீங்களும் உங்களை வென்று, அவர்களையும் வெல்லச் செய்து, நிச்சயம் தன்னில் கூட சந்தோஷமாக வாழுங்கள். ஆசிகள், ஆசிகள்.
அடியவர் :- (அய்யா , அடுத்து எங்க கூட்டுப்பிரார்த்தனை வைக்க வேண்டும் ?)
குருநாதர் :- அப்பா, அப்பா, எது என்று அறியறிய இங்கேயே இன்னும் சில மூலாதாரணங்கள். இதனால, அப்பனே, இங்கேயே ஆகட்டும்.
( அடுத்த கூட்டுப்பிரார்த்தனை திருவண்ணாமலையில் வைக்க வேண்டும் )
அடியவர் :- எப்ப வச்சுக்கலாம்? இங்கே எப்போ ஒரு மாசத்துல
குருநாதர் :- எது என்று அறிய, அப்பனே, பின் அதாவது, பின் தற்போது தை. அப்பனே, நிச்சயம் பின் சரியாக, பின் அதாவது, மாசி மாதத்தில் சரியான நேரத்தில், அப்பனே, நிச்சயம் உங்களுக்கு ஏற்றவாறே செய்யுங்கள்.
அடியவர் :- சிவாய நம. நன்றிங்க, ஐயா.
மற்றொரு அடியவர் கேள்வி :- (........................)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அவனுக்கான யாங்கள் வருவோம். அப்பனே, எண்ணம் போலே ஆகட்டும். எது என்று அறிய, அப்பனே, நிச்சயம், அப்பனே, சொல்லிவிட்டேன். அப்பனே, மீண்டும் இதைத்தான் கேட்கின்றீர்கள். இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றுமே ஆவதில்லை என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யாங்கள் வருவோம் என்றால், அப்பனே, அங்கு நடந்து விடாமல் போய்விடுகின்றது.
அடியவர் :- எல்லாமே நடக்கும், ஐயா. இது யாருங்க, ஐயா? பார்த்துட்டீங்களா? உங்களுக்கு பார்த்துட்டீங்களா? உங்களுக்கு இது வந்ததுன்னீங்களே.
மற்றொரு அடியவர் கேள்வி :- (........................)
குருநாதர் :- அப்பனே, அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இப்பொழுது ஒருவருக்கு படித்து, மற்றவருக்கு, அப்பனே, நிச்சயம் விட்டுவிட்டால், அப்பனே, அது மிகத் தவறாக போய்விடும். இதனால, அப்பனே, அனைத்தும் சொல்லி இருக்கின்றேன், அல்லவா? அதை செய்யச் சொல், அப்பனே. அடுத்த முறை அனைத்தும் வழங்குவார்கள். வரச் சொல் இங்கு, அப்பனே. அனைத்தும் வரச் சொல், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எருமாடு.
குருநாதர் :- எருமாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் புத்திகள் இல்லை. அடித்துவிட்டாலும் அவர் தாய் தந்தையர் அழுது விடுவார்கள். அதனால் விட்டுவிட்டேன். எருமாட்டை யாங்கள் பார்த்துக் கொள்வோம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் மூலம் :- ( "தன் மகனுக்காக வேண்டிக் கொண்டு வந்த ஒரு பெற்றோரிடம் அகத்தியர் மிகவும் கண்டிப்புடன் பேசுகிறார். அந்தப் பையன் நல்வழியில் நடக்காததால் அவனை 'எருமாடு' என்று கடிந்து கொள்ளும் அகத்தியர், அவனைத் தான் நேரடியாகத் திருத்த முற்பட்டால் அது மிகுந்த தண்டனையாக (அடி விழுவது போல) இருக்கும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அவ்வாறு செய்தால் அவனது பெற்றோர் தாங்கமாட்டார்கள், அழுது விடுவார்கள் என்பதால் அவர்களின் அன்பிற்காகத்தான் சற்று பொறுமை காப்பதாகக் கூறுகிறார். 'நீங்கள் அழுது விடுவார்கள் என்பதால் நானே அவனை மெல்ல மாற்றித் தருகிறேன்' என்று உறுதியளிக்கும் அகத்தியர், அடுத்த முறை வரும்போது நிலைமை மாறும் என்றும், அதற்கான தீர்வுகள் (மூடி போன்றவை) கிடைக்கும் என்று கூறி, கவலைப்பட வேண்டாம் என அவர்களுக்கு ஆறுதல் வழங்குகிறார்.")
குருநாதர் :- இன்னும் எது என்று அறிய பல திருத்தலங்களில் நிச்சயம் தன்னில் கூட ஈசனுக்கு சேவை செய்வோருக்கு எல்லாம் உணவில்லாமல் கூட இருக்கின்றது. நிச்சயம் அவையெல்லாம் மாற்றுவோம். உங்களுக்கு சக்திகள் கொடுப்போம். நிச்சயம் தன்னில் கூட நல்லதே செய்யுங்கள். ஆசிகள், ஆசிகள்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
மற்றொரு அடியவர் கேள்வி :- (........................)
குருநாதர் :- எது என்று அறியப்பா? எவையெல்லாம் கேட்கக்கூடாது? சோம்பேரித்தனமான கேள்விகள். அப்பா, அனைத்தும் யான் சொல்ல வந்தேன். அப்பா, நிச்சயம் எத்தனையோ ஆட்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவருக்கு சொன்னால் ஒருவருக்கு மனவருத்தம் ஆகும். அப்பா, இது எவ்வாறு நியாயம்? நீயே இதுபோல் கேட்கலாமா? அப்பா, சிந்தித்துப் பாரு. அப்பா, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய ஒருவர் விட்டு ஒருவர் ஆனாலும் ஆசிகள் வாங்கி தந்துவிட்டோம். இத்தனை நேரம் என்ன சொல்லிக் கொண்டிருந்தோம்? அப்பனே, மீண்டும் இவைத்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். அடுத்த முறை வரட்டும். அப்பா, மூலிகைகளை எது என்று கூற பின் கொடுக்கிறீர்கள், அல்லவா? அதில் தான் பார்த்துக் கொள்வோம். அப்பனே, எம்முடைய ஆசிகள் இப்பொழுது.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment