​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 February 2026

சித்தன் அருள் - 2112 - அன்புடன் அகத்தியர் - கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 6

நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 6



குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட நிச்சயம் அவை பின்  அப்பனே, முதலில் இப்போது செப்பினேன் அப்பனே, சிவராத்திரி பற்றி. அதை முதலில் அப்பனே, சரியாக செய்க என்பேன் அப்பனே. போதும். மீதி எல்லாம் அப்பனே, யான் சொல்வேன் அப்பனே, வருங்காலத்தில்.

==============================================
# 12 ஜோதிர்லிங்களையும் கூட வடிவமைத்தவன் அப்பனே, பின் இராவணனே.
============================================== 

குருநாதர் :-  அப்பனே, அவை மட்டுமில்லாமல் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் அப்பனே, கிரகத்தால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாதிக்க நிச்சயம் படுவார்கள் என்பவையெல்லாம் நிச்சயம் இராவணனுக்கு தெரிந்தது என்பேன் அப்பனே. இதனால் ஈசனை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு பின் வைத்தான் அப்பா. 12 ஜோதிர்லிங்களையும் கூட வடிவமைத்தவன் அப்பனே, பின் இராவணனே என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( "ஓ... அப்ப அந்த 12 ஜோதிர்லிங்கங்களையும் என்ன பண்றதுன்னு கேக்குறீங்களா ஐயா? அதுவும் அவர்தான்! யாரு? நம்ம இராவணேஸ்வரன் தான். இந்த உலகத்துல இருக்குற மக்கள் எல்லாரும் கிரகங்களால பாதிக்கப்படுவாங்கன்னு அவருக்கு முன்கூட்டியே தெரியும். அதனால, அந்த கிரக தோஷங்களைத் தவிர்க்கிறதுக்காகத்தான், சிவன் கிட்ட சொல்லி அந்த ஜோதிர்லிங்கங்களை எல்லாம் ஒண்ணாச் சேர்த்தாரு (கூட்டினாரு). மக்கள் மேல அவருக்கு அவ்வளவு பாசம்!" )

==========================================
# உலகம் அறியாத 12 ஜோதிர்லிங்க தரிசன ரகசியங்கள் 
# கிரகங்களின் தாக்கம் குறைந்து கொண்டே வரும்
# வெற்றி அடைந்து விடலாம் கடைசியில்.
==========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எதற்கு என்றால் நிச்சயம் அவ்வழியாக செல்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட கிரகங்களின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெற்றி அடைந்து விடலாம் கடைசியில். ஆனால் இவை கூட மனிதனுக்கு தெரிவதே இல்லை. எப்படி கிரகங்களால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப, இந்த உலகத்துல கிரகங்கள் எல்லாரையும் தாக்கும்னு தெரியுது. அப்ப அதுக்கு என்னதான் வழி? அதுக்குத்தான் அவரு என்ன பண்ணிருக்காருன்னா, ஒரு வழியை அமைச்சிருக்காரு. அதாவது, கிரகங்களோட தாக்கம் எந்த இடத்துல ரொம்ப அதிகமா விழுதோ, அந்த மனுஷன் இந்த ஜோதிர்லிங்க வழிபாட்டு முறைப்படி இப்படிப் போனானா... என்ன ஆகும் தெரியுமா? அந்த கிரகங்களோட தாக்கம் அப்படியே குறைஞ்சிடும். ஆமா, கிரகங்களோட தாக்கம் கண்டிப்பா குறையும்!" )

================================
# இராவணேஸ்வரர் - 12 ஜோதிர்லிங்க ரகசியங்கள். 
================================
# நட்சத்திரங்களை - 12 ஜோதிர்லிங்கம் அதிலேயே அடக்கி உள்ளார். 
================================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட நட்சத்திரங்களை கூட நிச்சயம் அதிலேயே அடக்கி உள்ளான். நிச்சயம் 12 ஜோதிர்லிங்கம், நிச்சயம் ஒவ்வொரு பின் அதாவது நிச்சயம் தன்னில் லிங்கத்திற்கும் பல நிச்சயம் தன்னில் நட்சத்திரங்களை வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின்  சரியாக்கவே ஆக்கியவன் இராவணனை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப ஒரு லிங்கத்தைச் சுத்தி என்ன பண்ணாருன்னா, அப்படியே ஒரு ரவுண்ட் (Round) பண்ணிட்டாரு. அந்த ஒரு வட்டத்துக்குள்ளேயே 12 ராசிகளையும் கொண்டு வந்துட்டாரு. அப்ப அந்த 12 ஜோதிர்லிங்கத்துக்குள்ள 12 ராசிகள், நட்சத்திரங்கள்னு எல்லாமே அடக்கம்! மொத்தப் பிரபஞ்சத்தோட கணக்கும் அந்த லிங்கங்களுக்குள்ளேயே அடங்கிடுச்சு!" )

======================================
# 12 ஜோதிர்லிங்கங்களை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசித்ததால் மட்டுமே, மனிதனுக்கு பாவத்திலிருந்து விடிவெள்ளி கிட்டி  புண்ணியம் கிடைக்கும் நினைத்தது நடக்கும். - அடியவர்கள் , இதனை பயன்படுத்தி தரிசனம் செய்க. அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள். 
======================================

குருநாதர் :-   நிச்சயம் வாழ்நாளில் ஒரு முறையாவது அவை தரிசித்ததால் மட்டுமே, மனிதனுக்கு பின் பாவத்திலிருந்து விடிவெள்ளி கிட்டி  புண்ணியம் கிடைக்கும் நினைத்தது நடக்கும். எத்தனை பேர் பாருங்கள். 

குருநாதர் :-   ஆனால் இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு இறைவனை காண வேண்டும் என்றால் எப்படி? 

குருநாதர் :-  இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் எப்படி? 

குருநாதர் :-  இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு பணம் வர வேண்டும் என்றால் எப்படி? 

குருநாதர் :-  இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு தொழில் வேண்டும் என்றால் எப்படி? 

குருநாதர் :-  இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நிச்சயம் வேலை வேண்டும் என்றால் நிச்சயம் இதில் இதில் மட்டும் புத்திசாலித்தனமாக ஓடுகின்றான் மனிதன். 

குருநாதர் :-  ஆனால் உண்மை நிலை எது? பின் அவை பின் அறியாமல் அமர்கின்றான் எதை என்று புரிய. சொன்னால் நிச்சயம் என் இல்லத்தின் அருகிலே பின் திருக்கோயில் இருக்கின்றது. அதற்கே என்னால் போக முடியவில்லை என்று. ஆனால் அத்திருத்தலத்தில் பணங்கள் பின் கொட்டுகின்றால் என்றால் ஓடோடி விடுவான். பின் இருக்கின்றது என்றால் ஓடோடி ஓடுவான். 

குருநாதர் :-  ஆனால் இறைவன் இருக்கின்றான் என்றால் கேட்க மாட்டான். ஏனென்றால் அழிய வேண்டும் மனிதன்.

அடியவர்கள் :- ( மனிதர்களை நினைத்து , வேதனையுடன் சிரிப்பு ) 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :- ( "எல்லாத்தையும் நமக்கு முன்னாடி அப்படியே புட்டு வச்சுட்டாருப்பா! ஆனா நம்ம ஆளுங்க எப்படின்னா, பணம் வேணும்னா ஓடுறாங்க, ஆனா, 'பக்கத்துலயே கோயில் இருக்கு, போயிட்டு வாங்க'ன்னு சொன்னா, 'இறைவன் எங்கயோ தூரத்துல இருக்கான்'னு சொல்லிப் போக மாட்டேங்குறாங்க. இப்போ ராவணனைப் பாருங்க, தன் அம்மா உயிர் பிழைக்கணும்ங்கிறதுக்காகக் கைலாயத்தையே பெயர்த்து எடுக்க எவ்வளவு முயற்சி பண்ணாரு! அதேபோல நமக்கு கல்யாணம், குழந்தைன்னு எத்தனையோ ஆசைகள் இருக்குல்ல? அப்போ அதுக்கெல்லாம் நாமளும் கஷ்டப்படணும்ல! சும்மா ஒரு இடத்துல உட்கார்ந்துக்கிட்டு இருந்தா எதுவும் நடக்காது. அந்த ஜோதிர்லிங்கங்களுக்கு நேரா போங்க, அப்போதான் உங்க கஷ்டமெல்லாம் தீரும்னு சொல்ல வராரு!" )

===========================================
# மதிப்புமிகு , மரியாதைக்கு உரிய இராவணேஸ்வரர் 
# அனைத்து பெண்களையும் தன் அன்னையாகவே பார்க்கின்றனார்
============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இராவணன் இன்னும் கூட தன் அன்னையாகவே அனைவரையும் பார்க்கின்றனார். நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "இராவணன் அன்னைக்கு என்ன பண்ணாரு? இன்னைக்கு வரைக்கும் அவர் என்ன பண்ணிட்டு இருக்காரு தெரியுமா? 'இங்க இருக்குற எல்லாருமே என் அம்மாக்கள் தான்... எல்லா பெண்களுமே என் தாய்க்குச் சமம் தான்'னு தான் அவர் இன்னைக்கு வரைக்கும் நினைச்சுக்கிட்டு இருக்காராம். உலகத்துல இருக்குற அத்தனை பெண்களையும் தன் தாயாவே பார்க்குற அந்த உன்னதமான எண்ணத்தோட தான் அவர் இப்போ வரைக்கும் இருக்காரு!" )

============================================
# இராவணேஸ்வரர் போல சிவபக்தனாக  இருக்கவேண்டும் 
============================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட சிவபக்தனாக இருந்தால் இதுபோல் இருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட. பின் அனைத்தும் பின் செய்துவிட்டு ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு, யானும் சிவன் பக்தன் என்று கூறிக்கொள்வது முட்டாளை விட முட்டாள். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  ("ஒரு சிவபக்தன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? மத்தவங்களுக்காக வாழணும், மத்தவனுக்காகவே இருக்கணும்னு சொல்றாரு. பெண்கள் எல்லாரையும் தன் தாயா நினைக்கணும். சொல்லப்போனா, ஒரு சிவபக்தன்னா அது நம்ம இராவணன் போல இருக்கணும்! நாம நமக்காக வாழக்கூடாது, மத்தவங்களுக்காகவே வாழணும். அதான் உண்மையான பக்தி. இங்க பாருங்க, இந்த ஐயா இருக்காரு... இவங்க எல்லாம் இருக்காங்க... இவங்க எதுக்காக இருக்காங்க? மத்தவங்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி, அவங்களை நல்வழிப்படுத்துறாங்க பாருங்க, அவங்கதான் உண்மையான சிவபக்தர்கள்! எல்லாருமே அப்படி இருக்கிறது இல்லை, ஆனா மத்தவங்களுக்காக உழைக்கிற இவங்கதான் நிஜமான பக்தர்களுன்னு சொல்றாங்க!" )

==================================
# 63 நயன்மார்களையும் கூட. நிச்சயம் அதற்கு மேலே பலர் இருக்கின்றார்கள்
==================================

குருநாதர் :-  நிச்சயம் இன்னும் இதுபோல் நிச்சயம் தன்னில் கூட பின் 63 நயன்மார்களையும் கூட. நிச்சயம் அதற்கு மேலே இருக்கின்றார்கள் பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் ஈசனின் மேல். அவர்கள் எல்லாம் நிச்சயம் புதைந்துள்ளனர் அவர்களைப் பற்றி யான் எழுப்புவேன். 

===========================================
# இறைவனை  உணர்ந்து கொள்வது சாதாரணம் இல்லை.
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய இதனால் நிச்சயம் இறைவன் உணர்ந்து கொள்வது சாதாரணம் இல்லை. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் யான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை உணர்ந்து கொள்வது சாதாரண காரியம் இல்லை சாதாரணம் இல்லை 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அதாவது வருகின்ற பின் அதாவது தன் மனைவியோ பின் எவை என்று கூறப்பெண் எதை என்றது எது தன் புருஷனோ யார் என்றே தெரியாமல் இருக்கின்றீர்கள். ஆனால் நிச்சயம் பின் இறைவனை நீங்கள் அறிந்து கொள்ள போகின்றீர்களா? 

குருநாதர் :- பெரும் கஷ்டம் அப்பா. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் அதனால்தான் நிச்சயம் தன்னில் ஒரு மனிதனுக்கு ஒரு துன்பத்தை கொடுத்து பின் நிச்சயம் அதன் மூலம் அனைத்தும் தெரிந்து கொள் என்று இறைவன் விடுகின்றான் ஆனால் அத்தன் துன்பத்தைப் போக்க மனிதனை நாடுகின்றான் அதனால் வாழ்க்கையை நிச்சயம் பின் போராட்டமாக வாழ்க்கையே பின் முடிந்து விடுகின்றது.

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் தேவாரத்தில் ஒரு பாடலை பாட வேண்டும் இப்பொழுது….



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment