​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 10 February 2026

சித்தன் அருள் - 2107 - அன்புடன் அகத்தியர் - கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு, சிவராத்திரி ரகசியங்கள் 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 1

நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.
அகில இலங்கை அகஸ்திய மன்றம்.


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் திருவருளால் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தில் இருந்து நாட்டை காப்பாற்றவும், உலக நன்மைக்காகவும், ஞானியர்கள் போற்றி சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்து அருளினார்கள். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( குருநாதர் அன்புக்கடல் அகத்திய மாமுனிவர் போற்றி துதி பாடல் பாடினார்கள் ) 

==============================================
#  குருநாதர் அன்புக்கடல் அகத்திய மாமுனிவர் போற்றி துதி பாடல் 
==============================================

கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!

வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !

காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல்  தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !

அடியவர் 2 :-  பக்கம் 73 எடுத்துக்கோங்க எல்லாரும், பக்கம் 73 புத்தகத்துல பக்கம் 73. பக்கம் 73மா? சித்தர்கள் போற்றித் தொகுப்பு.

அடியவர் 1 :- சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாட சொல்றாங்க எல்லாரும் வந்து, ஞானிகள்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (திருமூலர் அருளிய திருமந்திரத்தின் பாடல் 1598 ஆறாம் தந்திரத்தில் வரும், "திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்..." என்ற பாடல் வரிகள்)

===============================
# திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
==================================
 
திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்; 
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்; 
திருவடி ஞானமே என் சித்தி முக்தியே. 

=============================
# சித்தர்கள் போற்றி தொகுப்பு 
=============================


ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி


ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி


ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி


ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி


ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி


ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி


ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி


ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி


ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி


ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி


ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி


ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி


ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி


ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி


ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி


ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி


ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி


ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி


ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி


ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி


ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி


ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி


ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி


ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி


ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி


ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி


ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி


ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி


ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி


ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி


ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி


ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி


ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி


ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி


ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி


ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி


ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி


ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி


ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி


ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி


ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி


ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி


ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி


ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி


ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி


ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி


ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி


ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி


ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி


ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி


ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி


ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி


ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி


ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி


ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி


ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி


ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி


ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி


ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி


ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி


ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி


ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி


ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி





==================
# நிறைவுப் பாடல்
==================

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

குருநாதர் :- எதை, எதை என்று  புதிது புதிதாகவே அறிந்தும் இவை ஒன்றும் தெரியா. இதனால் நிச்சயம் தன்னில் கூட அழிவுகள். எதை நோக்கி நிச்சயமாய் எதை என்று புரிந்தும் கூட. 

இதனால்தான் பின் ஞானியர்கள் கூட போற்றியை அழகாக நிச்சயம் தன்னில் கூட, மறைந்து இன்னும் மறைந்து வாழ்ந்து கொண்டே. 

========================================
# ஞானியர்கள் மீது பரிபூரணமாக அன்பை காட்டினாலே போதுமானது.
========================================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட அவர்களை கூட பின் மனதார வரவழைத்து பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அதாவது எவ்வாறு என்பதை எல்லாம் பரிபூரணமாக அன்பை காட்டினாலே போதுமானது. பின்  தாயே தந்தையே நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அவர்கள் வந்து காத்துக் கொள்வார்கள். 

ஏன் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும்? என்பவை எல்லாம். இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் உண்மையை எப்பொழுதும் மனிதன் எதை ஏதோ தான் என்று விட்டு விடுவான் நிச்சயம் தன்னில் கூட. 

=========================================
# இன்றைய தினம் நிச்சயம் ஞானியர்கள் பற்றித்தான் நிச்சயம் போற்றி புகழ்ந்து பாட வேண்டும்.
=========================================

குருநாதர் :- இதனால் நிச்சயம் எதை என்று கூற  அடுத்து அடுத்து இத்தேசத்தில் நிலநடுக்கம் நிச்சயம் பின் வரப்போகின்றது. இதை யார் தடுப்பார்கள்? 

குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் ஞானியர்களை ஒன்றே பின் தடுப்பதற்கான நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- இதனால் இன்றைய தினம் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் ஞானியர்கள் பற்றித்தான் நிச்சயம் போற்றி புகழ்ந்து பாட வேண்டும். சொல்லிவிட்டேன் நல்விதமாக. எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் இத்தேசத்தை காக்கட்டும். நிச்சயம் பின் 63 நயன்மார்களைப் பற்றி நிச்சயம் போற்றி என்று பாடுக.பாடுக.


சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த தேசத்துல நிலநடுக்கம் வரப்போகுதுன்ற தகவல் சொல்றாங்க. இந்த மாதிரி கஷ்டமான நேரத்துல அந்த 63 நாயன்மார்களும், மத்த ஞானிகளும்தான் நம்மள காப்பாத்த முடியும்; அவங்களால மட்டும்தான் இது சாத்தியம். அதனால நீங்க மத்தவங்க நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க, உங்க கஷ்டத்தை அந்த ஞானிகளே பார்த்துப்பாங்க. அவங்களோட அருளைப் பெற அந்த நாயன்மார்களோட போற்றியைப் பாடுங்கன்னு ஐயா சொல்றாரு.")


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :-  ( 63 நாயன்மார்கள் போற்றி  பாடல்கள் துதித்தனர் அடியவர்கள் …)

====================================================
# உண்மைகளை தெரிந்து கொண்டு இறைவனை வணங்கினால் மட்டுமே வெற்றி உண்டு.
====================================================

குருநாதர் :- அப்பனே, அம்மையே, ஏன், எதற்காக இவ்வளவு உண்மைகள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. உண்மைகளை தெரிந்து கொண்டு இறைவனை வணங்கினால் மட்டுமே வெற்றி உண்டு எல்லாம் நிச்சயம் பல வாக்கு வாக்குகளில் யான் சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இறைவனை இவ்வளவு வணங்குறோம் நம்ப, ஏன் பக்தி செலுத்துறோம், ஏன் கஷ்டம் வருதுன்னு சொன்னா, உண்மை தெரியாதது தான் காரணம். உண்மை தெரியாம நம்ம வணங்குனோம்னா என்ன ஆகும் வந்து கஷ்டங்கள், துன்பம் அதெல்லாம் வந்துட்டே இருக்கும். அப்ப உண்மை தெரிஞ்சு வணங்குங்கன்னு சொல்றாரு. 

=======================================
# உலகம் அறியாத இராவணேஸ்வரர் சிவராத்திரி ரகசியங்கள் ஆரம்பம் 
=======================================

==========================================
# சிவராத்திரியை ஏன் கடைபிடிக்கின்றோம் என்று யாருக்காவது தெரியுமா?
==========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இராவணனைப் பற்றி இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன். அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரியை ஏன் கடைபிடிக்கின்றோம் என்று யாருக்காவது தெரியுமா? என்றால் நிச்சயம் தெரியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் இராவணனைப் பற்றி இப்ப சொல்லப்போறேன் என்றார் அகத்தியர். சிவராத்திரி ஏன் கடைபிடிக்கிறோம்னு யாருக்காவது தெரியுமா? யாருக்குமே தெரியாது. 

குருநாதர் :- ஆனாலும் ஈசன் கொடுப்பான் என்பதை எல்லாம் நம்பிக்கையுடனே செய்கின்றீர்கள், அவ்வளவுதான். ஆனாலும் நிச்சயம் எதை என்று கூற. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனால் ஈசன் ஏதோ ஒன்னு நமக்கு வந்து நல்லது செய்வார், அவ்வளவுதான் என்று சொல்லிட்டு தான் நீங்க கும்பிடுறீங்க. 

==============================================
# உண்மை அறிந்து நிச்சயம் வணங்கினால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு. 
==============================================


குருநாதர் :- ஆனாலும் உண்மை அறிந்து நிச்சயம் பின் வணங்கினால் அதன் மதிப்பு ஆயிரம் பின் மடங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-   எப்பவுமே உண்மை தெரிஞ்சுக்கிட்டு நல்லா வணங்குனோம்னா அதுக்கு என்ன மதிப்பு?

அடியவர் :- ஆயிரம்.

சுவடி ஓதும் மைந்தன் :- ஆயிரம் மதிப்பு. 

===============================================
# சிவராத்திரி  - இதை உருவாக்கியவனே இராவணன் தான்.
===============================================

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரி ஏன், எதற்காக, எவை என்று அறிய இதை உருவாக்கியவனே இராவணன் தான்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( உண்மை அறிந்து பரவசத்தில் பலத்த கைதட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சிவராத்திரி யார் உருவாக்கினார் யாருக்காவது தெரியுமா இதுவரைக்கும்?

அடியவர் :- தெரியாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  யாருக்கும் தெரியாது. இதை வந்து உருவாக்கினதே யாரு?

அடியவர் :-  இராவணன்.

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் தானாம். 

=============================================
# இராவணேஸ்வரரைப் பற்றி ஒரு பாடலை பாடுக
=============================================

குருநாதர் :- நிச்சயம் அவனைப் பற்றி இங்கு சொல்லப் போகின்றேன். நிச்சயம் இதனால் அவனைப் பற்றி நிச்சயம் தன்னில் ஏதாவது ஒரு பாடலை பின் பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணனைப் பற்றி இப்ப நான் எடுத்துரைக்க போறேன். அவரைப் பற்றி ஏதாவது பாடல் ஏதாவது வச்சிருக்கீங்களா யாராவது? இராவணனைப் பற்றி ஏதாவது பாடுங்க. இராவணனைப் பற்றி. அப்ப சிவராத்திரி கண்டுபிடிச்சதே யாரு?

அடியவர் :- இராவணன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணன். எதனாலன்னு சொல்லிட்டு நான் சொல்லப்போறேன். சிவராத்திரி பற்றி சொல்லப்போறேன்றேன்.

=========================================
# இராவணன் பாடல் பிறந்த கதையும் குருநாதர் கருணையும்
===========================================
============================================
அகத்தியர் மீது பேரன்பும் பெரும் பக்தியும் கொண்ட பாடகர் திரு தேவராஜன் ஐயா,
குருநாதரை நினைத்து பல பாடல்களை எழுதி இசை பாடலாக வெளியிட்டு தமது பக்தியை வெளிப்படுத்தி வருபவர். 

இவரை ஒவ்வொரு கூட்டுப் பிரார்த்தனையின் போதும் ......."அன்போடு பைத்தியக்காரா, வந்து இந்த பாடலைப் பாடு" என்று சித்தர்கள் உரிமையோடு பாடலைப் பாடவைத்து....முருகனை அழைத்து ஆட வைத்து ஈசனையும் மீனாட்சி அன்னையையும் பிள்ளையாரையும் ஐயப்பனையும் பெருமாளையும் வரவழைத்து இவரை பாடலை பாட வைத்து சாதுக்களையும் மகிழ்வித்தும், பொதுமக்களுக்கு பக்தி ஞானத்தை ஊட்டுவதற்கும் பாட வைக்கும் பாடகர் இந்த தேவராஜன் ஐயா.

இவருடைய முற்பிறவியைப் பற்றியும் குருநாதர் ஏன் ??இவந்தனை அழைத்து பாட வைக்கின்றோம்??? என்றால், முன்னொரு ஜென்மத்தில் தெருப்பாடகனாக இருந்து பாடல்களைப் பாடிப் பாடி யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் மக்களுக்குத் தொண்டு செய்த உத்தமன்

அந்த புண்ணியத்தின் பலனாக இன்று இதுபோன்று சத்சங்கங்களில், கூட்டுப் பிரார்த்தனைகளில் பாட வைத்து இதன் மூலம் பக்தியையும் மக்களுக்கு போதனைகளையும் கூறுவதற்கு பாட வைக்கின்றோம்.
என்று கடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனையின் போது கூறிய வாக்கு அனைவருக்கும் நினைவிருக்கும்.

மற்ற ஆயிரம் பாடகர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள், அவரையெல்லாம் அழைக்காமல் இவரை ஏன் அழைத்து பாட வைக்கின்றோம்??? என்பதற்கு குருநாதர் கூறிய முன்ஜென்ம வாக்கு இது.

அதுமட்டுமில்லாமல், இவனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இவந்தனை பாட வைத்து, பாட வைத்து இதுபோன்று புண்ணியங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கர்மங்களை அழிப்பதற்கும் காசுக்காக பாடாமல் இனி இதை ஒரு ஆன்மீக சேவையாக செய்ய வேண்டும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவும்... செல்லமாக குருநாதரால்......இந்த.... பைத்தியக்கார மகன் என்று அழைக்கப்படும் திரு தேவராஜன் மகனை  தேர்ந்தெடுத்து சித்தர்கள் ஒவ்வொரு முறையும் பாட வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அதேபோன்று திரு அகத்திய மைந்தன் ஜானகிராமன் ஐயா, குருநாதர் உத்தரவுப்படி இலங்கையில் நடந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு சென்ற பொழுது இந்த பாடகரான அடியவரும் சென்றிருந்தார்.

அங்கு திரிகோணமலையில் இராவணனைப் பற்றி குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் உலகம் இதுவரை அறிந்திராத இராவண ரகசியங்களை எடுத்துக் கூறிய பொழுது, இராவணனைப் பற்றி நினைத்து மனமுருகி நம்மளுடைய பெரும் பாட்டனார் இராவணன் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றார், இவருக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் குருநாதர் அருளால் அவர் மனதில் தோன்றி, அதை இராவணன் தன்னுடைய தாயின் மீது கொண்ட பக்தியை மனதில் எண்ணி உருகி இலங்கையைச் சேர்ந்த ஒரு அடியவரோடு இரவு ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுதே குருநாதர் அதைக் கேட்டிருக்க வேண்டும். 

மறுநாள் நான்கு வரிகளை மட்டும் தயார் செய்து, அதற்கு ராகமும் இசைத்து, அதை பாடுவதற்கு முழு பாடலாக செய்வதற்கு தயாராக இருந்த பொழுது, கொழும்பில் நடந்த இந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது, கூட்டுப் பிரார்த்தனையின் துவக்கத்தின் போதே... குருநாதர் ஓலைச்சுவடியில்.... அதாவது.... வாக்குகள் தர தொடங்கிய பொழுதே...

 மகனே...... "பாடு, இராவணனைப் பற்றி பாடு" என்று உத்தரவிட்டார்.

இந்த அடியவருக்கு அப்படியே மெய் சிலிர்த்து விட்டது.

ஏனென்றால் இரவு இராவணனைப் பற்றி யோசித்து பாட வேண்டும் என்று நான்கு வரிகள் தான் தயார் செய்தோம். அதற்குள் நாம் என்ன பேசினோம், மனதில் என்ன இருக்கின்றது??? என்பதை அறிந்து உடனடியாக "பாடு" என்று சொல்லிவிட்டாரே என்று உடனடியாக அந்த நான்கு வரிகளை பாடி, மனமுருக பாடி, "அப்பா, இதுவரை இந்த வரிகளை மட்டும் செய்திருக்கின்றேன்; முழு பாடலையும் தயார் செய்து விடுகின்றேன்"
என்று குருநாதருக்கு மெய்சிலிர்த்து நன்றி பெருக்குடன் கூறினார்.

அப்பொழுது, மற்றொரு அடியவர் இராவணனைப் பற்றி ஏற்கனவே இருந்த பாடலை எடுத்துக் கொடுக்க அந்த முழு பாடலையும் அங்கு கூட்டுப் பிரார்த்தனையில் பாடினார்.

இந்த பாடல் பிறந்த கதை இப்படித்தான்: உண்மையான பக்தியோடு ஆத்மார்த்தமாக நடந்து கொண்டாலே சித்தர்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் சென்று உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று பல மேடைகளில் ஏற்றி விடுவார்கள்; பல கர்மாக்களை கரைத்து விடுவார்கள்; பல புண்ணியங்களை சேர்த்துக் கொடுப்பார்கள்.  அதற்குரிய உதாரணம்தான் இது. இராவணனைப் பற்றி அவர் எழுதிய பாடல்களும் பதிவில் அதிவிரைவில் வெளிவரும்.
===========================================

பாடகர் :- ( எழுதிய  இராவணேஸ்வர் போற்றி துதி )

உன் தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா, 
உன் தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா, 
உன் அன்பிற்கும் பாசத்திற்கும் நிகரேது, நிகரேது 
அன்பிற்கும் பாசத்திற்கும் நிகரேது, நிகரேது 
தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா
தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா
தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா
தாயின் மீது பாசம் கொண்ட லங்கா ராவணா
லங்கா ராவணா, 
ஸ்ரீ லங்கா ராவணா.


பாடகர் :- ( தனது 6 வருடம் முந்தைய அனுபவங்களை பகிர்ந்தார் ) ஆக்சுவலா வந்து (அகத்தியர்) தாத்தா வந்து, ஃபர்ஸ்ட் ஒரு சிக்ஸ் இயர்ஸ் பேக்ல இருந்து ராமேஸ்வரத்துல வந்து ஒரு பாடல் எழுதி கம்போஸ் பண்ணாங்க. இராவணன் சிவபக்தன். அந்த பாடல் பாடுனோம். அது வந்து சிவபெருமான் வந்து ஓலையில வந்து ரிப்பீட்டடா கேட்ட சாங்.

=========================================
இவ் பாடகர் உரைத்த அவ் நிகழ்வு - சித்தன் அருள் - 1099 - அன்புடன் அகத்தியர் - மறு பிறவி தந்த கருணைத் தெய்வம்!
ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ஒவ்வொரு சன்னதியாக மனம் உருகி பாடி தொழுதுவிட்டு ஜீவனாடி வாக்கு கேட்கும் பொழுது.... அண்ட சராசரங்களையும்  ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் ஈசனே வந்தார்....... அன்பு குழந்தாய்காள்!!!! நீங்கள் பாடிய பாட்டைக் கேட்டு யான் ஓடோடி வந்தேன்.... மீண்டும் ஒரு முறை பாடு . யான் கேட்க வேண்டும் என ஈசனே விருப்பப்பட்டு மீண்டும் பாடச்சொல்லி காது குளிர கேட்டார். மொத்த குடும்பமும் சர்வமும் அடங்கி கைகூப்பித் தொழுது ஈசனே நம்மிடத்தில் பாடச் சொல்லிக் கேட்கிறார் என்றால் அது நமக்கு கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம் என மீண்டும் அப் பாடலை பாடி ஈசனை கேட்பிக்க வைத்தனர்.

ஈசனும் பாடல் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதங்கள் கொடுத்து விட்டுச் சென்றார்.
https://siththanarul.blogspot.com/2022/03/1099.html
=========================================


==============================
# குருநாதர் போற்றி துதி பாடல் 
==============================

சிவ சிவ சிவ சிவ சிவ என்போர் 
குருவே சரணம் அவன் சொன்னால் 
சிவ சிவ சிவ சிவ சிவ என்போர் 
குருவே சரணம் அவன் சொன்னால் 
தந்தேன் எனையே உனக்காக 
வரமாய் அருள்வாய் எமக்காக 
தந்தேன் எனையே உனக்காக வரமாய் அருள்வாய் எமக்காக.

சிவ சிவ சிவ சிவ சிவ என்போர் குருவே சரணம் அவன் சொன்னால் 

சந்நிதி வந்து சரணடைந்தாலே சஞ்சலம் எல்லாம் பறந்தோடிவிடும் 
உன் சந்நிதி வந்து சரணடைந்தாலே சஞ்சலம் எல்லாம் பறந்தோடிவிடும் 
உன் ஒரு நொடிப்பொழுதுன் பார்வையினால் ஓடிவிடும் என் துயரம் எல்லாம் 
ஒரு நொடிப்பொழுதுன் பார்வையினால் ஓடிவிடும் என் துயரம் எல்லாம் 
எப்போதும் என்னைக் காத்தருள்வாயே என் குருநாதா 
சிவகுருநாதா சத்குருநாதா 

சிவனே 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய 
ஓம் நமசிவாய.


=========================================
# இலங்கை வேந்தன் இராவணன் போற்றி துதி 
=========================================

==============================================
# அடியவர்கள் சிவராத்திரி அன்று பலமுறை இந்த பாடலை பாடுங்கள். சிவராத்திரியை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவரே இராவணேஸ்வரர் தான்.
==============================================

தென்னிலங்கை வேந்தன் ராவணன் 
எங்கள் தென்னிலங்கை வேதன் ராவணன் 
கயிலை மலையை அசைத்தவீரா 
கனல் விழீசனை இசையால் வென்றாய் 
கயிலை மலையை அசைத்தவீரா 
கனல் விழீசனை இசையால் வென்றாய் 

உடல் நரம்பை வீணையாய் மீட்டி நின்றாய் 
உடல் நரம்பை வீணையாய் மீட்டி நின்றாய் 
அந்த உடுகை நாதனும் உருகிடச் செய்தாய் 
அந்த உடுகை நாதனும் உருகிடச் செய்தாய் 

தென்னிலங்கை வேதன் ராவணன் 
எங்கள் தென்னிலங்கை வேதன் ராவணன் 
பொன்னகர் இலங்கையின் காவலனே 
பூவுலகம் வியக்கும் பாவலனே 

பொன்னகர் இலங்கையின் காவலனே 
பூவுலகம் வியக்கும் பாவலனே 

வேதங்கள் நான்கும் கரைக் கண்டவன் நீ 
வீரம் செறிந்த தோளுடையவன் நீ 
வேதங்கள் நான்கும் கரைக் கண்டவன் நீ 
வீரம் செறிந்த தோளுடையவன் நீ 
பத்து தலையில் அறிவுச்சுடர் 
பகைவர் நடுங்கும் பெரும் இடர் 

பத்து தலையில் அறிவுச்சுடர் 
பகைவர் நடுங்கும் பெரும் இடர் 

சிவனருள் பெற்ற எம் குலவேந்தே 
சிவனருள் பெற்ற எம் குலவேந்தே 
இன்றும் செந்தமிழ் காவியம் உனைப் புகழுதே 
தென்னிலங்கை வேந்தன் ராவணன்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கரகோசங்கள் , கைதட்டல்கள் )

குருநாதர் :-அப்பனே அம்மையே எதை என்று கூற. மிகுந்த பாசம் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணன் முருகன் மேலே வைத்திருந்தான் நிச்சயம் தன்னில் கூட இவை யாருக்கு தெரியும் இதனால் நிச்சயம் தன்னில் கூட பாச மகனைப் போற்றி நிச்சயம் தன்னில் கூட பாச மகனை நிச்சயம் தன்னில் கூட பாடு நிச்சயம் தன்னில் கூட. அழையுங்கள். பின் இராவணனைப் பற்றி யான் எடுத்துரைக்கின்றேன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அப்ப, இந்த "பாச மகன்" யாருன்னு பார்த்தா அது நம்ம முருகர்தான். என்னது, முருகர் இராவணனுக்கு பாச மகனான்னு நீங்க ஆச்சரியப்படலாம், ஆனா அதான் உண்மை. இதைப் பத்தி தெளிவான உண்மை நிலை பல பேருக்குத் தெரியல. முருகரைப் பத்தி பாடச் சொல்லும்போதே ஒரு விஷயம் புரியுது—முருகர் வர்ற இடத்துல இராவணனும் வந்து அவரால முடிஞ்ச எல்லாத்தையும் செய்வாராம். ஏன்னா, இராவணனுக்கு முருகர் அவ்வளவு செல்லமான ஒரு பாசக் குழந்தை. இந்த மாதிரி மறைக்கப்பட்ட உண்மைகள் பலதும் இன்னும் மனுஷங்களுக்குப் போய் சேரல. எதையுமே தெரியாம சும்மா கும்பிடுறதை விட, இந்த மாதிரி விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு வணங்குனோம்னா, அந்த இறை ஆற்றல் நமக்கு ரொம்ப சுலபமாவும் வேகமாவும் கிடைக்கும்ங்கிறதுதான் இங்க முக்கியமான விஷயம்.)

பாடகர் :- ( பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்கள் )

(கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை…….)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment