அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10
நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருக்கேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99
அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம், இலங்கை இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10 )
குருநாதர் :- அப்பனே, நல் முறையாகவே எம்முடைய ஆசிகள். நல் விதமாகவே, அப்பனே, ஆசிகளால் அப்பனே இன்னும் பெருகட்டும், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட ஞானியின் அருள். இதனால் ஞானிகளின் பின் நிச்சயம் போற்றி பாடுக.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஞானிகளோட போற்றி பாடல்)
==========================================
# கேது பகவானை கட்டுப்படுத்தும் அறிவுரைகள் , வழிமுறைகள் , வழிபாடுகள்
==========================================
குருநாதர் :- அப்பனே, நல்ல ஆசிகள்.
அப்பனே, பல வழிகளில் கூட,அப்பனே, ஞானங்கள். அப்பனே, பல மக்கள் அப்பனே, பெற்றிட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
பல வாக்குகள் எடுத்து. அப்பனே, சித்தர்கள் யாங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் வருங்காலத்தில். இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட.
பின், அதாவது, அப்பனே, எது என்று கூற, அப்பனே, பின், அதாவது, பின் கேதுவை அப்பனே கட்டுப்படுத்த அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட யான் எடுத்துரைத்துவிட்டேன்.
====================================================
# விநாயகர் அகவல் இடையிடையே ஓதி வருதல் சிறப்புத் தரும்.
====================================================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, பின் அதனைத் தாக்கத்தை பின் குறைக்க, அப்பனே, பின் விநாயகர் அகவலையும் கூட. அப்பனே, இடையிடையே ஓதி வருதல் சிறப்புத் தரும் என்பேன் அப்பனே.
=====================================
# ஞானங்கள் பெற - விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணமிட்டு மனதில் என்ன வேண்டுகின்றோமோ - அது நிறைவேறும்.
======================================
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஞானங்கள் பெற, அப்பனே, பின் எது என்று புரிந்தும் கூட, அப்பனே, பின் இவ்வாறாக.
அப்பனே, அதுமட்டுமில்லாமல், அப்பனே, பின் நல்விதமாகவே அப்பனே, விநாயகப் பெருமானுக்கு அப்பனே, பின் அனுதினமும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் தோப்புக்கரணமிட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் எது என்று புரிய. அப்பனே, சரியாகவே. அப்பனே, பின் மனதில் அப்பனே, பின் என்ன வேண்டுகின்றோமோ அதைத்தான் நிச்சயம் தன்னில் கூட.
============================================
# அரச மர வழிபாடு: அரச மரத்தைச் சுத்தி வந்து, 108 தீபங்கள் ஏத்தி வழிபடணும். அங்கே கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து தியானம் செய்றது விசேஷம். முந்தய பதிவுகளில் உரைத்த வாக்கின்படி - நல் எண்ணங்கள் வளரும். கிரகங்கள் தாக்காது.
============================================
குருநாதர் :- அப்பனே, பின் அரச இலையில் கூட, அப்பனே, சுற்றி. அப்பனே, நல்விதமாகவே. அப்பனே, பின் 108 தீபங்களை ஏற்றி, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, எது என்று புரிய அப்பனே.
பின் அதுமட்டுமில்லாமல், அப்பனே, நல்விதமாக எது என்று புரிய, பின் அங்கே அமர்ந்து, அப்பனே, பல வழியிலும் கூட. பின் தியானங்கள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே.
===============================================
#தியானம்: தியானம் மூலம் மனதை ஒருநிலை படுத்துங்க. அப்படிச் செஞ்சா, அடுத்தடுத்து நீங்க என்ன செய்யணும்ங்கிறதை சித்தர்களாகிய நாங்களே உங்களுக்கு வழிகாட்டுவோம்.
===============================================
குருநாதர் :- இவ்வாறாக, அப்பனே, தியானங்கள் செய்து முதலில் மனதை கட்டுப்படுத்தினால், அப்பனே, பின்பு என்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே, தானாகவே அப்பனே, சித்தர் எடுத்துரைப்பார்கள்.
================================================
# மனதை அடக்குதல்: முதல்ல 'மனம்' என்கிற பேயை அடக்கப் பழகணும். மனசு அலைபாயுறதை நிறுத்தி அதைக் கட்டுப்படுத்தினா மட்டும்தான், நாங்க (சித்தர்கள்) சொல்லித்தர்ற விஷயங்கள் உங்களுக்குப் புரியும், அது மனசுல நிக்கும்.
================================================
குருநாதர் :- அப்பனே, முதலில் அப்பனே மனம் என்ற பேயை கட்டுப்படுத்த வேண்டும். அப்பனே, பின் அவை தன். அப்பனே, அப் பேயை பின் கட்டுப்படுத்தினால், அப்பனே, பின்புதான் அப்பனே, பின் அனைத்தும். அப்பனே, சொல்லித் தந்தாலும் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நிற்கும்.
குருநாதர் :- அப்பனே, பின் நிற்பதை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுதுதான் பின் செயல்படுத்தவும் முடியும் அப்பனே, நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (விநாயகப் பெருமானுக்கு அரச மரத்தடியில் 108 தீபம் ஏத்திட்டு, அங்கேயே கொஞ்ச நேரம் அமைதியா உட்காரணும்னு சொல்றாருப்பா. முக்கியமா, நம்ம மனசுங்கிறது ஒரு பேய் மாதிரி; அதை முதல்ல அடக்கப் பழகணும். மனசு கட்டுப்படலன்னா நாம எதைச் செஞ்சாலும் அதுல ஒரு பிரயோஜனமும் இருக்காது. அதுக்குதான் அரச மரத்தடியில தீபம் ஏத்திட்டு தியானம் செய்ய சொல்றாரு. அப்படி தியானம் செஞ்சாலே மனப்பேய் தானா அடங்கிடும். மனசு ஒருமுறை அடங்கி தெளிவாயிடுச்சுன்னா, அப்புறம் நடக்க வேண்டியதெல்லாம் தானா நடக்கும். அதோட கேது பகவானோட ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த விநாயகர் அகவலையும் படிக்கச் சொல்றாரு. இதைச் செஞ்சாலே எல்லாம் சரியாகிடும்!)
==========================================
# கேதுவின் ஆதிக்கமும், நம் கர்ம வினைகளும்
==========================================
===========================================
# வாக்கு சுருக்கம் :- மனிதன் வளர வளர அவனிடம் சேரும் தீய எண்ணங்களே அவனுக்குப் பெரிய சுமையாக மாறுகின்றன. இந்தத் தீய எண்ணங்களை கேது பகவான் தன் பக்கம் ஈர்த்து, ஒரு கதிர்வீச்சைப் போல நாம் செய்த வினைகளை அப்படியே நம்மிடமே திருப்பித் தருகிறார். இதனால்தான், ஒரு மனிதன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன் கர்ம வினைகளை அனுபவித்தே தீர்க்க வேண்டியுள்ளது. இந்தத் தொடர் பிறவிச் சுழற்சியும் கஷ்டங்களும் இதனால்தான் உண்டாகின்றன. ஆனால், கேதுவின் பிடியிலிருந்தும் இந்த வினைகளின் தாக்கத்திலிருந்தும் ஒருவரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் அல்லது அதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூட்சுமம் சித்தர்களுக்கு மட்டுமே தெரியும்.
===========================================
குருநாதர் :- எதை எவை என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் வளர வளர. அப்பனே, தீய எண்ணங்கள்.
அப்பனே, பின் அத் தீய எண்ணங்கள். அப்பனே, பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, கேது. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் ஈர்த்து, அப்பனே, பின் அவை தன் எதை என்று புரிய. அப்பனே, அப்படியே அதைத்தன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு ஒரு கதிர் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட எதை என்று புரிய, அப்பனே, மீண்டும் அப்பனே சென்று சென்று வந்தாலும், அப்பனே, பின் கேதுவில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ‘
அப்பனே அக் கதிர் அப்பனே, என்னென்ன ஏது செய்ததோ அதை அப்படியே பிரதிபலிக்கும் என்பேன் அப்பனே. அப்படியே கொடுக்கும் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கேதுவானவனும், அதை நிவர்த்தி.
அதாவது, அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அனுபவித்தே பின் தீர்க்க வேண்டும் என்பது.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, பல வகையினால் அப்பனே, பல பிறப்புகள் எவை என்று அறிய, அப்பனே, பின் எடுத்து, எவை என்று புரிய, அப்பனே, இதனால் மீண்டும் மீண்டும்.
அப்பனே, இதனால்தான். அப்பனே, பின் அவை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் சித்தர்களே என்பேன். அப்பனே.
===================================
# கேதுவின் கணக்கும் நமது கர்ம வினையும்.
===================================
சுவடி ஓதும் மைந்தன் :- ( நாம செய்யற ஒவ்வொரு கெட்ட விஷயத்தையும் கேது பகவான் அப்படியே ஒரு 'சேவிங்ஸ்' அக்கவுண்ட் மாதிரி சேர்த்து வைப்பாராம். நாம எதைச் செஞ்சாலும் அது ஒரு தொடர்கதை மாதிரி நம்ம பின்னாடியே வந்துகிட்டே இருக்கும். இந்த ஒரு ஜென்மத்துல நாம பண்ற தப்புங்க, அடுத்தடுத்த பிறவிகள் எடுத்தாலும் நம்மள விடாது. எத்தனை வயசானாலும் சரி, எத்தனை பிறவி எடுத்தாலும் சரி, நாம செஞ்ச வினைப்பயன் அப்படியே தான் இருக்கும். கேது பகவான் அந்தக் கணக்கைச் சரியா வெச்சிருந்து, நாம செஞ்சதுக்கு ஏத்த பலனை அடுத்தடுத்த பிறவிகள்ல அனுபவிக்க வைப்பார்னு இப்போ சுவடி மூலமா தெளிவா தெரியுதுப்பா.)
குருநாதர் :- அப்பனே, இதனால் அப்பனே உன்னை சார்ந்தோரின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்மைகளும் கூட அதில் இருக்கும் அப்பா. இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நம்ம கூட இருக்கிறவங்கள்ள நல்லவங்களும் இருப்பாங்க, கெட்டவங்களும் இருப்பாங்க. ஆனா நாம பண்ற தப்புங்க இருக்கு பாத்தீங்களா, அது எங்கேயும் போகாது; அப்படியே அங்கேயேதான் தங்கி நிற்குமாம். அதாவது, ஒரு 'மெமரி' மாதிரி நாம செஞ்ச விஷயம் அழியாம நிலைச்சு நிக்கும்னு சொல்றாரு. நாம என்னதான் தப்பிக்க நினைச்சாலும், அந்தப் பதிவுகள் அப்படியே இருக்கும்கிறதுதான் இதோட சாராம்சம்.)
===========================================================
# பின் வரும் வாக்கின் சுருக்கம் :- கர்ம வினைகளும் கேதுவின் தாக்கமும் - ஒரு மனிதன் எடுக்கின்ற ஒவ்வொரு பிறவியிலும் அவனது முந்தைய கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆன்மா எனும் இவ்வணு எப்போதெல்லாம் புதிய பிறவி எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் கேது பகவானின் ஆதிக்கம் அதனுடன் பிணைந்தே இருக்கும். நாம் செய்த வினைகளை கேது பகவான் மொத்தமாகத் தராமல், அவ்வப்போது சிறிது சிறிதாகக் கொடுத்துக் கொண்டே இருப்பார். இதனால்தான் மனித வாழ்க்கையில் கஷ்டங்கள் இடைவிடாமல் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் இன்பதுன்பங்கள் அனைத்தும் கேது பகவான் வழங்கும் அந்த வினைகளின் பலன்களே ஆகும்.
===========================================================
குருநாதர் :- அப்பனே, எவை எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அப்பனே, செயல்பட்டு செயல்பட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பிறவி எவை என்று. அப்பனே, பின் அதாவது எடுத்துக்கின்ற அப்பனே, இவ்வணு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- எப்பொழுதெல்லாம் எடுக்கின்றதோ, அப்பொழுதெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, கேது எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சம்பந்தங்கள் இருக்கும். அப்பனே, சிறிது சிறிதாக கொடுக்கின்ற பொழுதுதான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
===============================
# கர்ம வினைகளின் பதிவை அழித்தல்
===============================
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, இது உங்களுக்குப் புரியுதுங்களா? கேது பகவானோட இந்த ஆதிக்கம்ங்கிறது சும்மா இல்ல, இது பிறவி பிறவியா நம்ம பின்னாடியே வந்துகிட்டு இருக்கு. அப்படித் தொடர்ந்து வர்ற அந்தப் பழைய கர்ம வினைகளை நாம என்ன பண்ணனும்னா, அந்த 'பதிவை' (Record) முதல்ல அழிக்கணும். அந்தப் பதிவுகளைத் துடைச்சு எடுத்தா மட்டும்தான் அந்தப் பாவம் அழியும். அப்படி இல்லன்னா அது அழியவே அழியாது; அதோட எஃபெக்ட் நம்மகிட்டயே ஒட்டிக்கிட்டு, அடுத்தடுத்த பிறவிகளுக்கும் விடாமத் தொடர்ந்துகிட்டே இருக்கும்னு சொல்றாங்க.)
=======================================
# அரச மரத்தை சுற்றினாலே போதும். கேதுவின் கர்ம பதிவுகள் அழித்துவிடலாம்.
# நல் வாழ்வு உண்டாகும். அடியவர்கள் - உடும்பு பிடியாக இடைவிடாமல் 108 முறை இயன்ற பொழுது அரச மரத்தை சுற்றவும்.
=======================================
அடியவர் :- (அகத்தியர் அய்யா , கேதுவின் அந்த கர்மா பதிவு ) அது அழியறதுனா என்ன செய்யணும்?
குருநாதர் :- எதை எதை என்று பொறுத்து, அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அரச எவை என்று புரிய. அப்பனே, மரத்தை சுற்றினாலே போதுமானது அப்பா.
அடியவர் :- அரச மரம் சுத்துறதுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அரச மரம் சுட்டுனாவே,
அடியவர் :- எல்லா இடமும் இருக்கு தானே? எல்லா இடமும் இருக்கு. அரச மரம் சுட்டுனாவே, எல்லாம் இருக்கு தான்.
===============================================
# விநாயக பெருமான் அரசமரத்தின் கீழே அமர்ந்து இருக்கும் ரகசியங்கள்.
# அரச மர வழிபாடும் ஞானமும்.
===============================================
===============================================
# பின் வரும் வாக்கின் சுருக்கம் :- ஞானக்காரகனாகிய விநாயகப் பெருமான் எங்கும் நிறைந்திருப்பவர் என்றாலும், அவருக்கு மிகவும் உகந்த இடமாகத் திகழ்வது அரச மரத்தடியாகும். அங்கு அவர் வீற்றிருப்பதால், அந்த அரச மரத்தை முழுமையான பக்தியுடன் சுற்றி வந்து வழிபடும்போது ஒருவருக்கு மெய்ஞ்ஞானம் உண்டாகும். அவ்வாறு ஞானம் பிறக்கும் பொழுது, கேது பகவானின் ஆதிக்கத்தால் ஒருவரது ஆன்மாவில் படிந்துள்ள முற்பிறவி கர்ம வினைகளின் பதிவுகள் யாவும் முற்றிலுமாக அழிக்கப்படும். எனவே, விநாயகர் அமர்ந்துள்ள அரச மரத்தை வழிபடுவதன் மூலம் ஞானத்தைப் பெற்று, கேதுவின் தீய வினைகளில் இருந்து , பதிவுகள் அழிக்கப்பட்டு ஒருவர் விடுதலை பெற முடியும் என்று குருநாதர் அருளியுள்ளார்.
===============================================
குருநாதர் :- இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் ஞானக்காரகன் (விநாயக பெருமான்) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் பிள்ளையோன் அப்பனே எங்கிருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட (அரச மரம்) அங்குதான் அமர்ந்திருப்பான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- (அரச மரம்) அங்குதான் அவன் தனக்கு பிடித்த இடம் என்பேன். அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் (அரச மரம்) சுற்றி வந்தாலே, அப்பனே, ஞானம் பிறக்கும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அவ் ஞானத்தினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கேதுவில் உள்ள. அப்பனே, பின் பதிவுகள், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அழிக்கப்படும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அரச மரத்தடி தான் பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்ச இடமாம். அதனால அங்க போய் நாம அவரைச் சுத்தி சுத்தி வந்தோம்னா, விநாயகரோட முழு அருளும் நமக்குக் கிடைக்கும்; அதோட நமக்குள்ள ஞானமும் பிறக்கும். ஒருவாட்டி நமக்கு அந்த ஞானம் வந்துட்டா போதும், கேதுவோட ஆதிக்கத்தால் இருக்கும் அந்தப் பழைய கர்ம வினைகளை எல்லாம் ரொம்ப சுலபமா அழிச்சிரலாம். ஞானம் இருந்தா கேதுவோட பிடியில இருந்து ஈஸியா வெளிய வந்துடலாம்னு இதோட அர்த்தம்.)
====================================================
# அரச மர வழிபாடும் - இறை அருளும்
====================================================
# பின் வரும் வாக்கின் சுருக்கம் - அரச மரத்தை முறையாகச் சுற்றி வந்து வழிபடும்போது ஒருவருக்கு ஞானம் பிறக்கிறது; அவ்வாறு ஞானம் உண்டாகும் பொழுது ஈசனின் பேரருளும் ஒருவருக்குக் கிட்டும் என்று குருநாதர் அருளியுள்ளார். விநாயகர் வீற்றிருக்கும் அந்த அரச மரத்தை வலம் வருவதால், நவகிரகங்களின் தோஷங்கள் ஒருவரைத் தாக்காது. அந்த வழிபாட்டிற்கும் இறை அருளுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு செயல்பட வேண்டும், உலக இன்பங்களையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு அனுபவிக்க வேண்டும், மற்றும் வாழ்வின் உண்மைத் தன்மைகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற அனைத்து ரகசியங்களும் அந்த அரச மரத்தடியில் அமர்ந்து தியானிக்கும் பொழுது தானாகவே புலப்படும்.
====================================================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக ஞானம் பிறக்கும் பொழுது, அப்பனே, ஈசன் அருள் கிட்டும் என்பேன் அப்பனே. இவ்வாறே கிடைக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய சற்று. அப்பனே, முன்பே அப்பனே, பின் சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம் தன்னில் அதை சுற்றினாலே கிரகங்கள், பின் தாக்காதப்பா, தாக்காது.
குருநாதர் :- இதனால் அவ் இடைவெளியில், அப்பனே, நாம் எதை என்று கூற, எப்படி செயல்படுத்த வேண்டும்? எப்படி உலகத்தை, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எவை என்று கூற, எவ்வாறு சந்தோஷங்கள் அறிய, எதை என்று புரிய அப்பனே, அனைத்தும் தெரிய வரும் என்பேன் அப்பனே, அங்கு அமர்ந்து விட்டாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அரச மரத்தடியிலே அமைதியா அமர்ந்துட்டாலே போதும், நமக்குள்ள நல்ல ஞானம் பிறக்கும்னு சொல்றாங்க. அங்க உட்கார்ந்து தியானிக்கும் போது, நாம எப்படி வாழ்ந்தா சரியா இருக்கும், வாழ்க்கையை எப்படி நடத்தணும்ங்கிற எல்லா நல்ல யோசனைகளும் தானாவே வரும். அங்க இருக்கும்போது மட்டும்தான் கிரகங்களோட பாதிப்பு நம்மளத் தாக்காது. அதுமட்டும் இல்லாம, வேப்ப மரம், வில்வ மரம், அப்புறம் குருந்த மரம் போன்ற புண்ணிய மரங்கள் இருக்கிற இடத்துலயும் கிரக தோஷங்கள் நம்மள நெருங்காது. இந்த மரங்களுக்கு அடியில அமர்ந்து தியானம் பண்றது நம்ம வாழ்க்கைக்குத் தேவையான தெளிவைத் தரும்பா.)
அடியவர் :- இப்ப இந்த மரம் எல்லாம் வீட்ல வச்சா தாக்காதா?
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய எங்கெல்லாம் அப்பனே , நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுது, பின் எதை என்று கூட சரிபார்த்து தான். அப்பனே, பின் முன்னோர்களும் கூட அப்பனே.
அடியவர் :- வீட்ல இருக்க கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எங்க இருக்குதோ, அங்க இருந்தா தான் அதற்கும் மதிப்பு.
================================================
# உலகப் பாதுகாப்பும் ஞானிகளின் அருளும்
================================================
================================================
# பின் வரும் வாக்கின் சுருக்கம் :- உலகிற்கு வரவிருக்கும் அழிவுகள் தற்சமயம் மிக வீரியமாக உள்ளன; அந்த அழிவுகளின் தன்மையை விவரித்தால் மக்கள் அச்சமடைந்து விடுவார்கள் என்பதால், அவற்றை வெளிப்படையாகக் கூறாமல் சித்தர்களாகிய நாங்களே அந்தப் பேரழிவுகளிலிருந்து உலகைக் காப்போம் என்று குருநாதர் அருளியுள்ளார். இந்த உலகையும் மக்களையும் யாரைக் கொண்டு, எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்ற சூட்சுமங்களை ஞானிகள் நன்கு அறிவர். ஞானிகளின் அருளாசியும் வழிகாட்டலும் என்றும் தொடர்வதால், அவர்கள் இவ்வுலகை அழிவிலிருந்து மீட்டெடுத்துக் காப்பார்கள் என்பது திண்ணம்.
==================================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே நல்விதமாகவே ஆசிகள். அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இன்னும் கூட. அப்பனே, ஞானிகள் காத்தருள. அப்பனே, பின் இவ்வுலகத்தை அவர்கள் காத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இன்னும் அழிவுகள் பலமாகத்தான் இருக்கின்றது. என்னென்ன அழிவுகள் என்று சொன்னாலும் பயந்து விடுவார்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. மக்கள் எது என்று புரிய, அதனால், அப்பனே, நாங்கள் சொல்லாமலே நிச்சயம் அழிவை காப்போம். அப்பனே, அவை மட்டுமில்லாமல் யார் மூலம் எதை காக்க வேண்டும் என்பவை எல்லாம் யாம் அறிவோம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் வந்து அழிவுகள் இருக்குது. அழிவுகள் இருக்குது. அதெல்லாம் சொன்னாலும் ஏன்னா மக்கள் பயந்துருவாங்க.
அடியவர் :- மக்கள் பயந்துருவாங்க. ஏதாவது பயம் வைக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எங்களால் அது வந்து காத்திட முடியும்.
=============================================
# அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானிப்பது மட்டுமல்லாமல், அங்கேயே படுத்து உறங்கினாலும் கூட அந்த மரத்தின் தெய்வீக ஆற்றலும் நற்பலன்களும் ஒருவருக்கு முழுமையாகக் கிட்டும்
==============================================
அடியவர் :- அப்ப ஒரு அரச மரத்து கிழே எவ்வளவு நேரம் இருக்கணும்? அப்ப எதுவும் கணக்கு இருக்கா?
குருநாதர் :- அப்பனே, நீ படுத்து உறங்கினால் கூட. அப்பனே, பின் எதை என்றால் அறிய. அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கேயே படுத்து உறங்கினாலும் சரிதான்ப்பா.
===========================================
# உலகில் உள்ள எந்த அரசமரம் கிழே இருக்கும் விநாயகப்பெருமான் என்றாலும் சரி , மிகவும் விசேஷமானதே.
============================================
அடியவர் :- அப்போ இப்ப அந்த அரச மரத்துக்கு இல்ல இருக்கிற அந்த பிள்ளையார், அரசடி பிள்ளையார்ன்னு.. இப்ப எங்க ஊர்ல நிறைய பிள்ளையார் கோயில் இருக்கு. அதெல்லாம் ரொம்ப விசேஷமா?
குருநாதர் :- அப்பனே, புரிந்து கொண்டால் சரி.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் ஏற்கனவே சொல்லிட்டேன். புரிந்து கொண்டால் சரி.
===============================================
ஞானிகளின் இருப்பும் உலகப் பாதுகாப்பும்
===============================================
===============================================
# இவ்வுலகின் நலன் கருதி, மெய் ஞானம் பெற்ற பல ஞானிகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். அறிவு சார்ந்த பல நிலைகளைக் கடந்து, உயரிய ஞானத்தைப் பெற்ற அந்தச் சித்தபுருஷர்கள் இவ்வுலகெங்கும் தங்களின் சூட்சும பிரசன்னத்தால் வியாபித்து நிற்கிறார்கள். வரும் காலங்களில் நிகழக்கூடிய பேரழிவுகளிலிருந்து இந்த உலகையும் மக்களையும் தங்களின் தவ வலிமையால் தடுத்து நிறுத்தி, அவர்கள் அரணாக இருந்து காப்பார்கள். ஞானிகளின் அருளாசியும் பாதுகாப்பும் எப்போதும் தொடரும் என்பதால், மக்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பதை குருநாதர் உறுதிப்படுத்துகிறார்.
===============================================
குருநாதர் :- அப்பனே, நலமாக இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கும் ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, பின் எதை என்று அறிவு சார்ந்த அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட. பின் ஞானங்கள் பெற்ற அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது ஞானிகள். அப்பனே, அங்கும் இங்கும் தவழ்ந்து நிற்கின்றனர் என்பேன் அப்பனே. இதனால். அப்பனே, பின் அழிவிலிருந்து அவர்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று புரிய அப்பனே, நிச்சயம். அப்பனே, காத்து பின் அருள்வார் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (இப்போ நம்ம உலகத்துல பல இடங்கள்ல நிறைய ஞானிகள் அங்கங்க தவம் செஞ்சு, அங்கேயே ஜீவ சமாதி அடைஞ்சிருக்காங்க. அது நம்ம கண்ணுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா அவங்க எல்லாரும் இன்னைக்கும் சூட்சுமமா இருந்து இந்த நாட்டைத் தான் காத்துக்கிட்டு இருக்காங்க. வரப்போற கஷ்டங்கள்ல இருந்து நம்மள காப்பாத்த, அவங்களே யாராவது ஒருத்தர் மூலமா நமக்குத் தேவையான தெளிவைக் கொடுப்பாங்க; இல்லன்னா வேற ஒரு ரூபத்துல வந்து நமக்கு உதவி செஞ்சு வழிநடத்துவாங்கன்னு சொல்றாருப்பா.)
=================================================
#திருமுறைப் பாராயணமும் மனத்தெளிவும்:-
பின் வரும் வாக்கின் சுருக்கம் :- இறைவன் மனிதகுலத்திற்குப் பேரருளாக எட்டாம் திருமுறையான திருவாசகத்தை அள்ளித் தந்துள்ளான். இவை தவிர தேவாரம், கந்தபுராணம் மற்றும் ஞானத்தைப் புகட்ட கூடிய பல உயரிய நூல்கள் இறைவழியில் அருளப்பட்டுள்ளன. இத்தகைய புண்ணிய நூல்களையும், ஞான நூல்களையும் மனிதர்கள் இடைவிடாது ஓதி (பாராயணம் செய்து) வந்தாலே போதும்; அவர்களுக்குள் இருக்கும் அறியாமை நீங்கி, வாழ்வின் உண்மைகளைப் பற்றிய தெளிவு தானாகவே பிறக்கும். இந்தத் திருமுறைகளை ஓதுவதே ஒரு மனிதன் ஞானம் பெறுவதற்கும், இறை அருளை அடைவதற்கும் மிகச் சிறந்த வழியாகும் என்று குருநாதர் வழிகாட்டுகிறார்.
=================================================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எட்டாம் திருமுறையான அப்பனே, பின் எதை என்று திருவாசகத்தை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதை என்று கூற (இறைவன்) அள்ளித் தந்துள்ளான். அவை மட்டுமில்லாமல் பல பல பின் வழியிலும் கூட பின் தேவாரம், அப்பனே , நிச்சயம் தன்னில் கூட. பின் கந்தபுராணம் இன்னும் கூட அப்பனே, பின் பல வழியில் கூட. அப்பனே, ஞானங்கள் பெற. அப்பனே, இன்னும். அப்பனே, புத்தகங்கள் இருக்கின்றன அல்லவா? அவையெல்லாம். அப்பனே, ஓதிக்கொண்டே அப்பனே, மனிதனுக்கு. அப்பனே, தெளிவு பெற. அப்பனே , நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, செய்துவிட்டாலே போதுமானது.
சுவடி ஓதும் மைந்தன் :- (தேவாரம், திருவாசகம், கந்தபுராணம்னு நம்ம முன்னோர்கள் எழுதி வச்சிருக்கிற இந்த ஆன்மீகப் புத்தகங்களை ஒரு மனுஷன் தொடர்ந்து படிச்சாலே போதும், அவன் வாழ்க்கையில இருக்கிற குழப்பமெல்லாம் தீர்ந்து எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்க.)
========================================
# மனிதன் தன் பேராசைகளை முற்றிலும் துறந்தால் மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும்; அத்தகைய ஆசைகளை வேரறுத்து மனத்தெளிவு பெற அரச மரத்தடி வழிபாடே (போதி மரம்) சாலச்சிறந்த வழியாகும்.
=======================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அவையெல்லாம் அப்பனே எப்படி படிப்பான்? என்பதெல்லாம் அப்பனே , நிச்சயம் ஆசை பெரிதாக இருக்கின்றது.
குருநாதர் :- மனிதனுக்கு அவை விட்டொழித்தால் மட்டுமே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் இவை பின் கொண்டு வர முடியும். இதனால்தான், அப்பனே , நிச்சயம் தன்னில் ஆசைகள் அகற்ற. அப்பனே, போதி மரமே (அரச மரமே ) சாலச்சிறந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- (நம்ம மனசுல இருக்கிற ஆசைகளை எல்லாம் முதல்ல தூக்கிப் போடணுங்க; அப்படி ஆசைகளை விலக்கினா மட்டும்தான் இந்த ஆன்மீகப் புத்தகங்களை எல்லாம் முழு மனசோட படிக்க முடியும். அப்படிப் படிச்சு உணர்ந்துட்டோம்னா, நமக்குள்ள தானாவே ஞானம் பிறந்துரும். அந்தத் தெளிவு கிடைச்சதுக்கு அப்புறம், நாம இந்த வாழ்க்கையில எதைச் சாதிக்கணும்னு நினைக்கிறோமோ, அதைச் சுலபமா சாதிச்சிரலாம். ஆனா, ஆசைகளை விடாம இருந்தா இந்த மாதிரி விஷயங்களை நம்மால படிக்கவும் முடியாது, சாதிக்கவும் முடியாதுங்க.)
==========================================
# ஆசைகள் மனதில் வைத்துக்கொண்டு படித்தாலும் நிச்சயம் நிறைவேறாது.
==========================================
குருநாதர் :- அப்பனே, ஆசைகள் அப்பனே, மனதில் வைத்துக்கொண்டு, அப்பனே, எவை அப்பனே , நிச்சயம் தன்னில் கூட படித்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் நிறைவேறாது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆசைகள் வந்து மனசுல வச்சுக்கொண்டு எவ்வளவு படிச்சாலும் ஒன்னும் நிறைவேறாது.
==========================================
# பலருக்கும் மந்திரங்கள் ஏன் சித்தியாகமல், கஷ்டங்கள் உண்டாகின்றது?
==========================================
குருநாதர் :- அப்பனே, எவ்வளவு மந்திரங்கள் ஜெப்பினாலும் நிறைவேறாது அப்பா. அப்பனே, இறைவனை திட்டுவது பின்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- (மனசுக்குள்ள பெரிய பெரிய ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வச்சுக்கிட்டு, நீங்க என்னதான் செஞ்சாலும் அது கண்டிப்பா சரிவராதுங்க. எல்லா ஆசைகளையும் வச்சுக்கிட்டு அப்புறம் கடைசியில, "இறைவனை இவ்வளவு கும்பிட்டும் அவர் எனக்கு ஒண்ணுமே செய்யலையே" அப்படின்னு பழியைத் தூக்கி கடவுள் மேல போட்டுட்டு அவரைத் திட்டுறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆசைகளை விடாம எதைச் செஞ்சாலும் அது பலன் தராது, அதுக்கு இறைவனைக் குறை சொல்றதுல அர்த்தமே இல்லைங்க.)
==========================================
# கலியுகத்தில் ஈசன் மிக மிக மிக, கருணை வாய்ந்தவர்.
==========================================
குருநாதர் :- அப்பனே, கலியுகத்தில் எது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஈசன் மிக மிக மிக, அப்பனே, கருணை வாய்ந்தவன் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, அனைத்து உயிர்களும் கூட, அப்பனே, முதலில் அப்பனைப் பின் கொல்லாமை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே, இவ்வாறு இருத்தலே, அப்பனே பின் நிச்சயம், அப்பனே பின், பின் நன்று அப்பனே, அனைத்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
================================
# அன்பு ஒன்றே பிரதானமானது
================================
குருநாதர் :- இதனால், அப்பனே, அன்பே ஒன்றே பிரதானமானது.
==========================================
# இவ்வுலகில் உயிர்கள் எப்பொழுதும் அதிகம் கொல்கின்றார்களோ,
அப்பொழுது அழிவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.
==========================================
குருநாதர் :- அப்பனே, (உயிர்கள்) இவை காத்தாலே, அப்பனே, அழிவுகள் தவிர்க்கப்படும் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- உயிர்கள் எப்பொழுதும் அதிகம் கொல்கின்றார்களோ, அப்பனே, அப்பொழுது அழிவுகள் அதிகமாகத்தான் இருக்கும் அப்பா, சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா உயிரிடத்திலும் அன்பு, அது காட்டினாவே. ஓகே, அப்படியே அதிகமா ஜீவராசிகள் உயிர் அழிஞ்சு போச்சுன்னா என்ன ஆகும்? மனிதர்கள் அதிகமா பிரச்சனை, அழிவுகள், அழிவுகள், மனித உயிர்களும் பறிபோகும்.
==============================================
# அனைத்து உயிர்களும் இறைவனுக்கே சொந்தம்.
==============================================
குருநாதர் :- அப்பனே, அனைத்து உயிர்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதையும், எதை என்று கூற அப்பனே, இறைவனுக்கே சொந்தம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் இவ்வாறாக. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மனிதன், அப்பனே, தன், அப்பனே, இன்பத்திற்காக, அப்பனே, அனைத்து உயிர்களும் சாகடிக்கின்றான் என்பேன் அப்பனே. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- தன்னோட நல்லா வாழனும் காரணத்துக்காக, மனிதன் என்ன பண்றான்? வந்து என்ன கொல்றான்? எல்லா உயிரும் கொல்றான்.
=======================================
# இறைவன் - வாயில்லா ஜீவராசிகளை கொல்பவனுக்கு சிறுக சிறுக துன்பம் வைத்து, துன்பம் வைத்து, பெரிதாக்குவார்.
=======================================
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எதை என்று புரிய அப்பனே, பின் இதனால், அப்பனே, கொல்பவனுக்கு, அப்பனே, சிறுக சிறுக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, துன்பம் வைத்து, துன்பம் வைத்து, பெரிதாக்குவான் இறைவன் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் பண்றவனுக்கு வந்து இறைவன் என்ன முடிவு எடுப்பாரு? கொஞ்சம் கொஞ்சமா பெரிய கஷ்டத்தை கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமா கஷ்டத்தை கொடுத்து, பெரிய கஷ்டங்கள் எல்லாம் கொடுத்துட்டு வருவான்.
=====================================
# தண்டனைகள் கொடுக்கும் போது ……
=====================================
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, இறைவனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவனிடத்தில் ஓடுவார்கள் என்பேன் அப்பனே. ஆனால் இறைவன் கண்டுகொள்ள மாட்டான்.
குருநாதர் :- அப்பனே, உண்மை ஞான நிலைகள், அப்பனே , நிச்சயம் தன்னில் பெற்று சிறப்பாக, அப்பனே, வாழுங்கள். உண்மையை தெரிந்து கொண்டாலே, அப்பனே , நிச்சயம் வெற்றி அப்பனே , நிச்சயம் தன்னில் கூட. ஞானம், அப்பனே , நிச்சயம் இறைவனை காணலாம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, மனிதனின், அப்பனே, ஆசைகள், அப்பனே, பின் அழுக்குகளாக நிறைந்து, அப்பனே, பின் தூசி படிந்துள்ளது என்பேன் அப்பனே. அவ் தூசி எப்பொழுது தட்டுவது? இறைவன் எப்படி காண்பது?
==============================================
# கண்களை வைத்து, இறைவனை காண, குருடனாகவே திரிகின்றான் மனிதன்.
==============================================
குருநாதர் :- அப்பனே, கண்களை வைத்து, அப்பனே, இறைவனை காண, அப்பனே, குருடனாகவே திரிகின்றான். மனிதன்
===============================================
# காதுகள் வைத்துக் கொண்டு, நல்லதைக் கேட்பதில்லை.
# கேளாதனாவே திரிந்து திரிகின்றான் மனிதன்.
===============================================
குருநாதர் :- அப்பனே, காதுகள் வைத்துக்கொண்டே, அப்பனே, நல்லதை, அப்பனே, கேட்குவதில்லை என்பேன் அப்பனே. பின் காது கேளாதனாவே திரிந்து திரிகின்றான் மனிதன்.
===============================================
# நல்மூக்கை வைத்து கொண்டு, காற்றை,மனிதன் சுவாசிக்காமலே, வியாதிகளை பெறுகின்றான்.
===============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நல்மூக்கை கொண்டு, அப்பனே, பின் அதாவது நல், அப்பனே, காற்றை, அப்பனே, பின் மனிதன் சுவாசிக்காமலே, அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, பின் வியாதிகளை பெறுகின்றான்.
==============================================
# இறைவன் நல் உயர்ந்த எண்ணத்தை கொடுத்து அனுப்புகின்றான்.
# போகப்போக அங்கும் அழுக்குதான்.
# எங்கும் அழுக்குகள் இருக்க எப்படி மனிதன் வாழ்வான்?
===============================================
குருநாதர் :- அப்பனே , நல் உயர்ந்த எண்ணத்தை கொடுத்து, அப்பனே, அனுப்புகின்றான். அப்பனே, போகப்போக, அப்பனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய? அப்பனே, பின் அங்கும் அழுக்குதான் என்பேன். அப்பனே, அப்படி இருக்க, எங்கும் அழுக்குகள் இருக்க. எப்படி, அப்பா, மனிதன் வாழ்வான்? நீங்களே சொல்லுங்கள்,
============================================
# வாய் இறைவன் படைத்தது - நல் உட்கொள்வதும், நல்முறையாக நன்மையை பேச.
# ஆனால் தீயவை பேச, தீவை உண்ணவே, பயன்படுத்துகின்றான்
# எப்படி அழிவுகள் வராமல் போகும் ?
.============================================
குருநாதர் :- அப்பனே, வாய் உட்கொள்வதும், அப்பனே, பின் நல்முறையாக நன்மையை பேச, ஆனாலும் தீயவை பேச பயன்படுத்துகின்றான். அப்பனே, தீயவை உண்ணவே, அப்பனே , நிச்சயம் வாயும் கூட பயன்படுத்துகின்ற பொழுது, எப்படி, அப்பா, அழிவுகள், நிச்சயம் தன்னில் வராது?
சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷனுக்கு வாய் கொடுத்ததே நல்ல விஷயங்களைப் பேசுறதுக்கும், இறைவனைப் பாடித் துதிக்கிறதுக்கும் தான். அதே மாதிரி, உடம்பைத் தெம்பா வச்சுக்க நல்ல சாப்பாடு முக்கியம். ஆனா, நிஜத்துல நாம நல்லதைச் சொல்றதும் இல்லை; உடம்புக்குத் தேவையான சத்தான உணவை எடுத்துக்கிறதும் இல்லை. எதையோ சாப்பிட்டு, ஏதோ ஒரு வாழ்க்கையை வாழுறோம். இப்படிச் சொல்லும் செயலும் சரியில்லாம இருந்தா, ஒரு மனுஷன் எப்படி நிம்மதியாவும் சந்தோஷமாவும் வாழ முடியும்? நல்ல எண்ணமும் நல்ல உணவும் இல்லாம வாழ்க்கை சிறக்காதுங்கிறதுதான் கசப்பான உண்மை.)
=========================================
# வாயால் பல மக்கள் கிரகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றார்கள்.
# எப்படி, அப்பா அவ் வாக்குகள் பலிக்கும்?
=========================================
குருநாதர் :- அப்பனே , நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பல வழியில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பல மக்கள் கிரகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றார்கள் என்பேன். அப்பனே, நிச்சயம் அப்பனே, வாயால். அப்பனே, எப்படி, அப்பா, பலிக்கும்?
சுவடி ஓதும் மைந்தன் :- இவையெல்லாம் கெட்ட எண்ணங்கள் எல்லாம் வச்சுக்கொண்டு, எல்லாமே இது பண்ணிக்கொண்டு, கிரகங்களைப் பற்றி சொல்றானே மனுஷன். எப்படி பலிக்கும்? அந்த வாய் வேலை செய்யுமா?
==========================================
# ஞானிகள் எழுதிய பல புத்தகங்களையும் படித்தவன் தான் நிச்சயம் உண்மை தெரிந்து கொள்வான். ஆனாலும் யாரிடம் பேசப்போவதில்லை.
==========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பல அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புத்தகங்களையும், அப்பனே, பின் பல வழியில் கூட, ஞானிகள் எழுதி வைத்து கூட படித்தவன் தான் அப்பனே, நிச்சயம் உண்மை தெரிந்து கொள்வான். ஆனாலும் யாரிடம் பேசப்போவதில்லை.
=============================================
# சித்தர்களும் யாரிடமும் பேசுவதில்லை. ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தை தருவோம் என்று வந்திருக்கின்றோம்.
=============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. யாங்களும், அப்பனே, நிச்சயம், பின் அவ்வாறு தான். அப்பனே, நிச்சயம் தன்னில் யாரிடமும் பேசுவதில்லை, ஆனாலும், அப்பனே, மனிதன் இப்படி இருக்கின்றானே. ஒரு சந்தர்ப்பத்தை தருவோம் என்று வந்திருக்கின்றோம்.
============================================
# பிற உயிரை கொல்லுதல், சிறிது சிறிதாக தன் உடம்பை இழத்தல்
============================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பிற உயிர், பிறர், பிற உயிரை, அப்பனே, பின் நிச்சயம் கொல்லுதல் அப்பனே, பின் அதாவது தான், அப்பனே, உடம்பை, அப்பனே, சிறிது சிறிதாக இழத்தல் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பிறர் உயிரை கொல்லுதல், தான் சாகுறதுக்கு சமம். தான் உடம்பு வந்து கொஞ்சம் கொஞ்சமா பழுதாகுது.
================ ==============
# பிறரை பற்றி புறம் கூறினால் , அவர்கள் இல்லாத போது கிசு கிசு பேசினால் …..
==============================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பிறர், அப்பனே, பின் இழு சொல்லுதல், பின் பேசுதல். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட தான் உடம்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நிச்சயம் நிலைகெட்டு போகின்றது. பிறரைப் பற்றி பேசுவது, அநேகமே பேசுவது. நல்லவங்க எல்லாம் கெட்டவங்க சொல்றது. இது மாதிரி எல்லாம் என்ன ஆகுது? அது என்ன ஆகுது? உடம்பு கெடுது, கெடுது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவை என்று புரிய? அப்பனே, அனைத்தும், அப்பனே, பின் மனிதன் தான். அப்பனே, இங்கு கெடுத்துக் கொண்டிருக்கின்றான். இறைவன் என்ன? அப்பனே, நிச்சயம் எவை என்று புரிய?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இறைவன் மீது எப்படி பழி சுமத்தலாம்? எல்லா மனுஷனும் என்ன பண்றான்? ..
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!


No comments:
Post a Comment