​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 February 2026

சித்தன் அருள் - 2100 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வர சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99

அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.

========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6)

============================================
# எங்கு கிரக வீச்சுகள் அதிகமாக இருக்கின்றதோ , அங்கு உலகோர் நன்மைக்காக வேண்டி, அனைவரும்  சிவபுராணம் ஓதினால், நிச்சயம்   நல்லதே நடக்கும்.
============================================

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட. அப்பனே, பின் கேதுவானுடைய அப்பனே தாக்கங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின். அதாவது, கேதுவினுடைய நிச்சயம் தன்னில் கூட கதிர்வீச்சுக்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதிகமாக. 

அப்பனே, இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அப்பனே பின் வேண்டியவை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கிடைக்கும் அப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே உலகத்தோர் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே. 

அதாவது, ஏன் எதற்குச் சொல்கின்றேன் என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எங்கு அப்பனே கிரக வீச்சுகள் அதிகம் இருக்கின்றதோ அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு அப்பனே பரிசுத்தமாக, அப்பனே உலகத்தோருக்கு வேண்டி அப்பனே பின் சிவபுராணத்தை ஓதுங்கள் நிச்சயம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இவை தன் பதிந்து உங்களுக்கும் பின் நல்லதே நடக்கும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் இவை ஓதுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ("ஐயா, இப்ப என்ன சொல்றாருன்னா... கிரகங்களோட தாக்கம் எங்க அதிகமா இருக்குதோ, அங்க போய்ப் படிச்சோம்னா நமக்கு உடனே பலன் கிடைக்கும். இப்ப இந்த கேது பகவானோட கதிர்வீச்சுகள் (Radiation) இங்க ரொம்ப அதிகமா இருக்குதுங்க. அதனாலதான் நிறையப் பேருக்குத் துன்பமும் கஷ்டமும் வந்து சேருது.
ஆனா, கேது பகவான் இங்க சக்தியோட இருக்கும்போது ஒரு சூட்சுமம் இருக்கு. நீங்க எதை மனசுல நினைச்சுப் பாடுறீங்களோ, அதை அவர் அப்படியே உங்களுக்குக் கொடுப்பார். அதனால, நீங்க எல்லாரும் என்ன பண்ணனும்னா... 'உலகம் நல்லா இருக்கணும், எல்லாரும் சந்தோஷமா வாழணும்' அப்படின்ற நல்ல எண்ணத்தோட சிவபுராணத்தைப் பாடுங்க.
அப்படி நீங்க பாடும்போது, கேது பகவான் அதை அப்படியே ஏத்துக்கிட்டு எல்லாருக்கும் நல்லதே நடக்குற மாதிரி செஞ்சுடுவாரு. ஊர் உலகத்துக்காக நீங்க வேண்டுறதுனால, உங்களுக்கும் அந்தப் புண்ணியம் வந்து சேரும். ஏன்னா கேது பகவான் இப்ப முழு சக்தியோட இருக்காரு, அதை நாம நல்லபடியா பயன்படுத்திக்கணும்!")
========================================
# கேது ரகசியங்கள் - எங்கு கேது கதிர்வீச்சு அதிகமாக இருக்கின்றதோ அங்கு திருத்தலங்கள் கொடுக்கப்படும் இறைவனால். 
=========================================

குருநாதர் :-  அப்பனே மற்றொரு ரகசியம் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எங்கெல்லாம் அப்பனே பின் கேதுவின், பின் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் கதிர்வீச்சு அதிகமாக பின் இருக்கின்றதோ, அங்குதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்தலங்கள் கொடுக்கப்படும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

பின் ஈசனின் திருத்தலங்கள் அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே. 

=============================================
# பாடல் பெற்ற திருத்தலங்களின்  ரகசியங்கள் என்ன ?
# ஏன் நால்வரும் அவ் தளங்களில் பாடல்கள் பாடினார்கள் ?
=============================================

குருநாதர் :-  ஏனென்றால் அப்பனே உடனடியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் கிடைக்க, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது சம்பந்தன் அப்பனே அங்கெல்லாம் அப்பனே, நால்வரும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் பாடல்கள் பாடினர் என்பேன் அப்பனே. 

=============================================
# நால்வர் எழுதிய தீர்ப்பு - சக்திமிக்க பாடல் பெற்ற திருதலங்களில், பதிகங்கள் பாடினால் , கேதுவின் தாக்கம் குறைந்து , உள்ளோருக்கெல்லாம் நன்மைகள் நடைபெறும்.
=============================================

குருநாதர் :-  இவ்வாறு அப்பனே பின் பாடல்கள் பாடினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கேதுவின் அப்பனே தாக்கம் குறைந்து, அப்பனே நிச்சயம் அப்பனே பின் உலகத்தில் உள்ளோருக்கெல்லாம் நன்மைகள் நடைபெறும் என்பதெல்லாம் அப்பனே அவ் நால்வருடைய அப்பனே தீர்ப்பு என்பேன் அப்பனே. 

=======================================
# கேதுவின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள - பாடல் பெற்ற திருத்தலங்கள் தரிசனம்.
=======================================

குருநாதர் :-  இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அங்கெல்லாம் அப்பனே சென்று அப்பனே பின் தரிசித்தாலே அப்பனே கேதுவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

அவ்வாறு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் எவ்வாறு செய்தாலும் கேதுவால் தப்பிக்க, கேது கிரகத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியாதப்பா. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் அங்கும் இங்கும் சென்று அப்பனே திரிந்து அப்பனே ஞானிகள் நிச்சயம் தன்னில் கூட மனிதருக்கெல்லாம் சேவை செய்தனர் என்பேன் அப்பனே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பின் அவையெல்லாம் அழிந்து கிடைக்கின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( "ஐயா, இந்த 'பாடல் பெற்ற ஸ்தலங்கள்'னு சொல்றோமே, இதெல்லாம் எதுக்குத் தெரியுங்களா? எங்கெல்லாம் கேதுவோட தாக்கம் அதிகமா இருக்குதோ, அங்கெல்லாம் போய்ப் பாடினா அந்தப் பாதிப்பு குறைஞ்சிடும். அப்படித் தாக்கம் குறையும்போதுதான் ஜனங்களுக்கு நல்லது நடக்கும்னு சொல்லிதான் நம்ம முன்னோர்கள் அங்கங்க போய்ப் பாடி வச்சாங்க.
இந்த நால்வர் பெருமக்கள் என்ன பண்ணாங்க? ஊர் ஊராப் போய் சிவன் கோயில்ல தேவாரப் பாடல்களைப் பாடி, அந்தச் சக்தியை அதிகப்படுத்தினாங்க. இது எல்லா மனுஷங்களுக்கும் தெரியணும், எல்லாரும் பாடிப் பலன் அடையணும்னுதான் ஆசைப்பட்டாங்க.
ஆனா இப்ப என்ன ஆயிடுச்சு? அந்தப் பாடல்கள் பாடுறது குறைஞ்சு போச்சு, பல இடங்கள்ல இல்லாமலே போயிடுச்சு. அப்படிப் பாடுறது நின்னதுனாலதான் கிரகங்களோட தாக்கம் மனுஷன் மேல நேடியா விழுந்து, கஷ்டங்கள் வந்து சேருது. அந்தப் பாடல்கள் திரும்பவும் ஒலிக்க ஆரம்பிச்சாத்தான் மனுஷனோட கஷ்டம் தீரும் ஐயா!")
=================================================
# ராகு கேதுவும் வழி விட்டால்தான் அனைத்து கிரகங்களும் கூட வழிவிடும். 
==================================================

குருநாதர் :-  இதனால் முதலில் பின் ராகு கேதுவும் வழி விட்டால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து கிரகங்களும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட வழிவிடும். 

குருநாதர் :- நிச்சயம் கலியுகத்தில் ராகு கேதுவின் பின் ஆட்டமே அதிகமாக உள்ளதப்பா. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக கட்டுப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட மற்ற கிரகங்களால் பின் சந்தோஷங்கள் நிச்சயம் நீங்கள் அனுபவிக்கவே முடியாது. 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (  "ஐயா, இப்ப என்ன விஷயம்னா, நம்ம வாழ்க்கையில ராகு-கேதுவை முதல்ல கட்டுப்படுத்தணும். அவங்க வழிவிட்டாதான் மத்த கிரகங்களால நமக்கு நல்லது நடக்கும்.
பாருங்களேன்... சுக்ரன் வந்தா நல்ல சந்தோஷம் கிடைக்கும், குரு வந்தா ஞானமும் சாமியும் தெரியும், புதன் வந்தா நல்ல அறிவு வரும், செவ்வாய் நல்லா இருந்தா அண்ணன் தம்பி உறவுகள் பலப்படும். ஆனா, இந்த ராகு-கேது மட்டும் சரியில்லைன்னு வைங்க, மத்த எந்தக் கிரகம் என்ன நினைச்சாலும் உங்களுக்கு நல்லது செய்ய முடியாது; எல்லாம் தடைப்பட்டு நிக்கும்.
முக்கியமா மனசுக்கு அதிபதியான சந்திரனைப் பாருங்க... ராகு-கேதுவோட பிடியில சந்திரன் சிக்கிட்டா, அப்புறம் வீட்டுக்குள்ள நிம்மதியே இருக்காது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம புருஷன்-பொண்டாட்டிக்குள்ள சண்டை, அண்ணன்-தம்பிக்குள்ள சண்டை, மாமா-மச்சான் சண்டைன்னு ஒரே ரகளையாதான் இருக்கும்.
அதனாலதான் ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, இந்த ராகு-கேதுவை எப்படிக் கட்டுப்படுத்தணும்னு தெரிஞ்சுக்கணும். நாம சரியா நடந்துக்கிட்டா மட்டும்தான் அவங்க வழிவிடுவாங்க. அவங்க வழிவிட்டாதான் நீங்க அடுத்தக்கட்ட சுகங்களையும், நிம்மதியையும் அனுபவிக்க முடியும். இல்லைன்னா கடைசி வரைக்கும் சண்டையும் சச்சரவுமாத்தான் வாழ்க்கை போகும் ஐயா!")
=============================================
# திருகேதீஸ்வரத்தில் ராகு கேதுவின் கதிர்வீச்சுக்கள் பன்மடங்கு விழுகின்றது.
# திருகேதீஸ்வரத்தில்  தீர்த்த குளத்தில் அவை விழுகின்றது.
# இங்கு  குளித்தாலே அனைத்து கிரகங்கள் கூட நிச்சயம் என்ன தேவையோ அவை நிச்சயம் தானாக வந்துவிடும். 
=============================================

குருநாதர் :-  அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இத்திருத்தலத்தின் அப்பனே நிச்சயம் தன் அருகே, அப்பனே பின் பன்மடங்கு, அப்பனே பின் நிச்சயம் ராகு கேதுவின், அப்பனே கதிர்வீச்சுக்கள். ஆனாலும் சொல்லிவிட்டேன் ராகுவும் கேதுவும் ஒன்றே என்று அப்பனே. பின் இதனால் அப்பனே பின் அங்கு நிச்சயம் விழுவதால், அப்பனே அங்கு குளித்தாலே போதுமானதப்பா. நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் தன்னில் எவை என்று கூட அனைத்து கிரகங்கள் கூட அப்பனே நிச்சயம் என்ன தேவையோ அவை நிச்சயம் தானாக வந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (ராகு-கேதுவோட கதிர்வீச்சுகள் அதிகமா சில இடங்கள்ல இருக்குற தண்ணில (தீர்த்தங்கள்ல) விழுதுங்க. அந்தத் தண்ணில நாம குளிக்கும்போது, நம்ம மேல இருக்குற அந்தத் தோஷங்கள் விலகிடும். அப்படி ராகு-கேதுவோட பிடி தளர்ந்தாலே போதும், மத்த கிரகங்கள் நமக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்ய தானா வழிவிட்டுரும்.)

குருநாதர் :-  அப்ப நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அப்பனே ஒரு முறை நிச்சயம் தன்னில் கூட இல்லை பலமுறையும் கூட, அப்பனே பின் ஒரு ஒரு எண்ணங்கள் பொருத்தி அமையும் என்பேன் அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( "ஐயா, இப்ப இங்க இருக்குற தண்ணியைப் (புனித தீர்த்தங்கள்) பாருங்களேன்... அங்கதான் அந்த ராகு-கேதுவோட கதிர்வீச்சுகள் (Radiation) அதிகமா வந்து விழுது. எதுக்காக அந்த இடங்கள்ல போய் நம்மள குளிக்கச் சொல்றாங்கன்னா, அந்த விசேஷமான தண்ணில நாம நீராடும்போது நம்ம உடம்புல இருக்குற அந்த கிரகத் தாக்கங்கள் எல்லாம் சரியாகிடும்.அதுவும் பல தடவை குளிச்சா ஒருத்தருக்கு சீக்கிரம் நன்மை ஏற்படும். 
ஒருவாட்டி அந்த ராகு-கேதுவை நாம சாந்தப்படுத்திட்டோம்னு வைங்க, அப்புறம் அவங்க 'கேட்'டைத் திறந்து விட்டுருவாங்க. அவங்க வழிவிட்டாலே போதும், மத்த கிரகங்கள் எல்லாம் அவங்க அவங்க வேலையைச் சரியா பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. நமக்குச் சேர வேண்டிய நன்மைகள் எல்லாம் தடையல்லாம வந்து சேரும் ஐயா!" )

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் இதனால்தான் எவை என்று புரிய புரியாமல் வாழ்ந்து விடுகின்றான். இவ்வாறு புரியாமல் வாழ்ந்து வருவதனால்தான் மனிதனுக்கு சந்தேகங்கள் வருகின்றது. ஏன் எதை என்று புரிய பின் அவன் மட்டும் நன்றாக வாழுகின்றான். ஏன் நம் இப்படி வாழ்கின்றோம் என்று 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதனால் புரியாமல் வாழ்வதனால்தான் மனுஷனுக்கு என்ன சந்தேகம் வருது. என்ன சந்தேகம் ஏன்னா அவன் மட்டும் கோடீஸ்வரன் வரான். நம்ம மட்டும் ஏன்டா இப்படி இருக்கணும்னு சொல்லிட்டு… 

குருநாதர் :-  அப்பனே ஆசிகள். அப்பனே இன்னும் அப்பனே இன்னும் நிச்சயம் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க, அப்பனே நிச்சயம் தன்னில், இன்னும் அப்பனே சொல்கின்றேன். ஆசிகள். 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

No comments:

Post a Comment