அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 4
தேதி : 21.1.2026 (புதன்கிழமை)
வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை முருகன் கோவில்
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 4
சுவடி ஓதும் மைந்தன் :- (அம்மா, அப்பா ஆகியோருக்கு உள்ள பண்பு குழந்தைக்கு. அவர்கள் இப்படிப் போதித்து, இப்படிப் பழகி, இப்படிப் பேச வேண்டும். குழந்தைகள் எப்படி வளர வேண்டும், எதைப் பின்பற்ற வேண்டும் என்பதனை அம்மா, அப்பா வழங்க வேண்டும். இப்படிப் போதித்து வழிநடத்தினால், வாழ்க்கை நன்றாக அமையும்.)
குருநாதர் :- அப்பனே, உனக்கு திருமணம், அப்ப, நிச்சயம் முடிந்தால், அப்பனே, நீயும், பின், அவரவருக்கு, அப்படித்தான் சொல்லிக் கொடுப்பாய். இதனால், அப்பனே, தாய் தந்தை இங்கு முக்கியம்.
குருநாதர் :- அப்பனே, இதுதான், அப்பனே, பின், நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ, அது தான் நடக்கும் என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (நாம் என்ன செய்கிறோமோ, அதற்கேற்பவே வாழ்க்கையில் நிகழ்வுகள் உருவாகும். நீங்கள் சண்டை, முரண்பாடு போன்றவற்றில் ஈடுபட்டால், திருமணத்திற்குப் பிறகும் அதே நிலைமைகள் உருவாகும். ஆகவே, சிறு வயதிலிருந்தே எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பழக வேண்டும் என்பதை தாய் தந்தை சரியாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.)
அடியவர் 12 :- ( தனி கேள்வி )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், எது என்றது, அப்பனே, பின், எவை என்று கூற, அப்பனே, இவையெல்லாம், அப்பனே, முதலில் நீ படி.
சுவடி ஓதும் மைந்தன் :- (இதெல்லாம் தேவையில்லாத கேள்வி , நீ படிப்பான்றார், ஓகேங்களா)
குருநாதர் :- அப்பனே, கந்தன் நிற்கின்றான் என்பேன் அப்பனே. நலமாகவே, எது என்று புரிய, அப்பனே, நிச்சயம், கந்தனை வேண்டிக்கொள்ளுங்கள் என்பேன், அப்பனே. அனைத்தையும் தருவான்.
அடியவர் :- (இதுதான் சொல்ல நினைச்சேன், எல்லா கோவில் குளத்துக்கும் போய், நல்லபடியா சாமி கும்பிடுங்க. வாய் அடக்கிக்கோங்க)
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா, சொல்றதை கேளுங்க,
==================================================
# புண்ணியம் செய்து கொண்டேயிருந்தால், அப் புண்ணியம் அனைத்தும் கொடுக்கும்.
==================================================
அடியவர் 12 :- அப்பா, அம்மாவோட ஆரோக்கியம் எப்படி,
குருநாதர் :- அப்பனே, எவை என்றது, அப்பனே, கவலை கொள்ளாதீர், அப்பனே, புண்ணியம் செய்து கொண்டிருக்கின்றாய் அப்பா. நிச்சயம், அப் புண்ணியம் காக்கும், அவ்வளவுதான்,
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னுடைய தர்மம் தலை காக்கும்.
அடியவர் :- தர்மம் தலை காக்கும்,
===================================
# அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ……
===================================
அடியவர் 12 :- சுவாமி கிட்ட இன்னும் பக்தி, இன்னும் வளர்ந்துகிட்டே போகணும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, (ஓதிமலை ஆண்டவர்) அவன் நினைத்தாகிவிட்டது என்பேன் அப்பனே. கவலை விடு.
அடியவர் 12 :- என்னோட வாழ்க்கை இன்னும் வருங்காலம் இல்ல, இன்னும் எப்படி இருக்கும்?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, அவன் நினைத்து விட்டான்.
=============================================
# ஆதி ஈசனே எழுதுவார் - வேதம் ஓதுபவர்கள் விதியை. =============================================
குருநாதர் :- அப்பனே, அதாவது, உன் போன்ற ஆட்களுக்கு, அப்ப, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, பின், வாழ்க்கையே, அப்பனே, எது என்று கூற, எது என்று புரிய, அப்பனே, பின், அதாவது, எவை என்று அறிந்தும் கூட, பிரம்மன், அப்பனே, பின், அதாவது, வெறும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தாளில் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதை எப்படியாவது, பின், ஈசனே, நீயே எழுதிக்கொள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (பிரமதேவர், வேதம் ஓதுபவர்கள் விதியை எழுதாமல் ஒரு வெள்ளை பேப்பரை அப்படியே சிவபெருமானிடம் கொடுத்துவிடுவார். அதுல யார் எழுதுறது?)
அடியவர் :- ““““சிவபெருமான் !!!!!”””””
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், எவை என்று புரிய, அப்பனே, இதனால், உன் வழியில், பின், போய்க்கொண்டே இரு, எழுதுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாரு, உன் வழியில, நீ போய்க்கொண்டே இரு, அவர் என்ன பண்ணுவாரு, அவர் எழுதுவார், எழுதுவார், அவ்வளவுதான்.
குருநாதர் :- அப்பனே முருகப்பெருமான், உன் உள்ளத்திலே இருக்கின்றான்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று அறிய , அப்பனே, நிச்சயம், இவ் வேலை , அப்பனே, பின், சிறப்பாக செய்துவா அப்பனே. ஆசிகள்.
===================================
# அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ……
===================================
அடியவர் 12 :- கடைசி வரைக்கும் நான் சுவாமியோட சரணாகதியில வந்துட்டே இருக்கணும்.
குருநாதர் :- அப்பனே, எவை என்றது, அப்பனே, இதுபோல் இருப்பதற்கு இறைவன் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. இறைவன் வைத்துக்கொள்வான், கவலை விடு, என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஓதுவார்கள் எல்லாருக்கும் பிளாங்க் பேப்பர் தான். எல்லாமே பிளாங்க் பேப்பர் தான், ஐயா, யார் எழுதணும்?)
குருநாதர் :- அப்பனே, எழுதுபவருக்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று அறிய அப்பனே, அதாவது, தேர்வில், அப்பனே, நீங்கள், அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, அதாவது, அப்பனே, பின், வினாக்கள், அப்பனே, பின், கொடுக்க, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒன்றும் தெரியாமல், அப்படியே, பின், மூடிவிட்டு, அப்பனே, வைத்தால், என்ன, ஏது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- தெருவில் போறீங்க. வினாக்கள் கொடுக்குறாங்க, ஒன்னும் தெரியல, என்ன பண்ணீங்க, பிளாங்கா கொடுக்கிறோம், பிளாங்கா கொடுக்கிறோம், ஓகேங்களா.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, நிச்சயம், அதில் கூட, எவை என்று புரிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின், ஆனாலும், எழுதுபவர்களும் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பிளாங்க் பேப்பர் என்ன பண்ணுவாங்க, எழுதுறவங்க உண்டு, எழுது பாஸ் பண்றவங்க உண்டு.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில், எதனால் என்பதை எல்லாம் தெரியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- எதனால?
குருநாதர் :- அப்பனே, ஒன்று, நிச்சயம், தன்னில் கூட, ஆசிரியன் குழந்தையாக இருக்க வேண்டும். ஆசிரியன், நிச்சயம், தன்னில் கூட, உன்மேல் அன்பு செலுத்தல் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒன்னு ஆசிரியன் பிள்ளையாக இருக்க வேண்டும். அதாவது, நம்ம பையன் என்று அவரே எழுதி, நம்ம பாஸ் பண்ணி விடலாம் என்று எல்லாம் எழுதுறுவாரு. அடுத்து, ஆசிரியனுக்கு குழந்தையா இருக்கணும், நெருக்கமாக இருக்கணும்.)
குருநாதர் :- அப்பனே, நீங்கள் அனைவருமே இப்படித்தான், அப்பா, நிச்சயம் எழுதுவானப்பா, கவலை விடு,
சுவடி ஓதும் மைந்தன் :- (ஐயா, புரியுதுங்களா. முருகப்பெருமான் உங்களுக்காக செஞ்சு கொடுப்பார். நீ கவலைப்படாத)
அடியவர் 12 :- திருமணம் வாழ்க்கை பொருளாதாரம்,
அடியவர் :- அதுதான் முருகனே ….
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எதை என்றது, அப்பனே, பார்த்துக் கொள்வோம், அப்பனே, இதனைப் பற்றி, அப்பனே, அதாவது, அப்பனே, எவை என்று புரிய, இப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், தாளில் ஒன்றுமே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு, தெரியுங்களா? வெத்துப்பேப்பர். விதியில், வெத்துப்பேப்பரா, அந்த பேங்க் வெள்ளை பேப்பர் இருக்குதுங்க, ஐயா, அப்ப என்ன எழுதணும், எவ்வளவு வேணாலும் எழுதிக்கலாம், இவர்தான் எழுதணும், அவர் நினைப்பாருப்பா, எழுதுவாருப்பான்றாரு, அமைதியா இருங்க, ஐயா. எந்த அளவுக்கு அவர்கிட்ட நடந்துக்கிறோமோ, அதுக்கு அதுக்கு அது மாதிரி எழுதுவாரு, வந்து
அடியவர் :- எந்த அளவுக்கு குறை இருக்கோ, அந்த அளவுக்கு காசு கம்மி பண்ணிக்குவாங்க.
அடியவர்கள் :- (சிரிப்பு)
மற்றொரு அடியவர் :- ஐயா, இந்த பெரியவர் அடிக்கடி இறங்கி போறேன், இறங்கி போறேன்னு ஓடிவிடுகின்றருங்க. வேலை செய்யாம….
குருநாதர் :- அப்பனே, எவை என்றது, அப்பனே, அவன் ஒரு விளையாட்டு பிள்ளை, விட்டு விடுங்கள்.
அடியவர்கள் :- (சிரிப்பு)
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் போக விட்டுடுப்பா, அவர் கேக்க மாட்டாருப்பா, அவ்வளவுதான், ஐயா.
அடியவர் :- ( வலி தாங்க முடியவில்லை என்று ஒரு கேள்வி கேட்டார்)
குருநாதர் :- அப்பனே, எதை என்றது, அப்படித்தான் இருக்கும், நிச்சயம், எவை என்று புரிய, அப்பனே, முருகன் பார்த்துக் கொள்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படித்தான் இருக்கும், அது வந்து அவர் சரி செஞ்சாதான் உண்டு, உண்டு,
குருநாதர் :- அப்பனே, நீ எதை கேட்டாலும், அப்படித்தான் இருக்கும் என்றுதான் யான் சொல்வேன், அப்பனே, உன்னை, அப்பனே, பின், இவ்வாறு வைத்து, அப்பனே, பின், அவன் பார்ப்பது, அவனுக்கு சந்தோஷம், அதனால் விட்டுவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- கால் வலிக்குதா, அவர்தான் காரணம், கால் வலி என்ன பண்ணுவாராம், அது மாதிரி வச்சு, உன்னை பார்க்கிறது, அவர் சந்தோஷம், தலைவலியா, அவருக்கு வந்து, உங்கள வந்து, உங்க விளையாடுறாரு, இங்க விடுங்க, ஐயா, பாத்துப்பாங்க, பாத்துப்பாங்க.
ஒரு அடியவர் கேள்வியின் சுருக்கம் :- (ஐயா, நீங்கள் மேலே வரும்போது ஒரு வார்த்தை கூறினீர்கள்— “செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறீர்கள்; அடுத்த வருடம் வரும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்” என்று. அது நம்முடைய செடிக்கும், மரத்திற்கும் தண்ணீர் ஊற்றுவது போல, நம் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டிய நல்வாழ்த்தாக நீங்கள் சொன்னீர்கள். அதனால் தான், எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் இதை மீண்டும் கேட்டேன்)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின், கற்பழிப்பு, கொள்ளை, அப்பனே, மனது சரியில்லாதவனுக்கெல்லாம் இப்படி கொடுத்துவிட்டால், அப்பனே, தெய்வம் எதற்கு, அப்பா.
குருநாதர் :- அப்பனே, தண்டனை, அப்பனே, கொடுத்தே தீருவான், அப்பனே, நல் மனதாக இருந்தால், அப்பனே, நீ கேட்டதெல்லாம் சரிதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல மனசோடு இருந்தா என்ன ஆகும், வந்து நல்லதே நடக்கும்,
ஒரு அடியவர் :- வாழ்க்கை எதை நோக்கி பயணிக்குது, என்னனே தெரியல?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், ஐந்து வருடங்களுக்கு முன்பு, அப்பனே, எதை நோக்கி பயணித்தது என்று தெரிந்து, எவை என்று அறிய, புரிய, அப்பனே, இதனால், அப்பனே, பின், வாழ்க்கை அப்படியே விட்டுவிடு, ஓடிக்கொண்டே இரு, பார்த்துக் கொள்வான், முருகன்,
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி போல போகட்டும், விட்டுடு, முருகன் பார்த்துக்கொள்வார்.
ஒரு அடியவர் :- மாயையில நிக்கிறது, நல்லா தெரியுதான்னு யாருக்கும் சொன்னா, நான் முழுசா முருகனையும் குழந்தை நம்பி இருக்கேன், அது எப்படிங்கிறது மட்டும் பார்த்து சொல்லுங்க,
குருநாதர் :- அப்பனே, எவை என்று, அப்பனே, நிச்சயம், எதற்காக இவ்வாறு, அப்பனே, பின், நம்பி இருக்கின்றாய்,
சுவடி ஓதும் மைந்தன் :- எதுக்காகப்பா, அவரை நம்புற?
=================================================
# ஒதிமலை ஓதியப்பரிடத்தில் செய்வினை செல்லாது.
=================================================
ஒரு அடியவர் :- ( செய்வினை குறித்த கேள்வி )
குருநாதர் :- அப்பனே, எது என்று, அப்பனே, அதாவது, அப்பனே, பின், இவனிடத்தில் செல்லாதப்பா, பின், எவை என்று அறிய, அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இவர்கிட்ட செல்லாதுங்க, ஐயா.
குருநாதர் :- அப்பனே, ஆறுபடை வீடுகளையும், பின், பஞ்சபூத ஸ்தலங்களும், அப்பனே, பின், இணைந்து உள்ளதப்பா. பின், இணைத்து தான், இவன், இவனிடத்தில், அப்பனே, அவையெல்லாம் செல்லுமா?
அடியவர் :- நான் என்ன சொல்லி இருக்கிறேன், முருகப்பெருமானுக்கு மேல ஒன்னும் இல்ல, நீ அவன்கிட்ட வந்துட்டு, நீ அதெல்லாம் நம்பாதேன்னு சொல்லி இருக்கிறேன்.
ஒரு அடியவர் :- நம்பல, நான் அதாவது, நம்பலைங்கிறதுல என் முன்னாடி நடக்குது, அதனால..
==========================================
# அவரவர் செய்யும் வினையே, செய்வினை
==========================================
குருநாதர் :- அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், முதலில், அப்பனே, அவனவன், அப்பனே, செய்யும் வினையே, செய்வினை என்றும் தெரிந்து கொள்ளலாம்,
அடியவர் :- அருமை, அருமை, அருமை,
சுவடி ஓதும் மைந்தன் :- அவனவன் செய்யும் வினைதான், வினையே, செய்யும் செய்யும் செய்யுவின,
அடியவர் :- தீதும் நன்றும் பிறர் தர வாரா.
குருநாதர் :- அப்பனே, உனக்காக, அப்பனே, மற்றவன் ஏன் செய்கின்றான், சொல்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அதுதான், நீங்க, அதுதான் சொன்னார்கள். நீ என்ன செய்றியோ, அதுதான் செய்வினையா வருது.
குருநாதர் :- அப்பனே, கவலை விட்டுவிடு, அப்பனே, பின், முருகன் பார்த்துக் கொள்வான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், தைப்பூசத்தன்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், 21 குடத்தை , அப்பனே, நிச்சயம், தன் முருகனுக்கு, அப்பனே, பாலபிஷேகம் இடு. பார்த்துக் கொள்வோம், பின்பு, யான் உரைக்கின்றேன்.
ஒரு அடியவர் :- சரி, 21 பாலபிஷேகம்,
மற்றொரு அடியவர் :- நீங்க சொன்னதை கேட்காம, செய்ய முடியாம, ஒரு சிக்கல்ல மாட்டிட்டேன். அதுல இருந்து….
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, சிறிதளாவது, அப்பனே, பின், தான தர்மங்கள் செய்திருந்தால், பிழைத்துக் கொண்டிருப்பாய், அப்பா. பின், மோகம், அப்பனே, உன்னை, அப்பனே, அப்படியே, அப்பனே, பின், காசுகளாக கொடுத்துவிட்டாய் அப்பா.
குருநாதர் :- அப்பனே, இறைவன் கொடுத்தான், அப்பா, ஆனாலும், அப்பனே, நிச்சயம், பொறுத்திரு அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :-இறைவன் உங்களுக்கு நல்லது தான் கொடுக்கிறாருங்க, ஐயா, ஆமா, ஆனா, நீங்க வந்து, கொஞ்சமாவது, வந்து, என்ன பண்ணனும், தான தர்மம், தான தர்மம்,
குருநாதர் :- அப்பனே, தான தர்மம் என்றால் என்ன, கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- தான தர்மம் என்றால் என்ன, கூறுன்றார், உங்களதான்?
மற்றொரு அடியவர் :- இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது, ஒன்னு கேட்கும்போது, இல்லைன்னு கொடுக்கிறது, ஒன்னு,
குருநாதர் :- அப்பனே, யார் உன்னை கேட்பார்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- யார் உன்னை கேட்பாங்கப்பா, இல்லாதவர்கள் கேட்பாங்களா, எனக்கு கொடுங்கன்னு கேட்பாங்களா?
மற்றொரு அடியவர் :- (நாம போய், இப்ப, பசியோட யாரும் இருக்காங்க, அவர்களிடம் போய், நாம தான் கொடுக்கவேண்டும்)
குருநாதர் :- அப்பனே, எவை என்று கூட, அவ் மனம் வந்தாலே, அப்பனே, பின், வாழ்ந்து விடுவார்கள், மனிதர்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மனசு எப்போ வருதோ, அப்ப என்ன பண்ணுவாங்களாம், வாழ்ந்துருவாங்க.
குருநாதர் :- அப்பனே, தன்னிடம் இருக்கக் கூடாதவை, எவை, அனைவரும் சொல்லுங்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- தன்னிடம் இருக்கக்கூடாதவை, எவை, எல்லாம் சொல்லுங்க?
அடியவர்கள் :- தானம், தானம், தானம்,
====================================
# முதன்மையான புண்ணியம் - தன்னிடம் இருப்பதை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதுதான், தர்மம்.
====================================
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, அப்பனே, புரிகின்றதா, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே, தன்னிடம், அப்பனே, முதன்மையான, அப்பனே, பின், புண்ணியம், தன்னிடம், அப்பனே, இருப்பதை, அப்பனே, மற்றவர்களும் பகிர்ந்து கொள்வதுதான், தர்மம் என்பேன், அப்பனே. இத்தர்மத்தை எவன் ஒருவன் காக்கின்றானோ, அப்பனே, அத்தர்மம் அவனை சிறப்பாக வாழ வைக்கும், அப்பா.
குருநாதர் :- அப்பனே, இறைவன் என்ன காப்பாற்றுவது என்பேன், அப்பனே? தர்மம் தான் காப்பாற்றும். இறைவன், அப்பனே, நிச்சயம், கையை ஏந்துவான் அப்பா. கண்ணீர் விடுவானப்பா உன்னை பார்த்து, அவ்வளவுதான்.
மற்றொரு அடியவர் :- ( எங்கள் பூஜை எல்லாம் ஏற்றுக் கொண்டார்களா …)
குருநாதர் :- அப்பனே, பின், பின், அதாவது, பூஜைகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், யான் ஏன் இங்கு வரப்போகின்றேன் அப்பா?
மற்றொரு அடியவர் :- ( கடன் தீர கேட்டபோது )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நீயே, அப்பனே, எவை என்ற கடனை வைத்துவிட்டு, அப்பனே, நீயே, எவை என்று அறிய கடனை எப்படி வாங்கினாய், அப்பா?
மற்றொரு அடியவர் :- தொழில் காசை வாங்கி கொடுத்தேன், நீங்க நார்மலா நடந்துருச்சு, அப்ப, அதை திருப்பி அடைக்கணும் இல்லையா, அதுக்கு அப்ப, வழி?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் கேட்கும்போது, என்னை கேட்டு வாங்கினாயா, அப்பா?
மற்றொரு அடியவர் :- …….
குருநாதர் :- அப்ப, நிச்சயம், தன்னில் கூட, அனைவருமே இப்படித்தான் கேட்கின்றார்கள்,
=======================================
( திருமணம் குறித்த சில தனிப்பட்ட கேள்வி பதில்கள் அதில் உள்ள பொது வாக்குகள் மட்டும் இங்கு காண்போம் )
=======================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், ஆனால் ஒன்று, அப்பனே, ஒன்றும் நடக்கவில்லை என்றால்தான், முருகனை வணங்குகின்றீர்களா, என்ன, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனாலும் ஒன்று, எனக்கு திருமணம் கிடைக்கல, வேலை கிடைக்கல, ஒன்னும் கிடைக்கல, அதனால்தான், இறைவனை வணங்குறீங்களா, அதுக்காக,
குருநாதர் :- அப்பனே, இதுதான் உண்மை,
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான்ப்பா, உண்மைன்ட்டாரு, அதுக்காகத்தான் வரோம், ஐயா, புரியலைங்களா, எனக்கு திருமணம் நடக்கல, முருகன் வந்தா, திருமணம் நடத்துவாரு, அதுக்காகத்தானே வரோம்,
குருநாதர் :- அப்பனே, திருமணம் நடந்து, குழந்தைகள் அனைத்தும் கொடுத்துவிட்டால், அப்பனே, முருகனை, பின், கண்டுகொள்ள, ஆள் இல்லை, அப்பா. இறைவனை கண்டுகொள்ள, ஆள் இல்லை, அப்பா. அதனால்தான், இறைவனை கண்டுகொள்ளுவதற்காகவே, இறைவன், நிச்சயம், இவ்வாறெல்லாம், தடை ஏற்படுத்தி, அப்பனை, எப்பொழுது கொடுத்தால், நன்று என்று, அப்பனை, பின், பின், அதாவது, எவை என்று வைத்திருக்கின்றான், அப்பா.
குருநாதர் :- அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், அப்பனே, எவை என்று, அப்பனே, பின், நிச்சயம், திருமணம் இல்லை என்று, பின், மக்கள், எவை என்று, எதை எதையோ சொல்கின்றார்கள். ஆனாலும், அப்பனே, பின், சந்தர்ப்பத்தில், அப்பனே, பின், ஒவ்வொரு, அப்பனே, பின், திருமணம் ஆகவில்லையே என்று சொல்கின்றார்களே, அவர்களுக்கு ஒரு பெண்ணை மறைமுகமாக ஏற்படுத்தியே தீருவான், இறைவன் என்பேன், அப்பனே.
===================================
# ஏன் வேலை கிடைக்கவில்லை ?
===================================
ஒரு அடியவர் :- ( வேலை குறித்த கேள்விகள் )
குருநாதர் :- அப்பனே, வாய்ப்புகள், நீதான் தேடிக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. பின் கஷ்டப்பட்டு தேடிக் கொண்டால், நிச்சயம், தன்னில் கூட, அனைத்திற்கும், அப்பனே, பின் கஷ்டப்பட வேண்டும். அப்பனே, அங்கிருந்து (ஓதிமலைக்கு) ஏறினாய், அப்பனே, பின் கஷ்டப்பட்டுத்தானே, ஏறினாய்? அப்பனே, கஷ்டங்கள் பட்டுத்தானே, படித்தாய்? கஷ்டங்கள் படித்து, கஷ்டங்கள் பட்டுத்தானே? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அனைத்தும் கஷ்டங்கள் பட்டு, பட்டுத்தான் ஆக வேண்டும் என்பேன், அப்பனே.
குருநாதர் :- அப்பனே, ஏன் வேலை கிடைக்கவில்லை, சொல்?
ஒரு அடியவர் :- அது நிறைய ட்ரை பண்ணேன். பட் எல்லா இன்டர்வியூ கடைசில போய் மிஸ் ஆகுது.
குருநாதர் :- அப்பனே, எத்தனை வேலைகள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், ஒரு வேலை கிடைக்கவில்லை என்றால், அதற்காக தகுதி உன்னிடத்தில் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
======================================
# அதிர்ச்சியான வாக்கு - ஐந்து ஆண்டுகள் இனிமேல், அப்பனே, படித்ததற்கு வேலையே கிடைக்காது.
======================================
ஒரு அடியவர் :- வேலை இல்லாமல் என்ன செய்வது. ஏதாவது செய்யவேண்டுமே ?
குருநாதர் :- அப்பனே, எத்தனை வேலைகள் இருக்கின்றது, அப்பா?
ஒரு அடியவர் :- (படிச்சது ஏற்ற வேலை வேண்டும்)
குருநாதர் :- அப்பனே, இனிமேல், அப்பனே, படித்ததற்கு வேலையே கிடைக்காது, அப்பா. இன்னும், அப்பனே, பின் ஐந்து ஆண்டுகள், பின், நிச்சயம் சென்றால், யாருக்குமே வேலை கிடைக்காது, அப்பொழுது என்ன செய்வீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சில நேரத்தில் போனா, யாருக்கும் வேலை கிடைக்காது.
குருநாதர் :- அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், படிப்பு என்பது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், வாழ்க்கை பற்றித்தான் படிப்பு. அப்பனே. அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- படிப்பு என்பது என்ன? வாழ்க்கை வாழ்வதற்கு.
குருநாதர் :- அப்பனே, அறிவை பெருக்குவதற்கு , அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இப்படித்தான், அப்பனே, தர்மத்தை கடைபிடிப்பதற்கு. ஆனால் அங்கு சென்று காதல், இன்னும், அப்பனே, என்னென்ன ஆட்டங்கள் என்பேன், அப்பனே. இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான், அப்பனே. பின் நீங்கள் அங்கு ஆடினால், எங்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, புள்ளி, அதாவது, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமோ, அங்கு வைத்து விடுவானா, அப்பா.
மற்றொரு அடியவர் :- (அர்ச்சனை தொடங்க உத்தரவு கேட்ட போது )
குருநாதர் :- அப்பனே, தொடங்கு. அப்பனே, நல்ல விதமாக அமையட்டும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இவனுடன் சேர்ந்து, அனைவரும் முருகனை வேண்டிக்கொள்ளுங்கள், அப்பனே, அனைத்தும் சரியாகும், இப்பொழுது ஆசிகள், ஆசிகள் போதும், அப்பா.
அடியவர்கள் :- வெற்றிவேல் முருகனுக்கு …..அரோகரா. ஓதிமலை ஆண்டவருக்கு, அரோகரா, அரோகரா, அரோகரா.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை வாக்கு நிறைவு)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete