​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 29 January 2026

சித்தன் அருள் - 2087 - அகத்தியர்!!! எத்தனை அகத்தியரய்யா! - பகுதி 4


4. உலோபாமுத்திரை அகத்தியர் (ஆரியர்) (காலம் 8000 B.C )

இவர் ஆரியவர்த்தத்தில் (ஹிந்துஸ்தானத்தில்) வாழ்ந்தவர். இவர் ரிக் வேதத்தில் 25 பாடல்களை பல தெய்வங்கள் மீது, ஆரிய பாடையில் பாடியுள்ளார். அவை யாவன; இந்திரன், மருத்து, ரதி, அஸ்வினி தேவர், ஆகாசம்-பூமி, விஸ்வ தேவர், அன்னாஸ் துதி, அப்பிரிய, அக்னி, பிரகஸ்பதி, அப்திரி நசூரியா என்பவையே!

இவர் தமிழர் அல்லர், தமிழ்நாட்டிற்கு வந்தவரும் அல்லர், இவருக்கு தமிழும் தெரியாது. மறைமலை அடிகள் தம்முடைய "மாணிக்கவாசகர் காலம்" என்னும் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வகத்தியர் ஒரு யாகம் செய்த பொழுது இந்திரனை விலக்கி மருத்துக்களுக்கு அவிர்பாகம் கொடுக்க, இந்திரன் வருந்த, பின் இந்திரனுக்கும், மருத்துக்களுக்கும் இவ்வகத்தியர் சமாதானம் செய்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவர் உலோபா முத்திரையை கண்டு ஆவலுடன் பி-எஸ்வின பொழுது, அவள் தன்னை மணந்து கொள்ள வேண்டியும் முதலில் மறுத்து, பின் அவளுடைய பேச்சு வலையில் சிக்கி மணந்து கொண்டதாகவும், விஸ்பலா என்கிற பெண்ணுக்கு, அஸ்வினி தேவர்களை கொண்டு, அவளின் நொண்டியான கால்களை சரிப்படுத்தி கொடுத்தார் எனவும், கேலன் என்பவருக்கு புரோகிதராக இருந்தார் எனவும் ரிக் வேதகிம் கூறுகிறது.

இவ்வகத்தியர் இசையிலும், வீணையிலும் வல்லவர் என்றும், இசை பாடும்போது தவறு ஏற்பட்டால், சகியாதவர் என்றும் ஏற்படுகிறது. இவர் ஆரிய ரிக் வேத சூக்த்தங்களுக்கு அதிகாரியாய் இருந்தும், ஏழு ப்ரஜாபதிகளில் ஒருவராக ஆரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கௌதமர், பாரத்துவாசர், விஸ்வாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர், காசிபர், அத்திரி போன்றவர்களே ஏழு ப்ரஜாபதிகள்.

இந்த எழுவரின் கோத்திரங்களே, ஆரியரிடையில், பெருவாரியாக உள்ளது. புராண காலமாகிய பிற்காலத்தில், ஆரியர்கள் பிருகு, தக்கன் ஆகியோரை ப்ரஜாபதிகளாக கருந்தினார்களே தவிர, அகத்தியரை சேர்க்கவில்லை. 

5. மைத்திரா வருண அகத்தியர் (ஆரியர்) - (காலம் 8000 B.C )

இவர் ரிக் வேத காலத்தில் ஆர்யாவர்த்தத்தில் வாழ்ந்தவர். இவர் ஆரியர், தமிழர் அல்லர். இவருக்கு தமிழ் தெரியாது, மேலும், தமிழ்நாட்டிற்கு வந்தவரும் அல்லர்.

ஒரு காலத்தில் மித்திரனும், வருணனும் தேவலோகத்தில் ஊர்வசியின் நடனம் கண்டு களித்தபோது, அவர்கள் இருவரும் அவள் பேரில் இச்சை படவே, இந்திரன் ஊர்வசியை சபிக்க, அவள் பூலோகம் சேர்ந்து மித்திரனை கூடி  வசிட்டரையும்,வருணனை கூடி அகத்தியரையும் பெற்றெடுத்தாள். 

6. ஆரிய ரிக் வேத காலத்து அகத்தியர்கள்:-

1. மானன் புதல்வர் மானிய அகத்தியர்!
2. பிரம்ம - ஊர்வசி புத்திரர் கும்ப அகத்தியர் (ஆரியர்)
3. புலத்தியர் - ஆவிர்பூ புத்திரர் அகத்திய (ஆரியர்)
4. கந்தருவன் - ஊர்வசி புத்திரர் அகத்தியர் (ஆரியர்)

இந்நால்வருடைய காலம் 8000 B.C.

இந்நால்வர்களும் ஆரியர்களே தவிர தமிழர்கள் அல்ல.  இவர்களுக்கு தமிழ் தெரியாது, மேலும், தமிழ்நாட்டிற்கு வந்தவரும் அல்லர். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment