சமீபத்தில் காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ மௌனாந்த குரு சுவாமிகள் ஜீவசமாதி மடாலயம். அல்சூர்.பெங்களூரு.
இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து ஆட்சி செய்கின்ற ஈசனே!!!!
உந்தனை மனதில் எண்ணுகின்றேன், எண்ணுகின்றேன், எண்ணி எண்ணி சொல்கின்றேன் மனிதனுக்கு!!!..... பின் புசண்டனவன்.
வேறு எதுவும் இல்லை. மனிதனுக்கு ஏற்ற காலங்களாக வரும் காலங்கள் இல்லை.
இல்லை என்பதாலும் நிச்சயம் நோய் நொடிகளே அதிகம் இருக்கும்.
இதனால் நிச்சயம் ஒரு பிரயோஜனமும் இல்லை.
மனிதனால் வாழவும் முடியாது.
யான் எதை அறிந்து அறிந்து, இதனால் பல வழிகளிலும் கூட அகத்தியன் வந்து பல வாக்குகள் கூட செப்பியும், மனிதன் நிச்சயம் திருந்த போவதாக இல்லை.
அகத்தியனின் வாக்குகள் பின்பற்றுவர்கள் நிச்சயம் நலமடைவார்கள்.
பின் யார்? எதை என்று கூற ஒருவன் கூட, "யான் பின்பற்றுகின்றேன்" என்று ஒரு வார்த்தை கூறட்டும்.
அவனுடைய வாழ்க்கை வரலாற்றை அனைத்தும் யானே, பின் உணர்ந்து உணர்ந்து, அவந்தனக்கு என்னென்ன தேவைகள் என்று கூட என்னிடத்தில் வரட்டும்.
அனைத்தும் உடனடியாக யான் கொடுக்கின்றேன்.
நிச்சயம் பல பல யுகங்களாக சித்தர்கள் வந்து வந்து, மனித குலத்திற்காகவே இப்படி வாழ்ந்தால், இப்படி நலம் நலம் என்று உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.
ஆனாலும், மனிதனோ!?? எதை எதையோ நினைத்து நினைத்து, எங்கே எங்கோ சென்று சென்று, தம் வாழ்க்கை நன்றாக இருக்கும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
ஆனாலும், இறைவன் பின், இறைவனோ பின், மனிதனை பார்த்து, "ஐயோ, பாவம் மனிதன்" என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
அப்படி இருக்கையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதை உணராமலே, நிச்சயம் துன்பங்கள் தான்.
அதனால், இத்துன்பத்தை போக்கக்கூடிய மனிதர்கள் இவ்வுலகத்தில் உண்டோ??
இல்லை.
நிச்சயம் இன்னும் இன்னும் துன்பத்தை பக்தியின் பாதையில் செலுத்தி செலுத்தி, நிச்சயம் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.
உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.
இவ்வளவும் ஏன்?
எதனையும் என்றும் எதிர்பார்த்த அளவிற்கு கூட, மனிதனின் நிலைமைகள் மாறுபட்டே கொண்டிருக்கின்றது.
இதனால், பக்திகள் பல பல உயர் ஞானியர்கள் கூட வந்து வந்து, இவ்வுலகத்தை காக்க முயற்சித்த பொழுது!!!!
ஆனால் மனிதனோ மாய வலையில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்து கொண்டிருக்கின்றான்.
இதனால், தன் நிலைமையே புரியாத மனிதன் எப்படி வாழ்வான்??
என்பதைக் கூட விசித்திரமானது.
அதனால்தான், மனிதனை சித்தர்கள், யாங்கள் எதை என்றும் எவற்றின் என்றும்
“கண்ணிருந்தும் குருடன்"
என்பேன்!! மனிதனை வரும் காலங்களில்.
இவை போன்று எப்பொழுதும் கூட, பின் மனிதன் உணர்ந்திருக்கவே இல்லை. ஏதோ சித்தர்கள் சொல்கின்றார்கள் என்பதைக் கூட.
ஆனாலும், எங்கள் வாக்குகளை பயன்படுத்துவதற்கும், நிச்சயம் புண்ணியங்கள் வேண்டும்.
அப்புண்ணியங்கள் யாரெல்லாம் பெற்றிருக்கின்றார்களோ???, அவர்களுக்கு நிச்சயம் நிச்சயம் ஒரு குறையும் வராது.
ஆனால், யான் தைரியமாக சொல்வேன், அகத்தியனின் வாக்குகளை யார்? பின்பற்றுகின்றானோ, அவந்தனக்கு ஒரு குறையும் வராது என்பது என் சொல்.
நிச்சயம், பின் ஜெயிக்கும் ஜெயிக்கும்.
ஆனால், ஒருவன் கூட, "யான் அகத்தியன் பக்தன், யான் அகத்தியனுக்கு சொந்தக்காரன், யான் அகத்தியனுக்கு மைந்தன்" என்று பொய் சொல்லி ஏமாற்றி!!!....
, ஆனாலும், அகத்தியனின் வாக்குகளை பின்பற்றாமல் போய்க் கொண்டிருக்கின்றான்.
ஆனால், எப்படி அகத்தியன் ஏற்றுக் கொள்வான்??? என்பது கூட விசித்திரமான உண்மை.
அதனால், நிச்சயம், மனிதன் மனிதனுக்கு ஓர் நிலைமை நிலைமை என்றால், நிச்சயம் அகத்தியனே ஓடி ஓடி வருகின்றான்.
ஆனால், நிச்சயம், பின் அகத்தியன் பக்தன் என்று சொல்பவர்களை கூட, யான் காரியும் துப்புவேன்.
எதனால் என்பதைக் கூட, அகத்தியன் சொல்வதை ஒருவன் கூட கேட்டதில்லை.
இதனால், யான் சொல்வேன், "யானே சாபம் இடுவேன்." நிச்சயம், அகத்தியனின் பக்தர்கள், பின் எதை என்று தெரியாமலே, வாழ்ந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு, அவனை ஏமாற்றியே கொண்டிருக்கின்றார்கள்.
ஏன், சித்தனையே ஏமாற்றினால், கடைசியில் நீ எங்கு செல்வாய்??? என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை. இதுதான் மனிதனுடைய இயல்பு.
பின் வரும் வரும் காலங்களில், எதை என்றும் நிரூபிக்கும் அளவிற்கும் கூட, நிச்சயம், மனிதன் இருக்கின்றான்.
========================================
# சித்தர்கள் வாக்கை பயன்படுத்தினால் , உயர்வு
========================================
ஆனாலும், தெரியாமல் கூட, எங்கள் வாக்கை பயன்படுத்தி, பயன்படுத்தி, இன்னும் மனிதர்கள் நல்வழிக்காக சென்று சென்று, அவர்கள் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.
இதை யார் அறிவார்கள்?
அதனால்தான், மனிதனை முட்டாள் என்றே யாங்கள் குறிப்பிட்டு, குறிப்பிட்டு, திட்டியும், தீர்த்து, பல வழியிலும் கூட, எப்படி எப்படியோ, ஞானத்தை வளர்த்தோம்.
ஆனாலும், இவ் ஞானி இன்னும் சிறப்பு வாய்ந்தவன்.
ஆனாலும், இவ் ஞானி எங்கு வருத்தங்கள்,?? எங்கு??? பலமாக, எது என்று தெரியாமல், மனிதன் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் வருவான். இவன்,
இவன் வேலையே இப்படித்தான்.
ஆனாலும், பிறப்பிலே, ஈஸ்வரா!!, ஈஸ்வரா!! என்றெல்லாம் நினைத்து, நினைத்து, படைத்து, படைத்து, பிரம்மனும் எது என்று அறிந்து, அறிந்து, இவந்தனையும் படைத்து வைத்தான்.
இதனால், ஞான ஞான மார்க்கத்திற்கே, இவந்தன் சென்றடைய வேண்டும்.
ஞான மார்க்கத்திற்கு சென்றடைந்து, பல வகையிலும் கூட, மனிதனுக்கு உண்மை நிலைகளை சொல்லி, மனிதனை, இவந்தன் நிச்சயம் திருத்தப்பட, திருத்த, திருத்த, இன்னும் மெய் ஞானங்கள் புலப்படும் என்பதைக் கூட, இவந்தனை நிச்சயம் அனுப்பி வைத்தான்.
விஷ்ணு சம்பந்தத்தாலும், எதனை என்றும் எதற்கும் அளவிற்கும் கூட, ஈசனும் சம்மதித்தாலும் , ஆனாலும், வந்துவிட்டான்.
முதலில், ஞானங்கள் தோன்றியது, இவந்தனக்கு அண்ணாமலையிலே,
அண்ணாமலையிலே, சுற்றிச் சுற்றி, எதனை எது என்று நிமித்தம் நிமித்தம் காட்டி, அமைதியாக இருந்து, தியானங்கள் செய்து, எங்கெல்லாம்?? தீமைகள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் உடனடியாக செல்வான்.
எதை என்று அறிந்தறிந்து, !!
ஆனால், இவனால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க முடியும்.
ஆனால், உண்மையான மனிதனே, புண்ணியம் உள்ள மனிதனே, இவனை வந்தடைய, நிச்சயம், அனைத்தும்,
ஆனாலும், விரும்பியதை தாம் விரும்பியதை, நிச்சயம் கேட்கலாகாது.
இவன் விரும்பியதை தான் கொடுப்பான் என்பது நிச்சயம். ஏனென்றால், பழகிப் போயிற்றது இவந்தனக்கு.
இவன் ஒரு வருடம் எதை என்று, பல வருடங்கள், அதாவது நூறின் மேல் தாண்டியது, இவனுடைய வயது.
இன்னும் கூட, உடம்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
பல வகையிலும் கூட, இன்னும் செல்வங்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான்.
இதனால், நலன்கள் பல, மனிதர்கள் பெற்று பெற்று, வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தை அடைந்து கொண்டிருக்கின்றார்கள்.
பல மறைமுகமாக, பின் உதவிகள் தாராளமாக, அதாவது, பின் இன்னும் சேர்க்க சேர்க்க, பொருள்கள் வந்து கொண்டே இருக்கின்றது.
அவர்கள் எல்லாம் மறைமுகமாகவே, தான தர்மங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவனுடைய அருளால்,
ஆனாலும், செப்புவதுதான் இல்லை.
ஆனால், மனிதனுக்கோ, இன்னும் இன்னும் சாட்சிகள் இல்லாமல், மறைந்து மறைந்து வந்து வந்து, துன்பத்தில் பிறந்து, ஆனாலும், இதனால் இறக்கக்கூடியவன் மனிதன்.
ஆனால், இறக்கக் கூடியவனுக்கு என்னென்ன?? என்னென்ன மெய் என்பதைக் கூட தெரிந்திருக்கவில்லை.
இதனால், மனிதனே பொய் என்பவன்,
ஆனால் பொய் என்பவனாக, மனிதனாக இருந்துவிட்டு, உண்மைப் பொருளை தேடாமல், பொய்யுள்ளதாகவே தேடிக் கொண்டிருக்கின்றான்.
அப்பொழுது, உண்மைப் பொருள் எப்பொழுது புலப்படும் என்பதை கூறுங்கள்?
நிச்சயம் புலப்படாது.
உண்மைப் பொருள், அதாவது, இறைவனை நோக்கி நோக்கி புறப்பட்டாலே, உண்மைப் பொருளை உணர்ந்து விடலாம்.
உண்மைப் பொருளை உணர்ந்து விட்டால், அதன் வழியே சாதித்துக் கொள்ளலாம்.
ஆனால், மனிதனோ, பொய்யானவை தான் வேண்டும் வேண்டும் என்று,
பொய்யானவற்றை எல்லாம் பின்பற்றி, பின்பற்றி சென்று, தானும் இழந்து, தன் எதை என்று தன் இனத்தையே கெடுத்துக் கொண்டிருக்கின்றான்.
இதனால், பொய்யானவை எவை எவை என்று கூட எண்ணிவிட்டால், ஆனால், அதன் மூலம் பொய்யானவை தான் வரும்.
அப்படி எப்படி?? உங்களுக்கு வெற்றிகளும் கிடைக்கும் என்பதை கூட, நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
இதுதான் மனிதனின் நிலைமை.
மனிதன் என்னென்னவென்று கூற தேவையில்லை. மனிதா, நீ இறைவனிடம் சென்று, எந்தனுக்கே பிறவிகள் வேண்டும் என்று நீ கேட்டாயா என்ன?
இல்லை.
பின், இறைவனே, பின் பாவ சம்பந்தங்களுக்கு ஏற்பவே, அதாவது, பின் புண்ணியம் பாவம் இதற்கு, பின் வேறுபடுத்திவிட்டு, வேறுபடுத்தாமலே பிறக்க வைக்கின்றான்.
அப்பொழுது, இறைவன் உந்தனக்கு என்னென்ன ???தேவை என்பதை உணர்ந்து கொடுப்பான். பின், உணர்ந்து கொடுப்பான். அவனே.
அவை விட்டுவிட்டு, எது என்று அறியாமல், எந்தனுக்கு அது கொடு!! இது கொடு!!! என்றால், இறைவன் என்ன வேலைக்காரனா? என்ன உந்தனக்கு செய்ய????,
நிச்சயம் செய்ய மாட்டான்.
அதனால், எண்ணிய எண்ணியபடியே, மெய்யான பொருளை, நிச்சயம் தேடிக்கொண்டு சென்றால், நிச்சயம் மெய்யானதெல்லாம் உந்தனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இதுதான் உண்மை.
அதனால், பொய்யானவைகள் எல்லாம், நிச்சயம் தேடிக்கொண்டு சென்றால், பொய்யானவைகள் தான் கிடைக்கும்.
இதுதான், பின் தத்துவம், ரகசியம் கூட.
இதனால்தான், தன் நிலைமைக்கு தான்தான் காரணம் என்று கூட முன்னோர்களின் வாக்கு. இதனை பல வகை, பல வகையிலும் கூட, பின் வழி நிறைய நின்று நின்று,
ஆனாலும், இவ் ஞானி, நிச்சயமாய், பல பல பல வழியிலும் கூட, எதை எதிர்பார்க்கும் அளவிற்கும் கூட, சுற்று வட்டாரங்கள் எதை என்று.
அதனால், இறைசக்தி, இவனிடத்தில் மிஞ்சி காணப்பட்டது.
இதனால், பல சித்தர்களும், இவந்தனுக்கு அண்ணாமலையிலே ஆசீர்வாதங்கள் கொடுத்து கொடுத்து, இவன் நினைத்த காரியங்கள், பின் நடைபெற, நடைபெற, ஏதுவாக இருந்தனர்.
அதனால், நிச்சயம், இவந்தன் நடந்தே செல்வான்.
எவ்வெவ்??? ஊரிலெல்லாம், நிச்சயம் தாழ்வுகள், அதாவது, அழிவுகள் ஏற்படுகின்றனோ, அங்கெல்லாம் சென்று கொண்டே இருப்பான்.
இதனால், ஒருமுறை, எங்கு எதனை என்றும் எதிர்பார்க்கும் அளவிற்கும் கூட, பின் காசி தன்னில் , பலமாக அழிவுகள் வந்துவிட்டது.
ஆனாலும், உணர்ந்தான், இவந்தன் கண்ணிலே எதை என்று தெரிந்தது.
ஆனாலும், இதனையும் ஈசனே காப்பாற்றுவான் என்று நினைத்திருந்தான்.
ஆனாலும், அதன் முன்னே, இவந்தன் நிச்சயமாய், நம் தன் புண்ணியங்கள் செய்ய வேண்டும், முந்திக்கொள்ள வேண்டும்.
இத்தனை திறமைகள், நம் தனக்கு ஈசனே கொடுத்திருக்கின்றானே. நிச்சயம் பார்ப்போம் என்று விரைந்தான். ஓடோடி காசிக்கு விரைந்தான்.
ஆனால், ஈசனோ பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஏன்,??? இவந்தனக்கு எம்மால் காப்பாற்ற முடியாதா என்று?.
ஆனாலும், ஈசனோ, நிச்சயம், இவந்தன் உண்மைகள், இவந்தனக்கு பல சக்திகள் கொடுத்துள்ளோம். அதனை வைத்துக்கொண்டு, நல்லோர்களை காப்பாற்றுகின்றானே. அதுவே பெரும் எண்ணமப்பா.
ஆனாலும், இப்பொழுது இருக்கின்ற மனிதர்கள், எதனால் சித்தர்கள் எதை என்று அறிந்தறிந்து, பின் கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று சொல்கின்றோமே.
ஏனென்றால், கொடுத்து விட்டாலும், சித்தன் இல்லை. யான் தான் சித்தன்.
பின் கொடுத்து விட்டாலும், இறைவன் இல்லை. யான் தான் இறைவன் என்று கூட சொல்லிவிடுவான்.
அப்பேர்ப்பட்ட உலகமடா, இது கலியுகமடா.
அதனால்தான், மனிதனுக்கு நாங்கள் ஏதும் கொடுப்பதும் இல்லை.
நிச்சயம், தான் தான் தகுதிக்கு ஏற்பத்தான் கொடுப்போம், கொடுப்போம்.
ஏனென்றால், மனிதனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டாலும், நிச்சயம், தானும் படு குழியில் விழுந்து, அனைவரையும் படு குழியில் விழ வைப்பான்.
இதுதான் இங்கு உலகில் நடந்து கொண்டிருக்கின்றது.
அதனால், இவ் ஞானி உடனடியாக சென்றான்.
ஆனாலும், காசி தன்னில் , ஆனாலும், பன்மடங்கு, பின் நீரினால், அழிவுகள், அழிவுகள் என்றே கூற.
ஆனாலும், இதை என்று அறிந்து, இதில் ஒரு சூட்சமம். ஆனாலும், பின் நீரில் அடித்துச் சென்றோர், பல வகையிலும் கூட, ஒருவர் கூட உயிர் விடாமல், எதை என்று அறிந்தறிந்து, இவன் மெய்ஞான பார்வையால் பார்த்து, பார்த்து, பல உபதேசங்களை செய்து, செய்து, மக்களை காப்பாற்றினான் இவந்தன்.
மக்களை காப்பாற்றி, காப்பாற்றி, பல வகையிலும் கூட, மீண்டும் தன் ஞானத்தால், நிச்சயம், பன்மடங்கு, எங்கெங்கு அமைக்க வேண்டுமோ???, அங்கெல்லாம், நிச்சயம், இல்லங்களாகவே (மடங்கள்) அமைத்துவிட்டான்.
பின் எதனை என்றும் அறிந்து, இதனால், இவந்தனக்கும் பெரும் சந்தோஷம். என் மக்களை, அதாவது, இறைவனுடைய மக்களை, யான் காப்பாற்றி விட்டேன் என்று எண்ணி,
ஆனாலும், இதை என்று ஈசனுக்கும் சந்தோஷம்.
எம்மால் இப்படி படைக்கப்பட்டிருக்கின்றோமே, எதை என்று அறிந்து, மிக்க சந்தோஷம்.
இதுபோலத்தான், நிச்சயம், வரும் காலங்களில், ஆட்களை படைக்க வேண்டும் என்று சில ஞானிகளும், ஈசன் படைத்துக் கொண்டே தான் இருந்தான்.
இப்பொழுது கூட இருக்கின்றான்.
ஆனால், நிச்சயம், மனிதன் எப்பொழுது கூட, தன்னை அறிந்து, தன் நிலைமையை அறிந்து, அனைத்திற்கும் ஈசனே காரணம், அதாவது, இறைவனே காரணம் என்று எப்பொழுது ஒரு மனிதன் இருக்கின்றானோ, அவந்தனக்குத்தான் அனைத்தும் வரும், அனைத்தும் வரும் சொல்லிவிட்டேன்.
அப்படி எதை என்று உணராவிடில், பின் அவை வேண்டும், இவை வேண்டும், எதை என்று குறிப்பிட்ட அளவிற்கும் கூட, தேடி தேடிச் சென்றாலும், நீ தேடிக்கொண்டே, தேடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
வாழ்க்கை முடிவுறாது,
மீண்டும் பிறப்புகள் எடுத்து, எடுத்து, தேடிக்கொண்டே இருந்து, இருந்து, ஒன்றும் லாபம் இல்லை.
இதனால்தான், அனைத்திற்கும் காரணம், இறைவனே என்று ஒரு அடியில் விட்டுவிட்டால், இறைவனுக்கு தெரியும்,!!
தெரியும் !! என்னென்ன செய்வது என்பதை கூட, இதை கூட அறியாத மனிதனின் செயல்கள் இன்னும் எல்லை மீறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றது.
இன்னும், இன்னும் ஏராளமான, ஏராளமான, பின் ஞானியர்களும் இவ்வுலகத்தில் வலம் வந்துதான் கொண்டிருக்கின்றார்கள். நலம் நலமாகவே.
இதனால், இவ் ஞானியும், பின் அங்கு சந்தோஷம் அடைந்து, பல வருடங்களாக அங்கேயே சூட்சம ரூபத்தில் இருந்தான். எதை என்றும் அறியாது, அறியாது.
ஆனாலும், மிக்க மிக்க இன்னும், இன்னும் எதை என்றே கூற, இன்னும், பின் இவந்தனக்கு, பின் தியானங்களே மிகச் சிறந்தவை என்பேன்.
தியானங்களாகவே பார்த்துவிடுவான்.
எங்கெங்கு அழிவுகள் ஏற்படுகின்றதோ, அங்கெல்லாம் உடனடியாக சென்று விடுவான்.
ஒருமுறை சதுரகிரியில் பல மக்கள் கூடினார்கள்.
ஆனாலும், அங்கு நீர் வரத்து அதிகமாய், பின் எதை என்று உணர்ந்து, உணர்ந்து, பின் அழிவுகள் காரணமாக ஆகிவிட்டது.
ஆகிவிட்டது என்பதாலும், ஆனாலும், மெய்ஞான பார்வையால் உடனடியாக செல்ல வேண்டும்.
இதனால், நிச்சயம் எதை என்று அறிந்தறிந்து, உடனடியாக செல்ல வேண்டும்.
பின் நடந்தாலும், செல்ல முடியாதே என்பதை கூட, பின் இன்னும் நாமத்தை, அதாவது, கங்கை நதியில், நிச்சயம், பின் நின்று, அங்கேயே பல தவங்கள் புரிந்து, நிச்சயம், பின் உண்ணாமலும், உறங்காமலும், எதை என்று, எதை என்று கூற, இன்னும், இன்னும் எதனை என்றும் அறிந்து, அறிந்து, தவங்கள் மேற்கொண்டான்.
சக்தியும் கொடுத்தான், ஈசன், நிச்சயம் என்று கூட.
அதனால், பறந்து வந்து, உடனடியாக, எதை என்று, பின் தன் கையால் தண்ணீரையே நிறுத்தினான்.
பல பக்தர்கள், நிச்சயம், எதை என்று உணர்ந்து, உணர்ந்து, அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள்.
ஆனாலும், கலியுகத்தில், நிச்சயம், எப்படி? காப்பாற்றுவார்கள், எதை என்று கூற, சித்தர்களும், ஞானியர்களும், ஆனாலும், நிச்சயம், எதை என்று உணர்ந்து, உணர்ந்து, பின் அதனால்தான், கலியுகத்தில் கூட, மனிதன் பொய்யானவையை எல்லாம் பின்பற்றி, பின்பற்றி, பின் ஏதோ? ஒன்று கிடைக்கும் என்பதை கூட உறுதியாக வந்து, வந்து, தேடுதல் வேட்டையை இறைவனை நினைத்து, நினைத்து செய்கின்றான்.
அதனால், இறைவனும் ஒன்றும் செய்ய மாட்டான், சொல்லிவிட்டேன்.
அதனால், உயர்ந்த ஞானமும், உயர்ந்த பக்தியும், கருணை உள்ளமும், இறைவா, நீயே துணை. நிச்சயம், அனைத்தும் நீயே செய்வாய் என்று எவன் ஒருவன்? இருக்கின்றானோ, அவந்தனக்கு மட்டும் இறைவன் அனைத்தும் செய்வான்.
ஏன், எதற்காக என்றால், இக்குறிப்பிட்ட எதை என்று கூற, ஏன், பின் எதனையும் நீ விரும்பாது இருந்தால், ஓடோடி வருவான். பின் உன் இல்லத்திற்க்கே தேடி, தேடி, இறைவன் நல்லதை செய்ய, பல ஞானியர்களும் கூட அனுப்புவான்.
ஏனென்றால், முன்பெல்லாம் உயர்ந்த பக்திகள், பக்திகள், இவ்வாறு மனிதனாக பிறந்து விட்டோமே. ஏதாவது நடந்துவிட்டால், என்ன செய்வது? இறைவன் தான் காரணம், இறைவனே பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்பொழுது, பின் மாறிவிட்டது, அனைத்தும். அதனால், மனிதன் மாற, மாற, நிச்சயம், இயற்கையும் மாறிக்கொண்டே இருக்கும்.
இதனால், தன் அழிவிற்கு தானே காரணம் என்பதே பொருள்.
இதனால், நிச்சயம், ஒழுக்கமற்றவராக, இவ்வுலகத்தில், மனிதன் இனிமேலும் வாழ்வான் என்பது சத்தியமான உண்மை.
இதனால், சரியாக, அப்படி, மனிதன் மீதே, யான் தாக்குதலை கூட ஏற்படுத்துவேன்.
எதனால் என்பதையும் கூட,!!!
அதனால், அழிவுக்கு காரணம்,.....
இறைவன் இல்லை!!!, ஞானிகள் இல்லை!!!!, சித்தர்கள் இல்லை!!!! மனிதன் தான் என்று, யான் இங்கு குறிப்பிடுவேன்.
ஆனால், இவ் ஞானியோ, எங்கெல்லாம் சென்று, சென்று, எதனையும் என்று அறிந்தறிந்து, இதனால், பல வழியிலும் கூட, பல பல திருத்தலங்களுக்கு எல்லாம், நிச்சயம், சக்திகள் ஊட்டிக் கொண்டே வந்தான்.
நிச்சயம், வருகின்ற கலியுகத்தில் கூட, இவன் அதை நிகழ்த்தத்தான் போகின்றான்.
ஏனென்றால், இவந்தனை, நிச்சயம், யான் எவ்வாறு கூறுவது?
மௌனத்தாலே, அனைத்தும் சாதித்தவன். பின், மௌனத்தாலே, அதாவது, பின் அமர்ந்து விட்டால், இவந்தனக்கு என்ன ஞாபகம் வருகின்றது என்றால், எதனையும் எங்கெங்கு அழிவுகள் ஏற்படுகின்றதோ, அங்கெல்லாம் உடனடியாக சென்று விடுவோம் என்பதை கூட,
இதனால், தன்னை பற்றி கவலைப்படவில்லை. மற்றவருக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
===================================
# மற்றவருக்காக கவலைப் படுங்கள்
===================================
எப்பொழுது யார்? ஒருவன், மற்றவருக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றானோ, அவந்தனக்கு இறைவன் அனைத்தும் செய்வான்.
ஆனால், அவை போன்று யாருமில்லை. இவ்வுலகத்தில் மிகக் குறைந்த நபர்களே!!!,
எதை என்றும் உறுதி அளிக்கும் திட்டத்தில், திட்டத்தின் வழியாக, தான் தான் நன்றாக இருக்க வேண்டும், தம் இனத்தை பெருக்க வேண்டும் என்றெல்லாம் மனிதன் நினைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம், இறைவன் கூட, நீயே!! எப்படியாவது செய் என்று விட்டுவிட்டால், நிச்சயம்,
அதனால்தான் வருத்தங்கள், கஷ்டங்கள், நோய்கள், மனக்குழப்பங்கள் என்றெல்லாம், பின் தீண்டிக் கொள்கின்றது.
ஆனாலும், இதனையும் அறிந்து, அறிந்து, இறைவா!!, அனைத்திற்கும் நீயே காரணம், உன்னால்தான் அனைத்தும் செய்ய முடியும். எந்தனுக்கு உற்றார் இல்லை, உறவினர் இல்லை, அனைத்தும் நீயே!!!, பின் என்று ஒருவன் சொல்லட்டும்.
அவந்தனக்கு நிச்சயம் நல்லது நடக்க வில்லை என்றால், என்னை கேளுங்கள், யான் உடனடியாக செய்கின்றேன்.
எதை என்று அறிய, அறிய, இப்பொழுது கூட, எதை என்று அறியாத அளவிற்கும் கூட, நிச்சயம், பின் பக்தர்களை காத்துக் கொண்டே இருக்கின்றேன். நிச்சயம், உண்மையுள்ளவனையும் கூட,
ஆனாலும், இதனை மாற்றம் அமைக்கும் திறன் வாய்ந்த சக்திகளாகவும், நிச்சயம், எதனை என்று இருக்கின்றது.
இதனால், இதன் சக்தியைப் பற்றி அகத்தியனும் உரைப்பான்.
எதற்காக மனிதன் பிறக்கின்றான்? இதன் அறிவில் ரீதியாகவும், எது என்று உணர்த்துவதற்காகவே, அகத்தியன் இன்னும் இன்னும் எப்படி, எப்படி மனிதர்களை திருத்த வேண்டும்??? என்பதை கூட, தன்பால், நிச்சயம் திருத்தி, ஒரு கூடாரம் ஆக்குவான்.
எதை என்று இவ்வுலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை.
நிச்சயம், அகத்தியன் இனிமேலும் சிறந்ததாகவே வைத்துக் கொள்வான்.
ஏனென்றால், ஏமாற்றங்கள், ஏமாற்றங்கள்.
அகத்தியன், எதை என்று சித்தன், ஞானி, பின் எதை என்று பொருள் படாமல், இறைவன் என்றெல்லாம், இறைவன் பேசுகின்றான் என்றெல்லாம் பொய், பொய்.
ஆனாலும், அங்கு சென்று பார்த்தால், உண்மை இல்லை.
ஏதோ ஒன்று வழிவகுக்கும், பின் பரிகாரங்கள், எதனை என்றும், ஆனாலும், உண்மையான பக்தர்களுக்கு, நிச்சயம், யாங்களே வந்து, உறுதியாக துணை அளித்து, நிச்சயமாய், மனித ரூபத்தில் வந்து, நிச்சயம், பல இடங்களுக்கு அழைத்துச் செல்வோம் என்பது மெய்.
இதனால், இவ் ஞானியானவன், மிகச்சிறந்த உயர் பக்தியை, ஈசன் மீதே காட்டினான்.
ஈசனை, நிச்சயம், எதை, எதை என்றும், ஆனாலும், ஈசனும் கூட, இவனை, நிச்சயம், தன் பிள்ளையே !!! என்று எண்ணி, எண்ணி, இப்படி, எதை என்று அறிந்தறிந்து, இதனால், நிச்சயம், ஒரு வகையில், பல வகையிலும் கூட, மீண்டும், எதனை என்றும் அறிந்து, அறிந்து, இமயன் மலைக்கு, நிச்சயம் சென்றான். (இமாலய மலைக்கு)
அங்கே, பல பல வருடங்களாக, தவங்கள் புரிந்து, புரிந்து, பல பரிசுத்தமான ஆன்மாக்களுக்கெல்லாம், உடனடியாக தீர்வு கொடுத்திருந்தான்.
தீர்வு கொடுத்துக் கொடுத்து, நலமாகவே, அங்கு சென்றவருக்கு எல்லாம், ஆசிகள் கொடுத்துக் கொடுத்து, மிக உயர்ந்த ஸ்தானத்தில் வகிக்க வைத்தான் இவந்தன்.
அதனால், இவந்தனை நம்பியவருக்கு, சிறிது சிறிதாக, நிச்சயம், அனைத்தும் செய்வான்.
ஆனாலும், இவனிடத்தில் எதுவும் கேட்க தேவையில்லை. பின், அமைதியாக உட்கார்ந்தாலே!!!!.........,
நிச்சயம், அனைத்தும், இவந்தனக்கு என்னென்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு, இவனே கொடுப்பான். இதுதான், இவனுடைய சுவராஸ்யமான உண்மை.
இதனையும் நிமித்தம், நிமித்தம், கடமை, கடமை என்றெல்லாம், நிச்சயம், கடமைகளை சரியாக செய்தாலே, இவந்தன் ஓடோடி வருவான்.
அதனால், நியாயம், நீதி, தர்மம், எதை என்று, எங்கெல்லாம் இருக்கின்றதோ, அங்கெல்லாம், இவந்தனே ஓடி, எதை என்று அறிந்தறிந்து, இவனே ஓடோடி வந்து, மக்களுக்கு நன்மை செய்ய, துடித்துக் கொண்டே இருக்கின்றான் இப்பொழுது கூட.
ஆனாலும், பின் மனிதன் செய்கைகள் ஒன்றும் இல்லை. இங்கே வருபவர்களும், எதை எதையோ நினைத்து, நினைத்து வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனாலும், தருவானா??? என்ன???
நிச்சயம், நிச்சயம், உண்மையான!!!!!!!!!........
நீயே வேண்டும்.
நீயே வேண்டும், அப்பா என்று,!!!..... இவனை நினைத்துவிட்டால், நிச்சயம், இவந்தனே அனைத்தும் கொடுத்து விடுவான்.
இவ் ஞானியின் அருள் இன்னும் பரிபூரணம், பரிபூரணம்.
இதனால், நிச்சயம், பிறவிகள் எதை என்று எதிர் கொள்ளும் அளவிற்கும் கூட, சக்திகள் உண்டா?
========================================
# மனதில் தெய்வத்தை நிறுத்தினாலே போதுமானது
========================================
உண்டு என்பதையும் கூட, நிறுத்தி, நிறுத்தி பார்த்தால், மனதில் தெய்வத்தை நிறுத்தினாலே போதுமானது. அனைத்தும் கொடுத்துவிடும் தெய்வமே.
ஆனாலும், நிறுத்துவது இல்லை. மனதில் !!
எதை எதையோ நினைத்து, நினைத்து, நினைத்து, நினைத்து வருந்தி, வருந்தி, எதனால் எப் புண்ணியம் கிடைக்கும்???.
புண்ணியத்தின் தன்மை எதை எதை என்று அறிந்து கிடைக்கும் என்பது எல்லாம் புண்ணியத்தின் பாதையும் கூட கெடுத்துக் கொண்டு வருகின்றான் மனிதன்.
அதனால், மனிதனின் காலடிகள் எவ்வாறு என்பதையும் நினைத்து, நினைத்து, கர்மாவில் பின் காலடி வைத்து, வைத்து கர்மா பூமியிலே நடந்து கொண்டிருக்கின்றான்.
பின் போகும்போதெல்லாம் கர்மா பின் காலடியில் தொற்று, தொற்று சென்று கொண்டிருக்கின்றது.
அப்பொழுது மனிதன் எவ்வாறு நலன்களாக இருப்பான்?
ஆனால் பின் கர்மா தொடாமல் பார்த்துக் கொள்வதற்கும், நிச்சயம் வரும் காலங்களில் அகத்தியன் அறிவியல் ரீதியாகவே வாக்குகள் உரைப்பான்.
அதனை பயன்படுத்தியவர்கள் பெரும் எஞ்சியவர்களே, அதாவது குறைந்தபட்சமே.
நிச்சயம் தன் பக்தர்களை அகத்தியன் கைவிடமாட்டான்.
நிச்சயம் சில பக்தர்களே அகத்தியன் பேச்சை கேட்டு, சரியாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் பல பேர்களோ!?!?!? இன்னும் பின் அகத்தியன் தான் தான் என்னென்ன தேவை??? என்று கூட பூர்த்தி செய்து விடுவான் என்று கூட எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவையெல்லாம் நிச்சயம் நடக்காது, நடக்காது என்பேன்.
==================================
# அன்பால் தான் அகத்தியனும் கூட பிடிக்க முடியுமே தவிர, நிச்சயம் எதனாலும் பிடிக்க முடியாது.
==================================
உயர்ந்த பக்தியும் அன்பும் பின் எதை என்று உணர்ந்து, உணர்ந்து பின் அன்பால் தான் அகத்தியனையும் கூட பிடிக்க முடியுமே தவிர, நிச்சயம் எதனாலும் பிடிக்க முடியாது.
அதனால் அகத்தியனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அன்பு, பாசம், கருணை.
இவைகள் இருந்தாலே அகத்தியனை தேடி, தேடிச் செல்ல நிச்சயம் பின் அறியாது. அதாவது தேடி, தேடிச் செல்ல மனிதன் நிச்சயம் அலைய தேவையில்லை.
அகத்தியனே வருவான், அகத்தியனே வருவான், ஆசிகளும் கொடுப்பான், அனைத்தும் செய்வான்.
உணர்ந்து, உணர்ந்து அகத்தியனை மீறிய இங்கு எதை என்று அறிய ஒரு சித்தனும் எதை என்று இல்லை.
அகத்தியனே சால சிறந்தவன்,
மனிதனுக்காக எதை என்றும் எப்பேர்ப்பட்ட எதை என்று கூற, அனைத்தும் மாற்றுபவன்
அனைத்தும் மாற்றும் திறன்.
அதாவது எதை என்று அகத்தியனுக்கு ஒருவனுக்கே உள்ளது. பின் விதியை கூட மாற்றி அமைத்து, பல பல பேர்களுக்கும் விதியும் மாற்றி அமைத்து, அனைத்தும் செய்து கொண்டுதான் இருக்கின்றான் அகத்தியன்.
அதனால் அகத்தியனின் மேன்மை யான் என்ன சொல்வது?
இன்னும் பல பல சித்தர்களும் வந்து பின் அகத்தியனின் நிலைமையை சொல்வார்கள்.
அவ்வாறு புரிந்து கொண்டாலே போதுமானது.
இதனால் ஏதும் தேவையில்லை,
இறைவா, இறைவா என்று கூட.
அதனால் நிச்சயம் சொல்லிவிட்டேன். உயர்ந்த எதை என்று எதையும் கேட்காதீர்கள்.
உங்களை படைத்தது இறைவன் படைத்தவனுக்கு தெரியும். எதை என்று அறிந்து, அறிந்து கொடுக்க வேண்டுமோ, அதை நிச்சயம் கொடுப்பான்.
ஆனாலும் நீங்கள் கேட்டாலும், நிச்சயம் இறைவன் கொடுக்கலாகாது. துன்பங்களைத்தான் கொடுப்பான் என்பதே.
ஆனாலும் கேட்டறிந்து, கேட்டறிந்து, நீதி, நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்தாலே, உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.
என்னிடத்தில் எதை என்று அறிந்தறிந்து, யானும் உடனடியாக கொடுத்து விடுவேன்.
சரியாக மனிதன் இருந்தாலே, இவன் செய்கைகள். ஆனாலும் நீங்கள் ஒருவரிடத்தில் எதை என்று அறிந்தறிந்து, அனைத்தும் கொடுக்க வேண்டும் என்றால், நிச்சயம் யாராலும் முடியாது.
எதை என்று அறிந்தறிந்து, இதனால்தான் தன் தன் நிலைமைக்கு ஏற்ப, தன் தன் நோய்களும், கஷ்டங்களும் வாரி வாரி இக் கலியுகத்தில் வந்து கொண்டே இருக்கின்றது. நிச்சயம் வரும் காலங்களில் என்னென்ன?? நடக்கப்போகின்றது என்பதை கூட.
ஆனாலும் அதற்குள்ளே அகத்தியன் பன்மடங்காக பல மனிதர்களையும் காத்துக் கொண்டே இருக்கின்றான். இதனால் நிச்சயம் வழி விடுவதும் இல்லை.
ஆனாலும் இவ் ஞானியானவன் எது என்று எதிர்நோக்கும் அளவிற்கும் கூட, எங்கு எதை என்று கூட சரியாக அறிந்திருக்கும் திறன் இவனிடத்தில் உள்ளது.
நிச்சயம் இறைவனை எண்ணினால், நிச்சயம் அப்படியே எதை என்று மனதில் நினைத்து, கண்களை மூடி, பின் கைகளால் நிச்சயம் வரைந்தால், இறைவன் அங்கேயே வந்து உடனே உயிர், உயிர்பிய்ப்பு, அதாவது உயிர் பிணைப்பு எது என்று தானாகவே வந்து விடுவான்.
இதனால் பின் இவ் சக்தி இவனிடத்திலே உள்ளது என்பேன்.
ஒரு உதாரணத்துக்காகவே சொல்கின்றேன். அகத்தியனை மனதில் நினைத்து வரைந்து விட்டால், நிச்சயம் அகத்தியனே தன் முன் தோன்றுவான் என்பது மெய்.
அதாவது என்னையும் கூட வரைந்துவிட்டு, எது என்று பின் எதை என்று கூற, பின் கண்ணை திறந்தால், யானே அங்கு வந்து விடுவேன். அவ் சக்தி ஈசனே இவனிடத்தில் கொடுத்திட்டான்.
அதனால்தான் பல பல வழிகளில் கூட, இவன் தனக்கு எது என்று அறியாமல், பல சக்திகள் கிடைத்து, கிடைத்து உதவிகள் பல செய்து கொண்டே இருந்தான்.
இதனால் பல பல வழிகளில் கூட, மிக மிக உயர்ந்த ஸ்தலங்களுக்கு கூட, இவந்தன் ஏற்படுத்தி, ஏற்படுத்தி இன்னும் வரைபடங்கள் அப்படியே இருக்கின்றன.
அதனால் அவை எவ்வாறு என்பதையும் கூட, நிச்சயம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.
பின் எதை என்று உணர்ந்து, உணர்ந்து அவ் வரைபடத்தை சிலர்கள் பார்த்தாலும், அதாவது சக்தி உள்ளவர்கள் பார்த்தாலும், அவ் வரைபடம் மூலமே, நிச்சயம் தானாகவே வந்து உயிர் பெற்று, இறைவன் வந்து நிற்பான்.
வரும் காலங்களில் அது ஒருவனுக்கு மட்டுமே!!... உண்மை நிலையை யாங்கள் எதை என்று அறிந்தறிந்து கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் அவந்தனும் பணத்தை பார்த்துவிட்டான். அதனால் யாங்கள் பின்னோக்கி சென்றுவிட்டோம்.
அதனால் எதன் மீதும் ஆசைப்படக்கூடாது என்பேன் .
ஒருவன். அவ் ஆசைகள் தொடர்ந்து, தொடர்ந்து ஆனாலும், பின் எதற்காக சித்தர்களை பயன்படுத்துகின்றார்கள் என்றால், அனைத்தும் பணத்திற்காகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் எதை எதை என்று அறிய, அறிய. அதனால் பின் பணம், பணம் என்று கூற.
ஆனாலும் சித்தன் அங்கே எப்படி இருப்பான்??? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
பின் எதை என்று அறிந்தறிந்து, அங்கு பணத்தின் மீது பக்தி உள்ளவனுக்கு, இறைவன் மீது எப்படி பக்தி இருக்கும்?????
எங்கள் எதை என்று அறிந்து, அகத்தியன் மீது எப்படி பக்தி இருக்கும்???
ஏன் கந்தன் மீது எப்படி பக்தி இருக்கும்????
ஏன் பல சித்தர்கள் மீது எப்படி பக்தி இருக்கும்???
அதனால் சித்தர்கள் யாங்கள் எதனையும் விரும்புவதில்லை.
ஒன்றே பின் அன்பு, பண்பு, கருணை இதற்கே யாங்கள் அடிமையானவர்கள்.
அவரவர் எதை என்று அறிந்து, அறிந்து இதனால் நிச்சயம் நன்கு அறிந்து, அறிந்து அதனால் இன்னும் எதை எது என்று உணர்ந்து, உணர்ந்து நிச்சயம் இவ் ஞானி அவன் செய்து கொண்டே இருப்பான்.
இதனால்தான் பின் மௌனத்தை கடைபிடித்தாலே, தியானம் செய்தாலே, அனைத்தும் தித்திக்கும் என்பது உண்மை.
தன்னை, தன்னை நிச்சயம் தன்னை அறிந்தால், நிச்சயம் அனைத்தும் அறிந்து விடலாம் என்கிறார்களே.
நிச்சயம் முதலில் தன்னை அறிவதற்கு அமைதியாக இருந்தாலே போதுமானது.
மற்றவன் பேச்சையும் கேட்க வேண்டாம்.
பின் எதை என்று அறிந்தறிந்து, அகத்தியன் சொன்னான், புத்தன் சொன்னான், எதை எது என்று எதிர்நோக்கும் அளவிற்கு கூட இன்னும் புத்தனின் வாழ்க்கை வரலாற்றையும் நிச்சயம் எப்படி எல்லாம் பிறந்து, எப்படி எல்லாம் ஆகினான்????.
பின் எதனை எல்லாம் அழித்து விட்டார்கள் என்பதை கூட நிச்சயம் வரும் காலங்களில் சித்தர்கள் யாங்கள் உரைக்கப் போகின்றோம்.
பல மெய்ஞானிகளை எல்லாம் அழித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
எதை என்று உணர்ந்து, உணர்ந்து அதனால் நிச்சயம் அவர்கள் மெய்ஞானத்தை எப்படி?? எல்லாம் வந்தார்கள், எப்படி?? எல்லாம் வந்தார்கள்.
இவ்வுலகிற்கு நிச்சயம் எப்படி எல்லாம் நன்மை செய்தார்கள்??? என்பதை கூட வரும் காலங்களில் தெள்ளத் தெளிவாகவே யாங்கள் நிச்சயம் எடுத்துரைப்போம்.
இதனால் உலக மாற்றங்கள் நிகழ்வது எதை என்று உறுதி, உறுதி.
அழியும் காலம்.
ஆனாலும் யாங்களோ காத்துக் கொண்டிருக்கின்றோம். மனதை மாற்றி, மாற்றி எதை என்று அறிய, அறிய இவ்நாட்டிலோ, எவ்நாட்டிலே எதை என்று அறிய ஓர் எதை என்று கூற. பின் எதை என்று உணர்ந்து, உணர்ந்து பின் எதனை என்று கூற மனிதன் தயாராக்கிக் கொண்டு இருக்கின்ற படியினாலும் கூட அதை ஒன்றை நிச்சயம் ஏங்கோ எங்கே எதை என்று அறிய அங்கேயே போட்டுவிட்டாலே இவ்வுலகம் அழிந்துவிடும்.
ஆனாலும் அதில் அழியாமல் அவனை மனதை மாற்றி, மாற்றி யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் மனிதனோ பின் அனைத்தும் நடக்கும், நடக்கும் என்று கூட உறுதியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றான்.
எவ்வளவு?? விசித்திரமானது, எவ்வாறு நகைச்சுவை உள்ளது என்பதை கூட யான் அறிந்திருக்கின்றேன் இங்கு.
இதனால் நிச்சயம் நல்லோர்களை கூட யாங்கள் விட்டுவிட மாட்டோம்.
ஆனாலும் சித்தர்கள் நாமத்தை பின் செப்பவும், அவந்தனக்கு அருகதை இருந்தால்தான் செப்ப முடியும் என்பேன்.
ஆனாலும் ஒவ்வொருவரும் எதை எதை செய்து கொண்டிருக்கின்றான் என்றால், அனைத்தையும் அனுபவித்து விட்டு, பின் வாழ்க்கையே வீண்.
இறைவனை நாடியாவது, சித்தர்கள் நாடியாவது சென்றால், பிழைத்துக் கொள்ளலாமே என்று பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
அவந்தனுக்கெல்லாம் என்ன மாதிரி எது என்று அறியாமல், அவனைப் பற்றியே அவனை அறியலாகாது, அறியலாகாது என்றெல்லாம் பல வாக்குகளை கூட யாங்கள் சொல்லிவிட்டோம்.
அதனால் நிச்சயம் எதை என்று அறிய, அறிய ஒரு ஞானியாக வேண்டும் என்றால், எவ்வாறு என்பதை கூட இவனைப் பற்றியும் கூட யான் தெரிவித்துவிட்டேன்.
அதனால் நிச்சயம் தம் தனக்காக எதையும் செய்யக்கூடாது,
மற்றவருக்காகவே செய்திருக்க வேண்டும்.
உணவு கூட தன்னை எது என்று அறிந்த மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும்.
தன்னை எதை என்று எதிர்நோக்கும் அளவிற்கு கூட தன் கையில் எதுவும் இருக்கக்கூடாது.
அப்படி இருப்பவன் தான் உண்மையான ஞானி.
இவ்வுலகத்தில் அப்படி இருக்கின்றானா??? என்றால், நிச்சயம் எதை என்று அறிந்து, அறிந்து !!
அதனால் காசுகளுக்கே.
காசை பின் எது என்று என்று கூட காசு எதை என்று கூட அவன் கையில் வந்துவிட்டால், அவன் தன் அங்கேயே பின் தோல்வி அடைந்து விடுகின்றான்.
அப்பொழுது எதை என்று அறிந்து, எவ்வளவு ஞானியாக இருந்தாலும், கர்மத்தை சுமைக்க வேண்டும்.
ஆனாலும் எது என்றும் அறிந்தறிந்து, ஏதும் தேவையில்லை என்று ஒரு வார்த்தை நிச்சயம் அவந்தன் எது என்று உணர்ந்து, உணர்ந்து இறைவனே என்று நிச்சயம் கதியாக இருந்தாலே, நிச்சயம் அனைத்தும் கிடைக்கும் என்பது அவன் தான் ஞானி.
ஆனாலும் பொய்யான இவன் ஞானி, இவன் சித்தன் என்றெல்லாம் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு என்னதான் எதை என்று அறிந்தறிந்து,
அதனால்தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தாலே, சித்தன் இல்லை என்று கூட மனிதர்கள் வரும் காலங்களில், அதாவது கலியுகத்தில் சொல்லிவிடுவார்கள்.
அதனால்தான் யாங்கள் நிச்சயம் வந்தோம்.
நிச்சயம் எதை என்று இருந்து பார்த்து தான் கொண்டிருக்கின்றோம்.
தக்க சமயத்தில், நிச்சயம் எங்கள் பிடியிலிருந்து நீங்கள் தப்பிக்கவும் முடியாது. எதை என்று அறிந்தறிந்து,....
அதாவது திருடர்கள், திருடர்கள் எவ்வளவு நாட்கள் தான் திருட முடியும்,???? நிச்சயம் அறிந்து, அறிந்து சொல்கின்றேன்.
எதை என்று உணர்ந்து, உணர்ந்து சொல்கின்றேன். அதனால் ஏதும் தப்பிக்கும் இயலாது!!
இதனால் இவ் ஞானி எதை என்று அறிந்தறிந்து இங்கும் வந்துவிட்டான்.
எதை என்று அறிந்தறிந்து, ஆனாலும் இவ் தேசமானது (பெங்களூர் பிரதேசம்)மிகவும் ஏழ்மையில் போய்க்கொண்டிருந்தது.
ஆனாலும் பசியினாலும் எதை என்று அறிந்தறிந்து, இன்னும் எவை என்று பின் உணவினாலும் பாதிக்கப்பட்டு, அனைவரும் உயிர் மாய்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் பின் இவன் எதை என்று எச்சரித்து, இவந்தனக்கு பின் பின் தோன்றி விட்டது. இங்கே சென்றால் நம் தனே காப்பாற்றி விடலாம் என்று எண்ணி, அதனால் இங்கே அமர்ந்துவிட்டான்.
இதனால் பல ஆன்மாக்களுக்கு பின் பல பல எது என்று உதவிகள் செய்து, அனைவரையும் மீட்டெடுத்து விட்டான்.
ஆனாலும் எதை என்று அறிய ஒரு அம்மை, அதாவது எதை என்று அறிய, அறிய!!!... ஒரு பெண் பிள்ளையோ, பின் நன்றாகவே அவள் தனக்கும் யாருமில்லை.
எது என்று உணர்ந்து, உணர்ந்து அவள் தனும் , பின் இவந்தனை நினைத்து, நினைத்து, பின் இவந்தன் இடத்திற்கே வந்து கொண்டிருக்கும் பொழுது, இவந்தனும் எது என்று அறியாது. யார் அம்மையே??? எதை என்று!!!
ஆனாலும், இவனைப் பற்றி எதை என்று அறிந்து, அறிந்து, இவந்தனக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும், இவந்தனும் அவ் பிள்ளையைப் பற்றி நன்றாக அறிந்து இருந்தான்.
ஆனால் பிள்ளையின் மீது பாசம் கொண்டு விட்டான்.
அதனால் எதை என்று அறிந்தறிந்து, அனைத்தும் செய்தான். இங்கிருந்த படியினாலே,
இதனால் நிச்சயம் எது என்று அறிந்தறிந்து, அனைத்தும் நலமாகவே, பின் உயர்ந்த எதை என்று அறிந்த, உயர்ந்த பின் உணவுகளும், பின் பன்மடங்கு பணங்களும் பெருகிவிட்டது.
இதனால் எதை என்று அறிய, அறிய, ஆனாலும் பாசம் விடவில்லை. அப்பெண்ணின் மீது இருக்கின்ற, அதாவது எதை என்று அறிய,!!!
பின் மகளே வா, உன்னை எதை என்று அறிய, அறிய, உந்தனுக்கும் யாருமே இல்லை.
ஆனாலும், உன்னை என் மகளாக எது என்று அறிந்து, அறிந்து என் மகளாகவே உணர்ந்து, உணர்ந்து யான் பார்த்துக் கொண்டேனே.
எதை என்று கூற, ஆனாலும் இன்னும் எந்தனுக்கு பல வகையில் கூட ஈசன் இட்ட கட்டளை.
எங்கெங்கே சென்று மக்களை காக்க வேண்டும் என்று.
ஆனாலும், பாசத்தின் அதிகம் பற்று, அப் பெண்மணியும் அழுதுவிட்டாள்.
அப்பனே, எந்தனுக்கும் யாருமே இல்லையே, நீயும் எதை என்று அறிந்தறிந்து சென்றுவிட்டால், யான் எதனை காப்பாற்றுவேன்??? என்று!!
நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று!!
நிச்சயம் எதை என்று அறிந்தறிந்து என்று கூற.
அதனால், பின் அழுது, அழுது புலம்ப, அவள் தனும் அழுது புலம்ப!!!....
, இவந்தனுக்கும் கண்ணீர் வர!!...... நிச்சயம் யான் இருக்கின்றேன் என்று இங்கேயே உடம்பை விட்டு விட்டான்.
ஆனாலும், சூட்சும தேகத்தோடு எதை என்று அறிந்து, அறிந்து அவன் ஆன்மா எங்கேயோ சென்றுவிட்டது.
அதனால், இங்கேயே இருக்கின்றான். இப்பொழுது கூட, அப் பெண்மணியும் எதை என்று அறிய, இப்பிறப்பிலும் பிறந்திருக்கின்றாள். இங்கே வந்து, வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றாள்.
நலமாகவே, மறைமுகமாகவே.
இதனால், பின் இங்கு வந்து, வந்து எது என்று அறிய, அறிய, எதை என்று அறிய. ஆனாலும், அப் பெண்மணியும் நிச்சயம் இங்கு, இங்கு சுற்றி, எதை என்று அறிந்தறிந்து, இங்கு இருப்பவர்களுக்கு ஒரு குறையும் வரக்கூடாது. பல, பல, பல உயர்ந்த அளவிலான உணவுகளும், எதை என்று அறிந்த, உயர்ந்த எது என்று கூற, பின், பின் வாகனங்களும், பல வீடுகளும், எது என்று அறிந்தறிந்து, மிக்க பணக்காரராகவும் இருக்க வேண்டும் என்பதை கூட என்னுடைய உத்தரவு என்று அப்பெண்மணி கூறியிருப்பதால், நிச்சயம் ஏற்றுக் கொண்டு நடத்திக் கொண்டே இருக்கின்றான்.
அப் பெண்மணியின் பேச்சை கேட்டு,
அதனால், நிச்சயம் இவந்தனை வந்தடைந்து கொண்டிருந்தாலே, நிச்சயம் வாழ்வில் எல்லை இல்லா பேரின்பத்தை அடையலாம்.
ஆனாலும், சொல்லிவிட்டேன், எதை என்று அறிந்தறிந்து, இதனை பயன் படுத்துவதற்கும் தகுதிகள் இருக்க வேண்டும்.
நிச்சயம் அனுமதிக்க மாட்டான் இவந்தன்.
சொல்லியும் விட்டேன். யாரெல்லாம் எதை என்று அறிந்தறிந்து வரப் போகின்றார்கள் என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
ஆனாலும், பின் மனிதனின் கூட திட்டித் தீர்ப்போம்.
ஆனாலும், எங்களுக்கும் கருணை உள்ளது.
ஏதாவது ஒரு, ஏதாவது ஒரு வழியில் காப்பாற்றுவோம் என்றும், நிச்சயம் காப்பாற்றி தான் வந்து கொண்டிருக்கின்றோம்.
அதனால், நலங்களாக இவ் ஞானியை பற்றி தெரிவித்துவிட்டேன்.
இன்னும், இன்னும் ஏராளமான விஷயங்களும் கூட இவன் செய்து கொண்டுதான் இருக்கின்றான் இங்கிருந்து நலமாகவே, நலமாகவே.
அதனால், நிச்சயம் எதை எதை என்று அறிந்தறிந்து இன்னும் செய்வார்கள் சித்தர்கள்.
நலம் !
நலம்!
மற்றொரு வாக்கிலும், சிறப்பான வாக்கை ஒன்று தெரிவிக்கின்றேன்.
ஆசிகள் !
ஆசிகள் !
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
மடலாய முகவரி மற்றும் விபரங்கள்.
ஸ்ரீ மௌனானந்த குருஸ்வாமிகள் மாத்தளை
ஹலாசூர் நகரின் மையப்பகுதியில், எப்போதும் வளர்ந்து வரும் பெங்களூருக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ மௌனானந்த குருஸ்வாமிகள் மடம், சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் புனிதமான மற்றும் அமைதியான கோயிலாகும். இந்த மடத்தில் ஸ்ரீ மௌனானந்த குருஸ்வாமிகள் மற்றும் அவரது தர்மபத்னி உண்ணாமலை யோகினி ஆகியோரின் ஜீவ சமாதிகள் உள்ளன, அவர்களின் ஆன்மீக இருப்பு எண்ணற்ற தெய்வீக அனுபவங்கள் மற்றும் தலையீடுகள் மூலம் பக்தர்களை வழிநடத்தி ஆசீர்வதித்து வருகிறது.
அய்யா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சித்தி விநாயகர், சந்திர மௌலீஸ்வரர் (சிவன்) மற்றும் திரிபுர சுந்தரி தேவி ஆகியோரின் புனித சிலைகளுக்கு இந்த ஆலயம் உள்ளது. 1992 ஆம் ஆண்டு சுப்பிரமணியர் மற்றும் வீரபத்திரர் பக்தர்களால் நிறுவப்பட்டது.
மடத்தின் இருப்பு 1860 களில் இருந்ததாக வரலாற்று புகைப்படங்கள் தெரிவிக்கின்றன, 1940 ஆம் ஆண்டிலிருந்து நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகள் சமாதிகளின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன. ஜீவ சமாதிகளின் சரியான தேதி நிச்சயமற்றதாக இருந்தாலும், எதிர்கால ஆவணங்கள் அல்லது சான்றுகள் மரியாதையுடன் இணைக்கப்படும்.
அய்யா தனிப்பட்ட உருவங்கள் மற்றும் குறியீட்டு வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்தி மடத்தை தனிப்பட்ட முறையில் வரைந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த கலை வெளிப்பாடுகள் அவரது பார்வை மற்றும் ஆன்மீக செய்தியை பிரதிபலித்தன. தற்போது, அய்யாவின் அசல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் மடக் குழு மறுசீரமைப்பு முயற்சியைத் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, 1951 இல், பெரிய துறவி கடப்பா ஸ்ரீ. பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர் ஸ்வாமிகள் சுமார் ஆறு மாதங்கள் மடத்தில் தங்கி, ஆழ்ந்த சாதனாவில் ஈடுபட்டார்.
முகவரி.
126/1, பழைய மெட்ராஸ் சாலை, ஹலசுரு,
பெங்களூரு, கர்நாடகா-560008
மேப்.
https://maps.app.goo.gl/GUncpnx7W93m8wGe8?g_st=aw.
Shree Mounananda Guruswamigal Mutt | Jiva ...
https://share.google/wnvAfctbLZKluBpSK
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment