அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6
போகர் சித்தர் :- நிச்சயம் ஒரு நாள் மனித எவை என்று இவ்வாறு வாழ்ந்து பாருங்கள். தெரியும் எது என்று அறிய. நிச்சயம் அதாவது பின் திருமணம் இல்லாமல், வேலை இல்லாமல் எது என்று புரிய. இவ்வாறு வாழ்ந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கை பற்றி தெளிவு வரும்.
================================
# “போதுமடா சாமி” - அப்பொழுதுதான் ஞானம் வளரும்.
================================
போகர் சித்தர் :- இதே போலத்தான் இறைவன், நிச்சயம் மனிதனை சோதித்து, சோதித்து, மனிதன் அதாவது போதுமடா சாமி என்று சொல்கின்றானே. அப்பொழுதுதான் ஞானம் வளரும். அப்பொழுதுதான் அனைத்தும் இறைவன் கொடுப்பான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். இதனால் இவர்கள் அனைவருமே இறைவனின் குழந்தைகள். இவர்கள் எது செய்தாலும், இறைவன் பார்த்துக் கொள்வான். சரியோ, தவறோ.
போகர் சித்தர் :- செய்வது நமது கடமை. நிச்சயம் அறிந்து கூட, அது பார்த்துக் கொள்வது இறைவனுடைய கடமை.
போகர் சித்தர் :- ஏன் குறை? மற்றொருவர் ஏன் குறை கூறுகின்றான் என்றால், நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, எவை என்று அறிய. பின் சொல்லுங்கள், நீங்களே பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மற்றவங்க ஏன் குறை கூறுறாங்கன்னா, ஏன் சொல்லுங்க பார்ப்போம்னு கேட்கிறார்.
அடியவர் :- சொல்லுங்க, அவங்களை கேக்குறாங்க. யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஏன் பிறரை நாம குறை கூறுகிறோம்?
அடியவர் 1 : - ( ………….)
போகர் சித்தர் :- அப்பா, இதைத்தன் பின் விட்டுவிடு. புதுமையாக சொல்.
அடியவர் 1 : - ( குறை கூறுவதே மனிதனின் வேலை )
போகர் சித்தர் :- எவை என்று புரிய. அப்பா, சரிதான். அப்பா, இதுவே வேலை. மனிதனுக்கு இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.
=====================================
# குறை கூறுபவன் கடைசியில் , அவ் குறையாகவே ஆகிவிடுகிறான்
=====================================
போகர் சித்தர் :- ஏனென்றால் குறை, குறை என்று கூறிக்கொண்டு, அவன் கடைசியில் குறை உள்ளவனாகவே ஆகிவிடுகின்றான். அப்பா,
போகர் சித்தர் :- அப்பா, மனிதனுடைய பிழைப்பு இப்பொழுது சொல்கின்றேன், மற்றவர்களை குறை கூறுவது. மற்றவர்களை எதை என்று அறிய, அடித்தளமாக பேசுவது. மற்றவர்களை தீயாக பேசுவது. நிச்சயம், மற்றவர்கள், மற்றவர்களுக்காகவே அனைத்தும். நிச்சயம், தன்னில் கூட தான் நிலைப்பற்றி எப்பொழுது சிந்திப்பது. நிச்சயம், தன்னில் கூட தான் நிலை பற்றி முதலில் சிந்தியுங்கள். தன்னைத்தானே வென்றுங்கள். அடுத்தவரை பார்ப்போம் பின்பு.
அடியவர் :- நம்ம முக்காவாசி நேரம் இல்ல. ஏன்னா, முழு நேரமே இதான் பொழப்பா பண்ணிட்டு இருக்கிறோம். நீங்க சொன்ன மாதிரி எல்லாம், அடுத்தவனை பத்தி குறை பேசி, குறை பேசி, உன்னை பத்தி நீங்க யோசிக்கிறதே இல்லை. நீங்க கீழ போயிட்டே இருக்கிற. அதை நீங்க யோசிக்க மாட்டேன்றாங்க. சொல்றாங்க, உன்னை முதல் யோசிங்க. உயர்த்துங்கன்றாங்க.
போகர் சித்தர் :- ஆனாலும், அப்பா, நிச்சயம், தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சிலருக்கு. அப்பனே, நிச்சயம், பின் இறைவன் எது என்று புரிய. அப்பனே, எவை என்று அறிய. நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, இக்குறை எது என்று புரிய. அப்பனே, பின் நிறையாக மாறிவிடுகின்றது.
அடியவர் :- அது சொல்லுவாங்க. சிலருக்கு வந்து இந்த குறை வந்து நிறைய மாறிடுதுன்றாங்க. நிறையாக மாறிடுது. அதாவது, நம்ம பேசுறதுனால, அதுதான் சொல்றேன். நம்ம இந்த மாதிரி பேசுறோம்ல. அடுத்தவங்களை தவறா பேச பேச, இது அவங்களுக்கு நிறைய மாறிடுது. ஏன்னா, நம்மகிட்ட இருக்கிற புண்ணியங்கள், அவர்கிட்ட போயிருது இல்ல. அது அவங்களுக்கு நிறைய மாறிடுது. அவங்ககிட்ட இருக்கிற பாவம், நமக்கு வந்துருது. அதான் சொல்றாங்க.
==============================
# யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது.
==============================
போகர் சித்தர் :- இவைத்தன் இதனால், அப்பா, யாரை குறை சொல்லக்கூடாது சொல்லிவிட்டேன். யாரை குறை சொல்லக்கூடாது.
அடியவர் :- யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது.
போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட. அப்பா, அறிந்தும் கூட, எவை என்று புரிய. அப்பனே, இவ்வாறு பின் வாழ்கின்றார்களே. இவர்களைப் பற்றி,
அடியவர் :- இவங்க வாழ்க்கையை பத்தி, தயவு செஞ்சு யாரும் குறை கூறாதீங்க. எல்லாருக்கும் எடுத்துச் சொல்லுங்க. கர்மாதான். இப்ப யாரோ குறை கூறுனீங்கன்னா, அவங்களுக்கு நான் யாரை பத்தி அதிகமா குறை கூறுகிறேன்னா, இது மாதிரி ஒன்னும் இல்லாதவங்க, ஒன்னும் இல்லாத யாரும் இல்ல. அவர் சொன்னாரு, ஐயா, யாரும் இல்ல. அதனால, இது மாதிரி ஞானிகள் வாழ்றது ஒன்னு ரொம்ப கஷ்டமான வாழ்க்கை. இதெல்லாம் வாழ்றது அல்லன்னு சொல்றாரு. இறைவன் எல்லாருக்கும் ஒரு பரீட்சை வச்சிருக்கிறார். இறைவன் ஒரு பரீட்சை வச்சிருக்கிறார். எல்லா பேருக்கும் நமக்கு புரியாது. அது என்னன்றது, தயவு செஞ்சு அதை கமெண்ட் பண்ணக்கூடாது.
==================================
# வாழ்க்கை வட்டத்தின் ரகசியங்கள்
==================================
போகர் சித்தர் :- அப்பப்பா, எது என்று புரிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அறிந்தும் ஏன், எதற்கு. அப்பனே, அனைத்தும் அப்பனே பின் ஒரு வட்டமாகவே நடந்து கொண்டிருக்கின்றது.
அவ்வட்டத்தில் என்ன, ஏது என்றெல்லாம். அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இன்றளவும் ஏன் இவர்களை பின் எவை என்று புரிய. அப்பனே, இவர்களிடத்திலும் கூட புண்ணியம் அப்பனே, இறைவன் பின் அதாவது வைத்துள்ளான். அப்பா, நிச்சயம், தன்னில் கூட. பின் இவர்கள் புண்ணியத்தை கூட, அப்பனே, சிலருக்கு பின் கொடுக்கின்ற பொழுது, அவர்கள் நன்றாக வாழ்ந்து விடுவார்கள் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, இறைவன் இவர்களை பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. இதனால் பாவம் புண்ணியம் எங்கு சரி பார்க்கப்படுகிறது என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் நல்லுள்ளம் கொண்டோன். அப்பனே, பின் கஷ்டத்திலே இருக்கின்றான் அப்பனே. அப்பொழுது அவன் பாவப்பட்டவனா? அப்பனே, நிச்சயம், தன்னில் சொல்லுங்கள் அப்பனே.
அதனால், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய. இங்கு அனைத்தும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஒரு வட்டமாகவே செயல்படுகின்றது.
யாரும் உணர்வதே இல்லை. அதனை, அதை தெளிவுபடுத்தித்தான், அப்பனே, இப்பொழுது வந்திருக்கின்றோம்.
அதை தன் தெளிவுபடுத்தி விட்டால், உங்களை நீங்களே வெல்வீர்கள் என்பேன் அப்பனே.
உங்களை நீங்கள் வெல்வீர்கள் என்றால், நிச்சயம், தன்னில் கூட இறைவனும் காணலாம். இறைவனைக் கண்டிற்று, உங்களைப் பின் வென்றிற்று, முக்திக்கு அடையலாம். இல்லையென்றால், கஷ்டங்களை பட்டு, பட்டு, பட்டு, பட்டு, பட்டு, பட்டு.
போகர் சித்தர் :- ஆனாலும் ஏன் சிலருக்கு கஷ்டங்கள்? ஏன் எது என்று புரிய? இவ்வ மனித பின் குலத்தில் ஏன் இவ்வுலகம் என்பதை எல்லாம், நிச்சயம், பின் இப்பொழுது நடக்கும் அனைத்தும் கூட
போகர் சித்தர் :- இதைத்தன், நிச்சயம், தன்னில் கூட இவர்களை பாலூட்டி, பின் சீராட்டி, நிச்சயம், தன்னில் அறிந்தும் கூட, பின் குறையேதும் இல்லை என்ற பாடலை பாடி, நிச்சயம், இதைப் பின் தானமாக கொடுத்து விடுங்கள். தர்மமாக போகட்டும்.
(குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட வேண்டும் என்று உரைத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- அடியார்கள் எல்லாம் சேர்ந்து இங்கு வந்துள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, எல்லாரும், அடியார்கள் சேர்ந்து ஒரு லட்சம் (கொடுத்திருக்கின்றார்கள்)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (உரையின் முக்கிய கருத்துக்களைக் கீழே உள்ளவாறு சுருக்கமாகக் காணலாம்:)
இறைவனும் எதிர்பாராத அருளும்
எதிர்பார்ப்பு: நாம் ஒரு காரியம் நடக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதை விட, இறைவன் எப்போது எதைக் கொடுப்பார் என்று தெரியாது என்பதால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
இறைவனின் ஆற்றல்: 60 வயதுள்ளவரை 20 வயது இளைஞனாக மாற்றும் ஆற்றல் இறைவனுக்கும் சித்தர்களுக்கும் (போகர் போன்றோர்) உண்டு. இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை இறைபற்று உள்ளவர்களுக்கு அவசியம்.
எண்ணங்களே வாழ்வின் கூலி
நல்ல எண்ணங்கள்: நாம் செய்யும் வேலைக்கு எப்படி ஊதியம் கிடைக்கிறதோ, அதேபோல நம்முடைய நல்ல எண்ணங்களுக்கு கூலியாக இறைவன் 'புண்ணியத்தை' வழங்குகிறான். * பாவ புண்ணியம்: நம்மிடம் புண்ணியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம் எண்ணங்கள் சரியாக இல்லாவிட்டால் இறைவன் தண்டனையாகப் பாவத்தைக் கொடுக்கிறான். எனவே, எதையும் இறைவனிடம் விட்டுவிட்டு தூய்மையான பக்தியுடன் இருக்க வேண்டும்.
கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சேவை
சுயநலம் தவிர்த்தல்: மனிதன் தன் சுயநலத்திற்காகவே வாழ்கிறான். அதை மாற்றி, பிறருக்காக வேண்டிக்கொள்ளும் 'கூட்டுப் பிரார்த்தனை' மிகப்பெரிய பலனைத் தரும்.
இல்லாதோருக்கு உதவுதல்: தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுக்காதபோது, இறைவன் நோய்கள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ அதை எடுத்துவிடுவார். இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தூக்கி விட வேண்டும் என்பதே அகத்தியர் போன்ற சித்தர்களின் வாக்கு.
கர்ணனின் உதாரணம்: தர்மம் செய்த கர்ணனின் உயிரைக் கூட இறைவனால் எளிதில் எடுக்க முடியவில்லை; அவனுடைய தர்மத்தையே தானமாகக் கேட்க வேண்டியிருந்தது. அந்தளவிற்குப் புண்ணியம் வலிமையானது.
வாழ்வின் எதார்த்தம்
பிறர் நலன் பேணுதல்: நம்மைப் பற்றி நாம் சிந்திக்காமல், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் சேவை செய்தால், நம் தேவைகளை இறைவன் தானாகவே கவனித்துக் கொள்வார்.
ஆறுதல்: உறவுகளைப் பிரிந்து, கஷ்டப்படும் எளிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் செய்யும் சிறு உதவியும், அவர்களுக்குக் காட்டும் அன்பும் நமக்குப் பெரிய புண்ணியத்தைச் சேர்க்கும்.
சுருக்கமாக: நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, பிறருக்கு உதவி செய்து புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டால், இறைவன் நமக்காகக் காத்திருப்பார்.
பாடகர் :- (குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட ஆரம்பித்தார்)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=7h25m24s
பாடகர் :- (பாடி முடித்த பின்னர்)
போகர் சித்தர் :- அப்பா, அறிந்தும் மீண்டும்: "ஏழு மலையான் இறங்கட்டும்"—மீண்டும் பாடலைப் பாடு, இறங்கட்டும். அனைவருக்கும் இதைவிட நிச்சயம் பின் என்னென்ன தேவை என்று கொடுக்கட்டும், பார்க்கட்டும் பாடு.
பாடகர் :- (குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட ஆரம்பித்தார்)
பாடகர் :- (பாடி முடித்த பின்னர்)
போகர் சித்தர் :- இதைத் தன் மக்களை எவை என்று அறிய நிச்சயம் பின் பாடு, அறிந்தும் பின், அதாவது பின், பின். நமச்சிவாய வாழ்க எனும் பாடல்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா சிவபுராணம் பாட சொல்றார் ஐயா.
ஒரு சிவனடியார் சிவபுராணம் பாடினார் :-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=7h34m22s
==================================
# இறைவன் உங்கள் தாய் , தந்தை.
# நீங்கள் செய்யும் அனைத்தும் இறைவனை சென்று அடையும்.
==================================
போகர் சித்தர் :- இதைத்தான் எவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பாவம் புண்ணியம் எங்கு நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, பின் ஒருவன் வேலை செய்யப் போகின்றான். ஆனாலும் நிச்சயம் அவ்வேலைக்கான கூலி அன்றே தருவதில்லை. நிச்சயம் சேர்த்து வைத்து, சேர்த்து வைத்து, எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது ஒரு முதலாளி கொடுப்பான்.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் கையில் இருக்குதுங்க ஐயா. இதுதான் உண்மை. இப்பதான் தெரிய வைக்கிறார். போகப்பெருமான் சொல்றாரு, பாவம் உங்க கையில் இல்ல, புண்ணியம் இல்ல.
போகர் சித்தர் :- அப்படி நீங்கள் யோசித்தீர்களா?
சுவடி ஓதும் மைந்தன்:- யாராவது யோசிச்சீங்களா? அப்பா அம்மா செய்வது பிள்ளைகளுக்கு என்று எல்லாருக்கும் தெரியும். அது எல்லாம் சொல்றாங்க இல்ல. அப்ப உங்களை , யார் இங்க படைச்சு அனுப்பினார்? இறைவன். அப்ப நீங்க பண்றது எல்லாம் எங்க போய் சேரும்?
அடியவர் :- இறைவன் கிட்ட தான் போய் சேரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அங்க போய் சேரும். அப்ப அவர் எங்க வந்து எப்ப கொடுக்கிறார்னு நமக்கு தெரியாதுமா? அப்ப என்ன பண்ணனும்? வெயிட்டிங் லிஸ்ட். வெயிட்டிங்ல தான் நிக்கணும். கியூல தான் நிக்கணும். அப்ப எப்ப அவர் எடுத்துக் கொடுப்பாரோ அதுக்காக நம்ம வெயிட் பண்ணனுங்க ஐயா.
==================================
# தீயவை நடக்கிறது என்றால் நிச்சயம் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது
==================================
# நல்லது நடப்பது என்றால் நிச்சயம் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது
==================================
போகர் சித்தர் :- அறிந்தும் எதை என்று அறிய அறிய தீயவை நடக்கிறது என்றால் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. ஆனாலும் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது. நல்லது பின் நடப்பது நிச்சயம் அதுவும் இறைவனுக்கு நிச்சயம் பின் எவை என்று புரிய. இதனால் பின் உங்களுக்கு என்னதான் சொந்தம்?
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு நல்லது நடந்தா யாருக்கு சொந்தம்?
அடியவர் :- இறைவனுக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவனுக்கு சொந்தம். கெட்டது நடந்தாலும் இறைவன் தான் வந்து தீர்மானிக்கிறார். அப்ப நீங்க யார்? நீங்க யார்?
===========================================
# நமக்கு இறைவன் கொடுப்பார் என்ற நினைப்பு எப்போதும் இருந்தால்,
நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம்.
===========================================
போகர் சித்தர் :- பின் அவ்வாறு குழந்தைகளுக்கு இறைவன் கொடுக்காமலா போய்விடுவான் சொல்லு தாயே?
அடியவர் :- கண்டிப்பா கொடுப்பார்.
போகர் சித்தர் :- நிச்சயம். ஆனால் இவ்வு நம்பிக்கை இருந்தால் போதும். நிச்சயம் பிழைத்துக் கொள்வாய்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த நம்பிக்கை ஒன்னு இருந்துச்சுன்னா போதும். நீங்க பொழைச்சுக்கலாம்.
போகர் சித்தர் :- ஆனால் நிச்சயம் அவசர அவசரமாக அதை வேண்டும், இதை வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் எவ்வாறு கொடுப்பான் இறைவன்? நிச்சயம் கொடுக்கப் போவதில்லை. நீங்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டே இருந்தால், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
=================================
# ஒவ்வொருவருக்கும் குறைகள் ஏன் வருகின்றது?
=================================
# ஒவ்வொருவருக்கும் நோய் ஏன் வருகின்றது?
=================================
போகர் சித்தர் :- எதை என்று அறிய அறிய அனைவருக்கும் குற்றங்கள் ஏன் வருகின்றது? ஒவ்வொருவருக்கும் நோய் ஏன் வருகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள் தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் ஏன் கஷ்டங்கள் வருது? ஏன் துன்பம் வருது? எல்லாத்தையும் சிந்தித்து கொஞ்சம் பார்த்தீங்களா? சிந்திச்சு பார்த்தா உண்மை புரியும்.
போகர் சித்தர் :- இதனால்தான் அன்றைய கல்வி நிலைகள் அனைத்தும் பின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள. ஆனாலும் இன்றைய கல்வி நிலை மாறிவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன்:- அன்றைய கல்வி நிலைகள் எல்லாம் என்ன ஆச்சு? இறைவனைப் பற்றியே போதிச்சது.
அடியவர் :- குருகுலம்.
போகர் சித்தர் :- அப்பா ஒன்றை சொல்கின்றேன், இறைவன் இல்லை என்று சொல்கின்றவன் இருந்தால் மட்டும்தானே இறைவன் இல்லை என்று சொல்கின்றான்.
அடியவர் :- ஆமா.
போகர் சித்தர் :- இதை கூட மனிதனுக்கு யார் எப்படி அப்பா உரைப்பது?
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப இறைவன் இருந்தா தானே, இறைவன் ஒருத்தர் இருந்தா தானே அடுத்து என்ன சொல்லுவான்?
அடியவர் :- இல்லைன்னு சொல்ல முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இல்லைன்னு சொல்ல முடியும். அப்ப இது கூட உங்களுக்கு தெரியலையாப்பான்றாரு. ஐயா புரியுதுங்களேயா? இது நம்ம சூட்சுமமா புரிஞ்சுக்கணும். எவன்கிட்ட இறைவன் இல்லை, இருக்குன்றானோ, அவன் முட்டாள் அவ்வளவுதான். இதான் சொல்றாரு. ஏன்னா அதுவும் பாருங்க எப்படி சொன்னார் அவர் வந்து. அருமையான விளக்கம் தான். அது கூட வந்து. அப்ப இறைவன் இல்லை என்று சொன்னான். அப்ப இருந்தா தானே இல்லைன்னு சொல்றான். இதை கூட மனுஷனுக்கு வந்து யோசிக்க தெரியலையேப்பா. சின்ன விஷயம். சின்ன விஷயம்.
போகர் சித்தர் :- இதனால் உங்களுக்கு கொடுத்து என்ன பயன்?
சுவடி ஓதும் மைந்தன்:- இதை கூட வந்து மனுஷனுக்கு, இந்த சின்ன விஷயமே தெரியல. சின்ன விஷயங்களே தெரியலன்னா, இதை கொடுத்தா உங்களுக்கு என்ன? நீங்க எப்படி யூஸ் பண்ணிக்க போறீங்க? பயன்படுத்த போறீங்க.
போகர் சித்தர் :- நிச்சயம் எதை என்றது அறிய இறைவன் இருக்கின்றான் என்று நிச்சயம் பின் எதை என்று புரிய யார் சொல்வான்?
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் இருக்கின்றான் என்று யார் சொல்வான்? ஐயா. ஐயா.
அடியவர் 3 :- பகுத்தறிவு.
போகர் சித்தர் :- அப்பா இதை பின் அதாவது இதை சொல்பவர்களே.
சுவடி ஓதும் மைந்தன்:- இது எல்லாரும் சொல்றவர்கள் தான். இது ரைட் தான். எல்லாருமே இதை சொல்லுவாங்க. புதுமையா விஷயம் ஏற்படுன்றார். புதுமையா சொல்ல சொல்றார்.
அடியவர் 3 :- இறைவனே வந்து ஒரு உபதேசம்
போகர் சித்தர் :- தாயே. அப்பா இவையெல்லாம் பழமையானவை. புதுமையைச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே பழமையானவை. இதெல்லாம் வந்து எல்லாம் சொல்லி வச்சிட்டு போயிட்டாங்க. புதுமையா சொல்லுங்கன்றார்.
=================================
# ஒவ்வொருவருக்கும் குறைகள் , நோய்கள் ஏன் வருகின்றது?
# கஷ்டத்தை கொடுத்தால் மட்டுமே இறைவன் இருக்கின்றான் என்று சொல்கின்றான் மனிதன்.
================================
போகர் சித்தர் :- அப்பா அப்பா ஒன்றை சொல்கின்றேன். பின் நிச்சயம் இறைவன் கஷ்டத்தை கொடுத்தால் மட்டுமே இறைவன் இருக்கின்றான் என்று சொல்கின்றான் மனிதன். அப்பொழுது கஷ்டத்தை இறைவன் கொடுக்காமலா போயிடுவான் ஒருவர் ஒருவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப யாருக்கு கஷ்டத்தை கொடுத்தாதான் நம்ம புரிஞ்சுக்கிறோம் இறைவன் இருக்கிறார்.
பாடகர் :- அதாவது இறைவன் இருக்கான்னு நீங்க உணரணும்னா கஷ்டத்தை கொடுத்தாதான் இறைவன் இருக்கான்னு உணர்வீங்க. சோ இறைவன் இருக்கான்றது ப்ரூவ்டு ஃபேக்ட். கஷ்டம்ன்றதும் ப்ரூவ்டு. அதுதான் இப்ப நம்ம அன்றாடம் அனுபவிக்கிறோம். அந்த கஷ்டம் இல்லைன்னா இறைவன் இல்லை. அப்படித்தானே வந்து அவர் இது பண்றாரு. கன்குலூட் பண்றாரு. சோ கஷ்டம் இருக்கும் இறைவனும் இருப்பார். அப்படித்தான் போகுது.
சுவடி ஓதும் மைந்தன்:- கஷ்டங்கள் மூலமா பக்குவத்தை கொடுத்து இறைவனுக்கு உணர வைக்கிறாங்க.
=======================================
# உங்களுக்கு வரும் அனைத்து கஷ்டங்களும் கரணம் இறைவன். உங்களை உங்கள் வாயால் இறைவன் இருக்கின்றான் என்று சொல்வதற்கு இறைவனே அனைவருக்கும் கஷ்டங்கள் கொடுக்கின்றார்.
========================================
போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது இறைவனை உணர வைக்க இறைவனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டு. ஏனென்றால் இறைவன் இருக்கின்றான் என்று வாயால் சொல்வதற்கு அப்பா நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப எல்லாருக்கும் கஷ்டம் உண்டு. அப்பதான் என்ன பண்ணுவாங்களாம்? வாயால சொல்றதுக்கு இறைவன் உண்டுன்னு வாயில சொல்லுவாராம். இல்லைன்னா என்ன பண்ணுவாங்கயா?
அடியவர் :- சொல்ல மாட்டாங்க.
போகர் சித்தர் :- அப்பப்பா பல விஷயங்கள் அறிந்தும் புரிந்தும் கூட. இதனால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் மற்றொருவன் சுலபமாக உங்களை ஏமாற்றி அவன் பாவக்கணக்கையும் எதை என்று புரிய யான் சொல்வது?
அடியவர் :- நம்ம தலையில போட்டுருவாங்க.
போகர் சித்தர் :- அப்பா உன் தலையில் என்ன இருக்கின்றதே என்று தெரியவில்லை. அலைகின்றாய்.
=====================================
# ஒருவனுக்கு ஏன் யோகம்? ஏன் மற்றவனுக்கு யோகம் இல்லாமை?
=====================================
போகர் சித்தர் :- எவை என்று புரிய அப்பப்பா ஒருவனுக்கு ஏன் யோகம்? ஏன் மற்றவனுக்கு யோகம் இல்லாமை? ஏன் ஒருவன் இறைவனை காண்கின்றான்? மற்றொருவன் இறை காண்பதில்லை? ஏன்? ஏன்? எதற்கெல்லாம் கேள்விகளுக்கு ஏற்ப அகத்தியன் நிச்சயம் வருகின்றான்.
=============================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் - ஈரேழு பதினான்கு உலகங்களின் மிக சிறந்த உயர் விஞ்ஞானி.
==============================================
போகர் சித்தர் :- அப்பா அறிந்தும் கூட பின் அகத்தியன் குரு. அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட மிக விஞ்ஞானி என்பேன். இப்பொழுது புரியும். எவ்விஞ்ஞானிக்கும் இவ்வுலகத்தில் இவ் ரகசியம் தெரிவதில்லை. பின் விஞ்ஞானி உரைக்கப் போகின்றான். இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன்:- பெரிய விஞ்ஞானின்றாங்க.
அடியவர்:- குருநாதர் அகத்தியர் என்பவர் யாரு? பெரிய விஞ்ஞானி. மிகப்பெரிய விஞ்ஞானி. சாதாரண விஞ்ஞானி இல்ல. இந்த உலகத்தில் எந்த விஞ்ஞானிக்கும் தெரியாத விஷயம் ஒரு விஞ்ஞானி உரைக்கப் போறாரான்னு பார்ப்போம். கொஞ்ச நேரத்துல
=====================================
# கலியுகம் அழியும் நிலைக்கு செல்கின்றது. சித்தர்களுக்கு வேலைகள் தான் அதிகம்.
=====================================
போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய? நிச்சயம் ஆனாலும் பின் நல்லதாக இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருந்தால் சித்தரை, யாங்கள், எங்களுக்கு வேலையே இல்லை. ஆனால் கலியுகம் அழியும் நிலைக்கு செல்கின்றது. எங்களுக்கு வேலைகள் தான் அதிகம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த உலகத்தில் நல்லதே நடந்து போச்சுன்னா என்ன பண்ணுவாங்களாம்? சித்தர்களுக்கு வேலையே இல்லை. வேலை இல்ல. எங்களுக்கெல்லாம் வேலையே இல்லப்பா. நான் எங்கேயோ போய் அமர்ந்து எங்கேயோ சாப்பாடு ஏதோ அங்க போயினே இருக்கிறோம். ஆனால் கலியுகம் அப்படி இல்ல. கஷ்டங்கள் வரப்போறது. அதனால என்ன பண்றோம்? எங்களுக்கு வேலை அதிகம்.
போகர் சித்தர் :- அப்பா மற்றொன்றும் நீங்கள் அனைவரும் பின் உண்மையை தெரிந்து கொண்டால் எங்களுக்கு ஏதப்பா வேலை?
சுவடி ஓதும் மைந்தன்:- இன்னொன்னு சொல்றாரு. எல்லா உண்மையும் நீங்க தெரிஞ்சுக்கினா நீங்க உங்க பாட்டி வாழப்போறீங்க. எங்களுக்கு என்ன வேலை இருக்குது?
போகர் சித்தர் :- அப்பா இறைவனுக்கே வேலை இல்லைப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்? இறைவனுக்கே வேலை இல்லைன்றாங்க. வேலை இல்லைன்றார்.
==========================================
# குழந்தை வளர வளர ஏன் ஒரு தாயின் அன்பு அது மாறுபடுகின்றது? போகப்போக
==========================================
போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பப்பா அறிந்தும் இறைவன் அழகாக படைக்கின்றான். அப்பா நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற ஒரு தாயவள் நிச்சயம் தன்னில் கூட தன் பிள்ளையை பின் முதலிலே எப்படி இருந்தாலும் பாசத்தை காண்பிக்கின்றான் அல்லவா? நிச்சயம் ஏன் அது மாறுபடுகின்றது? போகப்போக
சுவடி ஓதும் மைந்தன்:- குழந்தை பிறக்கும் பொழுது எல்லா தாயும் , பாசமாதான் இருகாங்க. ஆனா போகப்போக ஏன் மாறுது?
அடியவர் 4:- (குழந்தை வளர்ந்து வரப்போறதுல.. )
போகர் சித்தர் :- அப்பா இவையெல்லாம் பழமையானவை. அப்பா
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் வந்து எல்லாரும் சொல்லிட்டாங்க. வளர்ந்து வரப்போறதுலன்னு சொல்லிட்டு
போகர் சித்தர் :- இதற்கும் எவை என்று புரிய? அப்பப்பா அறிந்தும் புரிந்தும் எவையெல்லாம் யான் சொல்கின்றேன். வருவரும் காலத்தில் அப்பா அனைத்தும் பின் ஒன்றாக அறிந்தும் கூட பின் இப்பொழுது சொல்லிவிட்டாலும். ஆனாலும் எதை என்று புரிய, அப்பனே புரிந்து கொள்ளுங்கள். இன்னும் இன்னும் எதை என்று அறிய? அதனால் பல புண்ணியங்கள் மனிதனுக்கு இதனால்தான் புண்ணியங்கள் இறைவனிடத்தில் இருப்பதால் இதனால்தான் உங்களுக்கு யாங்கள் புண்ணியத்தை சிறிது சிறிதாக அடித்து நிச்சயம் உங்களுக்கும் பின் விடிவெள்ளியை கொடுத்து நீங்கள் அடுத்தவருக்கு கொடுக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப புண்ணியம் யார் கையில் இருக்குதாம்? அங்க அங்க இருக்கு. பேங்க்ல இருக்கு. புண்ணியம் பாவம் எல்லாம். ஸ்டாக்ல இருக்குது. அது வந்து அப்ப அது எப்படி எடுத்துட்டு வர்றது? அக்கவுண்ட்ல இருக்குது. அதெல்லாம் நாங்க கொஞ்சம் கொடுக்கிறோம். அதன் மூலம் நீங்க நல்லா இருந்து நீங்க அடுத்தவருக்கு உதவி செய்யுங்க.
===========================================
# சாதுக்களை , ஞானியர்களை போற்றுங்கள், வணங்குங்கள்.
===========================================
போகர் சித்தர் :- இதனால் நிச்சயம் அதாவது மிகவும் பின் அதாவது எதை என்று புரிந்த எவை என்று அறிய, இதனால் இங்கு அமர்ந்திருக்கின்றார்களே இவர்களும் ஒன்றுமில்லாதவர்களா? ஆனாலும் நிச்சயம் இவர்களைப் பார்த்து பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்லிவிடுவார்கள் மனிதர்கள். இதுதான் மனிதன் முட்டாள் எண்ணங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- மனிதன் முட்டாள் என்னன்னு இவங்க எல்லாம் ஒன்னும் இல்ல. இவங்க எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள். இதுதான்டா மனுஷனோட முட்டாள் எண்ணம் அப்படின்னு சொல்லிடுவாங்களாம். வந்து
போகர் சித்தர் :- எதை என்று அறிய பின் உழைத்து வாழுங்கள் என்று. இன்னொருவன் நிச்சயம் பின் யான் உழைத்து சம்பாதிக்கின்றேன். இவருக்கு கொடுக்க வேண்டுமா என்று என்று. அடடா
சுவடி ஓதும் மைந்தன்:- ஒருத்தன் என்ன சொல்லுவாராம் ? நான் உழைச்சு சம்பாதிக்கிறேன். இவங்களுக்கு கொடுக்கணுமா?
========================================
# திருவண்ணாமலையில் வாழும் சாதுக்களுக்கு , ஞானியர்களுக்கு, சந்நியாசிகளுக்கு - அதாவது ஈசனாரின் செல்ல குழந்தைகளுக்கு நீங்கள் அள்ளி கொடுத்தால் என்ன ஆகும் என்ற மாபெரும் சித்தர்கள் ரகசியம்.
========================================
போகர் சித்தர் :- எதை என்று புரிய? ஆனாலும் இவர்களுக்கு கொடுத்தால் என்னவென்று யாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனால் இவங்களுக்கு கொடுத்தா என்ன ஆகும் என்று எங்களுக்கு தான் தெரியும்.
======================================
# திருவண்ணாமலையில் உங்களின் சில சில வினைகளை எடுத்துக் கொள்ளும் சாதுக்கள். அதே நேரத்தில் இவ் சாதுக்களை திட்டுபவர்களுக்கு , பலத்த வினைகள் வந்து சேரும். அடுத்த முறை திருவண்ணாமலை சென்றால் , போற்றுங்கள் ஞானியர்களை. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். அவர்களிடம் ஆசி வாங்குங்கள்.
======================================
போகர் சித்தர் :- அப்பா அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட இப்படியும் எண்ணிக்கொள்ளலாம். பாவத்தை புண்ணியத்தை நிச்சயம் ஓரம் கட்டுங்கள். பின் ஆனாலும் சில சில வினைகள் பின் இவர்களைத்தான் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் கொடுப்பதை
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன பண்ணுவாங்க? நம்மகிட்ட இருக்கக்கூடிய சில வினைகளை சில வினைகள் சில மனமாற்றங்கள் என்ன பண்ணுவாங்க? அவங்க எடுத்துப்பாங்க. இவங்க எடுத்துப்பாங்கன்றார் வந்து.
போகர் சித்தர் :- எதை என்று அறிய ஆனாலும் பின் இவையும் கூட அனைத்தும் விட்டொழித்தவனுக்கே சொந்தம். இவை தன் ஏற்றுக்கொள்ளும் நிலைமை பக்குவங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த பக்குவம் யாருக்கு வரும்னா எல்லாம் இழந்துக்கிறாங்க பாருங்க. வீடு சொத்து மனைவி சுகம் எல்லாம் விட்டொழிச்சு வந்திருக்காங்க பாருங்க. அவங்கள்தான் இதெல்லாம் சாத்தியமாகும். அவங்களால் மட்டும்தான் இது பேலன்ஸ் பண்ண முடியும். எடுத்துட்டு போய் இவங்களுக்கு இது பண்ணிட்டு புரியுதுங்களேயா? அவங்களால் மட்டும்தான் இது இது பண்ண முடியும்.
========================================
# கூட்டுப் பிரார்த்தனைக்கு , சித்தர்கள் திரு அண்ணாமலையை தேர்ந்தெடுத்து நடத்த காரணங்கள் , மாபெரும் ரகசியங்கள்.
=========================================
போகர் சித்தர் :- இதனால்தானே பின் சித்தர்கள் அண்ணாமலையை தேர்ந்தெடுத்து நடத்துகின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல் )
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் அடிக்கடி ஏன் வந்து அண்ணாமலையை நாங்க தேர்ந்தெடுக்கிறோம்னா இதனால்தான் அண்ணாமலையை தேர்ந்தெடுக்கிறது. இதனால்தான்…
போகர் சித்தர் :- அறிந்தும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் ஈசனுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இவர்கள் என்ன தவறு செய்தாலும் நிச்சயம் ஈசனைத்தான் நிச்சயம் தண்டிக்க வேண்டுமே தவிர, நாம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப இவர்கள் எல்லாம் யார் சொந்தக்காரங்கயா?
அடியவர் :- ஈசனுக்கு சொந்தக்காரர்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- சொந்தக்காரங்கப்பா. இவர்கள் எல்லாம் நம்ம கேட்க தகுதி இல்லை.
அடியவர் :- தகுதி இல்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- என்னென்ன பண்ணிக்கிட்டோம்? ஈசனோட குழந்தை அவர் பார்த்துக்க போறாரு. உன் வேலையை நீ பாரு.
===============================
# சந்நியாசிகள் மூலம் கர்மா சுழற்சி நடக்கும் - திருவண்ணாமலை ரகசியங்கள்
==============================
போகர் சித்தர் :- ஆனாலும் அப்பனே இன்னொருவன் சொல்வான். அப்பா இவர்கள் திருடர்கள். இவை எதை என்று அறிய மது அருந்துகின்றார்கள். இன்னும் என்னென்னவோ கதை கட்டுவார்கள். அப்பா நிச்சயம் தன்னில் கூட ஆனால் பின் எதை என்று புரிய? ஆனால் சொல்பவனுக்குத்தான் கருமா.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா? அப்ப என்ன பண்ணுவாங்களாம்? ஈசனோட குழந்தை ஈசன் பாதுகாக்கிறார். அவர் கொடுக்க போறார். இவருக்கு தண்டனையோ ஏதோ நல்லதோ கெட்டதோ அவர் செய்யப்போறார். அதை நாம் சொன்னோம்னா என்ன ஆகுமா? நமக்கு கர்மா வந்துரும். நமக்கு கர்மா வந்துரும்.
=======================================
# ஈசன் அருள் இல்லாமல் அண்ணாமலைக்கு வர முடியாது.
=======================================
போகர் சித்தர் :- எதை என்று புரிய ஈசன் அருள் இல்லாமல் இங்கு காலடி எடுத்து எடுக்க வைத்து முடியுமா என்ன?
அடியவர் :- முடியவே முடியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- ஈசன் அருள் இல்லாமல் அண்ணாமலைக்கு வர முடியாது.
====================================
# கும்பலில் கோவிந்தா என்ற பழமொழி ரகசியங்கள்
====================================
போகர் சித்தர் :- ஆனாலும் கார்த்திகை தீபத்தென்று உங்களை அனைவரும் வெளியே விட்டு விடுவார்கள். நிச்சயம் தன்னில் கூட உங்களிடத்தில் தான் இறைவன் சந்தோஷமாக விளையாடுவான். ஆனால் மக்களோ உள்ளே சென்று பின் கோவிந்தா கோவிந்தா என்றெல்லாம் பின் நிச்சயம்
சுவடி ஓதும் மைந்தன்:- அதான் ஒரு வாக்கு சொன்னாங்க இல்ல? நீங்க இறைவனை தேடி உள்ள போறீங்க. இறைவன் உங்களை அப்ப திருவண்ணாமலையில் வந்து கார்த்திகை தீபம் ஏற்படுது இல்ல? அப்ப யார் கூட இருப்பாங்களாம்? உங்க கூட தான் இருப்பாங்களாம். ஜாலியா ஈசன் அது தெரியாம உள்ள போயிட்டு கோவிந்தா கோவிந்தா.
போகர் சித்தர் :- அப்பா இதை ஏன் சொன்னேன் என்றால் பின் கும்பலில் கோவிந்தா என்று நிச்சயம் பழமொழியும் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா, இது ஏன் சொன்னேன்னா கும்பல்ல கோவிந்தா, கும்பல்ல கோவிந்து போடுறாங்க இல்ல? அது இது அதனோட அர்த்தம்பா. அப்ப இருங்கயா,
போகர் சித்தர் :- இதை என் தெரிவிக்க அப்பா நிச்சயம் தன்னில் கூட நீ கேட்டாயே எவை என்று புரிய அப்பா அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று கூற, பின் அதாவது கிளம்பலாமா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறு.
அடியவர் :- மேடம், நீங்க கிளம்பலாமான்னு என்னன்னு கேக்குறாரு. அதுக்கு அர்த்தம் என்ன? குருநாதர் கேக்குறாரு, பதில் சொல்லுங்க.
போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய தாயே, அனைவரிடத்தில் பேசிச் செல். அனைவருக்கும் பின் அருளாசிகள் உன்னால் நடக்கட்டும்.
அடியவர் :- அம்மா பேசுங்க.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- (ரங்கம்மாள் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியின் சார்பாகப் பேசிய ஆசிரியை, தங்களை இந்த ஆன்மீகச் சேவை நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நெகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சிவபுராணம் போன்ற பாடல்களைக் கேட்கும் திறன் தன் மாணவர்களுக்கு இல்லாவிட்டாலும், அங்குள்ள சூழலையும் உணர்ச்சிகளையும் அவர்கள் கண்களால் கண்டு மகிழ்ந்ததைக் கண்டு நெகிழ்வதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, 'கருணை சேவை' என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் தங்கள் நிறுவனத்திற்கு, எதிர்பாராத வகையில் வழங்கப்பட்ட இந்த நிதியுதவி மாணவர்களின் படிப்பு மற்றும் உணவுச் செலவுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறினார். மாணவர்களை மேடையில் அமரவைத்துச் சிறப்பு பிரார்த்தனை செய்ததையும், காட்டிய அன்பான உபசரிப்பையும் கண்டு நெகிழ்ந்த அவர், இந்த அங்கீகாரம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகக் கூறி நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல் )
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- எங்க பசங்களுக்கு வந்ததுல இருந்து ஸ்நாக்ஸ் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஹாப்பியா இருந்தது. பசங்க வந்து இந்த மாதிரி எல்லாம் கேட்க முடியனால இந்த மாதிரி பார்க்கிறாங்க. இது என்னன்னா எங்க பசங்களுக்கு எல்லாருக்கும் கிடைக்கலன்னு சொல்லிட்டு நான் ஃபீல் பண்றேன். எங்க எங்க பசங்க எல்லாருக்கும் நீங்க பிளஸ் பண்ணுங்க. அவங்க வாழ்க்கையில நல்லா முன்னேறனும் அப்படின்னு சொல்லிட்டு உங்களோட ஹெல்ப் எங்களுக்கு தேவைப்படும். கண்டிப்பா எங்க நம்பர் எல்லாம் நாங்க கொடுக்கிறோம். சோ உங்களால முடிஞ்ச ஹெல்ப்பை எங்க பசங்களுக்காக நீங்க பண்ணுங்க. வித் ஹெல்ப் பண்றதுக்கு மணி மூலியமா சொல்லல. உங்களுடைய ஒரு சின்ன பிளஸ்சிங் கூட எங்க பசங்களுக்கு ஒரு பெரிய ஹெல்ப்பாதான் இருக்கும். சோ வந்து ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்குமே. எங்க மாணவர்கள் உங்களுக்கு ஒரு சின்ன தேங்க்ஸ் சொல்லுவாங்க.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல் )
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சாராம்சம் பின்வருமாறு :- (இறைவன் ஒருவரது வெளித்தோற்றத்தையோ அல்லது அவர் செய்யும் வழிபாடுகளையோ மட்டும் பார்ப்பதில்லை, மாறாக உயர்ந்த உள்ளம் கொண்டவர்களிடமே குடிகொள்கிறார். நாம் பிறருக்குக் கொடுப்பதன் மூலமே இறைவனிடமிருந்து எதையும் பெற முடியும்; எனவே, நம்மிடம் உள்ள செல்வத்தை பதுக்கி வைக்காமல், தேவையுள்ளவர்களுக்குச் சேவை செய்யவும், புண்ணியத்தைச் சேகரிக்கவும் பயன்படுத்த வேண்டும். உடல் அழியக்கூடியது, செல்வம் கைமாறக்கூடியது என்பதை உணர்ந்து, போட்டி பொறாமைகளைத் துறந்து வாழ வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதியப்படுகிறது (Memory); அதனால் நல்வழியில் நடந்து புண்ணியம் சேர்த்தால் மட்டுமே முதுமையிலும் நோய்க்காலத்திலும் அது நம்மைக் காக்கும். சித்தர்களின் வழிகாட்டுதலின்படி, தூய்மையான எண்ணங்களுடன் பிறருக்குச் சேவை செய்து வாழ்வதே இறைவனை அடைவதற்கும், நம் வாழ்வை மேம்படுத்துவதற்கும் உகந்த வழியாகும்.)
சிவபுராணம் ஓதுதல் :-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h09m10s
( மதிய வேளை உணவு எடுக்க அழைப்பு )
தேரையர் சித்தர் யந்திரம், மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கும் அறிவிப்பு:-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h18m31s
சிவபுராணம் மற்றும் பல பதிகங்கள் ஓதுதல்:-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h19m15s
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி ஓதுதல்:-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h39m45s
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment