​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 21 January 2026

சித்தன் அருள் - 2074 - அன்புடன் அகத்தியர் - குருந்தமலை வாக்கு!












குரு அகத்தியர் சமீபத்தில் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி  திருக்கோயிலில் உரைத்த வாக்கு. 

ஆலய முகவரி :-
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில், 
காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம். 

கூகுள்  மேப் லிங்க்  - https://maps.app.goo.gl/BKSdncYLcpnxAMWLA

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, எண்ணற்ற பிறவிகள், அப்பனே, எதை  என்றும் அறிந்தும்  அறிந்தும். 

ஆனாலும், அப்பனே, இவ்வுலகம் அழிவை நோக்கியே செல்கின்றது. எதனை என்றும் கூற. 

அப்பனே, இன்னும் மனிதனுக்கு, அப்பனே, எப்படி இறைவனை வணங்குவது என்றெல்லாம் தெரியாமல், அதாவது கலியுகத்தில், அப்பனே, அழிவுகள் தான், அப்பனே, தென்படுகின்றது. 

ஆனாலும், அப்பனே, இதன் முன்னே, அப்பனே, இங்கு வள்ளி தெய்வானையோடு முருகனும் வந்து, பின் ஈசனும் பார்வதி தேவியும், அதனையும் இன்னும் சித்தர்களும் கூட, அப்பனே, ரிஷிமார்களும் வந்து, எதை என்றும் அறியாமலே, அனைவரும் ஆசீர்வதித்து விட்டனர் அப்பனே, இன்னும் எதை என்றும் அறிய அறிய.

=========================================
# மரண வியாதிகளில்  துன்பப்படுபவர்கள் கூட இங்கு வந்து கந்தனை நோக்கி நோக்கி, மனதார எதையும் கேட்காமல், நிச்சயம் வழிபட்டுக் கொண்டே வந்தால், நிச்சயம் அனைத்தும் மாறும்.
========================================

இதனால், அப்பனே, பின் முருகனுக்கு எவை என்றும் அறிய அறிய, அப்பனே, இங்கும் கூட, அப்பனே, விளையாடுவதே எதை என்றும் அறிய அறிய, சிறப்பு என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே, பல வழிகளில் கூட, பின் மரணத்தை நோக்கி சென்றிருப்பவர்கள் கூட, அப்பனே, பல வியாதிகளில் கூட, துன்பப்படுபவர்கள் கூட, அப்பனே, இங்கு வந்து நல்விதமாகவே, அதாவது இவ் கந்தனை நோக்கி நோக்கி, மனதார எதையும் கேட்காமல், நிச்சயம் வழிபட்டுக் கொண்டே வந்தால், நிச்சயம் அனைத்தும் மாறும், எதை என்றும் உணர உணர. 

================================
# இவ் ஆலயத்தில் உள்ள  குழந்தை வேலாயுத சுவாமி ,  கலியுக நாயகன் போல இங்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றார்.
================================

இதனால், அப்பனே, உணர்ந்தும் கூட, எதை என்றும் அறிய அறிய, இதனால், அப்பனே, அனைத்திலும், அதாவது கலியுக நாயகனாகவே, முருகன் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே, சுற்றியும் கூட. 

அப்பனே, இதனால், நிச்சயம் அறிந்து அறிந்து கூட, அப்பனே, இன்னும் இன்னும் யார் சித்தர்கள் கூட, இங்கும் கூட, அப்பனே, வருவார்கள். அப்பா, இனிமேலும் அறிந்தும் அறிந்தும். 

இதனால், அப்பனே, பல பல திருத்தலங்களை கூட, அப்பனே, எப்படி செல்ல வேண்டும், எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்பது எல்லாம் கலியுகத்தில், அப்பனே.

==============================
# கலியுகத்தில் பொய்யான பக்தி 
==============================

கலியுகத்தில், அப்பனே, பொய்யான பக்திகள்  தான் ஏற்படும் அப்பா.

பொய்யான பக்திகள் ஏற்பட்டு, அப்பனே, எதை என்றும் அறியாமலே, அப்பனே, இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் வந்து விடுவார்கள் என்பேன் அப்பனே. 

ஏனென்றால், அப்பனே, தன் நிலைமைக்கு தானே காரணம் என்றெல்லாம், அப்பனே, அப்பனே, முன்னோர்கள் வாக்கு. 

================================
# இறைவன் உங்களுக்கு  அனைத்தும் கொடுக்கம் ரகசியங்கள்.
================================

ஆனாலும், அதை கூட, அப்பனே, எப்பொழுது எது என்றும் அறிய அறிய, இறைவனிடத்தில் ஏதும் தேவையில்லை. 

““““““““இறைவா, நீ மட்டும் போதும் என்று யார் ஒருவன் இறைவனை நோக்கி நேசிக்கின்றானோ, அவன் தனக்கு மட்டுமே இறைவன் அனைத்தும் கொடுப்பான்.”””””””

““““““““அப்பனே, எதையும் எதிர்பார்க்காமல், எவன் ஒருவன் இறைவனை வணங்குகின்றானோ, அவன் தனக்கு நிச்சயம் இறைவனே அனைத்தும் கொடுப்பான்.”””””””

======================================
# எப்படி இறைவனை வழிபட வேண்டும் ?
======================================

அப்பனே, எதிர்பார்க்கவும், அப்பனே, எதையும் இறைவனிடத்தில் நிச்சயம் கூடாது. அப்பா, எதை என்றும் அறிய அறிய, 

அப்பனே, அனைத்து அனைத்துமே தெரியும். 

அப்பனே, எப்பொழுது எதை கொடுக்க வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே. 

அதனால், மனதார, அப்பனே, இறைவனை வழிபட்டாலே போதும்  அப்பா. 

அன்பாலே, இறைவனை வழிபட்டாலே போதும் அப்பா. 

அப்பனே, அன்பால் மட்டுமே இறைவனை, அப்பனே, ஈர்க்க முடியும் தன்பால். 

மற்றவைகள் எல்லாம் செல்லாது என்பேன்  அப்பனே, இதை எப்பொழுது கூட பல சித்தர்கள் கூட, அப்பனே, பின் எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்லிவிட்டார்கள் அப்பனே.

ஏனென்றால், அப்பனே, கலியுகத்தில் அழியும் காலம் அப்பா. 

பல பல நோய்களும் கூட, அப்பனே, பல வழிகள் கூட, துன்பங்கள், மனக்குழப்பங்கள், இவையெல்லாம் சாதாரணமாக வரும் அப்பா. 

அதனால், யான் பின் நேற்றைய, அதாவது, அப்பனே, பல வாக்குகளிலும் கூட, அப்பனே, கலியுகம் என்றால், அப்பனே, அழியும் காலம் என்பதை  கூட, நோயின் காலம் என்பதை கூட அப்பனே. 

அதனால், பின் யாங்கள், அதாவது, சித்தரை நோக்கி வருபவர்களை கூட, அப்பனே, சில கர்மாக்களை எடுத்துத்தான் நல்லது செய்ய முடியுமே தவிர, அப்பனே, எது என்று கூற உடனடியாக எங்களாலும், அப்பனே, அதனால், தான் தான், பின் கர்மத்திற்கு ஏற்ப தண்டனைகள் அனுபவித்தே தீர வேண்டும். 

அதனால்தான், அப்பா, மனிதர்கள் கலியுகத்தில் பிறக்கின்றார்கள் அப்பனே. 

பல உலகங்கள், அப்பனே, ஆனாலும், அறிந்தும்  அறிந்தும் கூட, மேல்நோகம் இன்னும் இன்னும் லோகங்களை பற்றி எல்லாம் யான் சொல்கின்றேன் அப்பனே. 

=================================
# கர்மத்தை அழிக்க  என்ன செய்ய வேண்டும்?
=================================

அதனால், முதலில், அப்பனே, தன் கர்மத்தை அழிக்க வேண்டும் அப்பனே. 

இதனால், அப்பனே, என்ன செய்ய வேண்டும்? 

““““““அன்பால் இறைவனை வணங்கினாலே போதுமானது.”””””” 

““““““தியானங்கள் செய்தாலே போதுமானது.”””””” 

““““““பிறருக்கு தீங்கு விளைவிக்காத வகையில், அப்பனே, எதை என்றும் அறிய அறிய புண்ணியங்கள் செய்தாலே போதுமானது அப்பா.””””””  

எதை என்றும் அறிய அறிய, இறைவனே வந்து உதவிக்கரம் நீட்டுவான் அப்பனே. 

இன்னும் இன்னும், அதனால், அப்பனே, அழிவின் பாதையிலே செல்கின்றது அப்பனே, இவ்வுலகம். 

அதனால்தான், சித்தர்கள், யாங்கள், அப்பனே, மனிதனுக்கு ஏதாவது ஒரு வழியை காட்டி மாற்ற வைக்க பார்க்கின்றோம். 

ஆனாலும், அப்பனே, மனிதன் திருந்த பாடில்லை. 

அப்பனே, அவை வேண்டும், இவை வேண்டும், இன்னும் இன்னும், அப்பனே, எது எதையோ, அப்பனே, ஆசைகளாக. 

அப்பனே, எதை நீ ஆசைப்படுகின்றாயோ, அதனாலே துன்பம் என்பது கூட பலரும் அறிந்தவே அப்பனே.

அப்படி இருந்தும் இன்னும் திருந்தவில்லை மனிதன். 

அப்பனே, இதனால் என்ன லாபம் அப்பனே?. 

======================
# இறைவா, நீயே கதி
======================

இறைவா, நீயே கதி என்று எவன் ஒருவன் இருக்கின்றானோ, அவன் தனக்கு நிச்சயம், அப்பனே, சில சோதனைகளில் கொடுப்பானே தவிர, இறைவன், அப்பனே, எதை என்றும் அறிய அறிய உயரத்தில், அப்பனே, பின் அழகு பார்ப்பான் என்பேன் அப்பனே.

==================================
# தன்னை ஆராயாமல், தெளிவு வருவதில்லை.
==================================

இதனால், அப்பனே, எவை என்றும் அறிய அறிய, அப்பனே, யோசியுங்கள் அப்பனே, என்னென்ன தவறுகள் எங்கெல்லாம் நடந்திருக்கின்றது என்பது எல்லாம். 

அதனால், அப்பனே, ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

தன் நிலைமைக்கு தானே காரணம் என்பது எல்லாம் ஏற்கனவே வாக்கு. 

அப்பனே, இவை அனைவருக்குமே உணர்ந்ததே, தெரிந்ததே அப்பனே, எ
தை என்றும் அறிய அறிய, 

அதனால், அப்பனே, பாவம் செய்கின்றவர்கள் எதனால் என்பதையும் கூட, அப்பனே, புண்ணியங்கள் செய்வதனால், எதனால் என்பதால், அப்பனே, புண்ணியங்கள், அப்பனே, செய்ய செய்ய, அப்பனே, சில துன்பங்களும், சில வருத்தங்கள் வளரலாம் என்பேன் அப்பனே.

ஆனாலும், நிச்சயம் கடைசியில் பார்த்தால், இறைவன் உதவிகள் செய்வான் என்பேன்  அப்பனே. 

பாவம் செய்யலாம், அப்பனே. ஆனாலும், பாவத்திற்கு தண்டனை உடனடியாக கிடைக்காது அப்பா. 

அப்பனே, போக போகத்தான் கிடைக்கும் அப்பா. 

ஆனால் கிடைத்துவிட்டால், அப்பனே, யாரும் எழுந்திரிக்க முடியாது அப்பனே. 

=============================================
# கலியுகத்தை வெல்ல , கிரகங்களை வெல்ல என்னதான் செய்ய வேண்டும்?
=============================================

அதனால், அப்பனே, நீ கலியுகத்தை பின் வென்றிட வேண்டும். 

கிரகங்களை வென்றிட வேண்டும் அப்பனே. 

இதற்கு என்னதான் செய்ய வேண்டும் அப்பனே? 

“““““புண்ணியங்கள் அப்பனே.”””””” 

பின் என்னால் செய்ய முடியவில்லையே என்று, அப்பனே, இறைவனிடம் கேட்டால், அப்பனே, இறைவனே வந்து ஏதாவது ரூபத்தில், நிச்சயம் உன்னிடத்திலிருந்து சில கர்மாக்களை தொலைத்திட, அப்பனே, முற்படுவான் என்பேன் அப்பனே.

=================================
# ஏன் அவசியம் அனைவரும், அனுதினமும் ஒரு சிறிய உயிரினத்திற்காவது உணவளிக்கவேண்டும்.
=================================

அதனால், அனுதினமும் எதை என்றும் அறிய அறிய, அப்பனே, ஏதாவது ஒரு சிறிய உயிரினத்திற்காவது, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, நாம் ஏதாவது செய்து வந்தாலே, அப்பனே, எதை என்றும் அறிய அறிய. 

அப்பனே, அப்பனே, தெரியாமலே சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய. 

அப்பனே, இறைவனிடம் கேட்கின்றாயே, அதைத்தா இதைத்தா என்றெல்லாம், அப்பனே, ஆனால், பின் மற்றவர்களுக்காக நீ எதைத்தான் செய்திருக்கின்றாய் என்பேன் அப்பனே? 

அதை முதலில் யோசியுங்கள் அப்பனே.

பின் நம் தன்  நியாயமாக, தர்மமாக, நீதிமானாக இருந்து, அப்பனே, பின் தவறு நடந்தால், இறைவனை பின் கேட்கலாம். 

அப்பனே, இறைவனை  திட்டியும்  தீர்க்கலாம் அப்பனே. 

ஆனால், அப்பனே, மனிதரித்திலே குறைகள் இருந்து கொண்டு, இறைவனை, அப்பனே, எது என்றும் அறிய அறிய. ( திட்டுவதால் என்ன லாபம் ?) 

ஆனாலும், அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

புண்ணிய காரியங்களில் ஈடுபடுங்கள் அப்பனே. 

தன்னால் புண்ணியம் செய்ய முடியவில்லையே  என்று எண்ணினாலும், அப்பனே, எது என்றும் அறிய அறிய, கோமாதாக்களுக்கும் இன்னும் இன்னும், அப்பனே, பல பல உயிர்களுக்கும், அதாவது பேசத் தெரியாத உயிர்களுக்கும் எல்லாம், அப்பனே, உணவு கொடுத்து வந்தாலே, அப்பனே, நிச்சயம் மாற்றங்கள் உண்டப்பா. 

அப்பனே, இன்னும் தொழில் வேண்டும். பணங்கள் வேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் என்று கூட, அப்பனே, இறைவனிடத்தில் கேட்கின்றாய் அப்பனே. 

இதனால், அப்பனே, இறைவனும் பார்ப்பான் அப்பனே. 

இவனால் என்ன லாபம் என்று கூற? 

================================
# சூரியனும் சந்திரனும். உங்களை தினமும் கண்காணிப்பவர்கள். உங்கள் பாவ புண்ணிய கணக்கை சேமித்து வைத்துள்ளனர்.
================================ 


அதனால், அப்பனே, புண்ணியங்கள் செய்யுங்கள். இதனால், பின் புண்ணியம் செய்து, அப்பனே, எவை என்றும் அறிய அறிய, கணக்கு பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே, சூரியனும் சந்திரனும். 

அப்பனே, எது என்றும் அறிய அறிய, பிம்பமாகவே அப்பனே. 

இதை சரியாகவே, அப்பனே, எது என்று கூட, சேமிப்பு, அதாவது, அப்பனே, பின் சூரியனும் சந்திரனும், பின் நீங்கள் என்னென்னலாம் செய்து கொண்டிருக்கின்றீர்களோ, அவையெல்லாம் சேமிப்புக்களாக, சூரியனும் சந்திரனும், அப்பனே, பின் சேமிப்புக்களாகவே இருக்கின்றது அப்பனே. 

அதனால், அப்பனே, நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, அதை எதிரொளிப்பாக, சூரியனும் கொடுப்பான். சந்திரனும் கொடுப்பான் அப்பனே.

யாருக்கும் தெரிவதில்லை அப்பனே. 

ஏன் கஷ்டங்கள் வருகின்றது? அப்பனே, எதை என்றும் அறிய அறிய. அப்பனே.

அதனால், அப்பனே, தன்னிடம் இருந்தே தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட உணர வேண்டும் அப்பனே, எது என்றும் அறிய அறிய அப்பனே. 

===================================
# குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி  திருக்கோயில் ரகசியங்கள்.
===================================

ஒரு மாதத்திற்கு முன்பேவே, இந்திரனும் சந்திரனும், இன்னும் பல சித்தர்களும் கூட, அப்பனே, இங்கு வந்திட்டு, அப்பனே, நல்முறையாகவே, அப்பனே, தங்கிவிட்டும் சென்றார்கள் என்பேன் அப்பனே. 

இன்னும், அப்பனே, பின் சக்திகள் இங்கே இருக்கிறது அப்பா. 

=====================================
# இடைவிடாமல் இறைவனை வணங்க வேண்டும்.
===================================== 

அதனால், அப்பனே, இறைவனை வணங்கிட வேண்டும் அப்பனே. 

ஒரு முறை இல்லை. 

ஈர் முறை இல்லை. 

பலமுறை அப்பனே. 

என்ன துன்பங்கள் வந்தாலும், இறைவனை நோக்கி வணங்கிக் கொண்டே இருந்தால், அப்பனே, துன்பம் போகும் என்பேன் அப்பனே. 

கரையும் என்பேன் அப்பனே. 

===================================
# பாவங்கள் கரையும் ரகசியங்கள் - ஏன் சக்தி மிகுந்த திருத்தலத்திற்குச் அடிக்கடி செல்ல வேண்டும். 
===================================

ஒவ்வொருவரையும், அப்பனே, முதுகில், அப்பனே, கர்மாவத்தை, அதாவது, பாவ சுமையைத்தான் சுமந்து வந்தீர்கள் என்பேன்  அப்பனே. 

இவ்பாவச் சுமையை எப்படி கலைப்பதற்கு, எது என்றும் அறிய அறிய. அப்பனே, இதனால், சக்தி மிகுந்த திருத்தலத்திற்குச் சென்றால் தான், அப்பனே, கரையும் அப்பனே. 

அதனால், கலியுகம் என்றாலே, அழியும் காலம் அப்பா. 

அதனால், அப்பனே, எது என்றும் அறிய அறிய, கோபங்கள் வேண்டாம் என்பதையும் கூட, பொறாமைகள் வேண்டாம் என்பதையும் கூட, பொய் சொல்லாமை, அப்பனே, இவையெல்லாம் நிச்சயம் கடைபிடித்தால் மட்டுமே, அப்பனே, எது என்றும் அறிய அறிய, ஒரு படி மேலாகவே செல்கின்றேன் அப்பனே.

இறைவனை கூட, எது என்றும் அறிய அறிய, பின் நம்மிடத்தில் வரவழைக்கலாம் என்பேன்  அப்பனே.

பின் இறைவனுக்கு பிடித்தார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பேன்  அப்பனே. 

================================
# உங்கள் குறைகளை, கஷ்டங்களை  இறைவனிடம் மட்டும் சொல்லுங்கள். எந்த மனிதர்களிடம் சொல்ல வேண்டாம். உங்களை ஏமாற்றி விடுவார்கள்.
================================= 

அப்பனே, தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே. 

மனிதனை நம்பித்தான் போகின்றான் அப்பனே. மனிதன் என்ன செய்வான் அப்பனே, எது என்று கூற?

அப்பனே, தன் வாழ்க்கை பற்றியே தெரியாதவன் மனிதன். 

ஆனாலும், அப்பனே, பின் அவன் தன் வேடங்கள் அணிந்து கொண்டு, அதைச் செய், இதைச் செய். இப்படி செய்தால் நன்மை, அப்படி செய்தால் நன்மை. பின் தோஷங்கள் இருக்கின்றது. இதைச் செய்தால், இப்படி எல்லாம், அப்பனே, பித்தலாட்டங்கள் அப்பனே. 

இதனால்தான், அப்பனே, இறைவன் இல்லை என்று மனநிலைக்கு மனிதன் போய்விடுகின்றான் என்பேன்  அப்பனே. 

அதனால், மனிதனால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. 

அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள், எது என்றும் அறிய அறிய. 

இறைவனால், அப்பனே, செய்ய முடியும். 

அதனால், அப்பனே, எது என்றும் அறிய அறிய, பணங்கள் வேண்டும் என்றால், அப்பனே, ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் அப்பனே. முயற்சிகள் செய்கின்றீர்கள். தொழில் வேண்டும் என்றாலும், முயற்சி செய்கின்றீர்கள். 

=====================================
# இறைவன் பலம் அவசியம் அனைவருக்கும் வேண்டும். 
===================================== 

ஆனாலும், அப்பனே, இறைவன் பலம், அப்பனே, பின் வேண்டுமென்றால், நீங்கள் முயற்சி செய்து, அப்பனே, இறைவனிடத்தில் சென்றால்தான், அப்பனே, கஷ்டங்களும் வரும். தோல்விகளும் வரும் அப்பனே. 

அவையெல்லாம் யார் ஒருவன் சரியாக கவனித்து, அப்பனே, பல வழியில் கூட, பின் இறைவனை விடாமல் இருக்கின்றானோ, அவன் தன் நிச்சயம் இறைவனும் விடமாட்டான் அவ் மனிதனை அப்பனே, சொல்லிவிட்டேன். 

======================================
# இறைவனை நெருங்கும் முன்னரே ஆசையை ஒழிக்க வேண்டும் 
======================================

அப்பனே, எது என்றும் அறிய அறிய, அப்பனே, ஏற்கனவே, அதாவது, அதிகாலையிலே, எது என்றும் அறிய அறிய. அப்பனே, நெருப்பை போல், இறைவன், அப்பனே, நெருங்குவதற்கு நீ தயாராக இருந்து கொண்டாலே போதுமானது. அப்பனே, எது என்றும் அறிய அறிய.  

ஆனாலும், அப்பனே, எவை என்றும் அறிய அறிய. முதலில், அப்பனே, அவ் நெருப்பை நெருங்குவதற்கு, அப்பனே, ஆசை, எது என்று அறிய அறிய, முதலில், எரித்திட வேண்டும் என்பேன்  அப்பனே.

அவ் ஆசையை எரித்திட வேண்டும். எவை என்று கூற, பின் எரித்து போட்டால், அப்பனே, பின் நெருப்பை நெருங்கலாம் என்பேன்  அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

அதனால், அப்பனே, இறைவன் உங்களிடத்திலே அனைத்தும் கொடுத்துவிட்டான் அப்பனே, சிறிது காலம் பார்ப்போம் என்று. 

ஆனாலும், அப்பனே, அதை சரியாக பயன்படுத்துவதில்லை நீங்கள், அப்பனே. 

அப்படி பயன்படுத்தாவிடில், அப்பனே, நீங்களே அழிவை தேடிக்கொண்டு மீண்டும் இறைவனிடத்தில் வருவீர்கள் அப்பனே. 

இறைவன் என்ன செய்வான் அப்பனே? 

இறைவன் என்ன வேலைக்காரனா? என்பேன் அப்பனே.

அதனால், தன் தகுதிக்கு ஏற்பவே, அப்பனே, இறைவன் அனைவருக்கும் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே. 

ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை அப்பா. 

இளமையில் கல், அப்பனே, இளமையில், இறைவனை நேசி என்றெல்லாம் சித்தர்கள், யாங்கள் சொல்லியும் வைத்தோம் அப்பனே. 

ஆனாலும், யார் பின்பற்றுகின்றார்கள் அப்பனே?. 

ஆனால், முதுமையில், அப்பனே, அனைத்தும் எது என்று கூற தவறுகள் செய்துவிட்டு, இறைவா, இறைவா என்றால், அப்பனே, இறைவன் எப்படித்தான் அப்பா நல்லது செய்வான் அப்பனே?  

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தெளிவு பெறுங்கள் அப்பனே. 

====================================
# ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்தினால் - இறைவனை உங்கள் இல்லத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
====================================

எதை என்று கூற , அப்பனே, ஆறாவது அறிவிற்கு இன்னும் வரவில்லை. மனிதன் என்பேன்  அப்பனே. 

அவ் ஆறாவது அறிவை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, இறைவன் தன் இல்லத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்பேன்  அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

அதனால், சித்தர்கள், அப்பனே, மூட நம்பிக்கை ஒழிப்பதற்காகவே, அப்பனே, யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அப்பனே.

ஆனால், எங்களை வைத்தே பணம் சம்பாதிப்பதும், அப்பனே, பொய் பித்தலாட்டங்கள் கூறுவதும் எப்படி? அப்பா, அதனால், நிச்சயம் யாங்கள் தண்டிப்போம் . அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

அப்பனே, கந்தன் இருக்கின்றான் அப்பனே, எது என்று கூற. 

இப்பொழுது கூட, வள்ளி தெய்வானையோடு அழகாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றான். அகத்தியன் என்னதான் கூறுகின்றான் என்று கூற, அப்பனே, உங்கள் அனைவருக்குமே ஆசீர்வாதங்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே.

ஆனால், நீங்கள் சரியில்லை என்பதுதான் யான் நிச்சயம் சொல்வேன் அப்பனே, எது என்று அறிய அறிய. 

அப்பனே, அதனால், ஒவ்வொருவரையும் கூட, அப்பனே, போட்டிகள், பொறாமைகள், இவ்வுலகத்தில், அப்பனே, அப் போட்டிகள், பொறாமைகள் இருந்தால், அவையே அழித்து விடும் என்பேன்  அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

அதனால், அப்பனே, எது என்று கூற, குறை இல்லாமல் வாழ்வதற்கு, அப்பனே, நீ எது என்றும் அறிய அறிய. இறைவனை பற்றிக் கொள்ளுதல் அவசியம் என்பேன்  அப்பனே.

ஆனால், மனிதன் பற்றிக் கொண்டால், அழிவுகள் நிச்சயம். 

அப்பனே, மனிதன், அப்பனே, எண்ணங்கள், அப்பனே, குரங்குகள் போலே என்பேன்  அப்பனே, தாவிக்கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே.

==========================================
# எப்பொழுது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் இறங்குகின்றீர்களோ,அப்பொழுது அனைத்தும் உங்களுக்கு தெரிய வரும். அனைத்தும் உங்களுக்கு நடக்கும்.
==========================================

ஆனால், அப்பனே, அப்பனே, ஆனாலும், மனிதன் நிலைமை கூட, அப்பனே, ஒரு நிலைப்படுத்தி மனதை, அப்பனே, எப்பொழுது தியானத்தில் இறங்குகின்றானோ, அப்பொழுது அனைத்தும் தெரியவரும். 

அனைத்தும் நடக்கும் அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

அதனால், அப்பனே, சொல்லி, எது என்று அறிய அறிய. இறைவனும்  கூட, அப்பனே, நல்முறையாகத்தான் பூமியில், அதாவது, மனிதனை போ என்று சொல்லி விடுகின்றான். 

ஆனாலும், அப்பனே, பின் போக போக, அப்பனே, மனிதனின் ஆட்டங்கள், அப்பனே, பொய்யானவை அப்பனே. 

அதனால், மீண்டும் அழிந்து, அழிந்து வந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

பிறவிகள் எடுத்து, எடுத்து, கட்டங்கள் பற்றிக் கொண்டிருக்கின்றான் என்பேன்  அப்பனே.

பிறவிகள் வேண்டாம் அப்பா. 

முதலில், அப்பனே, சித்தர்கள், அப்பனே, எங்களை நோக்கி வருபவர்களுக்கு, நாங்கள் பிறவிகள் தான் அறுப்போம் என்று சொல்லிவிட்டோம் அப்பனே. 

மற்றவைகள் எல்லாம், அதைத்தான், இவைத்தான் என்றெல்லாம் கேட்டாலும், அப்பனே, நிச்சயம் எது என்றும் அறிய அறிய. 

அதனால், அப்பனே, எவ்வகையான போக்கு?  எப்படி வாழ வேண்டும்? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு வாழ்ந்தால், அப்பனே, தோல்வி என்பதே கிடையாது அப்பா. 

கிடையாது. 

அப்பனே, அதனால், எதை என்றும் அறிய அறிய. அதனால், தன் நிலைமைக்கு தானே காரணம். 

மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன் அப்பனே. இதை ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் என்பேன்  அப்பனே.

=======================================
# இறைவனிடத்தில் அன்பை காட்டுங்கள் 
=======================================

அதனால், அன்பை காட்டுங்கள், இறைவனிடத்தில் அப்பனே. 

இறைவனே, உதவிகள் செய்வான். 

ஏன், எதற்காக? அப்பனே, இப்பொழுதெல்லாம், எதை என்றும் அறிய அறிய, உங்களுக்கு இங்கு வந்து (யாங்கள் வாக்குகள் செப்புகின்றோம்) எதை என்றும் அறிய அறிய. 

அப்பனே, முருகனுக்காகவா? இல்லை, எதை என்று அறிய அறிய. 

அப்பனே, நீங்கள் அனைவருமே, முருகன் மீது அன்புதான். என் மீது அன்புதான். 

அதனால்தான், உங்களை என் அருகிலே அமைத்திருக்கின்றேன் அப்பனே. 

இல்லையென்றால், துரத்தி இருப்பேன் அப்பனே. 

அப்பனே, நலங்களாகவே, அதனால், அப்பனே, எக்குறைகளும்  கொள்ள அவசியம் இல்லை என்பேன்  அப்பனே, 

சித்தர்கள், அப்பனே, இவ்வுலகத்தை காக்கவே, யாங்கள். 

ஆனாலும், அப்பனே, மனித முட்டாள் அப்பனே, எது என்றும் அறிய அறிய , அப்பனே, தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன்  அப்பனே. 

இறைவனை எப்படி வணங்குவது என்பதையும் கூட அப்பனே. 

அதனால், அப்பனே, தெரிந்து வணங்குங்கள். 

தெளிவு பெறுங்கள். 

அப்பனே, நிச்சயம் நன்முறையில் ஆகும் என்பேன்  அப்பனே. 

எம்முடைய ஆசிகளும் லோக முத்திரையோடு வந்து, அப்பனே, கவலையில்லை  அப்பனே. 

நிச்சயம் உங்கள், உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்று ஆராய்ந்து, ஆராய்ந்து, சிறிது சிறிதாக யான் மாற்றியும் அமைப்போம். அப்பனே. 

கவலை இல்லாமல் இருங்கள். அப்பனே, எது என்றும் அறிய அறிய. 

===============================
# இதன் பின்னர் குருநாதர் அடியவர்களுக்கு தனிப்பட்ட வாக்குகளை அருளினார்கள். அவ் வாக்குகளில் இருந்த பொது வாக்குகளை  இப்போது காண்போம்.
===============================


குருநாதர் :- எது என்று அறிய அறிய. ஏன், இத்தனை அருள்கள் பெற வேண்டும் என்பதை கூட, பின் சாதாரணம் இல்லை. 

துன்பப்பட்டு, இன்னும் துயரப்பட்டு, அடியோடு அடிபட்டு வந்தால்தான், இறைவன் ஆசிகளும் கிட்டும். சொல்லிவிட்டேன், அம்மை, தந்தையே, எது என்றும் அறிய அறிய. 

இதனால், சாதாரணமாக, இறைவனின் ஆசிகள் கிடைப்பதில்லை. 

=============================
# உண்மையான பக்தி இருந்தால், விதியை கூட நம் அன்பு குருநாதர் மாற்றி அருள்வார்.
=============================

குருநாதர் :-  அப்பனே, விதியை மாற்றுவதற்கு மனிதன் சொல்வான். அப்பனே, ஏமாந்து விடாதே. அப்பரிகாரத்தை, இப்பரிகாரத்தை என்பதை எல்லாம் பொய் சொல்லி, அப்பனே, உன்னிடத்தில் பணங்கள் பிடுங்குவான் அப்பா. வேண்டாம் அப்பனே, இனிமேல் கூட. 

அப்பனே, எது என்று அறிய அறிய. உண்மையான பக்தி இருந்தால், விதியை கூட, அப்பனே, யான் மாற்றுகிறேன். அப்பனே.

=========================================
( ஒரு அடியவருக்கு பலத்த கஷ்டங்களை வைத்துள்ளார் அது குறித்து ஈசனார் , அன்னை பார்வதி தேவி உரையாடிய வாக்கு )
=========================================

குருநாதர் :- அப்பனே, இவனை பார்த்து எது என்று அறிய அறிய ஈசனும் சிரித்தான் அப்பா. ஆனால் பார்வதி தேவியோ இப்படியே இவன் தனே, பின், எது என்று அறிய அறிய இன்னும் கஷ்டங்களுக்கு நுழைத்துக் கொண்டே இருந்தால் என்னதான் லாபம் என்று. 

ஆனாலும், தேவியே, கேள், சிறிது எது என்று அறிய அறிய சில கஷ்டங்கள் பின் பட்டால்தான் அனைத்தும் தெரியும். அதனால், நம்மிடையே வைத்துக் கொள்வோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் ஈசன் அப்பனே. கவலை விடு. 

அதனால், அப்பனே, ஈசன் அன்பும் பார்வதி தேவியின் அன்பும் இருக்க. அப்பனே, ஈசனே, விளையாடிவிட்டான் உன்னிடத்தில். அப்பனே, அதற்கும் தாங்கிக் கொண்டாய் அப்பனே. 

அப்பனே, கவலைப்படாதே. அப்பனே, எது என்று அறிய அறிய. அகத்தியன் இருக்கின்றான் என்று, அப்பனே தைரியமாக இரு. 

==============================================
# ஆலய விபரங்கள் -குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் 
==============================================

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயிலாகும், இது குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:
இடம்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடைக்கு அருகில் உள்ள குருந்தமலை (Maruthur Post).
பெயர்க்காரணம்: குருந்த மரங்கள் நிறைந்த குன்றின் மேல் இருப்பதால் "குருந்தமலை" எனப் பெயர் பெற்றது.
வரலாறு: சுமார் 750 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் என்று கருதப்படுகிறது.
சிறப்புகள்:
கோவில் அமைந்திருக்கும் குன்றின் கீழே விநாயகர் சந்நிதி உள்ளது.
திருக்கோவிலின் உள்ளே 'கங்கை கிணறு' (காசி கிணறு) உள்ளது, இது புனிதமாகக் கருதப்படுகிறது.
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், திருமூலர் போன்றோர் பாடியுள்ளனர்.
திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரைக் கனி போன்றவை முக்கிய திருவிழாக்கள். 
அருகில்:

கோயம்புத்தூரிலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் உள்ளது
ஆலய முகவரி :-
அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் குருந்தமலை, காரமடை (அருகில்), கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு.

கூகுள்  மேப் லிங்க்  - https://maps.app.goo.gl/BKSdncYLcpnxAMWLA

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment