அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h27m15s
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5
===================================
# மாற்றுத்திறனாளி மாணவர்கள் வருகை
===================================
========================================
# ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல்
========================================
அடியவர் :- ( "சுவடி ஓதும் ஐயா, மாற்றுத்திறனாளி (செவித்திறன் சவால் கொண்ட) மாணவர்கள் பள்ளியில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள்." )
சுவடி ஓதும் மைந்தன் :- (சரிங்க அய்யா. அவர்களை உட்கார வையுங்கள்.)
======================================
# குறை இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை.
======================================
போகர் சித்தர் :- இவைத்தன் இன்னும் இன்னும் எது என்று புரிய, அறிய. ஆனாலும் இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் குறை உள்ளவர்களே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் குறை இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே குறை உள்ளவர் தான் இறைவன் படைச்சிருக்காரு. குறை இல்லாதவர்கள் யாருமில்லை.
போகர் சித்தர் :- ஏன், எதற்கு? குறை பின் இருந்தால் மட்டுமே இறைவனையும் காணலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- குறை இருந்தா மட்டும் தான் இறைவனை காண முடியும். தேடி வருவாங்க. இல்லையென்னா….
போகர் சித்தர் :- அப்பா, அக்குறை இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட மனிதன் தான் தான், இறைவன் என்று அகங்காரம் வந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த குறை எல்லாருக்கும் ஒரு ஒரு குறை இருக்குது. அந்த குறை இல்லை என்றால் மனிதன் என்ன ஆகுவான்?
அடியவர்:- அகங்காரம் வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகங்காரம் வந்துவிடும்.
போகர் சித்தர் :- ஆனாலும் இதற்கு நிச்சயம் அகத்தியன் எடுத்துரைக்கப் போகின்றான் சற்று நேரத்திலே. நிச்சயம் அப்பொழுது உங்களுக்கு புரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதைப் பற்றி ஏன் மனுஷன் பிறக்கிறாங்க, ஏன் மனுஷன் இறக்கிறாங்க, எதற்காகன்னு சொல்லிட்டு அகத்தியர் சற்று நேரத்தில் இதைப் பற்றி
அடியவர்:- பெரிய உண்மையை சொல்லுவார்.
==========================================
# எவனிடத்தில் திறமை இருக்கின்றதோ, அவனுக்குத்தான் இறைவன் ஆட்சியை கொடுப்பான்.
==========================================
போகர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் ஆட்சிகள் பல பல, மன்னர்கள் பல பல. அப்பா, ஆட்சியைப் பற்றி சொல்கின்றேன். எவனிடத்தில் திறமை இருக்கின்றதோ, அவனுக்குத்தான் இறைவன் ஆட்சியை கொடுப்பான்.
போகர் சித்தர் :- அப்பா, திறமை இல்லாதவன் கொடுத்துவிட்டால் அனைத்தும் அழித்து விடுவிச் சென்று விடுவான். அப்பா, அதனால்தான் பக்குவங்கள் வேண்டும் என்று அப்பனே.
போகர் சித்தர் :- எவனிடத்தில் பக்குவங்கள் இருக்கின்றதோ, அவன் நல்லவனாயினாலும் சரி, தீயவனாயினாலும் சரி, இறைவன் பார்த்துக்கொள்வான். அப்பா, விட்டுவிடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- யார் யார் அந்த பக்குவம்? ஆட்சி, மன்னர்கள். நான் பார்த்துட்டேன்ப்பா. போகர் சொல்றாரு, யாரிடத்தில் பக்குவம் உள்ளதோ, அவர்களுக்குத்தான் ஆட்சி கொடுப்பேன். நல்லவனா, இது கெட்டவனா, நாங்க பார்க்க மாட்டோம். நான் நல்லவனா, திருத்திருவோம். எங்களுக்கு அந்த அனுக்கிரகம் இருக்குது. நாங்க.
========================================
# இவ்வுலகத்தில் யார் நல்லவன், யார் கெட்டவன், இறைவன் அனைவருக்குமே இருக்கின்றார்.
========================================
போகர் சித்தர் :- ஆனாலும் அறிந்தும் இவ்வுலகத்தில் யார் நல்லவன்? யார் கெட்டவன்? இறைவன் அனைவருக்குமே இருக்கின்றானடா மனித முட்டாள்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகத்தில் யார் நல்லவன், யார் கெட்டவன் சொல்லாதீங்க. நம்ப சொல்லக்கூடாது. எல்லாருக்கும் இறைவன் இருக்கின்றான்.
போகர் சித்தர் :- கெட்டவனை பின் இறைவன் தானே படைத்தான். அப்பொழுது இறைவன் கெட்டவனா?
அடியவர்:- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டவன் சொல்றாங்களே, நீங்க அப்ப கெட்டவனும் இறைவன் தான் படைச்சான். அப்ப இறைவன் கெட்டவனா?
போகர் சித்தர் :- முடிவெடுங்கள். இன்னும் நிச்சயம் தன்னில் கூட, இன்னும் கூட மூடநம்பிக்கையில் ஒளிந்திருந்தால், இவ்வுலகத்தில் மனிதன் வாழவே முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் யோசிக்கணும்.
===================================
# இறைவன் நல்லவனா, கெட்டவனா? நீங்கள் சொல்லுங்கள்.
===================================
போகர் சித்தர் :- அப்பொழுது நல்லவனையும் நிச்சயம் இறைவன் படைக்கின்றான். அப்பொழுது இறைவன் நல்லவனா, கெட்டவனா? இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். பின் இறைவன் கெட்டவன் என்றால், கெட்டவனைத்தான் படைக்கப் போகின்றான். நல்லவன் என்றால், நல்லவனைத்தான். பின் நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் அனைத்தும் சமமானவர்களே.
போகர் சித்தர் :- அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற இங்கு கெட்டவன் நல்லவன் ஆகின்றான். நல்லவன் கெட்டவன் ஆகின்றான். ஆனால் இவையெல்லாம் இறைவனுடைய பொறுப்பு.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க யார் நல்லவன்?
அடியவர்:- சூழ்நிலை தான் தீர்மானிக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் கெட்டவன்?
அடியவர்:- அது சூழ்நிலை.
சுவடி ஓதும் மைந்தன் :- அது சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. அதனால யார் பார்த்துப்பாரு?
அடியவர்:- இறைவன் பார்த்துப்பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் பார்த்துப்பார்.
அடியவர்:- நமக்கு தகுதி இல்லைன்றாங்க.
===============================================
# அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதே இல்லை.
===============================================
# தன் வேலையை இழக்கின்றாயே மனிதா. எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை இது.
================================================
போகர் சித்தர் :- நிச்சயம் மனிதா, உன் வேலை என்ன? நிச்சயம் அதை பார்க்கவில்லையே. மற்றொரு வேலையை பார்த்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு தன் வேலையை இழக்கின்றாயே மனிதா. எவ்வளவு மூடநம்பிக்கை இது.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவன் வேலை பார்த்து, அவன் செய்வானா, அவன் செய்வான்னு சொல்லிட்டு, அடுத்த வேலையை பார்த்துட்டு, உன் வேலையை நீங்க மறந்துறியே. ஏன் புரியுதுங்களா?
அடியவர்:- கருத்தை சொல்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உன் வேலையை நீங்க மறந்துறியே.
=========================================
# அடுத்தவன் திருடுகின்றான். யானும் திருடுவோம்.
=========================================
# அடுத்தவன் பொய் பேசுகின்றான். யானும் பேசுவோம்.
=========================================
# இப்படியே இருந்தால் எப்படி இறைவன் காண்பது?
=========================================
போகர் சித்தர் :- நிச்சயம் அடுத்தவன், அடுத்தவன் திருடுகின்றான். யானும் திருடுவோம். அப்பா, அடுத்தவன், அடுத்தவன் பொய் பேசுகின்றான். யானும் பேசுவோம். இப்படியே இருந்தால் எப்படி இறைவன் காண்பது? நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கேளடா, மனிதா.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவன் பொய் சொல்றான். நம்ம பொய் சொல்லுவோம்.
அடியவர்:- சொல்லுவோம். திருடுறான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவன் திருடுறான். நாமும் திருடுவோம். இப்படி இருந்தா இறைவனை எப்படி பார்க்க முடியும்? இறைவனை எப்படி பார்க்க முடியும்?
========================================
# ஞானி - அனைத்தும் இறைவன் செயலே என்று தான் இருப்பான்.
========================================
போகர் சித்தர் :- நிச்சயம் எதை என்று அறிய ஒருவன் ஞானியாக இருக்க, எதை என்று அறிய, அறிய பலம், நிச்சயம் தன்னில் கூட பக்குவம் அடைந்து இருந்திருந்தால், நிச்சயம் அனைத்தும் இறைவன் செயலே என்று தான் இருப்பான்.
அடியவர்:- சிவாய நம .
சுவடி ஓதும் மைந்தன் :- யார் ஒருத்தர் பக்குவங்கள் பெற்றிருக்காங்களோ, அவங்க எப்படி இருப்பாங்க?
அடியவர்:- அமைதி ஆயிருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அமைதி ஆயிடுவாங்க. எல்லாத்துக்கும் காரணம் இறைவன் செயல். இறைவனுடைய செயல்தான்.
====================================
# இறைவன் - “பிச்சைக்காரர்கள் என்று சொன்னதில்லை”. ஆனால் மனிதன்……
====================================
போகர் சித்தர் :- நிச்சயம் எதை என்று அறிய இவ்வுலகத்தில் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள் மனிதர்கள். நிச்சயம் இறைவன் அப்படி சொன்னதில்லையே, மனிதா.
அடியவர்:- கரெக்ட்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் மனுஷன் என்ன பண்ணிக்கிறான்? பார்த்தா, இவன் பிச்சைக்காரன் என்று சொல்கின்றன். ஆனா இறைவன் சொல்கின்றாரா? சொன்னதில்லையே.
அடியவர்:- சொன்னதில்லை.
=====================================
# இறைவன் வரிசையில் அனைவரும் சமமானவர்கள்.
=====================================
போகர் சித்தர் :- எதை என்று அறிய இறைவன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இறைவன் வரிசையில் அனைவரும் சமமானவர்கள். எதை என்று புரிய இங்கு நல்லவன் யார், கெட்டவன் யார்? நிச்சயம் பின் முடிவு நீங்கள் எடுக்காதீர்கள். படைத்தது இறைவன். பின் அவனுக்கே சொந்தம் அனைத்தும். அவனுக்கு தெரியும் நடத்த.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க நல்லவன் யார்?
அடியவர்:- கெட்டவன் யார்?
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டவன் யார் என்று தீர்மானிக்கிறதுக்கு நம்ப கையில இல்லை.
அடியவர்:- நல்லவன், கெட்டவன் நீங்க சொல்ற.
போகர் சித்தர் :- நிச்சயம் திருடினால் ஒரு நாள் சிக்கிக் கொள்வான். நல்லவன் ஆகிவிட போகின்றான். நிச்சயம் இவ்வளவுதான் வாழ்க்கை. எதற்காகத்தானா இங்கு?
அடியவர்:- (புடிபட்டுருவான்? திருடுறவன் ஒரு நாள் பிடிபடுவான். அவ்வளவுதான். போலீஸ் நாலு அடி அடிப்பார்கள்.)
============================================
# தன் வேலையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ, அவன் மனிதன் இல்லை. அவனே மாமனிதன்.
=============================================
போகர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் தன் வேலையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ, அவனே மனிதன் இல்லை. மாமனிதன். ஆனால் மாமனிதன் இவ்வுலகத்தில் இல்லையப்பா. தன் வேலை பார்ப்பதில்லை.
====================================
# எச்சரிக்கை. அதி கவனம் தேவை - மற்றவர்களை பற்றி, அவர்கள் இல்லாத போது, மற்றவர்களை பற்றி பேசினால் - அவர்கள் கர்மா உங்களை வந்து அடையும். உங்கள் புண்ணியங்கள் அவர்களுக்கு சென்றுவிடும். கிசுகிசு பேசுவதை , புறம் பேசுவதை முற்றிலும் தவிர்க்கவும். நீங்கள் குறை கூறிய மற்றவர்கள் இன்னும் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் உங்கள் புண்ணியத்தால்…..
====================================
போகர் சித்தர் :- மற்றவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே. நிச்சயம் பின் அவரவர் கர்மா இப்படி பேசுகின்றார்களே. இவரைப் போய் சாரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உன் வேலை நீங்க சரியா பயன்படுத்தலைன்னா, நீங்க அடுத்தவனை பத்தி பேசி நின்னேன்னா, அவன் அப்படி, இவன் இப்படி சொல்லிட்டு, அவன் அந்த கர்மா உனக்கு வந்து சேர்ந்து, உன் புண்ணியம் அவன் போய் சேரு. அவன் இன்னும் உயர்ந்ததா இருப்பான்.
அடியவர்:- யாரையும் குறை கூறாதீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- குறை கூறாதீர்கள்.
அடியவர்:- யாரிடமும் குறை இல்லை.
===================================
# அண்ணாமலையரிடம் கேளுங்கள்
===================================
போகர் சித்தர் :- அப்பா, நீங்கள் அறிவாளியாக இருந்தால், இக்கெட்டவனை ஏன் படைத்தாய் என்று இதோ அண்ணாமலையிலே இருக்கின்றானே, அவனைத்தான் நீங்கள் கேட்க வேண்டுமே தவிர, நிச்சயம் எவை என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- ஒருத்தன் கெட்டவன் இருக்கிறான்னா யார்கிட்ட நீங்க கேட்கணும்?
அடியவர்:- இறைவன்ட்ட தான் கேட்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனுக்கு போய் கேளுப்பா. போயிட்டு ஏன்டா கெட்டவனை படைச்சான்னு சொல்லிட்டு
======================================
# அடுத்து அகத்திய மாமுனிவர் ஒரு மாபெரும் ரகசியம் உரைக்க உள்ளார்கள்
======================================
போகர் சித்தர் :- இதைத்தன் இன்னும் உணர பாவம் என்ன, புண்ணியம் என்ன, இதனைத்தன் நிச்சயம் அகத்தியன் அடுத்து எடுத்துரைப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவம் எங்க? புண்ணியம் என்ன?
அடியவர்:- : குருநாதர் சொல்லுவார்.
போகர் சித்தர் :- உண்மையிலேயே பாவம் இருக்கின்றதா? புண்ணியம் இருக்கின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மையிலேயே பாவம் இருக்குதா, புண்ணியம் இருக்குதா,
அடியவர்:- சூட்சமத்தை சொல்லுங்க.
===========================================
# போகன் யான் சொல்கின்றேன் - இப்புவிதனில் பிறந்தால், பாவம், புண்ணியம் இல்லை. இறைவனுக்கே சொந்தம்.
===========================================
போகர் சித்தர் :- ஒன்றை சொல்கின்றேன், இப்புவிதனில் பிறந்தால், நிச்சயம் பாவம், புண்ணியம் இல்லை. இறைவனுக்கே சொந்தம். இறைவன் உங்களுக்கு அதை கொடுத்தால்தான், நிச்சயம் நீங்கள் வாழ்வீர்களாக. நிச்சயம் உங்களிடத்தில் பாவம் இல்லை. புண்ணியம் இல்லை. யான் சொல்கின்றேன், போகன்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
அடியவர்:- நிச்சயமா? அப்பா. எவ்வளவு பெரிய உண்மை. எல்லாம் இறைவன் பார்த்து கொடுக்கிறது. பாவமோ, புண்ணியமோ, நம்ம கையில இல்ல. நம்ம கையில இல்ல. ஒன்னும் இல்ல.
======================================
# இறைவனின் சிறு துகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கின்றது.
======================================
போகர் சித்தர் :- எதை என்று புரிய இன்னும் புரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகம் நிச்சயம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது. நிச்சயம் அனைவரும், அதாவது சொல்லிவிட்டேன், எதை என்று அறிய அனைவரும் எதை என்று புரிய இறைவனின் சிறு துகள், மனிதனிடத்தில், ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கின்றது. அதை எப்பொழுது உணர்வீர்களாக? மற்றவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, தன்னைப் பற்றி சிந்திக்காதவனுக்கு இறைவன் என்ன கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை.
அடியவர்:- நீயும் இறைவன்ட்ட ஒரு பகுதி தான்ப்பா. இறைவனின் ஒரு சிறு துகள் உங்க கிட்ட இருக்கு. நீங்க அதை உணரல. அடுத்தவனை பத்தியே பேசிட்டு இருக்கிற. நீங்க எப்ப நீங்க உன்னை இறைவனை உணர போறன்றாங்க.
போகர் சித்தர் :- அண்ணாமலையிலே யான் பார்த்தேன், எத்தனை பொய்க்காரர்கள், எத்தனை வேடதாரிகள், எத்தனை திருடர்கள், எத்தனை, எத்தனை, எத்தனை, எத்தனை, எதை என்று புரிய. ஆனாலும் யாங்கள் சகித்து அவர்கள் திருத்தி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் அனைவரும் இறைவன் குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள்.
போகர் சித்தர் :- அதுமட்டுமில்லாமல் ஒரு தாய் தன் குழந்தை நிச்சயம் பின் எவை என்று கூறி எவ்வளவு தவறு செய்தாலும் பின் சிரிக்கின்றாள் அல்லவா? நிச்சயம் சிரித்து சிரிக்கின்றாள். அதுபோலே அண்ணாமலையோன்.
அடியவர்:- அப்பா!!! சிவாய நம !!!! அதாவது அண்ணாமலையில எவ்வளவு திருடர்கள் இருக்காங்க. பொய் சொல்றவங்க, கபடதாரிகள், வேடதாரிகள் நிறைய பேர் இருக்கிறாங்க. பட் எல்லா பேரும் எங்களுக்கு தெரியும். தெரிஞ்சு நான் உங்களை திருத்தி வந்து எல்லாத்தையும் கொடுத்துட்டு இருக்கிறோம். இது இறைவனுடைய வேலைப்பா. இறைவன் பார்த்துப்பாரு. நீங்க உங்க வேலையை பாருங்க.
போகர் சித்தர் :- மனிதன் சொல்வான், இவன் திருடன், இவனை ஒதுக்கு. இவன் குடிகாரன், இவனை ஒதுக்கு. இவன் தன் பொய் சொல்வோன், இவனை ஒதுக்கு. ஆனால் யாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு அனைவருமே ஒன்றுதான்.
அடியவர்:- சித்தர்களுக்கு அனைவரும் சமம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சமம். சித்தர்களுக்கு அனைவரும் சமம்.
அடியவர்:- மனிதன் என்ன சொல்லுவாராம்? இவன் திருடன், இவன் கொள்ளை அடிப்பவன், இவன் வந்து வேஸ்ட், பொறாமை பேசுறவன், பொறாமை பேசுறவன் சொல்லுவாங்களாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கோவப்படுறவன்.
போகர் சித்தர் :- ஏனென்றால் மனிதனுக்கு அறிவில்லை. அவன் அறிவில்லாதவன். இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா மனிதனுக்கு என்ன இல்ல?
அடியவர்:- முட்டாள் ஆரம்பிச்சிருக்கான். முட்டாள் தானே சொன்னாரு. மனிதன் முட்டாள் பேசுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- முட்டாள். அப்ப இதுதான் பேசிட்டு இருப்பான். ஆனால் நாங்கள் வந்து அது மாதிரி பார்க்கிறது இல்லை. திருடனா இருந்தாலும் அவனை மாத்தணும். குடிகாரன் இருந்தாலும் அவனை மாத்தணும். எல்லாரும்
===================================
# வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.
===================================
போகர் சித்தர் :- நிச்சயம் ஒரு நாள் எங்கு பின் எதை என்று அறிய எவன் அனுப்புகின்றானோ, அவனிடத்தில் வரவேண்டும் அல்லவா? அதனால் அவனே திருத்துவான்.
அடியவர்:- ஆமா, எல்லாரும் இறைவன்ட்ட இருந்து வந்தோம். திருப்பி அங்க போய்தான் ஆகணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- போய்தான் ஆகணும்.
அடியவர்:- வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி. இன்னைக்கு இல்ல, என்னைக்கோ ஒரு நாள் போய்தான் ஆகணும். அப்ப இறைவன் பார்த்துப்பான், திருத்துவான்.
=====================================
# ஏன் சாதுக்கள் , சன்னியாசிகள் (துறவிகள்)- இறைவனை திட்டவில்லை
=====================================
போகர் சித்தர் :- எத்தனை, எத்தனை பிரச்சனைகள் இவர்களுக்கு? கடன் பிரச்சனைகள், இல்லத்தவள் பிரச்சனைகள். இன்னும் எதை என்று அறிய, அறிய எவை என்று புரிய, புரிய ஏன், எதற்கு? ஆனால் இவர்கள் ஈசனை திட்டலாமே. ஏன் திட்டவில்லை மக்களே?
சுவடி ஓதும் மைந்தன் :- (மேடையில் இருக்கும் சன்னியாசிகள் ) இவங்க எவ்வளவு பிரச்சனையிலிருந்து இவங்க வராங்க? இப்படி எல்லாம் இருக்காங்க. கடவுளை போய் வந்து திட்டுறது ஏன்? திட்டலப்பா? ஏன் திட்டல? திட்டறது தானே கடவுளை?
போகர் சித்தர் :- அப்பா, நல்லவன் யார், கெட்டவன் யார்? அனைவரையும் இறைவன் தான் படைத்தான். நிச்சயம் தன்னில் கூட திட்ட வேண்டும் என்றால் இறைவனைத்தான் திட்டித் தீர்க்க வேண்டும். அப்பா, நிச்சயம் இதுதான் அறிவின் பண்பு.
அடியவர்:- இதான் அறிவுன்றாங்க. இதுதான் அறிவு. அறிவோட உச்சம் அதுதான். யாரை திட்டணும்? இறைவன்ட்ட தான் கேட்கணும். நீங்க இறைவனை பழி கேளு. இறைவன் தானே படைச்சாரு. மனுஷனை குறை சொல்லி நிக்கிற வந்து
போகர் சித்தர் :- எதை என்று புரிய? இதனால் பின் முடிவெடுப்பதும் அவனே தீர்மானிப்பதும், அவனே வெற்றியை கொடுப்பதும், அவனே தோல்வியை கொடுப்பதும், அவனே அனைத்தும் கொடுப்பவனாக அவன் இருப்பதால் மனிதனுக்கு இங்கு என்ன வேலை? வெறும் பொம்மையே. பொம்மையை பின் உயர்ந்தவன் ஆக்குவதும், பின் தாழ்ந்தவன் ஆக்குவதும், நிச்சயம் பின் நல்லவன் ஆக்குவதும், கெட்டவன் ஆக்குவதும், பின் நோயாளி ஆக்குவதும், பின் நோயிலிருந்து விடுபட்டு ஆக்குபவனும் இறைவன் ஒன்றே. அவ் இறைவன் யார்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏப்பா, எல்லாத்துக்குமே அவர்தான்.
அடியவர் :- எல்லாமே இறைவன்.
======================================
# அடுத்து அகத்திய மாமுனிவர் ஒரு மாபெரும் ரகசியம் உரைக்க உள்ளார்கள்
======================================
போகர் சித்தர் :- இதை சற்று நேரத்திலே தெரிவித்து தான் போகின்றான் என் குரு அகத்தியன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை இறைவன் யாரு? சற்று நேரத்துல இறைவன் யாருன்னு சொல்லப்போறாங்க. பெரிய சூட்சுமம்.
============================================
# முட்டாள் யார் என்றால் இறைவன் பற்றி தெரியாமலே இறைவன் இல்லை என்கிறானே, அவனே பெரிய முட்டாள்.
============================================
போகர் சித்தர் :- அப்பா, முட்டாள் யார் என்றால் இறைவன் பற்றி தெரியாமலே இறைவன் இல்லை என்கிறானே, அவனே பெரிய முட்டாள்.
================================================
# இறைவன் யார் என்று தெரியாமலே பின் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னானே, அவன் அதைவிட முட்டாள்.
=================================================
போகர் சித்தர் :- அவை மட்டுமில்லாமல் இறைவன் யார் என்று தெரியாமலே பின் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னானே? அவன் அதைவிட முட்டாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (போச்சு. அடுத்து போட்டாங்க. (1) இறைவன் இல்லைன்னு சொல்றவன் முட்டாளாம். (2) இறைவனை பற்றி தெரியாமலே, இறைவன் இருக்கிறான் என்று ஒருத்தன் சொல்றான் பாருங்க, அவன் அதைவிட பெரிய முட்டாளாம்.)
போகர் சித்தர் :- எதை என்று அறிய, எதை புரிந்து கொண்டு, எதை தெரிந்து கொண்டு இறைவன் இருக்கின்றான், இறைவன் இல்லாதவன் என்று நீங்கள் முடிவெடுத்து எவ்வாறு நியாயம்? அப்பா, நியாயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு ஒண்ணுமே தெரியல. தெரியாமல் எப்படி இறைவன் இருக்கிறான், இல்லைன்னு சொல்றீங்க? சொல்லுங்க?
போகர் சித்தர் :- எது என்று அறிய ஒருவன் பணக்காரன் என்கிறார்கள், ஒருவன் ஏழை என்கிறார்கள். இவர்கள் எல்லாம் நிச்சயம் பின் எது என்று அறிய இறைவன் தானே படைத்தான். ஆனால் மற்றொருவன் இவை பாவம், புண்ணியமே என்கின்றார்கள். ஆனால் எப்படி, அப்பா? பாவம், புண்ணியம் எது என்று அறிய இறைவனிடத்தில் தேங்கி நிற்கின்றது. அப்பா, பின் எப்படி, அப்பா?
அடியவர் :- ஒருத்தன் பணக்காரன்றோ, ஒருத்தன் ஏழைன்றோ? இதை வச்சு பாவம், புண்ணியம்ன்றோம்? இது எல்லாம் இறைவன்ட்ட தேங்கி இருக்குன்றாங்க.
===================================
# பொய் :- பணக்காரராக இருந்துவிட்டால் அவன் புண்ணியவான்.
===================================
போகர் சித்தர் :- எவை என்று அறிய பணக்காரராக இருந்துவிட்டால் அவன் புண்ணியவான் என்று சொல்லிவிடுவார்கள். இதுவும் பொய்யே.
========================================
# மேடையில் அமர்ந்திருந்த துறவிகள் பாவக்காரர்களா ?
========================================
போகர் சித்தர் :- இவன் பின் சிலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் இவன் பாவக்காரன் என்று இதோ . இவையெல்லாம் எவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கின்றார்களே? இவர்கள் பாவக்காரர்களா என்னப்பா? சொல்லுங்கள், பார்ப்போம்.
அடியவர் :- இது ஒரு தவறான ஒரு எண்ணம் நமக்குள்ள இருக்கு. பணம் இருக்கிறவன் ரொம்ப புண்ணியமா நினைச்சுட்டு இருக்கிறோம். இல்ல, சொல்றாங்க இல்லை. அதேபோல கஷ்டப்படுறவங்க பாவம்னு நினைச்சுட்டு இருக்கிறோம். இல்லை, அதுவும் இல்லைன்றாங்க.
போகர் சித்தர் :- பாவம், புண்ணியம் யாரிடத்தில் இருக்கின்றது? யாராவது சொல்லுங்கள், பார்ப்போம். நேரத்தை கொடுக்கின்றேன். யாங்கள் அதாவது நிறைய பின் மனிதர்கள் சொல்வார்கள். சித்தர்கள் மனிதருக்கு இறங்குவார்களா என்று? நிச்சயம் இறங்கித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் இறங்கி விடாமல் நிச்சயம் மனிதன், நிச்சயம் மனிதனே பின் தின்னி விடுவான். அப்படிப்பட்ட மனிதன் நிச்சயம் இறைபலத்தை அறிந்து கொள்ள முடியுமா? என்ன,
சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயமா அறிஞ்சுக்க முடியாது. அப்ப மனுஷனை, மனுஷனே சாப்பிடுற மனுஷன்ப்பா.
போகர் சித்தர் :- எது என்று அறிய இதனால் அழுக்குகளை நீக்கவே நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உருவெடுத்து இன்னும் பின் யாங்கள் வரவில்லை என்றால் எங்களை வைத்து நிச்சயம் பின் எதை செய்து பின் நடக்கவில்லை என்றால் சித்தர்களே இல்லை என்று சித்தன் பொய் என்றே சொல்லிவிடுவார்கள். அப்பா, அப்பப்பா.
======================================
# அனைத்தும் ஆதி ஈசனின் கட்டளைப்படியே இங்கு நடந்துகொண்டு உள்ளது.
======================================
போகர் சித்தர் :- அதனால் பின் எவ்வெவ் நேரத்தில் நிச்சயம் எவ் அவதாரத்தில் யாங்கள் வரவேண்டும் என்பவை எல்லாம் முன் உரைக்கப்பட்டதே. ஈசன் கட்டளைப்படியே தான் யாங்கள் வந்திருக்கின்றோம்.
===================================
# ஏன் விலங்கு பிறப்பு? ஏன் பணக்காரனாக? ஏன் ஏழையாக?
==================================
போகர் சித்தர் :- பின் ஏன் உங்களிடத்தில் எது என்று அறிய நிறை குறைகள் என்ன? நிறைக்குறைகள் எது என்று? எதை பயன்படுத்துவது? எதன் பயன்படுத்தாது? ஏன் மனிதப் பிறப்பு? நிச்சயம் ஏன் விலங்கு பிறப்பு? ஏன் ஒருவன் பின் பணக்காரனாக? ஏன் ஒருவன் ஏழையாக? நிச்சயம் அனைத்திற்கும் விடை உண்டு.
அடியவர் :- நிறைய ஏற்றத்தாழ்வு நம்ம பார்க்கிறோம்ல. சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் கேள்வி ஓடிட்டு இருக்குல்ல. எல்லாத்தையும் நான் சொல்றோம்ன்றாங்க. எல்லாம் ஏற்றத்தாழ்வு. எல்லாத்தையும்
போகர் சித்தர் :- ஒன்றை ஞானியவன் ராமலிங்க அடிகளோன். அவன் ஒன்றுமில்லாதது தான் சென்றான். அவன் பாவப்பட்டவனா?
அடியவர் :- அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- வள்ளலார் பற்றி சொல்றாரு. ஆமா, ஒன்றுமில்லாதது போனாருப்பா. அவன் பாவப்பட்டவனா?
போகர் சித்தர் :- எதை என்று புரிய இன்னும் இயேசு எவை என்று புரிய ஒன்றுமே தவறு செய்யவில்லை. நிச்சயம் எப்படி இறந்தான்? அவன் எவை என்று அறிய பாவப்பட்டவனா?
அடியவர் :- சிலுவையில் கல்லால் அடிச்சு கொன்னாங்க. அவரை அவர் பாவப்பட்டவரா?
========================================
# பாவம், புண்ணியம் எங்கு அமைக்கப்படுகின்றது?
# பாவம், புண்ணியம் எங்கு தீர்மானிக்கப்படுகின்றது?
========================================
போகர் சித்தர் :- எது என்று அறிய நிச்சயம் பாவம், புண்ணியம் எங்கு அமைக்கப்படுகின்றது? எங்கு தீர்மானிக்கப்படுகின்றது? என்றது எவருக்குமே தெரியவில்லை. இதுதான் ரகசியம். இவ் ரகசியத்தை உணர்ந்தால்தான் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியும். இவ் ரகசியத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியாது. கஷ்டங்கள் பட்டு பட்டு சாக வேண்டியதுதான் மனிதர்களே.
அடியவர் :- அடிப்படையில் இதை புரிஞ்சுக்கணும். அந்த பாவம், புண்ணியம் சூட்சமத்தை புரிஞ்சுக்கணும். நம்ம நினைச்சுட்டு இருக்கிறோம். தப்பு, நீங்க நினைச்சுட்டு இருக்கிறது எல்லாம் தப்புன்னு அப்படியே மாத்திட்டாங்க. எல்லாம்
போகர் சித்தர் :- நிச்சயம் பாவம், புண்ணியம் மனிதனிடத்தில் இருக்கின்றதா என்றால் இல்லையப்பா? இல்லை,
அடியவர் :- இல்லை.
போகர் சித்தர் :- யார் படைத்தவனோ, அவனிடத்தில் தான் இருக்கின்றது. நீங்கள் பின் என்ன செயல்கள் செய்கின்றீர்களோ, அதற்கு தகுந்தார் போல் சிறிது சிறிது கொடுப்பான். இதைப்பற்றி இன்னும் விவரிக்கின்றேன். பொறுத்திருங்கள். பின் அனைத்தும் சொல்லிவிட்டால் புரியாமல் போய்விடும் உங்களுக்கு.
அடியவர் :- நிறைய விஷயத்தை சொன்னா மூமென்ட்ல திணிக்க முடியாது. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சொல்றோம்னு இருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே யாருக்குள்ள இருக்குதாம்?
அடியவர் :- இறைவன்ட்ட இருக்கு. இறைவன் கிட்ட இருக்குது. பாவம், புண்ணியம் இதோ அவர் சொன்னாரு. பாரு, யாருக்குள்ள இருக்குது? எல்லாம் கிட்ட இறைவன் கிட்ட தான் பாவம், புண்ணியம் இருக்குது. இருக்குது. அப்ப அவர் என்னென்ன பண்றாரு? வந்து நம்மளுடைய செயல்களுக்கு ஏற்றார் போல கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறார். கொடுக்கிறார்.
போகர் சித்தர் :- இதைத்தன் எவை என்று புரிய? இதனால் அப்பா, எத்தனையோ அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இருக்கின்றார்கள். அப்பனே பின் இயலாதவர்கள் அவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்களா என்றால் நிச்சயம் இல்லை.
அடியவர் :- இல்லை, இயலாதவர்கள் பாவப்பட்டவர்கள் இல்லை. இல்லை,
==========================================
# மாற்றுத்திறனாளிகள் பாவப்பட்டவர்களா? நிச்சயம் இல்லை.
==========================================
போகர் சித்தர் :- எது என்று அறிய அறிய இப்பொழுதெல்லாம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்களே. அவர்கள் பாவப்பட்டவர்களா? நிச்சயம் இல்லை.
அடியவர் :- இல்லை,
சுவடி ஓதும் மைந்தன் :- யாருமே பாவப்பட்டவர் இல்லைன்றாரு. அப்ப யார்
அடியவர் :- புதுசா சொல்லப்போறாங்க?
போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய? ஞானிகள் என்ன? எது என்று எதுவும் இல்லாமல் நிச்சயம் வாழ்ந்தார்களே. அவர்கள் பாவப்பட்டவர்களா?
அடியவர் :- எவ்வளவு ஞானிகள்! நம்ம ஞானிகள் யாருமே பணக்காரங்களை எந்த ஞானியும் நம்ம பார்க்கவே இல்லையே. எல்லாருமே ஏழைகள். ஒன்னும் இல்லாமல் தான் வந்து இறைவன்ட்ட அடைஞ்சாங்க. அப்ப அவங்க எல்லாம் பாவப்பட்டவங்களா? எப்படி கேக்குறாங்க பாருங்க.
===============================
# சுவடி மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வரங்கள்.
===============================
போகர் சித்தர் :- இதைத்தன்னே நிச்சயம் தன்னில் கூட குழந்தைகள் அழையுங்கள். நிச்சயம் தன்னில் கூட என்ன வேண்டும் என்று கேளுங்கள். குழந்தைகள்,
அடியவர் :- அப்பா, குழந்தைகளா? ஆமா, ஆமா, உட்காரட்டும், உட்காரட்டும், உட்காரட்டும். நிக்க முடியுமா?
அடியவர் :- ( கருணையுடன் ) உங்களுக்கு என்ன வேணும்?
போகர் சித்தர் :- இவர்களுக்கு நல்லவர்கள் யார் என்றும் தெரியாது. கெட்டவர்கள் யார் என்றும் தெரியாது.
அடியவர் :- இவர்களுக்கு யாரு என்ன, நல்லவங்க யாருன்னு தெரியாது. கெட்டவங்க யாருன்னு தெரியாது.
போகர் சித்தர் :- எதை புரிய, நிச்சயம் இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணமே போதும்.
அடியவர் :- ஒரே எண்ணம் உங்களுக்கு, இறைவன் நம்மளை காப்பாத்துவாங்கன்றதை தவிர வேற எதுவும் உங்களுக்கு தெரியாது. நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாதுன்றாங்க.
போகர் சித்தர் :- எதை என்று அறிய அறிய இதைப்போல் ஆனாலும் மனிதன் வளர, வளர நிச்சயம் என்னென்னவோ எண்ணங்கள்.
அடியவர் :- ஆனா மனுஷன் வளர, வளர என்னென்னமோ எண்ணங்களை வந்து மனசுக்குள்ள புகுத்திட்டு இருக்கிறான். குழந்தைகளுக்கு
================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாடி வரங்கள் ஆரம்பம்
================================
போகர் சித்தர் :- என்ன வேண்டும் என்று கேளுங்கள்.
அடியவர் :- என்ன வேணும்னு கேளுப்பா? என்ன தேவை உங்களுக்கு? என்ன வேணும்பா? என்ன தேவை? என்ன தேவை? கடவுளை பார்த்தீங்கன்னா என்ன கேட்பீங்க? என்ன வேணும்னா என்ன?
மாற்றுத்திறனாளி குழந்தை :- படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பு. ( படிப்பு வேண்டும் )
போகர் சித்தர் :- எதை என்று அறிய சாதாரணமாய் வருபவை இவை.
அடியவர் :- இதெல்லாம் சாதாரணமா கொடுப்பாங்கப்பா. ஏதாவது கேளுன்றார். வேற ஏதாவது கேளு. பெரிதினும் பெரிது கேள்.
========================================
# கடவுளை பார்க்க வேண்டும்
========================================
மாற்றுத்திறனாளி குழந்தை :- கடவுள் பார்ப்பாங்க. அப்பா, அம்மா, கடவுளை பார்க்கணும்?
அடியவர் :- கடவுளை பார்க்கணுமாம்.
போகர் சித்தர் :- எவை என்று அறிய நிச்சயம் இவர்களுக்குப் போல் நிச்சயம் தன்னில் கூட கடவுளை நிச்சயம் பார்ப்பார்கள். கட உள் எவை என்று உள் நிச்சயம் தன்னில் கூட மனம் இருந்தால் கடவுள் உள்ளே.
சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் ஏதாவது கேளுங்க. கடவுள் ஒரு நிச்சயம் இறைவனை நீங்க பார்ப்பீங்க. அப்படிங்கிறார். கடவுள் அப்படிங்கிறாங்க.
=========================================
# உங்களை பின் வளர்ப்பவர்களே இறைவன்
=========================================
போகர் சித்தர் :- எதை என்று புரிய உங்களைப் பின் வளர்ப்பவர்களே இறைவன் என்று நீங்கள் பின் ஏற்றுக்கொள்ளலாம்.
அடியவர் :- சிவாய நம , நம்ம பெரிய சூட்சமம் உங்களை வளர்க்கிறாங்க இல்ல? இவங்களே உங்களுக்கு இறைவன். இறைவன் நமக்குள்ள தான்ப்பா இருக்காங்க. உங்க, அவங்க, உங்க இறைவன் எடுத்துக்கோங்க. ஆசிரியர்கள் தான் கடவுள். ஐயா,
அடியவர் :- அடுத்து அதுக்கு என்ன தேவையா? வேற என்ன தேவை சொல்லுங்க. என்ன வேணும்னு சொல்லுங்க. தேவை என்ன வேணும் கேளுப்பா. இறைவன்ட்ட கேளு. இறைவன் வாய்ப்பு கொடுக்குறாங்க. கேளுங்க,
மாற்றுத்திறனாளி குழந்தை காப்பாளர் :- அவங்ககிட்ட என்ன கேட்கணும்?
மாற்றுத்திறனாளி குழந்தை :- ( பேசமுடியாமல் - எதுவுமே தேவையில்லை. )
மாற்றுத்திறனாளி குழந்தை காப்பாளர் :- தேவையில்லை. எதுவுமே தேவையில்லை. அவருக்கு எதுவுமே தேவையில்லையாம்.
போகர் சித்தர் :- அப்பா, இறைத்தன். அப்பா, நிச்சயம் யாராவது இதுபோல் கேட்பார்களா? என்ன அப்பா, இப்பொழுது சிந்தியுங்கள். அப்பா,
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
போகர் சித்தர் :- நிச்சயம் இதுதான் மனிதனுடைய எண்ணங்கள். அப்பா, இதுதான் நிச்சயம். தன்னில் கூட இதைத்தான் இறைவன் எதிர்பார்க்கின்றான். ஆனால்
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பாளர் :- இவர்கள் எல்லாம் தேர்வு எழுதி இருக்காங்க. சார், அவங்களுக்கு தேர்வு எழுதுறதுக்கு நல்ல ஒரு அருள் கொடுக்கணுமா? அதுக்கு
போகர் சித்தர் :- எதை என்று புரிய, நிச்சயம் எதை என்று புரிய, பின் அருளும் வரும். பின் இவர்கள் எதை என்று புரிய அருளும் வரும்.
அடியவர் :- கொடுத்தாச்சு. அடுத்து கேளுங்க. எல்லா பேரும் கேளுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க.
அடியவர் :- ஏதாவது கடவுள் கிட்ட கேளுங்க. எப்படி சொல்லு? சொல்லு, நான் சொல்றேன். எப்படி
=======================================
# கம்ப்யூட்டர் வேலை உன்னை தேடி வரும்
=======================================
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பாளர் :- கம்ப்யூட்டர் வேலை போகணுமா? சார், அதுக்கு கடவுள் வந்து ஹெல்ப் பண்ணனுமா? கம்ப்யூட்டர் வேலை வேணுமா? கடவுள் ஹெல்ப் பண்ணனுமா?
போகர் சித்தர் :- இதைத்தன் அறிய உன்னை தேடி வரும். உன்னை தேடி வருமப்பா.
அடியவர் :- அது தானா வரும்? நீங்க பார்த்தீங்கன்னா, அருள் கொடுத்துட்டாங்க. அடுத்து நான் பேசுறேன். நீங்க பேசு. சொல்லு,
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பாளர் :- எல்லாம் பத்தாம் வகுப்புல எக்ஸாம்ல பாஸ் ஆகணுமாங்க. சார்,
அடியவர் :- எல்லா பேரும் டென்த் எக்ஸாம் பாஸ் ஆகணும்.
போகர் சித்தர் :- எவை என்று புரிய? இதை இறைவன் பார்த்துக் கொள்வான். கவலையை விட்டுவிடு.
அடியவர் :- கடவுள் உன்னை இறைவன் சரி பண்ணுவாருப்பா. அடுத்து சொல்லுவாங்களா? டீச்சர் சொல்லணுமா? இவங்க சொல்லுவாங்களா? டீச்சர் சொல்லுங்க. என்ன வேணும் கேளுங்க.
====================================
# பிறர் நலம் வேண்டிய , உயர் உள்ளம்
====================================
மாற்றுத்திறனாளி குழந்தை :- எங்க மேடம் இருக்காங்க. சார், அவங்களோட ஹெல்ப் ஹெல்த் வந்து நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, பிரேயர் பண்ணிக்கோங்க.
அடியவர்:- அருமை, அருமை.
போகர் சித்தர் :- இவைத்தன் பின் அதாவது மற்றவருக்காக வேண்டுகின்றாளே …. எத்தனை பேர்? இவைத்தன் பின் நிச்சயம் தன்னில் கூட எவையெல்லாம்? நிச்சயம் தன்னில் கூட வயது. நிச்சயம் எவ்வளவோ ஆனாலும், நிச்சயம் பின் நீங்கள் எல்லாம் நிச்சயம் எதை எதை வேண்டிக்கொள்ள ஆனாலும், இதன் தன்மை வயது குறைவே. இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
அடியவர் :- கற்றுக்கொள்ளனும். அதான் பிறர் நல்லா இருக்கேன்னு நினைக்கிறாங்க. அப்பா, அப்பா, உங்களுக்கு கொடுத்தாங்க. அப்பா, உங்களுக்குள்ளே.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பாளர் :- அப்பா, அம்மாவுக்கு உடம்பு எல்லாம் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறாங்க.
போகர் சித்தர் :- எதைத்தன் அறிய? நிச்சயம் பின் இறைவன் பார்த்துக் கொள்வான். நலமாக.
=====================================
# அகத்திய மாமுனிவரின் வாக்குகள் அனைவரும் படிக்க, பள்ளிகளில் பாட திடமாக வேண்டும்.
=====================================
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- அகத்தியர் ஐயாவுடைய அருள்வாக்கு எல்லா குழந்தைகளும், அதாவது ஆறாவதிலிருந்து எல்லா குழந்தைகளும் எப்படி தமிழ், இங்கிலீஷ், மேக்ஸின் படிக்கிறாங்களோ, அதே மாதிரி இது ஒரு சப்ஜெக்ட்டாவே எல்லா குழந்தைகளும் படிக்கிற மாதிரி ஒரு சப்ஜெக்ட்டா ஒரு வரணும். இது வந்து அரசு அரசாங்கமே. இது வந்து நான்
போகர் சித்தர் :- எதை என்று புரிய தாயே, நிச்சயம் அகத்தியன் அனைத்தும் தற்பொழுது, அதாவது சிறிது நேரத்திலே தூவக்குவான். அப்பொழுது புரியும். நிச்சயம் அனைத்தும் அப்பொழுது கேட்டுக்கொள். அகத்தியனிடம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பொறுங்கம்மா.
அடியவர் :- கொஞ்ச நேரம் வந்து அகத்தியர் சொல்லுவாரு.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- ஏன்னா எல்லா குழந்தைகளுக்கும் இந்த அகத்தியருடைய அருள்வாக்கு ஒவ்வொரு விஷயமும் எல்லாம் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு போய் சேரணும்.
=========================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய உத்தரவு
==========================================
போகர் சித்தர் :- இதைத்தன் பின் எவை என்று இவர்களைக் காக்க, நிச்சயம் அவர்களிடத்தில் நிச்சயம் ஏதாவது கொடுத்து அனுப்புங்கள்.
கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் :- ( மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய பல அடியவர்கள் கருணையுடன் முன் வந்தனர் )
போகர் சித்தர் :- இவைத்தன் ஏன் இப்படி?
போகர் சித்தர் :- எதை என்று புரிய? அனைத்தும் இப்பிறப்பு எதற்கு என்றெல்லாம் பின் அகத்தியன் நிச்சயம் எடுத்துரைப்பான் இன்றே.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பா ஏன் இது மாதிரி எல்லாம் பிறக்குறாங்க? ஏன் இது பண்றாங்கன்னு சொல்லிட்டு அகத்தியர் கொஞ்ச நேரத்துல சொல்லப்போறாங்க.
அடியவர் :- நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய.
========================================
# ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல்
========================================
அடியவர் :- அவங்க ஹோம் பேர் என்னம்மா?
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல், சம்பந்தனூர். (திருவண்ணாமலை) எஸ்.கே.பி இன்ஜினியரிங் காலேஜ் பேக் சைடுல இருக்குங்க சார். ஸ்கூல் இங்க வந்து 150 காது கேளாத மாணவர்கள் இருக்காங்க. 100 மாணவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இருக்காங்கங்க சார். மொத்தம் 250 மாணவர்கள் இருக்காங்க.
அடியவர் :- 250 மாணவர்கள் இருக்காங்க. 250 மாணவர்கள் இருக்கிறாங்க. உங்களால இயன்றதை மனசு வந்து செய்யுங்க. இவங்க எல்லாம் சரியாகனும். இறைவன் அருளால மனதார பிரார்த்திச்சுட்டு, காணிக்கையை கொடுத்துட்டு போங்க. இவங்களுக்காக அப்படியே இது நடக்கிற வரைக்கும் ஓம் நமச்சிவாய எல்லாரும் சொல்லுங்க.
===============================
# கூட்டுப்பிரார்த்தனை குழு அடியவர்களுக்கு பாராட்டுக்கள் - சிறப்பான சேவை செய்தனர்.
=================================
மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும் அம்மை அடியவர் :- தேங்க்யூ சார். தேங்க்யூ பார் யுவர் கிரேட் ஹெல்ப் சார். நாங்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நாங்க பார்த்ததுல. இப்பதான் எங்க பசங்களையும் கூட்டிட்டு வந்தோம். எங்களுக்கு நல்ல வெல்கமிங் எல்லாமே இருந்தது. ஃபுட் எல்லாமே நல்லா அரேஞ்ச் பண்ணிருந்தாங்க. பசங்களை உட்கார வைக்கிறதுல இருந்து எங்களை இன்வைட் பண்ணதுல இருந்து எல்லாமே ஹாப்பியா இருந்ததுங்க சார். தேங்க்யூ சார்.
===========================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி அளித்தவர்களுக்கு அண்ணாமலையார் புண்ணியங்களை திருப்பி கொடுப்பார்கள்
===========================================
போகர் சித்தர் :- இதை என்று அறிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின் கொடுத்ததெல்லாம் உங்களுக்கே திருப்பிக் கொடுப்பான் அண்ணாமலையான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க வந்து என்ன ஏதோ நம்ம கொடுத்துட்டோம்னு நினைக்காதீங்க. திரும்பவும் கொடுப்பார் இறைவன்.
போகர் சித்தர் :- நிச்சயம் பணமாக அல்ல, புண்ணியத்தை.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன கொடுப்பாராம். பணத்தை கொடுக்க மாட்டாரு, புண்ணியத்தை கொடுப்பார். அம்மா, ஏதாவது சொல்றோமா?
==============================================
# புண்ணியங்கள் வழங்கி விட்டால் பணம் எளிதாக வந்துவிடும்.
==============================================
போகர் சித்தர் :- இதை எவை என்று புரிய, இப்புண்ணியத்தை நிச்சயம் வழங்கி, எது என்று புரிய, வழங்கி விட்டால் பணம் எளிதாக வந்துவிடும். பணம் கேட்டால், புண்ணியம் பின் எது என்று கொடுக்கவில்லை என்றால் என்ன லாபம்?
அடியவர் :- என்ன தெரியும்? என்ன கொடுக்கணும்? எங்களுக்குத்தான் தெரியும். புண்ணியத்தை கொடுத்தா எளிதா பணம் வந்துரும்ப்பா. அதான் புண்ணியத்தை நாங்க கொடுக்கிறோம்ன்றாங்க.
==============================================
# மற்றவர்கள் குறை தீர்ப்பதே, பின் உங்கள் குறை தீர்ப்பதற்கு சமம்.
==============================================
போகர் சித்தர் :- அவரவருக்கு ஒரு ஒரு குறை ஆனாலும், இக்குறை பின் நிச்சயம் மற்றவர்களை குறை தீர்ப்பதே பின் உங்களுக்கும் குறை தீர்ப்பதற்கு சமம்.
அடியவர் :- மற்றவர் குறையிலே தீர்க்கணும். நீங்க தீர்த்தீங்கன்னா, உங்களோட குறை நீங்களே தீர்த்துக்கிட்டேன். தீர்த்துக்கிட்ட மாதிரி, தீர்த்துக்கிட்ட மாதிரி. இறைவன் புரியுங்களா? இறைவன் தீர்த்துருவார். அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல. இறைவன் தீர்த்துருவார். அவ்வளவுதான்.
போகர் சித்தர் :- இதனால் எவை என்று புரிய, எவரும் குறைவான்கள் இல்லை. இங்கு
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப யாரும் குறை இல்லை. குறை இல்லை. குறை ஒன்றுமில்லை.
போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எவை என்று அறிய. இதனால்தான் சித்தர்களைப் பற்றி இன்னும் எவை என்று அறிய மக்களுக்கு அறிந்தும். இதனால் பின் நல்லவன் யார், தீயவன் யார், எவரை அமைப்பது, எவரை பின் சாதிக்க வைப்பது, எவரை எது என்று கூட எவ்விடத்தில் எடுக்கலாம், எவ்விடத்தில் பிறக்க வைக்கலாம் என்பதை எல்லாம் நிச்சயம் பின் அகத்தியன் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். வருவார் அப்பா, வருவார்.
============================
# முதலில் தன்னைப் பற்றி நினைக்க வேண்டும். தன்னைத் தானே உணர வேண்டும்.
============================
போகர் சித்தர் :- இதனால் மனிதன் நினைப்பது எது என்று அறிய, முதலில் தன்னைப் பற்றி நினைக்க வேண்டும். தன்னைத் தானே உணர வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதலில் மனிதன் யாரை நினைக்கணும்?
அடியவர் :- உன்னை பத்தி நினை. அடுத்தவங்களை பத்தி பேசாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவங்களை பத்தி பேசாத.
அடியவர் :- உன்னை நீங்க உணருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னை நீங்க உணரு. அடுத்தவனை பத்தி பேசினாலும் இங்க பிரயோஜனம் இல்லை. இல்லை. நம்ம யார்? நம்ம எதுக்காக வந்தோம்? நம்ம எதுக்கு இப்படி? எதுக்கு இந்த லைஃப் இருக்குதுன்னு சொல்லிட்டு நினைக்கணும்.
போகர் சித்தர் :- எதை என்று புரிய, இப்படி நிச்சயம் நினைப்பவர்களுக்கு மட்டுமே இறைவன் இன்னும் அறிவை கொடுத்து பிழைத்துக் கொள்ளடா என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட அனைத்தும் தந்துவிடுவான்.
அடியவர் :- யாரெல்லாம் இந்த மாதிரி நினைக்கிறாங்களோ, மேம்பட்ட எண்ணங்கள், இதெல்லாம் மேம்பட்ட எண்ணங்கள். ஆமா, இதை யாருக்கு நினைக்கிறாங்களோ, அப்ப இறைவன் வந்து அவங்களுக்கு இன்னும் கொடுத்து மேல மேல உயர்த்துவாங்க.
போகர் சித்தர் :- நிச்சயம் அறிந்தும், அனைவரும் இறைவன் பிள்ளையாக இருப்பதால், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக நீங்கள் அனைவரும் பின் இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று தீர்மானிக்கலாம்?
அடியவர் :- எல்லாருமே இறைவன் பிள்ளைகள் தான். அப்புறம் நீங்க யாருப்பா? எதுக்கு டிசைட் பண்றீங்க? நீங்க முடிவெடுக்கிறீங்கன்ற நிலைமை கெட்டவன்னு.
போகர் சித்தர் :- பின் அதாவது ஒரு தாய் தன் பிள்ளைக்கு பால் கொடுப்பது போலே, இறைவன் நிச்சயம் தன் பிள்ளைகளுக்கு வாழ காற்றைத் தருகின்றான் அல்லவா? அப்பொழுது பாருங்கள், எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள்
======================================
# காற்றில் விஷ வாயுவை கலக்க, வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது
======================================
போகர் சித்தர் :- எதை என்று அறிய அறிய, இங்கு பிழைப்பதற்கு நிச்சயம் காற்று அவசியமாகின்றது. நிச்சயம் பின் இவ்வாறு மனிதன் திருந்தவில்லை என்றால், காற்றினுள் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் மனிதன் நிச்சயம் அதில் கூட விஷ வாயுவை கலந்து, பின் அதாவது மக்கள் மக்கள் தொகை அதிகரித்து விடுகின்றது. இன்னும் பணிகளுக்கான வேலைகள் நடந்து, நிச்சயம் தன்னில் கூட. இதனால் மனிதனே அதைத் தன் பின் அக்காற்றினில் சில தீய மாசுக்கள் விட்டு, பின் நிச்சயம் ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மனிதன் மனிதனையே அழிப்பதற்காக, அதனால் உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.
போகர் சித்தர் :- எதை என்று புரிய, அனைத்தும் இங்கு கொடுப்பதே இறைவன். எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு பின் எச் சக்திகள் இருக்கின்றது. இங்கு
==========================================
# திருவண்ணாமலை கிழக்கு கோபுர ரகசியங்கள் - ஏன் ஞானிகளை சித்தர்கள் கூட்டுப் பிரார்தனைக்கு அழைத்து வந்தார்கள்.
==========================================
போகர் சித்தர் :- இவை தன் புரிய, நிச்சயம் தன்னில் கூட எவர் எவருக்கு என்ன தேவை என்றெல்லாம். அதனால்தான் நிச்சயம் பின் அண்ணாமலையிலே, நிச்சயம் பல பரிசுத்த ஆன்மாக்கள் இன்னும் வலம் வந்து கொண்டே இருக்கின்றது. அவை மட்டுமில்லாமல், இவர் போன்ற பின் சாதுக்கள் நிச்சயம் தன்னில் கூட இறந்தும் போயிட்டனர். அவ் ஆன்மாக்கள் எல்லாம் பின் இறைவனிடத்தில் வேண்டி, யாங்கள்தான் ஒன்றுமில்லாமல் போனோம். நிச்சயம் பின் வருகின்ற ஆன்மாவுக்கு, பின் ஏதாவது கொடு கொடு என்று, பின் அனுதினமும், பின் கிழக்கு கோபுரத்தில் நின்று, அவ் ஆன்மாக்கள் இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கின்றது. அதனால்தான் யாங்கள் வந்து உண்மை தெரிவித்து, இவர்களை அழைத்து வந்தோம் இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- சிவாயநம, இவங்க மாதிரி நிறைய சாதுக்கள், நிறைய சாதுக்கள் தெரியாம போய்க்கிறாங்க, இறந்துடுறாங்க. வந்து அவங்க ஆன்மாக்களும் கிழக்கு கோபுர வாசல்ல இறைவன்ட்ட முறையிட்டு கொண்டிருக்குதாம். அப்பா, யாங்கதான் தெரியாம என்ன இது பண்ணிட்டாங்க? இவங்களுக்கு ஏதாவது பண்ணு, நீங்க வந்து இறைவன்ட்ட முறையிட்டு இருக்காங்களாம். இறைவன் கையில முறையிட்டு நிக்குதாம்.
=====================================
# திருவண்ணாமலையில் - சாதுக்கள் தீய கர்மாக்களை எடுத்து செல்லும் கோடீஸ்வரர்கள். இவ் கோடீஸ்வரர்கள் தன்னிடம் உள்ள புண்ணியங்களை சாதுக்களுக்கு கொடுத்து , கீழே சென்று கொண்டிருக்கின்றனர்.
=====================================
போகர் சித்தர் :- ஏதோ மனிதன் சொல்லிப் போடுவான், இவர்களுக்கு எவை என்று அறிய. ஏதோ இவர்களுக்கு கவலை இங்கு அமர்ந்து விட்டார்கள் என்று இன்னொருவன் சொல்வான், இவன் திருடன் என்று இன்னொரு சொல்வான், இவனுக்கு அனைத்தும் கிடைக்கின்றது என்று. இதோ இன்னொரு சொல்வான், புகை பிடிப்பான் என்று. அடடா, முட்டாள்களே, மனித முட்டாள்களே, நிச்சயம் தன்னில் கூட இவர்களுக்கு என்ன வலி இருக்கின்றது, யாங்கள் உணர்வோம்.
அடியவர் :- அப்ப சாதுக்களை நீங்க தவறாக சொல்லாதீங்கப்பா, இதுல ஒருத்தர் வந்து தண்ணி அடிக்கிறேன்றாரு, ஒருத்தர் சிகரெட் பிடிப்பேன்றாரு, ஒருத்தர் அதுன்றாரு, இதுன்றாரு. இதெல்லாம் நீங்க, இது உங்க வேலை கிடையாதுன்றாரு, சொல்றாரு. சாதுக்களை யாரும் சொல்லாதீங்க. ஆனால் இவருடைய வழி என்னன்னு எங்களுக்கு தெரியும். சித்தர்களுக்கு. சொல்றாரு, சித்தர்களுக்கு தெரியும், உங்களுடைய வழி என்ன என்பது சித்தர்களுக்கு தெரியும்.
போகர் சித்தர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மனிதன் யோசிப்பது தவறானவை. நிச்சயம் ஞானிகள் யோசிப்பது சரியானது.
போகர் சித்தர் :- நிச்சயம் இன்னும் இன்னும் மனிதர்கள், நிச்சயம் அனுதினமும், பின் அதாவது கோடி கோடியாக வைத்திருப்பார்கள். ஆனால் இவர்களைப் பார்த்து, நிச்சயம் தன்னில் கூட கேடு கெட்டவர்கள் என்று உரைப்பதும், நிச்சயம் காரி துப்புவதும், கிரிவலத்தில் யான் பார்த்திருக்கின்றேனடா.
அடியவர் :- சாமி, பெரிய இவங்க பத்தி சொல்றாங்க. பெரிய கோடீஸ்வரங்க, பணம் இருக்கிறவங்க, இவங்கள பார்த்து கேடு கெட்டவங்கன்னு காரி துப்புறாங்களாம். என்னடா, இவங்க எல்லாம் வந்துட்டாங்க, இப்படி வந்துட்டாங்கன்னா, இவங்க எல்லாம் சொல்லிட்டு, கோடீஸ்வரங்க, கோடீஸ்வரங்க.
======================================
# அதி கவனம் - எச்சரிக்கை - சாதுக்களை யாரும் பழிக்காதீர்கள்.
# உங்கள் புண்ணியங்கள் அவர்களுக்கு போய்விடும்.
# அவர்கள் பாவங்கள் உங்களிடம் வந்துவிடும்.
======================================
போகர் சித்தர் :- இதை ஏன், எதற்காக? நிச்சயம் இவையும் இறைவனை எவை என்று இவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட இயக்கி சில சில பாவ வினைகள் இவரிடத்தில் இருக்கும் அல்லவா? இதைத்தன் பின் அவனிடத்தில், பின் அவனிடத்தில் போய் சேர்ந்து, அவன் கீழ் நோக்கி வருகின்றான். இவர்கள் மேல் நோக்கி போகின்றார்கள். அவ்வளவுதான். நல்லோரை எப்பொழுதும் பழிக்கக்கூடாது. பின் அதாவது இவ்வாறு, பின் வேதனைப்பட்டவர்களும் கூட எப்பொழுதும் பழிக்கக்கூடாது சொல்லிவிட்டேன்.
அடியவர் :- பெரிய லெசன் சொல்லி இருக்காங்க. நல்லோர்களை யாரும் பழிக்காதீங்க. சாதுக்களை, நல்லோர்களை பழிக்காதீங்க. பழிச்சீங்க அப்படின்னா, உங்களிடம் இருக்கக்கூடிய புண்ணிய பலன் அவர்களுக்கு சென்று, அவர்களிடம் இருக்கக்கூடிய தீய கர்மா உங்களுக்கு வந்துரும். தயவுசெய்து பழிக்காதீர்கள். யாரையும் நல்லோர்களை பழிக்காதீர்கள்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment