அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :-https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h08m07s
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2)
===============================
# கலியுகத்தின் ஆரம்பத்தில் , காசி மாநகரில் நடந்த உயர் பக்தி கதை.
===============================
போகர் சித்தர் :- அறிந்தும் இவைத்தன் யாவும் நிறைந்த மார்க்கத்திலே எதை என்று தெரிவிக்க இப்பொழுது பின் அறிந்தும் இவையன் யாவையும் கூட பின் ஈசன் அருளாலே உரைக்கப் போகின்றேன்.
போகர் சித்தர் :- முதலில், அதாவது காசிதன் பின் காசிதன் மாநகரிலே அறிந்தும் எவையென்று அனைவரும் அதாவது எதை என்றும் கூட பல பல பல வழியிலும் கூட பின் பல கோடி பின் அறிந்தும் கூட மக்கள் எனக்கு ஏதும் தேவையில்லை. காசிநாதனே, அறிந்தும் உன்னை நோக்கி, உன்னை பின் நோக்கியே யாங்கள் தவம் செய்யப் போகின்றோம்.
போகர் சித்தர் :-இதனால் நீயே துணை என்றெல்லாம் பல கோடி மக்கள் பின் அதாவது அனைத்து அறிந்தும் பின் இப்புவி தன்னில் உள்ள அனைவருமே நிச்சயம் தன்னில் கூட இவைத்தன் எப்பொழுது என்றால் கலியுகத்தின் ஆரம்பமே.
போகர் சித்தர் :-அறிந்தும் இவைத்தன் அனைவரும் ஏனென்றால் கலியுகத்தின் பின் முதல் பகுதி அறிந்தும் எவை என்று கூற பின் கலியுகத்திலே இப்படித்தான் நடக்கும் என்பவை எல்லாம் பின் இவ்வாறு பின் இறை பலங்கள் பெற்றோர் உணர்ந்தனர்.
போகர் சித்தர் :- இதனால் அனைவருமே பின் காசி தன்னில் பின் ஏறி அனைவரும் தவம் புரிந்தனர். ஆனாலும் அறிந்தும் வயது ஏறிக்கொண்டே ஆனாலும் பசி பின் பிணி இன்னும் கூட என்னென்னவோ ஆனாலும் பின் நமச்சிவாயா , நமச்சிவாயா என்றெல்லாம் ஆனாலும் ஈசன் மனம் இறங்கவே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (“போகர் பெருமான் கூறியது என்னவென்றால்—கலியுகம் தொடங்கிய தருணத்திலேயே மனிதர்கள் பசி, நோய், மூப்பு போன்ற துன்பங்களைத் தாண்டி மிகக் கடினமாக வாழ வேண்டிய நிலை வரும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தார்கள். இந்த உண்மை இறையாசி, இறை அனுக்ரஹம் பெற்ற சிலருக்கே தெளிவாகப் புரிந்தது. ‘இவ்வாறு கலியுகத்தில் வாழ முடியாது; காசியில் இருக்கும் ஈசனைச் சரணடைவதே வழி’ என்று எண்ணி, ஞானம் பெற்றவர்கள் அனைவரும் காசிக்கு வந்து ‘நமச்சிவாய’ என இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களின் பிரார்த்தனைகளுக்கு ஈசன் உடனே மனம் இறங்கவில்லை.)
=====================================
# நமச்சிவாயன் வரட்டும். இறந்தாலும் பரவாயில்லை என்ற உயர் பக்தி.
=====================================
போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய இன்னும் பின் பல மக்களை காப்பாற்ற அறிந்தும் இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் எவை என்று ஆனாலும் மீண்டும் நிச்சயம் தன்னில் கூட, பின் ஆனாலும் பின் இத்தனை பேர்கள் வருங்காலத்தில் நிச்சயம் நல்வாழ்வை வாழப்போகின்றார். இதனால் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
இனியும் கூட நிச்சயம் தன்னில் கூட நீர் இல்லாமல் நிச்சயம் குணம் எவை என்று புரிய இன்னும் பின் எதுவுமே தேவையில்லாமல் இறந்தாலும் இறக்கலாம். நமச்சிவாயனை நினைத்து வரட்டும் என்றெல்லாம் இன்னும் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- (“அவர்களுக்கு எந்தப் பொருளும் தேவையில்லை; இறைவன் ஒருவரே போதும் என்ற நிலை. ‘நாம் சாக வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, பிறர் நலமாக இருக்கட்டும்; தர்மம் நிலைத்திருக்கட்டும்’ என்று எண்ணி, பலர் பிறருக்காகவே தவம் செய்தார்கள்.)
போகர் சித்தர் :- இதைத்தன் அறிவித்து எவை என்று அறிய இன்னும் ஈசனும் மனம் இறங்கவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் ஈசன் மனசு இறங்கல. அப்பொழுதுதான் வந்து மனசு இறங்கல.
==================================
# இறந்து விடுவோமா என்ற எண்ணங்கள்.
==================================
போகர் சித்தர் :- அறிந்தும் வயதாகிக் கொண்டே கொண்டே ஆனார் ஒருவர் ஒருவர் பார்த்தனர். வயதாகிக் கொண்டே போகின்றது. இறந்து விடுவோமா? ஈசனை காண்போமா? என்று எண்ணி
சுவடி ஓதும் மைந்தன் :- (“அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ‘ஈசன் வரமாட்டார்… நமக்கு வயது ஆகிறது… இறப்பு நெருங்குகிறது… எதையும் செய்ய முடியாத நிலை’ என்று மனம் உடைந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இறைவன் தரிசனம் கிடைக்காது, வழியும் இல்லை என்ற ஏக்கத்தில் அனைவரும் இருந்தார்கள்.)
===================================
# அன்னை பார்வதி தேவி, ஆதி ஈசனிடம் உரையாடல்.
===================================
போகர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் பின் பார்வதி தேவியும் அறிந்தும் அழகாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இவ்வாறாக உன்னை நினைத்து நினைத்தே இருக்கின்றார்களே. பரமேஸ்வரனே, அறிந்தும் ஏன் மனம் இறங்கவில்லை என்று? ஆனாலும் பின் பார்வதி தேவிக்கும், பின் நிச்சயம் தன்னில் கூட பின் செப்பிவிட்டாலும் இவள் தன் பின் அவரிகளிடம் செப்பிவிடுவாள் என்று சொல்லவே (இல்லை ஈசனார்) எவை எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- (“பார்வதி அம்மை கேட்டார்: ‘இவ்வளவு மக்கள் அழைத்து வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்; மற்றவர்களுக்காக நல்லது நினைக்கிறார்கள். ஆனால் நீ ஏன் மனம் இறக்கவில்லை?’ என்று. சிவன் அமைதியாக இருந்தார். ஏன் அமைதியாக இருந்தார்? அவர் அதை வெளியில் சொல்லிவிடுவார்; அதனால் ஈசனின் எண்ணத்தை யாரிடமும் பகிராமல் மறைத்து வைத்தார்.)
போகர் சித்தர் :- இன்னும் எவை என்று புரிய இன்னும் நோக்கி நோக்கி எதை என்று புரிய ஆனாலும் இன்னும் பின் பரவாயில்லை என்று வயது ஆக ஆக நடுங்கியது. நிச்சயம் கை கை கால்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர்கள் ‘நமச்சிவாய’ என்று ஜபிக்கும்போது, வயது காரணமாக கை‑கால் நடுக்கம் அதிகரித்து, உடல் முழுவதும் பலவீனம் வந்தது. ஜபம் தொடர்ந்தபடியே அவர்கள் நடுங்கிக் கொண்டே இருந்தார்கள்.)
===============================
# உச்சம் அடைந்த தவம். ஈசன் வரப்போவதில்லை என்று அனைவரும் முடிவெடுத்தனர்
===============================
போகர் சித்தர் :- ஆனாலும் எவை என்று புரிய ஆனாலும் அனைவரும் முடிவெடுத்தனர். நிச்சயம் ஈசன் வரப்போவதில்லை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லாரும் ஈசன் வரப்போறதில்லை என்று எல்லோரும் முடிவு எடுத்துட்டாங்க.)
போகர் சித்தர் :- இவைத்தன் எப்பொழுது இதனால் நிச்சயம் கலியுகத்தின் ஆரம்பம் தான். நிச்சயம் சாகத்தான் போகின்றோம். அனைவரும் தயாராக இருங்கள் என்று கூட்டத்தோடு கூட்டமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் சொல்றாங்க. அவ்வளவுதான் கலியுகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஈசனும் வரப்போறதில்லை. எல்லாரும் ரெடியா இருந்துக்கோங்க. சாகறதுக்கு என்றார் வந்து…
=====================================
# ஆதி ஈசனார் , நெருப்பு பிழம்பாக காசியில் வந்து இறங்கினார்.
=====================================
போகர் சித்தர் :- இதை நிச்சயம் தன்னில் கூட நெருப்பு பிழம்புடனே அறிந்தும் பின் வந்தான் ஈசனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (“அவர்கள் ‘நமச்சிவாய’ என ஜபித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரென பெரும் நெருப்பு பிழம்புடன் ஈசன் இறங்கினார்.)
போகர் சித்தர் :- அறிந்தும் இவ் நெருப்பு பிழம்பை பின் குருநாதர் அகத்தியனே எடுத்துரைப்பார் சற்று.
போகர் சித்தர் :- அறிந்தும் ஈசன் பின் வந்து வந்துட்டு நிச்சயம் தன்னில் கூட அனைவருமே மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. இன்னும் பின் சத்தமிட நிச்சயம் தன்னில் கூட நமச்சிவாயா !!!!! பிழைத்துக் கொண்டோம், பிழைத்துக் கொண்டோம் என்றெல்லாம்
சுவடி ஓதும் மைந்தன் :- (“ஈசன் இறங்கியதும், அனைவரும் ஒன்றாக ‘நமச்சிவாயா, நமச்சிவாயா’ என்று முழங்கினர். ‘கடைசி நேரத்தில் வந்துட்டாரே!’ என்ற பரவசத்துடன் ஒரே சத்தமாக ஜபித்துக் கொண்டிருந்தார்கள்.)
=================================
# ஆதி ஈசன் :- என்ன வேண்டும் ?
=================================
போகர் சித்தர் :- அறிந்தும் ஒரே ஒரு சொல் என்ன வேண்டும் என்றுதான்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே ஒரு இதுதான். ஈசன் சொன்னார், ஒரே கேள்வி உங்களுக்கெல்லாம் என்ன வேணும்? ஆனா ஒரே ஒரு வார்த்தை
போகர் சித்தர் :- அறிந்தும் பின் தாயே, தந்தையே என்றெல்லாம் இன்னும் கூட பின் அழுகை அறிந்தும் எவை என்று பின் அதாவது உலகத்தை படைத்தீர் அறிந்து எதை என்று புரிய. அனைத்தும் பின் நீர் உணர்ந்தீர்.
ஆனாலும் அறிந்தும் கலியுகத்தின் தொடக்கமே இது. அனைவரும் அழியத்தான் போகின்றார்கள். நிச்சயம் அறிந்தும் கூட அவர்களுக்காவது யாங்கள் நிச்சயம் பின் வரும் வரும். பின் அறிந்தும் கூட பின் எப்படி ஏது என்றெல்லாம்
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தின் தொடக்கம். எல்லோரும் அடுத்தடுத்து அழியத்தான் போகின்றார்கள் மக்கள். நாங்க மக்களுக்கு என்ன செய்யணும்?
போகர் சித்தர் :- அறிந்தும் எவை என்று புரிய வயதும் ஆகிவிட்டதே. எங்களுக்கு எதை என்று புரிய ஏதாவது செய், ஈசனே என்று
======================
# ஆதி ஈசனார் வாக்கு
======================
போகர் சித்தர் :- அறிந்தும் அனைவரையுமே நிச்சயம் பாசத்தை கண்டேன். அறிந்தும் கூட இதுதான் பக்தி.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுடைய பாசத்தை நான் பார்த்தேன். உங்களோட பாசத்தை ரொம்ப நாளா நான் பார்த்தேன். என்ன அடிச்சாலும் நீங்க தாங்கினீங்க. இதுதான் பக்தி. இதுதான் பக்தி.
================================
# ஆதி ஈசனார் பிறருக்காகவே பக்தி. இதுதான் அப்பனே. பின் உண்மை அன்பு.
================================
போகர் சித்தர் :- அறிந்தும் பிறருக்காகவே பக்தி. இதுதான் அப்பனே. பின் உண்மை அன்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர்கள் தங்களுக்காக அல்ல; எதிர்காலத்தில் கலியுகத்தில் வாழப் போகும் மக்களின் நன்மைக்காகவே தவம் செய்தார்கள். இளமையில் தொடங்கி, வயது ஆகி கை‑கால் நடுங்கும் வரையிலும்—நாற்பது, ஐம்பது ஆண்டுகள்—பிறர் நலனுக்காக ஈசனை நோக்கி ஜெபித்தார்கள். ‘பிறருக்காக செய்யப்படும் இதுவே உண்மையான பக்தி.)
போகர் சித்தர் :- எதை என்று புரிய ஆனால் கலியுகத்தில் மாறிவிட்டதே. தன் சுயநலத்திற்காக பக்தி. இவையெல்லாம் பின் பிறருக்காக பக்தியே. ஈசன் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்காக ஏற்றுக்கொள்ள போகின்றானா என்று சற்று சிந்தியுங்கள். மக்களே,
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (பாருங்கள், இது எவ்வளவு பெரிய உண்மை! அவர்கள் தங்களுக்காக எதையும் வேண்டவில்லை; பிறர் நலனுக்காகவே ஆண்டுகள் கணக்கில் தவம் செய்தார்கள். ஈசன் சொன்னார்: ‘நீங்கள் உங்களுக்காக கேட்டிருந்தால் நான் உடனே வந்திருப்பேனா? பிறருக்காக வணங்கி வேண்டியதால் தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.’ ஆனா நீங்க என்ன நினைக்கிறீங்களாம்? நினைச்ச உடனே நீங்க கும்பிட்ட உடனே தான் நான் எனக்கு ஏதாவது வேணும். எனக்காக கேட்டா வந்துருவாங்களா? நினைச்சு பாருங்கள். )
போகர் சித்தர் :- இதனால்தான் சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட மனிதர்களை குருடன் என்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால்தான் சித்தர்கள் மனிதர்களை குருடன், குருடன் என்றார் வந்து…
போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட இக்குருடை வைத்துக் கொண்டு பின் நிச்சயம் பணம் வேண்டும் என்றார்கள். நிச்சயம் தொழில் வேண்டும் என்றார்கள். நிச்சயம் இன்னும் கூட பின் திருமணம் இன்னும் என்னென்னவோ. ஆனால் குருடனுக்கு இவையெல்லாம் கொடுத்தால் ஒழுங்காக பாதுகாத்துக் கொள்வானா என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- (உண்மை தெரியாமல் தன் தேவைகளுக்காக—பணம், பொருள், தொழில், திருமணம், குழந்தை—எல்லாம் கேட்பவன் ‘குருடன்’. உண்மை அறிவில்லாமல் கேட்டால், கிடைத்தாலும் அதைச் சரியாக நடத்த முடியாது. அதனால் உண்மை அறியாதவன் குருடன்.)
போகர் சித்தர் :- அப்பனே, நீங்களே சொல்லுங்கள். அப்பனே, இப்பொழுது அனைவரும் பின் எதை எதையோ கேட்கின்றீர்கள் அப்பனே. பின் நிச்சயம் அவனிடத்தில் கொடுத்துவிட்டால், அவனும் அழிந்து மற்றவர்களும் அழிப்பானப்பா. இதனால்தான் நாங்கள் கொடுப்பதே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்குவம் இல்லாமல் குருடனுக்கு கொடுத்தா என்ன ஆகும்? அவனும் அழிஞ்சு பிறரையும் அழிச்சிருவான். மற்றவர்களையும் அழிச்சிடுவான்ப்பா. அதனால நாங்க கொடுக்க மாட்டோம். குருடனுக்கு வந்து கேட்டா நாங்க கொடுக்க மாட்டோம்.
====================================
# அப்பனே,அப்பனே , அப்பனே - என்று அழைக்கும் ரகசியங்கள்
=====================================
போகர் சித்தர் :- அப்பனே, ஆனாலும் எதை என்று புரிய, எவை என்று அறிய அகத்தியனும். அப்பனே, அப்பனே என்றெல்லாம் நிச்சயம் பின் அதாவது பாவத்தில் போய்விடாதடா, போய்விடாதடா என்று பரிதாபம் என்றெல்லாம் எண்ணி.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பனே, அப்பனே என்று அகத்தியர் அழைப்பது எதற்காக? வேணாம்பா, பாவத்துல விழுந்துராத , பாவத்துல விழுந்துராத என்று சொல்கின்றார்.
போகர் சித்தர் :- ஆனாலும் மீண்டும் பின் வருவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் அங்கிருந்து தொடங்குறேன்ட்டாரு. எங்கிருந்து? அந்த ஞானியிலிருந்து தொடங்கினார்.
=====================================
# ஆதி ஈசனார் அளித்த - இளமை வரம்
=====================================
போகர் சித்தர் :- தருகின்றேன், நிச்சயம் உங்களுக்கும் வயதாகிவிட்டது. ஆனாலும் என்னையே நினைத்து, நினைத்து, ஆனாலும் பின் இவ்வுலகத்தில் ஒவ்வொரு மூலைக்கும் நீங்கள் செல்லுங்கள். நிச்சயம் பின் எங்கு சென்றால் உங்களுக்கு இளமை கிடைக்கின்றதோ, அங்கே ஒரு ஒரு பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அங்கேயே ஆலயம் வரும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஈசன் அனைவரையும் ஒவ்வொரு திசையிலும் செல்லச் சொன்னார். அவர் சென்ற இடங்களில் இளமைத் தெம்பு மீண்டும் எங்கு தோன்றியதோ ; அங்கே ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டு, அந்தத் திசைகளில் தெய்வீக சக்தி நிலைபெற்றது.)
போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் முதலிலே ஒரு அடியான் நிச்சயம் தன்னில் கூட அண்ணாமலைக்கு இங்கே எது என்று பற்றுக் கொண்டு, நிச்சயம் தன்னில் கூட. இது போலே மற்ற ஆலயங்களிலும் சென்று சென்று இளமையாகிவிட்டான். இன்னும் இளமையோடயே இருக்கின்றான். மனிதன் நிச்சயம் காத்துக் கொண்டிருக்கின்றான். அவர்களே, இன்னும் கூட
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (சிவாய நம. அவர் சொல்வது என்னவென்றால்: ஒரு இடத்துக்கு ஒருவர் சென்றால், அங்கே அவருக்கு இளமை திரும்பும் சக்தி இருக்கும். அந்த இடத்தில் ஒரு கோயிலும் தோன்றும். அங்கேயே மனிதர்களை காத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஒரு அடியார் திருவண்ணாமலை வந்தபோது, அவருக்கும் இளமை திரும்பியது. அந்த இடத்தில் ஒரு கோயில் உருவானது. அவர் இன்னும் அங்கேயே இருந்து மக்களை காத்துக் கொண்டிருக்கிறார்.)
போகர் சித்தர் :- எது என்று புரிய, நிச்சயம் அகத்தியன் இன்று வரவழைப்பான் அவனை.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (சிவாய நம. அந்த அப்பா எவ்வளவு பெரிய உண்மை பாருங்க. கலியுகத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம். அப்போ உருவான ஒரு மனிதர் வந்து இப்போ தெய்வமாகி, இப்போ இங்க இருக்கிறார். திருவண்ணாமலை யாரோ இப்படி வராங்க இல்ல? இதன் மூலமா யாரோ வந்து இது இப்படி இருக்கு இருக்கிறாங்க. யாரோ வந்து ஆனா ஒருத்தர் அது வந்து தெரியாது சொல்லி இருக்காங்க. யாரும் தெரியாது. வரவழைச்சு, அந்த ஞானி ஒருத்தர் இங்க வந்து இருப்பாரு. சிவாய நம.)
போகர் சித்தர் :- இவைதன் பின் அவன் வேண்டிக் கொண்டால் தான் ஈசனும் தருவான் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (அந்த அடியார் சொன்னால்தான் ஈசன் அருள் வழங்குவார். “உனக்காக காசியில் தவம் செய்தேன்” என்று அவர் கூறியபோது, ஈசன் அதற்கேற்ப வரம் அளித்தார். இப்போது அவர் மீண்டும் ஈசனை அழைக்க வேண்டும். அவர் அழைத்தால், நம்மை காக்க ஈசன் இறங்குவார் )
===========================================
# திருவண்ணாமலையில் என்றும் இளமையுடன் வாழும் ஞானி “குப்தன்” திருவடிகள் போற்றி.
===========================================
போகர் சித்தர் :- இவைதன் எவை என்று கூற, “குப்தனே”, இவன் நாமம் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய பெயரும் என்ன? “குப்தன்”. குப்தன், குப்தன், குப்தன்.
=============================================
# பஞ்சபூத ஸ்தலங்கள், அறுபடை வீடுகளில் , மதுரையில் - இன்றும் சிரஞ்சீவியாக இருக்கும் ஞானியர்கள் ரகசியங்கள்
=============================================
போகர் சித்தர் :- இதை எவை என்று அறிந்து கூட, இதனால் கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட இதேபோல் பல அடியர்களும் கூட ஆங்காங்கே நிச்சயம் மதுரை தன்னில் கூட. இன்னும் கூட எவை என்று அறுபடை வீட்டில் கூட இவ்வாறத்தான் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (திருவண்ணாமலை இங்கே ஒருவர் வந்ததாக சொல்கிறோம் அல்லவா? அதாவது “குப்தன்” என்ற ஞானி அவர் போலவே பல ஞானிகள் மதுரையில் உள்ள அறுபடை வீடுகள், பஞ்சபூத ஸ்தலங்கள், இன்னும் பல தெய்வீக கோயில்கள்—இவை அனைத்தும் ஆதி ஈசன் அருளால் காசியில் இருந்து வந்த ஞானிகள் உருவாக்கிய புண்ணிய ஸ்தலங்கள். அவர்கள் இன்றும் இளமை பெற்றுத் சிரஞ்சீவிகளாக இருந்து, இன்றும் உலகை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.)
===================================
# திருவண்ணாமலைக்கு இன்னும் கூட பின் சிறப்பு என்றால், இவ் “குப்தனே”.
# ஞானி “குப்தன்” திருவடிகள் போற்றி.
===================================
போகர் சித்தர் :- ஆனாலும் இவன் குப்தனே, ஏன் எதற்கு இவன் அண்ணாமலைக்கு இன்னும் கூட பின் சிறப்பு என்றால், இவன் குப்தனே எது என்று அறிய அறிய அனைவரும் பாவம் ஒருவருக்கெல்லாம் ஈசா பிச்சை கொடுத்து அனுப்பி விடு என்று. நல்லவனோ கெட்டவனோ பார்க்காதே. நீ.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (இத் திருவண்ணாமலைக்கு என்ன சிறப்பு தெரியுமா? அந்த குப்தர் சொல்வது இதுதான்: “மனுஷன் யாராக இருந்தாலும்—பாவி, திருடன், நல்லவன், கெட்டவன்—அதை நீ பிரித்துப் பார்க்க வேண்டாம் ஈசா!!!. எல்லோருக்கும் கொடு, அருளை பகிர்ந்து கொடு.” நல்லவனாக இருந்தாலும், கெட்டவனாக இருந்தாலும், அனைவரையும் சமமாக ஏற்றுக் கொண்டு அருளை வழங்க வேண்டும் என்பதே குப்தர் ஈசனாரிடம் வாய்த்த கோரிக்கை. திருவண்ணாமலையின் சிறப்பு என்னவென்றால், அங்கு அருள் எல்லோருக்கும் சமமாக வழங்கப்படுகிறது; மனிதன் நல்லவன், கெட்டவன் என்று பிரிக்காமல், அனைவரையும் ஏற்றுக் கொண்டு அருளை பகிர வேண்டும் என்பதே அந்த குப்தர் கூறும் முக்கிய உண்மை.)
போகர் சித்தர் :- எது என்று அறிய இன்னும் சொல்லப்போனால், திருடன் கூட இருக்கலாம். பின் கொடுத்து விடு, ஈசா பார்த்துக்கொள்வோம்.
போகர் சித்தர் :- இதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் பின் எவை என்று கூற, அறிந்து கூட சத்தியத்தை வாங்கிக்கொண்டான் , நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (ஆனா அந்த குப்தர் என்ன சொல்கிறார் தெரியுமா? “சத்தியமாகச் சொல்கிறேன்—நல்லவனுக்கே மட்டும் செய்யாதே. எல்லோருக்கும் செய். திருடன் இருந்தாலும் செய், கெட்டவன் இருந்தாலும் செய். எந்த குணத்தையும் பார்த்து பிரிக்காதே. ஆராய வேண்டாம். அருளை எல்லோருக்கும் சமமாக கொடு.” அதனால்தான் திருவண்ணாமலைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.)
போகர் சித்தர் :- அறிந்தும் எதை என்று அறிய, சத்தியம் செய்து. ஆனால் நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் பின் ஈசனே சத்தியம் செய்துவிட்டான். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் மிகுந்த சந்தோஷத்தில், ஈசனே, இவ்வாறு நிச்சயம் சத்தியம் செய்துவிட்டாய். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு வருவதெல்லாம் நீ நல்லவனை ஆக்குவாய். எனக்கு மிக்க சந்தோஷம், எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (அப்ப குப்தன் என்ன சொல்கிறாராம் தெரியுமா? “இறைவா நீயே ஆசீர்வாதம் கொடுத்தாயே; அப்படியிருக்க, கெட்டவன் என்று யாரையும் நீ விட்டு விடுவாயா? என்ன. “அவரையும் நல்லவனாக மாற்றுவேன்” என்று ஈசன் செய்த அந்த சத்தியத்தால் குப்தன் அவர் மனம் மகிழ்ந்தார். அதனால், ஒருவர் கெட்டவனாக இருந்தாலும், திருடன் இருந்தாலும், திருவண்ணாமலை இங்கே வந்தால் என்ன நடக்கும்? அவரை திருத்தி, நல்லவனாக மாற்றுவார். அவரின் குணத்தை சீர்செய்து உயர்த்துவார். இதன் அர்த்தம் புரிகிறதா, ஐயா?)
போகர் சித்தர் :- இவைதன் இதனால்தான் பின் அண்ணாமலை இன்னும் கூட அறிந்தும் கூட பல விஷயங்கள் இருக்கின்றது. இங்கு எதை என்று புரிய, இதனால் நிச்சயம் பின் அழகாக, பின் அகத்தியனும், அதாவது குரு எவை என்று புரிய, இன்னும் உரைப்பதாக புது புது விஷயங்கள். அவையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் துன்பத்தை வெற்றிக் கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அண்ணாமலையில் இப்படிப் பல ரகசியங்கள் இருக்கின்றன. அகத்தியரும் சொல்வார்: “இந்த உண்மைகளை நீங்கள் கேட்டறிந்தால், உங்கள் துன்பங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும்”).
===============================================
# என் குழந்தை முருகனை, இயேசு என்று சொல்வேன்.
# என் குழந்தை மணிகண்டனை, புத்தன் என்று சொல்வேன்.
# என் குழந்தை கணபதியை, நபிகள் என்று சொல்வேன்.
===============================================
போகர் சித்தர் :- இன்னும் சொல்லப்போனால், நிச்சயம் தன்னில் கூட, இங்கு நிச்சயம் வெவ்வேறு தெய்வங்கள் என்று சொல்கின்றார்களே. எதை என்று அறிய யான் சொல்வேன்? என் குழந்தை முருகனை இயேசு என்று சொல்வேன். அறிந்தும் எவை என்று கூற, என் குழந்தை பின் மணிகண்டனை, நிச்சயம் தன்னில் கூட, பின் புத்தன் என்று சொல்வேன். நிச்சயம் தன்னில் கூட, என் குழந்தை கணபதியை, எதை என்று அறிய அறிய, நபிகள் என்று சொல்வேன். நிச்சயம் ஏதடா மக்கள் எவை என்று புரிந்து கொள்ள, மூடனாகியே இருக்கின்றீர்கள். பின் என்னவென்று இதனால், நிச்சயம் மக்கள் போராட்டமே, நிச்சயம் இதற்குள்ளே, பின் அடங்கி, மக்களே அடித்துக் கொள்வார்கள் வருங்காலத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- (சிவாய நம. போகப்பெருமான் சொல்வது என்னவென்றால், முருகப்பெருமானை “ஜீசஸ்” என்று கூறுகிறார். அதேபோல், மணிகண்டனை புத்தன் என்று சொல்கிறார். விநாயகப் பெருமானை நபிகள் என்றும், என்றும் சொல்கிறார் இவை எல்லாம் மனிதனுக்கு புரியாத ஆழமான உண்மைகள். புரியாததால் தான் மனிதன் குழப்பம் அடைகிறான், சில நேரங்களில் மூடநம்பிக்கையிலும் விழுகிறான். வருங்காலத்தில், இந்த உண்மைகளைப் புரியாமல், மதம்–சாதி வேறுபாடு பார்த்து, ஒருவரை ஒருவர் காயப்படுத்தும் நிலை வரக்கூடும். அதற்காகவே இவை சொல்லப்படுகின்றன— மனிதன் பிரிவை அல்ல, ஒன்றுபட்ட உண்மையை பார்க்க வேண்டும்.)
போகர் சித்தர் :- இத்தனை தெய்வங்கள், இத்தனை தெய்வங்கள் என்று சொல்கின்றீர்களே, எதற்காக என்றெல்லாம், நிச்சயம் மனிதனுக்கு சந்தேகம் வருவது எல்லாம், நாங்கள் சித்தர்கள் வருங்காலத்தில் எடுத்துரைப்போம்,
சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்கள் எல்லாம் சந்தேகங்கள் கேட்கிறீர்கள்— “இத்தனை தெய்வங்கள் எதற்காக இருக்கின்றன? ஏன் இவ்வளவு வடிவங்கள்?” என்று. இதற்கெல்லாம் ஒரு தெளிவான பதில் இருக்கிறது. அந்த பதிலைச் சொன்னால்தான், இந்த சந்தேகங்களும் குழப்பங்களும் எல்லாம் நீங்கும்.)
========================================
# உண்மை தெரிந்தவன் ஆன்மீகவாதி. உண்மை தெரியாதவன் மாந்திரீகவாதி.
========================================
போகர் சித்தர் :- அப்பனே, இவைத்தன் தெரிந்து கொண்டால் தான் நன்று. இல்லையென்றால், அறிந்து கூட, அனைவருமே ஆன்மீகவாதி, மாந்திரீகவாதி, ஆகிவிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாவிட்டால் என்ன ஆகும்? ஆன்மீகவாதியாக இருக்க வேண்டியவன், அறிவு இல்லாததால் மாந்திரீகவாதியாக மாறிவிடுவான். நல்லவன் கெட்டவனாக மாறுவது போல, அவரின் இயல்பே மாற்றம் அடைந்து விடும். அய்யா, எல்லாம் தெரிந்த பிறகுதான் ஆன்மீகவாதி ஆக வேண்டுமா? ஆன்மீக அறிவு இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அவன் மாந்திரீகவாதியாகவே மாறிவிடுவான்— அதுவே உண்மை.)
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete