அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h44m07s
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4
போகர் சித்தர் :- நிச்சயம் உண்மையை உணர ஒரு நாள் நன்று. நிச்சயம் எதை என்று புரிய. அதாவது பின் இரு குழந்தைகளையும் பற்றியும் பாடு. அறிந்தும் கூட, பின் பின் கணபதியும் வரட்டும் சொல்கின்றேன்.
( கணபதி பாடல் பாட சொன்னார்கள்)
பாடகர் :- (அழகாக விநாயகப் பெருமானை அழைக்க பாடல் பாட ஆரம்பித்தார்.)
( விநாயகனே வினை தீர்ப்பவனே… )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h44m07s
(இவ் பாடல் படும்போது பல சாதுக்கள் , சிவனடியார்கள் வருகை தந்தார்கள்)
பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் )
போகர் சித்தர் :- இவை தன் இயக்க பின், அதாவது உறங்கிக் கொண்டிருக்கும் ஈசனையும் பார்வதியும் கைலாயத்திலிருந்து பின் தட்டி எழுப்பினானே. பின் இவை தன் பின் பாடலை ( பாடு)
பாடகர் :- (கயிலை நாயகனை அழைக்க “சொற்றுணை வேதியன்” பதிகம் பாட ஆரம்பித்தார். இவ் அருமையான பாடலின் நேரலை)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h48m00s
பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் )
பாடகர் :- (கயிலை நாயகனை அழைக்க “வேற்றாகி விண்ணாகி” பதிகம் பாட ஆரம்பித்தார். இவ் அருமையான பாடலின் நேரலை)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h52m33s
பாடகர் :- ( பாடி முடித்த பின்னர் )
=========================================
# ஞானியின் அருள்கள் பெற்றுத் தரும் சித்தர்கள் - ரகசியங்கள்
# அவசியம் கூட்டுப் பிரார்த்தனைக்கு அனைவரும் வருக.
=========================================
போகர் சித்தர் :- இதைத்தான் உருவாக்க பல வழியிலும் கூட ஞானியின் அருள்கள் இப்படித்தான் பெற்றுத் தர முடியுமே நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக ஒருவருக்கொருவர் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் பின் கூர்ந்து, பின் நிச்சயம் கொடுத்தாலும், நிச்சயம் தன்னில் கூட அவர் வாழ்க்கை எப்பொழுதும் எது என்று அறிய அறிய சிறிது காலமே பின்பு கஷ்டங்கள் பின் நேரிடும்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட யாங்கள் சொல்வதைக் கேட்டால், நிச்சயம் ஞானிகள் எல்லாம் மறைமுகமாக அழைத்து வந்து உங்களுக்கு ஆசிகள் கொடுப்போம், கவலைகளை நீக்குவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ஒருவருக்கு , ஒரு வாக்கு கூறினால், அந்த வாக்கு அவருக்காகவே மட்டுமே செயல்படும். அவர் மனம் சுத்தமாக இருந்தால், அந்த வாக்கின் பலனாலும் அவர் நலமாக இருப்பார். ஆனால் மனம் சுத்தம் இல்லை என்றால், காலப்போக்கில் கஷ்டங்கள் வரலாம் அதனால் நாங்கள் சொல்வது என்னவென்றால்— நீங்கள் எங்கள் பேச்சை கேட்டால், நாங்கள் ஞானிகள் அனைவரும் மறைமுகமாக உங்களை ஒன்றிணைத்து, உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவோம் )
================================
# திருவண்ணாமலை ஆலயம் உருவாக காரணமாக இருந்த காசியின் இருந்து , திருவண்ணாமலை வந்த “குப்தன்” என்ற ஞானியும் இவ்வாக்கு படிக்கும் நேரத்தில் அங்கு உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்.
=================================
போகர் சித்தர் :- எது என்று புரிய அப்பனே “குப்தனும்” உண்டு கொண்டிருக்கின்றான். இப்பொழுது
சுவடி ஓதும் மைந்தன் :- (ஆதி ஈசன் அருளால் திருவண்ணாமலை ஆலயம் உருவாக காரணமாக இருந்த காசியின் இருந்து , திருவண்ணாமலை வந்த “குப்தன்” என்ற ஞானியும் இவ்வாக்கு படிக்கும் நேரத்தில் , உணவு அருந்தி கொண்டு இருக்கிறார் என்று போகர் சித்தர் உரைக்கின்றார்கள். அது யார் என்று நமக்கு தெரியாது. காசியில் எல்லாருக்கும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைச்சாரு பாருங்க , அவரும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து, இப்ப மத்திய உணவு சாப்பிட்டுட்டு இருக்காங்க.)
போகர் சித்தர் :- இவைத்தன் பின் உங்களுக்காக, பின் நிச்சயம் தன்னில் கூட அங்கே அனைவரையும் பின் உண்ட பிறகு வரச் சொல்லுங்கள். சிவபுராணத்தை நீங்கள் சொல்லித் தாருங்கள். பின் எவை என்று கூட அவர்களையும் பாடச் சொல்லுங்கள்.
=====================================
# அங்கு வந்த ஞானிகளில் ஒருவர் மாந்தீரிகங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்றவர். அவரும் அப்போது, இவ் வாக்கு படிக்கும் நேரத்தில் மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால் அது யார் என்று அடியவர்களுக்கு தெரியாது.
======================================
போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட அதில் தன் ஒருவன் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய. நிச்சயம் உங்களுக்காகவும் பாடி, நிச்சயம் சில கவலைகளையும் கூட சில சில பின் மாந்திரீகங்களோட அடியோடு ஒதுங்கிவிடும். மேலே உள்ளவனும் கூட ஒரு ஞானி இவன் அமர்ந்திருக்கின்றான். நிச்சயம் அதை யான் தெரியப்படுத்த மாட்டேன். இப்பொழுது
சுவடி ஓதும் மைந்தன் :- மேலேயும் இந்த கூட்டத்துல ஒரு ஞானி இருக்கிறார். அதை நானு சொல்ல மாட்டேன். அதே மாதிரி கீழ குப்தர் சாப்பிட்டுட்டு இருக்காரு, அவர் வரவும் உங்களுக்கு சில வினைகள் என்னென்ன இருக்குதோ, நான் மாத்தி தரேன்.
================================
# மனம் தூய்மையாக இருந்தால் மட்டுமே ஞானிகள் . இறைவனை உணர இயலும்.
=================================
போகர் சித்தர் :- இவைத்தன் அப்பப்பா , பின் அதாவது ஞானிகள் யார் என்பதை எல்லாம் நீங்கள் நிச்சயம் உணரப்போவதில்லை. ஏனென்றால் மனம் அழுக்குகள் தங்கி இருக்க, நிச்சயம் தன்னில் கூட இறைவனை நேரில் கண்டாலும், நிச்சயம் நீங்கள் உணரப்போவதில்லை. இதுதான் உண்மை.
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் நேரில் வந்தாலும், அவரை நீங்கள் உணர முடியாது. ஏன் உணர முடியாது என்றால், மனத்தில் உள்ள அழுக்குகள் மிக அதிகம். எண்ணங்கள் தூய்மையற்றவை; மனம் சுத்தமில்லாதது. அப்படியிருக்க, இறைவன் பக்கத்தில் நின்றாலும், ‘யார் வந்திருக்கிறார்?’ என்று கேட்கும் நிலை ஏற்படும். அதனால் இறைவனை உணர்வது யாரால்? மனம் சுத்தமாக இருக்கும் ஒருவரால்தான். மனம் தூய்மையாக இருக்க வேண்டும்; எதையும் எதிர்பார்க்கக்கூடாது.)
========================================
# கூட்டுப்பிரார்தனைக்கு வந்தவர்களுக்கு
# சித்தர்கள் யாங்கள் வட்டியும் முதலுமாக புண்ணியத்தை கொடுப்போம்.
====================================
போகர் சித்தர் :- அப்பப்பா அறிந்தும் இதைத்தன் நிச்சயம் வரவழைத்தோம். நிச்சயம் தன்னில் கூட பின் வந்ததற்கு, நிச்சயம் யாங்கள் வட்டியும் முதலுமாக கொடுப்போம். கவலைகள் வேண்டாம்.
போகர் சித்தர் :- இங்கே எதை வட்டியும் முதலுமாக கொடுப்போம் என்றால், சொல்லுங்கள். யான் காத்திருக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் மீண்டும் நிறுத்திவிட்டார். நான் எதையும் வட்டி – முதலுடன் கொடுப்பேன் என்று சொன்னவுடன், அதற்கான செலவு குறித்த கேள்வி எழுந்தது. அதைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள் என்று அவர் கூறினார். ‘நான் காத்திருக்கிறேன்’ என்று போகர் தெரிவித்தார். )
அடியவர்கள் :- ( சிந்தனை , அமைதி ……………..)
போகர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் புரிந்தும் கூட, அப்பப்பா புண்ணியத்தை கொடுத்துவிட்டால், நிச்சயம் தன்னில் கூட பின் அப்புண்ணியத்தின் மூலம் இறைவனையும் காணலாம். உங்களை நீங்களும் வெல்லலாம்.
அடியவர் :- புண்ணியம்
சுவடி ஓதும் மைந்தன் :- (வட்டியும் முதலும் சொன்னது புண்ணியம். புண்ணியத்தை கொஞ்சம் கொடுத்துட்டா, நீங்களும் பொழைச்சுக்கலாம். இறைவனையும் இதன் மூலம் காணலாம்.)
போகர் சித்தர் :- இறைவன் நாமத்தையும் நிச்சயம் பரிபூரணமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் நாமத்தையும் நீங்கள் பரிபூரணமாக உரைக்கலாம்.)
போகர் சித்தர் :- இதைத்தான் இப்படித்தான் உருவாக்கி, உருவாக்கி இன்னும் பல திருத்தலங்கள் நிச்சயம் அழிந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் அவையெல்லாம் உயிர் பெற்று, உயிரோடு தான் இருக்கின்றது. அங்கு ஞானிகள் அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் நிச்சயம் அங்கெல்லாம் உங்களால் செல்ல முடியவில்லையே. வருங்காலத்தில் சென்று ஆசிகள் பெற்று, நிச்சயம் நீடோடி வாழ்க. அழைத்துச் செல்கின்றோம் யாங்கள்.
=====================================
# மாந்திரீகத்தை அகற்றும் ரகசிய திருத்தலங்கள்.
====================================
போகர் சித்தர் :- அப்பனே அறிந்தும் புரிந்தும், ஏனென்றால் இவ்வுலகம் எதை என்று கூற மனிதன் மனிதனுக்கு மாந்திரீகத்தை கற்றுக் கொடுத்துவிட்டான். அதை அகற்றவே சில திருத்தலங்கள் இருக்கின்றது. அழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால் இதைத்தன் இவர்களால் செல்ல முடியவில்லையே. இவை மாந்திரீகங்கள் இருந்து இவனிடத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- (சில கோயில்கள் மாந்திரீகத்திற்காகவே சிவன் ஆலயங்கள் உள்ளன அந்த புனித இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாந்திரீக நம்பிக்கைகளில் சிக்கிக் கொண்டதாலேயே அந்தத் தலங்கள் அழிந்து வரும் நிலை உருவாகியுள்ளது. அங்கிருந்து ‘வாருங்கள், வாருங்கள்’ என்று அழைத்தாலும், நீங்கள் செல்ல முடியாமல் நிற்கிறீர்கள்.)
போகர் சித்தர் :- நிச்சயம் இவையெல்லாம் மக்களுக்கு தெளிவுபடுத்தி, நிச்சயம் அங்கும் சென்று அறிந்து கூட உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.
====================================
# இறைவனின் குழந்தைகள் - புத்தர்,இயேசு,நபிகள்.
# இவ் தேசத்தை காக்க வந்தார்கள்.
====================================
போகர் சித்தர் :- அப்பா, இதைத்தன் பின் அதாவது இறைவன் எது என்று கூற, இறைவனின் குழந்தைகள் இவ் தேசத்தை காக்க வந்தார்கள். நிச்சயம் அவர்களைப் பற்றி புத்தன் ஆனாலும் சரி, இயேசு ஆனாலும் சரி, நிச்சயம் தன்னில் எவையும் நபிகளும் நிச்சயம் சிறிது சிறிது எடுத்து ஓதுக. அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? இறைவனோட குழந்தைகள் உலகத்தை காக்க வந்தார்கள். யாரு? புத்தன் ஆனாலும் சரி, இயேசுநாதர் ஆனாலும் சரி, நபிகள் நாயகம் ஆனாலும் சரி.
போகர் சித்தர் :- இவைத்தன் இவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று பின் அவ் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வணங்குவர்களை கொன்றுவிட்டார் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இவர்கள் எல்லாம் பொய் என்று சொல்லிட்டு, வணங்குறவர்களே கொன்று விட்டாங்க. வணங்குறவர்களே கொன்றுவிட்டார்கள்.
போகர் சித்தர் :- ஆனால் மனிதன் இப்பொழுது பின் அதாவது இதுதான் பெரியது, இதுதான் பெரியது என்று முட்டாள் மனிதன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவையெல்லாம் வருங்காலத்தில் பின் நிச்சயம் ஒழியுமடா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மதத்தின் பெயர்ல இங்க வந்து மனுஷன் நடிச்சுட்டு இருக்கிறான். ஆனால் உண்மையான வந்தவங்க எல்லாம் என்ன பண்ணிட்டாங்க? கொன்னுட்டாங்க.
================================
# (பைபிள்) விவிலியத்தை எடு. சிறிது படி.
================================
போகர் சித்தர் :- அதனால் இத்தேசத்திற்கு பல உரைகள் எடுத்துரைத்தனர். அவர்களைப் பற்றியும் கூட நிச்சயம் அப்பா விவிலியத்தை எடு. சிறிது படி. அப்பா, அறிந்தும் எது என்று கூற பைத்தியக்காரன் என்று அகத்தியன் புகழ்கின்றானே. அவனைத்தான் சொன்னேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பைபிள் எடுங்க, ஐயா. உலக நன்மைக்காக வந்தவர்களை அவர்களையே வணங்குவதாகச் சொன்னவர்கள் கொன்றுவிட்டார்கள்; இது பொய்யான பக்தியின் விளைவு. எல்லா மதங்களும் ஒன்றே. புத்தர், இயேசு, நபிகள் இவர்கள் இறைவனின் பிள்ளைகள். நியாயம் மனதில் இருக்க வேண்டும்.)
========================================
உலகில் முதன் முறையாக சிவபுராண பாராயணத்தில் , அன்பு சித்தர் ஏசுநாதர் அவர்கள் அருளிய திரு விவிலியம் ( பைபிள் ) படிக்கப்பட்டது. அதற்கு விளக்கமும் சுவடி ஓதும் மைந்தன் அளித்தார்கள்.
========================================
=======================
# திரு விவிலியம் ( பைபிள் ) சங்கீதம் 1:1-3 TAOVBSI
https://www.bible.com/bible/339/PSA.1.1-3
======================
பாடகர் :- “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையான விளக்கம் அளித்தார்கள். அவ் விளக்கத்தை பின்வரும் நேரலை பதிவில் கேளுங்கள்.)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h10m24s
போகர் சித்தர் :- இதைத்தான் இப்படித்தான் அங்கும் இங்கும் சென்று மாந்திரீகத்தில் இவர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயம் முதலில் இவை எடுத்து வந்து தா, நிச்சயம் அது ஓடட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால, உங்களுக்கெல்லாம் துன்மார்க்கர்கள் பேச்சு கேட்டு கேட்டு, நீங்க என்ன ஆயிடுச்சாம்? ஏதோ ஒன்னு, உங்களை மாந்தீரீகம் வந்து தெரியாம கஷ்டத்துல எல்லாமே அடித்துவிட்டது. அதனால இந்த கோயிலோட விபூதி பிரசாதம் எடுத்துட்டு வந்து முதல்ல கொடுப்பா, மாந்தீரீகம் அது இவர்களை விட்டு ஓடட்டும்.)
போகர் சித்தர் :- இவைத்தன் அடுத்து நபிகளுக்கும் பின் வாய்ப்பு அளிப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நபிகள் நாயகத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். குர்ஆன் அடுத்து. குர்ஆன் தமிழ்ல எடுங்க.
போகர் சித்தர் :- இவைத்தன் அப்பா இறைவனுடைய குழந்தைகள் இவ்வுலகத்திற்கு மக்களுக்கு பின் ஞானத்தை வழங்கி, நிச்சயம் தூய பின் சிந்தனையை வளர்த்து, நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் அதாவது தீய சக்தியில் அழிக்கத்தான் இறைவன் அனுப்பினான். அப்பா ஆனாலும் மனிதன் சத்தியத்தை தர்மத்தை கடைபிடிக்கவே இல்லை, கொன்றுவிட்டார்கள். பாவம். ஆனாலும் மீண்டும் இவர்கள் எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக மக்களை இன்னும் அடிப்பார்கள் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இன்னும் இவங்க எல்லாம் இறந்தாலும் கூட என்ன பண்றாங்க? மறைமுகமாக மக்களை இன்னும் அடிப்பார்கள். அதனாலதான் எல்லா சமய மொழி புத்தகங்களையும் கூட்டு பிரார்த்தனை இங்க வைக்க சொன்னார்.)
சுவடி ஓதும் மைந்தன் :- (ஏதோ ஒரு பாகத்தை எடுத்து படிங்க, ஜஸ்ட் படிங்க.)
============================================
உலகில் முதன் முறையாக சிவபுராண பாராயணத்தில் , மகிமை புகழ் ஞானி நபிகள் நாயகம் அவர்கள் அருளிய திரு குரான் படிக்கப்பட்டது.
திருக்குர்ஆனின் 16-வது அத்தியாயம் 16:79-80
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h17m15s
============================================
பாடகர் :- ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களில் இருந்து உங்களுக்கு கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும் ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மரியாட்டு உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை வசதிகளையும் ஏற்படுத்தினான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் வந்து நமக்கு எல்லாத்தையும் உருவாக்கி கொடுத்ததை பத்தி சொல்றாங்க. உங்கள் வீட்டில் நிம்மதியை உண்டாக்கினான். கால்நடைகள் தோல்களில் இருந்து கூட உங்களுக்கு இது உடைகளை கொடுத்தார்னு சொல்ல வராரு. அவர் செம்மரியாட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள், விலங்குகள்ட்ட இருந்து ரோமங்கள் எடுத்துக் கொடுத்து மனுஷனுக்கு பயன்படுத்துற வகையில பண்ணிருக்காருன்னு சொல்றாங்க. விலங்குகள்ட்ட இருந்து ரோமத்தை உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். இறைவன் வந்து உங்க வீட்ல நிம்மதியை கொடுத்தான். நிம்மதிக்கு என்ன வழின்றதெல்லாம் போக உங்களுக்கு இதை படிக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (திருக்குர்ஆனின் விளக்கங்கள் அளித்து முடித்த பின்னர்….)
===============================
# மகான்கள் சொன்னது நன்மைகள். ஆனால் பின்பற்றுவது தீமைகளையே….
===============================
போகர் சித்தர் :- எவை இதைத்தன் இதைத்தன் உருவாக்க நபிகள் நாயகம் நிச்சயம் தன்னில் கூட, அனைத்து உயிர்களும் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய நிச்சயம் உங்களுக்கு நன்மை செய்யத்தான் காத்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு நன்மை செய்யுங்கள், அதன் மூலம் இறைவனை காணலாம் என்று ஆனால் அதற்கு நன்மையா செய்கின்றார்கள் மனிதர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொன்னார் தெரியுங்களா?
அடியவர் :- இறைவன் பிற உயிரை படைச்சதே மனிதனுக்கு நன்மை செய்யறதுதான்ப்பா. ஆனா அந்த உயிரை நீங்க என்ன செய்றீங்க?
சுவடி ஓதும் மைந்தன் :- கொல்றீங்க.
அடியவர் :- கொல்றீங்கன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நாயகம் வந்து கொல்றீங்கன்றாங்க.
===================================
# ஏன் கலியுகத்தில் பலத்த அழிவுகள் ?
===================================
போகர் சித்தர் :- இதைத்தன் பின் இவ் ஞானிகள் இறைவனுடைய இறைவனுடைய குழந்தைகள் பின் சொல்வதே நிச்சயம் யாரும் ஏற்கவில்லை. பின் அதாவது இன்னும் அதனால்தான் கலியுகத்தில் மிக்க மிக்க அழிவுகளாக வந்து கொண்டிருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஏன் அழிவுன்னா இறைவனுடைய குழந்தைகள் சொன்னதை யாருமே கேட்கல. அப்ப என்ன ஆகுது?
அடியவர் :- அதனால அழிவுகள் மிகுந்து கொண்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அழிவுகள் அதிகமாகத்தான் வரும்.
==========================================
# கலியுகத்தில் நோய்களும் நிச்சயம் இன்னும் பலப்படுத்தி ஓடும்.
=========================================
போகர் சித்தர் :- நோய்களும் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பலப்படுத்தி ஓடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல என்ன வருமா? நோய்கள் வருமா? நோய்கள் மூலமா நோய்கள் தான் வருமா? முதல்ல என்ன வரும்? நோய்கள் இறைவன் கோபப்பட்டா?
=================================================
# இறைவன் பணம் எடுத்து விட்டால் நிச்சயம் பின் பைத்தியம் ஆகிவிடுவார்கள்.
=================================================
போகர் சித்தர் :- அடுத்து நிச்சயம் தன்னில் கூட பணம் எடுத்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் பைத்தியம் ஆகிவிடுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன? பணத்தை எடுத்துருவாரு. ஃபர்ஸ்ட் நோயை கொடுப்பாரு.
அடியவர் :- பணத்தையும் புடுங்கிருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன பண்ணுவாரு? பணத்தை எடுத்துருவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- பைத்தியம் முடிச்சிருவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகும்? பணம் இல்லைன்னா பைத்தியம்.
=================================================
# இறைவன் நினைத்தால் தான் இனி அனைவருக்கும் வேலை கிட்டும்.
=================================================
போகர் சித்தர் :- அப்பப்பா வேலையும் எடுப்பானப்பா. இறைவன் பார்த்துக்கொள்வோம். நீங்கள் பெரியவனா? இறைவன் பெரியவனா?
சுவடி ஓதும் மைந்தன் :-அடுத்து என்ன பண்ணாரு?
அடியவர் :- வேலையும் புடுங்கிருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கும் வேலை அவ்வளவு சீக்கிரமா கிடைக்காதுங்க ஐயா. வேலையும் கிடைக்காது. எடுத்துருவாரு.
=================================================
# இறைவன் வழி , தர்மத்தின் வழியில் - இனி அனைவரும் வந்தே ஆகவேண்டும்.
=================================================
போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது பார்ப்போம். நிச்சயம் நீங்கள் எப்படி தர்மத்தில் வழியில் பின் நிச்சயம் பின் எவை என்று கூற பின் வராமலாய் இருப்பீர்கள். என்னென்ன எடுத்தால் தர்மத்திற்கு வருவீர்கள் என்று இறைவன் தீர்மானித்துள்ளானப்பா. இறைவன் தீர்மானித்துள்ளானப்பா. முட்டாள்களே.
அடியவர் :- (வேலை இல்லாமல் மக்கள் படப்போகும் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் ) அப்பா
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணிக்கிறாரு?
அடியவர் :- கொடுமை ( வேலை இல்லாமல் மக்கள் படப்போகும் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் )
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எப்படி இந்த தர்மம் யாரும் கடைபிடிக்கல? இறைவன் குழந்தைகள் எல்லாம் வந்து சொன்னாங்க யாரையெல்லாம் மிதிச்சிட்டீங்க போட்டு. ஆனால் உங்களிடத்தில் என்னென்ன எடுத்தா நீங்க வருவீங்கன்னு தெரியும். நீங்க வலிவுக்கு வருவீங்கன்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாங்க?
அடியவர் :- நோய்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஃபர்ஸ்ட் நோய். பணம். பணம் கடன். வேலை. அடுத்து வேலை. வேலை இதெல்லாம் எடுத்துட்டா என்ன ஆகும்?
அடியவர் :- பைத்தியம் ஆயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? இறைவன் கிட்ட ஓடி ஓடி வரணும். அப்பா நான் தர்மத்தை கடைபிடிக்கிறேன்ப்பா. நான் தர்மத்தை கடைபிடிக்கிறேன். நீ ஓடி வரணும்ப்பா. இறைவன் இந்த பைத்தியம் எல்லாம் இந்த பைத்தியம் இந்த பைத்தியம் இது இல்ல.
======================================
# அன்பு குருநாதர் - ஏன் இந்த பாடகரை மட்டும் கூட்டு பிரார்த்தனை மேடையில் பாட வைக்கிறார்கள்? என்ற பிறவி ரகசியம்….
======================================
போகர் சித்தர் :- இதைத்தன் அப்பா அறிந்தும் இவைத்தன் வாயால் பைத்தியம் பைத்தியம் என்று அகத்தியன் சொல்கின்றான். அதற்கும் ஒரு காரணம் பின் முன் பிறப்பில் அதாவது பல ஆன்மாவிற்கு பல பிறப்புகள் ஒரு பிறப்பில் தெரு தெருவாக பாடி பாடி காசுகள் ஈற்று அதன் மூலம் வருவாய். நிச்சயம் பின் மற்றவர்களுக்கும் சேவை செய்தான். அதனால்தான் நிச்சயம் பின் அகத்தியன் கூட பாட வைக்கின்றான்.
அடியவர்கள் :- ( பாடகரின் முற்பிறவி ரகசியம் கேட்டு - கை தட்டல்கள் )
போகர் சித்தர் :- இதைத்தன் பின் ஆனால் மற்றவர்களோ ஏன் இவன் பாட வைக்கின்றான்? அகத்தியன் ஏன் இவனை பாட வைக்கின்றான்? அகத்தியன் என்று கேளினும் கெண்டனும் செய்வார்கள். அப்பா இதுதான் மனிதனுடைய தன்மை என்பேன். இதனால்தான் அவனுக்கு ஒன்றுமே நடப்பதில்லை. அவனுக்கு கொடுத்தாலும் பின் என்ன லாபம்?
அடியவர் :- இறைவன் ஏதாவது செய்றாருன்னா காரணம் இருக்கும். குருநாதர் செய்றாருன்னா காரணம் இருக்குது. அது அந்த பூர்வ ஜென்மத்தை சொல்றாங்க. ஐயாவோட அந்த பூர்வ ஜென்மத்தை சொல்றாங்க. ஒரு பிறவியில வந்து இவங்க வந்து தெருத்தெருவா பாடி அது வந்து பிறருக்கு நன்மை செஞ்சாங்க. அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை அதை சொல்றாங்க.
போகர் சித்தர் :- இதனால் இன்னும் கூட மக்கள் வருவார்கள். இதைத்தான் கேட்பார்கள். சொல்கின்றேன் எனக்கு பணம் வேண்டும் முதலில்.
அடியவர் :- ஆமாங்க ஐயா ( அப்படித்தானே கேட்பார்கள் ).
போகர் சித்தர் :- பின்பு வேலை வேண்டும். நிச்சயம் திருமணம் வேண்டும் என்று ஆனாலும் ஒன்றும் எதை என்று புரிய ஏனென்றால் தர்மத்தை காக்க. நிச்சயம், இவையெல்லாம் கொடுக்காமல் இருந்தால் தான்.
==============================================
(மேடையில் உள்ள சிவனடியார்கள் உணவுக்கு அழைத்து சென்றனர். திரு கைலாய வாத்தியங்கள் முழங்க உணவு அருந்திய சிவனடியார்களை மேடைக்கு அழைத்து வந்தார்கள். பல சிவனடியார்களை மேடைக்கு முன்பு முதல் வரிசையில் அமர வைத்தனர் அடியவர்கள்.)
==============================================
=============================================
# இறை பலங்கள் அதிகரித்தால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்
=============================================
போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் முதலில்.
போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட பின் மனிதனுக்கு அப்பொழுதுதான் உண்மை தெரியும். ஆனால் சில மனிதர்கள் இதை நான் சரி செய்கின்றேன், பணத்தை என்னிடத்தில் கொடுங்கள் என்று அழகாக ஏமாற்றுவான்.
===========================================
# சித்தர்கள் புண்ணியத்தை வழங்குவது , இறைவனை வணங்குவதற்காக.
===========================================
போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட கலியுகத்தில் வாழ முடியாத காலம். அதனால்தான் நிச்சயம், பின் அனைவரையும் அழைத்து, நிச்சயம், பின் உண்மையை பின் தெரிய வைத்து, புண்ணியத்தை யாங்கள் வழங்கி எதை என்று கூற, இறைவனை வணங்குவதற்காக.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் இறைவனை யாரும் வணங்க மாட்டாங்க. அதனால எங்க கையில் இருக்கிற புண்ணியம் கொஞ்சம் உங்களுக்கு கொடுக்கிறோம். அந்த புண்ணியத்தால நீங்க நல்லா இறைவனை போய் வணங்குங்க.
==========================================
# இறைவனை நம்புபவனே தர்மத்தை கடைபிடிப்பதில்லையே.
==========================================
போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம், தர்மத்தை நிச்சயம், தன்னில் கூட பல இறைத்தூதர்கள் வந்து தர்மத்தை படி, தர்மத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். ஆனாலும் இறைவனை நம்புபவனே தர்மத்தை கடைபிடிப்பதில்லையே.
அடியவர் :- இறைவனை வணங்குறேன், வணங்குறேன்னு சொல்றவனே தர்மத்தை கடைபிடிக்கிறது இல்லைன்றாங்க. சுயநலமா இருக்கிறேன்றாங்க.
==========================================
# எத்தனை மந்திரங்கள், எத்தனை எத்தனை புண்ணிய நதிகள் நீராடினாலும், தர்மத்தை ஒன்றை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றால் அனைத்தும் வீண்.
==========================================
போகர் சித்தர் :- நிச்சயம், இதனால்தான் எது என்று புரிய எத்தனை மந்திரங்கள், எத்தனை எத்தனை புண்ணிய நதிகள் நீராடினாலும், தர்மத்தை ஒன்றை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றால் அனைத்தும் வீண். ஆனால் இவை யார் சொல்வார்கள்அப்பா? யார் சொல்வார்கள்? தாயே, தந்தையே என்று உங்களை யான் பின் அழைக்கின்றேன்.
போகர் சித்தர் :- ஆனாலும் இதில் கூட எது என்று புரிய நிச்சயம், பின் புண்ணியங்கள் இல்லை.
போகர் சித்தர் :- இதைத்தன் அப்பா, இன்னும் ஞானங்கள், இன்னும் நிச்சயம் கற்றுக் கொடுப்பேன். பொறுத்தருளுக.
=========================
(மதிய உணவு அழைப்பு)
=========================
போகர் சித்தர் :- ஆசிகளோடு இதைத்தன் உருவாக்க இவர்களை நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் எதை என்று புரிய இவர்களை மகிழ்ச்சி ஆக்க இவர் தன் நிச்சயம் பாடலை பாடுக.
சுவடி ஓதும் மைந்தன் :- இவர்களை மகிழ்விப்பதற்காகவே அவர் இப்போது அந்தப் பாடலைக் கேட்டார். ஐயா, இங்கே நிறைய சாதுக்களும் சந்நியாசிகளும் வந்திருக்கிறார்கள். இவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவர் ஒரு பாடலைப் பாடச் சொல்லியிருக்கிறார்; அவர்களும் பாடுவார்கள். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவர்களுடைய ஆசி நமக்குக் கிடைத்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம். அதனால், நன்றாகக் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துங்கள் ஐயா."
(மேடையில் உள்ள சாதுக்களை சந்தோஷப்படுத்த பாடல் பாடினார்கள் அடியவர்கள்)
பாடகர் :- (“தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே” என்ற பாடல் பாடினார்கள் )
Start - https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h54m36s
==========================================
# முதல் முறையாக தனது வாழ்க்கையில் இந்த பாடலை பாடிய நம் பாடகர்.
==========================================
பாடகர் :- என்னோட வாழ்க்கையில இந்த பாட்டை இப்பதான் சார் ஃபர்ஸ்ட் டைம் பாடுறேன். அது எப்படி வந்ததுன்னு தெரியாது. இங்க ஒரு அடியார் கேட்டதுனாலதான் இந்த பாட்டை பாடினேன்.
போகர் சித்தர் :- இதைத்தன் அழகாக முருகன் நடனமிட, அதாவது தன் தன்மகன் நடனமிட, அனைவருக்கும் ஆசிகள் தர, இவர்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பின் தன் குழந்தை முருகன் முடிவெடுப்பான். அழகாக பாடலை பாடினாயே, மீண்டும் அதை பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதே பாட்டு முருகனோட பாட்டை பாடுங்க. இவர்களுக்கு என்னென்ன தேவையோ, இவங்களும் பூர்த்தி ஆகட்டும், பாடணும்ன்றார்.
கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :- முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… )
Start - https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h58m20s
========================================
# பாடகர்கள் - இயலாதவர்களை மகிழ்விக்க புண்ணியம். ஆனால் பலரும் கர்மத்தில்……..
========================================
போகர் சித்தர் :- அப்பனே, அம்மையே, இவர்கள் மகிழ்விக்க ஆளில்லை. இதனால் பல சித்தர்களும், ஆனால் இன்றைய காலகட்டத்தில் காசுக்காக நிச்சயம் தன்னில் கூட, பின் அவர்கள் மத்தியில் நிச்சயம் தன்னில் கூட தலைகுனிந்து பாடுபவர்கள் நிச்சயம், பின் போராட்டத்திற்கு, அதாவது கஷ்டங்களை சந்தித்து கடைசியில் அனைத்தும் வீண் என்று.
==================================
# ஏன் நமது கூட்டுப் பிரார்த்தனை பாடகரை சித்தர்கள் கைவிடவில்லை?
==================================
போகர் சித்தர் :- ஆனாலும் (பாடகர்) இவனையும் பின் யாங்கள் விட்டொழிந்தால் இவனும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது காசுகளுக்காக பாடி கர்மத்தை சேர்த்துக்கொண்டு கடைசியில் பல நோய்கள். இதனால் தான் நிச்சயம், பின் இல்லாதவர்களை கூட மகிழ்விக்க வேண்டும் என்று நிச்சயம் பின் சித்தர்கள் முடிவெடுத்து. இதனால் மாற்றுவோம். இதனால் இவர்களையும் இன்னும் கூட மகிழ்ச்சி படுத்த, இதே பாடலை பாடிட்டு அனைவரையும் நிச்சயம் தன்னில் கூட பின் கை.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா கைதட்டி இதே பாடலை திருப்பி உங்களை மகிழ்விக்க சொல்றாரு.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
அடியவர் :- (நமது பாடகர் பாடும் போது ) எல்லாரும் நல்லா கைதட்டணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- "எல்லாரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெரிய பெரிய பணக்காரர்களை மகிழ்விப்பதற்காக மட்டும் பாடுகிறார்கள், கைதட்டுகிறார்கள். ஆனால் அதில் புண்ணியம் இல்லை. அப்படிச் செய்வதால் கடைசியில் நோய்களும் துன்பங்களுமே வந்து சேரும். ஆனால், ஒன்றுமில்லாத ஏழைகளை யார் மகிழ்விப்பது? இறைவனைப் பொறுத்தவரை, அவருக்கும் (பாடகர்) இவரைப் பெரிய கோடீஸ்வரன் ஆக்கத் தெரியும். ஆனால் அப்படி ஆகியிருந்தால், இவரும் மற்றவர்களைப் போலப் பணக்காரர்களுக்கு மட்டும் கைதட்டிவிட்டு, ஏழைகளை மறந்திருப்பார். அதன் மூலம் நோய்களையும் பாவத்தையுமே சம்பாதித்திருப்பார். அதனால்தான், 'ஒன்றுமில்லாத எளியவர்களோடு நாம் நிற்கிறோம்' என்கிறார். எனவே, இவரை (எளியவர்களை) மகிழ்வியுங்கள். அனைவரும் பாட்டுப் பாடி இவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்."
கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :- நன்றி குருநாதா
கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :- முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… அருமையான குரலில் பாடினார்கள். அவசியம் பின் வரும் பதிவில் கேளுங்கள்).
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h05m41s
கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :- ( அருமையான குரலில் பாடி முடித்த பின்னர் )
==================================
# பக்தி என்பதும் சாதாரணமில்லை -பல துன்பங்கள் நிறைந்து “போதுமடா சாமி” என்று நிலைக்கு வரவேண்டும்.
==================================
==================================
# இறைவனின் அன்பு குழந்தைகள் - சாதுக்கள், ஈசனார் அடியவர்கள், சன்னியாசிகள் அனைவரும் நினைத்து கூட பார்க்க இயலாத துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
==================================
போகர் சித்தர் :- இதைத்தானே (மேடையில் உள்ள சாதுக்கள், ஈசனார் அடியவர்கள்) இவர்கள் எதைப் போன்று, இவர்களால் நிச்சயம் படும் பாடு, இவர்கள் என்னென்ன எதை என்று அறிய எவ்வளவு கஷ்டங்கள் பட்டு இந்நிலைமைக்கு வந்தார்கள் என்பவையெல்லாம் யாங்கள் அறிவோம். இதனால் நிச்சயம் சாதாரணமில்லை இறைவன். பக்தி என்பதும் சாதாரணமில்லை. ஒவ்வொரு வாழ்க்கையிலும், அதாவது இவரது பின் ஒவ்வொரு வாழ்க்கையிலும், பல துன்பங்கள் நிறைந்து போதுமடா சாமி என்று. இதனால் அனைவரும் எழுந்து நின்று இவர்களுக்கு மரியாதை செய்யும்படி முருகனே வந்து ஆடட்டும். மீண்டும் இப்பாடலை துவங்குங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மேடையில் உள்ள சிவனடியார்கள் மற்றும் ஐயாமார்களே, அனைவரும் மேடையிலேயே அமருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அய்யா சாதுக்கள் இந்த நிலைக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. வாழ்க்கையில் எவ்வளவோ அடிபட்டு, மனவேதனைகளை அனுபவித்த பிறகே இந்தத் துறவு நிலைக்கு வந்திருக்கிறார்கள். 'வாழ்க்கையே போதும்' என்கிற விரக்தியில் இறைவனை நாடி வந்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மீண்டும் ஒருமுறை நன்றாகப் பாடுங்கள். இந்தப் பாடலைக் கேட்டு முருகப்பெருமானே வந்து ஆடட்டும்.(
சுவடி ஓதும் மைந்தன் :- (இவர்கள் இறைவனின் குழந்தைகள் போன்றவர்கள். இவர்கள் எதை ஆசைப்படுகிறார்களோ, அவர்களுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை இறைவன் தன் பிள்ளைகளுக்கு வழங்குவது போல வழங்கட்டும். தங்கள் கஷ்டங்களை எல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கும் இவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால், நம் வாழ்க்கை பிரகாசம் அடையும்; ஈசன் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பார். எனவே, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி இவர்களை வணங்குங்கள். முருகப் பெருமானை நினைத்து மீண்டும் ஒரு பாடலைப் பாடுங்கள்.)
=================================
# கூட்டுப் பிரார்த்தனை மண்டபமே எழுந்து நின்றது - சந்நியாசிகளை வணங்கி.
=================================
==================================
# “The Standing Ovation” - “மண்டபமே எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தல்"
================================
முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h13m10s
ஒரு அடியவரின் உரை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h18m37s
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபிசாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment