22/1/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.
தேதி : 22.1.2026
வாக்குரைத்த ஸ்தலம்; ஓதி மலை ஓதியப்பர் சன்னதி.
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=======================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். அப்பனே,
அழகாக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் முருகன் அப்பனே, வேலோடு பின் வந்து ஆடினானப்பா,
அப்பனே, இவ்வாறு அப்பனே, பின் பல குறைகள் நீங்குமப்பா, அவரவர் குறைகள். அப்பனே,
இதனால் அப்பனே, நல்விதமாக அப்பனே, இறைவனை அப்பனே, பின் எதையும் கேட்க தேவையில்லை என்பேன். அப்பனே,
=====================================
# முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டாலே போதும். எங்கு அழைக்கலாம் என்றெல்லாம் அழைத்து அருள் ஆசீர்வாதங்கள் கொடுப்பார்.
=====================================
பின் மனதார அப்பனே, வேண்டிக்கொண்டாலே, அப்பனே, எப்பொழுது?, பின் எதன் மூலம், பின் எங்கு அழைக்கலாம்? என்றெல்லாம், அப்பனே, அழைத்து அவனே ஆசீர்வாதங்கள் கொடுப்பானப்பா.
இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவனே அழைத்து, அப்பனே, பின் அதாவது அழகாக வேலுடனே ஆடி. அப்பனே, சில சில அப்பனே, பின் மாய வலையில் விழுந்தாலும், அதையெல்லாம் அப்பனே, இடித்துட்டு, அப்பனே, தூர வீசிவிட்டானப்பா, அக்னி தன்னிலே வீசிவிட்டானப்பா,
(ஆலயத்தில் நடந்த ஹோம அக்னியில்)
இதனால் அப்பனே, மாற்றங்கள் தான். அப்பனே, நல்விதமாக, அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் தன் மகனுக்கு எதை என்று புரிய. அப்பனே, பின் சந்தோஷமாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இருப்பதைக் கண்டு, மனமகிழ்ச்சியுடனே, அப்பனே, பின் ஈசனும் பார்வதி தேவியும் வந்து, அழகாகவே, அப்பனே, பின் அமர்ந்து, அப்பனே, பின் காட்சிகளாக கண்டனர் என்பேன். அப்பனே,
நல்விதமாகவே, அப்பனே,
இதனால் அப்பனே, அவரவர் அப்பனே, நிச்சயம் விருப்பங்கள். அப்பனே, பின் சரியான விருப்பங்கள் நிறைவேறுமப்பா,
அப்பனே, பின் யானும், பின் அழகாக வந்து, ஆசீர்வாதங்களை தந்துவிட்டேன். அப்பனே,
இதனால் அப்பனே, பின் நன்மைகள் தான் ஏற்படுமப்பா, சில சில வகையில் கூட,
=====================================
# ஆலயத்தில் நடந்த ஹோம அக்னியில் - அடியவர்களுக்கு இருந்த சில தரித்திரங்களை முருகப்பெருமான் வேலால் குத்தி வீசிவிட்டார்.
=====================================
அப்பனே, சில தரித்திரங்கள் மனிதனுக்கு இருந்தாலும், அவையெல்லாம், அப்பனே, இது அக்னி தன்னிலே. அப்பனே, பின் முருகன், அப்பனே, பின் வேலுடன், அப்பனே, குத்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வீசிவிட்டானப்பா,
இதனால் கவலைகள் வேண்டாம். அப்பனே, நல்விதமாக, அப்பனே, வெற்றிகள் உண்டு. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் ஆரோக்கியமாகவே, அவரவருக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, என்ன? ஏது? என்றெல்லாம், அப்பனே, மனதில் நினைத்தீர்களோ, அவை தன், நிச்சயம், பின் வள்ளி தெய்வானையோடு, அப்பனே, பின் கந்தன் செய்வானப்பா,
குறைகள் வேண்டாம். அப்பனே, நல்விதமாகவே,
================================
# புண்ணியங்கள் செய்ய செய்ய , இறைவன் கர்மங்களை தானாகவே நீக்கி அருள்வார்.
================================
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, புண்ணியங்கள் செய்யுங்கள்!!! புண்ணியங்கள் செய்யுங்கள்!!!! என்றெல்லாம் உரைத்துக் கொண்டே வருகின்றோம். அப்பனே,
அப்புண்ணியங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நீங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் எவை என்று அறிய. அப்பனே, பின் இறைவனே, அப்பனே, பின் எங்கு? ஏது? என்று வருகின்றான் என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அங்கு உங்களை அழைப்பான் என்பேன். அப்பனே, அதனால்தான், அப்பனே, புண்ணியங்கள் மிக சாலச் சிறந்தது என்பேன். அப்பனே,
புண்ணியங்கள் செய்யாமல், அப்பனே, பின் இறைவனை கண்டாலும், அங்கு இறைவன் பின் இருக்க மாட்டானப்பா,
அதனால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் செய்தவர்களை, அப்பனே, பின் இறைவன், அப்பனே, எப்பொழுது வருவான் என்பதெல்லாம், அப்பனே, இறைவனுக்கே தெரியும் என்பேன். அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, இறைவனே அழைத்து, இறைவனே, அழைத்து,
அப்பனே, பின் என்ன செய்ய வேண்டுமோ??, அவை நிச்சயம் செய்வானப்பா,
=======================================
# தரித்திரங்களை நீக்க அவசியம் என்ன வேண்டும் ?
# புண்ணியங்கள், நல் கருணை , நல் மனது.
=======================================
இதனால்தான், அப்பனே, புண்ணியங்கள் தேவை,
அப்பனே, நல் கருணை தேவை. நல் மனது தேவை.
அப்பனே, பின் உயர்ந்து நிற்கச் சொல்லிவிட்டேன். அப்பனே, நல்விதமாகவே,
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எத்தனையோ, அப்பனே, பின் மனிதர்கள், அப்பனே, பின் திருத்தலம், திருத்தலமாக சென்று கொண்டே இருக்கின்றனர் என்பேன். அப்பனே, மனதின் மனதில் அழுக்குகளோடு!!!!!
ஆனாலும், அப்பனே, இறைவன் ஏற்றுக் கொள்வானா??????? என்பதையெல்லாம் சந்தேகமே என்பேன். அப்பனே,
ஆனாலும், அப்பனே, இப்பொழுது சொன்னேனே,!!!! மீண்டும் மீண்டும், அப்பனே, புண்ணியங்கள், அதாவது நல் காரியங்கள் செய்து கொண்டே வந்தாலே, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, முருகன், பின் அதாவது இறைவன், அப்பனே, எங்கெங்கு இருக்கின்றானோ,!?? (அங்கு )நிச்சயம் தன்னில் கூட, புண்ணியம் செய்தவர்களை அழைப்போம் என்று தானாகவே, அப்பனே, பின் அழைத்து, அப்பனே, பின் என்னென்ன செய்ய வேண்டுமோ?? என்னென்ன தரித்திரங்கள் நீக்க வேண்டுமோ??, அவை பின் நீக்கிவிட்டு, நல்லாசிகள் தந்து, அப்பனே, இன்னும் பின் மாற்றத்தை ஏற்படுத்துவானப்பா,
இதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவனை, அப்பனே, அடைவதற்கான வழிகள் என்பேன். அப்பனே,
நிச்சயம், அப்பனே, பின் நாம் நினைத்தாலும், அப்பனே, திருத்தலங்கள் சென்றாலும், ஆசிகள் கிடைக்குமா???? என்றெல்லாம், அப்பனே, பின் சந்தேகமே என்பேன். அப்பனே,!!!
அவனே அளித்தது மிகப்பெரும் புண்ணியமப்பா. ஆசிகள் அப்பனே, அனைவருக்குமே ஆசிகள் தந்துவிட்டான்.
வேற என்ன வேண்டும்????, அப்பனே, ஆசிகள், ஆசிகள்,!!!!
அப்பனே, எதை என்றால், எப்பனே, நிச்சயம் தன்னில் கூட வேண்டிக்கொண்டே இருங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவனிடத்தில், அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, அதாவது பின் உன் தலைவனிடம் அப்பனே, பின் சொல்லிக்கொண்டே இருங்கள்.
(ஓதிமலை அப்பனிடம் வேண்டிக் கொண்டு இருங்கள் என்று குருநாதர் கூறினார்)
=========================================================
# அடியவர்களின் கேள்விக்கு குருநாதர் அளித்த பதில் வாக்குகள்.
=========================================================
அடியவர் :- ஐயா, எனக்கு ஆசீர்வாதம்,
குருநாதர் :- அப்பனே, எதை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தொட்டில் எடுத்துக்கொண்டு வந்தாய் அல்லவா? அப்பனே, பின் ஆசீர்வாதங்கள் இல்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட என்ன கேள்வி கேட்கின்றாயப்பா,!!!
மற்றொரு அடியவர் தனது தாய்க்காக வாக்குகள் கேட்டார்
அடியவர் :- ஐயா, அம்மாவிற்கு வாக்குகள் சொல்லுங்கள்,
குருநாதர் :- அப்பனே, எதை என்றால், அப்பனே, அமைதியாக இருக்கச் சொல்லி என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வினைகள் சூழ்ந்து இருப்பதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டே தான் வருகின்றேன். அப்பனே, இதனால் பொறுமை, அப்பனே, பின் இழக்காதிருக்கச் சொல். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பார்த்துக் கொள்வோம். எவை தர வேண்டுமோ???, எப்பொழுது தர வேண்டுமோ??, அப்பொழுது யான் தருகின்றேன்.
அடியவர் :- மற்றொரு அடியவர் தனது தந்தையின் ஆத்மா மோட்ச கதி அடையாமல் இருக்கின்றது அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது, அப்பனே, பின் கந்தன் வந்து ஆசீர்வதித்து விட்டான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மறுவாக்கில் இதை தெளிவாக தெரிவிக்கின்றேன். அப்பனே, கவலைகள் வேண்டாம்.
அடியவர் :- மற்றொரு அடியவருக்கு குருநாதர் உரைத்த பதில் வாக்கு
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. அப்பனே, சரியாகவே, அப்பனே, பின் அதாவது பின் மூச்சு பயிற்சியை பின் செய்து கொண்டே வரச் சொல். அப்பனே, மீதி எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன்.
=============================================
# உடம்பின் உள்ளே தங்கியுள்ள அழுக்குகளும் வெளிவந்து விடும் ரகசியம்
# முள்ளங்கியின் சாற்றை மஞ்சள், ஏலக்காய், வசம்பு சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தினால், சில மாற்றங்கள்.
=============================================
மற்றொரு அடியவர் :- ஐயா, உடல்நிலை கொஞ்சம் ஒத்துழைக்க இயலவில்லை.
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம். அப்பனே, நல்ல விதமாகவே, அப்பனே, பல பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கீரை வகைகள் உள்ளவை அல்லவா? அப்பனே, அதை பின் எடுத்துக்கொண்டே வா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாரத்திற்கு ஒருமுறை. அப்பனே, பின் முள்ளங்கி எதை என்றது? அப்பனே, பின் அதன் சாற்றினையும் அப்பனே, பின் வெறும் வயிற்றில், அப்பனே, நிச்சயம் தன்னில் நன்றாக அரைத்து. அப்பனே, பின் அதில் கூட, பின் மஞ்சள் இட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் ஏலக்காய், ஏலக்காயும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இட்டு. அப்பனே, பின் வசம்பையும் இட்டு, நல்விதமாக. அப்பனே, எதை என்று அறிய அறிய அப்பனே, பின் வெறும் வயிற்றில். அப்பனே, பின் அருந்தி வா. அப்பனே, சில மாற்றங்கள் நீயே காண்பாய் என்பேன். அப்பனே.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் ஓரத்தில், அப்பனே, பின் சில அழுக்குகள் தங்கியுள்ளது என்பேன். அப்பனே, அவை தன் நிச்சயம் தன்னில். அப்பனே, பின் , வெளிக்கொண்டு வந்து விடுவேன் என்பேன். அப்பனே, பின் நீயே. அப்பனே, இதன் ரகசியத்தை . அப்பனே, பின் காண்பாய் என்பேன். அப்பனே,
இதைச் செய் முதலில். அப்பனே , யான் மற்றவை பின் பார்த்துக் கொள்கின்றேன்.
மற்றொரு அடியவர் :- சுவாமி என்னுடைய மூத்த மகளுக்கு திருமணம்
குருநாதர் :- அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, முருகப்பெருமான், அப்பனே, இழுத்து வைத்திருக்கின்றப்பா, அப்பனே, நிச்சயம் அவனை வேண்டிக்கொள்.
ஒரு பெண் அடியவர்:- தன்னுடைய இரண்டாவது மகளை குறித்து குருநாதர் இடம் கேட்ட பொழுது
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தாயே. பின் உன் இல்லத்திலே முருகன் இருக்கின்றான் அல்லவா?.....(முருகன் முன்பாக) பின் விழுந்து, பின் விழுந்து, பின் பாடு. பாடல் விலை பாடச் சொல் அவள் தனையும் கூட!!
=======================================
# திருமணம் தாமதம் ஆகும் ரகசியங்கள் - பொது வாக்கு.
=======================================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்கின்றேன். அப்பனே, ஏன் எதற்கு? அப்பனே, பின் எவை என்று புரிய. அப்பனே, பின் அதாவது திருமணம் ஏன்? அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அவரவருக்கு, அப்பனே, பின் நடக்கவில்லையே?????. எதை என்று கூட சில தாமதங்கள் ஆகின்றதே என்றெல்லாம்....
அப்பனே, அதன் மூலம் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்பதற்காகத்தான் என்பேன். அப்பனே, இறைவன் சரியாகத்தான் செய்கின்றான். (தாமதம் ஆவது)
ஆனால் மனிதனோ!?, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அலைந்து திரிந்து, அப்பனே, பின் எதற்காக? என்றெல்லாம் பாடுபட்டு. அப்பனே, பின் எதை எதையோ.... செய்து, அப்பனே, ஒன்றும் ஆகாமல் !!!............!?!?!?!?
ஆனாலும், இறைவன், அப்பனே, அனைவரையும் கூட படைத்தான் என்பேன். அப்பனே,
இறைவன் நினைப்பதுதான். அப்பனே, பின் அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது? ஏது? என்றெல்லாம். அப்பனே, அறிந்து, அப்பனே, இறைவன் நன்றாகத்தான். அப்பனே, செய்வான் என்பேன். அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே,
நல் விதமாக, அவரவருக்கு, அப்பனே, என்ன துணை வேண்டுமோ?, அதை இறைவனே கொடுப்பான் என்பேன். அப்பனே,
இதனால்தான், அப்பனே, தடை தாமதங்கள். அப்பனே, முன்பே, பின் அதாவது பல திருமணங்கள் யான் பார்த்திருக்கின்றேன். அப்பனே, முன்பே திருமணம் நடந்துவிட்டால், அப்பனே, பின் திருமணம். அப்பனே, நிச்சயம் தன்னில் ஒரு 30 வயதில். அப்பனே, பின் திருமணம் இருக்கின்றது என்றால், அப்பனே, பின் 25 வயதில். அப்பனே, பின் நடந்துவிட்டால், அப்பனே, பல பல. அப்பனே, பின் சூழ்ச்சிகள், பல வகையில் கூட இன்னல்கள். அப்பனே, பிரிவு நிலைகளும் ஏற்படுகின்றது என்பேன். அப்பனே,
அதனால்தான், அப்பனே, இறைவன். அப்பனே, பின் விதி தன்னில் கூட இவ்வளவு வயது என்று யாரும் கணிக்க முடியாதப்பா,
யாங்கள் தான் நிச்சயம் கணிப்போம்.
அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் ஏதோ!?, அப்பனே, (திருமணங்கள் தாமதமாக) தட்டிச் செல்கின்றது என்றால், அப்பனே, நல்லதற்காகத்தான் நினைக்க வேண்டுமே தவிர!!!!....... அப்பனே, பின் அவை தீங்கு என்று நினைக்கக்கூடாது என்பேன். அப்பனே,
இதனால் மனிதர்கள் பல பரிகாரங்கள் செய்கின்றார்கள் என்பேன். அப்பனே,
அவையெல்லாம் வீணப்பா.
இறைவன், அப்பனே, பின் விதியில் என்ன? எழுதியுள்ளானோ, அது தக்க சமயத்தில் நடக்குமப்பா,
ஆசிகள் கவலை கொள்ள வேண்டாம்.
=====================
# குழந்தை பாக்கியம்
=====================
மற்றொரு அடியவர் :- தனக்கு குழந்தை பாக்கியம் குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய அறிய என்றால், அப்பனே, பின் கவலை விடு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, தாமதம் ஆனாலும், அப்பனே, சில விஷயங்கள், அப்பனே, நல்விதமாக முருகனே முடித்துக் கொடுப்பான் என்பேன். அப்பனே,
மற்றொரு அடியவர் :- தனது சகோதரியின் நிலை குறித்து கேட்டதற்கு குருநாதர்
குருநாதர் :- அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, நிச்சயம் கூட. அப்பனே, ஈசனுடைய குழந்தை, அப்பனே, பார்த்துக் கொள்வான். ஈசன்,
=======================================
# இறைவன் அனைத்தையும் கொடுத்து, அதன் மூலம் ஒன்றும் லாபம் இல்லை என்று புரியவைப்பார்.
=======================================
மற்றொரு அடியவர்கள் :- கூட்டாக தொழில் குறித்து குருநாதர் இடம் கேட்டதற்கு
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அனைவருக்கும் மீண்டும் தெரிவிக்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதனுக்கு என்னென்ன தேவையோ?, அவையெல்லாம், அப்பனே, இறைவன் கொடுத்து, அவற்றின் மூலம், அப்பனே, ஏதும் இல்லாமல் ஆக்குவான். இதுதான் இறைவனுடைய லீலை என்பதை எல்லாம் யான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மீண்டும் இங்கு அதனைத்தான் யான் செப்ப போகின்றேன் என்பேன். அப்பனே,
குழந்தையும் கொடுப்பான். அப்பனே, அதனால், நிச்சயம் தன்னில் கூட. பின் ஒன்றும் லாபம் இல்லை. மனைவியும், அப்பனே, பின் கொடுப்பான். இறைவன்,
அப்பனே, அதனால், பின் ஒன்றும் லாபம் இல்லை என்று. அப்பனே, நிச்சயம் தொழிலையும் கொடுப்பான். அதனால், ஒன்றும் லாபம் இல்லை என்று. அப்பனே,
இதனால், அப்பனே. அனைத்தும் இல்லை, இல்லை என்று. அப்பனே, உணர்ந்து, கடைசியில், இறைவா!!! என்று. அப்பனே, பின் நிச்சயம் பற்றிக் கொள்கிறார்கள். மனிதன், அப்பனே,
===================================
# யார் மிக மிக அறிவாளி? யாரால் அனைத்தும் சாதித்துக் கொள்ள முடியும்?
===================================
குருநாதர் :- அதுவே. அப்பனே, இப்பொழுதே அதை பற்றிக்கொண்டு, அனைத்தும் நீயே செய் ! என்று. பின் என்ன நினைக்கின்றாயோ, நீயே செய் என்று. அப்பனே, பின் யார்? ஒருவன் சொல்லிக் கொள்கிறானோ, அவன்தான் மிக மிக அறிவாளி என்பேன். அப்பனே,
அவனால் மட்டுமே அனைத்தும் சாதித்துக் கொள்ள முடியும்.
பின் நிச்சயம், பின் அதாவது வேண்டிக்கொள்ளுங்கள். முருகன், அப்பனே,
எதை என்று கூட இப்பொழுதும் சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட முருகனே, பின் என்னென்ன வேண்டும்? என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, சிந்தித்து, அப்பனே, பின் அவரவருக்கு ஆசிகள் கொடுத்துவிட்டான் என்றெல்லாம். அப்பனே, பின் சொன்னேன்,
மீண்டும் இதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முருகன், அனைத்தும் கொடுப்பான். ஆசிகள், ஆசிகள்,
மற்றொருவர் :- தன் தாயின் தந்தை மறைந்து விட்டார்கள் நான் தனியாக இருக்கின்றேன் என்னுடைய நிலை குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவையெல்லாம், அவையெல்லாம், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்பேன். அப்பனே, நிச்சயம், அதனால்தான், அப்பனே, பின் அன்னை தந்தையாக முருகன் இருக்கின்றான். அப்பனே, எண்ணிக்கொள்,
கூடியிருந்த அடியவர்களில் ஒருவர் :- நான் என்ன செய்ய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- அப்பனே, ஒன்றும் செய்யாதே, இப்பொழுது திரிந்து கொண்டே இரு. அப்பனே, பின்பு உரைப்பேன். யான்,அப்பனே.
மற்றொரு அடியவர் குருநாதரிடம் :- ஐயா, இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்.
குருநாதர் :- அப்பனே, எதையாவது செய், யான் இருக்கின்றேன், பார்த்துக் கொள்கின்றேன்.
=====================================
# கீரை வகைகள் எடுத்துக் கொண்டாலே, அனைவர்க்கும் உடல் நலம் தேறும்.
======================================
மற்றொரு பெண்ணடியவர் :- தனக்காக குருநாதரிடம் ஆசிகள் கேட்டபோது
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட, உடல்நலம், பின் நிச்சயம் தன்னில் கூட, கீரை வகைகள், பின் இருக்கின்றதே. அவை எடுத்துக் கொண்டாலே, அனைவரும் உடல்நலம் தேறி, நிச்சயம் தன்னில் கூட, இவைதன், பின் நான்கு, ஐந்து அல்லது ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டே வரவேண்டும் என்று சொல்லிவிட்டேன். நிச்சயம் தன்னில் கூட,
====================================
# குழப்பங்கள் இருந்தால்தான், பின் வெற்றியும் உண்டு.
====================================
பெண்ணடியவர் :- குருநாதா மனம் நலம் சார்ந்த பிரச்சனைக்கு!!!!
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தாயே, ஒன்றை சொல்கின்றேன்.
இவ்வுலகத்தில் மனநிலை, பின் யாருக்கும் சரியாக அமையாது என்பேன். அப்பனே,
ஏதோ, பின் குழப்பத்தை இறைவன் ஏற்படுத்திக் கொண்டே இருப்பான். குழப்பம் ஏற்பட்டால்தான் விடிவுகள் பிறக்கும். தாயே, நிச்சயம், அனைவருக்குமே குழப்பங்கள் உண்டு. பார்த்துக் கொள்வோம்.
குழப்பங்கள் இருந்தால்தான், பின் வெற்றியும் உண்டு.
தாயே, நிச்சயம், எவை என்று அறிய அறிய அதனால், நிச்சயம், தன்னில் கூட, குழப்பங்கள் இல்லாமல், இவ்வுலகத்தை கடக்கவும் முடியாது. கடக்கவும் வைக்க மாட்டான் இறைவன்.
பெண்ணடியவர் :- குருநாதா!! குருவருளும் திருவருளும் வேண்டும்!!
குருநாதர் :- தாயே, பின் நேற்றைய பொழுதிலே சொல்லிவிட்டேன். கேள்.
=====================================
# எப்படி திருமணம் தானாகவே நடக்கும்?
======================================
மற்றொரு பெண்ணடியவர் :- தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் கொடுத்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட இங்கே வந்து சேவைகள் செய்யச் சொல்.(ஓதி மலையில் வந்து). தானாகவே நடக்கும்.
=====================================
# ஆரோக்கியங்கள் பெருகும், யோகங்கள் பெருகும் பரிகாரம்
=====================================
பெண்ணடியவர் :- தன்னுடைய சிறிய மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணம் குறித்து குருநாதர் இடம் கேட்ட பொழுது
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம் சொன்னேனே. இப்பொழுதுதான் என்ன?? கேட்டுக்கொண்டிருந்தாய்? தூங்கிக் கொண்டிருந்தாயா? என்ன?????, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அம்மையே, எதை என்று கூட, அனைவரும் நிச்சயம் இயற்கை வகையில் உட்கொள்ள, உட்கொள்ள ஆரோக்கியங்கள் பெருகும், யோகங்கள் பெருகும். அவ்வளவுதான்.
இதுதான் பரிகாரம்.
ஒரு அடியவர் :- வழக்காடு மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே, நீ சொன்னாயே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நியாயங்கள். அப்பனே, பின் மறைக்கப்பட்டது. என்பேன் அப்பனே, இழுத்துக்கொண்டே போகும். என்பேன், அப்பனே, கவலை விடு.
ஒரு சிறிய வயது உடைய பக்தர் :- தன்னுடைய ஊரில் ஆலயம் தற்போது வரை பால ஆலயமாகவே உள்ளது திருப்பணிகள் முன்னேற்றம் தடைப்பட்டு உள்ளது குறித்து குருநாதரிடம் கேட்டபோது
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இச்சிறு வயதில் இவன் கேட்கின்றானே..... அப்பனே, இவன் பெரியவனா? நீங்கள் பெரியவர்களா? சொல்லுங்கள்.
(குருநாதர் கூடியிருந்த மற்ற அடியவர்களை பார்த்து)
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற பின். அப்பனே, நல்விதமாக அனைவருக்கும் ஒரு உபதேசத்தை கூறு. பின்பு யான் இதைப் பற்றி தெரிவிக்கின்றேன்.
===========================
குருநாதர் அந்த இளைஞரிடம் வந்திருக்கும் அனைவருக்கும் நீ ஒரு உபதேசத்தை கூறு என்று குருநாதர் கூறிய பொழுது அடியவர்களும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவும் அந்த அடியவருக்கு விளக்கத்தை கொடுக்க அந்த அடியவர்
=============================
ஒரு சிறிய வயது உடைய பக்தர் :- இன்னும் எல்லாரும் சிவ சிந்தனையோட சிலை கைங்கரியம் பண்ணுங்க. எல்லா சிவ சிந்தனையோட சிலை கைங்கரியம், சிலை கைங்கரியம், கைங்கரியம் பண்ணுங்க. கண்டிப்பா பண்ணுங்க.
(இதை மற்றொரு அடியவர் அந்த இளைஞரிடம் சொல்லிக் கொடுத்து சொல்ல சொன்னபோது)
குருநாதர் :- அப்பனே, இவன் சொல்லிக் கொடுத்து நீ செப்பக்கூடாது என்பேன். அப்பனே, பின் நீயே சொல்.
=================================
# கேள்விகள் பொதுநலமாக கேட்டால், சுயநலத்தை இறைவன் தானாக முடித்து வைப்பானப்பார்.
=================================
அந்த இளைஞர் :- கூடியிருந்த அடியவர்களை பார்த்து - அனைவரும் சிவ சிந்தனையோடு, சிவஞானத்தோட இருக்க வேண்டும் என்று சொல்ல...
குருநாதர் :- அப்பனே, இதே போல. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நடக்கும். அப்பா, கவலை விடு. அதிவிரைவிலே!!!
அப்பனே, இதே போல்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய. அப்பனே, இதுபோன்று. அப்பனே, பின் கேட்க வேண்டும். இறைவனைப் பற்றி கேட்க வேண்டும் என்பேன். அப்பனே, எப்படி? ஏது என்று இறைவன் எப்படி இருப்பான்??? என்றெல்லாம். அப்பனே, ஆனால் தன்னைப் பற்றி சுயநலமாக கேட்கக்கூடாது. எப்பொழுதும் என்பேன். அப்பனே, பொதுநலமாக கேட்டால், அப்பனே, சுயநலத்தை இறைவன் தானாக முடித்து வைப்பானப்பா,
மற்றோர் அடியவர்:- குருநாதா என்னையும் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்க...
குருநாதர் :- அப்பனே, என்ன பார்ப்பது? அப்பனே, முருகன் பார்த்துக்கொண்டே இருக்கின்றானப்பா, இது எதுவோ? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எதை என்று அறிய அறிய அப்பனே, பின் அதாவது சந்தையில் போய் சென்றுட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது நீ, அப்பனே, காய்கறிகளை வாங்கி, அப்பனே, பின் பார்த்துக் கொடு. எடையை என்றெல்லாம் சொல்வது போலவே இருக்கின்றதப்பா, நியாயமா?
அப்பனே, கவலை விடு. முருகன் இருக்கின்றான். அப்பனே, துணையும். அப்பனே, நிச்சயம் தண்ணில கூட நன்றாகவே. அப்பனே, பின் சொல்லிவிட்டேன். அப்பனே, முதலிலே. அப்பனே,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய அறிய அப்பனே, பின், பின் அதாவது இறைவன். அப்பனே, பின் வந்திருப்பானா? என்ன? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இதுதான். அப்பனே, பின் அறிவு. அப்பனே, இப்படி அறிவு வைத்துக்கொண்டு, இறைவன் கொடுத்தாலும், அப்பனே, நீ நிச்சயம். அப்பனே, நீ தாங்குவாயா? என்ன,
அப்பனே, நல்ல விதமாக ஆசிகள்.
ஒரு பெண் அடியவர்:- தன்னுடைய மருமகனுக்கு சொந்தமாக மருத்துவமனை அமைத்துக் கொடுக்கலாமா என்று கேட்டதற்கு
குருநாதர் :- எதை என்று புரிய? தாயே, நிச்சயம் தன்னில் கூட. முருகன், பின் நினைப்பது நடக்கும். கவலை விடு.
ஓதிமலை ஆலய சேவகர்களில் ஒருவர் :- ஐயா, மலையில ஒரு சிறுத்தை ஒன்னு இருக்குங்க. ஐயா, பயமா இருக்கு. போயிட்டு வரதுக்கு,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதன் திருந்துவில்லை என்றால், இன்னும் அப்பனே, பின் எவை என்று கூற பின். முருகனே, விடுவானப்பா.
நிச்சயம், பின் வேண்டாம் என்று துரத்துவானப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்:- சில விஷயங்கள்ல, மனுஷன் திருந்தலைன்னா, இன்னும் முருகனே இன்னும் விலங்குகளை அனுப்புவார் . விடுவார். அவரே, முருகனே, விடுவார். வந்து,.. திருந்தாத மனிதர்களை துரத்ததுவதற்கு வந்து,
மீண்டும் சேவகர் :- எங்களுக்கெல்லாம் பயமா இருக்குங்க. ஐயா,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே, எவை என்று புரிய அப்பனே, பின் பயபக்தியுடனே, இறைவனை, பின் வணங்குவது தான் அது குறிக்கின்றது. அப்பனே, பார்த்துக்கொள்வோம்.
கூடியிருந்த அடியவர்களின் ஒருவர்:- தன்னுடைய திருமணத்திற்காக குருநாதரிடம் கேட்டபோது
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவன் என்ன? அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, பின் எதை என்று கூற பின். அதாவது, நேற்றைய பொழுதிலே யான் சொன்னேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இறைவன், அப்பனே, பின் அதாவது வேலை கேட்பது. அப்பனே, திருமணம் கேட்பது எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. கால தாமதங்கள், அப்பனே, ஏன்? ஆகின்றது என்றால், அப்பனே, நிச்சயம் பல விஷயங்கள் இருக்கின்றது என்பேன். அப்பனே, இதனால், அப்பனே, பொறுத்திரு!!என்பேன். அப்பனே, நிச்சயம், பின் திருமணம் நடந்தாலும், அப்பனே, பின் எதை என்று புரிய; அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பிரிவு நிலை, துன்பங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நீ இருக்கும் நிலை என்பதெல்லாம் விதியில் இருக்கின்றதப்பா, மெதுவாக நடந்தாலே போதுமானதப்பா,
இதனால் எத்தனை பரிகாரங்களப்பா,!?????
வீணே!!, வீணே,!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் :- நிறைய பரிகாரம் செஞ்சிருக்கீங்க. எல்லாம் வீணுட்டாரு. அதனால, கொஞ்சம் லேட்டாதான் நடக்கும். உங்களுக்கு அந்த லேட்டா நடந்தாதான் நல்லதுன்றாரு. இல்லைன்னா என்ன ஆகும்? பிரிவினை டைவர்ஸ் பிரச்சினைகள் , ஆயிடும்ன்றாரு.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறைவன், அப்பனே, பின் யார்? எதை என்று அறிய? அப்பனே, பின் இறைவனுக்கு, அப்பனே, பின் எவை என்று யார் பிடித்துள்ளார்களோ, அவர்களைத்தான் பின் தேர்ந்தெடுப்பான் என்பேன். அப்பனே, அதனால் கவலை விட்டுவிடு. அப்பனே,
நீயா வேலை செய்கின்றாய்? அவனாலே தான். அவன் பார்த்துக் கொள்வான். அவ்வளவுதான்.
======================================
# பணிபுரியும் வேலையில் பிரச்சனைகள்
======================================
ஒரு பெண்ணடியவர்:- பணிபுரியும் வேலையில் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றது என்று கேட்டதற்கு!!
குருநாதர்:- தாயே, உனக்கு வேலையே இல்லை. இருப்பினும், முருகன், அப்பனே, எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் :- உங்களுக்கு அம்மா பின் வேலையே இல்லை விதியில்... ஆனால் முருகன் அருளால் ஏதோ வேலை இருக்குது. அதை வச்சு பிழைத்துக் கொள்ளுங்கள். முருகனை நல்லா வேண்டிக் கொள்ளுங்கள். இன்னும் கொடுப்பாரு.
குருநாதர்:- எதை என்று புரிய? நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனைத்தும் ஒன்றுதான்.
அப்பனே, பின் அதாவது எவை என்று கூற. பின் அதாவது, இவன் வேறா? இவை எவை என்று அறிய அறிய அப்பனே, பின் அனைவரும் ஒன்றுதான்.
அப்பனே, ஈசன், பார்வதி வேறா? என்ன?
தாயே, நிச்சயம் தன்னில் கூட முருகன் பார்த்துக் கொள்வான். எதை என்று புரிய? எவை என்று அறிய அறிய.
சுவடி ஓதும் மைந்தன் விளக்கம் :- அதெல்லாம் கவலைப்படாத. என்று குருநாதர் சொல்கின்றார் அம்மா. முருகன் பார்த்துக் கொள்வார். ஆனா, வேலையே இல்லை உங்க விதியில. ஏதோ வந்து, முருகன் வந்து வச்சிருக்காரு. அவர் வேண்டிக்கோங்கம்மா நன்றாக அம்மா. இதெல்லாம் சின்ன கேள்விங்க அம்மா. வேலை எல்லாம் கேட்கவே கூடாது.
பெரிய பெரிய விஷயங்களை கேட்கணும் அம்மா வாழ்க்கையில வந்து, இதெல்லாம் ஜோதிடம் இல்ல. இதெல்லாம் வந்து, ஆனா இதுக்கும் சொல்றாருன்னா பரவாயில்லை. ஏதோ ஒன்னு சொல்றாருன்னா பெரிய விஷயம்.
=====================================
# முட்டாள் மனிதர்கள் சொல்வது போல, 2026 ஆண்டு உலகில் பேரழிவு, பெரிதாக நடக்குமா ?
=====================================
ஒரு பெண் அடியவர் குருநாதரிடம்:- சாமி, இப்ப இந்த வருடத்துல பேரழிவு, பெரிதாக நடக்கும் என்று அப்படி இப்படி சொல்கின்றார்கள்
குருநாதர்:- தாயே, நிச்சயம் தன்னில் கூட. மனிதன் முட்டாள். நிச்சயம் மனிதன் சொல்லிக்கொண்டே இருப்பான்.
இறைவன் ஒன்று, இறைவன் ஒன்று இருக்கின்றானே. அவந்தன் விட்டு விடுவானா? என்ன? நிச்சயம், அதனால்தான் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன்.
நிச்சயம், தன்னில் கூட மனிதன் சொல்வான். பேரழிவு இருக்கின்றது என்று!!!.
ஆனால், தடுப்பது எப்படி??? என்று சொல்வதில்லையே.
இதனால்தான், பின் அதாவது எவை என்று அறிய. தடுப்பது எங்களுக்கு தெரியும்.
கவலை விடு, தாயே.
============================================
# ஓதி மலையில் நடந்த ருத்ர ஹோமத்தை பற்றி
============================================
அடியவர் : - ஓதி மலையில் நடந்த ருத்ர ஹோமத்தை பற்றி ஒரு அடியவர் கேட்ட பொழுது
குருநாதர்:- அப்பனே, தூங்கிக் கொண்டிருந்தாயா? என்ன?
அப்பனே, நிச்சயம் தன்னில் யோசனை எங்கே? அப்பனே, பெண்ணை நினைத்துக் கொண்டே இருக்கின்றாயா? என்ன?
அப்பனே, எவை என்று கூற? பின், அப்பனே, இதையும் கூட. அப்பனே, பின் எது என்று? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், எவை என்று புரிய? அப்பனே, பின் அனுபவம். அதனால்தான் தேவை என்பது. அப்பனே,
நிச்சயம், அப்பனே, பின் நீ சிந்தி.(யோசிக்க வேண்டும்) மறுவாக்கில் சொல்கின்றேன்.
அப்பனே, எவை என்று புரிய? அப்பனே, அதாவது முன்னே இருப்பவனுக்கு தெரியும். அவனையே இதைப்பற்றி கேள்.
=======================
# சித்தர்கள் ஆட்சி
=======================
கேள்வி கேட்ட அடியவரின் முன்னே அமர்ந்தவர் இருந்தவரின் வாய்மொழி:- சிறப்பா நடந்ததுங்க. ஐயா, சித்தர்களுடைய ஆட்சி நிலைபெறணும்ங்க தங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் குருநாதா.ஐயா,
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் நிலைபெறுமப்பா,
ஏனென்றால், அப்பனே, எவை என்று புரிய? அப்ப, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது வருங்காலத்தில் வாழ முடியாதப்பா,
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இப்பொழுது, அவ் மங்கை சொன்னாளே,.....(பேரழிவு குறித்த கேள்வி கேட்ட பெண்மணி) எதை என்று அறிய அறிய.... இதனால், அப்பனே, ஒருவன் ஒருவன் எடுத்துக்கொள்வான். அவை அழிவு வரும். இவை அழிவு வரும். எதை என்று புரிய அப்பனே, பின் இதனால், அப்பனே, பக்தி. அப்பனே, காசுக்களுக்காக பயன்படுத்துவானப்பா,
இதனால், அப்பனே, முதலில் பக்தி உள்ளவன் திருந்த வேண்டும் என்பேன். அப்பனே,
பின்புதான் அனைவரையும் திருத்த வேண்டும் என்பேன். அப்பனே,
அதனால்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம். அப்பனே, எவை என்று புரிய... அப்பனே,
புரிந்து கொள். அப்பனே,
=============================
# இல்லத்தில் யாராவது ஒருவர் விட்டு விட்டுக் கொடுத்தாலே போதுமானது
=============================
ஒரு பெண்ணடியவர் :- தனது இல்லத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்கின்றது என்று குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர்:- தாயே. எதனால் பிரச்சனை ஏற்படுகின்றது? சொல்!!!!!
பெண் அடியவர்:- என்னுடைய மருமகள் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போகணும்னு சொல்கின்றாள்.
குருநாதர்:- தாயே, நிச்சயம் தன்னில் கூட. இவையெல்லாம் பார்த்துவிட்டேன். நிச்சயம் தன்னில். இவை பொதுவானவையே. அனைவரிடத்திலும் இதுதான் இருக்கும். நிச்சயம் தன்னில் கூட. தன்னை மாற்றிக் கொண்டாலே போதுமானது.
நிச்சயம் யாராவது ஒருவர் விட்டு விட்டுக்கொடுத்தாலே போதுமானது. தாயே, ஆனால் யான் பெரியவன். யான் பெரியவன் என்றால், நிச்சயம் கடைசியில் அழிவுதான்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்:- யாராவது விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்று மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுங்க அம்மா .
ஏன்னா, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்கணும் என்று குருநாதர் கூறுகின்றார்.
ஒரு அடியவர்:- தன்னுடைய இல்லத்தில் நடக்கும் சூழ்நிலை குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது
குருநாதர்:- எதை என்று புரிய!! அப்பா, நிச்சயம் தன்னில் கூட. பின், அதாவது முருகனே. துணை. எவை என்று அறிய. அப்பனே, முருகனே. துணை.
===============================
# இல்லத்தில் கணபதி ஹோமம்
===============================
ஒரு பெண் அடியவர்:- குருநாதரிடம் தனது இல்லத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா என்று கேட்டதற்கு
குருநாதர்:- தாயே, நிச்சயம் செய்!!!! எவை என்று அறிய அறிய சில நிச்சயம் தரித்திரங்கள் இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் :- கண்டிப்பா செய்யணும். அம்மா.
பெண் அடியவர் :- அதுக்கு ஒத்துழைப்பு வீட்ல கிடைக்க வேண்டும்
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட. தரித்திரம் நீங்க வேண்டுமானால், நிச்சயம் தன்னில் கூட. எவை என்று அறிய அறிய!!!
தரித்திரம் அப்படியே இருக்கவே இருக்க. நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்ற கூட கெடுப்பவனும் உண்டு.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் :- அம்மா நீங்கள் கண்டிப்பாக கணபதி ஹோமம் வீட்டில் செய்ய வேண்டும்.
=================================
# இல்லத்தில் எதிர்மறை சக்தி விலக , என்ன செய்ய வேண்டும் ?
=================================
உடன் வந்த அடியவர்:- ஐயா சாமி எதிர்மறை சக்தி அதிகமா இருக்குன்னு சொல்லிருந்தீங்க. முதல்ல அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டதற்கு
குருநாதர்:- அப்பனே, எவையாவது செய் யான் இருக்கின்றேன். அப்பனே,
(ஹோமங்கள்)
ஒரு பெண் அடியவர்:- தன்னுடைய வேலை குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர்:- எவை என்று அறிய அறிய தாயே, நிச்சயம் தன்னில் கூட. இவ் வேலையில் கூட, எதை என்று கூட. வருங்காலத்தில், நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய பின், அதாவது வேலை கேட்பது. வேலையை, பின் அதாவது கேட்பதும், வேலை வாங்குவதும், மிகச் சிரமமே. கவலை விடு.
நிச்சயம் தன்னில் கூட. எவை என்று புரிய பின், அதாவது உன் அருகில் உள்ள பின் ஆலயத்திற்கு சென்று கொண்டே இரு.
=========================================
# முன்னோர்கள் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை அனுபவிக்கும் பொது அவர்களில் பாவத்தையும் அனுபவிக்க வேண்டும்
=========================================
அடியவர்:- சாமி ஏதாவது தோஷங்கள் இருக்கின்றதா? என்று கேட்க !!!
குருநாதர்:- எவை என்று அறிய அறிய அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். அப்பனே, பின் அனைவருக்குமே எதை என்று அறிய அறிய அப்பனே, பின் முன்னோர்கள். (சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை) அப்பனே, பின் அதாவது அனைத்தும் அனுபவிக்க. அப்பனே, உங்களுக்கு சந்தோஷம். ஆனால் பாவத்தை அவர்கள் செய்த பாவத்தை அனுபவிப்பது, அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, அவர்கள் பாவத்தை அனுபவிக்காமல் இருக்க.
பின், அனைத்தும் நீங்களே வைத்துக்கொண்டு, அப்பனே, நீங்களே முன்னேறுங்கள். அப்பனே, யாரும், அப்பனே, பாவத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்பேன். அப்பனே, போதுமா?
ஒரு பெண் அடியவர்:- தன்னுடைய சகோதரி மகனுக்கு திருமணத்திற்காக கேட்ட பொழுது
குருநாதர் :- எதை என்று புரிய தாயே, இதனை தன், அதாவது இவனிடத்திலே ஒப்படைத்து விடு. இவன் சொல்லுவான்.
(குருநாதர் அருகில் இருந்த ஆலய சேவகர்களில் ஒருவரை கைகாட்டி இவனிடத்தில் அந்தப் பிரச்சினையை ஒப்படைத்து விடு என்று கூற)
அந்த சேவகர்:- இவர்கள் எல்லாம் ஆண்டவனிடத்தில் பிரதக்ஷணம் பண்ணி, நமஸ்காரம் செய்துவிட்டு செல்லுங்கள் நல்லதே நடக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு பெண்மணி:- சொந்தமாக வீடு வாங்குவதை குறித்து குருநாதர் இடம் கேட்ட பொழுது...
குருநாதர்:- எதை என்று புரிய!! இவனிடத்தில் (ஆலய சேவகரிடம்) சமர்ப்பித்து விடு. இதையும் கூட,
===================================
# அசைவம் உண்டால் - இறைஅருள் கிடைக்கவே கிடைக்காது
===================================
இவர்கள் இருவருக்கும் குருநாதர் கூறாததற்கு காரணம் இருவரும் அசைவ உணவு உண்ணுபவர்கள்... அசைவ உணவை உண்டு விட்டு அதன் பிறகு ஆலயத்திற்கு வந்துள்ளார்கள்...
திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு அசைவ உணவை விட்டு ஒழித்தால் தான் குருநாதருடைய ஆசீர்வாதமும் முருகனுடைய பரிபூரண அனுக்கிரகமும் கிடைக்கும் அதனால் ஜீவகாருண்யத்தை கடைப்பிடியுங்கள் என்று உபதேசம் அவர்களுக்கு செய்தார் மேலும் விளக்கமும் கொடுத்தார்..
திரு ஜானகிராமன் ஐயாவிற்கு குறிப்பாக குருநாதர் உணர்த்தியதால் ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு.. தெரிவித்தார்.
ஆலய சேவகரும்:- அந்த குடும்பத்தினருக்கு அசைவத்தை விட வேண்டும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் கிடைக்க வேண்டிய அனுக்கிரகங்கள் கிடைக்காமல் போவது வீட்டில் தரித்திரம் பெருகும்.. இறையாற்றல்கள் கிடைக்காது.
குறிப்பாக அசைவ உணவு உண்ணுபவர்களுக்கு முருகனுடைய அருள் பார்வை கிடைக்கவே கிடைக்காது. என்பதை பற்றி நீண்ட விளக்கத்தினை கொடுத்தனர்.
=========================
# ஸ்ரீ ரங்கநாதர் சேவை
=========================
ஒரு அடியவர்:- ரங்கநாதர் சேவை செய்வதை குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட. நீ விரும்பினால் நடக்குமா??? என்ன?
அப்பனே, அவனே (ரங்கநாதர்) விரும்ப வேண்டும். அப்பனே,
நிச்சயம் தன்னில் கவலை விடு என்பேன். அப்பனே,
பின் இவனையே!!!.....
(ஓதிமலை முருகனையே),
பின் அதாவது அனைத்தும் ஒன்றுதான் என்பேன். அப்பனே,
(அதாவது ரங்கநாதரும் முருகனும் ஒன்றுதான் இங்கேயும் சேவை செய்யலாம் என்று குருநாதர் வாக்கில் உணர்த்துகின்றார்)
குருநாதர்:- அப்பனே, எதை என்று கூற அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அப்பனே, கவலை விடுங்கள். அப்பனே, முதலில் முருகனை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.
முருகன் முதலிலே ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். அப்பனே,
அனைவருக்குமே ஆசிகள், ஆசிகளப்பா!!, மீண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், சந்திப்போம். எவை என்று அறிய அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மீண்டும் பின் வாக்குகள் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்க. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அனைவரும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
எவை என்று புரிய அப்பனே, தைப்பூசத்தன்று.
அப்பனே, இங்கு யார் யார் கேட்டுக்கொண்டிருக்கின்றார்களோ? அனைவருமே,...
அப்பனே, தைப்பூசத்தன்று. அப்ப, நிச்சயம் பின் முருகனுக்கு, அப்பனே, பால் குடம் எடுத்து வாருங்கள். அப்பனே,
இவை செய்திட்டு மீண்டும் கேட்டால், யான் சொல்கின்றேன். அப்பனே,
ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)


No comments:
Post a Comment