அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 3
தேதி : 21.1.2026 (புதன்கிழமை)
வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை முருகன் கோவில்
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9
=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகர் நடத்திடுவார் அய்யா.
அடியவர் 6:- (தைப்பூசம் முடிந்த பின் தொடங்கலாம் என்று நினைக்கின்றோம் அய்யா.)
அடியவர் 7:- (முயற்சி செய்து அதை செய்வோம் என்று எண்ணுகின்றோம் அய்யா.)
==========================================
# முருகப்பெருமான் அருளால் அனைத்தும் நடக்கும்
==========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் முருகன் அருளாலே, அனைத்தும் நடக்கும், அப்பா. அப்பனே, சுலபமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, அது, முருகன் அருளாலே சுலபமாக நடக்கும்,
அடியவர் 6:- சரி அய்யா.
========================================
# காலையில கோ பூஜை செய்து , பசுவும் கன்றையும், முதலில் ஆலயத்தின் உள்ளே அழைத்து வரவேண்டும்.
========================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இடை இடையே , அப்பனே, பின் முன்னே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பசும் கன்றையும் கூட, முதலில், அப்பனே, பின் அழைத்துச் செல்லுங்கள், உள்ளே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பசுவும் கன்றையும், முதல்ல வந்து என்ன பண்ணனும்?
அடியவர் 8 :- காலையில கோ பூஜை
சுவடி ஓதும் மைந்தன் :- (காலையில கோ பூஜை செய்து , பசுவும் கன்றையும், முதல்ல உள்ள கொண்டு போகணும்)
=========================================
# அதி காலையில் கோ பூஜை செய்யவில்லை என்றால் நிச்சயம் அடிதான்.
=========================================
குருநாதர் :- அப்பனே, மறந்து விடாதீர்கள், என்பேன், அப்பனே, அப்படி செய்யவில்லை என்றால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அடிதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பா, நீங்க கேள்வி கேட்டீங்க. நீங்க அப்படி செய்யலைன்னா, உங்களுக்கு தான் அடி என்று சொல்லிவிட்டார் )
அடியவர் 5 :- (ஒருமுறை மட்டும் காலையில கோ பூஜை செய்தால் போதுமா ? அய்யா )
குருநாதர் :- அப்பனே, பின் அதாவது ஒரு நாளில், அப்பனே, ஒரு முறை உண்டால் போதுமா, அப்பா?
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
குருநாதர் :- அப்பனே, அல்லது, அப்பனே, பின் அதாவது மாதம் 30 நாட்கள். அப்பனே, இதையும் கேட்பார்கள், 31 என்று. அப்பனே, பின் இருக்கட்டும், அப்பா. பின் ஒரு நாள் உட்கொள்ளலாமா, அப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( தினமும் காலையில கோ பூஜை செய்து, பசுவும் கன்றையும், முதல்ல உள்ள கொண்டு போகணும்)
குருநாதர் :-அப்பனே, பின் யார் யார், பின் முயற்சி செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்லது.
அடியவர் :- சரி அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- (யார் யாரெல்லாம் கும்பாபிஷேகத்திற்கு உதவி , முயற்சி செய்றாங்களோ, அவங்களுக்கு எல்லாருக்கும் நல்லதுப்பா )
அடியவர் :- (எதேச்சையாக காசி யாத்திரைன்னு ஒன்னு வச்சு, கோபு பூஜை எல்லாம் செய்கின்றோம் ஐயா. அது எப்படியோ எங்க மனசுல தோணி, கோபு பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, இதெல்லாம் வந்து, எதேச்சையாக, எங்களுக்காக தோணி பண்ணிட்டு இருக்கீங்க, ஐயா, இறைவன் செயலால் அய்யா. எங்களால் இல்லை அய்யா. அதெல்லாம் எப்படிங்க, ஐயா? - நாங்கள் சரியாக செய்கின்றோமா?- )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அனைத்தும் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது, அப்பனே. அதனால், அப்பனே, பின் சரியாகவே, அப்பனே, பின் முருகன், அப்பனே. அதனால் ஒரே வரியில் சொல்லிவிட்டேன், அப்பனே. சுலபமாக, முருகன் முடித்து வைப்பான், அப்பா.
அடியவர் :- நல்லது, அய்யா.
==============================================
# 50 வயதுக்கு மேல் உடம்பை எப்படி பாதுகாக்க வேண்டும் ?
==============================================
அடியவர் 2 :- ( உடல்நிலை குறித்து கேட்டபோது)
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, அப்பனே, எதனால் கேட்கின்றாய், இக்கேள்வியை, எதனால் கேட்கின்றாய், இக்கேள்வியை?
அடியவர் 2 :- ரெண்டு மூணு தடவை, இந்த உடல்நிலை ரொம்ப சிரமமா இருக்கு, இப்ப ரொம்ப சிரமமா இருக்கு, இப்ப கூட.
குருநாதர் :- அப்பனே, எதை, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒன்றை சொல்கின்றேன், அப்பா.
அப்பனே, நிச்சயம் ஒரு வாகனம், அப்பனே, பின் புதுமையாக வாங்குகின்றாய், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட, பின் அவ்வாறு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில், ஒரு பத்து ஆண்டுகள், பின் நிச்சயம், பின் முடிவடையும் பொழுது, பின் என்னவாக இருக்கும்?
அடியவர் 2 :- ( மாத்தனும் - பழுதடையும் என்ற விதத்தில் பதில் மெதுவாக உரைத்தார்)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பழுது போகும், அப்பா, நிச்சயம் தன்னில் கூட.
இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதற்கு தகுந்தார் போல், அனைத்தும் சரி, சமமாக, என்னென்ன தேவையோ, அதைத்தான், அப்பனே, சரியாக, பின் கவனித்துக் கொண்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் சரியாக ஓடும் என்பேன் அப்பனே.
அதேபோலத்தான், அப்பனே, மனிதனின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கவலைகள் இருக்கக்கூடாது. அப்பனே, என்ன உட்கொள்ள வேண்டுமோ, அப்பனே, என்ன பயிற்சிகள் செய்ய வேண்டுமோ, அவையெல்லாம், அப்பனே, செய்திட்டு வந்தாலே..
அப்பனே, நிச்சயம். 50 வயது மேல் ஆனாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உடம்பில் உள்ள, அப்பனே, அதாவது, பின் மனிதன், பின் அப்பனே, பின் அதாவது, பின் எவை என்று, இப்பொழுதெல்லாம், இயந்திரத்தை கண்டுபிடித்து விட்டார்கள், நிச்சயம் தன்னில் கூட.
=======================================
# இறைவனுக்கு மனிதன் ஒரு இயந்திரமே.
=======================================
குருநாதர் :- ஆனாலும், இறைவனுக்கு, மனிதன், அப்பனே, பின் இயந்திரமே.
இதனால், அப்பனே, நிச்சயம், பின் வயதாக, என்னென்ன கர்மங்கள், அப்பனே, செய்கின்றார்களோ, பின் அக் கர்மங்களுக்கு ஏற்ப, அப்ப, நிச்சயம் தன்னில், ஒவ்வொரு அடியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனை அடித்து, அடித்து, கடைசியில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, முழுவதுமாக, பழுது அடைந்து, அப்பனே, நிச்சயம், அவ் உடல், அப்பனே, பின் அழகாக, அப்பனே, எங்கு சேருகின்றதோ, அங்கு சேர்ந்து விடுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா, ஐயா.
குருநாதர் :- அப்பனே, பின் கவலை விடு, பார்த்துக் கொள்வோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கடைசில என்ன சொன்னாரு,
அடியவர் 9 :- கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலை விடு, பார்த்துக் கொள்வோம்,
அடியவர் 9 :- எனக்கு என்ன பிரச்சனை, ஐயா, என்ன பிரச்சனை, இப்ப என்ன நடந்துட்டு இருக்கு?
குருநாதர் :- அப்பனே, எதை என்று, அப்பனே, இவ்வாறு கேட்கக்கூடாது, அப்பா, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, பிரச்சனையே தேவையில்லை, அப்பனே. பின் முருகன் இருக்கின்றான், அப்பா.
அப்பனே, பிரச்சனை இல்லாமல், அப்பனே, இவ்வுலகத்தில் மனிதன் பிறப்பதே இல்லை, என்பேன், அப்பனே.
பிரச்சனையோடயே பிறக்கின்றான், என்பேன், அப்பனே. அவை, பின் சீர் செய்யவே, முருகன் இருக்கின்றான், என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் என்ன பண்றாங்க, பிரச்சனையோட தான் பிறக்கிறார்கள் , வந்து, பிரச்சனை இல்லாம, ஆளு இல்லை, யாரும் இல்லப்பா, இல்ல, அதனால…
குருநாதர் :- அப்பனே, அனைத்தும் கடந்து செல்ல, அப்பனே, முருகனை வேண்டிக்கொள் அப்பா.
அடியவர் :- (ஒரு பூ முருகனுக்கு சாற்றினாலும் , ஆத்மார்த்தமா, ஸ்ரத்தையா போடு)
===========================================
# மனித உடம்பே இறைவனை துதிக்கவே.
# ஏன் உங்களுக்கு பிரச்சனைகள் வருகின்றது?
# எப்படி பிரச்சனைகளை நீக்க வேண்டும்?
=============================================
குருநாதர் :- அப்பனே, இவ் உடம்பானது, அப்பனே, இறைவனை, இறைவனை, துதிக்கவே அப்பனே. அவ்வாறு துதிக்கவில்லை என்றால், அப்பனே, பல பல, பின் வருத்தங்களை, பின் கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில், இறைவன் அழைத்துக் கொள்கின்றான், அவ்வளவுதான், என்பேன், அப்பனே. போதுமா? இதனால்தான், அப்பனே, பிரச்சனைகள் வருகின்றது.
===================================================
# இறைவனை தினமும் மனம் நிறைந்து போற்றி துதிக்கும் அடியவர்களின் வாழ்க்கை எப்போதும் அருள் நிரம்பியதாக, மகிழ்வாக , நிறைவுடன் இருக்கும். இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே காண முடியும். அவர்கள் பெயரும் புகழும் உயர்ந்து நிற்கும்; காரணம்—அவர்கள் தினமும் இறைவனை நன்றியுடன் நினைத்து துதிப்பதே.
அதனால், அதிகாலை 5–6 மணிக்கும் மாலை 7–8 மணிக்கும் உங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி, இடைவிடாமல் இறைவனை போற்றி துதிக்கவும். இந்த எளிய வழிபாடு உங்கள் மனத்திலிருந்தும், இல்லத்திலிருந்தும் பிரச்சினைகளை அகற்றும். உங்கள் வாழ்க்கை உயர்வை நோக்கி நகரும். சமுதாயத்தில் நீங்கள் மதிப்புடன் நிற்பீர்கள். இறைவன் அருளால் நலமும், மன நிறைவும், சந்தோஷமும் உண்டாகும்.
இது சாதாரண வழிபாடு அல்ல — இது சித்தர்கள் உரைத்த , மாபெரும் இறை அருளை பெறும் மிக சிறந்த வழி. நவகிரக பொடியின் மீது மண் அகல் தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்தது. தீபத்தை எப்படி முறையாக ஏற்றுவது என்பதை சித்தர் அருள் வலைப்பதிவுகளில் படித்து அறிந்து கொள்ளலாம். தீபம் ஏற்றும் பொது ஜீவராசிகளுக்கு அன்னமிடுங்கள்.
===================================================
அடியவர் 10 :- சாமி, ஓதி மலை சுவடி , ஓதிமலை கும்பாபிஷேகம்….
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அனைத்தும் நடக்கும், அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே நடக்கும்ன்றார். அடுத்து கேளுங்க.
அடியவர் 10 :- அருள் பெறுவதற்கு நான் என்ன பண்ணனும்ங்க?
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா…
அடியவர் 10 :- நல்லா இருக்கேன்..அருள் பெறுவதற்கு நான் என்ன பண்ணனும்?
சுவடி ஓதும் மைந்தன் :- (ஓ ..நல்ல இருக்க நீங்க என்ன செய்யணும் என்று கேட்கின்றீர்களா? )
குருநாதர் :- அப்பனே, எதை என்றது, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தலையில், அப்பனே, பின் ஒரு அடி அடித்து, அப்பனே, உன்னை இங்கு வைத்திருக்கின்றான் என்றால், முருகன் ஏதோ ஒரு வேலைக்காக. அவ்வளவுதான். அவ்வேலை யாம் அறிவோம். ஆனால் இப்பொழுது சொல்வதற்கு இல்லை.
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்க எல்லாம் வரல, ஒரு குட்டு குட்டி , உங்களை அது ஏதோ ஒரு வேலைக்காக இங்க வச்சிருக்காரு. ஆனா அந்த வேலை என்ன என்று எனக்கு தெரியும். நான் இப்ப சொல்ல மாட்டேன்.)
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
அடியவர் 10 :- என்னோட பசங்க எல்லாம்,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் முருகன் பார்த்துக் கொள்வான், விடு. அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எப்படியோ வாழ்வோம், அதாவது, எப்படியோ, எவை என்று கூற, அப்பனே, பின் கனவு கண்டாய், என்பேன், அப்பனே. அக்கனவை உடைத்து, இப்பொழுது இங்கு இருக்கின்றாய், அவ்வளவுதான், இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஏதோ பெரிய கனவு, எப்படியோ வாழ்றதுக்கு, ஆனா அந்த கனவு என்ன பண்ணாரு, உடைச்சு என்ன பண்றாரு, இங்க இருக்கார்)
குருநாதர் :- அப்பனே, அதை உடைக்கவில்லை என்றால், அப்பனே, நீ பல குடும்பங்களை கெடுத்திருப்பாய்.
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
அடியவர் :- அவர் மீசையை கட் பண்ண சொல்லுங்க, ஐயா.
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால அப்படி போய் இருந்தால், நீங்களும் கெட்டு இருப்பீங்க, உங்க குடும்பமும் கெட்டு இருக்கும், மத்தவங்களும் நீங்க கெடுத்துட்டு இருப்பீங்க, அதனால அடி எடுத்து ஒரு வேலைக்காக உங்களை வந்து கூட்டிட்டு வந்திருக்கார், அப்ப உங்க குடும்பமும் நல்லா இருக்கும், எல்லாம் நல்லா இருக்கும்)
குருநாதர் :- அப்பனே, எப்படியோ போவது, ஏதோ ஒரு ரூபத்தில், அப்பனே, பின் முருகன் திருப்பி கொடுப்பான் கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படியோ, எது போச்சோ, அதெல்லாம் கவலைப்படாத, திருப்பி முருகன் என்ன பண்ணுவாரு, கொடுப்பார், ஏதோ ஒரு ரூபத்துல வந்து உனக்கு வந்து கொடுப்பார்.
குருநாதர் :- இப்பொழுது, இப்பொழுது அருள் ஆசிகள் பெற்றுக்கொண்டே இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது ஆசிகள் வாங்கிக்கொண்டே இரு,
அடியவர் :- என்னை குரு, குருன்னு கூப்பிடுறானே, ஐயா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் வாயால் தான் சொல்கின்றானே, விடு.
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் )
அடியவர் :- நமச்சிவாயா. ஐயா, அப்படி எல்லாம் கேட்கக்கூடாது, தப்புதான் மன்னித்துக்கொள்ளுங்கள். இதுவரைக்கும் இந்த மாதிரி நாடி யாருக்குமே படிச்சிருக்க மாட்டாங்க.
அடியவர் 11 :- தாயார் உடல் நிலை,
குருநாதர் :- அப்பனே, எதை என்று கூற, அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, பின் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இரு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எப்பொழுதும், அப்பனே, பின் நிச்சயம் “ஓது மலையான்”, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஓதிக்கொண்டே இருப்பான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நல்லதை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு சில விஷயங்கள் சொல்லிக்கொண்டே இருப்பாராம், ஓதி மலையார். அதை செஞ்சுகிட்டே வாங்க. அப்படின்னா எப்படி சொல்றதுனா, யாரோ ஒருவர் மூலம் தெரிவிப்பாங்க.
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல் மடங்கு, அப்பனே, ஒருவர், ஒருவருக்கு, அப்பனே, ஒருவர் பிறப்பு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல பிறப்புகள் இருக்குது, அப்பா.
அப்பனே, ஆனாலும் ஒரு பிறப்பில், அப்பனே, திருத்தலம், திருத்தலமாக, அவை மட்டுமில்லாமல், அப்பனே, இவ் ஓதி மலையில் தங்கி, அப்பனே, பல வழிகளில் கூட, அப்பனே, நன்மைகள் செய்துள்ளாய், அப்பா, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, முருகனிடத்தில் அழுது புலம்பி, அப்பனே, எப்பிறப்பு எடுத்தாலும், நிச்சயம் உனக்கே சேவை செய்ய வேண்டும். பின் அப்படி, பின் செய்தால், பிறப்பு கொடு. இல்லையென்றால், எடுத்து விடு, என்றெல்லாம், நீதான், பின் கேட்டுக்கொண்டு வந்துள்ளாய், அப்பா.
இதனால், அப்பனே, வாழ்க்கை தருவது, இவனிடத்திலே, வேண்டிக்கொள்.
அடியவர் :-என்னமோ, கண்டம் சொன்னாரு, அந்த கண்டம் எல்லாம், ஏதோ கண்டம்,
அடியவர் 11 :- என் வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னு கேட்டு,
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, சரியாக, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அனைத்தும் இவனுக்கே, அப்பனே, பின் அதாவது, இவனே பார்த்துக் கொள்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் முருகரே, பார்த்து, எல்லாம் என்ன பண்ணுவாராம், இவரே வந்து பார்த்துப்பாருன்றார்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, ஒரு பெண் கூட, அப்பனே, பின் உனை, அப்பனே, எவை என்று கூட விரும்பினாள் , அப்பா. நிச்சயம் இங்கு எதை என்று புரிய, அப்பனே. ஆனாலும், பின் அதனால் பிரச்சனை வரும் என்பது, பின் முருகனுக்கு தெரிந்துவிட்டது, அப்பனே. பின் அமைதி.
சுவடி ஓதும் மைந்தன் :- (யாரோ வந்து கல்யாணம் கட்டிக்கலாம்னு யோசிச்சுக்கிறாங்க, யாருன்னு தெரியல. ஆனால் அதனால என்ன ஆகும்?)
அடியவர் :- பிரச்சனை வரும்னு, வேணாம் என்று முருகர் தடுத்துவிட்டார்.
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்ப, நிச்சயம் பெண்கள், அப்பனே, முருகன் நினைத்தால், நிச்சயம் ஆகிவிடும் என்பேன், அப்பனே, சுலபத்தில், அப்பனே, ஏன், அப்பன் நிறுத்துகின்றான் என்றால், விஷயம் இருக்கின்றது, அப்பா, சொல்கின்றேன், வரும் வாக்கியத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு உடனே கல்யாணம் பண்ண முடியும், முருகன் நினைச்சா, இப்பவே பண்ணிட முடியும், ஆனா நிறுத்துகின்றார்னா, ஏன். சொல்லிட்டு ஒன்னு வந்து இது பண்றாரு, அப்பா, அவருக்கு ஏதோ ஒன்னு தெரியும்.
========================================
# இல்லத்தில் , இல்லாதவர்கள் மதிக்காமல் இருப்பது நல்லதே.
========================================
அடியவர் 12 :- ஐயா, வீட்ல மதிக்கிறதே இல்ல, ஐயா. மதிக்கிறதே இல்ல, வீட்ல நல்லா இருக்கு பக்தி.
குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பக்தியில், எவை என்று அறிய, அப்பனே, திருமணமே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. கவலை விடு, மதிக்காமல் இருப்பதே, இப்பொழுது நல்லது.
குருநாதர் :- அப்பனே, மதித்தால், உனக்குத்தான் பிரச்சனை, பிரச்சனை வேண்டுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- மதிக்காம இருக்கிறது தான் நல்லது. அப்படி மதிச்சா உங்களுக்குத்தான் பிரச்சனை.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் மதித்துவிட்டால், அப்பனே, உன்னை திருத்தலத்திற்கு அனுப்ப மாட்டார்கள், அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உன்னை மன்னிச்சிட்டாங்கன்னா, என்ன பண்ணுவாங்க?
அடியவர் :- எந்த கோயிலுக்கும் போக முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இல்லத்தில் ) மாமா , இங்க இருந்துருங்க மாமோவ். எங்கயும் போயிடாதீங்க மாமோவ்.
அடியவர்கள் :- ( இந்த விளக்கம் கேட்ட உடன் பலத்த சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- (வீட்டிலேயே இருந்துருவீங்க நீங்க. எந்த கோயில்லும் போக முடியாது. பரவாயில்லையா? என்று கேட்கின்றார்)
குருநாதர் :- அப்பனே, பின் மதிக்காததால் தான், அப்பனே, இன்னும் இங்கு இருக்கின்றாய் அமர்ந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஐயா, புரியுதுங்களா? மதிச்சா என்ன பண்ணுவாங்க? கோயில் போக விடமாட்டாங்க.)
======================================
# இறைவனுக்கு எது சந்தோசம் கொடுக்கிறதோ அதைத்தான் மனிதர்களுக்கு கொடுப்பார். இது அனைவருக்கும் பொருந்தும்.
=======================================
குருநாதர் :- அப்பனே, இறைவன் மிகப்பெரியவன் என்பேன், அப்பனே. பின் அவனுக்கு, பின் எப்பொழுது, பின் எதை, எதை சந்தோஷம் அடைகிறதோ, அதைத்தான் செய்வான் என்பேன் அப்பனே. இறைவனுக்கு இதுதான் சந்தோஷம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனுக்கு அவருக்கு என்ன சந்தோஷமோ, அப்படித்தான் அனைவருக்கும் பண்ணுவார், அப்ப, இப்படி பண்றது நல்லது, நல்லது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ்வாறு நிச்சயம் மதித்து நடந்தால், அப்பனே, நோய்கள் எளிதில் உந்தனுக்கு வந்துவிடும், அப்பா. இல்லத்திலிருந்து, அப்பனே, நன்று உட்கொண்டு, உட்கொண்டு, உன் உடம்பும் பாழாகிவிடும்.
அடியவர் 12 :- நான் தனியாவே இருக்கேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்.
அடியவர் 12 :- ஆகாரம் சில நாள் கிடைக்கும். சில நாள் கிடைக்காது. செய்ய முடியாது, சாப்பிட முடியாது. கிடைக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- மதித்து இருந்தால், அதுதான் எல்லாம்…
அடியவர் 12 :- நான் தனியாவே இருக்கேன்.
=========================================
# பக்தி என்ற கத்தி மேல் நடக்கும் அடியவர்….
# அனைத்திலும் வென்று விடலாம். ஆனால் பக்தியில் வெல்ல முடியாது.
=========================================
குருநாதர் :- அப்பனே, எது என்றது, அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், அனைவருக்கும். பக்தி என்பது, அப்பனே, சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தி என்பது சாதாரணம், சாதாரணம் இல்லை.
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்திலும் வென்று விடலாம். ஆனால் பக்தியில் வெல்ல முடியாது, அப்பா, ஒருவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்திலும் வென்று விடலாம், ஆனால் பக்தியில் இருந்தவன், பக்தியில் வெல்ல முடியாது, வெல்ல முடியாது.
குருநாதர் :- அப்பனே, பக்தி என்பது இதுதான், அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தி என்பது என்ன? நீங்க இருக்கிறீங்க, பாருங்க, அதுதான் பக்தி.
குருநாதர் :- அப்பனே, ஏற்கனவே, பின் அதாவது முன்னுரைத்திருக்கின்றேன். அப்பனே, பக்தி என்பது, பின் கத்தி போல், என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தி என்பது, கத்தி போல்…
குருநாதர் :- அப்பனே, அதில் நடப்பது எவ்வளவு சிரமம் என்று, அனைவரும் அறிந்ததே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதில் நடப்பது என்பது, கத்தி மீது போய் நடக்க முடியுமா?
அடியவர் 12 :- கத்தி மீது நடக்க முடியாது.
குருநாதர் :- அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் நடக்க முடியவில்லை என்றால், ஓடிவிடுவான், அப்பனே. ஆனால் திரிந்து மீண்டும் அதில்தான் நடக்க வேண்டும். இதுதான் விதி.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, பக்தி, செலுத்தாவிட்டால், என்ன பண்ணனும், ஓடி போயிடலாம், சந்தோஷமா வாழலாம். திருப்பி என்ன பண்ணனும், மறுபடியும் அதே இடத்துல தான் வரனும்.
குருநாதர் :- அப்பனே, கத்தி மேல் , பின் நடந்து முடிந்துவிட்டால், மோட்சம், அப்பா. இறைவனை கண்டுவிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கத்தி மேல நடந்து போயிட்டு, உடனே என்ன பண்ணுவாரு,
அடியவர் 12 :- சுவாமியை பார்த்துவிடலாம்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் கத்தி மேல் நடந்தால், அப்பனே, எதை நினைத்துக் கொள்வாய், நீ?
சுவடி ஓதும் மைந்தன் :- கத்தி மேல் நடக்கும் போது, எதை நினைத்துக் கொள்வாய்,
அடியவர் 12 :- இறைவனை தான் நினைத்துக் கொள்வோம்.
=======================
# பக்தி = கத்தி = பயம்
=======================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் கத்தி, அப்பனே, பின் எவை என்று, அப்பனே, பயம், பயம், அப்பனே, பின் எது என்று அறிய, அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப, கத்தி மேல நடக்கும்போது என்ன? அப்பா, பயம் வந்துரும். எப்பப்பா, என்ன நடந்துரும் என்று)
குருநாதர் :- இதே போல தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் மீது, அப்பனே, பின் எவை என்றது, அப்பனே, பயம் வந்து, அப்பனே, நேர்மை கடைபிடித்து, அப்பனே, தர்மத்தை கடைபிடித்து, மோட்ச கதி அடைந்து, இறைவனை கண்டுவிடலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா, அப்ப, சாதாரணம் இல்லைங்க, பக்தி என்பது.
குருநாதர் :- அதனால்தான், அப்பனே, பக்திக்குள் யாரும் பின் வருவதில்லை என்பேன், அப்பனே. பயப்படுகின்றார்கள் என்பேன் அப்பனே. பக்தி என்பது அனைத்தும் இறைவன் கொடுக்கின்றான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே, மூடர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் கூறுவது: அனைவரும் பக்தியை வெளிப்படுத்தினால் எல்லாவற்றையும் வழங்குவார் என்று எண்ணுவது அறியாமை. அந்த எண்ணத்துடன் வணங்கக் கூடாது.)
=================================
# அனைவருக்கும் இந்த உலகில் ஒரு வேலை உள்ளது.
=================================
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, அனைவருக்கும் ஒரு ஒரு வேலை இருக்கின்றது, அப்பா, அவ் வேலை, அப்பனே, நிச்சயம் யார் ஒருவன் எது என்று, அப்பனே, தெரிவதே இல்லை என்பேன் அப்பனே. இதனால்தான் இதோ பக்கத்தில் உள்ளவன் கேட்டானே, நான் தொழில் செய்ய வேண்டும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும்போது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடமை/சேவை இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதைச் சரியாக நிறைவேற்றினால்தான் வெற்றி கிடைக்கும். இல்லையெனில், இறைவன் வந்து அறிவுறுத்தினாலும் பயன் இல்லை.)
=================================
# கோடியில் ஒருவனுக்கு மட்டுமே தொழில் யோகம் உண்டு. =================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கோடியில் ஒருத்தனுக்கு மட்டுமே, அப்பனே, பின் தொழில் உண்டு, உண்டு,
=================================
# மற்றவர்கள் எல்லாம் இரு வருடமோ, பின் மூன்று வருடமோ, அல்லது நான்கு வருடமோ, அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிட்டது.
=================================
குருநாதர் :- மற்றவர்கள் எல்லாம், அப்பனே, தொழில் செய்தாலும், அப்பனே, பின் இரு வருடமோ, பின் மூன்று வருடமோ, அல்லது நான்கு வருடமோ, அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிட்டது, அப்பனே. மீண்டும், அப்பனே, பின் அதாவது, இப்பொழுது சொல்கிறார்களே, சாமியார் என்றெல்லாம், அப்பனே, பின் மாலை இட்டுக்கொண்டு, திரிந்து கொள்ள வேண்டியதுதான், கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- (என்ன சொல்றாரு, தெரியுங்களா? தொழில் என்பது யாருக்கு, கோடியில் ஒருத்தருக்கு தான், ஓகேங்களா. அப்புறம் மீதி மற்றவர்கள் எல்லாம் அதை மீறி தொழில் செய்தால், என்ன ஆகும்? ரெண்டு வருஷமா, மூணு வருஷமா, இல்லன்னா நாலு வருஷமா, தொழில் நன்றாக ஓடும். அப்புறம் க்ளோஸ் ஆயிட்டு , அப்புறம் என்ன பண்ணுவாங்க? திருப்பி மாலை போட்டு, ஐயா, சாமி, எப்ப சாமி, கோவில்ல சாமியார் போல வலம் வர வேண்டியதுதான்)
குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம் இதை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டியது என்பதெல்லாம் சொல்லிவிட்டேன்,
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தொழில் வந்து உயர்ந்து என்ன சொல்லணும்னு சொல்லிட்டேன்,
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, பின் பக்குவங்கள், அப்பனே, வளர வேண்டும், அப்பனே, ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- நெக்ஸ்ட் கேளுங்க, ஐயா.
அடியவர் 12 :- சாமி, என் படிப்பு, என் படிப்பு எப்படி இருக்கும்?
குருநாதர் :- அப்பனே, உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லை என்றால், யான் சொல்லியும் பிரயோஜனம் இல்லை, அப்பா, குழந்தாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி இருக்கும்போது நான் என்ன சொல்றேன்னு கேக்குறாரு, நல்லா படிக்கணும், ஆசீர்வாதம் பண்ணுன்னு சொல்லி கேளு, நல்லா படிக்கணும்னு சொல்லி…
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அவ்வாறு ஆசீர்வாதம் கொடுத்தால் கூட, அப்பனே, நீதான், அப்பனே, பின் முயற்சி எடுக்க வேண்டும் என்பேன், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வாறு நான் ஆசீர்வாதம் கொடுத்தால் என்ன பண்ணனும்,
அடியவர் 12 :- நான்தான் படிக்கணும்,
சுவடி ஓதும் மைந்தன் :- நீதான் படிக்கணும்,
குருநாதர் :- அப்பனே, அதாவது, இப்பொழுது சொல்லி விடுகின்றேன், ஆசிகள் என்று ஆனாலும், அப்பனே, பின் ஆசிகள் கொடுத்துவிட்டால், நான் ஏன் பின் படிக்க வேண்டும் என்று நீயும் சொல்வாய், அப்பா, வரும் காலத்தில்.
அடியவர்கள் :- (பலத்த சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணுவ நீ வந்து? எனக்கு தான் அவர் ஆசி கொடுத்துட்டாருயா, நான் பாஸ் பண்ண போறேன் அப்ப நான் ஏன் படிக்கணும்? அதை நீயும் சொல்லிடுவ.
குருநாதர் :- அப்பனே, வரும் காலத்தில் வரும் குழந்தைகள் வித்தியாசமானவர்கள் என்பேன், அப்பனே, வித்தியாசமான முறையில் தான் நான் வாக்குகளும் செப்புவேன். அப்பனே, நீயும் ஒரு வித்தியாசமானவன் தான், அப்பா, இதனால் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீயும் ஒரு வித்தியாசமானவன் தான்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற , பின் எவை என்று கூற , வீட்டில், அப்பனே, நல் நன்முறையாக சண்டைகள் இடு, தானாக படிப்பு ஏறும்.
அடியவர்கள் :- (பலத்த சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன் :- (வீட்ல சண்டை போட்டே இரு, நல்லா படிப்பு ஏறும் என்று சொல்லிவிட்டார்.)
அடியவர் :- (இது வஞ்சப்புகழ்ச்சி அணி ..அப்பா சொன்னது)
சுவடி ஓதும் மைந்தன் :- வீட்ல சண்டை போடாம இருக்கணும், ஓகேங்களா.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, அப்பனே, எது என்று அறிய, அப்பனே, இதனால், அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின்னாடி இருக்கும், அப்பனே, அனுமான் போல் இருக்காதே.
சுவடி ஓதும் மைந்தன் :- பின்னாடி அனுமானுக்கு இருக்குது பாரு. வால் மாதிரி இருக்காத என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே, அடுத்து காதலும் வரப்போகின்றது,
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது என்ன கேள்,
அடியவர் 12 :- வீட்ல எல்லாம், வீட்ல சண்டை வராம இருக்குமா, சண்டை வந்துட்டே இருக்கு,
குருநாதர் :- அப்பனே, நீ வாயை மூடிக்கொண்டாலே போதுமானது, அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- நீ வாயை மூடிக்கிட்டாவே போதும்ன்றார், அடுத்து
அடியவர் 12 :- நல்லா படிக்கணும்,
குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நீதான் முயற்சி எடுக்க வேண்டும், அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- அது அப்பவே சொல்லிட்டாரு,
குருநாதர் :- இறைவன், அப்பனே, நிச்சயம் அனைவருக்கும் திறமை கொடுத்திருக்கின்றான் என்பேன், அப்பனே. அதை சரியாக பயன்படுத்துவதும், சரியாக பயன்படுத்தாததும், பின் உங்கள் கையிலே என்பேன், அப்பனே. இறைவன் ஆசிகளோடுதான் பிறக்க வைக்கின்றான் அனைத்தும். அதை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அவன் உறைந்த இடத்தில் வகிக்கின்றான். யார் ஒருவன் சரியாக பயன்படுத்தவில்லையோ, அவன் தாழ்ந்து நிற்கின்றான், அவ்வளவுதான் வாழ்க்கை, அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் கொடுத்து தான் அனுப்பிச்சுக்கிறார், கரெக்டா பயன்படுத்திக்கணும்னா, போயிட்டே இருக்கலாம்
( சில கேள்விகள்)
=======================================
# குழந்தையை சரியாக வளர்ப்பது - அண்ணன் , தம்பிகளிடையே சண்டையே வராது.
=======================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின், அதாவது, சகோதரன், பின், எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இருந்தால், அப்பனே, ஒருவருக்கொருவர், அப்பனே, விட்டுக் கொடுத்தலே, நன்மை என்பேன், அப்பனே. இவையும் கூட, தாய் தந்தை வளர்ப்பதிலே இருக்கின்றது அப்பா.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை வாக்கு தொடரும் …)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete