# விதியை வென்ற அன்பு: அகத்திய மாமுனிவரின் சூரத் திருவிளையாடல்!
=====================================
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
இந்த கலியுகத்தில் உண்மையான பக்தி குறைந்து.. எங்கும் போலியான ஆன்மீகமும் போலியான பக்தர்களும் பெருகி... அநியாயமும் அக்கிரமங்களும் அதிகரித்து வந்த இந்த காலகட்டத்தில்... இந்த உலகம் நன்மை பெற உண்மையான இறைவனை பக்தியை அனைவரும் அறிந்து கொள்ள இறைவனாலும் சித்தர்களாலும் தேர்ந்தெடுத்து பிறவியை கொடுத்து ஜீவநாடியை நல்கி... திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா அவர்களை உலகம் எங்கும் யாத்திரை செய்வித்து... உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை மற்றும் சத்சங்கங்கள்... நடத்தி உண்மையான பக்தி என்றால் என்ன????...
இறைவன் யார்???
இறைவனை எப்படி கண்டறிவது?? எப்படி எல்லாம் நடந்து கொண்டால் ? இறைவன் திருவருளை பெற முடியும்..???. என்பதையெல்லாம் நல் உபதேசங்களாக வாக்குகளை தந்து உலகத்தை மாற்றம் அடைய செய்து கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள்.
பாவத்தை எப்படி குறைக்க வேண்டும்???
புண்ணியத்தை எப்படி அதிகரிக்க வேண்டும்???
எங்கெல்லாம் செல்ல வேண்டும்?
எப்படி எல்லாம் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி நமக்கு ஒவ்வொரு வாக்கிலும் உண்மை நிலையை அறிந்து கொள்ள நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
குருநாதர் அகத்திய பெருமான் , திரு ஜானகிராமன் ஐயா அவர்களை பல ஸ்தலகளுக்கு யாத்திரை செய்வித்து ஜீவ நாடியின் மூலம் பல ஆலய ரகசியங்கள் பல வாக்குகள் நாம் இதுவரை தெரிந்து கொள்ளாத பல புதுமையான அறிவியல் ரீதியான வாக்குகள் அனைத்தும் நம் மீது கருணை கொண்டு நமக்கு வழங்கி நம் அறிவை மேலும் சீர்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையான பக்தியோடு குருநாதரை சரணடைந்து குருநாதர் வாக்குகள் கேட்டு அதன் மூலம் மாற்றம் அடைந்த சம்பவங்கள் ஏராளம் ஏராளம் உண்டு.
இவையெல்லாம் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடியில் குருநாதர்.... உண்மையான பக்தி கொண்ட பக்தர்களை பெரும் பெரும் கண்டங்களில் இருந்தும் ஆபத்துகளிலும் இருந்தும் காப்பாற்றி இருக்கின்றார் அவையெல்லாம் நிறைய அனுபவங்களாக இருக்கின்றன... ஏற்கனவே பல உயிர்களைக் காத்த சம்பவங்களை குருநாதர் செய்த திருவிளையாடலை நாம் கேட்டிருக்கின்றோம்.
இன்னும் ஏராளம் ஏராளமான திருவிளையாடல்கள் இருக்கின்றன... ஆலய வாக்கு கூட்டுப்பிரார்த்தனை வாக்கு சத்சங்க வாக்குகள் தொடர் வரவு காரணமாக அனுபவப் பதிவுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் குருநாதர் மீது அபார நம்பிக்கை வைத்து உண்மையான பக்தியை சிறுவயதில் கடைப்பிடித்து வந்த ஒரு சிறுவனுக்கு மிகப்பெரிய நோய் விதியின் வலிமையால் வந்த பொழுது குருநாதர் அந்த கண்டத்தில் இருந்து மீட்டெடுத்த திருவிளையாடலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கருணைக்கடல் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு.
====================================
# அகத்திய மாமுனிவர் பக்தர் குடும்பம் சூரத் மாநகரத்தில் வசித்து வருகின்றது.
======================================
குஜராத் மாநிலம் சூரத் மாநகரில் ஏராளமான அகத்தியர் பக்தர்கள் இருக்கின்றார்கள் அதில் குறிப்பிடத்தக்க ஒரு அடியவரின் சகோதரர் மகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.
சிறு வயதில் இருந்தே விதியின் தன்மையால் இப்படி அடிக்கடி ஏதாவது ஒரு சிறு சிறு விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கும்.
=======================================
# குருநாதர் , சித்தர்கள் பக்தி கதைகளை சொல்லி சொல்லி வளர்த்த குடும்பம்
=======================================
அந்த அடியவர் சிறுவயதிலிருந்து தன்னுடைய குழந்தைகளுக்கும் மற்றும் தன்னுடைய சகோதரர் குழந்தைகளுக்கும் குருநாதர் அகத்திய பெருமான் மற்றும் அன்னை லோபா முத்திரை தேவியை குறித்தும்.... சித்தர்களை குறித்தும்... அறிமுகப்படுத்தி நல் பக்தியை எப்படி காட்ட வேண்டும்? என்பதை சொல்லி சொல்லி வளர்த்து வருபவர்.
அடியவரின் சகோதரர்கள் தொழில் பணம் என்று அவர்கள் பாதையை தேர்ந்தெடுத்து சென்றாலும் அவர்களுடைய குழந்தைகளை தன் குழந்தையாக எண்ணி அனுதினமும் விளக்கேற்றி வழிபாடு செய்வது ஓம் அகத்தீசாய நமக எனும் மந்திரத்தை அனுதினமும் உச்சரிக்க வேண்டும் எனவும் இப்படியெல்லாம் பக்தியோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவார்.
இடையிடையே அந்த சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் குருநாதர் அகத்திய பெருமான்... ஆசிர்வாதத்தால் விரைவில் மாறிவிடும்.
====================================
# விதியின் நிழலில் சிறுவன்
====================================
அந்தச் சிறுவனுக்கு 13 வயதை எட்டிய கால கட்டத்தில் அந்த சிறுவனின் தொண்டையில் ஒரு கட்டி ஏற்பட்டது... வாய் பேச முடியாத நிலைமை மற்றும் எதையும் உண்ண முடியாத நிலைமை ஏற்பட்டது.கடும் வலி காரணமாக சிறுவன் துடிக்க தொடங்கினான்.
உடனடியாக அடியவரும்.. சிறுவனின் பெற்றோர்களும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையான சிறுவன் வலியால் துடிப்பதை கண்டு குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போயினர்.. உடனடியாக மருத்துவமனையில் தொண்டைப் பகுதியை மறுத்தவர்கள் ஆராய்ந்து அதை சோதனை செய்வதற்காக லேப் க்கு அனுப்பி வைத்தனர்...
=====================================
# தொண்டையில் ஏற்பட்ட சிறிய புற்றுநோய் கட்டி வீங்கி பேசமுடியாமல் கஷ்டப்பட்ட சிறுவன.
=====================================
தொண்டையில் ஏற்பட்ட சிறிய கட்டி வீங்கி எதையும் உண்ண முடியாமல் பேச முடியாமல் அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு கதறிக் கொண்டிருந்தது.
குடும்பத்தினர் அனைவரும் லேபில் இருந்து என்ன? ரிப்போர்ட் வரும் என்பதை யோசித்து மிகவும் பயந்து போயிருந்தனர்.
மருத்துவர்கள் அந்த கட்டியை ஆராய்ந்து இது சாதாரண கட்டி அல்ல !!
புற்றுநோய் கட்டிக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தெரிகின்றது என்றும் மருத்துவர்கள் சொன்னதும் குடும்பத்தினர் அனைவரும் இடிந்து போய்விட்டனர்...
==================================
# கலங்கி, கதறி, கண்ணீர் விட்ட பெற்றோர்கள்
===================================
ஐயோ இந்த சிறு குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா??? ஓடி ஆடி திரிந்து கொண்டிருந்த சிறுவன்... தன் மகனுக்கு இப்படி ஆயிற்றே என்று பெற்றோர்கள்.. கதறி கண்ணீர் விட தொடங்கினார்.
==========================================
# கடினமான சூழ்நிலையிலும் அகத்திய மாமுனிவர் மேல் நம்பிக்கையை கைவிடாத பக்தர்கள்
==========================================
இருந்தாலும் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான அகத்தியர் பக்தர் அடியவர் நம் குருநாதர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கைவிடவில்லை..
என் குரு என் தந்தையானவர் எப்படியும் காப்பாற்றுவார் என்று குடும்பத்தினரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு... திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டார்.... மருத்துவமனையில் இருந்து கொண்டே.... தொடர்பு கொள்ள... அன்றைய பொழுதில் திரு ஜானகிராமன் ஐயாவிடம் ஒரு அடியவர் ... அந்த சிறுவனின் நிலைமை இப்படி உள்ளது
குருநாதர் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ள!!!
======================================
# ஓம் அகத்தீசாய நமஹ - குருவின் திருநாமங்களை சொல்லிச் சொல்லி.. அழுது கொண்டே பிரார்த்தனை
=====================================
மருத்துவமனையில் பல்வேறு விதமான மருத்துவக் கருவிகள்... பெரிய பெரிய மிஷின்கள் உபகரணங்கள் இவற்றையெல்லாம் கண்டு அந்த சிறுவன் பயந்து அழுது கொண்டே ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ என குருவின் திருநாமங்களை சொல்லிச் சொல்லி.. அழுது கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தான்.
அப்பொழுது அவருடைய பெரியப்பா வான அந்த அடியவர்.. தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது...
திரு ஜானகிராமன் ஐயா தொலைபேசி வாயிலாகவே குருநாதர் ஜீவனாடியில் வந்து உரைத்ததை வாசிக்கத் தொடங்கினார்
குருநாதர்... வாக்குகள் நல்க தொடங்கினார்...
===================
# ஜீவநாடி வாக்கு
===================
ஆதி ஈசனின் பொற்பாதத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே நல் முறைகளாகவே என்னையும்.. அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
.(சிறுவன் மருத்துவமனையில் இருந்து கொண்டு)
ஆனாலும் விதியின் வசமோ..??? இவந்தனை எதை என்று கூற... குணமாக கூடாது என்றெல்லாம் கூட பிரம்மன் விதியில்.. எழுதி வைத்திருக்கின்றான்.
ஆனாலும் யான் அங்கே தான் இருக்கின்றேன்...
நீ ஒன்றும் கவலைப்படாதே!!!
அன்பானவர்கள் என்னை... அழைத்தாலே…
யான் ஓடோடி வருவேன் என்பது கூட உந்தனுக்குத் தெரியும் என்பேன்.
ஆனாலும் அவன் தந்தையும்... நிச்சயமாக பின் இறை பலங்கள் பெற்றிருக்க!!!.......
=====================================
# அன்புதான் மூலாதாரம் - பணம் அல்ல
=====================================
ஆனாலும் பணம்தான் மூலாதாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
அது பொய் என்பேன்.
அதனால் அப்பனே அவந்தனை நல் முறைகளாக பல தானங்களை செய்ய வேண்டும் அப்பனே வரும் காலங்களில்.
ஆனாலும் இப்பொழுது யான் காப்பாற்றி விடுவேன் இவந்தனை.
========================================
# பணத்தின் மீது மோகம் கொண்ட சிறுவனின் தந்தையை திருந்துவதற்காகவே குருநாதர் நடத்திய விளையாட்டு - பணத்தால் ஏதும் செய்ய இயலாது. அன்பால் அனைத்தும் நாடக்கும்.
=======================================
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இவந்தன்... (சிறுவனின் தந்தை) திருந்துவதற்காகவே ஒரு விளையாட்டு என்பேன் நல்முறைகளாகவே அப்பனே.
பிரம்மன் எவ்வாறு என்பதையும் கூட இப்பொழுது கூட!! இறைவன் தான் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பேன்.
அப்பனே நல் முறைகளாக கவலைகள் இல்லை... யான் காப்பாற்றுகின்றேன் அப்பனே.
அப்பனே நலமாக நலமாக எவை என்று கூட அப்பனே..... எது உண்மை என்று கூட... யான் அதிவிரைவிலே உந்தனுக்கும்.. ஓர்முறை காட்சி அளிப்பேன் அமைதியாக இரு.
எதுவுமே நிரந்தரம் இல்லை என்று நினைத்துக் கொள்.
எங்கள் அருளால் மட்டுமே அப்பனே அனைத்தும் நிறைவேறும் என்பேன்.
இறை பலங்கள் என்னவென்று தெரியும் என்பேன். ஆனாலும் உங்களை கைவிட மாட்டேன்... பார்த்துக் கொண்டே இருப்பேன் அப்பனே.
===================================
# சிறுவன் வாய் பேச முடியாத நிலைமையிலும் கூட, குருநாதரிடம் பேச முயற்சி செய்தான்.
===================================
குருநாதர் இந்த வாக்குகளை தந்து கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி வாயிலாக மருத்துவமனையில் இருந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அடியவர் மருத்துவ கருவிகள் சோதனையை செய்து மிசினில் இருந்து அந்த சிறுவன் ஸ்ட்ரக்சரில் இருந்து கொண்டு இறங்கி வரும் பொழுது... அந்த அடியவர் ஓடோடி சென்று குருநாதர் வாக்குகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் கவலைப்படாதே என்று அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறும் பொழுது.
நான் குருநாதரிடம் பேச வேண்டும் என்று அந்த சிறுவன் வாய் பேச முடியாத நிலைமையிலும் கூட பேச முயற்சி செய்தான்.
==================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - அன்பு ஒன்றே விதியை மற்றும்.
“யானே உந்தனுக்கு விதியை மாற்றுவேன்.”
==================================
அப்பனே நலமாக நலமாக அப்பனே... செல்லக்குழந்தாய்!!!... உன்னிடத்திலே யான் இருக்கின்றேன்... அப்பனே யான் பார்த்துக் கொள்கின்றேன்.... உன் அன்னை தந்தையோ பணம் பணம் என்றே அதன் பின்னாலே ஓடுகின்றார்கள்.. அப்பனே.
நீ மட்டும்... அன்பை செலுத்துகின்றாயே..... அதற்கு நிச்சயம் யான் உந்தனுக்கு... விதியையே மாற்றுவேன் அப்பனே... கவலைகள் இல்லை!!
அப்பனே நலன்கள் நலன்கள் நல் முறைகளாகவே யான் இருக்கின்றேன்!! உன் தந்தையாகவே!!
யான் காப்பாற்றுகின்றேன் உன்னை!!
உன் விதியையும் மாற்றுகின்றேன் உந்தனுக்கு... நல்லாசிகள் !!
யான் அங்கே தான் உன்னுடன் தான் இருக்கின்றேன். என்று குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.
===================================
# கண்ணீர் மல்க வணக்கத்தையும் நன்றி செலுத்திய குடும்பம்.
===================================
அந்த அடியவரும் கண்ணீர் மல்க வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்து விட்டு மருத்துவமனையிலேயே இருந்தனர்.
=======================================
# அன்பு குருநாதரின் அருள் மழை - ஆச்சரிய படும் முன்னேற்றங்கள். மருத்துவ உலகம் வியந்தது.
=======================================
அன்று மாலையே அந்த சிறுவனின் தொண்டையில் இருந்த கட்டி வீக்கம் குறைய தொடங்கிவிட்டது.... புற்றுநோய்க்கான பிரத்தியோகமாக வரவழைக்கப்பட்ட மருத்துவர் வெளியில் இருந்து வருவதால் மருத்துவமனையிலேயே இரண்டு நாட்கள் அட்மிட் செய்து.... சிறுவனை கண்காணித்து பராமரித்து வந்தனர்.
வெளியில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் சிறுவனின் முன்னேற்றத்தை கண்டு மீண்டும் ஒருமுறை சோதனை செய்து விடுவோம் என்று சோதனை செய்து பார்த்ததில்... சாதாரண வேனல் கட்டி போன்று அதாவது வெயில் கட்டி போன்று.. சுருங்கி காய்ந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்... சோதனை முடிவும் புற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பாசிட்டிவாக வந்தது...
================================
# மருத்துவர்களையே வியக்க வைத்து , மயமான புற்றுநோய்
================================
அந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று கூடி இது எப்படி சாத்தியம்?? என்றெல்லாம் அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.
அந்த அடியவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கிற்று!!! அந்த அடியவரும் என் குருநாதர்... மகிமையை இப்பொழுதாவது பார்த்தீர்களா??? காசு பணம் என்று ஓடிக்கொண்டே இருக்கின்றீர்களே அது நிரந்தரம் இல்லை... இறையருள் தான் நிரந்தரம் இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் என்று தனது சகோதரர் குடும்பத்திற்கு அறிவுரை செய்தார்.
முழுமையாக குணமடைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு சிறுவன் திரும்பி வந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினான்... குடும்பத்தினர் அனைவருக்கும் சந்தோஷம்.
===============================
# நன்றி சொல்ல வந்த குடும்பம்
===============================
ஒரு வாரம் கழித்து அந்த அடியவர் மீண்டும் குருநாதருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்ட பொழுது!!
======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - “என்னிடத்தில் பாசம் வைத்து விட்டால் அப்பனே... பன் மடங்கு யான் திருப்பித் தருவேன்”
======================================
அப்பனே யான்... நலமாகவே முன்னே உரைத்தேன்... அப்பனே..
யான் நலமாகவே என்னிடத்தில் பாசம் வைத்து விட்டால் அப்பனே... பன்மடங்கு யான் திருப்பித் தருவேன்...
அதனால் அப்பனே அவந்தன் என்னை நோக்கி அழைத்தான் (மருத்துவமனையில் இருந்து கொண்டு)
அதனால் யானே அவன் பக்கத்தில் இருந்து மாற்றி அமைத்தேன் அனைத்தையும் கூட... அப்பனே
கவலைகளை விடு..... என்று குருநாதர் நல்லாசிகள் தந்தார்.
===========================================
# அன்பு மட்டுமே எங்களுக்கு போதும் - வேறு எதுவும் வேண்டாம்
===========================================
அப்பனே எங்களுக்கு அபிஷேகம் வேண்டாம்…
பூஜை புனஸ்காரங்கள் வேண்டாம்….
மாலைகள் வேண்டாம்....
நீங்கள் எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்!!!!
நீங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள்... உங்கள் அன்பு மட்டுமே எங்களுக்கு போதும்!!
=========================================
# குருநாதருக்கு , சித்தர்களுக்கு நன்றி செலுத்துவது எப்படி ?
=========================================
இறைவன் உங்களிடத்தில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கின்றான் . அனைத்து உயிர்கள் மீதும் அன்பை மட்டும் செலுத்துங்கள் அதுதான் நீங்கள் எங்களுக்கு காட்டும் நன்றி...
என்று குருநாதர் ஒவ்வொரு வாக்குகளிலும் கூறிக் கொண்டே வருவதை அனைவரும் படித்திருப்பீர்கள் உணர்ந்திருப்பீர்கள்.
அந்த சிறுவன் மருத்துவமனையில் இருந்து கொண்டு எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருந்திருந்தால் அகஸ்தியா!!! அகத்தீசா !!;என்று அந்த சூழ்நிலையிலும் அழைத்துக் கொண்டே இருந்திருப்பார்!???
அந்த அன்பிற்காக விதியையே.. மாற்றி அமைத்து மறுவாழ்வு கொடுத்தார் குருநாதர் அகத்திய பெருமான்.
அன்பிற்காக குருநாதர் மனமிரங்கி செய்த கருணை செயல்... நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
நம் குருநாதர் கருணை தெய்வம்...
எண்ணத்தில் என்னை வை... என்று வாக்கில் கூறியுள்ளதை நாம் கூர்ந்த நம்முடைய மனதில் நிறுத்தி அன்பையும் பக்தியையும் செலுத்துவோம்.
இந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் நடந்து விட்டது... அந்த சிறுவனுக்கு குருநாதர் விதியை மாற்றி அமைத்ததால்.. முன்பு அடிக்கடி ஏற்பட்டு கொண்டிருந்த சிறு சிறு கண்டங்கள் சிறு சிறு விபத்துகளில் இருந்தும் முழுவதுமாக குருநாதரின் அருளால்.. தப்பித்து தற்பொழுது அந்த சிறுவனின் வாழ்க்கையே மாறிவிட்டது... இப்பொழுது அந்த சிறுவன் மேற்படிப்பு படித்து வருகின்றார் நல்முறையாக....
=============================
# நன்றி மறக்காத குடும்பம்
=============================
குருநாதர் உத்தரவுபடி திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சூரத் சத்சங்கம்.. நடத்தும் பொழுது அந்த சிறுவனும் அவரது குடும்பத்தினரும் வந்து குருநாதரை வணங்கி பிரார்த்தனை செய்து கொண்டு நன்றியை தெரிவித்து சென்று கொண்டே இருக்கின்றார்கள் இப்பொழுதும் கூட.
அவரது தந்தையும் மனம் மாற்றம் ஏற்பட்டு இறைபக்தியை நாடி முடிந்தவரை தான தர்மங்களும் செய்து வருகின்றார் குருநாதர் உடைய வாக்குகளும் அவருக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்தது அவர் தற்பொழுது பக்தி வழியில் சென்று குருநாதருக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்கின்றார்.
அன்பு என்றாலே அகத்திய மாமுனிவர் .
அகத்திய மாமுனிவர் என்றாலே அன்பு - என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.
அன்பே சிவம் அன்பே அகத்தியன்!.
=====================================
முடிவுரை: அன்பே அகத்திய மாமுனிவர்
=====================================
இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆழமானது. குருநாதர் தன் ஒவ்வொரு வாக்கிலும் வலியுறுத்தும் செய்தி இதுதான்:
"எங்களுக்கு அபிஷேகம் வேண்டாம்... பூஜை புனஸ்காரங்கள் வேண்டாம்... மாலைகள் வேண்டாம்... நீங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள்... உங்கள் அன்பு மட்டுமே எங்களுக்கு போதும்!!"
ஒரு சிறுவனின் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு ஒன்றுக்காகவே, பிரம்மனால் எழுதப்பட்ட விதியையே குருநாதர் மாற்றியமைத்தார். பணம், பதவி, ஆடம்பரம் போன்றவற்றை இறைவனுக்கோ சித்தர்களுக்கோ தேவையில்லை. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பை மட்டுமே. இந்த நிகழ்வு, "அன்பே சிவம்" என்ற தத்துவத்தின் உயிருள்ள சாட்சியாக நிற்கிறது.
ஆகவே, அன்பு என்றாலே அகத்தியன், அகத்தியன் என்றாலே அன்பு என்பதை உணர்ந்து, நம் குருநாதரை மனதில் தூய்மையான அன்புடன் நினைப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகச் சிறந்த வழிபாடாகும்.
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)


ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete