சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: கடப்பா ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகேஷ்வர் மடாலயம். புவனேஸ்வரி நகர் கேம்பபுரா அக்ரஹாரம்
பெங்களூரு கர்நாடகா.
இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
நலமாக என்னுடைய ஆசிகள். யானும் இங்கேதான் இருக்கின்றேன்.
எனை பார்த்ததும் அவந்தன் எதை என்று அறியாமலே, திடீரென்று, பின் அகத்திய மாமுனிவரே "வருக, வருக" என்று கூறி, நிதானந்தமாக பின் கூறி, திடீரென்று பின் ஆசீர்வாதங்கள் கொடுத்துவிட்டான் அனைவருக்கும் கூட.
இதனால் நலன்களே ஏற்படும் என்பது உறுதி.
இவந்தனும் எதை என்று அறியாமல் இப்பொழுதும் கூட வலம் வந்து கொண்டே இருக்கின்றான் இங்கு.
எவர் ?எவர் ?மனதில் என்னென்ன?? இருக்கின்றது?? என்று சரியான பின் கணிப்பில் கூட இவந்தன் தந்து கொண்டே இருக்கின்றான்.
இதுதான் உண்மை.
அதனால்தான் ஒளி ரூபமாகவே உங்களுக்கு வந்து காட்சி அளித்துவிட்டான் நலமாக.
(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் பக்தர்களுடன் இந்த ஜீவசமாதி மடாலயத்தில் வழிபாடு செய்யும் பொழுது ஜீவசமாதியின் முன்பு ஜீவனாடி பெட்டகம் வைத்து வணங்கிய பொழுது திடீரென ஜீவ சமாதியில் இருந்து ஒரு ஜோதி பிழம்பு தோன்றி ஒரிரு வினாடிகள் வட்டமடித்து தோன்றி மறைந்தது... அனைவரும் அதிசயப்பட்டு விட்டனர்... குருநாதர் இந்த வாக்கில் இப்பொழுது அந்த தெய்வீக நிகழ்வினை கடப்பா சுவாமிகள் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்தார் என்று வாக்கில் குறிப்பிடுகின்றார்)
அதனால்தான் எதை என்று அறிய அறிய உயர்ந்த பக்தியும், நிச்சயம் அலைந்து திரிந்து கொண்டே இருந்தால்தான், நிச்சயம் பின் பக்தி என்பதை கூட தெரியவரும்.
அதனால்தான் பல ஞானியர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் பார்த்தால், பின் எங்கு உள்ளது?? என்பதை இறைவன் அறிந்து அறிந்து அங்கேயே சமாதி அடைந்து விட்டார்கள். இதுதான் பின் உண்மை.
ஆனாலும் எதை என்றும் பின் அளவிற்கு அதிகமாக, பின் எதை என்று கூற சக்திகள் மிகுந்தவன் இவன்.
இதனால் நிச்சயம், நிச்சயம் பின் அனைவரையும் எதை என்று கூற, பின் இன்னும் இன்னும் ஏராளமான ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் வருகின்றான்.
அப்பனே, எதை என்று உணர்ந்து உணர்ந்து, அப்பனையும் நிச்சயம் பின் அம்மையையும் கூட இவந்தன் எதை என்று அறியாமலே பின் எங்கெல்லாம் அலைந்து அலைந்து பின் அவருடைய அருளையும் பெற்றுவிட்டனர்.
அப்பனே, ஞானங்கள் நிச்சயம் திகழ வேண்டும் என்றால், நிச்சயம் பல ஞானியர்கள் அருள் பெற வேண்டும்.
அதனால் நிச்சயம், பின் அவ் ஞானியர்கள் அருளை பெறும் பொழுது, நிச்சயம் அனைத்து அனைத்தும் அவர்களே வந்து நிச்சயம் செய்வார்கள். இப்பொழுது கூட ஞானியர்கள் அலைந்து அலைந்து வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இவந்தனும் இங்கேயே அமர்ந்திருக்கின்றான் என்பது உண்மையப்பா, உண்மையப்பா, வேறொன்றுமில்லை.
நலங்களாகவே, நலங்களாகவே, இவனுடைய பலம் பின் ஏறக்குறைய எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட, பின் பின் கடை எதை என்று இடை எதை என்றும் அறிவிக்கும் அளவிற்கும் கூட, நிச்சயம் கட !! கட!! கட?? .
(கடந்து செல்)
இதுதான் இவனுடைய நிச்சயம் மந்திரம் என்பேன். தாரக மந்திரம் என்பேன். கட!! கட!! என்று சொல்லிவிடுவான். பின் மனிதனை பார்த்தாலே, கட!! கட!! என்று சொல்வான். ஏனென்றால், பின் அவனுடைய உள்ளத்தில் இருக்கும் எதை என்று அறிந்தறிந்து, பின் அனைத்தும் கட என்று சொல்லிவிடுவான். அனைத்தும் கடந்துவிடும்.
இதனால்தான் இவனை நம்பி எதை என்று அறிந்தறிந்து வருவோருக்கெல்லாம் , இவன் தன் கட!! கட!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றான் இப்பொழுதும் கூட.
இதைத் தான் எதை என்று ஆனாலும், எதை என்றும் எவற்றின் என்றும், அதனால்தான் பின் கடையன் இடையன் என்றும் கூற, இவனுடைய நாமங்கள்.
(கட கட.. என்று வருபவர்களிடம் அனைவரிடமும் சொல்லி... கடையன் என்ற திருநாமம் பெற்று கட .அப்பா கட...அப்பா...... என்று சொல்லி சொல்லியவர்.. இவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் வசித்து வந்ததாலும்கடப்பா சுவாமிகள் என்று பெயர் மருவி விட்டது)
ஆனாலும், எதனையும் என்றும் அறிவிக்கும் அளவிற்கும் கூட, ஓரிடத்தில் பிறந்து வளர்ந்து, அதாவது எதை என்றும், பின் எதை தற்பொழுது கூட, பின் ஜோதிடர்கள் எதை என்று அழைக்க, பின் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின் ஸ்ரீசைலம்!!!! (இரண்டாவது ஜோதிர் லிங்கம் ஸ்ரீசைலம் ஆந்திர பிரதேசம்) என்றே அதனையும் குறிப்பிடுவார்கள்.
அங்கேயே பல வருடங்களாக, இவன் தன் இருந்து இருந்து பல ரூபங்களில் கூட ஈசன் எதை என்று அறிவித்து, இவந்தனக்கு பல வழியிலும் கூட காட்சியும் அளித்தான்.
இதனால் அப்படியே அங்குள்ள பல வழியிலும் கூட, பின் இயற்கை எதை என்று அறிவித்து, அங்கே பல விலங்குகளோடு வாழ்ந்து வந்தான்.
எதை என்று பல விலங்குகளே இவந்தனக்கு சொந்தம் என்றாயிற்று.
இதனால் பல பல பின் மனிதனை எதை என்று அறியாமலே (காட்டு விலங்குகள்) கொல்லும் கொல்லும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ, அவையெல்லாம் இவந்தனக்கு பாசமாகி, அதாவது அடிமையாகி, அப்பனே எதை எது என்று கூற, பின் உதவிகள் பல செய்தது என்பேன்.
இதனால் எதை என்று அறிய அறிய, இதுவே போதும், இச் சொந்தங்களே போதும் என்று வாழ்ந்தவன் இவன்.
ஆனாலும், பின் எதை என்று அறிய அறிய, பின்பு பின்பு மீண்டும் மீண்டும், பின் அதாவது ஈசனை தொழுது தொழுது, பின் மக்கள் இவ்வாறெல்லாம் கஷ்டங்கள் படுகின்றார்களே!!!! என்று நினைத்து நினைத்து, பின் ஆனாலும் ஏதாவது ஒன்று செய்வோம்.
இப் பிறவியும் இப்படி வந்துவிட்டது, ஆனாலும் என்று நினைத்து, ஆனாலும், பின் அங்கும் இங்கும் பல வடிவங்களில் கூட சென்றான்.
அதனால் நிச்சயம் எதை என்றும் அறியும் ஓர் உதாரணத்தை சொல்கின்றேன்.
நிச்சயம் எதை என்று அறிய அறிய, ஓர் பின் பசுவானவன் எதை என்று அறிந்தறிந்து, அவன் தனக்கும் பின் லிங்கானவனே என்று நாமத்தில் இருந்தான். அதாவது ஸ்ரீசைலம் அருகிலே.
(லிங்கா என்ற நாமத்தை உடைய பசுக்களை மேய்ப்பவர்)
இவனுக்கு என்ன வேலை??? என்பதை கூட, பின் பசு மாடுகள் எதை என்று அறிய அறிய, அதாவது பின் மேய்ப்பதே தொழில்.
இதன் மூலம் வருவாய் வரும், அதாவது எதை என்று அறிய அறிய. இதனால் நிச்சயம் ஒருமுறை, இவன் தனக்கு அதன் மூலம் வருவாய் இல்லை. பின் நோய்கள் ஏற்பட்டுவிட்டது.
ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து, பின் ஈசனே, இப்படி உன்னைத்தான் நம்பிக் கொண்டிருந்தேனே. பல வாயில்லா ஜீவராசிகளுக்கு யான் நிச்சயம் உதவி அளித்துக் கொண்டிருந்தேனே. கடைசியில், இப்படி இழுத்து விட்டாயே என்று ஈசனிடம் மன்றாட,
ஆனாலும் நிச்சயமாய் விடவில்லை.
எதை என்று அறிய அறிய, அதனால் நிச்சயம், பின் அதாவது பின் பசு மாட்டிற்கும் எதை என்று அறிந்தறிந்து, அவ் வடிவிலே வந்து பல வழியிலும் கூட, அதாவது எதை என்று அறிந்து அறிந்து, பின் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும், இவந்தனக்கு நன்றாகவே தெரியும் என்பது உறுதி. (கடப்பா சுவாமிகளுக்கு)
இதனால், பின் அவ்வழியாக பசும் எதை என்று கூற, பின் கன்றாகவே எதை என்று அறிந்தறிந்து, பின் பெரும் பசுவாகவே, பின் வந்து பன்மடங்கு, பின் எதை என்று அறிந்தறிந்து, பின் பல பல வழிகளிலும் கூட,
பின் அதாவது இப்பொழுது கூட பாலின் நிறம் எதை என்று கூற, பாலின் பின் அதனை வைத்துக்கொண்டு, இன்னும் பன் மடங்காகவே, அவன்தனும் உயர்த்தி விட்டான்.
(கடப்பா சுவாமிகள் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையின் மூலம் பசுவினோடு பசுவாக வந்து அதிகப்படியாக பால் வரும்படி செய்து லிங்கா என்னும் பசு மேய்ப்பவரின் வாழ்க்கையை உயர்த்தி விட்டார்)
எதை எதை என்று அறிவதற்கு, அதனால் பல குழந்தைகள் எதை என்று அறிய அறிய. இதனால் மீண்டும் மீண்டும், பின் அவ் எதை என்று உணராமலே, பின் உயர்ந்த இடத்திற்கு சென்றுவிட்டான்.
இதனால் மீண்டும் எதை என்று அறிய, பின் பசு வடிவில் வந்தவன், அப்படியே மீண்டும் எதை என்று அறியாமலே, பசுவோடு சென்றுவிட்டான். அது இவன்தான்.
அதனால் கூடுவிட்டு கூடு வித்தையும் எதை என்று பார்த்ததும், எதை என்று அறியாமலே, மீண்டும் அங்கு சென்று, பின் உடலை பார்த்தவுடன், சந்தோஷம். ஆனாலும் எதனை என்றும் அறிய அறிய,
ஆனாலும் இவன் தன் புண்ணியங்கள் செய்வதற்காகவே வந்தவன். அதனால் அப் புண்ணியத்தின் காரணமாகவே, உடலும் அங்கே இருந்தது.
சித்தர்களும் காப்பாற்றினார்கள். எதை என்று அறிய அறிய,
பின் தேரையனும் அங்கே இருந்தான். நிச்சயம் எதை என்று அறிய அறிய, விஸ்வாமித்திரனும் அவ்நேரம் அங்கேதான் இருந்தான்.
மீண்டும் வந்து விட்டான். எதை என்று அறிய அறிய, பின் எதை என்று அப் பசுவின் தன் எதை என்று அறிந்து, பின் மீண்டும் நலமாகவே, அவ்வுடலில் புகுந்துவிட்டான்.
இவ்வாறு பல லீலைகள், இவந்தன் செய்தவன்.
இதனால் எதை என்று அறிய அறிய, இப்பொழுது கூட, அதனால் எதை என்று கூற, பின் எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து, அப்பனே, பின் ஏதும் இல்லாதவர்களுக்கும், நிச்சயம், இப்பொழுது கூட, பின் ஏதாவது ஒரு ரூபத்தில் சென்று, இவந்தன் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றான் பன்மடங்கு. யான் பார்த்துவிட்டேன்.
எதை என்று அறிந்தறிந்து, இங்கேயும் கூட, பின் ஏதும் இல்லாதவர்கள் இங்கு வந்தால், எதன் வழியாக சென்றடைய வேண்டும்??, யார்??? மூலமாக சென்று உதவிகள் செய்ய வேண்டும் என்பதை கூட அறிந்து அறிந்து செய்வான் அப்பனே.
இதனால்தான் எதனை என்று கூற, உயர்ந்த மனிதனாகவே, எப்பொழுதும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
ஈசனும் பல சக்திகள் கொடுத்து கொடுத்து, நீயும் எதை என்று அறிய அறிய, பல வழியில் கூட சேவை செய் என்று கூட.
ஆனாலும் பல பல வழிகளில் கூட, பின் எதை என்று அறிந்தறிந்து, வீர பிரம்மையா என்றும் கூட, தற்பொழுது கூட, பின் அவன் நாமம்.
(ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மய்யா எனும் வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தெலுங்கு சித்த புருஷர்.
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் (வீரபிரம்மேந்திர சுவாமிகள்) என்பவர், எதிர்கால நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்து, அவற்றை 'காலக்ஞானம்' என்ற ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்த சித்தர்.
காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது.ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார்.
பிறப்பு: சுமார் 1604-ல் தெலுங்கு தேசத்தில் உள்ள பிரமந்தபுரத்தில் பிறந்தார்.
கால ஞானம்: கலியுகத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி 14,000 ஓலைச் சுவடிகளில் எழுதி, பனகானபள்ளியில் உள்ள ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்.
சீடர்கள்: சாதி, மதங்களைக் கடந்து சித்தையா (Siddyya) மற்றும் கக்கையா (Kakkayya) போன்றவர்களை முக்கிய சீடர்களாக ஏற்று ஆன்மிக ஞானத்தைப் போதித்தார்.
போதனைகள்: ஆன்மிக ஞானம், குண்டலினி யோகம், மனித உடலில் உள்ள சக்கரங்கள் பற்றிப் போதித்தார்.
அதிசயங்கள்: எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை (சுனாமி, வெள்ளம், அரசியல் மாற்றங்கள்) முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.
மறைவு: 'சஜீவ சமாதி' எனப்படும் உயிருடன் சமாதி அடைந்தார்.)
அவனிடத்தில் கூட, இவன் தன் இருந்தவன்.
( வீர பிரம்மய்யாவிடம் சீடனாக கடப்பா சுவாமிகள் இருந்தவர்)
இதனால் பல வழிகளில் கூட, இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கும்??? என்பதையும் கூட கணித்தவன் இவனே.
எதை என்று அறிந்தறிந்து. இதனால் இப்படி எல்லாம் வாழும், எதை என்று அறிந்து அறிந்து, பின் உலகம் இப்படி எல்லாம் போகும் என்று அறிந்தறிந்து, பின் பல நாமங்களை, அதாவது எதை என்று அறிந்து அறிந்து, பல எவை என்று உணர்ந்து உணர்ந்து, பல தவங்களை செய்தவன்.
இதனால் பின் தவத்தின் வழியாகவே, ஈசனும் பின் காட்சி அளித்து, நிச்சயம் எதை வேண்டும்???? என்று கூற,
நிச்சயம், பின் ஈசனே, உன்னை நோக்கி தவம் புரிந்திருக்கின்றேன்.
இதனால் அனைத்து திறன்களும் கொடு, ஏனென்றால் கலியுகத்தில் மக்களை காக்கவே, எதை என்று மக்கள் எப்படி எப்படியோ வாழ்வார்கள்.
அதையெல்லாம் நிச்சயம், ஆனாலும் கெட்டவர்களும் எதை என்று அறிய அறிய, நல்லவர்களும் ஆனாலும் இதனை பாகுபடுத்த என்னால் முடியாது.
ஆனாலும் பின் ஏதும் இல்லாதவர்கள் கூட, நல் மனது உள்ளவர்கள் கூட,
நிச்சயம், அதாவது கெட்டவனாக இருந்தாலும், என்னால் மாற்ற இயலும். அவ் சக்தியை கொடு என்பதற்கிணங்க,
ஈசனும் ஐயனே, அப்படி எல்லாம் வேண்டாம். நிச்சயம் அனைத்தும் எந்தனுக்கே தெரியும், தெரிந்து தெரிந்து, எதை என்றும் அறியாமலும்,
ஆனாலும் பின் மீண்டும் இவன் தன் கேட்டான்.
ஈசனாரே!!!, எதை என்று அறிய அறிய, நிச்சயம் உன்னை நோக்கி தவம் இருந்தேன். அதனால் சக்தியை கொடு, யான் நல்லதற்காகவே பயன்படுத்துகின்றேன் என்று கூறி பல சக்திகளும் பெற்றுவிட்டான்.
இதனால் பல வழிகளிலும் கூட, எதை என்று அறிய அறிய, இன்னும் சொல்கின்றேன்.
எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின் தற்பொழுது கூட, “கடப்பா” ....(ஆந்திராவில் உள்ள நகரம்) எனும் நகரிலே, எதை என்று அறிந்தறிந்து, அங்கே பல வழியில் கூட, பசுக்களுக்கும் பின் கன்றுகளுக்கு நோய் ஏற்பட்டுவிட்டது.
பல பல பல வழிகளிலும் கூட, அதாவது ஆயிரக்கணக்கான பசுக்கள், பின் மடிந்து விட்டது.
பின் எதை என்று அறிந்து, இவந்தனக்கு என்ன யோசனை என்று தோன்றியதை, இதனையும் பிழைக்க வைக்க முடியும் என்று கூற, நிச்சயம் ஈசன் அருளால் அனைத்தும் மீண்டும் உயிர்பித்து, பின் அனைத்தும், பின் சொந்தங்களாக, இவனை வந்து, கட்டி அணைத்துக் கொண்டன.
இதனால் நிச்சயம் எதை என்று அறிந்தறிந்து, அதனால்தான் மனிதர்களுக்கெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். பின் உயிர்களிடத்தில் பாசம் காட்டுங்கள், அன்பும் காட்டுங்கள் என்றெல்லாம்.
நிச்சயம் அவ் மீது எதை என்று அறிந்தறிந்து, நிச்சயம் எவை என்று உணர்ந்து உணர்ந்து, பாசம் காட்டிக் கொண்டே வந்தால், நிச்சயம் அனைத்தும் நலமாகும். உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வான்.
இன்று கூட எதை என்று அறிந்தறிந்து, ஒரு பசு எதை என்று பின் வந்து வந்து செல்கின்றது. இவனை பார்க்கவே, எதை என்று அறிந்தறிந்து,
இவனிடத்திலே எதை என்று அறிய பிறவி போதாது என்பதற்கிணங்க, இங்கேயே எதை என்று இதன் தூரத்திலே, பின் வலம் வந்து கொண்டே இருக்கின்றது. இதுதான் சிறப்பு.
அதனால்தான் மனிதனின் எவ்வுயிராக இருந்தாலும், நிச்சயம் பாசங்கள் பின் விடுவதில்லை.
இதனால் எத்தனை? எத்தனை ?மாயங்கள், பிறவிகள் போதும் என்ற நிலைமைக்கு, இதனால் என்னுடைய ஆசிகளும் அருளும், இவந்தன் அழகாகவே பெற்றவன்.
என்னையும் எதை என்று அறிந்தறிந்து, பின் புரிந்து புரிந்து, பின் அகத்தினுக்கும் பன்மடங்கு எதை என்று பல உயர்வுகள் எதை என்று அகத்தியனாலும் கொடுக்க முடியும் என்று கூட, இவன் யோசித்தவன்.
அதனால் என்னையும் பல வழிகளில் கூட, எதை என்று பின்பற்றி பின்பற்றி, அதனால்தான் பின் யான் வந்தவுடனே, இவந்தனக்கு பின் அதிர்ச்சி.
அவை மட்டுமில்லாமல், என் குருநாதன் அகத்தியனே வந்துவிட்டான் என்று கூற, மகிழ்ச்சியாக பொங்கெடுத்து, அதன் மூலம் ஒரு (ஜோதி) ரூபத்தை காட்டினான். இதுதான் மெய்.
மெய் சிலிர்க்க வைத்தது என்பதை கூற, பின் அதனால்தான் சீடன் எதை எதை என்று அறிந்தறிந்து, என் சீடனும் எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின் அனைவருக்கும் நல்லதை செய்து கொண்டே இருக்கின்றான்.
இன்னும் எதனால் எதனால் என்று கூற, பல வழிகளிலும் கூட, பல சித்தர்களும் கூட, இவந்தனக்கு ஆசிகள் கொடுத்து கொடுத்து வந்து சென்று கொண்டே தான், எதை என்று அறிந்தறிந்து, ஏற்கனவே.
அதனால் இவந்தனக்கும் பல திறமைகள்.
ஞானிகள், ஞானிகள், எதை எதற்காக?? ஞானிகள் என்று கூற, ஞானியானவன் எதற்கும் துணிந்தவன், எதை என்று அறிந்தறிந்து, ஒரு ஞானியானவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை.
அதனால் பல ஊர்களாக, ஊர்களாக, ஈசனை நோக்கி நோக்கி சுற்றிக் கொண்டிருந்தான்.
இதனால் கடைசியில் எதை என்று அறியாமலே, இன்னும் இன்னும் பின் பல வகையிலும் கூட, பன்மடங்கு உயர்வுகள் பெறவே, நிச்சயம் இவந்தனை சரணடைந்து விட்டால், உடனடியாக ஆராய்ந்து ஆராய்ந்து, இவந்தனே கொடுப்பான்.
அதனால் நிச்சயம் பல பல வழிகளில் கூட, ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்.
பின் எந்தனுக்கு ஏதும் இல்லையே!!!, பின் நீதான் துணை என்று வந்துவிட்டால், நிச்சயம் யாராவது ஒரு மனிதன் மூலமாகவே, பின் எதை என்று அறிந்து, அவன் மூலமாகவே சென்று, பல வழிகளில் உதவி செய்ய, நிச்சயம் பல மனிதர்களும் கூட, இங்குள்ள பின் பல பல பல வழிகளில் கூட, வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளான்.
அதனால்தான் அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினையிலும் கூட, அப்பனே இருந்து தப்பிக்க என்ன வழி??? என்றெல்லாம் யான் கூறிக் கொண்டே இருக்கின்றேன்.
ஆனாலும் நிச்சயம் தப்பிக்க முடியவில்லையே.
அதனால்தான் புசண்ட முனியும் எதை என்று கோபத்திலே வந்து சொல்லிவிட்டான். வாக்குகள்.
ஆனால் அப்பனே எதை என்று அறிய அறிய, ஆனாலும் நிச்சயம் யான் காப்பாற்றுவேன், காப்பாற்றுவேன் அப்பனே.
ஒவ்வொருவனும் எதை அறிந்து, பின் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே.
எது என்று அறிந்து, பின் யான் சொல்லியதெல்லாம் நீங்கள் எதை என்று அறிந்து செய்தீர்களா??? என்பதை கூட,
ஆனாலும் அப்பனே நிச்சயம் செய்யவில்லை எதை என்று அறிந்து.
அப்பொழுது எப்படித்தான் அப்பனே????
யானும் விதியின் பாதையும் கூட என் பக்தர்களுக்கு மாற்றி அமைக்க அமைக்க, பின் போராடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆனாலும் சில மனிதர்களே விதியையும் கூட எதை என்று, பின் என் வழியில் வந்து மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
அதனால் நிச்சயம் எதை என்று அறிந்தறிந்து வரும் காலங்களில், எதை என்று அறிந்தறிந்து, பின் பின்னரும் எது என்று உணர்ந்து உணர்ந்து, பின் எதற்காக? கஷ்டங்கள் வருகின்றது??? என்பதை கூட..யானே தெளிவாகவே பின் ஏற்படுத்துவேன் அப்பனே...
நிச்சயம் என்னில் இருந்து எது என்று கூற, சித்தர்கள் எதை என்று அறிந்தறிந்து உணர்ந்தவர்கள் என்பேன். அப்பனே,
அதனால் எங்களிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாது என்பேன் அப்பனே நலமாகவே.
=========================================
# நம் தந்தை அகத்திய மாமுனிவர் வழியில் வரும் அனைத்து அடியார்களுக்கும்….
=========================================
அதனால் எங்களுடைய, பின் அதாவது எங்களுடன் பயணிக்கும் மனிதர்களுக்கு, நிச்சயம் அப்பனே அனைத்தும் செய்வோம், அனைத்தும் செய்வோம் எதை என்று அறிந்தறிந்து.
ஆனாலும் அப்பனே உண்மைதனை, பின் ஆனாலும் எதை எதை என்று அறிய அறிய, இப்படியே போய்க் கொண்டிருந்தாலும், அப்பனே, பின் எது என்று அறிய அறிய. அதனால்தான், அப்பனே நலங்கள் நலங்கள் மிஞ்சும் மிஞ்சும் என்னுடைய அருளாலும், அப்பனே.
அதனால்தான் ஒவ்வொரு ஞானியரையும் கூட யான் காண்பித்துக் கொண்டே இருக்கின்றேன்.
ஆனாலும், அப்பனே, இப்பொழுது இல்லை என்றாலும், அப்பனே, எதை எதை என்று கூற வரும் சன்னதிகளுக்கு, நிச்சயமாய் இதை ஒரு ஒளி விளக்காக, அதாவது நிச்சயம் எது என்று கலியுகத்தில், நிச்சயம் (வாக்குகள்) அனைத்தும் (வாக்குகள்) இவை சேர்ந்து கொண்டே இருக்கும்.
இன்னும், பின் நன்மையான பிறவிகள், அதாவது நல்லோர்கள் பிறப்பார்கள், அவருக்கு தெரிந்துவிடும்.
அகத்தியன் சொன்னான், எது என்று அறிந்து, நிச்சயம் அதனால்தான் வாக்குகள் அனைவருக்கும் எதை என்று அறிய அறிய, இன்னும் வரப்போகின்றவர்களுக்கும், நிச்சயம் பயன்படும் என்பேன் அப்பனே.
நலமாகவே.
இதனால், நிச்சயம் உலகம் உறுதி எதை என்று அறிந்தறிந்து, அப்பனே, நிச்சயம் பக்தியில் பின் செலுத்தப் போவது உறுதி என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம், நிச்சயம் ஏற்றங்கள்.
இதனால், இன்னும் ஞானியர்கள், பின் வழி வழியாக வந்தவர்கள் கூட, எங்கெங்கு இருக்கின்றார்கள்??? என்பதை கூட, நிச்சயம் காண்பிப்பேன், காண்பிப்பேன்.
எதை என்று அறிந்து அறிந்து உண்மைகளை பல பலவாறு. அப்பனே, நலமாகவே.
அதனால், பல பல சித்து விளையாட்டுகளும், இவந்தன் செய்தவன் என்பேன். அப்பனே, நலமாகவே.
அப்பனே, நோய்களையும் எது என்று அறிந்தும், அப்பனே, உடனடியாக கட ! கட ! என்றுதான் இவந்தன் சொல்வான் என்பேன் அப்பனே. நலமாகவே.
அது கடந்து போகும். அப்படியே!!! சொல்லிவிட்டேன் அப்பனே,
எவை எவை என்று அறிந்தறிந்து, அப்பனே, இவன் பேசுவதும், அப்பனே, நிச்சயம் இல்லை என்பேன். அப்பனே,
எவர் வந்தாலும் கட என்று ஒரு வார்த்தை சொல்லி விடுவான். அப்பனே. அப்படியே கர்மங்களும் கடந்துவிடும் என்பேன். அப்பனே,
இதுதான் வாழ்க்கையின் தத்துவம் என்பேன் அப்பனே.
இப்பொழுது கூட, அப்பனே, வருவோருக்கெல்லாம் கட !! கட !! என்றுதான் சொல்லிக் கொண்டே இருக்கின்றான். அப்பனே, அதனால் கடந்து போகும். அப்பனே, அனைத்தும் எதை என்று,
அதனால்தான் இவனுடைய எதை என்று அறிந்தறிந்து, யானும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து, அப்பனே, இன்னும் மெய்ஞான, பின் ஞானியர்களும் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இவந்தனும் அப்பனே, இவந்தனக்கு பிடித்தவனாக உண்டு, மகிழ்ந்து இங்கேயே, அப்பனே, எதை என்று அறிந்து சரியாகவே. அப்பனே, இங்கும் கூட நலமாகவே, நலமாகவே உறங்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
இதனால், அப்பனே, வருவோருக்கெல்லாம் , அப்பனே, ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான்.
அப்பனே, இவனுடைய எதை என்று லீலைகள் இன்னும் இன்னும் ஏற்கனவே காகபுசண்டன் எதை என்று அறிய அறிய. அப்பனே, எவை என்று உணர்ந்து உணர்ந்து சொல்லியது எதை என்று, பின் அவனுடைய எதை என்றும் உணரும் அளவிற்கும் கூட சக்திகள் உண்டு. உண்டு, ஏராளம் என்பேன். அப்பனே.
பல பிறப்புகள் கடந்தாலும், அப்பனே, ஆனாலும் எதை என்று அறிய அறிய, பின் மீண்டும் ஈசனிடத்திற்கு சென்று சென்று,!!!
ஈசனும் உந்தனுக்கு பிறவிகள் வேண்டுமா?? என்று கேட்க, நிச்சயம் எதை என்று அறிய அறிய, பின் ஈசனும்!!
எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின் எந்தனுக்கு பிறவிகளே வேண்டாம்.
ஆனாலும், நிச்சயம் இவ்வுடம்பு வேண்டாம்.
நிச்சயம் ஒளி ரூபமாகவே, எந்தனுக்கு, அதாவது மனிதர்களை மாற்றும் சக்தி கொடு என்று கூறிவிட்டு,
இப்பொழுது ஒளி ரூபமாகவே வந்து, மனிதனை மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.
அவ் ஒளிதான் இப்பொழுது தென்பட்டது. நிச்சயம் கண்களுக்கு,
(ஜோதி ரூபம் அங்கு கூடியிருந்த அடியவர்கள் அனைவருக்கும் தரிசனம் கிடைத்தது)
நிச்சயம் உண்டு. உண்டு, ஏற்றங்கள், என்னுடைய அருள்கள், ஆசிகள் இன்னும் பன்மடங்காகும்.
===========================================
# அகத்திய மாமுனிவரை மிஞ்சிய விஞ்ஞானம் இவ்வுலகில் இல்லை
===========================================
“““““““““““என்னை மிஞ்சிய எதை என்று அறிய அறிய, எவற்றின் என்று உண்மைகளை புரிய புரிய, இன்னும் பின் விஞ்ஞானம் எதை என்று உயரும் அளவிற்கும் கூட சக்திகள் இல்லை.””””””””
அதனால், நிச்சயம் பல கண்டுபிடிப்புகளை யானும் கண்டுபிடித்துள்ளேன். நலமாகவே,
அவையெல்லாம் வரும் காலங்களில், நிச்சயம் மக்களுக்கு எடுத்துரைப்பேன்.
ஏதாவது ஒரு வழியாக, அதை தெரிந்து கொண்டாலே, இறைவன் இருப்பது மெய்யாகிவிடும் என்பதை எதை என்று அறிந்தறிந்து.
இப்பொழுது கூட ஏனோ தானோ??? என்று கூட, அப்பனே, இறைவனையும் வணங்குகின்றார்கள்.
ஏதோ இறைவன் கொடுத்து விடுவான் என்று கூட,
ஆனாலும் உண்மைப் பொருளை முதலில் உணர வேண்டும்.
அவையெல்லாம் எப்படி உணர்தல்??? என்பதை கூட வரும் காலங்களில், நிச்சயம் எடுத்து உரைப்பேன் அப்பனே.
அப்பொழுதுதான் சரியாக புரிந்து கொண்டு, நிச்சயம் இறைவனை அடைய அடைய, சக்திகள் புகுந்து புகுந்து, அப்பனே, அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே.
இப்பொழுது கூட எதை என்று அறிந்தறிந்து, யான் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, அவந்தனும் அழகாகவே கேட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
இதுதான் எதை என்று அறிய அறிய ஒரு ஞானிக்கு அழகு என்பேன். அப்பனே,
ஆனாலும் தற்போது நிலைமையில் இருக்கும் அப்பனே, எதை என்று மனிதன் கூட யான் ஞானி, ஞானி என்று சொல்லிவிட்டு, யான் ஞானி, யான்தான் உயர்ந்தவன், எந்தனைக்கே அனைத்தும் தெரியும் என்று கூட, பொய்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
எதற்காக? இவையெல்லாம் வீண்? அப்பனே, ஆனால் இதையெல்லாம் ஒரு நேரத்தில், நிச்சயம் இறைவன் முன் நின்று பதில் சொல்லி ஆக வேண்டும் என்பேன் அப்பனே.
இதற்கு இறைவன் மௌனம் தான் காப்பான் என்பேன்.
அதனால் வந்தவை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பேன் அப்பனே.
அதனால் சித்தர்களை வணங்கினோமே, இவ்வாறு செய்தோமே என்றெல்லாம், நிச்சயம் எதை என்று அறிய, உண்மை மனதை தொட்டுச் சொல்லுங்கள் அப்பனே.
நலமாகவே அப்பனே, அதனால் உண்மைப் பொருளை எதை என்று அறிய அறிய, அப்பனே, புசண்டனும் நலமாகவே அறியுங்கள், அறியுங்கள். உண்மைப் பொருளை என்றெல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றான் அப்பனே.
நலமாகவே என்னுடைய ஆசிகள். அப்பனே, இன்னும் இன்னும் எதை எதை என்று அறிய அறிய. அப்பனே, ஆனாலும் இதற்கு சான்றாக . அப்பனே, எங்கு எதை என்று அறிய அறிய. இங்கு வந்தவனுக்கும் பல சோதனைகள்.
இவந்னக்கு எதை என்று அறியாமலே,
இவனையும் கூட எதை என்று ஏன் இங்கு வந்தான்?????. இவந்தனக்கு இங்கு என்ன வேலைகள்???? என்றெல்லாம்,
இவந்தனையும் பின்னர் அடியாட்கள் மூலமாகவே தற்பொழுது, அதாவது பெரிய ராஜாவாக வாழ்ந்து வந்த இவ் தேசத்திற்கு.
எதை என்று பின் பல அடியாட்களையும் அனுப்பினான்.
பின் இவந்தனை இங்கே விட்டு, ஏனென்றால் பின் ஒருநாள் எதை என்று அவ் ராஜாவே எதை என்று அறிய அறிய, பல மக்களுக்கு எதை என்று அறியாமலே, பின் நோய்களை உருவாக்கி, அவ் நோய்களை யாமே குணப்படுத்தினால், நிச்சயம் மீண்டும் ராஜாங்கத்தில் அடைந்து விடுவோம் என்ற எண்ணத்தோடு பல நோய்களை பரப்பினான்.
அதாவது அதில் ஒன்று கூற எது என்று, அவ் பல அரசர்கள் எதை என்று அறிய அறிய, பல நோய்களை பரப்பி விட்டான்.
ஆனாலும் அதில் எதை என்று அறியாமலே, மீண்டும் அவனால் குணப்படுத்தவில்லை.
ஆனாலும் பின் எதை என்று அவ் பரவி, எதை என்று அறிய ஆனாலும், இவந்தனக்கு தெரிந்துவிட்டது.
அனைத்தும், அதாவது மாற்றி அமைத்தான்.
இதனால் இவந்தனக்கும் எதை என்று அறிய அறிய, இவந்தனை விட்டுவிட்டால், நம் தன் இங்கே ராஜாவாக வாழ முடியாது என்று, இவந்தனை பின் எதை என்று, பின் இவன் சீடர்களை வைத்து அடிக்க முற்ப்பட்டு, பின் அடித்து எதனை என்று இவனை விரட்ட விட வேண்டும் என்று எண்ணி..
ஆனாலும் இவந்தன் விடுவானா என்ன?
உடனே பின் எதை என்று, பின் அதாவது மாயமாகி, பின் ராஜாவிடத்தில் நின்றான்.
ஆனாலும் பார்த்திட்டான், நீ அங்கேதான் இருந்தாயே,??? எதனை என்றும் அறிந்தறிந்து, ஏன் இங்கே வந்து விட்டாய்? என்று எண்ணி, எதனை என்றும் உண்டு.
அதனால் ராஜாவும் பின் எதை என்று அறிந்தறிந்து, அப்பனே, அவந்தனும் திருந்தி , இறைவா, எதை என்று கூற, ஞானியே !!! என்று கால் விழுந்துவிட்டான். இவ் ராஜா எதை என்று அறிய அறிய, நலங்களே, நீயே பதவி ஏற்றுக்கொள் என்று பல வழியிலும் கூட,
இவந்தன் எதை என்று அறிய அறிய, ஆனாலும் யான் ஒத்துக்கொள்ளவில்லை.
எதை என்று எவை என்று கூற, பின் இவந்தனும் ஒத்துக்கொள்ளவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் பல நபர்களுக்கு எதை என்று அறிய, நீயே, நீயே ராஜாவாக இருந்து, அனைத்தும் செய்க!! என்று கூறி, உத்தரவிட்டு விட்டான்.
ஆனாலும் பெரிய ராஜாவாகி, அவந்தனும் பல வழியில் கூட, பல மனிதருக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.
அவ் ராஜாவின் பெயர் இன்றும் கூட நிலைத்துக் கொண்டிருக்கின்றது, அப்பனே நலமாகவே.
அதனால்தான், அப்பனே, ஒவ்வொரு வினைக்கும் சமமான வினைகளும், எதை எதை என்று எதிர்கொள்ளும் நோக்கும் அளவிற்கும் கூட உண்டு என்பதை கூட, அப்பனே, நீங்கள் உணர்ந்திருங்கள் அப்பனே,
நிச்சயம் பொய்கள், அப்பா, மனிதர்கள் எதை என்று அறிய அறிய, அவ் பொய்யான மனிதனை உண்மையாக்க வேண்டும்.
இதற்கு நிச்சயம் சித்தர்கள் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நலமாக, நலமாக. இன்னும் இன்னும் இவனைப் பற்றியும் எதை என்று அறிய அறிய சொல்வதற்கும் வழிகள் இல்லை.
எதை என்று அறிய அறிய. அதனால், அப்பனே, உயர்ந்த ஞானியாவன் பற்றியும் கூட, அப்பனே, எதை என்று அறிய.
அப்பனே, இவ்வுலகத்தில், பின் உயிர் பிரியும் நேரத்தில், அதாவது எதை என்று அறிய அறிய, அப்பனே, நிச்சயம் உயிர் பிழைக்க மட்டும், எது என்று அறியாமலே, பின் இறந்த உடலை, நிச்சயம் எதை என்று அறிய, மீண்டும் பின் உயிர் பெற முடியாது.
ஆனால் இவனால் முடியும் அப்பனே.
ஆனாலும் இதை என்று அறிய அறிய, பின் ஈசனும் எதை என்று அறிய, பின் பல நபர்களையும் இவன் காப்பாற்றி இருக்கின்றான் அப்பனே.
ஆனாலும் ஈசன் இட்ட கட்டளை இப்படி இருந்தால், எப்படி??? எதை என்று அறிந்து, அறிந்து என்று கூற.
அதனால் பின் நல்லோர்கள் எதை என்று அறிய அறிய, பின் இவனால் என்ன? இவ்வுலகத்திற்கு ஏற்படும, அவன்தனை மட்டும் அவன் புண்ணியங்கள் பார்த்து பிழைக்க வை.
இதனால், அப்பனே, எது என்று அறிய அறிய, இன்னும் கூட எதை என்று அறியாமலே, இவன் தன் பல மனிதர்களை பிழைத்து வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே தத்ரூபமாகவே!!!
அப்பனே, பல பல வழியிலும் கூட, இங்கே கூட பல சித்தர்கள் வந்து வந்து, அப்பனே, (திருமூலர்) மூலனும் பல வழிகளில் கூட, பின் உயர்ந்த உயர்ந்த வழிகளில் கூட, பின் ஞான மார்க்கத்திற்கு ஏற்றவே வந்து கொண்டு, எது என்று உணர்ந்து, உணர்ந்து, அப்பனே, இன்னும் இன்னும் மறைபொருளாக சித்தர்கள் இங்கே ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள், அப்பனே.
அதனால்தான் ஒளித்தும் வைத்து விட்டார்கள், அப்பனே.
அதனால்தான் எதை என்று அறிய அறிய, இப்பொழுதும் கூட இன்னும் இங்கிருந்து பல பல வழியில் கூட சில கிலோமீட்டர் அளவிலே, அப்பனே, லிங்கங்கள், பின் அவரவர் இல்லத்தில் கூட மறைத்து வைத்துவிட்டனர்.
அதனால்தான், அப்பனே, அதன் சக்தி மிகுந்து இங்கெல்லாம் பண மழையில் தான் இருக்கின்றது என்பேன். அதனால், எதை என்று அறிந்தறிந்து, அதனால், அப்பனே, இதனை சொல்லிவிட்டாலும், அப்பனே, எதை என்று உணர்ந்து, உணர்ந்து, இன்னும் இன்னும் ஞானங்கள் தோன்றி, தோன்றி, அப்பனே, எவை என்று கூற, வள்ளல் பெருமானும்(வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்), அதாவது எது என்று அங்கு இங்கிருந்து பல வழியிலும் கூட பல மனிதர்களுக்கு உபசரித்தான் என்பேன், அப்பனே.
நலமாகவே, ( வள்ளலார் ஜீவகாருண்யம் உபதேசம் )
அதனால் இன்னும் இன்னும் ஞானிகள் பற்றி சொல்லப் போகின்றேன், அப்பனே. வலம் வலமாக, அதனால் நல் முறையாகவே எனது ஆசிகள்!
ஆசிகள் !!
ஆசிகள் !!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
மடாலயம் மற்றும் விபரங்கள்
கடப்பா ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர் மத்தளயம் டிரஸ்ட் (ஆர்),
புவனேஷ்வரி நகர், கெம்பபுரா அக்ரஹாரா, பெங்களூரு - 560023.
கோவில் நடைபாதை
முக்கிய கோவில் சுடப்பா ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரரின் ஜீவ சமாதி.
இதில் ஏகாம்பரேஸ்வரர், சிவாகமசுந்தரியுடன் கூடிய நடராஜர், முருகன் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன.
பூதா, இயேசு கிறிஸ்து மற்றும் பிறை நிலவு உருவங்கள் வெளி வராண்டாவில் காணப்படுகின்றன.
ஆசிரம வளாகத்தில் சனீஸ்வரன், ஐயப்பன், ராஜராஜேஸ்வரி கோவில்கள் உள்ளன.
ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு வடக்கே நவக்கிரகம் கோவிலைக் காணலாம்
மடத்தின் உள்ளே கடப்பா ஸ்வாமி சிலையுடன் கூடிய குளம் (புஷ்கரணி) உள்ளது.
அதன் அடியில் நாகதேவதை, தக்ஷண மூர்த்தி, நவக்கிரக செடிகள், கணபதி, காமதேனு, வைஷ்ணோதேவி, வீரபத்ரா, தத்தாத்ரேயர் போன்றவர்களின் சிலைகள் உள்ளன.
கிளைகள்:
1. காடிகோடா கிராமம், கடப்பா, ஆந்திரப் பிரதேசம்.
2. தாம்பரம் சென்னை , மயிலாடுதுறை , தமிழ்நாட்டில் சேலம் .
3. KGF (கோலார் தங்க வயல்) கர்நாடகா.
4. மலேசியா
5. சிங்கப்பூர்.
6. நெடில் தென்னாப்பிரிக்கா .
7. அமெரிக்கா
மேடத்தில் செயல்பாடுகள்
யோகா பயிற்சி மற்றும் தியான வகுப்புகள்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பஜன் மற்றும் சொற்பொழிவாளர்கள்
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிபூஜை மற்றும் அன்னதானம்
ஸ்ரீ யோகேஸ்வரரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் - ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 அன்று
குரு பூஜை - ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9.
ஆஷாட/ஆடி பூஜைகள் - ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்.
ஐயப்ப பூஜை - ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 - ஜனவரி 14
தனுர்மாச பூஜை - 16 டிசம்பர் - 14 ஜன, திருப்பாவை, திருவெம்பாவி, பாராயணம்.
https://share.google/Mjd0Bc2VMX05YYs1s
https://share.google/GPplXlIFHOMgWZW2n
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!



.jpeg)

No comments:
Post a Comment