அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - தைப்பூசம் ரகசியங்கள் - குறும் பதிவு.
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=10h17m58s
(வணக்கம் அடியவர்களே , தைப்பூசம் 1-2-2026 அன்று வர இருப்பதால் , தைப்பூசம் குறித்து குருநாதர் அளித்த ஒரு ரகசிய வாக்கு இங்கு குறும் பதிவாக வெளியிடுகின்றோம். கூட்டு பிரார்த்தனை வாக்கு முழுவதும் பின்னர் வெளிவரும். இவ் குறும் பதிவை அடியவர்கள் பயன்படுத்தி கொள்க. அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்)
=====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=====================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
=============================================
# உங்களுக்கு குறைகளை தானாக நீங்கிவிடும் தைப்பூசம் ரகசியங்கள்
=============================================
குருநாதர் :- எதை என்று புரிய அப்பா, பின் இன்னொரு ரகசியத்தையும் சொல்கின்றேன். தைப்பூசத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
குருநாதர் :- அறிந்தும், அப்பா, நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் சனி, ராகு, கேது. ஆனால் தைப்பூசம் அன்று மட்டுமே, பின் நிச்சயம் செவ்வாய் என்ற கிரகம் இதனை விட மேல் நோக்கி இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (தைப்பூசம் அன்னைக்கு ஒரு நாள், செய்வாய் கிரகம் , இந்த சனி, ராகு, கேது கிரகங்களை விட செவ்வாய் மேல போயிடும். உயர இருக்கும். அதாவது செவ்வாய் கிரகத்திற்கு பலம் அதிகம். தைப்பூசம் அன்னைக்கு ஒரு நாள்தான் சல்லுன்னு மேல போயிட்டு, சல்லுன்னு கீழே இறங்கும். அன்னைக்கு நீங்க முருகப்பெருமானை வழிபட்டால் அவ்வளவு சிறப்பு. அதுக்குதான் தைப்பூசம் அவ்வளவு விசேஷம்.)
==========================================
# வரும் தைப்பூசம் அன்று தீபங்கள் பன்மடங்கு ஏற்றுங்கள். முருகப்பெருமானுக்கு நிச்சயம் என்ன தர வேண்டுமோ, அவை பின் தாருங்கள்.
===========================================
குருநாதர் :- இதனால் அன்று எதை என்று புரிய, பின் இதனால்தான் முருகப்பெருமானுக்கு எதை என்று அறிய செவ்வாய் ரூபமாக இருப்பதுதான் காரணம். எதை என்று புரிய இதனால் அன்றைய தினத்தில் நிச்சயம் தன்னில் கூட தீபங்கள் பன்மடங்கு ஏற்றி, முருகப்பெருமானுக்கு நிச்சயம் என்ன தர வேண்டுமோ, அவை பின் தாருங்கள்.
குருநாதர் :- அவை மட்டும் ஏன், நிச்சயம் பசும்பாலில் அவனை நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் குளிப்பாட்டுகிறார்கள். நிச்சயம் பசுமாட்டிற்கு அவ்வளவு சக்திகள் இருக்கின்றது.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் பசுமாட்டிற்கு, நிச்சயம் தன்னில் கூட அதில் இருக்கும். நிச்சயம் தன்னில் சில சில நுண்ணுயிர்களும் கூட அப்பிரபஞ்ச, அதாவது ( அண்டத்தில் உள்ள இறை ) அவ் நெருப்பு சக்தியை ஈர்க்கும் தன்மை உடையது. அதனால்தான் வேண்டினவை, நிச்சயம் தன்னில் கூட பசும்பாலை, நிச்சயம் அவன் மேல் ஊற்றி, நிச்சயம் தன்னில் கூட பின் முருகனை வேண்டிக் கொண்டாள், முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால், நிச்சயம் அவை உடனடியாக அங்கும் இங்கும் எதிரொளிக்கும். நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (தைப்பூசத்துக்கு எதுக்கு சிறப்பு? அபிஷேகம் பசும்பால்ல, அபிஷேகம் பண்றதுக்கு காரணம் . நுண்ணுயிர்கள். அந்த பால்ல கலந்திருக்க கூடிய நுண்ணுயிர்கள் வைப்ரேட் ஆகக்கூடிய தன்மை இருக்கு. வைப்ரேட் ஆகும் போது, ஊத்தும் பொழுது இங்கேயும் அங்க வைப்ரேட் ஆகும். அந்த வைப்ரேட் ஆகும் பொழுது என்ன ஆகும்? நீங்க நினைக்கிறது கொஞ்சம் நடக்கும்.)
=================================
# இவ் தைப்பூச வழிபாடு செய்தால், உங்கள் குறைகள் தானாக நீங்கிவிடும்.
=================================
குருநாதர் :- இவையெல்லாம் செய்து வந்தால், உங்களுக்கு குறைகளை நிச்சயம் யான் நீக்குவது என்ன? தானாக நீங்கிவிடும். இறைவன் நீக்குவது என்ன? தானாக நீங்கிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப யாருமே தேவையில்லை. இதெல்லாம் செஞ்சா, இறைவன் எதை நீக்குவது? நாங்க எதுக்கு உங்கள் குறைகளை நீக்குவது? உங்களுக்கு சொல்லிக் கொடுத்தோம்னா போதும். நீங்க அது தானாகவே நீங்கி விடும். நான் யார் நீக்குவதற்கு? இறைவன் யார் நீக்குவதற்கு? உன் குறைகள் தானாகவே நீங்கி விடும்.)
குருநாதர் :- இதனால்தான் பெரிய அறிஞர்கள் தன் வாழ்க்கை தன் கையில் என்று, உன் வாழ்க்கை உன் கையில் என்றும் நினைத்துக் கொள்ளலாமே.
குருநாதர் :- எதை என்று புரிய? நிச்சயம் இவை தெரியாதவர்கள் அலைந்து திரிந்து, கடைசியில் எதை என்று புரிய? இறைவன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குருநாதர் :- இதனால், அப்பா, உண்மை நிலைகளை உங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதன்படி நீங்கள் நடந்து கொண்டால், உங்களை நீங்கள் வென்றுவிடலாம். இதனால், யான் கொடுப்பது உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்? இறைவன் தான் என்ன கொடுக்க வேண்டும்? நீங்களே நிச்சயம் சொல்லுங்கள்?
======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த தைப்பூசம் ரகசியங்கள் வாக்கு குறும் பதிவு நிறைவு.
======================================
அடியவர்கள் குருநாதர் அருளால், வரும் தைப்பூசம் அன்று சிறப்பாக முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யுங்கள். தைப்பூசம் அன்று செவ்வாய் கிரகம் மற்ற கிரகங்களை விட அதிக பலம் பெறும். அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு பசும்பால் அபிஷேகம் செய்வதும், பல தீபங்கள் ஏற்றுவதும் பிரபஞ்ச இறை சக்தியை ஈர்க்கும். இந்த வழிபாட்டு ரகசியங்களைப் பின்பற்றினால் மனிதர்களின் குறைகள் தானாகவே நீங்கிவிடும். அனைவருக்கும் இவ் ரகசியங்கள் மற்றும் பலன்களை எடுத்துரைத்து , புண்ணியங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment