​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 2 January 2026

சித்தன் அருள் - 2063 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - பகுதி - 3



அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு : https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h57m05s


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

=====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=====================================

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :- (குறை ஒன்றும் எனக்கில்லை என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள் ).... கோவிந்தா ………   குறை ஒன்றும் எனக்கில்லை, குருநாதா……

குருநாதர் :- அப்பனே, ஆசிகள் இதுபோலத்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக அனைவருக்குமே இப்ப, நிச்சயம் தன்னில் கூட ஒன்றிணைந்து அனைவரையும் காக்க முடியும் அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் சொல்றாரு, இது மாதிரி ஒருத்தரை காப்பாத்துறதை விட, எல்லாரும் ஒன்றிணைத்து தான் நாங்க குறைகள் தீர்க்க முடியும். ஏன்னா, ஒருத்தரை பார்த்துட்டோம்னா, அவர் வந்து அப்படியே, அப்படியே, ஏதும் செய்யாமல் நின்னுடுவார். பல மக்களை இப்படித்தான் எங்களால வந்து காப்பாத்த முடியும். )

குருநாதர் :-  அப்பப்பா, அறிந்து கூட இன்னும் மனதானது பேய்கள் நிறைந்துள்ளது. அப்பா, இப்பேயாட்டங்களை, அப்பனே, முறையீதில் விரட்டினாலே, அப்பனே, இதைத்தன் காக புசண்டன் தான் உரைப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல, மனிதனிடத்தில் என்ன இருக்குது?

அடியவர் :-  பேய்.

சுவடி ஓதும் மைந்தன் :-  பேயாட்டம், அதை முதல்ல அடிச்சா மட்டும்தான். எல்லாம் சரிப்படும்ன்றாங்க. அது வந்து காக புசண்டர் தான் உரைப்பார். 

=============================
# குருநாதர் கூட்டுப் பிரார்த்தனைக்கு பல ஞானிகளை  வரவழைத்துள்ளார்
=============================

குருநாதர் :-  ஆனாலும், இன்றோ முக்கியத்துவம் அறிந்தும், எவை என்று அறிந்தும் கூட, நிச்சயம் தன்னில் கூட இங்கு பின் ஞானிகள் உலா வந்து கொண்டே இருப்பார்கள். எதை என்று அறிய, பின் அதாவது ஈசனை இதனால் இங்கும் பின் அவர்களை யான் வரவழைத்துள்ளேன்.  அவர்கள் மூலம் நீங்கள் ஆசி பெற்றுச் செல்க.

அடியவர் :- நமசிவாய.

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு? சூட்சுமமா, நான் ஞானிகள் எல்லாம் குருநாதர் நமக்காக வர வச்சிருக்காங்க. வரவழைச்சு, இதுதான் முக்கியம். இன்னைக்கு என்றார், வந்து ரகசியமாக யாரும் தெரியாது ஆனா வந்து. ஆமா, ஐயா, யார் வந்திருக்காங்கன்னு நமக்கு தெரியாது. நமக்கு ஆசி கொடுக்கறதுக்காக குருநாதர் நம்ம மேல கருணை கொண்டு வர வச்சிருக்காங்க. அவங்க ஆசிகளை கொடுக்கறதுக்காக வந்திருக்காங்க. அதனால, எல்லாரும் அமைதியா நம்ம இறைவனை வந்து துதிக்கணும் என்றாங்க.

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய, இன்னும் இக்கலியுகம் நோய்கள் யுகங்களாகவே மாறிக்கொண்டே செல்லும். எதனால் அதனையும் தடுக்க போகணும் பின் வரும் வரும் வாக்கியத்தில் சொல்வான். முதலில் அறிந்தும் கூட எதை என்று கூற, பின் பேயாட்டங்கள் மனிதனிடத்தில் அதிகம் உள்ளதப்பா. 

=============================
# குருநாதர் கூட்டுப் பிரார்த்தனைக்கு மூக்குப்பொடி சித்தரை   வரவழைத்துள்ளார்
=============================

குருநாதர் :-  இதை மாற்றவே, நிச்சயம் தன்னில் ஏதோ நடத்துகின்றார்கள் என்று எதை என்று புரிந்தும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யானும் வரவழைத்து எவை என்று அறிந்தும் கூட. இதனால், அப்பனே, இவ்பைத்தியங்களை சந்திக்க வரப்போகின்றேன் என்று மூக்குப்பொடியானும், நிச்சயம் தன்னில் கூட ஆசீர்வதிப்பான்.

குருநாதர் :-  எதை எவை என்று புரிய, ஆனால் உங்களுக்கு தெரியாது. வரவழைத்தது 

================================
# ஏன் கூட்டுப்  பிரார்த்தனையில் பல ரகசியங்கள் உரைக்கப்படுகிறது? 
================================

குருநாதர் :-  இதனாலே, அறிந்தும் புரிந்தும் எவை என்று அறிய, ஆனாலும், அறிந்தும் ஒருவனுக்காக, நிச்சயம் தன்னில் கூட செப்பினால், அது பலன் இல்லாமல் போய்விடுகின்றது  அப்பனே, அறிந்தும் கூட. 

குருநாதர் :-  இதனால்தான் எங்கெல்லாம் அழைத்து, எதை செப்ப வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று செப்பினாலே, நிச்சயம், அதாவது, நீங்கள் ஒன்றுமே செய்ய தேவையில்லை. 

குருநாதர் :-  யாங்களே அறிந்து கூட (புண்ணியத்தை கூட்டுவோம்) , பின் அதனால்தான், புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள். புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். அதை நீங்கள் சம்பாதித்துக் கொண்டால், நிச்சயம் தன்னில் கூட, ஞானிகளை எவருக்கெவர், எவருக்கெவர், எதை என்று அறிந்து கூட, யாங்களே வரவழைப்போம். கர்மத்தையும் போக்க வைப்போம். நீங்களும் வாழலாம், உங்களை சார்ந்தவர்களும் வெற்றி கொள்ளலாம். நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் நினைத்ததை, எதை என்று, ஒரு கலியுகத்தில், நிச்சயம் சிறிதேயாவது நடக்கலாம்.

குருநாதர் :-  எவை என்று அறிவித்து, இன்னும் வாக்கியங்கள் உண்டு. சித்தர்களின் வாக்கியங்கள் தெளிவடையும். இதனால், முதலில் புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். கலியுகத்தில், மனிதனிடத்தில், புண்ணியங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.

குருநாதர் :-  அப்பனே, நல்ல ஆசிகளாக, இதனைத்தான், அப்பனே, பின் பன்மடங்கு எவை என்று அறிந்தும் கூட. இதனால், அப்பனே, புண்ணியங்கள், அப்பனே, உங்களுக்கு செலுத்தினால் தான், அப்பனே, நிச்சயம், ஈசனும் கண்ணுக்கு தெரிவானப்பா. உண்மை நிலையில் தெரியுமப்பா. புண்ணியம் இல்லை என்றால், அப்பனே, பின் அதாவது, எதையும் அறிந்து கொள்ள முடியாதப்பா.

======================================
# புண்ணியங்கள் இல்லாவிட்டால் மனிதன் மனிதனே அடித்துக் கொள்வான்
======================================

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, அதனை, அதனால், அப்பனே, இப்புண்ணியங்கள் இல்லாவிடில், அப்பனே, மனிதன் மனிதனே அடித்துக் கொள்வான் என்பேன் அப்பனே. மனிதன் மனிதன் அடித்துக் கொண்டு சாவான் என்பேன் அப்பனே. அதனால், அப்பனே, உங்களுக்கு, அப்பனே, எப்படி எல்லாம் புண்ணியங்கள், அதாவது, அப்பனே, பின் நிச்சயம் சித்தர்கள் ஏதோ செய்வார்கள் என்று வந்துவிட்டீர்கள் அப்பனே. தெரிந்தும் தெரியாமலே செய்தே ஆக வேண்டும் கட்டாயம் என்பேன். அப்பனே. செய்வோம் அப்பனே. 

===========================================
# குருநாதரின் மகிமை புகழ் சீடர்கள்  கண்டுபிடித்ததை, இனிமேல் வித்தியாசமான முறையில் அனைவருக்கும் செப்புவார்கள் அவர்களே. 
===========================================

குருநாதர் :-  அப்பனே, என் சீடர்களும், அப்பனே, உங்களுக்கு பல வழியில் கூட மந்திரங்களையும் கூட, அப்பனே, இன்னும் எவை செய்ய வேண்டும் என்றெல்லாம், அப்பனே, வித்தியாச முறையில் செப்பி, அப்பனே, பின் உங்களை சீர்நிலை ஆக்குவார்கள் என்பேன் அப்பனே. இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, என் சீடர்கள், அப்பனே, பல வகைகளும், பல வித்தைகள் கண்டு உணர்ந்துள்ளார் என்பேன் அப்பனே. ஆனால் மனித குலத்திற்கு அது தெரியாமல் போய்விட்டது. நிச்சயம் யான் வந்து கொண்டே இருக்கின்றேன், அல்லவா? அவர்களும் வந்து செப்புவார்கள் என்னுடைய அனுக்கிரகத்தாலே.


அடியவர் :- (மதுரையில வந்து குருநாதர் வந்து ஒரு பெரிய ஆசிரமம் அமைச்சு, எல்லா சீடர்களையும், சீடர்களையும் வந்து, அவருடைய சீடர்களை எல்லாம் கூப்பிட்டு, இந்த மாதிரி இந்த மனிதனுக்கு, இந்த உலகத்துக்கு என்ன தேவை? கலியுகத்துல மனுஷன் அழிய போறான், என்ன தேவைன்றத ஆராய்ச்சி செய்ய சொன்னாங்க. அப்போ, தேரையர் சித்தர் நிறைய விஷயங்கள் ஆராய்ச்சி செஞ்சு போன கூட்டுப் பிரார்த்தனையில் நமக்கு, அவங்க ஆராய்ச்சி செஞ்சத சொன்னாங்க. சில விஷயங்களை அதேபோல சித்தர்கள் நிறைய மனித குலத்திற்காக நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. இதையெல்லாம் நாங்க ஒன்னு ஒன்னா என்னுடைய சீடர்கள் அனுப்பிச்சு, நான் உங்களுக்கு ஏன்னா, நானே வந்துட்டு இருக்கிறேன். அப்போ, என் சீடர்கள் வந்து உங்களுக்காக செப்புவாங்க, அப்படின்னு சொல்லறாங்க குருநாதர்.)


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று புரிய, இதனால், அப்பனே, நலங்களாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்று புரியாதனால், அப்பனே, முதலில் பாவத்தை ஒழிக்க வேண்டும் அப்பனே, நல்விதமாக. பாவத்தை, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- ஆனாலும், கலியுகத்தில் புண்ணியங்கள், அப்பனே, எங்கேயோ, அப்பனே, பின் மறைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே. அதை தேடிக் கொண்டே தான் இருக்கின்றான். அப்பனே, பின் இறந்து, இறந்து. ஆனாலும், அப்பனே, கிடைக்கவில்லையே. அது எங்கு இருக்கின்றது என்பதெல்லாம் யாம் எவை என்று கூற.


குருநாதர் :-  எப்படி என்றால், அப்பனே, உடம்பு அழிந்து விடுகின்றது. ஆனாலும், ஆன்மா திரிந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், உடம்பு அறிந்தும் புரிந்தும் கூட, அனைத்தும் மர்மம் தான். பின் அதில்தான் எதை என்று அறிய, சில சில விஷயங்கள், நிச்சயம் தன்னில் கூட, மறந்து, இவ்  ஆன்மாக்கள், பின் நிச்சயம் எண்கள் தெரியாமல், அறிந்தும் புரிந்தும் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. பின் இவ்வாறு சுற்றிக் கொண்டே இருக்கும் ஆன்மாக்கள், சொந்த பந்தங்களால் வரும் வரும் , நிம்மதி இல்லாமல் வாழ்க்கை அடைந்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( மனிதர்கள் பல ஜென்மங்களில் செய்த புண்ணியமும் பாவமும் இரண்டும் சேர்ந்து அவர்களின் பிறவிச் சுழற்சி நிர்ணயிக்கின்றன. புண்ணியம் செய்திருந்தாலும், அது “எண்கள் போட்டு வங்கியில் வைத்தது போல” உடம்பு இருந்தால்தான் வெளிப்படும். உடம்பு இல்லாதபோது, ஆன்மா அந்த புண்ணியத்தை அனுபவிக்க  அடுத்த உடம்பை நாடுகிறது. ஆனால் கலியுகத்தில் பாவம் தான் முதலில் வெளிப்படுவதால், புண்ணியம் செயல்பட முடியாமல் போகிறது. புண்ணியம் வெளியே வந்தால் பிறவி சுழற்சி நின்றுவிடும். புண்ணியத்தை எடுக்க முடியாததால், இதனால் மனிதன் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறான்; பாவமும் புண்ணியமும் இரண்டும் முழுமையாக கழியாததால் இறைவனிடம் சேர முடியவில்லை. குருநாதர் இங்கு சொல்வது:-   இந்த மறைந்திருக்கும் உங்கள் புண்ணியத்தின் “எண்கள்” (என்ற ஞாபகம்/அறிவு) எங்கே இருக்கிறது, அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதை அறிந்தால் தான் உங்களுக்கு விடிவு கிடைக்கும்.  அதை அறியாமல் இருந்தால், உங்கள் பிறவிச் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். )


குருநாதர் :-  அப்பப்பா, அறிந்தும் எதை என்று கூற, அதை தெரிந்து கொள்ளவும், ஈசனிடத்தில், பின் அனைவரும் சேர்ந்து, நிச்சயம் தன்னில் கூட போராட வேண்டும்.

குருநாதர் :-  அப்பா, இதைச் சொன்னேனே, எதை என்று புரிய, அப்பனே, நல்விதமாக, அப்பனே, பின் ஒருவன் போராடினால், அப்பனே, ஈசன் செவி சாய்க்க மாட்டான் அப்பா. அப்பனே, நிச்சயம் பலபேர் போராடுங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, விடிவு  கிடைக்கும் ஏதோ என்று.

அடியவர் :- (நிச்சயமா? அதான் ஒரு வீட்ல பத்து குழந்தைகள் இருந்து, ஒரு தந்தையுடைய தலை ஒரு பக்கம், கை ஒரு பக்கம், கால் பிடிச்சு இழுத்தா தான், அந்த தந்தை குழந்தைக்கு வேணுன்றத வாங்கி கொடுப்பார். ஒரு குழந்தை கேட்டா, கொடுக்க மாட்டார். குருநாதர் சொன்னதுதான். அதேபோல, நம்ம எல்லாரும் இறைவனிடம்  தொடர்ந்து வந்து, மன்றாடிக்கிட்டே இருக்கணும். ஏதாவது வழி காமிங்கப்பா, நல்ல வழி காமிங்கப்பான்னு, )

குருநாதர் :-  அப்பனே. ஆனாலும், பின் எப்படி பெறுவது என்பது ஆசிகள். அப்பனே, என்னுடைய சீடர்கள் செப்புவார்கள் அப்பா. கவலைகள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் : - அதுக்கு நாங்க வழி சொல்றோம். 

அடியவர் :- கஷ்டப்படணும். நீங்க ஒழுங்கா வாங்கப்பா. அடிப்படை புண்ணியங்களை செய்யுங்க. சொல்றதை செஞ்சாலே போதும். என்னுடைய சீடர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். 

குருநாதர் :-  அப்பனே, ஒவ்வொன்றும் எப்படி எடுப்பது, ஏது எடுப்பது, எங்கு காணலாம் என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொரு ஆன்மாவும் எதை என்று அறிய, எதனை நோக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அங்கு எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் பின் செப்புவார்கள். அப்பனே, கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே. இன்னும், அப்பனே, பல விஷயங்கள் இருக்கின்றது. 

==================================
# பஞ்சபூத ஸ்தலத்தின் ரகசியங்கள் 
==================================

குருநாதர் :-   அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் பஞ்ச ஸ்தலங்கள் என்பது என்ன? முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொரு அப்பனே, பின் அதாவது பிரார்த்தனை தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் ஒவ்வொரு விஷயத்தையும் சித்தர்கள் செப்புவார்கள். புதுமையான விஷயத்தை, அப்பனே, இதை தெரிந்து கொண்டால் மட்டுமே நன்று. 

=====================================
# பிறவி எடுப்பது, அனைத்தும் தெரிந்து கொள்வதுதான்.
=====================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் பிறவி எடுப்பது, அனைத்தும் தெரிந்து கொள்வதுதான். அப்பனே. ஆனால் தெரியாமல் சென்றால், அப்பனே, நிச்சயம் மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் தான் அப்பனே. 

குருநாதர் :- இதனால், அப்பனே, அனைவரும் ஓடுகிறீர்கள் அப்பனே. அண்ணாமலைக்கும் வருகிறீர்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் காஞ்சி தன்னில் கூட, அப்பனே, இன்னும் காளகஸ்தியில் கூட, அப்பனே, இன்னும், அப்பனே, பின் அது எதை என்று, அப்பனே, நிச்சயம் பின் காவல்,  திருவானைக்காவல். அப்பனே, பின் சிதம்பரம். அப்பனே, இவையெல்லாம் எதற்கு? அப்பனே, நிச்சயம் சொல்லுங்கள், பார்ப்போம்.

சுவடி ஓதும் மைந்தன் :- பஞ்சபூத ஸ்தலங்கள் எதுக்கு? 

====================================
# திருஅண்ணாமலை - பூமியின் ஒட்டுமொத்த நெருப்பும் வெளியே வராமல் தனது கால்களால் காத்துக் கொண்டிருக்கும் திரு அண்ணாமலையார் திருவடிகள் போற்றி !
====================================

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் யான் கூறிக் கொண்டே இருந்தால், நீங்கள் இன்னும் முட்டாளாகி விடுவீர்கள். அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் திருவண்ணாமலை எதனை குறிக்கிறது? 

சுவடி ஓதும் மைந்தன் :- திரு அண்ணாமலையார் எதனை குறிக்கிறார்? 

குருநாதர் :-  அப்பனே, எதற்கு என்று புரிகின்றதா? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புவியானது ஒரு நெருப்பு கோள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் அதன் மூலாதாரமே இவ் அண்ணாமலையில் உள்ளதப்பா. காலடியில் அழித்துக் கொண்டிருக்கின்றான். அப்பனே, அதை விட்டுவிட்டால், அப்பனே, பின் நெருப்பு, அப்பனே, எங்கும் நிறைந்து வெடித்துவிடும் என்பேன். அப்பனே, புரிகின்றதா?

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :-  இது வந்து திருவண்ணாமலை வந்து நெருப்பு குழம்பு அடியில வந்து, அதோட டிப் தான் வந்து. இதான் மெயின் பாயிண்ட் இங்க. ஆமா, இங்க அவர் காலடி வச்சு நச்சுக்கிட்டு இருக்கிறார். அந்த நெருப்பை தனது  கால் எடுத்தாருன்னா, அழிஞ்சு போயிரும்ன்றாரு. பூமி முடிஞ்சு போச்சு. அதனாலதான் இறைவன் இங்க குடிகொண்டிருக்கிறார். புரியுதுங்களா? சிவபெருமான் அக்னி ஸ்தலம். 

குருநாதர் :-  அப்பப்பா, சிவபெருமான் யார் என்பதை தெரியாமல் வணங்கினாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெற்றி கிடைப்பதே இல்லையே. அப்பனே, இதனால், அப்பனே, சிவபெருமானை பற்றி, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, யானே சொல்வேன். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :-   சிவபெருமானை தெரியாமல் வணங்குறோம். அதான் சொல்றது, எந்த ஒரு தெய்வத்தையும் எதுக்காக வணங்குறோம் அப்படின்னு தெரியாமல் வணங்குனால, பிரயோஜனமே இல்லை அப்படின்றாங்க. 

குருநாதர் :-  அப்பனே, யாருக்காக பின் ஈசன் காத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன். அப்பனே, கூறுங்கள், நீங்களே? 

அடியவர் :- எங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :-  (யாருக்காக காத்துட்டு இருக்காரு? எல்லாம் போயிட்டீங்கப்பா, எப்படா வருவீங்கன்னு காத்துட்டு இருக்காரு. உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காரு. எங்க பார்த்து, அவர் காலடியை அப்படி எடுத்தாருன்னா, முடிஞ்சு போச்சு. முடிஞ்சு போச்சு. நெருப்பு என்ன ஆகும்? வெடிக்குங்க, ஐயா. அங்கங்க வெடிக்கும். எதனால உங்களை காத்துட்டு இருக்கார்.)

குருநாதர் :-  அப்பனே, இவை பற்றி தெரிந்து கொண்டு வணங்கினாலே, அப்பனே, நிச்சயம் வெற்றி. தெரியாமல், அப்பனே, மீண்டும் பிறவிகள் எடுத்துக்கொண்டே வரவேண்டும். அப்பனே, மீண்டும், அப்பனே, நோய் பட்டு, அப்பனே, நிச்சயம் இறந்து, இறந்து வரவேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :-  ( அதான் இதை பத்தி தெரியணும்ப்பா. உண்மை தெரியலன்னா, திருப்பி உண்மை தெரியற வரைக்கும் பிறப்பு இருக்கும். செத்து, செத்து பிறக்கணும். உண்மையை தெரிஞ்சுக்கோங்க. அதுக்காகத்தான் நாங்க வந்து உண்மை தெரிய சொல்றோம்ன்றாங்க. )

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் எதை என்றார். அப்பனே, உலகம். அப்ப, நிச்சயம் தன்னில் கூட இங்குதான் மூலாதாரம் என்பேன் அப்பனே. பின் கால். அப்பனே, அப்படியே எடுத்துவிட்டால், அப்பனே, அங்கங்கு வெடிக்கும் அப்பா, மலைகள். அப்பனே மலைகளையே சிறந்த மலை. அப்பனே, திரு அண்ணாமலை.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  ( நம்ம மூலாதாரம். இதான் மூலாதாரம். திருவண்ணாமலை தான் மூலாதாரம். )

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :-  ( சிவபெருமான்  இந்த பூமியை அவர் தன் காலால் அமுக்கிக்கொண்டு உள்ளார் . பூமியின் கீழே எரிந்து கொண்டு  —அவ்வளவு தீவிரமான நெருப்பு. அவர் தனது கால் எடுத்து விட்டால், அனைத்தும் வெடித்து சிதறிவிடும். அப்படியிருக்க, மலைகளின் அரசன் யார்? திருவண்ணாமலைதான்.)

குருநாதர் :-   அப்பப்பா, அறிந்தும் இவ்வுலகத்தில், அப்பனே, அறிந்தும் கூட, பின் அதிக அளவு நீர் தான் உள்ளது. அப்பா, எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இதே போலத்தான் அப்பனே, எவை என்று அறிய. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் கூறு. நீர் ஸ்தலம் . 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( நீர் ஸ்தலம்  எது? திருவானைக்காவல். அப்ப, இதே மாதிரிதான் இந்த உலகத்துல என்னவா இருக்குது? நிறைய தண்ணி தான் இருக்குது. ) 

====================================
# ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதன் பொருள்  - சிவபெருமான் திருவண்ணாமலையில் ஒரு கால் , திருவானைக்காவில் ஒரு கால் வைத்து நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார் என்பதே. இவ்வுலகை காக்கும் சிவபெருமான் திருவடிகள் போற்றி !  சிவபெருமான் திருவடிகள் போற்றி !  
====================================

குருநாதர் :-   அப்பப்பா, அங்கே ஒரு காலை. அப்பனே, எதை என்று கூற. அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதனால் பழமொழியும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( இது பழமொழியும் ஒரு உண்டு. என்ன  சொல்லுவோமா? ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால். எதுக்காக இதெல்லாம்? இது பழமொழியும் உண்டு. )

================================
# சிவபெருமான் (திரு) தனது காலால் (கா , காவல்) , நீரை பூமியின் உள்ளே வரவிடாமல் ஆணையிட்டுள்ளார் ( ஆணை )  -  திரு + ஆணை  + கா  / திரு + ஆணை  + காவல் ) - திருவானைக்காவல் / திருஆனைக்கா
=================================
#  பூமியின் ஒட்டுமொத்த தண்ணீர் பூமிக்கு வராமல் தனது கால்களால் காத்துக் கொண்டிருக்கும் நம் அப்பன் சிவபெருமான்   திருவடிகள் போற்றி !
=================================

குருநாதர் :-   எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும். அப்பா, அறிந்தும் கால் எதை என்றது. அப்பனே, அங்கேயும் ஊனி 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( இங்க ஒரு கால் நிக்கிறார். அடுத்து எங்க நிக்கிறார்? திருவானைக்காவல்ல ஒரு கால் வச்சிருக்காங்க. திருவானைக்கால். அப்ப, அது என்ன ஆயிருக்குது? அதை விட்டாருன்னா என்ன ஆகும்? தண்ணி வந்துருங்க, ஐயா. அதான் பேரே திருவானைக்கா. கா, திருவானைக்கா. திருவானைக்கா. கான்னா கால். ரைட். திரு ஆணைக்கா. புரியுதுங்களா? அப்ப, இங்க ஒரு கால் இருக்குது. அங்க ஒரு கால். இங்க விட்டாருன்னா என்ன ஆகும்? நெருப்பு வந்துரும். அங்க விட்டாருன்னா, தண்ணி வந்துரும். தண்ணி வந்துரும். ) 

குருநாதர் :-   அப்பா, எதை என்று  அப்பனே, ஆனால் இன்னும் பின் மூன்று ஸ்தலங்கள் இருக்கின்றதே. அப்பா, இவை எப்படி என்று யோசியுங்கள். 

( அடியவர்கள் பல உரையாடல்கள் )

குருநாதர் :-   அப்பப்பா, நிச்சயம் பின் இரண்டு தான். இன்னும் சொல்லுங்கள், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ரெண்டு தான். ரெண்டு தான் கால். ரெண்டு தான். இன்னும் என்னது? அடுத்து 

குருநாதர் :-   அப்பனே, சொல்லுங்கள். வாயை திறங்கள், அப்பனே. 

……………………….
………………………

=======================================
# காளஹஸ்தி ரகசியங்கள்  - வாயு ஸ்தலம்  - பூமியின் ஒட்டுமொத்த விஷ வாயுக்கள் பூமிக்கு வராமல் தனது கால்களால் காத்துக் கொண்டிருக்கும் சிவபெருமான்   திருவடிகள் போற்றி !
=======================================

குருநாதர் :-   அப்பா, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, அதாவது நீங்கள் சுவாசிக்கும் காற்றெல்லாம், அப்பனே, இவ்வுலகத்தில் எதை எதையோ திரிந்து கொண்டிருக்கின்றானே. அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் எதை என்று அறிய. அப்பனே, பின் அதாவது விஷ புகையாக மாறியுள்ளது. 

குருநாதர் :-  அதனையும், அப்பனே, காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே, ஈசன். அப்பனே, அதனால் அதை விட்டுவிட்டால், அப்பனே, அனைத்தும், அப்பனே, அப்புகை வந்திட்டு. அப்பனே, அனைவரும், அப்பனே, பின் அதாவது நிச்சயம். அதனால்தான் நுண்ணுயிர், நுண்ணுயிரி, அப்பனே, அங்கிருந்து கிளம்புகின்ற நேரத்தில், அவரவர் வியாதிகள் வந்துவிடும் என்பேன் அப்பனே. அடுத்து அது தான் வரப்போகின்றது. அப்பனே, ஆனால் இக்காலை எவை என்று ஒரு அங்கேயும் ஒரு காலை வைத்துள்ளான் அப்பனே.

அடியவர் :- நமச்சிவாய. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து எதனால் அழிவு? வைரஸால் அழிவு. அந்த வைரஸ்க்கு வந்து அங்க ஒரு காலு வச்சிருக்கிறார். அங்க எடுத்தாருன்னா என்ன ஆகும்? நுண்ணுயிர் கிருமிகள் எல்லாம் வந்து மனித குலம் அழிஞ்சு போயிரும்ன்றாங்க. அந்த எடுத்தாருன்னா காது வந்து வைரஸ். அடுத்து எதனால் அழிவுன்னா நேரா ஃபர்ஸ்ட் என்ன பண்ணாரு? நெருப்பு. அதை விட்டாருன்னா க்ளோஸ். அடுத்து நீர். அடுத்து என்னது? வைரஸ். வைரஸால கிருமியால தொற்று நோய். கிருமி தொற்று நோய். 

குருநாதர் :-   அப்பனே, அறிந்து கூட, அப்பனே, பின் இவ்வளவு புரிய வைத்திருக்கின்றேன் அப்பனே. நீங்கள், அப்பனே, அடுத்து எடுத்து வாருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் மூன்று சொல்லிட்டேன். அடுத்து  நிலம். காஞ்சிபுரம்.

===========================
# காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் - மண் ஸ்தலம் - பூமியை தனது கால்களால் காத்துக் கொண்டிருக்கும் சிவபெருமான்   திருவடிகள் போற்றி !
===========================

குருநாதர் :-   எவை என்று அறிய. அப்பனே, அங்க ஒரு காலை அப்பனே, அங்க எடுத்து வந்து அங்குதான். அப்பனே, மூலாதாரம் அங்க எடுத்துட்டால், அப்பனே, நிச்சயம் எவை என்று கூற அப்பனே, பின் காஞ்சி தன்னில் வரை அப்படியே தண்ணீர் வந்துவிடும். அப்பனே, நிச்சயம் தண்ணீர் கூட. அதனால்தான், அப்பனே, எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- அங்க காலை வச்சிட்டு இருக்காரு நிலத்துல. அதை எடுத்துட்டாருன்னா என்ன ஆகும்? காஞ்சிபுரம் தண்ணி வந்துருமாங்க, ஐயா. ஐயா, புரியுதுங்களா? கடல் நீர் வந்துரும். கடல் நீர் வந்துவிடும் காஞ்சிபுரம் வரைக்கும். 

குருநாதர் :-   அப்பா, இதனால்தான் அனைத்து அப்பனே தேவாதி தேவர்களும் ஈசனை, அப்பனே, கருணை உள்ளவன் என்று போற்றிப் புகழ்கின்றார் அப்பனே. 

குருநாதர் :-   அப்பனே, அப்படிப்பட்டவன் உங்களை கெடுப்பானா என்ன? 

குருநாதர் :-  (அனைத்தும் உங்களுக்கு) கொடுப்பான் அப்பா. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( நெகிழ்ச்சியில் , பலத்த கை தட்டல்கள் )

அடியவர் :- (அப்படிப்பட்டவர் நிச்சயமா நமக்கு அள்ளி கொடுப்பாங்க. தகுதி வளர்த்துக்கணும். உங்க வந்து கெடுப்பானா அப்பா. ) 

குருநாதர் :-   ஆனால், அப்பனே, பின் இன்னும் சொல்வார்கள். அப்பனே, ஈசன் இல்லத்தில் வைத்தால், அப்பனே, மூடர்கள் நிச்சயம் சொல்வான். அப்பனே, அப்பனே, எவை என்று எப்படி கூறுவான்? 

===========================
# சிதம்பரம் - ஆகாய ஸ்தலம் - ஆகாயத்தில் இருந்து நட்சத்திரங்கள் பூமியை தாக்காமல் எப்போதும் தனது கால்களால் ஆகாயத்தை ஒரு காலை அமுத்தி  காத்துக் கொண்டிருக்கும் தில்லை ஈசனார் நடராஜப் பெருமான்   திருவடிகள் போற்றி !
===========================

குருநாதர் :-   அப்பனே, மீதி ஒன்று இருக்கின்றதே. என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆகாய ஸ்தலம். 

குருநாதர் :-   அப்பனே, அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் கிரகங்கள். அப்பனே, எதை என்று அறிய அப்பனே  பின் இன்னும் நட்சத்திரங்கள் கீழே விழாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு காலை அமுத்தி வைத்திருக்கின்றான். அப்பனே, எவை என்று புரிய? அப்பனே, 

அடியவர் :-  நமச்சிவாய. அப்பா, பெரிய உண்மை சொல்லி இருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரிகின்றதா? நிறைய நட்சத்திரங்கள் பூமியில விழ காத்துட்டு இருக்குது. இறைவன் அதை ஒரு காலால தடுத்து நிறுத்திட்டு இருக்கிறார்.

குருநாதர் :- அப்பனே, இதனால் அடுத்து வருவது அழிவு. அப்பனே, சொல்லிவிட்டேன். அப்பனே, 

=========================================
# நமக்காக இவ் உலகத்தை காத்துக்கொண்டிருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்
சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி !!!!!
=========================================

குருநாதர் :- அப்பப்பா. பின் மனிதனுக்காக இப்படி காவல் காத்துக் கொண்டிருக்கின்றான்  அப்பனே, ஈசன்.  அப்பனே, பாவம் அப்பா, பாவம். 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் சொல்வேன். அப்பனே, பொறுத்திருங்கள்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment