அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 3
நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை
நேரலை :- https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h08m07s
=================================
# அன்புடன் போகர் சித்தர் வாக்கு
=================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 3)
========================================
# எச்சரிக்கை - இறைசக்தியை நிச்சயம் புகுத்தி விடமாட்டான் மாந்திரீகவாதி.
========================================
போகர் சித்தர் :- அறிந்தும் யான் செய்கின்றேன், இதன்படியே நடந்து கொள்ளுங்கள். எவை என்று அறிய அறிய, அனைவரும் கெடுத்து விடுவான். இறைசக்தியை நிச்சயம் தன்னில் கூட புகுத்தி விடமாட்டான்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (“அப்படியானால் மாந்திரீகவாதி என்ன செய்வான்? ‘நான் இதை செய்கிறேன், நான் அதை காட்டுகிறேன், நான் எல்லாம் ஏற்படுத்துகிறேன்’ என்று பெருமை பேசுவான். இறைவனை நோக்கி வழியை காட்டாமல், பொய்யான வார்த்தைகளால் மனிதரை தவறான வழியில் இழுத்துச் செல்வான். அப்படி ஏமாந்து சென்றால், இறைவனை அடையாமல் வாழ்க்கையே வீணாகிவிடும். பிறவியும் பயனற்றதாகி விடும்.)
போகர் சித்தர் :- ஆனாலும் நீங்கள் சொல்வீர்களாக, நிச்சயம் இருப்பவனுக்கு எது என்று அறிய, அதாவது தீயவனுக்கு நல்லதையே செய்து கொண்டிருக்கின்றானே, இறைவன் என்று நிச்சயம் முதலில் யோசிக்க வேண்டும் நீங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (“அப்படியானால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ‘அவன் கெட்டவன் தான், ஆனால் அவனுக்கே நிறைய கிடைத்திருக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தும் எதுவும் கிடைக்கவில்லை; ஏன் இப்படியாகிறது?’ என்று கேட்பீர்கள். ஆனால் காரணம் வேறு. நீங்க அந்த மாதிரி தீயவற்றை நம்பியதால் அதாவது இறை சக்தியை நம்பாததால். அதன் அர்த்தம் இப்போது புரிகிறதா, ஐயா? )
=======================================
# வருங்காலத்தில் மாந்திரீகம் பெருக்கெடுத்து ஓடும். நீர் போல்.
=======================================
போகர் சித்தர் :- அப்பனே, எதை என்று புரிய, இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, வருங்காலத்தில் மாந்திரீகம் பெருக்கெடுத்து ஓடுமப்பா, நீர் போல்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வருங்காலத்தில் என்ன ஆகும்? மாந்திரீகம் பெருக்கெடுத்து ஓடும்.
போகர் சித்தர் :- எதை ஏன் என்று சொல்ல, நிச்சயம் மனிதனுக்கு எவை என்று அறிய, இறை பலம், நிச்சயம் தன்னில் கூட, இறைவனைப் பற்றி பின் தெரிவதே இல்லை. இதனால்தான் வந்திருக்கின்றோம், இறைவனைப் பற்றி நன்கு உணர்க என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால் மனிதனுக்கு என்ன தெரியும்? இறைவனைப் பற்றி உண்மையான அறிவு இல்லை. அறிவு இல்லாததால் என்ன செய்கிறார்கள்? மூடநம்பிக்கைகளில் விழுந்து விடுகிறார்கள். அந்த மூட நம்பிக்கையையே மாந்திரீகம் என்று நம்பி அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.)
===============================================
# இறைவன் என்ன செய்தான்? இறைவனே இல்லை என்று சொல்பவன், பொய்யான மாயா மாந்திரீக வழியில் சென்ற மனிதனே
===============================================
போகர் சித்தர் :- எது என்று புரிய, அவன் மூட நம்பிக்கையில் ஓடி ஓடி, நிச்சயம் தன்னில் கூட ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல், நிச்சயம் இழிவு படுத்துவான் மனிதனே. இறைவன் என்ன செய்தான்? இறைவனே இல்லை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அவன் என்ன செய்வான்? மூடநம்பிக்கையில் சிக்கிக் கொண்டு, ‘கடவுள் என்ன செய்தார்?’ என்று கேட்பான். கடவுள் எதையும் செய்யவில்லை என்று எண்ணத் தொடங்குவான். இறுதியில் ‘கடவுள் என்றே இல்லை’ என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்படுவான்.)
====================================
# இறைவனே இல்லை என்று சொன்னால் இறைவனுக்கு செய்யும் துரோகம் - பரம்பரை பரம்பரையாக கஷ்டங்களை கொடுக்கும். ஏன் நல்லோர்கள் கஷ்டத்தோடவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்? ஏன் நல்லோர்கள் வாழ முடியவில்லை?
====================================
போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம் படைத்து, குழந்தை போல் ஆக்கி, அனைத்தும் கொடுத்து, இறைவனுக்கு நீங்கள் செய்யும் எவை என்று கூறிய துரோகம் என்பேன். அத் துரோகம் பரம்பரை பரம்பரையாக வரும். இதனால்தான், நிச்சயம் நல்லோர்கள் எவை என்று கூற, பின் இருந்தும் வாழ முடியாமல், நிச்சயம் கஷ்டத்தோடவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நிறைய நல்லவங்க இருக்காங்க, ஆனால் நல்லவர்கள் இருந்தும், அவங்க கஷ்டத்தோட தான் இப்போ வாழ்றாங்க. அப்படின்றாங்க.
போகர் சித்தர் :- நல்லோர், தீயோர், எதை என்று கூற, ஏழை, பணக்கோர் (பணக்காரன்), இவையெல்லாம் பின் குருநாதன் அகத்தியன் வந்து சொல்லட்டும். அதிவிரைவிலே, இப்பொழுதே வந்து சொல்வார்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (“சிலர் ஏழைகள் ‘நான் ஏழையாக இருக்கிறேன்’ என்று வருந்துகிறார்கள். சிலர் ‘அவர்கள் பணக்காரர்கள்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கான தீர்வை என் குருநாதர் வந்து சொல்லிவிடுவார் என்று போகர் சித்தர் சொல்கின்றார். எனவே நம் குருநாதர் இங்கு இப்போ பெரிய ரகசியம் சொல்லப் போகிறார்கள் )
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைக்க உள்ள ரகசியங்கள்.
====================================
போகர் சித்தர் :- எதை என்று அறிய, பின் நாங்கள் வந்து எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஏன் இவ்வளவு பின் தெளிவுபடுத்துகின்றோம் என்றால், நிச்சயம் ஒருவர் ஒருவருக்கும், நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையில் இன்னும் இன்னும் கூட அடிகள் பலமாக இருப்பதனாலே, அவையெல்லாம் ஒதுக்கிடத்தான். நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் இவைதன், பின் இவ்வுலகத்தில் யாரும் கண்டறியாத முடியாத விஞ்ஞானம் என் குருநாதன் அகத்தியன் கண்டுபிடித்திருக்கின்றான். நிச்சயம் வந்து சொல்வார், இப்பொழுது.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)
அடியவர் :- (சிவாய நம, சிவாய நம, சிவாய நம. இந்த உலகத்தில் உங்களுக்கெல்லாம் பல சோதனைகளும், பல அடிகளும் காத்திருக்கின்றன. அதற்காகவே குருநாதர் நம் கற்பனைக்கு புலப்படாத எண்ணற்ற விஷயங்களை முன்கூட்டியே கண்டறிந்து வைத்திருக்கிறார். அவற்றை உங்களுக்காக வந்து சொல்லப் போகிறார். இவர் வாக்கு சொல்லி முடிந்தவுடன் அடுத்ததாக குருநாதர் வரப் போகிறார்.)
============================================
# அறுபடை வீடு, விராலி மலை, ஓதிமலை, பஞ்சபூத ஸ்தலங்கள் - விபூதி பிரசாதத்துடன் அபிஷேக பொருட்களும் கூட எடுத்து வந்து அடுத்த கூட்டுப்பிரார்தனையில் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இதனால் அவரவர் வினை நிச்சயம் அறுக்கப்படும்.
============================================
போகர் சித்தர் :- இதைத்தன் அப்பனே, இவைத்தன் நிச்சயம் அனைவரும் ஒன்றாக இணைந்து, பின் நீங்கள், பின் அதாவது உங்களை நம்பி வருகின்றார்களே. எதை என்று புரிய, இவருக்கெல்லாம் நிச்சயம் அறுபடை வீடுகளில் இருந்தும், நிச்சயம் தன்னில் கூட, பின் விராலி மலை, நிச்சயம் பின் ஓதி மலை, நிச்சயம் இவற்றிலிருந்தும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது பஞ்சபூத தலத்திலிருந்தும் கூட, பின் விபூதி பிரசாதத்துடன், நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, இன்னும் சில அபிஷேக பொருட்களும் கூட, நிச்சயம் தன்னில் கூட, அடுத்த முறை கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட, அவரவர் வினை நிச்சயம் அறுக்கட்டும், நிச்சயம் சந்தோஷமாக வாழட்டும். இவைதன் நீங்கள் செய்ய நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அடுத்து அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? உங்களுக்காக இங்கே இருப்பவர்கள் அனைவரும் அதாவது கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் குழு அவங்க , அறுபடை வீடுகளுக்கு செல்ல வேண்டும். விராழி மலைக்கு செல்ல வேண்டும். பிறகு என்ன செய்ய வேண்டும்? அறுபடை வீடுகளின் பிரசாதம்—முருகப் பிரசாதம், விபூதி , சந்தனம், நீர், அபிஷேகப் பொருட்கள்—இவற்றை எல்லாம் வாங்க வேண்டும். விராலி மலை, ஓதிமலை, பஞ்சபூத ஸ்தலங்கள்—இவற்றிலிருந்து பெற வேண்டியவற்றை எடுத்து, பின்னர் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உங்களுக்காக இதை செய்யச் சொல்லியிருக்கிறார்.)
போகர் சித்தர் :- எவை என்று அறிய அறிய, அனைவருக்குமே மனம் பேய் போல் உள்ளது. நிச்சயம் தன்னில் கூட இன்னும் பேய் போலத்தான் திரிவார்கள். நிச்சயம் தன்னில் கூட என் குழந்தை முருகன் காக்கட்டும், ஈசனார் காக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனிதர்களிடம் உள்ள அமைதியின்மையை ‘பேய்’ எனக் கருதி அதை நீக்க முயல்கிறார்கள்; அதற்காக புனிதப் பொருட்களை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்க சொல்கின்றார்கள்)
====================================
# வினைகளை வைத்துக் கொண்டு ஆலயம் செல்ல இயலாது
====================================
போகர் சித்தர் :- இவைதன் இப்பேயை வைத்துக்கொண்டு, அத்திருத்தலத்தில் நிச்சயம் தன்னில் கூட அடி, பின் வைத்தால் நன்று என்று சொன்னாலும், வைக்கப்போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (இவர்களின் மனம் ‘பேய்’ என்ற பல அழுக்குகளால் நிரம்பியுள்ளது. அதில் பல விதமான குறைகள் நிறைந்துள்ளன. அதனால் அவர்கள் தாமாகவே ஆலய வாசலைத் தாண்ட முடியாது; முயன்றாலும் முடியாது. அதனால் இங்குள்ள சிலரை அனுப்பி, அந்தப் பிரசாதத்தை கொண்டு வந்து உங்களுக்கு வழங்கச் சொல்லியிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் சில கடுமையான வினைகள் கழிய இந்த வழி உதவும்)
===================================
# அடுத்த கூட்டுப்பிரார்தனையில் - ஒரு சித்தர் வந்து மந்திரம் உரைப்பார்கள்
===================================
போகர் சித்தர் :- அதனுடனே, நிச்சயம் மந்திரம் ஓர் சித்தன் உரைப்பான். நிச்சயம் அவைதன் ஆனாலும், உரைக்க முடியுமா என்று சொன்னால், நிச்சயம் பேய் போல் பார்த்திருப்பார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒரு குரு மந்திரம் சொல்லுவாரு. ஆனா சில பேர் அதனை சொல்ல முடியாது. ஏனென்றல் கர்மா செல்லவிடாது.)
போகர் சித்தர் :- எதை ஏன், எதற்கு? நிச்சயம் இதையும் கூட அறிவியல் ரீதியாக எடுத்துரைப்பார். பின் குருநாதன் அனைத்திற்கும் மிஞ்சிய அகத்தியன்,
சுவடி ஓதும் மைந்தன் :- அதை ஏன் சொல்ல முடியாது? உங்களால நாங்க சொல்லித் தர விஷயங்களை, அந்த மந்திரங்களை நீங்க சொல்ல நினைச்சாலும், சொல்ல முடியாது. அதை ஏன் சொல்ல முடியாது? விஞ்ஞானபூர்வமா, அகத்திய பெருமான் நமக்கு விளக்குவாங்கன்னு சொல்லி இருக்காங்க. புரியுதுங்களா?
போகர் சித்தர் :- இவைகள் இவ்வளவு பாவங்கள் வைத்துக்கொண்டு, அறிந்தும் எப்படி நீங்கள் இறைவனை இடத்தில், நிச்சயம் தன்னில் கூட, பின் போக முடியும்? அதனால்தான், நிச்சயம் உங்கள் குறைகளை, பின் நிவர்த்தியாகும். பொறுமையாக இருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- இவ்வளவு பாவங்களை வச்சிட்டு, நம்ம இறைவன்ட்ட, நிச்சயமா போக முடியாதுன்றாங்க. நிச்சயமா போக முடியாது. வேற வழியே கிடையாது. இந்த பாவங்களை கம்மி பண்றதுக்குரிய வழிகள், நாங்க சொல்லித் தரோம். இதை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிட்டு, அதுக்கப்புறம் இறைவனை நோக்கி போகலாம். நாங்க கூட்டிட்டு போறோம்ன்றாங்க.
போகர் சித்தர் :- இவை இவையுடனே, நிச்சயம் யான் பல வழிகளில் கூட, பல பல வழிகளிலும் கூட, அறிந்தும் கூட, பல விஷயங்கள் தெரிந்து, எவை என்று கூற, என் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் வழியாகவே, அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன் உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- என்ன சொல்றாருன்னா, நிறைய விஷயங்கள் முருகப்பெருமான் எனக்கு சொல்லி இருக்காரு. அதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லித்தரேன். ஆனா முதலிலேயே என்ன ஆகுது? கர்மம் பிடிச்சிதுன்னா, அதெல்லாம் வந்து சொன்னாலும், சொல்ல முடியாது. பலிக்காது, புரியாது, பலிக்காது, செய்ய முடியாது. என்ன சொல்றாங்க? கர்மம் வழிவிடாது. நாங்க நிறைய விஷயங்களை சொல்ல தயாரா இருக்கோம்ப்பா. ஆனா அடிப்படையா சில விஷயங்கள் உங்களுக்கு புரியாது. புரியாம, மேல்நிலை போக முடியாது. அப்போ அதை சரி பண்ணனும்னு சொல்றாங்க.
===================================
# இறை அருளை பெற எளிதாக ருத்திராட்சம் , விபூதி வைத்து நீர் அருந்தும் முறையை சொல்லியும் யாரும் பின்பற்றவில்லை.
===================================
போகர் சித்தர் :- இதனுடனே அறிந்தும் இன்னும் ஞானங்கள். அவரவர் வினையை தீர்த்து, நிச்சயம் யோகங்கள் பெற, பின் அதிலே எதை என்று புரிய, பின் இவை அறிந்தும் சில ருத்ராட்சைகளையும் கூட கொடுத்து, இவைத்தன் சிறு சிறு…………………………………………………………. உங்களுக்கு கவலைகள் மாறி, நன்மை பயக்கும், அப்பொழுதுதான்.
============================================
இறை ஆற்றலை ஈர்ப்பதற்கும், உடலில் சக்தியை அதிகரிப்பதற்கும் அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் 23 June 2025 மதுரை வாக்கில் கூறிய சித்த முறை :-
சித்தன் அருள் - 1953 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 13!
https://siththanarul.blogspot.com/2025/10/1953-13.html
============================================
1. குடிநீர் உள்ள பாத்திரத்தில் கீழ்க்கண்டவற்றை இரவில் இட வேண்டும்:
▪ ருத்திராட்சம்
▪ வில்வம்
▪ துளசி
▪ வேப்பிலை
▪ பசுஞ்சாணம் (சிறிதளவு)
▪ அருகம்புல்,.
2. இரவு முழுவதும் இதை ஊற வைக்க வேண்டும்.
3. மறுநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நீரை அருந்த வேண்டும்,.
• பலன்: இந்த நீர் காந்த சக்தியையும் இறை ஆற்றலையும் ஈர்க்கும். இதை அருந்துவதன் மூலம் உடலில் இறை ஆற்றல் சேரும், புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றும் கஷ்டங்கள் நெருங்காது.
=============================================
அடியவர் :- குருநாதர் மதுரையிலே சொல்லி இருக்காங்க. இது எத்தனை பேர் ஃபாலோ பண்றீங்க? ருத்ராட்சத்தை இரவு நேரத்துல தண்ணில போட்டு, விபூதி போட்டு குடிக்கணும்ன்றத? கை தூக்குங்க.?
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( 5 பேர் மட்டும் கை தூக்கினார்கள் அங்கு. பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கு வைத்திருந்தனர்.)
அடியவர் :- ( அவ்வளவுதான் பாருங்க. யாரும் வந்து அவ்வளவு எளிதில் செய்ய முடியாது. ஏன்னா கர்மா செய்ய விடாது. யாரும் எவ்வளவு அதான் சொல்றேன். இறைவனே போய் புடிச்சுக்கலாம். நீங்க வந்து அந்த கர்மா விடாது. யாரும் இது இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாசமா நம்ம பேசிட்டு இருக்கோம். அஞ்சு பேர் தான் கை தூக்குறீங்க. ஏன்? இந்த கர்மா ஏன் செய்ய விடாது.)
=================================
# இந்த அருமையான முறையை பல நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் செய்ய வேண்டும். இல்லையென்றால் குறை சொல்லும் நிலைக்கு வருவீர்கள்.
=================================
போகர் சித்தர் :- அப்பனே எதை என்று அறிய, ஏதோ விபூதியிட்டு , நிச்சயம் குடித்துவிட்டால், ஒன்றும் நடக்கவில்லை என்று பின் இப்படியும் கூறுவார்கள். மனித முட்டாள்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதை சொல்லாதீங்க. ஐயா, அதை இதை சொன்னாருன்னா, இவர் என்ன பண்ணுவாங்க? ஏதோ ஒரு விபூதி போட்டு, தண்ணில குடிச்சிருவாராம். அது ஒன்னும் நடக்காம, நாளைக்கு என்ன சொல்லுவாங்களாம்? யாரோ ஒருத்தர் சொன்னதுப்பா, நல்லவே நடக்கலன்னு சொல்லிட்டு, அது மாதிரியும் முட்டாளுங்கிறான்ப்பா. இங்க அதெல்லாம் சொல்லாதப்பான்றார். அப்படியே சொல்லாதப்பா. வாக்கு, )
போகர் சித்தர் :- அப்பனே எவை என்று அறிந்து, அப்பனே இவர்களுக்கு நிச்சயம் தன்னில் கூட கஷ்டப்பட தெரியாதப்பா. இதனால் சுலபமாக அடைந்திடலாம் என்று எண்ணிருக்கின்றார்கள் அப்பா.
=======================================
# ஓதி மலையில் ருத்ராட்சங்களை வைத்து , முருகப்பெருமான் அருள் பொழிய வைத்து , பின்பு அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
=======================================
போகர் சித்தர் :- அப்பனே எதை என்று புரிய? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அப்பனே, பின் அதாவது பின் ஓதி மலை தன்னில் கூட அவர் ருத்ராட்சங்களை வைத்து, அப்பனே முருகர் அருள் பொழியட்டும். பின்பு கொடுக்க நன்று.
போகர் சித்தர் :- அப்பனே, பின் எதை என்று அறிய? மக்களே, நீங்கள் சொல்லுங்கள். ஒருவனுக்கு உரைத்தால் நன்றா? பலருக்கு உரைத்தால் நன்றா?
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை கேக்குறாங்க, உங்களையே கேக்குறாங்க. நான் ஒருத்தரை கூட்டிட்டு விட்டு வச்சு வாக்கு சொன்னா நல்லதா? எல்லாரும் கூட்டிட்டு வச்சு சொன்னது நல்லதா?
===========================================
# பல ரகசியங்கள் சொன்னாலும் அவற்றை கடைபிடிக்காமல் , எனக்கு ஏன் தனிப்பட்ட வாக்கு வரவில்லையே என்று கேட்கும் அடியார்களுக்கான வாக்கு.
===========================================
போகர் சித்தர் :- இதைத்தன் மக்கள், மூடர்கள், முட்டாள்கள், இன்னும் அறிவில்லாதவர்கள் எனக்கு வாக்கு வேண்டும். எனக்கு வாக்கு வேண்டும் என்றால், இன்னும் அவர்கள் பின் அதாவது நன்றாக வாழப்போகின்றார்கள்? கூறுங்கள், நீங்களே?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப தன் சுயநலத்திற்காக எனக்கு வாக்கு வேணும். எனக்கு வாக்கு வேணும்னு சொல்றாங்க. எப்படிப்பா? நியாயமா?
==================================================
# எச்சரிக்கை - வரும் காலத்தில் மனிதனுக்கு காசுகளே இருக்காது.
==================================================
போகர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் தன் சுயநலம் என்பேன். அங்கு சுயநலம் மிஞ்சி காணப்பட்டால், அப்பா, இன்னும் ஏன்? எதற்கு இப்படி எல்லாம் யாங்கள் அழைத்து வாக்குகள் சொல்கின்றோம் என்றால், நிச்சயம் அடுத்த கட்டத்தில், நிச்சயம் மனிதனுக்கு காசுகளே இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் உங்களை அழைச்சு இப்படி எல்லாம் சொல்றாங்களாம்? இன்னும் கொஞ்ச நாள் போனா, ஒரு வருஷம் கொஞ்ச தினம் போனோம்னா , யாருக்கும் பணமே கிடைக்காதுன்றாங்க. பணமே கிடைக்காது, பணமே கிடைக்காது, இருக்காது.
போகர் சித்தர் :- இதைத்தன் மனிதன் திருட பார்ப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாங்க? காசை திருட்டு அதிகமாயிரும்ன்றாங்க. திருட்டுத்தனம் பண்ணுவாங்க.
போகர் சித்தர் :- அப்பப்பா, இப்பொழுதே வந்துவிட்டது திருட்டுத்தனம். ஏன் ஆன்மீகத்திலிருந்தே கிளம்பி விட்டது அப்பா.
போகர் சித்தர் :- எதை என்று புரிய அப்பப்பா, இறைவன் எதை என்று பார்க்கத்தான் போகின்றானா என்று எண்ணி எண்ணி, மக்கள் எப்படி எல்லாம் அப்பா, பின் சொல்கின்றார்கள். இதைப் பற்றியும் அகத்தியன் அறிவியல் வழியாக கண்டுபிடித்திருக்கின்றான். சொல்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாங்களாம்? இதையெல்லாம் இறைவன் பார்க்க தான் போறாரா? என்று சொல்லிட்டு என்ன பண்ணுவாங்க ? இதையும் வந்து அறிவியல் ரீதியா அகத்திய பெருமான் சொல்லுவான்னு சொல்லி இருக்காங்க.
============================================
# உடம்பை சரியாக பேணி காத்தால், அறிவு வளரும்.
# அதன் மூலம் திறமை வளரும்.
# அதன் மூலம் நிச்சயம் அனைத்தும் கிட்டும்.
# அதன் மூலம் இறைவனையும் கண்டுகொள்ளலாம்.
=======================================
போகர் சித்தர் :- இதைத்தன் இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முதலில் அறிந்தும் கூட, அதாவது உடம்பை சரியாக பேணி காக்க வேண்டும். உடம்பை சரியாக பேணி காத்தால், அறிவு வளரும். அதன் மூலம் திறமை வளரும். அதன் மூலம் நிச்சயம் அனைத்தும் கிட்டும். அதன் மூலம் இறைவனையும் கண்டுகொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- உடம்பு தான் மூளை தான்றாங்க. இதை பத்திரமா பேணி காத்துட்டா, அதுக்கப்புறம் அறிவு வளரும். அதன் மூலம் எல்லாமே கிடைக்கும், அப்படின்றாங்க. உடம்பை பத்திரமா பார்த்துக்கணும் என்றாங்க.
========================================
# இயற்கை, இறைவன், ஆன்மீகவாதி.
# செயற்கை, மாந்திரீகம், மாந்திரீகவாதி.
========================================
போகர் சித்தர் :- அப்பா, இங்கு இயற்கை, இறைவன், ஆன்மீகவாதி, செயற்கை, மாந்திரீகம், மாந்திரீகவாதி, செயற்கை, எளிதில் அழிந்துவிடும். இயற்கை அழியுமா? என்ன? நிச்சயம் தன்னில் கூட இயற்கை, இறைவன் அழியப்போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- இயற்கை என்றது இறைவன்ட்டாங்க. அவ்வளவுதான். இயற்கை என்பது இறைவன், ஆன்மீகவாதி, ஆன்மீகவாதி. செயற்கை என்பது மாந்திரீகம், மாந்திரீகவாதி.
=========================================
# எச்சரிக்கை - பணம் பிடுங்குவார்கள்.
# இறைவனை, சித்தர்களை மட்டும் நம்புங்கள்.
=========================================
போகர் சித்தர் :- நிச்சயம் கஷ்டங்கள் பின் எடுத்து எடுத்து கலியுகத்தில், ஆனால் மாந்திரீகம் தான் ஓடுவார்கள். நிச்சயம் மாந்திரீகவாதி எவை என்று புரிய, அனைத்தும் பிடுங்கிக்கொண்டு, இறைவனும் காண்பிக்கப் போவதில்லை. உங்கள் குடும்பத்தில் கஷ்டமும் போக போவதில்லை.
அடியவர் :- எல்லாத்தையும் உங்களுக்கு நான் அது செய்றேன், இது செய்றேன். உங்க கஷ்டத்தை போக்குறேன்னு, எதையோ ஒன்னு சொல்லி இருக்கிறதெல்லாம் பறிச்சிட்டு, தெருவுல விட்டுருவாங்கப்பா. இறைவனையும் பார்க்க முடியாதுன்றாங்க.
================================
# குருநாதர் அகத்திய மாமுனிவர் - ஏன் சாதுக்களை மேடையில் அமர சொன்னார்கள் ?
================================
போகர் சித்தர் :- இன்னும் இவர்களை ஏன் பின்னே அகத்தியன் அமரச் சொன்னான் என்றால், இவர்களை வைத்தும் நீ சாமியாரை போல் நடி. யான் பணத்தை வாங்கி தருகின்றேன் என்றெல்லாம் இன்னும் வருவார்கள் அப்பா. வேலை இல்லாதவர்கள் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- (இவர்கள் இங்கே இருப்பதற்கான காரணம் வேறு. அகத்தியர் அவர்களை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு, இங்கு உட்கார வைத்தார் என்றால்— இவர்கள் அப்படியே இருந்துவிட்டால், பணம் பறிக்கும் அடுத்தவர் வந்து ‘நீ சாமியாரைப் போல நடி; நான் பணம் தருகிறேன்’ என்று சொல்லி, இதை ஒரு தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு பலர் இதை தொழிலாக மாற்றத் தொடங்கிவிடுவார்கள். மனிதன் எத்தனை விதமான யோசனைகளில் ஈடுபடுகிறான் என்பதை அறிந்தே , உண்மையான பக்தர்களை இப்படிச் செய்து உயர வைக்கிறார்கள். எப்படி செய்தல் புண்ணியங்கள் என்று அடியவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். )
===================================
# பணத்தை பல மடங்கு ஆக்கி தருவேன் என்று மக்களை ஏமாற்றுவார்கள்.
===================================
போகர் சித்தர் :- அப்பனே, அனைவருக்கும் எது என்று அறிய அறிய இன்னொரு உரையும் இங்கு உரைக்கப் போகின்றேன். நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய. அப்பப்பா, இன்னும் கூட பணங்கள், பணங்கள் என்று ஏமாற்றுவார்களப்பா. இவ்வுலகத்தில் அறிந்தும் கூட, பின் இதை பெருக்கித் தருகின்றேன். அதை பெருக்கித் தருகின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( பணம், இதை அதாவது உனக்கு ரெண்டு மடங்கு ஆக்கி தரேன். அஞ்சு மடங்கு ஆக்கி தரேன். பத்து மடங்கு ஆக்கி தரேன். 20 மடங்கு ஆக்கி தரேன். இந்த மாதிரி நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கும்.. )
போகர் சித்தர் :- ஏன்? எதற்கு? அப்பின், அதனால்தான் மனிதனை முட்டாள்கள் என்றே கூறுகின்றோம். அவனுக்கு பணம் இல்லை என்றால்தான் இதுபோல் சொல்வான். நிச்சயம் நீங்கள் அதை உணர்வதே இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இது மாதிரி சொல்றாங்க? முதல் குருடனாங்க. இப்ப முட்டாள் என்று சொல்ராங்க. அவன்கிட்ட பணம் இல்ல. இப்படியாவது நம்ம வந்து ஏமாத்தி சம்பாதிக்கலாம்னு நினைப்பாங்க. அது கூட உங்களுக்கு தெரியலையேப்பா. முட்டாள் அப்படின்றாங்க.
======================================
# இறைவனை வணங்காவிடிலும், நிச்சயம் மனசாட்சியோடு வாழுங்கள்.
======================================
போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம். இதனால்தான் மூட நம்பிக்கை ஒழியுங்கள், ஒழியுங்கள் என்றெல்லாம். இறைவனை வணங்காவிடிலும், நிச்சயம் மனசாட்சியோடு வாழுங்கள். நிச்சயம் இறைவன் கையைப் பிடித்து அழைப்பான் உங்களை.
அடியவர் :- (இறைவனை நீங்கள் வணங்கணும்னு தேவையில்லை. மனசாட்சியோடு இருந்தீங்கன்னா, அது ஒன்னு போதும். இறைவனே கைய பிடிச்சு உங்களை அழைப்பார்., மனசாட்சி எல்லா பேருக்கும் மனசு சொல்லும், இந்த காரியத்தை செய். இந்த காரியத்தை செய்யாதன்னு சொல்லும். அதை ஃபாலோ பண்ணாலே போதும், இறைவனை பார்த்துரலாம்ன்றாங்க.)
போகர் சித்தர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட புரியாத நிலையில், நிச்சயம் இன்னும் இறை பலத்தோடு இருப்பவர்கள் கூட போட்டி பொறாமைகள் என்னென்ன. நிச்சயம் பின் இவன் பக்தியா என்றால், நிச்சயம் இல்லை.
அடியவர் :- இறை பலத்தை, இறைவழியில் இருக்கிறவங்களுக்குள்ளயும் போட்டி பொறாமை எல்லாம் இருக்குதுப்பா. இது பக்தி இல்லைன்றாங்க.
போகர் சித்தர் :- எது என்று அறிய, நிச்சயம் யான் சொல்லுவதுதான் உண்மை. அவன் சொல்வது பொய் என்றெல்லாம் இன்னும் கூட பின் இறைவனை வைத்தே இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இவனெல்லாம் பக்தனா என்றால், நிச்சயம் இல்லை. எவை என்று புரிய, நிச்சயம் பின் இவன் சொல்கின்றானே. அவ்வாயாலே இவனுக்கும் அழிவு, அதை கேட்கின்றான். பார், இவனை விட அவனுக்கு அழிவு.
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனை வச்சுக்கிட்டே, வந்து நான் சொல்றது உண்மை. அவன் சொல்றது பொய். நான்தான் பெரியவன். இந்த மாதிரி எல்லாம் பேசுறது வந்து என்னன்னா, வந்து ரெண்டு பேருமே பேசுறவன், கேக்குறவன், ரெண்டு பேருமே அழிஞ்சு போயிருவான்றாங்க. பேசுறவனுக்கும் கொஞ்ச தண்டனை உண்டு. கேக்குறவனுக்கு என்ன ஆகும்? அதிகம், இன்னும் அதிகம்ன்றாரு. ஏன்னா, நீ சொல்லணும். ஏய், அது இறைவன் தான்டா எல்லாமேன்னு நடக்குது. என்று சொன்னால் சொன்னா மட்டும்தான் நன்மை)
போகர் சித்தர் :- நிச்சயம் உண்மையை உணர ஒரு நாள் நன்று. நிச்சயம் எதை என்று புரிய. அதாவது பின் இரு குழந்தைகளையும் பற்றியும் பாடு. அறிந்தும் கூட, பின் பின் கணபதியும் வரட்டும் சொல்கின்றேன்.
( கணபதியை பற்றி பாடல் பாட சொன்னார்கள்)
பாடகர் :- அழகாக விநாயகப் பெருமானை அழைக்க பாடல் பாட ஆரம்பித்தார்.
( விநாயகனே வினை தீர்ப்பவனே… )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h44m07s
(இவ் பாடல் படும்போது பல சாதுக்கள் , சிவனடியார்கள் வருகை தந்தார்கள்)
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment