​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 13 January 2026

சித்தன் அருள் - 2065 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - பகுதி - 5
















அகத்தியர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 5

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு :  https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=8h06m10s

===========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே, அம்மையே, எதை என்று பின் வருங்காலங்களில் என்ன தெரிவிக்க நிச்சயம் தன்னில் கூட? மனிதன் பின் அவ் அழிவுகள், இவ் அழிவுகள் என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே. நல்விதமாக எதை என்று அறிய, அதை மாற்றும் சக்தி மனிதனிடத்தில் இல்லையப்பா. இதனால் மனிதன் பின் பொய்யானவனே. 

குருநாதர் :- ஏனென்றால், அப்பனே, சொல்லத் தெரிந்தவனுக்கு அதை சீர் செய்யவும் தெரிய வேண்டும் என்பேன் அப்பனே. பின் அப்படி இல்லை என்பேன் அப்பனே. ஆனாலும் சீர் செய்ய எங்களால் மட்டுமே முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் சொல்வது என்னனா — உலகத்தில் அழிவுகள் வருவது இயல்பு. “இது நடக்கும், அது நடக்கும்” என்று பலர் சொல்லலாம். ஆனா அதை மனிதன் சரி செய்ய முடியாது. சரி செய்யும் வழியையும் மனிதன் சொல்ல முடியாது. அழிவு வரும் என்று சொல்லிக் கொடுத்தால் என்ன பயன்? அது வாழ்க்கைக்கு உதவாது. மனிதனை உண்மையாக சரி செய்ய முடிவது சித்தர்களாலும் இறைவனாலும் மட்டுமே.)
=====================================
# ஜோதிடர்களே - உங்களை வெற்றியாளராக்கும் தர்மம். பின் வரும் தர்மத்தை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள் அவசியம். 

குருநாதர் :-  அப்பனே, நீங்கள் அனைவருமே இங்கு உட்கார்ந்து இருக்கின்றீர்கள். அப்பனே, அதாவது நிச்சயம் யாராவது, அப்பனே, பின் ஜோதிடனாயினும் சரி. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், அப்பனே, இங்கு நீ இறைவனை மையமாக வைத்து தான் சொல்கின்றேன். அப்பனே, பின் அதாவது இயலாதவருக்கு ஏதாவது செய்க. அதாவது, பின் அறிந்தும் கூட, பின் தாய் தந்தை இல்லாதவருக்கும், அதாவது எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட இன்னும் எத்தனையோ அடியோர்கள், பின் ஒரு உணவுக்காவது, பின் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்று யாராவது, அப்பனே, சொன்னார்களா என்ன, அப்பனே? 

குருநாதர் :-  நிச்சயம் இல்லையப்பா. இதுதான், அப்பனே, இப்படி சொன்னால்தான் தர்மம். அப்பனே, இத்தர்மத்தின் மூலம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெற்றி கொள்ளலாம். கிரக நிலைகளை கூட, அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஜோதிடம் பரிகாரம் மட்டும் சொல்லுது.ஆனா தர்மம் செய்யணும்னு யாரும் சொல்லிக் கொடுக்கறதில்லை. அப்படியிருக்க, யாரு வந்து “தர்மத்தைப் பின்பற்றுங்க”ன்னு உண்மையா சொல்லித் தர முடியும்?.
=====================================
# ஜோதிடர்களே - எப்போது ஒரு ஜாதகம் யோக ஜாதகம் ஆகும் ?
=====================================

குருநாதர் :-  அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, எதை என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஒரு உயிரையும் கொல்லக்கூடாது. அப்பொழுதுதான் இந்த ஜாதகம் யோக ஜாதகம் ஆகும் என்பது யாராவது நிச்சயம் சொன்னார்களா என்ன? அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் :- (ஜாதகம் எடுத்துக் கொண்டாலும், எல்லாம் இறைவனுடைய தீர்ப்புதான். ஒரு உயிரையும் கொல்லாமல் வாழ்ந்தால் அது யோக ஜாதகம். உயிர் கொன்றால் அது பாவ ஜாதகம் — இப்படித்தான் கணிக்கலாம். ஆனா “உயிரைக் கொல்லாதே” என்று யாராவது நேராக சொல்லிக் கொடுக்கிறாங்களா? இல்லை)
=====================================
# சுயநலத்திற்காகவே வாழ்ந்தால் நிச்சயம் பாவம் தான் சேரும் 
=====================================

குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, அதாவது மனிதன் கலியுகத்தில் சுயநலத்திற்காகவே வாழ்கின்றான் என்பேன் அப்பனே. அப்படி வாழ்ந்தால், அப்பனே, நிச்சயம் பாவம் தான் சேரும் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இன்னும் பின் சிவனடியார்கள் அப்பனே, பின் ஒன்றுமே, அப்பனே, பின் இல்லாதவராக இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. அவர்களை இழுத்து வந்து, அப்பனே, அவரிடத்தில், அப்பனே, புண்ணியம் பின் அதிகம் இருக்கின்றது அப்பா. இப்படி, அப்பனே, இழுத்து வந்து, அப்பனே, பின் அதைத்தான், அப்பனே, நிச்சயம் பின் அதை எப்படி பெருக்குவது மற்றவர்களுக்கு, அப்பனே, எப்படி பின் ஈவது என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே. அதேபோல் கொடுத்து, அப்பனே, அனைத்தும் மாற்றமடைய செய்து விடுவோம். அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் :-  (இன்னும் பல சிவனடியார்கள் இருக்காங்க. அவர்களுக்கு நிறைய புண்ணியம் இருக்கு, ஆனால் அவர்கள் கஷ்டப்படுறாங்க. ஆனா அவர்களிடம் உள்ள அந்த புண்ணியத்தை எப்படி பயன்படுத்துவது என்று நமக்கு தெரியல. அதனால் அவர்களை அழைத்து, அவர்களை நன்றாக உறவுகள் செய்து , அவர்கள் மகிழும் பொது நமக்கு நிறைய புண்ணியங்கள் கிடைக்கும். அந்த புண்ணியத்தை மற்றவர்களுக்கு உதவியாக மாற்றிக் கொடுத்தால்,அவர்கள் நல்லா இருப்பாங்க. அவர்களின் நலத்தால் சிவனடியார்களும் நல்லா வாழ முடியும்)
================================
# அனைவரையும் இறைவன் சமமாக படைத்தார். அப்படி இருக்கும் போது யாருக்கு இறைவன் அள்ளி அள்ளி கொடுப்பார் ?
================================

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, பின் இறைவன், அப்பனே, அனைவரையும் கூட, அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். சமமாகத்தான் படைத்தான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இதனால், அப்பனே, எவை என்று அறிய. அப்பனே, ஆனாலும், அப்பனே, இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன், அப்பனே, சரியான, அப்பனே, பின் நம் தனக்கும் வேண்டும், மற்றவர்களுக்கும் வேண்டும் என்ற எண்ணம், அப்பனே, யாருக்கு வருகின்றதோ, அவர்களுக்குத்தான் இறைவன் கொடுப்பான் என்பேன் அப்பனே. மற்றவர்களுக்கு நிச்சயம், அப்பனே, பின் என்ன போராடினாலும்  முடியாது அப்பா, முடியாது. 
சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் யாருக்கு தருவார்? தானும் வாழனும், பிறரும் வாழனும்என்று நினைக்கும் மனசுக்குத்தான் இறைவன் அருள் கொடுப்பார். அப்படி இல்லாத மனசுக்கு அவர் எதையும் கொடுக்க மாட்டார்.)
குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே, செயற்கையானது, அப்பனே, இயற்கையை, அப்பனே, பின் கொள்கின்றது என்பேன்  அப்பனே, இதனால்தான் பேரழிவுகள் வரப்போகின்றது என்பது, அப்பனே, ஆனாலும் அதை தடுப்பதற்கும் எங்களால் முடியும், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப செயற்கையால் தான் இயற்கை அழியப் போகிறது, இயற்கை அழியப் போகிறது. மனிதன் கண்டுபிடித்தால் என்ன ஆகப்போகுது? உலகத்துக்கு அழிவு, ஆனால் அதை எங்களால் தடுக்க முடியும். 

குருநாதர் :-  அப்பனே, மனிதன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன்  அப்பனே, ஏனென்றால், அப்பனே, தன்னை வெளிக்காட்ட வேண்டும் அல்லவா? 

குருநாதர் :-  ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது பொய்கள், அப்பா. அப்பனே, ஆனாலும், உலகத்தை எங்களால் காப்பாற்ற முடியும். அப்பனே, மனிதன் சொல்ல, அப்பனே, சொல்லிக்கொண்டே இருப்பான் அப்பனே, பொய்களாக, 

குருநாதர் :-  அப்பனே, மனிதனுக்கு இது தெரிவதில்லை, அப்பா. 

=============================
# கூட்டுப் பிரார்த்தனையால்  மாபெரும் உலக அழிவு தடுக்கப்பட்டது 
=============================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அப்பனே, எதை என்று அறிய அப்பனே, ஈசன், அப்பனே, எவை என்று புரிய அப்பனே, அதாவது, அப்பனே, பின் அதாவது சித்தர் குள்ளர்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் அழிவு இருந்தது, அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய அப்பனே, பின் இரு, அப்பனே, எதை என்று கூற பின் ஐந்து நாட்களுக்கு முன்பே, ஆனாலும் சித்தர் குள்ளர்களை வரவழைத்து விட்டார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால், அப்பனே, அனைவரையும் சேர்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஈசனிடம் முறையிட்டதால் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இதனால், அப்பனே, இன்னும் கூட பன்மடங்கு, அப்பனே, அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது. அடுத்து அப்பனே, நுண்ணுயிர்கள் பரவும் என்பேன் அப்பனே. அதை தடுக்க இன்னும், அப்பனே, நீங்கள் பின் கூட்டு பிரார்த்தனை என்னென்ன அப்பனே, எவ்வளவு மந்திரங்கள், எதை ஜெபிக்க வேண்டும் என்று யான்  சொல்கின்றேன் அப்பனே. அதைபோல் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கேட்டுக் கொண்டே நடந்து கொண்டே வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மற்றவர்களுக்காகத்தான் நீங்கள் செய்கின்றீர்கள் என்பேன்  அப்பனே. அப்பொழுது, நிச்சயம் நீங்கள் விரும்புவதை சுலபமாக கிடைத்துவிடும். 

=====================================
(குருநாதர் சொல்வது — ஈசன் என்ன செய்யப் போகிறார் என்பதை சித்தர்கள் முன்கூட்டியே உணர்ந்தார்கள். அழிவு வரப்போகிறது என்று தெரிந்ததால், ஐந்து நாட்களுக்கு முன்பே சித்தர் குள்ளர்களை  வரவழைத்தார்கள். ஏன்?  அனைவரும் சேர்ந்து ஈசனிடம் முறையிட்டதால் - கூட்டு பிரார்த்தனையில் -  அது தடுக்கப்பட்டது. ஆனா இன்னும் பல அழிவுகள் காத்திருக்கின்றன; அடுத்து நுண்ணுயிர்கள் பரவலாம். அதைத் தடுக்க என்ன கூட்டு பிரார்த்தனை, என்ன மந்திரம், எதை ஜெபிக்க வேண்டும் என்று நான் சொல்லிக் கொடுக்கிறேன். அதைப் பின்பற்றி, மற்றவர்களுக்காகச் செயல்பட்டால், நீங்கள் விரும்புவது எளிதாக கிடைக்கும்)
====================================


============================
# அடுத்த அழிவு (computer) கணிப்பொறியின் மூலம் பரவும் 
============================

குருநாதர் :-  அப்பனே, இவை எவ்வாறு வருவது என்றால், அப்பனே, கணிப்பொறியின் மூலமாகவே பரவும் என்பேன்  அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :- இது எப்படி பரவுமா? ஐயா கம்ப்யூட்டர் மூலம் எல்லாம் பரவும். 

அடியவர் :- புது விஷயம், 

============================
# இளைஞர்கள் தாய் தந்தை சொல்லை நிச்சயம் மீறுவார்கள்
============================

குருநாதர் :-  அப்பனே, எவை என்று அப்பனே, எதை என்று அப்பனே, இவ்வாறு பரவுவதால், அப்பனே, நிச்சயம் இளைஞர்கள், அப்பனே, பின் தாய் தந்தை சொல்லை, பின் நிச்சயம் மீறுவார்கள் என்பேன் அப்பனே நிச்சயம். அப்பனே, இவ்வாறாக எப்பொழுது மீறுகின்றார்கள் அப்பனே, தொடங்கிவிட்டது அதுவும். 
சுவடி ஓதும் மைந்தன் :-  இப்போ கம்ப்யூட்டர்ல வேலை செய்கிறவர்கள் அம்மா–அப்பா சொல்ற பேச்சை கேட்க மாட்டாங்க.
குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அழிவை தேடிக் கொள்வார்கள் என்பேன்  அப்பனே, ஆனால் அப்பனே, பெரியோன்  சொன்ன மந்திரத்தை, அப்பன், நிச்சயம் சொன்னால் பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் :- (என்ன செய்யலாம்?  அதனால்தான் பெரியோர்கள் சொன்ன மந்திரங்களை சொன்னால்  குறைந்தபட்சம் ஓரளவு தப்பித்து பாதுகாப்பாக இருக்கலாம்)
குருநாதர் :-  அப்பனே, இவ் மந்திரங்களுக்கும், அப்பனே, பின் தடுக்கும் சக்தி, அப்பனே, அதை அதில், அப்பனே, பின் சண்டையிட்டவர்களுக்கும், அப்பனே, தகுதிகள் உள்ளது என்பேன் அப்பனே. இப்பாடல்களில் அதுபோலத்தான், அப்பனே, ஞானிகள் எழுதி வைத்தனர் அழகாக. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இந்த பாடல் (மந்திரம்) வைரஸுக்கு எதிராக போராட உதவும். அதைச் சொல்லினால் ஆபத்தை ஓரளவு தடுக்கலாம். அதனால்தான் பெரியவர்கள் இப்படிப் பட்ட மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்கள் — தடுக்க உதவவேண்டும்  என்பதற்காக.)
==============================
# கணிப்பொறி சித்தர்களால் அழிக்கப்படும் வரும்காலத்தில் 
==============================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையும், அப்பனே, வருங்காலத்தில், ஏனென்றால், அப்பனே, நிச்சயம் கணிப்பொறி தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வருங்காலத்தில் பேசப்போகின்றது. ஆனால் அதை யாங்கள் அழித்து விடுவோம். வரும் காலங்களில் சொல்லிவிட்டேன். 
சுவடி ஓதும் மைந்தன் :- (கம்ப்யூட்டரால்தான் பல அழிவுகள் நடக்கிறது. அதனால் வருங்காலத்தில் என்ன செய்யப் போறோம்? அதை நாமே கட்டுப்படுத்தி, தேவையான இடத்தில் நிறுத்தி விடுவோம்.)

குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் இளைஞர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் உலகத்தை அழித்துக் கொண்டே வருகின்றார்கள் என்பேன் அப்பனே. ஏனென்றால் இதற்கு மூலாதாரமாக விளங்குவது, அப்பனே, செயற்கையே. அதை முதலில் அழித்தால் பக்தி வந்துவிடும் என்பேன்  அப்பனே, நிச்சயம் மனிதனிடத்தில் என்பேன்  அப்பனே, 
சுவடி ஓதும் மைந்தன் :- (இப்போ எல்லாரும் லேப்டாப்–கம்ப்யூட்டர்லே மூழ்கி, இறைவனை மறந்துடுறாங்க. அதை குறைத்தால்தான் வருங்காலத்தில் பக்தி மீண்டும் எழும். அப்போதுதான் நல்லோர்கள் நிம்மதியா வாழ முடியும்.)
==================================
# ஏன் கணிப்பொறியில்  வேலை செய்பவர்களுக்கு  சிரமம், பிரச்சினைகள்  உண்டாகின்றது? 
=================================

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=8h15m39s

குருநாதர் :-  அப்பனே, இதனால் நிச்சயம் நல்லோர்கள், அப்பனே, பின் எவை என்று கூட தாழ்ந்து வாழ்கின்றார்கள் என்பேன் அப்பனே. அதனால் மூலாதாரம் எங்கு என்பது யாங்கள் அறிவோம். அதை அடிப்போம் என்போம் அப்பனே முதலில். 

குருநாதர் :-  அப்பனே இவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட யாங்களே. அப்பனே, வருங்காலத்தில் அப்பனே கணிப்பொருள் தன்னில் கூட வேலை செய்பவர்கள் எல்லாம், அப்பனே, பின் பிரச்சனைகளை உருவாக்கி, அப்பனே, அதிலிருந்து, அப்பனே, அவனை அடித்து கீழே தள்ளி, அப்பனே, நல்லோர்களை மேல் நடத்தி வைப்போம் என்போம் அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன் :- (அம்மா, குழந்தைகளை கம்ப்யூட்டர் படிக்க வைக்காதீங்க. குருநாதர் சொல்வது — கம்ப்யூட்டர் சிலரைக் கெடுத்துவிட்டது.  அதை நாமே வாழ்க்கையில் கட்டுப்படுத்தி, அதன் ஆட்டத்தை நிறுத்தினால், நல்ல மனசு உள்ளவர்கள் மீண்டும் உயர்ந்து நிம்மதியாக வாழ முடியும்.)
==================================
# சித்தர்கள், ஏன் கெட்டவனை  தான் தலைவன் ஆக்குகிறார்கள்? 
==================================

குருநாதர் :-  அப்பனே, இன்னும் பின் ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் இருக்கின்றார்கள் அப்பா, நிச்சயம். அப்பனே, அவர்கள் எல்லோரும், அப்பனே, நிச்சயம் தன்னில், இறைவன், இறைவன் என்று ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. அப்பொழுது, நிச்சயம் பின் இறைவனை காட்டுவோம் அப்பனே, இதனால், அப்பனே, எதை என்று புரிய (கெட்டவனை தலைவன் ஆக்குவோம் )

சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டவனை தான் தலைவன் ஆக்குகிறார். தலைவன் ஆக்கி என்ன செய்கிறார்? கெட்டதை அழிக்கப் போறார். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நல்லவனை. அப்பனே, இப்பொழுது தலைவன் ஆக்கினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் உலகம், அப்பனே, தலைகீழ்  போய்விடும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   நல்லவனை தலைவன் ஆக்கினால் என்ன ஆகும்? உலகம் தலைகீழா போய்விடும்.

குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, துஷ்ட சக்திகளை அழிக்க வேண்டும் என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதனால்தான் கெட்டவன் வேண்டும். கெட்டவன் வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  துஷ்ட சக்திகள் அதிகமாயிடுச்சு. அதை அழிக்கிறதுக்கு என்ன ஆகணும்? கெட்டவன் வேண்டும், கெட்டவன் வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே, கெட்டவனும் நல்லவன். ஆனால், அப்பனே, எப்படி? அப்பனே, எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே, கெட்டவன் என்று, அப்பனே, யான் எதை சொன்னேன் என்றால், அப்பனே, அனைத்து விஷயங்களும் கெட்டுட்டு தான். அப்பனே, பின் நிச்சயம்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- அவர் என்ன சொல்ல வர்றார்? அவர் ‘கெட்டவன்’ என்று சொல்வது நம்மை குறை சொல்லுவதற்கல்ல. அதாவது, வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் கெட்ட அனுபவத்துக்குப் பிறகுதான் ஞானமாக மாறுகிறது. ஞானம் எளிதாக வராது. அதனால்தான் அவர் ‘அவன் கெட்டவன்’ என்று சொல்கிறார். இதில் அவர் எப்படி இணைக்கிறார் தெரியுமா? கெட்டவன் தான் பின்னால் நல்லவனாக மாறுகிறான். எல்லா விஷயங்களிலும் கெட்டவன் தான் நல்லவனாக உருவாகும் விதை. ஆனா, அந்த கெட்டவனை வைத்து நாம் என்ன செய்கிறோம்?  அவனுள் இருக்கும் கெட்டத்தைப் பயன்படுத்தி கெட்டதையே அழிக்கிறோம். கெட்டவனை வைத்து கெட்டதை அழித்த பிறகு, அந்த கெட்டவன் கூட நல்லவனாக மாறுகிறான். இதுதான் அவர் சொல்ல வர்றது.”. 
குருநாதர் :-  அப்பனே, தெளிவில்லாதவனை வைத்தால், அப்பனே, அவனும், அப்பனே, நிச்சயம் ஒன்றும் தெரியாமல் மற்றவர்களையும், அப்பனே, அழித்து விடுவான் என்பேன் அப்பனே. 

====================================
# ராஜராஜ சோழன் உலகெங்கும் எடுத்துச்சென்ற கூட்டுப் பிரார்த்தனை 
====================================

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது, இக்கூட்டு பிரார்த்தனை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ராஜராஜ சோழன் அப்பனே, பின் எவை என்று கூற பின் ஆட்சி செய்தானே, அப்பொழுது இருந்தே, அப்பனே, நிச்சயம் அதன் முன்பே இருந்தே. 

குருநாதர் :- அப்பனே, ஆனால் மறைவு ஏனென்றால், அப்பனே, அன்றைய அளவில், அப்பனே, மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் அப்பா. ஆனாலும், இவ்வாறாக, பின் மனிதன் வாழ்ந்து விட்டால், நிச்சயம், பின் அரசர்களையும், பின் மனிதன் மதிக்க மாட்டான் என்று, அவை அப்படியே மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  (அந்த அளவுக்கு தாழ்மையாக மக்களுக்காக சேவை செய்தவர் ராஜராஜ சோழன். ஆனா, இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தால் அதிகாரம் பிடித்தவர்கள் தங்களுக்கு மரியாதை குறையும் என்று நினைத்ததால், அவை அனைத்தையும் மறைத்துவிட்டார்கள். அந்த அதிகாரம் பிடித்தவர்கள் எல்லாம் பின்னர் வந்தவர்கள்.)

குருநாதர் :-  அப்பனே, இக்கூட்டு பிரார்த்தனை ஆனது, அப்பனே, நிச்சயம் ராஜராஜ சோழன் அப்பனே, பின் உலகம் முழுவதும் கொண்டு சென்றான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, உலகம் காத்து நின்றது என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அப்பனே, பின் கிரகங்கள். அப்பனே, தன், அதாவது, அப்பனே, பின் எவை என்று கோடுகளை விட்டு தனித்தனியாக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அப்பனே, பின் விலகுகின்ற பொழுது இன்னும் அழிவுகள் அப்பா. இதனை, அப்பனே, எப்படி பார்ப்பது? யார் பின் கண்டுபிடிப்பது? 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  (“அகத்தியர் ஐயா ஏற்கனவே சொன்னார் — கிரகங்கள் தங்கள் இயல்பான சுற்றுப் பாதையில் இருந்து விலகி நிற்கின்றன. அதை எப்படி சரி செய்வது? அதைச் சரி செய்ய ஒரே வழி — கூட்டு பிரார்த்தனை.  கூட்டு பிரார்த்தனை மூலம்தான் இந்த நிலையை மீண்டும் சீராக்க முடியும்.)

====================================
# நவ கிரகங்களின் வட்டப் பாதையை சரியாக கணிக்கும் தஞ்சை பெரிய கோவில் ரகசியங்கள் - ராஜராஜ சோழனின் உயர் எண்ணங்கள். 
===================================

குருநாதர் :-  அப்பனே, எது என்ற எப்பனே, அதனைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இங்கு, அப்பனே, பின் அனைத்தும் எடுத்துக்கொண்டால், அப்பனே, பின் 360. 

சுவடி ஓதும் மைந்தன் :- டிகிரி எவ்வளவு? 360.

குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற அன்றைய, அப்பனே, நிச்சயம் தன்னில் எப்படி கணித்தான் என்றால், அப்பனே, ராஜராஜ சோழன். அப்பனே, நிச்சயம் தன்னில் இப்பொழுதும் பார்த்தீர்கள் என்றால், அப்பனே, அங்கங்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அப்படியே அமர்ந்து இங்கிருந்து, அப்பனே, பார்ப்பான் என்பேன் அப்பனே, அதனை. அப்பனே, அது சரியான நேர்கோட்டில் இருந்தாலும், அப்பனே.

குருநாதர் :-   ஆனாலும், அப்பனே, அது விலகி இருந்தால், அப்பனே, அனைவரையும், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் பறை, அப்பனே, பின் பறை சாற்றுவான் என்பேன் அப்பனே, வாருங்கள் என்பேன் அப்பனே. கூட்டு பிரார்த்தனை ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே. அனைவரும் கத்துவார்கள் என்பேன் அப்பனே. (கிரகங்கள்) அவை  தன் கோட்டுக்கு வந்துவிடும் என்பேன்  அப்பனே. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-
ஐயா, பெருங்கருணை.ஐயா, இப்போதான் பேசினோம் — ராஜராஜ சோழன் சொன்னது என்னனா, சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாள்தான் சித்ரா பௌர்ணமி. இந்த இரண்டு நிலைகளும் விலகி வந்தாலே, ராஜராஜ சோழர் கூட்டு பிரார்த்தனை செய்து அதைச் சரி செய்துவிடுவாராம். அதைப் பற்றிதான் நாங்க பேசிக்கிட்டிருந்தோம். குருநாதரும் அதையே சொன்னார்கள் — கூட்டு பிரார்த்தனையால்தான் அது சரியாகும்.
அப்போ, அந்த ‘கூண்டு’ எதுக்குன்னு கேட்கிறீங்களா?  ராஜராஜ சோழன் பெரிய கோவிலுக்கு போயிருக்கீங்களா? சுத்தி சுற்றி கூண்டுகள் இருக்கும். 
அந்த கூண்டுகளின் காரணம் — கூட்டு பிரார்த்தனைக்காகத்தான். அது மட்டும் இல்ல, ஏதாவது அழிவு வரப்போகுது என்று அவர் உணர்ந்தால், அந்த கூண்டுகளில் ஒவ்வொன்றாக உட்கார்ந்து கிரக நிலையைப் பார்ப்பாராம்.
கிரகங்கள் தங்கள் ‘கோடு’ (alignment) சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை. சிறிது விலகினாலே, ‘அழிவு வருது’ என்று அவர் உடனே அறிந்துவிடுவாராம்.
இப்போ கேமரா நேராக இருந்தா எப்படி எல்லாம் சரியா இருக்குதுன்னு தெரியும், அதுபோல கிரகங்களும் நேராக இருந்தால் நிலை சரி.  சிறிது லைட்டா விலகினாலே, ‘அழிவு’ என்று அவர் உணர்வார்.
அப்போ என்ன செய்வார்?  பறை அடித்து , ‘எல்லாரும் வாங்க, கூட்டு பிரார்த்தனை செய்யணும், அழிவு நிறுத்தணும்’ என்று அழைப்பார். ஒரே நேரத்தில் எல்லாரும் கூப்பிட்டா, அந்த சக்தி நேராக கிரக நிலையைச் சரி செய்யும்.
அதனால்தான் அந்த கூண்டுகள் கட்டப்பட்டன — ராஜராஜ சோழன் அங்கே உட்கார்ந்து நட்சத்திர–பௌர்ணமி நிலையைப் பார்த்து, விலகல் இருந்தால் உடனே மக்களை அழைத்து கூட்டு பிரார்த்தனை நடத்துவதற்காக..
குருநாதர் :-  அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் அரசர்கள் அப்பனே, இப்படித்தான் அப்பனே, சரியாக மக்கள் பின் நலன் விரும்பி மக்கள் வாழ வேண்டும் என்பதற்கு, அப்பனே, பின் நிச்சயம், பின் எவை என்று. அப்பனே, பல வழிகளாக, அப்பனே, இறைவனைக் கண்டு, எந்தெந்த, அப்பனே, பாடலை பாடிட்டால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் நட்சத்திரங்கள், கிரகங்களும், பின் அதன் நேர்கோட்டில் வரும் என்பதை எல்லாம் தீர்மானித்து, தீர்மானித்தது தான் என்பேன்  அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- ( “எல்லாவற்றையும் நேர்கோட்டில் கொண்டு வர முடியும். எந்த கிரகம் சுற்றுப்பாதையிலிருந்து விலகிப் போனாலும், அதை மீண்டும் நேரான பாதைக்கு கொண்டு வர பாடல்கள், மந்திரங்கள் எல்லாம் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி பாடிப் பாடியே அவர்கள் அந்த நிலையைச் சரி செய்து விடுவார்கள். அந்த காலத்தில் கூட்டு பிரார்த்தனை செய்து தான் இதைச் சரி செய்தார்கள். )
=========================
# 2000ஆம் ஆண்டிலிருந்து ( பூமியின் வயது இன்னும் அதி விரைவாகவே சற்று குறையவே ஆரம்பித்தது. 
=========================

குருநாதர் :-  அப்பனே, இதைத்தான், அப்பனே, நான் சொன்னேன், எது என்றறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்றறிய, அப்பனே, புவிதன்னிற்கு . அப்பனே, மீண்டும் இதை, அப்பனே, இரண்டாவது முறையாகவே, மூன்றாவது முறையாகவே செப்புகின்றேன். 

குருநாதர் :- பின், அப்பனே, புவியானது, அப்பனே, வயது, அப்பனே, அதாவது ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது என்பேன் அப்பனே. இவ்வாறு ஆயுட்காலம் குறைய குறைய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனின் எண்ணங்கள் மாறும் அப்பா. அப்பனே, மனிதனின் எண்ணங்கள் தீய செயல்களில், அப்பனே, ஈடுபடும் அப்பா. 

குருநாதர் :- இதனால், அப்பனே, பின் 2000திற்கு  பின்பு பிறந்தவர்கள் எல்லாம், அப்பனே, புத்தி கெட்டு திரிவார்கள் அப்பா.

குருநாதர் :- அப்பனே, எது என்றறிய, அப்பனே, 2000 லிருந்து பூமியின் வயது, அப்பனே, பின் இன்னும் சற்று குறையவே ஆரம்பித்தது. அதி விரைவாகவே 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- (“2000‑க்கு பிறகு பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? 2000 அப்புறம் பிறந்தவர்களின் புத்தி முழுமையாக நிலைபெறாது, சிந்தனை நேராக இருக்காது என்று சொல்கிறார்கள்.  அவர்கள் சிந்திப்பது எல்லாம் கம்மி–அதிகம், இடது–வலது மாதிரி குழப்பமாகத்தான் இருக்கும். ஐயா, 2000 முதல் பூமியின் வேகம் குறைய ஆரம்பித்தது. அந்த வேகம் குறைந்த நிலையில்தான் இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.  அதனால் அவர்களின் மனநிலை, சிந்தனை எல்லாம் சற்று கடினமாக இருக்கும். சொல்லுவது ஒன்று, செய்வது ஒன்று, நடப்பது ஒன்று — இப்படித்தான் இருக்கும்.)
=============================
# ஈசன் கருணையால், நம் குருநாதர் அகத்திய மாமுனிவர், எப்பொழுதெல்லாம் பூமியின் வேகம் குறைகின்றதோ , அப்பொழுதெல்லாம்  பூமியை எட்டி உதைத்து வேகப்  படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.
=============================

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், அப்பனே, பின் எப்படியோ, அப்பனே, பின் அதை எட்டி உதைத்தும் கூட, யான், அப்பனே, வேகம் படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே, ஈசன் கருணையால், 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- ( “சிவாய நம, சிவாய நம. குருநாதர் பூமியின் சுழற்சி வேகம் குறையாமல், அது சரியான நிலையில் இருக்கும்படி காத்து வருகிறார்கள். அவர்களின் பெருங்கருணையால், வேகம் சற்றே விலகினாலும், அதைத் தட்டி திருப்பி சரியான பாதைக்கு கொண்டு வருகிறார்கள்.  அவர்கள் பூமியை இப்படித்தான் பாதுகாத்து வருகிறார்கள். )
குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் கூட. ஆனால் மனிதன் என்னவோ சொல்லிக் கொண்டிருப்பான். அப்பனே, பின் அதாவது பின் வயது குறைந்து கொண்டே போகின்றது என்பது. ஆனாலும், அப்பனே, பின் காக்கவும் தெரியும், தெரியும். அப்பனே, பின் அழிக்கவும் தெரியும். எங்களுக்கு 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  (“மனுஷனுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. சித்தர்களுக்குத்தான் இந்த ரகசியங்கள் தெரியும் — அதை எப்படி காக்கணும், எப்படி அழிக்கணும் என்பதும் சித்தர்களுக்குத்தான் தெரியும். மனுஷன் சொல்வான், ‘பூமியின் வயது குறைந்து கொண்டே போகுது, ஆயுள் காலம் முடிஞ்சு போச்சு’ என்று. ஆனா சித்தர்கள் நாங்க அதைக் காப்பாற்றி, தட்டி எழுப்பி, தட்டி எழுப்பி, பூமியின் ஆயுள் காலத்தை நீட்டித்துக் கொண்டிருக்கிறோம். இது எங்களால்தான் முடியும்; மனிதர்களால் முடியாது. ஈசன் அருளால்தான் இது நடக்கிறது. )
குருநாதர் :- அப்பனே, எது என்று அப்பனே, இதனால், அப்பனே, இன்னும், அப்பனே, எது என்று புரிய அப்பனே, இன்னும், அப்பனே, பின் ஈசன், அப்பனே, பின் கோபத்தில் செல்லச் செல்ல, அப்பனே, பாடல்கள் இருக்கின்றதப்பா. அப்பாடல்களை பாடினாலே, அப்பனே, சந்தோஷம் ஏற்பட்டு விடும் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட சொல்லிக் கொடுக்கின்றேன் ஒவ்வொன்றாக அப்பனே. 

குருநாதர் :- அதனால், அப்பனே, நிச்சயம் முதலில், அப்பனே, கலியுகத்தில் பிறந்தவருக்கெல்லாம் புண்ணியம் அப்பனே, பின் இல்லை என்பேன்  அப்பனே. 

குருநாதர் :- அதிக அளவு பாவத்தை தான், முதுகில் சுமந்து கொண்டிருக்கின்றான் என்பேன், அப்பனே. பாவம் என்பது கஷ்டம் என்பேன் அப்பனே. கஷ்டத்தை, அப்பனே, பின் முதுகிலே சுமக்கின்ற பொழுது, எப்படி அப்பா நிம்மதி கிடைக்கும்?. 

குருநாதர் :- அதையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அவ் மூட்டையை கிணற்றிலிருந்து  விடுவோம் அப்பனே. பின் மெதுமெதுவாக, அப்பனே, மற்றவருக்காக வேண்டிக்கொண்டாலே போதுமானது அப்பா.

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  (“இறைவன் கோபமாக இருக்கும்போது, அவரை சமாதானப்படுத்த பல பாடல்கள் இருக்கின்றன. அதற்காகவே ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’ - திருத்தாண்டகம் போன்ற பாடல்களைப் பாட சொல்லியிருக்கிறார்கள். இறைவனை மகிழ்விக்கவும், அவரின் கோபத்தை குளிர்விக்கவும் பல பதிகங்கள் உள்ளன அவற்றை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன் என்று குருநாதர் கூறியிருக்கிறார். அடுத்தது — நம்மிடம் பாவம் அதிகமாகச் சேர்ந்து கொண்டே வருகிறது. கலியுகத்தில் பிறந்தாலே பாவம் சுமந்தவர்களாகத்தான் இருப்போம் என்று அவர் தெளிவாகச் சொல்கிறார். இந்த பாவமூட்டையை நீங்கள் சுமந்துகொண்டு வருகிறீர்கள்; அதை நான் இறக்கி விடுகிறேன் என்று குருநாதர் அருள்கிறார். நீங்கள் பிறருக்காக வேண்டும்போது, அந்த பாவச் சுமையை உங்கள் முதுகிலிருந்து நான் அகற்றிவிடுவேன் என்று அவர் உறுதி அளிக்கிறார்.”)

============================
# திருவண்ணாமலை ஞானியர்கள் உடம்பில் அதிக சக்திகள் உண்டு. அவற்றை பகிர்ந்து கொடுக்கவே, கூட்டுப் பிரார்த்தனைக்கு  சாதுக்களை குருநாதர் அழைத்து உத்தரவு இட்டார்கள் 
============================

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, அண்ணாமலையில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இருப்பவர்கள், அப்பனே, எப்பொழுதும், அப்பனே, அண்ணாமலையை, அப்பனே, நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-அப்பனே, இங்கு ஒரு அப்பனே பெரிய ஒளி படுகின்றது, அப்பா. இதனால், அப்பனே, பின் அவர்களின், அப்பனே, பின் உடம்பு, அப்பனே, அதிக சக்தி ஏற்படுகின்றது. பின், அப்பனே, இதனால்தான், அப்பனே, அவர்களை கொண்டு வரச் சொன்னேன். 

குருநாதர் :-அப்பனே, அந்த சக்திகளும் கூட, அப்பனே, பின் இவ்வாறு சிவபுராணம், அப்பனே, பாடுவதால் , அப்பனே, நிச்சயம் பிரித்து தரப்படும் என்பேன்  அப்பனே. இதனால், அப்பனே, சில புண்ணியங்கள் உங்களை சேரும். இப்புண்ணியத்தின் மூலம், அப்பனே, உங்களுக்கு தேவையானதை, அப்பனே, கிடைத்துவிடும் தானாகவே. இதனால், அப்பனே, நீங்கள் செய்தது வினை, பின் நீங்களே என்பேன்  அப்பனே, பொறுப்பு. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  (“சிவாய நம, சிவாய நம. ஒரு பெரிய உண்மையை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் — அண்ணாமலையில் ஒரு தெய்வீக ஒளி படுகிறது. அந்த கிரிலத்தைச் சுற்றி இருக்கும் சாதுக்கள் எல்லாருக்கும் அந்த ஒளி படுகிறது. அதனால்தான் அவர்களை இங்கே அழைத்து, உங்களுக்கு அந்த ஒளியைப் பகிரச் சொன்னார்கள். அந்த ஒளி உங்களுக்கும் சக்தியாக மாறும்.இங்கே வந்து படிப்பதால்தான் அந்த ஒளி உங்களுக்கு சேருகிறது.” )
குருநாதர் :-  அப்பனே, மின்கலத்தில், அப்பனே, எதை என்று, அப்பனே, பின் மின்சாரம் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே. ஆனாலும், அப்பனே, இங்கே, அப்பனே, பின் வருகின்றார்களே அப்பனே, நிச்சயம், சாதுக்கள், அப்பனே, எது என்று புரிய அப்பனே, இங்கே படுத்துறங்கி, அப்பனே, ஈசனை நினைத்துக் கொண்டு, அப்பனே, ஏதோ ஒரு வழியில், அப்பனே, திரிந்து கொண்டிருக்கின்றார்கள். 

குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, மின்கலம், அப்பனே, அதிகமாகவிடும் என்பேன்  அப்பனே. இதனால், அப்பனே, மின்கலம், அதாவது, மின்கலத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் மின்சாரம், அப்பனே, இல்லாதவர்களுக்கும் கூட, அப்பனே, யாங்கள் பிரித்து, இவர்கள் மூலம் தருவோம் அப்பனே. இதனால்தான், அப்பனே, அண்ணாமலையை தேர்ந்தெடுத்தோம் முதலில் அப்பனே. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  “சிவாய நம. ஒரு சூட்சுமத்தை குருநாதர் சொல்லியிருக்கிறார்கள் — ஏன் திரும்பத் திரும்ப கூட்டு பிரார்த்தனை நடக்கிறது தெரியுமா? 

ஏன்னா, நம்மளுக்கு ‘பேட்டரி சார்ஜ்’ இல்லை. ஆனா சாதுக்கள் இவர்கள் முழு சார்ஜில் இருக்கிறவர்கள். அந்த முழு சார்ஜில் இருக்கும் சாதுக்கள் , கொஞ்சம் சக்தியை நமக்கு பகிர்ந்து கொடுக்க வரவைக்கப் பட்டிருக்கிறார்கள். 

நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நம்ம மின்கலத்தில் சார்ஜ் இருந்தால்தான் நம்மால் ஏதாவது சாதிக்க முடியும்; இல்லையென்றால் நாமே ஜீரோவாகி நிற்கிறோம் — 0%, 10%, 20% மாதிரி.  

சார்ஜ் எப்போது குறையும், எப்போது போய்விடும் என்று நமக்கே தெரியாது. அண்ணாமலை இங்கே ஒரு பெரிய ஒளி படுகிறது; அதனால்தான் இங்கே இருப்பவர்கள் அந்த ஒளியிலிருந்து சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் அந்த சக்தியை நேரடியாக நமக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.  அப்படி டிரான்ஸ்ஃபர் ஆனால், நம்முடைய 20% 30% ஆகலாம், 40% ஆகலாம்.” 

=========================
இறைவன் அருளால் மீண்டும் இவ் ஞானியருக்கு சக்திகள் எப்படி அதிகரிக்கும் என்ற ரகசியம் அறிய பின்வரும் பதிவை படிக்கவும்.
சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2025/08/1920.html
=========================

=================================
# சிவபுராணம் ரகசியங்கள் - உங்கள் உடம்பில் இறை மின்சார சக்தியை தேக்கி வைக்கும்  துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் சிவபுராணம் நாம் அனைவரும் அவசியம் பாட வேண்டும். இதனால் நமக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. 
=================================

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும், இவைதான், அப்பனே, பின் அதிகமாக ஏறுவதற்கும் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, உங்கள், அப்பனே, உடம்பில், அப்பனே, நிச்சயம், துகள்கள் சரியாக இருக்க வேண்டும். 

குருநாதர் :-   அப்பனே, சரியான இயக்கத்தில், அப்பனே, இல்லையென்றாலும், அப்பனே, மீண்டும், அப்பனே, போய் தோல்வியில் ஏற்படக்கூடும். ஆனால், துகளில், அப்பனே, பின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான். சிவபுராணம் பாடுங்கள், பாடுங்கள் என்றெல்லாம், அப்பனே. இதனால், அப்பனே, உங்களுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  “நம்முடைய சார்ஜ் 40–50க்கு மேல் ஏற வேண்டுமென்றால், உடலின் அணுத் துகள்களும் ஆன்ம துகள்களும் நிறைவாகவும் சீராகவும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் சார்ஜ் ஏறாது. அதற்காக உங்களை எப்படி சார்ஜ் ஏற்றுவது என்று வழியும் சொல்லியிருக்கிறார்கள். அடுத்ததாக, சிவபுராணம் படிக்கச் சொன்னார்கள். சிவபுராணம் படிக்கும் போது சிதறி கிடக்கும் அணுத் துகள்கள் எல்லாம் ஒன்றாக ஒருங்கிணையும். அப்படி ஒருங்கிணைந்தால், அதிகமான சார்ஜ் ஏறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று குருநாதர் கூறுகிறார்கள்.”
குருநாதர் :-  அப்பனே, மனிதன் புது புதுமையான வித்தைகள் எல்லாம் காட்டுவான் என்பேன்  அப்பனே கலியுகத்தில், அப்பனே, பக்தியை வைத்துக்கொண்டு.  

========================================
# எப்போதும் உங்களை பார்த்துக் கொண்டே இருக்கும் இறைவன் 
========================================

குருநாதர் :-  ஏனென்றால், இறைவன், அப்பனே, நிச்சயம், எதை ஒரு பார்க்கத்தான் போகின்றானா என்ன?. ஆனால், பார்த்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால், இவனுக்கு தெரியவில்லை அப்பனே. இதுதான் முடன். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-  “இறைவன் கலியுகத்தில் எல்லாவற்றையும் கவனித்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனா முட்டாள் மனிதன், ‘யாரும் பார்க்கல, நாம செய்யறதைச் செய்றோம்’ என்று நினைக்கிறான். அது தவறு — இறைவன் எல்லா செயல்களையும் தொடர்ந்து கவனித்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
குருநாதர் :-  அப்பனே, இன்னும் கூட, அப்பனே, மனிதனுக்கு மோட்சம் தருகின்றோம் என்பதெல்லாம் பொய் சொல்லி, பொய் சொல்லி மக்களை திசை திருப்புவான் அப்பா. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- “பாருங்கள், முக்தி மனிதனால் தர முடியுமா? ஆனா சிலர் மக்களை ஏமாற்றி, ‘நான் முக்தி தருவேன், மோட்சத்துக்கு கூட்டிச் செல்வேன்’ என்று பொய் சொல்கிறார்கள். இப்படி பல பித்தலாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
குருநாதர் :-  அப்பனே, அது மட்டுமில்லாமல், ஆன்மாவுக்கு விடுதலை கொடுத்துக் கொண்டேன் என்று. அப்பப்பா, இதுவும் அதைவிட பொய்கள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆன்ம விடுதலையாம் என்னங்க இது? இதெல்லாம் வந்து… 

==============================
# மாம்பழம் - சதையான உங்கள் உடம்பும் , கொட்டை போன்ற உங்கள் ஆன்மாவும் 
===============================

குருநாதர் :-  அப்பனே, புண்ணியம் எவை என்கின்ற பாவம். அப்பனே, பின் பல உரைகளை நான் தெரிவித்து விட்டேன். அப்பனே, பின் மாம்பழத்தை எண்ணிக்கொள்ளுங்கள் நீங்கள் என்பேன் அப்பனே. பழம்தான் நீங்கள். அப்பனே, எது என்று அப்பனே, பின் அதில் இருக்கும் அப்பனே, எவ்வாறு பின் முளைப்பது என்பது உங்களிடத்திலே. அது இறைவனிடத்தில் சேருகின்றதா இல்லை, பின் தீய இடத்தில் சேருகின்றதா, நல்லிடத்தில் சேருகின்றதா என்பதெல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவே என்பேன்  அப்பனே. இதனால் புண்ணியங்கள், புண்ணியங்கள் அப்பனே, பின் அதிகரிக்க பல பாடல்களை சொல்லுகின்றேன் அப்பனே. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- “மாம்பழத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். அந்த மாம்பழத்தின் கொட்டை எங்க போட்டாலும் முளைக்கும் — அதுதான் ஆன்மா.  உடம்பு என்ன? அது சதை மாதிரி அழிந்து போய்விடும். ஆனால் கொட்டை மட்டும் அழியாது; அது ஆன்மா. அந்த ஆன்மா நல்ல இடத்துக்கு போகிறதா, கெட்ட இடத்துக்கு போகிறதா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. இறைவனிடம் சேர்வதற்கான பாதையும் உங்கள் கையில்தான்.  அதற்காகத்தான் உங்களுக்கு பாடல்களைச் சொல்லித் தருகிறார்கள்.”
குருநாதர் :-  அப்பனே, விவசாயத்தை எண்ணிக்கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே. ஒருவன் அழகாக காத்து நிற்பான். அப்பனே, எது என்று புரிய. 

குருநாதர் :-  அப்பனே, பின் எதை என்று புரிய. அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.  இது அப்பனே, நிச்சயம் அதிலிருந்து. அப்பனே, எது இவை எதற்கு முக்கியமாக தேவை? 

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, மாம்பழம் முக்கியமா? மாம்பழ கொட்டை முக்கியமா?

அடியவர் :-  கொட்டை தான் முக்கியம். 

குருநாதர் :-  அப்பனே, இப்படி எதற்காக சொல்கின்றாய் என்பது அனைவரிடத்திலும் கேள். 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாருக்குள்ள நீ கேளுப்பா, எதுக்கு முக்கியம்னு? 

அடியவர் :- (அனைவரிடமும் கேட்டார்கள்)  ஏன் நான் கொட்டை முக்கியம்னு சொன்னேன்? இல்ல, இதெல்லாம் மாற்று கருத்து இருக்கா? சதை வேணாமா? உடம்பு வேணாமா? உடம்பு முளைக்காது. ஆன்மாதான் முளைக்கும். சொல்லுங்க, 

அடியவர் 2 :- ரெண்டுமே வேணும். 

அடியவர் 3 :- ரெண்டு இருந்தாதான் அதை அடைய முடியும். 

குருநாதர் :-  அப்பனே, எது என்றுஅப்பனே, பின் இரண்டும் இருந்தால்தான் அப்பனே அனைத்தும் சாதிக்க முடியும். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-  கொட்டையும் இருக்கவேண்டும், பழமும் இருக்கவேண்டும்.

குருநாதர் :-  அப்பனே, இதில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனால், அப்பனே, நீங்களே, அப்பனே, அறிவை இங்கு நிச்சயம் செலவழியுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:-   ஏதாவது இங்க ஒன்னு கெட்டுப்போச்சுன்னா என்ன ஆகும்? நம்ம தான் செலவு பண்ணனும். செலவுதான் பண்ணனும். நம்ம தான் வந்து செலவு பண்ணனும். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் காலன் ஒரு நாள், அப்பனே, கடித்து தின்பான் உங்களை என்பேன்  அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் தூரே வீசி விடுவான். ஆன்மாவை என்பேன்  அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:-  “ஒரு நாள் காலன் இந்த உடம்பை எடுத்துச் சென்று விடுவான். மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு கொட்டையை எறிவது போல, உடம்பை எறிந்து விடுவான. அதனால் ஆன்மா மீண்டும் பிறப்புக்கு செல்கிறது. இப்படியே திரும்பத் திரும்ப பிறப்பு தொடரும்.
குருநாதர் :-  அப்பனே, அது கொட்டையை அப்பனே, யாராவது எடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எடுக்கின்றார்களா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த கொட்டையை யாராவது எடுத்து யூஸ் பண்றாங்களா? யாரும் எடுக்கிறது இல்ல? யாரும் எடுக்குறாங்களா? 

குருநாதர் :- அப்பனே, இது, இது, இதற்கே இப்படி என்றால், அப்பனே, மனிதனின் ஆன்மா எப்படி அப்பா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த கொட்டையை யாரும் வந்து சீண்டுறது இல்ல? சீண்டுறது கூட கிடையாது. அது என்ன ஆகுது? திருப்பியும் மறுபிறவி, மறுவிடுத்து தானாக வருது. வந்து, 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இப்படித்தான் அப்பா, ஆன்மாவும் கூட. அப்பனே, நிச்சயம் நீங்கள் என்ன செய்துள்ளீர்களோ, அதற்கு தகுந்தார் போல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மாறி மாறி போய்க்கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், அப்பனே, யோசியுங்கள் சிறிது. 
சுவடி ஓதும் மைந்தன்:-  “அப்ப என்ன ஆகும்? மனிதன் இறைவன் கொடுத்த உடம்பையும் உயிரையும் சரியான வழியில் பயன் படுத்தவேண்டும். அதை தவறாக பயன்படுத்தினால், இந்த உடம்பும் உயிரும் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டிய நிலை வரும். அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இங்கே வந்திருக்கிறோம்.
குருநாதர் :- அப்பனே, இன்னும் விதவிதமாக கலியுகத்தில் சொல்லுவான் அப்பா. ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம் ஒன்றை பின் உங்களை கேட்கின்றேன் அப்பனே. இறந்தவனை, அப்பனே, உயிர்ப்பிக்க முடியுமா என்ன அப்பனே? அப்பனே, இதனால், அப்பனே, அனைத்தையும் யான் பொய் என்றே சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இறந்தவரை பிழைக்க வைக்க முடியுமான்னு கேக்குறாங்க. குருநாதர். முடியாது. 

குருநாதர் :- அப்பனே, ஆனால், பின் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. அப்பனே, பின் எங்களால் முடியும் என்பேன்  அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனால், சித்தரால் மட்டும்தான் முடியும். வேற யாராலும் முடியாது. 

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய அப்பனே, கலியுகத்தில் விதவிதமான பொய்கள் தான் என்பேன்  அப்பனே. இறைவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பொய்கள் எல்லாம் சொல்லி, இறைவன், என்ன இறைவன் திருத்தலத்திற்கு ஏன் போகின்றீர்கள் என்றே சொல்லிவிடுவான் என்பேன்  அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:-  கடைசில என்ன பண்ணுவாராம்? கோயிலுக்கு எல்லாம் ஏன்ப்பா போற அப்படி நடக்காதுப்பா. கடைசில என்ன? ஒன்னும் நடக்காது. ஒன்னும் நடக்காது. உன் அறிவை நம்பு. உன் அறிவு என்ன பண்ணும்? அப்படின்றவங்க. 

குருநாதர் :-  அப்பொழுது, இறைவன் முட்டாளா? இங்க மனிதன் முட்டாளாப்பா? 

அடியவர் :- நிச்சயமா, மனிதன் தான் முட்டாள். 

குருநாதர் :-  அப்பனே, அந்நிலை கலியுகத்தில் வருமாப்பா? ஏனென்றால், கலியுகத்தில் அப்பனே, மனிதன் அழிய வேண்டும் அல்லவா? 

குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, என் சீடனே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, மூலன் அப்பனே, தெளிவு குருவின் அப்பனே, நிச்சயம். அப்பாடலை எப்படி எடுத்து வந்தான் தெரியுமா? 

சுவடி ஓதும் மைந்தன்:- திருமூலர் சித்தர் தெளிவு குருவின் திருமேனி. திருமூலர் அவர் சீடர் , அழகா எடுத்துட்டு வந்தார்.


ஓதுவார் அடியவர் :- ( அவ் பாடலை எடுத்து உரைத்தார்கள் ) 

தெளிவு குருவின் திருமேனி காண்டல். 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல். 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல். 
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 

குருநாதர் :-  எது என்று அறிய அப்பனே, அதனால், அனைவரும் சிந்திக்க வேண்டும். 
ஏன் இப்படி நடக்கின்றது? 
ஏன் எதற்காக நாம் மனிதனாக பிறந்தோம்? 
ஏன் எதற்காக உயிர் எங்கு இருக்கின்றது? 
எதற்காக ஓடுகின்றோம்? 
எதற்காக பிழைப்பு நடத்துகின்றோம்? 

குருநாதர் :- ஆனால், இவையெல்லாம் செய்பவன், அதாவது நிச்சயம் 
ஏன் நம் ஆசைகள் நிறைவேறவில்லை? 
ஏன் துன்பம் வருகின்றது? 
ஏன் இன்பம் வருகின்றது? இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அப்பனே, எவை என்று யோசித்தால், பின் நமக்கு மேலே ஒருவன் இருக்கின்றான் என்று உணர்வும் வந்துவிடும் அப்பா. அப்பனே, இவை தன்னை யோசிக்காவிடில், அப்பனே, நிச்சயம் தான் போன போக்கில் அப்பனே, கெட்டு. அப்பனே, மீண்டும் இறைவனிடத்தில் வருவான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :-
“அறிவைப் பயன்படுத்தி யோசிக்க வேண்டும். இறைவன் உயிரும் உடலும் ஏன் கொடுத்தார் என்பதை நாமே சிந்திக்க வேண்டும்.  அந்த சிந்தனைதான் உண்மையைப் புரிய வைக்கும். இறைவன் துன்பம் கொடுத்து நம்மை மாற்றுகிறார்; அந்த துன்பத்தில்தான் ஞானம் பிறக்கும். அதனால் வாழ்க்கை மீது வெறுப்பு வந்து, ‘இனி பூமியில் பிறக்கக்கூடாது’ என்ற எண்ணம் உருவாகும். அதற்காகவே துன்பம் வருகிறது — நம்மை யோசிக்க வைக்க.  ஏன் துன்பம்? ஏன் கஷ்டம்? ஏன் குழந்தை இல்லை? ஏன் பணம் இல்லை? ஏன் மன வருத்தம்?  ஒவ்வொன்றையும் சிந்தித்தால் பதில் கிடைக்கும் என்று குருநாதர் சொல்கிறார். அறிவைப் பயன்படுத்துங்கள் என்று குருநாதர் சொல்கிறார்.

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, இதனால், அப்பனே, அறிவை. அப்பனே, முதலில், அப்பனே, பின், அதாவது, பின், அதாவது, அப்பனே, பின், பின், எழுந்து நிற்கின்றீர்கள் அல்லவா? அதிகாலையிலே, அப்பனே, அப்பனே, எதை என்று யோசிக்க வேண்டும் என்று. பின், ஒரு ஒரு நாள், அப்பனே, எவ்வாறு இன்று நடப்பது? எவ்வாறு புண்ணியம் செய்வது என்றெல்லாம்? அப்பனே, இதனால், புண்ணிய காரியங்கள் எப்படியாவது, பின், ஒரு உயிரினுக்காவது, அப்பனே, செய்ய வேண்டும். 

அடியவர் :- தயவு செஞ்சு, காலையில எந்திரிச்சு என்ன பண்றீங்களோ இல்லையோ, காலையில எந்திரிச்சு முதல் வந்து, இன்னைக்கு நான் என்ன செய்ய போறேன்? என்ன புண்ணியம் செய்ய போறேன்றத யோசிங்கன்றாங்க குருநாதர்.

=================================
# திருக்கார்த்திகை தீபம் அன்று ஈசனார் எங்கிருந்தார் ?
=================================

குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே, பக்தர்கள், அப்பனே, பின், ஒரு வேளைக்கு, அப்பனே, பின், உணவு கூட, அப்பனே, நிச்சயம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்பனே. ஆனாலும், அப்பனே, இருப்பவர்களே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது என்று, அப்பனே, இங்கு அமர்கின்றார்களே அப்பனே. இவர்கள் எது என்று புரிய. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெளியே, அப்பனே, பின், எவை என்று காத்திட்டு, அப்பனே, பின், திருத்தலத்தில் உள்ளே சென்று, அப்பனே, பல பாடல்களை பாடி, அப்பனே, இருப்பவருக்குத்தான் மகிழ்விக்கின்றார்கள் என்று அப்பனே. 

குருநாதர் :- ஆனால், (திருக்கார்த்திகை) அன்றைய தினம், கார்த்திகை தீபமே, அப்பனே, இறைவன் வெளியே வந்துவிட்டான் அப்பா. இவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான் அப்பா. இதற்கு என்னத்தான் சொல்லப் போகின்றீர்கள் அப்பனே? 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

குருநாதர் :-  ஆனால், கூட்டமோ, (திருவண்ணாமலை ஆலயம் கருவறை) அங்குதான் இறைவன் இருக்கிறான் என்று சொல்வார்கள் உள்ளே. 
சுவடி ஓதும் மைந்தன் :- (திருக்கார்த்திகை தீபம் அன்று , திருவண்ணாமலை சாதுக்கள் இவர்களுக்காகவே ஈசன் வெளியே இவர்களிடம் வந்தாராம். கார்த்திகை தீபத்தில் பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் கோவிலுக்குள் இருப்பார்கள்; திருவண்ணாமலையில் உள்ளே பாடல் பண்ணிக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்த ஈசன், ‘நம்ம பசங்க எல்லாம் வெளியே இருக்காங்க, நாமும் வெளியே போகலாம்’ என்று வெளியில் வந்தாராம். )
குருநாதர் :-  அப்பனே, ஆனால், பிதற்றுவான் அப்பா, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, அன்றைய, பின், கார்த்திகை தீபத்தில், யான் உள்ளே இருந்தேன், ஒன்றுமே செய்யவில்லையே என்று. அப்பனே, ஆனால், இறைவன் எங்கு இருக்கின்றான் என்று கூட அறியவில்லையே மனிதனால், அப்பனே, எப்படி வாழ்வானப்பா? 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment