​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 25 January 2026

சித்தன் அருள் - 2080 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 2















தேதி  : 21.1.2026  (புதன்கிழமை) 
வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை முருகன் கோவில்
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

குருநாதர் :- அப்பனே, எவை என்றறிய, அப்பனே, பின் தலையில் அடித்துக் கொண்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :- தலையில் அடித்துக் கொண்டான், படி படி என்று.

அடியவர் 3 :- (அமைதி)

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் இப்பொழுதே கேள், யான் என்ன செய்ய வேண்டும் என்று. 

அடியவர் 3 :- நான் என்ன செய்ய வேண்டும்?

அடியவர்கள் :- அங்க, உங்க அப்பாகிட்ட கேளுங்கள்.

தந்தை :-  (ஓதி மலையில் கந்தப் பெருமானுக்கு மகத்தான சேவை செய்யும் அடியவர்)  ஒழுங்கா வேலைக்கு போ. கரெக்ட்டா வேலைக்கு போ.  பிடித்த வேலைக்கு போ.  

குருநாதர் :-    அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, சொல்லிவிட்டான் அப்பனே. ஏனென்றால், அப்பனே, இவனுக்கு ஏன், அப்பனே, தொழில் எது என்றறிய, அப்பனே, இவன் சம்பாதித்து, எவை என்றறிய, உன்னிடத்தில் தான் புடுங்குவான், அப்பா, காசுகள்.  அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று.

சுவடி ஓதும் மைந்தன் :-  தொழில் ஏன்னு உங்களுக்கு சொல்ல, நீங்க கஷ்டப்பட்டு காசு சம்பாதிச்சு, நீங்க வைக்க மாட்டீங்க.  கடைசில யாரை பிடுங்குவாங்களாம்?.

அடியவர் :- (அவ் அடியவரை பார்த்து) ஆமாவா ? இல்லையா? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா, கையில புடுங்குவாராம். 

அடியவர் :-  (மகிமை புகழ் மிக்க  ஜீவநாடி வாக்கு) இது எப்படி இவருக்கு தெரியும்? பின்னாடி  ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருந்து வந்தாதான், இதை பத்தி எல்லாம் யாருக்கும் தெரியும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, யாரு கையில? அப்பா கையில புடுங்குவோம்.

குருநாதர் :-   அப்பனே, இதனால், நிச்சயம், தந்தை சொல்வதை கேள். மீண்டும் உரைக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அவர் வந்து, அவர் என்ன சொல்றாரோ, அதை கேட்டுக்கோ. மீண்டும் நான் அடுத்த வரும்போது, நான் உரைக்கிறேன்னு சொல்லிட்டாரு.

அடியவர் :- (எனக்கு தெரிஞ்சு, என்னுடைய அனுபவத்தில், இந்த அளவுக்கு வாக்கு கருணையுடன் உன்னை தவிர வேற யார்கிட்டயும் இவர் - அகத்திய மாமுனிவர் - காமிச்சது இல்ல) 

அடியவர் 4:- (அப்பாவுக்கும் , அம்மாவுக்கும்  பெரிய புண்ணியம் இல்லைன்னா, இவ்வளவு எல்லாம் கிடைக்காது வாக்கு.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான பேர் வாக்குக்காக காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.)

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (ஆமா, அய்யா ரெக்கார்ட் பண்ணுங்க, இதுல ரெக்கார்ட் பண்ணுங்க. ஏன்னா நங்கள் தொழில் { Business } செய்யலாமா என்று பலரும் கேட்டுகிட்டே இருக்கின்றார்கள்.  தொழில் செய்ய வேண்டும் என்று. - இந்த வாக்கு அவர்களுக்கு தெளிவு கிடைக்க உதவும்  - )
 
அடியவர் :-  (எனக்கு  தெரிஞ்சு,  இவர்கிட்ட - சுவடி ஓதும் மைந்தனிடம் - பேசுறதுக்கு (நாடி வாக்கு கேட்டு)  ஆயிரக்கணக்கான பேர், என்னை போய் ரெக்கமெண்டேஷன் பண்ண சொன்னாங்க. நானே பேச முடியாதுன்னு சொல்லிட்டேன். ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் கடைசில பாருங்களேன், முருகரை கும்பிடு, எதுவுமே சொல்லல, கடைசில எல்லாம் எடுத்துட்டு வந்துட்டு, என்ன பண்ணிட்டாரு, 

அடியவர் :-  அப்பாவை கேளு, அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பாவை போய் கேட்டுக்கோ. அவர் என்ன சொல்றது கேளுங்க, ஐயா. அப்புறம் சொல்லுங்க.

அடியவர் 4:- (பல்லி) கெவுளி அடிச்சது.

அடியவர் :-   (இதுவரை நீ விரும்பியபடி நடந்திருக்கலாம். ஆனால் இப்படி வாக்கு சொல்லிய பின், தந்தையின் அறிவுரையை மதிக்காமல் மீறிச் சென்றால், மிகுந்த வருத்தம் அடைவார். என் கருத்து புரிகிறதா — அதுவே முக்கியம். இனிமேல் கவனமாக நடந்து கொள்.) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா, ஐயா, சரி. 

=================================
# கருணைக்கடல் , ஆதி ஈசனாரின் செல்ல குழந்தைகளுக்கு ஆசிகள் தந்த போது. 
=================================

அடியவர் :- ஐயா, வேத ஆகம பாடசாலையிலிருந்து, வித்யார்த்திகள் எல்லாம் வந்திருக்காங்க, அவங்களுக்கு உங்களுடைய பூரணமான ஆசீர்வாதமும்… 

குருநாதர் :-   அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, அனைத்தும் கிடைக்கும், அப்பா. அப்பனே, ஈசனே, துணையிருந்து காப்பான், அப்பா. கவலையில் வேண்டாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஈசனுடைய பின் குழந்தைகளே. 

அப்பனே, ஈசன், பின் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வான், அப்பா. ஏனென்றால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில், அப்பனே, பல வகையில் கூட, தீங்குகள் தான் ஏற்பட போகின்றது. 

இதனால், அப்பனே, இப்படி எல்லாம், அப்பனே, ஈசனுக்கு பின் பிடித்தவர்கள் எல்லாம், அப்பனே, இப்படி அனுப்பி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, திருத்தலங்களில், அப்பனே, பின் பாட வைத்தால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மற்றவர்களும் திருந்துவார்கள். 

இதனால்தான், அப்பனே, ஈசன், அப்பனே, பின் அனைத்தும் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, பின் ஈசன், பின் அனுப்புகின்றான், பின் அப்பனே, இதுபோல், அப்பனே, குழந்தைகளை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யாரு புரியுதுங்களா? 

அடியவர் :- ஈசன் தான் அனுப்புறாரு….

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் தான் அனுப்புறாரு, ஏன்னா…. 

அடியவர் 4:-  பவர் சென்டர்ல இருந்து (வந்தவர்கள் தான்  இந்த வேத ஆகம பாடசாலையிலிருந்து வித்யார்த்திகள் எல்லோரும்.)

=====================================
(இதே போல உலகெங்கும் உள்ள அனைத்து வேத ஆகம பாடசாலை வித்யார்த்திகளுக்கு இந்த வாக்கு பொது.) 
=====================================

சுவடி ஓதும் மைந்தன் :-  (இது இதேபோல் தொடர்ந்தால், தர்மம் அழிந்து விடும். ஆகையால், தர்மத்தை பாதுகாக்க அவர் என்ன செய்கிறார்?)

குருநாதர் :-   அப்பனே, ஈசனுக்கு வருத்தம் தான், அப்பனே, எதை என்று புரிய. ஏனென்றால், மற்றவர்களை பின் காக்க வேண்டும், அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஈசனுக்கு இவர்கள் மேல வருத்தம் இருக்குது. என்னடா படைச்சிட்டுமே, இப்படின்னு சொல்லிட்டு இருந்தாலும், என்ன பண்றது? தர்மத்தை காக்க….)

#  ======================================== # 
வேத ஆகம பாடசாலையில் வேதம் ஓதுகின்ற அவர்களின்   அருளாலே, இவ்வுலகம் நிலைத்து நிற்கிறது. நாம் அனைவரும் அவர்களைப் போற்றிப் பணிவுடன் மதிக்க வேண்டும். நாம் அனைவரும் வேதம் ஓதுபவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவர்களின் தபஸும், அவர்கள் ஓதும் வேதநாதமும்  நம்மை, இவுலகை  வாழ வைத்திருக்கிறது என்பதை மனம் உணர வேண்டும். இவர்கள் ஆதியீசனின் அருள் பெற்ற தெய்வக் குழந்தைகள். வேதம் ஓதுபவர்களுக்கு செய்யும் ஒவ்வொரு உதவியும் இறைவனின் திருவுளத்தை குளிர்விக்கும் புனித செயல் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
#  ======================================== # 

குருநாதர் :-   அப்பனே, ஒரு பிறவியில், நீங்கள் எல்லாம், அப்பனே, பின் அடியார்கள். அதாவது ஈசனுடைய அடியார்கள், பின் இருந்தவர்  தான் அப்பா. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அதனால் நீங்கள் உன் விருப்பப்படியே நடக்கட்டும், என்றெல்லாம் நீங்கள் நிச்சயம் கேட்டிருக்கின்றீர்கள்.

அதனால், அப்பனே, தர்மத்தை நிலைநாட்டவே என்பேன் அப்பனே. 

பின் உங்கள் போல், அப்பனே, ஆட்கள், பின் இருப்பதனாலே, அப்பனே, தர்மமும் (தன்னை) நிலைநாட்டுகின்றது. 

அப்பனே, பின் நிச்சயம், இப்பூமி தாயவளும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் கெடுதல் செய்பவர்களும் கூட, அப்பனே, பின் உங்களால், பின் நிலை நிறுத்துகின்றது, 

அடியவர் :- அப்பா !!!!!!!

அடியவர்கள் :- ( கருணைக் கடலின் இந்த வாக்கினை கேட்டவுடன் - கைதட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (இந்த உலகத்தில் தீமை செய்ய நினைப்பவர்கள், பல தீமை செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பூமித் தாய் முழுமையாக அழிக்க வேண்டும் என்று எண்ணினாலும், ஆனால் இவ்வாறான ஓதுவோர், நல்லோர் இருப்பதால், அவர்களின் மூலம் ஓங்கி ஒலிக்கும் வேதம் காரணமாக,  பூமித் தாய் நம்மை தாங்கிக் கொண்டிருக்கிறாள். இவர்கள், தாங்கள் செய்யும் நன்மையின் பயனை அறியாமலேயே வாழ்கிறார்கள். அவர்களாலேயே உலகம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. அதனால் பூமி பொறுமையுடன் காத்திருக்கிறது.)

குருநாதர் :-  அப்பனே, இதனால், இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அப்பனே, இதனால் எதை என்றறிய, அறிய, கந்தனே, வள்ளி தெய்வானையோடு வந்து, இவர்களை பின் ஆசீர்வதித்து விட்டான் என்பேன் அப்பனே. 

அடியவர்கள் : - நமச்சிவாய

குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூற, பின் ஒரு சந்தோஷமும் அனுபவிக்க முடியாது, அப்பா இவர்கள். ஈசன் தான் துணை.

அடியவர்:- நல்லா கேளுங்க. (இந்த வாக்கு) பொக்கிஷம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இவங்களுக்கு சந்தோஷம் என்பது யார் ஏற்படுத்தணும்? ஈசன் மட்டும் தான் ஏற்படுத்தனும். 

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, படைத்தவனுக்கு தெரியுமப்பா, இவர்களை வழிநடத்த. 

சுவடி ஓதும் மைந்தன் :-  படைத்தவருக்கு, ஈசனுக்கு தெரியும், வழிநடத்த என்று சொல்கின்றார். 

குருநாதர் :-  அப்பனே, ஈசன் பார்த்துக் கொள்வான், என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, பின் அறிந்து கூட, இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் கூட, அப்பனே, ஈசன், அப்பனே, நல்லோர்களை இவ்வாறு தான் உருவாக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உலகத்தை எப்படி பின் காக்க வேண்டுமோ, அப்படி காப்பான், என்பேன் அப்பனே. 

மீண்டும், அப்பனே, பின், அதாவது, இவையெல்லாம், இத்தர்மங்கள் எல்லாம், அழியக்கூடிய நிலையில் இருக்கின்றது அப்பா. 

ஆனாலும், இதற்கு அதிவிரைவில், அப்பனே, ஒரு ஆளை தேர்ந்தெடுத்து, அப்பனே, பின், இவர்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம், விடிவெள்ளி, அப்பனே, அனைவருக்கும், பின், எவ்வளவு, எதை என்று, காசுகளையும், இன்பத்தையும் கொடுப்பதற்கு, அப்பனே, ஈசன் நினைத்துக் கொண்டே இருக்கின்றான், அப்பனே. கவலை விடுங்கள், 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-   (வேதம் ஓதுபவர்கள் இக்காலத்தில் மிகுந்த துன்பத்திலும் பற்றாக்குறையிலும் வாழ்ந்து வருகின்றனர்; பலருக்கும் பொருளாதார வசதிகள் கூட இல்லாமல் கடினமாகப் போராடும் நிலை. இப்படியான சூழலில், ஈசன் கருணையுடன் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இந்தப் புனிதக் கலையை காக்க, வேண்டிய அனைத்தையும் அவர் மூலம் கொடுப்பதற்கு ஈசன் நினைத்துக் கொண்டே இருக்கின்றார். ஏனெனில் இந்தக் கலை மறைந்து அழியும் நிலை உருவாகி வருகிறது; கலியுகத்தின் இயல்பால் அழிவின் சூழ்நிலை மேலும் நெருங்குகிறது. இருந்தாலும், ‘வேதம் அழியும்’ என்று முன்பே கூறப்பட்டிருந்த போதும், அது அழியாமல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே சிவபெருமானின் திருவுளம்; அதற்குத் தேவையான அனைத்தையும் அவர் ஏற்படுத்த உள்ளார்.)

==================================
# எப்பொழுது வேதங்கள் அழிகின்றதோ, அப்பொழுது கலியுகம் முற்றுகின்றது என்று அர்த்தம். 
==================================


குருநாதர் :- அப்பனே, எப்பொழுது வேதங்கள், பின் அழிகின்றதோ, அப்பொழுது கலியுகம் முற்றுகின்றது என்று அர்த்தம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பொழுது வேதங்கள் அழிகின்றதோ, அப்பொழுது என்ன ஆகும், முற்றுகின்றது, 

குருநாதர் :- அப்பனே, இப்பொழுதே அழிந்து கொண்டுதான் இருக்கின்றது, கலியுகம் முற்றும் நிலைக்கு சென்று கொண்டே தான் இருக்கின்றது. 

ஈசன், அப்பனே, எளிதில், அப்பனே, நிச்சயம் தன்னில் இறங்கி, அப்பனே, பின் இவை தன் மாற்றுவான், என்பேன், அப்பனே. 

======================================
# எப்பொழுது வேதங்கள் ஒலிக்கப்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம், இளைஞர்கள், இளைஞிகள்  -  நிச்சயம் கல்வியில்  உயர்ந்த நிலையை அடைவார்கள்.
======================================

குருநாதர் :-  எப்பொழுது வேதங்கள் ஒலிக்கப்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்றறிய, அப்பனே, பின், அதாவது, இளைஞர்கள், அப்பனே, இளைஞிகள் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கல்வியில், அப்பனே, பின் உயர்ந்த நிலை அடைவார்கள், என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  உலகம், அப்பனே, நிச்சயம் தன்னில், இப்படியே இருக்காது, அப்பா. 

===================================
# ஆதி ஈசனார் அருளால் , அதிவிரைவிலே நிச்சயம் அனைத்து கல்வி நிலைகளில் வேதங்களை கொண்டு வருவார்கள்.
===================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஈசன் மாற்றுவான், அப்பனே. நிச்சயம், அனைத்து கல்வி நிலைகளில் கூட, அப்பனே, கொண்டு வருவார்கள், வேதங்களை கூட. 

குருநாதர் :-  பின், அதிவிரைவிலே, ஈசன், என்பேன், அப்பனே. ஈசனால் அனைத்தும் முடியும், அப்பா. கந்தன் இருக்கின்றான். பின்னே பார்த்துக் கொண்டே இருக்கின்றான், அப்பனே. ஆசிகள். 

அடியவர் :- (குழந்தை வரம் குறித்து ஒரு அடியவருக்கு பொது வேண்டுதல் வைத்த பொது)  

குருநாதர் :- அப்பனே, இந்நேரம் எதை என்று கூட சொல்லிக் கொண்டிருந்தேன், என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நேரம் வரையிலே, நான் என்ன சொல்லி இருக்கிறேன், உனக்கு என்று சொல்கின்றார்.

குருநாதர் :- அப்பனே, வேதங்கள் எதை என்று அறிய , அப்பனே, பின்னே சொல்லித் தருவோருக்கு, அவரவர், அப்பனே, பின் குழந்தைகளாக எண்ணிக்கொள்ள வேண்டியதுதான் , இப்பொழுது, பின் நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர் :-  தர்மத்திற்காக பிறந்தவர்கள் அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்க எல்லாரையும் குழந்தையா பார்க்கணும், அதுதான், ஏன்னா, தர்மத்துக்காக இங்க வந்து பிறக்க வச்சுக்கிறார், இன்பத்தையும் எல்லாத்தையும் யாருக்கு கொடுக்கணும், ஈசன் தான் கொடுக்கணும், ஐயா, புரியுதுங்களா?

அடியவர் :- ( மீண்டும் குழந்தை பாக்கியம் குறித்து கேட்ட போது )

குருநாதர் :-  அப்பனே இருப்பவனுக்கு, அப்பனே பல பழமொழிகள் உண்டு, என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இதைத்தான் ஈசனே அப்பனே. அதாவது பிறவிகள் முடிந்திட்டு, என்பேன், அப்பனே, அவனுக்கு எதை என்று புரிய. 

அப்பனே, ஈசன், நிச்சயம் தன்னில் கூட, அனைத்து குழந்தைகளையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் உன் குழந்தைகள் போல் எண்ணி வா என்றெல்லாம், பின் அதாவது அனுப்பி வைத்திருக்கின்றான் அப்பா. ஈசன் பார்த்துக் கொள்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால், ‘இது தான் செய்யப்பட வேண்டும்’ என்று ஈசன் உங்களுக்கு கட்டளை. ‘நீ பூலோகத்தில் பிறக்கப் போகும் அனைவரையும் உன் குழந்தைகளாக எண்ணிக்கொள்’ என்று அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அனைத்தும் ஈசனின் இஷ்டத்தின்படியே நடைபெறுகின்றன.)

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் மனிதனின் வாழ்க்கை, அப்பனே, பின் எதை என்று புரிய, எப்பொழுது எதை என்று, அப்பனே, புரிந்து கொள்ள முடியாதப்பா. நிச்சயம் அவையெல்லாம், நிச்சயம் அறிவியல், பின் வழியாக யான் உரைக்கின்றேன், வரும் காலத்தில். அப்பொழுது புரிந்து கொள்வீர்கள், என்பேன் அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதனோட வாழ்க்கை வந்து யாராலும் புரிஞ்சுக்கொள்ள முடியாது, நான் வரும் காலத்துல  அறிவியல் பூர்வமா சொல்றோம், சொல்றோம்ன்றார், ஓகேங்களா.

=====================================
# வேதங்கள் காக்கப்பட வேண்டும்
=====================================

குருநாதர் :- அப்பனே, இதனால் வேதங்கள் காக்கப்பட வேண்டும், என்பேன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.  ஈசன் அதற்கு சரியான ஆளை தேர்ந்தெடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நடத்துவான். வழிகள் செய்வான். 

=========================================
# பல திருத்தலங்கள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றது. திருத்தலங்களில் இறை சேவை செய்யும் அடியவர்கள் பலர் , ஒரு வேளை உணவு  இல்லாதவர்கள் கூட இருக்கின்றார்கள்.
=========================================

குருநாதர் :-  அப்பனே அவை மட்டுமில்லாமல், இங்கிருந்தே சொல்கின்றேன், அப்பனே. பல பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் திருத்தலங்களில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, ஒருவேளை, அப்பனே, பின் உணவு, பின் இல்லாதவர்கள் கூட இருக்கின்றார்கள், அப்பா. 

இறைவனுக்கு சேவை செய்து கொண்டு இருக்கின்றார்கள், அப்பா. அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் திருத்தலங்கள் அழியக்கூடிய நிலையில் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

நிச்சயம் அதை மீட்டெடுக்க, பின் ஆளை தேர்ந்தெடுத்து, அப்பனே, நிச்சயம் அங்கு சேவை செய்வதற்கெல்லாம், பின் அனைத்தும் வசதிகளும் கூட, அப்பனே, அதிவிரைவிலே, அப்பனே, பின் ஈசன் செய்யத்தான் போகின்றான், அப்பா, யார் தடுத்தாலும்.

அடியவர் :- நமசிவாய, நமசிவாய.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (பல கோயில்களில்  பொருளாதார வசதியின்றி, உணவிற்கும் கூட வசதியின்றி பற்றாக்குறையுடன் ,  உணவிற்கும் வசதிகளுக்கும் பற்றாக்குறையுடன் இறைவனுக்கு சேவை செய்பவர்கள் பல இறை அடியவர்கள் வாழ்கிறார்கள். ஐயா, இதை முழுமையாக பதிவு செய்யுங்கள். மேலும் பல கோயில்களில் இது போன்ற தேவைகள் அதிகமாக உள்ளன. இதனைப் பார்த்து, ஈசன் ஒரு தீர்மானத்திற்கு வந்து, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் மிக விரைவாக அருளுவார். யாரேனும் தடுக்க முயன்றாலும், அது பயனற்றது. இறுதியில் அவர் கூறிய ஒரு வார்த்தை—பாருங்கள், யார் தடுத்தாலும் அது நிற்காது.)

=======================================================
###### ======     “ஓதிமலை ரகசியங்கள்”    ========  ######
=======================================================


==============================
# ஓதிமலை முருகப் பெருமான் பஞ்சபூத ஸ்தலங்கள் அனைத்தின் இறைவனாக இங்கு அருளுகின்றார்.
============================== 

குருநாதர் :-  அப்பனே, இத்தலம் மிகச் சிறப்பு வாய்ந்தது, என்பேன், அப்பனே. இவை தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே, பஞ்சபூதங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பஞ்சபூத, பின் ஸ்தலங்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒருவனாகவே நிற்கின்றான், இங்கு. 

அடியவர் :- ஆஹா !!!! 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (திருவண்ணாமலை, காளஹஸ்தி, காஞ்சிபுரம், சிதம்பரம்,  திருவானைக்காவல் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐந்து முகமாக  முருகப்பெருமான், ஓதிமலை  இங்கு இருந்து அருளுகின்றார்.)

====================================
# பஞ்சபூத ஸ்தலங்கள் தரிசித்து , பின்னர் ஓதிமலை தரிசனம் செய்தால் - ஓதியப்பர் ஆசீர்வதித்து  விடுவார். 
====================================

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம், பின் அங்கு சுற்றுவது, அப்பனே, பின் இங்கு கண்டால், பின் அப்பனே, அப்பன் ஆசீர்வதித்து விடுவான், அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பஞ்சபூத ஸ்தலங்கள்  அங்கெல்லாம் போய் சுற்றி , இங்கு ஓதிமலை வந்தால்  உங்கள் அப்ளிகேஷன் எல்லாம் சாங்க்ஷன்  பண்ணிருவார். )

================================
# ஓதி மலை ஓதியப்பரின்  5 முகங்களும் ஈசனுக்கே உடையது.
================================

குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, இதனால் அனைத்து முகங்களும், அப்பனே, ஈசனுக்கே உடையது. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஓதியப்பரின்  5 முகங்களும் ஈசனுக்கே உடையது. ஈசனுக்கே சொந்தம்)

===================================
# ஓதிமலை  ஓதியப்பரின்  ஆறாவது முகத்தின்  ரகசியங்கள். 
===================================

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் அறுபடை வீடுகளும் கூட, எதை என்று அறிய, அப்பனே, பின்னே இன்னொரு முகத்தை வைத்துக் கொண்டால், இதுதான், அப்பனே, சூட்சும ரூபம். அப்பனே, ஐந்து முகங்கள் இல்லை, ஆறு முகம். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஓதிமலை இங்கு ஒரு சூட்சுமம் உள்ளது. நாம் இங்கு ஓதி மலையில்  பார்ப்பது முருகப்பெருமானின் ஐந்து முகம். இது அனைவருக்கும் தெரியும்; ஆனால் சூட்சுமமான ஆறாவது முகம் உள்ளது.)
===================================
# ஓதிமலை  ஓதியப்பரின்  ஆறாவது முகம் -  திருச்செந்தூர் முருகப்பெருமான். 
===================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சூட்சுமமாக இருப்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் செந்தூரானே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- (அந்த சூட்சுமமாக ஆறாவது முகம் - திருச்செந்தூர் முருகப்பெருமான்)

================================
# ஓதிமலை  = (பஞ்சபூத ஸ்தலங்கள்  + அறுபடை வீடுகள்)
================================

குருநாதர் :- அப்பனே, இப்பொழுது புரிகின்றதா, பஞ்சபூத ஸ்தலங்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறுபடை வீடுகளும் உள்ளடக்கவே, அப்பனே, ஓதிமலை, 

அடியவர் :- அப்பா !!!!

சுவடி ஓதும் மைந்தன்  :- ஐயா, புரியுதுங்களா, 

================================
# ஓதிமலை முருகப்பெருமானை வணங்கினால் என்ன வேண்டுமானாலும் தருவார். ஆனால் தீயவை நினைத்தால் அடியோடு அழித்து விடுவார்.
================================

குருநாதர் :- அப்பனே, அதனால், அப்பனே, இவனை, அப்பனே, வணங்கினால், அப்பனே, என்ன வேண்டுமானாலும் தருவான், அப்பா. 

குருநாதர் :- அதேபோல், அப்பனே, தீயவை நினைத்தால், அடியோடு அழித்து விடுவான், 

அடியவர்கள் :- ( உணர்ச்சி பெருக்கெடுத்து  ) ஓதி மலை ஆண்டவருக்கு…. அரோகரா ….

சுவடி ஓதும் மைந்தன்  :- (அவர் என்ன செய்வார் என்றால், நமது கோரிக்கைகள் நன்மையானவை என்றால் நிச்சயமாக நன்மையை அருளுவார். கோரிக்கைகள் தீமையானவை என்றால், அடியோடு அழித்து விடுவார் )

குருநாதர் :-  அப்பனே, இதை நீயே கண்டுகொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை இங்க நீங்களே கண்டுகொள்ளலாம், 

அடியவர் :- (அதான் சொல்லிட்டு இருந்தேன், எனக்கு என்ன வேணாலும் அவர் கொடுக்குறாருங்க. எனக்கு எதுவுமே இது குறைய வச்சது இல்லை)

==============================================
# ஓதிமலை - ஓதி என்பது எதை குறிக்கின்றது? கந்த பெருமான் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் உபதேசம் செய்த மகத்தான மலை  - ஓதிமலை.
==============================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, ஓதி, எதை குறிக்கின்றது? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஓதி, எதை குறிக்கும் ? எதை குறிக்கும், 

அடியவர் 6 :- ஓதி…..

அடியவர்கள்  :- உபதேசம், உபதேசம். 

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, ஏன், எதற்கு, எவை என்று கூற , அனைத்து தெய்வங்களுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய, அப்பனே, பின் அதாவது, எவை என்று ஒரு தடுமாறும், அதாவது, எதை என்று இன்னும் கூட, பின் தேவர்களும், எவை என்று புரிய, அப்பனே, பின் அதாவது, பல முப்பத்து முக்கோடி தேவர்களும் கூட, அப்பனே, பின் ஒன்றும் தெரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உலகம், எவை என்று கூட, அழிவு நிலைக்கு வந்து கொண்டே இருக்கும் பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் ஓடி வந்து, அப்பனே, தெரிந்துவிட்டது, அவருக்கெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று அறிய , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எங்கு (உபதேசம்) பெற்றால், நலமாகும்? பின் அப்படியே நிற்கும் என்பதற்கு இணங்க , அனைத்தும் ஓடி வந்தார்கள், என்பேன், அப்பனே, இங்கு.  அப்பனே, முருகன் இடத்திற்கு. 

இதனால், அப்பனே, உபதேசம் செய்தான். இப்படி நல்க என்று, தர்மத்தை பேணி காக்க என்று. அப்பொழுது நின்றுவிட்டது, அப்பா. 

இதனால், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, மீண்டும், அப்பனே, பின் அதர்மம் தூக்கி விளையாடுகின்றது, அப்பனே. 

நிச்சயம் அசைந்தால் , யாரும் தாங்க மாட்டார்கள், அப்பா. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதனால்தான், அப்பனே, தனியாக நிற்கின்றான் என்பேன், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும், பின் தர்மத்தை, அப்பனே, பின் கடைபிடிக்காமல், அப்பனே, வந்தார்கள் என்றால், அப்பனே, அவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-   (முப்பத்து முக்கோடி தேவர்களும் உலகின் அழிவு நிலை ஏன் என்று  புரியாமல் குழப்பம் ஏற்பட்டது. அனைவரும் ஓதிமலை முருகப்பெருமானிடம் சரணடைந்தனர். ஓதிமலை  கந்தப்  பெருமான்   “தர்மத்தை காக்க வேண்டும்” என்று உபதேசம் செய்ததால் அழிவு நின்றது. கலியுகத்தில் மீண்டும் அதர்மம் அதிகரிக்கிறது; மீண்டும் உலக அழிவு வந்தால் அதை யாரும் தாங்க முடியாது. தர்மத்தைப் பின்பற்றாதவர்களின் வாழ்க்கை தானாகவே சிதைந்து விடும். )

====================================
# ஓதி மலையில் ஓதியப்பர் உபதேசம் சொல்லி அனுப்புவார். திருந்தினால் நல்லது. திருந்தாவிட்டால், அவ்வளவுதான் வாழ்க்கை. 
====================================

குருநாதர் :-   அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் நீங்கள் எதை என்று புரிய, அப்பனே, வந்தாலும், அப்பனே, பின் இவ்வாறு, பின் உபதேசம் சொல்லி அனுப்புவான், என்பேன், அப்பனே. திருந்தினால் நல்லது. திருந்தாவிட்டால், அவ்வளவுதான் வாழ்க்கை. 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :-   (எல்லோருக்கும் அவர் என்ன செய்கிறார் தெரியுமா? நீங்கள் வைத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார். நியாயம் இல்லை என்றால், ஒரு முறை வாய்ப்பு கொடுத்து, “திருந்திக் கொள்” என்று அனுமதிப்பார். ஆனால் அடுத்த முறை கூட திருந்த முடியாவிட்டால், வாழ்க்கையின் கதவை மூடிவிடுவார்.அவ்வளவுதான் வாழ்க்கை. லைஃப் க்ளோஸ்.)

குருநாதர் :-   அப்பனே, ஏன் எதற்கு, எவை என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மலையோன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, அப்பனே, இதனால், அப்பனே, சிறப்புகள் இன்னும் சொல்கின்றேன், அப்பனே. பின் நிச்சயம் கேளுங்கள், உங்கள் (கேள்விகளை)… 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (நான் இன்னும் முருகப் பெருமானின் சிறப்புகள் சொல்றேன், நீங்க  இன்னும் கேள்வி கேளுங்க  ஐயா) 

அடியவர் 5 :- ( உடல்நிலை குறித்து கேட்டபோது )

=============================
# முருகன் இருக்க  பயம் ஏன் ?  
=============================

குருநாதர் :-   அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் ஒரு சொல் சொல்வார்களே. அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, யானும் இதைத்தான் சொல்கின்றேன், அப்பனே.

““““““முருகன் இருக்க  பயம் ஏன் ?””””””  

ஆடுவதும், அசைவதும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவனருளாலே இருக்கின்ற பொழுது, நீ எப்படி அப்பா இவ்வாறு கேள்விகள்  கேட்கலாம்?

அடியவர்கள் :- (சிரிப்பு)

சுவடி ஓதும் மைந்தன்  :-   (அவர் அருளால் எல்லாம் அங்கே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. “நீ எப்படி தாமதமாகிறது? எப்படி நீ இப்படிச் சொல்ல முடியும்?” என்று அவர் கேட்கிறார்)

மற்றொரு அடியவர் :-  எல்லாம் அவர் சொல்லித்தான் 

அடியவர் 5 :- லேட்டா சாப்பிடுறதுனால, உடம்புக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேங்குது.

===============================
# முருகப்பெருமான் எதையும் பார்ப்பதில்லை. உள்ளத்தை மட்டுமே பார்க்கின்றார்.
===============================

குருநாதர் :-  அப்பனே, எதையும் பார்ப்பதில்லை அப்பனே, முருகன். உள்ளத்தை பார்க்கின்றான். அவ்வளவுதான் என்பேன் அப்பனே.

அடியவர் :- நமசிவாய. 

சுவடி ஓதும் மைந்தன்  :-   எதையும் பார்க்க மாட்டார் ஓதிமலை  முருகன். உள்ளத்தை பார்க்கிறார். அவ்வளவுதான். அடுத்துங்க அய்யா. 

அடியவர் 5 :- ஐயா, அப்பா அம்மாவுக்கு (உடல்நிலை) எல்லாம் நல்லா இருக்குல்ல ? 

குருநாதர் :-   அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, இவனுக்கு சேவை செய்கின்றாய், நீ.  அப்பனே, பின் அவர்களுக்கு சேவை செய்வார்கள், அவ்வளவுதான், முருகன்.

சுவடி ஓதும் மைந்தன்  :-  (நீங்கள் முருகப்பெருமான் அவருக்கு சேவை செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கு தேவையானது வந்தவுடன், முருகப்பெருமான்  அவர் தானே உங்களுக்கு சேவை செய்வார். இது பரஸ்பரப் பதிலளிப்பு போன்றது—நீங்கள் செய்ததை அவர் திருப்பித் தருவார். “பதிலுக்கு பதில்” ஐயா. ) 

அடியவர் 5 :- பையன் நல்லபடியாக வந்து விடுவானா ?

குருநாதர் :- அப்பனே, எதை என்று கூற,  அப்பனே, பின் நல்ல படியாகத்தான் இருக்கின்றான், அப்பா. கவலை விட்டுவிடு. 

அடியவர் 6 :- சாமி , கைலாச நாதர் கோயில்  இன்னும் கும்பாபிஷேகம் கூட ஆகாம இருக்குது ரொம்ப காலமா.

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று புரிய, அப்பனே, பல வழியிலும் கூட, அப்பனே, பெண் சாபங்கள், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் முருகன், அதிவிரைவிலே, பின் ஏற்று  நடத்துவான். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   எங்க இருக்கு அய்யா? 

அடியவர்  :- கீழே, முருகனுடைய எல்லா உற்சவமும் அங்கதான் நடக்கும் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன்  :-   (அது என்னவென்றால், ஏன் தடை வருகிறது என்றால், அந்தப் பெரிய  பெண் சாபங்கள் இன்னும் நீங்காமல் இருப்பதால்தான். அதனால் தான், “முருகரே  ஏற்று நடத்துவார் ” என்று எளிமையாகச் சொல்லிவிட்டார்கள் அய்யா, கடைசியில் )

(அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை வாக்கு தொடரும் …)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment