வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
குருவின் அருளால் அனைவரும் இவ்வருடத்தில் அனைத்து மனவிருப்பங்களும் நிறைவேறி நலமாக வாழ வாழ்த்துகிறேன்! ஓம் அகத்தீசாய நமஹ!
நம் குருநாதரின் திருநட்சத்திரம் 06/01/2026 செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம், மதுரையில், மூலக்கரையில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் (தியாகராஜர் மில் காலனி. மூலக்கரை, பசுமலை) உள்ள லோபாமுத்திரா சமேத அகத்தியர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகளுக்கு, அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 05 மணிக்கு அபிஷேக பூஜைகள் தொடங்கும்.
அனைத்து அகத்தியர் அடியவர்களும் வந்திருந்து பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வர இயலாதவர்கள், தங்கள் வீட்டினருகில் உள்ள கோவிலில் சென்று உழவாரப்பணி செய்து குருநாதர் அருள் பெற்றுக்கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment