​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 24 January 2026

சித்தன் அருள் - 2078 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 1











அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை முருகன் கோவில் வாக்கு. - பகுதி 1

தேதி  : 21.1.2026  (புதன்கிழமை) 
வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை முருகன் கோவில்
Google Map link: https://maps.app.goo.gl/6cybZiLaoT4WBFYD9 


=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, இன்று மகிழ்வுடனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கந்தன் அவனே. 

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவருக்குமே ஆசிகள். அவரவர் விருப்பப்படியே, அப்பனே, அனைத்தும் நடக்கும், அப்பா. 

அப்பனே, இதனால் அவன் தன் அப்பனை பின் சந்தோஷத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

அதனால், அப்பனே, அவனிடம் உத்தரவு, அப்பனே. பின், அதாவது, நிச்சயம் இவர்களுக்கு என்ன தேவை என்று, பின் அவர்களே கேட்கட்டும். பின் நீ சொல், அகத்தியனே என்று சொல்லிவிட்டான். இதனால், அப்பனே, சொல்லப் போகின்றேன், நீங்கள் கேளுங்கள்.

அடியவர் :- தனித்தனியா, அவங்க, அவங்க பிரியத்துக்கு என்ன மனசுல?

சுவடி ஓதும் மைந்தன் :- (முருகப்பெருமான் என்ன கூறுகிறார் தெரியுமா? இன்றைக்கு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். முருகர் வந்து அருளாசி வழங்கினார். அந்தத் தருணத்திலேயே “அப்பா, அவர்கள் எதை கேட்டாலும், அதற்கான பதிலை நீயே வழங்குவாய்” என்று.)

அடியவர் :-  எப்பயுமே பொதுவாகத்தான் வரும். தனி வாக்கே வராது.

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப வந்து, அவர் சந்தோஷமா இருக்குறாராம். யாராவது என்ன கேக்குறாங்களோ, அவங்க சொல்லுங்க.

அடியவர் :- எல்லாருக்கும் ஒரு கேள்வி கேட்டுக்கோங்க. ஃபர்ஸ்ட், ஒருத்தர் கிட்ட கேளுங்க, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  கேளுங்க.

அடியவர் 1 :- கல்யாணம். 

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று புரிய, அப்பனே, இவைதன், அப்பனே, என் வாக்கில் வந்தாலும், அப்பனே, சாபமாக போய்விடும். இதனால், நீ பொறுத்தே ஆகவேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (“கல்யாணம் - இது நடக்குது, நடக்கலைன்னு சொல்லிக்கொண்டே சில வார்த்தைகள் வந்தாலும், சாபமாகிப் போய்விடுமாம் )

குருநாதர் :-  அப்பனே, எதை என்று வெறுத்த, அப்பனே, இதற்கு நிச்சயம் தன்னில் கூட, விதி தன்னில் மாற்றம் அடையத்தான் செய்ய வேண்டும் கந்தனவன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவனிடத்திலே கேள், நிச்சயம் தன்னில் கூட, வழியும் செய்வான், அப்பா.

அடியவர் :- முருகன் தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- (விதி மாற வேண்டுமா?. அப்படியானால் அதை யார் மாற்ற முடியும்? முருகன் அவரிடம் கேட்க வேண்டும்.)

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மாற்றி விடலாம். ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில், தன்னில் கூட, பின் இங்கு நான் இருக்கின்றேன் என்று, அப்பனே, மீண்டும் உரைக்கத்தான் போகின்றான், என்னிடத்தில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (நானும் மாத்திரலாம், ஆனா முருகன் என்ன சொல்லுவாராம்?
இங்க நான் இருக்கிறேன்.)

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இதன் தத்துவத்தை, அப்பனே, எவ்வாறு அறிவது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மகன் போல் இரு, முருகனுக்கு, அப்பனே, பார்த்துக் கொள்வான்.

சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் என்ன செய்வார்?  அவருக்கு நீங்க  மகனாகவே இருக்க வேண்டும்; மகனுக்காக செய்ய வேண்டியது எதுவோ, தந்தை அதைச் செய்வார். அவர் செய்து முடிப்பார் — அதுதான். )

அடியவர் 2 :- ( ……………………………….)

அடியவர்  :-  அவசரப்படாதீங்க அண்ணா, அவர் மனசுல கிளேசம் முடியற வரைக்கும் கேட்கணும். 

அடியவர் 3:- அய்யா , தொழில் சரியாக அமையவில்லை ?

==============================================
#  “நிச்சயம் தெருத்தெருவாக, அப்பனே, அலை. நாய் படும், பின் பாடு பட்டுத்தான், தொழில் ஒருவனுக்கு உயர்ந்து நிற்கும், அப்பா, சொல்லிவிட்டேன். பின் யார் வேண்டுமானாலும், இப்படித்தான் சொல்வேன், யான்.”
==============================================

குருநாதர் :- அப்பனே, என்ன அனுபவம் உன்னிடத்தில் இருக்கின்றது சொல் அப்பனே? அனுபவமே இல்லை அப்பா. 

அப்பனே, இவ்வாறு அனுபவம் இல்லாமல், அப்பனே, எதைச் செய்தாலும் வீணே என்பேன் அப்பனே. அதாவது, நிச்சயம் அனுபவத்தைப் பற்றி இங்கு எடுத்துரை. 

அப்பனே பின், அதாவது, யாரோ, அப்பனே, காசுகள் சம்பாதித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, நிச்சயம் தெருத்தெருவாக, அப்பனே, அலை. 

அப்பனே, நிச்சயம் முதலில், அப்பனே, பின் வேலை செய்து, அதன் மூலம், அப்பனே, நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பெருக்கிக் கொள், உன் நிலைமை, அப்பனே. அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

எடுத்த எடுப்பிலே, அப்பனே, தொழில் செய்யலாம் என்று எண்ணினால், அப்பனே, என்ன, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, நாய் படும், பின் பாடு பட்டுத்தான், தொழில் ஒருவனுக்கு உயர்ந்து நிற்கும் அப்பா. சொல்லிவிட்டேன். 

பின் யார் வேண்டுமானாலும், இப்படித்தான் சொல்வேன், யான்.

அடியவர் 3 :-  சரி அய்யா 

அடியவர்  :- அனுபவம் இல்லை. நீங்கள்  எந்த தொழில் செய்தாலும், உங்களுக்கு அனுபவம் இல்லாததால் பொறு என்று சொல்கின்றார்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( தொழில் யாருக்காவது அமைய வேண்டுமென்றால், எல்லாருக்கும் பொதுவாகச் சொல்வது — நாய் படாத பாடு பட வேண்டும். அந்த அளவுக்கு பாடுபட்டு எழுந்து நிற்பவர்களுக்குத்தான் தொழில் செழிக்கும். உங்களிடம் அவர் சொல்வது: முதலில் தெரு–தெருவாகச் சென்று வேலை செய்யத் தயார் ஆக வேண்டும். என்ன தொழில் செய்கிறீர்கள், ஐயா?)

அடியவர் 1 :-  டிரைவிங் தொழில் பண்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது என்ன அனுபவம் இருக்காதுன்னு கேக்குறாரு, சொல்லுங்க, ஐயா, அவருக்கு.

அடியவர் 3 :-   வண்டி ஓட்டிட்டு தான் இருக்கேன், நான் ரெண்டு வருஷமா ஓட்டிட்டு இருக்கேன்.

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன பண்ணனும்?

அடியவர் 3 :-  வண்டி தான் ஓட்டிட்டு இருக்கேன், அதான் என்னோட புதுசு ஒவ்வொரு ஓபன் பண்ணலாம், அப்படின்னு இருக்கேன்.

குருநாதர் :- அப்பனே, இதை எதற்காக சொல், 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை எதற்காக செய்ற சொல்லுப்பா? கேக்குறாரு.

அடியவர் 3 :- இன்னொரு தொழில் ஒன்னு வைக்கணும், அப்படின்னு கேக்குறாரு.

குருநாதர் :- அப்பனே, பின் வைத்துவிட்டு என்ன செய்யப் போகின்றாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :- இதை வச்சிட்டு என்ன செய்யப் போகின்றாய்?

அடியவர் 3 :-  (சிரித்துக்கொண்டே) பணம் சம்பாதிக்க போறேன்.

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, முருகனே, இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டானாப்பா. அப்பனே, பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகின்றாய்?

அடியவர் 3:-  குடும்பத்தை சந்தோஷமா பார்த்துக்கிறேன்.

குருநாதர் :- அப்பனே, எதை என்ற குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக்கொண்டு, அப்பனே, பின்பு என்ன செய்யப் போகின்றாய்?

அடியவர் 3:-  நீங்க என்ன கேக்குறீங்களோ, செஞ்சு தரேன்.

========================================
# அனைத்திற்கும் இறைவன் அருள் பலம் வேண்டும். முதலில் கேட்க வேண்டியது இறைவனிடம் அருளை. அருள் கிடைத்து விட்டால் , அனைத்தும் கிடைக்கும்.
======================================== 

குருநாதர் :-  அப்பனே, முதலில் அருள் வேண்டுமப்பா, அதை நீ கேட்க வேண்டும் என்பேன், அப்பனே. பின் அவையே கேட்கவில்லை, பின் அவை இவை என்று. 

அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும், அப்பா. 

(அருள் இல்லாமல்) அப்படி கொடுத்துவிட்டாலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதனால் சந்தோஷம் உனக்கு கிட்டப் போவதில்லை, சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (“இத்தனை விஷயங்களையும் கேட்ட பிறகு, அது உனக்கு எந்த சந்தோஷமும் தராது. முதலில் உனக்கு என்ன வேண்டும்?)

அடியவர் 3 :- அருள்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (“அருள் இருந்தால் என்ன வரும்? பொருள் தானாகவே தேடி வரும்; அது வரும், குடும்பம் செழிக்கும், சந்தோஷம் கிடைக்கும் — எல்லாமே கிடைக்கும்.)

குருநாதர் :- அப்பனே, அதனால்தான் அனுபவம் மிக முக்கியம். அனுபவசாலிகள் இவைதன், அப்பனே, முதலில் கேட்க மாட்டார்கள், அப்பா. அருள் தான் வேண்டும் என்று.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( “அருள் வேண்டும் முதலில். உனக்கு அனுபவம் இல்லை என்பதால், அனுபவசாலிகள் முதலில் என்ன கேட்பார்கள் தெரியுமா? ‘அப்பா, என் முருகா, எனக்கு அருள் கொடு; முதலில் அதையே தா, பிறகு மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று.)

குருநாதர் :- அப்பனே, இன்னும் அனுபவம் போதவில்லை என்பேன், அப்பனே. மீண்டும் கேட்கின்றேன், அப்பனே, இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இறைவன், அப்பனே, அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துவிட்டால், அப்பனே, இறைவனுக்கு மரியாதை கிடையாது என்பேன் அப்பனே. இதற்கு என்ன கூறப் போகின்றாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் வந்து எல்லாருக்கும், எல்லாருக்கும் கொடுத்துட்டாருன்னா, வேல்யூ இருக்காது.

==========================================
#  கோடியில் ஒருத்தனுக்கு மட்டுமே, அப்பனே, பின் தொழில் புரியும் யோகம் ஏற்படும், அப்பா, அதற்கு என்ன செய்ய வேண்டும்? 
==========================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கோடியில் ஒருத்தனுக்கு மட்டுமே, அப்பனே, பின் தொழில் புரியும் யோகம் ஏற்படும், அப்பா, அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- தொழில் எல்லாருக்கும் அமைவது என்பது கடினம்தான், யாருக்கு ஏற்படும்? கோடியில் ஒருத்தனுக்கு….

============================================
# கோடியில் - யாருக்கு தொழில் அமையும்? யார் பணத்தை பன்மடங்கு சம்பாதிக்கலாம்? 
============================================

குருநாதர் :-  அப்பனே, அக்கோடியில், பின் நிச்சயம் ஒருவன் என்றால், அப்பனே, எப்படி என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பக்குவங்கள், பல அவமானங்கள், தலை குனிவுகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் உணவு இல்லாமை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் உறவு இல்லாமை, இவ்வாறு இருப்பவனுக்கே, பின் தொழில், அப்பனே சிறக்கும் அப்பா. 

பணத்தை, பின் பன்மடங்கு சம்பாதிக்கலாம். 

அப்பனே, பின் அதனால், அப்பனே, அவன் தன், அப்பனே, யாருக்கும், அப்பனே, பின் அதாவது, பின் வைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வைக்கப் போவதில்லை. 

அனைவருக்கும் செலவழித்து விடுவானப்பா. இப்பேற்பட்டவருக்கு மட்டுமே தொழில் சிறக்கும். பின் நிச்சயம் சொல்லிவிட்டேன், அப்பனே, இங்கிருந்தே. 

===========================================
(அடியவர்கள் மிகப்பெரிய தொழில் அதிபர்களை நன்றாக கவனித்தால் உண்மை நிலை புரியும்.  அடிபட்டு, மிதிபட்டு , பின்னர் , தொழில் உயர்ந்து நின்று , தனது பணத்தை, இறுதி காலத்தில், அனைவருக்கும் தனமாக கொடுத்துவிடுவார்கள். அனைத்தும் இறைவன் அருளால் இப்படி நடக்கின்றது.)
===========================================

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (எல்லோரும் ஒரு நாள் அவரை விட்டு போய்விடுவார்கள். சொந்தமும் பந்தமும் கூட. அதன் பின்னர், உணவிற்குக் கூட வழி இல்லாத நிலை உருவாகலாம்; அப்படிப்பட்டவர்கள் தான் தொழிலை, இறைவன் அருளால் பெரிய தொழிலாக மாற்றிக் கொள்வார்கள். மற்றவர்கள் என்ன செய்வார்கள்? அவரிடம் வந்து பெற்றுக் கொண்டு, அவரிடம் உள்ள பணத்தை காலி செய்து விடுவார்கள்.) 

அடியவர் :- வரலாறு எப்போதும் இப்படித்தான் உள்ளது.

===========================================
# இறைவன் தேர்ந்து எடுப்பவர் மட்டுமே முதலாளி ஆக முடியும். 
===========================================

குருநாதர் :-   அப்பனே, அனைவரும் முதலாளி ஆகிவிட்டால், நிச்சயம் தன்னில் கூட என்ன மரியாதையப்பா இவ்வுலகத்தில் ?

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் யாரை தேர்ந்தெடுக்கின்றானோ, அவன்தான் முதலாளி. ஒருவன் தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாருக்கும் பொருந்தும், ஐயா. இறைவன் எல்லோரையும் தேர்ந்தெடுக்க மாட்டார்.

===========================================
# செய்யும் வேலையை விட்டுவிட்டு, மற்றவர்கள் போல தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம்.
===========================================

குருநாதர் :-  அப்பனே, பின் அதாவது மற்றொருவன், அப்பனே, பின் தொழில் செய்தால், பின் நாமும், பின் அதேபோல், பின் தொழில் செய்யலாம் என்று எண்ணுகின்றானே, அவன் மிகப்பெரிய முட்டாளப்பா.  

இப்பொழுதெல்லாம் அவைத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. தான் தொழில் செய்யலாம், தொழில் செய்யலாம் என்று. 

===========================================
# தொழில் செய்வதற்கு முன்னர் முதலில் அடிமையாக இருக்க வேண்டும் 
===========================================

குருநாதர் :- அப்பனே, தொழில் செய்து, அப்பனே, நிச்சயம் தன்னில் முதலில் அடிமையாக இருக்க வேண்டும். பின்புதான், அப்பனே, அவ் அடிமையின் மூலம், அப்பனே, தொழிலில். அப்பனே, யாரப்பா, நீ என்ன அடிமை, எதை என்று புரிய?

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (முதலில் அவர் கூறுவது:  வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அடிப்படையான பணிகளைச் செய்து அனுபவத்தைப் பெற வேண்டும். அந்த அனுபவத்தைப் பெற்ற பிறகே அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.)

குருநாதர் :-  அப்பனே, உன்னிடத்தில், அப்பனே, ஒரு கோடியை, அப்பனே, முருகன் கொடுக்கின்றான், என்ன செய்வாய்?

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு கோடி பணம் கொடுக்கிறார், என்ன செய்வாய்? 

அடியவர் 3 :-  இல்லாதவங்களுக்கு வாங்கி கொடுத்து, நமக்கு என்ன தேவையோ, அதை செய்யணும். 

குருநாதர் :-  அப்பனே, வாய்தான் பேசுகின்றது. முதலில் என்ன சொன்னாய் அப்பனே? இதனால், அப்பனே, மாற்றி மாற்றி பேசிவிடாதே அப்பனே. தொழிலுக்கே இவைதன், அப்பனே, பின் எவை என்று புரிய, இதுபோல்தான், அப்பனே, பின் மாற்றி மாற்றி செப்பி, அப்பனே, தொழிலையே நீ கெடுத்து விடுவாய். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (முதலில் குடும்பம் — அதைப் பற்றியே நீங்கள் கூறினீர்கள். குடும்பத்தை கவனிக்க வேண்டும், அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால் இப்போது, கோடி அளித்தால் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.)

அடியவர் 3 :-   எல்லாத்துக்கும் முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுவேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்படியானால், நீங்கள் தொடர்ந்து அந்தத் தொழிலை மாற்றிக் கொண்டே, இவ்வாறு மாற்றிக் கொண்டே சென்றால், ஐயா, இது போல  மாற்றி மாற்றி  பொய்யாகச் சொல்ல நேரிடும்.)

அடியவர் :- (வாக்கு வழங்குபவர் அகத்திய மாமுனிவர்.  அவர்கள் உயர்ந்த சித்தர்கள், முருகப்பெருமானுடன் நேரடியாக அமர்ந்து உரையாடும் வல்லமை  கொண்டவர்கள். ஆகையால், நீங்கள் மிகுந்த கவனத்துடன், சரியான முறையில் பேச வேண்டும்.)

சுவடி ஓதும் மைந்தன் :- (கரெக்ட். ஆமாம். அவர் என்ன கூறுகிறார் என்றால்: மாற்றி மாற்றி பொய் பேச வேண்டிய நிலை வரும்’ என்று. பொய் பேசினால், அதனால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. தொழில் அது உங்களுக்கு சாதகமாக அமையாது.தொழிலையே நீங்க  கெடுத்து விடுவீங்க)

======================================
# உங்கள் தற்போதைய வேலையை சரியாக செய்து கொண்டே இருக்க  வேண்டும்.
======================================

குருநாதர் :-  அப்பனே, எதை என்றறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவ்வாறு என்பது, அப்பனே, இருப்பதை, பின் சரியாக பார், பின்பு யான் உரைக்கின்றேன்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (உங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தி செயல்படுங்கள். அதையே கொண்டு சிறப்பாகச் செய்யுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எவ்வாறு செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவர் கேட்பது — ‘உங்களிடம் உள்ளதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், ஐயா?’ என்பதே.)

அடியவர்  :-  சந்தோஷமா செய்யுங்க. 

குருநாதர் :-  அப்பனே, எதை என்றறிய, அப்பனே, ஏன் படிக்கவில்லை? 

அடியவர் 3 :-  படிப்பு வரல.

குருநாதர் :-  அப்பனே, எதை என்றறிய, பின் எவை என்று புரிய, அப்பனே, அவையே, பின் வரவில்லை, இவை வருமா என்று யோசித்து பார்? 

அடியவர்கள் :- ( கருணைக் கடலின் இந்த வாக்கினை கேட்டவுடன் - கைதட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  (படிப்பே வரவில்லை; அப்படியிருக்கையில் இது எப்படி வரும்? முக்கியமான முயற்சியே செய்யப்படவில்லை. ‘நீ ஏன் படிக்கவில்லை?’ — அதையே அவர் முதலில் கேட்கிறார்.)

அடியவர் 3 :-  படிப்பு வரல. 

குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, எவை என்றறிய, அப்பனே, எவ்வளவு, அப்பனே, எவ்வளவு வேதனைகள், தாய் தந்தையருக்கு தெரியுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்த்தீங்களா, ஐயா. நீ படிக்கலைன்னு, எவ்வளவு வேதனை தெரியுமா, அப்பா, அம்மாக்கு, ஓகேங்களா? 

குருநாதர் :- அப்பனே, சுற்று. ஊர் சுற்று நண்பர்களுடன், தெருத்தெருவாக. அப்பனே, பின் பெண்களும், சுற்று.

அடியவர் 3 :-   அப்படி இல்ல, இல்ல. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் உன் தந்தை, அப்பனே, தெரியும், அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( உன் தந்தைக்கு அது தெரியும் என்று அவர் கூறுகிறார். )

குருநாதர் :-  அப்பனே, பின் மீண்டும் உன்னை கேட்கின்றேன், அப்பனே. யாராவது, பின் எழுந்து, அப்பனே, ஏன் படிப்பு வரவில்லை என்று, நிச்சயம் கூறுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இங்கு யாராவது எழுந்து, ‘இவருக்கு ஏன் படிப்பு வரவில்லை?’ என்று கேளுங்க?) 

ஓர் அடியவர் :-  ஏன்ப்பா, படிப்பு வரல? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (நீங்கள் பதில் கூறுங்கள். படிக்கவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன? — அதையே அவர் கேட்கிறார்.)

அடியவர் 3 :- படிக்கிறதுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.

குருநாதர் :-  அப்பனே, எதனால்  அப்பனே, விருப்பமில்லை? 

சுவடி ஓதும் மைந்தன் :- எதனால, இன்ட்ரஸ்ட் இல்ல, 

அடியவர்  :-  (அவங்க குடும்பம் கொஞ்சம் வசதியா இல்லாமல் இருக்கலாம்) 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, பின் வறுமையில், பின் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவனே, வந்து யார் மூலமாவது உதவி செய்வானப்பா, முட்டாளே.

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்படி சொல்ல கூடாது. நீங்கள் உண்மையான நல்ல கல்வியை விரும்புகிறீர்கள் என்றால், எந்த வழியிலாவது இறைவன் உதவி செய்வார்.)

குருநாதர் :-  அப்பனே, எதனால், அப்பனே, சொல்லியே ஆக வேண்டும்?

சுவடி ஓதும் மைந்தன் :- எதனால் விருப்பமில்லை?

அடியவர் 3 :- அப்பன் அம்மை  செல்லத்தினாலே, 

அடியவர்  :-  ஐயா, அப்பன் செல்லம் கொடுத்ததினால். 

=============================================
# தீய நண்பனின் சேர்க்கை ,பின் பெண்கள் சேர்க்கை - நிச்சயம் படிப்பில் விருப்பம் இல்லாமல் போகும்.
=============================================

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எவை என்றறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் செல்லம் கொடுத்தாலும், அப்பனே, இதனால், எவை என்றறிய, அப்பனே, சொல்கின்றேன். கேளுங்கள், அப்பனே. 

குருநாதர் :-  விருப்பம் எதற்காக என்றால், அப்பனே, தீய நண்பனின் சேர்க்கை அப்பனே, பின் பெண்கள் சேர்க்கை. இதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் விருப்பமில்லாமல் போகும், அப்பனே.

அடியவர்  :-  மறுக்க முடியாது, உண்மை, 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (இது நேரடியாகச் சொல்லப்படும் விஷயம், ஐயா. நாங்கள் தனிப்பட்ட ஜோசியம் செய்வதல்ல. ஜோசியம் அது வேறு. ஆனால் இங்கு ஜீவநாடியில் எதையும் மறைக்காமல் தெளிவாக சொல்ல வேண்டும். படிப்பில் ஏன் ஆர்வம் இல்லை என்பதைப் பார்க்கும்போது, முதலில் நண்பர்கள் — அவர்களுடன் சேர்ந்து செலவிடும் நேரம் — ஒரு காரணம். அடுத்ததாக, பெண்கள் நண்பர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். மொத்தத்தில், நண்பர்கள் வட்டமே அவரை அதிகமாக ஈர்க்கிறது.)

குருநாதர் :-  அப்பனே, எதை, எவை என்றறிய, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் இதன் மீதும் கூட, இப்பொழுது கூட, சற்று, அப்பனே, விருப்பம் இருக்கும். போக போக, அப்பனே, மற்றொன்று, அப்பனே, அப்படியே தாவிக்கொண்டே போகும், அப்பா. என்ன செய்வாய்? 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (அப்படியானால், படிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. இப்போ தொழில் ஆர்வமும்  உள்ளது; அதில் சிறிதளவு ஆர்வம் இருக்கிறது. அவர் கேட்பது — ‘அதைச் செய்து என்ன பயன்? ஒன்று நடந்தேறவில்லை என்றால், அடுத்தது என்ன? தொழில் இதிலும் ஆர்வம் இல்லையெனில், அடுத்ததாக எதை நோக்கிச் செல்லப் போகிறாய்? அதற்கு என்ன தீர்வு?’ என்பதே.)

அடியவர் 3 :- அப்ப அதுக்கு என்ன செய்யணும்?

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், உன் வாழ்க்கை, பின் கேள்விக்குறியாகும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அப்ப, இதே மாதிரி போயிட்டு இருந்தா, என்ன ஆகும்? கேள்விக்குறியாகும்)

குருநாதர் :-  அப்பனே, வயதும் இல்லை, 

சுவடி ஓதும் மைந்தன் :- (உனக்கு தொழில் செய்ய வேண்டிய வயதும் இன்னும் வரவில்லை. ஆம், ஐயா, இவை அனைத்தும் உண்மையே. அகத்தியர் நேரடியாகச் சொல்லுவார், ஏனெனில் நம்மைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரியும். அது நிச்சயம்.)

======================================
# அதி காலையிலும் , மாலையிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி படிப்பதால் , முருகப்பெருமான் மனம் இறங்குவார். 
======================================

குருநாதர் :- அப்பனே, இதனால் என்ன செய்யப் போகின்றாய்? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சரியாக பக்தியை  கடைபிடி. அப்பனே, நிச்சயம், அதிகாலையிலும், மாலை, பின் வேளையிலும் கூட, கந்த சஷ்டியினை அழகாக பாடிக்கொண்டே வா, தீபம் ஏற்றி அப்பனே. இவ்வாறு செய்தால் மட்டுமே, அப்பனே, கந்தன் இறங்குவான் என்பேன் அப்பனே. ஆனாலும்  நீ செய்வாயா என்பது சந்தேகமே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (நீங்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தீபம் ஏற்றி, மாலையிலும் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால், அதனால் என்ன நிகழும்? அவர் படிப்படியாக மாற்றம் அளிப்பார்; மெதுவாக நல்ல மாற்றங்கள் வரும். ஆனால் நீங்கள் இதைச் செய்யாமல் இருந்தால், அங்கே என்ன நடைபெறும்? அது முழுவதும் கேள்விக்குறியாகிவிடும்.) 

==================================
# உண்மையான தொழில் உயர்வு பெற….
==================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்றறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது தொழில் என்பது, அப்பனே, பின் அதாவது ஒரு, அப்பனே, மனிதன், அப்பனே, பின் அதாவது பத்து, பின் மூட்டையை தலையில் சுமைப்பது போல்.

அப்பனே, ஒரு மூட்டை கூட நீ சுமைக்க, சுமைக்க மாட்டாய், அப்பா. 

ஏனென்றால், அப்பனே, எவை என்றறிய, அப்பனே, அவ் 100 மூட்டைகள், சுமைக்க, அப்பனே, முதலில், அப்பனே, பின் படிப்பில் அடிபட்டு இருக்க வேண்டும். பின் அதாவது காசுகள் இல்லாமல், உணவுக்கு இல்லாமல், பஞ்சம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சொந்த பந்தங்கள், பின் நண்பர்கள், அப்பனே, அதாவது தீங்கு, அப்பனே, எவை என்றறிய, காசுகள் இல்லாமல், பின் யாரும், அப்பனே, ஒதுக்கி, அப்பனே, விடுவார்கள் அல்லவா, அவன் தான் அப்பனே, 100 மூட்டைகளை சுமைப்பான். மற்றவர்கள் எல்லாம் வீண் அப்பா, வீண். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-   ( “ஐயா, தொழில் செய்ய வேண்டியது யார்? நூறு மூட்டைகளைச் சுமக்கும் அளவுக்கு அனுபவம் தேவை. ஒரு மூட்டையைக் கூட சுமக்கத் தேவையான அனுபவம் இன்னும் இல்லாத நிலையில், நூறு மூட்டைகளைச் சுமக்கும் திறன் யாருக்கு இருக்கும்? அது பட்டினியால் வாடுபவருக்கும், உணவுக்குத் தண்ணீருக்குக் கூட வசதி இல்லாதவருக்கும், படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாதவர்களுக்கும் தான் இருக்கும். ஆனால் உங்களிடம் என்ன இருக்கிறது? படிப்புக்கு கட்டணத்தைச் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? ‘ஆர்வம் இல்லை’ என்று கூறிவிட்டீர்கள். அப்படியானால், நூறு மூட்டைகளைச் சுமக்கும் அளவுக்கு தொழில் எப்படி முன்னேறும்? ஒரு மூட்டையைக் கூட சுமக்க முடியாத நிலையில், நூறு மூட்டைகளைச் சுமக்க எப்படி முடியும்? )

குருநாதர் :-   அப்பனே, தந்தை சொல்வதை கேள் இனிமேல். 

அடியவர்  :- அருமை, 

அடியவர் 3 :- சரி. 

அடியவர்  உரையின் சுருக்கம் :- ( “இந்த வாக்குகள் உனக்கு எளிதாக கிடைத்தவை அல்ல. இன்று இந்த வழிகாட்டுதல் உனக்கு கிடைப்பதற்கான காரணம், உன் தந்தை ஓதி மலையில் உயிரை பணயம் வைத்து உழைத்து, ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி சாதனை செய்ததால்தான். அந்தப் பெரும் பாடுபாட்டின் பலனாக, ஆண்டவன் இன்று உன்னை அழைத்து இவ்வாறு அருளுரை வழங்குகிறார். இதை நன்றாகப் புரிந்துகொள்.
இந்த நாட்டில் இத்தகைய இறை  வாக்குகளைப் பெற பல உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் கூட பல பல நாட்களுக்குப் பிறகும் காத்திருந்து வாக்கு கேட்பார்கள்.  ஆனால் அது உனக்கு இவ்வளவு எளிதாக கிடைத்திருக்கிறது. இதை ஒருபோதும் தவறவிடாதே. இல்லையென்றால் வாழ்க்கை வீணாகிவிடும். )

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (உங்க தந்தை என்ன கூறுகிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள். இறுதியில் அவர் என்ன அறிவுறுத்தினார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். தகப்பன் கூறும் வார்த்தை, அதாவது  தகப்பனின் அருளுரை. தகப்பன் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், ஐயா.) 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஓதிமலை வாக்கு தொடரும் …)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment