​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 15 January 2026

சித்தன் அருள் - 2067 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - பகுதி - 7







அகத்தியர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 7 (நிறைவு பகுதி )

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு :  https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h43m20s

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 7 (நிறைவு பகுதி)

( சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் அடியவர்கள் )

(திருக்கயிலாய வாத்தியம் ஆரம்பம்) 

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h20m45s

( தேரையர் சித்தர் மதுரை கூட்டுப் பிரார்த்தனையில் உரைத்த திருப்பதி பெருமாளிடம் சென்று நாணயங்களை வைத்து, மதுரை மீனாட்சியம்மை இடம் நாணயங்களை  அளித்து எடுத்துவந்த அந்த நாணயங்களை அனைவருக்கும் அளித்தனர் அடியவர்கள் )

https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h40m11s

சுவடி ஓதும் மைந்தன் :- (திருக்கயிலாய வாத்தியம் குறித்து  ஒரு சிறு உரை அளித்தார்கள்)

===========================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================================
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h43m20s

தேரையர் சித்தர் :- அப்பா! அறிந்தும் எதை புரிந்தும், பின் தேரையனே பேசுகின்றேன். உங்களுக்கு சிறப்பானது ஒன்றை இப்பொழுது சொல்லப் போகின்றேன். மேல் இருப்பவர்கள் கீழ் செல்க, அடியார்களை மேல் எழுப்புக. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( மேடையில் உள்ள அனைவரையும் கீழே சென்று அமர சொன்னார்கள். கீழ் அமர்ந்து இருந்த சிவனடியார்களை மேடையில் ஏறி அமர சொன்னார்கள் )

தேரையர் சித்தர் :- அறிந்தும் புரிந்தும், குருநாதன் இடையிடையே பைத்தியக்காரன் என்று சொல்வானே,சொல்லவா? அறிந்தும் அவனை வரச் சொல். 

அடியவர் பாடகர் :- ( மேடை நோக்கி வந்தார்கள் )

தேரையர் சித்தர் :-  அறிந்தும், நீயும் கீழே நில். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்களும் கீழே தான் நிக்க சொல்றாருங்க. உங்களையும் 

தேரையர் சித்தர் :-  எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் எவை என்று புரியும் அளவிற்கு என் குருநாதனை போற்றி புகழ்ந்து, இவரிடத்தில் பாடு சந்தோஷம் அடையட்டும். அறிந்தும் கூட, அப்படியே அறிந்தும் சில அறிந்தும் எவை என்று பின்பு உரைக்கின்றேன். 

அடியவர் பாடகர் :-  ( “ உம்மை தேடிச் சென்ற வழிகள் எம்மை அழைத்துச் சென்றது ஆண்டவனிடம்”  என்ற பாடலை அழகாக பாடி முடித்தார்கள்.) 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h45m57s

தேரையர் சித்தர் :-  அறிந்தும் பாடகனே, குருநாதன் அறிந்தும் கூட ஏன் உனக்கு பின் பணத்தை தரவில்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட பணத்தை கொடுத்து விட்டால், நீயும் பின் பெரிய பெரிய மனிதர்களுக்கு தாலாட்டுவாய். எவை என்று கூறிய அதனால்தான் உன்னை இப்படியே பைத்தியக்காரனை வைத்திருந்தால், இயலாதவருக்காக பாடி, பின் எது என்று அறிய அறிய, பின் என் குருநாதன் சரியாக பயன்படுத்திக் கொள்வான். மேலே வா, பின் அறிந்தும் கூட. 

அடியவர் பாடகர் :- மிக்க மிக்க நன்றி, தாத்தா. 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு ஏன் காசு கொடுக்கலன்னா, 

தேரையர் சித்தர் :-  அறிந்தும் எவை என்று புரிய, பின் மேலே வரச் சொன்னேனே. எதை என்று புரியாமல் வந்து கொண்டிருக்கின்றான். பின் ஏதோ வரச் சொன்னார்கள் என்று, பின் வரச் சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதோ மேல வந்திருக்கிறான். ஏதோ வர சொன்னாங்கன்னா, வாங்க, வாங்க, சொல்லுவாரு. இங்க 

அடியவர் பாடகர் :-  வச்சு செய்றாருல.

அடியவர் பாடகர் :-  ( மேடை ஏறினார்கள் ) 

தேரையர் சித்தர் :-  இவையறிவித்து, எவை என்று அறிய, நிச்சயம் பின் கைகளை ஆட்டி வந்து கொண்டிருக்கின்றான். இவனிடத்தில், பின் எதை என்று அறிய, நிச்சயம் பின் தட்சணை, பின் அதை என்று கூற, பின் பாடிவிட்டான். ஏதோ ஒன்றை ஆனாலும், பின் மேலெழுந்து அனைவருக்கும் கொடுக்கச் சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, தட்சணை கொடுக்க சொல்றாங்க.  ( சுவடி ஓதும் மைந்தன் அங்குள்ள அனைவருக்கும் அடியவர் பாடகரைத்  தட்சணை கொடுக்க சொன்னார்கள், பணத்தை கொடுத்து.) 

தேரையர் சித்தர் :-  அப்பா, அறிந்தும் கூட, பின் குருநாதன் சொன்னான், தேநீர் என்று. ஆனால், தேநீர் மட்டும் கொடுத்தால் என்ன? ஒரு பத்து ரூபாய் கொடுத்தால்தான் இவருக்கும் சந்தோஷம். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :-  ( சில கைதட்டல்கள் ) 

அடியவர் பாடகர் :-  ( மேடையில் உள்ள அனைத்து சிவனடியார்களுக்கு தட்சணை அளித்தார்கள் ) 

மற்றொரு அடியவர் :- ( அங்கு மேலும் தட்சிணை எடுத்து வந்தார் ) 

தேரையர் சித்தர் :-  அப்பா, அறிந்தும் அதை அப்படியே வைத்துவிடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அய்யா அதை நீங்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமே இருக்கட்டும்) 

தேரையர் சித்தர் :-   அப்பா, அறிந்தும் ஆனாலும், இவர் எண்ணுவார்களே பின், ஐயயோ, ( வந்த பணம் ) வரவில்லையே என்று. (அதனால்) கொடுத்துவிடு.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( சிவனடியார்கள் மனம் வருந்துவார்கள் என்று அதனையும் அவர்களுக்கு கொடுக்க சொன்னார்கள் )

அடியவர் பாடகர் :-  ( மேடையில் உள்ள அனைத்து சிவனடியார்களுக்கும் தட்சணை அளித்தார்கள். அளித்து முடித்த பின்னர் …. ) 

தேரையர் சித்தர் :-   அறிவித்து உங்களுக்கும் உண்டு. இல்லத்தில் எப்படி செய்ய என்று யான் சொல்கின்றேன். 

( கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் , திருப்பதி சென்று, பெருமாள் ஏழுமலையானிடம்  காசுகளை சமர்ப்பித்து , பின்னர் மீனாட்சி அம்மை பாதத்தில் வைத்து எடுத்து வந்த காசுகளை அடியவர்களுக்கு கொடுத்தனர். அந்த காசுகளை பற்றிய வாக்கு இது) 

சுவடி ஓதும் மைந்தன் :-   (அப்பா, - {கூட்டுப்பிரார்த்தனை அடியவர்களுக்கு} - உங்களுக்கும் காசு இருக்கு; யார் சொல்றாங்க?  தேரையர் சித்தர் சொல்லப்போகிறார் -  அதை வைத்து வீட்டில் என்ன செய்யணும்னு.  அதனால் கவலைப்பட வேண்டாம்,” )

தேரையர் சித்தர் :-  அதனுள்ளே இவரை மகிழ்விக்க ஒரு பாடலை பாட வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, அகத்தியர் சொல்ற மாதிரிதான். உங்களுக்கு என்ன பாட்டு விரும்புறீங்களோ  சொல்லுங்க. அவர் பாடுவாரு

சிவனடியார்கள் :- உலகம் சமநிலை 

(உலகம் சமநிலை பெற வேண்டும். உயர்வு, தாழ்வில்லா நிலை வேண்டும் - என்ற பாடல் பாட வேண்டும் என்று கேட்டார்கள்) 


அடியவர் பாடகர் :-  ( உலகம் சமநிலை பெற வேண்டும். - என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=9h59m43s


அடியவர் பாடகர் :-  இந்த பாடல் நான் கேட்டதே கிடையாது, சார். இதான் ஃபர்ஸ்ட் டைம் பாடுறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.  

( அடியவர் பாடகர் - மிக உயர்ந்த பக்குவப்பட்ட ஞான நிலையில் இவ்வாறு பணிவுடன்  அங்கு அனைவர் முன் சொன்னதால், அதற்கு தேரையர் சித்தர் பின்வருமாறு வாக்குகள்  உரைத்தார்கள்  )

தேரையர் சித்தர் :-  அறிந்தோம், அப்பா. இதையே  ஞான நிலை. 

( இவ் பாடகர் போல அடக்கம் கொண்டிருந்தால் ,  இது போல பல சித்தர்கள் விருதுகளை குவிக்கும் )

தேரையர் சித்தர் :-   இவர்களை வாழ்த்தி, எது என்று இதுபோல் இவர்களுக்கு மதிப்பளித்து, இன்னொரு பாடலையும் பாடு. ஏனென்றால், இவர்களை தாலாட்ட, சீராட்ட எவரும் இல்லை. யாங்கள்தான். அதனால்தான், 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, உங்களை தாலாட்ட, சீராட்ட யாரும் நாங்க தான் சித்தர்கள் தான் சொல்றாங்க. வந்து அதனால, மதிப்பளிச்சு இன்னொரு பாட்டு கேளுங்க, ஐயா. ஐயா, இன்னொரு பாட்டு யாருங்க? ஐயா, என்னங்க? ஐயா, 

சிவனடியார்கள் :-  என்னப்பன் அல்லவா..

(என்னப்பன் அல்லவா? என் தாயும் அல்லவா? - என்ற பாடல் பாட வேண்டும் என்று கேட்டார்கள்) 

அடியவர் பாடகர் :-  ( என்னப்பன் அல்லவா. - என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் )  
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=10h03m25s

அடியவர் பாடகர் :-  ( பாடி முடித்தவுடன்  )  

தேரையர் சித்தர் :-  இதைத்தன்  எவர் அறிய பல மாற்றங்கள் அறிந்தும், அதாவது பின் இன்னும் பின் ஞானம் பெற்றவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அறிந்தும், இவ் ஞானத்தை உங்களுக்கும் சமர்ப்பிக்க, இவ்வாறு இவர்கள் பின் மகிழ்ச்சி அடைந்தால் மட்டுமே, மகிழ்ச்சி என்ற அறிந்தும் கூட சில நுண்ணுயிர்கள் பின் தானாக, பின் யார் மகிழ்விக்கின்றார்களோ, அவர்களுக்கு பரவுகின்ற பொழுது சில புண்ணியங்கள் ஏற்படும். அப்புண்ணியத்தின் மூலம் நீங்கள் விரும்பியதை அடைந்து விடலாம். மீண்டும் அறிந்தும், எவை என்று அறிய, அறிந்தும், புரிந்தும், நிலையாமல் இருந்தும், பின் அதாவது உன் இஷ்டத்திற்கு பின் பாடு. ஆனால் இவர்கள் மகிழ்வு அடைய வேண்டும். பின் நிச்சயம் சிறப்பாக, பின் கைதட்டுதல் வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( பல மாற்றங்களையும் ஞானத்தையும் அறிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அந்த ஞானத்தை உங்களுக்கும் பகிர்ந்து, மற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தால், அந்த மகிழ்ச்சி பரவும் போது அவர்களுக்கும் சில புண்ணியம் சேரும். அந்த புண்ணியத்தின் மூலம் நீங்கள் விரும்பியதை அடையலாம். எதைப் பாடினாலும், உங்கள் விருப்பப்படி பாடுங்கள்; ஆனால் கேட்பவர்கள் மகிழ வேண்டும். அவர்கள் மகிழ்ந்து கைதட்டினால், அதுவே சிறப்பு.) 

============================
# அரங்கமே அதிர்ந்த தருணம் 
============================

அடியவர் பாடகர் :-  ( கோடி மலைகளிலே கொடுக்கும் மலை, எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை, எந்த மலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை, எந்த மலை? தேவாதி தேவர் எல்லாம் தேடி வரும் மருதமலை. - என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள்…அரங்கமே அதிர்ந்தது அங்கு …. )  

அவ் தருணத்தை பின் வரும் நேரலை பதிவில் கண்டு களியுங்கள்:- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=10h07m30s

தேரையர் சித்தர் :-  அப்பா! அறிந்தும், இவர்களுக்கு யார் நல்லது செய்ய ஆட்கள் இல்லை! பின் பலபேர் பாடுவார்கள்! பின் அதாவது இருப்பவரிடத்தில் எதை என்று அறிய இன்னும் பிடுங்குவார்கள்! அறிந்தும் கூட இதனால் பின் அவர்களுக்கு எதை என்று அறிய. ஆனாலும் இதுபோல் இவர்களை சீராட்ட ஆளில்லை! ஆனால் பின் அறிந்தும் கூட இதனால் ஈசன் பின் இவர்களையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்! ஏதோ இவர்கள் கேட்டதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான்! இதனால் எதை என்று புரிய இன்னும் இவரிடத்தில் பல புண்ணியங்கள் ஏதோ எதை என்று கூற சிறிதும் பின் உங்களுக்கும் பின் அதாவது குருநாதன் அருளாலே பின் வழங்க அறிந்து கூட மீண்டும் அனைவரும் எழுந்து நின்று இப்பாடலையை பாடி துதித்து நிச்சயம் கைதான்…

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா எல்லாம் எழுந்து நில்லுங்க! இவங்க அனைவருக்கும் திருப்பி இந்த பாடலையே பாடி எல்லாரும் கைதட்டி இவங்க குழந்தை மாதிரி நீங்க சீராட்டனும்ன்றாரு! ஐயா! எல்லாரும் எழுந்து நில்லுங்க! நல்லா கைதட்டி இவங்களை வந்து வணங்குங்க! நல்லா! ஏன்னா இவருக்கு யாரும் இல்ல! உங்களுக்கு மதிப்பு கொடுக்கிறது! நம்ம கடமை என்றார்! 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அனைவரும் எழுந்து முன் வந்தார்கள் . )

அவ் தருணத்தை பின் வரும் நேரலை பதிவில் கண்டு களியுங்கள்:- 
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=10h14m33s


அடியவர் பாடகர் :-  ( கோடி மலைகளிலே கொடுக்கும் மலை, எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை, எந்த மலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை, எந்த மலை? தேவாதி தேவர் எல்லாம் தேடி வரும் மருதமலை. - என்ற பாடலை மீண்டும் பாட ஆரம்பித்தார்கள்…அரங்கமே அதிர்ந்தது அங்கு …. )  

அடியவர் பாடகர் :-  (பின் வரும் குருநாதர் பாடலை பாடினார்கள் அடியவர்கள் இவ் அருமையான பாடலை பின் வரும் நேரலை பதிவில் கண்டுகளியுங்கள்.)
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=10h21m52s

( அகத்திய மாமுனிவர் புகழ் மாலை ) 

குருவுக்கும் குருவானவர்! 
நம் அறிவுக்கு சுடரானவர்! 
எங்கள் குருவுக்கும் குருவானவர்! 
நம் அறிவுக்கு சுடரானவர்! 
கருணையில் கடல் போன்றவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 
கருணையில் கடல் போன்றவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 

குருவுக்கும் குருவானவர்! 
நம் அறிவுக்கு சுடரானவர்! 
அஞ்ஞானம் அகற்றும் அன்பான குருவே! 
விஞ்ஞானம் பேசாமையான உணர்வே! 

அஞ்ஞானம் அகற்றும் அன்பான குருவே! 
விஞ்ஞானம் பேசாமையான உணர்வே! 

ஈசனும் போற்றும் ஈடில்லா தலைவா! 
ஈசனும் போற்றும் ஈடில்லா தலைவா! 

கலியிலும் காக்கும் எங்கள் இறைவா! 
கலியிலும் காக்கும் எங்கள் இறைவா! 

குருவுக்கும் குருவானவர்! 
நம் அறிவுக்கு சுடரானவர்! 
விதியினில் விழுந்தாலும் விரல் பிடித்துக் கொண்டீரே! 
விதியினில் விழுந்தாலும் எங்கள் விரல் பிடித்துக் கொண்டீரே! 

மாயைதனை வெல்லும் மதியாற்றல் தந்தீரே! 
மாயைதனை வெல்லும் மதியாற்றல் தந்தீரே! 
அறியாமை இருளகற்றும்! 
ஒளிவெள்ளம் நீங்கள் தானே! 

உம் வாக்கை கேட்க என்ன தவம் செய்தோம் நாங்கள்! 
வாக்கை கேட்க என்ன தவம் செய்தோம் நாங்கள்! 

தவம் செய்தோம் நாங்கள்! 
தவம் செய்தோம் நாங்கள்! 

பிறவிகள் ஒன்றில் உமைத்தொழுது மறந்தாலும் 
பிறவிகள் ஒன்றில் உமைத்தொழுது மறந்தாலும் 

பிரியாமல் வந்து அன்பு காட்டும் தந்தையே! 

பிறவிகள் ஒன்றில் உமைத்தொழுது மறந்தாலும் 
பிரியாமல் வந்து அன்பு காட்டும் தந்தையே! 

உறவுகள் ஆயிரம் இருந்தாலும் 
உறவுகள் ஆயிரம் இருந்தாலும் 

உம்மைப்போல் பரிவு காட்ட ஒருவர் இல்லையே! 

உறவுகள் ஆயிரம் இருந்தாலும் 
உம்மைப்போல் பரிவு காட்ட ஒருவர் இங்கு இல்லையே! 

குருவுக்கும் குருவானவர்! 
நம் அறிவுக்கு சுடரானவர்! 

கருணையில் கடல் போன்றவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 

எங்கள் அகத்திய மாமுனிவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 

குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 

சத்குரு நீயே! சத்குரு நீயே! 
குருவே சரணம்! 
திருவடி சரணம்! 

குருவே சரணம்! திருவடி சரணம்! சத்குரு நீயே! சத்குரு நீயே! 
சத்குரு நீயே! சத்குரு நீயே! குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 
குருவே சரணம்! திருவடி சரணம்! 

குருவுக்கும் குருவானவர்! 
அறிவுக்கு சுடரானவர்! 
எங்கள் அகத்திய மாமுனிவர்! 


சுவடி ஓதும் மைந்தன் உரைத்த வாக்கின் சுருக்கம்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
1. இறை பற்றும் தியாகமும் இறைவன் மீது, குருநாதரான அகத்தியர் மீது வைக்கும் பற்று என்பது பணத்தை விட மேலானது. உதாரணமாக, சிங்கப்பூரில் இருந்து வரும் ஒரு பக்தை, விமான டிக்கெட்டிற்காகச் செலவழித்த 38,000 ரூபாயை இழந்தாலும் பரவாயில்லை என்று, அகத்தியரின் கூட்டுப் பிரார்த்தனைக்காக மீண்டும் புதிய டிக்கெட் எடுத்து வந்ததை உரை சுட்டிக்காட்டுகிறது. இறைவனை நெருங்குவதற்குப் பணத்தை எதிர்பார்க்காமல், இறைவன் மீது பைத்தியமாக இருக்கும் அளவுக்கான பற்று அவசியம்.
2. வாழ்க்கையின் நிலையாமை இந்த உலகத்தில் உள்ள வீடு, நிலம், வண்டி மற்றும் நமது உடல் எதுவுமே நமக்குச் சொந்தமானது அல்ல. இவை அனைத்தும் வாழ்வதற்காக இறைவனால் கொடுக்கப்பட்டவை; அவற்றை அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்வார். இறக்கும் போது எதுவும் உடன் வராது. நம்மைச் சார்ந்தவர்கள் சில நாட்கள் அழுவார்கள், பின்னர் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். புகழ், பணம், உறவுகள் எதுவும் நிரந்தரமில்லை. ஒரு சித்தர் கூறுவது போல, நாம் இப்போதே "செத்துப் போனதாக" நினைத்துக் கொண்டால் தான், பற்று நீங்கி மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை வரும். நாம் இப்போதே "செத்துப்போனதாக" நினைத்துக் கொண்டால் தான், புண்ணியங்கள் செய்ய தானாக மனம் வரும். 
3. தர்மமே காக்கும் கவசம் நாம் செய்யும் தர்மம் மட்டுமே நமக்குத் துணையாக வரும். "தர்மத்தை நீ காத்தால், அந்த தர்மம் உன்னைக் காக்கும்" என்பது சித்தர்களின் வாக்கு. இறைவனை அடைவதற்கும், மோட்சத்தைப் பெறுவதற்கும் ஒரே வழி தர்மம் செய்வது மட்டுமே. தர்மம் செய்பவர்களுக்குச் சோதனைகள் வந்தாலும், இறைவன் அவர்களைக் கைவிடாமல் உயர்த்திப் பிடிப்பார். தர்மம் செய்யாதவர்களை, திறமையற்ற விளையாட்டு வீரரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுவது போல, இறைவன் இந்த உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்.
4. 'நான்' என்னும் அகங்காரம் "நான்", "எனது" என்று சொல்வது இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும். "நம்முடையது" அல்லது "எல்லாம் இறைவனுடையது" என்று சொல்லும் போதுதான் இறைவன் நம்மோடு ஒட்டுவார். உறவுகள் அனைத்தும் பொய்யானவை, தர்மம் என்னும் உறவு மட்டுமே உண்மையானது மற்றும் வலிமையானது.
5. பிறருக்காக வாழ்தல் மனித வாழ்க்கை என்பது இறைவன் கண் சிமிட்டும் நேரத்திற்குச் சமமானது (சுமார் 60-70 வருடங்கள்). இந்தச் குறுகிய காலத்தில் நாம் நமக்காக மட்டும் வாழாமல், பிறருக்காக வாழ வேண்டும். இறைவன் காற்றையும் நீரையும் நமக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார். அதேபோல நாமும் நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். சுயநலமாக வாழ்பவர்களை இறைவன் குப்பையில் தூக்கி எறிவது போல ஒதுக்கிவிடுவார். சித்தர்கள் உலகத்தைக் காக்கவே இந்த உண்மைகளை உரைக்கின்றனர்.
உவமை (Analogy):
வாழ்க்கை என்பது ஒரு "வாடகை வீடு" போன்றது. இந்த உடல் மற்றும் உலகப் பொருட்கள் நமக்குச் சொந்தமானவை என்று நாம் நினைக்கிறோம், ஆனால் உண்மையில் வீட்டின் உரிமையாளரான இறைவன் அவற்றை வாடகைக்கு (வாழ்வதற்கு) மட்டுமே கொடுத்துள்ளார்.
நாம் இந்த வீட்டில் தங்குவதற்குச் செலுத்த வேண்டிய வாடகைதான் "தர்மம்". நாம் சரியாக வாடகை (தர்மம்) செலுத்தினால், உரிமையாளர் (இறைவன்) நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார். "வீடு என்னுது" என்று சண்டையிட்டாலோ (அகங்காரம்), அல்லது வாடகை தராமல் (தர்மம் செய்யாமல்) இருந்தாலோ, உரிமையாளர் நம்மை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார் (வாழ்வு முடிவுக்கு வரும்).
=========================
# தேரையர் சித்தர் உரைத்த நாணய வழிபாடு - இரண்டாம் பகுதி. 
=========================

=========================
மதுரை மதுரை வாக்கில் முதல் பகுதியில் - நாணயத்தை திருப்பதி பெருமாளிடம் வைத்து விட்டு , பின்னர் அதே காசுகளை மீனாட்சி அம்மையிடம் சென்று அவர்கள் பாதத்தில் வைத்து எடுத்து வந்த காசுகளை அங்குள்ள அனைவரிடமும் கொடுத்தனர் கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள். இப்போது அவ் காசுகளை என்ன செய்ய வேண்டும் என்று தேரையர் சித்தர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். 
==========================


தேரையர் சித்தர் :-  இதை என்று யாம் அறிந்தேனே! இவை ஒன்று அறிந்தேன்! இதைத்தான் சொன்னேனே! இவை பக்குவமாக பயன்படுத்தி பின் அடுத்தடுத்த பின் வாக்கில் உங்களை நீங்கள் எப்படி? அதாவது வருங்காலத்தில் தீய சக்திகளின் ஓட்டம் அதிகமாக. அதனை எப்படி வெல்வது என்பதையும் யான் தெரிவிக்கின்றேன்! 

தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிய பின் மண் பானை தன்னில் கூட, அழகாக பின் உப்பை, பின் சம அளவு அறிந்தும் பின் பச்சை அரிசியும் கூட சம அளவும். 

தேரையர் சித்தர் :- இதனுள்ளே அறிந்தும் இவ் நாணயத்தை நாணயத்தை அறிந்தும் புரிந்தும், இவை அறிந்து அவ் நாணயத்தின் அறிந்தும் கூட பின் மஞ்சள் இட்டும் அழகாக பின் குங்குமம் இட்டும் பின் ஏலக்காய் எதை என்று கூற கிராம்பையும் இட்டு அழகாக அனுதினமும் பின் வாசனையை பின் காண்பிக்க நன்று! 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இது எல்லாம் பக்குவமாக செய்ய வேண்டிய விஷயம். இந்த காசு சம்பந்தமான செயலை நீங்கள் கவனமாக செயல்படுத்த வேண்டும், ஏனெனில் வருங்காலத்தில் தீய சக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒரு மண்பானை எடுத்து, அதில் பாதி உப்பும் பாதி பச்சரிசியும் போட்டு (சம அளவு உப்பும் பச்சரிசியும் போட்டு) , அதன் உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அதன் மேல் ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள், குங்குமம் போன்றவற்றை சேர்த்து, அந்த மண்பானைக்கு தினமும் தீபாராதனை செய்ய வேண்டும்.)

=====================
#  “லட்சுமியே வருக, நலம் தருக, வசி மம வசி”
=====================

தேரையர் சித்தர் :-  இவைத்தன் உருவாக்க! இவைத்தன் பின் அதாவது அரச இலைகளில் கூட பின் தீபம் ஏற்ற நன்று! அறிந்தும் இதைத்தன் புரிய வைக்க, மண் பின் தீபம் அறிந்தும் இதைத்தன் எவை என்று புரிய, பின் அழகாக பின் அரச எவை என்ற இலையை பின் நல் விதமாக, அதன் மேலே அறிந்தும் இவைத்தன் பின் நிச்சயம் தன்னில் தீபம் ஏற்றி நிச்சயம் தன்னில் கூட பின் “லட்சுமியே அறிந்தும் பின் வருக நலம் தருக வசி மம வசி” என்று மந்திரத்தை உச்சரிக்க நன்று! 

தேரையர் சித்தர் :-  இதை எவை என்று அறிய நிச்சயம் பின் அதன் முன்னே அறிந்தும் பின் அதாவது லட்சுமி தீபத்தை ஏற்ற வேண்டும்! 

========================================
(இந்த பூஜையை செய்யும் போது அரச இலை மீது தீபம் ஏற்றுவது நல்லது. மண் தீபத்தை அரச இலை மீது நன்றாக வைத்து, அதன் மேல் தீபத்தை ஏற்றி, “லட்சுமியே வருக, நலம் தருக, வசி மம வசி” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதனால் அதன் முன்னே  லட்சுமி தீபத்தை ஏற்றுவது அவசியம் ) 
========================================

சுவடி ஓதும் மைந்தன்:-  அதன் முன்னே லட்சுமி தீபம்னா என்ன?

மற்றொரு அடியவர் :- காமாட்சி அம்மன்! 

சுவடி ஓதும் மைந்தன்:-  காமாட்சி அம்மன்! கரெக்டா சொல்லிட்டாரு ஐயா! அதுக்கு முன்னாடி காமாட்சி அம்மன் தீபம் ஏத்தணும்! 

தேரையர் சித்தர் :-  அதனுள்ளே அறிந்தும் நிச்சயம் பிறர் உயிரை அறிந்தும் பின் கொல்லக்கூடாது ! 

சுவடி ஓதும் மைந்தன்:-  நான் முதல்ல சொல்றேன்! பிறர் உயிரை பிற உயிரை கொல்லக்கூடாது ! 

தேரையர் சித்தர் :-  இதைத்தன் எடுக்க பின் பணம் மட்டும் இல்லை! இதனுள்ளே ரகசியங்கள் நீங்களே அறிவீர்கள்! 

சுவடி ஓதும் மைந்தன்:-  இது பணத்துக்காக மட்டும் இல்ல! பணத்துக்காக இல்ல! வேற ரகசியம் இதுல இருக்குது! 

தேரையர் சித்தர் :- இதைத்தன் அடுத்தடுத்த வாக்கில் சில மூலிகைகளைப் பற்றி உரைப்பேன்! பின் யோகங்கள் தானாக செயல்படும்! கிரகங்களை நிச்சயம் உங்களுக்கு அண்டவிடாமல் அதற்கும் ஒரு பின் சூட்சுமம் என்னிடத்திலே இருக்கின்றது! பின் எதை என்று அறிய! பின் மக்கள் பாவம் என்று என் குருநாதனும் அகத்தியன் வந்து வாக்குச் சொல்ல நிச்சயம் யானும் வந்துவிட்டேன்! பின்னே 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( அகத்திய மாமுனிவர்,  மக்கள் எவ்வளவு பாவம் அனுபவிக்கிறார்கள் என்பதை தெளிவாகக் சுட்டிக் காட்டி, வாக்குகள் அறிவுரை வழங்குகிறார். அதைப் போலவே தேரையரும் மக்களுக்கு உதவ என்னால் தெரிந்ததை பகிர்ந்து உங்களுக்கு, என் குருநாதர் வழியிலேயே , தான் கண்டுபிடித்ததை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து அறிவுரை வழங்குகிறார்) 

==============================
# காற்றை இறைவன் இலவசமாக அளித்தது போல , சித்தர்கள் தங்கள் ரகசியங்களை எல்லாம் அடியவர்களுக்கு உரைகின்றார்கள் 
============================= 

தேரையர் சித்தர் :- அறிந்தும் எவை என்று புரிய! இவையெல்லாம் நிச்சயம் பின் இறைவன்! பின் காற்றை எப்படி அறிந்தும் இலவசமாக கொடுத்திருக்கின்றானோ! அதேபோல் யாங்களும் உங்களுக்கு அளிப்போம்! கவலைகள் வேண்டாம்! 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப இதெல்லாம் என்ன பண்ணுவாங்களாம்! எல்லாமே இந்த ரகசியங்களை யாருமே சொல்ல மாட்டாங்க! ஐயா இறைவன் உங்களுக்கு எப்படி காற்று சுவாசத்துக்கு இலவசமாக கொடுக்கிறாரோ! அதே மாதிரி நீங்கள் வாழ்வதற்கும் நாங்கள் ஐயா இலவசமா! 

தேரையர் சித்தர் :-  இதைத்தன் உணர உணர, அறிந்தும் இவைத்தன் இன்னும் யோகங்கள் காண, அறிந்தும் இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட பின் எங்கே இருக்கும் அறிந்தும் புரிந்தும் உண்மையை நிலையைக் காண இன்னும் பின் சித்தர்கள் வாக்குகள் செப்புகின்ற பொழுது உண்மை நிலை தெரியும் உங்களுக்குள்ளே! 

========================================
# செல்வமும் நன்மையும் சேர்க்கும் வழிபாடு 
========================================

தேரையர் சித்தர் :-  இதனால் அறிந்தும் இதைத்தன் நல் ஆற்றலாக பின் மாற்ற இன்னும் எதை என்று புரிய இவைதன் நிச்சயம் செய்திட நன்று! சரியான பின் மாலை பொழுதிலே இவ்வாறு இதைத்தன் செய்திட்டு மந்திரத்தை தன் மூலமாக எவ்வாறும் ஜெபித்தும் எப்பொழுதும் அறிந்தும் இனிப்புகளை கையிலே வைத்துக் கொள்ள வேண்டும்! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு வாரி பின் வழங்க இன்னும் சேருமடா! செல்வம். 

===================================
(வாக்கு சுருக்கம் :- இதனால் நல்ல ஆற்றல் உருவாகும் என்பதால், இந்த செயலை மாலை நேரத்தில் முறையாகச் செய்வது நல்லது. மந்திரத்தை மனதில் கொண்டு ஜெபித்தபடி, கையில் எப்போதும் சிறிது இனிப்பு வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த இனிப்புகளை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்தால், அது செல்வமும் நன்மையும் சேர்க்கும் )
===================================

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா புரியுதுங்களா! இதெல்லாம் படிச்சிட்டு சாக்லேட் வச்சுக்கணும்! மிட்டாயோ இல்ல  சாக்லேட் எதோ ஒன்று வச்சுக்கணும்! அப்ப என்ன பண்ணனும்! குழந்தைகளுக்கு ஏதோ வந்து, நாம சும்மா இருக்கக்கூடாது!, ஏதோ ஒன்னு குழந்தைகளுக்கு  சாக்லேட்  கொடுத்துகிட்டே இருக்கணும்! 

தேரையர் சித்தர் :-  இவைத்தன் பின் அதிகாலையிலே பின் ஓடுமடா! அறிந்தும் புரியாமலும் பின் தன் வேலையை சுறுசுறுப்பாக பார்க்குமடா! எறும்பின் கால் அறிந்தும் இவைத்தன் இவற்றுக்கு. பின் நாட்டுச் சர்க்கரையை இட்டுக்கொண்டே பின் அவை மட்டும் பின் எதை என்று புரிய அதாவது சரியான எவை என்று வேப்பிலை பின் மரத்தடியிலே தங்கும் பின் எறும்புகளுக்கே ஈய நன்று. 

=====================================
(வாக்கு சுருக்கம் :- அனுதினமும், அதிகாலை நேரத்தில் எறும்புகள் சுறுசுறுப்பாக ஓடி தங்கள் வேலையைப் பார்க்கும் நேரம் இது. அவற்றுக்கு நாட்டுச் சர்க்கரை அனுதினமும் கொடுத்துகொண்டே வரவேண்டும், அனுதினமும் அவை தங்கும் வேப்பிலை மரத்தடியில் தங்கும்  எறும்புகளுக்கே  வைத்துக்கொண்டே வர வர நல்லது. )
======================================

சுவடி ஓதும் மைந்தன்:-  ( ஐயா இந்த நாணயத்தை வாங்கி, எல்லாம் கண்டிஷன் சொல்லி இருக்காரு. இந்த நாணயத்தை வாங்கிட்டு இதெல்லாம் பண்ணனும். ஓகேங்களா இதெல்லாம் பண்ணா, இதுக்கு வந்து காசுக்காக மட்டும் இல்ல ஐயா. நீங்கள் எல்லோரும்  பயன்படுத்திக்கணும் )

====================================
# மூன்றாம் பிறை ஈசன் தரிசனம் -  இதை பார்த்து ரசித்துக் கொண்டே இருங்கள்.
==================================== 

தேரையர் சித்தர் :-  இதைத்தன் நிச்சயம் மாதம் மாதம் பின் ஈசன் மூன்றாம் பிறையாக காட்சி அளிப்பானே இதை பார்த்து ரசித்துக் கொண்டே இருங்கள் 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:- இதை செஞ்சுட்டே வரணும். மாசா  மாசம் மூன்றாம் பிறை ஈசன் காட்சி….

======================================
# ஒவ்வொரு அமாவாசை - சந்நியாசிகளுக்கு , யாருக்காவது உணவை நிச்சயம் வாங்கி தந்து தந்து கொண்டே இருக்க வேண்டும்
======================================

தேரையர் சித்தர் :-  அதனுள்ளே பின் அமாவாசை என்று அறிந்தும் இவ் சந்நியாசிகளுக்கு இதுபோல் நிச்சயம் தன்னில் கூட யாருக்காவது நிச்சயம் பின் உணவை பின் நிச்சயம் வாங்கி தந்து தந்து கொண்டே இருக்க வேண்டும் 

சுவடி ஓதும் மைந்தன்:-  இது மாதிரி வந்து, அமாவாசை அமாவாசை என்ன பண்ணனும்? ஏதோ ஒரு முன்னோர்கள் நினைச்சு, என்ன பண்ணனும்? அன்னதானம் பண்ணிட்டே இருக்கணும்.

======================================
# ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆலமரத்தின் அடியில் ஒரு பத்து நிமிடங்கள் தியானங்கள் செய்து அதை சுற்றி வர சுற்றி வர உடம்பு நிச்சயம் வலுவு பெறும். 
======================================

தேரையர் சித்தர் :-  பௌர்ணமி தன்னில் அழகாக பின் எதை என்று புரிய பின் ஆலமரத்தின் பின் நிச்சயம் தன்னில் கூட ஒரு பத்து நிமிடங்கள் தியானங்கள் செய்து அதை சுற்றி வர சுற்றி வர உடம்பு நிச்சயம் வலுவு பெறும். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இதெல்லாம் செய்யணுங்க ஐயா. ஏன்னா காற்று இலவசமா கொடுத்திருக்காரு. இதுவும் செய்வதற்கு புண்ணியம் வேணும். சித்தர்களே வேண்டிக்கோங்க ஐயா. இதெல்லாம் நான் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு வந்து அந்த ஒரு ரூபாய் காயின்ஸ் கொடுத்து உங்களுக்கு என்ன பண்ணுவார் ….

தேரையர் சித்தர் :-  அடுத்து அடுத்து சொல்வேனடா சில மூலிகை ரகசியங்களை மனிதன் வாழ்வதற்கு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்தடுத்து என்ன பண்ணுவாரு இன்னும் ரகசியங்கள் நீங்கள் வாழ்வதற்கு சொல்வாங்க 

தேரையர் சித்தர் :- இதை நீங்களும் பயன்படுத்தி மற்றவருக்கும் கொடுங்கள் அதுவும் புண்ணியமே. ஆக மொத்தத்தில் அனைத்தும் பின் உங்களுக்கும் புண்ணியம் அறிந்தும் பின் வந்து சேரும். பின் அறிந்தும் இவைத்தான் யாங்கள் செப்பினோமே. 

சுவடி ஓதும் மைந்தன்:-  உங்களுக்கும் புண்ணியம் அது மத்தவங்களுக்கு என்ன பண்ணும் அவங்க சொன்னா என்ன பண்ணாரு வந்து அவங்களுக்கும் புண்ணியம் ஆயிடும் அவங்க வாழ்ந்து வாழ்ந்துப்பாங்க 

தேரையர் சித்தர் :- எத்தனை எவை என்று புரிய இன்னும் ஞான சூட்சமங்கள் எல்லாம் சொல்கின்றேன் அனைவருக்கும். எதை எவை என்று தெரிவிக்க இன்னும் சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள், மனிதனுக்கு எவ்வாறு செப்ப என்று தெளிவு பெற. 

சுவடி ஓதும் மைந்தன்:-  இன்னும் சித்தர்கள் என்ன பண்றாங்க காத்து ஒவ்வொரு ஒருத்தரும் கான்செப்ட்ல இருக்கிறாங்க வந்து எப்படி எல்லாம் மனுஷனை வந்து இந்த கலியுகத்துல காப்பாத்துறது 

===============================
# அகத்திய மாமுனிவர் அருளால் , கூட்டுப்பிரார்தனையின் மூலம் ஒரு பெரிய அழிவு தவிர்க்கப்பட்டது 
===============================

தேரையர் சித்தர் :-  இதைத்தான் அகத்தியன் பின் எடுத்து வந்தானே ஒரு விதத்தில் அனைத்தும் சந்தோஷங்களே. ஏன் எதற்கு இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே பின் ஐந்து தினங்களுக்கு முன்பு ஒரு பெரிய அழிவு காத்துவிட்டது. அதனால் நீங்கள் தன் எவ்வாறு இவ்வாறு பிரார்த்தனை செய்ததெல்லாம் நிச்சயம் பின் எவை என்று அறிய பின் மனிதனின் பின் சொல் நிச்சயம் பொய்யாக்கிவிட்டதே 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு ஐந்து ஒரு அஞ்சு தினங்களுக்கு முன்னாடி பெரிய பேரழிவு வந்து, ஆனால் என்ன ஆச்சு அது ஸ்டாப் ஆயிடுச்சு. 

=============================
# அடுத்து நுண்ணுயிர்  மூல வர உள்ள உலக அழிவுகளை - கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் தடுத்திட வேண்டும் 
============================ 

தேரையர் சித்தர் :-  அப்பா இன்னும் சொல்கின்றேன் அடுத்தடுத்த ஆண்டு, ஒரு நுண்ணுயிர் வரப்போகின்றது. அது தன் மூக்கின் வழியாக சென்று, மனிதனை அழித்துவிடும். இதனால் இறைவனிடம் நீங்கள் தான் போராட வேண்டும். யாங்கள் சொல்லிக் கொடுப்போம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்தடுத்து அடுத்து என்ன சொல்றாங்க வந்து இன்னும் ஒன்று நுண்ணுயிர் நுண்ணுயிர் வரப்போகுது அதை வந்து என்ன பண்ணனும் ஆமா 

தேரையர் சித்தர் :-  எது என்றறிய இன்னும் அழிவுகள் எதன் மூலம் என்று. ஆனாலும் அறிந்தும் யாங்கள் சொல்வதைக் கேட்டால், நீங்களும் வாழலாம். அதை தடுத்தும் விடலாம். பின் அப் புண்ணியங்கள் உங்களைச் சேரும். உங்கள் பரம்பரை வாழும். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப உங்களை காத்துக்கறதுக்கும் வழி சொல்றாரு அடுத்தவர் காக்குறதுக்கும் வழி சொல்றாரு அடுத்தவர் அந்த நேரத்துல காக்கும் பொழுது உங்களுக்கு என்ன ஆகும் புண்ணியம் வரும் நீங்க என்ன பண்ணலாம் நீங்க உங்களுடைய என்ன ஜாலியா எது கொடுக்குறாங்களோ அது வந்து உங்களுக்கு வந்து சேரும் 

தேரையர் சித்தர் :-  அப்பனை அறிந்தும் இன்னும் கூட அப்பனை அறிந்தும் பின் தை மாதத்தில் பின் ஒன்று வைக்க பின் நன்றே  இன்னும் யாங்கள் ரகசியங்கள் சொல்லுவோமடா 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

தேரையர் சித்தர் :-  இவைதன் அறிவித்து பின் அதாவது முடிய வேண்டும் பின் சிவ அறிந்தும் கூட பின் பின். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( எந்த நாள் என்று உரையாடல்கள்)
 
தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிய எதை என்று புரிய குழப்பிக் கொள்ளுங்கள்  நீங்களே.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( சிரிப்பு  )

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :-  ( ஒருவழியாக தெளிந்த பின்னர் ) 

மற்றொரு அடியவர் :- ( அடுத்த கூட்டுப் பிரார்த்தனை  எந்த இடத்தில்  என்று கேட்க ) 

தேரையர் சித்தர் :-  அப்பா அறிந்தும் மீண்டும் யாங்கள் ஞானிகளை வரவேற்போம் இத்திருவண்ணாமலைக்கே.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:- மீண்டும் திருவண்ணாமலை.

==============================
# சித்தர்களின் பெருங்கருணை 
==============================

தேரையர் சித்தர் :-  அப்பா ஏனென்றால் இங்குதான் சில ரகசியங்கள் இருக்கின்றது. அப்பா, இதனால் உங்களுக்கு புண்ணியங்கள் வாங்கி தந்தே ஆக வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:- இங்கதான் பல ரகசியங்கள் இருக்குது. அதனால் சில வந்து புண்ணியங்கள் உங்களுக்கு வாங்கி தந்தே ஆக வேண்டும் 

தேரையர் சித்தர் :-  அறிந்தும் போகனும் வந்து முருகனை அழைப்பான். 

சுவடி ஓதும் மைந்தன்:- போகனும் வந்து முருகன் வந்து அழைப்பார் 

தேரையர் சித்தர் :-  அறிந்தும் உங்களுக்காக அறிந்தும் இன்னும் வாக்கியனும் 

சுவடி ஓதும் மைந்தன்:- சிவ வாக்கியரும் 

தேரையர் சித்தர் :-  இவையறிவித்து அறிந்தும் புரிந்தும் இன்னும் அடுத்த வாக்கில் நிச்சயம் பின் உங்களை காக்க பல மூலிகைகளைப் பற்றி யான் சொல்வேன். அதை பயன்படுத்திக் கொள்ள நன்று. அனைத்து சித்தர்களின் ஆசிகள். அண்ணாமலையோடு அறிந்தும் எதை என்று கூறும் உண்ணாமலை தேவிக்கும் அறிந்தும் பின் அவருடைய அறிந்தும் எதை என்றறிய அழகாக பின் குழந்தைகளுக்கு உடனே நிச்சயம் தன்னில் கூட இன்றளவு அழகாக பார்த்துட்டு ஆசிகள் தந்தும் கூட இதனால் பின் மனமகிழ்ந்து பின் முருகனும் விளையாடினானே ஒரு பாடலுக்கு பின் மீண்டும் அப்பாடலை பாடு முருகன் விளையாடுவான்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டுப் பிரார்த்தனை வாக்கு நிறைவு) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment